சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கோடீஸ்வரரை மணப்பது எப்படி?

Go down

Sticky கோடீஸ்வரரை மணப்பது எப்படி?

Post by anuradha on Sun 2 Aug 2015 - 12:11

கோடீஸ்வரரை மணப்பது எப்படி? இணையத்தை கலக்கும் கேள்வியும் பதிலும்!


கோடீஸ்வரரை மணப்பது எப்படி? எனும் இளம்பெண் ஒருவரின் கேள்விக்கு நயமாக, ஆனால் நெத்தியடி ரகமாக ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி அளித்தாக சொல்லப்படும் பதில் இணையத்தில் உலா வரத்துவங்கி கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த கேள்விக்கு பதில் அளித்தவர் உண்மையில் முகேஷ் அம்பானி தானா என்று பார்ப்பதற்கு முன், அந்த இளம்பெண்ணின் கேள்வியை பார்த்து விடலாம்.

கோடீஸ்வரரை திருமணம் செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? எனும் தலைப்பிலான அந்த கேள்வியில், இங்கு சொல்ல இருப்பதை நேர்மையாக சொல்கிறேன். எனக்கு 25 வயது ஆகப்போகிறது. நான் அழகாக, ஸ்டைலாக இருக்கிறேன். ஆண்டுக்கு 100 கோடிக்கும் மேல் சம்பாதிக்கும் ஒருவரை நான் மணந்து கொள்ள விரும்புகிறேன். .... இது போன்ற ஒருவரை மணந்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?





இப்படி கேட்டிருந்தவர், பணக்கார பேச்சுலர்களை எங்கே சந்திக்கலாம், பணக்காரர்களின் மனைவிகள் பெரும்பாலும் அழகாக இல்லாமல் இருப்பது ஏன்? கோடீஸ்வரர்கள் காதலியையும், மனைவியையும் எப்படி தீர்மானிக்கின்றனர்? என்றெல்லாமும் கேட்டிருந்தார். கேள்வி கேட்டவர் பூஜா சோகன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த கேள்வியின் கீழ், முகேஷ் அம்பானியின் தத்துவார்த்தமான பதில் எனும் தலைப்பில், நீளமான பதில் விளக்கம் அமைந்திருந்தது. உங்கள் கேள்வியை ஆர்வத்துடன் படித்தேன் என துவங்கும் அந்த விளக்கத்தில் ஒரு முதலீட்டாளர் பார்வையில் இதற்கு பதில் அளிக்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிறகு, உங்கள் நிபந்தனையை நான் பூர்த்தி செய்தாலும் என்னால் உங்களை மணந்து கொள்ள முடியாது. அது மோசமான வர்த்தக முடிவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக, நீங்கள் அழகுக்கு பணத்தை மாற்றிக்கொள்ள நினைத்தாலும் அதில் உள்ள சிக்கல் என்ன என்றால் உங்கள் அழகு தேய்மான ரகத்தை சேர்ந்தது. ஆனால், எனது சொத்து வளரக்கூடியது. அதிலும் உங்கள் அழகு ஆண்டுக்கு ஆண்டு குறையும் என்றால், எனது சொத்து வளர்ந்து கொண்டே இருக்கும். மேலும் 10 ஆண்டுகளில் உங்கள் அழகுக்கு மோசமான மதிப்பே இருக்கும், என தொடரும் அந்த பதிலில், 100 கோடி வருமானம் உள்ள யாரும் உங்களை மணந்து கொள்ளும் அளவுக்கு முட்டாள் அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது. அதைவிட ஏன் நீங்கள் ஆண்டுக்கு 100 கோடி சம்பாதிக்க கூடிவராக மாறக்கூடாது, கோடீஸ்வரரை மணப்பதை விட அது சாத்தியம் என முடிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிலுக்கு கீழே முகேஷ் அம்பானி என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கேள்வி பதில் சுவாரஸ்யமாக இருந்தாலும், இந்த கேள்வி நிஜமாக கேட்கப்பட்டதா? இதற்கு பதில் சொன்னவர் முகேஷ் தானா என்பதற்கு எந்த நம்பகமான தகவலும் இல்லை.





திடீரென இந்த கேள்வி பதில் இணையத்தில் உலாவத் துவங்கியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த கேள்வி எந்த இடத்தில் கேட்கப்பட்டது என்ற தகவலும் இல்லை; எப்போது கேட்கப்பட்டது என்ற விவரமும் இல்லை. ஒரு இணைய குழுவில் கேட்கப்பட்டது என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன் ஒரு சில இணையதளங்களில் இந்த கேள்வி பதில் வெளியானது. ஆனால், உண்மையில் இந்த கேள்வி பதில் 2 ஆண்டுகளுக்கு முன்னரே ஃபேஸ்புக் மற்றும் லிங்க்டு இன் தளங்களில் பகிரப்பட்டுள்ளது. சமீபத்தில் மீண்டும் ஒருவர் இதை லிங்க்டு ஒன் தளத்தில் எடுத்து போட்டிருக்கிறார்.

அது மட்டுமல்ல, இணையத்தில் தேடினால் இதே கேள்வி அமெரிக்க பெண்ணால் கேட்கப்பட்டு, அந்நாட்டு கோடீஸ்வரர் ஒருவர் அளித்த பதிலையும் பார்க்க முடிகிறது. இதில் எது அசல், எது நகல் என்று தெரியவில்லை. இதற்கு முன்னரே கூட இணையத்தில் இதுபோன்ற கேள்வி பதில் உலா வந்திருக்கலாம். லிங்க்டு இன் விவாத்ததிலேயே பலரும் இது முகேஷ் அம்பானியின் பதில் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளனர். அமெரிக்காவின் ஜேபி மோர்கன் நிறுவன தலைவரின் பதில் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆக, தேவையில்லாமல் முகேஷை இழுத்து விட்டிருக்கினர் போலும். இணையத்தில் வெளியாகும் தகவல்களில் எப்போதும் எச்சரிக்கை தேவை என்பதை தான் இந்த செய்தி உறுதிபடுத்துகிறது. அது மட்டுமல்லாமல் பெண்கள் பணத்திற்காக ஆசைப்படுபவர்கள் போன்ற தோற்றத்தை முன்வைத்து அவர்களை இழிவுபடுத்தவும் செய்கிறது.

செய்தி தொடர்பான இணைப்புகள்;

1.https://www.facebook.com/CurrentAffairs ... 2686837138
2.https://www.linkedin.com/pulse/reply-fr ... thasarathi
3.https://www.linkedin.com/grp/post/4773799-241507775
4. http://madamenoire.com/403169/pretty-hu ... -banker/2/

-சைபர்சிம்மன்

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: கோடீஸ்வரரை மணப்பது எப்படி?

Post by rammalar on Mon 21 Mar 2016 - 16:59

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum