சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Sat 21 Jul 2018 - 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில், கடந்த 6 மாதங்களில் மட்டும், 1,100பேர் தற்கொலை

Go down

Sticky கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில், கடந்த 6 மாதங்களில் மட்டும், 1,100பேர் தற்கொலை

Post by ராகவா on Mon 11 Aug 2014 - 22:24

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில், கடந்த 6 மாதங்களில் மட்டும், 1,100 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதுபோன்ற துயரங்கள் அதிகரிக்க மதுவும் மறைமுக காரணம் என குற்றம்சாட்டும் சமூக ஆர்வலர்கள், போதை பழக்கத்தில் இருந்து மீள விரும்புவோருக்கு உதவ, மாவட்டம்தோறும் சிறப்பு மையங்களை தமிழக அரசு திறக்க வேண்டும் என்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் தொகை 24 லட்சம். இதில், மாநகராட்சி எல்லைக்குள் மட்டும் 8.78 லட்சம் பேர் வசிக்கின்றனர். பின்னலாடை தொழிலில், உலகளவில் இடம்பிடித்திருக்கும் திருப்பூரில், 2௦௦௦ ஏற்றுமதி நிறுவனங்களும், 12,௦௦௦ உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன.
இங்கு உற்பத்தியாகும் ஆடைகள், ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யப்பட்டு ஏறத்தாழ 13,500 கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டித்தருகிறது. தவிர 8,௦௦௦ கோடி ரூபாய் மதிப்பிற்கு உள்நாட்டு வர்த்தகமும் நடக்கிறது. வேலைவாய்ப்பு தேடி வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர், திருப்பூர் வருகின்றனர். இங்குள்ள நிறுவனங்களில் ஏறத்தாழ 4 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தினமும் இரண்டு லட்சம் மக்கள் வந்து செல்கின்றனர். மாவட்டம் முழுவதும், 10 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
திருப்பூரில் பின்னலாடை தவிர, அரிசி ஆலைகள், எண்ணெய் ஆலைகள், கொப்பரை களங்கள், கோழி பண்ணைகள், நுால் மில்கள், இயந்திர உற்பத்தி, பாத்திர உற்பத்தி, சிற்பக்கலை கூடங்கள், காற்றாலைகள் என பல்வேறு சிறப்பு வாய்ந்த தொழில்கள் நுாற்றுக்கணக்கில் உள்ளன. விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் இங்கு பஞ்சமில்லை.
கோவை, நீலகிரியில்...: நடப்பாண்டில் கடந்த ஜூன் வரை, கோவை மாநகரில் 360௦ பேரும், புறநகர் மாவட்டத்தில் ஜூலை வரை 256 பேரும், ஊட்டியில் 130௦ பேரும் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர். அதாவது, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ௧,௧௧௦ பேர் தற்கொலை செய்துகொண்டதாக, போலீஸ் ஆவண புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பிரச்னை1: வேலைக்குச் செல்லாத சூழ்நிலையிலோ, தொழில் நஷ்டம் காரணமாகவோ, பொருளாதார பிரச்னைகள் எழுந்து, கடன் வாங்கி, சமாளிக்க துாண்டும். அவ்வாறு கடன்வாங்கிய பின், அதற்கு வட்டி செலுத்துதல், கடன் தொகையை அடைத்தல் குடும்பத்துக்கு பெரும் சுமையாக மாறும். குடிகார குடும்ப தலைவர், திருந்திவாழ முடிவெடுத்தால் தவிர, நிச்சயமாக இவற்றிலிருந்து எளிதில் விடுபட வாய்ப்பில்லை. அவ்வாறான நெருக்கடி ஏற்படும்போது, கணவன் - மனைவி இடையே பிரச்னை
அன்றாடம் ஏற்பட்டு, தற்கொலை விரக்தி நிலைக்கு தள்ளக்கூடும்.
பிரச்னை 2: ஒருவேளை, பொருளாதார நெருக்கடியால் கணவன் - மனைவி இடையே பிரச்னை ஏற்படாத நிலையில், கடன் கொடுத்த நபரின் தொந்தரவால், இருவரும் விரக்திக்கு உந்தப்படலாம். குடும்பத்தில் நிகழும் கூட்டுத் தற்கொலைகள் பெரும்பாலும், இது போன்ற காரணங்களால்தான் நிகழ்கின்றன.
பிரச்னை 3: பொருளாதார பிரச்னை ஏதும் இல்லாத .நிலையில், கணவன் தனது மனைவியின் 'தேவை'களை பூர்த்தி செய்ய இயலாதவர் நிலைக்கு தள்ளப்படின், வேறு நபரின், தகாத தொடர்பால், அந்த குடும்பத்தின் அமைதி சிதைக்கப்படலாம்
பிரச்னை 4: தேர்வில் தோல்வியால் பிள்ளைகள் தற்கொலை செய்துகொள்வதும் நடக்கிறது. குடிகார தந்தையால் அமைதியிழந்த குடும்பத்தில், நிம்மதியற்ற நிலைக்கு ஆளாகும் பிள்ளைகளால் சரிவர படிக்க முடியாது. தேர்வில் தோல்வி அடைய நேரிடும்போது, அவர்கள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுகின்றனர். இப்படி, தற்கொலைக்கான காரணங்கள், வெவ்வேறாக இருப்பினும், நன்கு ஆராய்ந்து பார்த்தால், பல தற்கொலை நிகழ்வுகளில், பெரும்பாலும் குடிபோதையே மூல காரணமாக இருக்கும், என்கின்றனர் ேபாலீசார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில்... அதிர்ச்சி!
கோவை, கஸ்துாரிபா காந்தி குடிபோதை நீக்கு மைய மருத்துவ இயக்குனரும், மனநல மருத்துவருமான சீனிவாசன் கூறியதாவது: தற்கொலை எண்ணிக்கைகளில் 20-30 சதவீதம் பேர், ஏதோ ஒரு வகையில், குடிப்பழக்கத்தை காரணமாக கொண்டுள்ளனர். மது அருந்தும்போது, ஒருவரின் சிந்தனை திறன் மழுங்கடிக்கப்படுகிறது.இதனால், நல்லது - கெட்டது, மனைவி - குழந்தைகள் எதையும் சிந்திக்காமல், மனித குணம், மிருக குணமாக மாறுகிறது.
இதுஒருபுறம் இருக்க, குடிபோதைக்கு அடிமையானவர்கள், பல்வேறு வகைகளில் தங்களது உடலை கெடுத்து, தன்னை நம்பியிருக்கும் குடும்பத்தை சீரழிக்கின்றனர். இறுதியில் முடிவெடுக்க முடியாமல் தற்கொலை மூலம், தங்களது உயிரையும் மாய்த்துக்கொள்கின்றனர். எதிர்காலத்தை பற்றிய தன்னம்பிக்கை இல்லாதது, தனக்கு யாரும் ஆதரவு இல்லை என்று நினைப்பது, இறுதியில் வாழ தகுதியில்லை என்று எண்ணுவது ஆகியவை, தற்கொலைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
நண்பர்களின் வற்புறுத்தலின்பேரில், மது அருந்த பழகுபவர்கள், நாளடைவில் அதற்கு அடிமையாகி விடுகின்றனர். தற்போது ஆண்கள் அதிகளவில் மதுஅடிமையாகியுள்ள நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெண்களும் மது பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் நிலவுவதுதான் அதிர்ச்சியளிக்கிறது. 'ஐ.டி.,' கலாசார வாழ்க்கை முறையில், இளம்பெண்களின் நாட்டம் மதுவை நோக்கி மெல்ல பயணிக்க துவங்கியுள்ளது. சில ஆண்டுகளில் கணிசமான அளவு பெண்கள், மதுப்பழக்கத்துக்கு அடிமையாகும் அபாயம் உள்ளது. முன்பு, மது என்றால் பயம் என்ற நிலை இருந்தது; ஆனால், தற்போது சகஜமாகிவிட்டது.மது பழக்கம், மனச்சோர்வு, மனக்கசப்பு போன்றவற்றுக்கு ஆரம்ப நிலையில் சிகிச்சை அளித்தால் தற்கொலைகளை கட்டுப்படுத்தலாம். கஸ்துாரிபாய் காந்தி குடிபோதை நீக்கு மையத்தில் குடிப்பழக்கம் மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த ஆலோசனைகள், சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இந்த மையத்தை, ௧௦௬ என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். இவ்வாறு, சீனிவாசன் கூறினார்.இதற்கும் பல வழிகள்: தற்கொலை செய்து கொள்வோர், தங்களின் மன நிலை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல், உயிரை மாய்த்துக்கொள்வதற்கான வழிமுறைகளை மேலும் அவர் கூறியதாவது:எந்த ஒரு நபரும்,தெளிவான சிந்தனையில் இருக்கும்போதுதான், குடும்பத்தை சரிவர நடத்த முடியும்.

அவரது செயல்பாடும் குடும்பத்துக்கும், அவர்சார்ந்த சமூகத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு தொடர் குடிகார கணவனால் மனைவியை சரிவர அணுக முடியாது; வேலைக்குச் செல்ல முடியாது; அவர் சுயதொழில் செய்பவராக இருந்தால் தொழிலை நிர்வகிக்க இயலாது; குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியாது.

இதனால், அந்த குடும்பத்தில் சமூக, பொருளாதார பிரச்னைகள் தலைதுாக்கும்.
ஆண்டுக்கு ரூ.1,100 கோடி:திருப்பூர் நகரில் 158 'டாஸ்மாக்' கடைகளும், பிற பகுதிகளில் 120 மதுக்கடைகளும் உள்ளன. தினமும் கடை ஒன்றுக்கு, குறைந்தது லட்சம் ரூபாய்க்கு சரக்கு விற்கிறது. தினமும் மாவட்டத்தில் சராசரி மது விற்பனை, 3.25 கோடி முதல் 3.5 கோடி ரூபாய். சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் 5.5 கோடி ரூபாயை எட்டுமாம். ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை நடக்கும் மாவட்டமாக திகழ்கிறது திருப்பூர்.

நன்றி: தினமலர்


Last edited by ராகவா on Mon 11 Aug 2014 - 22:35; edited 1 time in total
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில், கடந்த 6 மாதங்களில் மட்டும், 1,100பேர் தற்கொலை

Post by Nisha on Mon 11 Aug 2014 - 22:32

கடந்த 6 மாதங்களில் மட்டும், 1,100௦௦ பேர் தற்கொலை

தட்டச்சுப்பிழையோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum