சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

குறுந்தொடர் : கொலையாளி யார்?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

Sticky குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Sat 26 Sep 2015 - 20:06

First topic message reminder :


குறுந்தொடர் பகுதி -1 : கொலையாளி யார்? ---- படிக்க கீழே செல்லவும்.

குறுந்தொடர் பகுதி -2 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -3 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -4 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -5 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -6 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -7 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -8 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -9 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -10 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -11 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -12 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி - 13: கொலையாளி யார்?

குறுந்தொடர்: பகுதி - 14. கொலையாளி யார்?

குறுந்தொடர்: பகுதி - 15. கொலையாளி யார்?

குறுந்தொடர்: பகுதி - 16. கொலையாளி யார்?


'பாடி எங்க இருக்கு..?', 'யார் முதலில் பார்த்தது..?' என்ற கேள்வியெல்லாம் கேட்காமல் "அந்தப் பெண் என்ன சொல்றா?" என்ற கேள்வியை சப்-இன்ஸ்பெக்டர் பொன்னம்பலத்திடம் கேட்டபடி காரில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் சுகுமாரன், போலீசுக்கே உரிய மிடுக்குடன் இருந்தார். முகத்தில் போலீஸ்காரனுக்கே உரிய கடுமை கலந்திருந்தது.
"மேலதான் சார் இருக்கா?" என்று பவ்யமாய்ச் சொன்ன பொன்னம்பலத்துக்கு சுகுமாரைவிட நான்கைந்து வயது அதிகமிருக்கும். லேசான தொப்பையுடன் இருந்தார்.
"ம்... எதாவது சொன்னாளா?" கேட்டபடி மிடுக்காய் நடந்தார் சுகுமாரன்.
பொன்னம்பலமும் அவருக்கு இணையாக நடந்தபடி "அவகிட்டயிருந்து உருப்படியான தகவல் இல்லை..." என்றார்.
"உங்களுக்கு அவமேல சந்தேகம் இருக்கா?"
"அப்படித் தோணலை சார்... காலையில காபியோட போயிருக்கா... அப்பத்தான் முதலாளி கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்த்திருக்கா..."
"ம்..." 
"அவ சொல்லித்தான் செய்தி வெளிய தெரிஞ்சிருக்கு..."
"ம்..." என்றபடி அந்த அறைக்குள் நுழைந்தார். அங்கே... கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார் தணிகாசலம்... தொழிலதிபர் தணிகாசலம்.
"என்ன வெறியோ தெரியலை... இப்படி கொன்னிருக்காங்க... இன்னும் ஆம்பூலன்ஸ் வரலையா.... பிரான்சிக் ஆட்கள் எங்கே...?"
"ஆம்பூலன்ஸ் இப்ப வந்துரும்... பிரான்சிக் செல்வக்குமார் வந்து கைரேகையெல்லாம் எடுத்துக்கிட்டுப் பொயிட்டார் சார்.."
"சரி... ஆக வேண்டிய காரியத்தை சீக்கிரம் பாருங்க... இவரோட குடும்பத்துக்கு சொல்லியாச்சா?"
"சொல்லியாச்சு சார்..."
"கிளம்பிட்டாங்களாமா?"
"பையனும் பொண்ணுந்தான்... வந்துக்கிட்டு இருக்காங்க..."
"மனைவி...?"
"இல்லையாம் சார்..."
"இல்லைன்னா இறந்துட்டாங்களா... இல்ல...?"
"சரியான விவரம் தெரியலை சார்... இவரோட பசங்க வந்தாத்தான் தெரியும்..."
"ம்... நீங்க மற்ற வேலைகளைப் பாருங்க... நான் அந்தப் பொண்ணைப் பார்த்துட்டு வாறேன்..." என பொன்னம்பலத்தை அனுப்பிவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்தார்.
ஊட்டிக் குளிரிலும் வியர்த்துப் போய் கண்ணீரோடு அமர்ந்திருந்த அந்தப் பெண் இவரைப் பார்த்ததும் பயத்தோடு எழுந்து சுவரோடு ஒண்டினாள். சுகுமாரன் தனது போலீஸ் பார்வையை அவள் மீது ஓடவிட்டார். அவளுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் முப்பத்தைந்து வயதிருக்கும். முகத்தில் முத்து முத்தாய் வேர்வை... கழுத்துப் பகுதியிலும் வியர்த்திருக்க...அந்தக் கோலத்திலும் அழகாகவே இருந்தாள். அவளது அசரடிக்கும் இளமையில் ஒரு கணம் தன்னை இழுந்தவர் சுதாரித்து கட்டுக்குள் வந்தார். அவரோட மனசுக்குள் இவளுக்கும் அவருக்கும் ஏதாச்சும்...? என்ற வினா எழும்ப 'சேச்சே.... சந்தேகப் பார்வையை எல்லா இடத்திலும் வைக்கக் கூடாது' என வீசிவிட்டு "இங்க வா..." என்றார்.
அருகே வந்து நின்றவள் அழுக ஆரம்பித்தாள். "எதுக்கு அழுகுறே...? அப்ப நீதான் கொன்னியா?" 
"இ....இல்லங்க... சார்..." பதறினாள்.
"அப்ப அழுகாம கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும்... சரியா..?"
"ம்..." தலையாட்டினாள்.
"எனக்கு உண்மையான பதில் வேணும்..." அவளை முறைத்துப் பார்த்தபடி அழுத்தமாய்ச் சொன்னார் சுகுமாரன்.  
(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.


Last edited by சே.குமார் on Tue 29 Dec 2015 - 17:31; edited 13 times in total
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down


Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by பானுஷபானா on Fri 20 Nov 2015 - 11:31

யாரக் கொலையாளியாக்குறதுனு தெரியாம யோச்சிச்சு எழுதி இருக்கிங்க . அருமை குமார் தொடருங்க...

படம் எங்கே?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Sat 21 Nov 2015 - 8:24

பானுஷபானா wrote:யாரக் கொலையாளியாக்குறதுனு தெரியாம  யோச்சிச்சு எழுதி இருக்கிங்க . அருமை குமார் தொடருங்க...

படம் எங்கே?

ஆஹா படத்தை மறந்துட்டேன் அக்கா...
இப்ப போட்டாச்சு...
தொடர்ந்து வாசிக்கும் தங்களுக்கு நன்றி.

கதையின் விறுவிறுப்பு குறையாமல் இருக்க வேண்டும் என்றால் கடைசிப் பகுதியில் கொலையாளி யார் என்று தெரிந்தால்தானே நல்லாயிருக்கும். அதற்கான முயற்சியில்தான் ஓடிக்கிட்டு இருக்கு... 4,5 பகுதிகளில் முடிக்க நினைத்து குறுந்தொடராக்கி இப்ப 12, 13 பகுதி வரை போகும் போல.... இரண்டு தொடர்கதை எழுதிய எனக்கு இது க்ரைம் கதைக்களத்தில் முதல்கதை... எழுத முடியுமா என்ற யோசனையோடு ஆரம்பித்ததுதான்... எனக்கே கதையின் போக்கு சரியா என்று தெரியவில்லை... காதல், வாழ்க்கை என இரண்டு கதைகளில் பயணிக்கும் போது தோன்றியதெல்லாம் எழுதினேன்... அதுவும் போச்சு... 80, 40 என ஆனால் இதை விரைந்து முடிக்க எண்ணம்... ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கு... நமக்கெல்லாம் கிராமத்துக் கிறுக்கல்களே சரியா வரும்ன்னு நினைக்கிறேன்.

பார்க்கலாம் அக்கா... எப்படியும் முடிக்க வேண்டும் அல்லவா...?
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by பானுஷபானா on Sat 21 Nov 2015 - 11:57

சே.குமார் wrote:
பானுஷபானா wrote:யாரக் கொலையாளியாக்குறதுனு தெரியாம  யோச்சிச்சு எழுதி இருக்கிங்க . அருமை குமார் தொடருங்க...

படம் எங்கே?

ஆஹா படத்தை மறந்துட்டேன் அக்கா...
இப்ப போட்டாச்சு...
தொடர்ந்து வாசிக்கும் தங்களுக்கு நன்றி.

கதையின் விறுவிறுப்பு குறையாமல் இருக்க வேண்டும் என்றால் கடைசிப் பகுதியில் கொலையாளி யார் என்று தெரிந்தால்தானே நல்லாயிருக்கும். அதற்கான முயற்சியில்தான் ஓடிக்கிட்டு இருக்கு... 4,5 பகுதிகளில் முடிக்க நினைத்து குறுந்தொடராக்கி இப்ப 12, 13 பகுதி வரை போகும் போல.... இரண்டு தொடர்கதை எழுதிய எனக்கு இது க்ரைம் கதைக்களத்தில் முதல்கதை... எழுத முடியுமா என்ற யோசனையோடு ஆரம்பித்ததுதான்... எனக்கே கதையின் போக்கு சரியா என்று தெரியவில்லை... காதல், வாழ்க்கை என இரண்டு கதைகளில் பயணிக்கும் போது தோன்றியதெல்லாம் எழுதினேன்... அதுவும் போச்சு... 80, 40 என ஆனால் இதை விரைந்து முடிக்க எண்ணம்... ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கு... நமக்கெல்லாம் கிராமத்துக் கிறுக்கல்களே சரியா வரும்ன்னு நினைக்கிறேன்.

பார்க்கலாம் அக்கா... எப்படியும் முடிக்க வேண்டும் அல்லவா...?

என்ன இப்படி சொல்லிட்டிங்க...க்ரைம் கதையும் எழுத முயற்சிக்க வேணாமா? யோசிங்க யோசிக்க, யோசிக்க தான் புது புது யுக்தி கிடைக்கும்....எங்களுக்கும் படிக்க சுவராசியமா இருக்கும்.


படம் சூப்பரா இருக்கு.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Sat 21 Nov 2015 - 15:52

ஆஹா....
அது சரி ஏத்தி விட்டு வேடிக்கை பாக்குறீகளா அக்கா...?
எப்படியும் முடிச்சிடுவோம்...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky குறுந்தொடர்: பகுதி - 11. கொலையாளி யார்?

Post by சே.குமார் on Mon 23 Nov 2015 - 21:19


ர்ஷிகாவின் கையில் மோதிரம் இல்லாததைப் பார்த்த பொன்னம்பலம் குற்றவாளியை நெருங்கிவிட்ட சந்தோசத்தில் மெதுவாக சுகுமாரனின் காதைக் கடித்தார். அவரும் ஏதேச்சையாக திரும்புவது போல்  தர்ஷிகாவைப் பார்த்து விரலை நோட்டமிட்டார். மோதிர விரலில் மோதிரம் அணிந்த தடம் இருக்க மோதிரம் இல்லை.
"வாங்க இன்ஸ்பெக்டர்... வாங்க சார்..." என்றபடி வருணுக்கு அருகே அமர்ந்தாள். அப்போதுதான் குளித்திருப்பால் போல சந்தன சோப்பின் வாசமும் ஷாம்பின் வாசமும் சேர்ந்து வந்தது.
“என்ன சார்... நான் வரும்போது சார் என்னமோ உங்ககிட்ட குசுகுசுன்னு சொன்னாரே... என்னவாம்...?” என சுகுமாரனைப் பார்த்துக் கேட்டாள் தர்ஷிகா.
 "அதெல்லாம் ஒண்ணுமில்ல... நீங்க அன்னைக்கு இருந்ததுக்கு இன்னைக்கு நிறைய மாறிட்டீங்கன்னு சொன்னார்... ஆமா கையில மோதிரம் போட்ட தடம் இருக்கு, ஆனா மோதிரத்தைக் காணோம்? எங்கயாவது மிஸ் ஆயிடுச்சா..?" அவளைப் பார்த்து எதேச்சையாகக் கேட்பது போல் கேட்டார்.
தர்ஷிகா சிரித்துக் கொண்டே, "ஏன் எங்கப்பா கொலையான அறையில் மோதிரம் எதுவும் கிடந்ததா?" எதிர்க்கேள்வி கேட்டு சிரித்தாள். 
தணிகாசலம் இறந்த அன்று பார்த்த தர்ஷிகாவா இவள் என்று அவரை யோசிக்க வைத்தது.
"இல்ல தடம் இருக்கு... சமீபத்துல மிஸ் ஆன மாதிரி தெரியுதேன்னு கேட்டேன்..."
"எம்மேல சந்தேகம்... ஓ இவரு அதைப் பார்த்துத்தான் உங்க காதைக் கடித்தாரோ...?. குளிக்கும் போது கழட்டி வச்சேன்... மேல ரூம்லதான் இருக்கு... இருங்க எடுத்துக்கிட்டு வாறேன்... உங்க சந்தேகம் போகணுமில்ல..." என்றபடி எழுந்து சென்றாள்.
“இல்லங்க பரவாயில்லை...”
“இந்தா வாரேன் சார்... எம்மேல சந்தேகம் வந்தாச்சுல்ல...” என்றபடி மீண்டும் மாடிப்படி ஏறினாள்.
அவளைப் பின்புறமாக பார்த்த சுகுமாரனுக்கு ஏனோ 'இடையில் பின்னழகில் இரண்டு குடத்தைக் கொண்ட இனிய தம்புராவை மீட்டிச் சென்றாள்' என்ற பாட்டு ஞாபகத்தில் வந்தது. மெதுவாக பொன்னம்பலத்திடம் திரும்பி, "என்னய்யா... இந்தக் கதை ஓர்க் அவுட் ஆகலையே..?" என்றார். 
"சே... நம்பிக்கையோட வந்தேன்... ஏமாற்றம் ஆயிருச்சு சார்..."
"என்ன இன்ஸ்பெக்டர் தர்ஷ்... மேல அப்படி ஒரு சந்தேகம்... அவ எதுக்காக கொல்லணும்... அதுவும் அப்பாவை கொல்லணுமின்னா அவ இங்கயே பண்ணியிருக்கலாமே ஏன் ஊட்டிக்குப் போகணும்... அப்பா கொலை நடந்த அந்த வாரம் புல்லாவே அவளுக்கு எக்ஸாம்... படிக்கிறதுக்காகவே வீட்டைவிட்டு அவ வெளிய கூட போகலை... ஆமா ஏதாவது தடயம் கிடைச்சதா..?" என்று வருண் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, திரும்பி வந்த தர்ஷிகா சிரித்துக் கொண்டே தனது மோதிரத்தைக் காட்டினாள். அச்சு அசலாய் பொன்னம்பலத்திடம் இருக்கும் மோதிரம். 'அப்படின்னா அது யாரோடது?' குழம்பினார் பொன்னம்பலம்.
"சாரிங்க... ஒரு சந்தேகம்... இதே மாதிரி மோதிரம் ஒண்ணு கிடைச்சது...அதான்... நாங்க வரும்போது நீங்களும் மோதிரம் இல்லாம இருக்க... மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப் போட்டுட்டோம்..."
"போலீஸ் புத்தி அது.." என்று சிரித்தாள்.
"என்னங்க... அப்பா செத்த கவலை அதுக்குள்ள உங்களை விட்டுப் போயிருச்சா...?"
"கவலை... ம்... அது இருக்கத்தான் செய்யுது... அதுக்காக அழுதுக்கிட்டு கிடந்து என்னாகப் போகுது... அப்பா திரும்பி வரப்போறாரா...? அம்மா உயிரோட இருக்கும் போதே இழந்துட்டு நிக்கிறோம்... நிறைய இழப்புக்களை பார்த்துப் பழகிட்டோம். அதனால இழப்புகளை ஈசியா எடுத்துக்கப் பழகிட்டோம்... இல்லேண்ணா... " என்று வருணைப் பார்த்ததும் அவர் ஆமோதிப்பதுபோல் தலையாட்டினான்.
"அடேயப்பா அன்னைக்கு அழுதுக்கிட்டு மூக்கைச் சிந்திக்கிட்டு இருந்த பொண்ணா நீங்க... இப்படியெல்லாம் பேசுவீங்களா...?" பொன்னம்பலம் ஆச்சர்யப்பட்டார்.
"நான் நல்லாப் பேசுவேன் இன்ஸ்பெக்டர்... அன்னைக்கு அப்பாவோட இழப்பு... ரொம்ப வலி தெரியுமா..? எம்மேல எம்புட்டு பாசம் தெரியுமா...? நான் செத்தா நீ அழுதுக்கிட்டு கிடக்கக் கூடாது... எதையும் துணிஞ்சு சந்திக்கிற திறமை உங்கிட்ட இருக்கு... எப்பவும் போல்டா இருக்கணுமின்னு சொல்வார்... ஹி ஈஸ் ஜெம் சார்... அவர் பணம் பணம்ன்னு போனதால அம்மா போனதாச் சொல்லுவாங்க... ஆனா அவரோட பாசத்தை அனுபவிக்கத் தெரியாம பொயிட்டாங்க சார்... அன்னைக்கி பணம் பணம்ன்னு இருந்திருக்கலாம்... ஆனா அவரோட பாசத்துக்கு முன்னால அவர் பெரிய மில்லினியர்.. உக்கார நேரமில்லாதவர்ன்னு எல்லாம் சொல்ல முடியாது... ராத்திரி எத்தனை மணிக்கு வந்தாலும் என்னோட அறைக்கு வந்து பாத்துட்டு... எனக்கு போர்த்திவிட்டு... உடம்புக்கு முடியாத நேரத்துல மருந்து தேய்ச்சி விட்டு... அதெல்லாம் போச்சு சார்.... எல்லாத்தையும் இழந்துட்டேன்..." இதுவரை சிரித்தவள் அழுக ஆரம்பித்தாள்.
"சாரிங்க... உங்க வேதனை புரியாம..."
"ஏய் தர்ஷ்... என்ன இது... விடு... நமக்கு அவ்வளவுதான் கொடுப்பினை... விடு...."
"அழுகாதீங்க..." என்றபோது வருணின் செல்போன் அடித்தது. எடுத்துப் பார்த்தவன் கட் பண்ணிவிட்டான். மீண்டும் அடிக்க... கட் பண்ணினான். மூன்றாவது முறை வந்த போது "ஏதோ அர்ஜெண்ட் போல... உங்களுக்கு தெரிஞ்சவங்களாத்தானே இருக்கும்... சும்மா பேசுங்க..." என்றார்.
சிரித்தவன், "இல்ல இன்ஸ்பெக்டர்... இது வாழ்க்கைத் தொந்தரவு... நான் கட்டிக்கப் போறவ... என்னைய வரச்சொல்லியிருந்தா... நீங்க வந்ததால போக முடியலை... அப்பா இறந்ததால ஒரு வாரமா எங்கிட்டும் போகலை... அதான்... அடிச்சிக்கிட்டேதான் இருப்பா..."
"ஓ... அண்ணியா... இங்க வரச்சொல்லு..." என்றாள் தர்ஷிகா.
"சும்மா இரு... காத்திருந்துட்டு போகட்டும்..."
"ஆமா அப்புறம் நீதான் அவளைத் தொங்கிக்கிட்டுக் கிடக்கணும்..." என்று சிரித்தாள்.
"சரி வருண்... எதாவது துப்புக் கிடைத்தால் சொல்றோம்... அபீசியலா வரலை... நாங்க கிளம்புறோம்..." என்றார் சுகுமாரன்.
"ஓகே சார்...." என்று எழுந்த வருண், அவர்கள் பின்னாலே வந்து காரில் ஏறப்போன சுகுமாரனிடம் மெதுவாக "சார் நீங்க எதுவோ குளூ கெடச்சித்தான் வந்திருக்கீங்க... தர்ஷோட மோதிரம் பற்றி கேட்டீங்க... மோதிரம் எதுவும் கிடைச்சதா..?”
“அப்படியெல்லாம் இல்லைங்க... அவங்க கையில தடம் கிடந்ததைப் பார்த்துக் கேட்டேன்... அவ்வளவுதான்...”
“எது எப்படியோ... மோதிரம்தான் அப்பா கொலையோட முக்கியமான தடயமா இருந்தா இதே மாதிரி மோதிரம் இன்னொருத்தர்க்கிட்டயும் இருக்கு...  நாம கொஞ்சம் பிரியா பேசினா நல்லாயிருக்கும்... நீங்க ஹோட்டல் பாண்டியன் போங்க... உங்களுக்காக அங்க ஒரு அறை புக் பண்ணச் சொல்லிடுறேன்... போயி குளிச்சிட்டு ரெஸ்ட் எடுங்க... தர்ஷ்க்கு எதுவும் தெரியவேண்டாம்... ஈவினிங் நான் வர்றேன்... பேசலாம்...” என்றான்.
(என்ன படத்தைப் பார்த்து ஏமாந்துட்டீங்களா...? இதுவும் ஒரு சஸ்பென்ஸ்தான்... இன்னும் இரண்டே இரண்டு பகுதிகளில் முடித்து விடுவோம்... அதாவது வரும் வெள்ளி / சனிக்குள்... அதுவரை... தர்ஷிகாவா / வருணா/ சிவராமனா / வேலையாட்களா/ வேறு யாருமான்னு எல்லாருமாச் சேர்ந்து யோசிப்போம்... நன்றி)
(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by பானுஷபானா on Tue 24 Nov 2015 - 10:46

சே.குமார் wrote:ஆஹா....
அது சரி ஏத்தி விட்டு வேடிக்கை பாக்குறீகளா அக்கா...?
எப்படியும் முடிச்சிடுவோம்...

ஏத்தி விட்டாதானே எங்களுக்கு க்ரைம் கதை கிடைக்கும்... குதூகலம்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by பானுஷபானா on Tue 24 Nov 2015 - 14:38

கொலையாளி முன்னால் மனைவியா இருக்குமோ....

இதே போல மோதிரம் குடும்ப உறுப்பினர் கிட்ட தான இருக்க முடியும்?

கதை முடிவுக்கு வந்துருமா? ரொம்ப யோசிக்க முடியலயா குமார்.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by Nisha on Tue 24 Nov 2015 - 15:06

அட்ட்ட்டாடா! 
 நல்லாத்தான் யோசிக்கிறிங்கப்பா!

மற்ற மோதிரம் யாரிடம் இருக்கும்? புதுது புதிதாய் சிக்கலை உருவாக்காமல் சிக்கெடுங்கப்பா! சீக்கிரம்.. யாரு ஏன் கொலை செய்திருப்பா என  யோசிக்கவே முடியல்ல.. ஒரு க்ளுவும் விடல்லயே நீங்க..!

பட ஐடியா நல்லா இருக்கு.  ஹாஹா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Tue 24 Nov 2015 - 20:54

பானுஷபானா wrote:கொலையாளி முன்னால் மனைவியா இருக்குமோ....

இதே போல மோதிரம் குடும்ப உறுப்பினர் கிட்ட தான இருக்க முடியும்?

கதை முடிவுக்கு வந்துருமா? ரொம்ப யோசிக்க முடியலயா குமார்.

முன்னாள் மனைவியோ முன்னாள் காதலியோ யாரோ ஒரு ஆளை இழுத்துப் போட்டு முடிச்சிருவோம் அக்கா...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Tue 24 Nov 2015 - 20:55

Nisha wrote:அட்ட்ட்டாடா! 
 நல்லாத்தான் யோசிக்கிறிங்கப்பா!

மற்ற மோதிரம் யாரிடம் இருக்கும்? புதுது புதிதாய் சிக்கலை உருவாக்காமல் சிக்கெடுங்கப்பா! சீக்கிரம்.. யாரு ஏன் கொலை செய்திருப்பா என  யோசிக்கவே முடியல்ல.. ஒரு க்ளுவும் விடல்லயே நீங்க..!

பட ஐடியா நல்லா இருக்கு.  ஹாஹா
இனி புதிய சிக்கல் எல்லாம் இல்லை...
அடுத்த பதிவில் மோதிரம் யாருடையதுன்னு சொல்லிடலாம்...

அதற்கு அடுத்த பதிவில் யார் கொலையாளின்னு சொல்லிட்டால் சுபம்தானே...?
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by பானுஷபானா on Thu 26 Nov 2015 - 13:34

சே.குமார் wrote:
பானுஷபானா wrote:கொலையாளி முன்னால் மனைவியா இருக்குமோ....

இதே போல மோதிரம் குடும்ப உறுப்பினர் கிட்ட தான இருக்க முடியும்?

கதை முடிவுக்கு வந்துருமா? ரொம்ப யோசிக்க முடியலயா குமார்.

முன்னாள் மனைவியோ முன்னாள் காதலியோ யாரோ ஒரு ஆளை இழுத்துப் போட்டு முடிச்சிருவோம் அக்கா...

ம்ம்ம்ம் முடிங்க முடிங்க சஸ்பென்ஸ் தாங்க முடியல....
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky குறுந்தொடர்: பகுதி - 12. கொலையாளி யார்?

Post by சே.குமார் on Fri 27 Nov 2015 - 10:45ஹோட்டல் பாண்டியன்...

அறை எண் : 144

சுகுமாரன், பொன்னம்பலம், வருண் தவிர வேறு யாரும் இல்லை.

"சொல்லுங்க வருண்... தர்ஷிகாக்கிட்ட இருக்க மாதிரி வேற ஒருத்தர்க்கிட்டயும் வைரமோதிரம் இருக்குன்னு சொன்னீங்க... யார்க்கிட்ட இருக்கு..."

"சொல்றேன் சார்... அதுக்கு முன்னாடி கொஞ்சம் பேசலாமா..?"

"உங்க அப்பா கொலை சம்பந்தமாவா... இல்லை..."

“அது தொடர்பாத்தான்... விவரமாப் பேசினாத்தானே எங்கப்பாவோட மறுபக்கம் உங்களுக்குத் தெரியும்...”

“மறுபக்கமா..?”

"ஆமா... இருங்க ஆரம்பத்துல இருந்து சொல்றேன்...” என்றவன் மெதுவாகப் பேச ஆரம்பித்தான். “நாங்க சின்ன வயசுல அம்மாவை விட்டுப் பிரிஞ்சோம்..." என்று வருண் ஆரம்பிக்க, தணிகாசலம் இறந்த அன்று காவல் நிலையம் வந்த போது அவன் ‘அம்மா’ என்ற வார்த்தையை பயன்படுத்தவேயில்லை. ஆனால் இப்போது அம்மா என்று சொல்கிறானே என்று சுகுமாரனுக்கும் பொன்னம்பலத்துக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

"என்ன இன்ஸ்பெக்டர்.... அன்னைக்கு அம்மான்னு சொல்லாதவன் இப்பச் சொல்றானேன்னு பாக்குறீங்களா... அது என் தர்ஷூக்காக... ஆமா அவளுக்கு அம்மா பிடிக்காது... சின்ன வயசுலயே விட்டுட்டு பொயிட்டாங்கன்னு அவளுக்கு அவங்க மேல ரொம்பக் கோபம்... அப்பாதான் தெய்வம்... காலையில கூட சொன்னாளே அவர் ஜெம்ன்னு.... ம்.... அப்பா... அப்பா... அப்பா... அவளுக்கு எல்லாமே அவருதான். அவருக்கும் அவதான் எல்லாமே... அதே மாதிரி அவள்ன்னா எனக்கு உயிர்... சோ அவளுக்குப் பிடிக்காத அம்மாவை எனக்கும் பிடிக்காத மாதிரி நடிச்சேன். ஆனா எனக்கு அம்மா ரொம்பப் பிடிக்கும். யாருக்கும் தெரியாம அம்மாவைப் போய் பார்ப்பேன். அவங்க மடியில படுத்து அழுவேன். அவங்களுக்கு கல்யாணம் ஆகி பசங்க இருக்காங்க... ஆனா அவங்களுக்கு எல்லாம் நானும் அம்மாவும் சந்திக்கிறது தெரியாது". என்று நிறுத்தியவன் தண்ணீரை எடுத்துக் குடித்தான்.

இருவரும் பேசாமல் அமர்ந்திருக்க, அவனே மீண்டும் பேச ஆரம்பித்தான் “அம்மா அப்பாவைப் பிரியக்காரணம் பணம் பணம்ன்னு ஓடுனதால மட்டும் இல்லை. அவரோட இன்னொரு பக்கத்தால..."

"இன்னொரு பக்கமா..? உங்கப்பா ஜென்டில்மேன்னு சொன்னீங்க...?" பொன்னம்பலம் இடை புகுந்தார்.

வருண் சிரித்தபடி "அது தர்ஷ்க்கு தெரிஞ்ச அப்பா... நான் அவளுக்காக சொன்ன பொய் அது... எனக்குத் தெரிஞ்ச அப்பாவுக்கு இன்னொரு பக்கம் இருக்கு. அது தன்னோட வளர்ச்சிக்காக பொண்டாட்டியைக்கூட இன்னொருத்தனுக்கிட்ட படுக்கச் சொல்ற ஈனத்தனமான புத்தி... அதனால பிரச்சினை... அதன் பின்னாலதான் அம்மா விவாகரத்து வரைக்கும் போனாங்க... இதை அம்மா எனக்கிட்ட கொஞ்ச நாளைக்கு முன்னாலதான் சொன்னாங்க... என்னால நம்ப முடியலை... ஏன்னா எங்க அப்பா அம்மா பிரிஞ்சி போன பின்னால வேற கல்யாணம் பண்ணிக்காம, எங்களை எந்தக் குறையுமில்லாம ரொம்ப அன்போடு வளர்த்தார்." பேச்சை நிறுத்தினான்.

"ரொம்பக் குழப்பமா இருக்கு.... தொழில் வளர்ச்சிக்காக மனைவியை.. சினிமாவுலதான் பார்த்திருக்கிறேன்... நிஜ வாழ்க்கையிலுமா? ஏன் உங்கப்பா மேல நீங்க வச்சிருக்கிற பாசத்தை கெடுக்கிறதுக்காக உங்கம்மா இப்படி ஒரு பொய்யைச் சொல்லியிருக்கக் கூடாது..."

"அம்மா சொன்னது சத்தியமான உண்மை... அம்மா சொன்னப்போ எனக்கு அப்பா மேல கோபம் வந்த்து... ஆனா இத்தனை வருசமா எங்களுக்கு தாய்க்கு தாயா... தந்தைக்கு தந்தையா... அர்த்தநாரீஸ்வரரா இருந்தவரு அவரு... எங்களுக்கு ஒண்ணுன்னா துடிச்சவரு அவரு... எங்க ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு உடம்பு சுகமில்லைன்னாலும் சாப்பிடாம எங்ககிட்ட கெடந்தவரு அவரு... யாருக்காகவும் எதுக்காகவும் எங்களை விட்டுக் கொடுக்காதவரு அவரு... அதனால எனக்கு வந்த கோபமெல்லாம் மறைஞ்சிருச்சு..."

"இவ்வளவு பாசமாக இருக்கிற அப்பா, எப்படி தன்னோட தொழில் வளர்ச்சிக்காக... என்னால ஏத்துக்க முடியலை வருண்... உங்களை உங்க அப்பாவுக்கு எதிராத் திருப்ப நடந்த சதியில நீங்க சிக்கி அப்பாவைக் கொல்ற அளவுக்குப் பொயிட்டீங்க...” என்றார் சுகுமாரன்.

“சார்... சார்.... போலீஸ் புத்தியை கொஞ்ச நேரம் கழட்டி வையுங்க... எங்கப்பாவை நான் அர்த்தநாரீஸ்வரர்ன்னுதானே சொல்றேன்... நான் கொன்னேன்னு சொல்றீங்களே...?”

“அப்ப உங்க அம்மா..?”

"அம்மா கொல்லணுமின்னு நினைச்சிருந்தா எவனோ ஒருத்தன் கூட படுக்கச் சொல்லும் போதே கொன்னுட்டு ஜெயிலுக்குப் போயிருக்கமாட்டாங்களா...?"

“ம்... உங்கப்பா தொழில்ல முன்னேறனுமின்னு இப்படிச் செஞ்சாருன்னே வச்சுக்குவோம்.... நீங்க பிறந்து... உங்களுக்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து தர்ஷிகா பிறந்த பின்னாடித்தான் விவாகரத்துப் பண்ணியிருக்காங்க... உங்க தங்கை பிறந்த பிறகு இது நடந்ததுன்னா... அவ பிறக்கும் வரை உங்கப்பா தொழில்ல முன்னேறனுமின்னு நினைக்கலையா...? அது ஏன் கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு மனைவியை வைத்து முன்னேற நினைக்கனும்...”

“இதையே நானும் அம்மாக்கிட்ட கேட்டப்போ அவங்க சரியான பதிலைச் சொல்லலை... ஆனா வேறொரு சந்தர்ப்பத்தில் இன்னொருத்தர் சொன்னதால எனக்கு நம்பிக்கை வந்தது.

"ரொம்பக் குழப்புறீங்க வருண்... நீங்க சொல்ற காரணத்துக்கு அடியும் இல்லை முடியும் இல்லை... உங்களை யாரோ மூளைச் சலவை பண்ணியிருக்காங்க... ஆமா அந்த இன்னொரு நபர் யாரு..?"

“சொல்றேன்.... சொல்றேன்... என்னை யாரும் குழப்ப வேண்டியதில்லை சார்... எனக்கு எல்லாம் புரியிற வயசுலதான் இந்த விஷயம் தெரிய வந்துச்சு...”

“தன்னோட தொழில் வளர்ச்சிக்கு உங்கம்மாவை பயன்படுத்தணுமின்னு நினைச்சிருந்தா நீங்க பிறக்கும் முன்பே உங்கப்பா பயன்படுத்தியிருக்கலாம்... சந்தோஷமாக் குடும்பம் நடத்தி ரெண்டு பிள்ளைக்கு தகப்பானான பின்னால எவனும் இப்படி ஒரு ஈனச் செயலைச் செய்யமாட்டான்... எனக்கென்னவோ உங்கம்மா மேலதான் தப்பு இருக்க மாதிரி தெரியுது...”

“ஆமா சார்... நானும் அதைத்தான் சொல்லணுமின்னு நினைச்சேன்... உங்கம்மா செய்த ஏதோ ஒரு செயலாலதான் அவர் திருமணமே வேண்டான்னு உங்களை வளர்த்திருக்கிறார்... “ என்றார் பொன்னம்பலம்.

“என்ன சார்... எங்கப்பாவை கொன்னவங்களை கண்டு பிடிக்கணும் அப்படின்னுதான் அவரோட மறுபக்கதை சொல்றேன்... நீங்க என்னடான்னா எங்கம்மாவை தப்பாப் பேசுறீங்க...”

“வருண்... உங்க ரெண்டு பேரையும் கஷ்டப்பட்டு வளர்த்து உங்களை எம்.ஏஸ் படிக்க வைக்கிறாரு... தர்ஷிகாவும் இப்ப எம்.பி,பி.எஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க... உங்களை உதறிட்டுப் போன அம்மா சொன்னதை நம்பிக்கிட்டு பாசமா வளர்த்த அப்பா இறந்த பின்னே தப்பாப் பேசுறீங்களே... உங்ககிட்ட சொன்னவங்கக்கிட்ட எங்கப்பாவை பற்றி எனக்குத் தெரியும்ன்னு சொல்லி அவங்க வாயை அடச்சிருந்தீங்கன்னா உங்க அப்பா பட்ட கஷ்டத்துக்கு ஒரு அர்த்தம் கிடைச்சிருக்கும்... அது அவருக்கு நீங்க செய்யிற மரியாதை... அதைவிட்டுட்டு...”

“அப்ப நீங்க நம்பலை...”

“நோ மிஸ்டர் வருண்... இந்தக் கதை கேசுக்கு எந்த விதத்திலும் உதவாது... எனக்கு ரெண்டே ரெண்டு கேள்விக்கான பதில் வேணும்...”

“என்ன இன்ஸ்பெக்டர்...?”

“ஒண்ணு... உங்க அம்மா சொன்ன இந்தக் கதையை சொன்ன மற்றொரு ஆள் யாரு..? அவருக்கும் உங்கம்மாவுக்கும் என்ன சம்பந்தம்..? ரெண்டாவது வைரமோதிரம் வேற ஒரு ஆள்க்கிட்ட இருக்குன்னு சொன்னீங்க அவங்க யாரு...? எங்க இருக்காங்க...? இதுக்கு பதில் சொன்னீங்கன்னா நான் கொலையாளியை நெருங்க வசதியா இருக்கும்...”

“சொல்றேன்... ஆனா அப்பாவோட மறுபக்கம் உண்மை சார்...”

“எதுக்கு அதுக்குத் திரும்பத் திரும்ப வாறீங்க... எனக்கு அவரோட மறுபக்கம் தேவையில்லை... எனக்கு வேண்டியது நான் கேட்ட கேள்விக்குப் பதில்...” என்றபோது சுகுமாரனின் முகத்தில் அதுவரை இருந்த சாந்தம் போய் கடுமை ஏறியிருந்தது.

“சொல்றேன்... சொல்றேன்னு எதுக்கு இழுக்குறீங்க வருண்... சொல்லுங்க... இந்தக் கொலையில உங்க கூட எத்தனை பேர் இருந்தாங்க... எதுக்காக பண்ணுனீங்க... அதை மட்டும் சொல்லுங்க... எங்களுக்கு இந்தக் கதை வேண்டாம்... ஏன்னா...” என்றபடி வருணை ஊடுருவிப் பார்த்தார் பொன்னம்பலம்.

“ ஏய்... இருய்யா... தம்பி சொல்வாப்ல... தானா வந்து மாட்டிக்கிட்டாரு... இனி சொல்லாமலா இங்கயிருந்து போக முடியும்... வருண்... நான் கேட்ட கேள்விக்கு பதில்...” என்றார் சுகுமாரன். அவரின் பேச்சில் போலீஸ் விசாரணைக்கான தோரணை இருந்தது.

“சா... சார்.... என்ன சார் என்னைய கொலைகாரன்னு சொல்லிட்டீங்க... அப்படிப் பண்ணியிருந்தா நான் எதுக்கு உங்ககிட்ட வந்து பேசப்போறேன்... இப்ப என்ன உங்களுக்கு விவரந்தானே வேணும்... சொல்றேன்... அப்பாவைப் பற்றி அம்மா சொன்ன அதே விஷயத்தை எங்கிட்ட சொன்னவர் டாக்டர் சிவராமன்.... அந்த வைர மோதிரம் அவரு பொண்டாட்டி திலகவதிக்கிட்ட இருக்கு...” படபடவென சொல்லிவிட்டு தண்ணீரை எடுத்து மடக்... மடக்கென்று குடித்தான் வருண்.

சுகுமாரன் சத்தமாகச் சிரித்தார்... பயத்துடன் அவரைப் பார்த்தான் வருண்.
 (தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by பானுஷபானா on Fri 27 Nov 2015 - 13:02

ஹா ஹா நல்ல ட்விஸ்ட் கதையில் ஒரு புதிய திருப்பம் கொண்டு வந்துட்டிங்க....இந்த அத்தியாயம் ரொம்ப அருமையா எழுதி இருக்கிங்க...

அடுத்த அத்தியாயம் முற்றுமா? தொடருமா?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Fri 27 Nov 2015 - 14:40

பானுஷபானா wrote:ஹா ஹா நல்ல ட்விஸ்ட்  கதையில் ஒரு புதிய திருப்பம் கொண்டு வந்துட்டிங்க....இந்த அத்தியாயம் ரொம்ப அருமையா எழுதி இருக்கிங்க...

அடுத்த அத்தியாயம் முற்றுமா? தொடருமா?

கொலையாளியை நெருங்கிட்டோம் அக்கா...
பதிவின் நீளத்தைப் பொறுத்து அடுத்த பகிர்வு அல்லது அதற்கு அடுத்த பகிர்வில் முடித்து விடலாம்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by Nisha on Fri 27 Nov 2015 - 14:42

ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய் எனக்கு கொலையாளி யார் என புரிந்து போனதே?

சொல்லிரட்டுமா குமார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் on Fri 27 Nov 2015 - 15:12

Nisha wrote:ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய் எனக்கு கொலையாளி யார் என புரிந்து போனதே?

சொல்லிரட்டுமா குமார்?
சரியாகச் சொன்னால் தங்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by பானுஷபானா on Sat 28 Nov 2015 - 14:00

சே.குமார் wrote:
Nisha wrote:ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய் எனக்கு கொலையாளி யார் என புரிந்து போனதே?

சொல்லிரட்டுமா குமார்?
சரியாகச் சொன்னால் தங்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.

நிஷா சொல்லைனா அந்த சன்மானம் எனக்கு
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky குறுந்தொடர்: பகுதி - 13. கொலையாளி யார்?

Post by சே.குமார் on Wed 2 Dec 2015 - 18:38

சுகுமாரன் சத்தமாகச் சிரிக்கவும் அவரைப் பயத்துடன் பார்த்தான் வருண்.
“என்ன மிஸ்டர் வருண்... நாம சிவராமன் பெயரைச் சொன்னதும் இந்தாளு எதுக்கு இப்படிச் சிரிக்கிறானேன்னு நினைக்கிறீங்களா..?” என வருணைப் பார்த்து சிரித்துக் கொண்டே கேட்டார் சுகுமாரன்.
“.....” வருண் ஒன்றும் பேசாமல் கேள்விக்குறியோடு அவரைப் பார்த்தான்.
“எனக்கு சிவராமன் மேல சந்தேகம் இருந்துச்சு... ஆனா அந்தாளை விசாரிக்கலை... என்னோட சந்தேக வட்டத்துல இருந்தாலும் ஏனோ அவரை தேடிப் போகலை... சரி விடுங்க... அப்புறம் உங்கம்மா கதை சொன்னீங்க பாருங்க... அருமையான கதை... எவ்வளவு அழகா ஸ்கீரின் பிளே பண்ணுறீங்க... கை தேர்ந்த இயக்குநர் மாதிரி...”
“சா... சார்....”
“இருங்க... நான் பேசி முடிச்சிருறேன்... உங்கம்மா.... கதையில என்ன சொன்னீங்க.... அப்பா அம்மாவை தொழில் வளர்ச்சிக்காக தவறா பயன்படுத்துனாருன்னுதானே.... ஹா... ஹா... இதெல்லாம் தமிழ் சினிமாவோட ஓல்ட் டிரெண்ட் மிஸ்டர் வருண்... உங்கப்பாவுக்கு தெரியாம உங்கம்மாவுக்கு ஒரு இல்லீகல் கனெக்சன்... அது தெரிஞ்சப்பவும் அவரு அதை விட்டுட்டு திருந்தி வாழு, எனக்காக இல்லாட்டியும் நம்ம பிள்ளைகளுக்காக நீ எங்கூட இருக்கணுமின்னு கேட்டிருக்கார்... ஆனா உங்கம்மா அந்த வாழ்க்கையை நம்பி இந்த வாழ்க்கையை விட்டுட்டுப் போயாச்சு... இப்போ நிம்மதியில்லாத வாழ்க்கை... இதுதான் உண்மைக் கதை...”
“சா...சார்...”
 “இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்ன்னு நினைக்கிறீங்கதானே... இந்த ஒரு வாரமா ஊட்டியில நான் என்ன டீ ஆத்திக்கிட்டு இருந்தேன்னு நினைச்சீங்களா...? எனக்கு ஏகப்பட்ட பிரஷர்... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விசாரணையின்னு கேசை முன்னோக்கி நகர்த்தினேன்... முதல்ல உங்கம்மா பற்றி விசாரிக்க எண்ணமில்லை... ஆனா அவங்க பிரிவுக்கான காரணம் சரியாத் தெரிஞ்சாத்தான் எதையும் முடிவு பண்ண வசதியாக இருக்கும்ன்னு தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பெருமாள்... என்னோட பிரண்டுதான்... அவருக்கு கூப்பிட்டு யாருக்கும் தெரியாம விசாரிச்சு விபரம் சொல்லச் சொன்னேன். அவர் சொன்ன விபரம்தான் இப்ப நான் சொன்னது...”
வருண் உலர்ந்த உதடுகளை நாக்கால் தடவி ஈரப்படுத்திக் கொண்டான். பொன்னம்பலம் சிரித்துக் கொண்டே “இன்னும் இருக்கு மிஸ்டர் வருண்...” என்றதும் மறுபடியும் ஏதோ பேசவந்த வருணைப் பேச விடாது சுகுமாரனே தொடர்ந்தார்.
“இன்னொன்னு தெரியுமா...? இந்தக் கேசுல எங்களுக்கு எந்தவித துப்பும் கிடைக்கலை... இவரா வைர மோதிரக் கதையைக் கொண்டு வந்தாரு... எனக்கு இல்லாத ஒரு துருப்புச் சீட்டை பிடிச்சிக்கிட்டு இங்க வர விருப்பம் இல்லை... அதனால சனி, ஞாயிறுல்ல போவோம்ன்னு சொல்லி வச்சேன். இங்க வர்றதுக்கு முன்னாடி பெருமாள் விவரம் கலெக்ட் பண்ணிக் கொடுக்கவும்தான் ஒரு முடிவோட இங்க வந்தோம். உங்க தங்கையை விசாரிச்சிக்கிட்டே உங்க முகத்தை வாசிச்சிக்கிட்டு இருந்தேன்... நாங்க இங்க தங்கி விசாரிக்கலாம்ங்கிற முடிவோட உங்க வீட்டை விட்டுக் கிளம்பும் போது நீங்களா வந்து மாட்டிக்கிட்டீங்க... மற்றதெல்லாம் எங்க பிளான்படி நடந்துச்சு... ஆனா நீங்க வந்து மாட்டினது பிளான்ல இல்லாத்து... உங்க அம்மா கதையை ஆரம்பிச்சப்பவே கதை இப்படியில்லை... வேற மாதிரின்னு சொல்லி, பெருமாளை வர வச்சு உள்ள தூக்கிப் போட்டிருப்பேன்... ஆனா இந்தக் கொலையில யார்யார் இருக்காகன்னு தெரிஞ்சிக்கத்தான் நாங்க எதுவும் செய்யாம உங்களைப் பேச விட்டோம்...”
சுகுமாரன் நிறுத்தவும் அவரை அடுத்துப் பேச விடாமல் வருண் வேகவேகமாப் பேச ஆரம்பித்தான்  “ப்ளீஸ் சார்... உங்க விசாரணை குறித்து சந்தோஷம்தான்... ஆனா என்னைய குற்றவாளி மாதிரி ஆக்கி நீங்களே பேசிக்கிட்டு போறீங்களே சார்.. ப்ளீஸ்... என்னை புரிஞ்சிக்கங்க... எங்கம்மா சொன்ன கதை அது... அதைத்தான் நான் உங்ககிட்ட சொன்னேன்... நீங்க வைரமோதிரம் பற்றி கேட்டதால பத்மாவதி ஆண்டிக்கிட்ட இருக்குன்னு சொல்ல வந்தவன்தான் அப்பாவோட மறுபக்கம் இதுக்கு உதவியா இருக்குமேன்னுதான் நான் கேள்விப்பட்டதைச் சொன்னேன்... அதுபோக அந்த மோதிரம் தர்ஷிகாவுக்கு செய்யும் போது ஆண்டிக்கும் அப்பாதான் செஞ்சு கொடுத்தார். ஆனா அதுவே எனக்கு எதிராத் திரும்பும்ன்னு நினைக்கலை... அம்மா சொன்னாங்கன்னு அப்பாவைக் கொல்ல நான் உடன்பட்டிருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்களா..? தர்ஷிகாவுக்கு அவரு தெய்வம்ன்னா... எனக்கும்தான்... அவரோட அந்தப்பக்கம் எப்படியிருந்தாலும் எங்களுக்கான வாழ்க்கை ரொம்ப நெகிழ்வானது... அர்த்தமுள்ளது... அந்த அப்பாவை அவரோட வயசான காலத்துல நான் அப்படிப் பாத்துக்கணும்... இப்படிப் பாத்துக்கணும்ன்னு கனவு கண்டவன் சார்... எனக்கு எங்க அப்பா இருந்தாத்தான் பெருமையே... இறந்தால் அல்ல...” என்றபோது அவன் கன்னத்தில் கண்ணீர் இறங்கியது .
"அது தெரியும் வருண்... உங்க பேச்சுல இருக்க உண்மையை நான் நம்புறேன்... ஆனா இந்தக் கொலையோட ஆரம்பப்புள்ளி உங்ககிட்டதான் இருக்குன்னு என் உள்மனசு சொல்லுது... அது நீங்க தெரிஞ்சு செஞ்சீங்களா... தெரியாமச் செஞ்சீங்களான்னு தெரியலை...”
“சா...சார்... சத்தியாம எனக்கு எதுவும் தெரியாது... அப்பா மேல உள்ள கோபத்துல அம்மா அவரைப் பற்றி தப்பாச் சொன்னா அதுல அர்த்தம் இருக்கு... ஆனா சிவராமன் அங்கிளும் எதுக்காக சொல்லணும்... எனக்குப் புரியலை சார்....”
“பத்மாவதியோட உங்க அப்பாவுக்கான உறவு... இல்லேன்னா உங்கம்மாவுடன் சிவராமனுக்கான உறவு... இது ரெண்டுல ஏதோ ஒண்ணு தப்பான உறவா இருக்கணும்... அதுதான் கொலைக்கான காரணி... அது நமக்குத் தெரியணுமின்னா நாம சிவராமனை விசாரிக்கணும்...”
“எப்படி சார்... எந்தக் குளூவும் இல்லாமல் அவரை விசாரிப்பீங்க...” வருண் கொஞ்சம் பதட்டத்தில் இருந்து வெளிவந்தது போல் தெரிந்தது.
“இதே வைர மோதிரம் குளூவோட போவோம்... இல்லாததை வைத்துப் பேசுவோம்... எப்படியும் நமக்கு பிடி கிடைக்கிற மாதிரி ஏதாவது கிடைக்கும்... அதுக்கு முன்னால சிவராமன்கிட்ட போன் பண்ணி பேசிட்டு அப்பா கொலை விஷயமா ஏதோ முக்கிய தடயம் கிடைச்சிருக்காம்... இன்ஸ்பெக்டர் பேசினார். நான் அங்க வாறேன்னு சொல்லுங்க... மத்ததை அங்க போயி பாத்துக்கலாம்... ஆனா அங்க நாம மட்டும்தான் போறோம்... தர்ஷிகா வேண்டாம்... போனைப் ஸ்பீக்கர்ல போட்டுப் பேசுங்க”
“ஓகே சார்... “ என்ற வருண் சிவராமனை அழைத்தான்.
“சொல்லு வருண்...” எதிர்முனையில் சிவராமன்.
“அங்கிள் எப்படியிருக்கீங்க... நாளை நான் அங்க வாறேன்...”
“நல்லாயிருக்கேன்... ஏன்...? என்ன விஷயமா வர்றே..?”
“அப்பா கேசுல ஏதோ குளு கிடைச்சிருக்காம்... இன்ஸ்பெக்டர் வரச்சொல்லியிருக்கார்... நான் மட்டுந்தான் வர்றேன்... வேற யாரும் வரலை...”
“எ... என்ன குளூவாம்...? அப்ப கொ...லையாளி யா...யார்ன்னு கண்டுபிடிச்சிடலாமா?” கொஞ்சம் பதட்டமாவது தெரிந்தது. பொன்னம்பலத்தைப் பார்த்துச் சிரித்தார் சுகுமாரன்.
“தெரியலை அங்கிள்... இதுவரை ஒண்ணும் கிடைக்கலைன்னார்... இப்பத்தான் ஏதோ சொல்றார்... நான் அங்க வாறேன்... நாம போயி பார்க்கலாம்...” 
“ஓகே... நீ இங்க வா... நாம போகலாம்... ஆமா நீ ஏன் ஒரு மாதிரி பேசுறே...? என்னாச்சு...?” சிவராமன் ரொம்ப ரிலாக்ஸாக பேசுவது போல் தெரிய சுகுமாரனின் முகம் சோர்வுற்றது.
“ஒண்ணுமில்லை அங்கிள்... லேசா தலைவலி... அதான்...?”
“ம்... டாப்லெட் எதாவது போடு... நல்லாத் தூங்கு... சரியாத் தூங்கியிருக்கமாட்டே...”
“சரி அங்கிள்... ஆமா ஆண்டி எங்கே...?”
“உங்கிட்ட எப்படி சொல்றதுன்னு பார்த்தேன்... நீயே கேட்டுட்டே...”
“ஏன்... என்னாச்சு... எனி பிராப்ளம்...?”
“ம்... பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டா... இப்போ ஹோமா ஸ்டேஜ்... ” அவரின் குரல் உடைந்தது. வருண், சுகுமாரன், பொன்னம்பலம் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
(தொடரும்...)
-‘பரிவை’ சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky குறுந்தொடர்: பகுதி - 14. கொலையாளி யார்?

Post by சே.குமார் on Sat 26 Dec 2015 - 16:19
ட்டி.
தணிகாசலம் கொலை செய்யப்பட்ட வீட்டில் வருண், சுகுமாரன் மற்றும் பொன்னம்பலம் அமர்ந்திருந்தனர்.
“வருண்... டாக்டர் சிவராமனுக்கு போன் பண்ணி இங்க வரச்சொல்லுங்க...” என்று சுகுமாரன் சொன்னதும் அவருக்குப் போன் செய்தான் வருண்.
“என்னப்பா வருண்... வந்துட்டியா..?” எதிர்முனையில் சிவராமன்.
“வந்துட்டேன் அங்கிள்...”
“நான் இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கேன்... இங்க வாறீயா... வேண்டாம்... நீ வீட்டு வாசல்ல வெயிட் பண்ணு... நான் உடனே கிளம்பி வாறேன்... பிரஷ் பண்ணி குளிச்சிட்டு போலீஸ் ஸ்டேசனுக்குப் பொயிட்டு அப்புறம் நாம் ஹாஸ்பிடல் வரலாம்...”
“இல்ல அங்கிள்... நான் இப்போ நம்ம பண்ணை வீட்லதான் இருக்கேன்... இன்ஸ்பெக்டரும் இருக்கார்... இங்க வந்திருங்களேன்...”
“அங்கயா...?” என்று கொஞ்ச நேரம் யோசித்தவர் “சரி... வாறேன்...” என்றபடி போனைக் கட் பண்ணினார்.
டீ வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த நாகராஜ், “தம்பி வீட்ல எல்லாச் சாமானும் இருக்கு... அந்தப் பொண்ணு லதாவுக்கு போன் பண்ணி சமையலுக்கு ஏதாச்சும் வாங்கிக்கிட்டு வரச்சொல்லவா... வந்து சமைச்சிக் கொடுத்துட்டுப் போகும்...” என்றான்.
“வேண்டாண்ணே... வெளியில சாப்பிட்டுக்குவோம்...” என்றதும் “சரி தம்பி” என்றபடி வெளியேறினான்.
சிறிது நேரத்தில் சிவராமனின் கார் வந்து நிற்க, வருண் மரியாதை நிமித்தமாக வாசலுக்குச் சென்றான். அதிலிருந்து இறங்கிய சிவராமன் ரொம்பச் சோர்வாகத் தெரிந்தார்.
“வாங்க அங்கிள்... என்ன ரொம்ப டல்லா இருக்கீங்க...”
“என்னப்பா பண்ணச் சொல்றே... உங்க அத்தை விழுந்துல இருந்து எனக்கு சரியான தூக்கமில்லை... எங்களுக்கு ஒண்ணுன்னா பாக்க யார் இருக்கா சொல்லு... அவளுக்கு நான்... எனக்கு அவ... அதுதானே எங்களுக்கு விதிச்ச வாழ்க்கை...” என்றபடி உள்ளே நுழைந்தவர் “வாங்க சார்” என்றபடி சோபாவில் அமர்ந்திருந்த சுகுமாரனுக்கும் பொன்னம்பலத்துக்கும் கை கொடுத்துவிட்டு எதிரே அமர்ந்தார்.
“சொல்லுங்க சார்... ஏதாவது துப்பு கிடைச்சதா..?”
“துப்பா... ஆளையே நெருங்கிட்டோம் சார்...” என்றார் பொன்னம்பலம்.
“ஆளையே நெருங்கிட்டீங்களா...? அப்ப பிடிக்க வேண்டியதுதானே... ஆமா கொலைகாரன் யார்...? எதுக்காக கொலை செய்தான்...?” சிவராமன் பதட்டமில்லாமல் கேட்டதும் அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“என்ன சார் முழிக்கிறீங்க...? எவனா இருந்தாலும் பிடிச்சி உள்ள போட வேண்டியதுதானே...?” என்றதும் வருண் எழுத்து அறைக் கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு “பிடிச்சி உள்ள போட்டுடலாம்... ஆனா அதுக்கு முன்னாடி எதுக்காக கொலை பண்ணினேன்னு கொலைகாரன் சொல்லணுமில்ல...” என்றான்.
“கொலைகாரன் சொல்லணுமின்னா... இங்க நாமதானே வருண் இருக்கோம்... இதுல யாரு.... கொலை...” கொஞ்சம் யோசனையோடு பேச்சை நிறுத்தியவர் “அப்ப நாந்தான் கொலைகாரானா...? அதுக்குத்தான் இங்க வரச்சொன்னீங்களா..? என்னப்பா சொல்றீங்க..?”
“நடிக்காதீங்க சார்... இங்க உங்களுக்கு யாரும் ஆஸ்கார் அவார்டு தர மாட்டாங்க...” என்றார் சுகுமாரன்.
“இன்ஸ்பெக்டர்... நா.. நான்...”
“இங்க பாருங்க... நீங்கதான்னு நாங்க முடிவு பண்ணியாச்சு.... வருணோட அம்மா, அவங்க அப்பா பத்தி தப்புத்தப்பா சொன்னதுல கூட ஒரு நியாயம் இருக்கு... ஆனா நீங்க எதுக்கு அவருக்கிட்ட தணிகாசலத்தைப் பற்றி தப்புத்தப்பாச் சொல்லணும்... அதுபோக தர்ஷிகாவுக்கு வாங்கின மாதிரி வைர மோதிரம் நண்பனோட மனைவியான உங்க  மனைவிக்கு தணிகாசலம் எதுக்கு வாங்கிக் கொடுக்கணும்... இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு.... சமுதாயத்துல நல்ல பேர் எடுத்திருக்கிற டாக்டர் நீங்க... உங்க தொழிலுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு... நீங்களே நடந்ததைச் சொல்லிட்டா கோர்ட்டு கேஸ்ன்னு அலைய வேண்டி இருக்காது... இல்லேன்னா...”
“இன்ஸ்பெக்டர் என்ன இது.... இப்படி இங்க வரவச்சி என்னைய குற்றவாளி ஆக்குறீங்க... ஏம்ப்பா வருண் நீயும் இவங்க கூட சேர்ந்து பேசுறே...?”
“அங்கிள்.... இவங்க சந்தேக வட்டத்துல முதல்ல தர்ஷிகா... ஏன்னா அப்பா கொலை செய்யப்பட்ட இந்த வீட்ல இருந்து வைர மோதிரம் எடுத்திருக்காங்க... அப்புறம் அம்மா சொன்னதையும் நீங்க சொன்னதையும் சொல்லப்போய் நான்... என்னைய கொலைகாரன்னு முடிவே பண்ணி கைது பண்ண நினைச்சாங்க... அதுக்கப்புறம்தான் நீங்க எதுக்கு அப்பா பத்தி தப்புத்தப்பாச் சொல்லணும்... அப்பா எதுக்கு ஆண்டிக்கு வைர மோதிரம் வாங்கிக் கொடுக்கணும்... அதை நீங்க வாங்கச் சொல்லி வாங்கினாரா... இல்ல ஆண்டிக்கு தனிப்பட்ட முறையில வாங்கிக் கொடுத்தாரான்னு சந்தேகம் வர இப்ப உங்க்கிட்ட வந்திருக்கோம்... உண்மையைச் சொல்றதும் மறைக்கிறதும் உங்ககிட்ட்தான் இருக்கு... ஆனா மறைக்க மாட்டீங்கன்னு நம்புறேன்... ஏன்னா அப்பா செத்துப் பொயிட்டாரு... இது சொத்துக்காக நடந்த கொலையோ முன்விரோதக் கொலையோ இல்லை... நம்பிக்கைத் துரோகம்... உங்களை நம்பித்தானே அவரு இங்க வந்தாரு... சொல்லுங்க... இதை நீங்கதான் செஞ்சீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா கேசை நானோ வாபஸ் வாங்கிட்டு போயிடுவேன்... இங்க அப்புறம் நான் வரப்போறதில்லை... இந்த வீட்டையும் வித்துட்டு ஊட்டிக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு போயிடுவேன்... உங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கணுமின்னு எல்லாம் எனக்கு எண்ணமில்லை அங்கிள்... உங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து அது தர்ஷ்க்கு தெரிஞ்சா அவ இன்னும் உடைஞ்சிருவா... எனக்கு அவதான் முக்கியம்... பட் எங்கப்பாவை எதுக்காக கொன்னீங்கன்னு எனக்குத் தெரியணும்... அதுவும் இப்பவே தெரியணும்...”
வருண் உணர்ச்சிப் பெருக்கோடு பேசி முடிக்கவும் அவனைப் பார்த்த சிவராமன் தனது எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்.
“இங்க பாருங்க சார்... இங்க நாம நாலு பேர்தான் இருக்கோம்... நடந்ததைச் சொல்லுங்க... இனி மறைச்சிப் பலனில்லை... இங்க வேண்டாம் ஸ்டேசனுக்குப் போவோம்ன்னு நினைச்சீங்கன்னா அங்க போயிடுவோம்... ஆனா அங்க விசாரணை முறை வேற மாதிரி இருக்கும்... வருண் உங்களை அப்படி எல்லாம் விசாரிக்க கூடாதுன்னு சொன்னதாலதான் இங்க உக்காந்து விசாரிக்கிறோம்....”
நன்றிப் பெருக்கோடு வருணைப் பார்த்த சிவராமன் வேகமாய் “வே... வேண்டாம்... சொல்லிடுறேன்... நான் சொல்லிடுறேன்...” என்றபோது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வேகமாக கன்னத்தில் இறங்கியது.
(நிறைவுப் பகுதி நாளை)
-‘பரிவை’ சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by பானுஷபானா on Mon 28 Dec 2015 - 13:22

அடடா முடிவு தெரிஞ்சிரும்னு ஆர்வமா படிச்சிட்டு வந்தேன்... முடிவு நாளைக்கா?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by Nisha on Mon 28 Dec 2015 - 14:05

இல்லை அவர் நாளைக்கும் ஒரு சஸ்பென்ஸ் வைத்து பதிவு போட்டு நான் அதை நேற்று படித்தும் விட்டேன். 

கடைசில யாருமே கொலை செய்யல்ல. தானாய் தான் செத்தார்னு முடிக்கும் திட்டமாம் என குமார் என்கிட்ட மட்டும் இரகசியமா சொல்லிட்டார். நான் உங்க கிட்ட இதை சொன்னேன்னு அவரிடம் நீங்கள் சொல்லாதிங்க...!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by பானுஷபானா on Mon 28 Dec 2015 - 15:11

Nisha wrote:இல்லை அவர் நாளைக்கும் ஒரு சஸ்பென்ஸ் வைத்து பதிவு போட்டு நான் அதை நேற்று படித்தும் விட்டேன். 

கடைசில யாருமே கொலை செய்யல்ல. தானாய் தான் செத்தார்னு முடிக்கும் திட்டமாம் என குமார் என்கிட்ட மட்டும் இரகசியமா சொல்லிட்டார். நான் உங்க கிட்ட இதை சொன்னேன்னு அவரிடம் நீங்கள் சொல்லாதிங்க...!

ஹா ஹா சொல்ல மாட்டேன் சொல்லமாட்டேன்...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky குறுந்தொடர்: பகுதி - 15. கொலையாளி யார்?

Post by சே.குமார் on Mon 28 Dec 2015 - 18:16

சிவராமன் சொல்கிறேன் என்று சொன்னதும் அவர் என்ன சொல்லப்போறார்... எதுக்காக கொலை செய்தார் என அறியும் ஆவலுடன் மூவரும் அவர் முகம் நோக்க, கண்ணீரைத் துடைத்துக் கொண்டவர் டீப்பாயின் மேலிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு ஒரு செருமலுடன் ஆரம்பித்தார்.

“நானும் தணிகாசலமும் நெருங்கிய நண்பர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்... எனக்குத் தெரியாம அவனோ... அவனுக்குத் தெரியாம நானோ எந்த ஒரு காரியமும் செய்ததில்லை... ரெண்டு பேருக்கும் இடையில எந்த சீக்ரெட்டும் இல்லை. அவனுக்கு ஒர்க் டென்சன் அதிகம்... அதைவிட வருண், தர்ஷிகா குறித்த கவலை ரொம்ப அதிகம்... அவங்களை நல்லபடியா வளர்க்கணும்... அம்மா இல்லாம வளர்ற பசங்க... நாளைக்கு அப்பனோட வளர்ப்பு இப்படித்தான் இருக்கும்ன்னு யாரும் சொல்லிடக்கூடாதுன்னு எங்கிட்ட பேசுறப்போ எல்லாம் புலம்புவான்... வருணோட அம்மா நம்பிப் போனவனோட சரியான வாழ்க்கை அமையாம எங்கிட்ட வந்து என்னை அவரைச் சேத்துக்கச் சொல்லுங்கண்ணே... நான் வேலைக்காரியாவாச்சும் அந்த வீட்ல இருக்கேன்னு அழுதுச்சு.... நான் அவனுக்கிட்ட வந்து பேசினப்போ அவன் ஒத்துக்கலை... முடியவே முடியாது... அவ திரும்பி வந்தா பிள்ளைகளோட எதிர்காலம் பாழாப்போயிரும்ன்னு சொல்லிட்டான்... இவன் சொன்னதுலயும் நியாயம் இருந்துச்சு... ஏன்னா மன்னிச்சு ஏத்துக்கிறேன்னு சொன்னவனை வேண்டான்னு சொன்னவ... இப்ப வாறேன்னு சொன்னா.... அவன் பிடிவாதக்காரன்... முடியாதுன்னு முடிவாச் சொல்லிட்டான்... நானும் அவகிட்ட சொல்லிட்டேன். அவ இன்னமும் தானா ஏத்துக்கிட்ட வாழ்க்கையை கஷ்டத்தோடதான் வாழ்ந்துக்கிட்டு இருக்கா...” பேச்சை நிறுத்தினார்.

“எதுக்காக கொலை பண்ணினீங்கன்னு கேட்டா தேவையில்லாத கதை எல்லாம் எதுக்கு சார்... அதான் வருணோட அம்மா தன்னோட தலையில மண்ணள்ளிப் போட்டுக்கிட்டாங்கன்னுதான் நாங்க விசாரிச்சதுலயே தெரிஞ்சிக்கிட்டோமே அப்புறம் எதுக்கு அந்தக் கதை... நம்ம கதைக்கு வாங்க...” என்றார் சுகுமாரன்.

சிவராமன் லேசாக புன்னகைத்தபடி “எல்லாம் சொன்னாத்தான் எதுக்காக இந்தக் கொலையின்னு உங்களுக்குத் தெரியும். குறிப்பா நான் எப்படி.. அவன் எப்படின்னு தெரியும்... அதனால முழுசா என்னைச் சொல்ல விடுங்க... ப்ளீஸ.” என்றார்.

“சரி... சொல்லுங்க...”

“அவன் ஏத்துக்க மாட்டேன்னு சொன்னதுல அவளுக்கு இவன் மேல கோபம்... அதைத் தீத்துக்க வருணுக்கிட்ட அவனைப் பற்றி தப்பாச் சொன்னா...” வருண் சிரிக்கவும் பேச்சை நிறுத்தி அவனைப் பார்த்தார்.

“என்ன அங்கிள் சிரிக்கிறான்னு பார்க்கிறீங்களா..? அவங்க சொன்ன அதையேதானே நீங்களும் சொன்னீங்க...” என்றான் வருண்.

“ம்... சொன்னேன்... காரணம் உங்கப்பன் எனக்குச் செய்த நம்பிக்கை துரோகத்துக்கு உங்களை அவனுக்கிட்ட இருந்து பிரிச்சி அந்த வேதனையை அனுபவிக்க வைக்கணுமின்னு நினைச்சேன்... ஆனா உங்கிட்ட சொன்னதுக்கு அப்புறம் வேற மாதிரி முடிவு வந்திருச்சு.... என்ன செய்யிறது...”

“சரி அதை விடுங்க... அது இப்ப முக்கியமில்லை... கொலைக்கான காரணத்தைச் சொல்லுங்க...”

“ஒவ்வொன்னாச் சொல்லி வாறேன்... அப்பத்தானே உங்களுக்கு விவரம் புரியும்... வருணோட அம்மாவுக்கும் பிள்ளை மனசுல நஞ்சை விதைச்சு அவனை விட்டுப் பிரிச்சி தவிக்க விடணுங்கிறதுங்கிற என்னோட அதே எண்ணம்தான்... ஆனா அது நடக்கலை... அவளோட கணவன் இவனை மிரட்டி பணம் பார்க்க முயற்சித்தான்... ஆனா அதையும் முறியடித்து அவனைக் காத்தவன் நான்... அவனுக்கு இந்த வீட்டை வாங்கிக் கொடுத்தவன் நான்... அவனோட வேலை டென்சன் குறையட்டுமேன்னு இங்க மாசாமாசம் வந்து தங்கச் சொன்னவன் நான்... இப்படி அவனுக்காக எல்லாம் செஞ்ச நான் அவனுக்கிட்ட எதையும் மறைக்கலை... ஆனா அவன்...”

“என்ன சார்.... என்னமோ நடிகருக்கு இயக்குநர் கதை சொல்ற மாதிரி ரொம்ப பொறுமையா சொல்றீங்க... உங்ககிட்ட கொலைக்கான காரணத்தைத்தான் நாங்க கேக்குறோம்... சும்மா வளவளன்னு பேசுறீங்க... பட்டுன்னு சொன்னாத்தானே சார்... கொலை ஒரு சுவராஸ்யமா இருக்கும்... அதைவிட்டுட்டு... சரி... சரி... எதுக்காக குத்துனீங்க... எப்படி குத்துனீங்க... எப்படிச் செத்தார்ன்னு பட்டுன்னு போட்டு உடைங்க...” பொன்னம்பலம் கோபமாய் பேசினார்.

“ம்... அவன் இங்க வர்றது ரெஸ்ட் எடுக்க மட்டுமில்லை... என் மனைவியோட கூத்தடிக்கவும்தான் என்பதை நான் அறியலை.... ரெண்டு பேருக்கும் இடையில சாதாரண இருந்த நட்பு வேற மாதிரி உறவில போயி முடிஞ்சிருச்சு... அவனுக்கு பொண்டாட்டி இல்லை... இவ அவன்கிட்ட சிரிச்சிப் பேசினதுல மயங்கிட்டான்... அவனோட பணமும் பகட்டும் இவளை அவனோட ஆசைக்கு அடிமையா மாத்திருச்சு...”

“என்ன சார் கதை விடுறீங்க... நீங்க பெரிய டாக்டர்.... நல்ல சொத்துப் பத்து... ஊட்டியில அரைகிரவுண்டுல சும்மா அழகான பங்களா கட்டி வச்சிருக்கிங்க... ஒண்ணுக்கு மூணு கார் வச்சிருக்கீங்க... கூப்பிட்டா ஓடி வந்து வேலை பார்க்க வேலையாட்கள்... அப்புறம் எப்படி அவங்க.... இதை நம்பச் சொல்றீங்களா..?”

“உண்மை சார்... இதுதான் உண்மை... என் மனைவியைப் பற்றி நான் எதுக்கு இப்படிச் சொல்லணும்... எங்கிட்ட எல்லாம் இருக்கு சார்... எல்லா வசதியும் இருக்கு... ஆனா எங்களுக்கு குழந்தை இல்லை சார்... குறிப்பா அவளைச் சந்தோஷப்படுத்துற சக்தி எனக்கு இல்லை சார்... ஒரு ஆக்சிடெண்டுல எதை இழக்க்கூடாதோ அதை இழந்துட்டேன்... இது எங்க மேரேஜ் முடிஞ்சி அஞ்சாறு வருசத்துல நடந்த விபத்து.... அதுக்கப்புறம் நாங்க கணவன் மனைவிதான்... கணவன் மனைவிக்குள்ள இருக்க வேண்டிய அந்த சந்தோஷம் எங்களுக்குள் இல்லை... இவன் இங்க வர... பேச... அவளுக்கு நகைகள் பரிசாக் கொடுக்க... எனக்குத் தெரியாம அவ சந்தோஷத்தை தேடிக்கிட்டா... இவ்வளவுக்கும் அவளும் ஒரு டாக்டர்... அதுவும் அரசாங்க டாக்டர்... இவன் இங்க வரும்போதெல்லாம் பகல்ல ஹாஸ்பிடல் போகமல் இவன் கூட சுத்தியிருக்கா...  மாசாமாசம் அவன் இங்க வர்றபோது இவ லீவு போட்டுட்டு அவன் கூட இருந்திருக்கா... இதெல்லாம் எனக்குத் தெரியாம நடந்திருக்கு.... அவன் இவளுக்காகத்தான் இங்க அடிக்கடி வந்திருக்கான்... அது எனக்குத் தெரியக்கூடாதுன்னுதான் இரவுல என்னை இங்க வரவச்சி பாரின் சரக்கால குளிப்பாட்டியிருக்கான்.... நான் அவனை ரொம்ப நம்பினேன்... ஆனா அவன் எனக்குத் தெரியாம... எங்கிட்ட நல்லவனா இருந்துக்கிட்டே நம்பிக்கைத் துரோகம் பண்ணிட்டான்...” அதற்கு மேல் பேசாமல் சிவராமன் வாய்விட்டு அழுதார். 

வருண் அப்பாவா இப்படின்னு நினைத்து குழப்பத்தில் அமர்ந்திருக்க, கொலை செய்தது இவர்தான் என முடிவாகிவிட்டது என்ற நினைப்பில்  அவர் அடுத்து என்ன சொல்லப் போறார் என கேட்கும் ஆவலில் சுகுமாரனும் பொன்னம்பலமும் சிவராமனை நோக்கினர். (பதிவின் நீளம் கருதி கிளைமேக்ஸ் நாளை பதியப்படும்... ஹி...ஹி... திட்டாதீங்க... சஸ்பென்ஸை நீட்டிக்கணுமில்ல)-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by பானுஷபானா on Tue 29 Dec 2015 - 11:11

சரி சரி திட்டல நாளைக்கும் காத்திருக்கனுமா???அடட்டா இன்னைக்கு தான சீக்கிரம் போடுங்க குமார்....
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky குறுந்தொடர்: பகுதி - 16. கொலையாளி யார்?

Post by சே.குமார் on Tue 29 Dec 2015 - 17:25

சிவராமன் தன் மனைவிக்கும் நண்பனுக்குமான உறவு குறித்து சொல்லிவிட்டு அழுததைப் பார்த்து மூவரும் பேசாமல் அமர்ந்திருந்தனர். அவர்கள் முகத்தைப் பார்த்தவர் தலைகுனிந்தபடியே மீண்டும் தொடர்ந்தார்.

“இவங்க பழக்கம் எனக்கு எப்படித் தெரிந்ததுன்னு நீங்க யோசிக்கலாம். லதாதான் எங்கிட்ட இதைச் சொன்னா... நான் நம்பலை... ஏன்னா எனக்கு என்னோட மனைவி மேல அம்புட்டு நம்பிக்கை அதனால அந்தப் பொண்ணை அடிக்கப் பொயிட்டேன்... உடனே அவ நான் சொல்றது பொய்யின்னா நாகராஜ் அண்ணங்கிட்ட கேளுங்கன்னு சொன்னா... அவனுக்கிட்ட கேட்டா பதில் சொல்லாம மழுப்பினான்... காரணம் தணிகாசலம் கொடுக்கிற சரக்கும் காசும் அவனை அவனுக்கு விசுவாசமா இருக்கச் சொன்னுச்சு... உண்மையைதெரிஞ்சிக்க அவனை நானும் பணத்தால அடிச்சேன்... எல்லாம் சொல்லிட்டான்... எனக்கு என்ன செய்யிறதுன்னே தெரியலை.... பட் எனக்கு ரெண்டு பேரும் வேணும்... அதனால எதுவும் தெரிஞ்சது மாதிரி காட்டிக்காம இவனுக்கிட்ட என்னோட நட்பை தொடர்ந்தேன். என் மனைவிக்கிட்டயும் எதுவும் கேட்கலை. ஆனா லதாவும் வடிவேலும் மாறி மாறி தகவல் சொல்ல ஒரு கட்டத்துல என் மனைவிக்கிட்ட மனம் விட்டுப் பேசினேன்... கெஞ்சிப் பார்த்தேன்... அழுது பார்த்தேன்... ஆனா அவ திருந்தலை....”

“திருந்தலைங்கிறதுக்காக கொலை வரைக்கும் போவீங்களா?” என்றார் சுகுமாரன்.

“கொஞ்சம் பேச விடுங்க சார்” என்றபடி சிவராமன் தொடர, மூவரும் அமைதியாய் கேட்க ஆரம்பித்தனர்.

“சம்பவம் நடந்த அன்னைக்கு இரவு நான் ஒரு முக்கியமான ஆபரேசனுக்காக ஆஸ்பிடல்ல இருந்தேன்... இவன் எனக்குப் போன் பண்ணி இங்க வாறீயான்னு கேட்டான்...  இல்லை முடியாதுடான்னு சொல்லிட்டேன். கொஞ்ச நேரத்துல என் மனைவி போன் பண்ணி பிரண்ட் வீட்டுக்குப் போறேன் காலையிலதான் வருவேன்... நீங்க வந்து செக்யூரிட்டிக்கிட்ட சாவி வாங்கி வீட்டைத் திறந்து படுத்துக்கங்கன்னு சொன்னா... அவ பேச்சை நம்பினேன்... ஆனா அவ வந்தது இங்க... ஏன் சார் என்னைய நம்பிக்கை துரோகின்னு சொன்னீங்கதானே... இப்பச் சொல்லுங்க சார் நான் நம்பிக்கைத் துரோகியா இல்லை அவங்களா..?”  என்று சுகுமாரனைப் பார்த்துக் கேட்க, அவர் வாயடைத்துப் போய் அமர்ந்திருக்க, வருண்தான் “சாரி அங்கிள்” என்றான்.

“எதுக்குப்பா சாரி... நீ தப்புப் பண்ணலையே...” என்று சிரித்தவர் மீண்டும் பேச ஆரம்பித்தார். “ராத்திரி 10 மணிக்கு மேல இருக்கும் நாகராஜ் போன் பண்ணி சார் உங்க ஓய்ப் இங்க வந்திருக்காங்க... நீங்க வந்தா கையும் களவுமாப் பிடிக்கலாம்ன்னு சொன்னான்... அவனே நான் கேட்டைத் திறந்துதான் வச்சிருக்கேன்... மெயின் கதவு சாவி சன்னல்கிட்டதான் இருக்கும்... வந்ததும் எனக்கு மிஸ்டு கால் கொடுங்க... நான் ஐயாவோட அறைக்கதவைத் தட்டினா சந்தேகம் வராது அப்படின்னு சொன்னான். ஆனா எனக்கு அவங்க முன்னாடிப் போயி நிக்க மனசு வரலை... இவ்வளவு சொல்லியும் திருந்தாதவளை அங்கபோய் பார்த்து சத்தம் போட்டா அவனுக்கு முன்னால என்னைய நீ ஒண்ணத்துக்கும் ஆகாத ஆம்பளை அதனாலதான் நான் இப்படிப் பண்றேன்னு சொல்லிட்டான்னா... ரொம்ப யோசிச்சேன்... ஒண்ணும் தோணலை... என்னைப் பொறுத்தவரை என்னோட தொழிலை ரொம்ப மதிக்கிறவன்... அதனால ஆபரேசனை முடிச்சிட்டு எந்த முடிவாயிருந்தாலும் எடுக்கலாம்ன்னு ஆபரேசன் தியேட்டருக்குள்ள பொயிட்டேன். முடிச்சிட்டு வெளிய வந்தப்போ சூடா டீ கொடுத்தாங்க... அந்தச் சூழல்ல அது தேவையா இருந்துச்சு... எங்கயும் போகம அங்கே உக்காந்து இருந்துட்டு காலையில போகலாம்ன்னு முடிவு பண்ணினேன்...” பேச்சை நிறுத்தி தண்ணீர் பாட்டிலைப் பார்த்தவர் கொஞ்சம் படபடப்பாய் இருப்பது போல் தெரிந்தது.

“இருங்க அங்கிள் நான் தண்ணி எடுத்துக்கிட்டு வாறேன்...” என்று வருண் எழுந்திரிக்க, “என்ன வருண் உங்கப்பாவை கொன்னவரை அன்பா உபசரிக்கிறீங்க... உங்க இடத்துல நான் இருந்தா இந்நேரம் தூக்கிப் போட்டு...” பொன்னம்பலம் பேச்சை நிறுத்தி அவனைப் பார்க்க வருண் சிரித்தபடி, “இல்ல சார்... எனக்கு அங்கிளை நல்லாத் தெரியும்... எங்களுக்கு எல்லாமும் அவர்தான்... பட் சந்தர்ப்பச் சூழ்நிலை இப்படி நடந்திருக்கு... அப்பா பண்ணுனது பெரிய துரோகமில்லையா... அப்ப எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு... எனக்கு அங்கிள் மேல கோபமே வரலை சார்...” என்றபடி சென்றவன், சிறிது நேரத்தில் உள்ளே வந்து அவரிடம் தண்ணீரைக் கொடுத்தான். வாங்கிக் குடித்தவர் மீண்டும் தொடர்ந்தார்.

“அந்த நேரத்துல என் மனைவிக்கிட்ட இருந்து போன்... என்னடா இப்ப போன் வருதுன்னு பதட்டத்தோட எடுத்தேன்... எதிர்முனையில அவ அழுதுக்கிட்டே இங்க வரச்சொன்னா...அவனுக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு பதறிப் போய் கேட்டேன்... நாந்தான் அவரைக் கொன்னுட்டேன்னு அழுதுக்கிட்டே சொன்னா... எனக்கு உலகமே சுத்துற மாதிரி இருந்துச்சு... எப்படியோ நிதானித்து கார்ல போறது நல்லது இல்லையின்னு முடிவு பண்ணி ஆஸ்பத்ரிக்கு பக்கத்துல இருக்க ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ பிடிச்சு பக்கத்துத் தெரு முக்குல இறங்கி பதட்டத்தோட இங்க நடந்து வந்தேன். நாகராஜ் சொன்ன மாதிரி வெளிக்கேட்டை திறந்து வச்சிருந்தான். எனக்கு நாகரஜை கூப்பிட எண்ணமில்லை... இந்தக் கொலை என்னோட மனைவி பண்ணினதுன்னு அவனுக்கு தெரியக்கூடாதுன்னு நினைச்சேன். அதனால என் மனைவிக்குத்தான் மிஸ்டு கால் கொடுத்தேன். வேகமாக கதவைத் திறந்தவ என்னைப் பார்த்ததும் அழுதுக்கிட்டே எம்மேல சாஞ்சா... அவளைத் தேற்றி, உள்ளே போய் பெட்ரூம்ல பார்த்தா அங்க என் நண்பன் கத்திக் குத்து வாங்கி பிணமாக் கிடக்கான். அப்புறம் அவகிட்ட விசாரிச்சா... இவ என்னென்னமோ சொன்னா... எனக்கு அதெல்லாம் காரணம் இல்லைன்னு தோணுச்சு... அந்தச் சூழல்ல அதுக்கு மேல துருவித் துருவி கேட்க எண்ணமில்லை...  சரி விடுன்னு சொல்லிட்டு கையோட கொண்டு வந்திருந்த கிளவுசை மாட்டி எந்த ஒரு ஆதாரமும்  கிடைக்காத அளவுக்கு அவகிட்ட கேட்டுக்கேட்டு அவ கைபட்ட எல்லா இடத்தையும் சுத்தமாக்கிட்டு அவசரமா வெளியேறி அடுத்த தெருப்பக்கமாப் போயி அந்த நேரத்துல எங்கயோ சவாரி பொயிட்டு வந்த ஆட்டோவைப் பிடிச்சி வீட்டுக்குப் பொயிட்டேன்.”

“அப்ப நீங்க கொலை செய்யலை... கொலையாளி உங்க மனைவி... அவங்க கொன்னதற்கான காரணம் சொல்லலை... என்னங்க இது கேக்குறவன் கேனையன்னா கேப்பையில நெய் வடியிதுன்னு சொல்லுவாங்களாம்... எங்களைப் பார்த்தா கேனையன் மாதிரியாவா இருக்கு” பொன்னம்பலம் கோபமாய்க் கேட்டார்.

“நான் சொல்றது உண்மை சார்… அவ வீட்டுக்கு போனதும் புலம்பிக்கிட்டே இருந்தா… ரெண்டு பேருமே தூங்கலை... காலையில லோக்கல் டிவியில செய்தி வந்திருச்சு… அவ ரொம்ப படபடப்பா இருந்தா… அப்பத்தான் கையைப் பார்த்தது போல என்னோட மோதிரமும் அங்க மிஸ் ஆயிடுச்சுன்னு சொன்னா… எனக்கு ரொம்ப ஷாக்காயிடுச்சு… போலீஸ் வரலைன்னாக்கூட போய் தேடிப் பாக்கலாம்… இப்ப எப்படின்னு யோசிக்கும் போது நாகராஜ் போன் பண்ணினான்… அவனுக்கிட்ட என் மனைவி அங்கிருந்து இரவே வந்துட்டா… நான் வீட்டுக்கு வரும்போது வீட்ல இருந்தா… போலீஸ்கிட்ட இது விவரம் எதுவும் சொல்லாதே… உன்னை கவனிக்கிறேன்னு சொல்லிட்டு இங்க வந்தேன்… உங்களைப் பார்த்தேன்… உங்ககிட்ட கேட்டு உள்ள போயி பாடியைப் பாக்குறமாதிரி மோதிரத்தை தேடினேன் கிடைக்கலை… என் மனைவிக்கிட்ட எடுத்து அது எதுக்கு நமக்குன்னு தூக்கிப் போட்டுட்டதாச் சொல்லிட்டேன்…. அவளும் நம்பிட்டா… கொலை நடந்த மூணாவது நாள் அவ கொஞ்சம் நார்மலானா… வேற எங்கயாச்சும் போயிடலாம்ன்னு சொன்னா… சரியின்னு சொன்னவன் கொலைக்கான காரணத்தை மெதுவாக் கேட்டேன். அவ என்னோட நெஞ்சில சாஞ்சு அழுதுக்கிட்டேன் சொன்னா… நான் ரொம்ப உடைஞ்சிட்டேன்… அவனோட பிஸினஸூக்காக இவளை யூஸ் பண்ணியிருக்கான்… கண்டவன் கூடவும்… நானும் வருணோட அம்மாவும் சும்மாதான் சொன்னோம்… அப்பல்லாம் அவன் இப்படி இல்லை… அவனுக்கு இப்பத்தான் பிஸினஸ் வெறி… அதுக்காக என்னோட மனைவியை பயன்படுத்தி இருக்கான… இவளை பணத்தாலயும் நகையாலையும் மயக்கிப் போட்டு வச்சிருந்திருக்கான்… இந்தத்தடவை இவ எதிர்க்க, எல்லாத்தையும் வெளியில சொல்லிடுவேன்னு சொல்லி மிரட்டியிருக்கான்… ஆதாரமெல்லாம் இருக்கும்ன்னும் சொல்லியிருக்கான்… இன்னும் என்னென்னவோ சொல்லியிருக்கான் என்னால அதையெல்லாம் இப்பச் சொல்ல முடியாது ப்ளீஸ்… அதுக்கப்புறம் இவ சமாதானம் ஆன மாதிரி பேசி சிரிச்சு… அவன் தூங்குறதுக்கு முன்னாடி சாப்பிடுற அந்த தூக்க மருந்தை அளவுக்கு அதிகமாக் கொடுத்திருக்கா… குடி போதையில அவனும் குடிச்சிட்டு படுக்க, இவ பொறுமையா உக்காந்திருந்து குத்திட்டா… தைரியமா வெளியில போயிடலாம்ன்னு நினைச்சவ கொலை… ரத்தம்… தனிமை… இரவுன்னு பயந்து என்னைக் கூப்பிட்டுருக்கா…”

“ஓகே மிஸ்டர் சிவராமன்… உங்க மனைவி பண்ணின கொலைக்கு நீங்க உடந்தை… ரெண்டு பேரையும் தூக்கி உள்ள போடணும்… உங்க மனைவி இப்ப ஹாஸ்பிடல்லயில்ல… என்ன செய்யிறது…?” என்றார் சுகுமாரன்.

சிவராமன் சிரித்தபடி, “நான்தான் கொலை பண்ணினேன்னு சொல்லிடுறேன்னு புலம்புனவளை பாத்ரூம்ல தள்ளிவிட்டு தலையில அடிபட வச்சவனே நாந்தான் சார்… அவ இப்ப மரணத்தோட வாசல்ல… என்னோட கணக்குப்படி நாளைக்காலையில விடியும் போது அவ உயிரோட இருக்கமாட்டா…”

“அடப்பாவி… நீ என்னய்யா மனுசன்...” பொன்னம்பலம் சொல்ல, “என்ன அங்கிள் இப்படிப் பண்ணீட்டிங்க…?” என்றான் வருண்.

“மன்னிச்சிடு வருண்… சார்… என்னைய கைது பண்றீங்களா..? நாங்க பண்ணுன தப்புக்கான முடிவை நானே எடுத்துட்டுத்தானே வந்திருக்கேன்…” என்று சிரித்தார் சிவராமன்.

“வாட்?” சுகுமாரன் கேள்விக்குறியோடு பார்த்தார்.

“எஸ் இன்ஸ்பெக்டர்… தப்புப் பண்ணுனவன் தண்டனை அனுபவிக்கணும்…. ஐ ஆம் எ டாக்டர்… சொசைட்டியில பெரிய மனுசன்… ஆனா பொண்டாட்டியோட தவறான நடத்தையால, நண்பனோட நம்பிக்கை துரோகத்தால இன்னைக்கு இந்த நிலமையில வந்து நிக்கிறேன்… என் மனைவி இறந்துருவா… அதுக்கப்புறம் எனக்கு ஜெயில், கோர்ட், தீர்ப்புன்னு அலைய மனசில்லை… அவளுக்கு அப்புறம் நான் யாருக்காக வாழணும் சொல்லுங்க… அதனால எனக்கு நானே தீர்ப்பு எழுதிக்கிட்டேன்…”

“என்ன சொல்றீங்க அங்கிள்?” வருண் பதட்டமாய்க் கேட்டான்.

“எஸ் வருண்… நான் டாக்டர்…. எதைச் சாப்பிட்டா நம்மளை மெதுவாக் கொல்லும்ன்னு தெரியும்… அந்த மாதிரி ஒரு மருந்தை வரும்போது குடிச்சிட்டுத்தான் வந்தேன்… இன்னும் கொஞ்ச நேரத்துல மயக்கத்துக்குப் போயிருவேன்… என்னைக் காப்பாத்தணும்ன்னு நினைக்காதீங்க… அது வேண்டாம்… இனி அது உங்களால முடியாது... சோ எனக்காக ஒண்ணே ஒண்ணு செய்யிங்க… நான் மயங்குறதுக்குள்ள என்னோட ஹாஸ்பிடல் கூட்டிக்கிட்டுப் போங்க... ப்ளீஸ் வருண்… என்னை என் மனைவிக்கிட்ட கூட்டிக்கிட்டுப் போ… அவ பக்கத்துலதான் என்னோட உயிர் போகணும்… அவன்னா எனக்கு உயிர் தெரியுமா…? எங்க ரெண்டு பேரையும் ஒண்ணா வச்சி நீதான் கொள்ளி வைக்கணும்… ஏன்னா நீ என்னோட மகன் மாதிரி… ஜ லவ் யூ சோ மச் மைடியர் சன்… நாங்கதான் உங்கப்பாவை கொன்னோம்ன்னு தர்ஷிகாவுக்கு தெரிய வேண்டாம் ப்ளீஸ்… அந்தக் குழந்தைக்கு கடவுள் துணை இருக்கட்டும்...” என்ற சிவராமனின் கைகளை கண்ணீரோடு பற்றிக் கொண்டான் வருண்.

சுகுமாரன் ஒன்றும் பேசாமல் பொன்னம்பலத்தைப் பார்க்க, அவரோ சிவராமனுக்காக வருத்தப்பட்டபடி 'முதல்ல அந்த மோதிரத்தை கொண்டு போயி ஏதாவது கோயில் உண்டியல்ல போடணும்' என்று நினைத்துக் கொண்டார்.
-சுபம்’(தொடர்ந்து வாசித்து தங்கள் கருத்துக்களைச் சொல்லி எனது எழுத்தை ஊக்குவித்த அனைத்து நட்புக்களுக்கும் நன்றி.... முடிவு குறித்து தங்கள் கருத்தில் நிறை குறை எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்... முதல் க்ரைம் தொடர்... உங்கள் கருத்துக்கள் என்னை திருத்திக் கொள்ள உதவும்.... நன்றி)


-‘பரிவை’ சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum