சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Page 27 of 27 Previous  1 ... 15 ... 25, 26, 27

Go down

Sticky சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Mon 26 Oct 2015 - 13:48

First topic message reminder :

நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.

நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.

நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.

இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.

+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Sun 27 Dec 2015 - 7:55

எதுக்குடி எடிசன் போட்டோவை வீட்ல மாட்டி
வெச்சிருக்கே...?
-
அவரு கண்டு பிடிச்ச கரண்ட் ஷாக் அடிச்சுதான் என்
மாமியாரு கை,கால் விளங்காமப் போச்சு...!
-
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Sun 27 Dec 2015 - 7:57

முருகன் கோயிலுக்கு எப்படிப் போகணும்..?
-
அலகு குத்திட்டுப் போகலாம், காவடி எடுத்திட்டுப்
போகலாம்..!
-
அதில்லீங்க, எந்த மார்க்கத்திலே போகணும்..?
-
பக்தி மார்க்கத்தில போனா ரொம்பவும் நல்லது...!
-
--ஆர்.தனபால்
-
------------------------------------------------
-
தலைவருக்கு தற்பெருமை ரொம்ப அதிகம்தான்...!
-
அதுக்காக நரகாசுரனை அழித்து மக்கள் மகிழ்ச்சியாக
தீபாவளி கொண்டாடவே நாங்கதான் காரணமுன்னு
சொல்றது ரொம்ப ஓவருங்க...!
-
--சங்கீத சரவணன்
-
--------------------------------------------------
-
நான் நாலு நாளா ஊர்ல இல்ல, ஏதும் விசேஷம் உண்டா?
-
நீ இல்லாத நாலு நாளும் ஊர்ல நல்ல மழை...!
-
--ஆர்.சிவானந்தம்
-
-----------------------------------------------
-
இன்னும் எவ்வளவு நாள்தான் இப்படியே என்னை லவ்
பண்ணுவீங்க..?
-
உன்னை விட அழபான பொண்ணு கிடைக்கிற
வரைக்கும்..!
-
>ஜாக்கி முருகேஷ்
-
------------------------------------------------
-
அந்த சாமியார் படம் தயாரிக்கப் போகிறாராம்...!
-
என்ன தலைப்பு..?
-
ஆசிரம லீலைகள்...!
-
--லெட்சுமி மணிவண்ணன்
-
----------------------------------------------------
-
நன்றி -- பாக்யா
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jun 2016 - 13:58

நல்ல பொருத்தம் தான் !
            ''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு சொல்றீங்களே ,ஏன் ?''
            ''தூக்கத்திலே  எழுந்து  நடந்தாக்கூட அந்த தம்பதிகள் ஜோடியா நடக்கிறாங்களே !''
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jun 2016 - 13:59

கொசுத் தொல்லையை  ஒழிக்க என்ன செய்தாலும் பலன் இருப்பதாகத் தெரியவில்லை ...
நம் அரசுத் தரப்பிலும் கொசு முட்டை நிலையில் இருக்கும்போதே தின்றுவிடக் கூடிய மீன்களை நீர்நிலைகளில் விட்டுப் பார்த்தார்கள் ...
கொசு முட்டைகளை மீன் தின்றதாகத் தெரியவில்லை ...
மனிதர்கள்தான் மீன்களை பிடித்து தின்று விட்டார்கள் போலிருக்கிறது ...
மீன்கள் காணாமல் போய்விட்டன ...
கொசுக்கள் பல தலைமுறைகள் தாண்டி பெருகிவிட்டன ...
ஸ்பைனிலும் இந்த தொல்லைதான் ...
முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல ...ஸ்பெயின் மரபியல் விஞ்ஞானிகள் ஆலிவ் பழக் கொசுக்களை உருவாக்கி இருக்கிறார்கள் ...
அவை ஆலிவ் மரங்களில் அடைந்துக் கிடைக்குமாம் ...
அரிப்பெடுத்த பெண் கொசுக்கள் ஆலிவ் பழ ஆண் கொசுக்களுடன் இணையுமாம்...
ஆண் கொசுவின் அணுக்கள் பெண் கொசுவை அடைந்ததும் ...
பெண் கொசு, ரத்தம் கக்காமலே இறந்து விடுமாம் ...
ஏழு கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப் பட்டால் ...சில மனித உரிமைப் போராளிகள் நம்ம ஊரில் எதிர்ப்பு தெரிவிப்பதைப் போல ...
இந்த ஆலிவ் பழக் கொசு சுற்றுச்சூழலுக்கு தீங்கு என்று போர்க்கொடி தூக்குகிறார்களாம் சில ஆராச்சியாளர்கள் ...
கொசுக்கடியில்  இருந்து மனித இனத்திற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமென்று தெரியவில்லை ...
நமது மீனவர் பிரச்சினைப் போல் நீண்டுகொண்டே செல்கிறது !
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jun 2016 - 14:02

''டாக்டர் ,பாரதியார் சாவுக்குக் காரணம் ஒரு யானைதான்னு கேள்விபட்டதில் இருந்து ,என் வீட்டுக்காரர் யானைன்னா பயந்து சாகிறார் !''
              ''அதனாலே இப்ப என்ன பிரச்சினை ?''
               ''மதயானைக் கூட்டம் படத்திற்கு கூட்டிட்டுப் போகச் சொன்னா மாட்டேங்கிறாரே !''

----
 ''பிச்சைப் போடும் போது இடது கையை  பின்னாலே  வைச்சுக்கிறீங்களே ,ஏன்?''
            ''வலது கை கொடுப்பது  இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு சொல்றாங்களே !''
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jun 2016 - 14:06

'என்னங்க ,நம்ம வீட்டிலே நீங்க மட்டும்தான் பாவக்காய் கசக்கும்னு சாப்பிடுறதேயில்லே ஆனா டெங்கு காய்ச்சல் உங்களுக்கு மட்டும்  வரமாட்டேங்குதே .எப்படி ?'' 
           ''இத்தனைக் காலமும் நான் கசப்போடுதானே வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் 

---

''உன் வீட்டுக்காரர் காலை ஏன்  கட்டில் காலோட சங்கிலி போட்டு கட்டி வச்சிருக்கே ?''
             ''இல்லைன்னா ,அவர் பாட்டுக்கு கதவை திறந்து போட்டுட்டு  தூக்கத்தில்  நடந்து போய் விடுகிறாரே !'' 

பொண்ணோட முடி முழங்கால் வரை ,வாய் ?
          ''நீதானே முடி நீளமா இருக்கிற பொண்ணு வேணும்னு கட்டிகிட்டே ,இப்போ ஏன் வருத்தப் படுறே ?''
          ''வாயும் நீளம்னு இப்போதானே தெரியுது ?''
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Tue 28 Jun 2016 - 14:09

'உன்  மருமகள் நடத்துற பியூட்டி பார்லர்  கடைக்குப் போய் எதுக்கு சண்டை போட்டே ?''
                        ''என்னைப் பார் யோகம் வரும்னு என் போட்டோ கீழே எழுதி போட்டிருக்காளே!''

---

''காலையில் சிகப்பு  ,மதியம் மஞ்சள்  ,ராத்திரி வெள்ளை மாத்திரையும்  சாப்பிடச் சொன்னா ,முடியாதுன்னு ஏன் சொல்றீங்க ?''
                        ''என் பிரச்சினையே ,எல்லா கலரும் ஒரே கலரா  தெரிவதுதானே 
 ,டாக்டர் ?''
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 30 Jun 2016 - 12:46

எனக்கொரு உண்மை தெரிந்தே ஆகணும் !    
----         
                ''தலைவருக்கு பிரஷர் கூடிப் போச்சாமே ,தேர்தலின் முடிவு எப்படி இருக்கும் என்பதாலா ?''
              ''பிடிபட்ட 570 கோடி பணம் திரும்பக் கிடைக்குமான்னு என்பதற்காகவும் இருக்கும் !''

பஸ் மெதுவா போகும்னு இப்படியும் சொல்லலாமா :)  
---           
           ''டிரைவர் சார் ,மூணு மணி நேரத்திலே போகவேண்டிய ஊருக்கு ,ஐந்து மணி நேரம் ஆகுதே,ஏன்  ?''
           ''டைம் பாஸ் ரைடர்னு எழுதி இருக்கிறதை நீங்க கவனிக்கலையா ?''

மனைவி தந்த கசப்பான அனுபவம் :)
---
         ''என்னங்க ...இன்று மாசப் பிறப்புன்னு நீங்களாவது ஞாபகப் படுத்தக்கூடாதா?காலையில் ,வாசலில்  தண்ணி தெளிச்சி ,கோலம் போட்டிருப்பேனே , ?''
         ''நல்ல நாளும் அதுவுமா தூங்கக் கூடாதுன்னு ,முதல்லே என் மூஞ்சியிலே தண்ணி தெளிப்பே ,தேவையா எனக்கு ?''

நன்றி ஜோக்காளி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 30 Jun 2016 - 12:47

இந்த கிளி ஜோதிடம் நம்பகமானது :)
---
        ''அந்த கிளி ஜோதிடர்கிட்டே மட்டும் கூட்டம் அதிகமா வருதே ,ஏன் ?''
        ''ஜோதிடர் எடுத்துக் கொடுக்கிற சீட்டை கிளியே படிச்சு சொல்லுதே !''

மகிழ்ச்சி தந்த காதலே ,துக்கமாகுமோ :)
----
காத்திருப்பது ...
காதலிக்கும்போது சுகமாய் இருக்கலாம் ...
கல்யாணம் ஆனபின் ..
ஒண்ணாம்தேதி எப்பொழுது வருமென்று 
ஏங்கத்தொடங்கும் போது ...
காத்திருத்தலின் வலி புரிகிறது !
காதலின் நிஜ முகம் தெரிகிறது !
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 30 Jun 2016 - 12:49

அரசு ஊழியர்கள் சொல்வார்களா ,வாங்க மாட்டோம் நோட்டு என்று :)    
---           
                 '' தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வைக்கப் பட்டுள்ள   இந்த பொம்மையை ,தேர்தல் முடிந்ததும் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்தால் நல்லதா ,ஏன் ?''
                ''காசு வாங்காமல் அங்கே  உள்ளவர்களும் மக்களுக்கு சேவை செய்யட்டுமே !''
----

இந்த  பொருத்தம் அமைவது கஷ்டம் !
----
            ''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு  சொல்றீங்களே ஏன் ?''
              ''தூக்கத்திலே  கூட அந்த தம்பதிகள் ஜோடியா  வாக்கிங்  போறாங்களே !''
' டிபன் ' கேரியரில் மனைவி 'சோறு' அனுப்பினால் வேண்டாம் என்பாரோ ?
          ''டிபன் பாக்சை தமிழில் ,ஓரடுக்கு என்று தாராளமா சொல்லலாமே ...இதிலே  உனக்கென்ன சந்தேகம் ?''
         ''அப்படின்னா ஐந்து அடுக்கு பாதுகாப்பு உள்ள இடத்தில் ஓரடுக்கு வெடிகுண்டு வெடிப்பதை ஏன் தடுக்க முடியலே ?''
வயசுப் பயலுங்க வாயை கிண்டலாமா :)
      ''தம்பிகளா ,எதுக்கு பூவா ,தலையா போட்டு பார்த்துக்கிட்டு இருக்கீங்க ?''
      ''உங்க பொண்ணு தலையில ரோஜாப்பூ  இன்னைக்கி  இருக்குமா, இருக்காதான்னு எங்களுக்குள் ஒரு பந்தயம் ...அதான் ...!''
---
மருத்துவர்கள் செய்யும் 'அரசியல் 'பிராக்டிஸ் :)
--
   சாவிலிருந்து காப்பாற்றி சாதிக்க வேண்டிய மருத்துவர்கள் ...
   சாதிமோதலை உண்டாக்கி மக்களை சாகடிக்கிறார்கள் !
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 8 Jul 2016 - 14:50

பிரமோஷன் எப்படி வந்ததுன்னு  தெரியுதா :)          
           ''எனக்கு சீக்கிரமே பிரமோஷன் வந்ததை  பாராட்டி , ஊது வத்தி பாக்கெட்டை பரிசா தர்றீங்களே,ஏன் ?''
             ''நீங்கதான் வத்தி வைக்கிறதில் கெட்டிகாரராச்சே !''
-----
இது ஒரு குற்றமாய்யா :)         
           ''நீங்க வெள்ளையை  கருப்பாக்கிறதா ,எங்களுக்கு தகவல் வந்திருக்கு ,அதனாலே கைது பண்றோம் !''
           ''தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க ,நான் வெள்ளை மயிருக்கு கருப்பு டை அடிக்கிற சாதாரண பார்பர் ,சார் !''  

நன்றி 'ஜோக்காளி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 8 Jul 2016 - 14:52

இவருக்கு தேச பக்தி  ஜாஸ்தி !
            ''உன் வீட்டுக்காரருக்கு புட் பால்னா   பிடிக்காதுன்னு  சொல்றே,பிறகேன் மேட்ச் பார்க்க பிரேசிலுக்கு போயிருக்கார் ?''
            '' நூறு கோடி ஜனத்தொகை உள்ள இந்தியாவில் இருந்து விளையாடத்தான் ஆளில்லை ,வேடிக்கைப் பார்க்கவுமா   ஆளில்லேன்னு யாரும் கேட்டுறக் கூடாதுன்னு தான் ! ''
-------------
ஊரே டாஸ்மாக் 'தண்ணி 'காடாயிடுச்சே !
       ''ஊர்லே மழை எல்லாம் எப்படி பெய்யுது ?''
       ''தண்ணியா தான் !''
----------------
கன்னியை கடவுளாய் காண்கிறாரோ கவிஞர் ?
'சேலைக் கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டா ,
கண்டவர்கள் சொன்னதுண்டா 'ங்கிற பாடலைக் கேட்கையில் நினைவுக்கு வருவது ...
கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர் !
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 8 Jul 2016 - 14:55

வெயில் ரொம்பத்தான் படுத்துது போலிருக்கு :)
                 ''என்னங்க ,நம்ம வேலைக்காரி தொடர்ந்து வேலைக்கு வர ,கண்டிஷன் போடுறா !''
                 ''என்னான்னு ?''
                 ''வீடு  முழுவதும் ஏர் கண்டிஷன்  ஆக்கணுமாம் !''
--------
இதுக்கு பேசாமலே இருந்து தொலைக்கலாம் !
            ''ஃபிரிட்ஜ்  வாங்கப் போன இடத்திலே உன் புருஷன்  மானத்தை வாங்கிட்டாரா ,என்ன கேட்டார் ?''
           ''ஃபிரிஜ்ஜை  எப்ப திறந்தாலும் லைட் எரிஞ்சுகிட்டே இருக்கு ,மூடினா அணையிற மாடல் இல்லையான்னு கேட்கிறாரே !''
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 8 Jul 2016 - 14:57

நிம்மதி இரு மனைவிகள் தந்தது !
            ''என்னடா சொல்றே ,ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்ட அப்புறம் தான்  நிம்மதியா இருக்கீயா ,எப்படி ?''
           ''அவங்க ரெண்டு பேரும் போட்டுக்கிற சண்டையிலே என்னை மறந்துட்டாங்களே !''
-----------
இரத்தம் தேவைப்படுவோர்க்கு தருவதில்லை ...ஆனால் ?
இரத்ததானம் செய்வதில் ...
நாம்தான் முதல் இடம் என்று பெருமைப் படமுடியாது ...
நம் விருப்பமின்றி உறிஞ்சப்படும் இரத்தத்தால் 
கொசுக்கள் தானே உயிர் வாழ்கின்றன !
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 8 Jul 2016 - 14:58

இதுக்குமா கைது பண்ணுவாங்க :)             
         '' என் பையனை எதுக்கு கண் டாக்டரிடம் காட்டச் சொல்றீங்க ?''
          ''ஹெராயினுடன்  வந்த ஹீரோ கைதுங்கிறதை ,ஹீரோயினுடன் வந்த ஹீரோ கைதுன்னு வாசிக்கிறானே !''
------------
காதலிக்கு புளிப்பா திங்கணும்னு ஆசை வந்தால்  :)
               ''சீக்கிரம் காதலி கழுத்துலே தாலியைக் கட்டினா நல்லதுன்னு ஏன் சொல்றீங்க ?''
               ''சுண்டல்லே இருக்கிற மாங்காயை மட்டும் தின்னுட்டு ,புளிப்பே இல்லைன்னு சொல்றாளே ,உன் காதலி !''
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 8 Jul 2016 - 15:00

யுஸ்டு சப்பல் ஷோ ரூம் வச்சிருப்பாரோ ?
        ''உள்ளூர்லே இருந்தும் என் கல்யாணத்திற்கு நீ ஏன் வரலே ?''
        ''செருப்புக்கு டோக்கன் குடுக்கிற  கல்யாண மகால்லே நுழையக்கூடாதுங்கிறதை என் பாலிசியா வச்சிருக்கேனே !''
----------
பழைய வர்ணனைகள் இப்போது பொருந்தாது !
 ஆப்பிள் போன்ற கன்னங்கள் என்று வர்ணிக்க முடியவில்லை ...
ஆப்பிள் மேலும் செயற்கையாய் மெழுகுப் பூச்சு !
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 8 Jul 2016 - 15:02

அதே தொழில்தான் ,பெயர்தான் வேறு :)           
               ''கொள்ளை அடித்த காசிலே  மருத்துவக்கல்லூரியைக் கட்டி இருக்காராமே,அவர் ?'' 
             '' சட்டத்துக்கு உட்பட்டு இனிமேல் கொள்ளை அடிப்பார்னு சொல்லுங்க !''
------------
எங்கும் இருப்பது காக்கா மட்டுமா ,காக்கா பிடிக்கிற ஆட்களும்தான் :)
              ''மரத்தடியிலே பைக்கை நிறுத்தினாப் போதும் ,காக்கா அசிங்கம் பண்ணிடுது !''
             ''ஆமா ,காக்கா இல்லாத இடமும் இல்லை ,அது 'கக்கா 'பண்ணாத பைக்கும் இல்லை  போலிருக்கே ! ''
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 8 Jul 2016 - 15:07

பெண்களையும் விடுவதில்லை பெண் கொசுக்கள் !
----
கொசுத் தொல்லையை  ஒழிக்க என்ன செய்தாலும் பலன் இருப்பதாகத் தெரியவில்லை ...
நம் அரசுத் தரப்பிலும் கொசு முட்டை நிலையில் இருக்கும்போதே தின்றுவிடக் கூடிய மீன்களை நீர்நிலைகளில் விட்டுப் பார்த்தார்கள் ...
கொசு முட்டைகளை மீன் தின்றதாகத் தெரியவில்லை ...
மனிதர்கள்தான் மீன்களை பிடித்து தின்று விட்டார்கள் போலிருக்கிறது ...
மீன்கள் காணாமல் போய்விட்டன ...
கொசுக்கள் பல தலைமுறைகள் தாண்டி பெருகிவிட்டன ...
ஸ்பைனிலும் இந்த தொல்லைதான் ...
முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல ...ஸ்பெயின் மரபியல் விஞ்ஞானிகள் ஆலிவ் பழக் கொசுக்களை உருவாக்கி இருக்கிறார்கள் ...
அவை ஆலிவ் மரங்களில் அடைந்துக் கிடைக்குமாம் ...
அரிப்பெடுத்த பெண் கொசுக்கள் ஆலிவ் பழ ஆண் கொசுக்களுடன் இணையுமாம்...
ஆண் கொசுவின் அணுக்கள் பெண் கொசுவை அடைந்ததும் ...
பெண் கொசு, ரத்தம் கக்காமலே இறந்து விடுமாம் ...
ஏழு கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப் பட்டால் ...சில மனித உரிமைப் போராளிகள் நம்ம ஊரில் எதிர்ப்பு தெரிவிப்பதைப் போல ...
இந்த ஆலிவ் பழக் கொசு சுற்றுச்சூழலுக்கு தீங்கு என்று போர்க்கொடி தூக்குகிறார்களாம் சில ஆராச்சியாளர்கள் ...
கொசுக்கடியில்  இருந்து மனித இனத்திற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமென்று தெரியவில்லை ...
நமது மீனவர் பிரச்சினைப் போல் நீண்டுகொண்டே செல்கிறது !

ஜோக்காளி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 8 Jul 2016 - 15:08

இவரோட கொள்கைப் பிடிப்பு  யாருக்கு வரும் ?

             ''பிச்சைப் போடும் போது இடது கையை  பின்னாலே  வைச்சுக்கிறீங்களே ,ஏன்?''
            ''வலது கை கொடுப்பது  இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு சொல்றாங்களே !''
-----------
இரண்டு  கொள்கைக்கும்  வித்தியாசம் ,,?
திட்டமிட்டு கொள்ளை அடிப்பவன் கொள்ளைக்காரன் !
திட்டத்தின் பேரால் கொள்ளை அடிப்பவன்  அரசியல்வாதி !
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 8 Jul 2016 - 15:10

டாக்டர் எதுக்கு உங்களை வெளியே போங்கன்னு சத்தம் போட்டார் ?''
        '' வயிற்றிலே வளர்றது ஆணா ,பெண்ணான்னு  சட்டப் படி அவர் சொல்லக்கூடாதாம் ...
சரி ,கருவை போகஸ் பண்ணுங்க ,நானே  பார்த்துக்கிறேன்னு  சொன்னது 
 அவருக்கு பிடிக்கலே போலிருக்கு  !''
---
அதுக்கு இதுவே தேவலே !          
               '' கிழிஞ்சு இருக்கிற  என் சட்டை ,பனியனைப்பார்த்தாலே ,என் மனைவியோட கோபம் உனக்கு புரிந்து இருக்குமே ,உன் சட்டைப் பனியன் எல்லாம் நல்லா இருக்கே !''
             ''அட நீ வேற ,நான் படுற ஊமை அடியை உன்கிட்டே எப்படி  காட்ட முடியும் ?''
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் on Fri 8 Jul 2016 - 15:11

மகனா ,மகளா ,காண்பதும் தவறா ?
தவறே இல்லை; அடி முட்டாள் தனம்.
பெண் இல்லையெனில் இவ்வுலகில் வாழ்க்கை இல்லை;

ஆண்கள் மட்டும் இருந்தால், (polyandry) மறுபடியும் வரும். ஒன்றுக்கு மேற்ப்பட கணவன்கள். எல்லாக் கதைகளும் அந்த அந்த காலத்திற்கு ஏற்ப எழுதப்பட்டது என்பது உண்மை என்பதால்...நம் கலாசாரத்தில் இருந்தது கற்றுக்கொள்ளுங்கள்; மகாபாரதம் பாண்டவர்கள் கதை அதை ஓட்டியே! 

மேலும், ஓரினச்சேர்க்கை...more rape, etc, பெருகும்.

ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பவர்கள் ஒரு நிமிடம் சிந்திக்க;
ஏனென்றால், இது நம் முன்னோர்களின் பழமொழி!
இது உண்மை! நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா?

ஒரு மகனைப் பெற்றால் உறியில் சோறு!
நாலு மகன்களைப் பெற்றால் நடுத்தெருவில் சோறு!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 27 of 27 Previous  1 ... 15 ... 25, 26, 27

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum