சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

இடதுகைப் பழக்கம்! ஏன் வருகிறது?

Go down

Sticky இடதுகைப் பழக்கம்! ஏன் வருகிறது?

Post by ahmad78 on Tue 8 Jul 2014 - 14:38

 
 
சில நாடுகளில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 13ம் தேதி, இடக்கைப் பழக்கமுள்ளவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் இடக்கை  பழக்கமுள்ளவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.

நம்மில் அதிகமானோர் வலதுகைப் பழக்கமுள்ளவர்களாக இருக்கிறோம். இடது கைப்பழக்கமுடையோர் செயல்களைக் கண்டு வியக்கிறோம். உலக மக்களில்  நூற்றுக்கு நான்கு பேர் இடது கைப் பழக்கமுள்ளோர்களாக இருக்கின்றார்கள் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

* வலதுகைப் பழக்கம், இடதுகைப் பழக்கம் இவையெல்லாம் எதைப் பொருத்து அமைகின்றன? மூளையைக் கட்டுப்படுத்தும் பகுதியைப் பொருத்தே அமைகின்றன.

* இடதுகைப் பழக்கம் பல பிரபலங்களுக்கு இருந்திருக்கிறது. மாவீரன் அலெக்ஸாண்டர், ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ, லியனார்டோ டாவின்ஸி, விஞ்ஞானி  பெஞ்சமின் ஃபிராங்க்ளின், புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின், டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா, நடிகை மர்லின் மன்றோ,  அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் - இப்படி ஒவ்வொரு துறையிலும் இடக்கை பழக்கமுடையோர் இருக்கின்றனர்.

* இந்தப் பட்டியலில் லியனார்டோ டாவின்சி மேலும் ஒரு சிறப்புப் பெறுகிறார். அது என்ன சிறப்பு?

* பொதுவாக வலக்கையாலே கண்ணாடி பிம்பம் போல எழுதுவது கடினம். ஆனால் டாவின்சியோ கண்ணாடி பிம்பம் போல இடது கையால் எழுதும் ஆற்றல்  பெற்றவராம்.

* பொதுவாக நமது மூளையின் வலது பக்கம் உடலின் இடது பக்கத்திற்கும் மூளையின் இடது பக்கம் உடலின் வலது பக்கத்திற்கும் சமிக்ஞைகளை அனுப்பிக்  கட்டுப்படுத்துகின்றன. மூளைக்கும் உடலின் பக்கத்திற்கும் என்ன தொடர்பு?

 
 
 
 
* மூளையின் ஒரு பகுதியில் உள்ள சில நரம்புகள் கழுத்துப் பகுதி வழியே கடந்து உடலின் எதிர் பாகத்தில் முடிவடையும். மூளையில் உள்ள இந்த நரம்புகள்தான்  நம் கைப்பழக்கத்தை உண்டாக்குகின்றன என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாக உள்ளது.

* 1648ம் ஆண்டு சர் தாமஸ் பிரவுன் என்பவர் எழுதிய வல்கர் எர்ரர்ஸ் (Vulgar Errors) என்ற நூலில் முதன்முதலாக இடக்கைப் பழக்கத்திற்கும் மூளைக்கும்  உள்ள தொடர்பைப் பொது மக்களுக்குத் தெரிவித்தார்.

* இடக்கைப் பழக்கம் பற்றிப் பலர் ஆய்வு செய்துள்ளனர். அன்னீட் (Anneet) என்பவர் செய்த ஆய்வின்படி இடக்கைப் பழக்கமுள்ளோர்களை இரு வகையாகப்  பிரித்தார். இடக்கைப் பழக்கம் பரம்பரையாகத் தோன்றுகிறது என்றும் பரம்பரைக் காரணமில்லாமல் தனித்தும் தோன்றுகிறது என்றும் வகைப்படுத்தினார்.

* மெக்கால் (Mchal) என்பவர் நடத்திய ஆய்வின்படி வலக்கைப் பழக்கமுடையோரின் மூளையின் சிறு கிளைகள் (Occipital Horns), பக்கவாட்டு இரத்தக் குழாய்கள்  ஆகியவை மூளையின் இடப்பக்கத்தில் இருந்தவற்றைக் காட்டிலும் ஐந்து மடங்கு நீளமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இடக்கைப் பழக்கமுடையோர்களுக்கு இந்த  அமைப்பு நேர்மாறாக இருக்கிறதாம்!

* நரம்புக் கோளாறுடைய குழந்தைகள் பெரும்பாலோர் இடக்கைப் பழக்கம் உடையவர்களாகக் காணப்படுகிறார்கள். இடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகள்  பெரும்பாலோர் பிறப்பு காலத்தில் டிரோமா (Birth Trauma) என்ற தாக்குதலுக்கு உட்படுவதாக பாகான் (Bakan) என்ற மருத்துவர் கூறுகிறார்.

* இடக்கைப் பழக்கமுடையோரை வலக்கைப் பழக்கத்திற்கு மாற்றினால் சிலருக்குத் திடீர் என திக்குவாயாக மாறிட வாய்ப்பு உள்ளதாம். உதாரணம்: இங்கிலாந்தை  ஆண்ட ஆறாம் ஜார்ஜ் மன்னர்.

* பெரும்பாலான பொருட்கள் வலக்கைப் பழக்கமுடையோர் பயன்படுத்தக் கூடியன வாகவே தயாரிக்கப்படுகின்றன. ஆனால் சில வெளிநாடுகளில் கத்திரிக்கோல்,  கோல்ஃப் விளையாட்டு விளையாடப் பயன்படும் மட்டை போன்ற பொருட்கள் இடக்கைப் பழக்கமுடையோர் பயன்படுத்த ஏதுவாகவும் தனிப்பட்ட முறையில்  தயாரிக்கப்படுகின்றன. இது இடக்கைப் பழக்கமுடையோருக்கு ஒரு ஆதரவான இன்பச் செய்தி!


http://tamilrockers.net/index.php/topic/26940-இடதுகைப்-பழக்கம்-ஏன்-வருகிறது/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: இடதுகைப் பழக்கம்! ஏன் வருகிறது?

Post by ராகவா on Tue 8 Jul 2014 - 17:02

அறியதந்தமைக்கு நன்றி அண்ணா..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum