சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சின்னச் சின்ன கதைகள்

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

Go down

Sticky சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 13 Oct 2015 - 16:57

First topic message reminder :

கொடுத்துப் பெறுதல்
--------------------------------

ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.

நன்றி: ந. உதயகுமார்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 28 Oct 2015 - 19:50

பிறர் வேதனை அறிக!
---------------------------------

இது உண்மை கதை.
-----------------
ஒரு குடும்பத்தில் அம்மாவும், எட்டுக் குழந்தைகளும் இருந்தார்கள். குழந்தைகளின் அப்பா எப்போதோ இறந்துவிட்டார். அம்மா ஒரு நோயாளி. எனவே அவளால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. நாட்கணக்காக எல்லோரும் முழுப்பட்டினி. அழுவதற்குக்கூட சக்தியில்லாமல் சோர்ந்து கிடக்கின்றன சின்னஞ்சிறு குழந்தைகள்.  என்ன செய்வதென்று தெரியாமல் அம்மா அளவற்ற துயரத்தில் தவித்தாள். பட்டினியால் குழந்தைகள் இறந்துவிடுவார்களோ என்று கூட அவளுக்குப் பயமாக இருந்தது.

இந்தக் குடும்பத்தின் கஷ்ட நிலையை யாரோ அன்னை தெரேசாவிடம் சொன்னார்கள். இதைக் கேட்டு மனம் வருந்திய அன்னை தெரேசா, உடனே கொஞ்சம் அரிசியும் அத்தியாவசியப் பொருட்களும் எடுத்துக்கொண்டு அந்த வீட்டிற்குச் சென்றார். அந்த நோயாளித் தாயிடம் அரிசியையும், பொருட்களையும் கொடுத்தார்.

உடனே அந்தப் பெண்மணி, அன்னை தெரேசா கொடுத்த பொருட்களையெல்லாம்  இரண்டாகப் பங்கு பிரித்தாள். மூத்தக் குழந்தையிடம், ஒரு பங்கு அரிசியை எடுத்து சோறு சமைக்கச் சொல்லிவிட்டு, இன்னொரு பங்கு பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

அவள் திரும்பி வருவதற்குச் சிறிது நேரமானது. அது வரை காத்திருந்த அன்னை தெரேசா அவள் வந்ததும் கேட்டார்: “”எங்கே சென்றிருந்தீர்கள்? நாங்கள் உங்களுக்காகக் காத்திருந்தோம்.”

அந்த அம்மா சொன்னாள்: “”பக்கத்து வீட்டிலும் வறுமைதான். அங்கும் பசியுடன் இருக்கிறார்கள். பாதி அரிசியையும், பொருட்களையும் அங்கே கொடுப்பதற்காகத்தான் சென்றிருந்தேன்.”

இதைச் சொல்லும்போது அவளது குழி விழுந்த கண்கள் மின்னின. அது கடவுளின் ஒளிபோன்று தெரேசாவிற்குத் தோன்றியது. அந்த அம்மாவின் கண்கள் மூலம் கடவுளே தன்னைப் பார்ப்பதாக அவர் உணர்ந்தார்.

தன் குடும்பமே கொடும் பட்டினியில் துடிக்கும்போதும், பக்கத்து வீட்டு வறுமையை    மறக்காத அந்த அம்மாவின் உள்ளம் இருக்கிறதே, அதுதான் இந்த உலகத்திலேயே மிக உயர்ந்தது. பிறர் வேதனை கண்டு துன்புறும், அந்த அன்பிற்கு இணையாக எதுவுமில்லை குழந்தைகளே!

+
வாணிஸ்ரீ சிவகுமார்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 28 Oct 2015 - 19:53

குதிரையும் கொடுத்தான்!

ஏமாற்றுக் கதைசிறுகதைகள்பழங்காலக் கதைகள்
----------------
இந்தக் கதை நடந்த காலம் சைக்கிள், மோட்டார் உபயோகத்தில் இல்லாத காலம்.

ஒரு நாள் வெயில் காய்ந்து கொண்டிருந்த நண்பகல் நேரம். சாலையிலே நடந்து போய்க் கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன், சற்றே இளைப்பாற வேண்டி ஏதேனும் இடம் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் நடந்து கொண்டிருந்தான். சிறிது தூரம் சென்ற உடன் ஒரு குளமும், அதையொட்டிய சிறு கிராமமும் தென்பட்டது. கையில் கொண்டு வந்திருந்த உணவை குளக்கரையில் அமர்ந்து  சாப்பிட்டான். கை கால்களை கழுவிக் கொண்டு கிராமத்திற்குள் நுழைந்தான்.

நீண்ட தெருவின் இரு பக்கமும் ஓட்டு வீடுகள் தென்பட்டன. ஒரு வீட்டின் வாயிலில் வேப்ப மரமும், அதை ஒட்டி பெரிய திண்ணையும் இருந்தன. காம்பவுண்டு சுவர் எழுப்பி வழிப் போக்கர்களுக்கு உதவாமல் இருக்கக் கூடிய நிலை அக்காலத்து மக்கள் அடையவில்லை. வருவோர் போவோர்க்காக விசாலமான திண்ணைகள் அமைக்கப்பட்ட காலம். உண்ட களைப்பு, அத்துடன் கூட நடந்து வந்த களைப்பு. இரண்டிலிருந்தும் சிறிது நேரம் விடுபட்டு ஓய்வெடுக்க எண்ணிய வழிப்போக்கன், அந்த வீட்டின் படிகளில் ஏறினான். வாசற்கதவு சாத்தியிருக்கவே, சரி வீட்டில் உள்ளவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணி திண்ணையிலே துண்டை உதறிப் போட்டு காலை நீட்டிப் படுத்துக் கொண்டான்.

நன்றாக ஒரு தூக்கம் தூங்கி எழுந்தவனுக்கு தாகம் எடுத்தது. எழுந்து உட்கார்ந்துக் கொண்டவன், வீட்டின் உட்புறம் திரும்பிப் பார்த்தான். இப்பொழுது கதவு சற்றே திறந்திருந்தது. யாரோ வீட்டுக்குள் நடப்பது தெரிந்தது. குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்குமா என்று கேட்டான். உடம்பை கதவிற்குப் பின் மறைத்துக் கொண்டு, தலையை மட்டும் நீட்டிய ஒரு பெண்மணி உங்களுக்கு குளிர்ந்த நீர் தேவையா அல்லது வெந்நீர் தேவையா என்று கேட்டாள். இந்த வெயிலுக்கு குளிர்ந்த நீர் தான் தேவை என்றான் வழிப்போக்கன். சிறிது நேரத்தில் ஒரு சொம்பு நிறைய குளிர்ந்த நீர் கொண்டு வந்தாள் அந்த இல்லத்தரசி. ஒரு நொடியில் சொம்பு காலியாகியது.

“”இந்தத் திண்ணை, வேப்பமரக் காற்று அடடா, சொர்க்கம் போலவே இருக்கிறது” என்றான் வழிப்போக்கன். சொர்க்கம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் இல்லத்தரசியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“”நீங்கள் சொர்க்கத்திற்கு போயிருக்கிறீர்களா?” என்று வினவினாள்.

வழிப்போக்கன் புத்திக் கூர்மையானவன். அந்தப் பெண்மணியை ஒரு முறை உற்றுப் பார்த்தான். அவள் ஒரு அரைப் பைத்தியம் என்பது அவனுக்குப் புரிந்து விட்டது. அசட்டுத்தனமான அவளது கேள்விக்கு நேராக பதிலளிக்காமல்,

“”சொர்க்கத்தைப் பற்றி உங்களுக்கு ஏன் அவ்வளவு அக்கறை” என்று வினவினான்.

“”ஆறு மாசம் முன்னால் தான் என்னுடைய ஒரே பெண் தங்கம் காலமானாள். செல்லமா வளர்ந்த பொண்ணு. அவ இப்ப எங்க இருக்கா. சொர்க்கத்திலா இல்ல நரகத்திலா ஒண்ணுமே புரியல. ரொம்ப கவலைல இருக்கேன்” படபடவென பொரிந்தாள்.

உஷாரான வழிப்போக்கன் “”ஒரு முறை என்ன, சொர்க்கத்திற்கு அடிக்கடி போய்விட்டு வருவதுதான் என்னுடைய வேலை. உங்க பொண்ணோட அடையாளம் சொல்லுங்கள். ஒருவேளை நான் அவளைப் பார்த்திருக்கலாம்” என்றான்.

தங்கத்தின் அங்க அடையாளங்களை அந்தப் பெண்மணி கூற, வழிப்போக்கன் பலமாக தலையாட்ட தொடங்கினான்.

“”இந்தப் பெண்ணை நான் நன்றாகவே பார்த்திருக்கிறேன். சட்டை துணிமணிதான் சரியாக இல்லை. கழுத்தும் காதும் மூளியாக இருக்கிறது” என்றான்.

அவனது பதிலைக் கேட்டு அதிர்ந்து போன பெண்மணி, “”என்ன! என்னுடைய தங்கத்திற்கு சட்டை துணிமணி இல்லையா? அவள் கழுத்தும் காதும் மூளியாகவா இருக்கு. அச்சச்சோ அவளுக்குன்னு தைத்த துணிமணி எல்லாம் இங்கே வீணாப் போகிறது. நகை நட்டு போட்டுக் கொள்ள ஆளில்லாமல் பெட்டிக்குள் கிடக்கு. நீங்க ஒரு உதவி செய்வீங்களா?” என்று வழிப்போக்கனைக் கேட்டாள்.

“”உங்களைப் போன்ற நல்லவர்களுக்கு உபகாரமாக இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம். என்ன உதவி செய்ய வேண்டும்” என்றான் வழிப்போக்கன்.

“”தங்கத்தோட துணிமணி, நகை எல்லாத்தையும் மூட்டை கட்டித் தருகிறேன். அடுத்தமுறை நீங்க சொர்க்கம் போகும் போது அதை அவளிடம் கொடுங்க. என்னுடைய தங்கம் எந்தக் குறையும் இல்லாம இருக்கணும்” என்றாள்.

இன்று நாம் நரி முகத்தில் விழித்தோம். இந்த அசடு நம் குடும்பத்திற்கு தேவையான துணிமணி, நகை எல்லாவற்றையும் தருகிறது என்று சிந்தனை செய்த வழிப்போக்கன், “”கொடுங்கள், கொடுங்கள் பத்திரமாக சேர்த்துட்டு அடுத்த முறை இந்தப் பக்கம் வரும் போது உங்களுக்கு தகவல் தருகிறேன்” என்றான்.

சிறிது நேரத்தில் ஒரு பெரிய மூட்டை அவன் முன்னால் இருந்தது. விஷயம் தெரிந்தவர்கள் யாரேனும் வருவதற்குள் விரைந்து கம்பி நீட்ட வேண்டும் என்று முடிவு செய்தான் வழிப்போக்கன். “”நான் இன்னும் சற்று தூரம் நடந்து செல்ல வேண்டும். இருட்டுவதற்குள் ஊர் போய் சேர வேண்டும். வருகிறேன்” என்று கூறிவிட்டு கிளம்பினான்.

சிறிது நேரம் சென்றது. வெளியே சென்றிருந்த அந்த வீட்டு எஜமானர் வழக்கம் போல் தன் குதிரையில் இல்லம் திரும்பினார். வீட்டிற்குள் நுழைந்து கை, கால் கழுவுவதற்கு பின்பக்கம் சென்றார். பின்கூடத்தில் வந்து ஊஞ்சலில் அமர்ந்தார். தன் கணவருக்கு மரியாதையுடன் ஒரு சொம்பில் நீர் எடுத்து வந்த அப்பெண்மணி, சொம்பை அவர் முன்னால் வைத்து விட்டு, “”நம்ப தங்கம் சொர்க்கத்தில் தான் இருக்காளாம். உடம்பெல்லாம் அப்படியே தான் இருக்காம்.

போட்டுக்கத்தான் துணிமணி சரியாக இல்லையாம். காது, கழுத்து தான் மூளியா இருக்காம்” என்றாள்.

எஜமானருக்கு ஒன்றும் புரியவில்லை. தன் அசட்டு மனைவியைப் பார்த்து, “”என்ன உளர்றே” என்றார்.

“”நான் ஒன்றும் உளறவில்லை. சொர்க்கத்திலிருந்து வந்த ஒருவர் நம் வீட்டு திண்ணையில் படுத்திருந்தார். அவர்தான் தங்கத்தைப் பத்தி சொன்னார். நம்ப தங்கம் துணிமணி இல்லாம கஷ்டப்படலாமா? கழுத்து காது மூளியா இருக்கலாமா?” என்று பொரிந்து தள்ளினாள்.

எஜமானருக்கு ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பது புரிந்து விட்டது. துருவித் துருவி விசாரித்ததில் துணிமணி, நகை எல்லாம் ஒரு எத்தன் கையில் போயிருப்பதும் புரிந்து விட்டது.

தலையிலடித்துக் கொண்ட அவர், “”எந்தப் பக்கம் போனான் அவன்” என்று வினாவினார்.

குதிரை மீது ஏறிக் கொண்டு மனைவி காட்டிய திசையில் குதிரை செலுத்தினார்.

பின்னால், நாலுகால் பாய்ச்சலில் ஒரு குதிரை வருவதைப் பார்த்த ஏமாற்றுப் பேர்வழி  செய்வதறியாது திகைத்தான். இருந்தாலும் நிலைமையை சமாளிக்க வேண்டி கையிலிருந்த மூட்டை உடன் அருகிலிருந்த ஒரு மரத்திலேறி ஒரு அடர்ந்தக் கிளையில் உட்கார்ந்து கொண்டான். வீட்டுக்காரர் மரத்தின் கீழ் குதிரையை நிறுத்தினார். உரத்தக் குரலில், “”டேய்… மரியாதையா கீழே இறங்கு” என்று மிரட்டினார். வழிப்போக்கன் அசைந்து கொடுப்பதாக இல்லை. விட்டேனா பார் என்று கூவியபடியே குதிரையிலிருந்து கீழே குதித்த எஜமானர் மரத்தின் மேல் ஏறத் தொடங்கினார்.

தனக்கு ஆபத்து நெருங்கிவிட்டதை உணர்ந்த வழிப்போக்கன் கீழே குதித்தான். அவனது அதிர்ஷ்டம் சரியாக கீழே நின்று கொண்டிருந்த குதிரையின் மேல் விழுந்தான். பயத்தில் குதிரையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். தன் எஜமான் மேலே அமர்ந்து விட்டார் என்று நினைத்த குதிரை ஓடத் தொடங்கியது.

எஜமானருக்கோ ஓன்றும் புரியவில்லை. மரத்திலிருந்து கீழே இறங்கினார். மனைவி கொடுத்த துணிமணிகள், நகைகள் ஒருபுறம், தனது அருமையான குதிரை மற்றொரு புறம் எல்லாமே பறிபோய் விட்ட நிலை அவரை திக்குமுக்காடச் செய்தது.

செய்வதறியாது திகைத்த அவர் குதிரை ஓடிய திசையைப் பார்த்து உரத்தக் குரலில், “”எமகாதக எத்தனே என் தங்கத்தைப் பார்த்தால் அம்மா நகை கொடுத்தாள், துணி கொடுத்தாள், உன் அப்பா குதிரையும் சேர்த்துக் கொடுத்தார் என்று சொல்” என்று கூவிவிட்டு வீடு திரும்பினார்.


+

வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 28 Oct 2015 - 19:55

தேவதை மகளும், நண்பர்களும்!
-----------------
நள்ளிரவின் கரிய இருட்டில் அந்த வீட்டைக் கண்டுபிடித்ததே பெரிய விஷயமாய்ப் பட்டது பட்டாபிக்கு.

“”இனிமேல் நடந்து போய் நம்ம குரூப் மாணவர்களைக் கண்டுபிடிக்க முடியாது. அவங்களும் நம்மைத் தேடிகிட்டுத்தான் இருப்பாங்க. அதனால ராத்திரி இந்த இடத்துல பாதுகாப்பா இருப்போம். விடிஞ்சதும் ஈஸியா அவங்க கூட சேர்ந்துடலாம். என்ன சொல்றீங்க?” என்று கேட்டான்.

நேசமலரும், ஷிவானியும் அதிக பயத்தில் இருந்தார்கள். அச்சுதனுக்கும் ஒரே உதறலாய்த்தான் இருந்தது. இதில் அலட்சியமாய் இருந்தது ஜஸ்டின் மட்டும்தான்.

“”இதுல என்ன இருக்கு. இந்த வீட்டுல தங்குறதைத் தவிர வேற வழியே இல்லே. சார் எவ்வளவோ சொன்னாரு. தனித்தனி குரூப்பா காட்டுக்குள்ளே போகாதீங்க. வழி தவறிடும்னு சொன்னாரு. பொழுதுபோன நேரத்துல கூழாங்கற்களைப் பொறுக்க இந்த ரெண்டு பெண்களும் போக நாம மூணு பேரும் இதுகளைத் தேடிகிட்டு இப்போ எங்கோ மாட்டிக்கிட்டோம்…” என்றான் ஜஸ்டின். ஏற்கனவே பயந்திருந்த ஷிவானி அழ ஆரம்பித்தாள்.

“”எங்களாலதானே எல்லாம். இப்ப என்ன செய்யறது?” -அவள் அழ, பட்டாபி அதட்டினான்.

“”ஷிவானி அழறதை விட்டு ஆகப் போறதைப் பாரு. ஜஸ்டின் உன்னோட பென் டார்ச்சை அடி. வீட்டில ஆள் இருக்கிற மாதிரி தெரியலையே..?”

ஐந்து பேரும் தயங்கித் தயங்கி வீட்டின் வாசலை அடைந்தார்கள். அச்சுதன் கதவில் கை வைக்க கதவு திறந்து கொண்டது.

“”ஹா… இதென்ன இவ்ளோ வாசனை. பிஸ்கட், சாக்லேட் வாசனை ஆளைத் தூக்குதே…” என்றான் ஜஸ்டின்.

“”ஷ்ஷ்ஷ்…” டார்ச் உதவியால் வீட்டை ஒரு வட்டம் அடித்தான் பட்டாபி.

“”காட்டுக்குள்ளே திகில் பயணம்னு சும்மா ஜாலிக்கு சொன்னேன். அதுவே நிஜமாயிடுச்சு. ஹலோ… வீட்டுல யாருங்க?”
- எந்த பதிலும் இல்லை. அது ஒரு சின்ன வீடு. ஒரு மூலையில் மேஜையும், ஆறு நாற்காலிகளும் இருந்தன. சுவரில் ஒரு தண்ணீர்க் குழாய் இருந்தது. தரையில் ஒரு மெத்தை விரிக்கப்பட்டிருந்தது. மேஜை மீது காலி தட்டுகளும், டபரா, கரண்டிகளும் இருந்தன. அறை முழுக்க வாசனையாய் இருந்தது.

“”என்னடா இது… பக்கத்துல ஏதாச்சும் பிஸ்கட் ஃபாக்டரி இருக்குமோ?” -அச்சுதன் சொல்ல, நேசமலர் ஒரு டபராவை எடுத்து குழாயைத் திறந்தாள். பாத்திரம் முழுக்க நுரை போல் வர, “”ஆ… இதென்ன தண்ணிக்குப் பதிலா வேற ஏதோ வருது. ஆனா ஸ்ட்ராபெர்ரி வாசனை வருதே” என்றாள்.

அவர்களுக்கு ஓரளவு இருட்டு பழக்கப்பட்டு விட்டது.

நாள் முழுக்க நடந்ததன் களைப்பு, பசி, பயம் இவையெல்லாம் சேர்ந்து வெள்ளை வெளேரென்ற அத்தனை பெரிய மெத்தையைப் பார்த்ததும், ஐந்து பேரும் அதில் ஆளுக்கொரு பக்கம் விழுந்து தூங்க ஆரம்பித்தார்கள்.

“பீப்… பீப்… பீப்…’ -என ஜஸ்டின் கைக் கடிகாரத்தின் அலாரம் ஒலித்தது. வழக்கமாய் ஐந்து மணிக்கு அவன் எழுந்து படிப்பதற்காக அவன் அம்மா செட் பண்ணியிருந்த அலாரம் அது. பழக்கதோஷத்தில் பட்டென்று எழுந்தான் ஜஸ்டின். புலர்ந்துக் கொண்டிருந்த வெளிச்சத்தில் அறையில் எல்லாம் பளிச்சென்று தெரிந்தது. அறையின் சுவரை பார்த்த ஜஸ்டின்

“”மை காட்!” என்று கத்தினான். அவன் கத்தல் கேட்டு ஒவ்வொருவராய் விழித்துக் கொண்டனர்.

“”என்னடா…. ஏன் கத்தறே?” கண்களைத் திறக்காமலேயே கேட்டான் பட்டாபி.

“”டேய்… பாருடா அதிசயத்தை. இந்த அறைச் சுவர் பிஸ்கட்டால் ஆனது. பாருடா… முழுவதும் பிஸ்கட் சுவர்” கத்தினான் ஜஸ்டின்.

சுவரை லேசாக சுரண்டிப் பார்த்த ஷிவானி, “”ஆமா… ஆமா…” என்றாள்.

“”ஐயய்யோ… இங்கே பாருங்க” -அலறினாள் நேசமலர். அவள் கையில் நேற்று தண்ணீர் பிடித்த பாத்திரம் இருந்தது. அதில் தண்ணீருக்குப் பதில் ஐஸ்கிரீம் இருந்தது. குழாயைத் திருகினாள். அதிலிருந்து ஐஸ்கிரீம் கொட்டியது.

எல்லோரும் அதிர்ச்சியிலும், ஆனந்தத்திலும் கூக்குரலிட்டனர்.

“”இங்கே பாருங்க… நாம ராத்திரி படுத்திருந்தது வெறும் பெட் இல்லை. பிரெட் பெட்…” என்றான் அச்சுதன். அவர்களுக்கு மேலும் மேலும் ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருந்தன.

ஆவலுடன் ஒரு பாத்திரத்தில் ஐஸ்கிரீமை நிரப்பிக் கொண்டு பெட்டிலிருந்து கொஞ்சம் பிய்த்துக் கொண்டு சாப்பிட்டு மேஜையில் உட்கார்ந்த ஜஸ்டின் சாப்பாட்டுத் தட்டை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு, பிரெட்டைப் போட்டு விட்டு வெறும் தட்டை கடித்துத் தின்ன ஆரம்பித்தான்.

“”டேய்… என்னடா செய்றே?” -பட்டாபி கேட்க,

“”இந்தப் பாத்திரங்கள் எல்லாமும்… ஏன் இந்த மேஜை, நாற்காலி எல்லாமே சாக்லேட்டால் ஆனது” என்றான் ஜஸ்டின்.
இதைக் கேட்டதும் ஆனந்த இரைச்சலில் அந்த இடம் அதிர்ந்தது.

ஆளாளுக்கு பெட்டையும், தட்டையும் கடித்துத் தின்ன ஆரம்பித்தார்கள். வழிய வழிய ஐஸ்கிரீம் பிடித்து சாப்பிட்டார்கள். வயிறு நிறைய மட்டும் சாப்பிட்டு ஆட்டம் போட்டார்கள்.

ஒருவகையாய் பசியும், பிரமிப்பும் அடங்கியது.

“”நாம கனவு காணலியே…” இரண்டாவது தட்டை மென்று கொண்டே கேட்டான் அச்சுதன்.

“”சேச்சே… அஞ்சு பேரும் ஒரே மாதிரி கனவா காண முடியும். இது நிஜம்” என்றாள் ஷிவானி.

“”அப்படின்னா இந்த அதிசய வீடு யாருடையது? ஒண்ணுமே புரியலையே.” -இது அச்சுதன்.

“”சரி… விடிஞ்சிடுச்சு… நம்ம பசியும் அடங்கிடுச்சு… புறப்படலாமா?” -கேட்டான் பட்டாபி.

“”ஐயோ… இந்த அதிசய வீட்டை விட்டு எப்படி வர்றது? இப்படி ஒரு வீடு இருக்கிறதா வெளில சொன்னாக்கூட யாரும் நம்பமாட்டாங்களே…” -நேசமலர் அங்கலாய்த்தாள்.

அப்போது திடீரென்று வெளியே விமானம் தரையிறங்குவது போல் பெரும் சப்தம் எழுந்தது. பயந்து நடுங்கிப் போன சிறுவர்கள் மேஜைக்கடியில் புகுந்து கொண்டனர். கதவைத் திறந்து மிகப் பெரிய பறவை ஒன்று உள்ளே வந்தது.

அதன் சிறகில் அழகான சின்னஞ் சிறுமி ஒருத்தி இருந்தாள். அச்சிறுமி குட்டி சூரியனைப் போல பிரகாசித்தாள். அவளது ஆடை முழுக்க நட்சத்திரங்கள் பதிக்கப் பெற்றிருந்தன. தலையில் பிறைநிலவை சூடியிருந்தாள். ஆனால், அவள் முகம் மட்டும் சோர்ந்து இருந்தது. சிறுமியை இறக்கிவிட்ட பறவை அவள் முன் மண்டியிட்டது.

“”தேவதை மகளே… உன்னை நாள் முழுதும் பராமரிக்கும் வேலைக்காரப் பறவையாகிய நான் என்ன செய்தும் உன்னைச் சிரிக்க வைக்க முடியவில்லை. மாலையில் உன்னைக் காண வரும் உன் தாய் என்னை கோபிக்கிறார்கள். உனக்கென பிஸ்கட்டால் வீடு கட்டி பிரெட், சாக்லேட், ஐஸ்கிரீம் என்று நீ விரும்பியது போல் வீட்டை வடிவமைத்திருக்கிறேன். இருந்தாலும் நீ சந்தோஷப்படவில்லை. என்ன காரணம்?” என்று கேட்டது.

தேவதை மகள் மவுனமாக மேஜையைப் பார்த்தது. அவள் பார்வை போன திசையைப் பார்த்த வேலைக்காரப் பறவை மேஜைக்கடியில் பார்த்து  உருமியது. அவ்வளவுதான் ஐந்து பேரும் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தார்கள்.

“”யார் நீங்கள்? இங்கு எப்படி வந்தீர்கள்?” -அதட்டியது பறவை.

காட்டுச் சுற்றுலா வந்த இடத்தில் வழி தவறி விட்டதை விளக்கிக் கூறினான் பட்டாபி.

“”தயவு செய்து எங்களை மன்னிச்சிடுங்க. நாங்க தெரியாம வந்துட்டோம். நாங்க வெளியே போயிடறோம்” என்றார்கள் ஒருமித்தக் குரலில்.

வேலைக்காரப் பறவை யோசித்தது.

“”பொழுது விடிந்து விட்டது. இனி யாரும் வெளியே போக முடியாது. இருட்டினால் தான் வெளியே போக முடியும். வேறு வழியில்லை. மாலை வரை அமைதியாக உட்கார்ந்திருங்கள்” என்று பணித்தது.

எல்லோரும் மௌனமாக உட்கார்ந்திருந்தார்கள். எவ்வளவு நேரம்தான் பொறுமையாக ஒரே இடத்தில் உட்கார முடியும்? அச்சுதன் நைஸôக ஜஸ்டினிடம், “”விளையாடலாமா?” என்று கேட்டான்.

ஜஸ்டின் தலையாட்ட அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள். விளையாட்டு களைகட்டத் துவங்கியது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த தேவதை மகள் “”நானும் வரலாமா” என்று கேட்க, சந்தோஷமாக வரவேற்றார்கள்.

நேரம் செல்லச் செல்ல சிரிப்பும், கும்மாளமும் காதைப் பிளந்தது. தேவதை மகள் ஆனந்தமாக விளையாடினாள். வேலைக்காரப் பறவை இதையெல்லாம் ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தது.

தேவதை மகள் முகம் பிரகாசமாய் மலர்ந்திருந்தது.

“”இந்த சந்தோஷத்துக்குக் காரணம் என்ன?” என்று தேவதை மகளிடம் கேட்டது பறவை.

“”இத்தனை நண்பர்களுடன் சேர்ந்து நான் விளையாடியதே இல்லை. எனக்கு இதுவரை நண்பர்களும் இல்லை. நட்பு என்றால் என்ன என்று இன்றைக்குப் புரிந்து கொண்டேன். நீ எனக்காக என்ன செய்தாலும் நண்பர்களுடன் இருப்பதைப் போன்ற சந்தோஷம் வராது” என்றாள்.

“”சரி… நேரமாகிறது கிளம்புவோம்” -வேலைக்காரப் பறவை சிறகை விரிக்க, தேவதை மகள் நண்பர்களிடம் விடை பெற்றாள்.

“”உங்களை மறக்கவே மாட்டேன். ஆசைப்பட்டவை அத்தனையும் கிடைத்தாலும் நல்ல நண்பர்கள் கிடைப்பதுதான் பெரிய விஷயம். நாம் இனியும் நண்பர்களாகவே இருப்போம்… வருகிறேன்.” பறவை தேவதை மகளுடன் பறந்தது.
ஐந்து பேரும் கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.

ஒருநாள் முழுதும் எங்கே இருந்தீர்கள்?” என்று ஆசிரியர் கேட்டார்.

“”வழி தவறி காட்டில் நடந்து கொண்டே இருந்தோம். இரவு ஒரு ஓடக் கரையில் தங்கியிருந்தோம்” என்றான் பட்டாபி. மற்ற நால்வரும் அதை ஆமோதித்தார்கள்.

தேவதை மகளின் நல்ல நட்பை இழக்க அவர்களுக்கு மனதில்லை.

 +
வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 28 Oct 2015 - 19:57

பார்த்த ஞாபகம் இல்லையோ?
---------------
சென்னை புறநகர்ப் பகுதியில் ஒன்பது மாடிகளுடன் பிரமாண்டமாய் நின்று கொண்டிருந்தது அந்தத் தனியார் மருத்துவமனை. இதயம், சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்குப் புகழ் பெற்ற அங்கு கூட்டத்துக்கு எப்போதும் குறைவே இல்லை. இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட மத்திய அமைச்சர் பரணீதரன் அங்கு ஓய்வில் இருக்கவே விஐபி-க்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். மெட்டல் டிடெக்டர் சோதனைக்குப் பிறகே அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

சிறுநீரக மருத்துவத்துறை தலைவரும், மருத்துவமனையின் இயக்குநர்களில் ஒருவரும் தனது பால்யகால நண்பனுமான சரவணனை சந்தித்து மகனின் திருமணத்துக்கு நேரில் பத்திரிகை தர அதிகாலையிலேயே கோடம்பாக்கத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தான் விஸ்வநாதன். 9 மணிக்கு மேல் ஆகிவிட்டால் சரவணன் ஆபரேஷன் தியேட்டருக்குப் போய் விடுவானே என்ற பரபரப்பு விஸ்வநாதன் முகத்தில் பிரதிபலித்தது. அமைச்சரை சந்தித்து நலம் விசாரித்து விட்டு தனது 10 வயது மகனை வலது கையால் அணைத்தவாறு வழக்கத்துக்கு மாறாக எளிமையான உடையில் வந்து கொண்டிருந்தாள் தேன்சுவை எம்.பி.

சோதனைகள் முடிந்து மூன்றாவது மாடியில் டாக்டர் சரவணனின் அறையை விஸ்வநாதன் அடைந்த போது மணி 8.30. ஆறு அடி உயரமும் அதற்கேற்ற உடல்வாகுமாய் அழகன் என்று சொல்லத்தக்க தோற்றத்தில் ஐம்பது வயதை சமீபத்தில் தொட்ட சரவணன் மற்றொரு லிப்டில் வந்து கொண்டிருந்தார். அவரது வருகையை அடுத்து அந்த மூன்றாவது மாடியே சுறுசுறுப்பானது. ‘அய்யா எப்படி இருக்கீங்க, அம்மா எப்படி இருக்கீங்க, தம்பி எப்படி இருக்கீங்க. சிஸ்டர் எப்படி இருக்கீங்க’ என்று காத்திருந்த நோயாளிகளை விசாரித்துக் கொண்டே வந்தவர் விஸ்வநாதனைக் கண்டதும், ‘வாடா விசு’ என்று தோளில் கை போட்டு உள்ளே அழைத்துச் சென்றார்.

தான்சானியாவைச் சேர்ந்த இளம்பெண் காத்திருப்பதாக ரிசப்ஷனிஸ்ட் இன்டர்காமில் சொன்னாள். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட தனது டாக்டர் தந்தைக்கு சிறுநீரகம் தர முன் வந்திருக்கும் அவளை உள்ளே அனுப்பச் சொன்னார் சரவணன். நீங்களும் உங்களது தந்தையும் ஒரே ரத்தப் பிரிவை கொண்டவராக இருப்பதால் அறுவைச் சிகிச்சையில் சிக்கல் ஏதும் இருக்காது. பீரியட் டைம் ஏதும் இல்லையே, நாளைக்கு ஆபரேஷனுக்குத் தயாராயிருங்கள் என்று ஆங்கிலத்தில் தெரிவித்தார் சரவணன். ‘தேங்க் யூ’ என்பதற்கு இணையான ஸ்வாஹிலி மொழி சொல்லான ‘அசான்டே’ என்று கூறி விடை பெற்றாள் இளம்பெண்.

‘என்னடா விசு, ரொம்ப நாள் ஆச்சு பாத்து. தொலைபேசியிலே கூட பேசலையே?’

‘நீ மட்டும் என்னவாம்? பார்த்திபனோட கல்யாணப் பத்திரிகை. நீ எங்களோடவே கல்யாணத்துக்கு கூட வந்து நடத்திக் கொடுக்கணும். ஏற்கெனவே வாக்கு கொடுத்திருக்கே. மறந்துடாதே’.

‘தவளையும், கரப்பான் பூச்சியும் வரைய முடியாது தவித்த எனக்கு ரெகார்டு நோட்டில் முழு படத்தையும் நீ வரைந்து கொடுத்ததை மறக்கலே. பிரதிபலனா உன்னோட மகன் திருமணத்துக்கு எங்கு இருந்தாலும் கட்டாயம் வருவேன்னு அப்போ சொன்னதை தசரதனிடம் கைகேயி வாங்கிய வரமா இப்போ பயன்படுத்தறீயா?’

‘அப்படிதான் வச்சிக்கோயேன்’

‘கடலூருக்கு வர தயங்குவேன்னு தெரிஞ்சும் அங்கேயே மகனின் திருமணத்தை வச்சு என்னை வந்தாகணும்னு கட்டாயப்படுத்துவது எந்த விதத்திலேடா நியாயம்?’

‘காரணமாய்தான் வரச் சொல்றேன். ஏமாத்திடாதே’

‘விசாலியைக் கேட்டதாய் சொல். கல்லூரி ஆசிரியர் பணி எல்லாம் எப்படி இருக்கு? கல்யாணத்தில் சந்திப்போம். வாக்கு தவறமாட்டேன்’ – நண்பனை வழியனுப்பி விட்டு ஆபரேஷன் தியேட்டருக்கு செல்லத் தயாரானார் சரவணன்.

திருமண சத்திரத்தில், தனது அறையில் பத்தாம் திருமுறையான திருமந்திரம் பாடலில் மூழ்கியிருந்தார் டாக்டர் சரவணன்.

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டா

அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்

இயக்கில்லை போக்கில்லை யேயென்ப தில்லை

மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே

-கருப்பை பற்றிய எத்தனை யதார்த்தமான பாடல். திருமந்திரத்தின் பெருமையை எனக்கு விளக்கி அதனை படிக்கத் தூண்டிய எனது பேஷன்ட் நாகராஜனை நெஞ்சார வாழ்த்தினேன்.

காலிங் பெல் சத்தம் கேட்கவே எரிச்சலுடன் எழுந்து ரூம் கதவைத் திறந்தேன். முதியவர் மற்றும் 12 வயது மதிக்கத்தக்க சிறுமியுடன் விஸ்வநாதன் நின்று கொண்டிருந்தான்.

‘சாரிடா! எனக்கு வேண்டியவங்க. ராத்திரிக்கு இவங்க இங்க தங்கிக்கட்டும்’ தர்மசங்கடத்துடன் நகர்ந்தான் விசு.

என்னதான் நண்பன் வருந்தி அழைத்தாலும் அதற்காக அவனது மகன் திருமணத்துக்கு கல்யாணக் குழுவினரோடு அவர்கள் வந்த பஸ்ஸிலேயே வந்ததும் இல்லாது, கல்யாணச் சத்திரத்திலும் தங்கியது பெரும் தவறு என்று நொந்துகொண்டேன். கடிகாரத்தைப் பார்த்தேன். 11 மணிக்கு பத்து நிமிடம் இருந்தது. படிக்கும் மூடு போய்விட்டதால் புத்தகத்தை மூடிவிட்டு கட்டிலில் படுக்கையை சரிசெய்து படுத்துக் கொண்டேன்.

‘நீங்க படுக்கும்போது லைட்டை அணைச்சுடுங்க’ உள்ளே வந்தவர்களிடம் முகம் கொடுத்து பேசாது கண்களை மூடிக்கொண்டேன்.

முதியவரும், அந்தச் சிறுமியும் தரையில் ஜமக்காளத்தை விரிக்கும் சப்தம் கேட்டது. தலையணை அவர்களுக்கு இருக்கிறதா என்று கூட கேட்கத் தோன்றவில்லை. ‘அங்கிளுக்கு நம்ம மேலே கோபம் போல இருக்கு’ என்று முதியவரிடம் சிறுமி காதோடு ரகசியம் பேசுவது நன்றாகவே எனக்கு கேட்டது.

அதிகாலை 5.30 மணிக்கு கண்விழித்தபோது குட்டிப் பிசாசு இரட்டை ஜடை அலங்காரத்துடன் பச்சைப் பாவாடை சட்டை போட்டுக் கொண்டு ஜன்னலைத் திறந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஓசைப்படாது பின்னால் நின்றேன்.

கடலூர் -சிதம்பரம் செல்லும் சாலையில் காட்டு பங்களா கணக்காய் அமைந்திருந்த அந்தத் திருமண சத்திரத்திலிருந்து விடியலைப் பார்ப்பது ரம்மியமாய்தான் இருந்தது. சில்லென்ற காற்று இதமாய் உடலை வருடியது. வயல்வெளிகள், தென்னை மரங்கள், பாக்கு மரங்கள் என கண்ணுக்கு எட்டியவரை பசுமை. பறவைகள் பல்வேறு குரலில் கச்சேரி செய்து கொண்டிருந்தன.

‘அங்கிள் எழுந்தாச்சா? பாத்ரூமிலே வெந்நீர் வாங்கி வச்சுருக்கேன்’ தேங்ஸ் கூட சொல்லத் தோன்றாது அமுக்கமாய் இருந்தேன்.

‘இங்க பாருங்களேன். நாரை, கொக்கு, குருவி, புறா, கிளின்னு எத்தனை விதமான பறவைக் கூட்டம்’

‘நீ என்ன பறவையியல் நிபுணரா?’

‘வர்ண நாரை, சாம்பல் நாரை, நத்தை குத்தி நாரை, குருட்டுக் கொக்கு, வெள்ளைக் கொக்கு, பொன்னிற மாம்பழக் குருவி, வால் அல்லிக் குருவி, இரட்டை வால் குருவி, தையல்காரக் குருவி, வண்ணாத்திக் குருவி, கொண்டைக் குருவி, தூக்கணாங் குருவி, சூரைக் குருவி, தேன் சிட்டு, வீட்டுப் புறா, பாறைப் புறா, மரகதப் புறா… பறவை வகை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?’

என்னால் சிரிப்பை மறைக்க முடியவில்லை. மருத்துவமனையில் எனது அறை ஜன்னலை எப்போதாவது திறக்கும்போது சன் ஷேடுகளில் புறாக்கள் சில சமயம் ஹூ-ஹூ-ஹூன் என்று கூவிக் கொண்டு ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும். சன்ஷேடுகளை எச்சமிட்டு அசிங்கப்படுத்தும் அவற்றைக் கண்டாலே கோபம் கோபமாய் வரும். இயற்கையை ரசிக்கவே நமக்கு மறந்துபோய்விட்டதோ என்ற ஆதங்கத்துடன் பாத்ரூமை நோக்கி நடந்தேன். வெளியே வந்தபோது காப்பியை வாங்கி மூடிவைத்து விட்டு அந்த குட்டிப் பிசாசு காணாது போயிருந்தது.

முகூர்த்தம் முடிந்து நான் சாப்பிடும் போது எதிரில் அந்தச் சிறுமி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். நான் கண்டும் காணாதது போல் இருந்தேன். தன் வயதை ஒத்த ஒன்றிரண்டு வாண்டுகளுடன் என்னருகில் வந்தவள், ‘எங்களை திருப்பாதிரிப்புலியூர் கோயிலுக்கும், சில்வர் பீச்சுக்கும் கூட்டிகிட்டு போறீங்களா?’ வம்புக்கு இழுத்தாள். ‘சின்னக் குழந்தை கேட்குது. நம்ம காரிலே போயிட்டுதான் வாயேண்டா’- பரிந்துரை செய்தான் விசு.

வேண்டா வெறுப்பாக இருந்தாலும் போய்தான் வருவோமே என்றும் தோன்றவே குட்டிப்பிசாசு சகிதம் கிளம்பினேன். படிக்கும் காலத்தில் சுற்றுலா வந்தபோது பார்த்த சில்வர் பீச்சில் அந்த வாயாடியுடன் நடந்து கடல்நீர் காலை முத்தமிட நின்றேன். ‘தமிழகத்தில் நாகப்பட்டினத்துக்கு அடுத்தபடியா சுனாமி பெரிய அளவில் பாதித்த கடற்கரை இது. இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாயிட்டாங்க’- புள்ளிவிவரம் தந்தாள்.

‘கோயிலை சாத்திடப்போறாங்க. சீக்கிரம்’ என திருப்பாதிரிப்புலியூர் பாடலேஸ்வரர் கோயிலுக்கு விரைவுபடுத்தினாள். ‘சிவன் சுயம்பு மூர்த்தியாய் இங்கு எழுத்தருளியுள்ளார். அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர், சம்பந்தரால் தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற ஸ்தலம்’ என்று அர்ச்சகரை முந்திக் கொண்டு விவரம் தந்தாள். நீண்ட நேர நடைக்குப் பின் பெரியநாயகி அம்மன் சன்னதிக்கு சென்றோம். பட்டாடை அணிந்து பிரமாண்டமாய் ஓங்கி உயர்ந்து நின்றாள் அம்பாள். கர்ப்பக்கிரகம் அருகே அன்றைய உபயதாரர் குடும்பம் நின்று கொண்டிருந்தது. வாண்டுகளை உபயதாரர் உள்ளே வருமாறு செல்லமாக அழைத்தார். குட்டிப்பிசாசு எனது கையையும் பிடித்து இழுத்துச் சென்றது. எத்தனை நாள்களுக்குப் பின் தெய்வ தரிசனம்! மெய்சிலிர்த்தது.

‘அங்கிள், நீங்க என் பெயரைக் கேட்கவே இல்லையே. அம்மன் பேருதான் என் பெயர்.

முத்தைத்தரு பத்தித் திருநகை

அத்திக்கிறை சத்திச் சரவண

முத்திக்கொரு வித்துக் குருபர… எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்

முற்பட்டது கற்பித் திருவரும்

முப்பத்துமு வர்க்கத் தமரரும்… அடிபேண

- மாலையில் திருமண வரவேற்பில் அருணகிரிதாசன் திருப்புகழை வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார்.

கல்யாண சத்திரத்தில் ஓரமாய் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தேன். திடீரென அங்கு ஆஜரான பெரியநாயகி, ‘இது முருகன் அடிஎடுத்துக் கொடுக்க அருணகிரிநாதர் பாடிய பாடல்’ என்றாள்.

‘உனக்கு என்னதான் தெரியாது’

‘பொய் சொல்லத் தெரியாது. போட்டுக்கொடுக்கத் தெரியாது, காக்கா பிடிக்கத் தெரியாது’

‘பெரியநாயகி! கிட்ட வா. உனக்கு ஏதாவது தரணும் போல இருக்கு’

‘முதுகிலே ரெண்டு போடறதுக்குத்தானே’- தப்பித்து ஓட முயன்றவளை அருகில் இழுத்தேன்.

‘திருப்புகழ் பாடறவருக்கு ஏதாவது கொடுங்களேன்’

ஐநூறு ரூபாய் தாளை அவளிடம் நீட்ட, அதை அருணகிரிதாசனிடம் கொடுத்துவிட்டு சிட்டாய் மறைந்துவிட்டாள். கல்யாணம் முடிந்து மறுநாள் கிளம்பும் வரை மீண்டும் அவள் கண்ணில் படவில்லை. விசுவிடமும் அவளைப் பற்றி ஏனோ கேட்கத் தோன்றவில்லை.

புதுமணத் தம்பதியுடன் பஸ்ஸில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தோம். எனது பக்கத்து இருக்கையில் விசு இருந்தான்.

‘கடலூருக்கு வருவதையே பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் தவிர்த்து வந்த என்னை மகனின் திருமணத்துக்கு வரவழைத்து மூன்று நாள் கட்டிப்போட்டுவிட்டாயே? இது நியாயமா?’

‘ஆனாலும் உனக்கு கல் மனசுடா. சௌந்தர்யா பற்றி நீ எதுவுமே விசாரிக்கலையே?’

‘அம்மா, அப்பா இல்லாத குறை தெரியக்கூடாதுன்னு சகோதரனா மட்டுமில்லாது பெற்றோர் ஸ்தானத்திலே இருந்து சௌந்தர்யாவை எவ்வளவு ஆசையாய் வளர்த்தேன். படிக்க வச்சேன். எனது திருமணத்தைக் கூட தவிர்த்தேன். என்னவா எல்லாம் அவளை ஆக்கணும்னு மனக்கோட்டை கட்டினேன். எல்லாத்தையும் நொடியிலே சீர்குலைத்து கடலூர்காரனான ஆட்டோ ஓட்டும் தூரத்து சொந்தக்காரனை மணந்தே தீருவேன்னு பிடிவாதம் பிடிச்சு அற்ப ஆயுசிலே அவனோடேயே விபத்தில் போய் சேர்ந்தவளை பற்றி இப்ப என்னடா வீண் பேச்சு?’

‘மெத்த படிச்ச கிராதகன்டா நீ. நான் அப்பவும் சொன்னேன். இப்பவும் சொல்றேன். ஒருத்தரை உருவாக்கினதா சுயதம்பட்டம் அடிச்சுகிறவனை போல முட்டாள் யாரும் இல்லை. நாம ஒரு கருவி அவ்வளவுதான். நாம இல்லாவிட்டா என்ன? அந்த கருவியா வேறு ஒருத்தர் கட்டாயம் இருப்பாங்க. நினைச்சதெல்லாம் நடக்காது. கேட்டதெல்லாம் கிடைக்காது’

‘கடலூருக்கு உன்னை காரணமாய்தான் கூப்பிடறேன். டாக்டர் தொழிலைக் காரணம் காட்டி ஏமாந்திடாதேன்னு திரும்பத் திரும்ப கிளிபிள்ளையாய் சொன்னேயே. காரணத்தை சொல்லவே இல்லையே?’

‘பெரியநாயகியைப் பத்தி என்ன நினைக்கிறே?’

‘படு விஷமக் கொடுக்கு. நானே உங்கிட்ட அவளைப் பத்தி கேட்கணும்னு இருந்தேன். யாருடா அவ?’

‘ஆத்திரம் கண்ணை மறைக்கும் என்பது சரியாதான் இருக்கு. வருஷக் கணக்கிலே கிட்ட இருந்து பார்த்த சௌந்தர்யா சாயல் அவளுக்கு இருந்தும் கூட அவளை யாருன்னு உன்னாலே கண்டுபிடிக்க முடியலையேன்னு எனக்கு வெட்கமாய் இருக்கு. பார்த்த ஞாபகம் இல்லையோன்னு உன்னை பார்த்து பாடணும் போல இருக்கு’

‘இதை இவ்வளவு சாவகாசமாய் சொல்ல உனக்கு வெட்கமாயில்லையாடா?’

‘சரவணா! பிரிஞ்ச ஒரு குடும்பத்தைச் சேர்த்து வைத்த பாக்கியம் இந்த கல்யாணத்தை சாக்கா வைச்சு கிடைக்கும். அது மூலமா அந்தக் குழந்தைக்கு மறுவாழ்வு கிடைக்கும்னு நம்பினேன். பாவி! நீதான் வலிஞ்சு வலிஞ்சு கிட்ட வந்த அந்தக் குழந்தைகிட்ட பாராமுகம் காட்டி நோக அடிச்சிட்டியே’.

‘நீதிபதி கணக்கா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாம நண்பனா விவரமா சொல்லுடா’

‘பார்த்திபனுக்குப் பெண் பார்க்க போனபோதுதான் பெரியநாயகியை சம்பந்தி வீட்டிலே பார்த்தேன். சௌந்தர்யா சாயல் இருக்கவே விசாரித்தேன். அவர்களுக்கு தூரத்து சொந்தமான பெரியநாயகிக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதையும் தெரிந்து கொண்டேன். திருமணத்துக்கு உன்னை வரவழைத்து எல்லாத்தையும் சொல்ல நினைச்சேன். நீதான் அதுக்கு எனக்கு இடமே கொடுக்கலையே’

‘என்னடா குண்டுகளை கொத்து கொத்தாய் வீசறே?’

‘மாமாவோட பிடிவாதம், கோபம் பற்றி அம்மா நிறைய சொல்லி இருக்கா. ஆனா அவர் ஒரு முசுடுன்னு சொல்லாம விட்டுட்டா. மாமாவை பார்த்ததே போதும். அவரோட போக எனக்கு விருப்பம் இல்லை. நான் யாருன்னு அவருக்கு தெரியாமலே இருக்கட்டும் என்று பெரிய மனுஷியாய் அந்தக் குழந்தை சொன்னதைக் கேட்டு நானே ஆடிப்போயிட்டேன்’

‘என்னை ஒரு அரக்கன்னே முடிவு செஞ்சிட்டியா விசு. குழந்தையோட விலாசத்தைக் கொடு. புதுச்சேரியிலே நான் இறங்கிக்கிறேன். கடலூர் திரும்பி அவளை சமாதானம் செய்து சென்னைக்கு அழைத்து வரேன். கருவில் நான்காவது மாதத்திலிருந்து தொடங்கி மனிதனின் மரணம் வரை இடைவிடாது தொடர்ந்து இயங்குகின்ற உறுப்பு சிறுநீரகம். அது அந்த குட்டிப் பிசாசுக்கு பாதிக்கப்பட்டிருக்குன்னு கேட்டும் பதறாமல் இருக்க நான் ஒன்றும் மரக்கட்டை இல்லை. சிறு நீரக அறுவைச் சிகிச்சைக்கு அவசியமிருக்காதுன்னு நினைக்கிறேன். மாற்று ரத்தப் பிரிவு சிறுநீரக அறுவைச் சிகிச்சையும் இப்போ சாத்தியமாகியிருக்கு. தேவைப்பட்டா என்னோட சிறு நீரகத்தை அவளுக்கு தரவும் தயாராய் இருக்கேன்’

‘இப்போ நீ டாக்டரா பேசினாயா, குழந்தையின் சொந்தக்காரனாய் பேசினாயா என்பதை நான் ஆராய விரும்பவில்லை. என் நண்பன் மனுஷனாயிட்டான்னு பெருமையாயிருக்கு’- சரவணனை ஆரத் தழுவிக் கொண்டான் விஸ்வநாதன்.

புதுச்சேரியில் சரவணன் இறங்கிக் கொள்ள பஸ் சென்னை நோக்கி விரைந்தது.


+
வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 28 Oct 2015 - 20:00

என் உயிர்த் தோழி!
-----------------
  
அம்மா, மதிய உணவுக்கு அப்பா வரும் போது பக்குவமாய் எடுத்துச் சொல்லி கேட்டுப் பார்க்கிறேன்னு சொன்னீங்களே, கேட்டீங்களா? அப்பா சரின்னு சொல்லிட்டாரா?” பள்ளி விட்டு வந்ததும் புத்தகப் பையை மேஜை மீது வைத்து விட்டு தாய் புனிதவதியிடம் ஆர்வத்தோடு கேட்டாள் ஜனனி.

“”நீ கேட்டதை அப்பாவிடம் சொன்னேன். அதைக் காதில் வாங்காத மாதிரி இருந்துட்டாரு. பதில் ஏதும் சொல்லலை” தாய் புனிதவதி சொல்ல, காற்றை இழந்த பலூனைப் போல முகம் சுருங்கினாள் ஜனனி.

“”நான் என்னம்மா நகையோ, பணமோவா கேட்டேன்.  இதுக்குப் போய் உங்களிடம் இப்படிக் கெஞ்ச வேண்டி இருக்கே” சற்றுக் குரலை உயர்த்தி ஜனனி பேச,

“”இங்க பார் ஜனனி, பெரிதோ சிறிதோ எதுவாய் இருந்தாலும் நீயே உங்கப்பாக்கிட்ட கேட்டுக்கோ” நறுக்கெனச் சொல்லிவிட்டு காலியான தேநீர்க் குவளையைக் கையில் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார் புனிதவதி.

அம்மாவின் பதில் ஏமாற்றத்தைத் தர, கலங்கிய கண்களோடு அறைக்குள் சென்று கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்டாள் ஜனனி.

பூஞ்சோலை கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் படிக்கிறாள் ஜனனி. அவளது வகுப்புத் தோழி அறிவுமதி. நன்றாகப் படிப்பவள். அவளிடம் ஜனனி மிகுந்த அன்போடு பழகினாள். இருவரும் பள்ளியில் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள்.

பூஞ்சோலை கிராமத்தில் ஜனனியின் வீட்டுக்கு “கம்பத்தம்’ வீடு என்றுதான் பெயர். அந்தப் பகுதியிலேயே செல்வாக்கு மிகுந்த செல்வந்தர் ஜனனியின் தந்தை.

ஊரின் முகப்புச் சாலையை ஒட்டி பள்ளி இருந்ததால் பள்ளிக்கு ஜனனியை காரில்தான் அழைத்துச் செல்வார்கள்.

அறிவுமதியின் வீடு இரண்டு தெரு தள்ளி இருந்தது. ஜனனியுடனான நட்பு பள்ளி வரை மட்டுமே. தோழி என்ற முறையில் இதுவரை ஒருநாள் கூட ஜனனியின் வீட்டுக்குச் சென்றதில்லை அறிவுமதி.

அறிவுமதிக்கு நாளைக்குப் பிறந்தநாள். தனது வீட்டில் இருந்து பள்ளிக்குச் செல்லும் வழியில்தான் அறிவுமதியின் வீடு என்பதால் நாளை அவளைத் தன்னுடன் காரில் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், பிறந்தநாளுக்கு அவள் சார்பில், வகுப்பில் படிப்பவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்க வேண்டும் என்றும் விரும்பினாள் ஜனனி. இது மிகச் சாதாரண விஷயம்தான். எளிதில் ஏற்றுக் கொள்வார்கள் என்றுதான் ஜனனி நினைத்தாள். ஆனால், இது விஷயத்தில் பெற்றோர் காட்டும் அக்கறையின்மையை நினைத்து எரிச்சலடைந்தாள் ஜனனி. அதை நினைத்த போது கோபம் வந்தது. ஆற்றாமையில் மனம் வெதும்பினாள்.

சமையல் அறையில் வேலைகளை முடித்துவிட்டு வந்த புனிதவதி மகள் ஜனனியைத் தேடினாள். கட்டிலில் குப்புறக் கிடந்த ஜனனியைப் பார்த்ததும்,

“”இது என்ன கெட்டப் பழக்கம் ஜனனி. விளக்கு ஏற்றும் வேளையிலா தூங்குவது? எழுந்து வந்து படி. வீட்டுப் பாடங்களை முடித்து விட்டாயா?” என்று விசாரித்தபடி அருகில் வந்து ஜனனியின் முதுகைத் தட்டினார்.

தாயின் கையைத் தள்ளி விட்டபடி, “வெடுக்’கென எழுந்து அமர்ந்தாள். முகம் இறுக்கமாய் இருந்தது. கண்கள் சிவந்திருந்தன. ஜனனி அப்படி இருப்பதற்கான காரணம் புரிய வர, “”எழுந்திரு ஜனனி. இதற்கெல்லாமா கோவிச்சுக்குவாங்க?” என்றார் மென்மையாக.

“”நீங்களே சொல்லுங்கம்மா, நான் தினந்தோறுமா அவளை நமது காரில் அழைத்துப் போக வேண்டுமென்று சொல்கிறேன். நாளைக்கு ஒரு நாள், அதுவும் அவளுடைய பிறந்தநாள். அவளுக்கு ஒரு சின்ன சந்தோஷத்தைத் தருவதற்காகத்தானே கேட்டேன். பள்ளிக்குக் காரில் சென்று இறங்கும் போது அவளுக்கும் பெருமையாய் இருக்கும். மனதில் மகிழ்ச்சி அலை பரவும். இதைச் செய்ய நினைத்தது தவறா?” தாயின் முகம் பார்த்துக் கேட்டாள் ஜனனி.

“”நீ நினைக்கிறதுல தப்பு இல்லை ஜனனி. ஆனா அதற்கும் மேல் நாங்க சிந்திப்பதற்கு அதில் எவ்வளவோ விஷயங்கள் இருக்கு.”

“”என்னோட ஒரு சாதாரண விருப்பத்தைக் கூட நிறைவேற்றிக் கொள்ள உங்களிடம் இவ்வளவு போராட வேண்டியிருக்கும்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல” முகத்தை வேறு பக்கமாய் திருப்பிக் கொண்டு சொன்னாள் ஜனனி.

“”அதான் சொன்னேனே, உனக்கு சாதாரணமாய்த் தெரியும் ஒரு விஷயம் எங்களுக்குச் சிக்கலானதா தெரியுது. இப்ப என்ன, உன்னோட வகுப்புத் தோழிக்குப் பிறந்தநாள், அதானே. இப்பவே அப்பாவிடம் தொலைபேசியில் பேசி ஒரு அழகான பரிசுப் பொருளை வாங்கி வரச் சொல்றேன். நாளைக்குப் பள்ளி சென்றதும், அதை அவளிடம் உனது பரிசா கொடுத்திடு. சந்தோஷம்தானே” நல்ல தீர்வு என நினைத்து தனது மகளிடம் சொன்னார் புனிதவதி.

அந்த யோசனைக்கு உடன்படாதவளாய் அங்கிருந்து வேகமாய் எழுந்துச் சென்றாள். தனது புத்தகப் பையை எடுத்து வைத்துக் கொண்டு அன்றைய பாடங்களைப் படிக்கத் தொடங்கினாள் ஜனனி.

இரவு எட்டு மணிக்கும் மேலாகிவிட்டது. “”ஜனனி வந்து சாப்பிடு.” தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன் அமர்ந்திருந்த தனது மகளை இரவு உணவுக்காக அழைத்தார் புனிதவதி.

“”எனக்குப் பசிக்கல. சாப்பாடும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம்.” முகத்தில் கடுமையோடும், மனதில் சுமையோடும் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

இனி அவளைச் சாப்பிட வைக்க முயற்சிப்பது வீண் வேலை. ஜனனி பொதுவாக எதையும் கேட்டு அடம்பிடிக்க மாட்டாள். எதையும் அன்போடு பக்குவமாய் எடுத்துச் சொன்னாள் ஏற்றுக் கொள்வாள்.

ஆனால், ஒரு சில விஷயங்களில் இப்படித்தான் உடும்புப் பிடியாய் நின்று விடுவாள். அந்த நிலையில் அவளை வழிக்குக் கொண்டு வருவதென்பது மிகவும் கஷ்டமான விஷயம். இப்போது என்ன செய்யலாம்? இப்படியே விட்டால் நாளை பள்ளிக்கே போகாமல் கூட விட்டு விடுவாள்.

சிந்தனை நெருக்குதலைக் கொடுக்க, தொலைபேசியை எடுத்து தனது கணவரிடம் நிலைமையைச் சொன்னார். “”சரி, நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கவலைப்படாதே.” மறுமுனையிலிருந்து கணவர் சொல்ல, மனத் தெம்போடு தொலைபேசியை வைத்தார் புனிதவதி.

மறுநாள் காலை, வழக்கமாய் எழுந்திருப்பதற்கு அரைமணி நேரம் முன்னதாகவே எழுந்து பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தாள் ஜனனி.

கையில் தேநீர்க் குவளையோடு தாயும், கையில் செய்தித்தாளோடு தந்தையும் ஜனனியின் அருகில் வந்து அமர்ந்தனர்.

“”என்ன ஜனனி, சீக்கிரமே எழுந்திட்டே போலிருக்கு, இந்தா தேநீர். ஆறிப் போயிடும் சீக்கிரம் குடி” அன்போடு புனிதவதி சொல்லி, “”எனக்கு வேண்டாம்” எனச் சுருக்கமாய் பேச்சை முடித்துக் கொண்டாள் ஜனனி.

பள்ளி செல்வதற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு புத்தகப் பையுடன் வெளியே வந்தவளுக்கு அதிர்ச்சி. வழக்கமாய்த் தன்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல நிற்கும் காரைக் காணோம்!

திகைப்போடு ஜனனி நின்று கொண்டிருக்க, ஓட்டுநர் மணி செர்ரிப் பழ நிறத்தில் ஒரு புதிய மிதிவண்டியைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டு, ஏதும் சொல்லாமலே போனவர், அடுத்த சில நிமிடங்களில் அதே நிறத்தில் இன்னொரு புதிய மிதிவண்டியைக் கொண்டு வந்து பக்கத்தில் நிறுத்தினார். புத்தம் புதிய இரண்டு மிதிவண்டிகளைப் பார்த்ததும் ஆச்சரியமாய் இருந்தது ஜனனிக்கு.

விவரம் ஏதும் புரியாமல் திரும்பிப் பார்த்தாள். அங்கே முகத்தில் புன்னகையோடு தந்தையும், தாயும் நின்று கொண்டிருந்தனர்.

“”ஜனனி, இந்த இரண்டு மிதிவண்டிகளில் ஒன்று உனக்கு. இன்னொன்று உனது தோழி அறிவுமதிக்கு நீ கொடுக்கப் போகும் பிறந்தநாள் பரிசு. இனி, நீங்கள் ரெண்டு பேரும் மிதிவண்டியிலேயே பள்ளிக்குச் செல்லலாம்” தந்தை சொல்ல,எந்த ஒரு பிரச்னையையும் நிதானத்தோடு அணுகி சரியாகச் சிந்தித்து, பொருத்தமான முடிவு எடுப்பதில் வல்லவர் எனப் பெயரெடுத்த தனது தந்தையின் முகத்தை பெருமையோடு நோக்கினாள் ஜனனி. அந்தப் பார்வையில் அன்பு கலந்த நன்றி தெரிந்தது!


+

வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 28 Oct 2015 - 20:02

சிறுகதை: மெஹர்
--------------

“நீங்கள் மதராஸியா?’ என்று அவள் கேட்டபோது, “இல்லை நான் தமிழ்நாடு’ என்று சொல்லியிருக்க வேண்டாம் என்று இப்போது தோன்றியது. இப்படியொரு விளக்கம் கொடுத்து அவளுடைய கேள்வியை மறுத்துவிட்டோமே என்று வருத்தமாக இருந்தது. சலீமுடன் காஷ்மீர் வருவது உறுதியானதும் இங்கே எனக்கான ஒரு காதலி பிறந்து வளர்ந்து கொண்டிருக்கிறாள் என்று என்னால் எப்படி யோசித்திருக்க முடியும்? ஒரு தேசத்தின் இரு எல்லையில் பிறந்தவர்களுக்கு ஏற்படப் போகும் பிணைப்பை நினைத்தபோதே சிலிர்த்தது. தில்லியில் நாங்கள் படித்த கல்லூரியில் செமஸ்டர் முடிந்து ஒருவாரம் கல்லூரி விடுமுறை என்ற காரணத்தால்தான் வந்தேன்.

இங்கு வருவதற்கு வேறு ஒரு காரணமும் எனக்கு இருக்கவில்லை. சலீமுக்கு மிகப்பெரிய பூ வனம் சொந்தமாக இருந்தது. அதில்தான் நான் மெஹரைச் சந்தித்தேன். கை நிறைய பூக்களோடு அவள் அந்தப் பூவனத்தில் இருந்தாள். சலீம் என்னை அவளுக்கு அறிமுகப்படுத்தினான். செக்கச் சிவந்த அவளுடைய முகத்தில் கரிய இமைகளோடு அந்த விழிகளைப் பார்த்தேன். வியப்பும் வினாக்களும் பொதிந்து கிடந்த அபூர்வமான கண்கள்.

இப்போது யோசித்தால் பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் மிகச் சிறந்த யோசனை ஒன்று அப்போது தோன்றியது. நாம் இங்கேயே தங்கிவிடலாமா, அல்லது அவளை அழைத்துச் சென்றுவிடலாமா?.. படபடவென அவள் இமைச் சிறகு அடித்துக் கொண்ட அந்த நொடியில் மிக இயல்பாக ஏற்பட்ட யோசனை அது. காஷ்மீரில் சம்பிரதாயமான சில நடவடிக்கைகளை செய்ய வேண்டியிருந்தது.

அங்கிருக்கிற தால் ஏரி, ரோஜா தோட்டம், அரசு வனப் பூங்கா, படகு சவாரி, ஹூக்கா என.. ஆனால் எனக்கு மெஹர் இருக்கும் இடத்தைவிட்டு அதிக தூரம் விலகியிருக்கும் எந்த இடத்தையும் பிடிக்கவில்லை. சலீம் காட்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் எல்லாம் எனக்குச் சாதாரணமாக இருந்தன.

பனித் தொப்பி அணிந்த மலைச் சிகரங்கள், ஸ்வெட்டர் போட்ட மனிதர்கள், ஆவி பறக்கும் ஆனால் சூடாக இல்லாத டீ… எல்லாமே சாதாரணமாகத்தான் இருந்தன. “மோதிலால் நேரு படித்த பள்ளி இதுதான்’ என்றான். எல்லோரும் எங்காவது படிக்கத்தானே செய்கிறார்கள்? நானும் சலீமும் இப்போது தில்லிக்கு வந்து படிப்பதுமாதிரி.

“இது எந்தப் பிரபலமும் படிக்காத பள்ளிக்கூடம்’ என ஒன்றைக் காட்டினாலாவது ஆச்சர்யப்பட்டிருப்பேன். புத்தி பேதலித்துதான் போய்விட்டது எனக்கு. அவன் மெஹர் படித்த பள்ளியைக் காட்டியபோது அதை ஆச்சர்யமாகவும் தவிப்புடனும் பார்க்கத் தவறவில்லை. “தினமும் இந்தப் பள்ளிக்குத்தான் போவாளா?’ என்ற அசட்டுத்தனமான கேள்வியைக் கேட்டுவிட்டு சலீம் பார்த்த பார்வையை எதிர் கொள்ள முடியாமல் வெட்கத்தால் திக்கிப் போனேன். மேற்கொண்டு இது போன்ற உளறல்களைத் தவிர்க்க நான் அங்கிருந்த அத்தனை நாளும் படாத பாடுபட்டேன். எனக்கு ஏற்பட்ட மாதிரி மெஹருக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

அவளை வசீகரிக்கக் கூடிய சிறந்த அம்சம் எதுவும் என் தோற்றத்தில் இல்லை. அவளுடைய அழகின் முன்னால் எனக்கு இவ்வளவு நாளாய் இருப்பதாக நினைத்திருந்த திறமையும்கூட துச்சமாக இருந்தது. சலீம் என்னை அறிவாளியாகப் போற்றிப் பழகி வருகிறான்.

அதற்காக நான் அவள் தங்கைக்கு அறிவாளியாகத் தோன்ற வேண்டுமா என்ன? அவள் மீது காதல் கொள்வதற்கு என்னிடம் என்னதான் தகுதி இருக்கிறது என்று தத்தளித்தேன். அவளோ தேவதையாகத் தோன்றினாள். கவிஞர்கள் பொய்யாக வர்ணிக்கவில்லை என்பதைச் சத்தியமாக இதோ என் இருபத்தி இரண்டாவது வயதில்தான் முதல் முறையாக ஏற்றுக் கொள்கிறேன்.

அவளைச் சுற்றி எப்போதும் ஒளிவீசிக் கொண்டிருந்தது. பெரும்பாலும் எனக்கு எதிர்பட்ட நேரங்களில் அவள் கருப்பு அங்கி அணிந்திருந்ததால் நான் அவள் விழிகளை மட்டும்தான் பார்க்க முடிந்தது. அதைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நான் துடித்தேன்.

ஆனால் ஒரு வினாடியில் பத்தில் ஒரு பகுதி நேரம்கூட அவள் விழியை நான் பார்க்க முடிந்ததில்லை. பூர்வீகமான பழைய வீடு. பூந்தோட்டத்தை ஒட்டி அமைந்திருந்தது. மெஹர், அவளுடைய அப்பா, அம்மா, தம்பி ஆகியோர் பின் கட்டில் இருந்தனர். சலீமின் அறை முகப்பிலேயே இருந்தது.

அதிலேதான் நானும் இருந்தேன். வந்த மூன்றாம் நாள்தான் அவள் “நீங்கள் மதராஸியா?’ என்று கேட்டது. ஆனால் நான் அந்த வாய்ப்பை அப்படியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? ஏதாவது முக்கியமான ஒரு சொல்லை அந்த நேரத்தில் நான் பதிலாகத் தந்திருக்க வேண்டாமா? எனக்கு அறிவு அவ்வளவுதான். காதலின் தெய்வீகத்தைச் சுருக்கமாகச் சுண்டக் காய்ச்சிய “ஒரு சொல் கவிதை’ ஒன்றைச் சொல்லியிருக்க வேண்டும்.

தமிழ்நாடு என்று திருத்துவதுதான் அத்தனை முக்கியமா? அவளுக்குத் தமிழ்நாடு எந்தத் திசையில் இருக்கிறது என்பதுகூட அத்தனை உறுதியாகத் தெரியுமா என்று தெரியவில்லை. சரி என்று தலையசைத்து…

தலையசைத்தாள் என்று சொல்ல முடியாது. சரி என்றது போல ஏதோ ஒரு எதிர்வினை அவளிடம் வெளிப்பட்டது. “பேச்சுக்குக் கேட்டேன்… இவ்வளவு உறுதியாக எனக்குத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை’ என்ற எள்ளல் பாவனை போலவும் இருந்தது. அடுத்த நாள் அவளைப் பார்க்க முடியவில்லை.

அவள் காலடி ஓசையை நான் சுலபமாகக் கணிக்கக் கூடியவனாக மாறியிருந்தேன். அவளது குரலும்கூட எனக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது. மொழி புரியவில்லை. ஆனால் அவள் என்ன பேசினாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம்.

அது இசையின் ஒரு வடிவம். நீங்கள் மதராஸியா என்பதை அவள் எனக்காக இன்னொருதரம் சொல்வதாக இருந்தால் அதை ஒலி நாடாவில் பதிவு செய்து வைத்துக் கொள்ளச் சித்தமாக இருந்தேன். அல்லது அது போல ஏதாவது வேறு ஒரு வார்த்தை என்னிடம் பேச வேண்டியிருந்தால் அதை… ஐந்தாவது நாள் அவளைத் தோட்டத்தில் பார்த்தேன்.

பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். பூக்கள் அவளால் பறிக்கப்படுவதை எதிர்பார்த்துக் கிடப்பதை நான் பார்த்தேன். அந்த விரல்கள் பூக்கள் பறிப்பதற்கென்றே பிரத்யேகமாக உருவானவை போல இருந்தன. மிக நளினமான, மென்மையான விரல்கள். அது அசைவது வழக்கமாக எல்லோரது விரல்களின் அசைவு போல இல்லை. பூக்களுக்கும் அந்த விரல்களுக்குமிடையே சிறிய உடன்பாடு இருப்பதாகத் தோன்றியது.

இல்லையென்றால் அத்தனை மென்மையான விரல்களால் அந்தப் பூக்களைப் பறித்திருக்க முடியாது என்பது என் எண்ணம். பூக்கள் தானாகவே தங்களை அவளிடம் வழங்கிக் கொண்டிருந்தன.

அத்தகைய விரல்களை நான் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிற வாய்ப்பு கிடைத்தது. சலீம் கடைக்குப் போயிருக்கிறான் இப்போது வந்துவிடுவான் என்ற தகவலை இந்தியில் சொன்னபடி அவனுடைய அம்மா தேநீர் கோப்பையை என்னிடம் கொடுத்தார். “”உன் அம்மா, அப்பால்லாம் மதராஸ்லதான் இருக்காங்களா?”

இதுவும் இந்தியில். மற்றபடி அவர்கள் வீட்டில் எப்போதும் உருது பேசினார்கள். சாப்பிடும்போதும் அவர்கள் வரை உருதிலும் சப்பாத்தி வேண்டுமா என்பது போன்றவற்றை என்னிடம் இந்தியிலும் பேசினார்கள். ஆறாவது நாள்… அறையில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று பார்த்து தூர்தர்ஷனின் மதிய ஒளிபரப்பாக ஒரு பாடாவதி தமிழ்ப் படத்தைப் போட்டிருந்தார்கள்.

ஆனாலும் அப்போது அதை நான் இப்போது போல பாடாவதி படம் என்று நினைக்கவில்லை. 80 களில் அதை வரம் போல பார்த்தேன். அசாமி படம் போட்டாலும் அதை நகராமல் பார்த்துக் கொண்டிருப்பேன். மெஹர் வந்து அண்ணன் இல்லையா என்று கேட்டுவிட்டு அதற்கான பதிலை அறையில் தேடித் தெரிந்து கொண்டு புறப்பட்டாள். அண்ணன் வந்ததும் சொல்கிறேன் என்ன விஷயம் என்றேன். “”இல்லை எழுதுவதற்கு பேனா வேண்டும், அதற்காகத்தான்” என்றாள்.

அவளுடைய சிவந்த உதடுகள் அந்த வார்த்தைகளை எப்படித் தயாரிக்கின்றன என்று ஆழ்ந்து பார்த்தேன். “”என்னிடம் கேட்டால் தரமாட்டேனா?” என்று என் சட்டைப் பையில் இருந்து பேனாவை எடுத்துக் கொடுத்தேன். பெண்கள் நாணத்தால் கால் விரல்களால் தரையில் கோலமிடுவது பொது அம்சம் போலிருக்கிறது.

அவள் பாதங்களில் மிளகாய்ப் பழச் சிவப்பில் மிளகாய் போலவே மருதாணி அலங்காரம். பேனாவை வாங்கிக் கொண்டு “”ஏன் என்னை அப்படிப் பார்க்கிறீர்கள்?” என்றாள். என்னால் தகுந்த பொய்யைத் தயாரிக்க முடியவில்லை. உண்மையையும் சொல்ல முடியவில்லை. தலையிறங்கி நின்றேன். நான் வித்தியாசமாகப் பார்க்கவில்லையே…

சாதாரணமாகத்தான் பார்த்தேன் என்று சொல்ல நினைத்தேன். அதைச் சொல்வதற்கு எனக்கு இந்தியில் புலமை போதாது என தயங்கினேன். காஷ்மீரில் இருந்து ஏழாம் நாள் நானும் சலீமும்தான் புறப்படுவதாக இருந்தோம். மதப் பிரச்சினை முற்றிக் கொண்டிருப்பதாகக் கூறி என்னை மட்டும் பாதுகாப்பாக டாக்ஸி பிடித்து அனுப்பி வைக்க முடிவெடுத்தான். தயாராக இருக்கச் சொல்லிவிட்டு டாக்ஸிக்கு ஓடினான்.

அவனுடைய அம்மா அந்த நேரத்திலும் குங்குமப் பூ, ஸ்வெட்டர், பாதாம் இருந்தால் வாங்கி வா என்றார்கள். சலீம் சற்று நேரம் நின்றான். “கடையெல்லாம் அடைத்துவிட்டார்கள்’ என்ற தகவலைச் சொன்னான். “எங்காவது இருக்கிறதா பார்’ என மெஹரும் “எதற்கு அதெல்லாம்?’ என நானும் ஒரே நேரத்தில் சொன்னோம். எனக்குச் சிலிர்ப்பாக இருந்தது. மெஹர் என்னைவிட மூன்று வயதாவது இளையவளாக இருக்கக் கூடும்.

ஆனால் அவள் பார்வையில் என்னைப் பணிய வைத்துவிடும் மிடுக்கு இருந்தது. “மெஹர் சொல்கிறபடியே செய்’ என்று சலீமை அழைத்துச் சொல்லிவிடுவேன் போல இருந்தது. நல்லவேளையாக அப்படி நான் சொல்வதற்குள் சலீம் அங்கிருந்து போய்விட்டான். நான் துணிகளை எல்லாம் சுருட்டி பைக்குள் சொருகிவிட்டு, தோட்டத்தில் போய் நின்றேன்.

காஷ்மீரையும் மெஹரையும் அப்படியே மனதுக்குள் பருகிவிடவேண்டும் என்று பரபரத்தது. உடனே ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும்போல இருந்தது. புகையோடு சேர்த்து நினைவுகளையும் உள்வாங்கிக் கொள்ளும் அரிய அனுபவம். பாக்கெட்டைத் துழாவிய போது சிகரெட் மட்டும் இருந்தது. தீப்பெட்டி? அடடா… சலீம் வருவதற்குள் சிகரெட் குடித்தால்தான் நான் மெஹரையும் காஷ்மீரையும் மனதுக்குள் பருக முடியும் என்ற நம்பிக்கை வளர்ந்தது.

ஐயோ நான் எங்கே போவேன்? சாலைக்கு மறுபுறம் ஓடி தீப்பெட்டி வாங்கிக் கொண்டு வந்து புகைக்கலாம் என்றாலும் கடைகளை அடைத்துவிட்டார்கள் என்கிறார்களே? சலீம் வந்துவடுவானோ என்ற பயமும் சூழ்ந்தது. பதட்டம்… என் நம்பிக்கை முட்டாள்தனமானதாக இருக்கலாம்.

ஆனால் சிகரெட்டின் மூலம் அது சாத்தியமாகும் வாய்ப்பு இருந்தால் அதைத் தவறவிடக் கூடாதல்லவா? யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு நிகழ்ச்சி அப்போது என் வாழ்வில் நடந்தது. வாயில் சிகரெட்டுடன் நான் பாக்கெட்டுகளைத் துழாவிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவளே வந்தாள். அவள் கையில் தீப்பெட்டி இருந்தது.

“”ஒரு நாளைக்கு எத்தனை?” என்றாள் கிண்டலாக. நியாயமான உண்மையான பதிலைச் சொல்வதற்காக நான் மனதில் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் நான் பதில் சொல்வதற்குள் அவள் “”உங்களுக்குத் தங்கை இருக்கிறாளா?” என்றாள். தலையசைத்தேன். “”எத்தனை பேர்?” என்றாள்.

“”மறுபடியும் எண்ண ஆரம்பித்துவிடாதீர்கள்” என்று சிரித்துக் கொண்டே ஓடினாள். வாழ்நாளெல்லாம் நான் காதலித்து மகிழ எனக்கான முகம் அது என்பதில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. என்னிடம் கேமிரா இல்லாமலேயே அவள் முகத்தை என் கண்களால் விழுங்கிக் கொண்டேன். டேப் ரிக்கார்டர் இல்லாமலேயே அவளுடைய குரலை என் காதுகளால் பதிவு செய்து கொண்டேன்.

கண்களும் காதுகளும் எவ்வளவு முக்கியமானவை என்பது அந்தக் கணத்தில் எனக்கு வலுவாகப் புரிந்தது. என்னுடைய கண்களும் காதுகளும் தவம் செய்தவை என்று தோன்றியது. முக்கால் நிமிட நேரம் நாங்கள் இருவரும் பேசியிருப்போம். ஆனால் அது பொக்கிஷ நிமிடமல்லவா? யோசித்துப் பாருங்கள்.. நமக்குச் சற்றும் தேவையற்ற பேச்சை நாம் நாளெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

எதிரில் இருப்பவர் பேசுகிறாரே என்பதற்காக நாமும் பேசுகிற பேச்சா இது? ஒரு நாளில் நாம் ஆத்ம சுத்தியோடு எத்தனை வார்த்தை பேசுகிறோம்? தினம் ஒரு வார்த்தையாவது தேறுமா? எல்லாமே யாரையோ வசை பாடுவதற்காக, தேவைக்கு அதிகமாகப் புகழ்வதற்காக, ஒருவர் பேச்சை ஒருவர் விஞ்சி நிற்பதற்காக, கூழைக் கும்பிடு போடுவதற்காக… எல்லாமே குப்பை வார்த்தைகள். மெஹர் என்னிடம் பேசியவை இரண்டு ஆத்மாக்களின் கோடி வாக்கியங்களின் சுருக்கம். அதை வேறு வார்த்தைகளால் விவரித்து இட்டு நிரப்பவும் வழியிருப்பதாகத் தெரியவில்லை.

அந்தக் கோடி வாக்கியங்களை விஸ்தரிப்பது மொழிகள் சொல்லும் சொற்களால் சாத்தியமில்லை என்று தோன்றியது. அது மனதின் மொழி. அதாவது சம்பந்தபட்ட எங்கள் இருவரின் மனதின் மொழி. ஒருவேளை மெஹரால்கூட இது முடியுமா என்று தெரியவில்லை. என் ஒருவனுக்கான மொழி. அதே போல அந்த முகம்.

அது என் வாழ்நாளுக்கெல்லாம் போதுமானதாக இருந்தது. டாக்ஸி புறப்படும்போது சலீமின் அப்பாவுக்குப் பின்னால் அவளுடைய முகம் வழியனுப்பியது. அதில் இன்னும் சொல்லப்பட வேண்டிய எத்தனையோ வார்த்தைகள் ஏக்கத்தோடு நின்றன. சலீம் கல்லூரிக்கு வரவேயில்லை. கலவரத்தில் ஏகப்பட்ட உயிரிழப்புகள். சலீமை போலீஸ் தேடுவதாக அலுவலகத்தில் பேசிக் கொண்டார்கள். ஒரே ஒரு முறை அந்தத் தோட்டத்தில் மீண்டும் சந்தித்து என் காதலைத் தெரிவித்துவிட்டு உயிர் துறக்கவும் சித்தமாயிருந்தேன்.

ஆனால் காலம் ஒரே காட்சியை இரண்டு தடவை அனுமதிப்பதில்லையே! உயிரை துச்சமாக நினைப்பது வேறாகவும் அதைச் செய்படுத்துவது வேறாகவும் இருக்கிறது. அவளை நிச்சயம் அந்தத் தோட்டத்தில் இருக்க மாட்டாள் என்ற என் அறிவின் ஆதிக்கத்தை நொந்து கொண்டேன். அறிவு என் பயணத்தைத் தடுத்து தேவையற்ற பயத்தை அளவுக்கதிகமாக எனக்குள் வளர்த்தது. சலீமுக்கு நான் எழுதிய கடிதங்களுக்கும் ஒரு பதில் கடிதமும் கிடைக்கவில்லை. 83}ம் ஆண்டில் கடைசி செமஸ்டர். அத்தோடு நான் ஊருக்குக் கிளம்ப வேண்டியதுதான். சலீம் இல்லாமலேயே ஒரு செமஸ்டர் முடிந்தது. மீண்டும் ஒரு வாரம் விடுமுறை. நான் விடுதியைவிட்டு வெகுதூரம் வந்து சுற்றிக் கொண்டிருந்தேன்.

ஆக்ராவின் காந்தி மார்க் பகுதியில் அவளைப் போலவே ஒருத்தியைப் பார்த்தேன். தள்ளு வண்டியில் லுங்கி கட்டிக் கொண்டு பானி பூரி விற்றுக் கொண்டிருந்தவனுக்கு ஒத்தாசையாக சேவை புரிந்து கொண்டிருந்தாள். அவள்தானா என்பதில் எனக்கு மிகுந்த சந்தேகம் இருந்தது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் கருப்பு அங்கியால் மூடப்பட்டிருந்த முகத்தில் அவளுடைய கண்களைத் தரிசிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. இப்படியொரு கோலத்தில் தன்னைப் பார்க்கத் தயங்குகிறாளா? கணவன் கொடியவனா?

மறந்துவிட்டாளா? தம்மை கவனிக்கவில்லையா என்று உள்ளுக்குள் கேள்விகள் புரண்டன. விரல்கள்… பூக்க ள் பறிப்பதற்காகப் படைக்கப்பட்டிருந்த அந்த விரல்கள்? ஆவேசமாக உற்றுப் பார்த்தேன். “”என்னடா அங்க பார்வை?” காலரைப் பிடித்து இழுத்தான் ஒருவன். பதறிப்போனேன். “என் நண்பன் சலீமின் தங்கையா என்று பார்த்தேன்’ என்றேன். நான் ஏதோ சமாளிக்கிறேன் என்று அவசரத்தில் முதுகில் இரண்டு அடி போட்டான். “”நீ மதராஸிதானே?” என்றான். நான் அவளைப் பார்த்தேன்.

அவள் என்னிடம் கேட்ட முதல் கேள்வியை வேறு குரலில் கேட்ட பரவசமும் பதட்டமும் சேர்ந்து அழுத்தியது. மெஹர் என்று நான் நினைத்தவள் ஒரு சலனமும் இல்லாமல் முகத்திரை விலக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்குத் தீர்மானமாகத் தெரிந்துவிட்டது, இவள் மெஹர் இல்லை. வலியை மறந்து திருப்தியாக நான் புறப்பட்டேன்.

ஆனாலும் கூட்டம் கூடிவிட்டது. நான் கேவலப்பட்டு நகர்ந்தேன். பத்தடி தூரத்தில் தெரு ஒன்று வலப்புறம் திரும்பியது. ஆனால் அதைக் கடக்க நான் நெடும்பயணம் செய்ய வேண்டியிருந்தது. தெருவில் திரும்பும்போது நான் கடந்து வந்த ஆபத்தை என்னை அறியாமல் திரும்பிப் பார்த்தேன். கூட்டம் இன்னமும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது.

அவள் சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டதைக் கவனித்தேன். அந்தி வெயிலில் அவள் பாதங்களைப் பார்த்தேன். அதில் என் மனதில் பதிந்திருக்கும் அதே மருதாணி சித்திரம். என் மெஹர்.

- தமிழ்மகன்


+

வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 28 Oct 2015 - 20:05

வேடிக்கை தந்த பாடம்
-------------------
பள்ளிக் கூடத்தில் ஆறாம் வகுப்பு “பி’ பிரிவில் ஆறுமுகம், சம்பத் இருவரும் பயின்று வந்தார்கள். இருவரும் நெருங்கிய நண்பர்கள். அவ்வப்போது பிறர் துன்புறுவதைக் கண்டு மகிழும் சம்பத்துடைய குணத்தை மட்டும் மாற்ற இயலாதவனாக இருந்தான், ஆறுமுகம்.

பரீட்சை முடிந்து பள்ளி விடுமுறை அறிவித்தார்கள். ஆறுமுகம், தன்னுடைய கிராமத்துக்கு வரும்படி சம்பத்தை, அழைத்தான்.

“”ஐயோ, பட்டிக்காட்டுக்கா கூப்பிடறே? நீ வேணுமானா இங்கேயே இருந்துக்கோ. பட்டணத்து ஜாலி வாழ்க்கை அங்கே கிடைக்குமா?” என்றான் சம்பத். கிராமம் என்றாலே இளப்பம் அவனுக்கு. பள்ளியில் படிக்கும் கிராமத்துப் பையன்களைக் கேலி செய்து அவர்கள் அழுவதைப் பார்ப்பது, அவனுக்கு வேடிக்கை.

“”ரொம்ப வேண்டாம். இரண்டு நாட்கள் அங்கே இருந்துவிட்டு வரலாம் வா. எப்போது பார்த்தாலும் டிவி, விடியோ, சினிமான்னு பொழுதுபோக்க, போரடிக்கல்லியா உனக்கு? ஒரு மாறுதலுக்கு என் கிராமப் பக்கம்தான் வாயேன்” என்று வற்புறுத்தி அழைத்தான் ஆறுமுகம்.

சம்பத்தும் தன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக் கொண்டு வந்தான். ஹாஸ்டலில் தங்கியிருந்த ஆறுமுகம், தன் பெட்டியை எடுத்துக் கொண்டான். இருவருமாக கிராமத்திற்குப் புறப்பட்டார்கள்.

பூம்பொழில் கிராமம்தான் எவ்வளவு சுத்தமாக இருந்தது! புகை இல்லை, எரிச்சல் இல்லை, இரைச்சல் இல்லை, யந்திரத்தனம் இல்லை, எங்கு பார்த்தாலும் பசுமை. அமைதி, அழகு, அதுவரை அனுபவித்தறியாத சுகமான இயற்கைக் காற்று, கால்நடைகளும், கழனிகளும் சம்பத்துக்குப் புதுக்காட்சிகள். அந்தப் புதுமைச் சந்திப்பில் அவன் உள்ளம் குதூகலிக்கத்தான் செய்தது.

மணக்கும் தேங்காய் எண்ணெயில் செய்த பலகாரங்களை ருசித்து உண்ட அவன், ஆறுமுகத்தின் ஆலோசனைப்படி, அவனுடன் கிராமத்தைச் சுற்றிப்பார்க்க புறப்பட்டான்.

நீர்நிறைந்த பெரியகுளம் ஒன்று அவ்விருவர் கவனத்தையும் கவர்ந்தது.

குளக்கரையில் ஒரு வேட்டியும், ஒரு சட்டையும் மடித்து வைக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்த உடனேயே சம்பத்துக்கு ஒரு வேடிக்கையான எண்ணம் உதித்தது. “”ஆறுமுகம், இந்த வேட்டி சட்டையை எடுத்து ஒளித்து வைத்துவிடலாமா? குளத்தில் குளிப்பவன் வந்து பார்த்துத் திண்டாடுவான்; தவிப்பான். பார்க்க தமாஷாக இருக்கும்” என்றான் உற்சாகத்துடன்.

“”தப்பு சம்பத்” ஆறுமுகம் அவசர அவசரமாக மறுத்தான். “”அதோ அங்கே குளிக்கிறானே, அவன் ஓர் ஏழை உழவன். பாவம், இந்த வேட்டி, சட்டையைக் காணவில்லை என்றால், அவன் ரொம்பவும் தவித்துப் போவான். அரையில் கட்டிய சிறு துண்டோடு, எங்கோ தொலை தூரத்தில் இருக்கும் தன்வீட்டிற்கு நடந்து போக ரொம்பவும் கூச்சப்படுவான். ம்… அதற்கு பதிலாக இப்படிச் செய்வோம். அவனுடைய சட்டைப் பையில் ஓர் ஐந்து ரூபாய்த் தாளைச் சொருகி வைப்போம். அதைப் பார்க்கும் அவன் எவ்வளவு சந்தோஷப்படுவான்! நமக்கும் அதைப் பார்க்க மனநிறைவாக இருக்கும்” என்றான்.

சம்பத் உடனே, தன் எண்ணத்திற்காக ரொம்பவும் வெட்கப்பட்டான். “”ஆறுமுகம், நான் சொன்னது தப்புத்தான். உன் யோசனைப்படியே செய்யலாம்” என்றான்.

அதேபோல அந்த உழவனின் சட்டைப் பையில் ஓர் ஐந்து ரூபாய்த் தாளை இருவரும் திணித்துவிட்டு, ஓடிப்போய்ப் பக்கத்துத் கோயிலில் ஒளிந்து கொண்டார்கள்.

உழவன் குளித்துவிட்டுக் கரையேறினான். உடலைத் துண்டால் துடைத்துக்கொண்டு, சட்டை, வேட்டியை அணிந்து கொண்டான். தற்செயலாகத் தன் சட்டைப் பையைத் தொட்டுப்பார்த்த அவன், அதில் ஓர் ஐந்து ரூபாய் நோட்டு இருப்பது கண்டு திடுக்கிட்டான். வெளியே எடுத்து அதைத் திரும்பத் திரும்பப் பார்த்தான். “எப்படி இந்தப் பணம் என் பைக்குள் வந்தது?’ என்று யோசித்தான். ஒன்றும் புரியவில்லை.

எதிர்பாராமல் கிடைத்தப் “பரிசை’க் கண்டு அவன் ஆனந்தக் கூத்தாடவில்லை. அகமகிழவில்லை. சற்றுநேரம் யோசித்தான். பிறகு ஒரு தீர்மானத்திற்கு வந்து கோயிலை நோக்கிச் சென்றான்.

“”கடவுளே! இந்தப் பணம் என் சட்டைப் பைக்குள் எப்படி வந்ததோ தெரியவில்லை. கீழே கிடந்து நானாக எடுத்துப் பையில் போட்டுக் கொள்ளவுமில்லை. யாரிடமிருந்தும் திருடவுமில்லை. எனக்கு எந்த வகையிலும் உரிமையாக முடியாத பணம் இது. இதைப் பயன்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை. இது யாருடையதாக இருக்கும் என்று கண்டுபிடிக்க, நான் யாரையும் போய் விசாரிக்கவும் போவதில்லை.

ஏனென்றால், யாரேனும் தன்னுடையது என்று பொய் சொல்லக்கூடும். ஆகவே, இந்தப் பணத்தை உன் உண்டியலில் போட்டு விடுகிறேன். மாதம் ஒருமுறை உண்டியலைத் திறந்து கிடைக்ககூடிய பணத்தை வைத்து அன்னதானம் செய்வார்களே, அந்தப் பணிக்கு இந்தப் பணம் ஓரளவு உதவக்கூடம்” என்று வேண்டிக்கொண்ட அவன், அந்த ஐந்து ரூபாய்த் தாளை உண்டியலில் செலுத்தி, கடவுளை வணங்கிவிட்டுச் சென்றான்.

ஆறுமுகத்திற்கும்கூட பிரமிப்பு! சம்பத் ஆச்சர்யத்தால் உறைந்தே போய்விட்டான். “”இப்படிக்கூட கொஞ்சமும் சுயநலமில்லாத மனிதப் பிறவி இருக்க முடியுமா?” என்று அவ்விருவருமே அதிசயித்தனர்.

இது மாதிரியான தன்னலம் நோக்காத வாழ்வில் எல்லா மகிழ்ச்சியும் நிறையும் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.

+
வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 28 Oct 2015 - 20:06

சால மிகுத்து
----------------
கழற்றாத கண்ணாடியுடன் முகவாய் நெஞ்சைத் தொட நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்த அப்பாவைப் பார்ப்பதற்கு,  ப்ளஸ் டூ படிக்கும் அவரது மகள் சவிதாவுக்குக் கஷ்டமாக இருந்தது. சொன்னால் கோபப்படுவார் அல்லது அறிவுரை சொல்லுவார். இரண்டுமே அவஸ்தை.

“”உக்காந்து தூங்கறதுக்கு படுத்து தூங்கலாமில்லையா?” என்ற அம்மாவின் குரலுக்கு விழித்தவர், தாடையின் தூக்க எச்சிலை துடைத்துக் கொண்டார். விடிகாலையில் வெளியூரிலிருந்து வந்தவுடனே அலுவலகம் சென்று வந்த அலுப்பில் கண்கள் சிவந்திருந்தன.

“”போய் படுத்துக்கோங்கப்பா. இன்னும் ஒரு சேப்டர் முடிச்சுட்டு தூங்கறேன். அலாரம் வச்சிருக்கேன்” என்றவளை எச்சரிக்கையாகப் பார்த்து, “”பரவாயில்லை. தனியா படிச்சா தூக்கம் தள்ளிடும்” என்று ஒரு கப் காபியை எடுத்துக் கொண்டு அவளுக்கும் கொடுத்தார். “”இப்போ குடிச்சா அவ தூக்கம் போய்டும். அப்றம் காலைல கண்ணை சுத்தும்..போதும் உங்க அனுசரணை” என்று காபியைத் தடுத்தாள் அங்கு வந்த அம்மா.

அம்மா, முளை கட்டிய பயிறுகள் முதல், பசி தாங்கக்கூடிய சப்பாத்தி வகைகள் வரை செய்து வைப்பாள். அப்பா, வேகமாகப் படிப்பது, தொடர்புப்படுத்திப் படிப்பது, நிமோனிக்ஸ் முறைகள், ப்ளு பிரிண்ட் அணுகுமுறை போன்ற நெளிவுசுளிவுகளை சொல்லிக் கொண்டே இருப்பார். தாங்களறிந்த தன்னம்பிக்கை கதைகள் பல சொல்லி ஆற்றலைப் பெருக்கி, 90 பெறுபவள் 100 ஐத் தொட்டுவிட ஓயாது பாடுபட்டார்கள். பெற்றோர்கள் தாங்கள் தவறவிட்ட கனவுகளை அவளுக்குள் துருத்தி உப்ப வைத்து, வளர்ச்சிக்கும் வீக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஒரு பந்தயக் குதிரையைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். கணிதம், உயிரியல் இரண்டையும் படித்தால் மருத்துவராகவும் பொறியாளராகவும் ஆக வாய்ப்புண்டு என்று இரட்டைச் சவாரிக்குப் பணிக்கப்பட, உயர்மதிப்பெண் பெறுவதாய் சவால்விட்டுப் படிக்கும் அக்குதிரைக்கும் அது மிகுந்த விருப்பம்.

சிறுவயதில் கோலம் போடும் நேர்த்தியைப் பார்த்தே, “”இவளை பயாலஜி படிக்க வைச்சா நல்லா படம் போடுவா” என்று எதிர்பார்ப்பை இளம் எலும்பிலேயே ஏற்றியவள் அம்மா. பெற்றோர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஒரு மகளாக அவளுக்கு எவ்வளவு அனுபவம் இருக்கிறதோ, பெற்றோராக தங்களுக்கும் அவ்வளவே அனுபவம் உள்ளது என்பதை அறியாத அப்பாவிகள்.

“குழந்தைகள் நம் மூலமாக இவ்வுலகத்துக்கு வந்தவர்கள்  நம்மிடமிருந்து அல்ல. நம்மோடு இருந்தாலும் நம்முடையவர்கள் அல்ல’ என்பதான ஜிப்ரான் வரிகளை சொல்லும் சித்தப்பாவை அப்பாவுக்கு அறவே பிடிக்காது.

“”எதையாவது படிச்சுட்டு வந்து நமக்கு வேப்பிலை அடிப்பான். நாளைக்கு இவன் பிள்ளைய வளக்கறதை பாக்கத்தானே போறேன்” என்பார்.

“”உங்கப்பாவுக்கு அவர் பேசலாம். இதையே நான் சொல்லிட்டா மொறைப் பாரு” என்று ஊடலாய் சொல்லிக்கொண்டே போகும் அம்மாவை அப்படியே போய் கட்டிப்பிடித்துக்கொள்ள வேண்டும் போல இருக்கும் அவளுக்கு.
நிறையச் சம்பாதித்து பெற்றோர்களை சராசரி இக்கட்டுகளிலிருந்து விடுவித்து சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவள் ஆசை. இதை நினைக்கும்போதே நெஞ்செல்லாம் ரத்தம் பாய்ந்து புது உற்சாகம் பிறக்க, சோர்வை அண்டவிடாமல் படிப்பாள். புத்தகத்தின் மேல் குப்புறப் படுத்துத் தூங்கிப் போனதும், படபடத்து விசுக்கென எழுந்து, “”ஐயோ இன்னும் இத்தனை பக்கம் முடிக்கவேண்டுமே” என்று அப்பா சூத்திரப்படி குளிர்ந்த நீரை முகத்தில் அறைந்து பிடறி ஈரத்துடன் உத்வேகமாய்ப் படித்த பொழுதுகளும் நிறைய உண்டு.

ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு ஆரம்பித்தாயிற்று. வகுப்பறை, சிறப்பு வகுப்பு, வீட்டில் மீள் வாசிப்பு என்று ஒரு நாள் பல மணித்துளிக் கட்டங்களாகப் பிரிந்து, கட்டம் கட்டமாக நகர்ந்தோ தாவியோ முன்னேறும் பகடைக் காயாக அவள் மாறி இருந்தாள். எதிர்காலச் சிறப்பை மனவிரிப்பில் காட்சிப்படுத்திய பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் எனப் பலரின் மாயக்கரங்கள் அவளை நெம்பி நகர்த்திக் கொண்டேயிருந்தன.

ஒரு முறை சித்தப்பா, “”வயதுக்கேற்ற புரிதலை அனுசரித்தே பாடத்திட்டங்கள் இருக்க, அடுத்த வருட பாடத்தை முன்னதாகவே திணிப்பது அதிகார வன்முறை அல்லவா? பட்டுப்புழு அதன் இயல்பான காலஅளவில் வளரும்போதுதானே நல்ல பட்டு கிடைக்கும்?” என்றபோது, “”வில் யு ப்ளீஸ் ஷட் அப்” என்ற அப்பாவின் மெதுவான குரலின் இரும்பு விரலால் சுண்டப்பட்ட சித்தப்பா, அதன்பிறகு அபிப்ராயங்கள் சொல்வதை நிறுத்திக் கொண்டு விட்டார். பெற்றோர்களின் கனிவும் அக்கறையும் கூட ஒருவித இன்பச்சுமையாகவே அழுத்துவதை அறியாதவளாய் ஓடிக்கொண்டிருந்தாள்.
எத்தனை மணிகளில் எத்தனை பாடங்களை எவ்வளவு விரிவாக, ஆழமாக, வேகமாகப் படிக்கவேண்டும், எழுத வேண்டும், எவ்வளவு விழிக்க வேண்டும், எவ்வளவு தூங்க வேண்டும், எதைப் படிக்கவேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பன போன்ற அத்தனை விவரணைகளும் நிறுவப்பட்டு, ஒரு ராக்கெட் கிளம்புவதைப் போன்ற நுணுக்க விவரங்களுடன் அவள் தயார்படுத்தப்பட்டாள்.

எப்போது, எதனால், யாரால் என்று தெரியவில்லை. ஒரு நாள் மாலை. திடீரென தான் படித்த அனைத்தும் மறந்துவிட்டால் என்றொரு அசட்டு அச்சம் எங்கிருந்தோ வந்து கவ்விக்கொண்டு தகித்தது. விளைவை நினைத்துப் பார்க்கக்கூடிய தைரியமற்ற நிலையில்,  “”சவிதாவா அவள் சென்டம் வாங்குவாள். எத்தனை சென்டம்னுதான் பாக்கணும்” என்ற எதிர்பார்ப்புகளின் சுமை அமுக்க, அச்சத்தின் ஆக்டபஸ் கரங்கள் அவளை தீண்ட ஆரம்பித்தன. மீள்தேர்வில் மதிப்பெண்கள் குறைந்தபோது, கண்ணாடி டம்ளர் கோபுரத்தின் அடி டம்ளர் அசைந்ததைப் போல நலுங்கினாள்.

பெற்றோர்கள் அலுவலகத்திலிருந்து திரும்பியிருக்கவில்லை. கதவைத் திறந்து நேராக கழிப்பறை சென்றவள் அழுது தீர்த்தாள்.  தனியறையில் அமர்ந்து விடைத்தாளை எத்தனை முறை பார்த்தபோதும், தான் ஏன் அத்தகைய தவறுகள் செய்தோம் என்றுணர முடியவில்லை. தன் மண்டைக்குள் இருந்து அவற்றை எழுதியது யார்? என்றொரு கிலேசம் எழுந்தது. வல்லூறு ஒன்று வந்து நெஞ்சுக்குள் அமர்ந்து கொண்டு அழுத்துவது போன்று உணர்ந்தாள். மனதைப் பிசைந்தது. குப்புறப் படுத்தவள் விம்மல்களுடே தூங்கிவிட்டாள். சாப்பிட எழுப்பியபோது அவள் உடலில் அனல் உணர்ந்த அம்மா அதிர்ந்தாள்.

அவசரமாய் வந்த அப்பா டாக்டரிடம் போக அழைத்தபோது, “”வெறும் தலைவலிதான்” என்று வரமறுத்தாள். அங்கிருந்த விடைத் தாள்களை அப்பா கையில் எடுத்ததைக் கண்டவுடன் அவள் தலையில் கை வைத்துக் கொண்டாள். “”என்னாச்சுடி?” என்று அம்மா கையை ஆவேசமாகத் தட்டிவிட்டாள். அவள் பதில் பேசவில்லை. மதிப்பெண்களை ஆராய்ந்த அப்பா.. “”சரி இப்போ தலைல கை வச்சிகிட்டா எப்படி? கவனமா படிக்கணும். எதுக்கும் டாக்டரைப் பாக்கலாம் வா. ஸ்கூல் போகலேன்னா எல்லாம் போச்சு”  என்றார். பேசிக்கொண்டிருக்கும்போதே, வயிற்றைப் புரட்டவே அவசரமாக எழுந்து ஓடி “குபுக்’ கென மஞ்சளாக வாந்தியெடுத்தாள். பதட்டமாக ஓடிய அம்மா அவள் தலையைப் பின்னிருந்து அழுத்திப் பிடிக்க, அவள் சோர்ந்து உட்கார்ந்துகொண்டாள். ஹாலில், விடைத்தாளை குழல்போல சுருட்டி உள்ளங்கையில் தட்டியபடி பதட்டத்தில் இருந்தார் அப்பா.

கண்கள் கலங்கி மூக்கு சிவக்க, “”சாரிப்பா” என்றாள் கரகரத்து. “”சரி விடு” என்று நாற்காலியில் உட்கார வைத்து, “”ஏதாவது வெளிய சாப்டியா?” என்று கேட்டார். “”இல்லை” என தலையசைத்தாள். “”பழைய ப்ரெட் ஏதாவது சாப்டியா?”
“”இல்லை” எனத் தலையசைத்தாள். அம்மா வெந்நீர் தந்து கொப்பளித்தபின் குடிக்கச் சொன்னாள்.
“”மத்தியானம் லேட்டா சாப்டியா வயித்துல கேஸ் சேந்திருக்கும்” என்றார். “”இல்லை” என்று தலையாட்டினாள். “”பின்ன என்ன எழவுக்கு வாந்தி?” என்று வெடித்தார். முழங்காலில் முகம் வைத்து முதுகு குலுங்கி விசும்பினாள். அம்மா தலையிட்டு, “”அவளை ஏன் அதட்டறீங்க?” என்று விவாதிக்கத் தொடங்க, விருட்டென அறைக்குள் விரைந்தவள் சித்தப்பா பயன்படுத்தும் துவாலையால் முகத்தை மூடிக்கொண்டு படுத்தாள்.

“ஏதாவது ஒரு மடி தன்னைத் தாங்கி தலையைக் கோதி எல்லாம் சரியாபோகும். எதுக்கும் பயப்படாத. இப்போ நிம்மதியா தூங்கு என்று சொல்லாதா?’ என்று ஏங்கியபடியே தூங்கிப்போனாள்.

மறுநாள் சரியாகிப்போனாள். ஓட்டப்பந்தயத்தில் இறங்கி, ஓடுவது தெரியாமல் ஓடினாள். அவ்வப்போது தலைவலி வயிற்றுவலி  வருவதும், மாத்திரை விழுங்கி சமாளிப்பதுமாக வாரங்கள் சென்றன. அடுத்து வந்த வாராந்திர தேர்வுகளைப் பழிவெறியில் எழுதினாள். மிகுநம்பிக்கையுடன் இருந்தபோது, கணிதத்தாளை தந்த ஆசிரியை, “”94 என்றாலும் 100 மாதிரிதான். வெரி குட். உங்க அப்பாவை வரச்சொல்லு” என்ற வார்த்தை கேட்டு காற்றில் பறந்தாள்.

மறுநாள் அப்பாவை தனியாக அழைத்துச் சென்ற வகுப்பாசிரியர், “”உங்க பொண்ணுக்கு ஏதாவது ப்ராப்ளம் இருக்கா. வீட்ல ஏதாவது பிரச்னையா?” என்று கேட்டார். பாராட்டை எதிர்பார்த்து வந்தவர் மிகக்குழம்பியவராய், “”நிச்சயமா இல்லை. ஏன் 94 மோசமில்லையே” என்றார். அப்போது, அவளுடைய வேதியியல் விடைத்தாளை எடுத்து அவள் பாதி வேதியியலும் பாதி இயற்பியலுமாக விடை எழுதியிருப்பதைக் காட்டி, “”ஏன் இந்த அளவுக்கு குழம்பி இருக்கான்னு தெரியலை. அவள்தான் ஸ்கூல் டாப்பர் னு நாங்கெள்ளாம் நம்பிட்டு இருக்கோம்” என்றார்.

தீவிரம் அறியாமல், “”அப்போ அவள் டிஸ்ட்ரிக்ட் பஸ்டு கூட வரமாட்டாளா?” என்ற தந்தையின் அதீத மனத்தை எண்ணி ஆசிரியை அதிர்ந்தார். ஆனால் அடுத்த நொடியே தன் மகள் கட்புலனாகா சிக்கலில் இருக்கிறாள் என்ற உண்மை அறைய, தடுமாறி அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்துவிட்டார்.

“”சரி அவகிட்ட நீங்க எதுவும் கேக்க வேணாம். நாங்க சமாளிச்சிக்கிறோம்” என்று பொங்கிய மனத்தில் நீர்வார்த்து அனுப்பினார் ஆசிரியை.

ஏதோ ஒரு திகிலும் ஏமாற்றமும் அவர் மேல் கவியத்தொடங்கியது. இரவு பகலாக படிப்பதும், எழுதுவதும், மனப்பாடம் செய்வதும், கைவிரலால் காற்றில் எழுதிப்பார்ப்பதுமாக இருந்த மகளைப் பார்த்தவருக்கு துக்கமும் பயமும் சுழற்றிக் கவ்வியது. ஆனால் அவள் எந்த மாற்றத்தையும் உணர்ந்தவளாகத் தெரியவில்லை. வழக்கம் போலவே பள்ளி சென்றாள். ஆனால் விடைகளை மாற்றி மாற்றி எழுதுவதும், எழுதியதையே இருமுறை எழுதுவதும், அடித்துத் திருத்துவதும், குழப்பிக் கொள்வதுமாய் பிரச்சனை தீவிரமானது. என்னவெனத் தெரியாமல், ஆனால் என்னவோ தனக்கு நேர்ந்து கொண்டிருக்கிறது எனும் திகிலை சொல்லத் தெரியாதவளாய் இருந்தாள். மனப்பிசகின் தீவிரம் தவிர்க்க ஆசிரியர்கள் அவளுக்கு வாரத் தேர்வுகளைத் தவிர்த்தனர். அவளுடைய வெளிறிய முகத்தில் சோர்வும், அர்த்தமற்ற வெறிப்பும் மெதுவாகத் தோன்ற ஆரம்பித்தன. மருத்துவரிடம் வர மறுத்தவள் பிறகு வயிற்று வலிக்கான பொதுப்பரிசோதனை என்பதால் ஏற்றுக்கொண்டாள்.

அவளை வெளியே அனுப்பிய பின் மருத்துவர், “”பெரிசா ஏதும் பிரச்சனை தெரியல்லை. எதுக்கும் ஒரு மனநல ஆலோசகரைப் பார்க்கலாமே” என்ற வார்த்தை முடிக்கும் முன்பே அம்மா குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
“”நோ..நோ.. நீங்க இப்படி உணர்ச்சிவசப்பட்டா அது அவளை பாதிக்கும். தனக்கு என்னமோ ஆயிடுத்துன்னு பயந்துபோவா..நீங்க பக்குவமா அனுசரணையா நடந்துக்கணும்” என்றார். அப்பா பொய் தைரியத்தில் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தார்.

அவளைப் படி என்று சொல்லவோ படிக்கவேண்டாம் என்று சொல்லவோ முடியாமல் தத்தளித்தபோது வீட்டிற்கு வந்த சித்தப்பா, புறச்சூழலின் அழுத்தம், தானே சுமத்திக்கொண்ட மனச்சுமை எல்லாம் சேர்ந்து அவளை நசுக்கியிருக்கிறது என்பதை அறிந்தவராக  ஆனால், எதையும் சுட்டாமல், யாரையும் காயப்படுத்தாமல், “”அவளை அப்படியோ விடுங்க. தன் இஷ்டப்படி படிக்கட்டும். தூங்கட்டும். எழுந்திருக்கட்டும். எந்த அட்வைசும் பண்ணாதிங்க. பரீட்சை, மார்க் பற்றி எதுவும் பேசாதீங்க” என்றார். அவளோடு சாதாரணமாக பேசினார்.

“”கொஞ்சம் ஷட்டில் காக் விளையாடலாமா?” என்று கேட்டபோது, “”ஐயோ. நோ சான்ஸ்” என்று கையிலிருந்த புத்தகத்தை உயர்த்திக் காட்டினாள். அதைக் கவனித்த அப்பாவின் மனம் வலியில் புரண்டது. தாயத்து கட்டினால் சரியாகும் என்று அம்மா மலையாள ஜோதிடரை நாடிப் போனாள்.

மாத்திரைகளாலா, நோயாலா, ஓய்ச்சலாலா, மறதியாலா என்று கணிக்கமுடியாமல் அவள் தன்னிஷ்டப்படி தூங்குவதும் படிப்பதுமாக, சோபையற்று  சாரல் பட்ட நீர் வண்ண ஓவியமாய் கண் முன்னாலேயே கலையத் தொடங்கி இருந்தாள். இதனிடையே, பள்ளியில் நூற்றுக்கு நூறு தேர்ச்சி வேண்டும் என்பதால் அவளை தேர்வு எழுத அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்று ஆலோசிக்கபட்டதாக கேள்விப்பட்ட பெற்றோர்கள் பதறியடித்துக்கொண்டு வந்து நிர்வாகத்தைக் கெஞ்சினார்கள்.

வகுப்புகள் நிறைவடைந்து செய்முறைத் தேர்வுகளுக்கு அப்பாவுடன் சென்றாள். முந்தைய நாள் காய்ச்சல். என்றாலும் அவள் நன்றாகவே செய்திருப்பதாக ஆசிரியை சொன்னது தன்னைத் திருப்திப்படுத்தவோ எனத் தோன்றியது அப்பாவுக்கு. அந்த கருணை வலித்தது. பிறகு அவளைப்பற்றி பேசுவதையும் அவர்கள் லாகவமாக தவிர்க்க ஆரம்பித்தபோது, நிலைமை காற்றில் கலைந்த கோலம் போலிருந்தது அவருக்கு.

வீட்டில் தேர்வு அட்டவணையை மாட்டியிருந்தார்கள். அவளிடம் பதட்டமோ, பயமோ, தீவிரமோ எதுவுமற்று எப்போதும் புத்தகத்தை வைத்தபடி இருந்தாள். பேச்சு குறைந்துபோயிருந்தது. மதிப்பெண் பற்றிய ஆசை ஏதுமின்றி, அவள் தேர்வு எழுதினால் போதும் என எண்ணத் தொடங்கிவிட்டார்கள்.  மொழித்தேர்வுகள் எழுதினாள். இடைவெளிக்குப் பின் கணிதம் எழுதினாள். எப்படி எழுதினாள் என்று யாரும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை. மறுநாள் வேதியியல் தேர்வு. இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு புத்தகத்தை வைத்துக்கொண்டு தரையில் உட்கார்ந்தவள் மெதுவாகச் சாய்ந்தாள். அம்மா சந்தேகமாய்ச் சென்று பார்ப்பதற்குள் உடல் நடுங்கி கைகள் வெட்டியிழுக்க வாயில் நுரை தள்ளியபடி மயக்கமானாள். “”ஐயய்யோ” என்ற அம்மாவின் குரலைத் தொடர்ந்து கலவரமாய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாள். சித்தப்பாதான் அவளை அருகிலிருந்து கவனித்துக்கொண்டார்.

இரண்டு மணிநேரத்தில் தெளிவடைந்தாள். ஆனால் தான் ஏன் இங்கு இருக்கிறோம் என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல் வீடு திரும்பி மறுநாள் தேர்வுக்குச் சென்றாள். சாவி கொடுக்கப்பட்ட பொம்மையாக அவள் நடந்துகொண்டது அனைவரையும் கலங்கடித்தது. திடீரென்று அவள் யாரோ போல தோன்ற ஆரம்பித்தாள்.

எப்படியோ அனைத்து தேர்வுகளும் எழுதி முடித்தாள். எப்படி எழுதியிருக்கிறாள் என்று கேட்க அனைவருக்கும் பயம். கடைசித் தேர்வும் முடிந்து வெயிலில் வந்தவள், “”பசிக்குதும்மா” என்று தட்டை எடுத்துக்கொண்டு உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிட்டு முடிக்கும் தருணத்தில் அங்கிருந்த சித்தப்பாவிடம் அவள் அப்பா, “”எல்லாந்தான் முடிஞ்சுபோச்சே. எப்டி எழுதியிருக்கானு நீதான் மெதுவா கேட்டுப்பாரேன்?” என்றார். மேசையிலிருந்த தமிழ் வினாத்தாளை எடுத்து அவள் காதில் படும்படியாக, “”பீலிபெய் எனத்தொடங்கும் குறளா? அது என்ன?” என்று சித்தப்பா தனக்குத் தானே கேட்டுக்கொண்டு புருவமத்தியை நீவியபடி யோசிக்க, அவள்,  “”சாகாடும் அச்சிறு அப்பண்டம் சாலமிகுத்துப் பெயின்” என்று நிரப்பிச் சொல்லியபடி கைகழுவப் போனாள்.

“”சரியா சொல்றாளா?” என்ற வாஞ்சையான அப்பாவிடம், “”ரொம்பச் சரியா சொல்றா” என்று அர்த்த அழுத்தமாய்ச் சொன்னார். பெற்றோர்கள் முகம் மலர்ந்தது. புரிந்ததாய்த் தெரியவில்லை. உடனே பொறியியல் கல்லூரி நுழைவுத்தேர்வுகள் பற்றிய யோசனை அவர்களுக்குள் முளைவிட்டது.

அவள் கை கழுவியவுடன் டி-ஷர்ட்டை அணிந்துகொண்டு, ஷட்டில் காக் மட்டையை எடுத்துக்கொண்டு பக்கத்து காலி மனைக்குப் போனாள். அவளை என்ன என்று கேட்கும் தைரியமற்றும், கேட்க தாங்கள் அருகதையுள்ளவர்களா? என்ற சந்தேகத்துடனும் அவர்கள் திகைத்து நின்றனர்.
-ரமேஷ் கல்யாண்


+

வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 28 Oct 2015 - 20:09

பிடிவாதம்!
--------------

நைட் டிபனுக்கு தோசையும், குருமாவும் பண்ணட்டுமா?” ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டு இருந்த கணவர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்கும் சாக்கில் உள்ளே கட்டிலில் குப்புறக் கிடந்த மகன் ரிஷியை ஓரக்கண்ணால் பார்த்தாள் ராதா.

டேபிளில் அமர்நது சத்தமில்லாமல் வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்த பூமிகா அம்மாவை பசியோடு பார்த்தாள்.
”ம்… செய். ஆனா, பூமிகா ஹோம் ஒர்க் செய்து முடிக்கட்டும். அப்புறம்தான் சாப்பாடு…” அப்பா அதட்டலாய் சொன்னார்.
அம்மா சுட்ட தோசையின் வாசனை மூக்கைத் துளைத்தது. ரிஷி மூக்கை தலையணையில் வைத்து அழுத்திக் கொண்டான்.

உடம்பின் ஒவ்வொரு அணுவும் பசியில் தெறித்தது. ஆனால், அதையும் மீறிய பிடிவாதமும், கோபமும் அவனை அசைவற்று படுக்க வைத்திருந்தது.

ரிஷி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனுடைய தங்கை பூமிகா நான்காம் வகுப்பு. அவர்களுடைய அப்பா கிருஷ்ணமூர்த்தி போஸ்ட்மேன். அம்மா ராதா இல்லத்தரசி. உடன் பாட்டி பர்வதம்.
கிருஷ்ணமூர்த்தியை பொறுத்தவரை அவருக்கிருந்த மிகப் பெரிய குறையே ரிஷியின் பிடிவாதம் தான்.கேட்டது கேட்ட மாத்திரத்தில் கிடைக்கவில்லையென்றால் வீடே இரண்டாகி விடும்.

அது ஜாமென்ட்ரி பாக்ஸ் ஆகட்டும், இல்லை சிக்ஸ் பேக்ஸ் பேண்ட்டாகட்டும் எல்லாம் உடனடியாக கிடைத்தாக வேண்டும். இல்லையேல் கையில் கிடைத்ததெல்லாம் தூக்கி அடித்து தீவிரவாத போராட்டம் செய்வான். அதற்கும் பலன் கிடைக்கவில்லையென்றால் உண்ணாவிரதம் இருந்து மிதவாதப் போர் புரிவான்.

அப்பாவும், அம்மாவும் அவன் மீது இரக்கப்பட்டு அந்தப் பொருளை வாங்கித் தந்து விடுவார்கள். ஆனால், ரிஷி நினைத்துக் கொள்வான் தன்னுடைய பிடிவாதம் வெற்றி பெற்றுவிட்டதாய்..!

இன்றும் அப்படித்தான்.
ஸ்கூலில் இருந்து வரும் போது கோபமாய்த்தான் வந்தான். ஷூ, சாக்ஸ், வாட்டர் பாட்டில், பேக் என எல்லாவற்றையும் திசைக்கொன்றாய் விசிறியடித்தான்.

”அட… என்னடா இது, வரும்போதே இத்தனை கோபத்தோட வர்றே…” பாட்டி பார்வதம் கேட்டார்.

”ஏய்… கிழவி, நீ சும்மா கிட…” என்று அவன் கத்தவும், பின்னாலிருந்து அவன் முதுகில் ஓங்கி ஒரு அறை விட்டார் அவனது அம்மா.

”என்ன திமிர் உனக்கு..! பெரியவங்களுக்கு மரியாதை தரணும்னு நீ படிக்கிற பள்ளிக்கூடத்தில சொல்லித் தரலியா..! எப்பப் பாரு எடுத்தெறிஞ்ச பேச்சு…”

கோபமும், அவமானமுமாய் கண்ணீர் பொங்க அம்மாவை பார்த்தான்.

”என்னடா முறைக்கிறே..?”

”எனக்கு நாளைக்கே செல்போன் வேணும்…”

”அவன் கேட்டதும் ராதா ஒரு நொடி அதிர்ந்து போனாள். அவர்கள் வீட்டில் யாருக்கும் செல்போன் உபயோகிக்கும் பழக்கமே இல்லை. வீட்டில் லேன்ட்லைன் போன் ஒன்று இருந்தது. அப்படியிருக்கையில் ரிஷி கேட்டபோது தன் காதுகளாலேயே நம்ப முடியவில்லை.

”என்னடா உலர்றே..! செல்போனா..! உனக்கா..! இப்ப அதுக்கென்ன அவசியம் வந்தது…”

”என் வகுப்பில ரவி, சுரேஷ், கோபி எல்லாரும் செல்போன் வெச்சிருக்காங்க. அதுவும் காஸ்ட்லி செல்போன். நான் கிளாஸ்ல ஃபர்ஸ்ட் ரேங்க். அப்படியிருக்கையில் என்கிட்ட ஒரு செல்போன் கூட இல்லையின்னு அவங்கள்லாம் கேலி பேசறாங்கம்மா…”

ராதா அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

”செல்போன் இல்லாட்டி கேலி பேசுவாங்களா..! அதுவும் எட்டாவது படிக்கிற பையனைப் பார்த்து. ஸ்கூல் பசங்க செல்போன் பயன்படுத்தக் கூடாதுங்கிறது உங்களுக்குத் தெரியுமா, இல்லையா? உங்க டீச்சர் என்ன பண்றாங்க..? நாளைக்கு நான் அவங்களை வந்து பார்க்கிறேன்…” அம்மா அதட்டலாய் சொல்லவும் ரிஷியின் கோபமும், பிடிவாதமும் இரட்டிப்பானது.

யூனிபார்ம் கூட கழட்டவில்லை. அப்படியே போய் கட்டிலில் படுத்தவன்தான் அசையவில்லை.
அப்பா வந்த போதுகூட எழுந்திருக்கவில்லை. விஷயம் என்னவென்று விசாரித்த கிருஷ்ணமூர்த்தி, ரிஷியை அழைத்து பக்குவமாய் எடுத்துச் சொன்னார். அவனுடைய பிடிவாதமும், கோபமும் எல்லை மீறவே “பளார் பளார்’வென்று கன்னத்தில் அறைந்தார்.
ரிஷியுடைய தீவிரவாத போராட்டம், உண்ணாவிரதப் போராட்டமானது. நைட் சாப்பிடமாட்டேன் என்றுதான் இந்த அடம்.
அம்மா சாப்பிட அழைத்த போது, பிடிவாதமாய் மறுத்தான்.
டைனிங் டேபிளில் தட்டுகள் பரிமாறப்படும் சத்தம், அதைத் தொடர்ந்து வீசிய தோசையின் வாசம் ரிஷிக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. வாயில் உமிழ் நீராய் சுரந்தது.
“சின்ன வேலையும், மிகக் குறைந்த சம்பளமும் உள்ள சுரேஷ், கோபி, ரவி ஆகியோருடைய அப்பாக்கள் எல்லாம் தங்கள் பிள்ளைகளுடைய சந்தோஷத்திற்கு பணம் ஒதுக்க முடிகிறது என்றால், அரசாங்க உத்யோகஸ்தரான அப்பாவால் பணம் ஒதுக்க முடியாதா..? எப்படியாவது நாளைக்கு செல்போனுடன் கிளாஸுக்கு போய் அசத்த வேண்டும்’ ரிஷி மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
எல்லோரும் சாப்பிட்டு முடித்து விட்டு, விளக்குகளை அணைத்து விட்டு படுக்கச் சென்று விட்டார்கள்.
ரிஷிக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. கொஞ்சம் தண்ணீராவது குடித்தால்தான் மூச்சே விடமுடியும் போல் தோன்ற, மெல்ல எழுந்து பூனை நடைபோட்டு ஹாலுக்கு வந்தான். ஹாலில் யாருமில்லை. சமையல்கட்டை ஒட்டிய அறையில் பாட்டி ஒருக்களித்து படுத்திருப்பது தெரிந்தது.
டைனிங்டேபிளை அடைந்தவனுக்கு டேபிளின் மேலிருந்த தண்ணீர்குவளை கவனத்தை ஈர்க்கவில்லை. மாறாக, பளபளப்பான அட்டைப் பெட்டியில் பொதிந்து கிடந்த லட்டு மனதை சுண்டியது. அப்பா வரும்போது வாங்கி வந்து இருக்கிறார். வாயில் எச்சில் சுரந்தது.
சாப்பிட்டால்தானே கோபம் தீர்ந்ததாய் அர்த்தம். பார்த்தால் கூடவா தப்பு..! தயங்கியபடியே அட்டைப் பெட்டியை பிரித்தான். வரிசையாய் லட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன்மீது அலங்காரமாய் வீற்றிருந்த முந்திரி, கிஸ்மிஸ் ஆகியவை லட்டின் அழகுக்கு அழகு சேர்த்தது.
லட்டை தின்றால்தானே தப்பு. முந்திரியை தின்றால் என்னாகப் போகிறது. அவனுடைய வைராக்கியம் கால் கிலோ குறைய, லட்டின் மீதிருந்த முந்திரி, கிஸ்மிஸ்களை நோண்டி திண்ண ஆரம்பித்தான். பசி கொண்ட வயிறும், ருசிகண்ட நாக்கும், ஒரே ஒரு லட்டு மட்டும் தின்றுவிட்டு போகலாம் என்ற முடிவை, நான்கு லட்டுகளை திண்ணும் வரை தள்ளிபோட வைத்தது. நான்காவது லட்டை தின்ற பிறகுதான் அந்தக் கவலை எழுந்தது.
காலையில் எழுந்து லட்டுகளை காணவில்லை என்றால் வீட்டிலுள்ளவர்கள் நிச்சயமாய் இவனைத்தான் நினைப்பார்கள். அதிலிருந்து தப்பிக்க வழி, அவனுடைய குட்டி மூளை ஏதேதோ தப்பு கணக்குகளைப் போட்டு, அடுத்த விநாடி சர்க்கரை நோய்கண்ட பாட்டியின் மீது பழிபோட துணிந்தது.

லட்டு வைக்கப்பட்டிருந்த பெட்டியை பாட்டியின் தலைமாட்டில் வைத்து விட்டு அவன் நகர முற்பட, அறையின் விளக்குகள் உயிர் பெற்று சிரித்தது. அவன் தலைகுனிந்து நிற்க, அறைவாசலில் அப்பாவும், அம்மாவும் நின்றிருந்தனர். வெளிச்சம் பட்டு பாட்டியும் விழித்து விட்டார்.
”சபாஷ்! ரிஷி, கிளாஸ்ல நீதானே நம்பர் ஒன்! இப்போ திருட்டு வேலையிலும்நீதான் நம்பர் ஒண்ணா..? அவமானமா இல்லையா ரிஷி. உன் வீட்டிலேயே நீ திருடி திண்ண…” அம்மா அதட்டினாள்.
”ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா..?” பாட்டி இருவரையும் அதட்டிவிட்டு, பேரனை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டாள்.

”எதுக்கு ரிஷி அழுவறே..? உங்க தாத்தா தான் சொல்லுவாரு, நன்றும் தீதும் பிற தர வாரா’னு. அது எத்தனை நிஜமாச்சு பார்த்தியா..! உன் படிப்பும், புத்திசாலித்தனமும் செல்லாத காசானதுக்கு காரணம் உன் பிடிவாதமும், கோபமும் தானே..! உங்க தாத்தா உனக்கு ரிஷிகுமார்னு பேர் வச்சதுக்கு காரணம், நீ பொருமையிலயும் புத்திக் கூர்மையிலும் ரிஷிகள் மாதிரி இருக்கணும்னுதான். ஆனா, நீ அதுக்கு நேர் எதிரா இருக்க, அது தப்புன்னு உனக்குப் புரியலையா..?”

”ரிஷி கண்ணு, உங்கப்பாவால உனக்கு செல்போன் வாங்கித் தர முடியாம இல்ல. ஆனா, உன் வயசுள்ள பிள்ளைகள் செல்போன் பயன்படுத்தறது சட்டப்படி குற்றம். சட்டத்தை மீறி, உன் ஆசிரியர்களை ஏமாற்றி, உன் அப்பா அம்மாவை கஷ்டப்படுத்தி, செல்போன் வாங்கி, உன் உடன்படிக்கிற வசதியில்லாத மாணவர்களை ஏங்க வைக்கப் போற. நீ செல்போன் வாங்கறதால இத்தனைப் பேற கஷ்டப்படுத்த போறே. இப்போ சொல்லு, அந்தப் பொருள் உனக்கு வேணுமா..?”

”இல்ல பாட்டி, பசங்க என்னை கஞ்சன்னு கேலியாய் பேசறாங்க…”
”பேசட்டும் அதனாலென்ன..! வீண் பகட்டுக்கும், ஆடம்பரத்திற்கும் தான் மரியாதை தருவேன்னு சொல்ற நண்பர்கள் கூட இனி சேராதே. செல்போன் என்ன அதைவிட உயர்ந்த பொருளெல்லாம் உரிய நேரத்தில் உன்னைத் தேடி வரும். அதுவரை பொறுமையாகவும், அமைதியாகவும் காத்திருக்கணும்.

இனிúóமல் உன்னை தலைகுனிய வைத்த கோபத்தையும், பிடிவாதத்தையும் விட்டுடுவேன்னு பாட்டிக்கு உறுதி கொடு…”
பாட்டி கைநீட்ட தெளிந்த மனதோடும், மாறிய குணத்தோடும் பாட்டியின் கரத்தோடும் அவனும் கரம் சேர்த்தான்.
கிருஷ்ணமூர்த்தியின் மனதை இதுநாள் வரை அரித்துக் கொண்டிருந்த குறை மெல்ல விலகியது.


+
வாணிஸ்ரீ சிவகுமார் -
2
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 28 Oct 2015 - 20:11

உயர் கருணை!
---------------

உயர் கருகைகதைசிறுகதைசிறுவன்
-------------------
“அவனுக்கு ஒண்ணுமில்ல. பயப்படாதீங்க. எதுக்கும் ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட்டிடம் ஒரு ஒபினியன் வாங்கிடுவோம்,’ குடும்ப டாக்டர் சொன்னார்.

மகனை அணைத்து நின்ற அவரால் சரி என்று தலையசைக்க மட்டுமே முடிந்தது. மனதில் மெல்ல பயம் பரவியது.
செல்போனில் எண்களை நகர்த்திய டாக்டர், பொத்தானை அழுத்தினார். இணைப்பு கிடைக்கும் வரை, புன்னகையுடன் சிறுவனின் பள்ளியைப் பற்றி விசாரித்தார். எதிர்முனையில் இணைப்பு கிடைத்தவுடன் ஆங்கிலத்தில் பேசினார். பழக்கமில்லாத மருத்துவச் சொற்கள் நிரம்பிய உரையாடல். “தான் பார்த்தவரை பிரச்னை ஏதுமில்லை’

“விளையாட்டின்போது கீழே விழுந்து முதுகுத்தண்டு முனையில் வீக்கம் இருக்கலாம்’ “அனுப்பி வைக்கிறேன்’ இவற்றை மட்டுமே புரிந்துகொள்ள முடிந்தது.

“நாளை காலை எட்டரை மணிக்குப் போன்ல பேசிட்டுப் போங்க’ மருந்துச் சீட்டில் ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் பெயர், செல்போன் எண்களை டாக்டர் எழுதிக் கொடுத்தார்.

மகனை அழைத்துக் கொண்டு அவர் வெளியே வந்தார். சிறுவனால் இயல்பாக நடக்க முடியவில்லை. இடுப்பின் இடது பக்கத்தில் முதுகு தண்டுவடத்தின் கீழே கையை வைத்து “வலிக்குதுப்பா’ என்றான். வலி பொறுக்காமல் அப்பாவிடம் சரிந்தான். முன்பக்கமாக குனிய முடியவில்லை. அவனுக்கு முதுகுத்தண்டு உடைந்து விட்டதைப்போல இருந்தது. கண்களில் நீர் தளும்ப, அவன் உடல் மெல்ல அதிர்ந்தது.

அணைத்தபடியே ஆட்டோவுக்கு அழைத்து வந்தார். ஆட்டோக்காரரிடம் எவ்வளவுதான் தெளிவாக சொன்னபோதிலும் ஆட்டோவைக் குலுங்காமல் ஓட்ட இயலவில்லை. “இந்த ரோடுல இதுக்கு மேல எப்படி சார் போறது?’. ஆட்டோக்காரர் சொன்னபோது, நீ வந்து ஓட்டறியா என்று கேட்பதுபோல தோன்றியது. மகனை மடியில் சாய்த்து படுக்க வைத்துக்கொண்டார். அது ஓரளவுக்கு வலியை மட்டுப்படுத்தியது.

மறுநாள் காலை எட்டரை மணிக்கு ஆர்த்தோ டாக்டருக்குப் போன் செய்தபோது, அவர் அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து இன்னும் வரவில்லை என்று கிளினிக் பையன் சொன்னான். மீண்டும் ஒன்பது மணிக்குப் பேசியபோது டாக்டரே பேசினார். “சாயந்தரம் ஆறு மணிக்கு பாமா கிளினிக் வருவேன். அங்கேயே பார்த்துடலாமா?’
“பையன் வலியில் துடிக்கிறான்?’   “சரி, நான் கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடறேன்’

நான்கு நாள்களுக்கு முன்பு இதே நேரம்தான் இருக்கும். அலுவலகத்துக்குப் போகும் முன்பாக, மகனை ஸ்கூல் பஸ் நிறுத்தத்தில் அவர்தான் இறக்கிவிட்டுச் செல்வார். இருவரும் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, மகனிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. குனிந்து சாக்ஸை மாட்டும்போது முகம் வலியால் சுருங்கியது.

“அப்பா குனிஞ்சு ஷூ போட முடியலப்பா. முதுகு வலிக்குது’ என்றான்.

வாயு பிடிப்பாக இருக்கும் என்று தீர்மானித்தார். அடுத்த நாள் புறப்படும்போது வலி குறைந்திருக்கிறதா என்று விசாரித்தார். வலி குறைந்து வருவதுபோல தெரிவதாக மகன் சொன்னதும் மனம் லேசானது. அடுத்த இரு நாள்களாக அவன் ஏதும் சொல்லவில்லை. ஆனால் நேற்று பள்ளியிலிருந்து பாதியிலேயே திரும்பி வந்துவிட்டதை, மனைவி போனில் சொன்னபோது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. செல்போனை மகனிடம் கொடுக்கச் சொல்லி, வலி பரவும் விதம் குறித்து விசாரித்தார். படுத்து ஓய்வுகொள்ளும்படி ஆறுதல் கூறினார்.

சம்பளம் வாங்கிய மறுநாள் மனைவி மகனுடன் ஓட்டலுக்குப் போவது அவரது வழக்கமாக இருந்தது. போன மாதம் ஒட்டலில் சாப்பிட்ட சென்றபோது எடை பார்த்ததில் 52 கிலோ இருந்த மகனின் எடை, இந்த மாதம் 41 கிலோவாக குறைந்திருந்ததைக் கண்ட நாள் முதலாகவே அவருக்குள் ஏதோ ஒரு பதற்றம். இத்தனை வேகமாக எடை குறைந்தால், உடலில் ஏதோ பிரச்னை என்பதை மட்டும் அவரால் ஊகிக்க முடிந்தது. மகனுக்கு என்ன நேர்ந்திருக்கும்.?
மனைவியிடமும்கூட இதுபற்றி அவர் பேச விரும்பவில்லை. குடும்ப டாக்டரிடமும் தனது அச்சத்தை தொலைபேசியில் சொன்னார். “நத்திங் அப்நார்மல். வளரும் குழந்தைகளிடம் இதெல்லாம் சகஜம். அவன் வளர்இளம் பருவத்தில் நுழைந்திருக்கிறான் இல்லையா..!’ என்ற போது தொனியில் கேலி இருந்தது. ஆனால் இந்த முதுகுவலி திடீரென அதிகரித்தபோது குடும்ப டாக்டருக்கும் காரணம் புரியவில்லை.

செல்போன் இசைத்தது.

எதிர்முனையில் டாக்டர் பேசினார். “கிளினிக் வந்துடுங்க. உங்களுக்காகத்தான் வர்றேன்’

ஆட்டோ பிடித்து, நிதானமாக ஓட்டச் சொல்லி, கிளினிக் வந்தபோது, டாக்டர் வந்திருக்கவில்லை. வரிசையாக இருந்த ஷாப்பிங் காம்பளக்ஸின் ஒரு கடைதான் டாக்டரின் ஆலோசனை மையமாக இருந்தது. ஆட்டோவிலேயே காத்திருந்தார்கள். பதினைந்து நிமிடம் கழிந்தபிறகு டாக்டர் காரில் வந்து இறங்கினார். கிளினிக் பையன் ஓடிப்போய் சாவி வாங்கி வந்து கதவைத் திறந்தான். அவன் பின்னால் டாக்டர் செல்ல, இவர்களும் அவருக்கு வணக்கம் தெரிவித்தபடி மெல்ல நடந்தார்கள்.

“டாக்டர் சொன்னார்’ என்று ஏசி-யை ஆன் செய்தார் டாக்டர். அடைசலான நெடி இருந்தது. கிளினிக் பையன் ரூம் ஸ்பிரே அடித்தான்.

“கம், கம், வென் இட் ஆல் ஸ்டார்டர்டு?’

டாக்டரின் கேள்விக்கு மகன் ஆங்கிலத்திலேயே பதில் தந்தது, மனதுக்கு உற்சாகமாக இருந்தது.

பக்கத்தில் இருந்த மேசையில் படுக்க வைத்து, கால்களை பல விதமாக நீட்டி மடக்கச் செய்தார். குப்புறப் படுக்கச் செய்து சோதித்தார். முதுகெலும்பில் ஒவ்வொரு இடமாக விரலால் அழுத்தி, எந்த இடத்திலாவது வலிக்கிறதா என்றார். கால்விரல்களை மட்டும் ஒவ்வொன்றாக அசைக்கச் சொன்னார். சோதித்துவிட்டு, “எழுந்திருப்பா’ என்று தனது இருக்கையில் அமர்ந்தவுடன், “ஸ்கேன் பண்ணி பார்த்துடுவோம்’ என்றார்.

குடிலிவா ஸ்கேன் சென்டர் என்ற அச்சிட்ட தாளையொடுத்து அதன் முனையில் எதையோ கிறுக்கினார். பின்னர், அச்சிட்டிருந்த கட்டங்கள் இரண்டில் டிக் செய்து கொடுத்தார். ஏதோ நினைவு வந்தவர்போல, “ஒரு பிளட் டெஸ்ட்டும் எடுத்துடுங்க’ என்றார்.

“நேத்துதான் எடுத்தோம்’- டாக்டரிடம் அந்த ரிபோர்ட்டை அவர் நீட்டினார்.

“பரவாயில்ல எடுத்துடுங்க’.

ஹிந்துஸ் ரத்த பரிசோதனை மையம் கொடுத்திருந்த அச்சிட்ட காகிதத்தில் சில கட்டங்களை டிக் செய்து கொடுத்தார். “ஸ்கேன் ரிப்போர்டுடன் சாயங்காலம் பாபா கிளினிக் வந்துடுங்க’ என்றவர் சிறுவனிடம் “டோன்ட் வொரி’ என்றார். பணம் கொடுத்தபோது, “முதல்ல டைக்னாஸிஸ் முடியட்டும்’ என்று புன்னகைத்தார்.

அதே ஆட்டோவில் வந்து, இந்துஸ் ரத்த பரிசோனைக் கூடத்தில் ரத்தம் மாதிரி கொடுத்துவிட்டு, ஸ்கேன் சென்டருக்கு சென்றார்கள். அங்கே வரவேற்பாளர் சொன்னபிறகே தெரிந்தது, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ இரண்டும் டிக் செய்யப்பட்டிருந்தது. எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும்போது சிடி ஸ்கேன் தேவையில்லாதது என்று அவருக்குத் தோன்றியது. கவனக்குறைவாக டிக் செய்திருப்பாரோ!

டாக்டருக்குப் போன் செய்து, “ரெண்டும் டிக் பண்ணியிருக்கீங்க டாக்டர்?’ என்றார்.

“ரெண்டுமே அவசியம். இரண்டுக்கும் வேற வேற பர்பஸ்க்கு எடுக்கச் சொல்லியிருக்கேன்’

அப்பாவின் முகம் சுருங்குவதைக் கண்ட மகன், “வேண்டாம்பா, ஒரு வாரம் நம்ம டாக்டர் கொடுத்த மருந்தையே சாப்பிடறேன். சரியாகலன்னா ஸ்கேன் பாக்கலாம்’ என்றான்.

குடும்ப கஷ்டத்தைச் சொல்லி சொல்லி வளர்ப்பதால், இந்த செலவுகளைப் பற்றி அவன் கவலைப்படுகிறான் என்று அவருக்குப் புரிந்தது. அவனது பொறுப்புணர்வும், குடும்பத்துக்காக தன்னை தகவமைத்துக் கொள்ள தயாராக இருப்பதும் மகிழ்ச்சி தந்தது. அதற்காக இந்தச் செலவுகளைத் தள்ளிப்போட முடியாது. மகனை செல்லமாகத் தட்டிக் கொடுத்தார்.
ஒரே மாதத்தில் அவனுக்கு எடை 11 கிலோ குறைந்துவிட்டதையும், அதனால் தன் மனதில் இருக்கும் பதற்றத்தையும் மகனிடம் பகிர்ந்துகொள்ள நினைத்தார். ஆனால், அவனை அச்சுறுத்துவதாக அமைந்துவிட்டால்…! மகனை இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, ஸ்கேன் சென்டரின் ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்று குடும்ப டாக்டருக்கு போன் செய்தார். சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ இரண்டுமே அவசியமா என்று கேட்டார். மறுமுனையில் “ரெண்டும் எடுக்கச் சொல்றாரா?’ என்ற அதிர்ச்சியான குரல் வந்தது. பிறகு மெளனம்.   “பணத்துக்காக பாக்கல டாக்டர், டெக்னிக்கலா இது தேவையா என்று தெரிஞ்சுக்கத்தான்….’

“தேவையில்லதான். சர்ர்ர்..ரி எடுத்துங்க. எல்லாரும் நாம நினைக்கிறதுபோல இல்ல’. டாக்டர் குரலில் ஏமாற்றம் தெரிந்தது.
இரண்டு டெஸ்ட்டுக்கும் ரூ.7500 தேவையாக இருந்தது. தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் அவரது மாதச் சம்பளத்தில் பாதித் தொகை. அவரது வங்கிக் கணக்கில் 7900 ரூபாய்தான் இருப்பு இருந்தது. கையில் 1500 ரூபாய் கொண்டுவந்திருந்தார். ரத்த பரிசோதனை ரிபோர்ட் வாங்கியாக வேண்டும். ஆட்டோ கட்டணம். மாலையில் டாக்டர் பீஸ். மருந்துகள், மீண்டும் ஆட்டோ கட்டணம் என்று பல செலவுகள் காத்திருக்கின்றன.

வரவேற்பாளரிடம் மகன் பெயரை பதிவு செய்யும்படி கூறினார். மகனுக்கு சாப்பிட ஏதாவது வேண்டுமா என்று கேட்டுக்கொண்டு, மருத்துவமனைக்கு அருகே சற்றுத் தள்ளியிருந்த ஒரு ஏடிஎம்-ல் 7500 ரூபாயை எடுத்துக்கொண்டு, மகனுக்கு ஒரு கோக் 500 மிலி போத்தல் வாங்கிக்கொண்டு திரும்பினார்.

மகன் அருகில் உட்கார்ந்தவுடனே மனைவியிடமிருந்து போன் வந்தது. “ஏன் போன் பண்ணல. குட்டிக்கு என்னவாம்?’ அவர் நடந்த விஷயங்களை அவளிடம் மெதுவாக விளக்கினார். செல்போனை மகனிடம் தந்தார். மகனும் அம்மாவுக்கு சிடி எம்ஆர்ஐ கட்டணங்கள் உள்பட எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டிருந்த போது, மருத்துவமனையில் கூடிக்கொண்டிருக்கும் நோயாளிகள் கூட்டத்தையும் கட்டணத்தைக் கேட்டு தன்னைப்போல அவர்கள் முகமும் வாடுவதையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

பேசி முடித்து, மகன் நீட்டிய செல்போனை வாங்கி சட்டைப்பையில் வைத்தார்.

“அப்பா இந்த டெஸ்ட் பணத்துல 20 பர்சன்ட் டாக்டருக்கு கமிஷன் போகுதாம்பா. சதீஷ் அங்கிள் சொன்னார்.’ அப்பாவின் காதோரம் சாய்ந்து, குரலைத் தாழ்த்திச் சொன்னான்,

“தெரியும்’. மகன் உலக நடப்புகளை அறிந்துவைத்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தது.

“சிடி ஸ்கேன் மட்டும் எடுப்போம். அதுல ரீசன் கண்டுபிடிக்க முடியலன்னா எம்ஆர்ஐ எடுக்கலாம்பா’
மகனை மெல்ல அணைத்துக் கொண்டார்.

“நானும் அதை யோசிச்சேன். செலவு ஆகுதேன்னு வருத்தப்படாதே குட்டி. அப்பா சமாளிச்சுப்பேன். அது என்னென்னு பாத்துடுவோமே’

அது என்று அவர் குறிப்பிடும்போது அவனது வெயிட் லாஸ் அவர் மனதில் ஓடியது. ஆனாலும், முதுகுவலியை அப்பா சொல்வதாக மகன் நினைத்தான்.

ஸ்கேன் சென்டரில் மின்தடை ஏற்பட்டு, மின்சாரம் வருவதற்கு 2 மணி நேரம் ஆனது. இடையில் “சாப்பிடுகிறாயா’ என்றார்.
“வேண்டாம். டெய்ஸ்டின்போது வெறும் வயிற்றோடு இருக்க வேண்டும் என்று சொன்னால் என்ன செய்ய முடியும்?’
மீண்டும் அவர் முகத்தில் முறுவல்

காத்திருந்தார்கள்.

மின்தடை நீங்கியதும் இரண்டு ஸ்கேன் எடுத்து முடிக்க மாலை 3 மணிக்கு மேலாகிவிட்டது. ஒரு மணி நேரம் கழித்துவந்து ரிபோர்ட் வாங்கிச் செல்லலாம் என்றார்கள்.

வெளியே வந்து, ஒரு ஓட்டலில் தோசை சாப்பிட்டார்கள். ரேடியாலஜிஸ்ட் ரிபோர்ட், பிளட் டெஸ்ட் ரிபோர்ட்டையும் வாங்கிக் கொண்டு, டாக்டர் சொன்ன பாமா ஹாஸ்பிடலுக்கு போனால் டாக்டர் வந்திருக்கவில்லை. அளிக்கப்பட்ட ரேடியாலஜிஸ்ட் ரிபோர்ட்டை, கடவுளரை வேண்டிக்கொண்டு படித்தார். ஸ்கேன் ரிபோர்ட், எம்ஆர்ஐ ரிபோர்ட் இரண்டிலும் ஒரே பிரிண்ட்ஹவுட் என்கிற அளவுக்கு மாற்றமின்றி ஒன்றுபோல இருந்தது. குடும்ப டாக்டருக்குப் போன் செய்தார். ரிபோர்ட்டில் இருப்பதைப் படித்தார்.

“ஒன்னுமில்ல. வெயிட் லாஸ்ஸ் இருந்ததால வேற ஏதாவது இருக்குமோன்று எனக்கும் ஒரு எண்ணம் இருந்தது. இப்ப அதெல்லாம் ஒன்னுமில்லன்னு தெளிவாயிடுச்சு. எவ்வளவு ஆச்சு’
சொன்னார்.

“சிடி ஸ்கேன் தேவையே இல்ல. 2500 ரூபாய மிச்சப்படுத்தியிருக்கலாம். சரி விடுங்க. எங்க? பாமா ஹாஸ்பிடலா? அது அவரோட சித்தப்பா மகனோட ஹாஸ்பிடல்தான். பார்த்துட்டு வாங்க’

வெளியே மழை லேசாகத் தொடங்கி, கனமழையாக மாறிக்கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்துக்கு விடாத அடைமழை. இடி அச்சறுத்தலாக ஓடி இறங்கியது. மின்னல் வெளிச்சம் ஹாஸ்பிடலின் கருப்புக் கண்ணாடிகளையும் மீறி வராண்டாவை வெளிச்சமாக்கியது. நோயாளிகளைத் தவிர எல்லாரும் மருத்துவமனையின் முகப்பில் நின்று மழையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

மாலை ஆறரை மணி வரை டாக்டர் வரவில்லை. அவருக்குப் போன் செய்தார். “மழை. காரை வெளியே எடுக்க முடியாத அளவுக்கு வெள்ளமாக போவுது. ரிபோர்ட் வாங்கிட்டீங்க இல்ல. நீங்க நாளைக்கு வாங்க’.

எப்போது வரவேண்டும் என்று சொல்லாமலேயே இணைப்பு துண்டித்துப்போனது. மீண்டும் போன் செய்ய நினைத்தார். அந்த டாக்டர் மீதான அபிப்ராயத்தில் பங்கம் ஏற்பட்டிருந்ததால் ஒரு விதமான அருவருப்பு தோன்றியிருந்தது. நாளை போன் செய்துகொள்ளலாம் என்று விட்டுவிட்டார். மனைவிக்குப் போன் செய்து நடந்ததையெல்லாம் ஒரு முறை சொன்னார்.

மருத்துவமனையின் முகப்புக்கு வந்து ஆட்டோவைத் தேடினார். ஒரு ஆட்டோவும் கிடைக்கவில்லை. மின் தடையால் ஊரே இருண்டது. மருத்துவமனைக்கு சவாரி ஏற்றிவந்த ஒரு ஆட்டோக்காரர், அவர் ஏரியா பெயர் சொன்னதுமே வர மறுத்தார். “ஹவுசிங் யூனிட் முழுக்க வெள்ளமாக இருக்கும். ஆட்டோ மாட்டிக்கும்’ என்றார். அது உண்மைதான். கெஞ்சிக் கேட்டதில்,”ஆட்டோ உள்ளே வராது, மெயின் ரோட்ல நிறுத்திடுவேன். இறங்கிப் போய்க்கங்க’ என்று சற்று இறங்கி வந்தார்.. செல்வதைத்தவிர வேறுவழியில்லை.

“இன்னிக்கு ஸ்கூல்ல என்ன நடந்ததுன்னு ரமேஷுக்கு போன் போட்டு கேட்டுக்க’ என்று அவர் சொன்னபோது அவருக்கே அவமானமாக இருந்தது. குடும்ப டாக்டர் ஒன்றுமில்ல என்று ரிபோர்ட் பற்றி சொன்னதை நினைத்தபோது மனம் சமாதானம் அடைந்தது.

ஹவுசிங் யுனிட்டின் முக்கிய சாலை முனையிலேயே ஆட்டோ நின்றபோது அந்த இருளில் ஆட்டோ வெளிச்சம் தவிர வேறு வெளிச்சம் இல்லை. ஆட்டோ திரும்பிச் சென்றதும் மீண்டும் இருள். சில வீடுகளில் மட்டுமே யுபிஎஸ் பேட்டரியால் எரிந்துகொண்டிருந்த விளக்கின் வெளிச்சம் சாலையில் தேங்கிய வெள்ளத்தில் அலைந்துகொண்டிருந்தது. ஆட்டோவுக்குப் பணம் கொடுத்துவிட்டு எப்படிப் போவது, எந்தப் பகுதியில் ஆழமில்லை என்ற நிதானிப்பதற்காக நின்றார். ஆட்டோ அதிர்வுகளால் வலி குறையாததால் அப்பாவின் தோளைப் பிடித்து நின்றான். மழை லேசமாக தூறல் போட்டுக்கொண்டிருந்தது. மனைவியை குடையுடன் மெயின் ரோடுக்கு வரச் சொல்லலாமா என்று நினைத்தார். இருளில் அவளால் வரமுடியாது.

தார்ச்சாலையில் வண்டல்மண் கால்களை நழுவச் செய்தது. பலமாக ஊன்றி நின்றார். தவளைகளின் குரலைத் தவிர ஏதுமில்லை.

நூறு அடி தொலைவில் இருட்டிலிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மிக வேகமாக வந்து அவர்கள் அருகில் நின்றது ஒருவன் இறங்கிவந்து அவர் முகத்திற்கு நேராக கத்தியைக் காட்டினான். ஒருவன் சிறுவனின் வாயைப் பொத்தி, தன்னோடு அணைத்தபடி பிணைத்தான். முரடனால் மகனின் முதுகுவலி எல்லை மீறுவதை மகனின் கண்களில் கண்டார். அவரால் பேச முடியவில்லை. எடு என்ற சைகையை உணர்ந்தவராக தனது இடது கையால் சட்டைப் பாக்கெட்டில் கையை விட்டார்.

அவர் கைகளில் இன்னுமும் ஸ்கேன் சென்டரின் பளபளப்பான கவர். இருளில் மின்னியது. உறையின் கைப்பிடியில் கையை நுழைத்திருந்ததால், பாக்கெட்டில் நுழைக்க முயன்று முடியாமல் உறையை கீழே விட்டார். அது கீழே விழந்த வேகத்தில் ஸ்கேன் ரிபோர்ட் சரிந்து ஈரத் தரையில் சப்பென்று விழுந்தது. எதிரே ஒரு இரு சக்கர வாகனம் வெளிச்சத்தை வீசி வந்ததால், இருவரும் மிக நெருக்கமாக நின்று, சாலைக்கு முதுகை காட்டியபடி பேசுவது போல நின்றார்கள். ஸ்கேன் சென்டரின் உறை கடந்து சென்ற மோட்டார் சைக்கிளின் வெளிச்சத்தில் மின்னி இருளில் மூழ்கியது. பாக்கெட்டிலிருந்த பணத்தை அவர் நடுங்கும் விரல்களால் எடுத்தபோது செல்போனும் எகிறி கீழே விழுந்து, ஒடியது. கை விரல்களில் சிக்கிய நான்கு நூறு ரூபாய் தாள்களை நீட்டிக்கொண்டு வேறு இல்லை என்று அதே கைகளில் அவர் அசைத்துக் காட்டினார்.
ரூபாய் நோட்டுகளைப் பார்த்தவன். சிறுவனைப் பிடித்திருந்தவனிடம் சைகை செய்ததும் இருவரும் வந்த வேகத்திலேயே தயாராக உருமிக்கொண்டிருந்த மோட்டார் பைக்கிள் ஏறிப் பறந்தனர்.

மகன் வலியை மீறி, கேவலுடன் அப்பாவை அணைத்தான். அவனிடம் சிறுநீர் வீச்சம் எழுவதை உணர்ந்தார்.

தொண்டையில் இன்னமும் ஒலி சிக்கிக் கொண்டிருந்தது. அந்த மோட்டார் சைக்கிள் வேகமாக மறைந்துகொண்டிருந்தது. இருவருக்கும் உடல் நடுக்கம் நிற்கவில்லை.வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed 28 Oct 2015 - 20:14

இரண்டு “ரி’களும் சுப்பண்ணாவும்
------------------

அண்ணா என்றால் குடும்பத்தில் அத்தனைப் பேருக்கும் டெரர் – எங்கள் குடும்பத்து அண்ணாவுக்குச் சுப்பிரமணியன் என்ற அழகான பெயர். நாங்கள் சுருக்கமாகச் “சுப்பண்ணா’ என்போம்.

சுண்டைக்காயில் வரும் “சு’ போல அண்ணாவின் பெயரிலுள்ள முதலெழுத்தை உச்சரிக்க வேண்டும். அடுத்து வரும் “ப்,ப’ இரண்டு எழுத்துக்களையும் “அப்பம்’ என்ற வார்த்தையில் வரும் “ப்ப’ போல உச்சரித்து விடக்கூடாது. வடமொழி எழுத்துக்களில் மூன்றாவது “ப’ போல அதற்கு ஒரு கம்பீரம் தரவேண்டும். (கம்பீரத்தில் வரும் “பீ’யில் உள்ள வெண்கல சத்தம் தந்து) “சுப்பண்ணா’ என்று உச்சரிக்க வேண்டும்.

ஊரில் “ச்சுப்பண்ணா’, “ஸுப்பன்னா’ என்று தங்கள் இஷ்டத்துக்கு அவர் பெயரைக் குறிப்பிடுவார்கள்.

சுப்பண்ணா சுபாவத்தில் ரொம்ப ரொம்பக் கோபக்காரர். சிறந்த நிர்வாகி என்பதை குடும்பத்தில் யாரும் மறுக்கமாட்டார்கள்.
அப்பாவுக்குச் சின்ன வயசிலேயே வயோதிகம் வந்துவிட்டது. அந்தக் காலத்திலெல்லாம் ஐம்பது வயதைத் தாண்டினாலே “தள்ளலை’ “படுத்த படுக்கை’ என்பதெல்லாம் சகஜம்.

என் அப்பா சர்க்கரை வியாதிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். சுப்பண்ணா இரண்டாவது மகன். ஆனால் தலைமகன் அந்தஸ்து அவருக்குத்தான்.

அப்பா நடத்தி வந்த சிறு பள்ளிக்கூடத்தை நிர்வகிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியுடன், மெட்ரிகுலேஷனோடு தன் படிப்பை முடித்துக்கொண்டு இரண்டு ஆண்டு ஆசிரியப் பயிற்சி பெற்று ஸெகண்டரி கிரேட் ஆசிரியராகி அப்பாவின் பள்ளிக்கூடத்தை நிர்வாகம் செய்து வந்தார்.

அப்பா சர்க்கரை நோய் நீங்க ஆகாரத்தில் பாகற்காய் சேர்த்துக் கொள்வார். சாதாப்  பாகற்காய் அல்ல. பழு பாகற்காய் என்ற சிறிய உருண்டை ரகம்.

எங்கள் நிலத்தில் அப்பாவின் பாகற்காய்க்காக ஒரு வரப்பே சுப்பண்ணா ஒதுக்கிவிட்டார்.

தினமும் விடிகாலை சைக்கிளில் நிலத்துக்குப் புறப்பட்டுப் போய் பாகற்காய்களை சிறு சிறு இளசாகப் பார்த்துத் தாமே பறித்து வருவார். தோட்டக்கார மொட்டையனை நம்பமாட்டார்.

படுத்திருக்கும் அப்பாவுக்கு சுப்பண்ணாதான் தளபதி. “”தங்கைக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிடு. எதை வித்தாலும் தென்னந் தோப்பை எந்தக் காரணத்தைக் கொண்டும் வித்துடாதே. அது காமதேனு. கற்பக விருட்சம்.”
தனது 56வது வயதில் ஒரு குறிப்பிட்ட தினம் அப்பா காலமாகிவிட்டார். முன்தினம் சுப்பண்ணா தோட்டத்தில் பறித்து வந்த பிஞ்சுப் பழு பாகற்காய்கள் கூடையிலேயே பத்து நாள் கிடந்து பழுத்து அழுகி வீணாயின. முதலில் சுவரைக் கவனிப்பார்களா. சித்திரத்தைக் கவனிப்பார்களா?
அப்படித்தானாகட்டும் அவை என்ன அமிர்த சஞ்சீவிகளா? அப்பா எத்தனையோ வருஷம் சாப்பிட்டார். அவற்றால் அவரைக் காப்பாற்ற முடியவில்லையே.
அப்பா பள்ளி நிறுவனராக, ஆசிரியராக மட்டுமில்லாமல் ஊரில் குடியானவர்களின் சண்டை சச்சரவுகளைத் தீர்த்து வைக்கும் பெரிய மனிதராகவும் மதிக்கப்பட்டார்.
நியாயம் பேசறது என்றால் சட்டி ராந்தலை ரெடி செய்வது சுப்பண்ணாதான். அந்த சட்டி ராந்தல் முழுசாக இரண்டு பாட்டில் சீமெண்ணெய் பிடிக்கும்.
வஞ்சனையில்லாமல் சாப்பிடும் ஆசாரமான பிராம்மணார்த்த உத்தமர் போல திண்ணென்று அது நியாயாதிபதி முன் (அப்பாவின் முன்) மேஜை மீது வீற்றிருப்பதே ஒரு கம்பீரம். சட்டி ராந்தலின் கண்ணாடியை விபூதி போட்டு சுப்பண்ணா நெகு நெகுவென பளீர் என்று துடைத்து வைத்திருப்பார்.
திரியெல்லாம் கரெக்டாக கட் செய்து சுடர் ஏறு மாறாக எரியாமல் கச்சிதமாக ஒளிவிடும்படி செய்திருப்பார்.
பக்கு பக்கென்று திடீரென்று அடித்துக் கொள்ளுவது, கோணமாணலாக எரிவது அது இதெல்லாம் சுப்பண்ணா துடைத்த சட்டி ராந்தலுக்கு அறவே கிடையாது.
விடிய விடிய சட்டி ராந்தலின் வெளிச்சத்தில்தான் பள்ளிக்கூடத்தில் அப்பாவின் நியாய சபை நடக்கும்.
பகலில் பசங்கள் அமர்ந்திருந்த குட்டி பெஞ்சுகளில் உயர உயரமான குடியான மக்கள் அசெளகரியமாகவும், செளகரியமாகவும் அமர்ந்திருப்பார்கள். சிதுக் சிதுக்கென்று வெற்றிலை புகையிலைச் சாறைத் துப்பிவிட்டு வருவதற்கு எழுந்திருந்து போவார்கள். திரும்பும்போது பெஞ்சை விடத் தரையே தாராளம் என்று கீழே உட்கார்ந்துவிடுவார்கள்.
வந்தவர்களுக்குக் குடிதண்ணீர் சப்ளை சுப்பண்ணாதான்.
சிலசமயம் இரவு இரண்டு மணியாகிவிடும் அப்பா நியாயத்தை முடிக்க. அதுவரை சுப்பண்ணாவும் அப்பா அருகிலேயே இருப்பார். ராத்திரி பதினொரு மணிக்கு ஃபிளாஸ்கிலிருந்து மஞ்சள் தூளும் மிளகும் போட்டுக் காய்ச்சிய பாலை எடுத்து அப்பாவுக்கு ஆற்றிக் கொடுப்பது அவருடைய வேலைதான்.
அப்பாவுடனேயே பெரும்பாலான நேரம் சுப்பண்ணா இருந்ததால் அவருக்கு “சின்னவரு’ பட்டமும் அப்பா காலத்துக்குப் பிறகு அவர் வகித்த நியாயாதிபதி பீடமும் கிடைத்தது.
அப்பா மாதிரி அவருக்கும் கிராமப்புரத்தில் நல்ல பெயர். ஒரு கேஸை கோர்ட்டுக்குப் போகவிடமாட்டார்.
சுப்பண்ணா பஞ்சாயத்துக்கும் அவர் எழுதும் கிரயப் பத்திரங்கள், பாகப் பிரிவினை பத்திரங்களுக்கும் ரிஜிஸ்தர் ஆபிசிலேயே நல்ல பெயர்.
வீட்டு நிர்வாகம், தோப்பு நிர்வாகம் வரவு செலவு தங்கை திருமணம் ஆகிய பொறுப்புக்களால் சுப்பண்ணாவிடம் கோபம் சற்றுக் கூடுதலாகவே தெரியும்.
ஒரு சின்ன ஒட்டடை அகற்றப்படாமலிருந்தால் கூடப் பெரிசாகக் கத்துவார். தம்பிகளாகிய நாங்கள் ஓடி ஒளிந்த விடுவோம் – அவர் பள்ளிக்கூடத்திலிருந்து வருவார் என்றாலே ஸ்கூலில் அவர் எந்தப் பையனையாவது அதட்டுகிற அதட்டல் எங்கள் வீட்டுக்குக் கேட்கும். ஸ்கூலில் அவர் பெரீய வாத்தியார்.
பெரீய வாத்தியாரின் 5வது வகுப்பில் ஒரு பையன் படித்தாயிற்று என்றால் கேம்ப்ரிட்ஜ் யுனிவர்ஸிடியில் பட்டம் வாங்கின மாதிரி.
அட்ஜக்டிவ்வுக்கும், அட்வெர்ப்புக்கும் என்னடா வித்தியாசம் என்று கேட்டு, பதில் தப்பாகச் சொன்ன பையனைத் துரத்தித் துரத்தி அடிப்பார். அவன் பல சமயம் ரோட்டுக்கே ஓடிவிடுவான்.
பாடத்தைச் சரியாகப் படிக்காத பையனைத் தன் எதிரி மாதிரி அந்த நேரத்தில் நினைப்பாரே தவிர, அப்புறம் பணியாரம், கச்சாயம் (ஸ்வீட்) என்று எதையாவது வாங்கிக் கொடுத்துக் கட்டிக் கொள்வார்.
அப்பா காலமாகி இரண்டு வருஷமாயிற்று.
பழைய பள்ளிக் கட்டிடத்தை சுப்பண்ணா புதுப்பித்தார். ஸ்கூலில் இரவு வேளையில் நடக்கும் நியாய சபையின் போது பெஞ்சுகளைத் தாறுமாறாகப் போடுவதும், கண்ட இடத்தில் துப்பி வைப்பதும் பிரச்னையாக இருந்தது.
சுப்பண்ணா, ஸ்கூலில் ஆபீஸ் ரூம் என்பதாக ஒரு பெரிய ரூம் கட்டினார். அதில் சில பீரோக்களில் பள்ளிக்கூட தஸ்தாவேஜுக்கள் இருக்கும். மற்றப்படி பெரிய ஹால். அதில்தான் அவரது நியாய சபை நடக்கும். ஒரு ஞாயிற்றுக்கிழமை பகல் நேரம். நியாய சபை நடந்து கொண்டிருந்தது. பெரிய கேஸ் போலிருக்கு.
பஞ்சாயத்துக்கு வந்த இரண்டு சாராரும் பெரும் புள்ளிகள். ஒரு பக்கம் குண்ட மலையான் வகையறா. இன்னொரு பக்கம் நெய்க்காரன்பட்டி மைனர். காரசாரமான விவாதம்- சுப்பண்ணா எல்லாத்தையும் அடக்கி ஆண்டு கொண்டிருக்கிறார்.
பகல் இரண்டு மணியாயிற்று. யாரும் சாப்பாட்டுக்குப் போகவில்லை. அப்போது பார்த்து பொரி விற்கிறவன் வந்து சேர்ந்தான்.
தெருவில் அவன் நுழைந்தவுடன் கமகமவென்று பொரி, வறுகடலைகளின் வாசனையான வாசனை. சைக்கிள் பின்னால் பெரிய பொதி மாதிரி பொரி மூட்டை. ஸைடுகளில் பலவிதமான பைகள். பிரார்த்தனைக்கு வேண்டிக் கொண்டு கோவிலுக்கு வரும்போது சில பக்தர்கள் மரக் கிளைகளில் தொங்க விடுவது போன்ற ஏராளமான துணி முடிச்சுக்கள்.
பலவகைக் கடலை தினுசுகள். பொரி தினுசுகள். அச்சு வெல்ல தினுசும் உண்டு. கருப்பட்டியும் அவ்விடம் சப்ளை செய்யப்படும். வழக்கமாய் அண்ணிதான் பொரி வாங்குவாள். பொரிக்காரன் கொடுத்த குரல் அண்ணி காதில் விழவில்லை. அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். மத்தியானத் தூக்கம்.
“”அண்ணி! பொரிக்காரர்!” என்று லேசாகக் குரல் கொடுத்தேன். அண்ணியார் எழுந்திருக்கவில்லை. பொரிக்காரன் போய்விடுவானே என்று எனக்குப் பதட்டம். அதேசமயம் அண்ணியை எழுப்பவும் தெரியவில்லை.
சரி. அண்ணாவிடமே கேட்டு விடலாமே என்று ஆபீஸ் ரூமுக்குப் போனால் – அங்கே ஜேஜே என்று அறை நிறையக் கூட்டம் – பஞ்சாயத்துக்கு வந்தவர்கள். சுப்பண்ணா நியாதிபதி நாற்காலியில் இருந்துகொண்டு படு யோசனையில் தன் மோவாயிலிருந்த இளந் தாடியை நெருடிக் கொண்டிருந்தார்.
நான் கதவருகே நிற்பதை சிறிது நேரம் கழித்துத்தான் அவர் கவனித்தார். அத்தனை பேர் எதிரில் அவரிடம் எப்படி நான் பொரி வாங்கட்டுமா என்று கேட்பது. அந்த நாசூக்கெல்லாம் தெரிந்த பையன்தான் நான்.
என்னடா சுந்து என்று அவரும் கண்டுகொள்ளவில்லை. பஞ்சாயத்து யோசனையிலேயே என்னைப் பார்த்தார். நான் சட்டென்று ஒரு காரியம் செய்தேன். நான் பிடித்துக் கொண்டிருந்த நிலை வாசப்படி கதவிலேயே சாக்பீஸில் கொட்டை எழுத்தில் “பொரி வாங்கட்டுமா?’ என்று கதவில் எழுதினேன். அவர் கண்ணில் படுமாறு கதவை இப்படியும் அப்படியும் சாத்தித் திறந்தேன்.
அவர் பார்த்துவிட்டார். தலையை அசைத்தார் வாங்கும்படி.
எனக்கு அது போதும். பொரிக்காரரிடம் நாலு படி பொரி வாங்கி சமர்த்தாக டப்பாவில் போட்டு வைத்துவிட்டேன்.
அரைமணி நேரம் கழித்து பஞ்சாயத்தும் நியாயமும் முடிந்து அண்ணா வீட்டுக்கு வந்தார். அண்ணியிடம் “”எங்கே அந்தப் பயல்?” என்றார் கோபமாக.
அண்ணி, “”ரொம்ப சமத்து! தானே பொரி வாங்கி வைத்திருக்கிறான்” என்று என்னைப் பாராட்டினாள்.
சுப்பண்ணா கடுமையான கோபத்துடன் “”பொரி வாங்கியிருக்கிறானா பொரி! அட கழுதை வாடா இப்படி….” என்று கர்ஜித்தார்
நான் செய்த தப்பு என்ன என்று தெரிந்து கொள்ளுமுன் பளாரென்று என் செவிட்டில் ஒரு பேய் அறைவிட்டார். பொரிக்கு எந்த ரீடா? முண்டம்! என் கிளாஸிலேயே படிக்கிறே. கதவிலே எழுதிக் காட்டறதுக்கெல்லாம் புத்தி இருக்கு. பொரிக்கு எந்த ரி தெரியலை?”
நான் பொறி கலங்கிப் போனேன். நான் எப்போது பொரி சாப்பிட்டாலும், சுப்பண்ணா நினைவு வந்துவிடும். தின்னுகிற பொரிக்கு சின்ன “ரி’; குஞ்சு பொறிக்கிறதுக்கு பெரிய “றி’.
அவ்வளவு சுலபமாகப் பதிந்து விடுகிறதா என்ன. “ஞாபகத்தில் பதிய வைத்துக் கொள்ள..
ஒரு ஃபார்முலா வைத்துக் கொண்டேன். தின்னுவதற்கு கொஞ்சம்தானே பொரி கிடைக்கும். அதனால் அந்தப் பொரிக்கு சின்ன “ரி’ கோழி நிறைய குஞ்சு பொறிக்கிறது. அதனாலே அதற்கு பெரிய “றி’!


+

வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 29 Oct 2015 - 19:46

உலகில் நானே உயர்ந்தவன்!!
-----------------
ஒரு சமயம் யோகி ஒருவர் ஒரு ஞானியிடம் வந்தார்.

   அவர் ஞானியிடம், “சாமீ... எனக்கு ஆகாயத்தில் பறக்கும் சக்தி இருக்கிறது. பூமிக்குக் கீழ் நீண்ட நேரம் புதையுண்டு மூச்சை அடக்கும் சக்தி இருக்கிறது. தண்ணீருக்குள் அதிக நேரம் மூழ்கி இருக்கும் அபரிமிதமான சக்தியும் இருக்கிறது“ என்றார் பெருமையாக.
   ஞானி அவர் சொன்னதைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. யோகிக்குக் கோபம் வந்தது. இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல், “சாமீ... இந்த விசயங்கள் எல்லாம் மனித சக்திக்கு அப்பாற்பட்டவை அல்லவா...? அப்படியென்றால் உலகில் நான் மட்டும் மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்பதைத் தங்களின் வாயால் சொல்லுங்கள்“ என்றான்.
   ஞானி அந்த யோகியைக் கூர்ந்து பார்த்தார்.
   பேச்சில் மட்டுமல்ல, அவரது கண்களிலும் அகந்தை சுடர் விட்டது.
   அதை அழிக்க எண்ணிய ஞானி, “ஐயனே... பாருங்கள்... பறவைகள் ஆகாயத்தில் பறக்கின்றன. புழுக்கள், விஷ ஜந்துக்கள் போன்றவை பூமிக்கடியில் நீண்ட காலம் வாழ்கின்றன. மீன்கள் தண்ணீருக்குள்ளேயே பிறந்து வாழ்கின்றன. இவையெல்லாம் எனக்கும் சாத்தியம் என்கிறீர்கள். அப்படிப்பட்ட அற்ப ஜந்துக்களைப் போலத்தான் இப்போது நீங்கள் எனக்குத் தெரிகிறீர்கள். அவையெல்லாம் தெரிந்ததால் உங்களுக்கு என்ன பயன்...?“ என்று கேட்டார்.
   யோகி விழித்தார்.
   “பறப்பதால், பூமிக்கடியில் மூச்சை அடக்குவதால் நீங்கள் அடையப் பாகும் லாபம் என்ன?“ திரும்பவும் கேட்டார் ஞானி.
   யோகி பதில் சொல்லத் தெரியாமல் நின்றார்.
   ஞானி புன்னகைத்து, “உலகில் மனிதன் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. கருணை போன்ற நற்குணங்களை விருத்தி செய்ய வேண்டும். அகந்தை போன்ற தீய குணங்களை விட்டொழிக்க வேண்டும். இவற்றை விட்டு விட்டு பறப்பதாலும் மூச்சை அடக்குவதாலும் யாதொரு பயனும் இல்லை.“ என்றார்.
   “உலகிலேயே நான் தான் உயர்ந்தவன், வஸ்தாது“ என்ற அகந்தை கொண்டிருந்த அந்த யோகி, ஞானியின் விளக்கத்தைக் கேட்டு வெட்கித் தலை குனிந்தான்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 29 Oct 2015 - 19:56

சிபாரிசு!!

-------------

“சார்.... இன்னைக்கு அரை நாள் லீவு கேட்டேனே.... நீங்கள் பதில் எதுவும் சொல்லவில்லைங்க“ என்றான் காரை ஓட்டியபடி குமரன்.
    “அது இன்னைக்குத் தானா....? நான் பத்து மணிக்கு வெளியில் போகணுமே....“ முதலாளி யோசனையுடன் சொன்னார்.
   “நான் உங்களை ஆபிசில் விட்டுவிட்டு ஒரு மணிக்கெல்லாம் வந்திடுவேன். அதுவரைக்கும் என் நண்பனை வேண்டுமானால் வர சொல்லட்டுமா? “ என்றான் குமரன்.
   “அதெல்லாம் வேண்டாம். என் டிரைவர் மூர்த்தி எவ்வளவோ காலமா வேலை செய்திருந்தாலும் ஒரு நாள் கூட லீவுன்னு கேட்டது கிடையாது. அவர் மகளுக்கு பேரன் பிறந்து இருப்பதால நான் தான் ரெண்டு மாசம் லீவு கொடுத்து அனுப்பினேன். அந்த ரெண்டு மாசத்துக்கு டெம்ரவரியா வேலைக்கு வந்த நீ அதுக்குள்ள லீவு கேட்கிறே.... ம்... போயிட்டு வா. நானே காரை ஓட்டிக்கினு போறேன்....“ என்ற படி தன் அலுவலகத்திற்குள் நுழைந்தார்.

    நேர்முகத் தேர்வு அறையில் (இண்டர்யு ஹால்) இருந்த மூன்று நடுவரில் அவனின் முதலாளியும் ஒருவராக இருந்தது இருவருக்குமே வியப்பாக இருந்தது. இருந்தாலும் இருவருமே தெரிந்ததாக காட்டி கொள்ளவில்லை. கேள்விகள் கேட்கப்பட்டது. பதில் சொன்னான். அவனுடைய சான்றிதழ்களை நோட்டமிட்டுவிட்டு, “பதில் தபாலில் வரும்“ என்று எப்போதும் போல சொல்லி அனுப்பினார்கள்.

    “நீ மூர்த்தியோட பையன்னு ஏன் என்கிட்ட சொல்லவில்லை....?“ கார் ஓட்டிக்கொண்டிருந்த குமரனிடம் கேட்டார் முதலாளி.
    “சொன்னால் உங்களுக்குப் பிடிக்காதுன்னு சொல்லலை சார்.“ என்றான் குமரன்.
    “ஏன்...?“
    “சார்.... உங்களுக்கு வேண்டுமானால் என்னைத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்களை உதாரணம் காட்டி காட்டியே தான் என் அப்பா எங்களை வளர்த்தார். உங்களுக்கு நேர்மை பிடிக்கும். திறமையை மதிப்பவர். யாராவது சிபாரிசுடன் வந்தால் அவர்களை வேலைக்கு வைக்க மாட்டீர்கள் என்பது எல்லாம் தெரிந்ததால் தான் நான் விளம்பரத்தைப் பார்த்து இந்த இரண்டு மாத வேலைக்கு வந்தேன். நான் இங்கே தான் வேலை செய்றேன்னு என் அப்பாவுக்கும் தெரியாது சார்“ என்றான் குமரன் காரை அவர் பங்களா வாசலில் நிறுத்திவிட்டு.
   “ம்... இருந்தாலும் இன்ஜினியர் படிப்பு படிச்சிட்டு டிரைவரா வேலை செய்யவும் ஒரு துணிவு வேண்டும்“ என்றபடி காரிலிருந்து இறங்கினார் முதலாளி.
   “படிப்புக்கேத்த வேலை கிடைக்கும்வரை கிடைக்கிற வேலையைச் செய்யலாம்ன்னு தான் எந்த வேலை கிடைச்சாலும் செய்கிறேன் சார்“ என்றான் குமரன் அடக்கமாக.
   “படிப்பு இருக்கு, திறமை இருக்கு, நிறைய இடத்துல வேலை செய்த அனுபவம் இருக்கு. நல்லா வருவப்பா நீ“ என்றார் முதலாளி.
   “ரொம்ப நன்றி சார்“ என்றான் நெகிழ்வாக குமரன்.

    “ஏங்க... அந்த கம்பெனியில நீங்களும் ஒரு பார்ட்னர் தானே.... இந்த குமரனுக்கே அந்த வேலை கிடைக்க நீங்க சிபாரிசு பண்ணுங்களேன்....“ என்றாள் அவர் சொன்ன அனைத்தையும் கேட்ட அவர் மனைவி.
   “வேண்டாம்மா.... அவன் ரொம்ப தன்னம்பிக்கை உள்ள பையனா தெரியுறான்.. நான் சிபாரிசு செய்ததால தான் அந்த வேலை கிடைச்சதுன்னு தெரிஞ்சா அவனுடைய திறமையையே அவன் தாழ்வா நினைக்க வச்சிடும். அதுமட்டுமல்லை. என்னையும் அதே மாதிரி நினைக்க ஆரம்பிச்சிடுவான். ஆனால் அவனா வந்து கேட்டால் செய்யலாம்“ என்றார் பெருமூச்சுயுடன்.

   அவன் சொன்னதை எல்லாம் கேட்ட குமரனின் தோழன், “டேய் குமரா... இப்பவே கையைக் குடுடா... அந்த வேலை உனக்குத் தான்“ என்றான் உற்சாகமாக.
   “எதை வச்சி நீ வேலை கிடைக்கும்ன்னு இவ்வளவு உறுதியா சொல்லுற?“ குமரன் கேட்டான்.
   “டேய்... உன் முதலாளியும் அந்த கம்பேனியோட பார்ட்னர்ன்னு சொல்லுற... அவரு வேற உன்னைப் பற்றி உயர்வா சொல்லியிருக்காரு. அப்புறம் என்ன? நிச்சயம் உனக்கு அந்த வேலை கிடைக்க சிபாரிசு செய்வாரு தானே....“ என்றான் தோழன்.
   “சே. சே. அவருக்கு சிபாரிசு என்றாலே பிடிக்காது. திறமை இருந்தால் மட்டும் தான் வேலை கொடுப்பாருன்னு என் அப்பா சொல்லி இருக்கிறார்“ என்றான் குமரன்.
   “அப்படியா...? அப்போ... நீயே போய் உன் முதலாளி கிட்ட கேட்டுப்பாரேன்“ என்றான் நண்பன்.
   “வேண்டாம்டா. என் மேல என் முதலாளி நல்ல மதிப்பு வச்சிருக்கிறார். அதை நான் கெடுத்துக்க விரும்பலை. விடுடா“ என்று பேச்சை முடித்தான் குமரன்.
   தன்னம்பிக்கை சில நேரம் தடுமாறவும் வைக்கிறது.
  
   இரண்டு மாதத்தில் வேலைக்கான அத்தாட்சியுடன் அந்த அலுவலகத்தில் குமரன் நுழைந்த போது மனது பாரமாகவே இருப்பது போல் உணர்ந்தான். எதிரில் அவன் முதலாளி.  “வாப்பா குமரன். இந்த வேலைக்காக எவ்வளவு பேர் அப்பளை பண்ணினார்கள் தெரியுமா....? அவ்வளவு பேரையும் தள்ளிட்டு உனக்கு இந்த வேலை கிடைச்சது பெரிய விசயம்பா. வாழ்த்துக்கள்“ என்றார் அவன் கையைப் பிடித்துக் குலுக்கியபடி.
   குமரன், “இந்த சூழ்நிலையில எனக்கு இந்த வேலை கிடைச்சது பெரிய விசயம் தான் சார். ரொம்ப நன்றி சார்“ என்றான். அவனின் குரலில் உற்சாகம் இல்லை. அதைக்கண்ட முதலாளி....
   “குமரன்.. நீ சொன்ன நன்றி நான் சொன்ன வாழ்த்திற்கு வேண்டுமானால் இருக்கட்டும். ஏன்னா இந்த வேலை உன் திறமைக்குக் கிடைச்சது. அதில் என் பங்கு ஒன்றும் இல்லை“ என்றார்.
   குமரன் நிமிர்ந்து அவரைப் பார்த்து மனம்குளிர “நன்றி சார்“ என்றதில் முதலாளியின் மனமும் குளிர்ந்தது.

    “ரொம்ப நன்றி ஐயா. நான் கேட்டதும் குமரனுக்கு இந்த வேலைக்குச் சிபாரிசு செய்தீர்களே..... நான் வாழ்நாள் முழுவதும் உங்களை மறக்க மாட்டேன் ஐயா“ என்றார் காரை ஓட்டியபடி மூர்த்தி.
    “மூர்த்தி.... இந்த காலத்துல சிபாரிசு இல்லாமல் எந்த வேலையும் கிடைக்காது தான். ஆனால் குமரனுக்கு தகுதியோ திறமையோ இல்லைன்னா இந்த வேலைக்கு நான் சிபாரிசு செய்திருக்க மாட்டேன். ஆனால், அதே சமயம் நல்ல தகுதியும் திறமையும் இருக்கிறவங்களை என் பக்கத்திலேயே வச்சிக்கிறது தான் புத்திசாலி தனம் என்பது எனக்குத் தெரியாதா....?“ என்று சிரித்தார் முதலாளி.
   அவருடைய வெற்றியின் வழி அவரின் வார்த்தையிலிருந்ததைக் கண்டு மகிழ்ந்தபடி காரை ஓட்டினார் மூர்த்தி!

அருணா செல்வம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 29 Oct 2015 - 19:58

வேலி இல்லாப் பயிர்!!

---------------

 தான் ஊரில் இல்லாத இந்த மூன்று வருடத்தில் ஊரில் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் அம்மா சொல்ல கௌதம் கேட்டபடியே சாப்பிட்டான்.
   அவன் துபாய் போய் இந்த மூன்று வருடத்தில் எதுவும் பெரியதாக மாறிடவில்லை. என்றாலும், மூன்றாவது தெருவில் பசு கன்று போட்டதிலிருந்து இன்று காலையில் பால்காரனுக்குப் பணம் கொடுத்தது வரையில் அம்மா சொன்னதைக் கேட்க சுவையாகத் தான் இருந்தது.
   இவ்வளவும் சொன்ன அம்மா, விபத்திற்குள்ளாகி இறந்து போன லாரி டிரைவர் நீலவண்ணனைப் பற்றி எதுவும் சொல்லாதது அதிசயமாக இருந்தது.
   அவனே கேட்டான். “அம்மா நம்ம லாரிக்கார அண்ணன் செத்துட்டாரே... இப்ப அந்த அக்கா புள்ளைங்க எல்லாம் எப்படிம்மா இருக்கிறாங்க...?“
   “ம்ம்ம்... இருக்கிறாங்க. அவன் செத்து தோ மூனு வருஷமாச்சி. இன்னும் கட்டுக்குலையாத மேனியாத்தான் திரியிறா.“ சொல்லும் போதே ஓர் எகத்தாளம்.
   “ஏம்மா.. என்னாச்சி...?“ அவன் கேட்க... அவனை முறைத்துவிட்டு, “அதெல்லாம் ஒனக்கெதுக்கு...? நீ அந்த பக்கமெல்லாம் போவாத.“ மறுபேச்சி பேசவிடாமல் நகர்ந்து விட்டாள் அம்மா.
   கௌதம் நண்பர்களுடன் இருந்த பொழுது ஒரு நாள் அந்த அக்காளைப் பற்றிக் கேட்டான். “ஆமாண்ட... ஊருல அவங்களைப் பத்தி ஒரு மாதிரியாத் தான் பேசுறாங்க. ராத்திரியில யாரோ ஒரு ஆம்பளயோட செருப்பு வாசல்ல இருக்குதாம். நைட்டுல யாரோ ஆம்பள வந்துட்டு போறானாம்....“ என்றான் ஒரு நண்பன்.
   கௌதமனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. லாரிக்கார அண்ணன் இருக்கும் பொழுது அந்த வீடு எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். துறுதுறுவென்று இரண்டு பிள்ளைகள். அந்த அக்கா நல்ல அழகி. கலகலப்பான பேர்வழி. அவங்களா இப்படி....? மனம் கனத்தது.

   ஒரு மாலைப்பொழுது. நண்பர்களிடம் பேசிவிட்டு வரும் பொழுது நேர் எதிரில் அந்த அக்கா. அதே கட்டழகு குறையாத உடல். அதே புன்சிரிப்பான முகம். பார்த்தான். பார்த்த்தும் பார்க்காதது போல் தலையைக் குனிந்துக்கொண்டான். “என்னப்பா கௌதம்... எப்படி இருக்கிற?“ அவளாகவே கேட்டாள். இதற்கு மேல் பதில் சொல்லாமல் நகர முடியாது.
   “நல்லா இருக்கிறேன்க்கா.... நானே ஊருலேர்ந்து வந்ததும் உங்களை வந்து பாக்கனும்ன்னு நெனச்சேன். ஆனால் முடியலை.“ என்றான் பொய்யாக.
   “பரவாயில்லப்பா. உன்னை மாதிரி ஆம்பளைப் புள்ளைங்க என் வீட்டுக்கு வராமல் இருக்கிறது தான் எனக்கும் நல்லது.“ சோகமாக ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு... “ஆமா... அம்மா எப்படி இருக்கிறாங்க?“ கேட்டாள்.
   “ம்... நல்லா இருக்கிறாங்கக்கா.“
   “நல்லதுப்பா. நீயும் வெளி நாடு போய் சம்பாதிக்கிறே. அம்மாவ நல்லா பாத்துக்கோ. பாவம் அவங்களும் சின்ன வயசுலே தாலி இழந்தவங்க. இந்த வயசுல கணவனை இழந்திட்டா சமுதாயத்துல எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கனும் தெரியுமா? அதனால கிடைக்கிற வலி... இப்போ தான் எனக்குத் தெரியுது. அவங்களும் இந்த கஷ்டத்தை எல்லாம் தாண்டிதான் வந்திருப்பாங்க. நல்லா பாத்துக்கோப்பா.“ புன்சிரிப்புடன் நகர்ந்தாள்.
   இவ்வளவு தெளிவாகப் பேசுகிறார்கள். இவர்கள் போய் அப்படியா....? கௌதம் யோசனையுடன் நடந்தான்.
   விறுவிறுவென்று நடந்தவள் என்ன நினைத்தாளோ... திரும்பி அவன் அருகில் வந்து நின்று, “கௌதம்... ஊருல எல்லாரும் நினைக்கிற படி நீயும் என்னை தப்பா நினைச்சிடாதே. ஊருல எல்லாருமே அவர் இருந்தப்போ நல்லாதான் பழகினாங்க. ஆனால் இப்போ காவலில்லாத பயிர்தானே என்ற எண்ணத்துடன் பேச ஆரம்பிச்சிட்டாங்க. அதனால அவரோட செருப்ப நான் ராத்திரியில வாசல்ல வச்சிட்டு படுக்கிறேன். எனக்கு அவரோட செருப்பும் பாது காவலாக இருக்கிறது. இதுவும் கொஞ்ச நாளைக்கு வெளியில விசயம் தெரியிற வரைக்கும் தான். அப்புறம்.... வேற வழி இல்லாமா போயிடும். கௌதம்... நீயா இந்த விசயத்தை யார்கிட்டேயும் சொல்லிடாதே. நீ என் சொந்த தம்பி மாதிரி என்றதாலத்தான் சொன்னேன். வர்ரேன்ப்பா....“ அவள் போய்விட்டாள்.
   அவள் வார்த்தைகள்... தன்னையும் அவளைத் தப்பாகப் பேசிய எல்லோரையும் அதே செருப்பால் அடித்தது போல் உணர்ந்தான் கௌதம்.

அருணா செல்வம்.
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 29 Oct 2015 - 20:02

சாமி இருக்கா? இல்லையா? (முடிவு)

---------------

தோழியின் கணவர் இப்படி சொன்னார்.

“டாக்டரை இப்பொழுது தான் பார்த்தோம். தலையில் பலமாக அடிபட்டதால் தையல் போட்டிருக்கிறார்கள். இரத்தம் அதிகமாக வெளியேறி இருக்கிறது. இன்னும் மயக்கம் தெளியவில்லை. மயக்கம் தெளிந்ததும் தான் எதுவும் சொல்ல முடியும். மற்றபடி உயிருக்கு ஆபத்தில்லை என்று சொன்னார். மதுவிடம் சொல்லுங்கள். அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள்.“ என்றார்.
   நானும், “சரி“ என்று சொல்லிவிட்டு “எப்படி விபத்து நடந்ததாம்?“ என்று கேட்டேன்.
    “கடையில் மின்சார மாடிபடிகட்டில் இருவரும் விளையாடிக்கொண்டே ஏறியதால் தவறி விழுந்துவிட்டானாம்.... சரி நான் பிறகு போன் பண்ணுகிறேன்“ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.
    எங்களுக்கு அப்போது தான் ஓரளவிற்கு சரியாக மூச்சு விட முடிந்தது. நேராக பூஜை அறையை நோக்கி ஓடினேன். அவள் கணவர் சொன்னதைச் சொன்னேன். உடனே என் தோழி, “நீ நம்பின சாமி உன்னைக் கைவிடலையடி.... பிள்ளையை எப்படியோ காப்பாத்திட்டான்....“ என்று இவள் ஆனந்த கண்ணீருடன் அழ அவளும் சேர்ந்து அழ....
    “போதும் போதும் அழுதது. எழுந்து முகம் கழுவிட்டு எதையாவது  சாப்பிடு. கைக்குழந்தை இன்னும் கொஞ்ச நேரத்தில் முழிச்சிக்கும். அதுக்கு பால் கொடுக்கனும்.“ என்றாள் மாமி.
    ஆனால் மது அதைக் காதில் வாங்கியது போல் தெரியவில்லை. “என் பிள்ளைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றால் தான் நான் சாப்பிடுவேன். அதுவரைக்கும் இங்கே தான் இருப்பேன்“ என்று பிடிவாதமாகச் சொல்லி விட்டாள்.
    எங்களுக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் நாங்களும் அவளுடன் பூஜை அறையிலேயே அமர்ந்து விட்டோம்.
    “சாமி இருந்தா அது பாட்டுக்கு இருக்கப் போவுது. இவ அதை பிடிச்சிக்கினு தொங்கிக்கினே இருக்கனுமா... கை புள்ளக்காரி. பச்சை உடம்பு. குழந்தைக்குப் பால் கொடுக்கனும். இப்படி எதுவும் சாப்பிடாமல் இருந்தால் ஒடம்பு என்னாவறது? குழந்தைக்காவது சாப்பிட வேண்டாமா...?“ என்று இன்னும் ஏதேதோ சொல்லிக் கொண்டே இருந்தாள் மாமி.
   மது அவள் சொல்வது எதையும் காதில் வாங்காமல் முருகன் ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டு இருந்தாள். அவளுடன் என் தோழியும் சேர்ந்து மனம் உருக சொன்னாள். எனக்கு அதெல்லாம் தெரியாது என்றதால் நான் அவர்களுடன் பேசாமல் அமர்ந்திருந்தேன்.
    அரைமணி நேரம் கழிந்திருக்கும். போன் வந்தது. வழக்கம் போல் பப்பு போனை எடுத்துவிட்டாள். அவள் பிரென்சு மொழியில் பேசியதால் மருத்துவமனையிலிருந்து வந்த போன் இல்லை என்று புரிந்ததால் அவள் பேசிவிட்டு தரட்டும் என்று காத்திருந்தேன். (எனக்கு அப்பொழுது அவ்வளவாகப் பிரென்சு பேச தெரியாது. ஆனால் பேசுவதைப் புரிந்து கொள்வேன்)
   அவள் போனில், “சாமி இருக்கா இல்லையா என்று இன்னும் முடிவா தெரியலை. ஆனால் சாமி இருக்கிறமாதிரி தான் தெரியுது“ என்றாள்.
    அவள் இப்படி பேசியதைக் கேட்டதும் எனக்குக் குழப்பம். யாரு அது இந்த நேரத்தில் இப்படி கேள்வி கேட்டு பேசுவது....? என்று நினைக்கும் போதே.... பப்பு என்னிடம் போனை நீட்டினாள். எனக்குக் குழப்பமாகவும் தயக்கமாகவும் இருந்ததால்..... “நீயே எதையாவது பேசி போனை வைத்துவிடு“ என்றேன் சாடையாக பப்புவிடம்.
    அவள்.... “இப்போ எதுவும் சொல்ல முடியாது. நீங்க அப்புறமா போன் பண்ணுங்கள்“ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.
    இந்த போன் அந்த நேரத்தில் குழப்பத்தைத் தந்தாலும் அதிலேயே மூழ்கி விடும் அளவிற்கு போக நேரமே இல்லை. மூன்று பேருமே சின்ன சின்ன குழந்தைகள் வைத்திருந்ததால் அவர்களைக் கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது.
    அதில்லாமல் மருத்துவமனையில் இருக்கும் பிள்ளையின் நினைவு வேறு. அன்றைய பொழுது ஏன்தான் வந்ததோ!! என்றிருந்தது.
    இப்படியே ஒருமணி நேரம் சென்றிருக்கும். மருத்துவமனையி லிருந்து போன் வந்தது. “பையன் விழித்துவிட்டான். எதுவும் பயம் இல்லை என்று டாக்டர் சொல்லி விட்டார். ரெண்டு மூனு நாளில் முழுவதும் செக்கப் செய்துவிட்டு வீட்டுக்கு அனுப்பிடுவார்களாம். பையன் விழத்ததிலிருந்து அம்மாவைத் தான் கேட்கிறான். அதனால் மதுவைக் கிளம்பி இருக்கச் சொல்லுங்கள். நான் வந்து அழைத்துக் கொண்டு போகிறேன்.“ என்றார் மதுவின் கணவர்.
    எங்களுக்கு அப்பொழுது தான் நிம்மதியான மூச்சே வந்தது.

    சொன்னவர் சற்று நேரத்திலேயே வந்துவிடவும்... என்னை வீட்டிலேயே குழந்தைகளைக் கவனிக்கச் சொல்லிவிட்டு மது, மாமி, தோழி மூவரும் மருத்துவமனைக்குக் கிளம்பினார்கள்.
   போகும் போது பப்பு மாமியை வழி மறைத்துக் கேட்டாள்.
   “பாட்டி இப்பவாவது சொல்லு. சாமி இருக்கா இல்லையா? அவர் திரும்பவும் போன் பண்ணுகிறேன் என்றார். சொல்லிட்டு போ.“ என்றாள்.
   மாமி நின்று பப்புவைப் புன்சிரிப்புடன் பார்த்தார். தோழி தன் குழந்தையை ஒரு முறைமுறைத்து “உள்ளே போ. எந்தெந்த நேரத்துல எது கேட்கிறதுன்னு தெரியாமல்.... போ. போய் விளையாடு“ என்று கோபமாகச் சொன்னாள்.
   ஆனால் பப்பு மாமியையே பார்த்தாள். மாமி சொன்னாள் “சாமி இல்லன்னு யாரு கண்ணு சொன்னது? சாமி இருக்குது. இப்போ ஆஸ்பத்திரிக்குப் போய் இருக்குது. யாராவது போன் பண்ணி கேட்டாள் சாமி ஆஸ்பத்திரிக்கு போயிருக்குன்னு சொல்லு“ என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
   இதைக் கேட்டதும் நான் பப்புவைப் பார்க்க, பப்பு என்னைப் பார்க்க... ஐயோ.... ஏதாவது லூசுங்கக் கிட்ட மாட்டிக்கிட்டோமா என்று தலையைப் பிச்சிக்கலாம் போல இருந்தது எனக்கு.

கடைசியில் மறுநாள் தான் தெரிந்தது. மாமியின் கணவர் பெயர் நாராயண சாமியாம். அதைச் சுறுக்கி அவரின் நண்பர்கள் “சாமி“ என்றே கூப்பிடுவார்களாம்.
   போனில் பேசியவர் நண்பர் “சாமி“யைக் கேட்க.... நாங்கள் இருந்த தருவாயில் “காட் சாமி“யை நினைக்க.... பையனுக்கு விபத்து என்றதும் “சாமி“ இல்லை என்று சொன்ன மாமி, அவனுக்கு ஒன்றும் இல்லை என்றதும்.... “சாமி“ இருக்கார் என்று சொன்னது, அதுவும் ஆஸ்பிடலுக்குப் போயிருக்கிறார்.... என்று சொன்னதும்..... இன்று நினைத்தாலும் என்னால் சிரிப்பை அடக்க முடிவதில்லை.

அருணா செல்வம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 2 Nov 2015 - 0:04

வறுமையின் கொடுமைக்கு பாரதி சொன்ன குட்டிக்கதை
----------------

வறுமையின் கொடுமை பற்றி உணர சுப்ரமணிய பாரதியார் தன் மகள் சகுந்தலா பாரதிக்குச் சொன்ன கதை:

அக்பரால் ராஜ்யத்தை விட்டுத் துரத்தப்பட்ட ராஜபுத்ர அரசன் ஒருவன், தன் மனைவி குழந்தையுடன் காட்டில் ஒளிந்து மறைந்து வாழ்ந்தான். உணவிற்காக அருகில் உள்ள கிராமத்திற்குச் சென்று, அங்கிருந்து சிறிது தானியம் பெற்று வந்து, அதை மூன்று ரொட்டிகளாகச் செய்து, ஆளுக்கு ஒன்றாகச் சாப்பிடுவார்கள்.

ஒரு நாள் பகல் அரசனும், அவர் மனைவியும் ரொட்டியைத் சாப்பிட்டுவிட்டார்கள். குழந்தை ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு, ரொட்டியைக் கையில் வைத்துக் கொண்டு மெதுவாகத் தின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஒரு பறவை குழந்தையின் கையிலிருந்த ரொட்டியைப் பிடுங்கிச் சென்றுவிட்டது. குழந்தையோ அழத் தொடங்கியது.

அதனைச் சமாதானம் செய்ய, அதன் பசியைத் தீர்க்க அரவகுப்ழும், அவரது மனைவிக்கும் ஒரு வழியும் தெரியவில்லை.

ராஜபுத்திர மன்னனின் மனம் இடிந்துவிட்டது. உடனே அக்பரின் ஆளுகைக்கு உட்பட்டு சிற்றரசனாக இருக்க சம்மதிப்பதாகக் கடிதம் எழுதி ஒரு குடியானவன் மூலம் அக்பருக்கு அனுப்பினானாம்.

(சகுந்தலா பாரதி எழுதிய “என் தந்தை’ எனும் நூலிலிருந்து…)
வாணிஸ்ரீ
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 2 Nov 2015 - 0:07

அழகனும் புத்தகமும்!
--------------
புத்தகத்திற்கு மிகுந்த வருத்தம். அழகன் இப்பொழுதெல்லாம் நம்முடன் அதிகம் நட்புப் பாராட்டுவதில்லை. தன்னுடன் பேச சிறிதுகூட நேரம் ஒதுக்குவதில்லை. முன்பெல்லாம் எவ்வளவு நட்புடன் இருப்பான். அவனுக்கு என்ன ஆனது?
பொங்கி வந்த சோகத்தை தனக்குள் அடக்கிக் கொண்டது புத்தகம். எல்லாம் புதிதாக வந்த அந்தத் தொலைக்காட்சியால் வந்த வினை. கணினி வேறு போட்டியாக வந்து விட்டது. இப்போதுதான் அப்பா ஒரு கணினியைப் புதிதாக அழகனுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
அந்த இரண்டு புதிய நண்பர்களைத்தான் அழகன் பெரிதாக எண்ணுகிறான். என்னை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. வரட்டும் வரட்டும் பேசிக் கொள்கிறேன் என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டது புத்தகம்.
ஒருநாள் அழகன் சோபாவில் சாய்ந்திருந்தான். எதிரே புத்தகம் டீபாயில் இருந்தது. எடுக்கமாட்டானா என்ற எதிர்பார்ப்போடு.
அழகன் கைகளை நீட்டி புத்தகத்தை எடுத்து பிரித்துப் பார்த்தான். என்ன இருந்தாலும் பழைய நண்பன் இல்லையா? புத்தகம் “சரசர’ என்ற குரலில் அழகனுடன் அன்போடு பேசியது.
“என்ன அழகா… என்னைப் பார்த்து வெகு நாளாகிவிட்டதே. ஏன் என்னை மறந்து விட்டாயா?’
அழகன் வியப்போடு புத்தகத்தைப் பார்த்தான்.
“உனது புதிய நண்பர்களான தொலைக்காட்சியும், கணினியும் போதும். நான் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டாயா?’ என்று கேட்டது புத்தகம்.
அழகனுக்கு சற்றுக் கோபம் ஏற்பட்டது. “”என்ன பேசிக் கொண்டே செல்கிறாய்? என் புதிய நண்பர்கள் எவ்வளவு நல்லவர்கள் தெரியுமா?” என்றான்.
“எப்படி நல்லவர்கள் என்று கூறுகிறாய்?’ புத்தகம் கேட்டது.
“”உன் மீது எழுத்துகள் அப்படியே இடிச்சபுளி போல் ஆடாமல், அசையாமல் இருக்கும். எனது கண்கள்தான் அங்கும் இங்கும் ஓட வேண்டியிருக்கும். ஆனால், தொலைக்காட்சி அப்படியா? என் கண்கள் அப்படியே இருக்கும். காட்சிகள் மட்டும் நகர்ந்து கொண்டே இருக்கும். என் கண்களுக்கு சற்றும் வேலையே இருக்காது” என்றான் அழகன்.
“கணினி, தொலைக்காட்சி முன்பு நீ அமர்வதால் உன் கண்களுக்கு எவ்வளவு கேடு தெரியுமா?’ என்றது புத்தகம்.
“என்ன அங்கே சண்டை’ என்று தொலைக்காட்சியும், கணினியும் கேட்டன. அழகனின் விரல் அசைவில் அவற்றிற்கு உயிர் வந்தது.
நடந்தவற்றைக் கூறினான் அழகன். தொலைக்காட்சி, புத்தகத்தை ஏளனமாகப் பார்த்து சிரித்தது.
“ஐயோ பாவம் புத்தகம். எல்லோரும் நம்மைப் புறக்கணிக்கிறார்களே என்ற பொறாமையில் புலம்புகிறது. புத்தகமே உனக்கு ஓர் உண்மை தெரியுமா? அழகன் என்முன்னே அமர்ந்தால் அவனுக்கு நேரம் போவதே தெரியாது. அவன் சேட்டை செய்ய மாட்டான். தேவையின்றி வெளியே செல்ல மாட்டான்’ என்றது தொலைக்காட்சி.
புத்தகம் மீண்டும் சரசரத்தது.
“உணவு வேளை வந்தால் அவன் என்னோடு இருக்கும் பொழுது என்னை மூடி வைத்துவிட்டுச் செல்வானே. நானும் அவன் உணவு அருந்தி விட்டு வரும் வரை அவனுக்காகக் காத்திருப்பேனே. ஆனால், தொலைக்காட்சியே நீ அவனுக்காக என் போன்று காத்திருப்பாயா? ஓடிக் கொண்டே இருப்பாயே. அப்படியே மூடி விட்டுச் சென்றாலும் விட்ட இடத்திலிருந்து தொடருவாயா?’ புத்தகம் இறைந்தது.
“சரிதான். புத்தகமே ரொம்பவும்தான் பெருமை அடித்துக் கொள்ளாதே. அவன் உன்னை மூடி வைத்துவிட்டு வருவதைப் போல, என்னோடு இருக்கும் பொழுது வரத் தேவையில்லை. அம்மாவே உணவை அவன் இருக்கும் இடத்திற்குக் கொண்டு வருவாளே. அவன் உணவை உண்டவாறே என்னைப் பார்த்துக் கொண்டு இருப்பானே. அம்மா சிரமப்பட்டு உணவை ஊட்டிவிடத் தேவையில்லை. தானாகவே உண்பானே.’

புத்தகமும் விடுவதாக இல்லை.

“”ஆமாம்! ஆமாம்! உணவு அவனைத் தேடி வரும். ஆனால், கவனம் உணவில் இருக்காது. அதனால் என்னப் பயன்?’ என்று கேட்டு நிறுத்தியது புத்தகம். தொலைக்காட்சி திகைத்து நின்றது. என்னக் கூறப் போகிறது இந்தப் புத்தகம் என்ற எதிர்பார்ப்போடு.

புத்தகம் பேசியது.

“உணவின் மீது நாட்டம் இல்லாமல் உண்ணும் பொழுது அதன் முழுப் பயனும் நமது உடலுக்கு கிடைக்காது. மேலும், நீ அவனை சிறை வைத்திருப்பதைப் போல பிடித்து வைத்திருக்கிறாய். நீ வீட்டிற்கு வந்த பிறகு அவன் வெளியில் விளையாட செல்வதே இல்லை. திறந்தவெளியில் சிறிது நேரம் விளையாடச் செல்வது உடல்நலத்திற்கு மட்டுமல்ல; மனதையும் நலமாக வைத்திருக்கும் பயிற்சியாகும். அது மட்டுமா? தொலைக்காட்சியாகிய உன்னுடன் அதிக நேரம் செலவழிப்பதால் உடல் பருமன், கண்களில் பாதிப்பு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு, படிப்பில் கவனக் குறைவு ஏற்படலாம்.’
புத்தகமும், தொலைக்காட்சியும் காரசாரமாக மோதிக் கொண்டிருப்பதைப் பார்த்து அழகன் அதிர்ந்தான். ஆனால், அவை கூறும் கருத்துகள் அவன் உள்ளத்தில் புயலைக் கிளப்பியது. அவன் சிந்திக்கத் துவங்கினான்.
கணினி எட்டிப் பார்த்தது. “போதும் போதும் உங்கள் சண்டை’ என்று கூறியது. தொலைக்காட்சியை சற்று கோபத்துடன் பார்த்து முறைத்தது. நாள் முழுவதும் ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும் உனக்கு சண்டையிடுவது பலகாரம் சாப்பிடுவது போலத்தான் இருக்கும். ஆனால், நீ பேசுவது எவ்வளவு தூரம் சரி என்று யோசித்துப் பார். என் போன்ற கணினியோ, உன் போன்ற தொலைக்காட்சியோ வந்த பின்னர் நமது மூத்த சகோதரன் புத்தகத்தைப் புறக்கணிப்பது சரியல்ல.
நாம் அறிவியல் வளர்ச்சியின் அடையாளமாக இருக்கிறோம் என்பது உண்மைதான். எனினும், நமது புத்தக அண்ணனின் பயனும், தேவையும் சிறிதளவும் குறையவில்லை. நம்மிடம் உள்ள குறைபாடுகளை புத்தக அண்ணன் சுட்டிக் காட்டியது. அவை பொறாமையால் வந்த சொற்கள் அல்ல; உண்மைகள். சிறுவர்கள் அளவோடும், நெறியோடும் கணினியும், தொலைக்காட்சியுமான நம்மைப் பயன்படுத்தும் போதுதான் நாம் அவர்களுக்கு நலம் செய்வோம். இல்லையேல் தீங்குதான். புத்தகங்கள் வாசிப்பதை புறக்கணித்து விட்டு நம்மையே சுற்றிச் சுற்றி வருவது சிறுவர்களுக்கு தீங்கு செய்யும் என்பதில் ஐயமில்லை.’
தொலைக்காட்சி வேறு வழியின்றி கணினி கூறிய கருத்துகள் சரிதான் என்று தலையாட்டியது. உண்மைகளை ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்.
அழகனின் உள்ளத்தில் கணினி கூறிய கருத்துகள் ஆழமாகப் பதிந்தன. தன் மடியில் இருந்த புத்தகத்தை நட்போடு பார்த்தான். மகிழ்ச்சியோடு விரித்தான்.
புத்தகத்திற்கோ எல்லை இல்லாத குதூகலம்!

-
முஹம்மது ஹில்மி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 2 Nov 2015 - 0:10

மாறக்கூடாது
-------------------------
நாகரிகமும், புது வசதி அறிமுகங்களும் ஏற்பட்டுவிட்டாலும் அந்தக் கிராமத்தின் ஆதார மணம் மட்டும் குறையவேயில்லை. இங்கேயே பிறந்து, வாழ்ந்து, உடலோடும், உணர்வோடும் ஒட்டிக்கொண்டுவிட்ட அந்த மணத்தை இன்னும் நாசி மறக்கவில்லை. ஆண்டுகள் பல அந்தக் கிராமத்தை விட்டு என்னைப் பிரித்திருந்தாலும், என் பழக்கங்கள், உடையலங்காரங்கள் ஏன் வாழ்க்கை முறையேகூட திசை திரும்பியிருந்தாலும், அடிமனதில் இளம் பிராயத்து அனுபவங்கள், ஏக்கங்கள் எல்லாம் பசுமையாகத்தான் இருக்கின்றன.

கிராமத்துப் புழுதியிலும் ஆரோக்கியம் உண்டு என்பதை அனுபவித்தவர்களால்தான் உணர முடியும். அந்தப் புழுதி தன்னுடன் மாசைச் சேர்த்துக்கொள்ளாது, தன் மீது புரண்டு விளையாடும் பிள்ளைகளை உறுத்தாமல் தாய் தடவலாய் விளையாட்டு காட்டும். அந்தக் கிராமத்து மரங்களும், பசுமையும்தான் அந்தப் பாசத்தை அந்தப் புழுதிக்கும் கற்றுத் தந்திருக்கவேண்டும்.

நான் மாறினாலும், எனக்குப் பிறப்பு கொடுத்த இந்தக் கிராமம் மாறக்கூடாது என்ற சுயநலம் எனக்கு உண்டு. என் கடந்தகால சந்தோஷங்களை நினைவுபடுத்த, முடிந்தால் அவற்றை மறுபடியும் அனுபவிக்கத் தோதாக இந்த கிராமம் இன்னமும் அப்படியே இருக்கவேண்டும் என்ற என் எதிர்பார்த்தல் இயற்கையை ஒட்டியதுதான். ஆனால் காலம்தான் இயற்கையை எப்படிப் புரட்டிப்போடுகிறது காலமும் இயற்கையும் ஒன்றுடன் ஒன்று இயைந்ததில்லையா? வளர்ச்சிப் பரிணாமத்தில், இயற்கை மட்டும் தோற்றுப் போகின்றதே, ஏன்? தன் அழகுக்கு மேலும் ஒப்பனை செய்வதாக, பல புதிய வசதிகளைக் காலம் இயற்கைக்கு அணிவித்து அதைத்தான் எப்படி ஏமாற்றுகிறது?!

இந்தக் கிராமமும் அப்படித்தான். இப்போது பறக்கும் புழுதியில்தான் எத்தனை கர்வம்! பேருந்துகள், சொகுசு வாகனங்கள் என்று மக்களுக்கான தேவைகளுக்கேற்ப வசதிகள் பெருகியதன் ஆணவம் அடித்து வீசிப் பறக்கும் புழுதியும் அதைத்தான் நிரூபிக்கிறது. கண்களுக்குள் போனாலும் உறுத்தாத அதன் மென்மை இப்போது எங்கே போயிற்று? திகைப்பாகத்தான் இருந்தது. அந்த கிராமம் மாறவேகூடாது என்று நான் எதிர்பார்ப்பதன் எதிரொலியா இது.

ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில்தான் கிராமம் இருந்தது. ஓட்டமும் நடையுமாக ஓடோடி வந்து ரயிலைப் பிடித்த நாட்களில் வியர்வையும் வாசனையாகவே இருந்தது. இப்போது ஆட்டோகூட வந்தாயிற்று, சுமந்து செல்ல. ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கிராமத் துவக்கம்வரை பசுமை போர்த்திக்கிடந்த வயல்களால் நிரம்பியிருந்தது அந்தக் காலம். இப்போது கான்கிரீட் மரங்கள் ஆங்காங்கே நெட்டுக்குத்தலாகவும், அகன்றும் முளைத்திருந்தன. ஆற்றமாட்டாமல் இயற்கை அழுது கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. இதற்கும், மாற்றங்களே இருக்கக்கூடாது என்ற என் சுயநல சிந்தனைதான் காரணமோ?

இந்த நிலத்தின் பள்ளிக்கூட நாட்கள்தான் எவ்வளவு சுகமானவை அரை நிஜாரின் இடுப்பைச் சுருக்கும் பட்டியின் பொத்தான் அறுந்து விழுந்து காணாமல் போக, பட்டியை அப்படியே அடுத்த முனையுடன் பிணைத்து முடிச்சிட்டுக்கொண்டு ஓடுகையில் முடிச்சின் பலம் இளக அப்படியே அவிழ்ந்து விழுந்த நாட்கள். யாரேனும் கவனிக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு யாருமில்லை என்ற தைரியத்தில் அந்த டிராயரை அப்படியே அள்ளி எடுத்து, அரையை மறைத்தபடி வீட்டிற்கு ஓடியது மறக்கவில்லை. மறுநாள் ருக்மிணி, “”என்னடா, நேத்து நிக்கரை அவுத்துப் போட்டுட்டு ஓடினே… நான் பார்த்துட்டேனே…” என்று கேலி பண்ணியபோது அப்படியே வெட்கம் பிடுங்கித் தின்றது. எங்கிருந்து பார்த்தாள் அவள் படுபாவி. எத்தனை பேரிடம் சொன்னாளோ வெட்கத்தின் உச்சம் அவளை அப்படியே ஓங்கி அறையச் சொன்னது. “”நான்தான் அப்படி ஓடுனேன்னா உன்னை யார்ரீ பார்க்கச் சொன்னா?”

“”ஐயே, இவரு பனந்தோப்பிலே நிக்கர் இல்லாம ஓடிவருவாராம், நாங்க பாக்கக்கூடாதாம், போடா சர்த்தான்…” என்று எனக்குப் பழிப்புக் காட்டியவள் என் கை வீச்சுக்கு அகப்படாமல் குனிந்து தப்பித்து ஓடினாள். பாதுகாப்பான தொலைவிற்குப் போய் நின்று, பயப்படாதே யார்கிட்டேயும் நான் சொல்லலே, சொல்லவும் மாட்டேன்…” என்று ஆறுதலும் அளித்தாள்.

அந்த வயதின் சிறுபிள்ளைத்தனத்தை இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது. அதுபோன்ற சம்பவங்களை நினைக்கும்போதுதான் மனசுக்குள் குபுக்கென்று புது ரத்தம் பாய்ந்து உடலையே சிலிர்க்கவைக்கிறது.

கோவர்த்தனின் வயலில் இருந்தது பம்ப் செட். மோட்டார் அறையிலிருந்து ஒரு பெரிய குழாய் நிலத்திலிருந்து நீரை உறிஞ்சி வெளியே உமிழும். ஒரு பெரிய தொட்டியில் வந்து விழும் அந்த நீரை, அக்கம்பக்கத்தவர்கள் குடிநீருக்காகவும், சமையலுக்காகவும் எடுத்துச் செல்வார்கள். அந்தப் பெரிய தொட்டியிலிருந்து சற்று கீழ் நிலையில் இருக்கும் இன்னொரு சிறு தொட்டிக்குள் நீர் வழிந்து நிரம்பும். அங்கிருந்து வயல் வரப்பில் நீர் பாய்ந்து நிறைக்கும்.

எனக்கு அந்தப் பெரிய தொட்டியில் குளிக்கவேண்டும் என்று ஆசை. குழாய் உந்தித் தள்ளும் நீர்ப் பாய்ச்சலுக்கு முன்னால் தலையைக் கொடுத்து, நீரின் வேகத்தால் தடுமாறாமல் கால்களை ஊன்றி நின்று சமாளிக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் அந்தத் தொட்டி நீர் அசுத்தப்பட்டுவிடக்கூடாது என்பதில் கோவர்த்தன் மட்டுமன்றி ஊராரும் மிகவும் கண்டிப்பாக இருந்தார்கள். அடுத்து உள்ள சிறு தொட்டியில் குளிக்கலாம். அதற்கு அனுமதி உண்டு. ஆனால், என் ஆர்வமெல்லாம் வேகமெடுத்துவரும் நீருக்குத் தலைகொடுத்து சாகசம் செய்யவேண்டும் என்பதுதான். காலை சுமார் ஏழு மணிக்கெல்லாம் மோட்டார் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். வயலில் வேலை செய்பவர்களும் வெகு தூரத்தில் சேற்றில், கால் அகற்றிப் பதித்து நாற்று நட்டுக்கொண்டிருப்பார்கள். ஊர் மக்களும் அரை மணிநேரத்திற்குள் தத்தமக்குத் தேவையான நீரை முகந்து எடுத்துச் சென்றுவிடுவார்கள். ஆனால் கோவர்த்தனனின் அடியாள் ஒருவன் அந்தப் பகுதியிலேயே சுற்றிக் கொண்டிருப்பான். அவனுடைய கண்களுக்கு எதுவும் தப்ப முடியாது.

அவனுடைய கவனத்தைத் திருப்ப வேண்டுமே, என்ன செய்யலாம் ஒரே ஒருதரம் மேல் தொட்டியில் குளித்துவிட்டால் போதும்… துணிந்து விட்டேன்.

“”ஏய், யாரது?” அடியாளின் கனமான குரல் பம்ப் செட் அறைக்குப் பக்கத்தில் ஒளிந்தபடி நின்றிருந்த என் காதுகளில் இடியாக இறங்கியது. மாட்டிக் கொண்டோமோ எந்த திசை நோக்கி ஓடுவது இப்போதைக்கு அவனிடமிருந்து ஓடித் தப்பித்துவிட்டாலும், என்னை அடையாளம் தெரிந்து கொள்ளும் அவன், என் வீட்டுக்கே வந்து பிடித்துக்கொள்ளவும் முடியும்.

ஆனால் அடியாள் இந்தப் பக்கம் வராமல் வேறு யாரையோ துரத்திக் கொண்டு ஓடுவதைப் பார்த்தேன். அவன் பிடிக்கு அகப்படாமல் முன்னே ஓடுவது யார்? அட, ருக்மிணி சரி சரி, இந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படியே தொட்டிக்குள் குதித்தேன். வேகமாக விழுந்த நீர் முன்போய் நின்றேன். என்னை அறைந்துத் தள்ளப் பார்த்தது அந்தப் பக்கவாட்டு அருவி. அசராது நின்றேன். குளிரெடுத்த உடல் நடுக்கத்தோடு சற்றே தள்ளாடினாலும், விறைப்பாக நிற்க முயற்சித்தேன். நாலைந்து நிமிடங்கள் இப்படி தாக்குப் பிடிக்க முடிந்தபோது பெருமை பிடிபடவில்லை. அந்த சாதனை சந்தோஷத்தை மேலும் அனுபவிக்க முடியாதபடி பயம் உறைக்க ஆரம்பிக்க, அப்படியே ஈரச்சட்டை, நிக்கருடன் தொட்டிக்கு வெளியே எகிறிப் பாய்ந்து தோட்டத்தை விட்டு வெளியேறினேன்.

ஆனால், நான் வீட்டிற்குள் நுழைந்தபோது அப்பா பிரம்பும் கையுமாக நின்றிருந்ததை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. ருக்மிணியைத் துரத்திக்கொண்டு ஓடிய அடியாள், அவளைப் பிடிக்க முடியாத ஏமாற்றத்தில் திரும்பியபோது, நான் தொட்டியிலிருந்து வெளியே குதிப்பதைப் பார்த்துவிட்டான். என்னையும் பிடிக்கமுடியாத தொலைவு தந்த ஏமாற்றத்தை, என் தந்தையிடம் புகார் செய்ததன் மூலம் போக்கிக்கொண்டான்.

அப்பா அடித்தது வலிக்கவில்லை. ஆனால் நான் குளிக்க

வேண்டும் என்பதற்காக, ருக்மிணி அடியாளுக்குப் போக்குக் காட்டியிருக்கிறாளே, அந்த உண்மை இனித்தது. “”நீந்தான் ரொம்ப ஆசைப்பட்டீல்ல. எங்கிட்டயும் சொல்லியிருக்கல்ல. நீ குளிக்கறதுக்காக பம்ப் செட் ரூம் பக்கத்திலே நின்னிட்டிருந்ததைப் பார்த்தேன். உடனே புரிஞ்சுகிட்டு, அடியாள் பார்க்கறா மாதிரி தோட்டத்து மாமரத்திலே மாங்காய் அடிச்சேன்… திருப்தியா குளிச்சியா..” என்று கண்களில் ஆர்வம் மின்ன என்னிடம் ரகசியமாகக் கேட்டாள்.

அதுமட்டுமல்ல, “”ஏண்டா பெரிய தொட்டியில குளிச்ச என்று அப்பாவும் சில ஊர்ப் பெரிசுகளும் கேட்டபோது, நான்தான் என்னோட தலை கிளிப்பை தொட்டிக்குள்ளாற போட்டுட்டேன். இவனை எடுத்துத் தரச் சொன்னேன். அதான். குதிச்சவன், குளிச்சவன் மாதிரி நனைஞ்சுபோயிட்டான்” என்று என்னைக் காப்பாற்றினாளே அதுவும் பெரிய ஆச்சர்யம்தான்.

பனந்தோப்பு அருகே தனியாக வந்துகொண்டிருந்தாள் ருக்மிணி. அவள் என்னவோ ரொம்பவும் அழகாகத் தெரிந்தாள். திடீரென்று நிகுநிகுவென வளர்ந்துவிட்டாள் போலிருந்தது. முகமும் குண்டாகி, பளபளத்து. என்ன புது அழகு இது எனக்குக் கைகள் பரபரத்தன. சுற்றுமுற்றும் ஒரு கணம் பார்த்தேன். உடனே பளிச்சென்று அவளைக் கட்டிக்கொண்டேன். அவள் தடுக்கவில்லை. என்னடா இது… என்று கேட்டாள். எனக்கு உடனே பயத்தால் உடம்பு உதறலெடுத்தது.

மறுநாள் ருக்மிணி பெரியவளாகிவிட்டாள் என்ற தகவல் கிடைத்தது. அப்படியென்றால் என்ன என்று தெரியாவிட்டாலும், அவள் ரொம்பவும் அழகாக மாறிவிட்ட பருவம் அது என்று மட்டும் புரிந்தது. அதற்கப்புறம் அவளை என்னால் அடிக்கடி பார்க்கவே முடியவில்லை. பள்ளிக்கூடத்துக்கும் வரவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு ஊர்ச் சந்தையில் பார்த்தேன். புதிதாக வெட்கப்பட்டாள். அவளுக்கு சிரிப்பு பொங்கிப் பொங்கி வந்தது. அதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினாள். பிறகு ஒரு சிலிர்ப்புடன் என் பார்வையிலிருந்து விலகினாள்.

எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பாகியது. எனக்கும் ருக்மிணிக்கும் இடையே இருந்த நட்புக்குப் புது உணர்வு கிடைத்தது. சந்திப்புகள் ரகசியமாகவே நிகழவேண்டியிருந்தன. கருக்கல் வேளை, அந்தி சாயும் பொழுது என்ற இருள் மயங்கும் காலங்கள் எங்கள் சந்திப்புக்காகவே ஏற்படுத்தப்பட்டனவோ என்றே தோன்றியது.

ஊர் மோப்பம் மோசமானது. எங்களைத் தவிர உலகில் வேறு யாருமே இல்லை என்ற பாதுகாப்பற்ற, சுற்றுச் சூழலை அவமதிக்கும் அகம்பாவம் எங்களுக்குத் தலைதூக்கியதும் தப்பாகிவிட்டது. அவள் பலியாடானாள். என் குடும்பமும் அவமானப்படுத்தப்பட்டு நாங்கள் அந்த ஊரைவிட்டே வெளியேற வேண்டியிருந்தது.

அவளுக்கும் அவள் குடும்பத்தாரால் ஏகப்பட்ட கெடுபிடிகள், கண்டிப்புகள், சட்டதிட்டங்கள், சிறை… அவள் என்ன ஆனாள்?

தெரியவில்லை. வேறு ஊர் மாறியவன் மேல் படிப்பு, கல்லூரி, வேலை என்று அவளை மேலோட்டமாக மறந்துவிட்டதுதான் நிஜம். ஆனால் உள்மனசிலிருந்து அவள் வெளியேற மறுத்ததும் நிஜம். வருடங்கள் வயதைக் கூட்டிக்கொண்டு போய், மனதிலும் பாரத்தை அதிகரித்துகொண்டுதான் வந்தது. அவள் எப்படி இருப்பாள் யாரைக் கல்யாணம் செய்திருப்பாள்? எத்தனை குழந்தைகளோ ஏதேனும் ஒரு குழந்தைக்கு என் பெயரை வைத்திருப்பாளோ நினைவுகள் உந்தித் தள்ள, என்னுடைய கிராமத்துக்கு இப்போது வந்தேன்.

புனருத்தாரணம் செய்யப்பட்டிருந்த கோயிலிலிருந்து, பெருமாள், மணியோசையால் ஆசி அருளிக்கொண்டிருந்தார். அந்தக் கோயிலை நோக்கி மெல்ல நடந்தவன், வெளிப் பிராகாரத்தில் அவளைக் கண்டேன். எல்லாமே அவளாகத் தெரிந்த நிலை போய் இப்போது அவளே நேரடியாக தரிசனம் தந்தாள். வேட்டி இடற, ஓடாத குறையாக அவளை நெருங்கினேன். காலம் அவள் மீது சற்றே முதிய கோலத்தைத் தீட்டியிருந்தது. கட்டிப் பிடித்த அதே உடல் கொஞ்சம் கூடுதல் உயரத்துடன், ஆனால் பொலிவில்லாமல்…

“”வா, கதிர்வேல்… நல்லாயிருக்கியா?” அவள் கேட்டாள்.

“”நான்தான் ருக்மிணி.. எப்படி இருக்கே?”

“”நீதான் பாக்கறேயில்லே, தனியாத்தான் இருக்கேன்..” பளீரென்று நெஞ்சில் அறைந்தாள்.

வந்து, நான் காலேஜ் படிப்புக்காக.. அதுக்குமுன்னால இந்த ஊரால விரட்டப்பட்டு..

“”எனக்கு அந்தப் பழைய கதையெல்லாம் நினைவிருக்கு. ஆனா, அடுத்தடுத்து நடந்ததெல்லாம் உனக்குத் தெரியாது. நான் உன்னையே நினைச்சுகிட்டிருந்தேன். உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு உறுதியா அப்பா, அம்மாகிட்ட சொன்னேன். அவன எங்கப் போய்த் தேடறது பேசாம நாங்க சொல்ற பயலுக்குக் கழுத்தை நீட்டுன்னாங்க. மாட்டேன்னேன். நீ என்னைக் காதலித்ததும் ஊர்ல பரவிப்போச்சு. ஒன்ன ஒரு பய சீந்தமாட்டானேடின்னு சொல்லி அடிச்சாங்க. வீட்டுக்குள்ளேயே கட்டிப் போட்டாங்க. ஒன்ன என் கை நினைச்சுதுன்னா கையை வெட்டிப் போடலாம். கால் நினைச்சதுன்னா காலை வெட்டிப் போடலாம். தலை நினைச்சுதுன்னா தலையை வெட்டிப் போடலாம். ஆனா நினைச்சது மனசாச்சே, அது இந்த உடம்பிலே எங்கே இருக்கு அதனால என்னை தொலஞ்சுபோ நாயேன்னு விட்டுட்டாங்க. எனக்குத் தெரியும், நீ என்னிக்காவது ஒரு நா வருவே என்னை மட்டுமே நினைச்சுகிட்டு வருவே, எனக்காகவே வருவே, அதுவரைக்கும் நான் காத்திருக்கணும்னு. வந்திட்டே. ஒக்காரு. எம் பக்கத்திலே ஒக்காரு…”

மனசுக்குள் குமுறிக் குமுறி அழுதேன். ருக்மிணி, ருக்மிணி, என்று ஓலமிட்டேன். இப்படி ஒரு ஒட்டு உறவை எனக்கு மதிக்கத் தெரியலயே அம்மா.

எனக்குப் பின்னாலிருந்து, “”யாருப்பா இவங்க?” என்று கேட்டபடி முன்னே வந்தாள் என் பத்து வயது மகள்.

- நாகா கண்ணன்


வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 2 Nov 2015 - 0:12

குரங்குக்குக் கிடைத்த தண்டனை!
------------------

குரங்குக்குக் கிடைத்த தண்டனைசிறுகதை

ஓ ர் அடர்ந்த காட்டின் நடுவில் மிகப்பெரிய அரசமரம் ஒன்று இருந்தது. அதில் நூற்றுக்கணக்கான பறவைகள் கூடு கட்டி வாழ்ந்து வந்தன.

பொழுது விடிவதற்கு முன்பாகவே அவைகள் தங்கள் கூட்டை விட்டு இரை தேடுவதற்காக பறந்து சென்று விடும். தனது குஞ்சுகளுக்கு இரைத் தேடி மாலை நேரத்தில்தான் கூட்டிற்கு வந்து சேரும். அவைகள் கட்டியக் கூட்டில் முட்டைகள், குஞ்சுகள் போன்றவற்றை விட்டுச் சென்று விடுவதால், தாய்-தந்தை இரை தேடிக் கொண்டு திரும்பும் வரை குஞ்சுகள் தனியாகக் கூட்டுக்குள்ளேயே காத்துக் கொண்டிருக்கும்.

அம்மரத்தில் வசித்து வந்த பறவைகளுக்கு சில நாட்களாக பொல்லாத குரங்கு ஒன்று தொல்லைக் கொடுத்து வந்தது. பெற்றோர் இரை தேட வெளியே கிளம்பியதும், அந்தக் குரங்கு அப்பறவைகள் கட்டிய கூடுகளைப் பிரித்து எரிந்து, அதில் இருக்கும் முட்டைகளைக் கீழே போட்டு உடைத்து, குஞ்சுகளைக் கொன்று விடும். இப்படி அக்குரங்கு செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமானது. அந்தக் குரங்கைக் கண்டு மற்ற பறவைகள் அனைத்தும் பயந்து நடுங்கின. குரங்கை எதிர்க்க ஒரு பறவைக்குக் கூட துணிச்சல் வரவில்லை. இதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட அக்குரங்கு, மரக்கிளையில் ஊஞ்சலாடியபடி, கவலையின்றி தனது வாழ்நாளைக் கழித்தது. மேலும், தனக்கு விதவிதமான உணவுப் பொருள்களைக் கொண்டு வந்து தரும் படியும் பறவைகளை மிரட்டி வந்தது. குரங்கு கூறியபடி பறவைகளும் தங்களது சிறிய அலகுகளால் தானியங்களைக் கொண்டு வந்து தந்தன.

குரங்கு ஒரு நாள், ஒரு பறவையைக் கூப்பிட்டு, பெரிய பை ஒன்றை அதனிடம் கொடுத்து, மாலைக்குள் அந்தப் பை நிறைய தானியங்களைக் கொண்டு வரும்படி கட்டளையிட்டது. பாவம் அந்தப் பறவை என்ன செய்யும்? அதனால் பை நிறைய எப்படி தானியம் சேகரிக்க முடியும்; அப்படியே சேகரித்தாலும் அதை எப்படித் தூக்கி வர முடியும்? ஆனால், இதைப் பற்றியெல்லாம் குரங்கு கவலைப் படவில்லை.

பாவம்! அந்தப் பறவை காலையிலேயே தனது கூட்டை விட்டு வெளியே கிளம்பியது. பகல் முழுவதும் அலைந்து திரிந்து மாலைக்குள் எப்படியோ பை நிறைய தானியத்தை சேகரித்துவிட்டது. ஆனால், அந்தப் பையைத் தூக்க அதனால் முடியவில்லை. எனினும், குரங்கு தன்னை ஏதாவது செய்துவிடுமோ என்று பயந்து, தனது சிறிய அலகால் அந்தப் பையை இழுத்துக் கொண்டு வந்து குரங்கிடம் சேர்த்தது.

குரங்கைப் பார்த்து, “”குரங்கு மாமா! இன்று நான் என் குழந்தைகளுக்கு எந்தத் தானியமும் தேடவில்லை. அதனால் இந்தப் பையில் உள்ள தானியத்தில் சிறிது தந்தால், எனது குஞ்சுகளின் பசியைப் போக்குவேன்” என்று கூறியது.

அதைக் கேட்ட குரங்கு, “”உன் குஞ்சுகளின் பசிக்கு நான் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்? இந்தப் பையில் இருந்து நீ எதையும் எடுத்துச் செல்லக் கூடாது” என்று கண்டிப்பாகக் கூறிவிட்டது. இதனால் மிகுந்த வருத்தமடைந்த பறவை, தன் கூட்டை நோக்கிப் பறந்து சென்றது.

மறுநாள், ஒரு கிளியைக் கூப்பிட்டு இதுபோலவே, தானியம் கொண்டு வருமாறு கஷ்டப்படுத்தியது குரங்கு. அந்தக் கிளி காட்டைவிட்டு வெகுதூரத்தில் இருந்த ஒரு கிராமத்திற்குச் சென்று அங்கு ஒரு வீட்டில் கிடைத்த சப்பாத்தித் துண்டுகளைக் கொண்டுவந்து தந்தது.

அந்த மரத்தில் வாழும் எல்லாப் பறவைகளுமே அந்தக் குரங்குக்காக ஏதாவது கொண்டு வந்து தரும் நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டன. இதனால் குரங்கு நிம்மதியாக இருந்த இடத்தில் இருந்து கொண்டு சாப்பிட்டு நிம்மதியாகத் தூங்கியது. குரங்கின் செயலை நினைத்து அனைத்துப் பறவைகளும் மிகவும் எரிச்சலடைந்தன.

ஒரு நாள், குரங்கால் பாதிக்கப்பட்ட கிளி, புறா, மைனா, மரங்கொத்தி போன்ற பறவைகள், பெüர்ணமி நாளன்று ஓர் இடத்தில் கூடி இதுபற்றி ஆலோசித்தன. அதன்படி, இந்த மரத்தை விட்டு நாம் அனைவரும் வேறு இடத்திற்குச் சென்று கூடு கட்டி வாழலாம்; அல்லது அந்தக் குரங்கை இந்த மரத்தை விட்டு விரட்டி விடலாம் என்பது போல பல யோசனைகள் செய்தன. அந்தப் பறவைக் கூட்டத்தில் வயதான பருந்தும் இருந்தது.

அது கூறியது, “”பிள்ளைகளே! நம்மை இப்படி தானியம் கொண்டுவரக் கட்டாயப்படுத்தும் குரங்கை அடிக்க ஒரு வழிதான் உள்ளது” என்றது.

உடனே ஆந்தை, “”என்ன வழி உள்ளது தாத்தா? உடனே சொல்லுங்களேன்” என்றது. அதைக் கேட்ட பருந்து,”"இந்தக் காட்டில் விசித்திர மரம் ஒன்று உள்ளது. அதைப்பற்றி இதுவரை யாருக்கும் தெரியாது. அந்த மரத்தில் ஏதாவது ஒரு பகுதியை வெட்டினால் அதிலிருந்து ஒரு பொருள் வெளிவரும். அது உடம்பில் பட்டால் ஒட்டிக் கொள்ளும். பிறகு, அதைப் பிரித்து எடுக்கவே முடியாது. அதை எப்படியாவது நீங்கள் எடுத்து வந்து குரங்கின் மீது போட்டுவிட்டால் போதும். ஆனால், ஒரு விஷயத்தில் கவனமாக இருங்கள். அதைக் கைகளில் படாமல் எடுக்க வேண்டும். உடம்பில் சிறிது பட்டாலும் புண்ணாகிவிடும்” என்றது.

பருந்து கூறியபடி, சில பறவைகள் அந்த மரம் இருக்கும் இடத்திற்குச் சென்று, தங்களது உடம்பில் படாதபடி நீண்ட குச்சி ஒன்றில் அந்த மரத்தில் இருந்து வடிந்த திரவம் போன்ற அந்தப் பொருளை எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த குரங்கின் உடம்பில் பல இடங்களில் தடவி விட்டன.

மறுநாள் காலை எழுந்ததும், குரங்கு தனது உடம்பில் ஒட்டி இருந்த அந்தத் திரவத்தை எடுக்க முயன்றது. அது நன்றாக ஒட்டிக் கொண்டதால் பிரித்து எடுக்க முடியவில்லை. உடலில் பல இடங்களில் புண்ணாகிப் போய் அதிலிருந்து ரத்தம் வடியத் துவங்கியது. இதைப் பார்த்து குரங்கு மிகவும் பயந்து போனது. வலியால் அங்கும் இங்கும் தாவி அழுது புரண்டது. இப்படியே சில நாட்கள் கழிந்தன. இப்போதெல்லாம் குரங்கு பறவைகளிடம் தானியங்களைக் கொண்டு வந்து தரும்படி மிரட்டுவதில்லை. மிகுந்த கவலையால் கத்திக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த பறவைகள் இரக்கப்பட்டன.

குரங்கு, தனக்கு உதவி செய்யும்படி பறவைகளை வேண்டியது. தான் செய்த தீய செயல்களுக்காக மன்னிப்பும் கேட்டது. இதைக் கேட்ட பறவைகள், எப்படியாவது குரங்கின் துன்பத்தைத் தீர்க்க வேண்டும் என முடிவு செய்தன. அதன்படி ஒரு நாள், பருந்து தாத்தாவைத் தேடி மற்ற பறவைகள் சென்று, “”பருந்துத் தாத்தா! பாவம் குரங்கு. தன்னுடைய தவறை உணர்ந்து திருந்தி விட்டது. அதனால், அதன் உடம்பில் ஏற்பட்ட காயத்தைப் போக்க ஏதாவது மருந்து இருக்கிறதா? அப்படி இருந்தால் கூறுங்களேன். பாவம் குரங்கு துன்பப்படுவதை எங்களால் பார்க்க முடியவில்லை” என்றன.

சிறிது நேரம் பேசாமல் இருந்த பருந்து, “”நீங்கள் இப்படி கூறியதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் எந்த மரத்தில் இருந்து அந்தத் திரவத்தை எடுத்தீர்களோ, அதே மரத்தின் இலைகளைப் பறித்து வந்து, சாறு எடுத்து குரங்கின் உடம்பில் உள்ள காயத்தில் தடவுங்கள். இரண்டு நாட்களிலேயே காயம் ஆறி விடும்” என்றது.

பருந்து கூறியது போலவே, அந்த மரத்தின் இலைகளைப் பறித்து சாறு எடுத்து குரங்கின் காயத்தில் தடவின. குரங்குக்கு சில நாட்களிலேயே காயம் குணமாகிவிட்டது. மேலும், அது எல்லாப் பறவைகளிடமும் மரியாதையாகவும், அன்பாகவும் நடந்து கொண்டது. கெட்ட செயல்களுக்கு கண்டிப்பாகத் தண்டனை கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்டது. இதனால் மற்ற பறவைகள் அனைத்தும் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்ந்தன.

வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 2 Nov 2015 - 0:13

மெளனப் பார்வை
------------------

சிறுகதைமௌனப் பார்வை

எதிர்வீடு அமர்க்களமாகிக் கொண்டிருந்தது. வெளியூரிலிருந்து வந்திருந்தது உறவினர் குடும்பம். ரெட்டைக் குழந்தைகளின் தாய், அவரது அம்மா, டுவின்ஸ் குழந்தைகள் என ஆம்னியில் வந்து இறங்கியுள்ளதாகத் தெரிந்து கொண்டேன்.

விடுமுறையில் வந்திருக்கும் என் பேத்தி ஸ்வேத்தாவுக்கு ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாவதுக்கு செல்ல இருக்கிறாள் இருப்புக் கொள்ளவில்லை. அவள் அம்மாவிடம் அனுமதி பெற்று சற்றைக்கெல்லாம் அங்கு போய்விட்டாள். “சுமார் ஒரு மணி நேரம் கழித்து வந்தவள் சொன்னவை என் காதில் “பளிச்’ எனக் கேட்டது. டுவின்ஸ் இருவரும் ஒன்றுபோலவே உள்ளார்கள். ஆளுக்கொரு பொம்மை தந்தால் அவர்களுக்குள் மாற்றிக் கொள்கிறார்களாம். வயது ஒன்றரை வருடங்கள் இருக்குமாம். கண் எங்கே, மூக்கு… பல்… என ஆங்கிலத்தில் கேட்டால் இருவரும் ஒன்றுபோல தொட்டுக் காட்டுகிறார்களாம். காலை நீட்டி அமர்ந்து தரையைத் தொடச் சொன்னால், தலை குனிந்து தொடுகின்றனராம். “பிளையிங் கிஸ்’ தர்றாங்களாம். அட…அட… ஸ்வேத்தா துறுதுறுப்பாய் பார்த்தவை பற்றி மூச்சுமுட்டச் சொன்னது கேட்க அவள் அம்மாவுக்கு மட்டுமல்ல எனக்கும் ஆனந்தம்.

“”நம்ம வீட்டுக்கு கூட்டிவரச் சொல்லி ஆர்த்தி ஆன்ட்டியிடம் கேட்டேன். இன்றைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுக்கட்டும். நாளைக்கு காலைல கூட்டி வர்ரேன்னாங்க…” இதுவும் ஸ்வேத்தாவின் குரல்தான்.

எனக்கு நினைவு தெரிந்த வரைக்கும் டுவின்ஸ் என எவரும் எங்கள் பரம்பரையில் கிடையாதுதான். ஒருமுறை தோட்டத்துச் செவலை மாடு ரெட்டைக் கன்றுகளை ஈன்றது. அது சமயம் அம்மா அழைத்துப் போய்க் காட்டினார். இரண்டும் ஒன்று போலவே நிறத்தில், நீள அகலத்தில், முக ஒற்றுமையில் என அதிசயம் தந்ததுதான். தாய்ப் பசு ஒரு கன்று மாற்றி மற்றதை நாவால் நக்கி தன் சந்தோஷத்தைக் காட்டியதாய்த் தெரிந்தது. “”வீட்டுக்காரம்மாவுக்கு யோகம்தான்” என அம்மாவைப் பார்த்துக் கூறிச் சென்றார்கள். கன்றுக்கு கறுப்பு கயிறில் தேங்காய் தொட்டியை ஓட்டையிட்டுக் கட்டி சுண்ணாம்பு பூசி திருஷ்டிக் கழிப்பாய் கழுத்தில் கட்டி விட்டாள் அம்மா.

“”அம்மா டுவின்ஸ் நம்ம வீட்டுக்கு வந்தா அவங்களுக்குத் தர ஒரே மாதிரி ரெண்டு பொம்மைகள் வாங்கணும்” என ஸ்வேத்தா அவள் அம்மாவிடம் அக்கறையோடு பேசிக் கொண்டு இருந்தாள். குழந்தைகள் மீது இவளுக்குத்தான் எவ்வளவு பிரியம் என மனசில் ஓடியது. ஸ்வேத்தாவை அருகில் அழைத்து, தடவி கன்னம் தொட்டு முத்தமிட்டேன்.

“தாத்தா உங்ககிட்ட ரெண்டு குட்டி-ஸைஸயும்’ தூக்கித் தர்றேன். மடி மீது வைத்துக் கொள்ளணும்’ என்றாள் ஸ்வேத்தா. “சரி’ என தலையாட்டிக் கொண்டேன்.

மறுநாள் மெல்லிய சுகமாய் வீசும் காற்றுடன் பொழுது புலர்ந்தது. ஸ்வேத்தா ஆங்கிலப் புத்தகத்திலிருந்து ஒரு ஃபோயம் வரியை படித்தாள். “லவ் வித் மதர்’ என அதன் தலைப்பு இருப்பதைச் சொன்னாள். அவள் “பாரா’வை ஒழுங்குபடுத்த நான் தமிழாக்கம் சொன்னேன் கவிதை வரிகளுக்கு. “சரீங்களா தாத்தா’ என்று மரியாதை தந்து ஸ்வேத்தா எப்போதும் பேசுவது எனக்குப் பிடித்திருந்தது.

அப்புறம் குளியல்: சாமி கும்பிடல்; டிபன் என காலை நேரம் பறந்தது. “என்ன சாமிடா’ உனக்குப் பிடிக்கும் என்ற என் கேள்விக்கு “மகாலட்சுமி’ என்ற ஸ்வேத்தாவின் பதில் என்னுள் ஆச்சர்யத்தை எழுப்பியது. முருகர், விநாயகர், ஈசுவரர், பெருமாள் இப்படியான ஒன்றைப் பதிலாய் எதிர்பார்த்த எனக்கு மகாலட்சுமி ஒரு வித்தியாசம் தந்த பதில்தான்.

என்ன டிபன் விரும்பிச் சாப்பிடுவாய்; வாரத்திற்கு எத்தனை முட்டைகள்; பள்ளியில் ஃபிரெண்ட்ஸ் பெயர், பிடித்த விளையாட்டு என ஸ்வேத்தாவிடம் கேட்டு, அவள் தரும் பதிலில் நிறைவைக் காண்பவனாய் இருந்தேன்.

எப்படியோ அம்மாவிடம் அனுமதி பெற்று, எதிர் வீடு சென்று ஸ்வேத்தா சற்றைக்கெல்லாம் “பால்’, “பிப்பீ’ என சத்தமிட்டபடிக்கு “”தாத்தா டுவின்ஸ் வந்தாச்சு” என்றாள். வீட்டில் இருந்த பொம்மைகளை அம்மாவிடம் கேட்டு, குழந்தைகளிடம் காட்டினாள் ஸ்வேத்தா. குழந்தைகளின் பேச்சுக்குரல் விட்டுவிட்டுக் கேட்டது.

இன்னும் சற்று நேரம் கடந்தது. டிபனுக்குப்பின் எனக்குப் பால் தருவது வழக்கம். பாலைக் கொண்டு வந்த ஸ்வேத்தா “சூடு ஆறணும்’ என்றாள். பாலைத் தள்ளி வைத்தவள்… “இந்தாங்க.. இவளை மடியில வச்சுங்குங்க..’ என்றாள்.
குழந்தையை நிதானமாய்த் தொட்டு, தடவி மடியில் கிடத்தினேன்.

“”தா…த்…தா சொல்லுங்க… தா…த்…தா…” என்றாள் ஸ்வேத்தா.

“”தா…த்” என்று நிறுத்தியது குழந்தை.

“”தாத்தா இவளோடு பேரு நேத்ரா… இன்னொருத்தி இருக்கால்ல… அவ பேரு ரஷ்சிகா…” என்றாள் ஸ்வேத்தா.

“”நல்ல பேருங்கதான்” என்றேன்.

“”குலதெய்வம் சாமி பேராம்… இவங்க அம்மா சொன்னாங்க” என்றாள் ஸ்வேத்தா.

குழந்தையின் தலையைக் கோதி பார்த்தேன்.

“”இப்பத்தான் மொட்டை போட்டிருக்குங்க போல” என்றேன்.

“”மூன்று மாதம் ஆச்சாம்” பதில் தந்தாள் ஸ்வேத்தா.

“”நேத்ரா… உன்னோட கண் எங்கே… காட்டு” என்ற குரலுக்குப் பின்…’ தாத்தா சரியா காட்டுறா பாருங்களேன்” என்றாள் பேத்தி ஸ்வேத்தா.

“”உம்..உம்…” என்ற சத்தம் கேட்டது.

“”தாத்தா… நேத்ரா உங்க கண்ணைத் தொட்டுக் காட்டுறா பாருங்களே…” என்றாள் ஸ்வேத்தா.
பிஞ்சுவிரல் என் கண்களின் மேல் பட்டது.

எனக்கு கண்களின் பார்வை போய் ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது ஸ்வேத்தாவுக்குத் தெரியும்; பாவம் சின்னக் குழந்தைகளுக்கு தெரியப் போகிறதா? பார்வை இல்லாதவன் பாடு புரியத்தான் போகிறதா?

மெளனமாய்ச் சிரித்தேன்.

- “மலை’ ரத்தினசாமி


வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 2 Nov 2015 - 0:15

ஜென் கதைதத்துவம்
-----------------
நாட்டை ஆள்வதற்கு வீரத்திலும், தீறத்திலும், அறிவாற்றலிலும் சிறந்த விளங்கினால் போதுமா.. போதாது என்கிறது ஜென் கதை ஒன்று.

அதில்,

raja2மன்னர் ஒருவர் குருகுலக்கல்வி கற்கும் தன் மகனைப் பார்க்க வந்தார். உடனே குரு ” மன்னரின் மகனை அழைத்து இந்த மூன்றாண்டுகளில் தியானத்தின்போது உன் காதில் என்னென்ன ஓசைகள் விழுந்தது?” எனக் கேட்டார்.

இடியோசை, அருவியின் இரைச்சல், யானையின் பிளிறல், சிங்கத்தின் கர்ச்சனை, புலியின் உறுமல்!” என்று மன்னரின் மகன் கூற, அரசரிடம், ” இன்னும் மூன்றாண்டுகள் கழித்து வாருங்கள் ” என்றார் ஞானி.

அடுத்த மூன்றாண்டு முடிந்து மன்னர் வர, இளவரசனை அழைத்தார் ஞானி. இப்போது, பறவை ஒலி, ஆடு மாடுகளின்குரல்! கேட்டதாக அவன் சொல்ல, அரசனை மேலும் மூன்றாண்டுகள் கழித்து வரச் சொன்னார் ஞானி.

அடுத்த முறை, “வண்டுகளின் ரீங்காரம், வண்ணத்து பூச்சியின் படபடப்பு!” என பதில் வர, “நாட்டை ஆளும் தகுதி உங்கள் மகனுக்கு வந்துவிட்டது. அச்சத்தால் தவிக்கும் மக்களின் மெல்லிய குரல் இனி என் மாணவனின் காதில் என்றும் ஒலிக்கும். இவனை நீங்கள் அழைத்துப் போகலாம்” என விடை தந்தார் ஞானி.
வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 2 Nov 2015 - 0:16

மேகாவும் சில எலிக் குஞ்சுகளும்!
-------------

மேகாவுக்கு திடீரென ஒரு கெட்டப் பழக்கம் ஒரு வாரமாக தொற்றிக் கொண்டிருக்கிறது. பள்ளிச் சீருடை அணிந்து, ஷூ போட்டுக் கொண்டு, டை அணிந்து, புத்தகப் பையை முதுகில் ஏற்றி கையில் உணவுக் கூடையையும் எடுத்துக் கொண்டு குடு குடு வென தன் வீட்டின் பக்கவாட்டிற்குச் சென்று விட்டு பத்து நிமிடங்கள் கழித்துதான் திரும்ப வருவாள்.

“”மேகா நேரமாச்சி… சீக்கிரம் வாம்மா. ஸ்கூல் பஸ் வந்திரும். அங்க என்ன பண்ணிட்டு இருக்க” என்று அம்மா புஷ்பா கூற அவள் சிறிதும் காது கொடுக்க மாட்டாள். காரணம் அப்பா செல்லம்.

பொதுவாக, மேகா இருந்தால் வீடு அமர்க்களப்படும். சதா பேசிக் கொண்டே இருப்பாள். வீட்டில் இருப்பவர்கள் அதைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அவள் கேட்கும் அதிரடி கேள்விகளுக்கு பதில் தெரியாமல் முழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதற்காகவே, அவள் என்னப் பேசினாலும் அனைவரும் கேட்பது போலவாவது பாவலா காட்டிக் கொண்டிருப்பார்கள்.

ஸ்கூல் மிஸ் கூட சொல்வார்கள். யு.கே.ஜி., வகுப்பு மாணவிகளிலேயே மேகாதான் சிறந்த பேச்சாளினி என்று.
ஆனால், இந்த ஒருவார காலமாக அவளது செயல் முற்றிலும் மாறிவிட்டது. அவளது பேச்சும், அதிரடி கேள்விகளும் இல்லை. அவளின் கவனம் வேறு எங்கோ திரும்பி விட்டது.

திடீர் திடீரென வீட்டின் பக்கவாட்டு பக்கத்திற்கு சென்று விடுகிறாள். பள்ளி விட்டு வந்ததும் முதல் வேலையாக அங்கு சென்று வந்த பிறகுதான் மற்ற வேலை. அதுவும் யாராவது கூப்பிட வேண்டும். அப்போதுதான் அவள் அங்கிருந்து வருவாள்.

வீட்டின் பக்கவாட்டில் என்னதான் இருக்கிறது என்று புஷ்பாவும் ஒரு முறை அல்ல, பலமுறை சுற்றிப் பார்த்து ஆராய்ந்து விட்டாள். அவளால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படியே விட்டு விடமுடியுமா? நாளைக்கு எப்படியும் கண்டுபிடித்தே தீருவது என்று முடிவு செய்து கொண்டாள் புஷ்பா.

வழக்கம் போல பள்ளிக்குக் கிளம்பிய மேகா, தன் புத்தக மூட்டையை தூக்கிக் கொண்டு கையில் உணவுக் கூடையையும் எடுத்துக் கொண்டு, தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு இல்லை என்று உறுதியான பின்பு வீட்டின் பக்கவாட்டிற்கு மெதுவாய் நழுவினாள்.

கண்டும் காணாமல் இருந்த புஷ்பா மெதுவாய் மேகாவை பின் தொடர்ந்தாள்.

குலை தள்ளி நின்ற வாழை மரத்தின் அருகில் ஒரு பொந்தின் மேல் இருந்த சில கற்களை நகர்த்தினாள் மேகா.

“கீச்… கீச்…’ என்று கத்தியவாறே சில எலிக் குட்டிகள் ஓடி வந்தன. மெதுவாய் தான் வைத்திருந்த டிபன் பாக்ஸிலிருந்து சிறிது உணவை எடுத்து அருகில் கிடந்த கொட்டாங்கச்சியில் வைத்து அதை எலிக் குட்டிகளின் அருகில் நகர்த்தி வைத்தாள்.

அவைகள் முண்டியடித்துக் கொண்டு தின்றன. அவைகளின் முதுகில் தன் பிஞ்சுக் கைகளால் வாஞ்சையுடன் தடவி ரசித்துக் கொண்டிருந்தாள். ஒரு பிஞ்சுவின் மனது இன்னொரு பிஞ்சுவுக்குத்தான் தெரியுமோ?

புஷ்பாவின் கைகள் மேகாவின் முதுகை தடவவில்லை. மாறாக, படீரென விழுந்தது அடியாய்.
துள்ளிக் குதித்து எழுந்த மேகாவின் கண்களில் கண்ணீர் கொட்டியது.

“”தினமும் இதுதான் வேலையா? ஸ்கூல் போற நேரத்தில் கை காலெல்லாம் அழுக்காக்கி கிட்டு நிக்கற” என்றவாறே இன்னொரு அடியும் கொடுத்தாள் புஷ்பா.

மேகாவின் முகத்தில் அழுகை கோபமாக மாறியது. “”இந்த எலிக் குட்டிகளோட அம்மாதான் அன்னைக்கு அப்பா, எலிப் பொறியில புடிச்சி கொன்னுட்டாரே. அப்ப, இந்தக் குட்டிகளுக்கு யாரு சோறு போடுவா?” என்று அதிரடியாய் மேகா கேட்ட கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போய் நின்றாள் புஷ்பா.

+
வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 2 Nov 2015 - 0:18

காப்புரிமை
-----------------
காப்புரிமைசிறுகதை

- உஷா தீபன்

அப்படி ஒரே பேச்சில் தங்கத்தை வேலையைவிட்டு நிறுத்திவிடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. பட்டென்று சொல்லி முடித்துக் கொண்டாள்.

அதற்கு அவள் தேர்ந்தெடுத்துக் கொண்ட இடம் குளியலறை. உள்ளே சென்று கதவைச் சாத்திக் கொண்டு ஏதாவதொரு பாதுகாப்பில் முகத்துக்கு முகம் பார்க்க வேண்டாம். என்ன உணர்ச்சி ஓடுகிறதென்று தேட வேண்டாம். பிறகு அதனால் மனக் கஷ்டமும் படவேண்டாம். தன் முகத்தில் என்ன பாவம் தெறிக்கிறது என்பதும் எதிராளிக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதனால் பகையுணர்வு என்று ஒன்று உருவாக இடமில்லை.

தப்பித்தல். ஒரு வகையில் அதுதான். அதுநாள் வரையிலான பழக்கத்திலிருந்து அதன் நெருக்கத்திலிருந்து அந்த அந்நியோன்யத்திலிருந்து பரஸ்பர நேயத்திலிருந்து. இப்படி எல்லாவற்றிலும் இருந்தும்தான். ஆனாலும் சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்பு.

இத்தோடு, இன்றோடு நறுக்கிவிட வேண்டும் என்ற வெறி. அதில் ஏதோ வெற்றி தொற்றிக் கொண்டு இருக்கிறது.

“”என்னை மீறியா ஆடற…வாலை ஒட்ட நறுக்கிடுவேன்…ஜாக்கிரதை” “”என் வீட்டுல நுழைஞ்சு என்னையே மிஞ்சப் பாக்குறியா?”   கடைசியில் நினைத்ததை முடித்தே விட்டாள் அருணா.

அதுநாள் வரையிலான மனப் போராட்டங்கள் ஓய்ந்தன. ஓய்ந்ததா அல்லது இனிமேல்தான் ஆரம்பமாகப் போகிறதா? இத்தனை வருடங்கள் அந்த வீட்டில் ஒன்றோடு ஒன்றாய் இருந்த ஒருவரை அப்படிச் சுலபமாகத் தூக்கி எறிந்தது மனதை விட்டு அத்தனை சுலபமாய்ப் போய்விடுமா என்ன? சாத்தியமில்லையே? வெளியில் வேண்டுமானால், ஒண்ணுமில்லையே என்பதுபோல் இருக்கலாம். காட்டிக் கொள்ளலாம். உள் மனதுக்குள்? “”சொல்லிட்டியா? எப்டி?” இன்னும் வியப்பும் அதிர்ச்சியும் நீங்கவில்லை இவனுக்கு.

“”அதெல்லாம் எதுக்கு? சொல்லியாச்சு…அவ்வளவுதான்…” “”அடேயப்பா, எப்டித்தான் உனக்கு வாய் வந்ததோ…எத்தனை வருஷமா இருக்காங்க…இப்படி ஒரே வார்த்தைல சொல்லிட்டேங்கிறியே?” “”அந்த நிலைமைக்குத் தள்ளுனவங்க அவுங்கதானே? அவங்கவுங்க செயல்தான் அவங்களோட எதிர்காலத்தைத் தீர்மானிக்குது. அது என் மூலமா நடந்திருக்கு. அவ்வளவுதான்” கொஞ்சமும் இரக்கமில்லாமல் கடுமையாகச் சொன்னாள்.

“”பாவம் அருணா…திடீர்னு வேலையவிட்டு நீக்கிட்டியே…பாவம்” “”அவ நடந்துக்கிற முறையே சரியில்லே. அதான் சொன்னேன்” “”நாலு குழந்தைக்குத் தாயார்டி அவ. வீட்ல அம்மா, அப்பா, மாமனார், மாமியார், புருஷன் குழந்தைகள்னு இருக்கிறவ. பெரிய சம்சாரி…” “”சம்சாரியோ, கிம்சாரியோ எப்படியிருந்தா எனக்கென்ன…எனக்குப் பிடிக்கல…அவ்வளவுதான்” இதற்கு உங்களைக் கேட்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்கிறாள்.

நிறுத்துவதற்கு என்னைக் கேட்க வேண்டாம். ஆனால் பதிலுக்கு நாளைக்கே வேறு ஆள் தேடியாக வேண்டுமே? அதற்கு என்னைத்தானே கேட்டாக வேண்டும்? என்னிடம்தானே சொல்லியாக வேண்டும். அதற்கு ஒங்க அப்பனா வந்து சேருவான்? மனதுக்குள் கேட்டுக் கொண்டான்.

“”என்ன இருந்தாலும்…இவ்ள நாள் வேலை செஞ்சவ…கொஞ்சம் மனிதநேயத்தோட நீ…” வார்த்தைகளை முடிக்கவில்லை. வெடித்தாள் அருணா. “”ஆமா…பெரிய மனித நேயம்? எல்லாம் உங்களுக்கு மட்டும்தான் இருக்கு. ஒட்டு மொத்தக் குத்தகை. ஹோல் சேல் ஏஜென்ட். உலகத்துல மத்தவங்களுக்கு எல்லாம் கிடையாது. இந்த மனித நேயத்தை நீங்களே வச்சுக்கிட்டு அழுங்க”

“”என்ன அருணா இப்படிப் பேசற?” “”பின்ன எப்படிப் பேசுறது? வேலைகள்ல வேலை வாங்குறது, கண்டிப்பா இருக்கிறவங்கள்லாம் மனித நேயம் இல்லாதவங்கன்னு அர்த்தமா? உங்களுக்கு மட்டும்தான் அதை எழுதி வச்சிருக்கா? யார் யார் தங்களோட ட்யூட்டில சரியா இருக்காங்களோ அவுங்களுக்கும் இரக்கம், கருணை, அன்பு இதெல்லாம் உண்டுதான். நல்ல குணங்கள் எல்லாமும் உங்களுக்கு மட்டும்தான் வரிச்சிருக்கா? இதெல்லாத்தையும் உள்ளடக்கியதுதான் நீங்க பெருமையடிச்சுக்கிற மனித நேயம். எங்களுக்கும் தெரியும். அதுக்காக மனித நேயம், மனித நேயம்னுட்டு இரக்கப்பட்டுக்கிட்டே இருந்தா போதுமா? வேலை நடக்குமா? அது வேறே. இது வேறே. நிர்வாகம்கிறது என்ன? எவனொருத்தன் தன் வேலைகளை, கடமைகளை, ஒழுங்கா, ஒழுக்கமா, தவறாமச் செய்து முடிக்கிறானோ, அவனுக்கு எல்லா உரிமைகளும் தானே கிடைக்கும். அதை யாரும் தடுக்க முடியாது. அதைத் தெரிஞ்சிக்குங்க.

இவள் என்ன சொல்கிறாள்? அப்படியானால் தங்கம் தன் வேலைகளை ஒழுங்காகச் செய்யவில்லை என்கிறாளா? கடமை தவறிவிட்டாள் என்கிறாளா? வெறும் மாதம் முந்நூறு ரூபாய்க்கு எவ்வளவு கடமையைச் செய்வது? ஏற்றுக் கொண்டால் மாங்கு மாங்கென்று செய்துதான் ஆக வேண்டும் என்பதுதான் சித்தாந்தமோ? வெறுமனே வேலைகளைச் செய்பவளாக மட்டுமா அவள் இருந்திருக்கிறாள்? சிறு வயதிலிருந்து இவள் குழந்தைக்கு ஒரு செவிலித்தாய் போலவும் இருந்தல்லவா கழித்திருக்கிறாள்? நம்பி சாவியைக் கொடுத்துவிட்டுப் போன காலங்கள் எத்தனை? ரெண்டு பேரும் அலுவலகம் போய்விட்ட வேளைகளில், தூசி அகற்றி, பெருக்கி, பள்ளி சென்று பையனைக் கூட்டிவந்து, அவனுக்கு உணவு கொடுத்து, பாடம் எழுத வைத்து, படிக்க வைத்து, அவனை உறங்க வைத்து, மாலை ஆபிஸ் விட்டு வருவதற்குள் மீண்டும் தயார்ப்படுத்தி ட்யூஷன் அழைத்துச் சென்று, மீண்டும் கொண்டு வந்து விட்டுவிட்டு, பிறகுதானே அவள் வீட்டிற்குச் செல்வாள்? இவையெல்லாம் எத்தனை பொறுப்புணர்ச்சிக்கான அடையாளங்கள்? ஈடுபாடு, சகிப்புத்தன்மை, அன்பு, பாசம் ஆகியவற்றிற்கு உட்பட்ட விஷயமில்லையா? இவையெல்லாமும் நிமிஷத்தில் ஒதுக்கப்பட வேண்டியவையா? தான் நினைக்கும் இந்த ஒழுக்கம், கட்டுப்பாடு இவையெல்லாம் தனக்கு மட்டும் சொந்தம் என்று இவள் நினைக்கிறளா?

பொதுவாகவே இம்மாதிரிப் பேசுபவர்களெல்லாம் அப்படித்தானே தங்களை நினைத்துக் கொண்டு நடந்து கொள்கிறார்கள்? தன்னின் பலவீனங்களை அறியாதவர்களாகத்தானே இருக்கிறார்கள்? மற்றவர்களைச் சொல்லும் இவள், தன்னையறியாமல் அந்த மாய வலைக்குள் விழுந்துவிட்டாளோ? என்னதான் யோசித்தாலும், பேசினாலும், வாதம் செய்தாலும், தங்கத்தை வேலையை விட்டு நீக்கியது சரி என்று தோன்றவில்லை இவனுக்கு.

வீட்டில் பருப்பு, எண்ணெய் என்று வைத்திருந்த பொருட்களின் அளவு குறைகிறது என்றாள். அவளா எடுத்திருப்பாள்? அவள் முகம் எடுக்கும் முகமாகத் தெரியவில்லை. “”எங்கிட்டக் கேட்டா கொடுக்க மாட்டேனா? இப்படியா சொல்லாம எடுப்பாங்க?” அருணா புலம்பியபோதும் இவன் நம்பவில்லை. பளிச்சென்று நேரில் கேட்டுவிட வேண்டியதுதானே? அதற்காக அவள் மீதான தவறுகள் நிறையச் சேர்ந்துவிட்டன போல் இப்படியா சட்டென்று நிறுத்துவது? தவறுகள் குற்றங்கள் அல்லவே? தன் வேலையுண்டு, தானுண்டு என்று போய் வந்து கொண்டிருந்தவளுக்கு இந்நிலை ஏன் வந்தது?

ஒரு வீட்டின் வருவாய் குறைந்தாலும், அவள் பாடு திண்டாட்டம்தானே? எப்படிச் சமாளிக்கப் போகிறாள்? இதெல்லாம் அருணாவுக்குத் தோன்றவில்லையா? ”

“அவுங்களோட சொந்தப் பாடெல்லாம் நினைச்சு நாம வருத்தப்பட முடியுமா? நமக்கே ஆயிரம் பாடு பாடாப் படுத்திட்டிருக்கு” சட்டென்று தும்மல் வந்தது ஒருநாள் இவனுக்கு. நச்சு நச்சென்று தும்மல் போட்டுக் கொண்டிருந்த நாளில்தான் தங்கம் சொன்னாள். “”இம்புட்டுத் தூசியோட இந்த ரூம்ல இருந்தீங்கன்னா ஏன் தும்மல் வராது? சித்த இப்படி வாங்க. சுத்தம் பண்ணிடுறேன்.” அன்று எவ்வளவு கஷ்டப்பட்டு அவனுடைய அறையைச் சுத்தம் பண்ணிக் கொடுத்தாள்.

ஒருவேளை அந்த மாதிரி செய்கையெல்லாம் இவளுக்குப் பிடிக்காமல் போய்விட்டதோ? அதில் ஏதேனும் வித்தியாசமாய் உணர்ந்து கொண்டாளோ? கேட்காமலே பலவற்றைத் தூக்கிக் கொடுக்கும் பழக்கம் உள்ள அருணா எப்படி அவளைச் சட்டென்று வேலையை விட்டு நீக்கினாள். இவன் மனது இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டுதான் இருந்தது.

அப்படி எதிர்பாராமல் தூக்கிக் கொடுப்பதையும், வந்தவரைக்கும் லாபம் என்று நினைத்து வாங்க மறுப்பவள்தானே தங்கம்? என்ன ஒரு கெளரவம் மிக்க பெண் அவள்? பையனின் பிறந்த நாளை ஞாபகம் வைத்துக்கொண்டு, அவனுக்கு மிகவும் பொருத்தமான வண்ணத்தில் விலையுயர்ந்த ஒரு சட்டையை வாங்கி வந்து நின்றாளே? அது யார் சொல்லிச் செய்தது? அந்த மனசுதானே செய்யச் சொன்னது? பின் ஏன் இவையெல்லாம் நடந்தது? இந்த வலைப் பின்னல் ஏன் சிடுக்காகியது? மனச்சுமையோடு தன் அறையிலிருந்து வெளியே வந்த இவன் உள்ளே எட்டிப் பார்த்தான்.

சுற்றிலும் அம்பாரமாய்ப் பற்றுப் பாத்திரங்களைப் பரப்பிக் கொண்டு, வழக்கத்திற்கு மாறாய் முட்டங்கால் வரை புடவையை வழித்துவிட்டுக் கொண்டு உட்கார்ந்து, சன்னதம் வந்தவள் போல் பாத்திரங்களைத் துலக்குவதில் வெகு தீவிரமாய் ஈடுபட்டிருந்தாள் அருணா.

மனதில் உள்ள ஆத்திரமும், கோபமும், விரல்களில் அழுந்தி, கரகரத்துக் கொண்டிருந்தன. “”அடேங்கப்பா….எவ்வளவு பாத்திரம் அருணா? மலையாயிருக்கே?” இவன் பிரமித்தான்.

கழுவி வைத்த பாத்திரங்களை உள்ளே எடுத்து அடுக்க ஆரம்பித்தான்.

“”யாரும் எனக்கு உதவி செய்யத் தேவையில்ல. எனக்கே பண்ணிக்கத் தெரியும்” ஒரு சிறு குழந்தையின் கோப நோக்கில் அவளைப் பரிதாபத்தோடு பார்த்தான் இவன். “”அதென்ன பார்வை? கேட் திறக்கிற சத்தம் கேட்டவுடனேயே போய் எட்டிப் பார்க்கிறது?  வேலைக்காரிதான் இந்த டயத்துக்கு வருவாள்னு தெரியும்ல…எனக்கு நினைக்கிறபோது பத்திக்கிட்டு வருது.

எவ்வளவு அசிங்கமான மனுஷன் நீங்க? இதெல்லாம் தேய்ச்சுக் கழுவிச் சுத்தமாக்கிடலாம். வெளுத்தும் போயிடும். வெள்ளையாயிடும். ஆனா மனுஷா மனசு? அதை யார் வெளுக்கிறது? யார் சுத்தமாக்குறது? அதில படிஞ்சிருக்கிற கறையை எப்படிப் போக்குறது?” சத்தமாய், அழுத்தமாய், வீரியமாய் வந்த வார்த்தைகளை ஆக்ரோஷமாய் உமிழ்ந்துவிட்டு, ஓவென்று குரல் எடுத்து அழ ஆரம்பித்தாள் அருணா.

குற்ற உணர்ச்சி பெரும் இருளாய் இவனை அழுத்த, அழும் அவளை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் வார்த்தைகளின்றி உறைந்து நின்றான் இவன்.

+
வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 2 Nov 2015 - 0:19

கொலுசு
----------
கொலுசு.. சிறுகதை
செண்பகத்தை அழைத்துக்கொண்டு தஞ்சாவூர் சென்று மனநல மருத்துவரைப் பார்த்துவிட்டுத் திரும்பினான் கேசவன்.

மினி பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்தார்கள். ஊமை வெயிலாய் காய்ந்து வியர்த்து உடம்பெல்லாம் கசகசத்தது. அவனுக்குத் தாகம் எடுத்தது. சில்லுன்னு ஏதாவது குடிக்க வேண்டும் போலிருந்தது. செண்பகத்திற்கு ரோஸ்மில்க் என்றால் கொள்ளை பிரியம்.

“”ஏ…புள்ள… தண்ணி தாவமா இருக்குல்ல. ரோஸ்மில்க் குடிக்கிறியா?” கேட்டான்.

அவனைத் திரும்பிக்கூட பார்க்காமல் “”வேணாம் போ. எல்லாத்தையும் நீயே குடி”

என்று சொல்லிவிட்டு சிறுபிள்ளைகள் கோபித்துக்கொண்டு போவது போல், அவனைவிட்டு முன்னே நடந்தாள். அவனுக்குச் சங்கடமாக இருந்தது. தனக்கும் எதுவும் வேண்டாமென அவளைத் தொடர்ந்தான்.

“”என்ன கேசவா, டாக்டர் என்ன சொன்னாங்க? சரியாக்கிடலாம்னாங்களா?” எதிர்ப்பட்ட உரக்கடை முதலாளி கேட்டார்.

“”ஆமாம் அண்ணாச்சி. இன்னும் ரெண்டு நட வாங்க. கவுன்சிலிங் முறைல பேசி குணப்படுத்திடலாம்னாங்க” என்றான்.

“”ஆமாம் கேசவா… இது சின்ன அதிர்ச்சிதான். இதை குணப்படுத்திடலாம். கவலைப்படாத. சின்னபுள்ள மாதிரி துள்ளி திரிஞ்சிக்கிட்டிருந்தது. இப்ப எப்படி ஆயிருச்சி பாரு. அது ஆசை ஆசையா வளர்த்த பசுமாடே அதுக்கு எமனா வந்துருச்சி போல…” வருத்தப்பட்டபடி சென்றார்.

இவர்கள் நின்று பேசுவதைக் கவனிக்காமல் அவள் முன்னே சென்றாள். எதிரே ஒரு பசு வேகமாக வர, அதனிடம் “ஏய்…லெட்சுமி… நீயா? நாந்தான் ஒன்னை கொன்னுட்டேனே. எப்படி வந்தே?” என்று பேசிக்கொண்டே அதனிடம் செல்ல, அது நின்று அவளை முறைத்தது. சிறுவர்களைக் கண்டால் அது ஓடஓட விரட்டும். கொம்பைக் காட்டி மிரட்டும்.

சற்று பின்னால் வந்து கொண்டிருந்த கேசவன் இதைப் பார்த்து விட்டான். “அய்யோ.. அதனெதிரே போய் நிற்கிறாளே’ என்று பதறி கீழே கிடந்த கல்லை எடுத்துக்கொண்டு வேகமாக வந்தான். அவன் வருவதைப் பார்த்து அது வேறு பக்கம் ஓடியது. செண்பகத்தை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான்.

“”என்னப்பா சொன்னாங்க?” அவன் அம்மா அஞ்சம்மாள் கேட்டாள். டாக்டர் சொன்னதைச் சொன்னான்.

“”எப்படி இருந்த புள்ள. யாரு கொள்ளிக்கண்ணு பட்டுச்சோ திருஷ்டி பட்டதுமாதிரி போயிருச்சே. லெட்சுமி லெட்சுமின்னு அந்த மாடே கதின்னு கிடப்பா. இப்ப அதால வந்ததுதான் எல்லாம். என்னமோ எல்லாத்துக்கும் நம்ம மாரியம்மாதான் தொண” புலம்பினாள்.

இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்கும் போது, உள்ளே செண்பகம் ஆணியில் மாட்டியிருந்த சங்குமணியை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டாள். அது பசுமாட்டின் கழுத்தில் கட்டியிருந்தது.

“ஏய் செண்பகம் இத கழுத்துல போடக்கூடாதுன்னு எத்தினிவாட்டி சொல்றது..?” அதட்டினான் கேசவன்.

“”நீ வாங்கிக் குடுத்த கொலுசுதானே இது. மாட்டிக்கிட்டா என்னவாம்?”

“”இது கொலுசும் இல்ல ஒரு மண்ணுமில்ல. அப்படியே இது கொலுசா இருந்தாலும் கழுத்துலயா போட்டுக்கிறது? கால்ல போட்டுக்கணும்” என்றவாறு அவளிடமிருந்து அதைப் பிடுங்கி ஆணியில் மாட்டினான்.

“”வரவர நீயும் அத்தையும் என்னெ திட்றீங்க. என்னோட லெட்சுமி மட்டும் இந்நேரம் இருந்தா ஒங்க ரெண்டு பேரையும் கொம்பாலயே முட்டியிருக்கும் தெரியுமா..?” என்றபடி கண் கசக்கி அழுதாள்.

அவளை ஆதரவாய்ப் பற்றி படுக்க வைத்து தலை கோதி விட்டான். அவள், அவன் மடியில் சிறுபிள்ளையாய் முகம் புதைத்துக் கேவினாள்.

பக்கத்து கிராமத்தில்தான் செண்பகம் பிறந்து வளர்ந்ததெல்லாம். செண்பகம் பிறந்த போதே அஞ்சம்மாள் சொல்லிவிட்டாள். “அண்ணே.. இவதான் என்னோட மருமவ. என் பையன் கேசவனுக்குத்தான் குடுக்கணும். இப்பவே சொல்லிட்டேன். ஆமாம்…” என்று அப்போதே அச்சாரமாய் குழந்தையின் கழுத்தில் தங்கச்சங்கிலி போட்டாள்.

செண்பகம் வளர்ந்து ஆளாகி கல்யாணத்திற்குத் தயாரானபோது, வெற்றிலை பாக்கு பூ பழத்தோடு சென்று பெண் கேட்டு பரிசம் போட்டாள். நடேசன் தன் சக்திக்குத் தகுந்தாற்போல் கல்யாணம் செய்து சீர் செய்து அனுப்பி வைத்தார்.

செண்பகம், மாமன் கட்டிய மஞ்சள் கயிற்றோடு புகுந்தவீடு வரும்போது பண்டம், பாத்திரம் கட்டில் மெத்தையோடு மட்டும் வரவில்லை. லட்சுமியையும் கூடவே கூட்டி வந்தாள். லட்சமி- அவள் அன்பையும் பாசத்தையும் கொட்டி ஆசை ஆசையாக வளர்த்த பசு.

ஒரு சமயம், பக்கத்து வீட்டுக்காரருக்கு மாடு வாங்குவதற்காக சந்தைக்குப் போனபோது அங்கே இந்தக் கன்றைப் பார்த்தார் நடேசன். மூன்று வயசு கன்றுக் குட்டியாய் வெள்ளை வெளேர் என்று லட்சணமாய் நின்றிருந்தது. அது நின்ற தோரணையும் முதுகுச் சுழியும் நெற்றிப் பரப்பும் அவரை ஈர்த்தது. அதை எப்படியும் வாங்கிவிட வேண்டுமென நினைத்தார். கூட வந்தவரிடம் பணம் கேட்டு, அந்தக் கன்றை வாங்கி வந்தார்.

வீட்டுக்கு வந்ததும் செண்பகம் அதைக் கட்டித் தழுவி முத்தமிட்டுக் கொஞ்சினாள். லட்சுமி என்று பெயரிட்டாள். அப்போது முதல் அவளுக்குத் தோழியாய் அது அவளையே சுற்றிச் சுற்றி வந்தது.

ஒரு மணி வாங்கி அதைக் கறுப்புக் கயிற்றில் மாட்டி அதன் இரு பக்கங்களிலும் வெண் சங்கை கோர்த்து அதன் கழுத்தில் கட்டிவிட்டாள். கிணிகிணியென்று ஒலியெழுப்பிக் கொண்டு அது அசைந்து வரும் அழகைக் கண்டு பூரித்துப் போவாள் செண்பகம். லட்சுமி என்று குரல் கேட்டால் போதும் அது எங்கேயிருந்தாலும் ஓடி வந்து அவள் முன் நிற்கும்.

உற்றத் தோழியாய் அவளுடன் கூடவே அதுவும் வளர்ந்தது. கன்று ஈன்றது. செண்பகம் வளர்ந்து ஆளாகி மாமனுக்கு வாக்கப்பட்டதும், லட்சுமியைப் பிரிய வேண்டும் என்ற துக்கம் எழுந்தது அவளுக்குள். அதைப் புரிந்து கொண்ட நடேசன், “நீ ஆசையாய் வளர்த்த பசு, அத்தை வீட்டுக்குப் போறப்ப கூடவே கூட்டிட்டுப் போ தாயி..” என்று அவளுடன் அனுப்பி வைத்தார்.

அந்த லட்சுமிதான் இன்று உயிரோடு இல்லை.

இங்கு வந்த பிறகு ஒரு தடவை கன்று ஈன்றது. பசுவும் கன்றும் நன்றாகத்தான் இருந்தது. போன சித்திரை மாதத்தில் ஊரெல்லாம் கோமாரி நோய் தாக்கியது. லட்சுமியும் செத்துப் பிழைத்தது. அப்போதிலிருந்தே அது தன் சுயத்தையும் பலத்தையும் இழந்துவிட்டது. அடிக்கடி படுத்துக் கொண்டது.

மனிதருக்குப் புதிது புதிதாய் நோய் வருவதுபோல் அதுக்கு என்ன வந்ததோ, சரியாக தீனி தின்னாமல் தண்ணீர் குடிக்காமல் கிடந்தது. நாளுக்கு நாள் இளைத்து எலும்பும் தோலுமாய் உருமாறியது.

இப்போது உள்ளூரில் மாட்டாஸ்பத்திரி கிடையாது. ஒரு வருடத்திற்கு முன் மந்திரி வந்து திறந்து வைத்தார். டாக்டர் டவுனிலிருந்து பைக்கில் வருவார். அவர் கூடவே அவருடைய உதவியாளரும் வருவார். ஒன்பது மணிக்கு வந்து பனிரெண்டு மணிக்குப் போய்விடுவார்கள். கிராம மக்களுக்கு செüகரியமாகத்தான் இருந்தது. எல்லாம் ஏழெட்டு மாதங்கள்தான். வரவர மாமியார் கழுதை போலானார் என்பது போல், அந்தக் கழுதையும் தேய்ந்து கட்டெறும்பானது போல் டாக்டர் வருவது நின்று போனது. உதவியாளர் மட்டும் வந்து கொண்டிருந்தார். பிறகு அவரும் நின்றுவிடவே, ஆஸ்பத்திரி அனாதையானது. இப்போது அந்த இடம் புதர் மண்டிக் காடாய்க்கிடக்கிறது.

கால்நடைகளுக்கு ஏதாவதொன்று என்றால் மூன்று மைல் தூரத்திலிருக்கும் டவுனுக்குப் போகவேண்டும். அப்படி போக முடியாதவர்கள் உள்ளூர் வைத்தியரிடம்தான் காட்ட வேண்டும். சதாசிவம் கைராசியான அந்தக் காலத்து வைத்தியர்தான். இருப்பினும் இந்தக் காலத்தில் புற்றீசல்போல் புதிது புதிதாகப் புறப்படும் நோய்களுக்கு எதைக்கண்டு வைத்தியம் பார்ப்பார்.

வைத்தியரை அழைத்து வந்து காட்டினாள் செண்பகம். மாட்டைப் பார்த்தார். கண்ணைப் பார்த்தார். நாக்கைப் பார்த்தார். மூலிகைச்சாறும் ஏதோ சூரணம் என்று கோலி சைஸில் நான்கு உருண்டைகளையும் கொடுத்துச் சென்றார். ஒன்றும் பலனில்லை.

தொழுவத்தில் கட்டிக்கிடக்கும் லட்சுமியைப் பார்த்துப் பார்த்து அழவே ஆரம்பித்து விட்டாள் செண்பகம். சரியாக சாப்பிடுவதுமில்லை. அவள் நிலைமையைப் பார்த்து கேசவனுக்கே என்னவோ போலிருந்தது. அந்தப் பசுமீது அவள் எப்படி பாசம் வைத்திருந்தாள். பழகி வந்தாள் என்பதை திருமணத்திற்கு முன்னமேயே பார்த்தவன் தான் அவன். அவளுடைய வருத்தமும் துக்கமும் நியாயமானதுதான் என்பதை உணர்ந்தான்.

மறுநாளே ஒரு பார வண்டியில் மாட்டை ஏற்றி டவுனுக்கு ஓட்டிச் சென்றான். டாக்டர் சோதித்துப் பார்த்தார். உதடு பிதுக்கினார்.

“மக்காத குப்பைன்னு சொல்லுவாங்களே பிளாஸ்டிக், பாலிதின் பை, இது மாதிரியான பொருளையெல்லாம் சாப்பிட்டிருக்கு. அதெல்லாம் செரிக்காம வயித்துலேயே கிடந்து புண்ணாகியிருக்கு. மாடும் நம்மள மாதிரிதானே. என்ன.. அதுக்கு வயிறு பெரிசு.. அவ்வளவுதான். மனுஷனுக்கு கேன்ஸர் வர்ற மாதிரி இதுக்கு இப்படியொரு நோய். இன்னும் ஒரு வாரம் இருந்தாலே அதிகம்’ என்று சொல்லி ஒரு ஊசி போட்டு சில மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

டாக்டர் சொன்னதை அப்படியே சொன்னால் செண்பகம் தாங்க மாட்டாள் என்பதை உணர்ந்து, “”மருந்து மாத்திரை குடுத்திருக்கார் செண்பகம். நாலு நாள் கழிச்சி ஒரு நட வரச் சொல்லியிருக்கிறார். குணப்படுத்திடலாம்னார்” என்று அப்போதைக்கு சொல்லி வைத்தான் கேசவன்.

மறுநாள் மத்தியானம் கேசவனைப் பார்க்க அவன் கூட்டாளி பழனிச்சாமி வீட்டுக்கு வந்தான். வெயில் நேரமாக இருந்ததால் செண்பகத்தை கூப்பிட்டு மோர் கொண்டு வரச் சொன்னான் கேசவன்.

“”அப்புறம்… என்ன விஷயம்… என்னைத் தேடி வந்திருக்கே?” என்றான் கேசவன்.

“”சும்மாத்தான்… இந்தப் பக்கம் போனேன். அப்படியே உன்னைப் பார்க்கலாம்னு வந்தேன்” செண்பகம் இரண்டு டம்ளரில் மோர் கொண்டு வந்து கொடுத்துவிட்டுத் திரும்பினாள்.

“”நேத்து மாட்ட ஏத்திகிட்டு ஆஸ்பத்திரி போனதா கேள்விப்பட்டேன். என்ன சொன்னார் டாக்டரு…” என்றார் பழனிச்சாமி.

மாட்டைப் பற்றி பேச்சு எழுந்ததும் உள்ளே சென்ற செண்பகம் கதவோரம் நின்று அவர்களின் பேச்சைக் காது கொடுத்தாள்.

“”அது ஒண்ணும் தேறாதுன்னுட்டார்பா. இன்னும் நாலு நாள்கூட தாங்காதுன்னுட்டார்…”

“”அடப்பாவமே உன் பொஞ்சாதி எவ்வளவு ஆசையா வளர்த்த மாடு. ஒரு குழந்தையை வளர்க்கிற மாதிரி வளர்த்துச்சின்னு நீயே அடிக்கடி சொல்லியிருக்கியே..”

“”ஆமாம். அதுக்கு என்ன செய்யறது. சீக்குன்னு வந்து படுத்தா ஒரு நாளைக்கு போக வேண்டியதுதானே. செண்பகத்தை நெனைச்சாதான் பாவமாயிருக்கு. இன்னும் நாலு நாள்ள அது சாவப் போவுதுன்னு தெரிஞ்சா அவளால தாங்கமுடியாது..”

உள்ளே கதவோரமாய் நின்று கேட்டுக் கொண்டிருந்த செண்பகத்துக்கு திக்கென்றது. “அய்யோ என் லட்சுமி செத்துடுமா?’ உள்ளுக்குள் கதறினாள். ஓடிச் சென்று தொழுவத்தில் கட்டியிருந்த லட்சுமியின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். கழுத்தில் கட்டியிருந்த மணி மெல்ல ஒலியெழுப்பியது.

அன்றிரவு, தாங்கமாட்டாமல் மாமனிடம் கேட்டேவிட்டாள் செண்பகம். “”உண்மைய சொல்லு மாமா, டாக்டர் என்ன சொன்னாரு?” அவன் ஏதேதோ சொல்லி மழுப்பப்பார்த்தான்.

“”தெரியும். எனக்கு எல்லாம் தெரியும். நீயும் பழனிச்சாமியும் பேசிக்கிட்டிருந்ததை நானும் கேட்டேன்.” என்று சொல்லி கண் கலங்கினாள்.

“ஆமாம் புள்ள என்ன செய்யறது?’ என்று சொல்லி அவனும் வருத்தப்பட்டு அவளைச் சமாதானப்படுத்தினான். ஆனால் மறுநாள் அவன் சொன்னதைக் கேட்டுத்தான் காளியாய் கத்தினாள் செண்பகம்.

“”புள்ள… எப்படியும் ரெண்டு நாள்ல இல்ல மூணு நாள்ல மாடு செத்துப் போவத்தான் போவுது. யாருக்கும் உபயோகமில்லாம மண்ணுக்குப் போறதைவிட அத வித்து காசாக்கிடலாம் புள்ள. வர்ற காசுல உன் பழைய கொலுச மாத்தி புதுசு பண்ணிடலாம். என்ன சொல்ற” என்றான்.

“”என்ன மாமா சாவக்கிடக்கிற மாட்ட யாரு வாங்குவா…?” என்றாள் புரியாமல்.

“”வளர்க்கறதுக்கு யாரும் வாங்க மாட்டாங்க புள்ள. அடி மாட்டுக்கு வித்துடலாம். பக்கத்து ஊருக்கு நாளைக்கு லாரி வருதாம். இங்கயும் ரெண்டு மாடு வெலைக்கு போவுதாம். அதோட இதையும் சேத்து குடுத்திடலாம். அப்ப எட்டாயிரத்துக்கு வாங்குன மாடு இப்ப எட்டு நூறுக்கு போனா கூட லாபம்தான் புள்ள. செத்தா மண்ணுலதான் போட்டு பொதைக்கப் போறோம். ஏதோ குடுக்கிற காசுல உன் பழைய கொலுசை மாத்திடலாம். நீயும் லட்சுமியோட ஞாபகமாக மாட்டிக்கலாம் புள்ள” நைஸôகப் பேசினான்.

அவளும் கேள்விப் பட்டிருக்கிறாள். பார்த்தும் இருக்கிறாள். லாரியில் ஏற்றி நெருக்கி கட்டி கொண்டு போவதை, கேரளா, ஆந்திரா பக்கம் கொண்டு போய் அதை வெட்டி கூறு போட்டு விற்பார்களாம். தோலை உறித்து வெளிநாட்டுக்கு அனுப்புவார்களாம்…”  அதை நினைக்கவே செண்பகத்துக்குத் துக்கமாய் இருந்தது.

“”அய்யோ என் லட்சுமிக்கு இந்த கதியா வரவேண்டும். கூடாது. அது செத்தாலும் இங்கேயே சாகட்டும். வீட்டுக் கொல்லையிலேயே புதைத்து விடுகிறேன். அங்கு போய் அது சித்ரவதைப்பட்டு சாகக் கூடாது” என்று திடமான முடிவுடன் ஒரு காரியம் செய்தாள்.

அவள் எட்டாம் வகுப்பு படிக்கும்போது அகிலா டீச்சர் காந்திஜியைப் பற்றி சொன்னது நினைவுக்கு வந்தது.

“”கருணை உள்ளம் கொணடவர்தான் காந்திஜி என்றாலும் அவரும் ஒரு தடவை ஒரு உயிரை கொலை செய்யச் சொல்லியிருக்கிறார். சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஒரு கன்றுக்குட்டியைச் சுட்டுக் கொன்றுவிடும்படி சொல்லியிருக்கிறார் அண்ணல் காந்தி. ஏன்…? ஒரு உயிர் கண்ணெதிரே கஷ்டப்படுவதைக் காண அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை..” என்று டீச்சர் சொன்னது மீண்டும் மீண்டும் அவள் உள்ளத்துள் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தது. “நாம் ஏன் செய்யக்கூடாது? அதாவது பச்சிளம் கன்று. இது ஆண்டு அனுபவித்து வயதானது. அடிமாடாய் போய் பலியாவதற்குப் பதில் இங்கேயே சாவட்டும்’ ஒரு முடிவுடன் எழுந்தாள்.

அரளிக் கொட்டையை அரைத்து அன்றிரவு லட்சுமிக்கு கொடுத்தாள். கொஞ்சம் தீவனத்துடன் சேர்த்து வாய்க்குள் வைத்து ஊட்டினாள். இரவு உறங்கவில்லை அவள். தான் செய்தது சரியா? தவறா? என்ற குழப்பத்திலேயே புரண்டு கொண்டிருந்தாள்.

விடிந்தது. தொழுவத்திற்கு சென்று பார்க்கவே பயந்தாள். இறந்து கிடக்கும் லட்சுமியைப் பார்க்கவே அவளுக்கு மனசு பதை பதைக்கும். சேசவன்தான் முதலில் எழுந்து சென்றான். பதினொரு மணிக்கெல்லாம் லாரி வரும். மாட்டை ஏற்றி அனுப்ப வேண்டும். அதற்குள் மாட்டுக்கு ஏதாவது தீனி வைக்கலாம் என்று போனான். அங்கே லட்சுமி கிடந்த கிடப்பைப் பார்த்து அதிர்ச்சியானான்.

“”ஏ புள்ளே…செண்பகம்…” சத்தம் போட்டுக் கூப்பிட்டான்.

செண்பகம் வந்து பார்த்தாள். வாயில் நுரை தள்ளி தலை தொங்கி இறந்து கிடந்தது. பார்த்தவள் பார்த்துக் கொண்டே இருந்தாள். கண் சிமிட்டாமல் விழி உயர்த்தி பார்த்தாள்.

“”மாமா ..மாமா..நானே என் லட்சுமியைக் கொன்னுட்டேன் மாமா…” என்று அழுதாள்.

லட்சுமியின் உடம்பைத் தடவிக் கொடுத்தாள். சடெடென அதன் கழுத்தில் கட்டியிருந்த, மணியைக் கழற்றி தன் கழுத்தில் போட்டுக் கொண்டு, “”அய்.. கொலுசு! மாமா கொலுசு வாங்கித்தரேன்னியே. இதானா அது? நல்லாருக்கு மாமா” என்றவள் வீட்டுக்குள் ஓடினாள். “”அத்தை… அத்தை தோ பாரு மாமா எனக்கு கொலுசு வாங்கிக் கொடுத்திருக்காரு…”

அவளுக்கு அன்றைக்கு ஏற்பட்ட அதிர்ச்சிதான்! அப்படி இப்படியென்று நான்கு மாதத்திற்கு மேலாகிவிட்டது. இன்னும் சரியாகவில்லை. ஆனால் நம்பிக்கை இருக்கிறது. விரைவில் குணப்படுத்திவிடலாம் என்று தஞ்சாவூர் டாக்டர் சொல்லியிருக்கிறார். கேசவன் நம்பிக்கையோடு இருக்கிறான். நம்பிக்கைதானே வாழ்க்கையின் ஆதாரம்.

கருணையின் அடிப்படையில் செய்த கொலைதான் என்றாலும், அது கொலைதானே! பாவ காரியம்தானே! அதனால்தான் அவள் செய்த பாவத்திற்கு தண்டனையாக சிறிது நாள் பைத்தியமாக நடமாடட்டும் என்று ஆண்டவன் விட்டு விட்டானோ என்னவோ… எனினும் கருணையே வடிவமான இறைவன், அவளைக் கைவிடமாட்டான்.

-மீனா சுந்தர்
+
வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 2 Nov 2015 - 12:33

மூத்தோர் சொல்லே மந்திரம்!
-------------
அந்தச் சாலை, சோலைக்குள் புகுந்து பாம்புபோல் வளைந்து வளைந்து செல்வதைப் பார்க்க அழகாக இருக்கும். உல்லாசப் பயணிகள், சாலை ஓரத்தில் கார் வேன்களை நிறுத்தி இயற்கை அழகை ரசிப்பார்கள். அச்சாலை ஓரத்தில் ஒரு குரங்குக் கூட்டம் பயணிகள் வீசும் பழங்களையும், தின்பண்டங்களையும் உண்டு வாழ்ந்து வந்தன.

எல்லா குரங்குகளுக்கும் சிங்கராசன் என்ற குரங்கு தலைவனாக இருந்து வந்தது. எல்லா குரங்குகளும் சிங்கராசனின் சொல்லைக் கேட்கும். ஒரு சிலவற்றைத் தவிர. சாலையோரம் ஒரு வாகனம் நின்றால் போதும். ஐந்து, ஆறு குரங்குகள் ஒன்று சேர்ந்து பயணிகளை மிரட்டி உணவுப் பொருள்களைப் பறித்து விடும். இவைகளின் போக்கு சிங்கராசுக்குப் பிடிக்காது.

மேலும், சாலையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதும், விரைவாக வரும் வண்டிகளைத் தாண்டுவதும் வாடிக்கையாகிவிட்டது. இதனால் சில பலியாவதும் உண்டு.

ஒரு நாள்…

ஒரு உல்லாசப் பயண வண்டி சாலையோரமாக நிறுத்தப்பட்டு, அதிலிருந்து ஏழெட்டுப் பேர் இறங்கி இயற்கைக் காட்சியைக் கண்டுகளித்தனர். அச்சமயம் பார்த்து, இரண்டு மூன்று குரங்குகள் வண்டிக்குள் புகுந்து தின்பண்டங்கள் மற்றும் பால்பாட்டில்களை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியேறின.

காட்டுக்குள் சென்று மற்ற குரங்குகளுக்கும் கொடுத்தன. சிங்கராசு எதையும் வாங்க மறுத்தது. உடனே அது, “”தம்பி, தங்கைகளே! மற்றவர் விருப்பப்பட்டு கொடுத்தால் தான் எப்பொருளையும் வாங்கித் தின்ன வேண்டும். இப்படி குழந்தைகளுக்குக் கொடுக்கும் பால் பாட்டிலைக் கூட எடுத்து வந்து விட்டீர்களே! குழந்தைகள் வயிற்றில் அடிப்பது பாவமல்லவா?” என்று கூறியது.

இதைக் கேட்ட காளி எனும் குரங்கு, “”ஓ! மனிதர்களுக்குப் பரிந்து பேசுகிறீர்களா? நம்மீது மனிதர்கள் பரிதாபப் படுகிறார்களா? கல்லெறிந்து துரத்துகிறார்களே! சும்மா இருங்கள்…” என்று அலட்சியமாக முறுக்கைக் கடித்துக் கொண்டே சொன்னது. சிங்கராசு மனம் நொந்தது!

“”தம்பி! எந்த நற்செயலுக்கும் பின்னால் நல்ல பலனுண்டு. எந்தக் கெட்ட காரியத்துக்கும் தீய பலன் இருக்கும். புரிந்து கொள்வாய் விரைவில்” என்றது.

“”ஹா… ஹா… ஹா..!” என்று சிங்கராசைப் பார்த்து எள்ளி நகையாடின குரங்குகள். “”கிழடு ஏதாவது சொல்லிக் கொண்டுதான் இருக்கும். வாருங்கள் விளையாடலாம்” என்று சாலைக்கு கூட்டமாகக் கிளம்பின குரங்குகள்.

அடுத்த நாள்…! காளி சொன்னது, “”டேய்… துருவா! இந்த ரோட்டை ஐந்து நிமிடத்திற்குள் யார் அதிகமாகத் தாண்டுகிறார்கள் என்று பார்ப்போமா? அதிகம் தாண்டுபவர் தான் அடுத்தத் தலைவர். இனி சிங்கராசு வேண்டாம்” என்றது.

போட்டியின் நடுவராக மயிலன் எனும் குரங்கு இருந்தது. “”தாண்டுங்கள்…! ஒன்று… இரண்டு… மூன்று…” என்று மயிலன் போட்டியை ஆரம்பித்து வைத்தது. முடிவில் காடன் என்ற குரங்கு நூற்றுத் தொண்ணூறு முறை ஓடி வெற்றிப் பெற்றது.

“”காடனுக்கு ஜே!” என்று எல்லா குரங்களும் முழக்கமிட்டன. “”இனி காடன் தான் நம் தலைவர்” என்று அதைத் தூக்கிக் கொண்டாடின. சிங்கராசு மவுனமாக இருந்தது.

அச்சமயத்தில்…

வேகமாக வந்த கார் குரங்கு கூட்டத்தின் மீது மோத, சில குரங்குகளுக்கு அடிபட்டன. சில தப்பித்து ஓடின.
ஆனால்… துரதிருஷ்டவசமாக காளி அடிபட்டு இறந்தது. மோதிய கார் நிற்காமல் சென்று விட்டது. காளியைப் பார்த்துக் குரங்குகள் கதறி அழுதன.

இதைக் கவனித்த சிங்கராசு, “”ஐயோ! காளி இறந்து விட்டதே… நான் சொன்னதைக் கேட்காமல்… சே, இப்படியா ஆக வேண்டும்” என்று நினைத்து கண்ணீர் விட்டது.

“”சிங்கராசு அண்ணே! வயதில் மூத்தவர் சொல்லை மீறினால் இப்படித்தான் நடக்கும் என்பது உண்மையாகிவிட்டது. எங்களை மன்னித்து விடுங்கள்” என்று சிங்கராசுவின் காலில் விழுந்தன குரங்குகள்.

“”தம்பி, தங்கைகளே! இனி இந்தச் சாலை நமக்குவேண்டாம். சோலைக்குள் சென்று சுதந்திரமாக வாழ்வோம். வாருங்கள்!” என்று கூறிய தலைவன் சிங்கராசுவின் சொல்லைக் கேட்டு, காட்டுக்குள் சென்றன அனைத்துக் குரங்குகளும்.


+
வாணிஸ்ரீ சிவகுமார் -
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10540
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்னச் சின்ன கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum