சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்!
by rammalar Yesterday at 12:04

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by rammalar Yesterday at 11:42

» நாளைய பொழுது - கவிதை
by rammalar Mon 22 Oct 2018 - 14:06

» சுவடு {கவிதை} – ப.மதியழகன்
by rammalar Mon 22 Oct 2018 - 14:04

» காத்திருப்பு {கவிதை} – ப.மதியழகன்
by rammalar Mon 22 Oct 2018 - 14:03

» சிறுகவிதைகள் – ப மதியழகன்
by rammalar Mon 22 Oct 2018 - 14:02

» மலையின் மௌனம் – கவிதை- ப.மதியழகன்
by rammalar Mon 22 Oct 2018 - 14:00

» மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தம்.
by rammalar Mon 22 Oct 2018 - 13:58

» கருஞ்சீரகம்.. அகத்துக்கு பலம்!
by rammalar Mon 22 Oct 2018 - 6:07

» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு
by rammalar Mon 22 Oct 2018 - 5:13

» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை
by rammalar Mon 22 Oct 2018 - 4:45

» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி
by rammalar Mon 22 Oct 2018 - 4:38

» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்
by rammalar Mon 22 Oct 2018 - 4:37

» ரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு
by rammalar Mon 22 Oct 2018 - 4:35

» 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேருக்கு சிறைத்தண்டனை
by rammalar Mon 22 Oct 2018 - 4:35

» 19. என்னைப் பற்றி நான் : நிஷா
by சே.குமார் Sun 21 Oct 2018 - 13:44

» காடையேழு வள்ளல்
by rammalar Sun 21 Oct 2018 - 10:30

» நடக்கும்போது சார்ஜ் ஆகிற பவர் பேங்க்
by rammalar Sun 21 Oct 2018 - 10:28

» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...!!
by rammalar Sun 21 Oct 2018 - 10:26

» சுப்பிரமணி - நகைச்சுவை
by rammalar Sun 21 Oct 2018 - 10:25

» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாய்...!!
by rammalar Sun 21 Oct 2018 - 10:24

» ஒரு அடிக்குத் தாங்கலை, ஓடிட்டான்! -
by rammalar Sun 21 Oct 2018 - 10:22

» இதுதான் இருட்டுக்கடை அல்வான்னு சாதிக்கிறா...!
by rammalar Sun 21 Oct 2018 - 10:21

» தினமும் பின்னி எடுக்கறாங்க…!!
by rammalar Sun 21 Oct 2018 - 10:19

» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...!
by rammalar Sun 21 Oct 2018 - 10:18

» எந்தக் கடையில சரக்கு வாங்கினே?
by rammalar Sun 21 Oct 2018 - 10:16

» எரிக்கிறதா, புதைக்கிறதான்னு பிரச்சினை...!
by rammalar Sun 21 Oct 2018 - 10:14

» பக்கத்து வீட்டுக்காரிக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி…!!
by rammalar Sun 21 Oct 2018 - 10:12

» அம்மா….ஏன் அப்பாவைத் திட்டறே?
by rammalar Sun 21 Oct 2018 - 10:10

» மனைவியை அடக்குவது எப்படி..!
by rammalar Sun 21 Oct 2018 - 10:09

» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி…!
by rammalar Sun 21 Oct 2018 - 10:07

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by பானுஷபானா Sat 20 Oct 2018 - 13:52

» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
by rammalar Fri 19 Oct 2018 - 17:16

» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
by rammalar Fri 19 Oct 2018 - 17:14

» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Wed 17 Oct 2018 - 13:28

.

நம்பினால் நம்புங்கள்!

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

Sticky நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Thu 31 Jul 2014 - 15:03


* வண்டுகளில் மட்டுமே 4 லட்சத்துக்கும் அதிக இனங்கள் அறியப்பட்டிருக்கின்றன.

* உலகின் அனைத்துக் கண்டங்களையும் ஒன்று சேர்த்தாலும் கூட, பசிபிக் பெருங்கடலின் பரப்பளவை விடக் குறைவாகவே இருக்கும்!

* கிரேட் வெள்ளைச் சுறாவின் வால்களே, அது மணிக்கு 24 கி.மீ நீந்துவதற்குத் துணைபுரிகின்றன.

* உலகிலேயே மிக உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் (807 மீட்டர்) மீது முதன்முதலாக விமானத்தில் பறந்தார் ஜிம்மி ஏஞ்சல். அவரது பெயரே அந்த அருவிக்குச் சூட்டப்பட்டிருக்கிறது.

* உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்ட்டை விட, சிறுத்தை 2.5 மடங்கு வேகமாக ஓடக்கூடியது!

* சீனாவும் இந்தியாவுமே காய்கறி உற்பத்தியில் உலகின் முதல் இரு இடங்களைப் பெற்றுள்ளன. அமெரிக்கா, துருக்கி, எகிப்து, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்து வருகின்றன.

* வண்ணத்துப்பூச்சிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 191 இனங்கள் அழிந்து விட்டன. 368 இனங்கள் அழியும் தருவாயில் உள்ளன.

* உலகில் அதிக அளவு வளர்க்கப்படும் கால்நடை - கோழிதான்! மாடு, வாத்து, செம்மறியாடு, பன்றி, வெள்ளாடு, வான்கோழி, கினியா கோழி, எருமை, குதிரை ஆகியவை பின்தொடர்கின்றன.

* கி.மு. 2297 முதல், சீனாவின் மஞ்சள் நதி வெள்ளப்பெருக்குகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 1500க்கும் அதிக வெள்ளப்பெருக்குகளைக் கொண்டு வந்து ‘சீனாவின் துயரம்’ என்ற பெயரைத் தக்க வைத்துள்ளது அந்த நதி.

* அதிக பாலூட்டி வகைகளைக் கொண்ட நாடு இந்தோனேஷியா (667). அதைத் தொடர்ந்து பிரேசில் (578), மெக்சிகோ (544), சீனா (502), அமெரிக்கா (468), கொலம்பியா (467), பெரு (441), காங்கோ (430) ஆகிய நாடுகள் உள்ளன. 9வது இடத்தில் உள்ள இந்தியாவில் இருப்பவை 422 பாலூட்டி வகைகள். 10வது இடத்தில் கென்யா (407).

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=84816


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Thu 31 Jul 2014 - 15:06

* ‘பேய் பிடித்த வீடு’ என நம்பப்படுகிற வீட்டை, அந்த விஷயத்தைக் கூறாமல் விற்பனை செய்வது, நியூயார்க்கில் சட்டப்படி குற்றம்!

* புலியின் தோலில் அதன் மென்மயிர்களைப் போலவே டிசைன் கீற்றுகள் காணப்படுகின்றன.

கோலா விலங்குகளும் மனிதர்களும் ஒரே விதமான விரல் ரேகைகளையே கொண்டுள்ளனர்.

* சாலமாண்டார் என்கிற ஊர்வன வகை உயிரிகளில் சில, தாம் இழந்த வால், கால் பகுதிகளை மட்டுமல்ல... கண்ணின் பகுதிகளைக்கூட திரும்ப வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் படைத்தவை!

* பெண் கழுதையையும், ஆண் வரிக்குதிரையையும் கலப்பினம் செய்து ‘ஜீடாங்’ என்ற உயிரினம் உருவாக்கப்பட்டுள்ளது.

* ஸ்லிங்கி என்ற சுருள் வளையத்தை (ஒரிஜினல்) 6வது மாடியின் ஜன்னலிலிருந்து தரை வரை நீட்சியடையச் செய்ய முடியும்.

* ஆண் தீக்கோழி சிங்கத்தைப் போலவே கர்ஜிக்கும்.

* சைபீரியாவில் குளிர் அதிகமாகும்போது, உங்கள் மூச்சுக்காற்று வெளியே வந்த உடனேயே, ஐஸ் ஆகிவிடும்!

* பகடைக்காய்களில் எதிரெதிர் பக்கங்களின் கூட்டுத்தொகை எப்போதும் 7 ஆகவே இருக்கும்.

* எலிபென்ட் சீல் விலங்குகளில் சில, நீர்மூழ்கிக் கப்பல்களுக்குக் கீழேயும் கூட ‘டைவ்’ அடித்துச் செல்லும்.

தினகரன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by பானுஷபானா on Fri 1 Aug 2014 - 12:28

ஆச்சரியமான தகவல் பகிர்வுக்கு நன்றி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16778
மதிப்பீடுகள் : 2185

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Sun 3 Aug 2014 - 15:54


*  யானைகள் சராசரியாக தினமும் 150 கிலோ உணவு உட்கொள்கின்றன. 180 லிட்டர் நீர் பருகுகின்றன.

*  கொறிவிலங்குகளில் 1,700க்கும் அதிக இனங்கள் உள்ளன. எலிகள், சுண்டெலிகள், முயல்கள், கினி பன்றிகள் போன்றவை இவ்வினமே!

*  சராசரி மனிதனுக்கு தினமும் 2 ஆயிரம் கலோரி ஆற்றல் கொண்ட உணவு தேவை. அமெரிக்காவில் சராசரியாக ஒருவர் 3,200 கலோரி உட்கொள்கிறார். எத்தியோப்பியாவில் ஒருவருக்கு 500 கலோரி கிடைத்தாலே ஆச்சரியம்தான்!

*  சராசரியாக, நாம் 10 வினாடிகளில் ஒரு லிட்டர் காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகிறோம்.

*  நமது நரம்புகள் அதிகபட்சமாக நொடிக்கு 120 மீட்டர் வேகத்தில் சமிக்ஞைகளை அனுப்புகின்றன.

*  நமது ரத்தம் தமனிகள் வழியாக ஒரு நொடிக்கு 1 மீட்டர் தூரம் பயணிக்கிறது.

*  எஃகைக் காட்டிலும், அதே அளவு எடை கொண்ட எலும்புகள் 5 மடங்கு வலிமையானவை.

*  யானைக்கு அடுத்து காண்டாமிருகங்களும் நீர்யானைகளும் அதிக எடை கொண்டவை. ஆப்ரிக்க வெள்ளை காண்டாமிருகத்தின் எடை 9 டன் வரை இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Sun 3 Aug 2014 - 15:56


‘ஈபே’ இணைய தளத்தில் விண்கல் கூட விற்கிறார்கள்!

எரிமலை வெடித்துச் சிதறும்போது, மின்னல் கீற்றுகள் போன்ற ஒளி வெப்பமும் உள்ளிருந்து வெளிப்படும்.

பெரும்பாலான ஆப்ரிக்க யானைகளின் காதுகள், அக்கண்டத்தின் வரைபடம் போலவே அமைந்துள்ளன!

சிவப்பு க்ரேயானில் மட்டுமே 29 ஷேடுகள் உள்ளன.

சில வகை மீன்கள் தரையில் நடக்கவும் செய்யும்!

ஜப்பானில் ஸ்கூபா டைவர்களுக்காகவே கடலுக்கு அடியில் 33 அடி ஆழத்தில் ஒரு போஸ்ட் பாக்ஸ் வைத்திருக்கிறார்கள். அவர்கள் கடலடியில் இருந்தே போஸ்ட் கார்டு அனுப்ப முடியும்!

டால்பின்களால் நீருக்கு அடியில் 24 கிலோமீட்டர் தொலைவிருந்து கூட ஒலியைக் கேட்க முடியும்.

காட்டெருமையையும் பசுவையும் கலப்பினமாக்கி   ஙிமீமீயீணீறீஷீ   என்ற புதுவகை விலங்கு உருவாக்கப்பட்டுள்ளது. பாதி எருதும் பாதி பசுவும் கலந்த புதுமை!

முன்னொரு காலத்தில் வௌவால் எச்சத்திலிருந்து துப்பாக்கிக் குண்டுகளுக்கான மருந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது.

முள்ளம்பன்றிகளால் நீரில் மிதக்கவும் முடியும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by நண்பன் on Sun 3 Aug 2014 - 16:18

நாங்கள் நம்புகிறோம் இன்னும் தொடருங்கள் நல்ல அறிவியல் தகவல்கள்  )( )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by Nisha on Sun 3 Aug 2014 - 19:50

நம்ப முடியாதுன்னால் என்ன செய்வதாக உத்தேசம் முஹைதீன் சார்! அதை சொன்னால் அதன் பின் நான் நம்புவதா இல்லையா என முடிவெடுக்கின்றேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by கவிப்புயல் இனியவன் on Mon 4 Aug 2014 - 10:00

நன்றி நன்றி 
நல்ல தகவல்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Mon 4 Aug 2014 - 15:06

பனிக்கட்டிகளில் 90 சதவீதம் காற்றுதான்!

உலகின் மிக லேசான பாலூட்டி  ‘பம்பிள்பி பேட்’ என்கிற வௌவால். இதன் எடை 2 ஜெம்ஸ் மிட்டாய்கள் அளவுக்குத்தான் இருக்கும்!

அந்துப்பூச்சிகளால் பல கிலோ மீட்டர் தொலைவிலிருந்தும் பரஸ்பர வாசனையை உணர முடியும்.

தன் சிலையை தானே உருவாக்கியிருக்கிறார் ஹானானுமா மஸாகிச்சி என்ற ஜப்பானிய சிற்பி. தன்னுடைய முடி, பற்கள் மற்றும் நகங்களையே பயன்படுத்தி அச்சு அசலாக அவரையே செய்தது தான் விசேஷம்!

சில வகை தவளைகளால் 50 அடி உயரம் கூட காற்றிலே மிதக்க முடியும்.

சில நத்தைகள் 3 ஆண்டுகள் வரை கூட தொடர்ந்து உறங்கும்.

வெட்டுக்கிளிகள் மனிதனைப் போல பெரிய உருவமாக இருந்தால், அவை ஒரே தாவலில் ஒரு கூடைப்பந்து மைதானத்தையே கடந்து விடும்!

அலிகேட்டர் முதலைகள் 80 ஆண்டுகள் வரை வாழும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Mon 4 Aug 2014 - 15:06


* 5 ஆயிரம் வயது தாண்டியும் உயிர் வாழும் மரம் பூமியில் உண்டு. பிரமிடுகளின் வயதுக்கு இணையான இம்மரம், Great  Basin bristlecone pine  வகையைச் சேர்ந்தது. அமெரிக்காவின் கலி ஃபோர்னியாவிலுள்ள ஒயிட் மவுன்டன்ஸ் பகுதியில் உள்ளது.

* மூளையின் தகவல்கள் நமது நரம்பு மண்டலத்தில் மணிக்கு 322 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணம் செய்கின்றன.

* இங்கிலாந்திலுள்ள லண்டனிலிருந்து 16,657 கிலோமீட்டர் தாண்டி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பெண்ணுக்கு ஒரு பீட் சா டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது.

*  நம் தும்மலின் வேகம் மணிக்கு 160 கிலோ மீட்டர்!

* ஆப்பிள் சாஸ் - இதுதான் விண்     வெளியில் உண்ணப்பட்ட முதல் உணவு. அந்தப் பெருமை அமெரிக்க விண்வெளி வீரருக்குக்  கிடைத்தது!

* இந்தோனேசிய மழைக்காடுகளில் உலகின் மிகப்பெரிய மலர் பூக்கிறது. அது ஒரு கார் டயர் அளவுக்குப் பெரியது.

* நீலத்திமிங்கலத்தின் இதயத்தின் எடை மட்டுமே சுமார் 907 கிலோ.

* ஒரு குண்டூசி முனையில் நம் உடலின் 10 ஆயிரம் செல்களை நிறுத்தி வைத்துவிட முடியும்.

* விரல் நகம் நுனி முதல் அடி வரை வளர 6 மாதங்கள் ஆகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by கவிப்புயல் இனியவன் on Tue 5 Aug 2014 - 7:33

அறிய தந்தமைக்கு நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Tue 5 Aug 2014 - 16:11

* உலகில் 460 கோடி மக்கள் மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள்.

* 3 கோடி மக்கள், இரண்டாம் உலகப்போரின் போது அகதிகள் ஆக்கப்பட்டார்கள் (1939 முதல் 1945 வரை).

* 170 கோடி மக்கள் ஏதேனும் ஒரு வகையில் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

* 250 கோடி மக்கள் தொலைக்காட்சியில் டயானா இறுதி யாத்திரையைக் கண்டார்கள் (1997).

* 470 கோடி மக்கள் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கின்றனர்.

* 20 கோடி மக்கள் தாய்நாட்டுக்கு வெளியே வாழ்கின்றனர்.

* 250 கோடி மக்களுக்கு அடிப்படைத் துப்புரவு வசதிகள் இல்லை.

* 90 கோடி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது இல்லை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Tue 5 Aug 2014 - 16:13* நாடாப்புழு 8 மீட்டர் நீளம் வரை வளரும்.

* முதலைகளிலே 23 இனங்கள் உண்டு.

* மனிதனுக்கும் சிம்பன்சிக்கும் 96 சதவீத டிஎன்ஏக்கள் ஒன்றுபோலவே இருக்கின்றன. மொத்தம் 3 பில்லியன் டிஎன்ஏ லெட்டர்ஸ்!

* தெளிவான இரவுப்பொழுதில், நகரத்தில் வாழ்வோர் ஏறக்குறைய 400 நட்சத்திரங்களைக் காண முடியும். கிராமப்புறங்களில் 1,200 நட்சத்திரங்கள் வரை காணக் கிடைக்கும். ஒளியே இல்லாத பகுதிகளில் இருப்பவர்கள் 3,500 வரை பார்க்க வாய்ப்புள்ளது.

* சிங்கக் குட்டிகள் பிறக்கும்போது பார்வையற்றும், எதுவும் செய்ய இயலாத ஒரு குழந்தை போலவும்தான் இருக்கின்றன.

* பாறைகளின் வயதை அதிலுள்ள கதிரியக்கத் தாதுக்களின் அளவைக் கொண்டே கணிக்கிறார்கள்.

*  ‘ஜெயன்ட் கோல்டன் கிரவுன் ஃப்ளையிங் பாக்ஸ்’ என்ற வவ்வால் பறக்கும்போது, 1.5 மீட்டர் அகலத்துக்கு உடலை விரிக்கும்.

* சுண்டெலியின் ஆங்கிலப் பெயரான ‘மவுஸ்’ சமஸ்கிருத மொழியிலிருந்தே தோன்றி யிருக்கிறது. இதன் மூலப்பொருள், ‘திருடன்’.

* தவளைகள் அமைதியாகக் காட்சியளித்தாலும், ‘கன்னி பால்’ குணமுடையவை. சில வகை ஆண் தவளைகள், தேரைகளையே உணவாக்கும்.

* ‘பால்ட் ஈகிள்’ வகை கழுகுகளுக்கு ஏறக்குறைய 7,200 இறகுகள் உண்டு.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ராகவா on Tue 5 Aug 2014 - 16:14

நன்றி அஹமத் அண்ணா..
நான் நம்பிட்டேன்...அனைத்தும் மிகவும் நம்ப கூட செய்திகள்...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Sat 9 Aug 2014 - 11:17


 
* குழந்தைகள் ஓராண்டில் ஏறக்குறைய 50 லட்சம் முறை கண் இமைக்கிறார்கள்.

* சிங்கங்களை விட நீர்யானைகள் அபாயமானவை.

* இமயமலைத் தொடர் ஆண்டுக்கு அரை இன்ச் உயரம் என்கிற அளவில் வளர்கிறது.

* துருக்கியில் 8,891 அடி நீளமுள்ள கேக் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது 114 டென்னிஸ் கோர்ட்டுகளின் நீளத்துக்குச் சமம்!

* மிக வேகமான வல்லூறுவால் ஒரு ரேஸ் கார் வேகத்துக்குப் பறக்க முடியும்.

* கடந்த 5 நிமிடங்களில் நம் பூமி 5 ஆயிரம் மைல் தொலைவு பயணம் செய்திருக்கிறது.

* பண்டைய எகிப்தில் மம்மிகளின் மூக்கு வழியாக மூளை வெளியே எடுக்கப்பட்டு விடும்.

* மனிதர்களால் 10 ஆயிரம் வெவ்வேறு வாசனைகளைப் பிரித்து உணர முடியும்!

* சீனாவில் நடைபெற்ற ஒரு அகழ்வாராய்ச்சியில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நூடுல்ஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

* 3 கோடியே 30 லட்சம் மக்கள் கைகோர்த்து நின்றால் நிலநடுக்கோட்டை ஒரு சுற்று சுற்றி விடலாம்!

* சராசரியாக ஒரு 500 ரூபாய் நோட்டு 9 ஆண்டு காலம் புழங்குகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Sat 9 Aug 2014 - 11:17* மண்புழுக்களுக்கு 5 இதயங்கள்!

* மழையில் ஓடும்போது 50 சதவீதம் அதிகம் நனைவோம்!

* ‘லேடிபக்’ எனப்படும் வண்டினத்துக்கு பயம் ஏற்படுகையில், மூட்டுகளின் வழியே வாசனையுள்ள நீரை வெளியேற்றும்.

* ‘ஜெயன்ட்’ வகை ஆமைகள் வாழ்நாள் முழுக்க வளர்ந்துகொண்டே இருக்கும்.

* 10 ஆயிரம் ‘டூத் பிக்ஸ்’ குச்சிகளைக் கொண்டு 4 அடி நீளமுள்ள படகை உருவாக்கியுள்ளார் ஒரு கலைஞர். இதை ரிமோட் கன்ட்ரோல் கொண்டு இயக்கவும் முடியும்!

* நியூசிலாந்து நாட்டு மக்கள்தொகையை விட, அங்குள்ள செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை அதிகம்!

* ஒரு கோடிக்கும் அதிக எண்ணிக்கையிலான லட்சாதிபதிகள், இன்று இவ்வுலகில் வாழ்கிறார்கள்.

* விண்வெளி வீரர்களின் பாதத் தடங்கள் என்றும் நிலவில் நிலைத்திருக்கும். அவற்றை அழிக்க அங்கே காற்றில்லையே!

* அமெரிக்காவில் நிஜ ஃப்ளமிங்கோ பறவைகளை விட, பிளாஸ்டிக் பறவைகளே அதிகம்.

* பார்வைக்கு, மூளையின் மொத்த சக்தியில் மூன்றில் ஒரு பங்கு தேவைப்படுகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by Nisha on Sat 9 Aug 2014 - 11:44

நான் நம்பல்லைப்பா! ஒன்றையும் நம்பல்லை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by நண்பன் on Sun 10 Aug 2014 - 15:00

அறிந்தும் அறியாத அரியவைகளைப் பகிரும் நண்பருக்கு நன்றிகள் தொடருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ராகவா on Sun 10 Aug 2014 - 15:01

Nisha wrote: நான் நம்பல்லைப்பா! ஒன்றையும் நம்பல்லை!
ஒருத்தர் நம்பலனா..என்ன அஹமத் அண்ணன் பதிவு போடுவதை நிறுத்தவ போறாரு...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by முனாஸ் சுலைமான் on Sun 10 Aug 2014 - 21:22

)((  சூப்பர்
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by Muthumohamed on Sun 10 Aug 2014 - 21:31

நீங்க சொல்லும் போது நம்பி தானே ஆகவேண்டும்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ராகவா on Sun 10 Aug 2014 - 21:51

Muthumohamed wrote:நீங்க சொல்லும் போது நம்பி தானே ஆகவேண்டும்
 i*  i*
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Mon 11 Aug 2014 - 14:22

* 4 விண்கற்களுக்கு பீட்டில்ஸ் ராக் இசைக்குழுவினரின் பெயர்கள் (ஜான், பால், ஜார்ஜ், ரிங்கோ) சூட்டப்பட்டிருக்கின்றன.

* கிரிக்கெட் பூச்சிகள் தங்கள் மூட்டுகளின் வழியாகவே ஒலியை உணர்கின்றன.

* துபாயில் பனை மர வடிவில் ஒரு தீவு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுவே செயற்கைத் தீவுகளில் மிகப்பெரியது.

* தூசு மற்றும் பனி அடங்கிய பிரமாண்டப் பந்துதான் வால் நட்சத்திரம்.

* ஒரு நாய் கழுத்துப்பட்டை 3 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டிருக்கிறது. காரணம் அதிலிருக்கும் வைரம்!

* கட்டுப்பாடற்ற வான்கோழிகள் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் கூட ஓடும்!

* பிளாக்ஹோலில் இருப்பதாகக் கற்பனை செய்தால், அங்கு நாம் ‘ஸ்பாஹெட்டி’ எனும் ஒருவகை நூடுல்ஸ் உணவு போல இழுக்கப்பட்டிருப்போம்!

* உலகின் மிகச் சிறிய குரங்கின் உயரம் - ஒரு டூத் ப்ரஷ் அளவுதான்!

* எவரெஸ்ட் சிகரத்தில் செல்போன் சிக்னல் கிடைக்கும்!

* பன்றிகளுக்கு வேனிற்கட்டிகள் (வியர்க்குரு) ஏற்படுவதில்லை!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Mon 11 Aug 2014 - 14:23

* சிம்பன்சிகள், குரங்குகள், நாய்கள் மற்றும் ஒரு கினிப்பன்றியும் சுண்டெலியும் கூட விண்வெளிக்குச் சென்றுள்ளன.

* 1945-1947 காலகட்டத்தில் ‘மைக்’ என்ற சிக்கன் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்தது -தலையே இல்லாமல்!

* வியாழன் கோளில் 300 ஆண்டு களாகத் தொடரும் சூறாவளி, இன்னும் வலுவாக உள்ளது.

* ஒரு மனிதனின் தலையை விடவும் பெரியதும் எடை அதிகமானதுமான வெங்காயம் ஒருமுறை அறுவடையாகியுள்ளது. என்ன விலையோ?

* ராய் சல்லிவன் என்ற அமெரிக்கரை 7 வெவ்வேறு முறைகள் மின்னல் தாக்கிய பிறகும், அவர் உயிர் பிழைத் திருந்தார்!

* உடலின் மிகப்பெரிய உறுப்பு - நம் சருமம்தான்!

* ‘கேட்னிப்’ எனும் மூலிகைச்செடி சிங்கம் மற்றும் புலிகளைக்கூட பாதிக்கும்!

* பண்டைய எகிப்தியர்கள் குரங்குகளை இசைக்கருவிகளைப் பயன்படுத்தவும், நடனம் ஆடவும் பழக்கியிருந்தனர்!

* பெரு நாட்டில் புத்தாண்டன்று மஞ்சள் வண்ண உள்ளாடை அணிந்தால் அதிர்ஷ்டம் என்பது நம்பிக்கை!

* பிரமாண்டமான ஹம்பர்கர் போன்ற வடிவில் இருக்கும்படிதான் ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் பைக் முதலில் வடிவமைக்கப்பட்டது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Tue 12 Aug 2014 - 10:54

* இன்றைக்கு மட்டுமல்ல... அன்றைக்கும் நீலத்திமிங்கலங்களே உலகில் மிகப் பெரிய உயிரினங்கள், டைனோசர்களை விடவும்!

* கார்கள் தயாரிக்கப்படுவதற்கு முன்பே டிராஃபிக் லைட் கண்டறியப்பட்டு விட்டது.

* ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் செம்மழை பொழிந்திருக்கிறது.

* பாத்டப்பிலேயே ஆடப்படும் விளையாட்டுகள் ஐரோப்பாவில் ஒருகாலத்தில் பிரபலமாக இருந்தன. அப்படி ஆடப்பட்ட மோனோபாலி ஆட்டம் ஒருமுறை 99 மணி நேரம் நீடித்தது.

* தேனீக்களுக்குப் பயிற்சி அளித்து வெடிப்பொருட்களைக் கண்டறியச் செய்ய முடியும்.

* டீன் ஏஜிலேயே எகிப்து ராணியாகி விட்டார் கிளியோபாட்ரா.

* பாட்டிலில் வளர்க்கப்பட்ட ஒரு கோல்டு ஃபிஷ், இங்கிலாந்தில் 43 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறது!

* பால்வீதி மண்டலத்தைக் கடக்க வேண்டுமென்றால், ஜம்போ ஜெட் விமானத்துக்கே 120 பில்லியன் ஆண்டுகள் தேவைப்படும்.

* பூமியில் உள்ள ஒட்டுமொத்த மணற்துகள்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், பிரபஞ்சத்தில் அதிக நட்சத்திரங்கள் உள்ளன.

* பிரமாண்டமான டைனோசர்கள் வெஜிடேரியன்களே!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum