சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்!
by rammalar Today at 7:04

» நெடுநல்வாடை – விமர்சனம்
by rammalar Today at 7:02

» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...
by rammalar Today at 6:35

» வில்லியாக மாறும் கதாநாயகிகள்
by rammalar Today at 6:33

» என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி
by rammalar Today at 6:28

» இணைய வெளியினிலே...
by rammalar Yesterday at 18:33

» அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 18:21

» இயற்கை இறைவனின் நன்கொடை
by rammalar Yesterday at 9:32

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Wed 20 Mar 2019 - 11:21

» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:49

» அண்ணிமார் கதை - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:46

» மழைச்சிறுமி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:35

» கீரி (எ) கிரிதரன் - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:30

» காகிதப்பூவில் மரத்தின் வாசம் - ஹைக்கூ
by rammalar Wed 20 Mar 2019 - 10:27

» நிழற்பூ - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:19

» தாய்க் கோழி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:16

» உழைப்பால்...(கவிதை)
by rammalar Wed 20 Mar 2019 - 10:15

» அய்யனார் விஸ்வநாத்தின் 'பழி'
by சே.குமார் Tue 19 Mar 2019 - 9:42

» வாட்ஸ் அப் பகிர்வு- ரசித்தவை
by rammalar Tue 19 Mar 2019 - 7:31

» அச்சம் பல வழிகளில் வெல்லப்படலாம், ..!!
by rammalar Tue 19 Mar 2019 - 7:26

» ஆசைப்பட்டது கிடைக்காத போது....
by rammalar Mon 18 Mar 2019 - 14:28

» சிரி... சிரி...
by rammalar Mon 18 Mar 2019 - 11:29

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by rammalar Mon 18 Mar 2019 - 8:20

» வாட்ஸ் அப் கலக்கல்
by rammalar Mon 18 Mar 2019 - 7:39

» கருவிழியுடன் கண் திறந்து பார்த்த ஸ்ரீனிவாசப் பெருமாள்
by rammalar Sun 17 Mar 2019 - 13:15

» ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா
by rammalar Sun 17 Mar 2019 - 13:13

» ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்
by rammalar Sun 17 Mar 2019 - 13:11

» எது சரி… எது தவறு…!
by rammalar Sun 17 Mar 2019 - 13:09

» அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்! – கவிதை
by rammalar Sun 17 Mar 2019 - 13:07

» காதல் பாடலில் அஜித் – வித்யா பாலன்
by rammalar Sun 17 Mar 2019 - 12:58

» திட்டமிட்டதை விட சீக்கிரமே முடிந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு
by rammalar Sun 17 Mar 2019 - 12:52

» இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு - இமான்
by rammalar Sun 17 Mar 2019 - 12:47

» சமையல்! சமையல்!
by பானுஷபானா Thu 14 Mar 2019 - 13:02

» ‘நீ நீயாக இரு!’ - ஏன் இப்படிச் சொல்கிறது ஜென் தத்துவம்?
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:24

.

நம்பினால் நம்புங்கள்!

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

Sticky நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Thu 31 Jul 2014 - 15:03

First topic message reminder :


* வண்டுகளில் மட்டுமே 4 லட்சத்துக்கும் அதிக இனங்கள் அறியப்பட்டிருக்கின்றன.

* உலகின் அனைத்துக் கண்டங்களையும் ஒன்று சேர்த்தாலும் கூட, பசிபிக் பெருங்கடலின் பரப்பளவை விடக் குறைவாகவே இருக்கும்!

* கிரேட் வெள்ளைச் சுறாவின் வால்களே, அது மணிக்கு 24 கி.மீ நீந்துவதற்குத் துணைபுரிகின்றன.

* உலகிலேயே மிக உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் (807 மீட்டர்) மீது முதன்முதலாக விமானத்தில் பறந்தார் ஜிம்மி ஏஞ்சல். அவரது பெயரே அந்த அருவிக்குச் சூட்டப்பட்டிருக்கிறது.

* உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்ட்டை விட, சிறுத்தை 2.5 மடங்கு வேகமாக ஓடக்கூடியது!

* சீனாவும் இந்தியாவுமே காய்கறி உற்பத்தியில் உலகின் முதல் இரு இடங்களைப் பெற்றுள்ளன. அமெரிக்கா, துருக்கி, எகிப்து, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்து வருகின்றன.

* வண்ணத்துப்பூச்சிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 191 இனங்கள் அழிந்து விட்டன. 368 இனங்கள் அழியும் தருவாயில் உள்ளன.

* உலகில் அதிக அளவு வளர்க்கப்படும் கால்நடை - கோழிதான்! மாடு, வாத்து, செம்மறியாடு, பன்றி, வெள்ளாடு, வான்கோழி, கினியா கோழி, எருமை, குதிரை ஆகியவை பின்தொடர்கின்றன.

* கி.மு. 2297 முதல், சீனாவின் மஞ்சள் நதி வெள்ளப்பெருக்குகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 1500க்கும் அதிக வெள்ளப்பெருக்குகளைக் கொண்டு வந்து ‘சீனாவின் துயரம்’ என்ற பெயரைத் தக்க வைத்துள்ளது அந்த நதி.

* அதிக பாலூட்டி வகைகளைக் கொண்ட நாடு இந்தோனேஷியா (667). அதைத் தொடர்ந்து பிரேசில் (578), மெக்சிகோ (544), சீனா (502), அமெரிக்கா (468), கொலம்பியா (467), பெரு (441), காங்கோ (430) ஆகிய நாடுகள் உள்ளன. 9வது இடத்தில் உள்ள இந்தியாவில் இருப்பவை 422 பாலூட்டி வகைகள். 10வது இடத்தில் கென்யா (407).

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=84816


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Sun 2 Nov 2014 - 14:36

யூத் சாதனையாளர்கள்....

* கவிக்குயில் சரோஜினிதேவி தமது 13ம் வயதிலேயே 1300 அடிகளையுடைய கவிதையை ஆறே நாட்களில் இயற்றி சாதனை படைத்துள்ளார். 
* வாழ்வுக்குத் தேவையான கருத்துக்களை போதிக்க ஆரம்பித்தபோது, கன்பூஷியஸின் வயது 22
* ‘ஏழை மக்கள்’ என்ற முதல் நாவலை ரஷ்ய நாவலாசிரியரான தாஸ்தாவஸ்கி வெளியிட்டபோது அவருக்கு வயது 25.
* ‘வெர்தரின் துயரங்கள்’ என்ற பிரசித்தி பெற்ற நாவலை ஜெர்மானிய மேதையான கதே வெளியிட்டபோது அவருக்கு வயது 25.
* இனிய கவிதைகளை வடித்த கீட்ஸ், தம்முடைய 25 வயதிற்குள் 16,000 வரிகளைக் கவிதைகளாகப் பாடினார்.
* வானொலியைப் படைத்த மார்கோனி வான்புகழ் பெற்றது, 27 வயதில்.
* மாவீரன் நெப்போலியன் படைத் தளபதியானது தன்னுடைய 24வது வயதில்தான்.
* காரல் மார்க்ஸ் ‘மூலதனம்’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதியபோது அவரது வயது 23.
* புவிஈர்ப்பு விசையைக் கண்டறிந்து உலகுக்கு அறிவித்த போது நியூட்டனுக்கு வயது 24.
* அலெக்சாண்டர் கிரஹாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்தபோது அவருக்கு வயது 29.
* வில்லியம் பிட் இங்கிலாந்தின் பிரதமராக பதவி ஏற்றபோது அவருக்கு வயது 24.
* முதல் விண்வெளி வீரரான யூரி காகரின் தன் சாதனையைச் செய்தபோது அவருக்கு வயது 27.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Sun 2 Nov 2014 - 14:36

முடியால் அவிழ்ந்த மர்மம்

மாவீரன் நெப்போலியன் இறந்த ஆண்டு 1821. அவர் இறப்பிற்குக் காரணம் வயிற்றுப் புற்றுநோய் என கூறப்பட்டாலும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவே அவரது ஆதரவாளர்கள் அப்போதே நினைத்தார்கள். அதற்கு சாட்சியாக நெப்போலியன் தனது  உயிலில் ‘பிரிட்டிஷ் கூலிப் படையினரால் எனது உயிருக்கு ஆபத்து நேரக்கூடும்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

நெப்போலியனை நேரடியாக மோதிக் கொல்ல முடியாது. அதனால் மற்றவர்கள் அறியாதபடி ஆர்சனிக் விஷத்தைக் கொடுத்து அவரைக் கொன்றிருக்கக் கூடும் என்கிற சந்தேகம் வலுத்தது. இந்நிலையில், அந்த மாவீரன் இறந்து சுமார் 200 ஆண்டுகள் கழித்து ஸ்மித் மற்றும் ஷப்வுட் என்ற விஞ்ஞானிகள் இந்த ஆர்சனிக் சந்தேகத்தை நூல் பிடித்து ஆராய ஆரம்பித்தார்கள். நெப்போலியனின் மரணத்திற்குப் பின்னர் வெட்டியெடுக்கப்பட்ட அவரது தலைமுடி கிடைத்தது. அதை கதிர்வீச்சு சோதனை செய்தார்கள். 

நெப்போலியனின் தலைமுடி யில் இயல்பான அளவைவிட 13 மடங்கு அதிக அளவு ஆர்சனிக் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. அதன்படி நெப்போலியன், ஆர்சனிக் என்னும் மெல்லக்  கொல்லும் விஷத்தால் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது உறுதியானது. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பது போல, முடியையே ஆயுதமாகக் கொண்டு நெப்போலியன் மரணத்தின் மர்ம முடிச்சை அவிழ்த்துள்ளார்கள்!  


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Sun 2 Nov 2014 - 14:37

சுத்தம் செய்யும் பாக்டீரியா 

சாக்கடைகளில் தேங்கும் கழிவுநீரின் துர்நாற்றத்திற்குக் காரணம், அவற்றின் மேற்பரப்பில் காணப்படும் எண்ணெய் போன்ற கொழுப்புப் பொருட்களே. கழிவுநீரிலுள்ள இந்த எண்ணெய்ப் பசையை நீக்கும் புதிய பாக்டீரியாவை இங்கிலாந்திலுள்ள விரிடியன் பயோ ப்ராஸசிங் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. பாக்டீரியாக்கள் அடங்கிய தொட்டியில் கழிவுநீரை விடும்போது, பாக்டீரியாக்கள் ஒருவித நொதியை உண்டாக்கி கொழுப்பை அகற்றுகின்றன. மேலும் கழிவுநீரின் துர்நாற்றத்தையும் இவை அகற்றுகின்றன. இந்த பாக்டீரியா உயிர்வாழ சிறிய அளவு நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் இட்டால் போதுமானது. பிரிட்டனில் பல உணவு விடுதிகளில் இந்த ரக பாக்டீரியாக்கள் சுத்திகரிப்பு பணியைச் சிறப்பாக செய்து வருகின்றன. தேவையான அளவுக்கு இந்த பாக்டீரியாக்கள் மற்றும் நொதிகள் லண்டன் கடைகளில் கிடைக்கின்றன.

இந்த பாக்டீரியாக்களால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே இயற்கை ஆர்வலர்களும் இதை வரவேற்கிறார்கள். செலவும் குறைவு, உபயோகிக்கும் முறையும் எளிமையாக இருப்பதால் ‘சுத்திகரிக்கும் பாக்டீரியாவுக்கு’ பிரிட்டனில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்தகைய பாக்டீரியாக்கள் இந்தியாவிற்கு எப்போது வருமென்று தெரியவில்லை. அப்படியே வந்தாலும் சென்னை மாநகரின் ஜீவநதியான கூவத்தை சுத்தம் செய்ய மட்டும் எத்தனை டன் பாக்டீரியாக்களைக் கொட்ட வேண்டி யிருக்குமோ!?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Tue 4 Nov 2014 - 10:06

வங்கிகளின் ஸ்டேட்டஸ்!

இந்தியாவில் சில வங்கிகளை நாம் ஆஹா.... ஓஹோ என்று தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகிறோம். ஆனால் உலக அளவில் நாம் கொண்டாடும் வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடத்தை அறிந்தால் தலை சுற்றுகிறது. வெல்ஸ் ஃபார்கோ, சேஸ், ஹெச்.எஸ்.பி.சி, பேங்க் ஆஃப் அமெரிக்கா, சிட்டி, சான்டன்டர் போன்ற வங்கிகள்தான் உலக அளவில் முன்னிலையில் உள்ள வங்கிகளாக கொண்டாடப்படுகின்றன. உலகின் மிக அதிக மதிப்புள்ள வங்கிகளுக்கான டாப் 10 பட்டியலில் இந்திய வங்கிகள் எதுவுமில்லை.  

இந்த லிஸ்ட்டில் பாரத ஸ்டேட் வங்கி 38வது இடத்தில் இருக்கிறது. ஐசிஐசிஐ வங்கி 99வது இடத்தை வகிக்கிறது. ஹெச்.டி.எஃப்.சி வங்கி 126வது இடத்திலும், ஆக்சிஸ் வங்கி 175வது இடத்திலும் உள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கி 189வது இடத்தில் இருக்கிறது. பேங்க் ஆஃப் பரோடா 206வது இடத்தில் உள்ளது. சிறிய வங்கிகளை இணைத்து மிகப்பெரிய பிராண்ட் ஆக்குவதன் மூலம் சர்வதேசப் பட்டியலில் இந்திய வங்கிகள் இடம்பெறுவது சாத்தியமே!

இந்தியாவில் எத்தனை வர்த்தக வங்கிகள் இருக்கின்றன தெரியுமா? 26 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், 20 தனியார் வங்கிகளும், 43 வெளிநாட்டு வங்கிகளும், பிராந்திய ஊரக வங்கிகள் 64ம் ஊரக வங்கிகள் 4ம் இருக்கின்றன. கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 1,606ம், கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் 93,551ம் உள்ளன. 


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Tue 4 Nov 2014 - 10:07

இது புதுசு

ஆக்ஸ்போர்ட் அகராதியில் அவ்வப்போது, புதிய வார்த்தைகளைச் சேர்ப்பது வழக்கம். இந்த வகையில் கடந்த மூன்று மாதங்களில் புதிதாகச் சேர்க்கப்பட்ட வார்த்தைகளை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது, ஆக்ஸ்போர்ட் அகராதி. இவற்றில் பல நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை:
MOOC   - இன்டர்நெட் மூலம் நடத்தப்படும் இலவச கோர்ஸ்களை இப்படி அழைக்கிறார்கள்.
PEAR CIDER  - பேரிக்காயில் இருந்து தயாரிக்கப்படும் மது பான வகை.
SELFIE  - கேமரா செல்போனில் தன்னைத் தானே எடுத்துக் கொள்ளும் போட்டோக்கள்.
STREET FOOD - தெருவோரங்களில் விற்கப்படும் உணவு வகைகள்.
BABY  MOON - குழந்தை பிறப்புக்கு முன்பாக பெற்றோர் எடுக்கும் விடுமுறை. 
BYOD (Bring your own device)   - உங்களுடைய உபகரணத்தைக் கொண்டு வரவும்.
CLICK AND COLLECT- கடைகளில் தேவையான பொருட்களை முதலில் டிக் செய்து கொடுத்து, பிறகு பொருட்களைப் பெறுதல்.
FOOD BABY - வீங்கிய குடல். 
HACKERSPACE  - கணினி தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள பலரும் ஒருங்கிணையும் இடம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Tue 4 Nov 2014 - 10:07

டாய்லெட் பேப்பர் தங்கத்தில்...

பணத்தை தண்ணியாக செலவு செய்யும் குணம் கொண்ட பணக்காரர்களுக்காக, 22 காரட் தங்கத்தினால் ஆன விலையுயர்ந்த டாய்லெட் பேப்பரை தயாரித்து பிரமிக்க வைத்துள்ளது ஆஸ்திரேலிய நிறுவனம். ‘டாய்லெட் பேப்பர்மேன்’ என்ற அந்த நிறுவனம், இயற்கைக்கு மாறான இந்தப் புதிய தயாரிப்பினை 22 காரட் தங்கத்தினால் செய்துள்ளது. இது 100 சதவீதம் பயன்படுத்தக்கூடியது என்றும், பாதுகாப்பானது என்றும் அந்த நிறுவனம் விளக்கம் வேறு அளித்துள்ளது.

இதுவரை ஒரே ஒரு தங்க பேப்பர் ரோல் மட்டுமே தயாரித்துள்ளது. இதன் விலை 13 லட்சத்து 76 ஆயிரத்து 900 மில்லியன் டாலர்.  ஆர்டர் செய்தால், தங்க டாய்லெட் பேப்பர் ரோலுடன், இலவசமாக ஒரு ஷாம்பெய்ன் மதுபாட்டிலையும் சேர்த்து டோர் டெலிவரி செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. துபாயில் உள்ள நிறுவனம், வெஸ்டர்ன் டாய்லெட்டுகளுக்கான இருக்கையை முழுக்க முழுக்க தங்கத்தினால் தயாரித்திருப்பதைப் பார்த்து, தங்க டாய்லெட் பேப்பர் ரோல் தயாரிக்கும் எண்ணம் உருவானதாக ‘டாய்லெட் பேப்பர்மேன்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Tue 11 Nov 2014 - 11:46

ரொம்ம்ம்ப பழைய மரபணு

உலகின் மிகப் பழமையான மனித மரபணுவின் துண்டுகளை ஒன்று சேர்த்துள்ளதாக ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதை அவர்கள் 40 ஆயிரம் ஆண்டு பழமையான ஒரு தொடை எலும்பிலிருந்து சேகரித்ததாகச் சொல்கிறார்கள். வடக்கு ஸ்பெயினின் ஒரு குகையிலிருந்து இந்த எலும்பை அவர்கள் தோண்டி எடுத்துள்ளார்கள்.
இந்த எலும்பில் கிடைத்த மரபணுக்கள், 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சைபீரியாவில் வாழ்ந்த மனிதர்களின் மரபணுக்களுடன் தொடர்புடையதாக இருப்பது தெரிகிறது. லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் எப்படி மனிதன் உருவானான் என்பதைப் புரிந்து கொள்ள, இந்த மரபணுவை எடுக்க இந்த விஞ்ஞானிகள் பயன்படுத்திய வழி உதவும் என்பதும் இப்போது தெரிய வந்துள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Tue 11 Nov 2014 - 11:46

அனிமல்ஸ் பப்ளிக் டாய்லெட்

24 கோடி ஆண்டு கால, வரலாற்று காலத்துக்கு முந்தைய, விலங்குகள் பயன்படுத்திய பொதுக் கழிப்பிடம் ஒன்று அர்ஜென்டினாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நவீன கால காண்டாமிருகம் போன்ற டினோடொண்டோசோரஸ் என்ற விலங்கால் இடப்பட்டதாகக் கருதப்படும் ஆயிரக்கணக்கான புதைப்படிமக் கழிவுகள் குவிந்து கிடக்கும் இந்த இடத்தை, விஞ்ஞானிகள் உலகின் மிகப்பழமையான பொதுக்கழிப்பிடம் என்று சொல்கிறார்கள். இந்த விலங்கினங்கள் ஒட்டுண்ணிகளைத் தவிர்க்கவும், தங்களைக் கொல்லவரும் விலங்குகளை எச்சரிக்கவும் ஒரு யுக்தியாக இது போல ஒரே இடத்தில் சாணம் போட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த சாணக்குவியல்கள் எரிமலைச் சாம்பல் அடுக்கால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலத்து உணவு, அக்காலத்தில் பரவிய நோய்கள் மற்றும் தாவரங்கள் பற்றிய ஆய்வுக்கு அடிப்படை ஆதாரங்களாக இவை அமையும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Tue 11 Nov 2014 - 11:47

ஆயுள் வளர்க்கும் பாதாம், வால்நட்!

பாதாம், வால்நட் போன்ற கொட்டைகளை சாப்பிடுவது, இதய நோய் மற்றும் புற்றுநோயால் இறக்க நேரிடும் ஆபத்தைக் கணிசமாகக் குறைப்பதாக ஒரு புதிய ஆய்வு சொல்கிறது. 
எவ்வளவுக்கு எவ்வளவு கொட்டைகளைச் சாப்பிடுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிக காலம் நாம் வாழலாம் என்று ‘நியூ இங்கிலாந்து மருத்துவ இதழ்’ வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. 

அமெரிக்காவில் 30 ஆண்டு காலகட்டத்தில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தினமும் ஒரு கையளவு கொட்டைகளை சாப்பிடுவதால், எந்த ஒரு காரணத்தாலும் இறப்பதை 20 சதவீதம் என்ற அளவில் குறைக்கலாம் என்கிறது இந்த ஆய்வு.  
கொட்டைகளை உண்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் சராசரியாக சற்றுக் கூடுதலாக உடல்நலன் குறித்து அக்கறையுடன் இருக்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரிய வந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அவர்கள் அதிகம் புகைப்பதில்லை, கூடுதலாக உடற்பயிற்சி செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள் இவை எல்லாம் இந்த ஆய்வு முடிவுகளில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by நண்பன் on Wed 12 Nov 2014 - 10:58

ahmad78 wrote:ஆயுள் வளர்க்கும் பாதாம், வால்நட்!

பாதாம், வால்நட் போன்ற கொட்டைகளை சாப்பிடுவது, இதய நோய் மற்றும் புற்றுநோயால் இறக்க நேரிடும் ஆபத்தைக் கணிசமாகக் குறைப்பதாக ஒரு புதிய ஆய்வு சொல்கிறது. 
எவ்வளவுக்கு எவ்வளவு கொட்டைகளைச் சாப்பிடுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிக காலம் நாம் வாழலாம் என்று ‘நியூ இங்கிலாந்து மருத்துவ இதழ்’ வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. 

அமெரிக்காவில் 30 ஆண்டு காலகட்டத்தில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தினமும் ஒரு கையளவு கொட்டைகளை சாப்பிடுவதால், எந்த ஒரு காரணத்தாலும் இறப்பதை 20 சதவீதம் என்ற அளவில் குறைக்கலாம் என்கிறது இந்த ஆய்வு.  
கொட்டைகளை உண்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் சராசரியாக சற்றுக் கூடுதலாக உடல்நலன் குறித்து அக்கறையுடன் இருக்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரிய வந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அவர்கள் அதிகம் புகைப்பதில்லை, கூடுதலாக உடற்பயிற்சி செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள் இவை எல்லாம் இந்த ஆய்வு முடிவுகளில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்போது பாதாம் சாப்பிடுகிறேன்!

அப்போ நான் நீண்ட ஆயுள் வரை நான் வாழ்வேனா (((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Thu 13 Nov 2014 - 11:21

முட்டை ரகசியம்

உலகில் முட்டை உற்பத்தி செய்யும் நாடுகளில் முதலிடம் வகிக்கிறது, சீனா. இரண்டாவது இடம், அமெரிக்காவுக்கு. இதில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 2000 கோடி முட்டைகளை இந்தியா உற்பத்தி செய்கிறது. டாக்டர் வில்லியம் போமன்ட் என்பவரின் ஆய்வின்படி, நமது இரைப்பை பச்சை முட்டையை ஜீரணிக்க இரண்டு மணி நேரமும் வேக வைத்த முட்டையை ஜீரணிக்க மூன்றரை மணி நேரமும் எடுத்துக் கொள்கிறதாம்.

அமெரிக்காவில் மேற்கு மாண்டானா பகுதியில் முட்டை மலை அமைந்துள்ளது. டைனோசர்களின் முட்டைகள் இப்பகுதி தரையில் அதிக அளவில் புதைந்திருப்பதால் இப்பகுதிக்கு முட்டை மலை என்று பெயர் வந்ததாம். அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள கோழி ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு கோழிக்கு சிமென்ட் கலந்த உணவை கொடுத்தார்கள். அந்தக் கோழி மிகப் பெரிய உறுதியான, சீக்கிரம் உடையாத முட்டையை இட்டு அசத்தியதாம். ரேவன் பறவை பச்சை நிறத்திலும், பினாமஸ் பறவை மஞ்சள் நிறத்திலும் முட்டையிடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Thu 13 Nov 2014 - 11:21

கதை சொன்னவரின் கதை!

முயல், ஆமை கதை நம் எல்லோருக்கும் தெரியும். வேகமாக ஓடும் முயல் அலட்சியத்தால் தூங்கியபோது, மெதுவாக நகரும் ஆமை விடாமுயற்சியால் வெற்றி பெற்ற அந்த கதையை அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என அலுக்க அலுக்கச் சொல்லி நம் காதைக் கிழித்திருப்பார்கள். ஆனால் முயல், ஆமை கதையை முதன்முதலில் சொன்னவர் யார் தெரியுமா?
ஈசாப் ஈசாப் கதைகள் உலகப் புகழ்பெற்றவை. அவரது கதையைத் தெரிந்து கொள்வோம். பழங்காலத்தில் ஒரு கிரேக்க அரசனின் அடிமையாக இருந்தார், ஈசாப். பார்ப்பதற்கு அழகில்லாமல் இருந்த ஈசாப்பின் குட்டிக் கதைகள் மக்களை அவர் வசம் ஈர்த்தன.

ஒரு சமயம் கிரேக்க மன்னன் ஈசாப்பிடம் சிறிது பணம் கொடுத்து டெல்பி என்ற நகருக்கு அனுப்பினார். டெல்பி நகர மக்கள் பேராசைக்காரர்களாக இருந்தார்கள். ஈசாப்பிடம் உணவுக்காக நிறைய பணம் கேட்டார்கள். பணம் கேட்ட டெல்பி மக்களுக்காக ஈசாப் ‘பொன் முட்டை இடும் வாத்து’ கதையைச் சொன்னார். கதையைக் கேட்டு டெல்பி மக்கள் மனம் திருந்தினர்.

ஈசாப்பின் கதைகள் 600க்கும் மேற்பட்டவை புழக்கத்தில் உள்ளன. வில்லியம் காக்ஸ்டன் என்பவர் 1484ம் ஆண்டு ஈசாப்பின் கதைகளைத் தொகுத்து வெளியிட்டார். ஈசாப் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்தவர் என்ற கருத்தும் இருக்கிறது. ஈசாப்புக்கு ரோம் நகரத்தில் ஒரு சிலை கூட இருக்கிறது. ஈசாப்பின் வெட்டுக்கிளியும் எறும்பும், திராட்சை புளிக்கும் என்று சொன்ன நரியின் கதை, மற்றும் ‘புலி வருது... புலி வருது...’ என்று ஊராரை ஏமாற்றிய சிறுவனின் கதை ஆகியவை வெகு பிரசித்தம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Thu 13 Nov 2014 - 11:22

டால்பினிஸி

டால்பினிஸி என்பது ஒரு மொழி. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் போன்றுதான் இதுவும். ஆனால் டால்பினிஸி மொழியை மனிதர்கள் பேசுவதில்லை. கடலில் வாழும் டால்பின்கள்தான் பேசுகின்றன.
ஆச்சரியம், ஆனால் உண்மை! டால்பின்கள் மற்ற விலங்குகள் போல அல்ல; ஒன்றுடன் ஒன்று தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கின்றன. சில சமயங்களில் வெகு தூரத்தில் இருக்கும் டால்பின்களுடன் இந்த மொழி மூலம் தொடர்பு கொள்கின்றன.

அதன் மொழி விசிலோசை போல இருக்கிறது. அதுவும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. 32 வகையான விசில் ஒலிகளை டால்பின்கள் எழுப்புவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த 32 வகை விசில்களும் ஒலி எழுத்துக்கள் என்கிறார்கள். வடிவமற்ற இந்த விசில் ஒலி ஒவ்வொன்றிற்கும் பொருள் உள்ளது. அதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் டால்பின்களுக்குத்தான் இருக்கிறதாம். இந்த ஒலி எழுத்துக்களை டாக்டர் லில்லி என்பவர் ஒலிநாடாவில் பதிவு செய்துள்ளார்.

இன்று அமெரிக்காவில் டால்பின் பேசும் மொழியைத் தெளிவாகப் புரிந்து கொண்டு அதனுடன் பேசுவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். இதில் வெற்றி கண்டுவிட்டால் பயிற்சி மூலம் டால்பின்களை நம் வசப்படுத்தி விடலாம். பயிற்சி பெற்ற டால்பின்களின் உதவியுடன் எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல் செல்லும் திசையைக்கூட அறிந்து கொள்ளமுடியும்.

பயிற்சி பெற்ற டால்பின்கள் வெடிகுண்டு எடுத்துச் செல்லும். புயலில் திசை மாறிய கப்பலுக்கு வழிகாட்டும். தவறி கடலில் விழுந்தவர்களைக் காப்பாற்றும். கால ஓட்டத்தில் மனிதன் புதிய கருவிகளின் உதவியுடன் விலங்குகளுடன் பேசப் போகிறான். அப்படி மனிதனுடன் பேசப்போகும் முதல் விலங்கு டால்பினாகத்தான் இருக்கும்!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Mon 12 Jan 2015 - 12:45

தி நியூஸ் பேப்பர்

காலையில் கைகளில் ஆவி பறக்க ஒரு கோப்பை டீயோ, காபியோ... கூடவே ஒரு நியூஸ் பேப்பர். அந்தக் காலை அலாதி சுகம்தான். இந்த செய்தித்தாள்கள் பற்றிய சுவையான தகவல்கள் உங்களுக்காக....

* 1300 ஆண்டுகளுக்கு முன்பு சீன அரசாங்கம் ‘சிங் போ’ என்ற செய்தித்தாளை விநியோகித்தது. ‘தலைநகர் செய்தி’ என்பது இதன் பொருளாகும். முக்கியமான தகவல்களை அரசாங்கம் இதன் மூலம் மக்களுக்குத் தெரிவித்தது. தொன்மையான ரோம் நகரியம் அரசாங்கச் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க ‘ஆக்டா டையூர்னா’ என்ற செய்தித்தாளை அச்சிட்டு விநியோகித்தது. ‘தினந்தோறும் நடைபெறும் நிகழ்ச்சிகள்’ என்பது இதன் பொருள். பதிவு செய்யப்பட்ட தகவலின்படி இவை இரண்டும்தான் செய்தித்தாள்களாக வெளிவந்திருக்கின்றன.

* பதினாறாம் நூற்றாண்டிலேயே செய்தித்தாளை மக்கள் காசு கொடுத்து வாங்கத் தொடங்கிவிட்டார்கள். ‘நோடிஜி ஸ்கிரிட்டி’ என்று இதற்குப் பெயர். ‘எழுதப்பட்ட செய்தி’ என்ற பொருளில் வெனிஸ் நகரில் அரசாங்கம் ஒரு செய்தித்தாளை வெளியிட்டது. ஒரு பிரதிக்கு  ‘ஒரு கெஜட்டா’ கொடுத்து மக்கள் வாங்கியிருக்கிறார்கள்.

* 18ம் நூற்றாண்டில்தான் செய்தித்தாள்கள் முறையாக வெளி வரத் தொடங்கின. அவற்றில்    செய்திகள் மட்டுமல்லாது கருத்துக்களும் இடம்பெற்றன.

* லண்டன் நகரில் 1663ம் ஆண்டில் ‘இன்டலிஜென்சர்’ என்ற பெயரில் செய்தித்தாள் ஒன்று வெளிவந்தது. அப்போதெல்லாம் செய்தித்தாள்கள் வாரம் ஒரு முறையே வெளிவந்தன. தகவல் தொடர்பில் இருந்த இடைவெளி மற்றும் செய்தித்தாளை தயாரிப்பதில் இருந்த பொறுமை... ஆகியவையே இதற்குக் காரணம் எனலாம்.

* அமெரிக்காவில் 1690ல் மாஸாசூசெட்ஸில் உள்ள பாஸ்டன் நகரில் ‘பப்ளிக் அக்கரன்ஸஸ்’ என்ற செய்தித்தாள் முதன்முதலில் வெளிவந்தது. அக்காலனியின் கவர்னராக இருந்தவரால் அச்செய்தித்தாள் உடனே நிறுத்தப்பட்டது. 1729 முதல் 1765 வரை ‘பென்ஸில்வேனியா கெஜட்’ என்ற செய்தித்தாளை பெஞ்சமின் பிராங்க்ளின் நடத்தினார். 1752ம் ஆண்டு வரை அமெரிக்க குடியேற்ற காலனிகளின் இரண்டு செய்தித்தாள்களே இருந்தன. ஆனால் அமெரிக்கப் புரட்சியின்போது 371 செய்தித்தாள்கள் இருந்தன.

* இதுவரை வெளியிட்ட செய்தித்தாள்களில் மிகவும் செல்வாக்கான இடத்தைப் பெற்றுள்ள ‘தி லண்டன் டைம்ஸ்’ 1785ல் தொடங்கப்பட்டு இன்றுவரை வெளிவந்து கொண்டிருப்பது ஒரு பெருமையான செய்திதானே!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Mon 12 Jan 2015 - 12:45

செயற்கை மண்ணில் விவசாயம்

ரஷ்யாவில் உருவாக்கியுள்ள செயற்கை மண்ணில் தாவரங்கள் வேகமாக வளர்கின்றன. சாதாரண மண்ணில் வளரும் காலத்தில், ஐந்தில் ஒரு பங்கு காலத்திலேயே இந்த மண்ணில் அறுவடை செய்ய முடிகிறது என்பது சந்தோஷத் தகவல்.

இதில் கலப்படம் இல்லாத ஜாதித் தாவரங்களை வளர்க்கலாம். சாதாரண மண்ணில் கலந்திருக்கும் பலவகைக் கலப்படங்கள் இதில் இல்லாததால், அவற்றால் ஏற்படக்கூடிய விளைவுகள் தவிர்க்கப்படுகின்றன. சோதனைச் சாலையில் லெட்டூஸ், தண்டுக் கீரை, வெங்காயம் போன்ற 30 வகை தாவரங்கள் இந்த மண்ணில் வளர்க்கப்பட்டன. ஜப்பானிய முள்ளங்கி 12 அடிக்கு மேல் வளர்ந்து சாதனை படைத்தது.

மண்ணை உருவாக்கும்போதே ஊட்டச்சத்துக்களைக் கலந்து விடுகிறபடியால், பயிரிடும்போது தண்ணீர் மட்டும் விட்டால் போதும். வீடுகளில் இந்த மண்ணைக் கொண்டு காய்கறித் தோட்டம் போட்டால், காய்கறிகளைப் பறிப்பதைத் தவிர வேறு வேலையே இருக்காது. இந்த மண்ணில் விளைச்சலும் அமோகமாக இருக்கும். ஒரு சதுர மீட்டர் பரப்பளவுள்ள சாதாரண மண்பாத்திரத்தில் முள்ளங்கியைப் பயிரிட்டால் சில நாள்களுக்குள் ஒரு கிலோ முள்ளங்கி கிடைக்கும். அதே பரப்பளவுள்ள செயற்கை மண்ணில் 21 நாட்களில் 10 கிலோ முள்ளங்கி கிடைக்கும். இனி வீட்டு மாடியில் விவசாயம், செயற்கை மண்ணில் நடக்கும் பாருங்கள்!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Mon 12 Jan 2015 - 12:45

கண்கள் இயக்கும் சக்கர நாற்காலி

கஷ்டப்பட்டு பட்டனை அழுத்தி, லீவரை இழுத்து எல்லாம் இயக்க வேண்டிய டென்ஷன் இல்லை. சும்மா கண்ணை சிமிட்டினாலே போதும்... ஓடும், திரும்பும், நிற்கும். என்னவென்று கேட்கிறீர்களா? நாற்காலி... சக்கர நாற்காலி. இதை ஜப்பானின் சுஸுகி மோட்டார் நிறுவனம் தயாரித்துள்ளது.

மின்சாரத்தால் இயங்கும் இந்த சக்கர நாற்காலியின் ஓட்டத்தைக் கட்டுப் படுத்த கண் சிமிட்டினாலே போதுமானது. முன்னோக்கிச் செல்ல ஒரு சிமிட்டல், இடப்பக்கம் திருப்ப 2 சிமிட்டல்கள், வலப்பக்கம் திரும்ப 3 சிமிட்டல்கள், பின்னோக்கிச் செல்ல 4 சிமிட்டல்கள், நிறுத்த அரை நொடி சிமிட்டல் என இஷ்டத்துக்கு சிமிட்ட வேண்டியதுதான்!

கண் சிமிட்டலுக்கும் நாற்காலியின் ஓட்டக் கட்டுப்பாட்டிற்கும் என்ன தொடர்பு?
இந்த நாற்காலியில் அமர்ந்திருப்போர் கட்டாயம் மூக்குக் கண்ணாடி அணிய வேண்டும். ஏனெனில் கண் சிமிட்டல்கள் கண்ணாடி ஃபிரேமில் ஒளி உணர் பொருட்கள் (Photo Sensitive elements) பதிக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் நாற்காலிக்குத் தேவையான சிக்னல்கள் கண் சிமிட்டல் மூலம் செல்லும். அட, அசத்தலான நாற்காலிதானே இது!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Tue 13 Jan 2015 - 11:03

ஓவிய சீக்ரெட்
* மைக்கேல் ஏஞ்சலோ வரைந்த புகழ் பெற்ற ‘இறுதித் தீர்ப்பு’ என்ற ஓவியத்தில், போப் நான்காம் பாலின் உருவம் எல்லோரையும் பயமுறுத்தும் விதத்தில் ஆடையின்றி இருந்தது. இதனால் டானியல்டி வோல்ட்ரோ என்ற இன்னொரு ஓவியர் மூலம் போப்பிற்கு ஆடைகள் அணிவித்தார்கள்.

* 1902ம் ஆண்டு பாரிஸில் ஓர் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. அதில் வைக்கப்பட்டிருந்த ‘தூங்கச் செல்லும் சூரியன்’ என்னும் தலைப்பிலான மாடர்ன் ஆர்ட் எல்லோரது கவனத்தையும் கவர்ந்தது. அதற்குப் பரிசு கிடைத்தது. ஆனால் அதை வரைந்தவர் யார் என்பதை மட்டும் சொல்லவில்லை. உண்மையில் அந்த ஓவியத்தை வரைந்தது ஒரு கழுதை. ஆம், கழுதையின் வாலில் பிரஷ்ஷைக் கட்டி விட்டுவிட அது வாலை ஆட்டும்போதெல்லாம் உருவான ஓவியம் இது.  

* பிரெஞ்சு ஓவியரான அன்னி லூயிஸ் கிரோடெட் என்பவர் தலைத் தொப்பியை சுற்றி, 40 மெழுகுவர்த்திகள் எரிய வைப்பார். அந்த  வெளிச்சத்தில் மட்டுமே ஓவியம் வரைவார். எப்பொழுதும் பகலில் ஓவியம் வரையமாட்டார். ஓவியம் வரைந்து முடிக்க செலவாகும் மெழுகுவர்த்திகளின் எண்ணிக்கைக்குத் தக்கபடி ஓவியத்திற்கான விலையையும் முடிவு செய்வார்.

* மோனாலிசா ஓவியம் இன்றும் அழியாப் புன்னகையுடன் நீடித்து உயிர் வாழக் காரணம் என்ன என்பது அண்மையில் தெரிய வந்துள்ளது. மோனாலிசாவின் உருவப் படங்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக 30 அடுக்குகளாக வரையப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஸ்கெட்ச் செய்து வரைந்த பிறகே ஓவியத்தை வண்ணம் பூசி நிறைவு செய்துள்ளார் டாவின்சி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Tue 13 Jan 2015 - 11:03

கடுப்பேற்றும் காகங்கள்!

இந்தியக் காகங்கள் வெளிநாடு களுக்குச் சென்று படும் பாடு மட்டுமல்ல, படுத்தும் பாடும் சொல்லி மாளாது என்கிறார்கள்.
1977ம் ஆண்டு சீஷெல்ஸ் நாட்டிற்குச் சென்ற இந்தியக் கப்பலொன்றின் மூலமாக ஐந்து காகங்கள் அங்கே போய்ச் சேர்ந்தன. அவைகளில் இரண்டை சுட்டுத் தள்ளிவிட்டு மூன்றை மட்டும் இனப் பெருக்கத்திற்காக விட்டுவிட்டார்கள். தற்போது அங்குள்ள காகங்களின் எண்ணிக்கை  என்னவோ ஐம்பதுக்கும் குறைவுதான். ஆனால் அவற்றின் தொல்லையை தாங்க முடியவில்லையாம். ‘‘இவற்றால் உள்நாட்டுப் பறவைகள் அழிகின்றன. காக்கைகளால் தீவுகளின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு விட்டது’’ என குற்றப்பத்திரிகை வாசிக்கிறார்கள் மக்கள்.

கென்யாவிலும் காக்கைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாம். கண்ட கண்ட இடங்களில் எச்சமிடுவதோடு, அந்த நாட்டின் மிக அபூர்வமான சின்னஞ்சிறு பறவைகளையும் அவற்றின் கூடுகளையும் இவை அழித்து விடுகின்றனவாம். பூனைகளைத் தாக்கி, அதன் கண்களை குருடாக்கி விடுகின்றனவாம் இந்த காகங்கள். சில சமயங்களில் மனிதர்களையும் தலையில் அடிக்கின்றன என புலம்புகிறார்கள் கென்யாவாசிகள்!

ஆஸ்திரேலியாவில் அடிக்கடி இந்தியக் கப்பல்கள் மூலம் வந்திறங்கும் இந்த வேண்டாத விருந்தாளிகளைக் கண்டவுடன் சுட்டுத் தள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஸான்ஸிபாரில் இவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பல ஆண்டுகளாக எக்கச்சக்கமான பணத்தை செலவழித்து, இப்போது செலவுத் தொகை கட்டுக்கடங்காமல் போய்விடவே ‘எப்படியோ தொலையட்டும்’ என்று கையைக் கழுவிவிட்டது அரசாங்கம்.

இதுபோல பல நாடுகள் கடுப்பாகி இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் காகங்களுக்கு ராஜமரியாதை. காகங்களை தங்களின் முன்னோர்கள் என்று இந்தியர்கள் கொண்டாடுகிறார்கள். விரத காலங்களில் இவைகளுக்கு சாப்பாடு வைத்து விட்டுத்தான் சாப்பிடுகிறார்கள்!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Tue 13 Jan 2015 - 11:04

சீனியர்களின் சாதனை

‘முதுமை என்பது உடலுக்குத்தான். உள்ளத்திற்கு அல்ல’ என்று உரக்கச் சொல்கிறது இந்த சாதனைப் பட்டியல்.

* கான்ட் தனது எழுபது வயதிற்குப் பின் மிகச் சிறந்த தத்துவ நூல்களை எழுதினார்.
* ஆண்ட்ரூ மெலன் 82 வயதில் மிகச் சிறந்த நிதி நிறுவனராக விளங்கினார்.
* வான்ட்டன் பில்ட் தளராத சுறுசுறுப்புடன் 70 வயதிற்குப் பின்னும் இருப்புப் பாதை அமைப்பாளராக விளங்கினார்.
* வால்டர் டாம்ராஸ்க் தனது இசை ஞானத்தால் 75 வயதிலும் மிகச் சிறந்த இசைக் குழுக்களை நடத்தினார்.
* மோனட் என்னும் பிரான்ஸ் நாட்டுக் கலைஞர் தனது 86வது வயதில் மிகச் சிறந்த வண்ண ஓவியங்களைத் தீட்டினார்.
* வான் ஹம்போல்ட் தனது உலக  சாதனையை   76 வயதில் தொடங்கி 90 வயது வரை நிகழ்த்தினார்.
* கதே தனது 80வது வயதில் தலைசிறந்த இலக்கியம் படைத்தார்.
* திதியன் தனது ‘லெப்னடோ போர்’ என்ற நவீனத்தைத் தனது 98வது வயதில் படைத்தார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Sun 18 Jan 2015 - 10:43


*பழைய மொபைல் போன்களை சூரிய ஆற்றலில் இயங்கக்கூடிய மைக்ரோபோன்களாக மாற்றி, மரம் வெட்டுபவர்கள் பற்றி தகவல் தெரிவிக்கச் செய்ய முடியும். இம்முறையை அமெரிக்க இயற்பியலாளர் டாபர் ஒயிட் கண்டுபிடித்துள்ளார்.

*மனித மூளையின் சிந்தனையை சுற்றுப்புற வாசனை மற்றும் ஒலிகள் மூலம் புரிந்துகொண்டு தகவல் அனுப்பும் மைக்ரோ சிப் கண்டறியப்பட்டுள்ளது.

*உலகில் ஆண்டுதோறும், 5.6 ட்ரில்லியன் சிகரெட் துண்டுகள் எறியப்படுகின்றன. இவற்றை ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், எலெக்ட்ரிக் கார், டர்பைன் ஆகியவற்றின் பாகங்களுக்குப் பயன்படுத்துவது பற்றிய விசித்திர ஆராய்ச்சியில் தென் கொரிய விஞ்ஞானிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

*6 தலைமுறைகளாக மாற்றம் அடைந்தே, வண்ணத்துப்பூச்சி இறகுகளின் பழுப்பு வண்ணம் பர்பிளாக உருமாறியுள்ளது.

*முதன்முதலாக ஒரு வால் நட்சத்திரத்தைச் சுற்றி வருவதற்காக ஒரு விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. ரோஸாட்டா என்ற அந்த விண்கலம் சமீபத்தில் தரையிறங்கியது.

*ஊர்வன இனத்தின் பத்தாயிரமாவது வகை சமீபத்தில் அறியப்பட்டுள்ளது. பறவைகள், மீன்களிலும் இதே அளவு வகைகள் உள்ளன.

*செம்மறியாடு, வெள்ளாடு கலந்த கலவையாக இனவிருத்தி செய்யப்பட்ட புதுவகை ஆடு அமெரிக்காவின் அரிசோனாவில் பிறந்துள்ளது. இதற்குப் பெயர் பட்டர்ஃபிளை!

*ஹாரிபாட்டர் நாவல்களைப் படிக்கும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம், ‘வேறுநாட்டிலிருந்து குடிபுகுவோர், ஒருபால் ஈர்ப்பு உடையோர் மற்றும் அகதிகள்’ மீதான கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

*ஜனவரியில் இருந்ததை விட, 2014 ஆகஸ்ட்டில் நிலவு 12 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் பிரகாசமாகவும் காணப்படுகிறது.

*ஆப்ரிக்கன் நைட் ஆடர் என்ற விஷப் பாம்புக்கு மனிதர்களின் மீது ஏறி, உடைகளுக்குள் புகுந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Sun 18 Jan 2015 - 10:45


*கடல் முள்ளெலிகள்  (sea hedgehogs)  ஒரு அடி நீளத்துக்கும் குறைவான அளவே இருந்தாலும், 20 அடி நீளமுள்ள சுறாவையும் கொல்லும் திறன் மிக்கவை.

*மத்திய காலகட்டத்தின் பிற்பகுதியில் கண் கண்ணாடிகள் ஆபரணமாகவே கருதப்பட்டன. கூடையில் சுமந்து தெருக்களில் விற்பனை செய்வதும் நடந்தது.

*1960ல் ஏற்பட்ட ஒரே ஒரு நிலநடுக்கத்தால் வெகுதொலைவில் உள்ள இரு நாடுகளில் கூட (ஜப்பான், சிலி), சுனாமி உருவானது.

*Tahltan Bear Dog...  இதுதான் உலகில் மிகமிகக் குறைவான எண்ணிக்கையில் காணப்பட்ட நாய் இனம். சில ஆண்டுகளுக்கு முன் மூன்றே மூன்று என நாய்த்தொகை கொண்ட இவ்வினம் இப்போது இருப்பது ஐயமே!

*பனிப்பாறைகள் இதுவரை அதிகபட்சமாக நீர்மட்டத்திலிருந்து 550 அடி உயரம் வரை உருவாகியுள்ளது. கடல் அடிமட்டத்திலிருந்து கணக்கிட்டாலோ, 4,950 அடி உயரம்!

*எந்த ஒரு ஆண்டிலும், மூன்றுக்கு அதிக சந்திர கிரகணங்கள் நிகழ்வதில்லை. சில ஆண்டுகளில் நிகழ்வதே இல்லை!

*ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு இன்ச் மழை பொழிந்ததை எடை போட முடிந்தால், 113 டன் தண்ணீர் கிடைத் திருக்கும்!

*கடலலைகள் பொதுவாக 50 அடி உயரம் வரை எழுவதுண்டு. அதிகபட்சமாக ஒருமுறை 112 அடி எழுந்ததையும் மனிதர்கள் கண்டிருக்கிறார்கள்!

*நட்சத்திரங்களின் பிரகாசத்தை மேக்னிடியூட் (ஒளிர்வு பரிமாணம்) என்ற அளவு கொண்டே விஞ்ஞானிகள் கணக்கிடுகிறார்கள். 6க்கு அதிக மேக்னிடியூட் கொண்ட நட்சத்திரங்களை டெலஸ்கோப் மூலமே பார்க்க முடியும்

*நுரையீரலால் சுவாசிக்கும் உயிரினங்களிலேயே மூத்தவை தவளை போன்ற நீர்நில வாழ்விகளே. அவை 40 கோடி ஆண்டுகள் முன்பே தோன்றியவை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by சே.குமார் on Sun 18 Jan 2015 - 16:03

நல்ல தொகுப்பு...
வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1444
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Wed 21 Jan 2015 - 9:57


*கேவியர் எனும் முட்டைகள், உலகின் காஸ்ட்லி உணவுகளில் குறிப்பிடத்தக்கது. ஜெயின்ட் ஸ்டர்ஜியன் மீன் வகையானது, வாழ்நாளில் 15 ஆயிரம் ரூபாய்க்கும் அதிக கேவியர் முட்டைகளை இடும்.

*நம்பர் பூட்டுகள் ஒவ்வொன்றுக்கும், 10 லட்சத்துக்கும் அதிக காம்பினேஷன்கள் உண்டு.

*அமெரிக்க மக்களில் மூன்றில் 2 பங்கினர் கண்ணாடி அணியும் நிலைக்கு ஆளாகின்றனர்.

*உலகின் மிகப்பெரிய ஒற்றைச் சக்கர சைக்கிளான ‘யுனி சைக்கிள்’, 32 அடி உயரம் கொண்டது.

*டிஜிட்டல் கேமராக்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்து, வெள்ளிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தால், புகைப்படக்கலையே அழிந்திருக்கும்!

*9 ஆயிரம் கிலோவுக்கும் அதிக எடை கொண்ட ஒற்றை மார்பிள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. இதுவே இதுவரை கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய மார்பிள்.

*இப்போதும் செயல்படும் உலகின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான மொராக்கோ ஃபெஷ், கி.பி. 859ல் தொடங்கப்பட்டது.

*அமெரிக்க தேவாலயங்களில் முன்னொரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட மது வகைகளே, உலகில் அதிக வீரிய மதுவாக இருந்தது. அது 190 புரூஃப் அல்லது 95 சதவீத சுத்தமான ஆல்கஹால்! பொதுவாக விற்பனையிலுள்ள மதுவகைகளில் 42.8 சதவீத ஆல்கஹால் (75 புரூஃப்) உள்ளது.

*பழங்கால இத்தாலியின் போம்பி நகரத்தில், ஒரு தேர்தல் காலத்தில், மிகப்பெரிய எரிமலைக் குழம்பு வெளிப்பட்டது. நகரமே காணாமல் போனாலும், சுவரில் பொறிக்கப்பட்ட தேர்தல் முழக்கங்கள் மட்டும் இன்னமும் அழியாமல் இருக்கின்றன.

*உலகின் பழமையான உயிரியல் பூங்கா 1752ல், ஆஸ்திரியாவின் வியன்னாவில் தொடங்கப்பட்டு, இன்றும் செயல்படுகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Wed 21 Jan 2015 - 9:58


*நிலநடுக்கோட்டுப் பகுதியில் பருவ கால மாற்றமே கிடையாது. ஆண்டு முழுவதும் ஒரே வெப்பம் வெப்பம் வெப்பமே!

*சூரியனைச் சுற்றி வரும் பூமியின் வேகம் நிலையாக இருப்பதில்லை. அதன் சுற்றுப்பாதையின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வேகம்!

*சூரிய மண்டலத்தின் மிகச் சிறிய நிலவு, செவ்வாயிலுள்ள டைமோஸ். இதன் குறுக்களவு 13 கிலோமீட்டரை விடக் குறைவுதான். சில மணி நேரங்களில் நடந்தே கடந்து விடலாம்!

*கருங்கடல், மஞ்சள் கடல், செங்கடல், வெண் கடல் என்  பெயர்களில் இருந்தாலும், இவை அனைத்தும் மற்ற கடல்களைப் போல நீலம் அல்லது நீலப்பச்சையாகவே காட்சியளிக்கின்றன!

*ஒரே ஒரு சூரியப்புள்ளி (சன்ஸ்பாட்) மட்டுமே 3 லட்சம் கிலோமீட்டர் நீளம் வரை இருக்கும்!

*ஒவ்வொரு நாளும் சுமார் 7.5 கோடி எரிகற்கள் நமது வளிமண்டலத்துக்குள் நுழைகின்றன. ஆனால், ஒன்றோ, இரண்டோ மட்டும்தான் தரையை அடைகின்றன.

*பல்சார் என்ற துடிப்பு விண்மீன்கள் வானில் சுழலும் வேகம் மிக அதிகம். பொதுவாக ஒரு வினாடிக்குள்ளாகவே அவை சுழன்று முடித்து விடும். அதிவேகம் கொண்ட ஒரு பல்சார், ஒவ்வொரு வினாடியும் 200 முறை சுழலும்!

*சந்திர கிரகணம் 104 நிமிடங்களைத் தாண்டி நீடிப்பதில்லை!

*சஹாரா பாலைவனம் ஒருமுறை 136 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை எட்டியிருக்கிறது!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by சுறா on Wed 21 Jan 2015 - 10:06

136 டிகிரி வெப்பம் என்றால் அடுப்பே இல்லாமல் சமைக்கலாம் ஹை ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum