சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நிறைவேற்று அதிகார முறையை ஜனாதிபதியால் ஒழிக்க முடியாது

Go down

Sticky நிறைவேற்று அதிகார முறையை ஜனாதிபதியால் ஒழிக்க முடியாது

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 18 Nov 2014 - 7:18

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஜனாதிபதியி னால் ஒழிக்க முடியாது. பாராளுமன்றத்திற்கே அந்த அதிகாரம் இருப்பதாக சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அரசயலமைப்பு திருத்தத்திற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்து விட்டதாகக் குறிப்பிட்ட அவர், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கக் கோருவோர் அதனை தெரிவுக் குழுவுக்கு முன்வைக்க வருமாறு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார். ஐ. ம. சு. மு. ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை யகத்தில் நடைபெற்றது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்குமாறு தெரிவிக்கப்படும் கோஷம் வெறும் அரசியல் லாபம் பெறுவதற்காகவே முன்வைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய அமைச்சர், ஜனாதிபதி முறை ஒழிப்பு, அதிகாரப் பகிர்வு, 13 ஆவது திருத்தச் சட்டம் அடங்கலான சகல பிரச்சினை களுக்கும் தீர்வுகாண்பதற்கு தெரிவுக்குழுவே உகந்த இடம் எனவும் சுட்டிக்காட்டினார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காகவே பொதுவேட்பாளரை களமிறக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதற்கு அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும். அரசியலமைப்பு ஜனாதிபதியுடன் தொடர்புபட்டது. ஜனாதிபதி முறையை ஒழிப்பதானால் முழு யாப்பையும் மாற்றி புதிய யாப்பொன்று தயாரிக்க வேண்டும்.
ஜனாதிபதிக்கு பதிலாக வேறு ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் கூட அவரால் ஜனாதிபதி முறையை ஒழிக்க முடியாது. ஜனாதிபதி பதவியிலிருந்து விலக மட்டுமே அவரால் முடியும். ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதி பதி முறையை ஒழிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு மட்டுமே இருக்கிறது. 2/3 பெரும்பான்மையுடன் இதனை மாற்ற முடியும் என்பதோடு உச்ச நீதிமன்றம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக் கோரினால் அதன்படி செய்ய நேரிடும். ஜனாதிபதியாக தெரிவாகும் தனிநபரால் இதனை செய்ய முடியாது.
பொது வேட்பாளரொருவரை கொண்டு வருவதன் நோக்கம் எந்த வகையிலும் சாத்தியமாகாது.  அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதற்காகவே 2013 ல் தெரிவுக் குழு நியமிக்கப்பட்டது. அரசியலமைப்பு திருத்தத்திற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. தெரிவுக் குழுவின் அறிக்கையின் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு முன் சகல கட்சிகளினதும் கருத்துக்கள் பெறப்படும்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கக் கோரும் கட்சிகள் எதுவும் தெரிவுக் குழுவில் அங்கம் பெறவில்லை. இதில் அங்கம் பெறாவிட்டால் எழுத்து மூலமாவது தமது யோசனைகளை முன்வைக்குமாறு கோரினாலும் இதுவரை அவை தமது யோசனைகளை முன்வைக்கவில்லை. வெளியிலிருந்து வெற்றுக் கோஷம் எழுப்புகின்றன. தெரிவுக்குழுவுக்கு வராத கட்சிகளுக்கு இது குறித்து பேச தார்மீக உரிமை கிடையாது.
சகல தரப்பும் இணங்கினால் ஜனாதிபதி முறையை ஒழிக்கலாம். சிலர் ஜனாதிபதி முறையை ஒழிக்காது அதிலுள்ள சில அதிகாரங்களை மட்டும் நீக்குமாறு கோரலாம். வேறு தரப்பினர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதனை எதிர்த்தால் அதனை மாற்ற முடியாது.
தெரிவுக் குழு முன்பாக தமது யோசனை களை முன்வைப்பதற்கு இன்னும் கால அவகாசமிருக்கிறது. குழுவின் முன்னிலை யிலோ எழுத்து மூலமோ தமது யோசனை களை முன்வைக்குமாறு கோருகிறேன். இங்கு பக்க சார்பான கருத்துகளே முன்வைப்பதாக குற்றஞ்சாட்டினாலும் எதிரான யோசனைகளும் முன்வைக்கப்படு கின்றன. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்குமாறு ஆளும் தரப்பு எம்.பி. ஒருவர் யோசனை சமர்ப்பித்துள்ளார்.
ஜனாதிபதி முறையை ஒழிக்கும் உண்மையான நோக்கமிருந்தால் தமது பிரேரணைகளை கட்சிகள் தெரிவுக்குழுவில் முன்வைக்கட்டும். ஆனால் வேறு தேர்தலுக்கான கோசமாகவே அவர்கள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க கோருகின்றனர். தெரிவுக் குழுவுக்கு வருமாறு மீண்டும் த. தே. கூ.வை கோருகிறோம். இவ்வளவு காலமும் ஐ. தே. க. ஜனாதிபதி முறையை ஒழிக்குமாறு கோரவில்லை. ஆனால் தற்பொழுது அது குறித்து குரல் எழுப்புகிறது.
அடுத்து நடைபெற உள்ள பிரதான தேர்தலுக்காக கூட்டுக் கட்சிகளுடன் பேசி வருகிறோம். மலையக கட்சிகள் ஜனாதிபதிக்கான ஆதரவை உறுதி செய்துள்ளன. இடது சாரி கட்சிகளும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. முஸ்லிம் காங்கிரஸ¤டனான பேச்சும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஹெல உருமயவுக்கு சு. க.வின் நிலைப்பாடு எழுத்து மூலம் வழங்கப்பட்டுள்ளது.
எமது வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ என அறிவித்து விட்டோம். எதிர்க் கட்சியின் பொது வேட்பாளர் ‘இன்றல்ல நாளை’ என காலங்கடக்கிறது. பொது வேட்பாளர் தெரிவு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு 3 ஆவது தடவை போட்டியிட முடியாது என ஜே. வி. பி. ஊர்வலம் செல்ல தயாராகிறது. ஆனால் நீதிமன்றம் தனது நிலைப்பாடடை அறிவித்துள்ளதால் ஜே. வி. பி.யின் முயற்சி பயனற்றது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு 3 ஆவது தடவை முடியாது என்பதை மூன்றாவது தடவை வேண்டாம் என கோரியிருக்கலாம். அது குறித்து மக்கள் முடிவு செய்வர் என்றார்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நிறைவேற்று அதிகார முறையை ஜனாதிபதியால் ஒழிக்க முடியாது

Post by Nisha on Tue 18 Nov 2014 - 17:11

கடைசியில் என்ன தான்  சொல்ல வராங்கப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நிறைவேற்று அதிகார முறையை ஜனாதிபதியால் ஒழிக்க முடியாது

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 19 Nov 2014 - 8:07

Nisha wrote:கடைசியில் என்ன தான்  சொல்ல வராங்கப்பா!
மூன்றாம் தடவையாகவும் அவரே வருவதற்கான ஏற்பாடுதான்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நிறைவேற்று அதிகார முறையை ஜனாதிபதியால் ஒழிக்க முடியாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum