சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஈழத்து சிறுகதைகள்

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat 26 Dec 2015 - 5:48

First topic message reminder :

கூடுகள் சிதைந்தபோது.........
----------------------                                    
கோடை வெயில் அனலாய்க் கொதித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது விசிறி விட்டுப்போன காற்றில் மட்டும் லேசாய் ஈரப்பதன். வீட்டுக்குள் இருக்க அலுப்பாய் இருக்க இந்தப் பூங்காவில் வந்து அமர்ந்துகொண்டேன். எவ்வளவு நேரம்தான் அந்த நான்கு சுவர்களையும் பார்த்துக்கொண்டிருப்பது.....? கண்தொடும் தூரத்தில் பள்ளிச்   சிறுவர்கள் ஊஞ்சலாடிக்கொண்டு இருக்கிறார்கள். சற்றுத் தூரத்தில் இரண்டு இளவட்டங்கள் நெருக்கமாய் அமர்ந்து, கைகளைப் பிணைத்தபடி உலகையே மறந்து இருக்கின்றனர். அந்த மரத்திற்கு கீழ் அமர்ந்திருக்கும் சீனநாட்டுச் சோடி ஒவ்வொருநாளும் இதே நேரத்திற்கு இங்கே வந்து அமர்ந்து விடுகிறார்கள். அந்த வயது முதிர்ந்த ஆப்கான் கிழவனும், மொட்டாக்கணிந்த அவன் மனைவியும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். என்ன சந்தோசமான வாழ்க்கை! திருப்தி எல்லா முகங்களிலும் பிரதிபலிக்கின்றன. எல்லோரும் சந்தோசமாய்.... நிம்மதியாய்..... மகிழ்ச்சியாய்.....

நான் மட்டும்......?

நான் மட்டும் ஏன் இப்படி...?

உள்ளும் புறமும் ஏதோ அனல் என்னைச் சுட்டெரிப்பதாய் நெளிகிறேன்.

தனிமை...!

வெறுமை....!

நெஞ்சிலே கனம்...!

தேசந்தாண்டி வந்தாலும் இன்னும் அந்த அச்ச உணர்வுகள் என்னைவிட்டு விலகவில்லை. கனவிலும் நனவிலும் கரிய பிசாசுகள் என்னை துரத்துவதாய் ஏதோ பிரமை. 'ஓடு... ஓடு...' என்று ஏதோ ஒரு குரல் என்னை உந்தித்தள்ளுகிறது. மண்டைக்குள் வண்டு குடையுமாப்போல், ஏதோ வாகனம் ஓடுமாப்போல் சதா அதிர்வுகள்.....

கடந்து போன பலரும் தன்னந்தனியாய் உட்கார்ந்திருந்த என்னை ஒருவிதமாய்ப் பார்த்துவிட்டு நகர்ந்தனர். என் நெஞ்சுக்குள் வெடித்துச் சிதறும் ரணங்களின் வலிகள் அவர்களுக்கு எங்கே புரியப்போகிறது. சரியாக வாரப்படாத முடி..... சவரம் செய்யப்படாத முகம்.... கசங்கிப்போன உடை..... கையில் சிகரெட்டு..... நானா இது....? எனக்கே நம்பமுடியவில்லை!

அதுசரி. காலையில சாப்பிட்டனானோ......?

வெளிக்கிடேக்கை கதவை சரியாக பூட்டினனானோ......?

அது இருக்கட்டும்.

ம்.... என்ர வீடு எங்க இருக்குது?

'சீ.... நான் இங்க வந்திருக்கக் கூடாது.'

'நான் இங்க வந்திருக்கக் கூடாது'

என்னுள் வெறுப்பு மண்டுகிறது. புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை எறியத்தான் பார்த்தேன். அந்தச் சிறுமி மட்டும் என் குறுக்கே ஓடிவராமல் இருந்தால். பத்திரமாக சிகரெட்டுத் துண்டைக் கொண்டுபோய் அணைத்துவிட்டு மரநிழலில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு நடக்கிறேன்.

எங்கே போகிறேன்.....? 

என் கால்கள் நடக்கச் சொல்கின்றன.

நான் நடக்கிறேன்.

எவ்வளவு தூரம்......? எத்தனை மைல்.....?

நடக்க நான் தயார். இப்படி நடந்தே ஊர்கள் கடந்துவந்த அகதித் தமிழன் நான்.

சந்தடியற்று நீண்டுகிடக்கிறது அந்த வீதி. ஒன்றிரண்டு கார்கள் ஓசைபடாமல் ஊர்ந்து செல்கின்றன. குடிமனைகள் தெருவின் இருமருங்கும் நெருக்கமாக அமைந்திருக்கின்றன. எல்லா வீடுகளும் ஒரே மாதிரியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. எதிலும் என் மனம் ஒட்ட மறுக்கிறது. தெருவின் ஓரமாய் பாதசாரிகள் நடப்பதற்காகப் போடப்பட்டிருந்த சீமெந்துத் தரையில் என் வெறும் கால்கள் தம்போக்கில் நடக்கின்றன.

'ஓ செருப்பு அணியக்கூட மறந்து போனேனோ..!

எனக்குள் நானே சிரித்துக்கொள்கிறேன்.

என் மேலாடையின் வியர்வை நாற்றம் எனக்கே அருவருப்பாக இருக்கிறது.

'இன்றைக்காவது போய்க் குளிக்கவேணும்'

ரோட்டைக் கடந்து மறுபக்கம் செல்ல நினைக்கிறேன். ஏதே சிறு சத்தம் என்னை தலைநிமிர வைக்கிறது.

அந்தக் கார் திடீர் என்று 'பிரேக்' போட்டு நிற்கிறது. பிறகு கொஞ்சம் பின்னுக்கு எடுத்து, கொஞ்சம் விலத்தி, பிறகு வேகமாக முன் நகர்கிறது. நடுவீதியில் ஏதோவொன்று வேகமாக அசைவதாய் தெரிகிறது. என் கண்கள் அந்த இடத்தில் நிலைக்குத்தி நிற்கின்றன. படபடவென்று இறக்கையை அடிக்கிறது ஒரு சிறு குருவி.

வெறிச்சோடிக்கிடக்கும் தெருவின் நடுவுக்கு என்னையும் அறியாமல் வந்துவிடுகிறேன்.

முதுகில் கருமையும்;, வயிற்றுப்புறம் இளமஞ்சளுமாய் அந்தக் குருவி துடிதுடிக்கிறது. இன்னொரு குருவி, அதன் ஜோடியாக இருக்க வேண்டும் இந்தக் குருவியைத் தவிப்புடன் சுற்றிச் சுற்றி நடக்கிறது. விழுந்து கிடக்கும் குருவியோ தன் சிறிய செட்டைகளை படபடவென்று அடிக்கிறது. தலையை இரண்டொரு முறை தூக்கிப் பார்த்துவிட்டு அப்படியே தொப்பென்று சரிய இறந்துபோகிறது. அதன் உடல் நசிந்துபோய், மேல் இறகு பிய்ந்துபோய்க் கிடக்கிறது. லேசாக இரத்தம் கசிகிறது.

குருவியை அடித்துவிட்டுக் கார் தன் போக்கில் போய் விட்டது.

'கண் மண் தெரியாமல் ஓட்டுறான். விசரன்..... இவன் எங்க போய் பிரளப்போறானோ.....' என் உதடுகள் முணுமுணுக்கின்றன.

ஜோடிக் குருவியால் தன் இணையின் பிரிவைத் தாங்க முடியவில்லை. தன் இறகுகளை விரித்து விரித்துக் காட்டி அதைத் தன்னுடன் பறந்து வருமாறு அழைக்கிறது. இழப்பை உணர்ந்து வேதனையுடன் இரண்டடி தூரம் பறப்பதும் திருப்பி வந்து இறந்து கிடக்கும் தன் ஜோடியை அலகாற் தொட்டுப் பார்த்துச் சத்தம் போடுவதுமாக அந்தரிக்கிறது. அங்குமிங்கும் பார்த்து தலையை ஆட்டியபடி நடக்கிறது.

தூரத்தில் இன்னுமொரு கார் வருகிறது. அது வருகின்ற வேகத்தில், அதன் சக்கரங்களுக்குள் அகப்பட்டு இறந்து கிடக்கும் சிறுகுருவியின் உடல் மேலும் சிதைந்து சின்னாபின்னமாகப் போகிறதே...! என் நெஞ்சு பதறுகிறது. என்னைப் போலவே அந்தக் குருவியும் பரிதவிக்கிறது. அச்சிறுகுருவியால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தன் ஜோடியை விட்டுப் போக மனமில்லாமல் அருகில் இருந்த மரத்தில் அமர்வதுவும், பின் தன் ஜோடியின் அருகில் போய் அமர்ந்து கொள்வதுவுமாக அதன் நிலை இருக்கிறது.

நான் அவசரமானேன். தெருவோரமாய் கிடந்த கடதாசி அட்டையை எடுத்துக்கொண்டு இறந்துகிடந்த குருவியை நெருங்கினேன். என் இதயம் வெடித்துவிடும் போல இருந்தது. இரத்தமும் சதையுமாய் ஏதேதோ நினைவுகள்; என் மனதைச் சூழ்ந்துகொள்கின்றன. மரக்கிளையில் அமர்ந்தபடி  அந்தக்குருவி என் செயலைக் கண்டதும் பயத்துடன் ஆரவாரிக்கிறது. ஒரு பூவைப் போல அந்தக் குருவியை மெதுவாகத் தூக்கியெடுத்து அட்டைப் பெட்டியில் கிடத்தினேன். என் விழிகள் நீரைச் சொரிந்து கன்னங்களில் வழிந்தோடுகிறது. இரு கைகளிலும் தூக்கி, முகத்திற்கு அருகே கொண்டு வந்து அந்தக் குருவியைப் பார்க்கிறேன்.

'இப்பிடித்தான் என்ர சசியும்......'

என் ஆன்மாவுக்குள் அடக்க முடியாத வேதனை. குலுங்கிக் குலுங்கி அழுகிறேன்.

இழப்பின் வலி அறிந்தவன் நான்.

குருவியின் இழப்பில் என் இழப்பின் வேதனை!!  எவ்வளவு நேரம் அப்படியே நடுத்தெருவில் அமர்ந்திருந்து அழுதேனோ தெரியவில்லை.  

என்னை விலத்திக் கொண்டு அந்தக் கார் மெதுவாக முன்னகர்கிறது. அதில் அமர்ந்திருந்த வெள்ளையின வயோதிபர் மென்முறுவலுடன், சிறு வியப்புமாய் என்னை அங்கீகரித்துத் தலையசைத்துவிட்டுப் போவது தெரிந்தது.

ஒரு குழந்தையைப் போல பத்திரமாக அந்தக் குருவியை எடுத்து தெருவோரமாய் நின்றிருந்த மரத்தடியில் வைத்துவிட்டு அப்பால் நடக்கிறேன். அதன் இணை என்னை நன்றிப் பெருக்கோடு பார்க்கிறது.

 நடந்து நடந்து என் கால்கள் வலிக்கின்றன. அதைவிட என் மனம் வலிக்கிறதே.

அது இறக்க முடியாத சுமை. என் உயிரை அணுவணுவாய்க் கொல்லும் வேதனை. கனவிலும், நினைவிலும் சதா அந்த நிழல் விம்பங்கள். என் நினைவுகளைச் சுமந்தவள், என் கனவுகளின் உருவாக கருவான என் குழந்தை, இருவரையும் இழந்த நடைபிணம் நான்.

'நான் இங்க வந்திருக்கவே கூடாது...'

'நான் விசரன்..... நான் பைத்தியக்காரன்......' ஓலமிடும் என் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் வேகவேகமாக நடக்கிறேன்.

'ஐயோ அம்மா எனக்கு பயமாயிருக்குதம்மா. என்னைக் கட்டிப்பிடியுங்கோ அம்மா' மூத்தக்காவின் நான்கு வயது மகன் கயன் அனுங்குவது இப்போதும் என் காதுகளில் கேட்கிறது. நாலாபுறமும் குண்டுச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. அக்கா மகனை அள்ளியெடுத்து அணைத்துக்கொள்கிறா. கயன் அவள் மார்போடு ஒட்டிக்கொள்கிறான். அவன் உடல் பயத்தில் நடுங்குகிறது. கண்கள் குழிவிழுந்து, எலும்பும் தோலுமாய் கயன்....

'தம்பி இனி இங்க இருக்கேலாது போல இருக்குது. சனமெல்லாம் வெளிக்கிடுதுகள். நாங்களும் அங்கால போவம்.  எல்லாத்தையும் இழந்திட்டம். இனி இதுகளையும் இழக்க ஏலாது. பார் பொடியன் பயத்தில நடுங்கிற நடுக்கத்தை' என்கிறா மூத்தக்கா.

 

இரணைமடுவில இருந்து வெளிக்கிட்டு இது மூன்றாவது இடம். சனத்தோட சனமா அள்ளுப்பட்டுப் போய்க்கொண்டிருக்கிறம். எங்கட இடப்பெயர்வுக்கு ஒரு முடிவு இல்ல. எனக்கு சசியை நினைச்சால் தான் பயமும், கவலையும். சசிக்கு இப்ப ஏழு மாதம். வயிறு நல்லா வெளியில தெரியுது. அவளைப் பார்க்க எனக்கு நெஞ்சு பகீர் எண்டு இருக்கும். அவள் சுகம் பெலமாகப் பிள்ளையப் பெத்தெடுக்க வேணும் என்றதுதான் என்ர பிரார்த்தனையாக இருந்தது.

'அவளால வரிசையில நிக்க ஏலுமா?'

நான்தான் பாணோ, பருப்போ வரிசையில நிண்டு என்னென்டாலும் அவளுக்கு வாங்கிக்குடுக்கிறது.

'எத்தினைநாள் நான் சாப்பிட்டிட்டன் எண்டு பொய் சொல்லி அவளச் சாப்பிடப் பண்ணியிருப்பன்'

கலியாணங்கட்டி  ரெண்டு வருஷத்துக்குப் பிறகுதான் சசிக்கு வயித்தில குழந்தை தங்கினது. அந்த செய்தி கேட்ட சந்தோசம் நீடிக்காமல் இந்த நாட்டுப் பிரச்சினையும் தொடங்கிற்றுது.  அந்த நாள்த் தொடக்கம் ஆன சாப்பாடு கூட இல்லை. பயம்... பசி.... பட்டினியோட.... பிள்ளை எப்பிடி பிறக்கப் போகுதோ எண்டு சில நேரங்களில யோசிக்க பயமாகத்தான் இருந்துது.

ஒவ்வொருக்காலும் அவளப் பத்திரமா பங்கருக்குள்ள இறக்கி, ஏத்தி.....

எப்பிடி இருக்க வேண்டியவள். நாரி நோ, முதுகு நோ எண்டுகொண்டு அந்த வெறும் தரையிலயும், மண்புழுதீக்கையும் படுத்தெழும்பேக்க எனக்கு செத்திரலாம் போல இருக்கும். அவளும்தான் எலும்பும் தோலுமாய்.... ஆன சாப்பாடு கூட இல்லாமல்.....

எத்தினை இரவுகளை அவள் பங்கருக்குள்ளயே கழிச்சிருக்கிறாள். குண்டுக்குப் பயப்படுகிறத விட அவளுக்குப் பாம்பு, பூச்சியளுக்குத்தான் கூடப் பயம்.

ஆனால் கடைசியில.....

 

அடுத்தநாள் ஆமிக்காரங்கள் நாங்க இருந்த முள்ளிவாய்க்கால் பகுதியைச் சுத்திவளைச்சுட்டாங்கள். அக்கா வெளிக்கிடுவம் எண்டு சொல்லியும் யோசிச்சுக்கொண்டிருந்தது எவ்வளவு பிழையெண்டு அப்பதான் தெரிஞ்சுது. பீரங்கி, பல்குழல்.... பத்தாததுக்கு பிளேனுகளும் விட்டுவைக்க இல்லை. இந்தத் தாக்குதல் கடைசித் தாக்குதலாம் என்று எல்லாரும் கதைக்கினம். சனம் காடு கரம்பையளுக்குள்ளாலயும், கடல் பக்கத்தாலயும் வெளியேறப் போறதாய்க் கதைச்சவை. சனத்தோட சனமா நாங்களும் வெளிக்கிட்டம்.

சசிக்கு நடக்க ஏலாமல் இருந்துது. எனக்கு சில நேரம் கோபம் கூட வந்தது. இந்தப் பயங்கரத்தைத் தாண்டினால் காணும் எண்டு இருந்துது எனக்கு.

'கெதியா நடவப்பா. இன்னும் கொஞ்சத் தூரம்தான்' எண்டு அவளை அவசரப்படுத்தினேன். குண்டுகள் நாங்க வந்த பாதைகளில் எல்லாம் விழுந்து வெடிச்சுது. செத்தவெ சாக மிச்சமான ஆக்கள் நடந்துகொண்டிருந்தம்.

'ஐயோ... என்ர பிள்ளை. என்ர பிள்ளை...' திடீரென்று பின்னால வந்துகொண்டிருந்த அக்கா கத்திக் குழறினா. அக்காவின்ர கையில இருந்து ரெத்தம் வடிஞ்சுது. அவா கயனைத் தூக்கிக்கொண்டு வந்தவா. கயனுக்கு மண்டையில காயம்பட்டிருந்துது. நான் சசியின்ர கையில இருந்த உர 'பாக்'கில இருந்து ஒரு சீலையக் கிழிச்சு கயனுக்கு கட்டுப்போட்டன். 

'சசி நீ இதுகளைப் பார்க்கக்கூடாது. அங்கால போ'; மெல்லிய குரலில நான்தான் சொன்னன். அவள் விறைத்துப் போய் பார்த்துக்கொண்டு நின்றாள். தலை இல்லாத முண்டங்கள், கை கால் இழந்த உடல்கள் என்று எத்தினையக் கடந்து அவள் வந்துட்டாள். இதென்ன பெரிசா.....!!!

கட்டியிருந்த துணியையும் மீறிக்கொண்டு கயனுடைய தலையில இருந்து இரத்தம் வந்துகொண்டிருக்குது. கயன் அப்பவும் மயக்கமாகத்தான் கிடக்கிறான். பேச்சு மூச்சில்லை. அக்கா மயங்கி விழுந்திட்டா. கொஞ்ச நேரத்தால தானே கண்ணை முழிச்சிட்டா.

 

'வவுனியாவுக்குள்ள போயிட்டால் பிள்ளைக்கு ஏதாவது மருந்துபோடலாம்' யாரோ சொல்ல அத்தான் கயனைத் தூக்கிக்கொண்டு வேகவேகமாக நடந்தார். அக்காவும் அவருக்குப் பின்னால ஓடினா.

துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கிட்டவாகக் கேட்குது. ரெண்டுபக்கமும் சரியான சண்டை நடக்கிறமாதிரி சத்தம் கேக்குது. சனத்தோட சனமா நாங்களும் நடந்தம். சசியும் மூச்சிரைக்க நடந்து வந்தாள். நடக்க ஏலாமல் கஷ;டப்பட்ட சசியைப் பத்திரமா பிடிச்சுக்கொண்டு நடந்ததில நான் அக்காவையளையும் தவறவிட்டுட்டன்.

கண் எட்டுற தூரத்தில மண் மூடை அடுக்கியிருக்கிறது தெரிஞ்சுது. அது கடந்தால் அங்கால ஆமியின்;ர 'காம்ப்'தான் என்டு யாரோ சொன்னது கேட்டுது. சசியின்ர முகத்திலும் கொஞ்சம் தெம்பு வந்தமாதிரித் தெரிந்தது. நேரமும் இருட்டிக்கொண்டு வந்துது. என்ன பாம்பு, பூச்சி எங்க கிடக்குதோ தெரியாது. நான்; புதர்களை விலக்கிக்;கொண்டு சசிக்கு முன்னால நடக்கிறன். அப்பத்தான் அந்த இடிமாதிரிப் பெரிய சத்தம்....

நான் ஒரு புதருக்குள்ள விழுந்துகிடந்தன். எனக்குக் கையில காயம் பட்டு ரெத்தம் ஓடிக்கொண்டிருந்துது. கண்ணைத் திறக்க முடியாமல் கண்ணுக்குள் மண்ணும், தூசியுமாய்.... புழுதி மண்டலம் அடங்க சில நிமிசங்கள் எடுத்துது. அழுகுரல்களும், ஓலமும் தான்.....

'சசி.....'

'என்ர சசி....' நெஞ்சு பதைபதைக்க சசியைத் தேடினேன்.

சசி ஒரு தென்னைமரத்தோடு குப்புறக்கிடந்தாள். அவள் கிடந்த தோரணை....?

'ஐயோ சசி....!'

'ஓம் என்ர சசி செத்துப்போயிட்டாள்'

'என்ர சசி என்னை விட்டுட்டுப் போயிட்டாள்...'

'சசியோட சேர்ந்து வயித்தில இருந்த பிள்ளையும்........'

 

சன்னங்கள் அவளின்ர கழுத்து, நெஞ்சு, வயிறு என்று எல்லா இடங்களிலையும் துளைச்சிருந்துது. அவளின்ர ஒரு கால்ல முழங்கால் மட்டும்தான் இருந்துது. ஒரே இரத்தவெள்ளம்.

'ஐயோ சசி... என்ர சசி....'

'நான் என்ர சசிக்காக அழவா? இல்ல வயித்திலயே அழிஞ்சுபோச்சுதே அந்த என்ர குழந்தைக்காக அழவா.....?' முகத்திலயும்;, தலையிலயும் அடிச்சுக்கொண்டு அழுகிறன்.

'டொக்டர் ஆம்பிளைப் பிள்ளை என்டு சொன்னவர்...'

'நான் கண்ட கனவெல்லாம் அழிஞ்சுபோச்சுது. எனக்கினி ஆரு.....'

ஆறுதல்ப்படுத்த யாருமில்லாமல் பைத்தியக்காரனைப் போல கொஞ்சநேரம் அவளை என்ர மடியில போட்டுக்கொண்டு இருந்தன். என்ர காயத்தின்ர வலியோ, அதில இருந்து ரெத்தம் வடிகிறதோ எனக்கு தெரியேல்ல.

'எவளின்ர மடியில என்ர உயிர் போகவேணும் என்டு நினைச்சனோ, இன்றைக்கு  அவள் பிணமா என்ர மடியில.....'

துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் இப்ப இன்னும் கிட்டத்தில கேட்குது.

ஆட்கள் ஏதோ சொல்லிக்கொண்டு போகினம். என்ர காதில எதுவுமே விழேல்ல. குண்டுகள் விழுந்து வெடிச்சுப் புழுதி கிளம்புது. சன்னச் சிதறல்கள் நெருப்புப் பொறிகளாத்; தெறிக்குது. துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கிட்டவாய்க் கேட்குது. நாய், நரியளின்ர ஊளைச் சத்தங்களும் தூரத்தில கேட்குது.

'தம்பி அழுதுகொண்டிருக்க இப்ப நேரமில்ல. எழும்புங்க தம்பி' யாரோ ஒரு வயதானவர்  என்னை நெருங்கி என்ர நிலமையைப் பார்க்கிறார். என்ர கைக்காயத்தைப் பார்த்து தன்ர இத்துப்போன சாரத்தின்ர ஒரு மூலையைக் கிழிச்சுக் கட்டுப்போடுறார்.

 

'என்ர ஆருயிர் மனைவி.... அவளை இப்படியே போட்டுவிட்டு எப்படி வரஏலும். ஏழுமாதக் குழந்தை அவள் வயிற்றுக்குள்ளேயே கருகிப்பேச்சுது. இவையள் இல்லாமல் நான் மட்டும் இருந்து என்ன செய்யப்போறன்....?'

கிழவர் எங்கேயோ இருந்து ஒரு தகரத் துண்டைக் கொண்டு வாறார்.

'தம்பி இதால கிடங்கைக் கிண்டு......' என்றபடி அவர் வேகமாக அந்த தகரத் துண்டால மண்ணை கிளறுறார். எனக்குள்ள ஒரு வேகம்... அவரிட்ட இருந்து  அதைப் பிடுங்கி வேகவேகமாக மண்ணைக் கிளறுறேன். காய்ந்து வறண்ட நிலம் அவ்வளவு லேசில் குழியைத் தோண்டமுடியேல்லை. கிழவனும் ஏதோ தடியை முறிச்சு தன்ர பங்குக்கு நிலத்தை குத்தி எனக்கு உதவுறார்.

துவக்குச் சூட்டுச் சத்தம் இப்ப நல்லாக் கிட்டக் கேட்குது. சனம் விழுந்தடிச்சு ஓடுதுகள். ஆமிக்காரங்கள் ஏதோ கத்திக் கதைக்கிற சத்தம் கூடக் கேக்குது. வாகனங்களின்ர உறுமலும் கேட்குது. சனங்கள் என்னையும் கிழவனையும் பார்த்து புறுபுறுத்துக்கொண்டு போகினம்.

'அவையளுக்காக என்ர மனுசியின்ரயும்;, பிள்ளையின்டயும் உடம்பை நாய், நரி தின்னவும், காக்காய் கொத்தவும் இப்பிடியே போட்டிட்டு வரேலுமே?'

அதுக்குள்ள எரிகுண்டொன்று எங்களுக்கு அருகில் விழுந்து வெடிக்குது. ஒரு குடும்பம், இரண்டு, மூன்று குழந்தைகள் என்ர கண்ணுக்கு முன்னாலேயே எரிஞ்சு துடிதுடிக்கியினம். அதைப் பார்த்ததும் என்ர உடம்பெல்லாம் பதறத் தொடங்கிற்றுது. மரண பயம் என்னைப் பிடிச்சுட்டுது. அந்தக் கோரச் சாவைப் பார்த்ததும் எனக்கு எல்லாமே மறந்து போனது. எப்பிடியாவது ஓடித்தப்பவேணும். எனக்கு உடம்பெல்லாம் பதறத் தொடங்குது. கிழவனையும் இழுத்துக்கொண்டு நான் ஓடுறன்.

உடம்பைக் குறுக்கியும், குனிந்தபடியும், ஊர்ந்தும், தவழ்ந்தும் அந்த சென்ரிபொயின்ட்டை நெருங்கி விட்டம். சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம்..... என்ர கையைப் பிடிச்சிருந்த கிழவரினர் கைபிடி நழுவிப்போச்சுது. அவர் விழுந்துட்டார். நான் மற்ற சனத்தோட சேர்ந்து கைகளை மேல தூக்கிக்கொண்டு நடக்கிறன். இராணுவம் அப்பிடியே எங்களச் சுத்திவளைச்சுது. ஏதேதோ விசாரணைகளுக்குப் பிறகு எஞ்சியிருந்த எங்களை தங்களின்ர வாகனங்களில ஏத்திக்கொண்டு  முகாமுக்கு கொண்டுவந்தவை.

அங்கதான் பெரியக்காவைப் பார்த்தன். தலையில் காயம்பட்டிருந்த கயனும் இறந்து போய் அத்தான்தான்; வழியில ஒரு பாழுங்கிணத்துக்குள்ள அவனை தூக்கிப் போட்டுட்டு வந்தவராம்.

'நரியள் குதறாமல் என்ர மகன் பத்திரமா இருப்பான்..' அத்தான்  தலையில் கைவைத்தபடி திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறார்;. சசியின்ர செய்தி கேட்டதும் அக்காவால அழக்கூட முடியேல்லை. யாருக்காக அழுகிறது? எதை நினைச்சு அழுகிறது எண்டு தெரியேல்ல.

பிறகு முகாம் வாழ்க்கை, விசாரணைகள் எண்டு தொடர, அக்காதான் முகாமுக்கு வெளியில போய் என்னை வெளிநாட்டுக்கு அனுப்ப வேணும் எண்டு காரியங்களைச் செய்தவா. என்ர அம்மாவும், பெரியண்ணன் குடும்பம், சின்னக்கா குடும்பம், தங்கச்சி எல்லாரும் இங்க கனடாவிலதானே இருக்கினம்.

'ஆரு இருந்தென்ன என்ர சசியும்... பிள்ளையும் எனக்கில்லையே.....'

மூத்தக்கா தான் என்னை சின்னன்னில இருந்து வளர்த்தவா. என்னில சரியான பாசம்.

'நான் பெத்த பிள்ளையத் தான் இழந்திட்டன். உன்னையும் இழக்க என்னால ஏலாது' எண்டு என்னோட பிடிவாதமா நிண்டு என்னை இங்க அனுப்பிவைச்சது அவாதான்.

என்ர மனம் முழுக்க அந்த முள்ளிவாய்க்கால் காட்டுக்குள்ள தான் சுத்திக்கொண்டு இருக்குது.

'என்ர சசி.... என்ர பிள்ளை...'

'இவ்வளவு காலமும் எனக்குச் சோறு போட்டுத் தாய்க்கு தாயாய் இருந்து என்னைப் பார்த்தவள். அவளின்ர உடம்ப நல்ல விதத்தில அடக்கம் செய்யக் கூட என்னால முடியேல்லையே...'

'பாவி...'

'நான் பாவி.... மகா பாவி. அந்தக் குழந்தைய கையில வைச்சுக் கொஞ்சத் தான் ஏலாமல் போச்சு. கடைசியா நாய் நரியள் தான்...'

'ஐயோ... நினைச்சால் எனக்குப் பைத்தியம் தான் பிடிக்குது'

'நான் ஏன் இங்க வந்தன். நான் சுயநலக்காரன், எனக்கு என்ர உயிர்தான் பெரிசாப்போச்சுது.... சீ.... நான் விசரன்...'

'நான் விசரன்...'

என் கால்கள் வலியெடுக்கின்றன. நான் நடக்கிறேன்.

நடந்துகொண்டே இருக்கிறேன்.

 

( 'ஞானம்' சஞ்சிகை நடாத்திய, புலோலியூர் க. சதாசிவம்; ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் முதலாம் பரிசு பெற்ற கதை)

ஞானம்
உயிரோசை,
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


Sticky Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun 27 Dec 2015 - 15:14

நேசமுடன் ஹாசிம் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:ஆலமரம்
----------------
தாளையடி சபாரத்தினம்
-----------------
மரம் என்பதும் ஓர் உயிர் அதனை உறவாக கொண்டதால் அதன் பிரிவு தாங்காமால் அதனோடு தன் உயிர்மாக்கிறாள் என்று கதைக்கு உயிர்கொடுத்திருக்கும் விதம் அழகு பாராட்டத்தக்கது பகிர்வுக்கு நன்றி
உங்கள் கதை ஆர்வமும் அழகு 
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun 27 Dec 2015 - 17:37

மாறித் ஹிப்சன்
---------------------------
தமயந்தி
---------------------------
மணி காலை ஐந்து.

மாறித் ஹிப்சன் எழுந்து, தனது பிடரியைத் திருகும்வரை கட்டில் பீடத்திலிருந்து மணி ஐந்து என்பதைச் சொல்லிக்கொண்டேயிருந்தது அந்தச் சிறிய, சதுர வெள்ளை மணிக் கூடு. அது எதிர்பார்த்ததுபோலவே மூன்று சத்தத்தின்பின் மாறித் ஹிப்சன் அதன் பிடரியைத் திருகி சத்தத்தை நிறுத்தினாள்.

சன்னல் திரைச்சீலையை மெதுவாக நீக்கி தெருவை நோட்டமிட்டாள் கிழவி. இருள் கலையாத காலை. ஆனாலும் தெருவிளக்குகளின் மெல்லிய வெளிச்சத் துண்டுகளை பன்மடங்காக்கி கண்களுக்கெட்டிய தூரம்வரை பட்டப்பகல்போல் மிளிரச் செய்து கொண்டிருந்தது படர்பனி. மார்கழிப்பனி இந்தமுறை நத்தாருக்கு முன்பே தாராளமாய் கொட்டியிருந்தது. தெருக்கள், இலைகளைத் தொலைத்த மரக் கிளைகள், வீட்டுக் கூரைகள், தெருவோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனக்கூட்டத்தின் மொட்டந் தலைகள் எல்லாம் பனி படர்ந்திருந்தது.

கிழவியின் வீடு பழையவீடாதலால் சன்னல், கதவுத் துவாரங்களால் மெல்லிய குளிர் உள்ளே வரத்தான் செய்தது. கிழவிக்கு அதெல்லாம் ஒரு பொருட்டல்ல. கம்பீரமாகவே எழுந்து தனது பணியில் இயங்கலானாள். கிழவியின் சுறுசுறுப்பைப் பார்க்கும் எவரும் அவள் அறுபத்தைந்து வயதைக் கடந்துவிட்டவளென்பதை நம்ப மறுப்பார்கள். போர்க் காலக் குமரியாய் அவள் இருந்தபோது எப்படி சுறுசுறுப்பாய் இயங்கினாளோ, அதே கதியில் இப்போதும் இயங்கிக் கொண்டிருந்தாள்.

விவிலியத்தைத் திறந்து அன்றைய வாசகத்தை மவுனமாய் வாசித்தபின் அதனை முத்தமிட்டு மூடி வைத்தாள். பின் தனது கட்டாயமான காலைப் பணியை கிழவி விரை வாகத் தொடங்கினாள். அளவான தண்ணீரை அடுப்பில் கொதிக்க வைத்தாள். கொதித்த தண்ணீரில் சிற்றரிசியை கழுவிப் போட்டாள். பதமாய் வந்தபின் குளிர்ப் பெட்டியிலிருந்த பால்ப்பெட்டியை எடுத்தாள். அளவாய் விட்டாள். சிறிது நேரத்தில் இறக்கி குடுவைக் கிண்ணத்திலிட்டாள். அதனை தூக்குப் பையிலிட்டு, குளிருடைக்குள் தன்னைப் புகுத்திக்கொண்டு, பனிக்காலச் சப்பாத்தையும் கொழுவிக்கொண்டு தெருவில் இறங்கி நடக்கலானாள்.

அவர்கள் எந்தெந்த வீடுகளில் இருக்கிறார்களென அறிந்து முன்னமே ஒவ்வொரு வீட்டு
வாயிற்படியருகில் ஒவ்வொரு கிண்ணத்தை வைத்திருந்தாள். அந்தக் கிண்ணங்களிலெல்லாம் சிற்றரிசிக் கஞ்சியை அளவளவாய் இட்டபடி அவளது அன்றைய பணி தொடரலானது.

கற்குடாத்தெருவிலிருந்து தனது பணியைத் தொடங்கியவள், சின்னக்கோயில்த்தெரு, குரவர்வீதி, மேட்டுத்தெரு, பூங்காவீதி, பேத்தர் வீதியென நீண்டு, கடற்கரைவீதி, சந்தைத்தெரு, குறுக்குவீதியென சென்று, ஊலாவ் வீதி, துரொண்ணிங் வீதியென முடித்துவிட்டாள். இறுதித் தெரு கீழ்த்தெரு. வந்தவள் திகைத்தாள். நேற்று கோப்பையிலிட்ட கஞ்சி அப்படியே இருந்தது. பன்னிரு தெருக்களிலும் மொத்தம் நாற்பத்தியேழு கோப்பைகள். கீழ்த்தெருவிலிருக்கும் இந்த கோப்பையில் மட்டும் நேற்றைய கஞ்சி அப்படியே இருக்கிறது. அப்படியானால்....? மறைச்சிக்கு
என்ன நடந்தது....?

மறைச்சி, கறுப்பி, கறுப்பன், பஞ்சு, கற்கண், வெள்ளைப்புலி..... இப்படி அந்த பன்னிரு
தெருக்களிலுமுள்ள அனைத்துப் பூனைகளுக்கும் தன்னிஸ்டம்போல் ஒவ்வொரு பெயராய் இட்டு, அழைத்து வந்தாள் கிழவி.

இன்று இந்த மறைச்சிக்கு என்ன நடந்தது...? சிந்தித்தவளாய் கிழவி மறைச்சியின் தட்டிலிருந்த பழையதைக் கொட்டிவிட்டு, தட்டைத் துடைத்து இன்று கொண்டுவந்த கஞ்சியில் மீண்டும் புதிதாய் இட்டாள். அவளது இதயம் படபடத்தது. நேற்றைய கஞ்சி அப்படியே இருக்கிறதென்றால் மறைச்சிக்கு எழுந்து நடக்க முடியாத சுகயீனமாயிருக்க வேண்டும், அல்லது மறைச்சி வாழ்ந்த வீட்டுக்காரர் எங்காவது நெடுநாள் பயணித்ததால் மறைச்சியையும் கொண்டுபோயிருக்க வேண்டும். அதுவுமில்லையேல்....?! கிழவியால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியவில்லை. மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. பனிக்காலச் சூரியன் தனது தலையை காட்டாமலும், மேலெழுந்து வராமலும் இன்று மெல்லிய வெய்யிலை விசிறி எறிந்து
கொண்டிருந்தான்.

வீடு வந்து குடுவைக் கிண்ணத்தைக் கழுவி வைத்தாள். அடுக்களைக்குள்ளிருந்த
நாற்காலியிலே அப்படியே அமர்ந்தாள். அடுக்களைச் சன்னலூடாக வெளியே விழியெறிந்தாள். பச்சையப்பிள் மரத்தின் இலைகளற்ற கிளைகளில் கவிந்திருந்த பனி உருகி சொட்டுச் சொட்டாய் நிலத்தை நோக்கி விழுந்துகொண்டிருந்தது. கீழே விழும் ஒவ்வொரு துளியும் நிலத்தில் படர்ந்திருந்த பனிப்படையின்மேல் ஓட்டைகளிட்டு தம்மை அதனுள் புதைத்துக்கொண்டிருந்தன. கிழவியின் விழிகளும் அவளையும் அறியாமல் பனித்து உதிர்த்தன. இருக்கையை விட்டெழுந்து அறைக்குள் சென்றவள் விவிலியத்தை எடுத்து இன்றைய வாசகத்தை மீண்டும் வாசித்தாள். கண்களால் நீர் சொரிந்தது.

வீட்டில் இருப்புக்கொள்ள முடியவில்லை அவளால். மறைச்சியின் வீட்டுக்குச் சென்றாள். நேற்றையிலிருந்து தங்கள் பூனையைத் தாங்களும் காணவில்லைத்தான் என்ற மறைச்சி வீட்டுக்காரரின் பதில் பொறுப்பற்ற பதிலாய் கிழவிக்குப் பட்டதுடன், கோபமும் வந்தது. அவர்களிடம் விடைபெற்று நடக்கலானாள்.

சாயங்காலம் மூன்றுமணி. மறைச்சியை எல்லா இடமும் தேடிக் களைத்து மாறித் கீழ்த்தெருவின் சிறுவர் விளையாட்டுத் திடலின் அருகாமையிலுள்ள பஸ்தரிப்பு நிலையத்தினுள் இருக்கும் இருக்கையில் வந்தமர்ந்தாள். விளையாட்டுத் திடலின் கரையோரமாய் நீளத்துக்கும் வேலிபோல் அமைந்திருந்த பனி உருகிய புதருக்குள்ளிருந்து கிழவி மாறித்தின் கண்களில் தற்செயலாய்ப் பட்ட ஒன்று அவளை கதி கலங்க வைத்தது.

மெல்ல எழுந்து சென்றாள். அண்மித்தாள். அறிந்துகொண்டாள். அதிர்ந்தாள். அழுதாள். இரு கைகளாலும் தனது கன்னங்களிரண்டிலும் பலமுறை அறைந்தாள். அழுதாள். அழுதாள்.

வீதியைக் கடக்கும்போது ஏதோ வாகனம் மறைச்சியைத் தாக்கியிருக்கவேண்டும்.
கடுங்காயங்களோடு ஓடிவந்து புதருக்குள் படுத்த மறைச்சி அப்படியே உயிரையும் விட்டது.

சமாதி. ஹிப்சனின் சமாதி. அதனருகில் மறைச்சிக்கும்.

புத்தம்புது றோசாப்பூ வளையம் மறைச்சியின் குட்டிச் சமாதியின் நெஞ்சில்
சிரித்தழுதபடியிருந்தது.

மாறித் தனதொரு குழந்தையை கணவனுக்கருகில் புதைத்த துக்கத்தோடு......
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun 27 Dec 2015 - 17:41

புறமுதுகுகள்
----------------------
அல் அஸூமத்
--------------------
போர் நிலத்தவர்கள் தங்களின் அனுபவங்களைப் பற்றி என்னிடம் கூறும் போதெல்லாம், ‘அடடா! அப்படியொரு மண்ணில் இல்லாமல் இருக்கிறேனே’ என்றொரு கொடுத்துவைக்காத ஏக்கம் சீண்டிக்கொண்டே இருந்தது.

குறைந்த பட்சம் ஒரு பத்திரிகையாளனாகவாவது இருந்திருக்கலாம்;....

இதில் வேறு எனக்கு அடையாள அட்டையும் இல்லை.  ஜேவீப்பீக்காரர்கள் பிடுங்கிக்கொள்ளவுமில்லை. ஜேப்படிக்காரர்கள் தடவிக்கொள்ளவுமில்லை.  அடையாள  அட்டைக்கு  எழுதாமலேயே விட்டவன் நான்.

நாட்டின் ஒரு பகுதியினருக்கு - குறிப்பாக எனக்குப் பிரஜாவுரிமையே இல்லாதபோது இந்த அடையாள அட்டையா ஒரு கேடு?

இந்த அட்டை விஷயத்தில் எனக்குத்தான் நஷ்டம் என்பது இவளின் கண்டுபிடிப்பு!

ஏதோ போன மாதம்தான் எனக்கும் பிரஜாவுரிமை வந்திருக்கிறது -  கத்தியின்றி இரத்தமின்றி! அடையாள அட்டையைப்பற்றி இனி யோசிக்கலாம் - சாவதற்காகவாவது!

போர்க்களத்துக்குப் போகும் பாக்கியம் திடீரென்று எனக்கும் ஏற்பட்டது.  என் மனஏக்கம் மானசீகமாக சத்தியநாதனுக்குள் புகுந்திருக்க வேண்டும். எழுதியிருந்தான்.

நூற்றெழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பேயே இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த பரம்பரையைச் சேர்ந்தவர்கள் நாங்கள்.  அது இன்னும் தொடர்கிறது.  'இடமிலர்'- அதாவது ‘இடம் இல்லாதவர்கள்’ என்பதுதான் ‘தமிழர்’ என்று மருவியதோ என்ன இழவோ தெரியவில்லை.

‘அன்லக்கி டபள் செவ’னுடைய திருஷ்டிபட்டுப் புலம் பெயர்ந்து கிழக்கே போன மலையகத்தான் சத்தியநாதன்.  அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நான் கொழும்புப் பக்கமாக ஓடி வந்திருந்தேன்.

நான் மூட்டை முடிச்சில்லாமல் ஓடி வந்தவன். சத்தியநாதன் குடும்ப மூட்டையோடு லொறிபிடித்துப் போனவன்.

செங்கலடியில் நிம்மதியாக இருந்தான். அமைதி மைந்தனின் அமைதிப்படை தமிழர்களின் சில விஷயங்களுக்குச் சமாதி கட்ட இங்கே வரும்வரையில்.

யார் எப்படியானாலும் தன் ஒரே மகளைக் காப்பாற்ற வேண்டிய கடமை அவனுக்கு இருந்தது.

எக்கச்சக்கமாகக் கடன்பட்டு பதுளையில் ஒரு மாட்டை - மன்னிக்கவும் மாப்பிள்ளையை வாங்கினான்.

மாட்டை வண்டியில் பூட்டும் வைபவத்திற்கு என்னாற் போக முடியவில்லை.  தந்தியைத்தான் அனுப்பி வைத்தேன்.  ஏனென்றால் அவன் கேட்டிருந்த ஐம்பதினாயிரம் அதுவரை என்னிடம் வந்திருக்கவில்லை.

தோட்டத்தில் இருந்த காலத்தில் இவனுடைய பணப்பெட்டியின் மீதுதான் நான் படுத்துக்கிடந்ததே.  இப்போது கொஞ்சம் சரிவு.  நிமிர்த்த வேண்டியது என் கடன். பணம் புரண்டபோது கல்யாணம் முடிந்து இரண்டு மூன்று மாதமாகி இருந்தது.  அவனுக்கு அறிவிக்காமலேயே புறப்பட்டேன்.

சத்தியநாதன் மகிழ்ச்சியால் நெகிழ்ந்துபோனான்.  தடல்புடலாகத் தன் கண்ணாடிக் கடையை மூடிவிட்டு வீட்டுக்குக் கூட்டிப்போனான்.

வீடு வெறிச்சிட்டுக் கிடந்தது.  பாதுகாப்புக் கருதி இவனைத் தவிர எல்லாருமே மாப்பிள்ளையின் ஊருக்குப் போயிருந்தார்கள்.

சமையல், அது - இதென்று சத்தியநாதன் இயங்கிக்கொண்டே கதைத்தான்.  மாலை மூன்று மணிக்குச் சாப்பிட்டோம்.  கதைத்தபடியே ஓய்வு.  கதைத்தபடியே ஐந்து - ஐந்தரைக்கு ஒரு டீ. கதைத்தபடியே சினிமா. கதைத்தபடியே ஒரு கடையில் இட்லி. கதைத்தபடியே வீடு. கதைத்தபடியே படுக்கை.

பன்னிரண்டு வருஷத்திய கதைகள்!

ஏறக்குறையக் குடும்பக் கதைகள் தீர்ந்து வந்தபோது, இரத்தமே இல்லாதவர்களுக்குச் சொல்லப்பட வேண்டிய கதைகளைக் கொலை கொலையாக, கொள்ளை கொள்ளையாக, கற்பழிப்புக் கற்பழிப்பாகக் கனல் கனலாகக் கோர்த்துக்கொண்டே போனான்.

விடிந்து வந்தபோது கண்கள் செருகின.

எழும்பியபோது எட்டைத் தாண்டியிருந்தது. அவனைப் படுக்கையில் காணோம். விறாந்தைக்கு வந்தேன். எழுவான் கதிர்கள் அப்போதே விறாந்தையை வறுக்கத் தொடங்கியிருந்தன.  மூன்று பக்கமும் கிராதி அடித்திருந்தான். ஒரு ஜன்னலடியிற் போய் அதைத் திறந்துவிட்டேன்.

பரந்த தென்னந் தோப்பு.  தென்னைகளோடு சில பனைகள், பற்றைகள்,  பல குடிசைகள்,  சில கல் வீடுகள்.  அரைக் கிலோ மீட்டருக்கப்பால், வலது பக்கமாகக் கூடாரமொன்றின் மிலிட்டறிப் பச்சை குனிந்துபோய்த் தெரிந்தது.

“எழும்பிட்டியா?” என்றவன், “இரு, டீ கொண்டாறேன்” என்று உள்ளே திரும்பினான்.

“பிளேன் டீ தாடா,” என்றுவிட்டுத் தோப்பில் ஊடுருவி நித்திரைக் களைப்பைத் தொலைக்க முற்பட்டேன்.

குடிசைப் பக்கமிருந்து ஐந்தாறு பையன்கள் ‘லெஃப்ட் றைட்’களில் தோப்பை நோக்கி வருவது தெரிந்தது.  எதிர்ப் பக்கமிருந்தும் ஏழெட்டுப் பையன்கள்.

'ட்றே'யை ஜன்னலோர மேசைமீது வைத்தான் சத்தியநாதன்.  தண்ணீரை எடுத்து வாய் கொப்புளித்துத் துப்பினேன்.

“இப்ப பாரு ஓய் வேடிக்கய!” என்றான் நண்பன் கிளுகிளுப்பை மாதிரிச் சிரித்தபடியே.  “யுத்தம் பாக்க ஆசயா இருக்குன்னு சொன்னீயே, இப்ப நேர்ல்யே பாத்துக்க! பையன்க வெளயாடுறதா நெனைக்காத! இன்றைய யதார்த்தம் நாளைய ஒரிஜினல்!”

தேநீரை உறிஞ்சத் தொடங்கினேன்.

இருபக்கத்துப் பையன்மார் ஒன்றாகினார்கள். பிறகு இரண்டு நிரைகளில் நின்றார்கள்.  உயரமான ஒருவன் கமாண்டராகத் தனியாக நின்று ‘வெட் வெட்’ டென்று ‘கத்தளை’ இட்டுக்கொண்டிருந்தான்.

ஒவ்வொருவரின் தோளிலும் ஒவ்வொரு தடி.  தும்புத்தடியாகவும் இருக்கலாம்! இடுப்பைச் சுற்றிப் பனங்காய், குரும்பட்டிக் குண்டுகள்.  மார்புக்குக் குறுக்கே நிற நிறமான - டோர்ச் லைட் :பெட்றிகளின் கோர்வை.  பல நிறங்களில் விறைத்த தொப்பிகள், விறைத்த உடைகள், விறைத்த உடல்கள், விறைத்த பார்வைகள்.

“இந்தூர்ப் புள்ளைகளுக்குப் பொழுது விடிஞ்சாப்போதும்டாப்பா! வீட்டுகள்ல ஒரு பெட்றித் துண்டு வைக்க விடமாட்டானுக! பிச்ச எடுக்கிற மாதிரி வீடு வீடாக் கேட்டு வருவானுகன்னா பாரேன்!.. இப்பப் பாரு, இன்னுங் கொஞ்ச நேரத்தில மெஷின் கன் சத்தமும் குண்டுச் சத்தமும் இந்தத் தோப்பே கிடு கலங்கப் போகுது!” என்று சிரித்தான் சத்தியநாதன்.

கால்களைத் தூக்கி அடித்தும் திரும்பியும் ஓடியும் நடந்தும் சரிந்தும் உருண்டும் புரண்டும்  - தோப்பில் ஒரே வியர்வைக் கூத்து.

தேநீர்க் கோப்பையை ட்றேயில் வைத்துவிட்டுச் சத்தியநாதன் நீட்டிய சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டேன்.

சத்தம் அதிகரித்தபோது மேலும் பத்திருபது தறுதலைகள் குடிசைகளிலிருந்து ஓடி வந்தன.

தேகப்பயிற்சி பிரமாதமாகத்தான் இருந்தது.  மிலிட்டறிக் கேம்பில் நடப்பவற்றைப் பையன்கள் எவ்வளவுக்கு ஊன்றிக் கவனித்திருக்கிறார்கள் என்பதை அது நிரூபித்தது.


“ஐப்பீக்கேயெஃப் பத்தியும் புலிகளைப் பத்தியும் நமக்குத் தெரியாததெல்லாம் இந்த வாண்டுகளுக்குத் தெரிஞ்சிருக்குடாப்பா!” என்று சிரித்தான் அவன்.

வயிற்றைக் கலக்கியதால் நான் பாத் றூம் போய் உட்கார்ந்தேன்.

கமாண்டர்ப் பயலின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

‘மக்களைக் கொல்ல இவ்வளவு பயிற்சிகளா?’ என்றொரு வினாவும் எனக்குள்!..

நான் மறுபடியும் ஜன்னலடிக்கு வரும்போது, “இனித்தான்டா 'அட்டாக்'கே தொடங்கப்போகுது வா!” என்று அதே கிளுகிளுப்புச் சிரிப்பை உதிர்த்தான் சத்தியநாதன்.

கமாண்டர் கத்திக்கொண்டிருந்தான்.  பையன்கள் இருவரிருவராகவோ மூன்று - நான்கு பேர்களாகவோ பிரிந்துபோய் நின்றுகொண்டும் கிடந்து கொண்டும் துப்பாக்கிகளை நீட்டிக்கொண்டுமிருந்தார்கள்.


இடது புறமாகத் தெரிந்த குடிசைகளின் பக்கமிருந்து, இலை - குழைகளால் செய்யப்பட்ட ஒரு வாகனம் வரத்தொடங்கியது!

“வாகனத்தில் வாறது பொடியங்க!” என்றான் சத்தியநாதன் தானும் அவர்களுள் ஒருவனான குதூகலத்தில்.

வாகனத்தில் மூன்றே மூன்று புலிகள். வாகனம் நின்றது.

புலிகள் கீழே இறங்கிப் பதுங்கி முன்னேறினார்கள்.

வசதியான ஓரிடத்தில் கால்களை அகட்டி நின்றார்கள்.

சரமாரியாக அவர்களின் மெஷின் கன்களிலிருந்து சன்னங்கள் கிளம்பும் ஓசைகள் கேட்டன!  ஏற்கெனவே பயிற்சி செய்துவிட்டு நிலைகளில் நின்றிருந்த ஐப்பிகேயெஃப், பதுங்கி ஒதுங்கிப் புரண்டு கிடந்து எதிர்த் தாக்குதலில் இறங்கியது.

மூன்று புலிகள்,  இருபது முப்பது அமைதிப்படை.

கூச்சல், குழப்பம், வெடியோசைகள்!

மூன்று புலிகளும் கம்பீரமாகச் சுட்டுக்கொண்டே இருக்கச் சாகவே பிறந்தவர்கள் மாதிரி இராணுவத்தினருள் பலர் பட்பட்டென விழுந்து கொண்டிருந்தார்கள்!

சுடுவதை நிறுத்திய புலிகள், தங்கள் இடைகளில் தொங்கிய பனங்காய்களையும் குரும்பட்டிகளையும் பிடுங்கி எறிந்தார்கள்.

‘குண்டு’ போய் விழுந்த பக்கங்களில், இராணுவத்தினர் சிலர் மேலே எகிறிக் கீழே விழுந்து துடித்ததையும் செத்ததையும் பார்த்தபோது, அந்தத் தத்ரூபக் காட்சி என்னை நிஜமான ஒரு போர்க்களத்திலேயே ஒரு கணம் நிறுத்திவிட்டது!

அமைதிப்படை அமைதி இழந்தது!

“அட, எப்படி நடிக்கிறானுகன்னு பாரேன்!”என்று வாயூறினான் இவன்.

புலிகளோ தங்கள் வேலை முடிந்துவிட்டதைப்போல வண்டியில் ஏறி ஒரு வட்டமும் அடித்துவிட்டுப் பறந்துபோனார்கள்!

சாகாமற் சமாளித்துக் கிடந்த ஜவான்கள் சிலரே.  அவர்களுக்குள்ளும் யார் பிழைப்பது என்பதைப் போன்ற குழப்பம்! அவர்களது மொழிக் கச கசாப்பு வேறு!..

“இது புலிகளுக்கு சப்போர்ட்டா நடக்கிற நாடகம்னு நெனைக்காத! உண்மையே இதுதான்! லானா பூனா சொல்றதத்தானே நீங்க நம்பிக் கெட்டுப் போறீங்க” என்று மறுபடியும் அவனிலிருந்து சிரிப்பு.


“இன்னும் பத்து வருஷங் கழிச்சி வாற பரம்பரை யுத்த தாகத்தோடதான் இருக்கப்போகுது பாரு!”

“எங்க இலக்கியமே யுத்த தாகம்தானே!” என்றேன் நான்.  “எந்த மதம் யுத்த தர்மத்தப் பத்திச் சொல்லாம இருக்கு? எந்த இலக்கியம் சொல்லாம இருக்கு? இவ்வளவு காலமும் நம்ப நாட்ல யுத்தமே இல்லாததால கோழைகளா வளந்துட்டோம்! அதனாலதான் அமைதி அமைதின்னு கத்த வேண்டியதா இருக்கு! அமைதியும் வேணும், யுத்தமும் வேணும்!”

‘நீ எப்பவுமே தறுதலத்தனமாகத்தானே கதைப்ப! நாடகத்தப் பாரு!’

பிணத் தறுதலைகள் இன்னும் செத்தே கிடக்க, உயிரோடு எழும்பியவர்கள் அட்டகாசத்தில் இறங்கியதோடு, விளையாட்டின் - நாடகத்தின் - போரின் - மூன்றாங்கட்டம் ஆரம்பமாகியது.

மிரண்டவன் கண்களுக்கு உருவோடிருந்த அனைத்துமே புலிகளாகத் தெரிந்தன!

“யா ஹரே அச்சா ஹை” போன்றவை ஒலி ரூபங்களானாலும் “சுடு - கொளுத்து - வெடி - எறி - கொல்லு – “ போன்றவை மனத்திலாகின!

விபரமற்ற ஒரு யுத்த முனையின் உதாரணம்!

பொறுப்பற்ற ஓர் இராணுவத்தின் செயற்பாடு!

எங்கள் ஜன்னலுக்குள்ளும் ஒரு குரும்பட்டி எறிகுண்டு வந்து விழுந்தது!

“கண்ணாடி தப்பிச்சதே போதுண்டாப்பா, சனியன்!” என்று கை கொட்டிச் சிரித்தான் இவன்.தொடர்ந்து ஜவான்களின் கைக்குண்டுகளும் குறிகளும் குடிசைகள் மீது திரும்பின.


அகாலம் புரியாத அகதிகள் மூட்டை முடிச்சுகளோடு அந்தப் பக்கமாக வரலானார்கள்!

வந்தவர்கள் அமைதிப் படையைக் கண்டு மூக்கையும் பிடித்துக்கொண்டு தறிகெட்டு ஓடத் தலைப்பட்டபோது, ஒரு ஜவான் என்னவோ சொல்லிக் கத்த, அவர்கள் நின்று கும்பிட்டுக் கூத்தாடி நடுங்க, நாலைந்து துப்பாக்கிகள் அவர்களின் பக்கமாக உயர்ந்தன.


கிழவிகள், கிழவர்கள், முஸ்லிம் வாலிபர்கள், குமர்கள், இரு பையன்கள்! அங்குலம் அங்குலமாக நகர்ந்து அப்பட்டமான ஒரு காட்சியை உருவாக்கினார்கள்!

ஒரு கிழவி பலியாகி விழுந்தாள்.“அடப் பாவீ, அந்தக் கெழவியும் புலியாடா!” என்று சிரித்தான் சத்தியநாதன்.


ஒருவனின் துப்பாக்கி அங்கு நின்ற அத்தனை பேரையுமே புலிகளாக்கிச் சுட்டு வீழ்த்தியது! “கொஞ்சக் காலமா எங்களுக்கு இதுதான்டா பைஸ்கோப்பு!” என்று இன்னொரு சிகரட்டைத் தந்து தானும் ஒன்றைக் கொளுத்தினான்.

“வாண்டுப் பயலுகளோட வெளயாட்டுனு நெனைச்சீன்னா இதுல ஒண்ணுமே இல்ல.  இதையும் பாத்துட்டு நாளைக்கி நாளாண்டைக்கி லானா பூனா என்னா சொல்றான்னும் கேட்டீன்னாத்தான் எது நெசம்னு ஒனக்குப் புரியும்!.”

இந்த ஜவான்களுக்குத் துணையாக மேலும் பத்துப் பதினைந்து பேர்கள் வந்து சேர்ந்த பிறகு, எல்லாருமாகக் குடிசைப் புறத்தை நோக்கி ஓடினார்கள்.

“ரவுண்டப் - எய்ம் - ஷுட் - கில் –“என்றெல்லாம் கமாண்டர் கத்தினான்.

சுட்டுக்கொண்டே ஓடியவர்கள் குடிசைகளை வளைத்தார்கள்.  குண்டுகளும் சன்னங்களும் சடுசடு விளையாடின.

குடிசைகளிலிருந்து ஒரு பத்திருபது வாண்டுகள் உயிர் தப்பும் கோஷங்களோடு தோப்புக்குள் ஓடிவரும் ஒரு செட் - அப்! சூடுபட்டுச் சிலர் விழச் சிலர் துப்பாக்கி முனைகளில்!
ஒருவனுடைய வயிற்றில் துப்பாக்கி குத்துகிறது.  “அம்மா!” என்று அவன் விழுகிறான்.  இன்னொருவனுக்கு மண்டையில் துப்பாக்கி அடி.  அவன் “கடவுளே!” என்று விழுந்து துடிக்கிறான்...

கமாண்டர் கத்தினான்.

எல்லாருமே மளமளவென்று குப்புறக் கிடக்கத் தொடங்கினார்கள்.

ஒரு ஜவான் தன் துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டுக் குப்புறக் கிடந்த ஒரு பெண்ணை இழுத்து, மல்லாக்கக் கிடத்தி, அவள் மீது –

“அதென்னா இன்னைக்குப் புது..” என்ற சத்தியநாதன் விளங்கிப்போய் அதிர்ந்தவனாக,”டேடேய்!” என்று கத்தியவாறே வெளியே பாய்ந்தான்.  “அந்த விளையாட்டுக்கெல்லாம் போகாதீங்கடா! அத விட்டுட்டு மத்ததுகள  விளையாடுங்க!”

அதிர்ந்துபோய் நின்றிருந்தேன் நான்.

இதுவரையில் சிரித்துக்கொண்டிருந்த சத்தியநாதனின் முகத்தில் திடீரென ஒரு வகைக் கிழடுதட்டியிருந்தது. 

நன்றி ;ஈழத்து கதை தளம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun 27 Dec 2015 - 17:43

அரசனின் வருகை
----------------
உமா  வரதராஜன்
--------------------------
மூடுண்ட அந்த நகரத்துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக் கொண்டிருந்தது. யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து வைக்க அவன் வருவதாகச் சொன்னார்கள். அரசனின் வருகை பற்றிய அறிவிப்புகளை உடம்பில் ஒட்டிக் கொண்டு எருமைகள் எல்லாம் நகரத்து வீதிகளில் அலைந்து திரிந்தன. முரசுகள் சந்து பொந்துகளெங்கும் சென்று அதிர்ந்தன.

ரத்த ஆற்றின் கரையில் அந்த நகரம் இருந்தது. சிறு காற்றுக்கு உரசி, தீப்பற்றி எங்கும் மூளும் மூங்கில்கள் நிறைந்த நகரம் அது. கடைசி யுத்தம் மூன்று வருஷங்களின் முன்னால் நடந்தது. யானைகளின் பிளிறல், குதிரைகளின் கனைப்பு, வாட்கள் ஒன்றோடொன்று உரசுமொலி, மனிதர்களின் அவலக் குரல் எல்லாம் இன்றைக்கும் செவிகளில் குடியிருந்தன. அப்போதைய பிணங்களின் எரிந்த வாடை இன்னமும் அகலாமல் நகரத்தின் வானத்தில் தேங்கிப் போய் நின்றது. அண்மைக் காடுகளை உதறி விட்டுப் பிணந்தின்பதற்காக இங்கே வந்த பட்சிகள் யாவும் பெரிய விருட்சங்களில் தங்கி இன்னொரு தருணத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தன, கூரையிழந்த வீடுகள், கரி படிந்த சுவர்கள் அந்நகர் தன் அழகு முகத்தின் மூக்கை இழந்த விதம் சொல்லும். ஆந்தைகளின் இடைவிடாத அலறல்களுடன், நாய்களின் அவ்வப்போதைய ஊளைகளுடனும் நகரத்தின் இரவுகள் கழிகின்றன. முகிலுக்குள் பதுங்கிக் கொண்ட நிலவு வெளியே வருவதில்லை. பால் கேட்டுக் குழந்தைகள் அழவில்லை. நடு இரவில் குதிரைகளின் குளம்பொலிகளும் சிப்பாய்களின் சிரிப்பொலிகளும் விட்டு விட்டுக் கேட்கும். நெஞ்சறை காய்ந்து, செவிகள் நீண்டு, கூரையில் கண்களைப் புதைத்து பாயில் கிடப்பான் ஊமையன்.

ஊமையனும் இன்னும் சிலரும் அந்த நகரத்தில் எஞ்சியிருந்தனர். உயிர் தப்பிய சிலரும், உயிர் தப்பப் பலரும் ஆற்றைக் கடந்து வேறு பகுதிகளுக்குச் சென்றார்கள். கரையில் நின்று கையசைத்த பெண்களின் கண்களில் துளிர்த்த நீரில் அந்தப் படகுகள் மறைந்து போயின. ஊமையனுக்கு அம்மாவை விட்டுப் போக மனமில்லை.

ஊமையனின் உண்மையான பெயர் பலருக்கு மறந்து போய்விட்டது. அதிகம் எதுவும் பேசாததால் அவனுக்கு அந்தப் பெயர் வந்தது. அவன் பேச்சு எவ்விதம் மெல்ல மெல்லக் குறைந்தது என்பது பற்றி அம்மா அறிவாள்.

கலகக்காரர்களை ஒடுக்க இந்த நகரத்துக்கு அரசன் அனுப்பிய படையுடன் கூடவே ஆயிரமாயிரம் பிணந்தின்னிக் கழுகுகளும் தம் சிறகுகளால் சூரியனை மறைத்தபடி இங்கே நுழைந்தன. கோயிலின் சிலை, பெண்களின் முலை, குழந்தைகளின் தலை என்று வெறியாட்டம். மத யானைகள் துவம்சம் செய்த கரும்புத் தோட்டமாயிற்று, அந்நாட்களில் இந்த நகரம்.

ஊமையனும் ஒரு நாள் பிடிபட்டவன்தான். முகத்து மயிரை மழிக்க அவன் வைத்திருந்த சவரக்கத்தி கூட ஓர் ஆயுதம் எனக் குற்றஞ் சாட்டி, அவனுடைய கைகளைப் பின்புறம் கட்டி, பாதணிகள் இல்லாத அவனைக் கொதி மணலில் அழைத்துச் சென்றனர், நடு வெயிலில் நடுத்தெருவில் முழங்காலில் நிற்க வைத்து சூரிய நமஸ்காரம் பண்ணச் சொன்னார்கள். வாயில் கல்லைத் திணித்து, வயிற்றில் குத்தினார்கள். 'அம்மா' என்ற அவனுடைய சத்தம் கல்லைத் தாண்டி வெளியே வரவில்லை.

மாலையில், வெறிச்சோடிய தெரு வழியாகத் தளர்ந்த நடையும், வெளிறிய முகமுமாக ஊமையனும் இன்னும் சிலரும் நகரத்துக்குத் திரும்பி வந்தனர். மரணத்தின் தூதுவன் மறுபடியும் கைதட்டிக் கூப்பிடுவான் என்ற அச்சத்தில் திரும்பிப் பாராமல் நிழல்கள் இழுபடத் தள்ளாடித் தள்ளாடி அவர்கள் வந்தனாள் தெருமுனையில் அவர்கள் தோன்றியதும் பெண்கள் ஓட்டமும் நடையுமாக அவர்களிடம் வந்தனர். ஓடி ஓடி ஒவ்வொரு முகமாகத் தேடி அலைந்தனர். வராத முகங்கள் தந்த பதற்றத்தில் நடுங்கினார்கள். ஒப்பாரி வைத்து அழுதார்கள். 'என்ன நடந்தது, என்ன நடந்தது' என்று ஒலமிட்டார்கள். தனதப்பன் போய்ச் சேர்ந்து விட்டான் என்ற சேதி தெரியாமல் ஒருத்தியின் இடுப்பிலிருந்த குழந்தை விரல் சூப்பிச் சிரிக்கின்றது. 'என்ன நடந்தது, என்ன நடந்தது' என்று இன்னொருத்தி ஊமையனின் தோளைப் போட்டு உலுக்கி ஒப்பாரி வைக்கின்றாள். பேய்க் காற்றின் உரசலில் கன்னியர் மாடத்தின் சவுக்கு மரங்கள் இன்னும் துயரத்தின் பாடல்களைப் பரப்புகின்றன.

வாழ்வதற்கான வரமும் அதிர்ஷ்டமும் தனக்கிருப்பதாக எண்ணி ஒரு சிறு கணம் உள்ளம் துள்ளிய சிறு பிள்ளைத் தனத்துக்காக வெட்கப்பட்ட ஊமையன் தன் தலை மேல் கத்தி தொங்கும் வாழ்க்கை விதிக்கப்பட்டிருப்பதை மெல்ல உணர்ந்தான். மௌனத்தில் அவன் காலம் நகர்ந்தது. வீட்டுக்குள் முடங்கிய அவனை நான்கு சுவர்களும் நெரித்தன. வீட்டின் கூரை பல சமயங்களில் நெஞ்சில் இறங்கிற்று. ஒளியைத் தவறவிட்ட தாவரம் போல ஊமையன் வெளிறிப் போயிருந்தான். தேவாங்கின் மிரட்சியுடன் தடுமாறிக் கொண்டிருந்தான்.

பகலிலும் இரவிலும் கனவுகளில் அலைந்தான். கண்கள் தோண்டப்பட்ட, நகங்கள் பிடுங்கப்பட்ட மனிதர்கள் 'எங்களுக்கோர் நீதி சொல்' என்று தள்ளாடித் தள்ளாடி அங்கே வந்தனான் அரைகுறையாக எரிந்த தெருச் சடலங்கள் வளைந்தெழுந்து 'நாங்கள் என்ன குற்றம் செய்தோம்' என்று முனகின. நீர் அள்ள உள்ளே இறங்கிய வாளியைக் கிணற்றுள் கிடந்த பிணங்களிலிருந்து கையொன்று மெல்லப் பற்றிக் கொண்டது. கழுத்தை இழந்த கோழியொன்று துடிதுடித்து உயிரைத்தேடி அங்குமிங்கும் அலைந்து மண்ணில் சாயும். குட்டித் தாய்ச்சி ஆட்டின் வயிறு மீது குதிரை வண்டிச் சக்கரங்கள் ஏறிச் செல்லும். மயிர் உதிர்ந்த தெரு நாய்களின் வாய்கள் மனிதர்களின் கையையோ காலையோ கவ்வி இருக்கும்.

ஊமையனின் கனவில் அரசனும் வந்திருக்கின்றான். சாந்த சொரூபனாய், கடைவாய் கெழிந்த புன்னகையுடன் அந்தக் கனவில் அவன் வந்தான். கடைவாய் கெழிந்த இந்தப் புன்னகைக்குப் பின்னால் முதலைகள் நிறைந்த அகழியும், நச்சுப் பாம்புகள் பதுங்கிக் கொண்ட புற்றொன்றும், விஷ விருட்சங்களைக் கொண்ட வனாந்தரமும் ஒளிந்திருப்பதாகப் பலர் பேசிக் கொண்டனர். இதைப் போல் அரசனைப் பற்றிப் பல கதைகள். வெண்புறாக்களை வளர்ப்பதில் அவன் பிரியம் கொண்டவன் என்றும், மண்டையோடுகளை மாலையாக்கி அணிவதில் மோகமுள்ளவன் என்றும் ஒன்றுக்கொன்று முரணான கதைகள். பல நூற்றாண்டுகள் மண்ணுக்குள் யாத்திரை செய்து புதையுண்டு கிடந்த தன் முன்னோரின் கிரீடத்தைக் கண்டெடுத்துத் தலையில் சூடிக் கொண்டான் அவன் எனவும், செல்லுமிடமெல்லாம் சிம்மாசனத்தையும் கொண்டு திரிந்தான் என்றும் காற்றில் வந்தன பல கதைகள்.

அரசவை ஓவியர்கள் வெகு சிரத்தையுடன் உருவாக்கியிருந்த அந்தப் புன்னகை சிந்தும் முகத்துடனேயேதான் ஊமையனின் கனவிலும் அரசன் வந்தான். கோவில் மணி விட்டு விட்டொலிக்கின்றது. பாட்டம் பாட்டமாக வானத்தில் பறவைகள் அலைகின்றன. வேதம் ஓதுகின்றனர் முனிவர்கள். அது ஒரு நதிக்கரையோரம். பனி அகலாத புல்வெளியில் அரசன் வெண்ணிற ஆடைகளுடன் தன் கையிலிருந்த வெண்புறாவைத் தடவியபடி நடந்து கொண்டிருந்தான். அவன் பின்னால் ஊமையன். சௌந்தர்யத்தைக் கண்டு சூரியன் கூட சற்றுத் தயங்கித் தடுமாறி வந்த ஓர் இளங்காலை.

அரசன் அண்ணாந்து ஆகாயத்தைப் பார்ததான்.

'மேகங்கள் அகன்று கொண்டிருக்கின்றன. இன்னும் கொஞ்சநேரம்........ கொஞ்சநிமிஷம்....... வெளிச்சம் வந்துவிடும்......'

அரசனின் குதூகலமான மனநிலை ஊமையனுக்கு ஓரளவு தைரியத்தைத் தந்தது.

'அரசே வெளிச்சம் வருவதற்குள் நாங்கள் இறந்து விடமாட்டோமா...... இப்போதும் என்ன, நாங்கள் நடை பிணங்கள் போல அல்லவா உள்ளோம்'?....

ஊமையனை திரும்பிப் பார்த்து அரசன் சிரித்தான்.

'போர் என்றால் போர்.... சமாதானமென்றால் சமாதானம்.....'

ஊமையன் வார்த்தைகளை மென்று விழுங்கிச் சொன்னான்.

போர் என்றால் ஒரு தர்மமில்லையா அரசே? குடிமக்கள் செய்த பாவம் என்ன? சிசுக்கள், நோயாளிகள், முனிவர்கள், பெண்கள் இவர்களைக் கொல்வது யுத்த தர்மமா? '

அரசன் புன்னகைத்தான். 'தேர் ஒன்று நகரும் போது புற்கள் புழுக்கள் பற்றி முனகுகின்றாய் நீ.... எனக்குத் தெரியும்.... எல்லாம் தெரியும்...'

'நீங்கள் மனது வைத்தால் எதுவும் முடியும். எதுதான் முடியாதது? ' என்றான் ஊமையன்.

அரசனின் நடை திடீரென்று நின்றது. 'ஆம்..... நான் நினைத்தால் எதுவும் சாத்தியம்.....' இதோ பார்!' என்றான் அவன். அரசனின் கையிலிருந்த வெண்புறா சட்டென்று மாயமாக மறைய, முயலின் அறுபட்ட தலை ரத்தத்தில் தோய்ந்து அங்கேயிருந்தது.

அரசனின் வருகை நெருங்க நெருங்க நகரம் அமர்க்களப்பட்டது. அரச காவல் பரண்கள் புதிது புதிதாய் முளைத்தன. இரவு பகலாய் வேலைகள் நடந்தன. சவக்கிடங்குகளின் முன்னால் பூச்செடிகள் நட்டு நீரூற்றினார்கள். இலையுதிர் காலம் நிரந்தரமாகி விட்ட இந்த நகரத்தின் வாயில்களில் வேற்றூர்களிலிருந்து மரங்களை வேர்களுடன் பெயர்த்துக் கொணர்ந்து நட்டார்கள். நூறு வருஷத் தொடர் மழையாலும் கழுவ முடியாத ரத்தக்கறை கொண்ட மதில்களுக்குப் புதுவர்ணம் பூசினார்கள். புன்னகை சிந்தும் அரசனின் ஓவியங்கள் சுவரெங்கும் நிறைந்தன. சோதனைச் சாவடிகளில் மாட்டு வண்டிகள் நீளத்துக்கு நின்றன. கொட்டும் மழையில் ஆடைகள் நனைய, பொதிகளைத் தூக்கித் தலையில் வைத்தபடி மௌனமாக ஊர்ந்தனர் ஜனங்கள். நாக்குகளை நீட்டச் செல்லி அங்கே புதைந்திருக்கக் கூடிய அரச விரோத சொற்களை அவர்கள் தேடிப்பார்த்தனர். நகரத்துக்கு வேளை தெரியாமல் வந்து விட்ட பசுவொன்றின் வயிற்றைக் கீறி அதன் பெருங்குடலை ஆராய்ந்து பார்த்தனர். எருமையின் குதத்தினுள்ளும் கைவிட்டு ஏதேனும் கிடைக்குமா என்று துழாவினார்கள். மீசையில் நுரை அகலாத கள்ளுக்குடியர்கள் தப்பட்டம் அடித்து வீதிகளில் ஆட்டம் போட்டனர்.

'கோயில் தந்தான்
எங்கள் மன்னன் 'கோவில் தந்தான்
இன்னுந்தருவான்
கேட்கும் எல்லாம் தருவான்.
தில்லாலங்கடி......தில்லா....
பிச்சைப் பாத்திரம் இந்தா......'

திண்ணையிலிருந்த ஊமையனின் தாத்தா இடிப்பதை நிறுத்தி விட்டு பாட்டு வந்த திக்கைப் பார்த்தார். பார்வை தெரியாத அவருக்கு ஓசைகளே உலகம். கள்ளுக்குடியனின் பாடல் தாத்தாவுக்குக் கோபத்தைத் தந்திருக்க வேண்டும். கையுரலில் இருந்த வெற்றிலையை வேகமாக இடித்தவாறிருந்தார்.

'கோவிலைத்  தருகிறானாமே. மறுபடியும் இடிக்க அவனுக்கு எவ்வளவு நேரமாகும்? ' என்று முனகிக் கொண்ட தாத்தா மேலே எதுவும் பேச விரும்பாமல் வெற்றிலையை வாய்க்குள் போட்டுக் கொதுப்பிக் கொண்டார்.
அரசன் வருவதற்கு ஒரு தினம் இடையிலிருந்தது. கண்ணயர்ந்து கொண்டிருந்த தாத்தா குதிரைகளின் கனைப்பொலியால் திடுக்கிட்டு எழுந்து உட்காந்தார். வீட்டுவாசலுக்கு வந்த பெண்கள் வெளியே எட்டிப் பார்த்து விட்டு மறைந்தனர். பதற்றத்துடன் வந்த அம்மாவை ஊமையன் வெறித்துப் பார்த்தான். அம்மாவின் உதடுகள் உலர்ந்து, விழிகள் வெருண்டிருந்தன. வானத்தை அண்ணாந்து பார்த்து இருகைகளாலும் கும்பிட்டாள்.

வழக்கம் போல் எல்லாம் நிகழ்ந்தன. அந்தக் குடியிருப்பின் ஒவ்வொரு வீட்டினுள்ளும் சிப்பாய்கள் நுழைந்து, புறப்பட்டனர். ஊமையனை அவர்கள் கூட்டிச் சென்ற போது அம்மா என்னென்னவோ சொல்லி அழுது பார்த்தாள் மனித பாஷை புரிந்த குதிரைகள் மாத்திரம் தலைகள் அசைத்துக் கனைத்துக் கொண்டன. சிப்பாய்களை நோக்கிக் குரைத்தவாறு, ஊமையனின் கால்களை மறித்தபடி தெருமுனை வரை வந்தது அவனுடைய நாய். சிப்பாய்கள் அதை எட்டி உதைத்து விரட்டினார்கள். பிடிபட்ட ஆண்களின் பின்னால் பெண்கள் தங்கள் வாய்களிலும், வயிறுகளிலும் அடித்துக் கொண்டு பெருங்குரலில் ஒப்பாரி வைத்துத் தொடர்ந்து சென்றனர். குதிரை வீரர்கள் அவர்கள் பக்கமாக ஈட்டிகளை ஓங்கி அச்சுறுத்தி விரட்டினார்கள். குதிரைகள் கிளப்பிய புழுதிப் படலத்தினூடாகத் தங்கள் ஆண்பிள்ளைகள் சென்று மறைவதை தெருமுனையில் செய்வதறியாது நின்று விட்ட பெண்கள் கண்டனர். சுவரில் முதுகை முட்டுக் கொடுத்தபடி நின்ற தாத்தா அங்கு நின்றவர்களுக்கு ஆறுதல் தரும் விதத்தில் சொன்னார். ஒன்றும் ஆகாது...... நாளைக்கு அரசன் வருகிறான் அல்லவா? அதற்குக் கூட்டம் சேர்க்கிறார்கள்...' சுவரிலிருந்த பல்லியொன்று அவ் வேளை பார்த்து சத்தமிட்டது தாத்தாவுக்கும் மற்றவர்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது.

பிடிபட்ட அனைவரும் நகரத்து சத்திரங்களில் அடைக்கப்பட்டனர். இவர்களைப் போன்றே சுற்றியுள்ள ஊர்களிலிருந்தெல்லாம் கொண்டுவரப்பட்டவர்களால் சத்திரங்கள் நிரம்பி வழிந்தன. ஒருவரோடு ஒருவர் பேசாமல் பழுக்கக் காய்ச்சி தங்கள் தலைகளில் இறக்கப்பட்ட விதியை எண்ணி நொந்தவர்களாக அங்கு எல்லோருமிருந்தனர். சிப்பாய்களின் சிரிப்பொலி ஏளனத்தின் அம்புகளாக அவ்வப்போது இவர்களின் காதுகளின் இறங்கிற்று. ஊமையன் அந்தக் குளிர்ந்த சுவரில் சாய்ந்து, கண்களைமூடிக்கொண்டான். இருள் நிறைந்த பலிபீடத்தில் வெட்டரிவாள் ஒன்று பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. நரி போல் ஊளையிடும் காற்றில் சுருக்குக் கயிறொன்று அங்குமிங்குமாக அசைந்து ஊஞ்சலாடுகின்றது. கழுத்துவரை மண்ணில் புதையுண்ட அவனை நோக்கி யானைகளின் தடித்த பாதங்கள் மூர்க்கத்துடன் முன்னேறி வருகின்றன. அவனுடைய நிர்வாண உடம்பில் புதிது புதிதாய் ரத்த வரிகளை எழுதுகின்றன சாட்டைகள். கனவுமற்ற நினைவுமற்ற இரண்டுங் கெட்டான் பெரு வெளியில் அவனுடைய வீடும் வந்தது. கூட்டிப் பெருக்காத வாசலில் வாடிய பூக்களும், சருகுகளும் கிடக்கின்றன. உற்சாகமிழந்த நாய் வாசற்படியை மறித்துப் படுத்திருக்கின்றது. சாம்பல் அள்ளாத அடுப்படியில் சோம்பல் பூனை. சமையலறையில் குளிர்ந்து போயிருக்கும் பாத்திரங்கள். ஒரு கருநிற வண்டைப் போல சுவர்களிலே முட்டி மோதித் திரிவார் தூக்கம் வராத தாத்தா. உண்ணாமல், உறங்காமல் கண்களின் ஈரம் காயாமல் அம்மா சுருண்டு கிடப்பாள். நிமிஷங்களைப் பெரும் பாறைகளாய்த் தன் தலையில் சுமந்து இருட்டின் பெருங் காட்டில் அலைந்தான் ஊமையன். ஊமையன் சத்திரத்துக் கதவு திறபட்டதும் உள்ளே புகும் காற்றுக்காகவும் வெளிச்சத்துக்காகவும் அவன் விழி மூடாமல் காத்துக்கிடந்தான்.

விடிந்தது. வெளிச்சத்தை முந்திக்கொண்டு கதவு வழியாக சிப்பாய்களின் தலைவன் உள்ளே நுழைந்தான்.

'ஏய் எழும்புங்கள்... எழும்புங்கள்’ என்று அதட்டினான்.

அவர்களை ஏற்றிக் கொண்டு நகரத்து வீதிகளில் மாட்டு வண்டிகளின் விரைந்து சென்றன. மாட்டுவண்டியின் தொடர்ச்சியான ஜல் ஜல் சத்தத்தை கேட்டு அங்காடித் தெரு வணிகர்கள் அப்படியே நின்றார்கள். எண்ணெய் வழியும் முகங்களுடன், தூக்கம் நிறைந்த கண்களுடன், வாரப்படாத தலைகளுடன், பசி கொண்ட வயிறுகளுடன் உலகத்தின் மிகக் கேவலமான விலங்குகளைப் போல இப்படிப்போவது ஊமையனுக்குப் பெரும் வெட்கத்தைத் தந்த. இடியுண்ட கோயிலின் அருகிலிருந்த குளக்கரையில் அனைவரும் இறக்கப்பட்டனர். சிப்பாய்களினால் வரிசையாக அமர்த்தப்பட்டனர். வானம் இருண்டிருந்தது. மழையையும் அரசன் கையோடு கூட்டி வந்து விட்டதாக சிப்பாய்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

'ராஜாதி ராஜ ராஜமார்த்தான்ட ராஜ கம்பீர.....' என்று ஒரு குரல். திடீரென வாத்தியங்கள் முழங்கின. மகுடி வாத்திய விற்பன்னர்கள் நகரத்து சிறுமிகளை நெளியும் பாம்புகளாக்கி ஆட்டுவித்தார்கள். கள்ளுக்குடியர்கள் கால்கள் நிலத்தில் படாது குஸ்தியடித்தவாறு வந்தனர். பின்னால் அரசன் வந்து கொண்டிருந்தான். முனிவர்கள் தாடிகளை மீறிய புன்னகையுடன் எழுந்து வணக்கம் சொன்னார்கள். உயரமானதோர் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலை அடைந்த அரசன் அனைவருக்கும் கையசைத்தான். தொண்டை பெருத்த கவிஞர்கள் அந்தக் குளிர் வேளையிலும் பனையோலைச் சுவடிகளால் அரசனுக்கு சாமரம் வீசினார்கள் அரசவைக் கவிஞரின் நாவிலிருந்து பனிக்கட்டிகள் கொட்டியவாறிருந்தன. ஒருபக்க மீசையை மழித்துக் கொண்ட எடுபிடிகள் அரசனின் பின்புறமாக உட்கார்ந்து, அவனுக்கு அரிப்பெடுக்கையில் முதுகைச் சொறிந்து கொடுத்தனர்.

ஊமையன் அண்ணாந்து பார்த்தான். கறுப்பு ஆடையைக் கழற்றி வீசி, அம்மணங் கொள்ளத் துடித்துக் கொண்டிருந்தது வானம். வானத்துப் பறவையொன்றின் எச்சம் போல ஒரு சொட்டு ஊமையனின் முகத்தில் முதலில் விழுந்தது. பின்னர் வேகமான பல சொட்டுகள், இரைச்சல் காற்று திசை காட்ட மழை தொடுக்கும் யுத்தம். பலத்த மழையின் நடுவே அரசன் பேச எழுந்தான். கொட்டுகின்ற மழையிலும் அசையாத மக்கள் அவனுக்கு வியப்பளித்திருக்க வேண்டும்.

'என் உயிரிலும் மேலான மக்களே.....'

மழையோசையை வெல்ல முயலும் அரசனின் குரல்.

குலை தள்ளிய வாழைகளாலும், குருத்தோலைகளாலும், செந்நிறப் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட பந்தலின் கீழ் நின்று மழையில் நனையாத அரசனின் குரல். ஊமையன் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தான். பேய் பிடித்த பெண்ணாகி வாயிலும், வயிற்றிலும், முதுகிலும், முகத்திலும் மாறி மாறி அறைகின்ற மழை.

'இடியுண்ட கோவிலைப் புதுப்பிக்க இன்றைக்கு வந்திருக்கின்றேன். இன்னும் என்னென்ன வேண்டும் சொல்லுங்கள்.'

காற்றும் மழையும் பதில் குரல் எழுப்பின. சிப்பாய்களின் ஈட்டிமுனைகளுக்கும் உருட்டும் விழிகளுக்கும் பயந்து அசையாமல் மௌனமாய் இருந்தனர் ஜனங்கள்.

'கொட்டுகின்ற மழையிலும் என்னைப் பார்க்க இவ்விதம் கூடியிருப்பது என்னை உணர்ச்சி கொள்ளச்செய்கின்றது. உங்களுக்கு என்ன வேண்டும் உடனே கேளுங்கள்.'

ஊமையன் மீண்டும் அண்ணாந்து பார்க்கிறான். வருண பகவான் பற்களை நற நற வென்று கடிக்கின்றான். நீரேணி வழியாக இறங்கும் அவன் கைகளில் மின்னல் சாட்டைகள் சுழித்துச் சுழித்துப் பாதையெடுத்து ஓடுகின்றது தண்ணீர், நெருப்புப் பாம்புகள் வானமெங்கும் நெளிவதும், மறைவதுமாய் ஜாலங் காட்டுகின்றன.

'மாட மாளிகைகள் கட்டித் தருகின்றேன். வீதிகளைச் செப்பனிட இன்றே ஆணையிடுகின்றேன். குளங்களைத் திருத்தித் தரச் சொல்கிறேன். இன்னும் என்ன வேண்டும்? அரங்குகள் வேண்டுமா? நவ தானியங்கள் தேவையா? பட்டாடைகள் வேண்டுமா? என்ன வேண்டும் சொல்லுங்கள்...... இவற்றை எல்லாம் நான் தரத் தயார். ஆனால் ஒருபோதும்......'

அரசன் தன் வாக்கியத்தை முடிப்பதற்குள் ஒரு பெரிய மின்னல் ஒரு பெரும் ஓசை. வானத்திற்கும் பூமிக்குமாகக் கோடிழுத்த ஒரு நீண்ட மின்னல்.

ஒருகணம் கண்ணொளி மங்க அதிர்ந்து போனான் ஊமையன். கண்களைக் கசக்கிவிட்டு அவன் உயரத்தே பார்த்தான்.

பேசிக் கொண்டிருந்த அரசன் மாயமாக மறைந்து போயிருந்தான்.


- இந்தியா டுடே, ஏப்ரல் 1994

நன்றி ;ஈழத்து கதை தளம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun 27 Dec 2015 - 17:45

அவர்கள் வருவார்கள்
--------------------

முல்லைக் கோணேஸ்

---------------------------
மடியும் ஒவ்வொரு நிமிசங்களிலும் பாதாளத்தின் நடுவே மெல்லிய கயிற்றில் தொங்குவதானதொரு உணர்வையே தருகிறது.  வாழ்வின் இழையங்கள் அறுந்துபோனதாகவும் எதிலுமே பிடிப்பில்லாததான விசனமுற்ற நாட்களாகவுமே கழிகின்ற பொழுதுகள்தான் தொடருகின்றன.

யாருடனும் கொஞ்சநேரமாவது மகிழ்ச்சியாகப் பேசவே இயலாத இந்தப் பொழுதுகளில் இப்போதே மரித்துவிட வேணுமென்பதாய் மனசு அலைகிறது.  நிம்மதியைத் தொலைத்த நீளும் இரவுகளில் சிலுவை சுமக்கும் கல்வாரிப் பயணமெனத் தைக்கிறது படுக்கை.

இப்படித் தூக்கத்துக்காய் கிடந்து தவிக்கும்போதெல்லாம் தொலைந்துபோன அந்த இனிமையான பொழுதுகள்தான் நினைவுக்குமிழ்களாய் நெஞ்சில் கசிகிறது.

ஏ.எல். பரீட்சை எழுதிவிட்டு றிசல்ற்றுக்காய் காத்திருந்த அந்த நாட்களில் கூடிக்கூடித் திரிந்து களைத்துப்போனபோது கடலையும் பனங்கிழங்கும் வாங்கிக்கொண்டு வந்து, நீண்டு நிமிர்ந்த அந்தப் பனைகளின் நடுவே வளைத்திருந்து சாப்பிடும் அலாதி சுகம் எப்போது எங்களை விட்டுப்போனது என்பதை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்ளூ கனத்துப் போகும் நெஞ்சில் இரத்தம் கசிவதாய் எங்கோ தாளாத வலிதான் ஏற்படுகிறது.

கிராமக்கோட்டுச் சந்திக்குப்போகும் மெயின் ரோட்டில் இருந்து இருநூறு யார் தள்ளிக் கிடக்கும் வெட்டைவெளியில் வெயில் வெயிலாய் கிறிக்கற் ஆடியபடி சிறுவர்கள் குதூகலிப்பர்.  பனைகளின் கீழே விரிந்து போய்க்கிடக்கும் நிழலில் நாங்கள் ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொண்டே நீண்ட நேரமாக உட்கார்ந்திருப்போம்.  மாலை வரும்வரை யாருமே அந்த இடத்தை விட்டு நகரவே முடியாதளவுக்குச் சுவாரஸ்யமான விடயங்களெல்லாம் சம்பாஷனைகளில் வந்து போகும்.

சீலன் தன் சிநேகிதி பற்றி எந்தநேரமும் கதைத்துக் கொண்டேயிருப்பான். அவள்மீது தான் உயிரையே வைத்திருப்பதாகவும், அவளையே கல்யாணம் செய்துகொள்வதாகவும் கூறிக்கொண்டிருந்தான்.  பீற்றரின் கனவெல்லாம் விழுந்துபோய்க்கிடக்கும் தனது குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதாகவே இருந்தது.  என்னென்ன தொழில் செய்தால் முன்னேறலாம் என்பதை ஆலோசித்தபடியே இருப்பான்.  றிசல்ற்றைப் பார்த்து விட்டு ஏதாவது சொந்தமாய் தொழில் தொடங்கப்போவதாக அவனுக்கு எண்ணம் இருந்தது.  சுரேசுக்கு எந்த விதமான ஐடியாக்களும் இல்லாமல் எதற்கெடுத்தாலும் சிரித்தபடியே இருப்பான்.  அப்பாவி.

ஆனால் பின்னாளில் கூட்டைப்பிய்த்தெறிந்து குருவிகள் கலைந்து பிரிந்து போனது மாதிரி எவ்வாறெல்லாம் ஒருவரை ஒருவர் அறியாதபடிக்கு கண்காணாத தூரங்களிலெல்லாம் தொலைந்துபோனார்கள்.

இப்போதும் அந்த வெளியில் அடித்த பந்தை எடுக்கச் சிறுவர்கள் ஓடுவதாகவும் கிராமக்கோட்டுச் சந்திக்குப் போகும் தெருவில் சந்தையால் போகும் கதிரேசு மாமா கள்ளுக்குடித்த உற்சாகத்தில் காத்தவராயன் பாட்டுப் பாடிக்கொண்டு போவதுபோலவும் 'கீக்கிறீக்.. கீக்கிறீக்...' என்று அவரது சைக்கிள் சத்தம் காதில் ஒலிப்பதாகவுமே படுகிறது!

மீண்டும் மீண்டும் அந்தப் பனைகளும் அவற்றுக்கப்பால் விரியும் வெளியும்தான் ஞாபகத்தில் படர்கிறது.

இப்போது அந்தக் கிறிக்கற் சிறுவர்கள் எங்கெல்லாம் சிதறிப் போனார்களோ..? அதில் எத்தனை பேர் காணாமல்போனோர் பட்டியலில் இடம் பிடித்தார்களோ..?

எங்கள் ஊருக்கு இராணுவம் வந்தபோது முதன் முதலில் அந்தப் பனைகளின் நடுவேதானாம் சென்றி போட்டு உட்கார்ந்தது.  பின் ஒவ்வொரு பனையாய்த் தறித்து பெரிய பண்டும் பங்கரும் அமைத்து நிரந்தரமாய் தன் இருப்பைப் பலப்படுத்தியபோது அந்த இராணுவ மினி முகாமைச் சுற்றியிருந்த ஏராளமான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

இதைக் கேள்வியுற்றதும் தான் சிறுகச் சிறுகச் சேமித்துக் கட்டிய வீடு இப்படிப் போனதே என்று அப்பா அதிர்ந்து போனார். அவரைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு நாங்கள் ஏகப்பட்ட பிரயத்தனங்கள் செய்ய வேண்டியிருந்தது.

வெளியில் உயிரை உறைய வைக்கும் பீதியைத் தருவதாய் இருள் கவிந்து கிடக்கிறது.  எங்கும்; நிசப்தமே நிலவுகிறது.  இந்த நாய்கள் கூட இப்போது குரைப்பதை நிறுத்தி விட்டனவோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.  சரி, இந்த முற்றத்து வேப்பமர வெளவால்கள் எங்கே போய்த் தொலைந்தன.  முந்தியெண்டால் வேம்பம்பழக் காலத்துக்கு எங்கிருந்துதான் அப்படி வருகின்றவோளூ கொள்ளை கொள்ளையாய் வந்து மரத்தில் மொய்த்துக்கிடந்து கத்தலும் சடசடப்புமாகவே இரவிரவாகத் தொல்லைகள் கொடுப்பன.

இப்போது எங்கேயும் அவற்றின் அசுகைகூடத் தெரிவதில்லை. அதுகள்கூட எங்காவது தொலைதூரங்களுக்குப் புலம்பெயர்ந்து போய்விட்டனவா? அல்லது ஓசைபடாமல் வந்து தங்களின் கருமங்களை முடித்துக்கொண்டு போய்விடுகின்றனவா?

எதுவுமே நிலையற்றதாகிப்போன துயர்தரும் வாழ்வு. நாளைய இருத்தல் என்பது நிச்சயமில்லாதபோது எதிலுமே லயிப்பற்ற ஜடமாகத்தானே நடமாடமுடிகிறது.

முன்னரென்றால் எங்கள் ஊர் ஆழ்வார் கோயில்  ஆவணி மாதத்தில் வரும் கடைசி மூன்று தினங்களும் விடிய விடியத் திருவிழாவில் மூழ்கிக் கிடக்கும்.  சுற்றுப்புறமெல்லாம் ஒளி வெள்ளத்தில் பளிச்சிடப் பட்டுச் சாறிகள் மினுங்கும். நாலுமுழ வேட்டிகளோடு நாலைந்து பேராய் அந்த ஜன நெரிசலில் உலாவருவதே சுவர்க்க சுகம்.  அவ்வாறான ஒரு வருடத் திருவிழாவில்தான் மனேச்சற்ற மகள் வசந்தனோடு ஓடிப் போனாள்.  கனகம் மாமியின் மகளை வரணியில இருந்து வந்த மாப்பிளை பகுதி இந்தத் திருவிழாவில்தானாம் பெண் பார்த்தார்கள். இன்னம் என்னென்னமோ சங்கதிகள் எல்லாம் அங்கு நடந்து முடியும்.

மூன்றாம் நாள் பொங்கல் வைத்து திருவிழா நிறைவெய்தும்போது மூன்று நாளும் இளசுகள் தாம் பரிமாறிக்கொண்ட பார்வைகளையும், பறிகொடுத்த மனசுகளை மீளப் பெறமுடியாத துயரங்களையும் மீட்டியவாறு வீடு நோக்கிப் போய்க்கொண்டிருப்பர்.

மூன்று நாளும் மாமிசம் உண்ணாது விரதமிருந்து பூசை முடித்த கனபேர் வெறும் மேலுடன் நேரே கள்ளுக்கடை நோக்கித் திருவிழாவில் நடந்த குற்றம் குறைகளைப் பற்றிக் கதைத்தவாறு நடப்பர்.  வீடு திரும்பும்போது மீனோ இறைச்சிப் பார்சலோ கையில் இருக்கும். இன்னும் சிலர் வெறிச்சோடிப்போன வெளிமண்டபத்தில் இருந்து கூடிக்கதையளப்பர்.  சிலவேளைகளில் அதில் ஐயரின் தலையும் தெரியும்.

இவையெல்லாம் எம்மை விட்டுப்போய் நெடுநாளாயிற்று.

எங்குபோனாலும் ஐந்து மணிக்குள் வீடு திரும்பும் அவசரம்.  ஒப்பாரி கேட்டால் உறவுக்காரரெண்டாலும் விடிந்த பின்பே துக்கம் விசாரிக்கும் துர்ப்பாக்கியம்.

இந்த முன்னிரவில் நிம்மதியற்றுத் தூக்கம் வர மறுக்கும் இந்நிமிசங்களில் யாருமே அறியமுடியாதபடிக்கு என் ஜீவன் கதறுகிறது.  ஊ.. ஊ.. என்றிரையும் காற்று பனையோலைகளில் பட்டுச் சரசரக்கிறது.  இப்படி வீசும் இந்தக் காற்று மனித வெறியர்கள் குறிவைத்துக் காத்திருக்கும் அந்த முகாமினுள்ளும் உக்கிரமாய் பெரும்புயலென அவர்களை அள்ளுண்டு அடிபட்டுத் திணறடிக்கப் பண்ணுவதாய் வீசவேண்டுமென மனம் அவாவுகின்றது.

இந்த இரவின் அந்தகார இருளில் அந்த முகாமினுள்ளே புகை பிடித்தவாறோ - குரூரம் கொப்பளிக்கும் தொனியில் ஏதாவது கதைத்தும் சிரித்தும்கொண்டே அவர்கள் இருப்பார்கள்.  சென்றியில் நிற்பவனின் துப்பாக்கி அப்பிராணி ஒருவனைத் தீர்;த்துக்கட்டிய பெருமிதத்தில் ஓய்ந்துறங்கும்ளூ அல்லது யாரையாவது குறி வைத்தபடி வெடித்துச் சிதற இருக்கும் அந்தக் கொடூர கண நேரத்துக்காகக் காத்துக்கிடக்கும்.

இன்னும் உள்ளே கிருஷாந்தியைப் போலோ ராஜினியைப் போலோ யாராவது அவர்களின் காம இச்சைக்குக் கதறிக் கதறித் தங்களை இழந்துகொண்டிருக்கலாம்.

இரண்டு நாட்களுக்கு முன்பும்கூட முகாமினுள்ளே யாரோ ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டதாக ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.  அந்த முகாமிற்கு அவர்கள் வந்த புதிதில் ஊரில் உள்ள சனங்களோடு மிகவும் பண்பாகவே நடந்துகொண்டதாகப் புளுகித் திரிந்தவர்களில் அநேகம் பேரினது உறவினர்கள் அவர்களைத் தேடி ஒரு நாளைக்குப் பல தடவை முகாமை நோக்கி அலைந்து திரிவதுதான் மிகவும் மனவேதனையைத் தருகிறது. சனங்கள் அவர்கள் மேல் எவ்வளவு நம்பிக்கை கொண்டு நடந்தார்கள்.

உயிர்கரையும் இந்த அர்த்த ராத்திரியிலும் சென்றியில் இருந்தவாறு அந்தக் கொடிய விழிகள் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனவோளூ அவர்கள் இந்த இருளை ஊடறுத்துக் கிழித்தவாறோ - இந்த இருளோடு இருளாய்க் கலந்தவாறோ வருவார்கள்.

அவர்களது வரவுக்காய் அந்த மீட்பர்களின் வருகைக்காய் இங்கு எத்தனை பேர் காத்துக்கிடக்கிறார்கள்.

அவர்கள் வருவார்கள் என்கிற நினைவே நெஞ்சில் நிறைவைத் தருகிறது.

நன்றி ;ஈழத்து கதை தளம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun 27 Dec 2015 - 17:48

திரேசா
--------------------
நாவாந்துறை டானியல் ஜீவா
-------------
நள்ளிரவு இரண்டு மணியைக் கடந்தும் தூக்கம் வராமல் தூரத்தே செல்ல என் கால கநர்வில் கடந்து சென்ற ஐந்தாண்களுக்கு முன் முற்றுப்பெற்று விட்ட அந்த மனிதத்தின் நினைவு எனக்குள் ஓடத்தொடங்கியது.வயதெல்லை தாண்டி வார்த்தைகள் வலுவிழந்து மானிடமே ஒவ்வொரு கணமும் மரணித்துக் கொண்டும் மரணத்தினுடாக வாழ்வைத்தேடுகின்ற மைந்தர்களில் திரேசாவின் இழப்பு ஆயிரத்தில் ஒன்றாக மறைந்து போயிருக்கலாம். ஆனால் என் கண்முன்னே கணப்பொழுதில் சிதைந்து போன அவளது உடல் என் இதயத்தில் ஆழமாய் பதிவாகிவிட்டது. அவளது மரணம் நேற்று நிகழ்ந்தது போல இன்னும் என்னும மனத்திரையிலிருந்து விலகாது ஒட்டுக்கொண்டிருக்கின்றது. என்னில் எழுந்து பின் மறைந்து போகின்ற நிகழ்வுகளைப்போல் அல்லாது என் இதயமே வெடித்திடும் போல் இருக்கின்றது. என் வாழ்வில் முடிந்து போன சோகங்களில் முற்றுப்பெறாத கவிதை வரிகளுக்கு கருப்பொருளானள். . . .

திரேசாவின் மரணம் அந்த மீனவகிராமத்தே வியப்பில் ஆழ்திய நிகழ்வுதான். அன்று எல்லோர் முகங்களிலும் சோகம் கவிழ்ந்து கிடந்தது ஊர் எங்கும் வீசிய உப்புக்காற்றுக் கூட இழப்பைத் தாங்கிக் கொள்ளும் முடியாமல் சோகத்தை சுமந்த படி சென்றது. மண்ணுக்குள் நேர்ந்த மாரடைப்பi நிணைந்து என் செஞ்சே தீப் பிளம்பானது. இருள் விலகிடாப் பூமியில் இன்னுயிர் ஈந்தும் முடிவவுறாத சோகங்களுமே சொந்தமாயின. அடிவானத்தைக் கடல் குடிக்க உயிர்களை இரும்பு உண்ணும். வைகறையின் சத்தம் அதிகாலை ஆறு மணியை நினைவு படுத்திக்கொண்டிருக்கும்.

தொழிலாளர்களும் காக்கை தீவு செல்கின்ற மீன் வியாபாரிகளும் நாவந்துறை மீன் சந்தைக்கு முன்பாக கூடுவார்கள். நாவாந்துறை சந்தை நாவலர் வீதியும் காரைநகர் வீதியும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள மீன் சந்தைகளில் ஓலளவு வசதியாக உள்ள சந்தைகளில் நாவந்துறை மீன் சந்தையும் ஒன்று. இறைச்சி வகைகளும் மரக்கறி வகைகளும் உட்பட விற்பனை செய்யப்படுகின்றன. இச் சந்தையில் இருந்து காக்கை தீவுச் சந்தை ஒன்ரரை மைல் தொலைவில் உள்ளது. விடியற்காலை ஏழு மணியில் இருந்து பதினொரு மணி வரை கூடி பின்னர் கலையும். நாவாந்துறைச் சந்தை பன்னிரண்டு மணிக்குத் தொடங்கி பிற்பகல் வரை நீடிக்கும்.

இரண்டு மீன் சந்தைகளிலும் வியாபாரம் செய்பவர்களில் திரேசாவு; ஒருத்தி சந்தைக்கு முன்பாக தேனீர்க் கடையும் இருக்கின்றன. பின்பக்கமாக அழகிய கடற்கரை இருக்கின்றது. இந்தக் கடலை நம்பியே இங்குள்ள மீனவர்கள் வாழ்கிறார்கள். கரையோர்தில் மேவப்பட்ட வெண்மணல் புதிய அழகை கொடுத்துக் கொண்டிருந்தது. காலப்போக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குடிசைகள் முளைக்கத் தொடங்கின.

திரேசா தேனீர்க் கடை வாசல் படியில் நின்ற படி ''கடகத்தை கொஞ்சம் இறக்குமோன'' என்று விடுவலை வானைப் பார்த்துக் கொண்டிருந்த ரவியிடம் சொன்னாள். இறக்கிய கையோடு கபூர் காக்காவிடம் க10டான தேனீர் போடச் சொன்னாள். கபூர்க்காக்காவின் தேத்தண்ணிக் கடையில் வாடிக்கையாளர்களில் திரேசாவும் ஒருத்தி. காலையில் காக்கை தீவு மீன் சந்தைக்கு போவதற்கு முதல் கப|ர்க்காக்காவிடம் ஒரு பிளேன் ரீ சுடச்சுட குடித்துப் போட்டுத்தான் கால் நடையாக காக்கை தீவுக்கு போவது வழக்கம். தனக்காக எதையும் சேர்த்து வைக்காது பிள்ளைகளின் வாழ்விற்காக உழைத்து ஓடப் போனவள் நீண்டு நெடுத்த உடல்கட்டும் ஒன்று இரண்டு கறுப்பைத்தவிர வெண் நாரையின் நிறம் போல் தலைமுடி வெளுத்துப்போன சீத்தச் சட்டையும், பச்சை நிற நூல் சேலையும், இடுப்பினில் துணிப்பையும், அதன் பக்கமாக செபமாலையும் இதுதான் அவளது வெளித்தோற்றம். அனால் அவளது மனசு கடலைப்போல் எல்லையற்று, பரந்து விரிந்து கிடக்கின்றது. மனித நேயம் மடியினில் அடைகாத்து வைப்பாள் வாழ்வின் ஒவ்வொரு நெருக்கடியையும் தன் அறிவுக்கேற்ப்ப வெற்றி கொண்டு வாழ்பவள். காலை எழுந்ததும் தேத்தண்ணீக்கடை, காக்கை தீவுச் சந்தை , நாவாந்துறைச் சந்தை வீ திரும்பியதும் கோடிப் பக்கமாக கடகத்தையும், சுளகையும் கழுவி வைத்து விட்டு, சின்னத்தூக்கம். அழுந்ததும் கிழவிகளோடு ஊர்க்கதை பின்னர் ஓலைக் குடிசையில் ஒட்டுத்தூவாரத்தில் உறைவிடம் மீன்டும் அடுத்த நாள் காலை காக்கை தீவை நோக்கி இப்படியோ அவளது பத்து வருடமும் ஓடியது. இந்த மீன் வியாபாரத்திற்கு வருவதற்கும் அவளுக்குள் ஒரு சோகம் ஒளிந்து கடந்ததை மறக்கமுடியாது.

ஒவ்வொரு ஆவணி பதினைஞ்சும் இங்கு பரலோகமாதா திருவிழா நடைபெறும் ஒன்பது நாள் நோவினையும் ஒரு நாள் பாடல் பூசையுடன் திருவிழாவை சிறப்பிக்க நாட்டுக் கூத்தும் நடைபெறும். இம்முறை கலைக்கவி நீ. எஸ்தாக்கி எழுதி பெலிக்கான் அண்ணாவியாரால் நெறிப்படுத்தப்பட்ட தென்மோடி நாட்டுக் கூத்தான செபஸ்தியார் நாட்டுக் கூத்து நடந்து கொண்டிருந்தது. கிறிஸ்த்தவ மதத்திற்காக தங்கள் உயிரை இன்னுயிர் ஈந்தவர்களில் செபஸ்தியாரும் ஒருவர். இவரின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்டதே செபஸ்தியார் நாட்டுக்கூத்து.

திரேசா அவளது கணவர் அருளர், பிள்ளைகள் எல்லோருக்கும் நாட்டுக்கூத்தென்றாள் உயிர். வறுத்த சோளகம் கொட்டையும், கச்சானும் , சுடுதண்ணிப் போத்தலில் தேத்தண்ணியோடும் மேடைக்கு முன்னால் உட்காந்திருவார்கள்.கடசிசெபத்தியாரின் கட்டத்தை பார்த்துவிட்டுளூவலை இலுக்கப் போகலாம் என்ற முடிவெடுத்து காத்திருந்தார் அருளார். இரவு மூன்று மனியாகிவிட்டது.
பனி உதிர்ந்து கொண்டிருந்தது.நட்சத்திரங்கள்வான்வெளியில் விரவிக்கிடந்தன குளிர்நிலாவில் திரேசாவின் தலைஈரமாகியது.கூத்தும் நடுப்பகுதியை நெருங்கிக்கொண்டிருந்தது வழமை போல் கடசிப்பகுதியில் வரும் செபத்தியார் வேடத்தை அண்ணவியார் பெலிக்கான் அவர்களே ஏற்று நடிக்கிறார்.கடசியில் வரும் யோகன் இராசாவும் வந்திட்டார் இனிக்கடசி செபத்தியார் வரப்போகிறார் என்ற ஆவலோடு அருளாரின் கண்கள் அகல விரிந்தன. திரேசாவின் பார்வையும்தான்.
இயேசுவின் மறுஉருவம்போல் சித்திரவதை செய்யப்பட்ட உடல்காயயங்களோடு சிகப்புநிறஆடை உடலோடு இறுக்கப்பட்டு மேடையில் தோன்றினார் அண்ணாவியார் பெலிக்கான்.காத்திருப்பின் அர்த்தம் உள்ளத்தில் இன்பஉணர்வலையை மீட்டிய கணமே தொழிலுக்கும் போகவேண்டிய கடமை உணர்வும் அவனுள் எழுந்தது.தொழிலுக்கு போகவில்லையென்றாள் பிள்ளைகள் பட்டினியாய் கிடப்பார்கள் என்றுமனதிற்குள் நினைத்துக்கொண்டு தொழிலுக்கு ஆயுத்தமானன்.
திரேசா நான்போயிற்று வாறேன் என்றார் அருளார். நாட்டுக்கூத்தையே கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிந்த திரேசா ஒரு கணம் அருளாரை திரும்பிப்பார்த்து
ஏனணன இன்னும் கொஞ்சம் தானே இருக்குது தொழிக்கு போகமல் பார்க்கலாம்தானே என்று ஒரே மூச்சில் சொன்னாள்.
இங்கெரப்பா இண்;டைக்கு மங்களம் பாடமாட்டாங்க..... ஏனென்றாள் அடுத்த சனிக்கிழமை நிலவு
வந்துவிடும் தொழிக்கு போகத்தேவையில்லை விடிய விடிய பார்க்கலாம் என்று சொல்லிக்கொண்டே புறப்பட்டார் அருளர்.கடலில் நீந்தியும்சுழியோடியும் களம்கட்டிவளைத்தும் புயலோடும்அலையோடும் போரடச்சென்ற அருளர்
இன்று வரை வீடுதிரும்பவில்லை.மண்டைதீவிலிருந்து வீசிய செல்லுக்கு இரையாகி கடலில் தொலைந்து போனான். அன்று கூத்தும் கும்மாளமுமாய் ஊறிக்கிடந்த மனிதர்களின் முகத்தில் இனம்
புரியாத சோகம் கவ்வியது.அருளர் இறந்து முப்பத்தொராம் நாள் முடிய நார்க்கடகமும் சுளகமும் சுமக்கத்தொடங்கியவள் இன்றுவவரை சுமக்கிறாள்;
கடலில் நீந்தியும் சுழியோடியும் களம்கட்டி வளைத்தும் புயலோடும் அலையோடும் போரடச்சென்ற அருளர் இன்று வரை வீடு திரும்பவில்லை மண்டைதீவிலிருந்து வுpசிய செல்லுக்கு இரையாகி கடலில் தொலைந்து போனான். அன்று கூத்தும் கும்மாளமுமாய் ஊறிக்கிடந்த மனிதர்களின் முகங்களில் இனம் புரியாத சோகம் கவ்வியது.அருளர் இறந்து முப்பத்தோரம் நாள் முடிய நார்க்கடகமும் சுளகும் சுமக்கத் தொடங்கியவள் தான் இன்றுவரை சுமக்கத்தொடங்கியவள் இன்று வரை சுமக்கிறாள்
திரேசா தேத்தண்ணீயை ஒரு முறடு குடித்து விட்டு வானத்தை அண்ணார்ந்து பார்த்தாள்.அடிவானம் சிவந்து இரவு நிலா குறுகிக் குறிகி கடலுக்குள் கரைந்து கொண்டிருந்தது. அப்போதுதான் காக்கை தீவு போகாமல் நிற்பதை திரேசா உணர்ந்தாள். வெள்ளாப்புக் கொடுத்து விடிவதற்குள் காக்கைதீவு போச்சேர்ந்து விடவேண்டும் என்ற நோக்கில் விறுவிறுப்பாக நடக்கத்தொடங்கினாள். வழமையான நடையைவிட இன்று வேகமாகத்தான் நடக்கிறாள். சொந்த வாக்கையிலும் கூட திரேசா ஒரு நாளோ இருநாளோ நடக்கவில்லை. கிட்டத்தட்ட ஆறு வருடமாக நடதே பழக்கப்பட்டவள்.

மொத்தமாக ஆறு பிள்ளைகள் ஐந்து பெண்களும், ஒரு பையனும். ஐந்து பெண்களுக்கும் தன்னால் முடிந்ததைக் கொடுத்து சீரும்சிறப்புமாக திருமணம் செய்து வைத்தாள். கடைசி மகன் தாசனை பி. ஏ வரை படிக்க வைத்தாள். படித்து முடிந்ததும் கொழும்பில் உத்தியோகத்தோடு திருமணம் செய்து கொண்டான். ஊர்ப்பக்கமே திரும்பிப் பார்ப்பது கிடையாது. நன்றி கெட்டவனாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் கூட இவ்வளவு வயது வந்தும் ஆச்சி காக்கைதீவு போய் கஸ்ரப்பட வேண்டுமா என்று ஒரு கணம் கூட சிந்திப்பதில்லை. தானும் தன் குடும்பமும் என்று கொழும்பில் உல்லாச வாழ்க்கை.

செபமாலை சொல்லிக் கொண்டு வந்த திரேசா வசந்தபுரத்தைத் தாண்டி காக்கைதீவை நெருங்கி விட்டதை உணர்ந்தாள். கடசிக் காரணிக்கத்தை விரைவாக சொல்லி முடித்தாள். நேற்றும் ஓடா நீராம் மச்சச் சாதி ஒன்றையும் காணல எங்களுக்குத்தான் சுனை நீர், ஓடா நீர் வெள்ளிக் கிழமை நிலவு என்று தனக்குள் முனுமுத்தபடி நடந்தாள்.

வாடைக்காற்று வந்தால் சோர்ந்து கிடக்கும் மீனவர்கள் விழிப்பார்கள். நல்ல மீன் சாதிகள் பிடிபடும். களங்கண்ணியில் வெள்ளை இறால் பாட்டு இறால் என்று பிடிபடும். மீனவர்கள் குடும்பம் செல்வச் செழிப்பில் சிரித்து விளையாடும். திரேசாவும் அப்படித்தான். ஏனென்றாள் அவர்களை நம்பித்தான் அவளது வாழ்க்கை.
என்றும் இல்லாதாவாறு அறியப்படாத அன்னியமுகங்களால் காக்கைதீவு மீன் சந்தை நிரம்பி வழிந்தது. கோட்டையில் இருந்து ஆமி செல்லடிக்கிறாங்கள் என்றதால் யாழ்ப்பாணத்துச் சந்தைகள் இயங்காமல் போய்விட்டது. அதனால் மீன் வாங்குவதற்காக புதிய புதிய முகங்கலெல்லாம் சந்தையில் கூடிவிட்டது.

வள்ளத்தில் இருந்து கூறி விற்கும் கூறியான் அந்தோனியின் குரல் வானத்தைத் தொடும்போல் எதிரொலித்துக் கொண்டிருந்தது. மீன் வாங்க வந்தவர்கள் அங்குமிங்குமாக ஓடித்திரிந்தார்கள் எங்கு மலிவான விலையில் மீன் விற்பார்கள் என்பதற்காகவோ தெரியவில்லை. கரையைத் தட்டிக்கொண்டிருந்த வள்ளங்களில் தொழிலாளர்கள் மீன் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். இறால் வியாபாரி முருகேசு தராசு படியோடு ஓரமாக நின்று கொண்டிருந்தார். கனிபாவின் பாயாச அடுப்பைச் சுற்றி பக்கத்தில் இருக்கும் வடைக்கார கிழவியை முற்றுகையிட்டபடி இளவட்டங்கள்.

திரேசா அவசர அவசரமாக தான் கொண்டு வந்த கடகத்தை தலையில் இருந்து இறக்கினாள். கடகத்துக்குள் இருந்த பலகையை எடுத்து தனக்கு வசதியாக வைத்துவிட்டு உற்காந்தாள். வள்ளத்தில் இருந்து வந்த வாசு மீனை ஒரு சுளகிலும், இறாலை ஒரு சுளகிலும் போட்டான். அந்தக் கணமே தென் திசையில் இருந்து இரைச்சலோடு ஹெலி வந்துகொண்டிருந்தது. ஹெலிச் சத்தத்தைக் கேட்டு ஒரு சிலர் ஹெலி வருகுது சுடப்போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு போனார்கள். தாழப்பறந்து வந்த ஹெலி சுடத்தொடங்கியது. வானத்திற்கும் பூமிக்கும் இடையில் மனித நாகரிகத்திற்கு அப்பால் ஓசை எழுப்பிக்கொண்டிருந்தது. எல்லோரும் பாதுகாப்பான இடத்திற்திற்கு சிதறி ஓடினார்கள். பின்னர் இடியோடு வந்த புயல் மழை ஓய்ந்து விட்டது. ஹெலியின் சத்தம் குறைந்தது. திரைப்படங்களில் காணப்படும் அழிவுகளின் காட்சியாக காக்கை தீவு சீரழிந்து கிடந்தது. மரங்களில் ஹெலி சுட்ட காயங்களின் தழும்புகள் இந்துமா சமுத்திரத்தையும் தாண்டி எங்கள் அழுகுரல் உலகம் எங்கள் பக்கம் விழிக்கவில்லை. மையான அமைதி. வயதான திரேசா எழும்பி ஓடுவதகுள் வேட்டுக்கள் தீர்ந்து விட்டது. சிதறிப்போய்க் கிடந்த மீன்களுக்கிடையில் திரேசா இரத்த வெள்ளத்தில கிடந்தாள்.

என் கட்டிலில் அருகில் இருந்த மணிக்கூடு எலாம் அடிக்கத் தொடங்கியது. என் நினைவுகளெல்லாம் கலைந்தது. நான் இன்னும் தூங்கவில்லையே? நேற்றிரவு கழுவித் துடைத்த சட்டிகள் நினைவிற்கு வந்தது. ஓடு ஓடு வேலைக்கு ஓடு என்று என் மனம் சொல்லியது.

(முற்றும்)

நன்றி ;ஈழத்து கதை தளம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun 27 Dec 2015 - 17:54

கொத்தமல்லிக்குடிநீர்
------------------------------------
இரா.சம்பந்தன்
------------------------------------

அம்மா! பிள்ளைகள் படுத்திருக்கினம். நான் போட்டு வாறன். பரிமளம் ஆச்சி எழுந்து உட்காருவதற்குள் அறைக் கதவைச் சாத்திவிட்டு மகள் போய்விட்டாள். ஆச்சிக்கு இன்றைக்கும் சுகமில்லைத் தான். போன கிழமை பேரப்பிள்ளைகளோடு கடற்கரைக் குளிரில் உலாவினதாக்கும் ஆச்சிக்கு நெஞ்சுத்தடிமன் ஆக்கிப் போட்டுது. சனியும் ஞாயிறும் ஒரே தலை அம்மல். மண்டையிடி. சாப்பாடு மனமில்லை. எழுந்து நடக்க உலாஞ்சியது.

இராத்திரிப் படம் பார்த்துக்கொண்டு இருந்த போது தொடர்ந்து நாலைந்து தடவைகள் இருமியதற்காக என்னம்மா படம் பார்க்க விடமாட்டீங்களா? போய் அறைக்குள்ளே இருந்து இருமுங்கோவன் என்று பட்டும்படாமலும் சிரித்துக் கொண்டு சொன்ன மகளை எண்ணி மனதுள் வேதனைப் பட்டுக்கொண்டு ஒரு தைனோலோடு படுத்த ஆச்சிக்கு இரவு முழுவதும் நித்திரை வரவில்லை.  தொண்டைக்குள்ளே யாரோ கோழிச்செட்டையாலே தடவின மாதிரி ஏதோ ஊர்ந்து ஒரு கண் நித்திரை கொள்ள விடாமல் ஒரே புகைச்சல்.


இரவு முழுவதும் தான்பட்ட பாட்டைப் பார்த்து மகள் எழுந்து வந்து என்னம்மா செய்யுது? சுடுதண்ணீர் வைத்துத் தரட்டோ என்று கேட்பாள் என்று எண்ணி ஏமாறுவதற்கு ஆச்சி கனடாவுக்கு வந்த புதிதல்ல. அம்மாவுக்கு அனுதாபம் காட்டி என்ன ஏதென்று விசாரித்தால் பிறகு தான் நின்றுதானே பிள்ளைகளைப் பார்க்க வேணும் என்ற நினைப்போடு பொன்சர் பண்ணிக் கூப்பிட்டது வேறு என்னத்துக்கு என்ற எண்ணமும் சில வேளைகளில் இருக்கலாம் என்று நினைத்து ஆச்சியும் ஒன்றையும் பெரிது படுத்துவதில்லை. ஆனால் இன்றைக்கு இரண்டு பிள்ளைகளையும் விட்டுப் போட்டு மனுசனும் மனுசியும் வேலைக்குப் போவினம் என்று ஆச்சி கனவிலும் எண்ணி இருக்கவில்லை.

ஒருமுறையல்ல விடிய ஒருமுறை மத்தியானம் இரண்டு முறை பின்னேரம் ஒருக்கால் என்றும் பெரியதை ஒருகையில்; பிடித்துக் கொண்டும் சிறியதை இடுப்பிலே சுமந்து கொண்டும் பள்ளிக்கூடத்துக்கும் வீட்டுக்கும் நாயாக அலையும் வாழ்க்கைக்கு வருத்தத்தைக் காரணம் காட்டி இன்றைக்கு லீவு தருவார்கள் என்று எண்ணியிருந்த ஆச்சிக்கு உண்மையில் ஏமாற்றமாகத் தான் இருந்தது.

தலையைக் கூட்டி முடிந்து கொண்டு கட்டிலை விட்டு இறங்கி ஒரு அடி வைக்கவில்லை. பித்தமாக்கும் வயிற்றைப் புரட்டியது. தற்செயலாக சத்தி வந்தாலும் என்று நினைத்து நேற்றே எடுத்துத் தலகணிக்குக் கீழே ஒளிச்சு வைத்திருந்த பொலித்தீன் பையை எடுத்து முகத்துக்குக் கிட்டப் பிடித்து ஆவென்று வாயைத் திறந்த போது தான் சின்னன் அதுதான் பேத்தி அஜி தொட்டிலுக்குள்ளே கிடந்து சரசரத்துச் சிணுங்கியது. ஓடியாறேன் குஞ்சு என்று சொல்லு முன்பே அம்மம்மா தங்கச்சியைத் தூக்குங்கோ என்று படுக்க விடுகுதில்லை என்று கத்தினான் பேரன்.

ஆச்சிக்கு வந்த சத்தியும் நின்று விட்டது. நெஞ்சைத் தடவிக்கொண்டு குழந்தையையும் தூக்கித் தோளில் அணைத்தபடியே பால்வைக்கப் போன ஆச்சிக்கு பால் காச்சும் கிண்ணத்தை அடுப்பில் வைத்த போதுதான்  ஒருநாள் பால் பொங்கி அடுப்புக்குள்ளே ஊற்றுப்பட்டதுக்காக மகளிடம் வாங்கிய ஏச்சு ஞாபகத்துக்கு வந்தது. என்ன உயிர் போற வேலை இருந்தாலும் பால் அடுப்பிலே வைத்தால் பக்கத்திலே நில்லுங்கோ அம்மா! கொஞ்சம் சத்தம் போட்டுத்தான் பிள்ளை சொன்னவள். சொன்ன விசயம் நியாயமானது தான் என்றாலும் சொன்ன விதம் இருக்கே அது ஒரு மாதிரித்தான். என்றாலும் பிள்ளைப்பாசம் ஆச்சி பொறுத்துக் கொண்டாள்.

குழந்தையைக் கழுவித் துடைத்து உடுப்பு மாற்றி ஒரு விசுக்கோத்தும் எடுத்துப் பாலோடு கொடுத்து இருத்திவிட்டு மூன்று நான்கு தடவைகள் அடுப்புக்கு மேலே கையை வைத்துப் பார்த்தாள் ஆச்சி. சூடு குறையத் தொடங்கி விட்டது. அடுப்பு நிற்பாட்டியதை உறுதி செய்து கொண்டு இரண்டு துண்டு பாணுக்குச் சூடுகாட்டி பட்டரும் பூசி மூத்த பொடிக்கு கோப்பியும் ஊத்தி வைத்துவிட்டு மேலே போனாள்.
ஏழரை மணிக்கு எழுப்பியம்மா வெளிக்கிடுத்திச் சாப்பாடு கொடுத்துப் போட்டு எட்டுமணிக்கு வெளியாலே கூட்டிக் கொண்டு இறங்கினீங்கள் என்றால்  அவசரப்படாமல் போகலாம் என்று ஒருமுறை மகள் விளங்கப்படுத்தினவள். அப்படிப் பார்த்தால் இன்னும் நிறைய நேரம் இருக்குத்தான். ஆனால் பொடியன் எழும்பி முகத்தைக் கழுவிப்போட்டுத் தங்கச்சியாரை ஒரு ஐந்து நிமிடம் பார்த்தால் தானே மற்ற அலுவல்களையும் பார்க்கலாம். வீடு கூட்டுவது சுவாமி கும்பிடுவது சமைப்பது சாப்பிடுவது போன்ற வேலைகளைக் குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு செய்தாலும் குழந்தையையும் வைத்துக்கொண்டு செய்ய முடியாத ஒருசில வேலைகளும் உண்டு.

ஆச்சிக்கு இப்பவும் வயிற்றுக்குள் என்னவோ செய்தது. ஒருமுறை இருந்து பார்க்கலாம் தான் .பெட்டையை இறக்கி விட்டால் பேயடிச்சதைப் போல குழறும். பிறகு ஆத்தேலாது. அதுக்குப் பயந்து ஆச்சி அடக்கிக் கொண்டுதான் இருக்கிறாள்.

தம்பி குஞ்சு எழும்பு மோனை! பள்ளிக்கூடத்துக்குப் போகவேணுமல்லோ. என்னை விடுங்கோ அம்மம்மா. அப்படிச் சொல்லக்கூடாது ராசா. எழும்பு அப்பு! நான் பிள்ளைக்கு பாண் பட்டர் எல்லாம் பூசி வைச்சிருக்கிறன். எனக்கு பாண் வேண்டாம் அம்மம்மா. சூப் தான் வேணும். இனிச் சூப்பு காய்ச்ச நேரமல்லோ போய்விடும். அம்மா பாண் தானே குடுக்கச் சொன்னவள்? நேற்றும் சூப்புத்தானே குடிச்சது. நான் பிள்ளைக்கு இரவு காய்ச்சித் தாறன். அம்மம்மா எனக்குச் சூப் தான் வேணும். ஒரு சொல்வழி கேளாத பிள்ளை எழும்பிவா காச்சித் தாறன்.

சூப்பு என்றதும் தான் பரிமளம் ஆச்சிக்கு சடாசு அண்ணரின் மணியம் பெண்சாதி போனிலே சொன்னது நினைவுக்கு வந்தது. பரிமளம் அக்கா ஒரு சிறங்கை கொத்தமல்லி நாலைந்து மிளகு கொஞ்ச வெந்தயம் இரண்டு பல்லு உள்ளி கடுக சீரகம் எல்லாவற்றையும் இலேசாக வறுத்து எடுத்து கோப்பிக் கிறைண்டர் இருக்கல்லோ அதிலே போட்டு இரண்டு தரம் அரைத்துப் போட்டு தண்ணியைக் கொதிக்க வைத்து அவித்துக் குடி. துடிமன் தலைச்சுற்று எல்லாம் ஒரு நாளிலே பறக்கும் கண்டியோ. ஆதை விட்டுப் போட்டு இங்கே ஒன்றும் செய்ய மாட்டாய் அக்கா என்று சொன்னது. இன்றைக்கு அதையும் ஒருக்கால் செய்து குடித்துப் பார்க்க வேணும். இந்தப் பொல்லாத இருமல் ஒன்றுக்கம் நிக்குதில்லையே ஆச்சி நினைத்துக் கொண்டாள்.

எல்லாம் சரிதான். ஆச்சிக்கு கிரைண்டர் போடத் தெரியாது. சுpன்னக் கோப்பிக் கிரைண்டர் என்றால் சுகம்.  முகளிடம் இருக்கும் கிரைண்டர் வேறு மாதிரி. பெரிசு. மகள் போட்டுவிட உழுந்து அப்படி அரைத்துத் தான் ஆச்சிக்கப் பழக்கம். பொடியன் பள்ளிக்கூடம் போவதற்கு முதல் கேட்டு வைத்துக் கொண்டால் கொண்டுபோய் விட்டுப்போட்டு வந்து செய்து குடிக்கலாம்.

   எடதம்பீ! மோனே! இந்தக் கிரைண்டர் எப்படிப் போடுறது என்று சொல்லு ராசா.
   அம்மம்மா இங்கே பாருங்கோ இந்த வயரைப் பிளக்கிலே இப்படிக் குடுங்கோ. பிறகு எதைக் கிரைண்ட் பண்ணப் போறியளோ அதைப் போட்டு மூடியாலே மூடிப்போட்டு இப்படி அமத்துங்கோ இப்ப வேலை செய்யுதல்லோ
   சரிசரி நீ சாப்பிட்டுப் போட்டு இறங்கு. நான் பிறகு வந்து செய்யுறன். அம்மாடி உனக்கு சூப்பு ஆறட்டும் அண்ணாவை விட்டுப் போட்டு வந்து குடிப்பம்.
   ஆச்சி முகம் கழுவிக்கொண்டு வெளியாலே இறங்கிய பொது எட்டுமணி. அம்மா பள்ளிக்கூட வாசலிலே விட்டுப் போட்டு உள்ளே போறானோ என்று பார்த்துப் போட்டுத் தான் நீங்கள் வரவேணும். தற்செயலாக இவன் வாசலிலே நின்று ஏமலாந்த ஆராவது பிடிச்சுக்கொண்டு போய்விடுவான்கள் கவனம் என்ன? மகள் முதல் நாளே சொன்னவள். பேரன் உள்ளே போக ஆச்சி திரும்பி நடந்தாள். குடிநீர் வெறும் வயிற்றிலே குடிச்சால்தான் நல்லது என்று ஆச்சி இன்னமும் தேத்தண்ணீர் கூடக் குடிக்கவில்லை. பொடியைப் பதினொன்றரைக்குப் போய் கூப்பிடுவதற்குள் குடிநீரும் அவிச்சு பாத்திரங்களும் கழுவி கறியளும் வைக்க நேரம் காணுமா? காணும் காணும் ஆச்சி தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.
   குழந்தைக்கு சூப்பைக் கொடுத்து முடித்து விளையாட இருத்திவிட்டு ஆச்சி ஒரு சிறங்கை கொத்தமல்லியை எடுத்து மிளகு சீரகத்தோடு இரண்டு செத்தல் மிளகாயும் சேர்த்து வறுத்தாள். புதுச் செத்தல் ஆக்கும். சூடு பட்டவுடன் மிளகாய் புகைச்சூழ்ந்து இருமியது. ஆச்சி எல்லாவற்றையும் இறக்கி ஆறவிட்டாள். கிரைண்டரிலே போட்டுப் பேரன் சொன்னது போல அமர்த்தினாள். கிரைண்டர் வேலை செய்யவில்லை. ஆச்சிக்குப் பெருத்த ஏமாற்றமாகப் போய்விட்டது. அரைக்காட்டில் என்ன முழுசாகப் போட்டு அவிச்சுக் குடிப்பம் என்றுதான் ஆச்சி முதலில் எண்ணினாள். ஏதற்கும் பொடியன் இன்னும் ஒன்று ஒன்றரை மணித்தியாலத்திலே வந்திடும் கேட்போம் என்று நினைத்தவளாக மற்ற வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள்.
   குடிநீர் பொருட்களை அப்படியே கிரைண்டரோடு தள்ளிவைத்து விட்டு பாத்திரங்களைக் கழுவினாள் ஆச்சி. அதற்குள் பேத்தி அஜி அவித்து அரித்து பக்குவப்படுத்தி வைத்த மா வாளிக்குள் அரிசியை அள்ளிக் கொட்டி விட்டது. ஆச்சிக்கு இன்னொரு வேலை கூடி விட்டது. இங்கே விடு பிள்ளை என்று அரிசி அளவு பேணியைப் பறித்ததும் குழந்தை அழத் தொடங்கியது.
   ஆச்சி நேரத்தைப் பார்த்தாள். இன்னும் பத்து மணி ஆகவில்லை.பத்து மணிக்குத்தான் மகள் முதல் டெலிபோன் எடுக்கிறவள். அவள் போன் எடுக்கும் போது குழந்தை அழுதால் பிள்ளையை என்ன செய்யுறியள் என்றுதான் முதலில் கேட்பாள். அந்தக் கேள்விக்குப் பயந்து குழந்தையைப் பத்து மணிக்கு அழ விடுவதில்லை ஆச்சி.

   ஆச்சி பார்த்தாள். இன்றைக்கு என்ன சமைப்பது? மருமகனுக்கு கத்தரிக்காய் பிடிக்காது. தக்காளிப்பழம் கிரந்தியாம். உருளைக்கிழங்கு சாப்பிட வேண்டாம் என்று டாக்டர் சொன்னவராம். முருக்கங்காய்க் கறி வைக்கலாம். கீரை காச்சலாம். கோழிக்கால் இருக்குத்தான். ஒரு முறை சமைத்து வைத்ததற்கு கொம்மா ஏன் தெரியாத வேலைக்கெல்லாம் போறவ? இதை எப்படித் தின்னுறது? என்று மருமகன் சத்தம் போட்டது ஆச்சியின் காதிலும் விழுந்து விட்டது. அதற்குப் பிறகு ஆச்சி அந்த வேலைக்கெல்லாம் போவதில்லை.
   முன்பெல்லாம் பன்னிரண்டு மணிக்கு முன்பே ஆச்சி சமைத்துப் போடுவாள். ஆனால் வேலையாலே வந்து சாப்பிட சோறு காய்ந்து போகுது என்று மருமகன் மகளுக்குச் சொல்லி மகள் தனக்குச் சொன்ன பிறகு ஆச்சி கறிகளை மத்தியானமும் சோற்றை மூன்று மணிக்குப் பிறகும்தான் போடுறவள். ஆனால் ஆச்சிக்கு வேளைக்கப் பசிக்கும். அதனால் அனேகமாக முதல் நாள் மிஞ்சும் சோற்றைச் சூடாக்கி ஆச்சி சாப்பிட்டு விடுவாள். பேரனுக்கும் சிலவேளை அதுதான்.
   ஆச்சி திரும்பவும் முகம் கழுவப் போனாள். பிள்ளைகளின் உடுப்பு மகளின் உடுப்பு என்று எல்லாமே மூன்று நாட்களாக வாளிக்குள் கிடந்து புளித்து மணத்தது. அவளாலே ஏலாது என்றாலும் ஒருவரும் திரும்பிப் பார்க்காத அவற்றை தானும் அலம்பிப் போடாமல் வர மனதுக்கு ஒரு மாதிரியாய் கிடந்தது. எல்லாவற்றையும் துவைத்துப் பிழிந்து குளியலறைக் கம்பியிலே காயப் போட்டுவிட்டு நிலத்திலே குனிந்து தண்ணீh சொட்டு விழுகிறதா என்று பார்த்தாள் ஆச்சி. தண்ணீர் சொட்டுப் போடும் இடங்களில் பழந்துணிகளை விரித்து விட்டு முகம் கழுவிக் கொண்டு சுவாமிப் படத்துக்கு முன்னால் வந்தாள்.

முருகா! என்ரை பிள்ளை மருமகன் பேரப்பிள்ளைகள் எல்லாரும் நல்லாக இருக்க வேணும். ஒரு நோய் நொடி வரப்படாது. விபூதியை அள்ளிப் பூசிக் கொண்டு நேரத்தைப் பார்த்தாள். பத்து மணி. இப்ப போன் வரும்.


கலோ அம்மா என்ன செய்யுறியள்? இருக்கிறன் பிள்ளை. அஜி என்ன செய்யிறாள்? விளையாடுறாள்! வடிவாகச் சாப்பிட்டவளோ? அவள் எங்கே மோனை சாப்பிடுகிறது. தமையனுக்குக் காச்சின சூப்பிலே கொஞ்சம் குடிச்சாள். இதைச் சொல்வதற்குள் ஆச்சி மூன்று முறை இருமியிருப்பாள். டெலிபோனிலே கேட்டிருக்கும். மன ஆறுதலுக்காவது ஒரு வார்த்தை! ஆச்சிக்கும் கவலைதான். சரியம்மா நேரமாகுது. நான் பிறகு எடுக்கிறன். ஆச்சி போனை வைத்தாள். தேத்தண்ணீர் ஊற்றிக் குடித்தாள். குடிநீர் குடித்தால் சுகமாக இருக்கும். அதற்குக் கொடுப்பனவு இல்லைப் போலும்.

ஆச்சி பேரனுக்கு மிளகாய் போடாமல் பால்கறி ஒன்று வைத்தாள். நேரம் பதினொரு மணி. அவளுக்கு மனதிலே சந்தோசம். பன்னிரண்டு மணிக்குப் பொடியனைக் கூட்டிக்கொண்டு வந்து சாப்பாடு கொடுக்கும் போது எப்படியும் இந்தக் குடிநீர்ப் பிரச்சனையைப் பார்த்துப் போட வேணும். ஆச்சி சேலையை உடுத்தாள். வெளியாலே மழைக் குணமாய்க் கிடந்தது. குழந்தைக்குக் கம்பளி உடுப்புப் போட்டுக் கட்டினாள். வீட்டைப் பூட்டிக்கொண்டு இறங்கினாள்.

பொடியனைத் திரும்பவும் கொண்டுபோய் விட்டுப் போட்டு வரும் போது தெரு மூலையில் காயிதம் பார்க்க வேணும். இல்லாவிட்டால் இன்றைக்கு கடிதமும் பார்க்க நேரமில்லாமல் மணித்தியாலக் கணக்கிலே போன் கதைச்சு இருக்கிறியள் போலக்கிடக்குது என்று சொல்லி மகள் சிரிக்கும் போது சரியான கவலையாக இருக்கும். தெரிந்தவர்கள் எடுக்கும் டெலிபோன்களே வயது முதிர்ந்த சனங்களுக்கு ஆறுதலான விசயம் என்பதை இந்தப் பிள்ளையும் உணரும் ஒரு நாள் வருந்தானே ஆச்சி நினைத்துக் கொள்வாள்.


பள்ளிக்கூடம் விடமுன்பே போய் ஆச்சி ஐந்து பத்து நிமிடங்கள் காத்துக் கொண்டு நிற்பது வழக்கம். அப்படி நிற்கும் போது சில தமிழ்ச் சனங்கள் பேரப்பிள்ளைகளைக் கூப்பிட வருவார்கள். அவர்களின் நடை உடை பாவனையைப் பார்க்கும் போதும் கதைகளைக் கேட்கும் போதும் தான் கொத்தடிமையோ என்ற எண்ணம் கூட ஆச்சிக்கு ஏற்படுவதுண்டு.

வந்த புதிதிலே விசயம் தெரியாமல் ஆச்சியும் கொஞ்சம் முரண்டு பிடித்தவள் தான். சத்தமாகக் கதைத்தவள் தான். அதற்காக மாதக் கணக்கிலே மகள் கதைக்காமல் இருந்ததும் மருமகன் காசு கொடுத்துப் பிள்ளைகளைப் பக்கத்து வீட்டிலே பார்க்க விட்டதும் ஆச்சிக்குப் பெரிய துன்பமாகப் போய் விட்டது. எல்லாவற்றையும் விடப் பேரப்பிள்ளைகளைத் தன்னுடன் கதைக்க விடாமல் தடுத்து வைத்திருந்த அந்த நாட்களை இன்றைக்கு நினைத்தாலும் ஆச்சிக்குத் தேகமெல்லாம் நடுங்கும்.

 இப்போதெல்லாம் ஆச்சி அவர்கள் சொல்லுவதை மட்டும் செய்துவிட்டு இருந்து விடுவாள்.
மோனே! கிரைண்டர் வேலை செய்யேல்லையடா! பேரன் சாப்பிடும் வரை பொறுமையாக இருந்த ஆச்சி சொன்னாள். கையைத் துடைத்துக் கொண்டு கிரைண்டரை என்னவோ செய்யும் பேரனை ஆசையோடு பார்த்தாள். 

அம்மம்மா! நீங்கள் கிரேஸி. சுவிச்சைப் போட்டால் தானே பவர் வரும். கிச்சின் லைட்டைப் போடுங்கோ. இப்ப பாருங்கோ கிரைண்டரிலும் சிவப்பு லைட் எரியுதல்லோ இனி வேலை செய்யும் அம்மம்மா!

எட கடவுளே நான் அதை யோசிக்கவில்லை அப்பு. பகலிலே லைட்டு எரிஞ்சால் கொம்மா பேசுவாள் என்று பயந்து நான் தான் நிப்பாட்டினனான். பிறகு மறந்து போனன். உப்பிடித்தான் சில வேளை கேத்திலையும் வைத்துப்போட்டு இருந்து கொதிக்குது கொதிக்குது என்று இருந்து ஏமாறுறது.

அம்மம்மா! நான் கிரைண்ட் பண்ணித் தரட்டோ? குஞ்சு! பிள்ளைக்கு மிளகாய் கண்ணெரியும். தும்மும்! நீ விடு ராசா நான் உன்னைக் கொண்டுபோய் விட்டுப்போட்டு வந்து செய்யுறன். 

ஆச்சி பள்ளிக்கூடத்தில் இருந்து ஓட்டமும் நடையுமாக வந்தாள். வரும் போதே குழந்தை வழியில் நித்திரையாகி விட்டது. மெதுவாகக் கொண்டுபோய் மேலே கிடத்திவிட்டு பூனை போல இறங்கி வந்தாள். அடுப்பிலே தண்ணீரைக் கொதிக்க வைத்தாள். சிறிது உப்பும் போட்டாள். கிரைண்டரை இழுத்து இடக்கையால் வயிற்றோடு அணைத்துக் கொண்டு வலது கையால் மூடியைப் போட்டு அழுத்தினாள். சத்தத்துக்குப் பிள்ளை எழும்பி விடுகிறதோ தெரியாது. அது வேலை செய்யவில்லை. கிரைண்டர் தட்டுப்பட்டு மின் தொடர்பை இழந்திருந்து.


மூடியை எல்லாப் பக்கத்துக்கும் திருப்பிப் பார்த்தாள் ஆச்சி. ஒரு பலனும் இல்லை. கிடக்கட்டும். தற்செயலாக உடைந்தாலும் அது பிறகு கரைச்சல் பிடிச்ச வேலையாகப் போய்விடும். பொடியனே வரட்டுக்கும்.

ஆச்சி குக்கரைக் கழுவி அரிசி போட்டாள். அடுப்பை நிறுத்திவிட்டு நிலமெல்லாம் கூட்டி அள்ளினாள். குழந்தை அஜி சிதற அடித்திருந்த விளையாட்டுச் சாமான்களை எல்லாம் பொறுக்கி ஒழுங்கு படுத்தினாள். இரவு புட்டு அவிக்கத் தேங்காய் திருவி வைத்தாள். குழந்தை எழுந்து விட்டது. சாப்பாடு தீத்தினாள். ஆச்சிக்கும் பசிப்பது போல இருந்தது. என்றாலும் பொடியனும் வரட்டும் என்று நினைத்துக் கொண்டாள். மூன்றேகால் ஆனது. ஆச்சி திரும்பவும் பள்ளிக்கூடத்துக்கு இறங்கினாள்.

தம்பீ! நான் இன்னமும் குடிநீர் வைத்துக் குடிக்கவில்லை ராசா! அம்மம்மாவுக்கு நீ ஒருக்கால் அரைத்துத் தா தம்பி!


வாங்கோ அம்மம்மா நான் கிரைண்ட் பண்ணித் தாறன். நீங்கள் இன்னமும் ஒன்றும் சாப்பிடல்லையா? பசிக்கலையா? உங்களுக்கு காச்சலா? அம்மான்ரை டாக்டரிட்ரை பஸ்சிலே போவமா? வாறீங்களா?
கேள்விகளாகவே கேட்டுக்கொண்டு பக்கத்தில் நடந்துவந்த பேரனின் தலையைத் தடவினாள் ஆச்சி. நீ எங்களின்ரை அடி மோனை! அதுதான் உனக்கும் சரியான இரக்க குணம் ராசா! உன்னைப் போலத்தான் செத்துப்போன அப்பப்பாவும்! ஆருக்காவது வருத்தம் துன்பம் என்றால் மனுசன் உயிரை விட்டுப்போடும். அந்தாளின்ரை ஞாபகத்துக்கு நீ இருக்கிற படியால் தான் இந்த வீட்டிலே எனக்கு இன்னமும் பைத்தியம் பிடிக்காமல் இருக்குது.

அம்மம்மா அழுகிறியளா? ஏன் தலை இடிக்குதா?  இல்லைக்குஞ்சு நீ நட!
ஆச்சி திரும்பவும் அடுப்பைப் போட்டாள். பேரன் அரைத்துத் தந்த குடிநீர்ப் பொடியை பழைய பேப்பரில் கொட்டினாள். தேயிலை வடியையும் தேடி எடுத்தாள். ஒரு கிண்ணத்தில் பழப்புளியையும் ஊறவிட்டாள். கிரைண்டரை ஈரத்துணியாலே துடைத்து மூடியையும் கழுவி வைத்தாள். கொதிக்கும் தண்ணீரில் அரைத்தெடுத்தவற்றைக் கொட்ட இருந்த சமயம் அம்மம்மா ஓடிவாங்கோ அஜியின்ரை ஒரு தோட்டைக் காணவில்லை என்றான் பேரன்.

ஆச்சிக்கு வருத்தம் எங்கு போனதோ தெரியவில்லை. அடுப்பை நீறுத்திவிட்டு ஓடி வந்தாள். வலக்காதுத் தோட்டைக் காணவில்லை. ஆச்சிக்குத் தேகம் நடுங்கியது. குழந்தையின் உடுப்பெல்லாம் கழட்டி உதறிப்பார்த்தாள். தனது தாவணிச் சேலை மடி எல்லாம் உதறிப் பார்த்தாள். இல்லை. 

வீட்டிலே விழுந்துதோ வெளியிலே விழுந்துதோ கடவுளே நான் எங்கே தேட? வுந்து ஏசப் போறாளே. இன்றைக்கு வேலைக்குப் போன காசு அநியாயமாகப் போட்டுது என்று சொல்லப் போறாளே!  நான் எங்கே போய்த் தேட? குட்டில் தொட்டில் கட்டிவைத்த குப்பை எல்லாம் கிளறி ஆச்சி ஏமாந்து விட்டாள். ஆச்சிக்கு வியர்த்தது. முகம் கழுவின போது பைப்புக்குள்ளே விழுந்துதோ தெரியவில்லையே!

மூன்று தடவைகள் ஆச்சி பள்ளிக்கூடத்துக்கும் வீட்டுக்கும் நடந்து பார்த்தாள். கிடைக்கவில்லை. ஆச்சிக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. எவ்வளவு கவனமாகப் பார்த்தும் கடைசியிலே இப்படி ஒரு குறை கேட்க வேண்டியதாயப் போட்டுது. என்ரை தலை விதி! பேசினால் பேசட்டும். வீட்டு வாசலிலே குழந்தையை வைத்துக்கொண்டு இருந்தாள்.

ஏனம்மா உதிலே இருக்கிறியள்?
என்னைப் பேசாதே பிள்ளை. இதின்ரை ஒரு காதுத் தோடு எங்கையோ விழுந்து போச்சுது மோனை. எல்லா இடமும் தேடிக் களைத்துப்போய் இதிலே இருக்கிறன்.

அது தொலையேல்லை. நான் தான் கழட்டி வைச்சனான். உங்களுக்கச் சொல்ல மறந்து போனன்.

நான் குடிநீர் வைக்க வெளிக்கிட்டுப் போட்டு தோட்டைக் காணவில்லை என்று நீ வந்து பேசப் போறாய் என்ற பயத்திலே இதிலே குந்திக்கொண்டு இருக்கிறன்.

உங்கே மல்லி ஒன்றும் அவிக்க வேண்டாம். மல்லி மணம் ஒரு கிழமை சென்றாலும் போகாது. பிறகு மனுசன் என்னோடைதான் கத்தும்.

ஆச்சி ஒன்றும் பேசவில்லை. பரிமளம்! நீ இங்கே வாம்மா! எனக்குப் பக்கத்திலே வா! என்று ஆகாயத்தில் இருந்து விசுவலிங்க அப்பு அவர்தான் பரிமளம் ஆச்சியின் கணவர் கூப்பிடுவது மட்டும் ஆச்சிக்குக் கேட்கின்றது.

நன்றி ;ஈழத்து கதை தளம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ஈழத்து சிறுகதைகள்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 28 Dec 2015 - 9:09

வடலி என்ற கதையின் ஆசிரியரின் ஆதங்கம் நன்றாகப் புரிகிறது எதிர்காலம் நோக்கிய எதிர்பார்ப்பை ஒப்பிவித்திருக்கிறார் 
ஆனால் ஒன்று மட்டும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும் லட்சோப லட்ச மக்களை இழந்து அல்லல்பட்ட நாட்கள் இனிவரக்கூடாது என்பதில் எழுத்தாளர்களுக்கும் பங்குண்டு நாம் விதைக்கின்ற கருத்துகள் ஆழப்பதிகின்றவைகள் அத்தனையும் அனர்த்தங்களாகக் கூடாது ஆனாலும் வடுக்கள் இருக்கின்றன ஆற்றுவதற்கு வேறு விதங்களில் சாதிக்கலாம் அது பற்றி சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 28 Dec 2015 - 18:34

நேசமுடன் ஹாசிம் wrote:வடலி என்ற கதையின் ஆசிரியரின் ஆதங்கம் நன்றாகப் புரிகிறது எதிர்காலம் நோக்கிய எதிர்பார்ப்பை ஒப்பிவித்திருக்கிறார் 
ஆனால் ஒன்று மட்டும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும் லட்சோப லட்ச மக்களை இழந்து அல்லல்பட்ட நாட்கள் இனிவரக்கூடாது என்பதில் எழுத்தாளர்களுக்கும் பங்குண்டு நாம் விதைக்கின்ற கருத்துகள் ஆழப்பதிகின்றவைகள் அத்தனையும் அனர்த்தங்களாகக் கூடாது ஆனாலும் வடுக்கள் இருக்கின்றன ஆற்றுவதற்கு வேறு விதங்களில் சாதிக்கலாம் அது பற்றி சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்

நீங்கள் சொலவது முற்றிலும் சரி . இந்த கதைகள் சுமார் 10 வருடங்களுக்கு முன்னார் எழுதபட்டவை . தொடர்ந்து வாசிக்கும்போது .இன்றைய எதிர் கட்சி தலைவர் எழுதிய கதையும் வருகிறது என நினைக்கிறன் . "கொத்தமல்லி தண்ணி ' என்ற கதை . எனவே இவை பழைய பதிவுகள் . புதிய கதைகள்தேடி 
இன்னுமொரு திரியில் ஆரம்பிப்பேன் 


நன்றி நன்றி 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 4 Jan 2016 - 13:47

தீவு மனிதன்
----------------
பார்த்திபன்
--------------
கீழ்வரும் தகவல்கள் சிலவேளை உங்களுக்கு உதவக் கூடும்.

.......  அன்ரனிக்கும், வத்சலாவுக்கும், எதிர்வீட்டு சிறீயையும், மஞ்சுளாவையும் கண்டால் பயம்.
......  சாந்தி விரும்பியதால் தயாபரன் திலக்சனையும் கூட்டிக்கொண்டு கனடா போய்விட்டான்.
..... சபாரத்தினமும், கனகேசுவரியும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளாததிலிருந்து பரதனும், பத்மினியும் வெளியில் போவதில்லை.

நான் மீண்டும் எனது தீவுக்கே திருப்பியனுப்பப்பட்டு விட்டேன்.

எனது தீவு நான்கு பக்கமும் சுவர்களால் சூழப்பட்டது. இந்தத் தீவில் என்னுடன் சேர்த்து உயிருடனிருந்தவை ஒரு புத்தக அலுமாரி, ஒரு கசற் றெக்கோடர், ஒரு செற்றி, ஒரு யன்னல் மட்டும்தான்.

யன்னலூடாக வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வீடுகள், மரங்களுக்கு அப்பால் மேலே மிக உயரத்தில் வானம். அதன் நீல நிறம் எனக்குப் பிடிக்கும். அதனால்தான் எனது தீவின் சுவர்களை நீலமாக்கி வைத்திருக்கிறேன். தரைக்கும் நீலம் விரித்திருக்கிறேன். தவிர நாலு சேட்டு நீலக் கலரில் வைத்திருக்கிறேன்.

எனக்கு வானம், அதன் நீலம் பிடிக்கும். பஞ்சு பஞ்சாகப் போகும் மேகங்கள் பிடிக்கும். எனக்கும் அவற்றுக்கும் இடையில் நீண்ட நீண்ட தூரம். எந்த நெருக்கமோ, உறவோ இல்லை. எனினும் அவற்றை எனக்குப் பிடிக்கும் அல்லது அதனால்தான் பிடிக்குதோ என்னவோ.

கசற் றெக்கோடரிலிருந்து மகாகவியின் சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் பாடல் மெல்லிதாக ஒலித்துக் கொண்டிருந்தது.

வானம் நீலமாகவே இருந்தது.

பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

அழுகை வந்தது.

எனது தீவில் மட்டும்தான் நான் அழுவேன். இந்தத் தீவில் இருக்கின்றபோது அடிக்கடி அழுகை வருகிறது. வெளியே போகின்றபோதெல்லாம் அணிந்து செல்கிற சிரிப்பை கழட்டி எறிந்துவிட்டு சுதந்திரமாக அழுவேன். யன்னலுக்கு இது வடிவாகத் தெரியும்.

இப்போதும் அழுதேன்.

முப்பத்தியைந்து வருடங்கள் தாண்டியிருக்கிறேன்.

இதுவரையில் எனது தீவுதான் இடம் மாறியிருக்கிறது. தீவில் எதுவும் மாறவில்லை. என்னாலும் இங்கிருந்து நிரந்தரமாக வெளியே போக முடியவில்லை. எவ்வளவுதான் முயற்சித்தாலும் எனது தீவிற்கே மறுபடி மறுபடி என்னை திருப்பியனுப்பிவிடுகிறார்கள். 

நானும் என்னைப் பல வகைகளில் பலமாக்கி, எச்சரிக்கையாக்கி வைத்திருக்கிறேன். இருந்தும் என்ன... நான் தோற்றுப் போவதுதான் யதார்த்தம். இல்லையில்லை யதார்த்தம்தான் என்னைத் தோற்கடிக்கிறது.

அழுவதால் ஒன்றும் நடக்காது என்பது எனக்குத் தெரியாததல்ல. அதைவிட அழுவதும் எனக்குப் பிடிப்பதில்லை. அழுகை என்ன எனது விருப்பத்தை விசாரித்துக்கொண்டா வருகிறது. தானாக வருகிறது இப்போது வருவதைப் போல. தொண்டை பாரமாகியிருந்தது.

அழுதேன்.

யன்னலால் வானத்தைப் பார்த்தபடி அழுதேன்.

எங்கள் வீட்டு சேவலுக்கும், பேட்டுக்கும் எப்போது சண்டை ஆரம்பித்தது என்று எனக்கு ஞாபகமில்லை. நான் அவதானித்த நாளிலிருந்து அவை ஒன்றையொன்று உர்ரென்று முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டிருந்தன. குஞ்சுகள் தங்கள் பாட்டில். இத்தனைக்கும் அவை ஒரே கரப்புக்குள்தான் இருந்தன.

இந்த ஏனோ தானோவை பார்க்கும் போதெல்லாம் எனக்குள் எழும் கேள்வி அந்தச் சின்னக் குஞ்சுகளை இந்த நிலமை பாதி;க்காதா என்பதுதான்.

பாதித்தது.

எனக்கென்று ஒரு தீவை நான் முதன் முதலில் அமைத்துக் கொண்ட காலம் எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது.

அப்போது நான் சின்னப்பிள்ளை.

வெளியே போய் என்னைப் போலிருக்கும் மற்றவர்களுடன் சேர்ந்து கள்ளன் பொலிஸ் விளையாடினேன். போளை அடித்தேன். கோவில் கட்டித் தேர் இழுத்தேன். இலந்தைப்பழம் பொறுக்கினேன். பிள்ளையார் பந்து எறிந்தேன்.

அவர்களைப் பெற்றோர் எனக்கும் அவர்களுடன் சேர்த்து அன்பு காட்டி உபசரிப்புச் செய்தனர். அவர்கள் வாசலில் நான் தினமும் வரம் கேட்டேன்.

எனக்கும் சில விசயங்கள் பிடிபடும்வரை எல்லாம் உண்மையென்றுதான் நம்பினேன்.

எனது ஏக்கத்தை வைத்து பெரிசுகள் வேடிக்கை பார்ப்பதை உணர எனக்கு நீண்டகாலம் பிடிக்கவில்லை.

எங்கள் தோட்டப் பயிரை மட்டும் வெள்ளாடு மேய்ந்ததாக கதையளந்தார்கள். எங்கள் தோட்டத்திற்கு மட்டும் வேலியில்லையென்று சொல்லிச் சிரித்தார்கள்.

நான் கூசிக் குறுகிப் போனேன்.

இது அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

என்னைப் பிளந்து, கதை பிடுங்கி, தங்களுக்குத் தீனி தேடுவதற்காக என்னை அணைத்து தங்கள் கூட்டுக்குள் எடுத்து வைத்துக் கொண்டு அந்தச் சமூகப் பிராணிகள் ஓங்கி ஊளையிட்டன.

நான் சிதைந்து போனேன்.

அழுகை வந்தது.

இந்தப் பிராணிகளுக்கு முன் அழக் கூடாது. இவற்றை ஏறெடுத்துப் பார்க்கக் கூடாது. இந்த உலகம் கெட்டது. இனி எனக்கென்று நானே ஒரு உலகம் செய்து கொள்ள வேண்டும். எனக்கே எனக்கென்று. அதற்குள் எவருக்கும் இடமில்லை.

பழைய சாமான்கள் போட்டு வைத்திருந்த சின்ன அறைக்குள் எனது கட்டிலைப் போட்டுக் கொண்டேன். கதவைச் சாத்தினேன். இரண்டு யன்னல்களில் ஒன்றைப்பூட்டி ஒன்றைத் திறந்து வைத்தேன்.

எனது தீவு தயார்.

வீடு பழைய கால சுண்ணாம்புக் கட்டிடம். அகலமான சுவர்கள். யன்னலில் ஏறி இருக்கலாம். ஏறியிருந்தேன். வேலிக்கப்பாலே என்னைப் போலிருந்தவர்கள் கிட்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.

போகவா? சிரிப்பார்கள். போகக் கூடாது. போக மாட்டேன். இவர்களையேன் நான் பார்க்க வேண்டும்.

மேலே பார்.

அழகான வானம்.

நீல நிறம்.

அதன் கீழாக வெண் பஞ்சு மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன. அந்த மேகங்கள் சில நேரங்களில்  சில உருவங்களாக மாறும்.

இப்போது அவர்கள் போளையடிப்பார்களா? வாத்தியார் வீட்டு மாங்காய் மரத்திற்கு கல்லெறியப் போயிருப்பார்களா?

இந்த யோசனையேன் எனக்கு?

மேகங்கள் எவ்வளவு அழகு. இத்தனை வேகமாய் அவை எங்கே போகின்றன?

இப்போது அவர்கள் மாங்காயைக் கல்லில் குத்தி, உப்புத்தூள் போட்டுக் கொண்டிருப்பார்கள்.

ஏன் எனக்கு அழுகை வருகிறது?

கண்ணீர் கண்களை மறைக்க முயன்றாலும் நான் யன்னல் கம்பிகளைப் பிடித்தபடி மேலே ஆகாயத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.

எனக்கு ஆகாயம் பிடித்தது. அதன் நீலம் மிகவும் பிடித்தது. ரசித்துப் பார்த்தேன். பார்த்துக் கொண்டேயிருந்தேன். பள்ளிக்கூடம் போய் வந்து மிச்ச நேரங்களில் எனது தீவுக்குள் வந்து பார்த்துக் கொண்டிருப்பேன்.

வெளியே எங்கும் போவதில்லை.

யாரையும் சந்திப்பதில்லை.

எனக்குத்தான் எனது தீவு இருக்கிறதே.

'.... மனிதன் ஒரு சமூக விலங்கு.  இந்த சமூக விலங்குகள் ஒரு கூட்டமாக வாழும். இந்த விலங்குகளுக்கு ஒன்றையொன்று தேவை. அவ்வப்போது இவை தமக்குள் கடித்துக் குதறினாலும் தமக்குள் அனுசரித்துப் போக வேண்டியது இயற்கை விதியாகும்....' என்று ஆசிரியர் பாடசாலையில் படிப்பித்தார்.

எனக்கு முழுதாகப் புரியிவில்லை. என்னை ஏன் இந்த சமூக விலங்குகள் தம்முடன் சேர்த்துக் கொள்வதில்லை? என்னைத் தேவையில்லையா?

நான் எனது தீவிலிருந்த நேரங்களிலெல்லாம் யோசித்துப் பார்த்தேன். எப்படியும் ஏனைய பிராணிகளுடன் கூட்டுச் சேர்ந்தால்தான் வாழ முடியும் என ஆசிரியர் நம்புகிறாரா?

எதற்கும் எனது காயங்கள் ஆறட்டும். இன்னொருமுறை முயற்சித்துப் பார்க்கலாம். அதுவரை இந்தத் தீவே எனக்குப் பாதுகாப்பு. எவ்வளவு சுதந்திரமான தீவு இது. சொல்லாலும், சிரிப்பாலும் காயப்படுத்துகிற எதிரிகள் இங்கு வர அனுமதியில்லை.

எனக்கா ஒன்றும் இல்லை.

எவ்வளவு பரந்த ஆகாயம். அதன் நீல நிறம். அதன் கீழ் தவழ்ந்து கொண்டிருக்கும் வெள்ளை மேகங்கள். எவ்வளவு அழகு.

கடல்கள் பல கடந்து நான் நாடு கடத்தப்படுவேன் என கொஞ்சமும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

புதிய இடம்.

புதிய மனிதர்கள்.

புதிய சமூகம், புதிய விலங்குகள்.

இங்கே நான் மற்றவர்களுடன் கூட்டாக வாழ முயற்சித்துப் பார்க்கலாம். சிலவேளைகளில் சரிவரக் கூடும். அப்படி நடந்தால் எவ்வளவு நல்லது. எனக்கென்று ஒரு தீவை நான் உருவாக்கத் தேவையில்லை. தனித்திருந்து வானம் பார்க்கத் தேவையில்லை.

என்னைப் புனரமைக்கும் முயற்சியில் முழுமையாக இறங்கினேன். என்னுடன் நானே சண்டை பிடித்துக் கொள்வதென்பது அவ்வளவு சுலபமானதில்லை. காயங்கள் விரைவில் காய்ந்து விடுவதில்லை. அவற்றை மூடுவதற்காக சிரிப்புச் செய்து அணிந்து கொண்டேன்.

புது ஆரம்பம்.

அவனை நான் சந்தித்தது தற்செயல்தான். அப்போது அவன் கவிதைகளை மனதில் வைத்திருந்தான். எனக்குச் சொல்லிக் காட்டினான். எனக்கு உடனேயே கவிதைகளுடன் அவனையும் பிடித்துப் போயிற்று. அவ்வளவு சீக்கிரத்தில் அவனுக்கும் எனக்கும் நெருக்கம் வந்தது அதிசயம்தான். எனது ஏக்கமும், காயங்களும், அவனது பண்பும் இதற்கு காரணமாயிருக்கலாம்.

நாங்கள் ஒன்று சேர்ந்து நாங்கள் விரும்பும் உலகையும், மனிதர்களையும் எழுத்தால் செய்தோம். எமது உலகில் எமது பிடித்தமானவைகளுக்கு மட்டும் இடமளித்தோம்.

இந்த உலகம் சரிவருமா? என்று எங்களை நாங்களே கேட்டு, கடைசியில் நாங்களாவது அங்கு போய் சீவிப்போம் என்று உறுதியெடுத்தோம்.

நான் மிக மகிழ்ச்சியாக இருந்தேன். எனக்கென்று தனித் தீவு இனித் தேவையில்லை. வெளியே மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் நான் சேர்ந்து கொள்வேன். அவர்கள் என்னைச் சேர்த்துக் கொள்வார்கள்.

எனது காயங்கள் மாறாவிட்டாலும் மறந்து போயின.

நாங்கள் ஒன்றாகக் கனவு கண்டோம். ஒன்றாக எழுதினோம்.

பிறகு அவன் தனக்கென ஒரு துணை தேடிக் கொண்டான். எனது உலகம் இன்னும் விரிந்தது. ஆதரவின் இன்னொரு பரிமாணம் கிடைத்தது. நான் மறுபடி ஒருமுறை குழந்தையாகினேன். என்ன ஆனந்தம்.

அவர்களுக்கு குழந்தை பிறந்தது.

இப்போது எனக்கு மூன்றாவது பரிமாணமும் கிடைத்தது.

எனக்குக் குழந்தைகள் பிடிக்கும். மிகவும் மிகவும் பிடிக்கும். குழந்தைகள் உலகத்தில் வாழ எனக்கு இன்னும் பிடிக்கும்.

குழந்தையை எனது முதுகில் ஏற்றி யானையாகினேன். அதுக்குச் சிரிப்புக் காட்ட குரங்கானேன். அடி வாங்கினேன். மூத்திரத்தால் நனைந்தேன். அது ஓடி வந்து என்னில் தாவி ஏறும்போது எனக்கு எல்லாம் மறந்து போனது.

என்ன இனிமையான உலகம். அதிசயங்கள் என்னெவெல்லாம் கொட்டிக் கிடக்கின்றன.

இந்த மனிதர்களுடன் நான் கொண்டிருக்கும் உறவுக்கு எனக்குப் பெயர் தெரியவில்லை. அது ஏதோ ஒன்று.

எல்லாம் நிரந்தரமா என்ன?

நாங்கள் வேறு உலகம் போகின்றோம் என்று ஒருநாள் அவன் புதுக் கவிதை எழுதினான்.

நான் அதிர்ந்து போனேன்.

அப்ப நாங்கள் குடியிருப்பதற்காகச் செய்த உலகம்? என்று கேட்டேன்.

இப்போது நாங்கள் இருப்பது உண்மை உலகம். இனி நாங்கள் போகப் போவதும் உண்மை உலகம்தான். உண்மையைப் புரிந்து கொள். யதார்த்தமாய் வாழப் பழகிக் கொள் என்றான்.

எனக்குப் புரியவில்லை.

உலகங்களைப் பற்றி ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் வரைவிலக்கணங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. என்னைத் திரும்பவும் எனது தீவுக்கே திருப்பியனுப்பப் போகிறார்கள். என்னால் தாங்க முடியவில்லை. ஐயோ.. வேண்டாம் தயவு செய்து வேண்டாம். யாரின் காலை நான் பிடித்துக் கெஞ்சலாம்.

எனக்கு உங்களைத் தவிர வேறு யாரையும் தெரியாது என்று இரந்தேன்.

உலகம் பெரியது. தவறு யாருடையது என்று கேட்டான்.

இவர்களுக்குத் தெரியுமா எனது தீவைப் பற்றி... அதன் தனிமை பற்றி... அதன் கொடுமை பற்றி... நான் எவ்வளவு கடுமையாகப் போராடி மிகவும் கஸ்ரப்பட்டு எனது தீவிலிருந்து தப்பி வந்திருக்கிறேன். இப்போது மீண்டும் அங்கே கொண்டுபோய் விடப் போகிறார்கள். எனது உணர்வுகளுக்கு மொழியில்லை என்பதால்தான் அது யாருக்கும் கேட்கவில்லையா?

உண்மையில் கேட்கவில்லையா?

நாங்கள் போய் வருகிறோம் என்று எல்லோருமாகப் போய் விட்டார்கள்.

குழந்தையும் போய்விட்டது. எனக்கு எல்லாமாக இருந்தது. அதுவும் போய்விட்டது. இப்போது யானையும், குரங்கும்தான் மிஞ்சிப் போயிருக்கின்றன.

நான் அவர்களை விளங்கிக்கொள்ள முயற்சித்தேன்.

அவர்கள் வாழ்தலை அவர்கள்தான் தீர்மானிக்கலாம்.

அவர்கள் குழந்தையை அவர்கள்தான் வைத்திருக்கலாம்.

அவர்கள் வானத்தில் பறந்த கையோடு நான் துண்டு துண்டாகச் சிதறிய நிலையில் எனது தீவுக்குத் திரும்ப வந்தேன்.

நான்கு பக்கமும் சுவர்களால் சூழப்பட்டது எனது தீவு. ஒரு செற்றி, ஒரு கசற் றெக்கோடர், ஒரு புத்தக அலுமாரி, ஒரு யன்னல் இவை மட்டும்தான் இப்போது என்னோடு.

செற்றில் அமீரின் இமாஜினேசனை ஒலிக்க விட்டு,  ஒரே ஒரு யன்னலின் வழியாக வெளியே வெறித்துப் பார்த்தேன்.

எனக்கு மிகவும் பழகிப் போயிருந்த, இடையில் பலகாலம் பார்க்காமலிருந்த அதே ஆகாயம். அதே நீல நிறம்.

அழுகை வர வாய்விட்டு அழுதேன். தொடர்ந்து அழுதேன்.

ஏன் எனக்கு இப்படி?

நான் மட்டுமேன் தீவில்?

வாழ்தல் நீண்டது. நான் மறுபடி என்னைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். எனக்கான சொந்தத்தை நான் மறுபடி வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

வெளியே, மேலே.. அதே ஆகாயம். அதன் நீல நிறம்...

அந்தக் குழந்தை இப்போது யார் முதுகில் ஏறும்? என்னைத் தேடமாட்டாதா?

அழுகை அழுகையாக வந்தது.

ஏன் திரும்பத் திரும்ப அதையே நினைக்க வேண்டும்.

இதோ பார். மேலே பார். எவ்வளவு பரந்த ஆகாயம். அதன் கீழாக மிதந்து கொண்டிருக்கும் மேகங்களின் அழகைப் பார்.

அவர்கள் இப்போது போன உலகத்தில் யாருடன் சேர்ந்து கூழ் குடிப்பார்கள்? யார் காயங்களுக்கு ஒத்தடம் கொடுப்பார்கள்?

அழுகை அழுகையாக வந்தது.

செற்றியில் விழுந்து அதை நனைத்தேன்.

எனது தனிமையை விரட்ட ஒரு புது வழி கண்டுபிடித்தேன். வேலை. வேலை. வேலை.

தகரங்களையும், இரும்புத் தூண்களையும் பத்து மணித்தியாலத்திற்கு மேலாகச் சுமக்கையில் வேறு பாரங்கள் எப்பிடி நினைவு வரும்? வேலையை எனக்கான போதை மருந்தாக்கிக் கொண்டேன். வேலைத்தளம் வேறு உலகம். அங்கு மனிதர்களைவிட பொருட்கள்தான் அதிகம் இருந்தன. உணர்வுப் போராட்டங்கள் எதற்கும் இடமில்லை. சுகமான பாரங்கள்.

தனிமையில் இருக்கின்ற நேரங்களைக் குறைத்து என்னை எதிலாவது ஈடுபடுத்துகையில் ஒரு வித வெற்றி இருக்கத்தான் செய்கிறது.

அதைவிட இருக்கவே இருக்கிறது எனது தீவு.

இனிமேல் கவனமாயிருக்க வேண்டும். எனது தீவை விட்டு வெளியே போக வேண்டி வரும்போது வெளி உலகோடு அவதானமாயிருக்க வேண்டும். மறுபடி என்னோடு உறவு சேர்த்து தங்களுக்குத் தேவையானபோது அறுத்துக்கொண்டு போவதற்கு அல்லது யதார்த்தம் அப்படி என்று சொல்வதற்கு விடக் கூடாது. யாரோடும் சேர வேண்டாம். ஏமாற்றுவதற்குப் பலர் தயாராக இருக்கிறார்கள்.  என்னைத் தங்கள் உலகத்தில் சேர்த்துக்கொண்டு விட்டதாகக் கூறிக்கொண்டு சமயம் வரும்போது என்னை மறுபடி எனது தீவுக்கே திருப்பியனுப்பி விடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அது யதார்த்தம். எனக்கு மறுபடி மறுபடி செத்துவிடுவது.

வெளியே போகையில் எனது சிரிப்பை எடுத்து அணிந்து கொண்டேன். எனது ஒரேஒரு கவசம் அதுதான்.

என்னைத் தனக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னாள் அவள்.

இப்படி எனக்குச் சொல்லப்பட்டது இது முதல் தடவை. நான் திகைத்துத்தான் போனேன். நிலைகுலைந்து போனேன். பலவீனமான இடங்களில்தான் தாக்குகிறார்கள்.

எனக்கு நிறைய அனுபவங்கள். எனது பழைய காயங்கள், எனது தீவு இவைகளை நினைத்து இம் முறை நான் மிகவும் எச்சரிக்கையாக இருந்தேன். மறுபடி மறுபடி பிய்ந்து போனால் எப்படித் தாங்குவேன்.

அவள் விருப்பத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு கால அவகாசம் தேவை. எப்படியாவது இழுத்தடிக்க வேண்டும்.  சும்மா சொல்லக் கூடாது. சில விசயங்களில் வெளியுலகம் என்னைக் கெட்டிக்காரனாக்கியிருக்கிறது.

காலத்தை இழு இழு என்று இழுத்தேன்.

இப்போது எனக்கு அவனையும் பிடித்திருக்கிறது என்றாள்.

எவ்வளவுதான் நான் எச்சரிக்கையாக இருந்தாலும் கவலை வருவதைத் தடுக்க முடியவில்லை. சகித்துக் கொண்டேன். இதென்ன புதிசா எனக்கு.

எனக்கு குழப்பமாயிருக்கு முடிவெடுக்க என்றாள்.

ஆக, ஒரு சிக்னல் தரப்படுகிறது தனக்குத் தேர்வு இருப்பதாக. இம் முறை நான் தப்பிவிட்டேன். என்னை யாரும் எனது தீவுக்குத் திருப்பியனுப்ப முடியாது. ஏனென்றால் அங்கேதானே இன்னும் நான் இருக்கிறேன்.

சில காலம் செல்ல, அவள் தனது துணையுடன் வந்து எனக்கு அறிவுரை சொன்னாள், இப்பிடியே எத்தினை காலத்திற்கு தனியே இருப்பதாக உத்தேசம் என்று.

நான் பதில் சொல்லவில்லை. மற்றவர்களுக்குப் புரியாத பதிலை நான் சொல்லி என்ன லாபம்.

எனது தீவுக்கு வந்து, யன்னலூடாக ஆகாயத்தைப் பார்த்தபடி ஓரு பாட்டம் அழுது தீர்த்தேன்.

மறுபடி அவளைக் காணவேயில்லை.

தற்செயலாகத்தான் எனக்கும் அவர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டது. நான் எவ்வளவோ கவனமாக இருந்தும் இது நடந்துவிட்டது. இதுதான் எனது பலவீனம் என்றேனே.  மனிதன் ஒரு சமூக விலங்கு என்று ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.

அவர்களுடன் பழகியதற்கு எனக்கு வழக்கம் போல் பெயர் தெரியவில்லை. ஆனால் அப்படி ஒன்றிவிட்டேன்.

எனது பலவீனம் எனக்கு இப்போது தெரிந்தது. நான் சிறிசாக இருந்த காலங்களில்  எனக்குக் கிடைக்காததைத் தேடி மனம் அலைந்து கொண்டிருந்திருக்கிறது. எங்காவது கிடைத்துவிட்டால் அவ்வளவுதான். எனது பாதுகாப்பு, எச்சரிக்கையெல்லாம் தூளாகிவிடுகின்றன.

எனக்கு மறுபடி எனது தீவு மறந்து போயிற்று. அந்த யன்னல், நீலவானம், மேகங்கள் .... எதுவும் தேவைப்படவில்லை.

என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருப்பதுபோல் உணர்கையில் நான் உண்மையில் மகிழ்ந்துதான் போனேன்.

அவர்கள் வீட்டிலும் குழந்தை வந்தது.

எனது உலகம் இன்னும் இன்னும் விரிந்தது.

நீண்டகாலத்தின் பின் நான் மீண்டும் யானையாகினேன். குரங்கானேன். ஆனந்தம்.

எப்போதாகிலும் யாராவது என்னிடம், உனக்கென்று சொந்தங்கள் வேண்டாமா என்று கேட்கையில் சிரிப்பு வந்தது. முட்டாள்களா நான் என்ன நான்கு பக்கமும் சுவர்களால் சூழப்பட்ட தீவிலா இருக்கிறேன். நன்றாகப் பாருங்கள். என்னைச் சுற்றிலும் எனக்கு ஆதரவு காட்டும் மனிதர்கள். என்னை நன்றாக அடையாளம் கண்டுகொள்ளும் குழந்தைகள்.

எனக்கும் சந்தோசத்திற்கும் அப்படி ஒரு உறவு. மறுபடி அது நிகழ்ந்தது.

எங்களுக்கு ஒன்றுமில்லை. ஆனால் நீ வந்து போவதை தெருவில் கிடக்கிற கண்கள் கவனித்து வாய்கள் தவறாகப் பேசலாம். அதனால்.... என்று அவன் சொன்னபோது நான் திரும்ப துண்டு துண்டாய் உடைந்து போனேன்.

மீண்டும் உறவு அறுக்கப்பட்டது. மீண்டும் ஒரு நிராகரிப்பு. என்னை எனது தீவுக்குத் திருப்பியனுப்புவதற்கான ஆயத்தம் ஆரம்பமாகிவிட்டது.

என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. எனது மொழி உணர்விலிருந்து வெளியில் வருவதற்கிடையில் செத்துப் போனது.

மிகவும் சிரமப்பட்டு எனது சிரிப்பை எடுத்து அணிந்து கொண்டேன். எனது காயங்களை மூடிக் கட்ட என்னிடமிருக்கும் ஒரே ஒரு பான்டேஜ் அதுதான்.

தெருவில் கிடக்கின்ற வாய்களும், கண்களும் இத்தனைநாள் எங்கே போயிருந்தன, இன்றுவரை உங்களுக்கு என்ன செய்தன என்று நான் அவர்களை கேட்க முடியாது.

அவர்கள் குடும்பம், அவர்கள் வாழ்தல் பற்றி அவர்கள் மட்டுமே தீர்மானிக்கலாம்.

இதே தெருவில் இதே வாய்களுடன்தான் நாங்கள் கதைக்க வேண்டும் என்பதும், இதே கண்களைத்தான் நாங்கள் பார்க்க வேண்டும் என்பதும்தான் யதார்த்தம் என்று அவர்கள் மேலதிக விளக்கம் தந்தார்கள்.

இப்போதுதான் தெரியவந்த யதார்த்தத்தின் முன் நான் திடீரென ஒன்றுமில்லாதவனாகிப் போனேன். என்னைச் சுற்றி இருந்தவர்கள் காணாமல் போனார்கள். மழலைச் சத்தம் நான் தொட முடியாத நீண்ட தூரத்திற்குப் போய்விட்டது.

நான் மறுபடி எனது தீவுக்கு திருப்பியனுப்பப்பட்டேன்.

இது நான்கு பக்கமும் சுவர்களால் சூழப்பட்ட எனது தீவு. ஒரு செற்றி, ஒரு புத்தக அலுமாரி, ஒரு செற் என்பவற்றுடன் ஒரு யன்னலும் இருந்தது. அதனருகில் வந்து வெளியே வெறித்துப் பார்க்கிறேன்.

அதே வானம். நீலமாய் மேகங்களால் மூடியும், மூடாமலும் இருக்கிறது.

எவ்வளவுதான் அடக்கி வைத்தாலும் துக்கம் தொண்டையையும் பிய்த்துக் கொண்டு வெளியில் வந்துவிட்டது. கண்கள் கன்னங்களை ஈரமாக்கினாலும் வெப்பமாயிருந்தது.

இது எனது தீவு. இங்கு நான் அழலாம். தாராளமாக அழலாம். சத்தம் போட்டு அழலாம். எந்தப் பொய்யான அனுதாபங்களும், பரிதாபங்களும் இங்கு என் மீது படமுடியாது.

நீ எங்களிலை ஒராள் என்று சொன்னார்களே..

மற. மற.

இதோ பார். ஆகாயம். அதன் நீல நிறத்தைப் பார். எவ்வளவு அழகு.

உனக்கும் எங்களுக்கும் இடைவெளி வரக் கூடாது என்றார்களே.

மறந்துவிடு. தயவு செய்து மறந்துவிடு. சொற்களுக்கெல்லாம் உயிர் இருக்க வேண்டுமென்றில்லை. நினைவுகள் என்னைப் பிய்த்து துண்டு துண்டாக்குவதைவிட வேறொன்றும் நடக்காது.

எல்லாவற்றையும் மறக்கத்தான் வேண்டும்.

அதுதானே யாதார்த்தம்?

ஏனோ தெரியவில்லை போட்டோ அல்பம் எடுத்துப் பார்க்க வேண்டும் போலிருந்தது. பார்த்தேன்.

என்னைத் திரும்ப எனது தீவுக்கே திருப்பியனுப்பி வைத்தவர்கள், எனக்கு யதார்த்தம் விளக்கியவர்கள்... எல்லோரும் இருந்தார்கள். எனது குழந்தைகளும் இருந்தார்கள். போட்டோவிலிருந்து இறங்கி வந்து என்னோடு விளையாடினார்கள். என் தலைமயிரைப் பிடித்து இழுத்தார்கள். தோள் மீது ஏறினார்கள். தூக்கச் சொல்லிக் கைகளை நீட்டினார்கள். என்னைத் தேடினார்கள்.

ஏன் மனசு பாரமாகிறது. ஏன் கண்ணீர் தொடர்ந்து வருகிறது. எனக்கு இந்தத் தீவுதான் சாத்தியம் என்று மறுபடி மறுபடி நிரூபிக்கப்பட்டுவிட்டதே. பிறகேன் நான் அழ வேண்டும்.

என்னை நான் மறுபடி புனரமைத்துக்கொள்ள வேண்டும். திரும்ப சிரிப்பை அணிந்துகொள்ள வேண்டும். இனிமேலாவது மிக எச்சரிக்கையாயிருக்க வேண்டும். யாருடனும் நெருங்கிப் போகக் கூடாது.

ஆனால்...

எனது பலவீனம் எனக்குத் தெரியும். நான் சின்னவனாக இருந்தபோது எதற்கெல்லாம் ஏங்கினேனோ அது இப்போது கிடைத்தாலும் நான் விழுந்துவிடுவேன். எனது உறுதி, எச்சரிக்கை, பாதுகாப்பு எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

என்ன செய்ய?

இன்னொரு யதார்த்தத்தைச் சந்திக்கும்வரை இந்தத் தீவுதான் எனக்குச் சொந்தம்.

அல்பத்தை மூடி வைத்துவிட்டு திரும்ப யன்னலடிக்கு வந்து வெளியே பார்க்கிறேன்.

அந்த வானத்துக்கும் எனக்கும் நீண்ட தூரம். என்னோடு எந்தச் சம்பந்தமும் அதற்கில்லை. அதனால்தானோ என்னவோ என்னால் அந்த வானத்தை ரசிக்க முடிகிறது. தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது.....

.... கண்ணீர் வரும் வரைக்கும்.


                                                                                                                                                         17.10.1998
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 4 Jan 2016 - 13:49

நெல்லிமரப் பள்ளிக்கூடம்
--------------
நந்தினி சேவியர்
--------------

அந்தப் பள்ளிக்கூடம் கட்டப்பட்ட காலம் பற்றி இவனுக்கு எதுவும் தெரியாது.

இவனது அம்மா அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்ததாகவும், இவனது மாமா குஞ்சியப்புமார் எல்லாம் அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்ததாகவும் இவன் அறிந்திருந்தான்.

மதுர மரங்கள் சூழப்பெற்ற வயல் வெளித் தாமரைக் குளத்தைத் தாண்டி வரம்பினால் நடந்து ஒரு மண் ஒழுங்கையால் ஏறி இவன் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு  போயிருக்கிறான்.

பெரிய தாட்டான் குரங்குகள் வாகை மரங்களில் தாவுகின்ற குழைக்கடைச் சந்தியால் திரும்பி கேணியடியால் செல்லும் பிறிதொரு பாதையாலும் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு இவன் போயிருக்கிறான்.

சுற்றிவர மாமரங்கள் சூழப்பெற்ற கிடுகால் வேயப்பெற்ற இரண்டு மடுவங்கள் கொண்டது தான் அந்தப் பள்ளிக்கூடம்.

இவனது அப்பு இவனைத் தோளில் உட்கார வைத்து ஒரு சரஸ்வதி பூசைக்கு மறுதினம் அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தது இவனுக்கு ஞாபகம்.

கந்தசாமி, செல்லம், சபாரத்தினம், சந்தியாப்பிள்ளை பூமணி, கோயிலம்மா, ராசலிங்கம், சின்னான் என்கின்ற கதிரவேலு ஆகியோருக்கு ஏடு திறந்ததும் அதே நாள்தான்.

தொய்வுக்கார மீனாட்சியம்மா என்கின்ற ரீச்சர் தான் இவனுக்கு ஆனா, ஆவன்னா, சொல்லிக் கொடுத்த முதல் ரீச்சர்.

பள்ளிக்கூட வாயிலில் நெடுத்து வளர்ந்திருந்த சர்க்கரை நெல்லி மரத்தின் கீழ் வட்டமாக இருந்து ‘அறஞ் செய விரும்பு’ என்று கத்திக் கத்தி ஆத்திசூடி வரிகளைப் படித்ததும் இவனுக்கு நினைவிருந்தது.

வேறு பாடசாலை மாணவர்கள் ‘உமா வாசகம்’ படிக்க இவனும் நெல்லி மரப்பள்ளிக்கூட மாணவர்களும் பாலபாடம், பாலபோதினி படித்ததும் இவனுக்கு ஞாபகத்திலிருக்கிறது.

மிக நோஞ்சானாக இருந்த இவனை நாலாம் வகுப்பு காசிநாதன் ஷகடுகர்| என்று செல்லமாக கூப்பிட்டதும் இவனுக்கு நினைவிருக்கிறது.

முரடான காசிநாதன் பின் நாட்களில் ஷசண்டியன் காசி|யாகியதும் இவனது நினைவிலில்லாமலில்லை.  நெல்லிமரப் பள்ளிக்கூடத்தில் இவன் படித்த காலத்தில் பெரிய சூரியகிரகணம் ஒன்று வந்ததும் இவனுக்கு நினைவிருக்கிறது.

பொன்னையா வாத்தியார் கண்ணாடி ஒன்றில் கரும்புகை பிடித்து அதற்குள்ளால் மாணவர்களைச் சூரியன் பார்க்க வைத்ததும்  இவன் நினைவில் உண்டு.

பொன்னையா வாத்தியார் கரும்பலகையில் கீறும் பூனைக்குட்டிகளின் படமும் இவனுக்கு ஞாபகமிருக்கிறது.

பொன்னையா வாத்தியாரின் மோட்டார் சைக்கிள், அச்சைக்கிளின் பின்புறமுள்ள மருந்துகள் உள்ள பெட்டி எல்லாம் அவனது ஞாபகத்திலுண்டு. பொன்னையா வாத்தியார் ஒரு முறிவு நெரிவு வைத்தியரும், விசகடி வைத்தியரும் கூட.

நெல்லி மரப்பள்ளிக்கூடத்தின் பொறுப்பாளராக - பொறுப்பாளர் போல - அவர் இருந்தாலும் தலைமை ஆசிரியர் பொறுப்பு மீனாட்சியம்மா ரீச்சருக்குத்தான்.

இவன் முதலாம் வகுப்பில் படித்த காலத்தில்தான் தாமரைக் குளத்தடியில் நன்னியரின் மகன் செல்லையன் கண்டங்கருவாலை பாம்பு கடித்து மரணித்துப் போனான்.

பொன்னையா வாத்தியாரின் விசகடி வைத்தியம் சரிவராமல் நீலம் பரிந்து சின்னானின் அண்ணன் செத்துப்போனான்.

சரஸ்வதி பூசைக்கு பூ பிடுங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் இவனும் இவனைச் சேர்ந்தவர்களும்.... பல நாட்கள் தாமரைக் குளத்தடிக்கு போகாதிருந்ததும் இவனுக்கு நினைவிலிருந்தது.

சபாரத்தினம் தண்ணீர் அள்ளி வைக்கும் கரள் பிடித்த வாளியும், பால் பேணியும், அது வைக்கப்படும் குச்சுச் சுவரும் இவனுக்கு நினைவிலேயே இருந்தது.

பூமணி தண்ணீரள்ளி வார்க்க காசியும், கந்தசாமியும், இவனும் கைமண்டையில் தண்ணீர் குடித்தமையும் ஞாபகத்திலேயே இருந்தது.

இவன் அரிவரி முடித்து வகுப்பேறி முதலாம் வகுப்புக்கு வந்த சிலநாட்களின் பின்பு நெல்லிமரப் பள்ளிக்கூடத்திற்கு ஒரு புது வாத்தியாரும் ஆங்கிலம் படிப்பிக்கவென பெரிய தோடு போட்ட ரீச்சரும் வந்திருந்தனர்.

காசிநாதன் புதுவாத்தியாருக்கு ஷமுட்டுக்காய் தலைவர்| என்று பட்டப்பெயர் வைத்து கதைத்ததுவும் இவனுக்கு ஞாபகம்.

குண்டான அந்த வாத்தியார் தடிப்பான ஒரு மூக்குக்கண்ணாடி போட்டிருப்பார்.  காது நிறைய மயிர் சடைத்திருக்கும் அவருக்கு உண்மையிலேயே பெரிய தலை.

பல தடவைகளில் அந்த வாத்தியார் மாணவர்களை பிரம்பால் விளாசியதை இவன் அறிவான்.

பொன்னையா வாத்தியாரின் சாந்த குணத்திற்கு நேர் விரோதம் முட்டுக்காய் தலை பஞ்சாட்சர வாத்தியார்.

நெல்லி மரப் பள்ளிக்கூடத்திற்கு மேற்கேயுள்ள வேதக் கோயில் கிராமத்தின் மாணவர்களில் பலர் இந்தப் பள்ளிக்கூடத்திலேயே படித்தவர்கள்.

ஐந்தாம் வகுப்பு வரையேயுள்ள இந்தப் பள்ளிக்கூடத்தில் மிகக் குறைவான மாணவர் உள்ள வகுப்பு ஐந்தாம் வகுப்புத்தான் அதில் ஐந்து பேரே படித்தனர்.

நெல்லி மரப் பள்ளிக்கூடத்தை உருவாக்கியவர் ஒரு சைவப் பெரியார் என்பதை இவன் அப்போது அறிந்திருக்கவில்லை. இவனது அம்மா இராமு வாத்தியார் என்கிற ஒருவரைப்பற்றி அடிக்கடி கூறியிருப்பதும் இவனுக்குத் தெரியும்.

இவனது அப்பு வேதக் கோயில் கிராமத்திற்கு பெண் எடுக்க வந்தமையால் வேதக் கோயில் கிராமத்தவரானவர்.

இவனது அம்மாவும், மாமாவும் குஞ்சியப்புமாரும் நெல்லி மரப்பள்ளிக்கூடத்தில் தான் படிக்தார்கள் என இவன் அறிந்திருந்தான்.  இவனது மாமாவும், சின்னக்குஞ்சியப்புவும் மூன்றாம் வகுப்பில் மூன்று வருடங்கள் படித்து பின் படிப்பை விட்டதுவும் இவனது அம்மா மூலம் இவன் அறிந்தேயிருந்தான்.

இவனது மாமாவுடன் சேர்ந்து ஆரம்ப நாட்களில் தாமரைக்குளத்தில் தூண்டில் போட்டு கெழுத்தி மீன் பிடித்தமையும், நுளம்புக்காக மதுரங்காய்கள் பொறுக்கியமையும், செல்லையன் செத்த பிறகு தாமரைக்குளத்துப் பாதையை மறந்தமையும் கூட இவனுக்கு நினைவிலிருந்தது.

பள்ளிக்கூடம் விட்ட பிறகு வயல் வெளியில் சின்னான் கதிரவேலுவும் சபாரத்தினமும் மல்யுத்தம் புரியும்போது கந்தசாமியே மத்தியஸ்தம் செய்வதும் கந்தசாமி சின்னானின் பக்கச் சார்பாக நிற்பதுவும், தான் சபாவின் பக்கம் நிற்பதுவும் இவனக்கு ஞாபகம்.

ஓரு தடவை செல்லம் தன் கல்லுச் சிலேற்றால் இவனை அடித்தபோது சபா தான் இவனுக்காக செல்லத்தின் சிலேற்றை வாங்கி உடைத்தமையையும் இதற்காக இவனது அப்பு செல்லத்திற்கு ஒரு புதுச் சிலேற் வாங்கிக் கொடுத்தமையும் இவனுக்க ஞாபகம்.

சின்னச் சின்னச் சண்டைகளில் சபாவும், காசியும் இவனுக்கு துணையாக இருந்தமையை இவன் மறந்திடவில்லை.  ஆனால் முட்டுக்காய் தலையர் இவனை அடித்தபோது சபாவும், காசியும், கந்தசாமியும், செல்லமும், துணைக்கு வரவே முடியாமல் போனமை இவனுக்கு ஞாபகத்திலிருந்தது.

ஷஷவாத்தியார் இவன் கிணத்துக் கட்டிலை ஏறி துலாக் கயித்தைப் பிடிச்சவன்||
ஜீவ காருண்யம் தான் இந்த விசயத்தை பஞ்சாட்சர வாத்தியாருக்கு சொல்லி வைத்தான்.

இரண்டாம் வகுப்பில் படிக்கும் கடுகரென்ற நோஞ்சானுக்கு அன்று விழுந்த அந்த அடிகள்....

இரண்டு பிரம்புக்ள முறிந்து தும்பு தும்பாக........

அடுத்து வந்த நாட்களில் வேதக் கோவில் கிராமத்து மாணவர்கள் எவரும் பள்ளிக்கூடம் போகவில்லை....

கிராமமே உறுதியாக இருந்தது.

பொன்னையா வாத்தியாரின் மோட்டார் சைக்கிள் பல தடவைகள் வேதக்கோவில் கிராமத்திற்கு வந்து போனதைப் பலர் பார்த்தார்கள்.  ஒரு தடவை தொய்வுக்கார மீனாட்சியம்மா ரீச்சரும்.... அவரது கணவரும் வந்து போனார்கள்.

பஞ்சாட்சர வாத்தியாருக்கு மாற்றம் கிடைத்து கிழக்கு ஊர் போனதாக ஒரு வதந்தியும்.... சிலகாலம் கிராமத்தில் உலாவியது.  யாரும் அதை காது கொடுத்து கேட்கவேயில்லை.

வேதக் கோவில் கிராமத்தில் திடீரென பள்ளிக்கூடம் ஒன்று உருவாகியது.  தென்னங்குற்றிகளில், பலகை அடிக்கப்பட்ட வாங்கு மேசைகளில் மாணவர்கள் படிக்கத் தொடங்கினார்கள்.

காசிநாதன் சண்டியனாக அறியப்பட்டது போலல்லாமல் சின்னான் கதிரவேலுவின் பெயர் வேதக் கோவில் கிராமத்திற்குமப்பால் பெருமையோடு பேசப்படும் வண்ணம் அவன் இறந்து போனான்.

நெல்லிமரப் பள்ளிக்கூடம் சில காலம் நெசவுசாலையாகவும்.... ஒரு தற்காலிக அச்சுக்கூடமாகவும் இயங்கி பின்னர் வெற்று நிலமாகி விட்டதாக இவன் அறிந்து கொண்டான்.

இவனது நண்பர்கள் சபா, ராசலிங்கம்.... சந்தியாம்பிள்ளை காசி, சின்னான் கதிரவேலு ஆகியவர்களைப் போல......  இவனது நினைவுகளில் இன்னும் பொன்னையா வாத்தியார், மீனாட்சியம்மா.. ரீச்சர், பஞ்சாட்சர வாத்தியார்...... அதோடு சிதைந்து போன.... நெல்லிமலைப் பள்ளிக்கூடமும்.
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 4 Jan 2016 - 13:50

முறியாத பனை
----------------
சந்திரா இரவீந்திரன், லண்டன்
----------------
நீண்டகாலமாய்த் துருப்பிடித்துப் போயிருந்த தண்டவாளங்களில் மீண்டும் புதிதாய்ப் பரபரப்பு; சுறுசுறுப்பு! ஒருநாளில் இரு தடவைகள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஊரும் ரயில் வண்டிகளின் சத்தங்கள்! ஜனங்கள் அவசரம் அவசரமாய்க் கூடிப்பிரியும் குட்டிக் குட்டிக் காட்சிகள்!

சப்தங்கள் யாவும் ஓய்கிறபோது, பழையபடி எல்லாவற்றையும் மீறிக்கொண்டு வரும் கடலைநெய்யின் கமறலும், பூட்ஸ்களின் தோல் மணமும்!

சிலசமயம் வயிற்றைக் குமட்டும்; பலசமயங்களில் அடிவயிற்றுக்குள் அப்பிக்கொண்டுவிடும் அச்சமோ, அருவருப்போ, கோபமோ என்று புரியாத ஒரு நெருடல் பந்தாக உருண்டுகொண்டே கிடக்கும்!

சூரியன் அஸ்தமிக்கும் பொழுதுகளில், ஓரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், பொதிகளற்ற வெற்று ‘ரயில்’  பெட்டிகளினுள்ளேயிருந்து “ஐயோ.. அம்மா..” என்ற மரண ஓலம் எதிரொலியாய் விட்டுவிட்டுக் கேட்கும்!

சில நிமிடங்களிற்கு எங்களின் தொண்டைக்குழிகள் அடைத்துப்போகும்! வீடு அசாதாரண அமைதியில் மூழ்கிக் கிடக்கும்!

ஆனால் நாம் பயப்படவே தேவையில்லை! அப்படித்தான் அறிவு சொல்லியது.  எத்தனை நம்பிக்கை, அவர்களுக்கு எங்கள் மேலிருந்தது.  ரெயில்வே ஸ்ரேசனின் பெரிய பெரிய கட்டடப்பகுதிகளை இணைத்து, பிரதான முகாமாக்கியிருந்த அந்த இந்திய ‘சிங்’ குகளுக்கு, நிலையத்தின் தலைமை அதிபரான அப்பாவில் மட்டும் நிறைய மரியாதை!

தண்டவாளங்களோடு ஒட்டியிருந்த எங்கள் ரெயில்வே குவாட்டர்ஸ் மிகவும் அழகானது; வசதியானது! ஸ்ரான்லி வீதிப் பக்கமாயிருந்த, வீட்டின் முன்புறத்தில், முல்லையும் அடுக்கு மல்லிகையும் பந்தலிட்டு நின்றன.  மணல் பரவிய நீண்ட முற்றம்.  இருபுறமும் பச்சைப் புற்கள்.  வேலி முழுவதும் பின்னிப்படர்ந்திருக்கும் பூங்கொடிகள்ளூ அவை பெரிய பெரிய இலைகளைப் பரப்பி, வேலிக்கு மிகவும் பாதுகாப்பாய் இருந்தன.  அவை 'ரெயில்வே குவாட்டர்ஸ்'க்கே உரியவை போல, தனித்துவமாயிருக்கும்! றோஜா நிறத்தில் கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் குலுங்கும்!  ஆனால் வாசனையற்றவை! அவை சிங்களப் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டதால் ‘சிங்களக் கொடி’ என்று பெயர் சூட்டியிருந்தோம்.

வீட்டின் இடதுபுறமிருந்த நீளமான பெரிய வளவில், நெடு நெடுவென்று வளர்ந்த பத்துப்பன்னிரண்டு பனைமரங்களும், ஓரமாய் இரண்டு முருங்கை மரங்களும்! முருங்கைகள் ஏராளமாய்க் காய்க்கும்! வீட்டின் வலது பக்கமிருந்த சிறிய வளவிலும், பின் வளவிலும் இதரை வாழைகள், தென்னைகள், தூதுவளை, துளசி, பயிற்றங்கொடி, கரும்பு... என்று பசுமையில் நிலம் செழித்துக் கிடந்தது!

இவற்றிற்கு நீர் பாய்ச்சுவதற்காய், நான் நீண்டநேரம் நீராடுவது வேறு விடயம்.

பனைமரங்கள் எப்பவும் பேரிரைச்சலுடன் கம்பீரமாய் அசைந்து அசைந்து சலசலத்துக் கொண்டேயிருக்கும்.  படுக்கையறையின் விசாலமான ஜன்னலினூடாய் பனம்பூக்கள் பறந்து வந்து வாசனையோடு சிதறும்!
வீட்டின் ஓரமெங்கும் மஞ்சள் பூப்பந்துகள் திரள் திரளாய் ஒதுங்கிக் கிடக்கும்.  வளவைப் பார்க்கப் பார்க்க எப்பவும் எனக்குப் பெருமையாயிருக்கும்!

பின்னால், ரெயில்வே ஸ்ரேசன் வளவில், எமது வீட்டு வேலியோடு ஒட்டியவாறு உயரமான ஒரு ‘சென்றிப் பொயின்ற்’! பனங்கொட்டுகளும் மண்மூட்டைகளும் போட்டு வசதியாக அமைத்திருந்த ‘சென்றிப் பொயின்ற்’!

அவர்கள் வெளியில் ‘சென்றி’யில் ஈடுபடுவதைவிட வேலிக்கு மேலால், எமது வீட்டிற்குள் கண்மேய்ச்சல் விடுவதே அதிகம்.  கங்கு மட்டை, காய்ந்த ஓலை, பனங்காய், பன்னாடை என்று சடசடத்து விழும்போதெல்லாம், ஆரம்பத்தில் துடிதுடித்துப் பதைத்து வெற்றுவேட்டு வைத்து, கூச்சல்களோடும் அதட்டல்களோடும் பத்துப்பதினைந்து பச்சைத் தலைகள் வேலியின் மேலால் எட்டிப்பார்த்து ஆராயும்!  போகப்போக, அது அவர்களுக்குப் பழக்கமாகி விட்டதால், பனைகளுக்குப் பாரிய பிரச்சினையேதும் ஏற்படவில்லை.

தண்டவாளங்களை நோக்கித் திறபடும் எமது பின்புறப் படலையை சங்கிலி போட்டுப் பூட்டக்கூடாது என்பது அவர்கள் கட்டளை! சாட்டாக நினைத்த நேரத்தில் உள்ளிட்டு விடுவார்களோ என்ற பயம் நமக்கு!  ஆனால் அநாவசியமாக அவர்கள் உள்ளிட்டதில்லை என்பது நம்பமுடியாத உண்மை!

அப்பாவிற்கு, பின் படலையால் வேலைக்குப் போய்வருவது பெரிய சௌகரியமாய் இருந்தது.  நேரம் கிடைக்கும் நேரங்களில் வந்து, தேநீர் அருந்தி, நொறுக்குத் தீனி சாப்பிட்டுவிட்டுப் போவார்.

சில சமயங்களில் அப்பாவுடன் சேர்ந்து 'கேர்ணல்’, ‘மேஜர்’ என்று அலங்காரப் பட்டிகளுடன் ஹிந்திப்பட்டாளங்களும் வருவதுண்டு! அப்பா எச்சிலை மென்று விழுங்கியபடி இழுபட்டுக்கொண்டு வருவது எனக்கு விளங்கும்.  அவர்கள் கதையோடு கதையாய் வீடுமுழுவதும் கண்களால் கணக்கெடுத்துக்கொண்டு போவார்கள்.  போகும்போது நட்பாக விடைபெறுவார்கள்.

“இங்கு எல்லோருக்கும் பெரிய பெரிய வீடுகள் இருக்கிறதுளூ நிறையத் தண்ணீர் வசதியிருக்கிறது; இதைவிட வேறென்ன வேணும் உங்களுக்கு? எதுக்காக சண்டை போடுகிறார்கள்..” - என்று ஒரு இந்தியக் ஷகேர்ணல்| அப்பாவிடம் கேட்டானாம்.  அவன் ராஜஸ்தானைச் சேர்ந்தவன்.

‘விளக்கம் கொடுக்கவேண்டிய வினாதான்! ஆனால் இவன்களுக்கு இதெல்லாம் விளங்குமா? இந்தியப் பெரும்பான்மையினக் குடிமகன் இவன்! - இந்தச் சிறுபான்மையின இலங்கைத் தமிழனின் உரிமைப் பிரச்சினைகள், அரசியல் துரோகங்கள், நிரந்தர இழப்புகள், பரிதாபங்கள், ஏக்கங்கள்.. எல்லாம் சொன்னாலும்தான் இவனுக்குப் புரியமா?’ - அப்படித்தான் அப்பா உடனே யோசித்தாராம்.  யோசனையின் விளிம்பிற்கு வரமுன்பே, அவன் இந்த மண்ணின் நாணம் மிக்க பெண்களைப் பற்றிச் சிலாகிக்கத் தொடங்கிவிட்டானாம்.  அதன் பின்னர் அவன் பதில் சொல்லக்கூடிய  கேள்வியெதுவுமே கேட்கவில்லையாம்.

வீட்டு வளவிற்குள் கள்ளுச்சீவ வருபவன், வேலியோடு ‘சென்றிப் பொயின்ற்’வந்ததிலிருந்து பனையில் ஏறமாட்டேன் என்று பிடிவாதமாக நின்றுவிட்டான். ஒரு பனையில் அவன் கட்டிவிட்ட முட்டி கவிண்டபடி அப்படியே கிடந்தது.  அதிலிருந்து கள்ளு நிரம்பி வழிகிறதோ என்று குமரியாகி நிற்கும் என் குட்டித் தங்கை, பனையோடு ஒட்டிநின்று அடிக்கடி அண்ணாந்து பார்ப்பாள்.  அவள் பனைமரங்களருகே போனால், ‘சென்றிப் பொயின்ற்’ றிலிருந்து மெல்லிய விசிலடிப்பும் இனிமையான பாடலிசையும் மாறிமாறிக் கேட்கும்! அதனால் பனைகளருகே நின்று நாம் அனுபவிக்கும் சுகம் படிப்படியாகக் குறைந்துகொண்டே போனது!

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் ஆசை தீர அள்ளிக்குளித்துவிட்டு, சின்னத் தூக்கத்திற்காய் படுக்கையறைக்குள் நுழைந்தால், முகாமிலிருந்து வரும் மும்முரமான சத்தங்கள் தூக்கத்தைக் கெடுக்கும்! அச்சமயங்களிலெல்லாம், ஜன்னலினூடாய், கரும்பனைகளில் சிதறிக் கிடக்கும் சின்னச் சின்னக் குழிகளையெல்லாம் ஏகாந்தமாய் எண்ணிப்பார்த்துக்கொண்டு படுக்கையில் கிடப்பேன்.

அவர்கள் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த சிலநாட்களில் வெறித்தனமாக ஏற்படுத்திய பேரழிவின் சிறு வடுக்கள் மட்டுமே இவை! இந்த வளவிற்குள் எந்தப் பனையும் இதனால் சாய்ந்து விழுந்துவிடவில்லை! நிறைந்த வடுக்களோடும் நெடு நெடுவென்று கம்பீரமாய்த்தான் நிற்கிறது!

முன் ‘கேற்’றால் வீட்டினுள் நுழைபவர்களை ‘சென்றிப் பொயின்ற்’ல் இருப்பவன் முழுமையாகக் காணமுடியாது.  ஆனால் வருபவர் வீட்டின் நடு ‘ஹோலி’னுள் நுழைந்துவிட்டால், பின் வாசலூடாய் பைனாகுலர் மூலம் மிகத்தெளிவாய்க்; காணலாம்.

என் சிநேகிதி அபி, பெரிய ஓலைத்தொப்பியும் கவர்ச்சியான உடையும் அணிந்துகொண்டு அழகான சைக்கிளில் வந்திறங்கிக் கதைத்துவிட்டுப் போவாள்.  அவளின் கைப்பையினுள் ஏகப்பட்ட கடுதாசிகள், குறிப்புகள் இருக்கும், உடம்பின் ஒரு பகுதியில் 'சயனைட்’ குப்பி இருக்கும்!  பின்புறம் சமையலறைப் பக்கமாய் அவள் வரும்போது ‘சென்றிப் பொயின்ற்’ல் இருப்பவன் தலையை வெளியே நீட்டி கண்ணடித்துச் சிரிப்பான்ளூ களிப்பில் கையசைப்பான்!

எனக்கு இதயம் படபடத்துக்கொண்டேயிருக்கும்! அவள் வெகு சாதாரணமாய், அண்ணரின் கதையிலிருந்து ஆஸ்பத்திரிக் கதைவரை பரிமாறிவிட்டு, தேவையானவற்றை சேகரித்துக்கொண்டும் சிரித்தவாறே போய்விடுவாள்!  ‘போகிறாளே’ என்று மனதிற்குள் ஏக்கமாயும் இருக்கும் போனபின் ஏனோ ஆறுதலாயும் இருக்கும்.

வீடு வீடாகச் சோதனை நடக்கிறபோதும் இந்த ரெயில்வே பகுதிக்குள் மட்டும் யாரும் சோதனை போட வருவதில்லை என்று இறுமாப்புடன் இருந்த எமக்கு ஒருநாள் காத்திருந்தது!

அது ஒரு சுட்டெரிக்கும் வெயில்நாள்! ‘சென்றிப் பொயின்ற்’ நோக்கி யாரோ உற்றுப் பார்த்திருக்கிறார்கள்.  அடுத்த நிமிடம் அதற்கருகாக ‘ கிறனைற்’ குண்டொன்று வெடித்திருக்கிறது! வந்தவனின் குறி தப்பிவிட்டது! வேலியோடு நின்ற சீனிப்புளி மரத்தின் கிளைகளுக்கு மட்டும்தான் சேதம்! ஸ்ரேசன் பகுதி முழுவதும் மிருகத்தனம் தலைதூக்குவதற்கு இது ஒன்று போதுமே! ‘திபுதிபு’வென்று எமது பனம் வளவிற்குள் பச்சைப்புழுக்களாய் அவர்கள்! ‘சட சட’ வென்று காற்றைக் கிழிக்கும் இரைச்சலுடன் துப்பாக்கி வேட்டுக்கள்! வீதியால் போய்க்கொண்டிருந்த அப்பாவிகள் பச்சை உடைக்காரரால் பன்னாடையாக்கப்படும் அகோரம், ஈனஸ்வரமாய் நீண்ட நேரம் கேட்டுக்கொண்டிருந்தது!

எல்லாம் ஓய்ந்த பின், ஜன்னலினூடாய் வளவைப் பார்த்தேன்.  மருந்துவெடி வீசியது! அடிவயிற்றுக்குள் இன்னமும் அச்சம் அப்பிக்கிடப்பதான உணர்வு! கரும் பனைகளில் புதிய குழிகள் தோன்றியிருந்தன.  சன்னங்களின் பல வெற்றுக் கவசங்கள் மரங்களின் அடியில் ஆங்காங்கே சிதறியபடி.  ஆயினும் அழகிய விசிறிகளென, வளவு முழுவதும் பசுமையாய்ப் போர்த்தியிருக்கும் பனைகள் எல்லாம் கெக்கலித்துச் சிரிப்பதுபோல் காற்றில் அழகாய் அசைந்துகொண்டுதானிருந்தன!

ஒரு உற்சாகமான வார இறுதிநாள், ரெயில்வே தொழிலாளிகளை அப்பா அழைத்திருந்தார்.  அவர்கள் புற்கள் நிறைந்த வளவைத் துப்பரவாக்கத் தொடங்கிவிட்டார்கள்.  வீடு முழுவதும் பச்சைப்புற்களினதும் காயம்பட்ட வடலி இலைகளினதும் மணம் பொங்கிப் பரவிக்கொண்டிருந்தது.

மேஜர் முக்தயர், ஏணிப்படிகளில் ஏறி நின்றவாறே வளவிற்குள் நின்ற அப்பாவுடன் வெகு சந்தோஷமாய் கதைத்துக்கொண்டிருந்தான்.  அப்பா, வளவைத் துப்பரவு செய்விப்பது அவனுக்குப் பெருமகிழ்ச்சி என்று விளங்கியது.  புற்களினூடாக வேலிவரை யாராவது தவழ்ந்து வந்து விடுவார்களோ என உள்ளூர ஊறிக்கிடந்த அச்சத்திற்கு, அது பெரிய ஆறுதல்தானே.

துப்பரவு செய்யப்பட்ட வளவிற்குள், நிறையப் பனங்கொட்டைகள் ஆங்காங்கே புதைந்து, புதிதுபுதிதாய் முளைவிட்டிருப்பது தெரிந்தது.  அப்பா, அவற்றைப் பிடுங்கி எடுக்கச் சொல்லவில்லை.  அவை நெடும்பனையாகும் அழகைக் கற்பனையில் நான் அடிக்கடி கண்டு களிப்பேன்.

வைகாசி மாதத்து முதல் நாள், நல்ல வெயிலும் கூடவே சுழன்றடிக்கிற காற்றுமாயிருந்தது.  சைக்கிள் ‘றிம்’இல் சுரீர்சுரீரென்று மணற்புழுதி வந்து மோதிக்கொண்டிருந்தது.  நான் அலுவலகத்தில் ‘ரைப்’ செய்ய வேண்டியிருந்த அனைத்துப் பிரதிகளையும் முழுமையாகச் செய்து முடித்துவிட்ட திருப்தியுடன், ஆசுவாசமாய் சைக்கிளில் வந்திறங்கினேன்.  வீட்டினுள் பரபரப்பாக ஆளரவம்! வல்லைவெளி தாண்டி வந்த வடமராட்சி உறவினர்கள் சிலர் என்னைக் கண்டதும் எட்டிப்பார்க்கிறார்கள்.  ஏதோ வித்தியாசமாய்த்தான் இருந்தது!

அம்மா அழுத கண்ணீருடன் படியிறங்கி ஓடி வந்தா.  “தேவகி.. தேவகி..” என்ற விம்மலுடன் என்னைக் கட்டியணைத்து ஓசையை அடக்கி ஒப்பாரி வைத்தா. எனக்கு எல்லாம் விளங்கிவிட்டது!

“ஊரில் என் தம்பி போரிட்டு மாண்டான்..” என்று மார்தட்டிப் புலம்பவோ, தலையைப் பிசைந்து குழறவோ ஊரைக்கூட்டி ஒப்பாரிவைக்கவோ எல்லாம் முடியாத ஊமைச்சாபம் எங்களுக்கு! நடுஹோலைத் தாண்டி, பின்புறமாய் போயிருந்து அழுதுதீர்க்க முடியாத அவலம்!

எல்லா சுதந்திரங்களும் பறிக்கப்பட்டு, இப்போ அழுவதற்குரிய ஆகக்குறைந்த சுதந்திரமும் இரகசியமாய்ப் பறிக்கப்பட்டிருந்தது யாருக்குத் தெரியும்! இதில் யார், யாரைப் போய்த் தேற்றுவது?!

சில மாதங்கள் எமக்குள் நெருப்புத் துண்டங்களாய் கனன்று பொசுங்கிக் கழிந்தது! நம்பமுடியவில்லை நமது சின்னச் சின்னச் சந்தோஷங்களும் இத்தனை விரைவில் சீர்குலைந்து போகுமென்று நம்பவில்லை.

இலையுதிர்காலம் தொடங்கி, சீனிப்புளி உருவியுருவி தன் இலைகளை வளவெல்லாம் கொட்டத் தொடங்கியபோது, ஒருநாள் திடுதிப்பென்று அவர்கள் மூட்டைகட்டத் தொடங்கிவிட்டார்கள். ரெயில்வே ஸ்ரேசனுக்குரிய கட்டடங்களெல்லாம் அவசரம் அவசரமாய் விடுவிக்கப்பட்டு வெறிச்சோடி விட்டது! அனைத்து வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.  மேஜர், கேர்ணல் என்ற பதவியிலிருந்தவர்கள், விடைபெற்றுப்போக வீட்டுக்கு வந்தார்கள்.  சிநேகமும் பண்பும் மிக்க எங்களைப் பிரிந்து போவதில் பெரிய மனவருத்தம் என்று கூறி விடைபெற்றுப் போனார்கள் - சொந்த உடைமையை துறந்து போவது போன்ற துக்கம் அவர்களின் கண்களில்!

இரவு, ஈ காக்கைகூட அங்கில்லை என்ற தெளிவான நம்பிக்கையில், இத்தனை நாள் அடக்கிவைத்திருந்த துக்கமெல்லாம் பீறிட்டெழ, நெஞ்சிலடித்து அம்மா கதறத் தொடங்கிவிட்டா!

“நாசமாய்ப் போவாங்கள்.... என்ரை பிள்ளையையும் நாசமாக்கிப் போட்டெல்லோ போறாங்கள்! மகனே! நானினி உன்னை எங்கை தேட....” என்று பின்வளவில் குந்தியிருந்து குழறிக்கொண்டேயிருந்தா.  எனக்குக் கண்களிற்குள் நீர் முட்டிக்கொண்டு வந்துவிட்டது! ஆயினும் யாரும் யாரையும் அழவேண்டாமென்று தடுக்கவில்லை.
பனைமரங்கள் எப்பவும் பேரிரைச்சலுடன் கம்பீரமாய் அசைந்து அசைந்து சலசலத்துக் கொண்டேயிருக்கும்.  படுக்கையறையின் விசாலமான ஜன்னலினூடாய் பனம்பூக்கள் பறந்து வந்து வாசனையோடு சிதறும்!
வீட்டின் ஓரமெங்கும் மஞ்சள் பூப்பந்துகள் திரள் திரளாய் ஒதுங்கிக் கிடக்கும்.  வளவைப் பார்க்கப் பார்க்க எப்பவும் எனக்குப் பெருமையாயிருக்கும்!

பின்னால், ரெயில்வே ஸ்ரேசன் வளவில், எமது வீட்டு வேலியோடு ஒட்டியவாறு உயரமான ஒரு 'சென்றிப் பொயின்ற்'! பனங்கொட்டுகளும் மண்மூட்டைகளும் போட்டு வசதியாக அமைத்திருந்த ஷசென்றிப் பொயின்ற்|!

அவர்கள் வெளியில் 'சென்றி'யில் ஈடுபடுவதைவிட வேலிக்கு மேலால், எமது வீட்டிற்குள் கண்மேய்ச்சல் விடுவதே அதிகம்.  கங்கு மட்டை, காய்ந்த ஓலை, பனங்காய், பன்னாடை என்று சடசடத்து விழும்போதெல்லாம், ஆரம்பத்தில் துடிதுடித்துப் பதைத்து வெற்றுவேட்டு வைத்து, கூச்சல்களோடும் அதட்டல்களோடும் பத்துப்பதினைந்து பச்சைத் தலைகள் வேலியின் மேலால் எட்டிப்பார்த்து ஆராயும்!  போகப்போக, அது அவர்களுக்குப் பழக்கமாகி விட்டதால், பனைகளுக்குப் பாரிய பிரச்சினையேதும் ஏற்படவில்லை.

தண்டவாளங்களை நோக்கித் திறபடும் எமது பின்புறப் படலையை சங்கிலி போட்டுப் பூட்டக்கூடாது என்பது அவர்கள் கட்டளை! சாட்டாக நினைத்த நேரத்தில் உள்ளிட்டு விடுவார்களோ என்ற பயம் நமக்கு!  ஆனால் அநாவசியமாக அவர்கள் உள்ளிட்டதில்லை என்பது நம்பமுடியாத உண்மை!

அப்பாவிற்கு, பின் படலையால் வேலைக்குப் போய்வருவது பெரிய சௌகரியமாய் இருந்தது.  நேரம் கிடைக்கும் நேரங்களில் வந்து, தேநீர் அருந்தி, நொறுக்குத் தீனி சாப்பிட்டுவிட்டுப் போவார்.

சில சமயங்களில் அப்பாவுடன் சேர்ந்து 'கேர்ணல்', 'மேஜர்' என்று அலங்காரப் பட்டிகளுடன் ஹிந்திப்பட்டாளங்களும் வருவதுண்டு! அப்பா எச்சிலை மென்று விழுங்கியபடி இழுபட்டுக்கொண்டு வருவது எனக்கு விளங்கும்.  அவர்கள் கதையோடு கதையாய் வீடுமுழுவதும் கண்களால் கணக்கெடுத்துக்கொண்டு போவார்கள்.  போகும்போது நட்பாக விடைபெறுவார்கள்.

"இங்கு எல்லோருக்கும் பெரிய பெரிய வீடுகள் இருக்கிறதுளூ நிறையத் தண்ணீர் வசதியிருக்கிறதுளூ இதைவிட வேறென்ன வேணும் உங்களுக்கு? எதுக்காக சண்டை போடுகிறார்கள்.." - என்று ஒரு இந்தியக் 'கேர்ணல்' அப்பாவிடம் கேட்டானாம்.  அவன் ராஜஸ்தானைச் சேர்ந்தவன்.

ஷவிளக்கம் கொடுக்கவேண்டிய வினாதான்! ஆனால் இவன்களுக்கு இதெல்லாம் விளங்குமா? இந்தியப் பெரும்பான்மையினக் குடிமகன் இவன்! - இந்தச் சிறுபான்மையின இலங்கைத் தமிழனின் உரிமைப் பிரச்சினைகள், அரசியல் துரோகங்கள், நிரந்தர இழப்புகள், பரிதாபங்கள், ஏக்கங்கள்.. எல்லாம் சொன்னாலும்தான் இவனுக்குப் புரியமா?| - அப்படித்தான் அப்பா உடனே யோசித்தாராம்.  யோசனையின் விளிம்பிற்கு வரமுன்பே, அவன் இந்த மண்ணின் நாணம் மிக்க பெண்களைப் பற்றிச் சிலாகிக்கத் தொடங்கிவிட்டானாம்.  அதன் பின்னர் அவன் பதில் சொல்லக்கூடிய  கேள்வியெதுவுமே கேட்கவில்லையாம்.

வீட்டு வளவிற்குள் கள்ளுச்சீவ வருபவன், வேலியோடு ஷசென்றிப் பொயின்ற்| வந்ததிலிருந்து பனையில் ஏறமாட்டேன் என்று பிடிவாதமாக நின்றுவிட்டான். ஒரு பனையில் அவன் கட்டிவிட்ட முட்டி கவிண்டபடி அப்படியே கிடந்தது.  அதிலிருந்து கள்ளு நிரம்பி வழிகிறதோ என்று குமரியாகி நிற்கும் என் குட்டித் தங்கை, பனையோடு ஒட்டிநின்று அடிக்கடி அண்ணாந்து பார்ப்பாள்.  அவள் பனைமரங்களருகே போனால், 'சென்றிப் பொயின்ற்' றிலிருந்து மெல்லிய விசிலடிப்பும் இனிமையான பாடலிசையும் மாறிமாறிக் கேட்கும்! அதனால் பனைகளருகே நின்று நாம் அனுபவிக்கும் சுகம் படிப்படியாகக் குறைந்துகொண்டே போனது!

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் ஆசை தீர அள்ளிக்குளித்துவிட்டு, சின்னத் தூக்கத்திற்காய் படுக்கையறைக்குள் நுழைந்தால், முகாமிலிருந்து வரும் மும்முரமான சத்தங்கள் தூக்கத்தைக் கெடுக்கும்! அச்சமயங்களிலெல்லாம், ஜன்னலினூடாய், கரும்பனைகளில் சிதறிக் கிடக்கும் சின்னச் சின்னக் குழிகளையெல்லாம் ஏகாந்தமாய் எண்ணிப்பார்த்துக்கொண்டு படுக்கையில் கிடப்பேன்.

அவர்கள் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த சிலநாட்களில் வெறித்தனமாக ஏற்படுத்திய பேரழிவின் சிறு வடுக்கள் மட்டுமே இவை! இந்த வளவிற்குள் எந்தப் பனையும் இதனால் சாய்ந்து விழுந்துவிடவில்லை! நிறைந்த வடுக்களோடும் நெடு நெடுவென்று கம்பீரமாய்த்தான் நிற்கிறது!

முன் 'கேற்'றால் வீட்டினுள் நுழைபவர்களை 'சென்றிப் பொயின்ற்'ல் இருப்பவன் முழுமையாகக் காணமுடியாது.  ஆனால் வருபவர் வீட்டின் நடு 'ஹோலி'னுள் நுழைந்துவிட்டால், பின் வாசலூடாய் பைனாகுலர் மூலம் மிகத்தெளிவாய்க்; காணலாம்.

என் சிநேகிதி அபி, பெரிய ஓலைத்தொப்பியும் கவர்ச்சியான உடையும் அணிந்துகொண்டு அழகான சைக்கிளில் வந்திறங்கிக் கதைத்துவிட்டுப் போவாள்.  அவளின் கைப்பையினுள் ஏகப்பட்ட கடுதாசிகள், குறிப்புகள் இருக்கும், உடம்பின் ஒரு பகுதியில் 'சயனைட்' குப்பி இருக்கும்!  பின்புறம் சமையலறைப் பக்கமாய் அவள் வரும்போது ஷசென்றிப் பொயின்ற்|ல் இருப்பவன் தலையை வெளியே நீட்டி கண்ணடித்துச் சிரிப்பான்ளூ களிப்பில் கையசைப்பான்!

எனக்கு இதயம் படபடத்துக்கொண்டேயிருக்கும்! அவள் வெகு சாதாரணமாய், அண்ணரின் கதையிலிருந்து ஆஸ்பத்திரிக் கதைவரை பரிமாறிவிட்டு, தேவையானவற்றை சேகரித்துக்கொண்டும் சிரித்தவாறே போய்விடுவாள்! 'போகிறாளே' என்று மனதிற்குள் ஏக்கமாயும் இருக்கும்ளூ போனபின் ஏனோ ஆறுதலாயும் இருக்கும்.

வீடு வீடாகச் சோதனை நடக்கிறபோதும் இந்த ரெயில்வே பகுதிக்குள் மட்டும் யாரும் சோதனை போட வருவதில்லை என்று இறுமாப்புடன் இருந்த எமக்கு ஒருநாள் காத்திருந்தது!

அது ஒரு சுட்டெரிக்கும் வெயில்நாள்! 'சென்றிப் பொயின்ற்' நோக்கி யாரோ உற்றுப் பார்த்திருக்கிறார்கள்.  அடுத்த நிமிடம் அதற்கருகாக 'கிறனைற்' குண்டொன்று வெடித்திருக்கிறது! வந்தவனின் குறி தப்பிவிட்டது! வேலியோடு நின்ற சீனிப்புளி மரத்தின் கிளைகளுக்கு மட்டும்தான் சேதம்! ஸ்ரேசன் பகுதி முழுவதும் மிருகத்தனம் தலைதூக்குவதற்கு இது ஒன்று போதுமே! 'திபுதிபு'வென்று எமது பனம் வளவிற்குள் பச்சைப்புழுக்களாய் அவர்கள்! 'சட சட' வென்று காற்றைக் கிழிக்கும் இரைச்சலுடன் துப்பாக்கி வேட்டுக்கள்! வீதியால் போய்க்கொண்டிருந்த அப்பாவிகள் பச்சை உடைக்காரரால் பன்னாடையாக்கப்படும் அகோரம், ஈனஸ்வரமாய் நீண்ட நேரம் கேட்டுக்கொண்டிருந்தது!

எல்லாம் ஓய்ந்த பின், ஜன்னலினூடாய் வளவைப் பார்த்தேன்.  மருந்துவெடி வீசியது! அடிவயிற்றுக்குள் இன்னமும் அச்சம் அப்பிக்கிடப்பதான உணர்வு! கரும் பனைகளில் புதிய குழிகள் தோன்றியிருந்தன.  சன்னங்களின் பல வெற்றுக் கவசங்கள் மரங்களின் அடியில் ஆங்காங்கே சிதறியபடி.  ஆயினும் அழகிய விசிறிகளென, வளவு முழுவதும் பசுமையாய்ப் போர்த்தியிருக்கும் பனைகள் எல்லாம் கெக்கலித்துச் சிரிப்பதுபோல் காற்றில் அழகாய் அசைந்துகொண்டுதானிருந்தன!

ஒரு உற்சாகமான வார இறுதிநாள், ரெயில்வே தொழிலாளிகளை அப்பா அழைத்திருந்தார்.  அவர்கள் புற்கள் நிறைந்த வளவைத் துப்பரவாக்கத் தொடங்கிவிட்டார்கள்.  வீடு முழுவதும் பச்சைப்புற்களினதும் காயம்பட்ட வடலி இலைகளினதும் மணம் பொங்கிப் பரவிக்கொண்டிருந்தது.

மேஜர் முக்தயர், ஏணிப்படிகளில் ஏறி நின்றவாறே வளவிற்குள் நின்ற அப்பாவுடன் வெகு சந்தோஷமாய் கதைத்துக்கொண்டிருந்தான்.  அப்பா, வளவைத் துப்பரவு செய்விப்பது அவனுக்குப் பெருமகிழ்ச்சி என்று விளங்கியது.  புற்களினூடாக வேலிவரை யாராவது தவழ்ந்து வந்து விடுவார்களோ என உள்ளூர ஊறிக்கிடந்த அச்சத்திற்கு, அது பெரிய ஆறுதல்தானே.

துப்பரவு செய்யப்பட்ட வளவிற்குள், நிறையப் பனங்கொட்டைகள் ஆங்காங்கே புதைந்து, புதிதுபுதிதாய் முளைவிட்டிருப்பது தெரிந்தது.  அப்பா, அவற்றைப் பிடுங்கி எடுக்கச் சொல்லவில்லை.  அவை நெடும்பனையாகும் அழகைக் கற்பனையில் நான் அடிக்கடி கண்டு களிப்பேன்.

வைகாசி மாதத்து முதல் நாள், நல்ல வெயிலும் கூடவே சுழன்றடிக்கிற காற்றுமாயிருந்தது.  சைக்கிள் 'றிம்'இல் சுரீர்சுரீரென்று மணற்புழுதி வந்து மோதிக்கொண்டிருந்தது.  நான் அலுவலகத்தில் ஷரைப்| செய்ய வேண்டியிருந்த அனைத்துப் பிரதிகளையும் முழுமையாகச் செய்து முடித்துவிட்ட திருப்தியுடன், ஆசுவாசமாய் சைக்கிளில் வந்திறங்கினேன்.  வீட்டினுள் பரபரப்பாக ஆளரவம்! வல்லைவெளி தாண்டி வந்த வடமராட்சி உறவினர்கள் சிலர் என்னைக் கண்டதும் எட்டிப்பார்க்கிறார்கள்.  ஏதோ வித்தியாசமாய்த்தான் இருந்தது!

அம்மா அழுத கண்ணீருடன் படியிறங்கி ஓடி வந்தா.  "தேவகி.. தேவகி.." என்ற விம்மலுடன் என்னைக் கட்டியணைத்து ஓசையை அடக்கி ஒப்பாரி வைத்தா. எனக்கு எல்லாம் விளங்கிவிட்டது!

"ஊரில் என் தம்பி போரிட்டு மாண்டான்.." என்று மார்தட்டிப் புலம்பவோ, தலையைப் பிசைந்து குழறவோ ஊரைக்கூட்டி ஒப்பாரிவைக்கவோ எல்லாம் முடியாத ஊமைச்சாபம் எங்களுக்கு! நடுஹோலைத் தாண்டி, பின்புறமாய் போயிருந்து அழுதுதீர்க்க முடியாத அவலம்!

எல்லா சுதந்திரங்களும் பறிக்கப்பட்டு, இப்போ அழுவதற்குரிய ஆகக்குறைந்த சுதந்திரமும் இரகசியமாய்ப் பறிக்கப்பட்டிருந்தது யாருக்குத் தெரியும்! இதில் யார், யாரைப் போய்த் தேற்றுவது?!

சில மாதங்கள் எமக்குள் நெருப்புத் துண்டங்களாய் கனன்று பொசுங்கிக் கழிந்தது! நம்பமுடியவில்லை நமது சின்னச் சின்னச் சந்தோஷங்களும் இத்தனை விரைவில் சீர்குலைந்து போகுமென்று நம்பவில்லை.

இலையுதிர்காலம் தொடங்கி, சீனிப்புளி உருவியுருவி தன் இலைகளை வளவெல்லாம் கொட்டத் தொடங்கியபோது, ஒருநாள் திடுதிப்பென்று அவர்கள் மூட்டைகட்டத் தொடங்கிவிட்டார்கள். ரெயில்வே ஸ்ரேசனுக்குரிய கட்டடங்களெல்லாம் அவசரம் அவசரமாய் விடுவிக்கப்பட்டு வெறிச்சோடி விட்டது! அனைத்து வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.  மேஜர், கேர்ணல் என்ற பதவியிலிருந்தவர்கள், விடைபெற்றுப்போக வீட்டுக்கு வந்தார்கள்.  சிநேகமும் பண்பும் மிக்க எங்களைப் பிரிந்து போவதில் பெரிய மனவருத்தம் என்று கூறி விடைபெற்றுப் போனார்கள் - சொந்த உடைமையை துறந்து போவது போன்ற துக்கம் அவர்களின் கண்களில்!

இரவு, ஈ காக்கைகூட அங்கில்லை என்ற தெளிவான நம்பிக்கையில், இத்தனை நாள் அடக்கிவைத்திருந்த துக்கமெல்லாம் பீறிட்டெழ, நெஞ்சிலடித்து அம்மா கதறத் தொடங்கிவிட்டா!

"நாசமாய்ப் போவாங்கள்.... என்ரை பிள்ளையையும் நாசமாக்கிப் போட்டெல்லோ போறாங்கள்! மகனே! நானினி உன்னை எங்கை தேட..." என்று பின்வளவில் குந்தியிருந்து குழறிக்கொண்டேயிருந்தா.  எனக்குக் கண்களிற்குள் நீர் முட்டிக்கொண்டு வந்துவிட்டது! ஆயினும் யாரும் யாரையும் அழவேண்டாமென்று தடுக்கவில்லை.
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 4 Jan 2016 - 13:52

பிசகு
---------------
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்
---------------
இளைப்பாறி ஏழெட்டு வருடங்களாகியும் ஆதியிலிருந்து எனக்கு ஆகிவந்த நல்ல பெயருக்கு இன்னும் பதினாறு வயசுதான். பொதுவில், ஒருவர் அரச சேவையிலிருந்து இளைப்பாறியதும் அவரிடமிருந்து மற்றவர்கள் பெற்று வந்த பயன்பாடுகள் அற்றுப் போக நேர்வதால் அவர் சார்ந்த ஈடுபாடு குறைவது அல்லது முற்றாக இல்லாமல் போவது வழமையான ஒன்று. என் விடயத்தில் இதற்கு மாறாக நடந்திருக்கிறது.

இன்றைக்கில்லை, வெள்ளைவேட்டி வாலாமணியில் படிப்பிக்கப் போய்வந்த அந்த ஆரம்ப நாட்களிலேயே மதிப்பும் மரியாதையும் அபரிமிதமாக வந்து அமைந்து விட்டது எனக்கு. அந்த மரியாதைப் பூவின் இதழ்கள் இன்னும் என் இல்லம் நாடி மணம் பரப்பியபடியே இருக்கின்றன. இதில் முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டும். கிடைத்த கௌரவத்தை கட்டுக்குலையாமல் காத்துக் கொள்வது ஒன்றும் சாதாரணமான விசயமல்ல. சிறிது பிசகினாலும் சரிந்து விட வாய்ப்புண்டு.

இன்னமும், என்னைத் தெரிந்தவர்கள் எங்கே கண்டாலும் நின்று நாலு வார்த்தை சுகம் விசாரிக்காமல் விலகமாட்டார்கள். அவசர காரியமிருப்பின் போகிறபோக்கில் தலையாட்டி சிரித்துவிட்டுத்தான் போவார்கள். சிநேகமான சைகைகள் வழி தம் அன்பை வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஒரு திருப்தி.

சொந்த இடத்தில் மட்டுப்படாமல் வெளியூர்களிலும் என் கௌரவம் பாய்ந்து பரவியிருக்கிறது. நேற்றுக்கூட, நிலாவெளிப் பக்கமிருந்து கூட்டமாக வந்திறங்கினார்கள். எல்லாரும் வசதியாக இருக்க நாற்காலிகள் பத்தாமல் சிலர் முற்றத்திலும் நின்று கொண்டிருந்தார்கள். அடுத்த வாரம் அவர்கள் பகுதிப் பள்ளிக்கூடத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. மாவட்ட கல்வி அதிகாரி பிரதம விருந்தினராக வருவதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார். விழாவைத் தலைமை தாங்கி நடத்திக் கொடுக்கும்படி என்னை வற்புறுத்திக் கேட்டார்கள். வழக்கத்தில் நானாகத் தேடிப் போய் உதவி செய்கிற பழக்கமுள்ளவன், வீடு தேடி வந்து விண்ணப்பவர்களின் முகம் முறிப்பேனா? முன்னரைப் போல் உடம்புக்கு முடியாவிடினும், வருகிறேன் என்றதும் வந்தவர்கள் அத்தனை பேர் முகங்களிலும் முழுநிலவு!

என் வாழ்க்கை முழுக்கவும் இப்படித்தான். பிள்ளைகளுக்குப் படிப்பித்தது போக, மிகுதி நேரத்தில் பெரும்பகுதி மற்றவர்களின் கஷ்டங்களைக் கேட்பதிலும் நிவர்த்திகள் சொல்வதிலும் கழிந்திருக்கிறது. படிப்பித்தலை வெறும் தொழிலாகக் கொள்ளாமல் பிள்ளைகளை உயர்த்திவிடும் ஏணியாகவே கருதி வாழ்ந்திருக்கிறேன்.

இந்தக் குணம் என் தாயாரிடமிருந்து கிடைத்த பாரம்பரிய முதுசம். பத்து வருடங்களுக்கு முன் பரமபதம் அடைந்துவிட்ட என் அம்மா ஒரு இளம் வயதுக் கைம்பெண். இரத்தக் கொதிப்பென பின்னாளில் புரிந்து கொண்ட சுகவீனத்தில் தந்தையார் நித்திரைப்பாயிலேயே மூச்சு அடங்கிவிட, பிரச்சனைகளின் மத்தியில் தட்டத்தனியாக கஷ்டம் தெரியாமல் என்னை வளர்த்தாள் அம்மா. எழுத்துக்கூட்டி வாசிக்கும் படிப்பறிவை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி முடிந்தது இது என்று இன்று நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. அயலாரோடும் மிக அன்னியோன்யமாக இருக்க முடிந்திருக்கிறது அவளால். யாரையும் மனம் நோக விடமாட்டாள். தராசைப் பிடித்துக்கொண்டு அளந்து பேசுவது போல் ஒரு நிதானம். சொல்லின் சிக்கனம் செயலின் தாராளத்தை மட்டுப்படுத்தாமல் பார்த்துக் கொள்வது அவளது சிறப்பு. நல்லது கெட்டதுக்கு முதலாளாய் ஓடிப்போவாள். அவசியத்துக்கு ஐஞ்சுபத்து கைமாற்றுக் கொடுக்கவோ அவசரத்துக்கு காப்புச்சங்கிலி இரவல் அளிக்கவோ தயங்கமாட்டாள். ஒருவிதத்தில் அம்மா அயலில் சம்பாதித்து வைத்த மரியாதை என் பெயருக்கு எருவாயிற்று என்றே சொல்ல வேண்டும்.

அம்மா சமைத்து நீங்கள் பார்த்திருக்க வேண்டும். கறிச்சட்டி அடுப்பில் ஏறி இறங்குகிற இடைவெளியில் அம்மாவின் அசைவுகளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பது எனக்குப் பிடித்தமான விசயமாக இருந்திருக்கிறது. சாம்பலில் கழுவி மூடி வைத்த பாத்திரங்களில் காய்கறிகளை அதனதன் அளவுகள் மாறாமல் நறுக்கிப் போடுவாள். தேங்காயை சிதிலமாக்காமல் சரிபாதி பிளந்து பூ துருவி முதல்பால் கடைசிப்பால் என கறியின் தேவைக்கேற்ப அதற்குண்டான பாத்திரங்களில் பிரித்து வைத்துக் கொள்வாள். அம்மி முன்னால் கால்நீட்டியிருந்து பக்குவம் குறையாமல் அரைத்து வைத்துக் கொண்ட பலசரக்குத் திரணையை கொதிக்கும் குழம்பில் நேரம் அறிந்து இடுவாள். உப்புப்புளி பார்க்க அகப்பையில் துளியளவு கிள்ளி உள்ளங்கையில் விட்டு நாக்கிடம் ருசி கேட்கும் தோரணையில் கண்களை மேல்நிறுத்தி தனக்குள்ளே ரசிப்பாள். கொதித்துவரும் குழம்பில் முதல்பாலை விட்டு கறியின் கொதிப்பை அடக்கி இறக்கிவிட்டு அடுத்த கறிக்கான ஆயத்தங்களை தொடர்வாள். அம்மாவின் அசைவுகள் எல்லாமே ஒரு நேர்த்தியான சடங்கிற்குண்டான பொலிவோடு திகழ்வதைப் பார்த்திருக்கிறேன்.

மேகத்துள் மிதக்கும் பால்நிலவும் மெழுகு தந்தம் காட்டி தத்துபுத்தென நடந்து வரும் யானையும் அன்னையிடம் வயிறுமுட்ட பால் குடித்து மழலை உதிர்க்கும் குழந்தையும் என்றுமே அலுக்காத காட்சிகள் எனக்கு. அம்மாவின் சமையலுக்கு இவற்றோடு சேர்ந்து கொள்வதற்கான அத்தனை அருகதையுமுண்டு. கொய்யக மறைவில் குழந்தைக்குப் பாலூட்டும் தாயின் அக்கறையை அம்மாவின் ஒவ்வொரு அசைவிலும் நான் ரசித்திருக்கிறேன். அந்த ஈடுபாட்டுணர்வு என் இரத்தத்தில் ஊறிவிட்டது.

இதற்கு முன்வரிசை பின்வரிசை என்கிற வித்தியாசம் பாராத மனப்பாங்கு தேவை. வகுப்புகளில் வெறுமனே படிப்பித்தலோடு மட்டுப்படாமல் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க என்னால் முடிந்திருக்கிறது. குறிப்பாக, பின்வாங்குப் பிள்ளைகளின் ஒவ்வாமையை மனங் கொள்வது முக்கியமெனக் கருதினேன். அவர்களில் ஒளிந்திருக்கும் பலதரப்பட்ட திறமைக்கூறுகளை வெளிக்கொணர வேண்டியது ஆசிரியனின் கடமையென உணர்ந்தேன். படிப்பு தவிர்ந்த ஏனைய காரியங்களில் சிதறுகிற அவர்களது கவனத்தை ஒருமுகப்படுத்தி விட்டால் அவர்களது சிறப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்தி விடலாம். 

வீட்டுக்கணக்கு செய்ய புத்தகம் வாங்கமுடியாத பிள்ளைகளின் வறுமை கண்டு நான் உதவியிருக்கிறேன். மந்தமான மாணவர்களை பள்ளிக்கூடம் விட்டபின் நிற்பாட்டி சொல்லிக் கொடுப்பேன். விடுதலை நாட்களில் பாடம் எடுப்பேன். வகுப்பில் கடைசி மாணவன் எனக் கருதப்படுகிறவன் கூட என் பாடத்தில் சித்தியடைந்துவிடுவான்.

இளைப்பாறிய பின் உடல் நலம் சற்று குன்றிவிட்டது உண்மைதான். ஓடியோடி ஊருக்கு உழைத்ததால் அல்சர் நீரழிவு என்று நானாவித உபாதைகளின் ஊற்று நிலமாக ஆகிவிட்டீர்கள் என்று திடகாத்திரமான உடலைக் கொண்ட இளைப்பாறிய நண்பர் ஒருவர் சொன்னார். காலாகாலத்தில் கல்யாணம் பண்ணியிருந்தால் ஏலாத காலத்தில் மனைவிமக்கள் கையில் ஏந்தியிருப்பார்களே என்றும் ஆதங்கப்பட்டார்.

என்ன செய்வது - திருமண உறவில் கவனம் தீவிரமாகாமலே என் காலம் கடந்து விட்டது. தயாராயிருந்த போது பெண் பொருந்தி வரவில்லை. பொருந்தியபோது நான் தயாராயில்லை. அம்மா சதா சண்டை போட்டுக் கொண்டுதான் இருந்தாள். அவளுக்காகவாவது ஒப்புக் கொண்டிருக்கலாம். கடைசிவரை மாமிமருமகள் சண்டை அனுபவம் கிட்டாமலே அவள் காலமாகிப் போனாள். பார்க்க எடுக்க பக்கத்தில் ஆளில்லாமலிருப்பது ஒரு விதத்தில் கஷ்டந்தான். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அரக்கப் பரக்க ஓடித் திரிகிற சம்சாரிகளைப் பார்க்கிறபோது அந்தச் சாகரத்திலிருந்து தப்பிப் பிழைத்ததும் புரியவே செய்கிறது.

இப்போது என் சேவை வேறு தோற்றப்பாடுகளை எடுத்திருக்கிறது. ஆலோசனை கேட்டு வருபவர்கள் பெருகிவிட்டார்கள். ஐயாவிடம் போனால் நிச்சயமாக இதற்கு ஒரு புத்தி சொல்வார் என்கிற நம்பிக்கையோடு வருகிறார்கள். நானும் என்னாலான நல்லதுகளை சொல்லிக் கொண்டிருக்கிறேன். 

நேற்றுக்காலை ஒரு தகப்பன் மகளைக் கூட்டி வந்தார். பத்தாம் வகுப்பு அரசு பரீட்சையை நல்ல தரத்தில் சித்தியெய்தியிருந்தாள் அவள். புதிய வகுப்பில் ஒரு குறிப்பிட்ட பிரிவை அவள் தேர்ந்தெடுக்க வெண்டும். அது கலையா வர்த்தகமா பொறியியலா அல்லது மருத்துவமா என்பதை என் மூலமாகத் தீர்மானித்துக் கொள்வதே அவரது வருகையின் நோக்கம். விசயத்தைச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார். அவர் இதே கேள்வியை வகுப்பாசிரியரிடம் கேட்டிருக்கலாம். ஒருவேளை இதற்குள் கேட்டுமிருப்பார். இருக்கச் சொல்லிவிட்டு முதலில் அவரிடமே பேச்சுக் கொடுத்தேன்.

எல்லாரையும் போல, மகள் டாக்டராக வரவேண்டும் என்று விரும்புவதாகச் சொன்னார். முடியாவிட்டால் எஞ்சினியர் என்று ஒரு படி மட்டும் கீழிறங்க அவர் தயாராயிருந்தார். பின்னர் பெண்ணிடம் பேசினேன். நாலைந்து பதில்களில் அவளைப் புரிந்து கொள்ள முடிந்தது. நான் அவரிடம் சொன்னேன். உங்கள் மகள் பாடங்களில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் - நீங்கள் விரும்புகிற துறைகளில் அவளுக்கு நாட்டமில்லை என்று தெரிகிறது, பிரகாசிக்கும் வாய்ப்பும் அரிது. கஷ்டமானதை திணிப்பதிலும், இலகுவாகக் கைவரக்கூடியதை ஊக்கப்படுத்துவதே வெற்றியைத் தரும். இவளை வர்த்தகத் துறையில் விடுங்கள். இன்றைய நவீன யுகத்தில் வேறெதையும் விட பரந்துபட்ட வாய்ப்புகளை அளிக்கும் துறை இது. நீங்களே வியக்கிற அளவிற்கு சிறப்பாக வருவாள் என்றேன். அவரும் நிம்மதியாகப் போய்ச் சேர்ந்தார். 

இப்படிப் பல பேர் வருகிறார்கள். வருகிறவர்களின் மனங்களை அவற்றின் நுன்னிய தளங்களில் நின்று கூர்ந்து படிக்கிறேன் முதலில். பிரச்சனைகளின் ஆழஅகலம் புரிந்து கொண்டு அவர்களை அணுகுகிறேன். இந்த மாதிரி கவுன்சிலிங் செய்வதில் என் நேரமும் உபயோகமாகக் கழிகிறது. வந்தவர்களுக்கும் நன்மையாகிறது. 

படித்தவர்களிடம் ஒரு குணம் இருக்கிறது. எல்லாம் தெரிந்த மனப்பான்மை. குறுக்குமறுக்காக கேள்விகள் கேட்பார்கள். அவர்களை ஆறுதல்ப்படுத்துவதற்கு சிறிது நேரம் எடுக்கும். படிக்காதவர்களிடம் அந்தக் கஷ்டமில்லை. கேட்டுக் கேள்வியின்றி ஏற்றுக் கொள்வதை அவர்களின் முகத்தெளிவில் கண்டிருக்கிறேன். இதிலுள்ள சுளிவுநெளிவுகள் எல்லாம் ஒரு கலையாகவே எனக்குக் கைவந்துவிட்டது அம்மாவின் சமையலைப் போலவே. வந்தவர்களின் முகம் அளந்து மனம் படித்து பொருத்தமாகப் பேசுகிற நுட்பத்தில்தான் கவுன்சிலிங் கலையின் வெற்றியே தங்கியிருக்கிறது என்பேன். அவரவருக்குப் பொருந்துகிற வார்த்தைப்பிரயோகம் மிகவும் முக்கியம், இன்னொன்று பொறுமையும். 

நேற்றுமாலை ஒரு பெண் வந்திருந்தாள். ஆடுகள் மேய்த்த சிறுவயதில் மழைக்கு மட்டும் பள்ளிக்கூடம் ஒதுங்கியதாகச் சொன்னாள். பிறந்து வளர்ந்தது தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு குக்கிராமம். வாழ்க்கைப்பட்டது தூரத்து உறவில் மலைநாட்டின் தலவாக்கொல்லையில். புருசன் திருகோணமலைக்கு வேலை தேடி வந்ததில் சீவியம் இங்கேயே அமைந்துவிட்டது. ஒரேயொரு மகன். வயசு பதினைந்து. பையனுக்கு எட்டு வயசில் தகப்பன் வயற்காட்டில் பாம்பு கடித்து நேரத்துக்கு வைத்தியம் கிடைக்காமல் காலமாகிவிட்டார். ஏனோ தெரியவில்லை மனுசி இங்கேயே தங்கிவிட்டது.

பையன் ஒன்பதாவது படிக்கிறான். பள்ளிக்குப் போகாத நாட்களே அதிகம். கூடாத கூட்டம் வேறு, படிக்காமல் ஊர் சுற்றுகிறான். எப்படியாவது புத்தி சொல்லி பள்ளிக்குப் போக வைக்கும்படி கேட்டுக் கொள்ள வந்திருந்தவள் மரியாதைக்காக எட்டத்தில் நின்றே பேசினாள். நாலு சாத்து சாத்துங்கய்யா என்று அடிக்கிற உரிமையும் அளித்தாள். இதுதான் படிக்காதவர்களின் பண்பு. 

பையன் எங்கே என்று கேட்க, இன்றைக்குக் கூட்டி வருகிறேன் என்று போயிருக்கிறாள். அநேகமாக இப்போது வருகிற நேரந்தான். கைம்பெண்ணின் வலிகள் அம்மாவிடமிருந்து எனக்கு அனுபவப்பாடம். முகம் தெரியாத அந்தப் பையனில் என்னையே இனம் கண்டது போல ஒரு பிடிப்பு உண்டாயிற்று. இவனை மடக்கி வழிக்குக் கொண்டு வருவது பெரிய விசயமில்லை. அவனது உள்ளத்தைத் தொட்டுவிட்டால் எதிர்காலம் உறுதிப்பட்டுவிடும்.

கதவு தட்டிக் கேட்கிறது. அவர்கள்தான். மகனை எனக்கு இரண்டடி தூரத்தில் தேவையானால் எட்டி அடிப்பதற்கும் வசதியாக நிறுத்திவிட்டு அவள் பத்தடி தள்ளி குறுகிப் போய் நின்று கொண்டாள்.

என்னான்னு கேளுங்கய்யா?

நீங்க அப்பிடி கதிரைல இருங்கம்மா.

சொன்னவுடன் அவள் கதிரைப் பக்கமாகப் போனாள், இருக்கவில்லை. நான் பையனைப் பார்த்தேன். குளிக்க வார்த்து கன்னஉச்சி புறித்து தலை இழுத்து பவுடர் அப்பி தோய்த்த உடுப்பு உடுத்தி கூட்டி வந்திருக்கிறாள் தாய். தாயே எல்லாம் செய்திருக்கிறாள் என்பதற்கு முகத்தில் கூடுதலாக அப்பியிருந்த பவுடர் சாட்சி சொன்னது. ஐயாவுக்கு முன்னால் கையைக் கட்டி நின்று பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருப்பாள். பையன் கறுப்பு, தாயின் நிறம். தகப்பனுடைய மூக்காக இருக்கலாம். முழிப்பாக இருந்தான்.

கண்டிப்பக்கம் நாலு வருடங்கள் வேலை பார்த்ததில் அங்கு புழக்கத்திலிருக்கும் மொழி அசைவுகள் எனக்குப் பழக்கம். அவர்களோடு அவர்களது இழுவைகளுக்கு இசைவாகப் பேசமுடியும் என்பதே எனக்கு பலந் தருகிற விசயம். முகத்தில் மேலதிக கனிவு காட்டி பையனை உன்னிப்பாகப் பார்த்தேன்.

ஏந்தம்பி இப்ப என்ன படிக்கிறே?

ஒம்போது. .. .. .. அவன் தலை நிமிராமல் நிற்க அம்மா பதில் சொன்னாள்.

எங்க படிக்கிறே?

சந்திப்பள்ளியில படிக்கிறான்யா. நடைதூரத்தில வூடு இருக்குதுங்கய்யா. .. .. .. 
இப்போதும் பதில் சொன்னது அவள்தான்.

அம்மா நீங்க சும்மாயிருங்க பையன் பதில் சொல்லட்டும். 

சரீங்கய்யா என்று சொன்னவள் நாலு விரல்களை வாயில் வைத்து மன்னிப்புக் கோருவது போல சற்றுப் பின்வாங்கி நின்றாள்.

போன பரீட்சையில கணிதத்தில் எத்தனை மார்க் வாங்கினே?

வலதுகால் பெருவிரலால் நிலத்தில் அரைவட்டம் போட்டுக் கொண்டிருந்தான் குனிந்த தலை நிமிராமல். அடுத்ததெரு சந்தி மில்லில் அரிசி அரைக்கும் ரீங்காரம் மட்டும் மிகக் கிட்டத்தில் கேட்ட அளவிற்கு அமைதி நிலவிற்று.

பத்தோ பதினைஞ்சு மார்க்குதான்ய்யா. .. .. .. எனக்குச் சங்கடம் நேராதிருக்க தாய்தான் இப்போதும் மெல்லிய குரலில் சொன்னாள்.

உங்க கணக்கு வாத்தியார் பெயர் என்ன?

..........

இப்போ ஒம்போதாவது வகுப்பு சிலபஸ் மாத்தியிருக்காங்கன்னு சொல்றாங்களே உண்மையா?

.........

அடுத்த வருசம் ஜீசீஈ பரீட்சை வருதே அதுக்கு ஒன்னை சேத்துப்பாங்களோ?

............

அவனிடமிருந்து பதிலில்லை. தாய் ஏதாவது சொல்ல முயற்சித்திருப்பாள். இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. சங்கடத்தில் நெளிந்ததைத் தவிர அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. 

அவன் பக்கமாக இருந்த சுவரில் திடீரென முளைத்த ஒரு பல்லி, அதனைத் துரத்திய இன்னொரு பல்லி, அந்தந்த இடத்திலேயே தரித்து நின்றன. பையனது பார்வை பல்லிகளின் பக்கம் படர்ந்தது. எனக்கு முன்னால் நிற்கிற பயம் அற்றுப் போய் அடுத்து நிகழப்போவதை ஆர்வம் துளிர்க்கப் பார்த்தான். எங்கள் இருப்பைச் சட்டை செய்யாத இரண்டாவது பல்லி முதலாவது பல்லிக்குப் பக்கத்தில் ஊர்ந்து அதன் மேல் ஏறிக் கொண்டது. பையன் வைத்தகண் எடுக்காமல் நின்றான். நான் தாயைப் பார்த்தேன். உங்களைத்தான் நம்பி வந்திருக்கிறேன் என்று கேட்கும் அதே வேண்டுதல் முகம். நிலைத்து நின்ற பல்லிகளைக் கலைக்கவும் பையனது கவனத்தைத் திருப்பவுமாக, சுவர்ப்பக்கம் கையை விசுக்கி நான் சப்தமிட, எதையும் காதில் போட்டுக் கொள்ளாத பல்லிகள் வெகு சாவதானமாக சிறிது நேரம் கழித்து தம்பாட்டில் எங்கோ மறைந்து கொண்டன.

சரி படிப்பை விடு. அப்பனில்லாம ஒன்னை கஷ்டப்பட்டு வளர்த்திருக்கிறாவே உங்க அம்மா அதை நெனைச்சுப் பாத்தியா தம்பி.

இப்போது காலை மாற்றி மீண்டும் அரைவட்டம் போடுவதில் முனைப்பாக இருந்தான்.

காலை ஆட்டாம கொஞ்ச நேரம் சும்மா நில்லு.

காலை ஆட்டாதறா என்று தாயும் அதட்டினாள்.

ஆட்டம் சட்டென்று நின்றது. நான் ஆத்திரப்பட்டுவிட்டதாக அவன் நினைத்திருப்பான். எனக்கு ஆத்திரம் இலேசில் வராது. இது தேவை கருதிய ஒரு சிறு நடிப்பு. கடிதோச்சி மெல்ல எறிக - வள்ளுவப் பெருந்தகை சொன்னது - அடிக்கிற மாதிரி கத்து, கடிச்சு உதறுகிற மாதிரி நெருங்கு ஆனா அடி மெதுவாகப் படட்டும் என்று. பிள்ளையை பள்ளிக்குப் போக வைக்கத் துடிக்கும் இந்த ஏழைத்தாயை எப்படியாவது ஆறுதல்ப்படுத்த வேண்டும்.

கடேசியா எப்போ பள்ளிக்குப் போனே?

போய் பத்து நாளாச்சய்யா - தாய்.

கடைசிமணிக்கு காத்திருக்கிற மாணவனாக அவன் தெரிந்தான். தாயை திரும்பிப் பார்த்துவிட்டு தலை குனிந்தான்.

எனக்கு மூளை நரம்பில் மெலிதான துடிப்பு உண்டான ஒரு உணர்வு! இது அதிகம். முளைத்து மூனு இலை விடாத பையனுக்கு வயசுக்கு மீறிய கொழுப்பு. இத்தனை கேள்விகள் கேட்டும் ஒரு தலையாட்டல் கூட இல்லாமல் கல்லுளிமங்கனாய் நிற்பது நிச்சயமாக அதிகம்.

வாயில கொழுக்கட்டையா வைச்சிருக்கே?

அவன் திடசங்கற்பம் சிறிதும் குறையாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான். 

களவாணிப்பயலே, இப்போ வாய தெறக்கப் போறியா இல்லையா?

எனக்குக் சதிரம் கொஞ்சமாக நடுங்கிற்று.

வாயைத் திறக்காட்டி ஒன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிப் புடுவன் களவாணிப்பய புள்ளை.

அவன் முகத்தில் முறைப்பு உருவானது போல் ஒரு அசைவு தோன்றிற்று. உறுதிப்படுத்திக் கொள்ள கண்ணாடியைப் போட்டுக் கொண்டேன். இல்லை அவன் முறைக்கவில்லை. முறைத்திருந்தாலாவது ஏதோவொரு விதத்தில் பதில் சொல்ல ஆயத்தமாகிறானெனக் கொள்ளலாம். ஒருவித சலனமுமற்று எப்படி இவனால் ஒற்றைப்பிடியில் நிற்க முடிகிறது!

டேய் கள்ளப்பயலே ஒன்னை

அப்போதுதான் நான் எதிர்பாராத அந்த இடி என் தலையில் நேராக இறங்கிற்று. அவனிடமிருந்தல்ல, அவளிடமிருந்து.

நானும் வந்ததிலிருந்து பாக்கிறேன். களவாணிப்பயமவனே கள்ளப்பயலேன்னு விடாம கத்திக்கிட்டிருக்கியே, இதுதான் நீ புத்தி சொல்ற லெச்சணமா? மத்தவங்க பொருளுக்கு ஆசைப்படாத ஆளய்யா என் புருசன். குடிப்பாருதான். களவுக்கெல்லாம் போகமாட்டாரு. எம் புள்ளை படிக்காம ஊர் சுத்துறவன்தான். களவெல்லாம் எடுக்கமாட்டான். அப்படிப்பட்ட புள்ளையை இப்பிடித் திட்றியே நீயெல்லாம் பெரிய மனுசனாய்யா?

நான் உறைந்து போய் அவளைப் பார்க்க, உரு வந்தவள் போல, நீ வாடா மவனே, பெரிய மனுசனாம் பெரிய மனுசன், பெரிசா பேச வந்துட்டாரு என்றவாறே மகனின் கையை தறதறவென இழுத்தாள்.

திடீரென உண்டான குழப்பத்தில் கண்மூடித் திறக்குமுன் தெருக்கதவை தடாரெனச் சாத்துகிற சத்தம் கேட்டது
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon 4 Jan 2016 - 13:55

பழையதும் புதியதும்
----------------
அ.செ.முருகானந்தன்
----------------
'ஏய்! ஏய்!' என்று இரண்டு அதட்டல் போட்டு மாடுகளைத் தட்டிவிட்டான் கார்த்திகேசு. ஒரு நிலையில் நின்று அலுத்துப்போன மாடுகள் உற்சாகத்தோடு முதலில் கொஞ்சத் தூரம் ஓடின. இந்தச் சமயம் கார்த்திகேசு என் பக்கம் திரும்பி, பெருமை பொங்க ஒரு கம்பீரப் பார்வை பார்த்தான். அதற்கு ஒன்றும் சொல்லாமலிருந்தால் நல்லாயிருக்காதல்லவா?

'அவசரமில்லை, அண்ணே! ரயிலுக்கு நேரமிருக்கு. மாடுகள் மௌ;ளப் போகட்டும். ஏது சோடி வாய்த்து விட்டது போலிருக்கே உனக்கு!' என்று சும்மா சொன்னேன். கால் மைல் தாண்டியதும் நடக்கும் சங்கதி எனக்குத் தெரியாதா? ஆனால், மனுஷன் பாவம். நான் கூறியதை மெய்யென்றே நம்பிவிட்டான். முகஸ்துதியிலே பழைய காலத்து வெள்ளை மனம் தன்னை மறந்துபோய் விடுகிறது.

ஆசனப் பலகையில் நேராக இருந்த மனுஷன் திரும்பி கோணமாக இருந்துகொண்டு, 'ஹீம்! இதெல்லாம் என்ன மாடுகள் தம்பி, முன்னே முன்னே எப்படி மாடுகள் என்னிடம் நின்றன தெரியுமா? உனக்குத் தெரியாது. உனது பெரியப்பாவுக்குத் தெரியும். வேறொன்றுமில்லே. எதற்கும் கைராசி வேண்டும். எல்லாம் மாடுகளைப் பழக்குகிற விதத்திலிருக்கு. எப்பேர்ப்பட்ட சண்டி மாடுகளும் கார்த்திகேசுவின் கைக்கு வந்துவிட்டால் சுட்டியன்களாகிவிடும் என்று முன்னெல்லாம் பேசிக் கொள்வார்கள்.' இப்படி ஆரம்பித்து பேசிக்கொண்டு போனவன் இடையில் ஒரு கணம் நிறுத்தி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு மறுபடியும் சொன்னான்:

'...ம்.. அந்த நடப்பு எல்லாம் முன்னொரு காலத்திலே, அந்தக் காலந்தான் மலையேறிவிட்டதே. இப்போ தம்பிமார்களுக்கு எடுத்ததற்கெல்லாம் வீட்டு வாசலிலே கார், அதிலே அவசர அவசரமாய்ப் பறந்தடித்துக் கொண்டு ஓடித் திரிந்தால் நாகரிகமாம்.....'

கார்த்திகேசுவின் மாடுகள் காற்கட்டை தூரம் நடந்து வந்துவிட்டன என்று இப்பொழுது தெரிந்தது. காரியத்தில் கட்டையான மனிதன் வாய்ப் பேச்சிலே அட்டகாசம் போடுவதுபோலக் கடகடவென்ற முழுக்கத்தோடு குலுக்கி அடித்துக்கொண்டு வண்டி ஊர்ந்தது. கொழும்பு ரயிலுக்கு அதிகம் நேரமிருந்தபடியால் மாடுகள் அவற்றின் போக்கில் போகவிட்டு, நான் கார்த்திகேசுவின் வாயை மௌ;ளக்கிளற ஆரம்பித்தேன். ஆனால்... அடடா, என்ன செய்துவிட்டேன்! இந்த விளையாட்டுக் குணத்தினால் கடைசியில் மனுஷனுடைய நொந்துபோன இதயத்தையே அல்லவா கிளறிவிட்டேன்!.

கார்த்திகேசு தொடர்ந்து பேசிக்கொண்டே போனான்: 'உலகம் கீழ் மேலாகப் புரண்டுகொண்டு வருகிறது தம்பி. அதில் எல்லாம் எனக்குக் கவலையில்லை. மரம் வளருறதற்கு காவோலைகள் விழுந்து, புதிதாக வரும் குறுத்தோலைகளுக்கு இடம் விட்டுக் கொடுக்க வேண்டியதுதான். ஆனால் ஒன்று, காவோலைகள் விழுந்த பிற்பாடும் அவை இருந்த அடையாளமாக மரத்தில் வரைகள் இருக்கோ இல்லையோ அது போல, காலம் எப்படி மாறிவிட்டபோதிலும் மனிதன் வாழ்ந்த வாழ்க்கைத் தளும்புகள் இலேசில் அவன் மனத்தை விட்டு மறைந்துபோவதில்லை. உன்னுயை வீட்டுக்காரர்கள் என்னை மறந்துவிட்ட போதிலும், எப்படிப்புறக்கணித்து விட்ட சமயத்திலும் அவர்களுக்கு வண்டில் விட்ட அந்தப் பதினைந்து வருஷ காலத்தைச் சாகும்வரை என்னால் மறக்கவே முடியாது. தாய் பிள்ளையைப் போல உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே இருந்து வந்த எனக்கு என்ன வினை வந்தது கடைசியில்! எனக்குப் பெயர் வைத்தது யார் என்று தெரியுமோ? உனது பெரியம்மாவைக் கேட்டுப்பார் யார் என்று சொல்லுவா? இருபது வருஷங்களுக்கு முன்பு உங்கள் வீட்டில் எந்த நேரமும் 'காத்தி அண்ணை காத்தி அண்ணை' என்ற சத்தமாகவேதானிருக்கும். உங்கள் வீட்டில் என்ன நடந்தாலும் காத்தியண்ணையை அறியாமல் நடக்காது. இந்த வண்டிக்காரனுக்கு உனது பெரியம்மா கையிலே பிசைந்து தந்த சோற்று உருண்டை, இதோ வயிற்றில் ஒரு பக்கத்தில் இன்றைக்கும் இருக்கிறது. தம்பி!....'

இவ்விதம் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக்கொண்டு போன கார்த்திகேசு எதிரே ஒரு கார் வருவதைக் கண்டதும் 'சட்' டென்று வண்டியை ஓரமாக ஒதுக்கினான். கார் சமீபமாக வந்து வண்டியை விலக்கிக்கொண்டு போயிற்று. அப்பொழுது தான் கார் இன்னாருடையது என்று அவனுக்குத் தெரிந்தது போலிருக்கிறது. கார் வண்டியைத் தாண்டும்போது அதன் டிரைவரை எரித்துவிடுவான் போல் முழுpத்துப் பார்த்தான். கார் அப்பால் போய் மறைந்த பிற்பாடு நெடுமூச்சு ஒன்று எழுந்தது, அவனது நெஞ்சைப் பிளந்துகொண்டு.

இவ்வளவுக்கும் நான் அவனையே கவனமாகப்பார்த்துக் கொண்டிருந்ததை அவன் கவனித்தானோ என்னவோ. 'சட்'டென்று என்பக்கம் திரும்பி, 'இப்போ போச்சுதே பிசாசு ஒன்று, இதுதான் என் வாழ்விலே மண்ணை அள்ளிப் போட்டது. ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியைக் கலைக்கப் பார்த்ததாம். முந்தி வந்த செவியைப் பிந்தி வந்த கொம்பு மறைக்கப் பார்த்ததாம். நேற்று வந்த மலையாளத்தானும் அவனுடைய காரும் இந்த ஏழை வண்டிக்காரனை ஒழித்து விடப்பார்த்தார்கள். ஆனால்.....' என்றான்.

கார்திகேசு இப்படித் தொட்டுத் தொட்டுப் பேசியது விஷயத்தை முழுக்க அறியும்படி என்னைத் தூண்டிற்று.

'என்ன நடந்தது, அண்ணே! தயவுசெய்து எல்லாவற்றையும் விபரமாகச் சொல்லு' என்று கேட்டான்.

வெறும் வாயை மெல்லுகிறவனுக்கு அவல் வேறு கிடைத்துவிட்டால் பேசவேண்டுமா? கார்த்திகேசு சற்று விபரமாகக் கதையைச் சொன்னான். 'நடந்தது என்ன தம்பி, எல்லாம் கால வித்தியாசம், இவ்வளவுதான். கார் வந்தது வண்டி போயிற்று. புதியதைக் கண்டதும் பழையதைக் கைவிட்டார்கள். புதுப் பெண்டாட்டியைக் கண்டதும் வயதான தாய்க் கிழவியைச் சாகக் கொன்றுவிடுகிறதா? ஊர் ஊராகக் கார்கள் வந்து நின்ற அந்த நாட்களில் என்னைப்போலக் கூலிவண்டி வைத்துப் பிழைத்தவர்கள் எத்தனை பேர் பெரும் கஷ;டத்துக்குள்ளானார்கள், தெரியுமோ. தளுக்கி மினுக்கத் திரியும் இந்த மோட்டார்க்கார்ளைக் காணும்போது எனக்கு உடம்பெல்லாம் பற்றி எரிகிறது. அரிச்சந்திர மகாராசாவின் பூச்சக்கரக் குடையை அபகரித்து வரும்படி விசுவாமித்திர முனிவர் அனுப்பினாரே நாட்டியப் பெண்கள்... அவர்களுடைய ஞாபகம் வருகிறது தம்பி, இந்த அந்நியப் பிசாசுகளைப் பார்க்கும்போதெல்லாம்! ஆனால், எங்களுடைய மாட்டு வண்டிலோ அந்நிய முதலுமல்ல, அந்நியச் சொத்துமல்ல, அதற்குக் கொடுக்கும் பணத்தில் ஒரு செம்புச் சதமும் வெளியே போவதுமில்லை. இதையெல்லாம் யார் சிந்தித்துப் பார்க்கிறார்கள்? மனிதனுக்குச் சிந்தனை இருந்தால் உலகத்தில் தாசிகள் ஏன் இருக்கிறார்கள் தம்பி? ஏதோ கண்டதே சாட்சி கொண்டதே கோலம்! இந்த மனப்பான்மை – ஊரெங்கும் பரவிக்கொண்டு வந்த இந்த அந்நிய மோகம் - உனது பெரியப்பாவையும் போய்ப் பிடித்துவிட்டது.

அந்தச் சமயம் இந்தியாவிலிருந்து ஒரு பெரிய தவில் வித்துவானைக் கூப்பிட்டிருந்தார் அவர். ஒரு நாள் என்னைக் கூப்பிட்டுச் சொன்னார்: 'கார்த்திகேசு, இப்போ எனக்கு வந்திருக்கும் தவில்காரர் மாட்டு வண்டியில் ஏறிப் பழக்கமில்லையாம். என்ன செய்வது? இந்த வருஷம் போகட்டும். அடுத்த வருஷம் பார்த்துக் கொள்ளலாம்.'

எனக்கு என்னமாதிரி இருந்திருக்கும் என்று நினைகிறாய் தம்பி? பெரியப்பா வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் நான் அவரது உள்ளப்போக்கைத் தெரிந்து கொண்டு விட்டேன். இருந்தும், இதை ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்தவன்தான் நான். எப்படியான போதிலும் பதினைந்து வருஷத் தொடர்பு அல்லவா? இங்கிருந்து காரைதீவுக்கோ, மட்டுவிலுக்கோ இன்னுமதற்கப்பாலுமோ பெரியப்பா சேவுகம் போகும் வனம், வனாந்திரங்களுக்குச் சாமம் சாமமாக, இரவு இரவாக, இருட்டோ நிலவோ, வெய்யிலோ, மழையோ, பனியோ காற்றோ ஒன்றையுமே சட்டைபண்ணாமல் வண்டி ஓட்டியவனல்லவா? உற்சவங்களிலே நடைபெறும் மேளக் கச்சேரிகளில் உனது பெரியப்பா மேளத்துக்குக் கிடைக்கும் புகழிலும் கீர்த்தியிலும் நன்மையிலும் தீமையிலும் நானும் அவர்களில் ஒருவனாக நின்று பங்குபெற்றவன் அல்லவா?

எனது வண்டி ஏற்றிச் சென்ற வடிவேலு நாயனக்காரரை எங்கேயோ இருந்து வந்த மலையாளத்தானும் அவனது காரும் ஏற்றிச் செல்கிறது என்பதை எண்ணவே எனக்கு வயிறு எரிந்தது. அடக்க முடியாத ஆத்திரமும் கோபமும் உண்டாயின. வயிற்றெரிச்சலிலும் ஆத்திரத்திலும் நான் செய்த விசர் வேலைகளை இப்பொழுது நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. ஆனால் அப்பொழுது அவை எனது உள்ளக் குமுறலை ஓரளவு ஆற்றி வைத்தன.

ஒருநாள் காரோடு என் வண்டியைச் சவாரி விட்டுப்பார்த்தேன். மாடுகள்மேல் தொட்டு அறியாத நான் அன்றைக்கு அவற்றிற்கு அடித்த அடிகளை நினைத்தால் இன்னமும் தேகம் நடுங்குகிறது தம்பி!

இன்னொரு நாள் வேறொரு காரியம் செய்தேன். தெருவில் என் வீட்டுக்குப் பக்கத்தே ஓரிடத்தில் ஒருநாள் ஒளித்திருந்து அந்தக் கார் போகும் சமயத்தில் இரண்டு கல்லை அதன்மீது விட்டெறிந்தேன். யாருடைய நல்ல காலமோ இரண்டு எறியும் கார்மீது படவில்லை. ஓடுகிற கார்மீது கல்லெறிவதற்கும் அநுபவம் வேண்டும் என்று அப்பொழுதுதான் அறிந்துகொண்டேன்.

கடைசியில் இந்த அற்ப காரியங்களினால் ஒரு பலனும் ஏற்படவில்லை. ஊர் முழுவதையும் மலையாளத்தான் தனது வசமாக்கிக்கொண்டான். அவனுக்கிருந்த ஓய்வு ஒழிச்சல் இல்லாத 'சவாரி'யைப் பார்த்து மேலும் கார்கள் ஊரிலே வந்து குவிந்தன.

நிலைமையைப் பார்த்துவிட்டு நான் மண்வெட்டியைக் கையில் தூக்கினேன்.....

எது எப்படியான போதிலும் நீதிக்கு ஒரு இடம் உலகில் என்றைக்கும் இருக்கவே இருக்கிறது தம்பி!

பதினைந்து பதினாறு வருஷங்களுக்குப் பிறகு இப்போ சண்டை தொடங்கி, பெட்ரோல் இறக்குமதி குறைந்து அது கட்டுப்பாடு ஆய்ச்சோ இல்லையோ, வண்டிக்காரர்களும் 'மறுமலர்ச்சி' அடைந்தார்கள். அவர்களுக்கு நல்ல காலம் பிறந்தது. வயலுக்கு எரு இழுத்த மாடுகளும் வண்டிகளும் சலங்கைச் சத்தத்தோடே பெரிய றோட்டில் ஓட ஆரம்பித்தன. வடிவேலு நாயனக்காரரே வலியக் கூப்பிட்டு என்னிடம் கேட்டிருக்கும்போது நான் ஏன் சும்மா இருக்கப்போகிறேன். இருபது வருஷங்களுக்கு முன்னே வண்டி ஓட்டிய அந்த இனிய நாட்கள் திரும்பவும் ஒருமுறை என் சீவியத்தில் மீண்டும் கிட்டுமா என்று ஏங்கியிருந்த எனக்கு இது எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும் என்பது நான் சொல்லிக்கொள்ளக் கூடியதல்ல. 'கார்த்திகேசு, இந்த வருஷம் எனது மேளத்துக்கு நீதான் வண்டிக்காரன்' என்று வடிவேலு நாயனக்காரர் சொல்லிய வார்த்தைகள் எனக்குத் தேன்போல இனித்தன. பால் போன்ற வெண்ணிலவில் வெள்ளைவெளெரென்றிருக்கும் தெரு வழியே எனது வண்டி மறுபடியும் மேளம் ஏற்றிச் செல்வதை எண்ண எனக்கு ஆனந்தம் பொங்கியது. ஆனபோதிலும்.....' என்று கார்த்திகேசு சட்டென்று பேச்சை மழுப்பினான்.

'அது என்ன காத்தி அண்ணே?' என்று கேட்டேன்.

'ஒன்றுமில்லை, ஒரு சின்னச் சந்தேகம், தம்பி. இந்தச் சண்டை இருக்குதோ இல்லையோ, இது முடிந்த பிற்பாடு 'பெற்ரோல் கிட்ரோல்' எல்லாம் வந்து கார்கள் பழையபடி கறுப்பன் கதைதானாம், மெய்தானோ?'

இதைக் கேட்கும்போது அவனுடைய குரல் சோர்வடைந்து காணப்பட்டது.

'பயப்படாதே அண்ணே! அணுக்குண்டு கண்டுபிடித்திருக்கிறார்களாம்' என்றேன் நான். வேறு எதைச் சொல்ல?
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 12 Jan 2016 - 12:49

செல்வி ஏன் அழுகின்றாள்?வி.ஜீவகுமாரன்
 
எல்லாமே
 முடிந்து விட்டது.
இருந்த வீடு.....  வாழ்ந்த கிராமம்....  தெரிந்த முகங்கள்......  எல்லாம...... எல்லாமே....... தொலைந்து போய்விட்டது.
இப்பொழுது முழுக்க முழுக்க சனக்குவியல்கள் மத்தியில......  இரத்தவாடைகளுக்கும்......  இலையான்கள் மொய்க்கும் சிதழ்பிடித்த புண்களுக்கும்மத்தியில்......  யாராவது ஒரு சாப்பாட்டு பாசல் கொண்டு வந்து தருவார்களா என்றஏக்கத்துடன.....   புல்டோசர் கொண்டு இடித்துதறித்துஅடிவேர்க் கட்டைகள் நீட்டிக்கொண்டிருக்கும் அந்த காட்டுப் பிரதேசத்தில் போடப்பட்ட கூடாரத்துக்கு கனகமும்செல்வியும் வந்து ஆறு நாளச்சு.
வெயில் கொளுத்திக் கொண்டு இருந்ததுஎல்லாமே கனவு போல் இருந்ததுஇடம்மாறி இடம் மாறி ஒடிக்கொண்டு இருக்கும் பொழுது எதுவுமே தெரியவில்லை.
 'கிட்டவாக வந்திட்டாங்கள்ஓடுங்கோ!!', என்ற ஒன்றைத் தவிர எதுவுமேகேட்டிருக்கவில்லை
வீடுசந்தையடிகோயிலடி என்ற கிராமத்தின் எல்லை.  மட்டும் அறிந்துவைத்திருந்த சனங்களுக்கு...... எந்தப் பக்கத்தாலை போறம்?...... எந்த ஊருக்குள்போகின்றோம் என்ற எந்த விளக்கமும் இல்லாமல் துப்பாக்கி சத்தங்கள் குறைந்தபக்கங்களை மட்டும் நோக்கி அள்ளுப்பட்டு......  அள்ளுப்பட்ட......  இப்ப எல்லாம்கனவு போலை........
தவறிவிடாமல் இருப்பதற்காக சிவதம்புவும் கனகமும் செல்வியும் ஒருவரின்கையை ஒருவர் பிடித்துக் கொண்டுதான் வந்தார்கள்இருந்தால் போல்சிவதம்புவின் கை கனகத்தை இழுக்குமாப்போல் இருக்கு திரும்பி பார்த்தாள்.சிவசம்பு சரிந்து கொண்டிந்தார்காதடியில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.கண்கள் மூடாமல் திறந்தேயிருந்ததுகனகத்தினதும் செல்வியின் பெலத்தகுரலினான சத்தம் இந்த நெருசலில் யாருக்கும் கேட்கவில்லைபதிலாக நடுறோட்டில் இருந்து அழுதது பலருக்கு இடைஞ்சலாய் இருந்தது. 'றோட்டுக்கரையிலை இழுத்துக் கொண்டு போங்க........', யாரோ கூறியபடிசாமான்களால் நிறைந்த தனது சைக்கிளை தள்ளிக் கொண்டு விலத்திப் போனார்.
கனகமும் செல்வியும் சிவதம்புவை றோட்டின் கரைக்கு இழுத்து வந்தார்கள் -உடம்பு கனத்திருந்தது போல இருந்ததுகனகம் ஒலமிட்டு அழுதுகொண்டேயிருந்தாள் - செல்வி விறைத்தளவாய் பார்த்துக்  கொண்டேயிருந்தாள் -றோட்டால் போய் கொண்டு இருப்பவர்களுக்கு இது பத்தோடு பதினென்று.
 'ஒருவர் மட்டும் கிட்டவாக வந்து சந்தியிலை வந்திட்டான்கள் போலை கிடக்குகெதியாய் நடவுங்கோ', என எச்சரித்துப் போட்டு போனார்.
பிள்ளை அப்பாவை அந்தப் பள்ளத்துக்கை கிடத்துவம..... என்றபடி கனகமும்செல்வியுமாக சிவதம்புவை றோட்டுக்கு அருகேயிருந்த பள்ளத்துள்இறக்கினார்கள்கைகளாளும் காட்டுத் தடிகளாலும் மண்ணை வறுகிசிவதம்புவின் உடலை மூடினார்கள்கனகம் பொருமி பொருமி அழுதாள்.

'
நான் உன்னை விரும்பிக் கட்டினதாலை தானே உன்னைக் கழிச்சு வைச்சவை.சிலவேளை உனக்கு முதல் நான் போனால் நீ பிள்ளையையும் கூட்டிக்கொண்டுபோய் உன்ரை கொண்ணை ஆக்களின்ரை பகுதியோடை இரு', இரண்டுவருஷத்துக்கு முதல் செல்வி பெரியபிள்ளையான பொழுது வீட்டுத்தாழ்வாரத்தடியிலை இருந்து சிவதம்பு சொன்னது ஞாபகத்துக்கு வந்ததுகாசு,பணம்கௌரவம் எல்லாத்தையும் தேடி கனகத்தையும் செல்வியையும் ஒருகைபிடி உப்புக்காக கூட அயலட்டைக்கு அனுப்பாத சிவதம்பு. . .இப்போது அதுவாகிறோட்றோர மண்ணுக்குள் மண்ணாக. . . கனகத்தின் கைகளை வலுக்கட்டாயமாகபிடித்துப் கொண்டு செல்வி சனத்தோடை சனமாக முன்னேறினாள்.
நெடுகலும் சிவதம்பு சொல்லுவார் - நான் ஒரு ஆண்பிள்ளைச் சிங்கத்தை பெத்துவைச்சிருக்கிறன் எண்டுஅவளே தலைச்சான் பிள்ளையாக தாயைக்கூட்டிக்கொண்டு மீண்டும் சனத்தோடு சனமாக. . . சனக்கூட்டமோ முன்னே போகும்ஆட்டுக்குப் பின்னால் போகும் மந்தையாக. . . கனகம் நடைப்பிணமாகசெல்விக்குப் பின்னால்.
92இன் யாழ்ப்பாண இடம்பெயர்வின் பொழுது எங்கிருந்து வெளியேறினாலும்கிளிநொச்சியை அடைவதுதான் நோக்கமாய் இருந்ததுஇப்பொழுதோ எங்குபோய் அடைவது என்று தெரியாமல் சனம் அள்ளுப்பட்டுக் கொண்டு இருந்தார்கள் -குண்டு விழாத இடங்களைத் தேடிவன்னியில் இருந்து ஒரு தடவை செல்வி தாய்,தகப்பனுடன் நல்லூர்த் தேர்த்திருவிழாக்கு போன போது சனவெள்ளத்தைப் பார்த்துபிரமித்துப் போயிருந்தாள்அந்த சனக்கூட்டத்தில் தாய் அடியழித்துக்கும்பிடப்போன பொழுது தகப்பனையும் தவறவிட்டு பின் இரண்டு மூன்றுமணித்தியாலங்களுக்கு பின்னால் கண்டு பிடித்ததது நல்ல ஞாபகம் இருக்குது.இது பத்துமடங்கு நல்லூர்த் திருவிழாசுற்றி சுற்றித் தேடி வர இங்கு உள்வீதி,வெளிவீதி என்று ஏதும் இல்லைதவற விட்டால் அவ்வளவு தான்அதுவும் கனகம்இப்பொழுது இருக்கும் நிலையில். . . செல்விக்கு தன்னை நினைக்கவேஆச்சரியமாய் இருந்தது – தாய் அழுதளவில் பத்தில் ஒரு மடங்கு கூட தகப்பனுக்குபக்கத்தில் இருந்த தான் அழவில்லையே என்றுமரணங்களும். . .மரணபயங்களும்தன் உணர்வுகளைக் கூட மரக்கவைத்து விட்டதோ என்று எண்ணிப் பார்த்தாள்.ஊரில் என்றோ ஒரு மரணம் வர அதிகாலை சொல்லிச் செல்லும் இழவுச்செய்தியில் தொடங்க..... பாடை கட்டு...... மரம் தறிப்பு...... .கொழும்புபயணக்காரருக்கான காத்திருப்பு..... கிரியைகள்..... . பட்டினத்தார் பாடல்கள்......சுடலையடியில் எழும் சின்ன சின்ன சண்டைகள்..... எட்டுச் செலவுகள்...... காடாத்து..... அந்தியட்டி என சுமார் ஒரு மாதமாய் அட்டவணைப்படுத்தப்பட்டுநடக்கும் காரியங்களில் எந்த ஒன்றும் இன்றி....... காகம் கொத்திக் கொண்டுபோகும் வடையாக மனிதன் மறைந்து போகின்றான்.
இந்த ஒரு மாதத்துள் இப்படி எத்தனை?..... எத்தனைஏன் எதுக்கு என்று எவர்க்கும்சிந்திக்க அவகாசமும் இல்லை – அனுமதியும் இல்லை. . .ஓடுங்கோ. . .  ஓடுங்க.... .என்ற கட்டளையும் கட்டளைக்கு பணிதலும் தான். . .மக்கள் மக்களோடுஒடியபட.....  நேற்றுக்காலை தான் கொஞ்சம் பாதுகாப்பான இடத்துக்குவந்திருந்தார்கள் - இங்கு இனிக்குண்டு விழாது என்று அனைவரும் நம்பியபோதுஇவ்வளவு நாளும் மறந்திருந்த பசி தலை தூக்கியது...... தண்ணி விடாய்த்தது.....குளிக்காததால் உடம்பு பிசுபிசுத்தது...... ஆனாலும் குளித்தாலும் மாற்றுவதற்குசீலையோ சட்டையோ இருக்கவில்லைகனகத்திடம் உடுத்திருந்த சீலையைத்தவிரவும்செல்வியிடம் போட்டிருந்த சட்டையையும் தவிர எதுவுமே இல்லை –எதையுமே எடுத்துக் கொண்டு வர அவகாசம் இருக்கவில்லை – எடுத்து வந்தகாசும் வழிவழியே செலவாக கைகளில் இப்பொழுது இருக்கும் இரண்டொருநகைகள் தான் மிச்சம்இனி இதுகளை வித்துதான் ஏதாவது வேண்டவேணும். . .வெளிநாட்டிலை இருக்கிற ஆரிட்டையும் உதவி கேட்க வேணும்.
கனகத்தின்ரை ஆட்கள் கண ஆட்கள் வெளிநாட்டிலை தான் - சிவதம்புவைகட்டினதாலை விட்டுப் போன உறவுகள்.. . '.இனி அவையைத் தான் நாடவேணும்'
வாழ்வின் நிர்ப்பந்தங்கள் ரோஷ உணர்வுகளுள் தோற்றுக் கொண்டு இருந்ததுஎல்லாமே எங்களுக்குள் நாங்கள் போட்ட கதியால் வேலிகள் தான். . .   கொஞ்சம் அகலப்படுத்தவோ அல்லது ஆழப்படுத்தவோ எங்குமே இடமிருக்கவில்லை.கனகமும் சிவதம்புவும் வேறு வேறு சாதி கூட இல்லைஆனால் சிவதம்புவின்பேரன் ஒரு சிங்களத்தியை வந்திருந்ததும் 83 கலவரத்தின் பின் சிவதம்புவின்குடும்பம் வியாபாரத்திலும் இளைத்ததும் தான் அவர்கள் இளக்காரமாய் போய்விடகாரணமாகிவிட்டதுஇன்று அந்தக் கனகம் கைம்பெண் கனகமாக கையில் ஒருகுமர்ப்பிள்ளையுடன். . .
'சாப்பாட்டு பாசல் குடுக்கினம்', யாரோ சொல்லக் கேட்டு அரை உயிரும் குறைஉயிருமாய் அத்தனை பேரும் அடித்துப் பிடித்துக் கொண்டு கம்பி வேலிக்குகிட்டவாக ஓடுகிறார்கள் - சிலருக்கு முள்ளுக் கம்பிகள் கீறிவிட்டதுஆனால்பசியின் போராட்டத்தில் அதொரு பொருட்டல்லசெல்வியும் அந்தக் கூட்டத்துள்போய்ச் சிக்கிக் கொண்டாள். . .  எட்டியவரை கையை நீட்டினாள். . .   எப்படியோகையில் ஒரு பாசல் வந்து விழுந்தது.
'அம்மாக்கும் ஒரு பாசல் தாங்கோ'
'அப்பிடி எல்லாம் தர ஏலாதுஆளுக்கொரு பாசல் தான்'
செல்விக்கு கண்கள் கலங்கியதுஆனாலும் வேண்டிக் கொண்டு திரும்பினாள்
'
உப்பிடித்தான் வேண்டிக் கொண்டுபோய் உள்ளுக்கை விக்கினமாம்'
செல்விக்கு யாரோ பிரடியில் அடித்தது போல் இருந்ததுசாப்பாட்டு பாசலை தூக்கிமூஞ்சையில் எறிய வேணும் போல் இருந்தது – ஆனாலும் தாயை நினைத்துக்கொண்டாள்சுருண்டு கிடந்த தாயை எழுப்பி வற்புறுத்தி சாப்பிட வைத்தாள்.சிவசம்புவின் நினைவுகள் மேலே வந்து அவளை விம்ம வைத்தது.
'அழாதை அம்மாசெல்வி தேற்ற முயன்று தோற்றாள்.

'
பிள்ளை நீ சாப்பிடு'
தாய் சாப்பிட மறுத்த மிகுதிச் சாப்பாட்டை அவள் சாப்பிடத் தொடங்கினாள்.ஆனாலும் சாப்பாட்டு பாசல் தந்தவன் சொன்னது காதில் மீண்டும் கேட்கசாப்பாடே அருவருத்தது – அருவருப்பை அடக்கி கொண்டு சாப்பிடப் பார்த்தாள்முடியவில்லை. – தூக்கி வெளியில் போட்டுவிட்டு படுத்து விட்டாள்.
நேரம் நடுநிசியை தாண்டிக் கொண்டு இருந்தது. 'ஏதாவது மருந்தை தந்துஎன்னைக் கொண்டு விடுங்கோ', என்று வலியின் வேதனையில் ஒருவர் குழறிக்கொண்டு இருந்ததை தவிர அதிகமானோர் நன்கு தூங்கிக் கொண்டுஇருந்தார்கள்.
'கனகம் ஏன் நெடுக படுத்துக் கொண்டு இருக்கிறாய். . .  பிள்ளை அழுது கொண்டுஇருக்கிறாள். . .' சிவசம்பு வந்து எழுப்பியது போலிருக்க கனகம் திடுக்கிட்டுஎழும்பினாள்வியர்த்துக் கொட்டியதுதிரும்பி செல்வியைப் பார்த்தாள்.செல்வியைக் காணவில்லை.
கூடத்தினுள் இருந்த மற்றைய ஆட்களை மிதித்திடாதவாறு கவனமாக போகவேணும் என எழுந்த பொழுது செல்வி உள்ளே வந்து கொண்டிருந்தாள்.பாவாடையின் கீழ்ப்பகுதி கிழிக்கப்பட்டு  ங்கிக் கொண்டு இருந்தது இரவின்வெளிச்சத்திலும் நன்கு தெரிந்ததுகனகத்திற்கு 'திக்'கென்றது.
பக்கத்து கூடாரப் பையன் ஒருத்தன் செல்வியையே முதன்நாள் வைத்தகண்வாங்காது பார்த்துக் கொண்டிருந்ததையும்வந்த இடத்தில் ஏன் பிரச்சனைஎன்று தான் பார்த்தும் பார்க்காமலும் இருந்தது ஞாபகத்திற்கு வந்தது.

'
எங்கையடி போனனி. . .என்ன நடந்தது. . .' தாய் பதைபதைத்தாள்.
உஷ் என விரலால் காட்டினாள் - மற்றவர்கள் எழும்பி விடுவார்கள் என்றபதைபதைப்பில்ஆனால் கனகத்தினாள் மௌனமாயிருக்க முடியவில்லை.

'
சொல்லடி. . . இப்ப எனக்குத் தெரிய வேணும்என வெளியே இழுத்துக் கொண்டுபோனாள்.
மத்தியானம் தூக்கியெறிந்த சாப்பாட்டு பாசல் பகல் முழக்க வெயிலுக்குள்வெதுங்கி இருந்ததால் மணத்துக் கொண்டிருந்ததுஅந்த மணம் வேறு வயிற்றைப்பிரட்டியது.

'
என்ன நடந்தது. . .ஏன் பாவாடை கிழிஞ்சு கிடக்கு'
தாயைக் கட்டிக் கொண்டு அழத்தொடங்கினாள்கனகத்தின் பெத்த வயிறுதுடித்தது. . .

'
சொல்லடி பிள்ளை. . .சொல்லடி பிள்ளை. . .என்ன நடந்தது. . . யாரும். . .ஏதும். . . .'

'
இல்லையம்மா. . . தீட்டு வந்திட்டுது. . .அதுதான் பாவடைத் துணியை. . .'கனகம்செல்வியை இறுகக் கட்டிக் கொண்டாள்செல்வி பலமாக விக்கி விக்கி அழத்தொடங்கினாள்.

'
ஏனக்கா பிள்ளை அழுகுது'
தூக்கம் கலைந்த ஒருத்தி கூடாரத்துள் இருந்தவாறு கேட்டாள். 'பிள்ளைக்குதேப்பன்ரை ஞாபகம் வந்திட்டுதுஇப்போ இன்னும் பலமாக செல்விஅழத்தொடங்கினாள்.
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 12 Jan 2016 - 12:54

வெளியில் எல்லாம் பேசலாம்

அகில்

----------------நாட்டு நிலைமை காரணமாக சோபை இழந்து காணப்பட்ட இலக்கிய விழாக்களும், நூல் வெளியீடுகளும் மீண்டும் களைகட்டத் தொடங்கியிருந்தன. இணையத்தளம் ஒன்றில் வெளியாகியிருந்த சிறுகதை ஒன்றில் மூழ்கியிருந்த என்னை மனைவியின் குரல் உலுக்கியது.

'என்னப்பா இருக்குறீங்க. நூல் வெளியீட்டுக்கு போகவேணும் என்டனீங்கள்..... என்ன வெளிக்கிட இல்லையோ?''மறந்தே போயிட்டனப்பா. நல்ல காலம் ஞாபகப்படுத்தினீர்' என்றபடி சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தேன்.'இன்னும் அரை மணித்தியாலம்தான் இருக்கு......' என்னுள் நினைவுகள் ஓட அவசரமானேன்.'சரி நான் போயிற்றுவாரன் சுதா' என்று புறப்படத் தயாரானபோது சூடான தேனீர்க் கோப்பையை என் முன் நீட்டினாள் அவள்.'இவ்வளவு நேரமும் இருந்துட்டு இப்பதான் இதக்கொண்டு வாரியோ' அவசரமாய் ஒரு மிடறு தேனீரை உறிஞ்சியபடி அவளிடம் கேட்டேன்.'ஒருத்தருக்கும் தங்களின்ர பிழையள் தெரியாது. மற்றவையளின்ர குறையளைத் தான் தூக்கிவச்சு கதைப்பீனம். முதல்ல தங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனையளைத் தீர்க்க வேணும். பிறகு மற்றவையப் பற்றி, அவையளின்ர பிழையளைப் பற்றி பேச வெளிக்கிட வேணும்' என்றாள் குறும்பாக என்னைப் பார்த்துச் சிரித்தபடி.சூடான தேனீர் என் உதட்டை பதம் பார்க்க 'இந்தாப்பா நீயே வச்சுக்குடி' என்றபடி எழுந்து நடந்தேன்.காரை நான் நெருங்கியபோது, சுதா அவசரமாக ஓடிவந்தாள். 'வரேக்கை அந்த புரோக்கரிட்டையும் ஒருக்கா போயிட்டு வாங்களேன்.'

'ம்... ம்...' தலையை அசைத்தபடி காரைப் பின்னுக்கு எடுத்து, பிரதான பாதையை நோக்கிச் செலுத்தினேன்.வெளியில் வெதர் நன்றாக இருந்தது. 'இந்தமுறை ஸ்னோவும் அவ்வளவாக் கொட்டுறதாய் காணயில்ல. ஸ்னோ கொட்டியிருந்தா மனுசர் இப்பிடி கார் ஓட ஏலுமே?'.  பெருந்தெருவில் கார் சுகமாகப் பயணித்தது.விழா மண்டபத்துக்குள் நான் நுளையவும் கூட்டம் தொடங்கவும் சரியாக இருந்தது. புலம்பெயர் நாட்டில் சதா வேலை வேலையென்று ஓடிக்கொண்டிருக்கிற என் போன்ற இலக்கியப் பசிகொண்டவர்களுக்கு இந்த நூல்வெளியீட்டு நிகழ்வுகள்  தான் கொஞ்சம் ஆறுதல்.வரவேற்புரை, தலைமையுரை எனத்தொடர்ந்து எனக்குப் பிடித்த நூலாய்வு வந்த போது மனம் ஒன்றி அதைக் கேட்பதில் கவனத்தைச் செலுத்தினேன்.அந்தப் பேச்சாளர், நூலைப்பற்றி சுருக்கமாகக் கூறிவிட்டு, மிகுதி அரை மணித்தியாலங்களுக்கும் மேலாக யாழ்ப்பாண உயர்சாதியினர் எப்படி அடிமட்டத்து மக்களை ஒதுக்கினார்கள் என்பது பற்றியும், தீண்டாமை, ஆலயப்பிரவேசம் பற்றியெல்லாம் உணர்வு பூர்வமாக சூடுபறக்கப் பேசினார். பின்னர் அவரைத்தொடர்ந்து பேச வந்த மற்ற பேச்சாளரும் அந்தப் பிரச்சனையைப் பற்றியே தொடர்ந்து பேசினார். எனக்கு சகிக்க முடியாமல் இருந்தது.'இதுக்கெல்லாம் மூலகாரணம் வெள்ளாளரின்ர சாதிப்பார்வைதான். குறைஞ்ச சாதியென்டு எங்களை ஒதுக்கி வைச்சவையள். கோயிலுக்குள்ள நாங்க போகக்கூடாது. பொதுக் கிணத்தில தண்ணி அள்ளக்கூடாது.......' ஒருவர் தன் முகம் சிவக்கப் பேசிக்கொண்டே போனார்.'இவங்கள் விசரங்கள். பழைய கதையள இழுத்து வைச்சு கதைச்சுக்கொண்டு இருப்பான்கள். இன்னும் எவ்வளவு காலத்துக்கு உந்தக் கதையளை வச்சு அரைக்கப்போகீனம்? மேடை கிடைச்சால் காணும்.....!!'மேற்கொண்டு தொடர்ந்து அவ்விழாவில் இருக்க முடியாமல் மெல்ல நடந்து  மண்டபத்தை விட்டு வெளியேறினேன்.'இங்க இப்ப பிள்ளையள் உந்த சாதியளையா பாக்குதுகள்? என்ன படிச்சிருக்கிறான்? என்ன வேலை செய்யுறான்? தங்களுன்ர பழக்கவழக்கத்தோட இவன் ஒத்துவருவானா? இதைத்தானே அதுகள் பாக்குதுகள். தங்களுக்கு பிடிச்சுதென்றால் கலியாணம். இல்லாட்டில் வேறயொன்டு.''இப்ப அங்க தொண்டை கிழியக் கத்துறவரின்ர மகன் விரும்பி முடிச்ச பெட்டையும் நல்ல சாதிப் பெட்டைதானே.......'பலதையும் நினைத்து அலுத்துக்கொண்ட மனம் இன்று செய்யவேண்டிய இரண்டாவது வேலையைப்பற்றி சிந்திக்கத் தொடங்கியது.

'புரோக்கர் வீட்டை போக வேணும்.'ஸ்டியரிங்கை ஒரு கையால் பிடித்துக்கொண்டு காரை மெதுவாகச் செலுத்தியபடியே எட்;டி அடுத்த சீட்டில் கிடந்த கவரை எடுத்துப்பிரித்தேன். மகள் குமுதாவின் படத்தோடு ஒட்டியிருந்த லாவண்யாவின் படம் என் மடியில் விழுந்தது.அண்ணர் குடும்பம் லண்டனில. கனடாவிலயோ, சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மன் பக்கமோ லாவண்யாவுக்கு ஏத்த மாப்பிள்ளை சந்திச்சா பார்க்கச் சொன்னவர்.'அண்ணர் லாவண்யாவ பொத்திப் பொத்தி வளர்த்தவர். சரியான கண்டிப்பு. படிப்பும், வீடும் என்று அவளும் வளர்ந்திட்டாள். வேற விசயங்களில அவளுக்கு ஆர்வம் இருக்கேல்ல. இப்ப அவளுக்கு மாப்பிள்ளை தேடி களைச்சுப் போயிட்டார். அவளும் தன்ர படிப்புக்கும், வேலைக்கும் ஏத்தமாதிரி வெளிநாட்டில படிச்சு, நல்ல வேலையில இருக்கிற மாப்பிள்ளை தான் வேணும் என்டு ஒற்றைக்காலில நிக்குறாள்'கவருக்குள் இருவரது சாதகங்களும் இருப்பதை ஒரு கையின் உதவியாலேயே உறுதிசெய்துவிட்டு படங்களை வைத்து மறுபடியும் பக்கத்து சீட்டில் வைத்துக்கொண்டேன்.எனக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த கறுப்பனுக்கு ஒரு கையால் காரை மெதுவாக செலுத்தி வரும் எனது செயல் கடுப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இரண்டு, மூன்று தடவைகள் 'ஹார்'னை அழுத்தி ஒலியெழுப்பிப் பார்த்தான். நான் கருமமே கண்ணாக இருந்தேன். அடுத்த லைன் வழியாக எனது காரை முந்திக்கொண்டு வந்து, மீண்டும் என் காருக்கு முன்னால் தன் வாகனத்தை விட்டு மெதுவாக ஓட்டி எனக்கு எரிச்சல் மூட்டி என்னைப் பழிவாங்கினான். தன் கார் கண்ணாடிவழியாக என்னைப் பார்த்து விரலை உயர்த்தி அசிங்கமாகத் திட்டினான். நான் மன்னிப்புக்கோறும் முகமாக கையை உயர்த்தி “Sorry”  என்றும் அவன் கடுப்பாய் இருந்தான். ஏற்கனவே பல தடவைகள் புரோக்கரிடம் போய் வந்ததால், 'அப்பொயிண்மன்ட்' ஒன்றும் எடுக்கவில்லை. வந்துவிட்டேன். அந்த நேரம் பார்த்து கைத்தொலைபேசி கிணுகிணுத்தது.  அடுத்த கணம் தானே ஓய்ந்துபோனது.அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தேன். சில நிமிடங்களில் கதவு திறந்தது. கதவை அடைத்துக்கொண்டு வெற்றிலை போட்டுச் சிவந்த தன் பற்கள் தெரியச் சிரித்தாள் புரோக்கர் அம்மா.'என்ன திடீரென்று வந்து நிக்கிறியள்.' என்று குற்றம்சாட்டிய புரோக்கர் அம்மையார், அடுத்தநொடியே, 'கொஞ்சம் இருங்கோ. இவையள அனுப்பிப்போட்டுத்தான்....' உள்ளே ஏற்கனவே சிலர் வந்திருப்பதைத் தெரிவித்தார்.'ஓகே... ஓகே.... பிரச்சனையில்லை.....'  என்றபடி சற்று தள்ளிக் கிடந்த கதிரையில் போய் அமர்ந்தேன்.விறாந்தை முழுவதும் சிறுவர்களது விளையாட்டுப் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. புரோக்கர் அம்மா பகுதிநேர வேலையாக 'பேபி சிட்டிங்' செய்வது நானறிந்ததே. மூலையில் கிடந்த மேசைமீது கோப்புக்கள் வரிசையாக அடுக்கப்பட்டு இருந்தன. நெற்றியில் ஏற்றியிருந்த தன் மூக்குக்கண்ணாடியை கண்களில் சரியாக பொருத்திக்கொண்டு கையில் இருந்த சாதகத்தை புறட்டத் தொடங்கினார் புரோக்கர்.மேசைக்கு முன்னால் போடப்பட்டிருந்த கதிரைகள் இரண்டிலும் ஆணும் பெண்ணுமாய் இரண்டு தடித்த உருவங்கள். கணவன் மனைவியாய் இருக்கவேண்டும். சில புகைப்படங்களை கையில் வைத்திருந்த அந்தப்பெண் அவற்றை ஒவ்வொன்றாக கணவனுக்குக் காட்டி, அவன் காதுகளுக்குள் ஏதோ கிசுகிசுத்துக்கொண்டிருந்தாள். அவர்கள் பார்வை ஒருமுறை என்மீது படிந்து திரும்பியது.திரும்பவும் கைத்தொலைபேசி சிணுங்கியது. நிமிர்ந்து பார்த்த புரோக்கரிடம்  சைகை காட்டிவிட்டு கைத்தொலைபேசியின் பட்டனை  அழுத்தியபடி கதவைத் திறந்துகொண்டு  வெளியே வந்தேன். எதிர்முனையில் அண்ணர்தான்.'இப்ப உங்களைத் தான் நினைச்சுக்கொண்டு இருக்கிறன். நீங்க எடுக்குறீங்க''நீ எங்க நிக்கிறாய்? உன்னோட ஒரு முக்கியமான விசயம் கதைக்க வேணும்'

அண்ணரின் குரலில் ஒருவித பதற்றம் தெரிந்தது.'நான் இங்க புரேக்கரிட்ட வந்தனான். லாவண்யாவுக்கு ஒரு இடம் பொருந்தி வந்திருக்கு என்று புரோக்கர் 'மெசேஜ்' விட்டிருந்தா. அதுதான் பார்ப்பம் என்டு வந்தனான்...'எதிர்முனையில் நிலவிய அமைதி என்னை சங்கடப்படுத்தியது.'என்ன அண்ணெ? ஏதோ சொல்ல வேணும் என்டு சொன்னனீங்கள்........? என்ன விசயம்.....?''அது..... அது வந்து....''என்ன அண்ணெ....? சொல்லுங்க...?''அவளுக்கு.......  அவளுக்கு கலியாணம் பேசத் தேவையில்லை. இங்க எல்லாம் சரிவந்துட்டுது....'தொண்டைக்குள் ஏதோ சிக்கினாற்போல திக்கித்திணறிப் பேசினார் அண்ணர். எனக்குள் ஆயிரம் சிந்தனைகள் ஓடியது.'நேற்றுக்கூட அண்ணரோட கதைச்சனான் தானே. அப்ப ஒன்டும் சொல்லேல்ல. என்ன இப்ப திடுதிப்பென்று......?''ஆ..... சரிவந்துட்டுதோ.....!!''...........' எதிர் முனையில் மௌனம்.'ஆரு பெடியன்.......? விசாரிச்சனீங்களே.....? எப்பிடி சம்மந்தம் சரிவந்துது.....?' அடுக்கடுக்காய் கேள்விகளை அடுக்கினேன். சிறிது நேர தயக்கத்தின் பின் அண்ணர் பேசினார்.'அதெல்லாம் எனக்குத் தெரியாது, ஆனா அவளோட வேலை செய்கிற பெடியனாம். அவள் நேற்றுப் பின்னேரம் தாயோட சொல்லியிருக்கிறாள். மனுசி இரவு என்னோட இதைப் பற்றி சொல்லேக்க என்ர தலையில இடி விழுந்திட்டுது'எனக்கு பேசுவதற்கு வார்த்தை ஒன்றும் வரவில்லை. என்ர தலையிலும் இடிதான். மௌனமாயிருந்தேன். ஏதோ புரிவதுபோல இருந்தது.'அவளின்ர குணம் தான் உனக்குத் தெரியுமே. நானும் எவ்வளவோ கதைச்சுப்பார்த்தன். எங்களுக்கு உது சரிவராதென்டு சொன்னன். அவள் பிடிவாதக்காரி. எனக்கு என்ன செய்யுறதென்டு தெரியேல்ல''ம்......''ஆரு என்ன என்று விசாரிச்சன். ஊரில யாழ்ப்பாணம் தான் சொந்த இடமாம். கோண்டாவில் பக்கம், அங்காலை....... வேறயாக்கள் போல இருக்குது...... எனக்கு என்ன செய்யுறதெண்டு தெரியேல்ல. அவள் என்ன சொன்னாலும் கேட்கிறாள் இல்லை. பெடியன் இவளை மாதிரித்தான் அஞ்சு வயதில லண்டனுக்கு வந்தவனாம். யூனிவேர்சிட்டி முடிச்சிட்டு, இவள் வேலை செய்யுற இடத்திலதான் வேலைசெய்யுறானாம்.' கவலைதோய்ந்த குரலில் சொல்லிக்கொண்டு போனார் அண்ணர்.'ஏதோ தமிழ்ப்பெடியன் என்ற விதத்தில் எனக்கு ஆறுதல். அவ்வளவுதான்' என்ற அண்ணர் மீண்டும் மௌனமானார்.'சரியப்ப....' என்றபடி தொடர்பை துண்டித்துக்கொண்டார்;.அவற்ர மனம் எனக்கு நல்லாத் தெரியும். எத்தனையோ விசயங்களை கொட்டித்தீர்க்க அந்தரப்பட்டாலும் ஒன்றும் கதைக்க ஏலாமல் மனதை கல்லாக்கிக்கொண்டு விசயத்தை மட்டும் சொல்லிப்போட்டு போனை 'கட்' பண்ணீட்டார். அண்ணா இந்த விசயங்களில் லேசில் விட்டுக்கொடுக்காதவர். ஊரில எத்தினை பேரோட பிரச்சனைப்பட்டவர்.ஏன் இப்ப இருபத்தைஞ்சு, முப்பது வருஷமாகியும் ஊரில ஓடிப்போன கடைசித் தங்கச்சி விஜியோட அண்ணர் இன்னும் கொண்டாட்டம் இல்லையே. போன வருஷம் சிலோனுக்கு போனபோதும், அம்மா எவ்வளவு கெஞ்சியும் அவளைப் பார்க்க மாட்டன் என்டு பிடிவாதமா இருந்திட்டார்.'இங்க பிள்ளையள் விரும்பீட்டுதுகள் என்றால் பிறகு நாங்க ஒன்றும் கதைக்க ஏலாது. அதுகள் சாதியென்றால் என்ன என்டு கேக்குதுகள். அதுக்கு என்ன பதில் சொல்லுறது.....?' என் மனம் உள்ள நிலவரத்தை அலசி ஆராய்ந்தது.இரண்டு புறாக்கள் என்னை அலட்சியப்படுத்தியபடி அருகில் வந்து நிலத்தில் எதையோ பொறுக்கிக்கொண்டிருந்தன. கையை மெதுவாக உயர்த்த விருட்டென்று எழுந்து பறந்த அந்த இரண்டு புறாக்களும்; இரண்டு வீடுகளுக்கு அப்பால் நிலத்தில் உலவியபடி மறுபடியும் எதையோ பொறுக்கத் தொடங்கின.நேரத்தைப் போலவே என் சிந்தனைகளும் கட்டுக்கடங்காமல் ஓடியது. வெளியில் நன்றாக இருள் கவ்விக்கொண்டு வந்தது. லேசான குளிரை அப்போதுதான் என் உடல் உணரத்தொடங்கியது. வந்த காரியத்தை தொடரமுடியாமையால் வீட்டுக்குத் திரும்ப உத்தேசித்தேன்.பொக்கற்றுக்குள் கையை நுளைத்தபோதுதான் தெரிந்தது கார்ச்சாவியை உள்ளேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். மறுபடியும் கதவைத் திறந்துகொண்டு வீட்டினுள் நுளைந்தேன்.என் மனம் ஒரு நிலையில் இல்லை. உள்ளே காரசாரமாக பேச்சுக்கள் நடந்துகொண்டிருந்தது. என்னைக் கண்டதும் குரல்கள் சற்று அடங்கின. மெல்லிய குரலில் பேச்சுத்தொடர்ந்தது.'நான் நாளைக்கு வாரன்' புரோக்கரிடம் சைகை காட்டி விட்டு நான் அமர்ந்த சோபாவில் கார்ச்சாவியைத் தேடினேன். 'சரி'யென்று தலையசைத்த புரோக்கரும் அவர்களுடன் பேச்சைத் தொடர்ந்தார். அந்தப் பெண்ணின் குரல் ஓங்கியொலித்தது. 'இஞ்ச பாருங்க, நாங்கள் ஆர் ஆக்களென்டு தெரியும் தானே. நாங்கள் மேலோங்கி கரையார், நீங்க எங்கட பிள்ளைக்கு...... எங்கட ஆக்களுக்க பாருங்க. இல்லையென்றால், வெள்ளாளர் அல்லது பிரமணச் சாதியில என்றாலும் எங்களுக்கு பிரச்சனையில்லை. ஆனால் கரையார் மட்டும் வேண்டாம்'காலிலே பாதணியை மாட்டிக்கொண்டு நின்ற நான் ஒருகணம் திடுக்குற்று திரும்பிப் பார்த்தேன். என் உதடுகளில் என்னையும் அறியாமல் ஒரு ஏளனப் புன்முறுவல் படர்ந்தது.நிதானமாக படிகளில் இறங்கி நடந்தேன். என் செவிகளில் மனைவி புறப்படும்போது சொன்ன வாசகங்கள் ஞாபகம் வந்தன.'ஒருத்தருக்கும் தங்களின்ர பிழையள் தெரியாது. மற்றவையளின்ர குறையளைத் தான் தூக்கிவச்சு கதைப்பீனம். முதல்ல தங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனையளைத் தீர்க்க வேணும். பிறகு மற்றவையப் பற்றி, அவையளின்ர பிழையளைப் பற்றி பேச வெளிக்கிட வேணும்'.

avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: ஈழத்து சிறுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum