சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பேருந்து
by kalainilaa Yesterday at 17:01

» மாறாத நட்பு (கலைநிலா கவிதை )
by kalainilaa Yesterday at 16:16

» துணை ( கலைநிலா கவிதை)
by kalainilaa Yesterday at 16:11

» நிறைவு - கவிதை
by பானுஷபானா Yesterday at 15:40

» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே
by பானுஷபானா Thu 13 Dec 2018 - 16:10

» ஒரு கணவனின் வாக்குமூலம்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:47

» சோளத்தில் சாதனை!
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:44

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:43

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:42

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **
by rammalar Fri 7 Dec 2018 - 19:19

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
by rammalar Fri 7 Dec 2018 - 18:47

» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்
by kalainilaa Wed 5 Dec 2018 - 8:58

» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்
by kalainilaa Tue 4 Dec 2018 - 18:08

» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:54

» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:42

» செல்வாக்கு- ஒரு பக்க கதை
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:34

» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)
by kalainilaa Tue 4 Dec 2018 - 16:26

» சூப்பர் ஷாட் - {தினமலர்)
by kalainilaa Tue 4 Dec 2018 - 16:13

» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:
by rammalar Mon 3 Dec 2018 - 20:14

» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு!
by rammalar Mon 3 Dec 2018 - 12:18

» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து
by rammalar Mon 3 Dec 2018 - 12:07

» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு
by rammalar Mon 3 Dec 2018 - 12:06

» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது
by rammalar Mon 3 Dec 2018 - 12:05

» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்
by rammalar Mon 3 Dec 2018 - 12:04

» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய
by rammalar Mon 3 Dec 2018 - 12:00

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Sun 2 Dec 2018 - 16:17

» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்
by rammalar Fri 30 Nov 2018 - 5:38

» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -
by rammalar Fri 30 Nov 2018 - 5:32

» இந்தியாவுக்கு விலக்கு ஏன்? டிரம்ப் விளக்கம்
by பானுஷபானா Wed 28 Nov 2018 - 16:16

» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்
by பானுஷபானா Wed 28 Nov 2018 - 15:34

» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்
by பானுஷபானா Tue 27 Nov 2018 - 14:22

» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்
by Admin Sun 25 Nov 2018 - 13:49

» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்
by Admin Sun 25 Nov 2018 - 13:47

» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி
by rammalar Wed 21 Nov 2018 - 5:06

» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை
by rammalar Wed 21 Nov 2018 - 5:05

.

தாற்பரிய ரமழான் பிரிந்ததே!

Go down

Sticky தாற்பரிய ரமழான் பிரிந்ததே!

Post by நண்பன் on Sat 2 Aug 2014 - 12:09

தாற்பரிய ரமழான் பிரிந்ததே!
பாவச் சேற்றினில் ஊறிக் கிடந்த
பாத கர்தம் உள்ளம் தன்னை
சீவித் தூய்மை விதை விதைத்த
சிறப்பு மிகு ரமழானும் பிரிந்ததே!

நாவினில் மாத்திரம் ‘கலிமா’ தனை
நளினமாய்த் தினம் ஒட்டிக் கொண்டு
பாவி களாய்த் திரிந்தோர் தம்மை
பக்கு வப்படுத்திட்ட ரமழானும் பிரிந்ததே!

கூவி யழைக்கும் ‘அதான்’ கேட்டும்
கூட்டாய்த் தொழ மறந்தோர் தம்மை
தாவி வந்து ‘சுஜுதில்’ விழத்
தருணம் அமைத்திட்ட ரமழானும் பிரிந்ததே!

முப்பது நாள் தரா விஹா வை
மும்முர மாய்த் தொழ வைத்து
தப்பான எண்ணங்களை
வே ரோடு அறுத் தெறிந்த
தாற் பரிய ரமழானும் பிரிந்ததே!

சஹீட் எம். நியாஸ்
பிஹில்லதெனிய,
மடவளை பஸார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தாற்பரிய ரமழான் பிரிந்ததே!

Post by Nisha on Sat 2 Aug 2014 - 15:07

எனக்கு இக்கவிதையில் நிரம்ப அர்த்தம் புரியவில்லையெனினும் கடந்து போன நோன்பு குறித்த தொரு கவிதை என புரிந்தது!

கலிமா
அதான்
கஜூதில்
விஹா என்பதெல்லாம் என்ன!? இவை அரபி மொழி சொற்களா?

நளினமாய்த் தினம் ஒட்டிக் கொண்டு
பாவி களாய்த் திரிந்தோர் தம்மை
பக்கு வப்படுத்திட்ட ரமழானும் பிரிந்ததே


~/ ~/ அருமையான வரிகள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தாற்பரிய ரமழான் பிரிந்ததே!

Post by நண்பன் on Sat 2 Aug 2014 - 18:11

Nisha wrote:எனக்கு  இக்கவிதையில் நிரம்ப அர்த்தம் புரியவில்லையெனினும்  கடந்து போன நோன்பு குறித்த தொரு கவிதை என புரிந்தது!

கலிமா
அதான்
கஜூதில்
விஹா என்பதெல்லாம் என்ன!? இவை அரபி மொழி சொற்களா?
 
நளினமாய்த் தினம் ஒட்டிக் கொண்டு
பாவி களாய்த் திரிந்தோர் தம்மை
பக்கு வப்படுத்திட்ட ரமழானும் பிரிந்ததே


~/ ~/ அருமையான வரிகள்!

மிக்க நன்றி அக்கா உங்கள் வினவலுக்கு பதில் தருகிறேன் இதோ...

சாதாரணமாக இஸ்லாமியர்கள் சிலர் தான் இஸ்லாமியன் என்ற பெயருடன் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள் அவர்களுக்கு கடைமையாக்கப்பட்ட வணக்க வழிபாடுகளில் கலந்து கொள்வதில்லை அப்படிப்பட்டவர்கள் ஒரு வருடத்தில் ஒரு முறை வரக்கூடிய இந்த ரமழான் மாதத்தில் அதிகமாக வணக்க வழிபாடுகளில் கலந்து கொள்வார்கள் அவர்களைப் பற்றியதாகக் கூட இருக்கலாம்

மாத்திரமல்லாமல்  எப்பவும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுபவர்கள் இந்த ரமழான் மாதத்தில் இன்னும் அதிகமாக ஈடுபடுவார்கள்  அவர்களையும் இது குறிக்கும்..

கலிமா ( லாயிலாக இல்லல்லாஹ் முஹம்மதுர்ர ரசூலுல்லாஹ்) இந்தக் கலிமாவன் அர்த்தம்  வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன்தான்  அவனைத் தவிர வேறு இல்லை  முஹம்மது ஸல் அல்லாஹ்வின் திருத்தூராவார்  இதுதான் அந்தக் கலிமாவின் பொருள்...!  இந்தக் கலிமாவை பொருளறிந்து மனப்பூர்வமாக உணர்ந்து மொழிந்தவர் பூரண முஸ்லிமாவார்

அதான் அழைப்பு வணக்கத்திற்காக ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு நாளைக்கு ஐந்து நேரங்கள் பள்ளியில் சென்று வணங்க வேண்டும் அதற்காக நியமிக்கப்பட்டவர்கள் அழைப்பார் அதைத்தான் அதான் என்று சொல்லுவார்கள்..

சுஜுதில் என்றால்  ( அதான் ) அதாவது அழைப்பு விடுக்கப்பட்டவுடன் பள்ளிக்கு சென்றவர்கள் சுஜுதில் அதாவது அடிபணிவது அல்லாஹ் ஒருவனுக்குத்தான் எஜமான் அவன் நாங்கள் அவன் அடிமைகள் என்று அடிபணிவது சுஜுதில்  இஸ்லாமியர்கள் அடிபணிவது அதாவது வணங்குவது (அல்லாஹ்) படைத்தவன் ஒருவனைத்தான்

சுஜுத் செய்வதில் உடலுக்கு பல நண்மைகள் உண்டாகும்
இதை விட இன்னும் தெளிவாக விரிவாக விளக்கம் உறவுகள் தாருங்கள் முஹைதீன் தாருங்கள் அக்காவிற்கு இதில் என்ன சரி குளப்பம் இருந்தால் சொல்லுங்கள் விளக்குகிறேன்
என்றும் மாறா அன்புடன் உங்கள் நண்பன்

விடு பட்டது
தராவிஹ் விஹா அல்ல தராவிஹ் அதாவது இஸ்லாமியர்கள் ஒரு நாளைக்கு ஐந்து நேரம் வணங்குவதற்காக பள்ளிக்குச்செல்வார்கள் ஆனால் நோன்பு காலங்களில் ஐந்து நேரத்தொழுகை வணக்கம் முடிந்த பிறகு நோன்பு காலங்களில் மட்டும் இதை அதிகமாக தொழுவார்கள் இதற்குப் பெயர் தராவிஹ் என்று சொல்லுவார்கள் விளக்கம் சுருக்கமாக உள்ளது விரிவாக எழுத எனக்கு நேரம் குறைவும் மன்னிக்கவும் அக்கா
நன்றியுள்ள நண்பன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தாற்பரிய ரமழான் பிரிந்ததே!

Post by Nisha on Sun 3 Aug 2014 - 1:49

விரிவான் விளக்கத்திற்கு ரெம்ப நன்றிப்பா!

என்னிடம் ஒரு இயல்புண்டு எதையும் ஆராய்ந்தறியாமல் மற்றவர்கள் செய்கின்றார்களே, செல்கின்றார்களே என அதை செய்வதில்லை. ஏன் எதற்காக என ஆய்ந்தறிந்து தான் அது என மனதுக்குகந்ததானதாய் தோன்றினால் மட்டுமே பின்பற்றுவேன்.

இந்து மதம், கிறிஸ்தவ மதம், ஏன் புத்த மதம் குறித்த நூல்களை படித்திருக்கின்றேன்!

எனக்கும் சில இஸ்லாமிய நட்புக்கள் இங்கே இருந்தாலும் நாம் பெரும்பாலும் மதம் சம்பந்தமாய் இதுவரை பேசியதில்லை. அப்படியும் சில வருடங்கள் முன்னால் என் இஸ்லாமிய தோழி ஒருவரிடம் தமிழில் குரான் இருந்தால் தாருங்கள். அதில் என்ன எழுதி இருக்கின்றது என படிக்கணும் என்றேன். அதற்கு அவர் அப்படி எல்லோரும் படிக்க கூடாது புரிந்திட முடியாது என்றாஎ அதன் பின் விட்டு விட்டேன்.

இங்கே சேனை மூலம் தான் எனக்கு இலங்கை உறவுகள் குறித்து மட்டுமல்லது இஸ்லாமிய மார்க்கம் குறித்தும் அறிந்திட முடிந்தது!


முதலில் சம்ஸ்உடன் பேசிய போதினில் அவர் எப்போதும் இன்ஷா அல்லாஜ் என்றே சொல்வார். இறைவன் நாடினால் மட்டுமே நாம் செயல் படமுடியும் என்பதால் இறைவன் சித்தப்டி என அர்த்தம் வரும் என சம்ஸ் சொன்னார்! இதையே கிறித்தவர்கள் கர்த்தருக்கு சித்தமானால் என சொல்கின்றோம் என புரிந்து கொண்டேன் .

அதே போல் நீங்கள் ஒருவருக்கொருவர் சொல்லும் அஸ்லாமு அலைக்கும் என்பது தமிழில் வணக்கம் சொல்வது போல் அரபி மொழியில் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லும் வார்த்தையா எனவும் தெளிவு படுத்துங்களேன்!

அஸ்லாமு அலைக்கும் என்பது நாங்கள் ஸ்தோத்திர சொல்வது போல தானே. கிறிஸ்தவர்கள் ஒருவரை யொருவர் சந்திக்கும் போது கை கொடுத்தோ, கன்னத்தோடு கன்னம் முத்தமிட்டோ ஆங்கிலத்தில் பிரைஸ் த லோட் கர்த்தருக்கே ஸ்தோத்திரம் என்போம்.

அதையே விடை பெறும் நேரம் காட் பிளஸ் யூ... கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக என சொல்லி விடை பெறுவோம்.

நீங்கள் பயன் படுத்தும் வார்த்தைகள் ஆங்கிலம் அல்ல தானே. அரபி வார்த்தை அல்லவா.. இந்த வார்த்தைகள் கட்டாயமாய் இஸ்லாமியர்களுக்கானதா அல்லது பொதுவான வணக்கத்துக்குரிய சொல்லா என உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்!


மாஷா அல்லாஜ் என்றால் கிரேட் என அர்த்தம்.
ஈத் முபாரக் என்றால் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக என்றும் அர்த்தம் தரும் என நான் புரிந்து கொண்டது சரிதானே..நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தாற்பரிய ரமழான் பிரிந்ததே!

Post by நண்பன் on Sun 3 Aug 2014 - 9:50

மிக்க மகிழ்ச்சி அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
இஸ்லாமியர்கள் எந்த நாட்டிலும் எந்த மூலை முடுக்கிலிர்ந்தாலும் அவர்கள் சில அரபி வார்த்தைகளைப் பயன் படுத்துவார்கள் முஸ்லிம்கள்தான் பயன் படுத்துவார்கள் ஆனால் அரபு நாடுகளில் வாழும் நிறையப்பேர் அரபி மொழி தெரிந்த அதிகமானோர் இலங்கையர் இந்தியர் மற்றும் ஏனய நாட்டவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களும் பயன் படுத்துவார்கள்.

அவற்றில் சிலதை நீங்கள் கேட்டுள்ளீர்கள் விளக்கம் தருகிறேன்..

குர்ஆனைப் படிக்கக்கூடாது என்று யார் அக்கா உங்களுக்கு சொன்னது பாவம் அவங்க தெரியாமல் சொல்லி விட்டார்கள். குர்ஆன் வந்து ஒரு வேத நூல் யார் வேண்டுமானாலும் படித்து அறிந்து கொள்ள முடியும்.

தானே படித்து அறிந்து கொள்வதை விட ஒரு குருவை நியமித்து அவரிடம் குர்ஆனைப் படித்து அறிந்து கொண்டால் இன்னும் இலகுவாக விளங்க முடியும் மிகவும் இலகு....

ஈத் முபாறக் என்றால் ஈத் என்றால் விஷேசம் பெருநாள் முபாறக் என்றால் வாழ்த்துக்கள் ஈத் முபாறக் என்றால் பெருநாள் வாழ்த்துக்கள் என்று அர்த்து பெருநாளில் மாத்திரம்தான் ஈத் பயன் படுத்துவோம்

அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் அரபுச்சொல் அதன் தமிழ் வடிவம்
உங்கள் மீது சாத்தியும் சமாதானம் உண்டாவதாக என்று பொருள்

வ அலைக்கு முஸலாம் என்றால்..
உங்கள் மீதும் சாந்தி சமாதானம் உண்டாகட்டும் என்று பொருள்

மனம் திருப்தியாகும் போது மாஷா அல்லாஹ் என்று சொல்லுவோம் அதற்கு இறைவன் பொருந்திக்கொண்டான் என்றும் பொருள் வரும்

வினவலுக்கும் புரிதலுக்கும் நன்றி அக்கா இன்னும் கேழுங்கள் என்னால் முடிந்த வற்தை தருகிறேன் தெரியாத வற்றை மார்க்க அறிஞர்களிடம் கேட்டு உங்களுக்கு சொல்கிறேன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தாற்பரிய ரமழான் பிரிந்ததே!

Post by ராகவா on Sun 3 Aug 2014 - 12:13

வாவ்....இவ்வளவு இருக்கா...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: தாற்பரிய ரமழான் பிரிந்ததே!

Post by Nisha on Sun 3 Aug 2014 - 15:02

அபப்டின்னால் நானும் சொல்வேன் அஸ்லாமு அலைக்கும்னு! காலை வணக்கம்! குட் மோனிங் என உப்ப்புசப்பில்லாமல் எல்லோரும் சொல்கின்றார்கள் என உணராமல் சொல்ல்லி செய்கின்றோம். அதையே உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமென நீட்டி முழங்குதலை விட அஸ்லாமு அலைக்கும் என சொல்வது ஈசியாகவும் அழகாகவும் இருக்கே...

நம் வாயின் வார்த்தைகளும் மனதின் எண்ணங்களும் நம்மை வழி நடத்தும் எனில் இப்படி அஸ்லாமு அலைக்கும் என முழுமையாக அதன் அர்த்தம் உணர்ந்து சொல்வது ரெம்ப நல்லதுப்பா!

ஈத் முபாரக் எனில் பெரு நாள் வாழ்த்தா.. ஓக்கே ஓக்கே..

அப்ப Happy ஈத் முபாரக் என அரபியில் எல்லா விசேஷங்களுக்கும் சொல்லலாமா?

ஹைய்யா நானும் அரபிவார்த்தைஎல்லாம் படிக்கின்றேனே. *_ *_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தாற்பரிய ரமழான் பிரிந்ததே!

Post by நண்பன் on Sun 3 Aug 2014 - 15:45

Nisha wrote:அபப்டின்னால் நானும் சொல்வேன்  அஸ்லாமு அலைக்கும்னு! காலை வணக்கம்! குட் மோனிங்  என உப்ப்புசப்பில்லாமல் எல்லோரும் சொல்கின்றார்கள் என  உணராமல் சொல்ல்லி செய்கின்றோம்.  அதையே  உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமென நீட்டி முழங்குதலை விட அஸ்லாமு அலைக்கும் என  சொல்வது ஈசியாகவும் அழகாகவும் இருக்கே...

நம் வாயின் வார்த்தைகளும் மனதின் எண்ணங்களும் நம்மை வழி நடத்தும் எனில்  இப்படி அஸ்லாமு அலைக்கும் என முழுமையாக அதன் அர்த்தம் உணர்ந்து சொல்வது  ரெம்ப நல்லதுப்பா!

ஈத் முபாரக் எனில் பெரு நாள் வாழ்த்தா..  ஓக்கே ஓக்கே..

அப்ப Happy  ஈத் முபாரக் என அரபியில்  எல்லா விசேஷங்களுக்கும் சொல்லலாமா?

ஹைய்யா நானும் அரபிவார்த்தைஎல்லாம் படிக்கின்றேனே.   *_  *_

மிகவும் அருமை உங்கள் புரிதலுக்கு கோடி நன்றிகள் அக்கா
மட்டுமில்லாது அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லும் போது நமது பதிவேடுகளை தினம் கவனிக்கும் வானவர்கள் ஒரு சலாமுக்கு பத்து நன்மைகளை எழுதுவார் தெரியுமா ம்ம் இது உங்களுக்கு புதிது இதோ சொல்கிறேன்

நாம் இன்னொருவரைப் பார்த்து அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும் என்று சொல்லும் போது நமது அழகான அந்த எண்ணத்திற்கு நமக்கு பத்து நன்மைகள் எழுதப்படுகிறது கரும்பு தின்ன கூலியும் கிடைக்கிறது ரொம்ப சந்தோசம் அக்கா  ஐஸ் சாப்பிடுங்க 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தாற்பரிய ரமழான் பிரிந்ததே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum