சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பகுத்தறிவு....?

Go down

Sticky பகுத்தறிவு....?

Post by ahmad78 on Tue 30 Sep 2014 - 11:13

ஒரு மகாராஜாவின் மகன் மிகவும் மக்காக இருந்தான். அதிகாரம் உள்ள பல குடும்பங்களில் இந்த “மக்கு மகன்” பிரச்சனை எப்போதும் உண்டு. அவனுக்கு ஆட்சியை கொடுக்க மக்கள் விரும்பவில்லை. மூத்தவர் சபை எதிர்த்தது. “என்ன செய்யலாம்” என்று அரசர் கவலைப்பட்டார். வெளிநாட்டில் திறமையான கலாசாலையில்  மகனைச் சேர்த்துவிட்டால் அவர்கள் எப்படியும் அறிவாளி ஆக்கிவிடுவார்கள் என்று மகாராஜா முடிவு செய்தார். அங்கு பலதுறைகள் இருந்தன. உயர்தரமான அந்தக் கலாசாலையில் ஐந்து ஆண்டுகள் தங்கிப் படித்துவிட்டு இளவரசன் திரும்பி வந்தான்.

அவனது உடை, நடை, பாவனைகள் என எல்லாம் மாறியிருந்தன. பளிச்சென்று உடையணியப் பழகியிருந்தான். அழகாக நடப்பது, கைகுலுக்குவது, மரியாதையாய்ப் பேசுவது என்று நிறைய மாற்றங்கள். மகாராஜாவுக்கு ஆனந்தம் தாங்கவில்வைல. முதியோர் சபையில் மகனை நிறுத்தி அவர்கள் அனுமதியுடன் அறியாவளியாக்கப்பட்ட மகனை அரசனாக்க நினைத்தார். பலரும் அவனை அறிவாளி என்றே ஒப்புக் கொண்டனர். பல்கலைக் கழகத்தின் சாதனையைய் பாராட்டினர்.

ஒரு வயதானவர் மட்டும் இளவரசனைச் சோதிக்க நினைத்தார். “என்ன படித்தாய்?” என்றார். “நிறைய, நிறைய… சோதிடம் கூட முறையாக கற்றுத் தந்தார்கள். நீங்கள் சோதிடத்தில் கேள்வி கேட்டால் கூடச்  சொல்வேன்” என்றான். வயதானவர் தமது மோதிரத்தை உள்ளங்கையில் வைத்து மூடிக் கொண்டு, “இது என்ன?” என்றார். இளவரசன் யோசித்தான். ஒரு காகிதத்தை எடுத்து கணக்குப் போட்டான். “உங்கள் கையில் உள்ளது வட்டமானது. நடுவில் ஓட்டையானது. ஒளியுடையது” என்று விடை சொன்னான். வயதானவருக்கு உள்ளூர சந்தோஷம். இருந்தாலும், “அடையாளங்களைச் சொல்கிறாயே ஒழிய அது இன்னதென்று சொல்லக்கூடாதா?” என்றார். “அது எங்கள் பாடத்திட்டத்தில் இல்லை” என்றார் இளவரசன். “யூகித்துச் சொல்” என்றார் வயதானவர். உடனே இளவரசன் “பாடத் திட்டத்தில் இல்லையென்றாலும் என் பொது அறிவை வைத்துச் சொல்லி விடுவேன்.. அது ஒரு வண்டிச் சக்கரம்” என்றான்.

முட்டாள். சர்வகலாசாலை சொல்லிக் கொடுத்ததைச் சரியாகச் சொல்லிவிட்டான். ஆனால் வண்டிச்சக்கரத்தை எவரும் உள்ளங்கையில் ஒளித்து வைக்க முடியாது என்ற சின்ன விஷயம்கூட அந்த மடையனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

முட்டாளையும் படிப்பாளியாக்க முடியும். ஆனால் அறிவாளியாக்க முடியாது.

[size=undefined]“You can educate fools; but you cannot make them wish”.[/size]

நம்மூர் பழமொழி – ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

திருக்குறள் கூறுவது:

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர்

குறள்விளக்கம்: அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்க கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராகக் கருதப்படுவார்கள்.

 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவ மென்ப திழுக்கு

குறள்விளக்கம்: நன்றாக சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.
 
 
http://anjaaan.blogspot.com/2013/12/blog-post_908.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பகுத்தறிவு....?

Post by பானுஷபானா on Tue 30 Sep 2014 - 13:56

அருமையான கதை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பகுத்தறிவு....?

Post by சுறா on Tue 30 Sep 2014 - 15:41

இந்த கதை நம்ம நாட்டில் நிறைய பேர் ஆங்கலம் படித்தால் அறிவு வந்துவிடும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல உதாரணம்.  ஆங்கிலம் என்பது ஒரு மொழி தான் அது அறிவு கிடையாது என்பதை நம் நாட்டில் நிறைய பேர் உணர்வதில்லை. அருமையான கதை.

ஒருமுறை நான் அரபு எமிரேட் சென்ற புதிதில் எனது மேலதிகாரி நண்பர் கார் ஓட்ட பயிற்சி பெற்று முதன் முறையாக இன்னொரு எமிரேட் செல்ல என்னையும் அழைத்தார். நான் அவருடன் சென்றேன். ஷார்ஜாவை நெருங்கியவுடன் புதிய ஓட்டுனராக ஆகியுள்ள எனது மேலதிகாரிக்கு வழி தெரியவில்லை. அவர் நாங்கள் சென்றடைய வேன்டிய இடத்தில் உள்ள நபர்களிடம் தொலைபேசியில் வெகுநேரம் இடம் மற்றும் அடையாளங்களை கேட்டு சென்றுக்கொண்டிருந்தார்.

அந்த வேளையில் இந்த சுறா என்ன செய்தேன் தெரியுமா?  காரை விட்டு இறங்கி ஒரு டாக்சியில் ஏறிக்கொண்டு அவரை எனது டாக்சியை பின் தொடர சொன்னேன். மேலும் போனிலேயே அவருடன் பேசியபடியே நாங்கள் செல்ல வேன்டிய வழியையும் முறைப்படி கற்றுக்கொண்டோம்

எப்பூடி?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பகுத்தறிவு....?

Post by Nisha on Tue 30 Sep 2014 - 15:54

இது அறிவாளித்தனமா சுறாவே?  டாக்சிக்கு எதுக்கு எக்ஸ்றா காசு செலவு செய்யணும்._* _*

நாங்க ஸ்பெயின் போன போது  ஹோட்டலுக்கு போகும் வழி  குழப்பிட்டே இருந்தது. சுவிஸிலிருந்து  ஸ்பெயின்வரை 15 மணி நேரம் வழிகாட்டிய நேவி சாட்டலைட்டும் சிட்டிக்குள் போனதும்  20 கிலோ மீற்றர் தூரத்தை  அடைய பல மணி நேரம் சுத்தி அடிச்சது.

நான் என்ன செய்தேன் தெரியுமா.. என் மகனும் பிரபாவும் தடுக்க தடுக்க  அங்கே ரோந்து சுத்திட்டிருந்த பொலிஸ் காரை கை நீட்டி நிறுத்தி விலாசம் காட்டி வழி கேட்டேன். மொழியும் பிரச்சனை .. அவர்களுக்கு ஆங்கிலம் ஜேர்மன் தெரியல்லை.

அவர்கள் சிரித்து விட்டு அவர்கள் காரை தொடர சொன்னார்கள். ஹோட்டல் பெயர் வரும் வரை  கூட வந்து கை தந்து சிரித்திட்டு போனார்கள்.

அதே டிரிப்பில் போர்த்துக்கல் போனோம். 2000 கிலோ மீற்றர்.  24 மணி நேரம் பயணம். போர்த்துக்கல்  போர்டர் வரை தான் சட்டலைட் வழி காட்டி உதவியது. உள்ளூரில் மக்கர் செய்ய ஆரம்பித்தது. அதிலும் ஒன்வே ரோட்டில் நாங்கள் தப்பாக  போக பொலிஸ் வந்து நிறுத்தியது.

கார் சுவிஸ் கார்.. ரூரிஸ்ட் என்றதும் எங்கே என்ன  என கைகால் மொழியில் சைகையால்  சொல்லியாச்சு. மொழி தெரியல்லை நாங்கள் போக வேண்டிய நண்பியிடம் போன் செய்து பேச சொல்ல அவள் போர்த்துகல் காரி தான். அவள் பேசியது எங்களை அவர்கள் பொலிஸ் வண்டியை பின் தொடர சொல்லிட்டு எங்கள் தோழியை ஒரு இடம் வர சொல்லி வரும் வரை வெயிட் செய்து பை சொல்லிட்டு போனாங்க.. !

இப்ப போன மாதம் பிரான்ஸ் போனப்பவும் இதே வழி தான் பின்பற்றினோம்பா..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பகுத்தறிவு....?

Post by சுறா on Tue 30 Sep 2014 - 15:59

ஓ நீங்க போலீசுகாரனையே வேலை வாங்குறீங்களா? பலே ஆளுப்பா நீங்க


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பகுத்தறிவு....?

Post by Nisha on Tue 30 Sep 2014 - 16:09

சுறா wrote:ஓ நீங்க போலீசுகாரனையே வேலை வாங்குறீங்களா? பலே ஆளுப்பா நீங்க

பின்னே! என் பசங்க எனக்கு வைத்திருக்கும் பெயர் அம்மா லூசு! அவசரலூசு. பயமே இல்லை.

பின்னே என்னப்பா.. விலாசம் தேடுங்க எனில் சும்மா சுத்தி சுத்தி  வார போரவங்க கிட்ட எல்லாம் விசாரித்தால் ஆச்சா... பொலிஸ் காரருக்கும் தபால் காரருக்கும் தெரியாமல் இருக்குமா? அதிலும் பொலிஸ் மாமா எதுக்கு இருக்கார். அப்புறம் பொலிஸ் காரங்க எதுக்கு இருக்காங்களாம்!

இரு வாரம் எங்கள் ஹோட்டலில் ஒரு திருமண விருந்து.. மியூசிக் பொருட்கள் வந்த வண்டியை ரோடோரமாய் நிறுத்தி இருந்ததால் என இரண்டு ரோந்து பொலிஸ்வந்து சொன்னாங்க.. நான் உடனே சிரித்திட்டு கேட்டேன் ஹலோ பிரெண்ஸ் போன வாரம் வேறொரு விழா நடந்தபோது இதே போல் பத்து கார் நின்றுச்சே ! அப்போ ஏன் யாரும் வரல்லை... அதெப்படி எங்க பங்சனுக்கு மட்டும் வரிங்க என.. !

அவங்களும் சிரித்து விட்டு அப்போ ரோட்டில் ஓரமாய் நிறுத்தி  இருந்தாங்க! இப்ப ரோட்டோட  நிறுத்தி இருக்கு என சொல்லிட்டு போயாச்சு.  இல்லாட்டில் பைன்  கட்டணும் தெரியுமா.. !

பிரபாவிடம் இப்படி வந்தாங்க ..சொன்னாங்க.. நான் இப்படி கேட்டேன் என சொன்னேன்.. அவருக்கு ஷாக்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பகுத்தறிவு....?

Post by சுறா on Tue 30 Sep 2014 - 16:17

அட பார்ரா அக்கா படு தைரியசாலிதான்தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பகுத்தறிவு....?

Post by Nisha on Tue 30 Sep 2014 - 16:19

ஆமாமா! ரெமப் ஜாக்கிரதை!

சுறாவே நீங்க வடிவேலுவாகி எத்தனை காலமாச்சுப்பா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பகுத்தறிவு....?

Post by சுறா on Tue 30 Sep 2014 - 16:22

Nisha wrote:ஆமாமா! ரெமப் ஜாக்கிரதை!

சுறாவே நீங்க வடிவேலுவாகி எத்தனை காலமாச்சுப்பா?

ஹே ஹே நான் வடிவேலுவாயீட்டேன். அக்காவே சொல்லிடுச்சி...  here

avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பகுத்தறிவு....?

Post by Nisha on Tue 30 Sep 2014 - 19:43

சகிக்கல்லை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பகுத்தறிவு....?

Post by கவிப்புயல் இனியவன் on Mon 13 Oct 2014 - 13:20

அருமையான கதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: பகுத்தறிவு....?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum