சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பேருந்து
by kalainilaa Fri 14 Dec 2018 - 17:01

» மாறாத நட்பு (கலைநிலா கவிதை )
by kalainilaa Fri 14 Dec 2018 - 16:16

» துணை ( கலைநிலா கவிதை)
by kalainilaa Fri 14 Dec 2018 - 16:11

» நிறைவு - கவிதை
by பானுஷபானா Fri 14 Dec 2018 - 15:40

» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே
by பானுஷபானா Thu 13 Dec 2018 - 16:10

» ஒரு கணவனின் வாக்குமூலம்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:47

» சோளத்தில் சாதனை!
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:44

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:43

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:42

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **
by rammalar Fri 7 Dec 2018 - 19:19

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
by rammalar Fri 7 Dec 2018 - 18:47

» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்
by kalainilaa Wed 5 Dec 2018 - 8:58

» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்
by kalainilaa Tue 4 Dec 2018 - 18:08

» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:54

» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:42

» செல்வாக்கு- ஒரு பக்க கதை
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:34

» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)
by kalainilaa Tue 4 Dec 2018 - 16:26

» சூப்பர் ஷாட் - {தினமலர்)
by kalainilaa Tue 4 Dec 2018 - 16:13

» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:
by rammalar Mon 3 Dec 2018 - 20:14

» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு!
by rammalar Mon 3 Dec 2018 - 12:18

» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து
by rammalar Mon 3 Dec 2018 - 12:07

» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு
by rammalar Mon 3 Dec 2018 - 12:06

» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது
by rammalar Mon 3 Dec 2018 - 12:05

» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்
by rammalar Mon 3 Dec 2018 - 12:04

» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய
by rammalar Mon 3 Dec 2018 - 12:00

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Sun 2 Dec 2018 - 16:17

» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்
by rammalar Fri 30 Nov 2018 - 5:38

» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -
by rammalar Fri 30 Nov 2018 - 5:32

» இந்தியாவுக்கு விலக்கு ஏன்? டிரம்ப் விளக்கம்
by பானுஷபானா Wed 28 Nov 2018 - 16:16

» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்
by பானுஷபானா Wed 28 Nov 2018 - 15:34

» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்
by பானுஷபானா Tue 27 Nov 2018 - 14:22

» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்
by Admin Sun 25 Nov 2018 - 13:49

» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்
by Admin Sun 25 Nov 2018 - 13:47

» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி
by rammalar Wed 21 Nov 2018 - 5:06

» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை
by rammalar Wed 21 Nov 2018 - 5:05

.

பாம்பு அறியும் பாம்பின் காது

Go down

Sticky பாம்பு அறியும் பாம்பின் காது

Post by *சம்ஸ் on Fri 16 Jan 2015 - 20:11

இது என்ன பழமொழியையே மாற்றி விட்டார்களே என நீங்கள் திகைக்கலாம்.  ஆமாம். இனி அது மாற்றப்பட வேண்டியதுதான். பாம்பு ஒரு இடத்தில் இருந்து பிறிதொரு இடம் போக அதற்கு கால்கள் தேவை இல்லை. அதனால் அதுக்கு கால் இருந்தால் என்ன இல்லாவிட்டால்தான் என்ன?
ஆனால் பாம்பின் செவி நம் கண்ணுக்கு தென்படுவதும் இல்லை. பாம்பை கட்செவி தமிழ் இலக்கியங்கள் சொல்லும். காரணம் பண்டை தமிழர்கள் பாம்புக்கு கண்ணே செவியாகவும் பணிஆற்றுகிறது என கருதினார்கள்.  ஆனால் இடியேறு உண்ட நாகம் என்று சொல்லும்போது பாம்புக்கு இடியோசை அச்சம் தரும் என்றுதான் முன்னோர்கள் கருதியுள்ளார்கள். அதேபோல் இன்றும் பாம்பாட்டி இசைக்கும் மகுடிக்கு பாம்புகள் மயங்கி ஆடும் என்று  பொதுவாக நம்பப்படுகிறது.  ஆனால் பல அறிவியலார் பாம்பு இசை கேட்கும் திறன் இல்லை, பாம்பாட்டியின் மகுடியின் ஆட்டத்தைக்கண்டு  தற்காப்பு கருதி அதை எதிர்கொள்ளவே தானும் ஆடுகிறது என்கிறார்கள்.
உண்மையில் பாம்புக்கு செவி இருக்கிறதா இல்லையா?
பாம்புகள் தாடை துணைகொண்டு கேட்கின்றன.

அறிவியலார் முதன் முறையாக பாம்புகளுக்கு வெளிப்படையான செவிகளும் செவிப்பறையும் இல்லாவிடினும் அவை எப்படி உட்புற செவிப்பறைகளால் ஒலியை கேட்கின்றன என்று காட்டி இருக்கிறார்கள். அமெரிக்க மற்றும் ஜெர்மன் ஆய்வாளர்கள், பாம்புகளுக்கு இரு வகையான கேட்பு அமைப்புகள் உள்ளன என்றும் அவற்றில், ஒன்று அதன் தாடைகள் என்றும் காட்டி பாம்புகளின் உயிர்த்தளிர்ப்பை பயனுள்ள உள்ளாய்வு செய்துள்ளார்கள்.
கடல்துறை பொறியாளர்களின் கைவினைகளை கடன் பெற்று செய்த  இந்த ஆய்வுப்பணி  இயல்பியல் மீள்பார்வை மடல்கள் வெளியாகும் இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த மடலின் இணை ஆசிரியரான, வாஷ்பான் பல்கலையின் உயிரியல் பேராசிரியர், புரூஸ் யங் (Bruce Young), சொல்லுகிறார், ”பாம்புகளின் உயிரியலைப்பற்றி நாம் எவ்வளவு குறைவாக தெரிந்துள்ளோம் என்பது வியப்பாக உள்ளது. நாம் அரைகுறையாக ஆய்ந்த ஒரு புலத்தில் பணி செய்வது இனிமையாக இருக்கிறது”
”பாம்புகளால் கேட்க இயலாது. அவைகள் தம் இரையை வாசம், சுவை மற்றும் சில இனங்களில் அதன் மூக்கின் அருகே அமைந்த தனித்தன்மையான சூடு-உணர் துளைகளால் தான் உணர்கின்றன” என்றே பல ஆண்டுகளாக கருதிவந்தோம்
ஆனால் இன்று, ஒரு எலி அல்லது மற்ற இரைகள் வைக்கும் ஒவ்வொரு அடியும் பரப்பும் அலைகள் தரை, மற்றும் வளி ஊடாக,  பொய்கை நீரில்  விழும் சொட்டு எழுப்பும் ஒற்றை ஓசையுடன் எழும் திரைகள் போல, பரவுகின்றன. கடலின் அலைகளால் ஒரு கப்பல் அலங்குவது போல் பாம்பின் தாடைகள் தரைமேல் கிடக்கையில் தரை ஊடாக பரவும் இந்த ஒலி அலைகளை உணருகின்றன். பாம்புகளின் கீழ்த்தாடை விளிப்பு உள்ள உருளை போன்றது. எனவே அந்த வகையில் அது ஒரு கப்பலை விட நிரம்ப வேறுபாடனது என சொல்ல இயலாது. ஒரு கப்பல அலங்குவதை அளக்கும் கணக்கியல் சமன்பாடுகளை, அப்படியே மாதிரியாக கொண்டு, ஆய்வாளர்கள், பாம்பின் தாடைகள் தரை அல்லது மணல்வழி பெயரும் அலைகளுக்கு எப்படி அசையும் என்று அறிய  பயன்படுத்தினார்கள். ஒரு கப்பல் மேலும் கீழுமாய் எம்புவது, தள்ளாடுவது, (சிக்கிமுக்கி போல்) முன்னும் பின்னும் அசைவது போன்ற அறுவகை திசைகளில் ஆட்டம் காண்பது போல் பாம்பின் தாடையும் அசையுமாம். எப்படி  ஆழ்கடலில் கப்பல் மிக நிலையாக பயணிக்கிறது அதே போல் பாம்புகளும் ஓசைகளை துல்லியமாக உணர மணிலில் புதைந்து கொள்கின்றன. அப்படி புதையுண்டால் தன் தாடை எவ்வேறு வகையாக அசைகிறது என்பதை பாம்பால் உணர இயலும்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பாம்பு அறியும் பாம்பின் காது

Post by *சம்ஸ் on Fri 16 Jan 2015 - 20:12

மூளைக்கு அனுப்புகை:
பாம்பின் தாடையால் ஒரு ஓசை உணரப்பட்டால், அது அதன் உட்செவிக்கு பயணிக்க, அந்த அறிகுறியை நரம்புகள் மூளைக்கு அனுப்புகின்றன. தாடைகளாலும் உட்செவிகளாலும் (மீன், மற்றும் ஊர்வனவற்றுக்கும் இருப்பதுபோல்) கேட்பதால் தமது தேவைக்காகவே பாம்புகள் கேட்பதற்கு என இரண்டாம் வழியை வளர்த்து கொண்டுள்ளன. (By hearing through their jaw bone and through a traditional ear, snakes essentially evolved a second way to hear, say the researchers.)
மாந்தரும்  இந்த திறமையின் சற்று கரடான ஒரு படிவம் பெற்றுள்ளார்கள். ஒரு தூண்டப்பட்ட  கவையை  நம் காதருகே காற்றில் வைத்து கேட்டால் அது மங்கிய ஒலியாக கேட்கும். அதே கவையை தூண்டிவிட்டு நம் செவிமடலின் பின்புறம் உள்ள எலும்பின் அடிப்புறம் வைத்து கேட்டால் ஒலி மிக வலுவாக கேட்கும். ஆனால். மனிதர்களின் தாடை ஒரு முழுமையான எலும்பாக இருக்க, பாம்புகளுக்கு இரண்டு தாடைகள் உள்ளன. இவை பாம்புகள் தம்மைவிட அளவில் பெரிதான இரையை விழுங்கிட இயலுவதோடு ஓசைகளையும் ஸ்டிரியோவாக கேட்கவும் உதவுகின்றன
இந்த ஆராய்ச்சியில் பங்குகொள்ளாத மேரிலாந்து பல்கலையின் உயிரியலாரான, பேராசிரியர் காத்தரின் கார் (Catherine Carr) சொல்லுகிறார்: ”இந்த ஆய்வு சுவையானது. மண்டை ஓட்டின் ஊடாக ஒலிப்பரவலதான், முதன்முறை தோன்றிய தரைவாழ் தண்டுவடத்து உயிரினங்கள் கேட்கும் முறையாக இருந்து இருக்கும்.”
நன்றி தமிழாக்கம்: வேந்தன் அரசு
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பாம்பு அறியும் பாம்பின் காது

Post by ahmad78 on Sun 18 Jan 2015 - 8:37

பாம்பு பற்றிய தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பாம்பு அறியும் பாம்பின் காது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum