சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Yesterday at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:33

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:14

» விவசாயி ...
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:23

.

பசுமை பாலைவனமாகும் தமிழகம்...சீரழிக்கும் சீமைகருவேல்!

Go down

Sticky பசுமை பாலைவனமாகும் தமிழகம்...சீரழிக்கும் சீமைகருவேல்!

Post by ahmad78 on Thu 2 Oct 2014 - 8:43

பசுமை பாலைவனமாகும் தமிழகம்...சீரழிக்கும் சீமைகருவேல்!வேலியே பயிரை மேயுது’ என்பார்களே அதற்கு மிகச்சரியான உதாரணம் சீமைகருவேல். ஊழல், தீவிரவாதம், எதிரி நாட்டு படையெடுப்பு மட்டுமே ஒரு நாட்டுக்கு மிகவும் ஆபத்தான விஷயம் என்ற கருத்து உங்களுக்கு இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். சீமைகருவேல் மரங்கள் போதும் எவ்வளவு வளமான நாட்டையும் பசுமை பாலைவனமாக்கி விடும். அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு தமிழ்நாடு. இதன் ஆபத்தை உணர்ந்த உலகநாடுகள், தங்கள் பகுதிக்குள் எதிரிகளை நுழைய விடாமல் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறார்களோ அதே உணர்வில்தான் சீமைகருவேலையும் பார்க்கிறார்கள். அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகள் இதை நச்சு தாவரமாக அறிவித்திருக்கின்றன. இவ்வளவு ஏன் நமது அண்டை மாநிலமான கேரளாவில் சீமை கருவேல் முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த மரங்களை முற்றிலுமாக அழித்து, புதிதாக வளராத வகையில் பாதுகாத்து வருகிறார்கள். அப்படியென்னதான் இருக்கிறது இந்த தாவரத்தில்..?

பயிருக்கு வேலியாகவும், விறகு பயன்பாட்டுக்காகவும் 1950 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன சீமைகருவேல் விதைகள். தமிழகத்தில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியவர் முன்னாள் முதல்வர் காமராஜர், அவரது ஆட்சி காலத்தில் தொலைநோக்கு பார்வையில்லாமல் கொண்டுவரப்பட்டது தான் சீமைகருவேல் என்பது கசப்பான உண்மை. மக்கள் சிறிதளவு கொண்டு வந்த விதை, இந்த 64 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் ஆக்கிரமித்து விட்டது. ''தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 25% இடத்தை ஆக்கிரமித்துள்ளது சீமைகருவேல்" என்கிறார்கள் சூழலியல் வல்லுநர்கள். மரம் ஆக்சிஜனை வெளியிட்டு, நிழல் கொடுத்து, பல்லுயிர்கள் வாழும் சூழலை ஏற்படுத்த உதவ வேண்டும். ஆனால், சீமைகருவேல் இதில் எதையும் செய்வதில்லை. மாறாக, அதிக கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பசுமை பாலைவனமாகும் தமிழகம்...சீரழிக்கும் சீமைகருவேல்!

Post by ahmad78 on Thu 2 Oct 2014 - 8:45


அதிக நைட்ரஜன் அமிலத்தை சுரந்து மண்ணை மலடாக்குவதுடன், மண்ணில் உள்ள தீமை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. இதன் ஆழமான வேர்களும், உறுதியான பக்கவேர்களும் மழைநீர் நிலத்திற்குள் செல்வதை தடுக்கின்றன. மரம் 12 அடி உயரம் வரை வளரும். வேர் 175 அடி ஆழம் வரை வளரக் கூடியது. அதனால் தான் மற்ற அனைத்து தாவரங்களை விடவும் அதிக ஆழத்திற்கு சென்று நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது இந்த நச்சுத் தாவரம். மழை இல்லாத காலங்களில் நிலத்தடி நீரையும், காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சு உயிர்வாழும் ஆற்றல் கொண்டது. நிலத்தடி நீரை உறிஞ்சுவதோடு மட்டும் நிற்காமல் நல்ல நீரை உவர்பாக மாற்றிவிடும். நிலத்தடி நீர் உவர்பாக மாறுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
 

இந்த தாவரம் வளரும் இடங்களில் காற்று வெப்பமடைந்து மக்களை வறட்சியான மனநிலைக்கு கொண்டு சென்றுவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இந்த மரங்கள் அதிகளவில் இருக்கின்றன. இந்த மாவட்டங்களின் வறட்சிக்கும், மக்களின் மனநிலைக்கும், தரிசு நிலங்களின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்வதற்கும் இந்த தாவரம் ஒரு முக்கிய காரணம். சமீபகாலமாக, சீமை கருவேல் நச்சு தாவரத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதுடன், விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள் சூழல் ஆர்வலர்கள்.


இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார், சீமை கருவேல் ஒழிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ''இந்த மாவட்டத்தில் இருக்கிற வறட்சிக்கு இந்த தாவரமும் ஒரு காரணம். விவசாயம் குறைஞ்சு போனதால், வாழ்வாதாரத்துக்காக இந்த தாவரங்களை வெட்டி, விறகாகவும், கரியாகவும் விற்றுவருகிறார்கள். இது, இவர்களுக்கான நிரந்தர தீர்வாக இருக்காது என்பதால் முதல் கட்டமாக, விவசாய நிலங்களில் உள்ள சீமைகருவேல் மரங்களை அழித்து, அதை மறுபடியும் விவசாய பூமியாக மாற்றி, விவசாயிகளுக்கு தேவையான பயிற்சிகள், இடுபொருட்கள், விதைகள் கொடுத்து அவர்களை மீண்டும் உழவுத் தொழிலில் ஈடுபட வைக்கிறோம்.

இதன் மூலம் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் மாவட்டத்தில் உள்ள 600 க்கும் மேற்பட்ட குளங்களில் உள்ள சீமைகருவேலை ஒழிக்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மரங்களை வேரோடு அழிப்பதற்கான பணிகள் முடுக்கி விடபட்டுள்ளன. இன்னும் சில ஆண்டுகளில் சீமைகருவேல் இல்லாத மாவட்டமாக ராமநாதபுரம் மாறும்" என்றார்.

ராமநாதபுரம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இந்த நச்சு தாவரத்தை வேரோடு அழிக்கும் முயற்சியில் அரசை மட்டும் எதிர்பார்க்காமல் நாமே களத்தில் இறங்கினால் இன்னும் சில ஆண்டுகளில் சீமை கருவேல் என்னும் சூழலுக்கு எதிரான வில்லனை முற்றிலுமாக ஒழித்துவிட முடியும்.

ஆர்.குமரேசன்

படங்கள்: வீ. சக்தி அருணகிரி
 
விகடன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பசுமை பாலைவனமாகும் தமிழகம்...சீரழிக்கும் சீமைகருவேல்!

Post by நண்பன் on Thu 2 Oct 2014 - 9:36

இப்படி ஒரு மரமா ஆச்சர்யமாக உள்ளது நம்பவே முடியல இயற்கையில் இப்படியும் ஒன்றா அதிர்ச்சி அதிர்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பசுமை பாலைவனமாகும் தமிழகம்...சீரழிக்கும் சீமைகருவேல்!

Post by சுறா on Fri 3 Oct 2014 - 7:25

இந்த பூமி எத்தனையோ கோடி ஆண்டுகள் தான்டி வந்துள்ளது. இன்னும் எவ்வளவோ காலம் போகவேன்டியுள்ளது. அதனால் காலப்போக்கில் பார்த்தால் இவையெல்லாம் ஒன்றுமே இல்லை.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பசுமை பாலைவனமாகும் தமிழகம்...சீரழிக்கும் சீமைகருவேல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum