சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

Sticky தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Sat 11 Jul 2015 - 12:50

First topic message reminder :

  
மார்ச் - 2013-ல் மனசு தளத்தில் ஆரம்பித்து 80 பகுதிகளாக பதிந்த 'கலையாத கனவுகள்' என்ற எனது முதல் தொடர்கதையை இங்கு பதிகிறேன். தினந்தோறும் அல்லது வாரத்தில் ஆறு பகுதிகள் (ஒரே நாளில் இரண்டு பகுதிகள்) என்ற கணக்கில் பதியலாம் என்று நினைக்கிறேன். இது எனது முதல் தொடர்கதை... இதில் நிறையைவிட குறைகள் நிறைய இருக்கலாம்... லாம் என்ன இருக்கும். எனவே நிஷா அக்கா (முன்பு படித்திருந்தாலும்) உள்ளிட்ட அனைவரும் தங்கள் உண்மையான கருத்துக்களை எனக்குச் சொல்லுங்கள்... என்னை நானே பட்டை தீட்டிக்கொள்ள உதவும். வேரும் விழுதுகளைத்தான் நிஷா அக்கா பதியச் சொன்னார். பானு அக்கா கூட கேட்டிருந்தார். ஒரு சில காரணங்களால் இங்கு பதியவில்லை. ஆனால் இதைத் தொடர்ந்து அதையும் பதிவேன். 
நன்றி.

நட்புடன்...,
சே.குமார்.                      
   என்னை எழுத்தாளனாக ஆக்கிப் பார்த்து... எனது கதைகளைப் படித்து நிறை குறைகளை எடுத்துச் சொல்லி... இன்னும் என்னை எழுதத் தூண்டும் எனது கல்வித்தந்தை பேராசிரியர். மு.பழனி இராகுலதாசனுக்கும் என் கதை பத்திரிக்கைகளில் வந்தால் படிக்கத் தெரியாவிட்டாலும் என் அப்பா எழுதிய கதை என்று புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு வீதியெங்கும் விளம்பரம் செய்யும் என் செல்ல மகளுக்கும் இக்கதையை சமர்ப்பிக்கிறேன்....
*****************

அத்தியாயம்_7 : அதிர்ச்சி!
அத்தியாயம்_8 : மொட்டுக்கள் மலருமா?
அத்தியாயம்_9 : கோபம் கொள்ளும் மனம்!
அத்தியாயம்_10 : நெஞ்சுக்குள் காதல் விதை!
அத்தியாயம்_11 : ஊடலுக்குப்பின் நட்பு!
அத்தியாயம்_12 : சண்டை ஆரம்பம்
அத்தியாயம்_13 : தீர்ப்புக்கள் திருத்தப்படுமா?
அத்தியாயம்_14 : பதறும் பாவை
அத்தியாயம்_15 : வாடகை அம்மா
[url=http://www.chenaitamilulaa.net/t50220p121-topic#468857]அத்தியாயம்_16 : மீண்டும் ஊடல்[/url]
அத்தியாயம்_17 : மீண்டும் கூடல்

Spoiler:

 1.   படிப்பே பிரதானம்
 1996-ஆம் வருடம்...

மாடு,ஆடு, நாய், கோழிகளின் சத்தத்துடன் அழகான கிராமத்துக் காலைப் பொழுது...

"என்னடா குட்டி போட்ட நாயாட்டம் சுத்தி சுத்தி வாறே..."

"இன்னைக்கு ரிசல்ட் வருதுல்லம்மா... அதான் பயமா இருக்கு"

"என்னடா பயம் வேண்டிக்கெடக்கு... பாஸ் பண்ணிருவல்ல... ஒங்கப்பன் போனதுக்கு அப்பறம் பாலு யாவாரம் பாத்துத்தான் ஒங்கள படிக்க வக்கிறேன்... மூத்தவன் குடும்ப சூழ்நிலையால படிக்க முடியல... அக்கா படிச்சா... பொட்டபுள்ளய காலகாலத்துல கரை சேக்குற காரியத்தை பாக்காம படிக்க வச்சி அழகு பாக்குறியோன்னு அங்காளி பங்காளிக சத்தம் போட்டதால படிப்ப நிப்பாட்டி வீட்டுல இருக்க வச்சிட்டேன். நீயாவது நல்லா படிக்கணுங்கிறது என்னோட கனவுடா... அதுல மட்டும் மண் அள்ளிப் போட்டுறாதேடா..."

"ஐய்யோ அம்மா... ஆ...ஊன்னா புராணம் வாசிக்க ஆரம்பிச்சிருவே..."

"ஆமாடா... நாஞ் சொல்றது ஒனக்கு புராணமாத்தான்டா இருக்கும்... காலேசு படிக்கப் போறமுன்னு தெனாவெட்டு வந்திருச்சா..."

"அதெல்லாம் இல்லம்மா... நல்ல மார்க் வாங்கணுமேன்னு கவலையா இருக்கும்மா... நீங்க வேற தேவையில்லாம பேசி டென்சனாக்கிட்டிங்க..."

"நா... பேசுற ஒங்களுக்கு தேவையில்லாததுதான்... நாயி படிச்சா நாளைக்கு ஒம் பொண்டாட்டி புள்ள மதிக்கும்... இல்லயின்னா கேவலந்தான் படணும்... எனக்கா நாளக்கி சம்பாதிச்சு போடப்போறே... எங்கிட்டு கெடக்கே எடுபட்ட சிறுக்கின்னு கூட கேக்குறியோ இல்லையோ.... யாரு கண்டா... சரி சரி கஞ்சிய குடிச்சிட்டு சித்தம் போக்கு செவம் போக்குன்னு சுத்தி வா... எனக்கு வேல கெடக்கு... ஒனக்கு கஞ்சிய ஊத்திட்டு நா போயி மாடுகளை அவுத்து விட்டிட்டு வாறேன்..."

"சரிம்மா..."

---

இப்ப இருப்பது போல் இணையதள வசதி அவ்வளவு பிரபலமாகவில்லை. தேர்வு முடிவுகள் எல்லாம் நாளிதழ்கள் மூலமாகத்தான் அறிய வேண்டும். மதியம் இரண்டு மணிக்கெல்லாம் மாலைமலர் சிறப்புப் பதிவில் முடிவு வந்துவிடும் என்பதால் முதல் நாளே கருணாநிதி அண்ணன் பெட்டிக்கடையில் சொல்லி வைத்திருந்தான். இருந்தாலும் இருப்புக் கொள்ளாமல் ஒரு மணிக்கெல்லாம் சைக்கிளில் தேவகோட்டை நோக்கி விரையலானான்.

ரிசல்ட் வந்து மார்க் சீட்டும் வாங்கியாச்சு... முன்னூற்றி அறுபது மார்க் வாங்கியிருந்தான். விவரம் தெரிந்த நண்பர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சாத்தான் நல்லது என்று சொல்லி அவனையும் அதற்கே அப்ளிகேசன் போடு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்கு சிலவாகும் என்றும் சொன்னதால் அம்மாகிட்ட கேட்டுத்தாண்டா சொல்லணும் என்று சொல்லிவிட்டான்.

"அம்மா... என் பிரண்டெல்லாம் கம்ப்யூட்டர் சயின்ஸ்ல சேரப் போறாங்களாம்."

"என்ன பூட்டரோ படி... வேணாங்கல... நாலு பேருமாதிரி நீ நல்லா இருக்கணும்... அதுவும் ஒம்மாமனுக்கு முன்னால நாலெழுத்து படிச்சு உசந்து நிக்கணும்... இந்த ஸ்கூலுல சேக்கப் போகும்போது படிச்சவன் அவந்தான்னு ஒதவி கேக்கப் போனா வேலயிருக்குன்னு சொல்லி வரமாட்டேனுட்டான்... அன்னைக்கு நா ஒன்னய குறுக்கால நடந்து கூட்டிக்கிட்டு போயி கஷ்டப்பட்டு சேர்த்தேன்... அத மறந்துறாத... அதுதான் முக்கியம்..."

"படிப்பேம்மா... ஆனா கம்ப்யூட்டர் படிப்புக்கு அதிகம் செலவாகுமாம்..."

"எம்புட்டாம்... கூடையிலயா கேக்கப்போறாங்க..."

"இல்ல நம்ம சரவணன் அக்கா படிக்கிறாங்க... அவங்க சொன்னாங்க ஒரு செமஸ்டருக்கு ஆறாயிரத்துக்கு மேல கொடுக்க வேண்டியிருக்குமாம்... "

"வருசத்துக்கா...?"

"வருசத்துக்கு ரெண்டு செமஸ்டராம்... பன்னெண்டாயிரம்... அப்புறம் மத்த செலவு..."

"அம்புட்டுக்காசுக்கு ஆத்தா நா எங்கய்யா போவேன்... குருவி சேக்கிறமாதிரி சீதை கல்யாணத்துக்குத்தான் சேத்துக்கிட்டு வாறேன். அதை எடுத்துக் கொடுத்துப்புட்டா நீ படிச்சு முடிக்கிறவரைக்கும் அவள கரை சேக்காம இருக்க முடியாதேய்யா... அண்ணங்கிட்ட கேளு... நாளக்கி சரவணன் வீட்டுக்கு போகும் போது போன்ல அண்ணன கூப்பிட்டு விவரம் சொல்லு... அவன் என்ன சொல்றான்னு கேக்கலாம்...ம்... சரியா..."

"ம்..."

----

"டேய் உங்கண்ணன்கிட்ட அம்மா பேச சொன்னாங்கன்னாய்... பேசுடா"

"வேணான்டா... அதையும் வீணாவுல செரமப்படுத்திக்கிட்டு... பேசாம பிஸிக்ஸ் சேர்ந்திடலாமுன்னு நினைக்கிறேன்... அது போதுன்டா..."

"சரி... உனக்கு எது சரியின்னு படுதோ அதை செய்யிடா..."

“ம்... குடும்ப சூழலையும் பாக்கணுமில்ல... அக்காவுக்கு எப்ப வேணுமின்னாலும் கல்யாணம் வைக்கலாம்...”

"ம்.... சரி... அப்புறம் நாளக்கி காலேசுல அப்ளிகேசன் கொடுக்கிறாங்களாம்... காலயில பத்து மணிக்கெல்லாம் அறிவு வரச் சொல்லியிருக்கான்... அவங்க அப்பா சொன்னாராம்..."

அறிவு அப்பா காலேசு ஆபீஸ்லதான் வேலை செய்யிறார். அதனால அவன் மூலமா நினைக்கிற குரூப் வாங்கிரலாமுன்னு சொல்லியிருந்தான்.

"சரிடா... எங்க வரணும்?"

"கரெக்டா 9.45க்கு காலேசு எண்ட்ரண்ஸ்க்கிட்ட வந்திடு..."

"சரிடா"

"சீக்கிரமா வந்தா செம்மேரிசுக்கு எதிர்த்தாப்புல இருக்க கடைக்கிட்ட நில்லு. நாங்க வந்திடுறோம்..."

"ம்..."

---
மறுநாள் காலை 10 மணி...

முன்னதாகவே செம்மேரிசுக்கு எதிர்த்த டீக்கடையில் நிற்க, நண்பர்கள் ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர் எல்லாரும் வந்ததும் சைக்கிள் மீண்டும் கிளம்பி செம்மேரிசை ஒட்டியிருக்கும் ரோட்டில் திரும்ப ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி நுழைவு வாயில் வளைவும் அதன் அருகில் இருந்த கல்லறையும் வரவேற்க சைக்கிளை மிதித்தனர்.

தன் வாழ்வின் புதிய அத்தியாயம் இங்கு ஆரம்பமாகப் போகிறது என்பதை அறியாமல் கல்லூரி நோக்கி நண்பர்களுடன் பயணித்தான் கதையின் நாயகன் ராம்கி என்ற ராமகிருஷ்ணன்.

-தொடரும்...
****************************
-'பரிவை' சே.குமார்.


Last edited by சே.குமார் on Thu 24 Sep 2015 - 16:22; edited 1 time in total
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down


Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Sun 2 Aug 2015 - 6:32

தொடர்கதை : கலையாத கனவுகள்
9. கோபம் கொள்ளும் மனம்முன்கதைச் சுருக்கம்.
தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழும் கிராமத்து ஏழை மாணவன் ராம்கி கல்லூரியில் சேர்கிறான். அங்கு மாணவி புவனாவின் அறிமுகம் கிடைக்கிறது. நண்பர்கள் காதல் என்று ஏற்றிவிடுகிறார்கள். அவள் கல்லூரி ரவுடி வைரவன் தங்கை என்று தெரிய வருகிறது. இதற்கிடையே ராம்கியின் அக்காவுக்கு பிடிக்காத மாமா மகன் ரவுடி முத்துராசுக்கு அவளைக் கட்டி வைக்க அம்மா முடிவு செய்கிறாள். புவனா அவனை அடிக்கடி எதேச்சையாக சந்திக்கிறாள். ஆனந்தவிகடனில் புவனாவின் கவிதை வந்திருப்பதால் அதை வாங்க முடிவு செய்கிறான்.

இனி...
"மாப்ளே... நேர கருணாநிதி அண்ணன் பெட்டிக்கடை போ..." என்றான் ராம்கி.
"எதுக்குடா..." - பழனி.
"அதான் மத்தியானமே சொன்னேன்னுல்ல... ஆனந்த விகடன் வாங்கணுமின்னு"
"அதுல என்னடா அப்படி வந்திருக்கு.."
"வா... புத்தகத்தை வாங்கி என்ன இருக்குன்னு காட்டுறேன்..."
"ம்..."
புத்தகத்தை வாங்கி பரபரவெனப் பிரித்தான். கவிதைகள் வெளியாகியிருந்த பக்கத்தில் கண்களை மேயவிட்டான். புவனா பேர் இருக்குதான்னு தேடினான். பேரே இல்லை... சை... எதுக்கு அவ பொய் சொல்லணும் மனசு வலித்தது. அவனது ஆவல் சப்பென்று போக முகத்தில் இருந்த சந்தோஷம் மின்சாரம் போன திரையரங்கமாக இருள் அப்பிக்கொண்டது.
"ஏய்... என்னடா ஆச்சு... சந்தோஷமா வந்தே... சப்புன்னு ஆயிட்டே..."
"ஒண்ணுமில்ல... சரி வா போலாம்..."
"இதுல என்ன இருக்கு... எதுக்கு வாங்கினே..."
"சும்மாதான்... வாடா..."
"நீ போ... நான் வரல... என்கிட்ட மறைக்கிற அளவுக்கு முக்கியமான விசயம் உன்கிட்ட இருக்குன்னா அப்புறம் உன்கூட நான் எதுக்கு... நீ போயிக்க..."
"டேய்... எதுக்குடா கோபப்படுறே... அவ கவிதை வந்திருக்குன்னு சொன்னா அதான் பாக்கலாம்ன்னு வாங்கினேன்..."
"எவ...?"
"அதான்டா புவனா..."
"ஓ... இம்புட்டுத்தூரம் வந்தாச்சா... எங்ககிட்ட அவ ஒண்ணும் சொல்லலைன்னு சொன்னே..."
"எல்லார்கிட்டயும் இத சொன்னா அவ லவ் பண்றா அது இதுன்னு எதாவது சொல்லுவாங்க... சும்மா பேசினதுக்கு கதை கட்டுவாங்க... அதான்..."
"சரி சும்மா பேசினே... சரி.... அவ சொன்னதை நம்பி புத்தகம் வாங்குற அளவுக்கு வந்திருக்கே... அப்புறம் காதல் இல்லாம் என்ன இது..."
"அதெல்லாம் இல்லடா.. சும்மா பிரண்ட்லியாத்தான் வாங்கிப் பார்த்தேன்..."
"சும்மா சொல்லி அவ உன்னைய டெஸ்ட் பண்ணிப் பாத்திருக்கா... நீ நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு புத்தகத்தை வாங்கிட்டே..."
"பிரண்டோட எழுத்துன்னா வாங்கிப் பார்க்கச் சொல்லுமுல்ல அப்படித்தாண்டா வாங்கினேன்..."
"சரி... மாப்ளே.... எதா இருந்தாலும் யோசிச்சு இறங்கு... அந்த சாதிக்காரனுவா கொலை வரைக்கும் போவாய்ங்க... நமக்கு அதெல்லாம் சரிப்படாது அம்புட்டுத்தான்... நீ போ நான் சரவணன் வீட்டு வரைக்கும் பொயிட்டு வாறேன்..." என்றபடி சைக்கிளைத் திருப்பினான்.
அடுத்த நாள் கல்லூரி மரத்தடியில் சைக்கிளை நிறுத்தியவன் எதேச்சையாக திரும்ப, புவனா தோழிகளுடன் வகுப்பறை நோக்கி போய்க் கொண்டிருந்தாள். அவனைக் கடக்கும் போது புன்னகைக்க ஆனந்த விகடன் வருத்தத்தில் திரும்பிக்கொண்டான். 
"அலோ" பின்னால் குரல் கேட்டு திரும்பினான். புவனா அருகில் நின்றாள். பேசாமல் நின்றான்.
"தெரிஞ்சவங்கங்கிறதாலதான் சிரிச்சேன்... சும்மா எல்லாரையும் பார்த்து சிரிக்க நான் ஒண்ணும் பைத்தியமில்லை... பேசாம போறதுன்னா போங்க... திரும்பிக்கிறீங்க..." கோபமாகக் கேட்டாள்.
"நீங்க எதுக்குங்க எங்கிட்ட பொய் சொன்னீங்க...?"
"என்ன பொய்... எப்பச் சொன்னேன்..."
"அது சரி... ஆனந்த விகடன்ல கவிதை வந்திருக்குன்னு சொன்னீங்க... இந்தா இருக்கு இதுல எங்கங்க வந்திருக்கு?" கோபமாக புத்தகத்தை அவளிடம் நீட்டினான்.
"இதுக்குத்தான் இம்புட்டா... சரி நேத்து நான் சொன்னப்போ வேண்டா வெறுப்பாக் கேட்டீங்க.... என்ன கவிதை... என்ன பேர்ல வந்திருக்குன்னு கேட்கணுமின்னு தோணலை உங்களுக்கு... எங்க எங்க அண்ணனோ அவனோட பிரண்ட்ஸோ வந்துருவாங்கன்னு பயந்து போயி நின்னீங்க... அப்புறம் புக்க வாங்கி தேடிட்டு இல்லைன்னா நான் என்ன செய்யிறது..." என்றபடி புத்தகத்தைப் பிரித்து "இந்தாங்க வாழ்க்கைப் பயணம்ன்னு இருக்குல்ல அதைப் படிங்க..." என்று அவனிடம் திருப்பி நீட்டினாள்.
வாங்கியவன் முதலில் பேரைப் பார்த்தான் 'கவிதைப்பிரியா'ன்னு இருந்தது. கவிதையை வாசித்தவன் இப்படியெல்லாம் எழுத முடியுமா என்று வியந்தான். 
"இதுல கவிதைப்பிரியான்னு...." மெதுவாக இழுத்தான்.
"நாந்தான்... சும்மா புனைப்பெயர் வச்சி எழுதுறேன்... அப்புறம் எங்கிட்ட பேசுறதுனால எங்க அண்ணன் ஒண்ணும் கோவிச்சுக்க மாட்டான். என்னைப் பற்றி அவனுக்கு நல்லாத் தெரியும்... பயப்படாதீங்க.. ஓகே பார்க்கலாம்... வாறேன்..." என்றபடி வகுப்பறை நோக்கி நடந்தாள்.
ராம்கி மீண்டும் அந்தக் கவிதையை வாசித்துப் பார்த்து கவிதைப்பிரியாவை ரசித்தான். சைக்கிள் கேரியரில் இருந்து நோட்டையும் டிபன் பாக்ஸையும் எடுத்துக் கொண்டு வகுப்பிற்கு கிளம்ப அவனுக்கு அருகில் 'சர்ர்ரென்று...' தனது யமாஹாவை கொண்டு வந்து நிறுத்தினான் வைரவன்.
-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Sun 2 Aug 2015 - 6:36

கமாலுதீன் wrote:கலையாத கனவுகள் எட்டு அத்தியாயங்களையும் படித்துவிட்டேன். ராம்கி வீட்டு குடும்ப நிகழ்வுகள் மற்றும் கல்லூரியில் காதல் என இருவேறு சூழல்களில் கதை அருமையாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. இரண்டு சூழல்களிலும் நிகழ்வுகள் அத்தியாயத்திற்கு அத்தியாயம் மிகவும் சுவரஸ்யமாகவும் எதிர்பார்ப்புடனும் செல்கிறது. பாரட்டுக்கள் குமார்.

கருத்துக்கு ரொம்ப நன்றி கமாலுதீன்..
தொடர்ந்து வாசியுங்கள்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by *சம்ஸ் on Sun 2 Aug 2015 - 11:43

குடும்ப சூழல் கல்லூரி காதல் கலையாத கனவுகள் என்று சிறப்பான தலைப்புடன் சுவரசியமாக செல்கிறது கதை.இக் கதை படிக்கும் போது கண்முன்னே நடப்பது போன்று உணர்கிறேன். அனைத்து அத்தியாயங்களும் கதையின் எழுத்து நடைமுறை சிறப்போ சிறப்பு!

ஒவ்வொரு பாகங்களும் கருத்துக்கள் தாங்கி சிறப்பாக எழுதியுள்ளீர்கள் அடுத்த பாகம் படிக்க ஆர்வத்துடன் ஏக்கி தவிக்கிறது மனம்.


Last edited by *சம்ஸ் on Thu 6 Aug 2015 - 7:41; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Thu 6 Aug 2015 - 5:58

தொடர்கதை : கலையாத கனவுகள்
10. நெஞ்சுக்குள் காதல் விதைமுன்கதைச் சுருக்கம்.

தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழும் கிராமத்து ஏழை மாணவன் ராம்கி கல்லூரியில் சேர்கிறான். அங்கு மாணவி புவனாவின் அறிமுகம் கிடைக்கிறது. நண்பர்கள் காதல் என்று ஏற்றிவிடுகிறார்கள். அவள் கல்லூரி ரவுடி வைரவன் தங்கை என்று தெரிய வருகிறது. இதற்கிடையே ராம்கியின் அக்காவுக்கு பிடிக்காத மாமா மகன் ரவுடி முத்துராசுக்கு அவளைக் கட்டி வைக்க அம்மா முடிவு செய்கிறாள். புவனா அவனை அடிக்கடி எதேச்சையாக சந்திக்கிறாள். ஆனந்தவிகடனில் புவனாவின் கவிதை வந்திருப்பதால் அதை வாங்கி அவளது பெயரில்லாததால் அவளிடம் கோப்ம் கொள்கிறான். அவள் புனைப்பெயரில் எழுதுவதாக சொல்லிச் செல்ல, அவனருகில் புவனாவின் அண்ணனும் கல்லூரி ரவுடியுமான வைரவன் வந்து வண்டியை நிறுத்துகிறான். 

வைரவனைப் பார்த்து மிடறு விழுங்கினான் ராம்கி.


"என்னடா ராம்கி... படிப்பெல்லாம் எப்படிப் போகுது?"


"நல்லாப் போகுதுண்ணே... ரொம்ப நாளா உங்களைப் பார்க்கவே முடியல..."


"நான் இங்கதான் இருக்கேன் எங்க போறேன்... நீ படிப்பாளி... பொண்ணுங்க எல்லாம் உன்னோட பேச காத்திருக்கும் போது நா எங்க உன் கண்ணுக்குத் தெரியப் போறேன்..."


"அதெல்லாம் இல்லண்ணே... எங்க கிளாஸ் பொண்ணுங்ககிட்டக்கூட பேச மாட்டேன்... என்னைப் போயி..."


"எல்லாந் தெரியுண்டா... பர்ஸ்ட் இயர்ல ஒரு பொண்ணு... அது பேரு கூட... ரமணா... சேச்சே... புவனாவாமே... அடிக்கடி பேசுறியாம்... பசங்க சொன்னாங்க..."


"அண்ணே... அதெல்லாம் இல்ல... காரைக்குடியில கட்டுரைப் போட்டி இருக்குன்னு தமிழய்யா சொன்னதால ரெண்டு பேரும் பேச நேர்ந்தது... அம்புட்டுத்தான் மத்தபடி அவங்ககிட்ட பேசுறதுக்கு நான் காரணமெல்லாம் தேடிப் போகல... அது போக அவங்க உங்க தங்கச்சிங்கிறதும் எனக்குத் தெரியும்...." பேச்சை நிறுத்தினான்.


"ஹா...ஹா... அதெல்லாம் தெரியுமா..." என்றபடி தோளில் கைபோட்டு "இங்க பாரு ராம்கி அவளைப் பற்றி எனக்குத் தெரியும் எல்லார்க்கிட்டயும் சோசியலாப் பழகுவா... ஆனா நெருப்பு... எங்க ஜாதிப் பொண்ணுங்களுக்கே இருக்க தைரியம் அதிகம்... அதனால அவளைச் சந்தேகப்படலை... அதே மாதிரி நீயும் கஷ்டப்படுற குடும்பத்துல இருந்து வந்திருக்கேன்னு தெரியும்... எதோ உன்மேல எனக்கு தனியா பிரியம் இருக்கு... உன்னப் பத்தியும் தெரியும். இருந்தாலும் அடிக்கடி ரெண்டு பேரும் பேசினா கதை கட்டிவிட நிறையப் பேரு இருப்பாங்க... எந்தங்கச்சி என்னதான் போல்டானவளா இருந்தாலும் அவளும் பொண்ணுதானே நாளைக்கு அவ படிப்பு பாதிக்கப்படக்கூடாது... என்ன சொல்றது புரியுதா... பிரண்ட்லியா பேசுங்க.... எங்க வீட்ல வந்து பேசிக்கிட்டு இரு... வெளியிடங்கல்லயும் காலேசுலயும் பேசுறதை குறைச்சுக்க... நாளைக்கு எதாவது சிக்கல் வந்துச்சின்னா நாந்தான் உங்கிட்ட பேசுற மாதிரி இருக்கும்... இனி நீங்க ரெண்டு பேரும் காலேசுக்குள்ள ஐயாவோட இருக்கும் போது பேசுறது தவிர மத்த நேரம் அந்த மரத்தடிக்கிட்ட நின்னு பேசினாங்க... இந்த மரத்தடிக்கிட்ட நின்னு பேசினாங்கன்னு எந்தச் செய்தியும் என் காதுக்கு வரக்கூடாது... அவகிட்டயும் சொல்லிடுறேன்... சரியா..."


"சரிண்ணே... ஐயா கூப்பிடச் சொல்லி அவங்க வந்து சொன்னதாலதான் அவங்களோட பேச வாய்ப்பு வந்திச்சு... இனி அவங்களுக்கும் எனக்கும் பேசுறதுக்கு என்ன இருக்கு... நீங்க சொல்றது உண்மைதான்னே படிக்கணுமின்னு கனவோட வந்த எங்களுக்கு படிப்பைத் தவிர வேற எதுலயும் கவனம் போகாதுண்ணே... நீங்க நம்பலாம்... " என்றான்.


"எனக்கு உன்னைப் பற்றி தெரியும்... ஆனா வயசு அப்படி... பாத்துக்க... சரி வரவா?" என்றபடி வைரவன் சிகரெட்டை பற்ற வைத்தபடி கிளம்ப, ராம்கியின் இதயம் நெருப்புப் பற்றிக் கொண்டது.


****
[size]


"மாமா எப்ப வந்தீங்க?"
 
"வா ராமு... இப்போத்தான் வந்தேன்...பக்கத்து ஊருக்கு கேதத்துக்கு வந்தேன்... அப்படியே பாத்துட்டுப் போயிடலாம்ன்னு வந்தேன்... காலேசெல்லாம் எப்படியிருக்கு.... நல்லாப் படிக்கிறியா...?"


"நல்லா படிக்கிறேன் மாமா... முத்து மச்சான் எப்படியிருக்கார்..?"


"ம்... இருக்கான்... அவனுக்கென்ன ஊர் மேயுறதுதானே வேல..."


"ம்... அக்கா... அம்மால்லாம் இல்லையா...?"


"அம்மா மாட்டைப் பாக்கப் போயிருக்காம்... சீதா தண்ணி தூக்கப் போயிருக்கு..."


"அப்புறம் மாமா... அம்மா அன்னைக்கு ஒரு சேதி சொன்னாங்க..." 


"என்னது...!?"


"சீதாவை முத்து மச்சானுக்கு..." மெதுவாக இழுத்தான்.


"ஆமா ரெண்டு பேருந்தான் பேசி முடிவு பண்ணினோம்... அவனுக்கும் ஒரு கால்கட்டைப் போட்டுட்டா திருந்திருவான்னு பட்டமங்களம் சோசியர் சொன்னாரு... சரி நம்ம புள்ளயவே கட்டி வச்சிட்டா நல்லதுன்னு பாத்தேன்..."


"ம்..."


"ஏம்ப்பா... சீதாவுக்கு விருப்பமில்லையா...?"


"அதெல்லாம் இல்ல மாமா... அம்மா சொன்னாங்க அதான் கேட்டேன்..."


"ம்... ஊரு மேயுறாந்தான்... தெரியுது.... நம்ம சாதிசனத்துல யாரும் பொண்ணு கொடுக்கமாட்டான் அதான் நம்ம புள்ளயின்னா எல்லாத்தையும் பொறுத்துப் போகுமில்ல..."


"..." ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்த ராம்கி மனசுக்குள் 'ஒரு பொறுக்கிக்கு உங்க பிள்ளையை கட்டுவீங்களா?' என்ற கேள்வி எழ. 'சீதா வாழ்க்கை போன பரவாயில்லையா மாமா' என்று கேட்க நினைத்து மாமாவைப் பார்த்தபோது


"வாண்ணே... எப்பவந்தே...உள்ள உக்காரச் சொல்லலையா... எங்க போனா அவ..." வாயெல்லாம் பல்லாக சுப்பிக்கட்டை தூக்கிக் கொண்டு வந்தாள் நாகம்மா.


"எதுக்கு சத்தம் போடுறே... சொக்கு செத்துப் பொயிட்டானுல்ல அதை கேக்க வந்தேன். சரி வந்ததுதான் வந்தோமே அப்படியே உங்களையும் பாத்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன். கேதகார வீட்டுக்குப் பொயிட்டு வந்ததால உள்ள போகலை... சீதா காபி கொடுத்துட்டு அம்மா வந்துருவாங்க... நாம்போயி நல்ல தண்ணி எடுத்துக்கிட்டு வாறேன்னு சொல்லிட்டுப் போச்சு..."


"சரி அடி பைப்புல ரெண்டு வாளி அடிச்சு ஊத்திக்கிட்டு வாங்க... டேய் மாமாவ கூட்டிக்கிட்டுப் போடா... அதுக்குள்ள நான் எதாவது செஞ்சுடுறேன்... இவுகளும் ஊரு சுத்திட்டு இப்பத்தான் வாறாக..."


"இல்லத்தா.... எனக்கு வேல கெடக்குது... இருந்து சாப்பிட்டுக்கிட்டு எல்லாம் இருக்க முடியாது. என்னப்பா ஊரு சுத்துறியா... படிப்புல கவனமிருக்கட்டும்..."


"அதெல்லாம் இல்ல மாமா... அடுத்த வாரம் ஒரு போட்டி இருக்கு அதுக்கு தயார்ப் பண்ண தமிழய்யா வீட்டுக்குப் பொயிட்டு வந்தேன்..."


"அதானே... உன்னைய குறை சொல்ல முடியுமா?... ஆத்தா அவன அவம்போக்குல விடு... அதெல்லாம் படிச்சிருவான்"


"ம்... இவர நம்பித்தான் இருக்கோம்... பெரியாளா ஆயி எல்லாருக்கும் ஒதவியா இருப்பாங்கிற கனவோட..."


கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு 'பெரியமாப்பிள்ளை பொங்கலுக்கு வருமில்ல... அப்ப எல்லாம் பேசிக்கலாம்ன்னு...' சொல்லிட்டு கிளம்ப, ராம்கி அவருக்குத் தெரியாமல் அம்மாவை கோபமாகப் பார்த்தான்.


மாமா கிளம்பியதும் "என்னம்மா நீ... அவரே மகன ஊரு மேயுறான்னு சொல்றாரு... நீ என்னமோ..."


"ஓ வேலயப்பாரு எனக்கு புத்தி சொல்ல வேண்டாம்..." என்றபடி அடுப்படிக்குள் நுழைந்தாள்.


பின்னாலே வந்த ராம்கி, "சீதா இந்த வெயில்ல எதுக்குத் தண்ணிக்குப் போனா..."


"ம்.. எல்லாரு வீட்லயும் பயலுகதான் போறாய்ங்க... இங்கதான் நீங்க காலேசுப் படிக்கிறியல்ல... தண்ணி மண்ணியெல்லாம் தூக்க மாட்டிய..."


"அம்மா... நா போறேன்னு சொன்னப்போ போகவேண்டான்னு நீதான் சொன்னே... சரி நாளயில இருந்து நான் பொயிட்டு வாறேன்... அவ போக வேண்டாம்..." என்றபடி கயிற்றுக்கட்டிலில் ஏறிப்படுத்தான்.


"அந்த சேகரு உன்னயத் தேடி வந்தான்... அவனுக்கு என்னவாம்?"


"அம்மா ரெண்டு பேரும் ஒண்ணாத் திரிவோம்...அதான் கேட்டிருப்பான்..."


"அவங்கூட சுத்துறதை குறைச்சுக்க ஆமா... காவேரிக்கும் அவனுக்கும் எதோ இதுவாம்... நாளக்கி எவளாவது உன்னைய இதுமாதிரி சொல்லக்கூடாது ஆமா பாத்துக்க..."


"அய்யோ அம்மா... காவேரி அவனுக்கு சொந்த அத்தை பொண்ணு... நீ உங்க அண்ணன் மகனுக்கு கட்ட நினைக்கிற மாதிரி அவங்கப்பா அவனுக்குத்தான் காவேரியின்னு பேசி வச்சிருக்காரு... அவங்க பேசுறதுல என்ன பிரச்சினை இருக்கு... ஊரு நாலு விதமா பேசத்தான் செய்யும்... நமக்கென்ன... சாப்பாடு ரெடியாயிட்டா போடுங்க... சாப்பிட்டு அவனப் போயி பாத்துட்டு வாறேன்..." என்றவன் கையில் ராஜேஷ் குமாரின் கிரைம் நாவலை எடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தான்.


[/size]
****
[size]
"எங்கடா போனே... வீட்டுக்கு வந்தா ஆளக்காணோம்..."


"காரைக்குடியில கட்டுரைப் போட்டி இருக்குல்ல...  மொத்தம் அஞ்சு தலைப்பு இருக்கு... எதாவது ஒண்ணு கொடுத்து எழுதச் சொல்லுவாங்களாம்... மரபுக்கவிதை போட்டியும் இருக்காம்... நமக்கு அதெல்லாம் தெரியாது... பேச்சுப் போட்டியின்னா ஓகே... கட்டுரை... எப்படியாவது பிரைஸ் வாங்கணும்டா..."


"ம்... உனக்கு என்னடா... அடிச்சு தூள் கிளப்பிடுவே..."


"ஆமா... நீயும் காவேரியும் எனக்குத் தெரியாம எங்கடா பழகுனீங்க... அம்மா சொல்லுது?"


"அடப்பாவி... இது வேறயா... அவளும் நானும் கீரியும் பூனையுமா இருக்குறது உனக்குத்தான் தெரியுமே... ரெண்டு நாள் முன்னாடி ஸ்கூல் முடிஞ்சு வாறப்போ அவ சைக்கிள் பஞ்சராயிடுச்சாம்... கடைக்கிட்ட நின்னா... மழ வேற லேசாத் தூறிச்சு... சரி பாத்து வைக்கட்டும் நாளக்கி வந்து எடுத்துக்கலாம்ன்னு சொல்லி கூட்டியாந்தேன்... அப்பவே எல்லாப்பயலும் ஒரு மாதிரி பாத்தாய்ங்க... அயித்த மகளக் கூட்டியாந்ததுக்கே இப்படின்னா... மத்தபுள்ளங்களை கூட்டியாந்திருந்தா இன்னேரம் கலியாணமே பண்ணியிருப்பாய்ங்க... நம்ம ஊருக்குள்ள எல்லாம் வேற சாதிப் பொண்ண காதலிக்கிறோம்ன்னு தெரிஞ்சாலே செங்கக்காலவாயில தூக்கிப் போட்டு எரிச்சிடுவாய்ங்கடா..."


"ஆமாடா... படிச்சமா... ஒரு வேலக்கிப் போனமான்னு இருக்கணும்..."


"எனக்கு இந்த காதல் கீதல் எல்லாம் நம்பிக்கை இல்லை... என்ன காவேரியை வேண்டான்னு சொல்ற அன்னைக்குத்தான் இருக்கு... பெரிய பூகம்பமே வெடிக்கும்..."


"அவளுக்கு என்னடா... ஏன் வேண்டாங்கிறே...?"


"பாக்கலாம்... அவதான்னு விதியிருந்தா மாறவா போகுது... சரி அதை அப்போதைக்கு பாப்போம்... ஆமா சீதாவை முத்துக்கு கட்டப்போறேன்னு அயித்தை அப்பாகிட்ட சொன்னுச்சாம்... அதுக்கு என்ன கிறுக்காடா புடிச்சிருக்கு...."


"ஆமாடா... ரெண்டு நாளா சீதா அழுவுறா... இது பிடிவாதமா நிக்கிது... எனக்கும் மனசே சரியில்லை... அண்ணன் பொங்கலுக்கு வரயில பேசிக்கலாம்ன்னு பேசாம இருக்கமுடா..."


"ம்... பெரிய மச்சாங்கிட்ட சொல்லி நிப்பாட்டுற வழியைப் பாரு... கிளிய வளர்த்து பூனைக்கிட்ட கொடுக்க அயித்தைக்கு எப்படி மனசு வந்துச்சு..."


"அது அண்ணன் உறவுக்காக பாக்குது... அதுக்காக முத்துக்கு கட்டணுமாடா... சொன்னா எங்கிட்ட சண்டைக்கு வருது..."


"இப்ப நீ எதுவும் பேசாதே... பெரிய மச்சான் வந்ததும் பக்குவமா எடுத்துச் சொல்லி அயித்தைக்கு புரிய வையுங்க... ஆமா வீட்ல உன்னோட புத்தகத்தோட ஆனந்த விகடன் ஒண்ணு பார்த்தேன்... எடுத்து படிச்சேன்... அதுல கவிதைப்பிரியான்னு ஒரு பேரை ஸ்கெட்சுல ரவுண்ட் பண்ணியிருந்துச்சு... யார்டா அது?"


"என்னோட பிரண்ட்டுடா... காரைக்குடி போட்டிக்கு அவங்களும் வாறாங்க... கவிதை நல்லா எழுதுவாங்க... அவங்க கவிதை..."


"அவங்க பேரை நீ எதுக்கு ரவுண்ட் பண்ணுறே... என்னடா காதல் வந்திருச்சா என்ன... வேணான்டா நம்ம கனவுகளை அழிச்சிடும் பார்த்துக்க..."


"ஐயோ... அதெல்லாம் இல்லடா... எங்க காலேசுல படிக்கிறாங்க... எனக்கும் பிரண்ட்...  அவங்க கவிதைங்கிறதால ரவுண்ட் பண்ணினேன்... அம்புட்டுத்தான்..."


"ம்... பிரண்டா... அப்ப கவிதை முழுவதையும் ரவுண்ட் பண்ணியிருக்கனும்... அதென்னா பேரை ரவுண்ட் பண்ணியிருக்கே... சரி பிரண்டா இல்ல லவ்வரான்னு போகப்போகத் தெரியப்போகுது...."


"சும்மா இருடா.. பிரண்டுதான்... லவ்வுமில்ல கிவ்வுமில்ல" என்று மறுத்தவன் மனசுக்குள் கவிதைப்பிரியாவை மாற்றி புவனாராம் என்று எழுதிப் பார்க்க மனசு உயரப் பறக்க ஆரம்பித்தது.
[/size]
-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha on Thu 6 Aug 2015 - 10:56

ஆஹா!

இவ்வளவு நடந்திருக்கா?  காலேஜ் வாழ்க்கை, பெண் நட்பு,  கட்டுரைபோட்டி, வார இதழில் கவிதை, குடும்பம், அக்காவின் திருமணம், வைரவனின் எச்சரிக்கை என  ராம்கியை சுழல்  சூழ ஆரம்பித்திருக்கின்றது. 

அண்ணனான்  தங்கை மீதானன் அக்கறை பாச்ம் வைரவனிடமும்...  தம்பியாய் அக்கா மீதான அக்கறை  ராம்கியிடமும்  வெளிப்படுவது இய்ல்பாக இருக்கின்றது!  

சேகர் காவேரிக்கு உதவியது ஊர் முழுக்க தம்பட்டம் அடிக்கும் கதை எல்லா ஊரிலும் இருக்கும் போல....!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Sun 9 Aug 2015 - 6:23

தொடர்கதை : கலையாத கனவுகள்
11. ஊடலுக்குப் பின் நட்புமுன்கதைச் சுருக்கம்.

கல்லூரிக்குப் போகும் கிராமத்து மாணவனான ராம்கி, அங்கு புவனாவுடனான சந்திப்புக்குப் பின்னர் அவளை மனசுக்குள் விரும்புகிறான். புவனாவோ கல்லூரியின் முக்கிய ரவுடியான வைரவனின் தங்கை என்று தெரியவர சற்றே யோசிக்கிறான். இந்ந்iலையில் வைரவன் வேறு கல்லூரிக்குள் அவளிடம் பேசாதே என்று சொல்லி வைக்கிறான். அதனால் அவளுடன் பேசுவதை தவிர்த்து வருகிறான். இதனிடையே அவனது அம்மா, தனது அண்ணனின் மகனான ஊதாரி முத்துவுக்கு மகளைக் கட்ட வைக்க நினைக்கிறார். ராம்கி எதிர்க்கிறான். ராம்கியின் மச்சானான சேகருக்கும் சேகரின் அத்தை மகளுக்கும் காதல் என்ற வதந்தியும் ஊருக்குள் பரவிவருகிறது. அதனால் சேகருடன் சுற்றுவதற்கு அம்மா கோபப்படுகிறாள்.சேகரோ அப்படியெல்லாம் இல்லை என்றும் நீயும் காதலில் விழுகாதே அது உன் கனவுகளை அழித்துவிடும் என்றும் அட்வைஸ் பண்ணுகிறான்.

இனி...

நாட்கள் நகர ஆரம்பிக்க, வைரவனுக்குப் பயந்து புவனாவைப் பார்ப்பதைத் தவிர்த்து வந்தான். இந்நிலையில் காரைக்குடிக்கு போட்டிக்குச் செல்லும் நாளும் வந்தது. ராம்கி போட்டியில் கலந்து கொள்ளும் சில நண்பர்களுடன் பேருந்தில் கிளம்பி விழா நடைபெறும் மண்டபத்திற்குச் சென்றான். சிறிது நேரம் கழித்து புவனா சில பெண்களுடன் வந்து சேர்ந்தாள். ராம்கியிடம் எதுவும் பேசாமல் தனியாக போய் அமர்ந்து கொண்டாள். ராம்கிக்கு கஷ்டமாக இருந்தது.அவளருகில் சென்று "சாரி... பஸ்ஸ்டாண்டுல காத்திருந்தோம்... உங்களை எல்லாம் காணோம்... அதான் வந்துட்டோம்..."

"நான் இப்ப உங்ககிட்ட கேட்கலையே... யாரும் எங்கிட்ட எதுவும் சொல்லத் தேவையில்லை..."

"இல்ல... அது.."

"டீ... வாடி அங்கிட்டுப் போய் இருப்போம்... அவங்க அவங்க பாட்டுக்கு வந்தோம்... அவங்க அவங்க பாட்டுக்கு போட்டியில கலந்துக்கிட்டு போய்க்கிட்டே இருப்போம்... யாரைப் பத்தியும் நமக்குத் தேவையில்லை..." என்றபடி கொஞ்சம் தள்ளிப்போய் அமர, ராம்கி பேசாமல் அங்கிருந்து நகர்ந்து மீண்டும் நண்பர்களுடன் கலந்துவிட்டான்.

போட்டிகள் ஆரம்பித்தாலும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் மதியம்தான் என்றும் எல்லாருக்கும் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் யாரும் வெளியில் சென்று சாப்பிடவேண்டாம் என்று போட்டியின் அமைப்பாளர் அறிவித்ததும் மற்ற கல்லூரி மாணவர்கள் எல்லாம் மதியம்தானாம் என்று வெளியில் கிளம்ப, ராம்கியும் மற்ற மாணவர்களும் அருகில் இருக்கும் தியேட்டரில் படம் பார்க்கப் போகலாம் என்று முடிவெடுத்தனர். ராம்கிக்கு புவனாவிடம் கேட்கப் பயம்... ஆனால் அவளை விட்டுட்டுச் செல்லவும் மனமில்லை... கோபித்துக் கொண்டு அமர்ந்திருந்தாலும் அவளைப் பார்த்துக் கொண்டு இருப்பதே சந்தோஷமாக இருந்தது. மற்றவர்கள் அழைத்து செல்லாமல் இருந்தாலும் பிரச்சினை... ஒருவனிடம் பெண்களும் வருகிறார்களா என்று கேட்கச் சொன்னான். அவன் போய் கேட்டதற்கு நாங்கள் வரவில்லை என்று பதில் வந்தது. எனவே மாணவர்கள் மட்டும் கிளம்பினர். ராம்கி போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் புவனா.

தியேட்டரில் கூட்டமாய் இருந்தது... டிக்கெட் எடுக்க காத்திருந்த போது மாணவிகளும் வந்து சேர்ந்தார்கள்... புவனாவைப் பார்த்ததும் ராம்கிக்கு மனசு சந்தோஷமானது. எல்லாருக்கும் டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள். இடம் தேடி அமரும் போது படியில் தடுக்கி விழப்போன புவனா ஆதரவுக்காக அருகில் நின்ற தோளில் கைவைத்து முகத்தைப் பார்த்தவள் அது ராம்கி என்று தெரிந்ததும் சாரி என்று சொல்லி படக்கென்று  கையை எடுத்துக் கொண்டாள்.

அமரும் போதும் வரிசையாக நண்பர்கள் அமர ராம்கிதான் கடைசி அவனுக்கு அருகிலிருந்த இருக்கையில் புவனா அமர அவளைத் தொடர்ந்து தோழிகள் அமர்ந்தனர். ஆனால் ராம்கி பக்கம் திரும்பாமல் கைபடாமலும் இருந்தாள். 'பேசாம இருக்கிறதுக்கு எதுக்கு எங்கிட்ட உக்காரணும்... தள்ளிப்போயி உக்கார வேண்டியதுதானே' என்று ராம்கி மனசுக்குள் நினைத்துக் கொண்டான். அதே நேரம் 'உனக்கு அருகில் என்னைத் தவிர எவளையும் உக்கார விடமாட்டேன்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் புவனா.

படம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் ராம்கி மெதுவாகக் குனிந்து 'சாரி... உங்க அண்ணனுக்குப் பயந்துதான் உங்ககிட்டப் பேசலை... இன்னைக்கு அதனாலதான் ரொம்ப நேரம் வெயிட் பண்ணலை... அது போக செகண்ட் இயர் பசங்களும் வந்தாங்க... அதனால..."

"அப்பவே சொல்லிட்டேனே... நான் கேட்கலைன்னு..."

"கோபம் நியாயந்தான்... ஆனா இதுதான் உண்மை... இந்த மஞ்சள் தாவணி ரொம்ப நல்லாயிருக்கு..."

"என்னைய வர்ணிக்கச் சொன்னேனா... அதான் மண்டபத்துக்குள்ள நுழையும் போதே செகண்ட் இயர் பயதான் குட்டி சூப்பரா வந்திருக்கான்னு சொன்னானே... கேட்கலை... பாவம் அவனுக்கு என்னோட குணம் தெரியலை... எங்க அண்ணனுக்கிட்ட சொன்னா பெரியாஸ்பத்திரியில ஒரு பெட்டு ரெடி பண்ணிக் கொடுத்துடுவான்... அடுத்து உனக்கும் பக்கத்துல போடச் சொல்லணுமா?"

"அவனுக்கு உங்களைத் தெரியுமின்னு நினைக்கிறேன்... அவன் வேற பொண்ணச் சொன்னான்... உங்களையில்லை...."

"வேற பொண்ணுன்னா பேசுவிங்களா...? வைரவனுக்கிட்ட சொன்னா வாயைப் பேத்துடுவான்"

"..."

"என்ன பதிலைக் காணோம்...?"

"நான் தப்புப் பண்ணுனாத்தானே என் வாயைப் பேப்பாரு... ம்... மஞ்சள் புடிச்சிருந்தது அதான் நல்லாயிருக்குன்னு சொன்னேன்... ஆனா உங்களுக்கு எம்மேல உள்ள  கோபம் குறையலை... சாரி..." 

"ம்... படத்தைப் பாருங்க... பக்கத்துல பாக்காம..."

படம் முடியும் வரை இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அனைவரும் மதியம் சாப்பிட்டுவிட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஆயத்தமானார்கள். மரபுக்கவிதைகள் போட்டியில் புவனா கலந்து கொண்டாள். அவளுக்கு பரிசு கிடைக்க வேண்டும் என்று ஊரில் இருக்கும் எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக் கொண்டான். பின்னர் கட்டுரைப் போட்டியையும் முடித்து முடிவுகள் அறிவிப்பதற்காக காத்திருந்தனர்.

ஒருவழியாக முடிவை அறிவித்தனர். ராம்கி கட்டுரைப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றிருந்தான். புவனா கவிதையில் முதல் பரிசைப் பெற்றிருந்தாள். கட்டுரையில் மூன்றாம் பரிசும் அவளுக்கே.... பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மற்ற நண்பர்களும் சில போட்டிகளில் பரிசுகளை வெல்ல சந்தோஷமாய் எல்லோரும் கிளம்பினர்.

பேருந்தில் ஏறும் முன் "எனக்குக் கொஞ்சம் புக்ஸ் வாங்கணும் நீங்கல்லாம் போங்க நான் வாங்கிக்கிட்டு வாறேன்" என புவனா சொல்ல, "இனி புக்கெல்லாம் வாங்கிட்டு திரிஞ்சு ராத்திரியிலயா வீட்டுக்குப் போவே...இன்னொரு நாளைக்கு வாங்கிக்கலாம் வாடி" என்று மற்ற பெண்கள் சொல்ல,

"இல்ல வந்தது வந்துட்டோம்... நான் வாங்கிக்கிட்டு வாறேன்..."

"ஏங்க நான் வேணா உங்களுக்கு துணைக்கு வாறேன்..." என்று ராம்கி சொன்னதும் "என்ன ராம்கி மஞ்சத் தாவணிக்கு துண்டு போடுறியா?" என்றான் இரண்டாமாண்டு மாணவன்.

"என்ன நக்கலா பேசுறே... காலையில வரும்போது குட்டி சூப்பரா வந்திருக்கான்னு சொன்னே... இப்ப துண்டு போடச் சொல்லுறே... நான் யாருன்னு தெரியுமில்ல... நாளைக்கு காலேசுக்கு வரணுமா... வேண்டாமா?" புவனா கோபமாக, "ஏங்க அவங்க யாரோட தங்கச்சின்னு தெரிஞ்சும் இப்படி பேசுறீங்க... தேவையில்லாம பேசி பிரச்சினையாக்காதீங்க... எல்லாரும் ஒண்ணா வந்தோம்... சந்தோஷமாப் போவோம்... நான் அவங்க கூட பொயிட்டு லேட்டாயிட்டா தேவகோட்டையில ஐயா வீட்ல விட்டுட்டுப் போயிடுவேன்... அதான் கேட்டேன்... இல்ல யாராவது பொண்ணுங்க துணைக்குப் போங்க.. " என்றான் ராம்கி.

"இல்ல ராம்கி..." ரொம்ப லேட்டான வீட்ல திட்டு வாங்க முடியாது.. நீயே இருந்து கூட்டிக்கிட்டு வா" என பெண்கள் ஜகா வாங்க, ராம்கி, புவனா தவிட மற்றவர்கள் எல்லாரும் வந்த பேருந்தில் ஏறினார்கள்.

"வாங்க போகலாம்"

"எங்க?"

"புக்ஸ் வாங்கணுமின்னிங்க..."

"சும்மா சொன்னேன்..."

"சும்மா சொன்னீங்களா..?"

"ஆமா... நாம தனியாப் போகணுங்கிறதுக்காக சொன்னேன்..."

"தனியாவா... நான்  நிக்காம போயிருந்தா..."

"போகமாட்டீங்கன்னு தெரியும்...காலையில விட்டுட்டு வந்ததுக்கே இவ பேசலை... இப்ப விட்டுட்டுப் போனா பேசவே மாட்டாளேன்னு யோசிச்சிப்பீங்கன்னு தெரியும்..."

"பொண்ணுங்க யாராவது நின்னுருந்தா..."

"நிக்க மாட்டாளுங்க... ஏன்னா என்னோட தோழி கனிக்கிட்ட முன்னாடியே சொல்லிட்டேன்... அதனால அவ யாரையும் நிக்க விடமாட்டா"

"அடேங்கப்பா... எதுக்கு இப்படி..."

"சும்மாதான்... சரி வாங்க பஸ் வருது"

பேருந்தில் ஏறியதும் இருவர் அமரும் இருக்கையில் சன்னலோரம் அமர்ந்த புவனா, ராம்கியைப் பார்த்து "உக்காருங்க" என்றாள்.

"இல்லைங்க... பரவாயில்லைங்க..."

"சும்மா உக்காருங்க..." மெதுவாகச் சொன்னாள்.

"இல்லை... நான் நிக்கிறேன்... அந்த அம்மாவை உக்காரச் சொல்லலாம்..."

"நீங்க இப்ப உக்காருவீங்களா மாட்டிங்களா..." மெதுவாகக் கேட்டபடி பல்லைக் கடித்தாள்.

அவள் கோபமாவதைப் பார்த்ததும் வைரவனுக்கு வேண்டியவன் எவனும் பஸ்ஸில் இருக்ககூடாது என்ற பயத்துடன் மெதுவாக அவளருகில் அமர்ந்தான்.

"இப்ப கோபமெல்லாம் இல்ல... தியேட்டர்ல படம் பார்த்த மாதிரி இருக்காம நல்லா இருங்க..." என்று புவனா சிரித்தபடி சொன்னதும் ராம்கி கொஞ்சம் ரிலாக்ஸாக அமர்ந்தான். அவளது தோளில் அவனது தோள் உரச, அவனுக்குள் புதுவித உணர்வு மெல்ல எட்டிப்பார்த்தது,

பேருந்தில் 'இந்த மான் உந்தன் சொந்தமான் பக்கம் வந்துதான் சிந்து பாட...' என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

-'பரிவை' சே.குமார்.

avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha on Tue 11 Aug 2015 - 15:26

புவனா, ராம்கி உரையாடல்கள், ராம்கியின் பயம், மஞ்சத்தாவணிக்கிண்டல்கள் அனைத்தும் அருமை. என்னமோ அனுபவித்து எழுதியது போல் இருக்கின்றதே குமார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Tue 11 Aug 2015 - 18:44

Nisha wrote:புவனா, ராம்கி உரையாடல்கள், ராம்கியின் பயம், மஞ்சத்தாவணிக்கிண்டல்கள் அனைத்தும்  அருமை.  என்னமோ அனுபவித்து எழுதியது போல் இருக்கின்றதே குமார்!

ஹா... ஹா... அக்கா...
இந்த அனுபவம் இல்லாத ஆதங்கத்துலதான் கதையிலாவது எழுதுவோமேன்னு எழுதியிருக்கேன்...
வேணுமின்னா கொஞ்ச நாள் ராம்கியா கற்பனையில் வாழலாம்.... அம்புட்டுத்தான்...
உங்கள் கருத்துக்கு நன்றி.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha on Tue 11 Aug 2015 - 18:49

அடடா! 

நிஜமாக இப்படி அனுபவம் கிடைக்கல்லையா குமார்!  லவ் பண்ண வேண்டாம் எந்தப்பெண்ணையும் சைட்  அடிக்கலையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Tue 11 Aug 2015 - 18:50

உண்மையைச் சொல்லணுமா?

லவ் பண்ணலை...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha on Tue 11 Aug 2015 - 19:02

இப்பவுமா?  

எப்பவுமா? 

அப்போவுமா?

 நான் லவ் பண்னி இருக்கேன்பா? 
எப்பவும் லவ் பண்ணிட்டிருக்கேன். 

சரி ஒரே ஒரு கேள்வி! 
ஆங்கிலத்தில் இருக்கும் லவ், லைக்  வித்தியாயம் என்ன என சொல்லுங்கள் பார்க்கலாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Tue 11 Aug 2015 - 19:06

Nisha wrote:இப்பவுமா?  

எப்பவுமா? 

அப்போவுமா?

 நான் லவ் பண்னி இருக்கேன்பா? 
எப்பவும் லவ் பண்ணிட்டிருக்கேன். 

சரி ஒரே ஒரு கேள்வி! 
ஆங்கிலத்தில் இருக்கும் லவ், லைக்  வித்தியாயம் என்ன என சொல்லுங்கள் பார்க்கலாம்!

திருமணம் நிச்சயமாகி ஒரு வருடம் சென்றே திருமணம்.... அதுவரை மனைவியுடன் காதல்... இன்றும் இப்போதும் அதே காதல் தொடர்கிறது.... இது கடைசிவரை தொடரும் அக்கா...

லவ் - ஒருத்தர் மீது வைக்கும் அன்பு அக்கா...
லைக் - விருப்பம். அதாவது நிறையப் பேரை நமக்குப் பிடிக்கலாம்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha on Tue 11 Aug 2015 - 19:23நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Tue 11 Aug 2015 - 20:01

Nisha wrote:

வாவ்... இன்று தங்கள் மூலமாக அறிந்தேன் நன்றி அக்கா...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha on Tue 11 Aug 2015 - 20:11

ம் இரண்டுக்கும் எத்தனை வித்தியாசம்!

 நாம் அனைத்தையும் லைக் செய்யாமல்  லவ்  பண்ணனும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Tue 11 Aug 2015 - 20:13

Nisha wrote:ம் இரண்டுக்கும் எத்தனை வித்தியாசம்!

 நாம் அனைத்தையும் லைக் செய்யாமல்  லவ்  பண்ணனும்.

ஆமால்ல...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha on Tue 11 Aug 2015 - 20:18

ஆமாவே தான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Thu 13 Aug 2015 - 18:45

தொடர்கதை : கலையாத கனவுகள்


12. சண்டை ஆரம்பம்.

முன்கதைச் சுருக்கம்:

கல்லூரிக்குப் போகும் கிராமத்து மாணவனான ராம்கி, அங்கு கல்லூரி ரவுடியான வைரவனின் தங்கை புவனாவுடன் பழக நேர, அவளை மனதுக்குள் விரும்ப ஆரம்பிக்கிறான். இதனிடையே அவனது அம்மா, தனது அண்ணனின் மகனான ஊதாரி முத்துவுக்கு மகளைக் கட்ட வைக்க நினைக்க, ராம்கி எதிர்க்கிறான். எதிர்க்கிறான். மற்றொரு கிளைக்கதையாக ராம்கியின் மச்சானான சேகருக்கும் சேகரின் அத்தை மகளுக்கும் காதல் என்ற வதந்தியும் ஊருக்குள் பரவிவருகிறது. கல்லூரியின் சார்பாக் போட்டிகளில் கலந்து கொண்டு திரும்பும் போது பேருந்தில் புவனாவின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டு வருகிறான் ராம்கி.

இனி...
வளருகில் அமர்ந்து செல்வதே அவ்வளவு சந்தோஷமாக இருந்தது ராம்கிக்கு... எங்கோ பறக்கிறது போல இருந்தது. இவளே வாழ்க்கை முழுவதும் தன்கூட பயணப்பட்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று நினைக்கும் போதே அவனது மனசு சந்தோஷத்தில் குதித்தது.
"என்ன... பேசாமா வாறீங்க?" புவனாவின் கேள்வியில் நினைவுகளைத் துறந்து சுயத்துக்குத் திரும்பினான்.
"இ...இல்ல... ஒண்ணுமில்லேங்க..."
"ஆமா... எதுக்கு காலையில விட்டுட்டு வந்தீங்க... பேசக் கூடாதுன்னுதான் நினைச்சேன்... பார்க்க பாவமா இருந்துச்சு அதான் பேசிட்டேன்..."
"ம்... உண்மையைச் சொன்னா உங்கண்ணனுக்குப் பயந்துதான் அவங்ககூட கிளம்பி வந்தேன்... ஆனா நீங்க பேசலைன்னதும் நாங்க ஒதுங்கித்தானே இருந்தோம்... பேசலைன்னு முகத்தை எல்லாம் தூக்கி வச்சிக்கலை... சும்மா சொல்லாதீங்க"

"அதான் பார்த்தோமே... தியேட்டர் இருட்டுக்குள்ள சாரி சொன்னது யாரு...?"

"அது பிரண்ட்லியா சொன்னது..."

"ஆமா... இந்த தாவணி நல்லாவா இருக்கு?"

"..." பேசாமல் இருந்தான்.

"என்ன பதிலைக் காணோம்... இருட்டுக்குள்ள மட்டுதான் சொல்லுவீங்களா?"

"எதுக்குங்க... சொன்னா யார் கேட்டான்னு சொல்லுவீங்க... எனக்குத் தேவையா..?"

"அது சரி... முன்னெச்சரிக்கையா?"

"இப்பக் கேட்கிறேன்... உங்களுக்கு மஞ்சள் கலர்தான் பிடிக்குமா?"
"அப்படியெல்லாம் இல்ல... நல்லா இருந்துச்சு சொன்னேன்... அம்புட்டுத்தான்..."
"ம்.... கட்டுரைப் போட்டியில முதல் பரிசு ஜெயிச்சதுக்கு டிரீட் எதுவும் இல்லையா?"
"இதுக்கு ட்ரீட்டா...? அதுசரி அப்படின்னா நீங்களுந்தான் கவிதை போட்டியில முதல் பரிசு ஜெயிச்சீங்க..."
"நான்கண்டிப்பாத்  ட்ரீட் தாறேன்.. என்ன வேணுமின்னாலும் கேளுங்க..."
"அப்ப நானும் தாறேன்...  நீங்க உங்களுக்கு என்ன வேணுமுன்னு கேளுங்க..."
"அட இங்க பார்றா... சரி... எனக்கு என்ன வேணுமின்னு எப்ப கேட்டாலும் வாங்கித் தர ரெடியா இருங்க..."
"அப்ப இப்ப வேண்டாமாக்கும்... சரி... ஆமா கட்டுரைப் போட்டியில நீங்கதான் முதல் பரிசு வாங்குவீங்கன்னு நெனச்சேன்... "

"..." பதில் சொல்லாமல் சிரித்தாள்.

"என்னங்க சிரிக்கிறீங்க..?"

"இல்ல நான் ஒழுங்கா எழுதியிருந்தா நீங்க பரிசே வாங்கி இருக்கமுடியாது... அதனாலதான்..."

"அப்படி மட்டும் எங்களை எடை போட்டுடாதீய்ங்க... நாங்க கிராமத்துக்காரய்ங்க... எதுலயும் இறங்க மாட்டோம்... இறங்கிட்டா முடிக்காம விடமாட்டோம்... போட்டியின்னு வந்துட்டா நின்னு விளையாடிப் பார்ப்போம்... தெரிஞ்சுக்கங்க..."

"ம்... நாங்களும் கிராமத்துக்காரிதான்.. என்னமோ தெரியலை... நீங்க கட்டுரைப் போட்டியில மட்டும் கலந்துக்கிறதால நல்லா பிரிப்பேர் பண்ணியிருப்பீங்க... எப்படியும் பரிசு வாங்குவீங்க...நீங்க கண்டிப்பா ஜெயிக்கணுமின்னு நெனச்சு நான் ரொம்ப பிரிப்பேர் பண்ணலை... கலந்துக்கவே வேண்டான்னுதான் நினைச்சேன்... சரி உங்க கூட உக்காந்து எழுதலாமேன்னுதான் எழுதினேன்... கலந்துக்கிட்டது திடீர் முடிவுதான்... இதுதான் உண்மை... இருந்தாலும் திறமையானவங்களுக்கு பரிசு கிடைக்கிறதுதானே சந்தோஷம்"

கண்டக்டர் அவர்கள் அருகில் வரவும் பேச்சை நிறுத்தி இருவருக்கும் டிக்கெட் எடுத்தான். அதன் பிறகு கொஞ்ச நேரம் அமைதி, மீண்டும் பேச ஆரம்பித்தனர். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அவள் ஐயா வீட்டுக்குப் போய் வைரவனுக்கு போன் பண்ணி வரச்சொல்லி போய்விடுவதாகச் சொல்லவும் ராம்கி சைக்கிளை தனது ஊரை நோக்கி மிதிக்கலான். இந்த நாள் அவன் வாழ்வில் மறக்கமுடியாத நாள், அதுவும் தான் நேசிக்கும் பெண்ணின் அருகில் அமர்ந்து அவளுடன் பேசிக்கொண்டிருந்தது என திரும்பத் திரும்ப மனசுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அவனை சொல்லவொண்ணாச் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

"என்னடா மச்சான்... கட்டுரைப் போட்டியில பிரைஸ் கெடச்சதா?" கண்மாய்க்கு குளிக்கப் போகும்போது சேகர் கேட்டான்.
"ஆமாடா... நைட்டு லேட்டாயிடுச்சு... அதான் வீட்டுப் பக்கம் வரலை... முதல் பரிசுடா"
"அட்ரா... தூள் மச்சான்... நாந்தான் அப்பவே சொன்னேன்ல... இன்னைக்கு காலேசுல எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சு நீ பெரியாளாயிடுவே... ம்... உங்க கிளாஸ்ல எத்தனை உனக்குப் பிராக்கெட் போடப் போகுதோ தெரியலை..."
"சும்மா காலையிலேயே ஏதுக்குடா இப்படி பேசுறே?  வேற எதுவும் பேச மாட்டியா... ஐயா சொல்லிக் கொடுத்தார்... பத்தாததுக்கு புவனா வேற புக்ஸ் எல்லாம் கொடுத்து ஹெல்ப் பண்ணினாங்க... எல்லோரோட உதவியாலயுந்தான் முதல் பரிசு வாங்க முடிஞ்சது.. அம்புட்டுத்தான்..."
"ஆமா... அந்தப் புவனாவை ஆஹா... ஒஹோன்னே... எதாவது பிரைஸ் வாங்கினாளா?"
"அவங்க கட்டுரைப் போட்டி சரியாப் பண்ணலை மூணாவது பிரைஸ்.... அவங்க நல்லாப் பண்ணலைன்னு தோணுது... நல்லாப் பண்ணியிருந்தா எனக்கு ரெண்டாவது இடந்தான் கிடச்சிருக்கும்... கவிதையில அவங்கதான் முதலிடம்..."
"அது சரி... அப்ப அவகிட்ட சரக்கிருக்கு... பேசாம அவளை அமுக்கிடு மச்சான்..."
"சும்மா போடா... பிரண்டா பழகுறாங்க... அவங்கிட்ட எதாவது சொல்லப் போயி அசிங்கப்பட்டு நிக்கணுமா?.... சரி வா குளிக்கிற வேலையைப் பார்ப்போம்... இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் போகணும்... நைட்டு ஐயா வீட்டுக்குப் போகலை... போகும் போது பொயிட்டு அவங்க ஆசி வாங்கிக்கிட்டு காலேசுக்குப் போகணும்..."
"சரி சரி... எனக்கும் இன்னைக்கு காரைக்குடி பாண்டியன்ல புதுபட ரிலீஸ் இருக்கு..."
"நீ திருந்தவேமாட்டே... அரியரெல்லாம் எப்படிடா கிளியர் பண்ணப் போறே?"
"மாப்ளே பேப்பருக்கு இவ்வளவுன்னு கொடுத்துப் பாசாகி வெளிய போனவனெல்லாம் இன்னைக்கு பெரிய ஆளு... கரச்சுக் குடிச்சவனுக்கெல்லாம் இன்னமும் கரைகஞ்சிதான் தெரிஞ்சுக்க... உனக்குப் புரியிற மாதிரி சொல்லணுமின்னா, நம்ம கோர்ட்டுக்குப் போனியன்னா, உங்க காலேசுல ஊதாரியா, ரவுடியா சுத்துவனெல்லாம் காசைக் கொடுத்து பேப்பரை முடிச்சிட்டு வெளிய போயி எப்படியோ பி.எல் பண்ணிட்டு இல்லேன்னா பெங்களூருப் பக்கமா போயி எல்.எல்.பி. முடிச்ச்சிட்டு இங்க வந்து கருப்புக் கெவுனை மாட்டிருறான்... போய் பாரு அம்புட்டுப் பேரும் வக்கீலு..,. அவனுக்கிட்ட கேசுக்கு வாறவன் யாருன்னு பார்த்தியன்னா வெளியுலகம் தெரியாம புத்தகத்தைக் கட்டிக்கிட்டு படிச்சுட்டு வேலைதேடி அலைஞ்சிக்கிட்டு ஊருல எதாவது பிரச்சினையில மாட்டிட்டு இவங்கிட்ட வந்து நிப்பான்... தெரிஞ்சுக்க..."
"இப்ப எதுக்கு இதெல்லாம்... எனக்கு வேலை கெடைக்காம திரியப் போறேன்னு சொல்லாம சொல்லுறியா?"
"அட இல்ல... தலைவர் மாதிரி உண்மையைச் சொன்னேன்... சரி உனக்குத்தான் கவிதைக்காரிய சுத்துற வேலை வந்தாச்சுல்ல.."
"சும்மா இருக்க மாட்டே... உன்னைக் கொல்லப் போறேன் பாரு... வாடா... குளிக்கலாம்..."


"டேய் ராம்கி..." வைரவனின் குரல் வர ரோட்டோரத்தில் நின்ற மாமரத்துப் பக்கம் திரும்பிப் பார்த்தான். அங்கே வைரவன் பைக்கை நிறுத்தி அதில் சாய்ந்தபடி சிகரெட் குடிச்சிக்கிட்டு இருந்தான்.
சைக்கிளில் இருந்து காலை ஊன்றியபடி "என்னண்ணே?" என்றான்.

"இங்க வாடா போகலாம்..."

"லைப்ரரியில கொஞ்சம் புக்க கொடுக்கனும்... சீக்கிரம் போனா முடிச்சிட்டு கிளாஸ் போக சரியா இருக்கும்... அதான்..."

"அட ரெண்டு நிமிசம் வந்துட்டுப் போடா..."

சைக்கிளை விட்டு இறங்கி உருட்டிக்கொண்டு அவனிடம் போக, "சிகரெட் பத்த வச்சுப் பாறேன்..." என்று பாக்கெட்டை நீட்டினான்.

"வே...வேண்டாண்ணே..."

"ம்... பரிசு வாங்கிட்டியாமே... புவனா கதைகதையா சொன்னா..."

"ஆமாண்ணே... எல்லாரும் உதவினதால நல்லா பண்ணி ஜெயிக்க முடிஞ்சது...."

"ம்... எனக்குப் பயந்து இங்க இருந்து பொண்ணுங்க கூட  போகாம பசங்கல்லாம் தனியாப் போனீங்களாம்..."

"அ... அப்படியில்லை... முன்னாடி வந்துட்டோம்... சரி போகலாமுன்னுதான்..."

"ம்... உனக்குப் பயந்து சாகுறாங்கடான்னு சொல்லிச் சிரிக்கிறா... நா என்ன உங்களுக்கு எமதர்மனாவாத் தெரியிறேன்... இதுவும் நல்லதுதான்... பொது இடத்துல பொண்ணுங்க கூட பேசிக்கிட்டு போனா நாலு பேரு நல்லவிதமா பேசுவான்.... நாலு பேரு நாக்குமேல பல்லப் போட்டுப் பேசுவான்..."

"ம்... சரிண்ணே... நான் கிளம்புறேன்" என்று சைக்கிளை எடுக்கும் போது,

"டேய் இவந்தாண்டா வைரவன்" என்று கத்தியபடி மூன்று நான்கு பேர் வண்டியில் வந்து இறங்கினார்கள். ரோட்டில் போன பசங்களெல்லாம் அதிர்ச்சியுடன் என்ன நடக்கப் போகுதோ என்று பார்க்க ராம்கி சைக்கிளை உருட்டாமல் நின்றான்.

அவர்கள் வைரவனை நெருங்கி வர, "பாஸ் என்ன வேணும்... நாந்தான் வைரவன்..." என்றபடி சிகரெட்டை தரையில் போட்டு செருப்பால் மிதித்துக் கொண்டே கேட்டான் வைரவன்.
"நீ என்ன பெரிய புடுங்கியா? எங்காளு மேல கை வச்சிருக்கே... காலேசுல படிக்க வந்தியா... இல்ல ரவுடித்தனம் பண்ண வந்தியா... பெரிய புடுங்கியாடா நீ ... கோத்தா..."
"இப்ப என்னங்க... எதுக்கு தேவையில்லாம பேசுறீங்க... யாரு நீங்க..?" வைரவன் சிரித்துக் கொண்டே கேட்டான்.
"டே பேசிக்கிட்டு நிக்கிறதுக்கா வந்தே... போடுடா அவனை மயிராண்டி... இவரு லெச்சர் கொடுக்குறாரு... அவரு விளக்கம் கேக்குறாரு... போட்டுட்டு போய்க்கின்னே இருக்கணும்..." என்றபடி வைரவன் அருகில் வந்தவன் அடித்திருந்த சாராய வாசம் ராம்கிக்கு குடலைப் புரட்டியது.
"பளார்" என வைரவன் கன்னத்தில் அரை விழ, வைரவன் அவர்களைத் திரும்பித் தாக்க, அடிதடி ஆரம்பமானது...ரோட்டில் போன மாணவ மாணவிகள் ஸ்தம்பித்து நின்றார்கள். எங்கிருந்தோ ஓடிவந்த  வைரவனின் நண்பன் ஒருவன் 'விடுங்கடா அவனை' என இருவரை எட்டி மிதித்தான். ஒருவன் இடுப்பில் இருந்து கத்தியை எடுத்து வைரவனை நோக்கிப் பாய, சைக்கிளைப் போட்டுவிட்டு அவனது கையை எட்டிப் பிடித்த ராம்கி, பின்னால் வந்தவனை விஜயகாந்த் பாணியில் காலால் எட்டி உதைக்க கத்தியைப் பிடித்த கைக்குச் சொந்தக்காரன் கைவலியால் கத்தியை கிழே விட்டுவிட்டு கதறினான்.
-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha on Sat 15 Aug 2015 - 13:20

அட! வைரவனுக்கு ராம்கி  அடிதடியில் உதவும் படி ஆச்சே! 

ராம்கி, சேகர் உரையாடல்கள் சுவாரஷ்யமாக இருக்கின்றது. அதிலும் படிப்புக்குறித்த  பேச்சுக்கள் அசத்தல்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Sat 15 Aug 2015 - 21:53

Nisha wrote:அட! வைரவனுக்கு ராம்கி  அடிதடியில் உதவும் படி ஆச்சே! 

ராம்கி, சேகர் உரையாடல்கள் சுவாரஷ்யமாக இருக்கின்றது. அதிலும் படிப்புக்குறித்த  பேச்சுக்கள் அசத்தல்!

ஆமா நம்ம ஹீரோ , ஹீரோயின் மனசுல ஸ்ட்ராங்கா உக்காரணுமே அக்கா...
கருத்துக்கு நன்றி.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Mon 17 Aug 2015 - 19:53

தொடர்கதை : கலையாத கனவுகள்13. தீர்ப்புக்கள் திருத்தப்படுமா?

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரியில் வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். காதலில் விழுந்தானா இல்லையா என்று போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் கல்லூரிகளுக்கா கட்டுரைப் போட்டிக்குச் சென்று முதல் பரிசை வெல்கிறான். திரும்பும்போது அவளுடன் சேர்ந்து அமர்ந்து பஸ்ஸில் பயணிக்கிறான்.  வைரவனைத் தாக்க வந்தவர்களை திருப்பி அடித்து மற்றவர்களுக்கு ஹீரோ ஆகிறான். கல்லூரி அவனுக்கு வில்லன் ஆகுமா?


இனி...

ராம்கியின் பிடிக்கு கதறியவனின் கையை விட்டு விட்டு அப்படியே அவனைப் பிடித்துத் தள்ளினான். ராம்கியின் வேகத்தை வைரவனும் மற்றவர்களும் வியப்பாய் பார்த்துக் கொண்டிருக்க, திடீரென கீழே கிடந்த கத்தியை எடுத்த ஒருவன் வேகமாக வைரவனை நோக்கி வீச, கையால் தடுத்தவனின் கையைப் பதம் பார்க்க ரத்தம் கொட்டியது. வைரவனின் கையில் ரத்தத்தைப் பார்த்த ராம்கி ஆவேசமாக அவனை எட்டி உதைய, மற்றொருவன் கீழே கிடந்த கல்லை எடுத்து எறிய அது ராம்கியின் தலையை பதம் பார்த்தது.
சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் பிரின்ஸ்பாலின் ஸ்கூட்டர் வரவும் வேகமாக நகர்ந்தார்கள். சண்டையிட்டவர்களும் சற்று நிறுத்த... அடிக்க வந்தவர்கள் மெதுவாக நகர்ந்தார்கள். தனது வண்டியை நிறுத்தி "என்ன வைரவா... என்ன பிரச்சினை இங்கே?" என்றார்.
"ஒ.. ஒண்ணுமில்ல சார்..." என்றான் ரத்தம் வடியும் கையை மறைத்தபடி.
"என்ன ஒண்ணுமில்ல... டேய் நீ யார்டா....எந்த இயர்டா... தலையில ரத்தம் வருது.... ரெண்டு பேரும் அடிச்சிக்கிட்டீங்களா..? என்ன வைரவா... ரோட்டுல ரவுடித்தனம் பண்ணிக்கிட்டு..."
"இவன் ஒண்ணும் பண்ணலை சார்... யாரோ திடீர்ன்னு வந்து என்னோட மோதினாங்க.... அதுல இவன் தலையில அடிபட்டிருச்சு..."
"காலேசுக்குள்ள ரவுடித்தனம் பண்ணுனீங்க இப்ப தெருவுக்கு வந்துட்டீங்க... ஆஸ்பத்திரி போயி கட்டுப் போட்டுக்கிட்டு என்னைய வந்து பாருங்க போங்க" என்றபடி வண்டியை எடுக்க, அப்போதுதான் வந்த ராம்கியின் நண்பர்கள் வைரவன் கையில் ரத்தத்துடனும் ராம்கி தலையில் ரத்தத்துடனும் நிற்க, இருவருக்கும் இடையில் அடிதடி நடந்திருக்குமோவென நினைத்துப் பதறினர்.
"என்னடா ஆச்சு... எதுக்குடா உன்னைய அடிச்சாரு..." கோபமாய்க் கேட்டான் பழனி.
"இல்லடா... அதெல்லாம் இல்ல... இது வேற..." சூழ்நிலையை விளக்க மனமின்றி பொதுவாகச் சொன்னான் ராம்கி. அதை விளக்கும் நிலையிலும் அவன் இல்லை. பிரின்ஸ்பால் என்ன சொல்வாரோ என்ற பயமே அவனது பேச்சில் தொக்கி நின்றது,
"என்னடா ஒண்ணுமில்ல... இவரு தங்கச்சிகூட பேசக்கூடாதுன்னு சொன்னாரு... கேட்டியல்ல... இப்ப என்னவாம்... ரவுடித்தனத்தை உங்கிட்ட காட்டுறாரா?" வெடித்தான் அண்ணாத்துரை.
"ஏய் என்ன... உதை வாங்கமா போகமாட்டியலா?" கர்ஜித்தான் வைரவனின் நண்பன்.
"டேய்... அவனுங்க பிரண்ட் தலையில அடிபட்டிருக்கவும் கோபமாக கேட்கிறாய்ங்க... விடு... யார் பார்த்தாலும் நாங்க ரெண்டு பேரும் சண்டை போட்டதாத்தான்  நினைப்பாய்ங்க... பிரின்ஸிபால் கேக்கலையா... அண்ணாத்துரை யாரு தெரியுமில்ல... நம்ம பூபாலன் அண்ணன் தம்பி... இங்க பாரு அண்ணா... எங்க ரெண்டு பேருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்ல... நானும் ராம்கியும் பேசிக்கிட்டு இருக்கும்போது யாரோ நாலு பேரு... அவனுங்களை அந்த இளங்கோதான் அனுப்பியிருப்பான்... அதை நான் டீல் பண்ணுற விதமாப் பண்ணிக்கிறேன்... ம்... நாலு பேரு என்னைய அடிக்க வந்தாய்ங்க... என்னைய கத்தியால குத்த வந்தப்போ ராம்கி அவனுங்களை அடிச்சான்... அதான்... புரியுதா..."
"மசுரு... எப்பவும் எங்களுக்கு நின்னுதானே வருவே... என்ன அவசரமா புடுங்குற வேலையிருக்குன்னு இப்பல்லாம் எங்களை விட்டுட்டு வாறே..." கோபமாய் கத்தினான் சரவணன்.
"இல்லடா... லைப்ரரி புக் கொடுக்க வேண்டி இருந்துச்சு.... அதான் சீக்கிரம் வந்தேன்... அப்பத்தான் அண்ணன் கூப்பிட்டு நேத்துப் போனதைப் பற்றி கேட்டார்... பேசிக்கிட்டு இருக்கும் போது நாலு பேரு வந்து... இப்படியாயிருச்சு..."
"சரி பழனி நீ இவனோட சைக்கிளை எடுத்து அந்தா அந்த வீட்ல போட்டுட்டு புக்ஸையும் டிபன் பாக்ஸையும் எடுத்துக்கிட்டுப் போ... நாங்க ஆஸ்பத்திரிக்குப் பொயிட்டு வாறோம்... வாடா... உக்காரு... வாங்கண்ணே.... முதல்ல ஆஸ்பத்திரி போவோம்..."
வைரவனும் நண்பணும் பைக்கில் போக, மற்றவர்கள் சைக்கிளில் கிளம்பினார்கள். சாப்பாடு கொட்டிக் கிடந்த டிபன்பாக்ஸில் மிச்சமிருந்த சாப்பாட்டையும் கொட்டிவிட்டு மூடி புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு சைக்கிளை அருகிலிருந்த வீட்டில் வைத்துவிட்டுக் கிளம்பினான் பழனி.
"என்னடா அவளை லவ்கிவ் பண்ணித் தொலைக்கிறியா?" கடுப்பாகக் கேட்டான் சரவணன்.
"அப்படியெல்லாம் இல்லடா..."
"என்ன மயித்துக்கு அவனுக்கிட்ட உறவு கொண்டாடுறே... அவனுங்க ஒரே சாதிக்காரனுக... இன்னைக்கு அடிச்சிக்குவானுங்க... நாளைக்கு சேர்ந்துக்குவாய்ங்க.. " என்று பேச்சை நிறுத்தி அண்ணாத்துரை பக்கம் திரும்பி "சாரி மச்சான்... நீயும் அவனுக சாதியின்னாலும் உன்னைய அப்படி நெனக்கலை... கோபத்துல சொல்லுற மாதிரி ஆயிடுச்சு... கோவிச்சுக்காதே..."
"இதுல கோபப்பட என்ன மச்சான் இருக்கு... இதானே உண்மை... ராம்கி... இனி அவனுக டார்கெட் நீயாத்தான் இருக்கும்... தேவையில்லாம இதுக்குல்ல மாட்டிட்டே... எவனோ என்ன ஆனா உனக்கென்ன...  எங்க அண்ணோட அடிச்சுக்கிட்டு கத்திக்குத்து... போலீசு கேசுன்னு திரிஞ்சு போஸ் தங்கச்சியத்தான் எங்கண்ணனுக்கு கட்டணுமின்னு ரெண்டு குடும்பமும் பேசிக்கிறாங்க... இப்ப அண்ணனும் போசும் மச்சான் போட்டுக்கிறாங்க... தெரியுமா... சரவணன் சொல்றது சரிதான்... இன்னைக்கு அடிச்சுக்கிட்டு நாளைக்கு கூடிப்பாய்ங்க... உன்னோட குடும்பச் சூழலை நெனச்சுப் பாத்து எதுலயும் எறங்கனும்... மச்சான்னு காப்பாத்தியிருந்தியன்னா நாளைக்கு அவனோட தங்கச்சிய நீ லவ் பண்றேன்னு தெரிஞ்சா இப்ப எதிரியா இருக்க இளங்கோகூட சேர்ந்து உன்னைய போட்டுடுவான் இந்த வைரவன்... புரிஞ்சுக்க..." உண்மையை எடுத்துச் சொன்னான் அண்ணாத்துரை. அவனைப் பெருமையாகப் பார்த்தான் சரவணன்.
"இல்லடா... வைரவன்னு இல்ல யாரா இருந்தாலும் பாத்துக்கிட்டு எப்படிடா இருக்க முடியும் சொல்லுங்க... கண் முன்னாடி குத்த வாறாங்க... சும்மா விலகிப் போகச் சொல்லுறீங்களா..? அப்படி குடும்பத்துல பிறக்கலைடா நான்...  பாக்கத்தான் பொசுக்குன்னு இருப்பேன்... விவசாயம் பார்த்து உரமேறிப் போன உடம்புதாண்டா இது... எதா இருந்தாலும் சந்திக்கிற சக்தி எனக்கிட்ட இருக்குடா..."
"இந்தப் பிரச்சினை இத்தோட முடியாது... இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ தெரியாது... சரி... சாயங்காலம் அம்மாகிட்ட என்ன சொல்லப்போறே... கட்டோட போன அம்மாவுக்கு உயிரே போயிடுமேடா..." கவலையோடு கேட்டான் பழனி.
"அதான்டா யோசனையா இருக்கு... அம்மா ரொம்ப வருத்தப்படும்... அதைவிட சீதா அழுதுடுமுடா... சின்ன முள்ளு கால்ல குத்தினாலே... வலிக்குதாடா வலிக்குதாடான்னு கால்லையே தடவித் தடவிக்கிட்டு உக்காந்திருக்கும்... தலையில அடிபட்டு கட்டோட போனா... ம்... சரவணா அம்மாகிட்ட கீழ விழுந்துட்டதா சொல்லிடுறேன்...உங்ககிட்ட கேட்டாலும் அதையே சொல்லிடுங்கடா..."
"சரி... இனி புவனாவோட பார்வை உன்மேல ரொம்ப நெருக்கமாகலாம்... அதைத் தவிர்க்கப்பாரு அம்புட்டுத்தான் நான் சொல்வேன்..." என்றான் அண்ணாத்துரை.
"இப்ப எதுக்குடா அவங்களை இழுக்கிறே... அவங்களுக்கு ரவுடித்தனமே பிடிக்காது... அப்புறம் எப்படி இந்த புது ரவுடியைப் பிடிக்கும்... சரி அதை நான் பாத்துக்கிறேன்."
"ம்... இனி கவனமா இரு எல்லா விசயத்துலயும்... எங்களை விட்டுட்டு தனியா எங்கயும் போகாதே... எது வேணுமின்னாலும் நடக்கலாம்..."
"ம்..."
ஸ்பத்திரியில் இருந்து திரும்பிய இருவரும் பிரின்ஸ்பால் அறைக்கு முன்னர் நின்றனர். அதற்குள் இந்த விசயம் கல்லூரி முழுவதும் பரவியிருந்தது. மாணவர்கள் ஆங்காங்கே கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். வைரவனை ஆள் வைத்து அடித்தது இளங்கோதான் என்று பரவலாகப் பேசிக் கொண்டார்கள். கல்லூரி வளாகத்துக்குள் இளங்கோவோ அவனின் நண்பர்களோ இல்லவே இல்லை.... எங்கோ போனார்கள்... அவர்கள்தான் இதற்கு காரணமா என்பது எதுவும் தெரியாமலேயே பேச்சில் அவர்களது பெயர் அடிபட்டுக் கொண்டிருந்தது.
முதல்வர் அறைக்குள் எல்லாத்துறைத் தலைவர்களும் கூடி பேசிக்கொண்டிருந்தனர். வாசலில் நின்று கொண்டிருந்த பியூன் முருகனிடம் மெதுவாக வைரவன் பேச்சுக் கொடுத்தான்.
"என்னண்ணே.... என்ன சொல்லுறாய்ங்க..."
"என்னத்தை பேசப்போறாங்க... எப்பவும் போலத்தான்....சஸ்பெண்ட் பண்ணுவாங்க... இரு உள்ள பொயிட்டு வாறேன்..."
"ம்... மெதுவா பாத்துட்டு வா..."
உள்ளே சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்த முருகன், "வைரவா... உன்னைய சஸ்பெண்ட் பண்ண எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க போல... இவனைப் பற்றித்தான் இப்போ பேசுறாங்க... கேவிஎஸ் நல்லாப் படிக்கிற பையன்... இதுவரைக்கும் எந்தப் பிரச்சினைக்கும் போகாதவன்... அவனை மன்னிச்சு விடுங்கன்னு சொல்லுறாரு... சஸ்பென்ஸனுக்கு ஒத்துக்க மாட்டேங்கிறாரு... தமிழய்யா வேற சப்போர்ட் பண்ணுறாரு... மத்தவங்க காலேசுக்கு வெளிய பண்ணின ரவுடித்தனத்தால காலேசுக்கு கெட்ட பேரு நடவடிக்கை எடுத்தாகணுமின்னு நிக்கிறாங்க... பார்ப்போம்..."
காரசாரமான விவாதம் முடிந்ததும், இருவரையும் பிரின்ஸ்பால் அழைப்பதாக உள்ளேயிருந்து வந்த ரமேஷ் சொல்ல, இருவரும் உள்ளே சென்றனர்.
"வைரவா... உன்னால காலேசுக்கு கெட்ட பேருதான்... நீ படிக்க வந்த மாதிரி தெரியலை...எப்பவும் அடிதடி... சண்டைதான்.... இல்லேன்னா குடிச்சிட்டு வந்து கிளாஸ்ல ஆட்டம் போடுறது... உங்க துறைத்தலைவரே உன்னய  பதினைந்து நாள் சஸ்பெண்ட் பண்ணனுமின்னு சொல்லிட்டாரு..."
"சார்... என்னய அடிக்க ஆள் அனுப்பினது அந்த இளங்கோதான்... அவனை விட்டுட்டு எனக்கு மட்டும் எதுக்குத் தண்டனை..."
"இங்க பாரு... அவன் பண்ணினான் இவன் பண்ணினான்னு யூகத்துல எல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது... நீ தப்புப் பண்ணுனதை நானே பார்த்தேன்... பதினைந்து நாள் காலேசு வளாகத்துக்குள்ள உன்னையப் பாக்கவே கூடாது... சரியா?"
வைரவன் பேசாமல் நிற்க, "நீ பர்ஸ்ட் இயர்தானே?" என்றார் ராம்கியைப் பார்த்து.
"ம்..."
"நல்ல பையன்.... படிக்கிற பையன்... அப்படின்னு எல்லாம் உங்க புரபஸர் உனக்கு சர்டிபிகேட் கொடுக்கிறாரு... தமிழய்யாவும் உனக்கு சப்போர்ட் பண்ணுறாரு.. ரவுடித்தனம் பண்ணுனா தண்டனை கொடுத்தாத்தான் திருந்துவீங்க... ஆனா இந்தா நிக்கிறான் பாரு எத்தனை தடவை தண்டனை கொடுத்தாலும் மறுபடியும் அருவாளோ கத்தியோ எடுத்துக்கிட்டு எவனையாவது அடிச்சிக்கிட்டுத்தான் இருப்பான் ... இவன் திருந்தமாட்டான்.,.. இந்தா பாரு சர்க்குலர் ரெடியா இருக்கு... நேத்து கட்டுரைப் போட்டியில முதல் பரிசு வாங்கி காலேசுக்கு பெருமை சேர்த்து இருக்கே... இப்பத்தான் தமிழய்யா சொன்னாரு... ஆனா இன்னைக்கு ரவுடித்தனம் பண்ணிக்கிட்டு ரோட்டுல சண்டை போட்டிருக்கே... ம்... படிக்கிற பயலுக்கு கையில புத்தகம்தான் இருக்கணுமேயொழிய கத்தி, கம்பெல்லாம் வரக்கூடாது... தெரியுதா..."
"புரியுது சார்... ஆனா கண்ணு முன்னாடி ஒருத்தரை கத்தியால குத்தப் போறாங்க... எல்லாரு மாதிரியும் பாத்துக்கிட்டுப் போறவனா எங்க வீட்ல என்னைய வளக்கலை... அதான் தடுத்தேன்..."
"எப்படி சூழல்ல இதெல்லாம் செய்யணுமின்னு தெரிஞ்சிருக்கணும்... முதல் முறை நீ வந்திருக்கே... ஆசிரியர்கள் வேற உனக்கு சப்போர்ட் பண்ணுறாங்க... அதனால உன்னைய சஸ்பெண்ட் பண்ணலை... ஆனா உங்கப்பாவை கூட்டிக்கிட்டு என்னைக்கு வாறியோ அன்னைக்கு வகுப்புக்குள்ள போகலாம்..."
"சார்... எனக்கு..."
"என்ன... இதுதான் எங்க முடிவு... மாத்தெல்லாம் முடியாது..."
"இல்ல சார்... அவருக்கு அப்பா தவறிப் பொயிட்டாரு... அம்மா மட்டும்தான்..." ஐயா மெதுவாகச் சொன்னார்.
"ஓ.... சாரி... அம்மா வளக்குற பிள்ளை குடும்பத்தை பத்தி நெனைக்க வேண்டாம்... சரி நாளைக்கு அம்மாவை கூட்டிக்கிட்டு வா..."
"ம்..."
"சரி நீங்க போகலாம்... என்னைக்கு அம்மாவோட வாறியோ அப்ப கிளாஸ்க்குப் போகலாம்... வைரவா நீ பதினைந்து நாள் இந்தப் பக்கம் வரக்கூடாது... சரியா..?" என்று பிரின்ஸ்பால் கேட்க, தலையை ஆட்டிவிட்டு இருவரும் வெளியே வந்தனர். அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்த நண்பர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு என்னாச்சு என வினவ, வைரவன் விளக்கமாய் சொன்னான்.
"சாரிடா..." ராம்கியின் கைகளைப் பிடித்துக் கொண்டான் வைரவன்.
"எதுக்குண்ணே...?"
"என்னாலதானே உனக்கு இந்தப் பேரு..."
"விடுங்கண்ணே... யாரா இருந்தாலும் நான் பாத்துக்கிட்டு வந்திருக்கமாட்டேன்... ஆன எங்க அம்மாகிட்ட அடிதடி சண்டையின்னு சொல்லி இங்க கூட்டியார முடியாது. அதோட கனவு நொறுங்கிப் போச்சேன்னு ஒப்பாரி வச்சிடும்... எப்படிச் சொல்லிக் கூட்டியாந்து நான் கிளாஸ்க்குப் போவேன்னு தெரியலை.... அதான் எனக்குப் பயமா இருக்குண்ணே..."
"நீ வீட்ல சொல்ல வேண்டாம்... அம்மாதானே வேற வழி இருக்கு..."
"எப்படிண்ணே... என்ன வழி இருக்கு?"
"இங்க யாருமே அப்பா அம்மாவைக் கூட்டியாறது இல்லை... எல்லாருக்குமே வாடகை அப்பா அம்மாதான்... எங்கப்பாவை பெரும்பாலும் எல்லாருக்கும் தெரியும். ஆனா எனக்கு அப்பாவா வர்றது எங்ககூரு முத்துச்சாமி அண்ணந்தான்... ஆனா யாரும் எதுவும் கேக்க மாட்டாங்க... உனக்கு ஒரு அம்மாவை நாளைக்கு நான் ரெடி பண்றேன்... பேசாம வீட்டுக்குப் போ..."
"இரவல் அம்மாவா... சரியா வருமா...?"
"அவங்க நடிப்பு தத்ரூபமா இருக்கும். நாளைக்கு காலையில பத்துமணிக்கு காலேசுக்கு வெளிய உங்கம்மா காத்திருப்பாங்க... சரியா?"
"சரிண்ணே... பிரச்சினை வராதுல்ல..."
"அதெல்லாம் வராது... கொஞ்சம் ஒவர் ஆக்டிங்கா இருக்கும்... பொறுத்துக்கணும் சரியா?"
"சரி..." 
இனி கல்லூரியில் இருக்க வேண்டாம் வீட்டுக்குப் போகலாம் என நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு சைக்கிளை எடுத்தவன் மனசுக்குள் நடந்த சண்டையும் அதன் பின்னான நிகழ்வுகளும் மாறி மாறி காட்சிகளாய் வர, சை... என்று தன்னைத்தானே நொந்துகொண்டான். அவனது சைக்கிள் கல்லூரியை விட்டு வெளியே செல்ல, புவனாவின் சைக்கிள் வேகமாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தது.
-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Sat 22 Aug 2015 - 20:19

தொடர்கதை : கலையாத கனவுகள்14. பதறும் பாவை

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரியில் வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். காதலில் விழுந்தானா இல்லையா என்று போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில் கல்லூரிகளுக்கா கட்டுரைப் போட்டிக்குச் சென்று முதல் பரிசை வெல்கிறான். திரும்பும்போது அவளுடன் சேர்ந்து அமர்ந்து பஸ்ஸில் பயணிக்கிறான்.  கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறில் அடிபட்டதுடன் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு அம்மாவைக் கூட்டி வந்தால் வகுப்பிற்கு செல்லலாம் என்று சொல்லப்படுகிறது.


இனி...

ல்லூரிக்குள் இருந்து ராம்கி வெளியாக, புவனா உள்ளே நுழைந்தாள். தன்னைக் கடந்தது ராம்கிதானே என்று நினைத்துத் திரும்பியவள் அது உறுதியானதும் சைக்கிளில் இருந்து காலை ஊன்றியபடி "ராம்... ராம்..." என்று கூப்பிட்டாள்.
அவள் கூப்பிட்டது ராம்கி காதில் விழுகாமல் இல்லை... இருந்தும் கேட்காதவனாக சைக்கிளை மிதித்தான். அவளுடன் கல்லூரிக்குள் பேசக்கூடாது என்றவன் பின்னால் வருவான். அவன் வரும் போது கல்லூரி வாசலில் பேசிக்கொண்டு நின்றால் என்ன செய்வான் என்று தெரியாது. அதுவும் தலையில் கட்டுடன் அவளுடன் பேசப் போனால் துருவித் துருவிக் கேட்பாள். இப்போ இருக்கும் சூழலில் இதெல்லாம் சரியில்லை என்பதால் சைக்கிளை வேகமாக மிதித்தான்.
அவன் தலையில் கட்டு இருப்பதைப் பார்த்து என்னவாக இருக்கும்... எப்படி அடிபட்டிருக்கும். ஏன் திரும்பாமல் போகிறான்... என்ற யோசனையில் சென்றவளை வைரவனின் பைக் கடக்க, அவன் அரைக்கைச் சட்டை அணிந்திருந்ததால் கையில் போட்டிருந்த கட்டு நன்றாகத் தெரிந்தது. அவளது மனது ராம்கியின் தலையையும் வைரவனின் கையையும் முடிச்சிட்டுப் பார்த்தது.
வைரவன் ராம்கியை அடிக்க... அவன் திருப்பி இவனைத் தாக்கியிருப்பானோ... எதனால் இருவருக்கும் சண்டை வந்திருக்கும்... காரணம் நானாக இருப்பேனோ... பஸ்ஸில் இருவரும் சேர்ந்து வந்ததை யாராவது இவனிடம் சொல்லியிருப்பார்களோ?... எதற்காக இருவருக்கும் சண்டை... பலவித குழப்பத்தில் சைக்கிளை ஸ்டாண்டில் வைத்துவிட்டு தோழிகளைத் தேடினாள்.
அவர்கள் மரத்தடியில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க, அவர்களின் அருகில் சென்றாள்.
"என்னடி... காலையில ஆளைக் காணோம்..."
"வயித்தவலிடி... அதான் வரலை..."
"அப்புறம் எதுக்கு இப்ப வந்தே.. ஒருதா நாளைக்கு வரவேண்டியதுதானே..."
"பொழுது போகலடி..."
"அது எப்படிப் போகும்?" என்றாள் ஒருத்தி குதர்க்கமாக.
"சும்மா இருங்கடி... என்னடி பிரச்சினை.... எங்கண்ணன் கட்டோட போறான்..."
"உங்க அண்ணனை மட்டும்தான் பார்த்தியா..." கேட்டபடி அவள் முகம் பார்த்தாள் ஒருத்தி.
"ஆமா... ஏன்... எங்கண்ணனும் அவன் பின்னாடி சுத்துற வானரத்துல ஒண்ணும்தான் போகுது..."
"அப்ப திருவாளர்.ராமகிருஷ்ணனை நீ பார்க்கலை..."
"இல்ல... பாக்கலைடி..."
"சரி... உங்க அண்ணனும் ராம்கியும்..."
"சண்டை போட்டுக்கிட்டாங்களா... ராம்கிக்கு என்னாச்சு...?"
"ஏண்டி பதறுறே... அண்ணன்காரன் கையில கத்திக்குத்து வாங்கிப் போறான்... அதுக்குப் பதறாம... அடுத்தவனுக்குப் பதறுறே...?"
"சொல்லுடி... சும்மா சும்மா சீண்டிக்கிட்டு அவனைத்தான் பாத்துட்டேனே... ராம்கியை பாக்கலை அதான் கேட்டேன்..."
"ம்... அவங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கலை..."
"அப்பா...."
"எதுக்குடி இப்ப அப்பாவைக் கூப்பிடுறே?"
"அவங்க சண்டை போடலையில்ல அதான்... ஆமா அப்புறம் எப்படி அடி..."
"அதுவா... உங்கண்ணனும் ராம்கியும் காலேசுக்கு வெளியே பேசிக்கிட்டு இருக்கும் போது நாலஞ்சு பேரு வந்து உங்கண்ணனை அடிச்சிருக்காங்க... அப்ப ராம்கி அவங்களை தடுத்து அடிச்சிருக்கான்... அந்த சண்டையில அவனுக்கு மண்டை உடஞ்சி போச்சு... உங்க அண்ணனுக்கு கையில கத்திக்குத்து..."
"அய்யய்யோ.. காயம் பலமா பட்டிருக்காமா?"
"யாருக்கு...அண்ணனுக்கா... அத்தானுக்கா..."
"சீ.... சும்மா சீண்டாதிங்கடி..."
"ஏண்டி... அவ அண்ணனைப் பத்தி கவலைப்படுறவளா இருந்தா பாத்ததும் சைக்கிளை நிறுத்தி கேட்டிட்டு வந்திருக்க மாட்டாளா? இந்தமான் அந்தமானைக் கேக்குது..."
"அதான் தெரியுமே... நல்ல காயம்தான்... கல்லைவிட்டு எறிஞ்சிட்டாங்களாம்... காலேசுல உங்கண்ணனை பதினஞ்சு நாள் சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்களாம்... ராம்கியை..."
"ராம்கியை...?"
"ஏண்டி பதறுறே... இவ்வளவு சொன்னவ அதை சொல்ல மாட்டேனா.... அம்மாவை என்னைக்கு கூட்டிக்கிட்டு வாறானோ அன்னைக்கு வகுப்புக்கு போகலாம்ன்னு சொல்லியிருக்காங்களாம்... அவங்க புரபஸரும் தமிழய்யாவும் அவனுக்கு சப்போர்ட்டா பேசினாங்களாம்... இப்பதான் அவங்க கிளாஸ் மல்லிகா சொன்னா... பாத்துடி அவ அவனப் பத்தி டீடெயிலா வச்சிருக்கா, எனக்கென்னமோ அவ உனக்கு எதிரியா வந்துடப்போறான்னு நினைக்கிறேன்... ராம்கிக்கு அடிபட்டிருச்சுன்னு புலம்புறான்னா பாறேன்..."
"ம்.... அவ புராணம் இப்ப எதுக்கு... ஐயாகிட்ட பேசி பிரின்ஸ்பாலைப் பார்த்து ராம்கியை மன்னிச்சு விடச் சொல்லலாமாடி..."
"ஏண்டி உனக்கு இந்த வேலை.... எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு... நாளைக்கு அவங்க அம்மாவை கூட்டிக்கிட்டு வந்தா பிரச்சினை முடிந்தது... நீ போயி பேசி உனக்கும் அவனுக்கும் என்ன அப்படின்னு புரபஸர்ஸ் ஆராய்ச்சி பண்ண... பசங்க டாய்லெட் சுவரெல்லாம் உங்களைப் பத்தி கரியால கவிதை எழுத...  உங்கண்ணன் அடுத்த சண்டைக்கு தயராக நீயே எடுத்துக் கொடுக்குறியா.... சும்மா இரு..."
"இல்லடி எனக்கு ராமைப் பார்க்கணுமின்னு..."
"என்னடி ராமகிருஷ்ணன் ராம்கியானார்.... இப்ப ராம் ஆயிட்டாரா... அதுசரி... ஸ்பீடாத்தான் போகுது... ம்.... புவனாராம் நல்லாத்தாண்டி இருக்கு... அவனுக்கு ஒண்ணுமில்ல... நாளைக்கு காலையில வருவான்... அப்ப பாத்துக்கலாம்... இப்ப கிளாஸ்க்குப் போகலாம்.... வாங்கடி..."

"என்னடா... என்னாச்சு...?" பதறினாள் சீதா.
"சைக்கிள்ல ஒரு பைக்குக்காரன் மோதிட்டாங்க்கா..."
"ஆத்தாடி... வேற எங்கயும் அடிபட்டிருக்கா... காமி பாப்போம்..."
"இல்லக்கா... மோதினதும் பாலன்ஸ் பண்ணி நிக்கப் பாத்து கீழே விழுந்தா கல்லுக்கிடந்து குத்திப்புடுச்சு... அதான் வேற ஒண்ணுமில்ல... அந்த ஆளு மேலயும் தப்பில்லை... அப்புறம் அவரே ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப் போயி காமிச்சு விட்டார்."
"படாத எடத்துல அடி பட்டிருந்தா என்னாகிறது.... ஏண்டா பாத்துப் போப்படாதா?... முகமே வீங்கியிருக்க மாதிரி இருக்கு... வலி அதிகமா இருக்காடா...?" புலம்பினாள்.
"இல்லக்கா... சின்னக் காயம்தான்... பயப்படாதே... ஆமா... அம்மா எங்க...?"
"மாடு மேய்க்கப் போயிருச்சு.... நீ சாப்டியா..?"
"எனக்கு சாப்பாடு வேண்டாம்.... எதுக்கு அது போச்சு... நீ போகலியா... வெயில்ல அலஞ்சிட்டு வந்து தலவலிக்கிதுன்னு கெடக்கவா.."
"ம்... கம்மாக்குள்ள மேய்ப்பாங்க... முனியய்யா கோயில் இருக்கு... அதான் ரெண்டு நாளா அது போகுது.. கொஞ்ச நேரம் தூங்கு... போ..."
"சரி... அம்மா வந்தா உளறி வக்காதே... லேசான அடிதானாம்ன்னு சொல்லு..." என்றபடி படுத்தவன் வலி கொடுத்த அசதியில் உறங்கிப்போனான்...
"அடி ஆத்தி... இப்படி அடிபட்டு வந்து படுத்துக்கெடக்கானே...? ஆத்தா மாரி... உன்னய நல்லாத்தானே கும்பிட்டுக்கிட்டுக் கெடக்கேன்... எம்புள்ளகளுக்கு மட்டும் ஏன் இப்படி கசுட்டத்தைக் கொடுக்கிறே...?"
"அம்மா... சின்ன அடிதான்... பைக்காரன் தெரியாம  மோதிட்டானாம்..."
"அந்த கட்டையில போறவன் கண்ணை என்ன பின்னாலயா வச்சிக்கிட்டு வந்தான்... மொட்டையாப் போவான்... நாசமத்துப்போவான்..."
அம்மாவின் கத்தல் கேட்டு முழித்தவன், "ஐயோ அம்மா எதுக்கு கத்துறீங்க.... சின்ன அடி... எதிர்பாராம நடந்திருச்சு... என்ன பண்றது...விடுங்க.... எனக்கு வலியெல்லாம் இல்ல சும்மா மருந்து வச்சிக் கட்டினாங்க.. நாளைக்கு கட்டை அவுத்துடுவாங்க... ஒண்ணுமில்லேம்மா"
"ஏம்மனசு கெடந்து அடிக்கிறது உங்களுக்கு எங்க தெரியும்... இதே அடி பலமாப் பட்டிருந்தா... ம்... ஆத்தா மாரி சீக்கிரம் குணமாக்கிவிடு..." என்று கோவிலை நோக்கிக்  கும்பிட்டாள்.
றுநாள் எப்போது விடியும் ராம்கியைப் பார்ப்போம் என்று புவனாவும் சொன்னபடி வைரவண்ணன் அம்மாவை ரெடிபண்ணி விடுவாரா என்றும் ராம்கியும் தவிப்போடு காத்திருக்க, அன்றைய இரவு இருவருக்கும் தூக்கமில்ல இரவாகக் கழிந்து கவலையுடன் விடிந்தது. 
-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha on Sun 23 Aug 2015 - 19:46

கதை படிக்கணும். பின்னூட்டமிடனும் குமார். கொஞ்சம் முடியல்ல.  மொத்தமாய்  நாளை பின்னூட்டம் தரேன்பா! மன்னிக்கணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Nisha on Thu 27 Aug 2015 - 22:46

வைரவன், ராம்கியின் நட்பும்,  புவனாவின் பதறலும் காலேஜ் வாழ்க்கையின் அடிதடியும் காதலுமாய் கதை கிராமியப்பாணியில் அருமையாக செல்கின்றது குமார். 

அண்ணனுக்கு ஒன்னுன்னதும் பதறாத  புவனா ராம்கிக்காக பதறுவதாய் காட்டுவது  பெண்களை, அவர் தம் குணங்களை  நன்கு கவனித்து எழுதி இருக்கிங்க என்பதை புரிய வைக்கின்றது. 

அடுத்து தொடருங்கள்”.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by சே.குமார் on Fri 28 Aug 2015 - 8:53

Nisha wrote:வைரவன், ராம்கியின் நட்பும்,  புவனாவின் பதறலும் காலேஜ் வாழ்க்கையின் அடிதடியும் காதலுமாய் கதை கிராமியப்பாணியில் அருமையாக செல்கின்றது குமார். 

அண்ணனுக்கு ஒன்னுன்னதும் பதறாத  புவனா ராம்கிக்காக பதறுவதாய் காட்டுவது  பெண்களை, அவர் தம் குணங்களை  நன்கு கவனித்து எழுதி இருக்கிங்க என்பதை புரிய வைக்கின்றது. 

அடுத்து தொடருங்கள்”.
தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா...
இனி புவானாவுக்கு ராம்கி மட்டுமே...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : கலையாத கனவுகள்... !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum