சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Yesterday at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:33

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:14

» விவசாயி ...
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:50

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:23

.

எங்கு பார்த்தாலும் மரண ஓலம்-- கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி

Go down

Sticky எங்கு பார்த்தாலும் மரண ஓலம்-- கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி

Post by Nisha on Tue 22 Jul 2014 - 20:34


எங்கு பார்த்தாலும் மரண ஓலம்-- உண்மை ஓர் அலசல்
காசாவை பற்றி ஒரு வரியில் சொல்ல போனால் தமிழ் ஈழம் கதை தான்.

உலகில் அனைத்து மதங்களுக்கும் தனக்கென்று ஒரு நாடு உள்ளது. யூதர்கள் மத கொள்கை படி அவர்கள் தான் உலகிலேயே உயர்ந்த மக்கள் என்று தம்பட்டம் அடித்து கொள்வார்கள்.

1947ம் ஆண்டுகளுக்கு முன்பு வரை யூதர்களுக்கு என்று ஒரு தனி நாடு கிடையாது. பல நூறு ஆண்டு காலமாக யூதர்களுக்கு தனிநாடு இல்லை என்ற ஏக்கம் அவர்களுக்கு இருந்தது.

யூதர்கள் அதிகள் இருந்த நாடு ஜெர்மனி. அங்கு வாழ்ந்த பூர்விக ஜெர்மனி மக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

ஆனால் அவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து நல்ல வசதியில் தலித்து வந்தனர் யூதர்கள்.சிறுவயதில் இருந்தே ஹிட்லருக்கு யூதர்கள் மீது தொடர்ந்து வெறுப்பு இருந்தது(ஹிட்லர் தந்தை ஒரு யூதன் என்றும் அவருடைய அம்மாவை ஏமாற்றி விட்டு சென்றதாகவும் அதனாலே யூதர்கள் மீது ஹிட்லருக்கு கோவம் இருந்ததாகவும் வரலாறு சொல்கிறது) .

ஜெர்மனி மக்களுக்கும் வெறுப்பு இருந்தது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சியை பிடித்தார் ஹிட்லர்.

தான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து யூதர்களை சாகடிக்க ஆரம்பித்தார், வித விதமாக சாகடித்தார், வீடு வீடாக சென்று மக்களை நேரில் பார்த்து அதில் யார் யூதர்கள் என்று கண்டுபிடித்து எப்படியெல்லாம் கொல்ல முடியுமோ அந்த விதத்தில் சாகடித்தார்.

ஹிட்லரிடம் இருந்து தப்பிக்க பல யூதர்கள் வெளியேற ஆரம்பித்தார்கள். அவர்கள் இடம் இல்லாமல் இருந்த பொழுது பாலஸ்தீன மக்கள் அன்புடன் தங்கள் நாட்டில் தங்கிக்கொள்ள அனுமதி கொடுத்தனர்.

யூதர்களுக்கு பாலஸ்தீனம் மிகவும் விரும்பிய இடமாக மாறியது(யூதர்களின் புனிதத்தலமான ஜெருசலம் அங்கு தான் இருந்தது).


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்-- கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி

Post by Nisha on Tue 22 Jul 2014 - 20:35உலகில் பல நாடுகளில் ஆங்காங்கே வாழ்ந்து வந்த யூதர்கள் பாலஸ்தீனம் நோக்கி படையெடுக்க ஆரம்பித்தார்கள்.

அப்பொழுது இரண்டாம் உலக போர் தொடங்கியது, அப்பொழுது யூதர்கள் பிரிட்டனுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுகொண்டனர்.

நாங்கள் உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குகிறோம்.

ஆனால் வெற்றி பெற்றவுடன் பாலஸ்தீன் நாட்டின் ஒரு பகுதியை எங்களுக்கு தரவேண்டும் என்று தான் அந்த ஒப்பந்தம்.

இரண்டாம் உலக போரில் அவர்கள் வெற்றி பெற்றவுடன் உலக ஏகாபத்திய நாடுகள் வலுக்கட்டாயமாக 2௦% இடத்தை இஸ்ரேல் என்ற யூதர்கள் நாடு உருவாக கொடுத்தது.

பாலஸ்தீனியர்கள் அவர்களுடை சொந்த மண்ணை மீட்க போர் செய்தார்கள். ஆனால் யூதர்களின் பின்னால் அமெரிக்கா உதவி செய்தது. அதன் பின்பு பாலஸ்தீனியர்கள் தோல்வி அடைந்தார்கள்.நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்-- கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி

Post by Nisha on Tue 22 Jul 2014 - 20:37

அதை தொடர்ந்து சிறிது சிறிதாக அவர்கள் பாலஸ்தீன பகுதிகளை சுரண்ட ஆரம்பித்தார்கள். அவர்கள் சுரண்டல் போகி மீதி 10 % இடம் மட்டுமே பாலஸ்தீனியர்களிடம் உள்ளது, அந்த பகுதி தான் காசா.

அவர்கள் அந்த காசா பகுதியையும் கைப்பற்ற அவ்வப்போது தாக்குதல் நடத்துவார்கள்.

காசா மக்களுக்காக போராடி வரும் அமைப்பு தான் ஹமாஸ், உலக மீடியாக்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அவர்கள் சொல்வது தான் சட்டம்.

இன்றும் பல பத்திரிக்கைகள் ஹமாஸ் இயக்கத்தை தீவிரவாதிகள் என்று தான் சொல்கிறார்கள்.

அந்த அளவு அவர்களின் ஆதிக்கம் இருக்கிறது, பாலஸ்தீன நாடு மீண்டும் உருவாக்கி கூடாது என்பதற்காக குழந்தைகளை அதிகம் தாக்கி சாகடிக்கிறார்கள்.

இதன் மூலம் அவர்களின் சந்ததிகள் குறையும் என்பதே அவர்களுடைய நோக்கம்.நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்-- கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி

Post by Nisha on Tue 22 Jul 2014 - 20:37நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்-- கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி

Post by முனாஸ் சுலைமான் on Tue 22 Jul 2014 - 20:51

ஹிட்லர் அன்று சொன்னார் நான் ஏன் யூதர்களை கொல்லுகிறேன் என்பதனை நீங்கள் பின்னர் புரிந்து கொள்வீர்கள் நான்கில் மூன்று பங்கினரை கொன்று விட்டேன் மீதம் இருக்கும் ஒரு பங்கான இந்த கொடூர யூதர்களை எப்படிக்கொல்லலாம் என்று நீங்கள் சிந்திப்பீர்கள் அன்றைக்கு எனது நினைவு வரும் என்று அன்று ஹிட்லர் கூறினான்..

இன்று நான் அழைக்கிரேன் அந்த ஹிட்லரை மீதமாக இருக்கும் யூத வெறியர்களைக்கொன்றொளிக்க வேண்டும் என்று...

அல்லாஹ் இந்த நாசக்காரர்க்ளுக்கு மோசமான அழிவைக்கொடுக்கும் காலம் மிகவும் அண்மையில் இருக்கிறது... #*  #*  #*  #*
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்-- கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி

Post by நண்பன் on Tue 22 Jul 2014 - 20:56

இந்தக் காட்டறபி நாடுகள் என்று ஒன்று படுமோ அன்றுதான் இந்த கொலை வெறியர்களை நாட்டை விட்டு விரட்ட முடியும் படுபாவிங்க ஈன இரக்கமின்றி குழந்தைகளைக் குறி வைத்து தாக்கியழிக்கிறார்கள் இவர்களுக்கு நாசம் உண்டாகட்டும்  )* )* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்-- கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி

Post by Nisha on Tue 22 Jul 2014 - 23:52காஸா மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு சர்வதேச ரீதியில் சட்ட அதிகாரம் கிடைத்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ தெரிவித்துள்ளார்.

காஸாவிலிருந்து எறியப்படும் ரொக்கட்டுக்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை தமக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இதற்காக போராடி வரும் தமக்கு வலுவான சர்வதேச ஆதரவு கிடைத்து வருவதாக கூறியுள்ளார்.

இதேநேரம், காசா மீது இஸ்ரேலிய தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மூன்றாவது தடவையாக நெட்டன்யாகுவுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ள அமெரிக்க ஜனாதிபதியும் இஸ்ரேல் தம்மை தற்காத்துக் கொள்வதற்கான உரிமைகள் குறித்து பேசியுள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு மேற்கொண்டு வரும் தாக்குதல்களை அவர் கண்டித்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கையை மேற்கோள்காட்டி மத்திய கிழக்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


காஸாவில் வெளிப்படையாகவே மனிதப் படுகொலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் சர்வதேச சட்டங்களை வலியுறுத்தும் அமெரிக்க போன்ற மேற்கத்திய நாடுகள் மனிதத்துவத்திற்கு எதிரான இஸ்ரேலின் குற்றங்களை இன்னமும் கண்டு கொள்ளவில்லை.

மலேஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமைக்காக கவலைகளை அள்ளிக் கொட்டி, அதற்கு எதிராக ரஷ்யாவை சாடி நடவடிக்கை எடுக்க முயன்று வரும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு இந்த காஸா மாத்திரம் ஏன் கண்ணில் படுவதில்லை என பலத்த எதிர்ப்புகளும் எழுந்த வண்ணம் உள்ளன

http://www.lankasri.com/ta/link-3m4340SdCgb6eEocQ372.html


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்-- கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி

Post by பானுஷபானா on Wed 23 Jul 2014 - 9:43

இடத்தைக் குடுத்தா மடத்தையே பிடுங்குகிறார்கள்....

இரக்கம் காட்டியதற்கு நல்ல நன்றி செலுத்துகிறார்கள்...

பாதிக்கப்பட்ட இவர்களுக்கெல்லாம் இறைவன் தான் பாதுகாவலன்.

நம் துவாவில் இவர்களின் துயரம் களைய இறைஞ்சுவோம்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16740
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்-- கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி

Post by Nisha on Thu 24 Jul 2014 - 23:38

அப்பா.. இன்று நான் இறந்துவிடுவேனா.? நாள்தோறும் கேட்கும் காஸா பச்சிளங்குழந்தைகளின் துயரக் கேள்வி
காஸாமுனை: போர் பெருந்துயரமானது.. அதுவும் பச்சிளங்குழந்தைகளையும் அப்பாவி பொதுமக்களையும் ரணகளப்படுத்தி பலியெடுக்கும் போர் எத்தனை கொடூரமானது என்பதை காஸா பிஞ்சுகள் உலகுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் வகைதொகையின்றி வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் பலியானோர் எண்ணிக்கை 700 ஆகிவிட்டது. படுகாயமடைந்தோர் எண்ணிக்கையோ 5 ஆயிரம்.

பலி எடுக்கப்பட்ட பாலகர்கள்:

  • இஸ்ரேலின் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீன பச்சிளம் குழந்தைகள் பலியாகிவிட்டன. 


  • பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உடலெங்கும் குண்டு காயங்களோடு, துப்பாக்கி சன்னங்கள் துளைத்த முகங்களோடு கதற வைக்கும் கோலங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  • ஒவ்வொரு காஸா குழந்தையும் "அப்பா இன்று நானும் இறந்துவிடுவேனா" என்ற கேள்வியை கேட்பது வழக்கமாகிவிட்டது.


  • இஸ்ரேல் நிகழ்த்தும் யுத்தமே, காஸா குழந்தைகள் மீதுதானோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில், கடற்கரையில் விளையாடிய சிறுவர்களை பலியெடுத்துள்ளது இஸ்ரேல்.


  • கடந்த சில நாட்களில் மட்டும் ஒவ்வொரு மணி நேரமும் ஒரு குழந்தை பலியாவதாக ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.


  • உலகை உலுக்கும் வகையில் காஸாவில் பாலஸ்தீன குழந்தைகள் பேரவலத்தை எதிர்கொண்டிருப்பதாகவே பெரும்பாலான ஊடகங்கள் பதிவும் செய்து வருகின்றன.


  • போர்முனையிலும் கூட பாலஸ்தீன குழந்தைகள், எங்கள் அம்மாக்களையும் குழந்தைகளையும் தொலைத்துவிட்டோமே என்று கண்டன குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கின்றனர்.

          on india news


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்-- கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி

Post by பானுஷபானா on Fri 25 Jul 2014 - 9:52

படிக்கும்போதே மனம் பதறுகிறது.... பெற்றவர்களின் நிலை ரொம்பக் கொடுமை தான்:(
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16740
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்-- கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி

Post by ahmad78 on Sat 26 Jul 2014 - 12:45

முகநூலை திறந்தாலே மக்கள் இதைத்தான் அதிகம் சேர் செய்கிறார்கள்.

பார்க்கவே மனம் என்னவோ செய்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்-- கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி

Post by Nisha on Sat 26 Jul 2014 - 13:10

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியான கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த சிசு அறுவை சிகிச்சை மூலம் மீட்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.

இதில் அப்பாவி பொதுமக்கள் 850க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் பிஞ்சுக் குழந்தைகள்.

‘இந்தப் போரில் நேற்று மத்திய காஸாவின் டெயிட் அல் பலாஹ் நகரம் மீது இஸ்ரேல் ராணுவ விமானங்கள் குண்டு வீசித் தாக்கின. உயிருடன் சிசு மீட்பு இத்தாக்குதலில் கட்டிட இடிபாடிகளில் சிக்கி 23 வயதான நிறைமாதமான கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்தார்.

ஆனால், குழந்தை உயிருடன் இருந்ததை அறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக அந்த சிசுவை வெளியில் எடுத்தனர்.

கொந்தளிப்பு அந்த சிசு உயிர் வாழ்வதற்கு 50% சாத்தியக் கூறுகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://world.lankasri.com/view.php?22cOl72bcO80Mb4e2yMM402dBnB2dd0nBnB303C6A42e4g08Secb3lOoc3


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்-- கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி

Post by Nisha on Wed 30 Jul 2014 - 1:05இருளில் மூழ்கும் அபாயத்தில் காஸா! என்ன நடக்கப் போகிறது?


இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸா பகுதியில் இருந்த ஒரே ஒரு மின் நிலையமும் சேதமடைந்ததால் தற்போது அந்நகரமே இருளில் மூழ்கும் ஆபாயத்தில் உள்ளது.
கடந்த 7ம் திகதி காஸாவில் தாக்குதலை நடத்த தொடங்கிய,இஸ்ரேலை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளின் வெறிச்செயலால் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 1,110 ஆக உயர்ந்துள்ளது.

எனினும் தாக்குதல் ஒரு முடிவிற்கு வந்த பாடில்லை. தினந்தினம் நூற்றுக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்படுவது சர்வதேச நாடுகளுக்கிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தொடர் தாக்குதால் காஸாவில் உள்ள அனைத்து மின் நிலையமும் தகர்க்கப்பட்டு,ஒரே ஒரு மின் நிலையம் மட்டும் இருந்துள்ளது.

ஆனால் அதுவும் தற்போது குண்டு வீச்சிற்கு இரையானதால், காஸாவே இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் நிலைய செய்திதொடர்பாளர் கூறுகையில், இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.மின் நிலையத்திற்கு தேவையான எரிபொருள் வைக்கப்பட்டிருந்த டாங்கர்களில் ஒன்றை முற்றிலுமாக இஸ்ரேல் படையினர் அழித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு முன்னர் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே காஸாவில் செய்யப்பட்டு வந்த மின் விநியோகமும், இப்போது இல்லாமல் மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்-- கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி

Post by rammalar on Thu 31 Jul 2014 - 6:14

_*  _*
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்-- கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி

Post by Nisha on Thu 31 Jul 2014 - 18:38


காஸா விவகாரம் குறித்து பேசுகையில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைய அதிகாரி கிறிஸ் கன்னேஸ் கதறி அழுதுள்ளார்.

இஸ்ரேல்– காஸாமுனை இடையிலான போர் 25 வது நாளை எட்டியுள்ளது. காஸா முனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல், தரைவழி தாக்குதலையும் நடத்தி வருகிறது.

நேற்று வடக்கு காஸா முனையில் ஜெபல்யா என்ற இடத்தில் உள்ள வீடுகள், பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் பீரங்கித்தாக்குதலையும், வான்வழி தாக்குதலையும் நடத்தியது.

காஸாமுனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 1360 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலைப் பொருத்தமட்டில் 53 வீரர்களும், பொதுமக்களில் 3 பேரும் கொல்லப்பட்டனர்.

இரு தரப்பினருக்கு இடையே நிரந்தர போர் நிறுத்தம் செய்வதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றில் பேசுகையில், ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண உதவி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ் கன்னேஸ் கதறி அழுதார்.

என் உணர்வுகளை, காஸாவில் மக்கள் எதிர்கொள்ளும் பெரும் துயரங்களுடன் ஒப்பிட முடியாது. இஸ்ரேல் படையின் அறிவிப்பை அடுத்துதான் மக்கள் முகாம்களுக்கு வருகின்றனர் என்று கூறியுள்ள அவர் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருப்பிடங்களின்றி அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்-- கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி

Post by Nisha on Thu 31 Jul 2014 - 18:42

இஸ்ரேலின் வெறியாட்டம் - 1321 பேர் பலி

காஸா பள்ளத்தாக்கு மீது இஸ்ரேல் நடத்தி வரும் மும்முனைத் தாக்குதல்களில் நேற்று மட்டும் 90 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 260க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர்.
கான் யூனிஸ் நகரின் பிரபல வர்த்தகப் பகுதி மீது இஸ்ரேல் படைகள் நடத்திய உக்கிர தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததுடன், 150-க்கு அதிகமானோர் காயமடைந்தனர்.

வடக்கு காஸாவின் ஜபாலியா பகுதியில் ஐ.நா.சபை நடத்தி வரும் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் சுமார் மூவாயிரம் பாலஸ்தீனியர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்

இந்த பாடசாலை மீது இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கி தாங்கிய வாகனங்கள் நடத்திய ஈவிரக்கமற்ற தாக்குதலில் குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்ததுடன், 90-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் சேர்த்து கடந்த 24 நாட்களாக காஸா பகுதி மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 1,321 ஆக உயர்ந்துள்ளது.

பலியானவர்கள் மற்றும் காயமடைந்த சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களில் அப்பாவி குழந்தைகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகம் என மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை முன்னறிவிப்பு இன்றி பாடசாலை மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வடக்கு காஸாவில் உள்ள ஐ.நா. நடத்தி வரும் ஜபாலியா பெண்கள் ஆரம்ப பாடசாலையில் அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர் என்பதை இஸ்ரேல் ராணுவத்துக்கு நாங்கள் இது வரை 17 முறை தெரியபடுத்தி விட்டோம். குறிப்பாக, இந்த தாக்குதல் நடத்தப்படுவதற்கு முந்தைய இரவு கூட இது தொடர்பாக இஸ்ரேலுக்கு அறிவித்துள்ளோம்.

தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்துவதை விட மிகவும் வெட்கக் கேடான விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது. மிகவும் வெட்கக் கேடானதும், நியாயப்படுத்த முடியாததுமான இந்த கொடூர தாக்குதலை நான் மிக வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். உடனடியாக, தாக்குதல்களை கைவிட்டு நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பினரும் உடன்பட வேண்டும்.

இந்த மோதலுக்கான அடிப்படை காரணம் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள நிலையில், பேச்சு வார்த்தை மூலம் அவற்றுக்கு தீர்வு காண இரு தரப்பினரும் முன்வர வேண்டும் என பான் கி மூன் தெரிவித்துள்ளார்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்-- கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி

Post by கவிப்புயல் இனியவன் on Sat 2 Aug 2014 - 9:27

வேதனை வேதனை 
என்ன சொல்வது இந்த அகோர உலகம் பற்றி
சொல்லி பிரயோசனம் இல்லாமல் போய் விட்டது
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்-- கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி

Post by நண்பன் on Sat 2 Aug 2014 - 11:40

Nisha wrote:
காஸா விவகாரம் குறித்து பேசுகையில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைய அதிகாரி கிறிஸ் கன்னேஸ் கதறி அழுதுள்ளார்.

இஸ்ரேல்– காஸாமுனை இடையிலான போர் 25 வது நாளை எட்டியுள்ளது. காஸா முனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல், தரைவழி தாக்குதலையும் நடத்தி வருகிறது.

நேற்று வடக்கு காஸா முனையில் ஜெபல்யா என்ற இடத்தில் உள்ள வீடுகள், பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் பீரங்கித்தாக்குதலையும், வான்வழி தாக்குதலையும் நடத்தியது.

காஸாமுனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 1360 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலைப் பொருத்தமட்டில் 53 வீரர்களும், பொதுமக்களில் 3 பேரும் கொல்லப்பட்டனர்.

இரு தரப்பினருக்கு இடையே நிரந்தர போர் நிறுத்தம் செய்வதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றில் பேசுகையில், ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண உதவி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ் கன்னேஸ் கதறி அழுதார்.

என் உணர்வுகளை, காஸாவில் மக்கள் எதிர்கொள்ளும் பெரும் துயரங்களுடன் ஒப்பிட முடியாது. இஸ்ரேல் படையின் அறிவிப்பை அடுத்துதான் மக்கள் முகாம்களுக்கு வருகின்றனர் என்று கூறியுள்ள அவர் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருப்பிடங்களின்றி அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

எனது உள்ளமும் குமுறியழுகிறது இறைவா இவைகளைப் பார்த்துக்கொண்டிருப்பவன்தானே நீ இதற்கு ஒரு முடிவே இல்லையா????
 )* )* )* )* )* )* )* )* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்-- கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum