சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ரூ. 25கோடி பெறுமதியான அமெரிக்க டொலர் ஒரே நாளில் இலங்கைக்குள் பரிமாற்றம்

Go down

Sticky ரூ. 25கோடி பெறுமதியான அமெரிக்க டொலர் ஒரே நாளில் இலங்கைக்குள் பரிமாற்றம்

Post by நண்பன் on Fri 5 Dec 2014 - 9:36

ரூ. 25கோடி பெறுமதியான அமெரிக்க டொலர் ஒரே நாளில் இலங்கைக்குள் பரிமாற்றம்

இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்கள் நான்கு தடவைகள் இலங்கைக்கு பரிமாறப்பட்டமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. ஒரு நாளில் இவ்வளவு பெருந்தொகையான பணம் யாருக்கு பரிமாறப்பட்டது என்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன தெரிவித்தார்.

இந்தப் பணம் எங்கிருந்து வந்தது? யாருக்குச் சென்றுள்ளது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் கூறினார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் செனவிரட்ன, பொதுவேட்பாளராக களமிறங்கியிருக்கும் மைத்திரிபால சிறிசேனவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளவர்களுக்கு மத்தியில் பரஸ்பர விரோதமான நிலைப்பாடே காணப்படுகிறது. இது ஒரு குழப்பமான கூட்டு.

இவர்களுக்கு பொதுவானதொரு கொள்கை இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையைக் கொண்டுள்ளனர். பொதுவேட்பாளர் ஒவ்வொரு கட்சியுடன் ஒவ்வொரு விதமான ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுகிறார். புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கட்சிகளே பெரும்பாலும் கைச்சாத்திடும். ஆனால் இவர்களின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கட்சிகளைவிட தனிநபர்களே அதிகமாக உள்ளனர்.

தேர்தலில் வெற்றிபெற்றால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை நியமிக்கப்போவதாக மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். குறுகிய காலத்துக்குள் அது சாத்தியப்படாது.

அவ்வாறு செய்வதாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைமாற்றி, அரசியலமைப்பை மாற்றுவதாயின் ஏன் பொதுவேட்பாளராக களமிறங்கி ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நீக்க வேண்டிய தேவை சர்வதேசத்துக்கு மட்டுமே உள்ளது. இதனால் உள்ளூரில் உள்ளவர்களைப் பயன்படுத்தி அதனை நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கூட்டமைப்புக்குள் பிரிவு

சந்திரிக்கா குமாரதுங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை இரகசியமாக வைத்துக்கொள்ளுமாறு அவர் கூட்டமைப்பிடம் கேட்டுள்ளாராம். இதனால் கூட்டமைப்புக்குள்ளும் பிளவு ஏற்படும் நிலை தோன்றியுள்ளது. ஏன் எனில் சிலர் இதனை ஏற்றுக் கொள்ள வில்லை. கூட்டமைப்புடன் கலந்துரையாடிய விடயங்களை கூறாமல் மக்களை ஏமாற்றுவதற்கே அவர்கள் முயற்சிக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ரூ. 25கோடி பெறுமதியான அமெரிக்க டொலர் ஒரே நாளில் இலங்கைக்குள் பரிமாற்றம்

Post by Muthumohamed on Fri 5 Dec 2014 - 21:19

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ரூ. 25கோடி பெறுமதியான அமெரிக்க டொலர் ஒரே நாளில் இலங்கைக்குள் பரிமாற்றம்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 6 Dec 2014 - 9:12

கதை கட்டுகிறார்கள் போல யாரையாவது தூக்கி உள்ள போடுவற்காக அல்லது அரசாங்கத்துக்குள்ளேளேயே அமைச்சர்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள் போல




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ரூ. 25கோடி பெறுமதியான அமெரிக்க டொலர் ஒரே நாளில் இலங்கைக்குள் பரிமாற்றம்

Post by நண்பன் on Sat 6 Dec 2014 - 9:25

நேசமுடன் ஹாசிம் wrote:கதை கட்டுகிறார்கள் போல யாரையாவது தூக்கி உள்ள போடுவற்காக அல்லது அரசாங்கத்துக்குள்ளேளேயே அமைச்சர்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள் போல
அதுதான் உண்மை எல்லாம் மகிந்த மாமாவின் நாடகம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ரூ. 25கோடி பெறுமதியான அமெரிக்க டொலர் ஒரே நாளில் இலங்கைக்குள் பரிமாற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum