சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பாராளுமன்றத்தில் 23 மணித்தியால உண்ணாவிரத போராட்டம் முடிவு

Go down

Sticky பாராளுமன்றத்தில் 23 மணித்தியால உண்ணாவிரத போராட்டம் முடிவு

Post by நண்பன் on Wed 22 Apr 2015 - 8:25

பாராளுமன்றத்தில் 23 மணித்தியால உண்ணாவிரத போராட்டம் முடிவு
சபாநாயகரின் அறிவிப்பையடுத்து கைவிட்டனர்: மீண்டும் சூடான விவாதம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று காலை பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பித்ததுடன் முடிவுக்கு வந்தது. நேற்றுமுன்தினம் காலை 10.30 மணிக்கு ஆரம்பமான இந்த உண்ணாவிரதப் போராட்டம் சுமார் 23 மணித்தியாலங்களின் பின்னர் நேற்றுக் காலை 9.30 மணிக்கு முடிவுக்கு வந்தது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக் குழுவுக்கு அழைக்காமல் ஆணைக்குழு அதிகாரிகள் அவருடைய வீட்டுக்குச் சென்று வாக்குமூலத்தைப் பதிவு செய்வதாக நீதி அமைச்சர் தனக்கு அறிவித்திருப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் அறிவித்தார். முன்னாள் ஜனாதிபதிக்கு இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை விடுத்திருந்த விவகாரத்தால் பாராளுமன் றத்தின் சபை நடவடிக்கைகளுக்கு நேற்று இரண்டாவது நாளாகவும் குழப்பம் ஏற்பட்டது.
பாராளுமன்றம் நேற்று 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. முன்னாள் ஜனாதிபதியை இலஞ்ச மோசடி ஆணைக்குழுவுக்கு அழைத்தமைக்கு எதிராக ஐ.ம.சு.மு எம்பிக்கள் நேற்றுமுன்தினம் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்து நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் சபையின் நடுவில் அமர்ந்து தமது எதிர்ப்பைத்
தெரிவித்திருந்தனர். நேற்று பாராளுமன்றம் கூடியபோதும் ஐ.ம.சு.மு எம்பிக்கள் சபையின் நடுவில் அமர்ந்திருந்தனர்.
செங்கோல் கொண்டுவரப்படும்போது வழிவிட்ட அவர்கள் தொடர்ந்தும் சபை நடுவில் நின்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர். சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு வழிவகுக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களை தமது ஆசனங்களில் அமருமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டதுடன் இந்த விடயம் தொடர்பில் தீர்ப்பை அறிவிப்பதாகவும் கூறினார். இதற்கு அமைய ஐ.ம.சு.மு எம்பிக்கள் ஆசனங்களில் சென்று அமர்ந்தனர்.
சபாநாயகர் தீர்ப்பை அறிவித்ததைத் தொடர்ந்து ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
முற்பகல் 10.30 மணிவரை ஆளும் தரப்பு உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப் பினர்களும் மாறிமாறி கருத்துக்களைத் தெரிவித்தனர்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஐ.ம.சு.மு எம்பிக்களின் போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்பிக்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பில் அவர் கூறிய கருத்தையடுத்து ஐ.ம.சு.மு எம்பிக்கள் சபை நடுவில் வந்து மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கருத்தை மீளப்பெற்றுக்கொள்ளவேண்டும் என அவர்கள் கோரிக்கைவிடுத்ததுடன், அவ்வாறு மீளப்பெறும்வரை தாம் சபைநடுவிலிருந்து விலகப்போவதில் லையென்றும் கூறினர். சபை நடவடிக் கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாத நிலையில் 10.40 மணியளவில் சபை நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதுடன், கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
10.40 மணிக்கு இடைநிறுத்தப்பட்ட பாராளுமன்றம் மீண்டும் 11.45 மணிக்கு கூடியது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக் காமல் ஆணைக்குழு அதிகாரிகள் அவரு டைய வீட்டுக்குச் சென்று வாக்கு மூலத்தைப் பதிவுசெய்வதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என நீதியமைச்சர் கூறியிருப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
முன்னதாக விமல் வீரவன்ச கருத்துரைக்கையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலை வருக்குத் தெரியாமலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக விசாரணை நடத்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியல்ல
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் அல்ல. அவருக்குப் பாராளுமன்றத்தின் சலுகைகளை வழங்க முடியாது.
பாராளுமன்ற சிறப்புரிமையும் அவருக்குக் கிடையாது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ
தேர்தல் நடைபெறுகையில் வேறு நபர்களுக்கு பணமோ கடனோ பொறுப்போ, தொழிலோ வழங்குவது இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் தவறாகும். அதனடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum