சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

நம்பினால் நம்புங்கள்!

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Go down

Sticky நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Thu 31 Jul 2014 - 15:03

First topic message reminder :


* வண்டுகளில் மட்டுமே 4 லட்சத்துக்கும் அதிக இனங்கள் அறியப்பட்டிருக்கின்றன.

* உலகின் அனைத்துக் கண்டங்களையும் ஒன்று சேர்த்தாலும் கூட, பசிபிக் பெருங்கடலின் பரப்பளவை விடக் குறைவாகவே இருக்கும்!

* கிரேட் வெள்ளைச் சுறாவின் வால்களே, அது மணிக்கு 24 கி.மீ நீந்துவதற்குத் துணைபுரிகின்றன.

* உலகிலேயே மிக உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் (807 மீட்டர்) மீது முதன்முதலாக விமானத்தில் பறந்தார் ஜிம்மி ஏஞ்சல். அவரது பெயரே அந்த அருவிக்குச் சூட்டப்பட்டிருக்கிறது.

* உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்ட்டை விட, சிறுத்தை 2.5 மடங்கு வேகமாக ஓடக்கூடியது!

* சீனாவும் இந்தியாவுமே காய்கறி உற்பத்தியில் உலகின் முதல் இரு இடங்களைப் பெற்றுள்ளன. அமெரிக்கா, துருக்கி, எகிப்து, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்து வருகின்றன.

* வண்ணத்துப்பூச்சிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 191 இனங்கள் அழிந்து விட்டன. 368 இனங்கள் அழியும் தருவாயில் உள்ளன.

* உலகில் அதிக அளவு வளர்க்கப்படும் கால்நடை - கோழிதான்! மாடு, வாத்து, செம்மறியாடு, பன்றி, வெள்ளாடு, வான்கோழி, கினியா கோழி, எருமை, குதிரை ஆகியவை பின்தொடர்கின்றன.

* கி.மு. 2297 முதல், சீனாவின் மஞ்சள் நதி வெள்ளப்பெருக்குகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 1500க்கும் அதிக வெள்ளப்பெருக்குகளைக் கொண்டு வந்து ‘சீனாவின் துயரம்’ என்ற பெயரைத் தக்க வைத்துள்ளது அந்த நதி.

* அதிக பாலூட்டி வகைகளைக் கொண்ட நாடு இந்தோனேஷியா (667). அதைத் தொடர்ந்து பிரேசில் (578), மெக்சிகோ (544), சீனா (502), அமெரிக்கா (468), கொலம்பியா (467), பெரு (441), காங்கோ (430) ஆகிய நாடுகள் உள்ளன. 9வது இடத்தில் உள்ள இந்தியாவில் இருப்பவை 422 பாலூட்டி வகைகள். 10வது இடத்தில் கென்யா (407).

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=84816


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 9:46

ahmad78 wrote:
* ஐரோப்பாவில் 47 சதவீதம் பேருக்கு தங்கள் துணையின் மொபைல் எண் மனப்பாடமாகத் தெரியாது. ‘போன் புக்’ பார்த்தே டயல் செய்கிறார்கள்!

* பிறரை ஏமாற்றுவதற்காகவே, அறிவாற்றல் திறன் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்டதாக மானுடவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!

* சஹாரா பாலைவனத்தின் தூசியை ஏறத்தாழ உலகின் ஒவ்வொரு படுக்கையின் கீழும் காண முடியும்!

* ஜீனியஸ் ஒருவரின் மூளைக்கும் சராசரி மனிதனின் மூளைக்கும் வடிவத்திலேயே வித்தியாசம் உள்ளது!

* அமெரிக்காவில் ஆண்டுதோறும் நான்கரை கோடி பேர் ஜிம் கட்டணத்துக்காக மட்டுமே 1900 கோடி டாலர் பணம் செலவழிக்கிறார்கள்.

* சனி கோளின் துணைக்கோளான டைட்டனில், பூமியில் இருப்பதை விட 100 மடங்கு அதிக இயற்கை எரிவாயு உள்ளது.

* கன்னாபின்னாவென சாப்பிடுகிறவர்களைக் கட்டுப்படுத்தும் ஊசி மருந்து ஒன்றை பரிசோதிக்கிறார்கள் லண்டன் ஹாமர்ஸ்மித் மருத்துவமனை விஞ்ஞானிகள்!

* சராசரி ஆப்ரிக்க யானையின் எடை 10 ஆயிரம் கிலோ. இந்திய யானையின் எடை சுமார் 5,400 கிலோதான்!

* ஒரு கிலோ டைனமைட்டை விட ஒரு கிலோ கொழுப்பில் அதிக ஆற்றல் உள்ளது!

* கூகுள் தேடுதளத்தில் ஒவ்வொரு நாளும் 100 கோடி படங்கள் பார்வையிடப்படுகின்றன. இதைப்போல 10 மடங்கு படங்கள் பார்வைக்குத் தயாராக உள்ளன!

* தென் கொரியாவில் உருவாகி வரும் சாங்டோ எனும் நவீன நகரத்தில் குப்பைத்தொட்டிகள் கிடையாது. மாறாக, அனைத்துக் குப்பைகளும் குழாய்கள் வழியே உறிஞ்சப்படும்!

* இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சம் 2 ஆயிரம் பேர் மலேரியாவால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவிலோ 10 லட்சத்துக்கும் அதிகம்.

* ஒரு வால்நட்சத்திரத்தில் சுமார் 1013 கிலோ தண்ணீர் இருக்கும்.


அறிய வேண்டிய தகவல் நன்றி அஹ்மட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Sat 20 Sep 2014 - 11:57


* உலகின் அதிவேக ரயில் ஓடுவது சீனாவில்தான்... மணிக்கு 350 கி.மீ. ஜப்பானின் புகழ்பெற்ற புல்லட் ரயிலின் வேகம் மணிக்கு 243 கி.மீ. ஐரோப்பாவின் ஈரோஸ்டார் ரயில் அதிகபட்சமாக எட்டிய வேகம் 335 கி.மீ.

* மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தியாவின் அதிக அளவு மின் குப்பைகள் உருவாகின்றன. நகரங்களின் அடிப்படையில் கணக்கிட்டால் முறையே மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை...

* வடகிழக்கு சீனாவில் சமீபத்தில் பெட்ரோசர் என்ற பழங்கால விலங்கின் (டைனோசர் அல்ல) படிமத்தைக் கண்டெடுத்துள்ளனர். இதன் வயது 1200 லட்சம் ஆண்டுகள்!

* உடற்பயிற்சியும் மனப்பயிற்சியும் செய்யும் அளவுக்கு ஏற்ப, மிக விரைவாக மூளையின் செல்கள் மறுஉயிர்ப்பு பெறுகின்றன.

* 1930களில் சோவியத் ரஷ்ய விஞ்ஞானி நிகோலய் வாவிலோ 2.5 லட்சம் விதைகள், வேர்கள் மற்றும் பழங்களைச் சேகரித்து, உலகின் மிகப்பெரிய விதை வங்கியை அமைத்தார்.
 
* 50 ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு மரம், தன் வாழ்நாளில் ரூ.16,90,937 மதிப்புள்ள ஆக்சிஜனை அளிக்கிறது. ரூ. 33,54,820 மதிப்புள்ள காற்றுமாசுத் தடுப்பு, மண் அரிப்புத் தடுப்பு ஆகிய பணிகளைச் செய்கிறது. ரூ.16,90,900 அளவுக்கு மண் வளத்தை உண்டாக்குகிறது. ரூ.20,29,125 அளவுக்கு நீர் மறுசுழற்சி செய்கிறது. ரூ.17,50,000 மதிப்புள்ள வாழும் வசதியை மற்ற உயிரினங்களுக்கு அளிக்கிறது. இப்படியாக ஒரு மரத்தின் மதிப்பு ரூ. 1 கோடிக்கும் அதிகம்.

* சாக்லெட்டிலுள்ள பாலிபினோல் என்ற பொருளுக்கு, அதைத் தின்பவரை அமைதிப்படுத்தும் தன்மை இருக்கிறது.

* 35 படங்களில் நடித்த ஆஸ்திரேலிய-அமெரிக்க நடிகை ஹெடி லாமர், ஒரு கணிதவியலாளரும் கூட. அது மட்டுமல்ல... அவர் மேம்படுத்திய ‘ஸ்பெரெட் ஸ்பெக்ட்ரம்’ தொழில்நுட்பமே, வைஃபை மற்றும் புளூடூத் ஆகியவற்றில் இன்றும் பயன்படுகிறது.

* பூச்சிகளால் தங்கள் உயரத்தைக் காட்டிலும் 80 மடங்கு வரை தாவ முடியும். இது ஆறடி மனிதன் 480 அடி உயரம் தாண்டுவதற்கு நிகரானது!

* ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி இந்த ஆண்டு பால்வழி மண்டலத்தை ஆராயப் பயன்படுத்தும் கேமராவின் பிக்செல்கள் - 100 கோடி!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Sat 20 Sep 2014 - 11:58


* மிக நீளமான மனிதச்சங்கிலி 1986 மே 25 அன்று 15 நிமிடங்களுக்கு நிகழ்த்தப்பட்டது. நியூயார்க் முதல் கலிஃபோர்னியா வரை 6682 கிலோமீட்டர் தூரத்துக்கு 65 லட்சம் பேர் கை கோர்த்து நின்றனர். ‘ஹேண்ட்ஸ் அக்ராஸ் அமெரிக்கா’ என்ற இந்நிகழ்வு, பசியால் தவிப்போருக்கும் வீடில்லாமல் வாடுவோருக்கும் நிதி திரட்டியது.

* டியூராசெல் நிறுவனத்தின் தலைமையகக் கட்டிடம் முழுக்க முழுக்க, அந்நிறுவனத்தின் குப்பைகள் மற்றும் மறு உபயோகப் பொருட்களால் கட்டப்பட்டது.

* உலக அளவில் வார நாட்களில் அதிக வேலைகள் நடைபெறுவது செவ்வாய்க்கிழமையில்தான்!

* நீலத்திமிங்கலத்தின் இதயத்தின் எடை 600 கிலோ. அதன் முக்கிய ரத்த நாளத்தின் வழியே ஒரு மனிதர் புகுந்து வர முடியும்!

* புருஸ் லீயின் அடி உதைகள் மிகமிக வேகமாக இருக்கும் என்பதால், அவரது படத்தின் பல காட்சிகளை நம்பகத்தன்மைக்காக மீண்டும் ஸ்லோ மோஷனில் எடுத்திருக்கிறார்கள்.

* மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ‘ஆபீஸ் 365’ பத்திரிகை விளம்பரத்திலேயே இலவச இன்டர்நெட் அளிக்கும் சிறிய ‘வைஃபை’ கருவியைப் பொருத்தி புதுமை செய்துள்ளது.

* அமெரிக்காவில் சராசரியாக ஒவ்வொருவருக்கும் 3.5 கிரெடிட் கார்டுகள் இருக்கின்றன.

* கேஎஃப்சி போலவே, சீனாவில் ஓஎஃப்சி கடைகள் நடத்துகிறார்கள். அது ஒபாமா ஃப்ரைடு சிக்கன்!

* மிக்கி மவுஸுக்கு குரல் கொடுத்தவர் (Wayne Anthony Allwine) மின்னி மவுஸுக்கு குரல் கொடுத்தவரையே (Russell Taylor) நிஜ வாழ்விலும் மணந்துகொண்டார்.

* பல் சீரமைப்புக்கு க்ளிப் போடுவதைப் போல, ஜப்பானில் மூக்கை ஷேப் ஆக்க க்ளிப் விற்கிறார்கள்!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by பானுஷபானா on Sat 20 Sep 2014 - 13:19

தொடர் பகிர்வுக்கு நன்றி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16644
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by முனாஸ் சுலைமான் on Sun 21 Sep 2014 - 15:05

நம்பினால் நம்புங்கள் என்றால் நம்பலாம் போல இருந்தால் நம்பலாம் ...
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Mon 22 Sep 2014 - 14:13


* 1 கோடியே 10 லட்சம் ஆண்டுகள் பழமையான ஒரு பல் ஸ்பெயினில் கிடைத்திருக்கிறது. சிறு கரடி ஒன்றின் பல்லான இதைக் கொண்டு, ஜெயன்ட் பாண்டாவின் பரிணாமத்தையே அறிய முடியும்!

* நமது கல்லீரல் 500 வித செயல்பாடுகளைச் செய்கிறது.

* அதிக அளவு பழங்கள் சாப்பிடுகிறவர்களுக்கு மூளையின் செயல்திறனில் சிறிதளவு பாதிப்பு ஏற்படும் என கலிஃபோர்னியா விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்!

* ஜெர்மனி குகை ஒன்றில் 42 ஆயிரம் ஆண்டுகள் பழமையான புல்லாங்குழல் கண்டறியப்பட்டுள்ளது. பறவை எலும்பாலும் மம்மூத் தந்தத்தாலும் அது உருவாக்கப்பட்டிருந்தது.

* நாம் ஒரு அடி எடுத்து வைக்கவே 200 தசைகள் வேலை செய்கின்றன.

* நமது காலில் 5 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன.

* 9 ஆண்டுகால ஜீனோம் ஆராய்ச்சிக்குப் பிறகு அறியப்பட்ட வகையில், தக்காளியில் 35 ஆயிரம் ஜீன்கள் உள்ளன!

* கணிப்பொறி இல்லாமலே நம் கண் முன்னே சமூக வலைத்தளத் தகவல்களைக் காட்டிடும் புராஜெக்ட் கிளாஸ் ஒன்றை கூகுள் நிறுவனம் வடிவமைத்து வருகிறது!

* நம் தும்மலின் வேகம், மணிக்கு 100 மைல்!

* மணிக்கு 1000 மைல் வேகத்தில் செல்லக்கூடிய கார் ஒன்றை இங்கிலாந்திலுள்ள ‘பிளட்ஹூவுண்ட் எஸ்எஸ்சி’ என்ற ஆராய்ச்சிக்குழு உருவாக்கியுள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Mon 22 Sep 2014 - 14:14


* எந்த நேரமும் வெடிக்கலாம் என்ற நிலையில் உள்ள எரிமலைப் பகுதிகளில் கூட, பத்தில் ஒருவர் வாழ்கின்றனர்.

* பெரும்பாலான பனிச்சரிவுகள், மனிதர்கள் பனிப்பாளங்களைத் தேவையில்லாமல் கையாள்வதாலேயே ஏற்படுகின்றன.

* கொரில்லாக்களும் எலிகளும் அதிக ஊட்டச்சத்துகளைப் பெறுவதற்காக, தம் கழிவையே தின்னுவதுண்டு.

* பருவநிலை மாற்றங்கள் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் பறவைகளின் பறக்கும் வேகமும் கூடியுள்ளது.

* எரிமலை சாம்பல் மண்ணுக்கு மிக உகந்தது. எரிமலை வெடிப்புக்குப் பின் அப்பகுதியில் செடிகள் செழிக்கும். விலங்குகளுக்கும் வாழும் சூழல் உருவாகும்.

* பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் கணக்கிட்டால் தலா 20 கோடி பூச்சிகள் உள்ளன!

* தெள்ளுப்பூச்சியால் (Flea) உணவில்லாமல் 100 நாட்கள் வரை வாழ முடியும்!

* பச்சோந்தியால் தன் மனநிலைக்கு ஏற்பவும் நிறத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

* புலியால் ஒரேமுறை 27 கிலோ தீனியை உள்ளே தள்ள முடியும்.

* பழுப்பு வௌவாலால் ஒரு மணி நேரத்தில் கொசு அளவிலுள்ள 1,200 பூச்சிகளைத் தின்ன முடியும்!

* வேகத்தையும் சீற்றத்தையும் சற்றும் குறைக்காமலே ஒட்டுமொத்த சமுத்திரத்திலும் பயணிக்க சுனாமியால் மட்டுமே முடியும்.

* நீலத்திமிங்கலம் போகிற போக்கிலேயே பிரமாண்ட மீன் கூட்டங்களை உறிஞ்சி விழுங்கி விடும். ஒரு நாளைக்கு சுமார் 4 டன்!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Wed 24 Sep 2014 - 11:05


* அப்போலோ 13 விண்கலத்தின் கமாண்டர் ஜிம் லோவெல் அவரிடமிருந்த ‘மிஷன் செக்லிஸ்ட்’ ஆவணத்தை 1,72,11,488 ரூபாய்க்கு விற்றுவிட்டார். ‘அதை எப்படி விற்கலாம்’ என நாசா அமைப்பு, ஜிம்மை அதிதீவிர விசாரணைக்கு உட்படுத்தியது.

* இந்தியாவில் பேக்கேஜ்டு தண்ணீர் பிசினஸ் மட்டுமே 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நடக்கிறது. இது ஆண்டுக்கு 35-40 சதவீதம் அதிகரிக்கிறது. சென்னையில் தினமும் 70 லட்சம் லிட்டர் தண்ணீர் விற்பனையாகிறது. இதில் 40 லட்சம் லிட்டர் கேன்களிலும், மீதி பாட்டில் மற்றும் சாஷே பாக்கெட்டுகளாகவும் நிரப்பப்படுகிறது.

* அல்காரித கணித முறைப்படி சாலை விபத்துகளைத் தடுக்கும் முறையை ஆராய்ந்து வருகின்றனர் அமெரிக்காவிலுள்ள எம்.ஐ.டி விஞ்ஞானிகள்.

* சிலந்தியின் சின்னஞ்சிறு உடலின் 80 சதவீதம் பகுதி மூளைகளால் நிரப்பப்பட்டுள்ளது.

* உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரம் ஆண்டுக்கு 6.1 சென்டிமீட்டர் வளர்கிறது. அதன் இப்போதைய உயரம் 8,848 மீட்டர்!

* அதிக அளவு சர்க்கரை சார்ந்த உணவுகளை உட்கொள்பவர்கள் மிக விரைவில் மூப்பு தோற்றத்தை அடைகிறார்கள்.

* ஒளி வாயிலாக தன்னைத் தானே சுத்திகரித்துக் கொள்ளும் உடைகளை உருவாக்கி வருகின்றனர் சீன விஞ்ஞானிகள்.

* இந்திய மக்களில் 7 சதவீதம் பேர் ஏதோ ஒரு மனநலக் குறைபாட்டோடு வாழ்கின்றனர். ஒரு சதவீதம் பேர் அதீத மனநலப் பிரச்னையில் இருக்கின்றனர். 

* வைட்டமின் பி 12 குறைபாடு - இதுதான் உலகில் மிகப்பழமையான இரண்டாவது பாரம்பரிய நோய். இதற்கு வயது 13,600 ஆண்டுகள்!

* கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஊட்டச்சத்து சரிவர கிடைக்காமல் இருந்தால் குழந்தைக்கான கொழுப்புச்சத்தும் குறையும். இதனால் குழந்தைக்கு நீரிழிவு பிரச்னை கூட ஏற்படலாம் என கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Wed 24 Sep 2014 - 11:05


* பறவைகள் விழுங்கும் மிகச்சிறிய நத்தைகளில் 15 சதவீதம், பறவைகளின் வயிற்றுக்குள்ளே வசதியாகத் தங்கி, உயிரோடு உலகையே சுற்றி வரும்!

* பூமியில் ஒவ்வொரு நிமிடமும் 6 ஆயிரம் முறை மின்னல்கள் தோன்றுகின்றன.

* 2 மணி நேர மோட்டார் சைக்கிள் பயணத்தில் 500 கலோரிகள் செலவாகிறது.

* சூரிய மண்டலம் தோன்றுவதற்கு முன்பே உருவான வைரம், இப்போது ஒரு விண்கல்லில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

* விஞ்ஞானிகள் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் ஃபிங்கர்பிரின்டிங் தொழில்நுட்பத்தின் மூலம், கைரேகை பதிவைக் கொண்டே போதை மருந்து உட்கொண்டிருத்தல், வெடிகுண்டு பயன்படுத்துதல், இதய நோய், அனீமியா ஆகிய விஷயங்களைக் கண்டறிய முடியும்.

* நம் காதுகளில் உள்ள குறும்பியும், தாடையின் அசைவும் சேர்ந்து, காதுகளில் சேரும் தூசு, அழுக்கு போன்றவற்றை நீக்கி விடுகின்றன.

* 2050ம் ஆண்டில், நமது மூளையில் நிறைந்திருக்கும் அத்தனை தகவல்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்துவிட முடியும் எனக் கணித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள்.

* யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றி வர 84.01 ஆண்டுகள் ஆகும்.

* நிலப்பரப்பின் அடிப்படையில் கணக்கிட்டால், நெதர்லாந்தையே மிக அதிக சூறாவளிகள் தாக்குகின்றன. ஒவ்வொரு 1991 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும் ஒரு சூறாவளி தாக்குகிறது. அமெரிக்காவில் 8187 சதுர கிலோமீட்டருக்கு ஒரு சூறாவளி.

* மனித உடலில் உள்ள ரத்த நாளங்களின் மொத்த நீளம் ஒரு லட்சம் கிலோமீட்டர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by SAFNEE AHAMED on Wed 24 Sep 2014 - 16:00

நம்பிட்டேன்
avatar
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Wed 1 Oct 2014 - 9:12


* உலகிலேயே எண்ணெய் வளம் மிகுந்த நாடு சவுதி அரேபியாதான். அங்கு உலகின் 20 சதவீத (ஏறத்தாழ 26410 கோடி பேரல்) எண்ணெய் பூமிக்கு அடியில் உள்ளது.

* ஒரு கண்ணாடி பாட்டில் சிதைவதற்கு 10 லட்சம் ஆண்டுகள் கூட ஆகலாம். பாட்டில்களின் மூலமான சிலிகான் டை ஆக்சைடு மிக நிலையானது, கிரானைட் போல!

* ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1000 கோடி டன் கார்பன் வளிமண்டலத்தில் கலக்கிறது.

* டின் உணவு கண்டுபிடிக்கப்பட்டதற்கும் அதற்கான ஓபனர் கண்டுபிடிக்கப்பட்டதற்குமான கால இடைவெளி... 45 ஆண்டுகள்!

* கடலில் மின்னல் தாக்கும்போது 30 ஆயிரம் ஆம்பியர் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. ஆனால், அருகிலுள்ள மீன் உணர்வதோ சிறு சிலிர்ப்புதான்!

* ஏ380 ஏர்பஸ் விமானத்தின் ஒரு இறக்கையின் நீளம் மட்டுமே 79.8 மீட்டர்.

* பிரபஞ்சத்தின் வடிவம் மற்றும் அது விரிவடைதல் பற்றிய ஆராய்ச்சிக்கு, இன்றும் விஞ்ஞானிகளுக்கு உதவும் முக்கியமான பொருள்... பலூன்!

* ஸ்விட்சர்லாந்து விஞ்ஞானிகள் மிகமிகமிகச் சிறிய மருத்துவ ரோபோவை உருவாக்கியிருக்கிறார்கள். 60 நானோமீட்டர் அளவே கொண்ட இந்த ரோபோ, மனித உடலின் தமனிகளுக்குள் நீந்தி, பாதிப்படைந்த ரத்த நாளங்களை ரிப்பேர் செய்யும். 10 லட்சம் நானோமீட்டர் என்பதே ஒரே ஒரு மில்லிமீட்டர்!

* இதுவரை நிகழ்ந்த மாரத்தான் போட்டிகளிலேயே அதிக வேகம் 2 மணி 3 நிமிடம் 59 நொடி. இச்சாதனையை 2008 பெர்லின் மாரத்தானில் எட்டியவர் எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஹைய்லி ஜெபர்சேலெஸ்ஸி.

* பெட்ரோலிய பிரச்னை காரணமாக, ஃப்யூவல் செல் பேட்டரி கொண்டே எதிர்கால வாகனங்களில் பலவும் இயங்க இருக்கின்றன. அதை மலிவாகத் தயாரிப்பதற்காக விலையுயர்ந்த பிளாட்டினம் போன்ற உலோகங்களுக்கு மாற்றாக கடற்கரை மணலை பரிசோ தித்து வருகிறார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Wed 1 Oct 2014 - 9:13


* யானைகள் சராசரியாக தினமும் 150 கிலோ உணவு உட்கொள்கின்றன. 180 லிட்டர் நீர் பருகுகின்றன.

* கொறிவிலங்குகளில் 1,700க்கும் அதிக இனங்கள் உள்ளன. எலிகள், சுண்டெலிகள், முயல்கள், கினி பன்றிகள் போன்றவை இவ்வினமே!

* சராசரி மனிதனுக்கு தினமும் 2 ஆயிரம் கலோரி ஆற்றல் கொண்ட உணவு தேவை. அமெரிக்காவில் சராசரியாக ஒருவர் 3,200 கலோரி உட்கொள்கிறார். எத்தியோப்பியாவில் ஒருவருக்கு 500 கலோரி கிடைத்தாலே ஆச்சரியம்தான்!

* சராசரியாக, நாம் 10 வினாடிகளில் ஒரு லிட்டர் காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகிறோம்.

* நமது நரம்புகள் அதிகபட்சமாக நொடிக்கு 120 மீட்டர் வேகத்தில் சமிக்ஞைகளை அனுப்புகின்றன.

* நமது ரத்தம் தமனிகள் வழியாக ஒரு நொடிக்கு 1 மீட்டர் தூரம் பயணிக்கிறது.

* எஃகைக் காட்டிலும், அதே அளவு எடை கொண்ட எலும்புகள் 5 மடங்கு வலிமையானவை.

* யானைக்கு அடுத்து காண்டாமிருகங்களும் நீர்யானைகளும் அதிக எடை கொண்டவை. ஆப்ரிக்க வெள்ளை காண்டாமிருகத்தின் எடை 9 டன் வரை இருக்கும்.

* மனிதர்கள் வளர்க்கும் குதிரைகளில் மட்டுமே 150 வித்தியாசமான கலப்பினங்கள் உள்ளன.

* மூங்கிலில் மிகக்குறைந்த அளவு ஊட்டச்சத்தே உள்ளதால், பாண்டாக்கள் ஒரே நாளில் 15 கிலோ தண்டுகளையும் இலைகளையும் தின்று விடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Thu 2 Oct 2014 - 9:50


* 2012ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபர், அமெரிக்க ரியாலிட்டி ஸ்டார் கிம் கார்டாஷியன்.

* ஐபோன் 5ல் இருப்பது 8 மெகாபிக்செல் கேமரா. நமது கண்களில் இருப்பதோ 576 மெகாபிக்செல்ஸ்!

* எந்த நேரத்திலும் ஏறக்குறைய 61 ஆயிரம் மனிதர்கள் வானில் பறந்து கொண்டிருக்கிறார்கள்.

* வலது கண்ணில் இருந்து முதல் கண்ணீர்த் துளி வெளிப்பட்டால் அது ஆனந்தக் கண்ணீர். வலி அல்லது துக்கத்தின்போது முதலில் கண்ணீர் சுரப்பது இடது கண்ணில்!

* 2112ல் ஃபேஸ்புக் சமூக இணையதளத்தில், இறந்துபோன மனிதர்களின் 75 கோடி கணக்குகள் இருக்கும்!

* இருளில் ஒளிரும் நாய்க்குட்டிகளை குளோனிங் முறையில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

* கூகுள் இணையதளம் ஒரு நொடிக்கு ரூ.37,397 வருமானம் ஈட்டுகிறது. இந்தச் செய்தியை நீங்கள் படித்து முடிக்கும் முன்பே, அது ரூ.1,86,987 பெற்றிருக்கும். கூகுளின் ஆண்டு வருமானம் ரூ.117937,99,56,400.

* இரண்டாம் உலகப் போரில் உதவியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இன்னமும் ஆண்டுக்கு 20 ஆயிரம் டூலிப் மலர்கள் நெதர்லாந்திலிருந்து கனடாவுக்கு அனுப்பப்படுகின்றன.

* சராசரி அமெரிக்கரை விட, சராசரி கனடா குடிமகன் செல்வந்தராக இருக்கிறார்.

* டிஸ்னிலேண்டில் உள்ள எலிகளைக் கொல்வதற்காக, ஒவ்வொரு இரவும் 200 பூனைகள் பயன்படுத்தப்படுகின்றன.

* உலக மக்களில் 7ல் ஒருவர் பசியோடுதான் உறங்கச் செல்கிறார்.

* சீன மக்கள் ஒட்டுமொத்தமாக ஓராண்டு புகைக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை 1.7 ட்ரில்லியன்!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Thu 2 Oct 2014 - 9:51


* கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் எலிகளே கிடையாது.

* எல்லா வகை உயிரினங்களிலும் ஆணை விட பெண்ணே சராசரியாக அதிக காலம் வாழ்கிறது.

* சராசரி மனிதன் வாழ்நாளில் 3 ஆண்டுகளை டாய்லெட்டில் கழிக்கிறான்.

* இதுவரை அறியப்பட்டதில் ஒரே முட்டையில் 9 மஞ்சள் கருக்கள் வரை இருந்துள்ளன.

* பெரும்பாலான மனிதர்களால் ஒரே நேரத்தில் 4 விஷயங்களுக்கு மேல் நினைவு வைத்திருக்க முடியாது.

* பூமியின் எடை ஒவ்வொரு நாளும் 100 டன் அதிகரிக்கிறது... காரணம் விண்வெளியிலிருந்து விழும் குப்பைகள்!

* மூழ்கவே முடியாத சாக்கடலில்கூட, சில உபகரணங்களின் உதவியால் மூழ்க முடியும்!

* சகாரா பாலைவனத்தின் சூரிய ஆற்றலில் 0.3 % மட்டுமே ஐரோப்பாவின் ஒட்டுமொத்த மின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானது.

* அமெரிக்காவின் கெண்டகியில் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறையாவது குளிக்க வேண்டும் என சட்டமே உள்ளது.

* சிப்ஸ் போன்ற பாக்கெட் உணவுப்பொருட்களில் ஏறக்குறைய 68% காற்றே நிரப்பப்பட்டுள்ளது.

* பூனைகளைவிட மனிதர்களுக்கு 20 மடங்கு சுவை உணர்வு அதிகம்.

* குளிர்நீரைவிட சூடான நீர் விரைவாக உறையும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by சுறா on Fri 3 Oct 2014 - 7:43

அனைத்தும் அருமையான தகவல்கள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Mon 6 Oct 2014 - 13:39


* சென்ற நூற்றாண்டைவிட, இப்போது குழந்தைகள் உறங்கும் அளவு 73 நிமிடங்கள் குறைந்துள்ளது.

* அமெரிக்காவில் பீச் பழங்கள் விளையும் வயலில், அவை கடுங்குளிரால் பாதிப்படையாமல் இருப்பதற்காக பிரமாண்ட வைக்கோல் உருளைகளை எரித்து வெப்பக்காற்று வீசச் செய்கிறார்கள். ஆலங்கட்டி மழையால் பழங்கள் உடைவதைத் தவிர்க்க, ஒரு கருவி மூலம் மழை உருவாவதையே தடுக்கிறார்கள்! 
10 சதவீதம் மனிதர்கள் கொசுக்களை கவர்ந்து இழுக்கும் வகையிலான வியர்வையை வெளிப்படுத்துகிறார்கள். அந்த வியர்வை வாசனையை கொசுக்களால் 30 மீட்டர் தொலைவிலிருந்தே அறிய முடியும்!

* ஆப்ரிக்க நாடுகளில் ஐந்தில் ஒரு குழந்தை மரணம், மலேரியா கொசுக்களால் ஏற்படுகிறது. ஒரு நிமிடத்துக்கு ஒரு குழந்தையைக் கொல்லும் அளவுக்கு, கொசுக்கள் மலேரியாவை பரப்புகின்றன. அங்கு கொசுக்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு மட்டுமே ஆண்டுக்கு 8 பில்லியன் யூரோ!

* இந்த ஆண்டு (2013) பால்வீதி மண்டலத்தை ஆராய்கிற ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி கேமராவின் பிக்செல்கள் - 100 கோடி!

* மனிதனால் உருவாக்கப்பட்டு விண்வெளிக் குப்பையாக மாறியுள்ள பொருட்கள் / அதன் துண்டுகளின் குறைந்தபட்ச எண்ணிக்கை 5 லட்சம்!

* ரத்தத்தின் கொந்தளிப்பு பற்றி ஆராய்வதற்காக, லியனார்டோ டா வின்சி கண்ணாடி இதயங்களை உருவாக்கினார்.

* 130 டெசிபலுக்கு அதிக ஒலியைக் கேட்கும்போது மனிதர்களுக்கு காதுவலி ஏற்படும்.

* பூமியில் உள்ளதைவிட 100 மடங்கு இயற்கை வாயு, சனி கிரகத்தின் துணைக்கோளான டைட்டனில் இருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Mon 6 Oct 2014 - 13:39


* இதுவரை நிரூபிக்கப்பட்ட அளவில், மோட் டார் சைக்கிள் எட்டிய அதிகபட்ச வேகம்... மணிக்கு 406.62 கிலோமீட்டர்.

* ஆரோக்கியமான மனிதரின் சிறுநீரகப்பை சௌகரியமாக தேக்கி வைக்கக்கூடிய அதிகபட்ச சிறுநீரின் அளவு 453 கிராம்      (2கப்).

* டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் உறிஞ்சுவதில் மூன்றில் ஒரு பங்கு மின்சாரமே லேப்டாப்களுக்கு போதுமானது! 

* புவிவட்ட சுற்றுப்பாதையில் அரை கிலோ எடையை நிலைபெறச் செய்வதற்கு ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக செலவாகும்.

* உயரமான கால்பந்து வீரர்களே உயரம் குறைந்தவர்களை விட அதிக ஃபவுல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிறார்கள்.

* 1965ல் ஜான் யங் என்ற விண்வெளி வீரர் ஜெமினி 3 விண் கலத்தில் ஒரு சாண்ட்விச்சை கடத்திச் சென்றுவிட்டார். பிரெட்டுகளில் ஏற்படும் வேதிமாற்றத்தின் விளைவாக, விண்வெளி நிலையத்திலும் விண்கலத்திலும் மின்கோளாறுகள் ஏற்படும் என்பதால், பூமிக்குத் திரும்பியதும் அவருக்குச் சிறப்பான ‘கவனிப்பு’ நடந்தது!

* நீர்நிலைகளின் அடிப்பகுதி யில் 2-3 ஆண்டுகள் கூட்டுப் புழுவாகவே வாழக்கூடிய ‘மே’ பூச்சிகள், கூடு உடைத்து இறகுகள் பெற்று பறக்கத் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே வாழ்வை முடித்துக் கொள்கின்றன.

* உலகத்தின் 5வது முக்கிய இணையதளமாக விளங்கும் ‘விக்கி பீடியா’ நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் மொத்தம் 154 பேர் மட்டுமே!

* இதுவரை பதியப்பட்ட அடிப்படையில் பூமியின் அதிகபட்ச குளிர் அளவு மைனஸ் 89.2 டிகிரி செல்சியஸ். இது அன்டார்க்டிகாவில் 1983ம் ஆண்டு பதிவானது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Wed 8 Oct 2014 - 10:31


* படிப்பதும் கனவு காண்பதும் மூளையின் வெவ்வேறு பகுதிகளில் தூண்டப்படும் செயல்களாகும். அதனாலேயே நாம் கனவு காணும்போது படிக்க முடிவதில்லை!

* சராசரியாக நம் தும்மலின் வேகம் மணிக்கு 96 கிலோ மீட்டர்!

* நம் கண்களால் பழுப்பு நிறத்தின் 500 ஷேடுகளைக் கூட பிரித்து அறிய முடியும்.

* மலேசியாவிலுள்ள ‘நைக்’ தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களின் மொத்த வருமானத்தை விடவும், ‘நைக்’ அம்பாசிடராக உள்ள மைக்கேல் ஜோர்டான் அதிக பணம் சம்பாதிக்கிறார்.

* எரேசர் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் பென்சில் எழுத்துகளை அழிக்க ரொட்டிதான் பயன்படுத்தப்பட்டது.

* உலக மக்கள் தினமும் 5 லட்சம் மணி நேரங்களை இன்டர்நெட் செக்யூரிட்டி பாஸ்வேர்டுகளை அடிக்க மட்டுமே செலவழிக்கின்றனர்.

* அனைத்து துருவக்கரடிகளும் ஆழ்துயில் கொள்வதில்லை. கர்ப்பிணியாக இருப்பவை மட்டுமே அப்படி உறங்குகின்றன.

* தேனீயால் தேன் ஏற்கனவே ஜீரணம் செய்யப்பட்டிருப்பதால், நம் உடலிலும் எளிதில் ஜீரணமாகும்.

* ட்விட்டர் இணையதளத்தில் ஒரு நாளில் எழுதப்படுபவற்றை மட்டும் புத்தகமாக ஆக்கினாலே, ஒரு கோடி பக்கங்கள் தேவைப்படும்!

* நூலகங்களில் அதிகம் திருடப்பட்டவை என்ற சாதனையை படைத்திருப்பது கின்னஸ் சாதனைப் புத்தகமே!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Wed 8 Oct 2014 - 10:36


* ஒரு அமெரிக்கர் சராசரியாக ஆண்டுக்கு 120 ஆப்பிள் சாப்பிடுகிறார்.

* நடந்தாலும், ஓட்டப் பயிற்சி செய்தாலும் கிலோமீட்டருக்கு 60 கலோரியே செலவாகும்.

* கடலின் சராசரி ஆழம் 4.3 கிலோமீட்டர்.

* ஈபிள் கோபுரம் கோடைக்காலத்தில் வெப்பத்தால் 15 செ.மீ. உயரம் நீள்கிறது.

* ஆண்களைவிட பெண்கள் இரு மடங்கு கண் சிமிட்டுகிறார்கள்.

* அமெரிக்காவில் துரதிர்ஷ்டமாகக் கருதப்படும் கறுப்புப்பூனை, ஜப்பானில் அதிர்ஷ்டமாகக் கொண்டாடப்படுகிறது.

* மேற்கத்திய மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளில் சராசரியாக ஒவ்வொருவரும் தினம் 2 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் பயன்படுத்துகிறார்கள்.

* பூமியின் 11 சதவீத நிலப்பகுதி யில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. இந்த அளவு தினந்தோறும் குறைந்து வருகிறது.

* சூரியக் குடும்பத்தின் மொத்த நிறையில் 99 சதவீதத்தை சூரியனே கொண்டுள்ளது.

* சராசரியாக நாம் வாழ்நாளில் நடந்து செல்லும் தூரத்தைக் கணக்கிட்டால், பூமியை 4 முறை வலம் வரலாம்!

* அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் பாதிக்கு மேலான வர்கள் தன்னந்தனியே வாழ்கிறார்கள்.

* ஃப்ளமிங்கோ பறவைகளின் வித்தியாசமான வண்ணம் அவற்றின் உணவிலிருந்தே கிடைக்கிறது.

* நமது இதயம் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான முறை துடிக்கிறது.

* உலகில் இன்னும் 3 நாடுகளில் மெட்ரிக் முறை அமல்படுத்தப்படவில்லை.  

* ஆமைகள் பின்பக்க துளை வழியாக சுவாசிக்கின்றன.

* தூங்கும்போது நமக்கு தும்மல் ஏற்படுவதில்லை.

* முழுதும் எடையேற்றப்பட்ட பெரிய கப்பலை நிறுத்தும் ஆணை பிறப்பித்த பிறகும், அது நிற்க 20 நிமிடங்களாவது ஆகும்.

* க்யூப் விளையாட்டை 20 திருப்பங்களுக்கு உள்ளாகவே முடிக்க முடியும்.

* சீனாவில் மற்ற நாடுகளைவிட பன்றிகளின் இனப்பெருக்கம் அதிகம்.

* அமெரிக்காவில் பத்தில் 8 மோசமான பேரழிவுகள் சூறாவளியாலேயே ஏற்படுகின்றன.

* உலக மக்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே பூமியின் தென்கோளப்பகுதியில் வசிக்கின்றனர்.

* தெள்ளுப்பூச்சி தன்னைவிட 130 மடங்கு உயரம் வரை தாண்டும் திறன் கொண்டது!

* உலகில் விற்பனையாகும் ஐஸ்க்ரீம்களில் மூன்றில் ஒரு பங்கு வெனிலாவே!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by சுறா on Wed 8 Oct 2014 - 12:51

தகவல்கள் அனைத்துமே ஆச்சர்யமாகவும் அருமையாகவும் உள்ளது.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by பானுஷபானா on Wed 8 Oct 2014 - 13:50

சராசரியாக நம் தும்மலின் வேகம் மணிக்கு 96 கிலோ மீட்டர்! wrote:

அடேங்கப்பா...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16644
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Thu 9 Oct 2014 - 14:25


* அமெரிக்காவிலுள்ள ஜாக்கெரி ரெய்டெல் என்பவரின் மின் அஞ்சல் முகவரியில் மொத்தம் 411 எழுத்துகள். இதுவே மிக நீளமான இமெயில் முகவரி!

* 7 மணி நேரத்துக்கு குறைவான தூக்கம் மட்டுமல்ல... அதிகமான தூக்கமும் இதயப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என வெஸ்ட் வர்ஜீனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

* இப்போதைய நிலை தொடர்ந்தால், இன்னும் 30 ஆண்டுகளுக்குள் உலகின் ஹீலியம் இருப்பு காணாமல் போய்விடும்.

* ஆன்லைனில் நேரம் செலவழிப்பது கடந்த 6 ஆண்டுகளில் சராசரி நபருக்கு இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. 2007ல் இந்த போதை ஒரு மாதத்துக்கு 13 மணி 30 நிமிடங்களாகத்தான் இருந்தது. கணிப்பொறித்துறையில் பணியாற்றுபவர்களுக்கு இது பொருந்தாது.

* இங்கிலாந்தில் சராசரியாக ஒருவர் ஓராண்டு சாப்பிடும் சாக்லெட்டின் அளவு 9 கிலோ!

* கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடும் குழந்தைகளில் 10 சதவீதம் பேர் அதற்கு அடிமையாகி விடுகின்றனர்.

* உலக சூதாட்ட மார்க்கெட்டின் இன்றைய மதிப்பு 1776600 கோடி ரூபாய்!

* ‘ஆயிரத்தில் ஒன்று’ என்பது ‘பத்தில் ஒன்று’ என்பதை விட மிகப்பெரி யது என 25 சதவீதம் மக்கள் தவறாக நினைக்கின்றனர்!

* ஓராண்டில் நாம் 62 லட்சத்துக்கும் அதிகமான முறை கண் சிமிட்டுகிறோம்!

* இதுவரை அறியப்பட்ட அளவில், பிரபஞ்சத்தில் 1,000,000,000 கேலக்சிகள் உள்ளன!

* உலகில் 5 லட்சத்துக்கும் அதிக நிலநடுக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் உணரப்படுகின்றன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Thu 9 Oct 2014 - 14:26


* உலகில் 50 சதவிகித பெண்கள் அனுப்டபோபியா என்ற பிரச்னைக்கு ஆளாகின்றனர். ‘திருமணம் ஆகாதோ’, அல்லது ‘தவறான நபரைத் திருமணம் செய்து கொள்வோமோ’ என்ற பயத்தையே இந்த போபியா குறிக்கிறது.

* 100 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, இப்போது அமெரிக்காவில் அதிக மரங்கள் இருக்கின்றன.

* திருமணம் ஆகாதவர்களில் 58 சதவீதம் பேர் ‘வாலண்டைன்’ஸ் டே’வை விரும்புவதில்லை!

* சமீபத்தில் வாழைப்பழம் சாப்பிட்டவர்களை கொசுக்கள் நெருங்கி வரும்.

* வாழ்வின் துயரமான நினைவுகளை மறையச் செய்யும் லேசான மின் அதிர்ச்சி சிகிச்சை முறையை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

* கேன்சர் செல்களை ஓரளவு அழிக்கும் திறன் எலுமிச்சைக்கு உண்டு என சமீபத்திய ஆராய்ச்சியில் அறியப்பட்டிருக்கிறது.

* நமது தொப்புளில் மட்டுமே 2 ஆயிரத்துக்கும் அதிக பாக்டீரியா வகைகள் உள்ளன.

* வீடியோ கேம்ஸ் ஆடுவது மனச்சோர்விலிருந்து விடுபட ஓரளவு உதவும்.

* பாலூட்டிகளிலேயே மிக மெதுவாக வளர்ச்சி பெறுவது மனிதனே!

* கேரட்டின் நிறம் ஒரு காலத்தில் ஊதாவாக இருந்தது.

* பேஸ்கட் பால் ஆட்டம் தோன்றியபோது, பந்தின் நிறம் பிரவுன் ஆக இருந்தது. பிற்காலத்தில் ஆரஞ்சுக்கு மாற்றப்பட்டது.

* காலபோகஸ் தீவில் இருக்கும் ஒரு ஆமை இனம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Mon 13 Oct 2014 - 11:53


* 2012ல் மட்டுமே 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரையிலான புதிய உயிரிகள் அறியப்பட்டிருக்கின்றன. 795 இனங்களை இழந்திருக்கிறோம்.

* 25 ஆயிரம் பூச்சிகள், உண்ணிகள், சிலந்திகளுக்கு ஒரே ஒரு கிறிஸ்துமஸ் மரமே இடம் கொடுக்க முடியும்!

* ஒரு அலுமினிய டப்பாவை மறு உபயோகம் செய்வதன் மூலம், ஒரு டிவியை 3 மணி நேரம் இயங்கச் செய்யும் அளவு சக்தியைச் சேமிக்கிறோம்.

* பசு மாடுகள் மனிதர்களைவிட 200 மடங்கு அதிக வாயுவை வெளியிடுகின்றன.

* சராசரி மனிதன் படுக்கையில் விழுந்த 7 நிமிடங்களில் உறங்கி விடுகிறான்.

* உலகை 150 முறை சுற்றிவரும் அளவுக்கு நீளமான சாலைகள் அமெரிக்காவில் உள்ளன.

* நீங்கள் விழித்து எழுந்தவுடன் ஒரு சிறு பல்பு எரியக்கூடிய அளவு மின்சக்தியை, மூளை உண்டாக்குகிறது.

* நம் ரத்தத்தில் உள்ள இரும்பானது, பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன், பல ட்ரில்லியன் மைல் தொலைவில் உருவானது!

* காதல் வயப்படும் ஜென்ட்டோ பெங்குவின், தன் காதலிக்குப் பரிசளிப்பதற்கான சிறிய கல்லை கடற்கரை முழுவதும் தேடித் தேர்ந்தெடுக்கும்!

* ஒரே ஒரு முனையில் பொருந்தியுள்ள, நம் உடலின் ஒரே ஒரு தசை நாக்கு மட்டுமே!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by ahmad78 on Mon 13 Oct 2014 - 11:54


* பூமியின் சுழற்சி வேகம் ஒரு நூற்றாண்டுக்கு 17 மில்லி செகண்டுகள் குறைகிறது.

* தண்ணீரை வேதியியல் மாற்றம் மூலமாக எரியக்கூடிய ராக்கெட் எரிபொருளாகக்கூட மாற்ற முடியும்.

* பூனைகளுக்கு சுவை உணரும் சக்தி குறைவு. அவற்றுக்கு 473 சுவை மொட்டுகள்தான். மனிதர்களுக்கோ சராசரியாக 8 ஆயிரம்!

* காகங்களால் தங்களை மோசமாக நடத்திய மனிதர்களின் முகங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்!

* 1850ம் ஆண்டு வரை இடது, வலது ஷூக்கள் கிடையாது. இரண்டுமே ஒரே மாதிரியானவை!

* பண்டைய கிரேக்கத்தில் ஒலிம்பிக் பந்தயங்களைப் பார்த்ததற்குக்கூட பெண்களுக்குக் கடும் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.

* ஒவ்வொரு ஆண்டும் நம் உடலில் 98 சதவீதம் அணுக்கள் மாற்றமாகின்றன.

* மனச்சோர்வினால் அவதிப்படு கிறவர்களுக்கு மற்றவர்களைவிட 3-4 மடங்கு அதிக கனவுகள் ஏற்படுகின்றன.

* ஜப்பா னில் ஆண்டுதோறும் 2400 கோடி சாப்ஸ்டிக் குச்சிகள் (ஜோடி) பயன்படுத்தப்படுகின்றன. சீனாவிலோ 4500 கோடி. இதற்கு மட்டுமே இரண்டரை கோடி மரங்கள் தேவை!

* உலகில் 7500 தக்காளி ரகங்கள் உள்ளன.

* வயதான பெற்றோரை அவ்வப்போது வந்து சந்திக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டம் சீனாவில் அமலாக உள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நம்பினால் நம்புங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum