சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அரசரை வென்ற புளியம்பழம் :

Go down

Sticky அரசரை வென்ற புளியம்பழம் :

Post by நண்பன் on Thu 24 Dec 2015 - 10:33

அரசரை வென்ற புளியம்பழம் :




ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தார். உலகத்திலுள்ள அத்தனை பொருட்கள் மீதும் அவருக்கு ஆசை. அவர் ஆசைப்படாத பொருளே இல்லை என்று சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால் அவர் ஆசை மீதே அவருக்கு ஆசை. அதனால் மக்கள் அவரை ஆசைராஜா என்று அழைத்தார்கள். ஆசைராஜாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டாமா? உடனே அவருடைய மந்திரிகள் அவர் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வரவழைத்துக் கொடுத்தனர். அது உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் என்ன விலையாக இருந்தாலும் வரவழைத்து விடுவார்கள்.
இப்படி ஆசைராஜா உலகத்திலுள்ள எல்லாவற்றையும் அனுபவித்து விட்டார். உடைகளா? உலகத்திலேயே மிகச் சிறந்த உடைகள் அவரிடம் நிறைய இருந்தன. அவற்றையெல்லாம் உடுத்தி உடுத்தி அவருக்குச் சலிப்பு வந்துவிட்டது.
அதேபோல உலகிலே மிகச் சிறந்த உணவுகளைச் சாப்பிட ஆசை கொண்டார் ராஜா. உடனே அவருடைய மந்திரிகள் உலகத்திலுள்ள அத்தனை சிறந்த சாப்பாடுகளையும் சமைக்கும் சமையல்காரர்களை கூட்டிக்கொண்டு வந்தார்கள். ஆசை ராஜாவுக்கு விதவிதமாய் சாப்பாடு செய்து கொடுத்தார்கள். சில நாட்களிலே ஆசைராஜாவுக்கு அதிலும் சலிப்பு வந்துவிட்டது.
உலகத்திலே மிக மென்மையான மெத்தை அவருக்குக் கசந்துவிட்டது. மிகச் சிறந்த கலைப்பொருட்களும் அவருடைய ஆசைக்கு முன்னால் வெகு நாட்கள் நிற்க முடியவில்லை.
ஆசைராஜாவுக்கு இப்போது எதுவும் ஆர்வமூட்டவில்லை. அவர் எப்போதும் எரிச்சலுடனும் கோபத்துடனும் இருந்தார். இதனால் மந்திரிகள் கவலை கொண்டார்கள். உடனே நாடெங்கும் முரசு கொட்டி ஆசைராஜாவின் ஆசையை யார் தூண்டுகிறார்களோ அவர்களுக்கு ஆசைராஜாவின் அருமை மகளான இளவரசியைத் திருமணம் செய்துக் கொடுப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். கூடவே பாதி நாட்டையும் தருவதாக அறிவிப்பு செய்தார்.
இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்டு உலகத்தின் எல்லா மூலைகளிலிருந்தும் இளைஞர்கள் வந்தார்கள். ஒவ்வொருத்தரும் விதவிதமாகப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், உணவுப் பொருட்கள், கலைப் பொருட்கள், கவிதைகள் என்று ஆசைராஜாவின் முன்னால் வந்து காண்பித்தார்கள். ஆசைராஜாவுக்கு எதுவும் ஆர்வத்தைத் தூண்டவில்லை. ஆசையை மூட்டவில்லை. வந்த எல்லோரும் ஏமாற்றத்தோடு திரும்பிப் போனார்கள்.
அப்போது அரண்மனைக்குத் துணி துவைக்கும் சலவைக்காரன் சலவைத்துணியைக் கொடுக்கப்போகும்போது இளவரசியைப் பார்த்துட்டார். மணம் முடித்தால் இளவரசியைத்தான் மணம் முடிக்க வேண்டும் என்று மனதில் சபதம் எடுத்துக் கொண்டான். ஆசைராஜாவின் அறிவிப்பை அவனும் கேட்டான்.
அவனும் என்னவெல்லாமோ யோசித்துப் பார்த்தான். எதுவும் பிடிபடவில்லை. இளவரசியைக் கல்யாணம் முடிக்க முடியாமல் போய்விடுமே என்று கவலைப்பட்டான். கவலை அவனைப் பாடாய்படுத்தியது. அவன் மெலிந்து துரும்பாகி விட்டான்.
அதைப் பார்த்த அவனுடைய பாட்டி, “ ஏண்டா பேரப்புள்ள என்னடா கவலை.. எதாயிருந்தாலும் சொல்லு..” என்று கேட்டாள். கடைசியில் அவன் பாட்டியிடம் தன் கவலையைச் சொன்னான்.
அவனுடைய பாட்டியும், “ அட லூசுப் பயலே, இதுக்குத்தானா இம்புட்டு கவலைப்பட்டே…” என்று சொல்லி அவனை அருகில் அழைத்து காதில் ரகசியம் சொன்னாள். அதைக் கேட்ட அவனும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.
அன்று அரசவையில் வழக்கம்போல ஆசைராஜா எரிச்சலுடன் உட்கார்ந்திருந்தார். சற்று முன்னர் அவர் முன்னால் பல்லியையும் பாச்சாவையும் கொண்டுவந்த இரண்டு பேரை சிறையில் அடைக்கச் சொல்லிவிட்டார். மூன்றாவதாக அரண்மனைச் சலவைக்காரன் போனான். அவன் கையில் எதுவும் கொண்டு போகவில்லை. மந்திரிகள் அவனிடம், “ ராஜாவுக்கு என்ன கொண்டு வந்தாய்? ” என்று கேட்டார்கள்.
அவன் அமைதியாக அரசவையில் உள்ளவர்களை ஒரு முறை நிதானமாகப் பார்த்தான். பின்னர் மடியிலிருந்து ஒரு புளியம்பழத்தை எடுத்து எல்லோருக்கும் காண்பித்து விட்டு வாயில் வைத்து ருசித்து சப்புக் கொட்டினான். அதைப் பார்த்த ஆசைராஜாவுக்கு வாயில் தானாக எச்சில் ஊறியது. அரசவையில் இருந்த மந்திரிகள் எல்லோருடைய வாயிலும் எச்சில் வழிந்தது. ஆசைராஜா சிம்மாசனத்திலிருந்து எழுந்து ஓடி வந்தார்.
“என்னால ஆசைய அடக்க முடியல.. அடக்க முடியல..” என்று வாய்விட்டுச் சொல்லிக் கொண்டே சலவைக்காரனிடம் கையேந்தினார். அவனும் தயாராக வைத்திருந்த இன்னொரு புளியம்பழத்தை எடுத்து ஆசைராஜாவிடம் கொடுத்தான். ஆசைராஜா முகத்தைச் சுளித்து, பல் கூச சப்புக் கொட்டி புளியம்பழத்தை ருசித்தார். மந்திரிகளும் ருசித்தார்கள்.
ஆசைராஜா சொன்ன மாதிரி பாதி நாட்டையும் கொடுத்து இளவரசியையும் கல்யாணம் செய்துக் கொடுத்தார். அதன் பிறகு என்ன செய்தார் தெரியுமா? நாடெங்கும் புளிய மரங்களை நட்டு வளர்த்தார். அதன் பிறகு அவருடைய ஆசைநோய் அடங்கிவிட்டது. மக்களும் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

தேடிப்படித்ததும் பகிர்ந்ததும் உங்கள் நண்பன்
நன்றி முகநூல் The tamil hindu


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அரசரை வென்ற புளியம்பழம் :

Post by சே.குமார் on Fri 25 Dec 2015 - 19:53

ஆசை...
கதை அருமை...
பகிர்வுக்கு நன்றி நண்பன்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: அரசரை வென்ற புளியம்பழம் :

Post by நண்பன் on Sun 27 Dec 2015 - 16:09

சே.குமார் wrote:ஆசை...
கதை அருமை...
பகிர்வுக்கு நன்றி நண்பன்.

திடீர் என்று புளியம்பழம் சாப்பிட ஆசை வந்தது வாங்கி சாப்பிட்டும் விட்டேன் அதன் பிறகுதான் புளியம்பழத்தின் நன்மைகள் பற்றி இணையத்தில் தேடினேன் அதன் போது கிடைத்த கதைதான் இது பிடித்தது பகிர்ந்து கொண்டேன் நன்றி அண்ணா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அரசரை வென்ற புளியம்பழம் :

Post by Nisha on Sun 27 Dec 2015 - 16:19

நீங்க புளியம் பழம் சாப்பிட்டால் புளிகுறித்து தேடி பகிர்வீர்களோ? புளியின்  கதை அறியச்செய்ததுக்கு நன்றி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அரசரை வென்ற புளியம்பழம் :

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 27 Dec 2015 - 16:29

புளிக்கிறது ஆசை வருகிறது புளியம் பழம் வேணுமே.....




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அரசரை வென்ற புளியம்பழம் :

Post by நண்பன் on Sun 27 Dec 2015 - 17:25

Nisha wrote:நீங்க புளியம் பழம் சாப்பிட்டால் புளிகுறித்து தேடி பகிர்வீர்களோ? புளியின்  கதை அறியச்செய்ததுக்கு நன்றி.
புளியின் பயன்கள் தேடினேன் இந்தக் கதை கிடைத்தது பதிந்தேன் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அரசரை வென்ற புளியம்பழம் :

Post by நண்பன் on Sun 27 Dec 2015 - 17:30

நேசமுடன் ஹாசிம் wrote:புளிக்கிறது ஆசை வருகிறது புளியம் பழம் வேணுமே.....

நானே அதிகம் சாப்பிட்டேன் இப்போது முடிந்து விட்டது அடுத்த தடவை படம் பார்க்க போகும் போது சேப்பு நிறைய கொண்டு போய் சாப்பிடுவோம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அரசரை வென்ற புளியம்பழம் :

Post by பானுஷபானா on Mon 28 Dec 2015 - 14:00

படித்ததும் எனக்கும் நாக்கில் நீர் ஊறிவிட்டது....
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: அரசரை வென்ற புளியம்பழம் :

Post by rammalar on Tue 29 Dec 2015 - 19:49

கதை...
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: அரசரை வென்ற புளியம்பழம் :

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum