சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
by rammalar Today at 11:43

» தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
by rammalar Today at 11:42

» இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
by rammalar Today at 11:41

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு – கவிதை
by rammalar Today at 11:39

» நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
by rammalar Today at 11:38

» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி
by rammalar Today at 11:33

» சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
by rammalar Today at 11:30

» உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
by rammalar Today at 11:29

» சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
by rammalar Today at 11:29

» கவிதைகள் – தில்பாரதி
by rammalar Today at 11:27

» சேனையின் நுழைவாயில்.
by rammalar Today at 11:24

» காதல் – கவிதை
by ராகவா sri Today at 10:56

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

.

கஞ்சன் நகைச்சுவை

Go down

Sticky கஞ்சன் நகைச்சுவை

Post by கவிப்புயல் இனியவன் on Mon 12 Oct 2015 - 18:02

கருமி ஒருவன் இருந்தான் அவனது கஞ்சத் தனத்தால் அவனுடைய மனைவியும் பையனும் மிகுந்த தொல்லைக்கு உள்ளானார்கள்.ஒருநாள் பையன் முடி அதிகம் வளர்ந்து விட்டது என்று சொல்லி முடி வெட்டக் காசு கேட்டான்.அதற்கு அவன்,''போ,போ,காசு இங்கே காய்த்தா தொங்குகிறது?'' என்று கூறி காசு தர மறுத்து விட்டான்.

வருத்தம் அடைந்த சிறுவன்,மறுநாள் முடி வெட்டாமல் போனால் நண்பர்கள் கிண்டல் செய்வார்களே என்று எண்ணியவாறு அவர்களது தோட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது தென்னை மரத்திலிருந்து ஒரு தேங்காய் கீழே விழுந்தது.அவனுக்கு பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது.உடனே அந்த தேங்காயை எடுத்துக் கொண்டுபோய் முடி திருத்துபவரிடம் கொடுத்து,தேங்காயைப் பெற்றுக் கொண்டு முடி வெட்டுமாறு கேட்டுக் கொண்டான்.

பையனின் தகப்பனின் கருமித்தனத்தை அறிந்த முடி திருத்துபவரும் அனுதாபப்பட்டு தேங்காயைப் பெற்றுக் கொண்டு அவனுக்கு முடி வெட்டி விட்டார்.முடி வெட்டியிருந்த பையனைக் கண்ட தந்தை அதிர்ந்தார்.ஆத்திரத்துடன் பணம் ஏது என்று கேட்க பையனும் உண்மையை சொல்லிவிட்டான்.நீண்ட நேரம் கவலையுடன் அமர்ந்திருந்த கருமி எழுந்து பையனிடம் சொன்னான்,''நான் சிரமப்பட்டு பணம் சேர்க்கிறேன்.

நீங்கள் எல்லாம் ஊதாரித்தனமாய் செலவு செய்கிறீர்கள்.நான் மட்டும் ஏன் கஷ்டப்பட வேண்டும்.இன்று முதல் நானும் ஊதாரியாய் இருப்பது என்று முடிவு செய்துவிட்டேன்.''பின் தனது அறைக்கு சென்று ஒரு பெட்டியிலிருந்து ஒரு பட்டு வேஷ்டியை எடுத்தான்.மகனிடம் சொன்னான்,''இது என் கல்யாணத்திற்கு என் மாமனார் கொடுத்தது.இதை கடந்த 15 ஆண்டுகளாக நான் உபயோகிக்காமல் பாதுகாத்து வந்தேன் .இன்று முதல் அதை உடுத்துவது என்று முடிவு செய்து விட்டேன்.''
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கஞ்சன் நகைச்சுவை

Post by கவிப்புயல் இனியவன் on Mon 12 Oct 2015 - 18:03

ஒரு அந்தணர் தினசரி ஆற்றைக் கடந்து சென்று இறுதிக் கடன்களுக்கான சடங்குகளை செய்து தனது  வாழ்க்கையை நடத்தி வந்தார்.தேவையான அளவுக்கு வருமானம் வந்த போதிலும் அவர் எதுவும் செலவழிக்க மாட்டார்.சரியான கஞ்சன்.ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் போய்க் கொண்டிருந்தது அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவர் வேலைக்கு புறப்பட்டார்.அவர் மனைவி வேண்டாம் என்று தடுத்தும் பணம் வருமே என்ற ஒரே எண்ணத்தில் அவர் கிளம்பி விட்டார்.போகும்போது கழுத்தளவு நீரில் சிரமப்பட்டு நடந்து அக்கறை போய் அன்றைய வருமானத்தைப் பெற்றுக் கொண்டு திரும்ப வரும்போது ஆற்றில் சகதியில் மாட்டிக் கொண்டார்.

 அவருடைய அலறல் கேட்டு இரக்க குணம் உடைய ஒருவர் ஆற்றில் குதித்து அவரை சகதியிலிருந்து மீட்டார்.அவருக்கு நன்றி சொன்ன அந்தணர் திடீரென மறுபடியும் சகதியில் குதித்து விட்டார்.உதவி செய்த நபர்  இந்த அந்தணர் மன நிலை சரியில்லாதவரோ என்று எண்ணிக் கொண்டே அவரது சுபாவத்தினால்  மறுபடியும் அவரை சகதியில் இருந்து காப்பாற்றினார். கரைக்கு வந்ததும் அந்தணரிடம் மீண்டும் ஏன் சகதியில் குதித்தார் என்று கேட்டதற்கு அவர் சொன்னார்,''சகதியில் நான் மாட்டிக் கொண்ட போது போது இன்று நான் சம்பாதித்த நூறு ரூபாய் நோட்டு சகதியில் விழுந்து விட்டது.நீங்கள் நல்லவராய் தெரிவதால் மறுபடியும் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் மறுபடியும் குதித்து ரூபாய் நோட்டைக் கண்டு எடுத்து விட்டேன்.''
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கஞ்சன் நகைச்சுவை

Post by கவிப்புயல் இனியவன் on Mon 12 Oct 2015 - 18:04

தனது  வாழ்நாள் முழுவதும் கஞ்சனாகவே இருந்த ஒரு பணக்காரன் சாகும் தருவாயில், தான் வாழ்க்கையை வீணடித்துவிட்டதை உணர்ந்து வருந்தினான்.பணத்தையே தெய்வமாகக் கருதிய அவனுக்கு இப்போது பணம் எந்த வகையிலும் உதவி செய்யாது என்பதை உணர்ந்தவுடன் அதை வெறுத்தான்.தனது  மூன்று மகன்களையும் அழைத்து,''நான் இதுவரை பணப்பித்து பிடித்திருந்து இப்போதுதான் தெளிந்துள்ளேன்.நீங்களாவது பணத்துக்கு முக்கியம் கொடுக்காமல் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.நான் இதுவரை சேர்த்த பணத்தை மூன்று பைகளில் வைத்துள்ளேன்.ஒவ்வொன்றிலும் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது.

நான் இறந்தவுடன் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பையை எடுத்து என் பிணத்துடன் வைத்து எரித்து விடுங்கள்,''என்றார்.பிள்ளைகளும் உறுதியளிக்க அவரும் நிம்மதியுடன் மரணத்தைத் தழுவினார்.அவர் கூறியபடியே மூன்று பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு பையை பிணத்துடன் வைத்து எரித்தனர். வீட்டுக்கு வந்தவுடன் மூத்தவன் சொன்னான்,''தம்பிகளே,நான் அப்பா சொன்னபடி நடக்க முடியவில்லை.

எனக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் கடன் இருந்ததால் அதை எடுத்துக் கொண்டு மீதியைத்தான் எரித்தேன்,'' இரண்டாமவன் உடனே சொன்னான்,''நீ பரவாயில்லை.எனக்குக் கடன் கூடுதலாக இருந்ததால் நான் இருபதினாயிரம் ரூபாயை மட்டும் பையில் வைத்துப் போட்டேன்,''கடைக்குட்டிக்கு பயங்கரக் கோபம் வந்து,''அப்பா சொல்லைக் கேளாத நீங்கள் உருப்படுவீர்களா?அவர் நம்பிக்கையை சிதைத்து விட்டீர்களே,''என்று கன்னாபின்னாவெனத் திட்டினான்.

அண்ணன்கள் இருவரும்,''பரவாயில்லை,நீயாவது அப்பா சொன்னபடி முழுப் பணத்தையும் போட்டு விட்டாயா?''என்று கேட்டனர்.கடைக்குட்டி சொன்னான்,''நான் நேர்மையானவன்.அப்பா கொடுத்த பணத்தை என் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு அப்பா பெயருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு  செக் எழுதி பையில் வைத்து அவர் பிணத்துடன் வைத்துவிட்டேன்.''
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கஞ்சன் நகைச்சுவை

Post by கவிப்புயல் இனியவன் on Mon 12 Oct 2015 - 18:06

ஒரு கஞ்சன் சென்னைக்கு சென்றான்.ஒரு தெருவிற்கு சென்றான். கையிலிருந்த விலாசத்தைக்காட்டி பலரிடம் விசாரித்து ஒரு வீட்டுக்கு வந்தான்.அந்த வீடு ஒரு விலைமகளிர் வசித்து வந்த வீடு.ஒரு மனிதன் தனது  வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்தவுடன் அந்தப் பெண் மிக மகிழ்வுடன் அவனை  வரவேற்று உபசரித்தாள்.அவனும் அவளுடன்  மகிழ்ச்சியாய் இருந்துவிட்டு புறப்படுகையில் பத்தாயிரம் ரூபாயை அவளிடம் கொடுத்தான். 

அவளுக்கு மிகுந்த ஆச்சரியம்.அவள் அவனிடம் சொன்னாள் ,''மிக்க நன்றி இதுவரை யாரும்  பெருந்தன்மையுடன் இவ்வளவு பெருந்தொகையை  எனக்குக் கொடுத்தது கிடையாது.ஆமாம்,நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?''அவன் சொன்னான்,''மதுரையிலிருந்து வருகிறேன்.''அவள் வியப்பைத் தனது முகத்தில் காட்டியவாறே,''அடடே,நானும் மதுரைக்காரிதான்.

''என்றாள் .அவனும்,''எனக்குத் தெரியும் பெண்ணே,''என்றான்.அந்தப்பெண் எப்படித்தெரியும் என்று கேட்க,அவன் சொன்னான்,''நான் சென்னைக்கு ஒரு வேலையாய் வருவது தெரிந்து உன் தந்தைதான் என்னிடம் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து உன் முகவரியையும் கொடுத்து உன்னிடம் கொடுக்கச் சொன்னார்.''அந்தப்பெண் மயங்கி விழுந்தாள் .
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கஞ்சன் நகைச்சுவை

Post by கவிப்புயல் இனியவன் on Mon 12 Oct 2015 - 18:07

ஒரு கஞ்சன் தனது  மனைவியுடன் ஒரு நகருக்கு வந்தான் .ஒரு இடத்தில் நகரை ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது.நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை.அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க,அவர்கள் வேண்டாம் என்றனர்.அவரும் விடாமல்,''நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள்.நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்.ஆனால் ஒரு நிபந்தனை.

நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது.சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம்.ஆனால் சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்,''என்றார்.உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் ஏறினர்.ஹெலிகாப்டர் இயக்குனர் வானில் என்னென்னவோ  வித்தைகள் செய்ய ஆரம்பித்தார்.குட்டிக் கரணம் போட்டார்.வேகமாக இயக்கினார்.ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை. கீழே இறக்கியதும் இயக்குனர் அந்தக் கஞ்சனிடம், ''எப்படிங்க,நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?''என்று வியப்புடன்  கேட்டார்.அந்தக் கஞ்சனும் பெருமையாக,''எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது.ஆனாலும் சமாளித்து விட்டேன்,'' என்றான்.அவரும் எந்த தருணத்தில் என்று கேட்க,கஞ்சன் சொன்னான்,''என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோதுதான்.''
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கஞ்சன் நகைச்சுவை

Post by Nisha on Tue 13 Oct 2015 - 0:20

ஹாஹா கஞ்சன் செம கஞ்சூஸ் ஆக இருப்பான் போலவே!? நம்ம நண்பன் சாரிடம் அசிஸ்டெண்டாக ரெயினிங்க் எடுக்க விட்டால் திருந்திருவான்! சீக்கிரம்  போய் சொல்லுங்க இனியவன் சார். ஐ ஜாலி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கஞ்சன் நகைச்சுவை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 13 Oct 2015 - 12:33

Nisha wrote:ஹாஹா கஞ்சன் செம கஞ்சூஸ் ஆக இருப்பான் போலவே!? நம்ம நண்பன் சாரிடம் அசிஸ்டெண்டாக ரெயினிங்க் எடுக்க விட்டால் திருந்திருவான்! சீக்கிரம்  போய் சொல்லுங்க இனியவன் சார். ஐ ஜாலி
ஐ ஜாலி ஐ ஜாலி சியர்ஸ் சியர்ஸ் குதூகலம் குதூகலம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: கஞ்சன் நகைச்சுவை

Post by *சம்ஸ் on Mon 19 Oct 2015 - 16:01

கஞ்சன் ரெம்ப பெரிய கஞ்சான இருப்பான் போல!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கஞ்சன் நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum