சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பசங்க 2 - ஒரு பார்வை

Go down

Sticky பசங்க 2 - ஒரு பார்வை

Post by சே.குமார் on Thu 31 Dec 2015 - 17:27

து படத்திற்கான விமர்சனம் அல்ல... ஒரு அழகான, அருமையான... தங்கள் குழந்தைகள் படுத்துகிறார்கள் என்று சொல்லும் பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் குறித்தான என் எண்ணத்தின் வெளிப்பாடு மட்டுமே என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன்.


இந்தக் கதையை எடுத்து அதை கொஞ்சமும் தொய்வில்லாமல், அறிவுரை சொல்லுகிறேன் பேர்வழி என்று ஆவணப்படம் போல் ஆக்காமல் மிகத் தெளிவாக, அழகாக, ஒரு அருமையான படமாகக் கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ் அவர்களுக்கும் தயாரித்த சூர்யா அவர்களுக்கும் முதலில் எனது வாழ்த்துக்கள்.

கவின், நயனா போன்ற குழந்தைகளை இப்போது எல்லாருடைய வீட்டிலும் பார்க்கலாம். கேள்வி மேல் கேள்வி கேட்கும் குழந்தைகள் இப்போ நிறைய இருக்கிறார்கள். இவன் எங்கிட்டே கேள்வியே கேட்டுக் கொல்லுறான் என்று புலம்புவதும் ஒரிடத்தில் நிற்க மாட்டேங்கிறான்... ஆடிக்கிட்டே இருக்கான்... எதையாவது நோண்டிக்கிட்டே இருக்கான் என்று கத்துவதும் இன்றைய பெற்றோர்களில் பெரும்பாலோனரின் செயலாகத்தான் இருக்கிறது. ஏன் அப்படிப்பட்ட பெற்றோர்களில் நாமும் ஒருவராகத்தான் இருக்கிறோம் என்று சொல்வதில் தவறொன்றும் இல்லையே.

கவினுக்கு நடனம் பிடிக்கும், நயனாவுக்கோ புனைவுலகில் சஞ்சரித்து கதைகள் சொல்லப் பிடிக்கும்.  இந்த இரண்டு குழந்தைகளுக்கும் கட்டுப்பாடுகள் நிறைந்த பள்ளிகளுக்கும் ஒத்துப் போகவில்லை. இவர்கள் இருவரும் பெற்றவர்கள் முதல் பள்ளி ஆசிரியர்கள் வரை கேள்விகளைக் கேட்டு கேட்டு அவர்களை வெறுப்பேற்றுகிறார்கள். மேலும் இவர்களுக்குப் பிடித்ததை மட்டுமே ஈடுபாட்டோடு செய்கிறார்கள். இவர்களால் இவர்கள் பெற்றோர்கள் படும்பாடு சொல்லி மாளாது.

இவர்களின் செயல்களால் ஒவ்வொரு பள்ளியிலும் பிரச்சனையாகி மாற்றுச் சான்றிதழைக் கொடுத்து விடுகிறார்கள். குழந்தைகளில் பெற்றோர் சொல்வது போல் மாற்றுச் சான்றிதழை மட்டும் கொடுக்காமல் அதனோடு சேர்த்து அந்த வியாதி, இந்த வியாதி என வியாதிகளையும் சேர்த்து சொல்லி அனுப்பி விடுகிறார்கள். இந்த நிலையில் ஒருவரும் ஒரே பள்ளியில் சேர்க்கப்பட்டு... ஒரே குடியிருப்பிலும் தங்குகிறார்கள். அங்கு இவர்கள் அடிக்கும் லூட்டியும் பள்ளிக்கூடத்தில் அடிக்கும் லூட்டியும் கலகல.


ஒரு கட்டத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை வைத்து மேய்க்க முடியாமல் ஹாஸ்டலில் கொண்டு போய் விட, குழந்தைகள் இனி தப்புச் செய்ய மாட்டோம் என்று அலறும்போது உண்மையில் வலிக்கிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து வந்தார்களா..? திருந்தினார்களா...? அவர்களுக்குப் பிடித்ததை செய்தார்களா...? என்பதை எல்லாம் மிக அழகான திரைக்கதை நகர்த்தலுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

சோட்டா பீம் பாடல் குழந்தைகளைக் கவரும்.  இன்றைய பள்ளிக் கல்வி முறை, தனியார் பள்ளிகளின் பணத்தாசை, பெற்றோரின் தனியார் பள்ளி மோகம் என எல்லாவற்றையும் பேசியிருக்கிறது படம். பிள்ளைகளைச் சேர்க்க அப்ளிகேசன் வாங்குவதற்காக காத்திருக்கும் பெற்றோரும், அதில் அரசுப் பள்ளி ஆசிரியர் நிற்பதும் நடைமுறை உண்மை. சென்னையில் இருக்கும் போது டிவிஏ பள்ளியில் அப்ளிகேசன் வாங்க முதல் நாள் மாலையில் இருந்தே வரிசையில் நிற்பார்கள். என் நண்பனும் அவனின் மனைவியும் முதல் நாள் முதல் அடுத்த நாள் வரை வரிசையில் நின்றும் இருவரும் இந்தப் பணி பார்க்க வேண்டும்... இத்தனை கிலோ மீட்டருக்குள் வீடு இருக்க வேண்டும் என்றும் சொல்லி அப்ளிகேசன் கொடுக்கவில்லை. இது நான் கண்ணால் பார்த்த உண்மை. இரவெல்லாம் பணியில் கிடந்து உறங்கி காத்திருந்த பெற்றோரைப் பார்க்கும் போது சிரிப்பைவிட கடுப்பே வந்தது.

சூர்யா... துறுதுறுவென தங்களுக்கென்று ஒரு உலகம் ஏற்படுத்தி அதில் சஞ்சாரித்து சந்தோஷப்படும் குழந்தைகளின் பெற்றோருக்கு அறிவுரை சொல்வதோடு அந்தக் குழந்தைகளுக்கு வித்தியாசமான டிரிட்மெண்ட் கொடுக்கும் மருத்துவராக வருகிறார். அளவான நடிப்பு... அவரின் மனைவியாக வரும் அமலா பால், குழந்தைகளின் மனம் அறிந்த ஆசிரியையாக வருகிறார். அழகாவும் இருக்கிறார்... நல்லாவும் நடித்திருக்கிறார்.

வசனங்கள் எல்லாமே அருமை... இதில் முத்துநிலவன் ஐயாவின் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே என்ற புத்தகத்தின் சில கருத்துக்களையும் ஐயாவின் அனுமதியுடன் இயக்குநர் பயன்படுத்தி இருப்பதாக ஐயா தன்னோட தளத்தில் பசங்க குறித்து எழுதிய பதிவில் எழுதியிருக்கிறார். படத்தின் இசை படத்தோடு ஒன்றிப் போகிறது.


'பசங்க கெட்ட வார்த்தை பேசுவதில்லை... 
கேட்ட வார்த்தைகளையே பேசுகிறார்கள்.'

'ஏம்ப்பா... எங்க ஸ்கூலுக்கும் அந்தக் ஸ்கூலுக்கும் என்ன வித்தியாசம்..? 
அங்க படிக்கிறவங்க தமிழ்ல கெட்ட வார்த்தை பேசுவாங்க... இங்க படிக்கிறவங்க இங்கிலீஸ்ல கெட்ட வார்த்தை பேசுவாங்க'

'எப்படி மாமா இருக்கு பிரேக் பாஸ்ட்...
இங்க பாரும்மா  சமைச்சிக்கிட்டே இரு... நான் சாப்பிட்டுக்கிட்டே இருக்கேன்... என்னைக்கு நல்லா இருக்கோ அன்னைக்கு சொல்றேன்...
உனக்கு எப்படிடா இருக்கு?
சூப்பர் அம்மா
நீங்க நல்லாயில்லைன்னு சொன்னீங்க அவன் நல்லாயிருக்குங்கிறான்...
டேய்
சும்மா இருங்க டாடி உங்களை முறைக்கிறாங்க... நான் சொன்னா அடிச்சாலும் பரவாயில்லை... கடிக்கிறாங்க...'

'நம்ம காலத்துல ஒயின்ஷாப்பை தனியார் நடத்துனாங்க... 
பள்ளிக்கூடத்தை அரசாங்கம் நடத்துச்சு... 
ஆனா இன்னைக்கு 
ஒயின்ஷாப்பை அரசாங்கம் நடத்துது... 
பள்ளிக்கூடத்தை தனியார் நடத்துறாங்க...'

'நாங்க ஸ்கூலை நம்புறவங்க இல்லை 
பெத்த பிள்ளைங்களை நம்புறவங்க...'

'ஒவ்வொரு ஸ்கூல்லயும் டிசியோட சேர்த்து அவனுக்கு ஒரு நோயையும் கொடுத்து விடுறாங்க... போதும் மேடம்'

'வேணாம் வித்யா...
பையனா இருந்தா...?
யாரா இருந்தாலும் வேண்டாம்... 
ஒண்ணை வச்சிக்கிட்டே நம்மால மேய்க்க முடியலை...'

'ஏழரைன்னா என்னப்பா?
அது ஒண்ணும் இல்லைப்பா... இனி எழரை வருசத்துக்கு அப்பாவுக்கும் அம்மாவுக்கும்தான்  டவுசர் கிழிகிழியின்னு கிழியப்போகுது...
அப்ப என் டவுசர் கிழியாதுல்ல'

'எதுக்குப்பா எல்லாரும் வரிசையில நிக்கிறாங்க.. வாங்கப்பா நாம் வேற ஸ்கூலுக்குப் போகலாம்.
இதுதான் இருக்கதுலயே பெஸ்ட் ஸ்கூல்... எல்லாரும் புள்ளைங்க பர்ஸ்ட் மார்க் வாங்கணுமின்னு ஆசை... எனக்கும்தான்
இருக்கது ஒரு பர்ஸ்ட் மார்க்தானேப்பா... அப்புறம் எப்படி எல்லாருக்கும் கிடைக்கும்' 

இப்படி இன்னும் நிறைய.... நிறைய வசனங்கள் நச்சென....


இந்த நயனாவும் கவினும் கலந்த கலவைதான் எங்க விஷால்... இவனை முதலில் ஆஸ்டல்ல கொண்டு போய் விடணும் என்று சொல்லும் என் மனைவி, சிரித்தே மழுப்பும் நான்... இப்படியாகத்தான் எங்கள் வாழ்க்கை நகர்கிறது. என் மனைவி இன்று படம் பார்த்துவிட்டு சொன்ன வார்த்தை 'அப்படியே நம்ம விஷாலை திரையில் பார்க்கிற மாதிரி இருந்தது' என்பதுதான். ஆன எங்க ஹீரோ அவங்க அம்மாக்கிட்ட என்ன சொன்னாராம் தெரியுமா..? 'ஆஸ்டல்ல கொண்டு போய் விட்டோடனே அழுகை வந்துருச்சி.. அப்புறம் பேய் கதை சொன்னாங்களா நானும் சிரிச்சிட்டேன்' என்பதே மாலையில் போனில் சொல்லிச் சிரித்தார்.

நயனா(வைஷ்ணவி)வின் பெற்றோராக கார்த்திக் - பிந்து மாதவி, கவின்(நிஷேஷ்) பெற்றோராக முனீஸ்காந்த் -வித்யா இவர்கள் நால்வரும் நடித்திருக்கிறார்கள் என்பதைவிட சேட்டை செய்யும் அந்தக் குழந்தைகளோடுடன் போராடும் வாழ்க்கையை அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள். திருட்டுப் பழக்கம் உள்ள முனீஸ்காந்த் மகனின் கடிகாரம் உள்பட சின்ன சின்ன பொருட்களை சுடுவதும் அதை விட முடியாமல் தவிப்பதும் கலக்கல். சமுத்திரக்கனி ஒரே சீனில் வந்தாலும் பேசும் வசனங்கள் எல்லாமே நெத்தியடி.

அரோவ்கெரோலியின் இசையும் பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவும் அருமை... குழந்தைகளை வைத்து தனியார் பள்ளிக்கூடங்கள் செய்யும் கல்வி வியாபரத்தை மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார். ஒரு சூப்பர் ஹீரோவையும் அமலா பால் போன்ற நடிகையையும் வைத்துக் கொண்டு குழந்தைகள் உலகத்துக்குள் வாழ்ந்து காட்டுவது என்பதும் சாதாரண வேலையில்லை... அதை பாண்டிராஜ் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். சிம்புவிடன் இது நம்ம ஆளு என்று மாட்டிக் கொண்டு தவிக்கும் இயக்குநர் இது போன்ற படங்களை எடுக்கும் இயக்குநர்கள் இல்லாத குறையை இன்னும் பல படங்கள் எடுத்து தீர்த்து திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கலாம்.


மொத்தத்தில் பசங்க 2 குழந்தைகளுக்கான படம் அல்ல... இது பெற்றோர்களுக்கான பாடம்.
-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: பசங்க 2 - ஒரு பார்வை

Post by பானுஷபானா on Sat 2 Jan 2016 - 14:43

மொபைல என் பிள்ளைகள் பார்த்துட்டு நல்லா இருக்குனு சொல்ராங்க.... கண்டிப்பா நேரம் கிடைக்கும்போது பார்க்கனும் ...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பசங்க 2 - ஒரு பார்வை

Post by சே.குமார் on Sat 2 Jan 2016 - 16:27

பானுஷபானா wrote:மொபைல என் பிள்ளைகள் பார்த்துட்டு நல்லா இருக்குனு சொல்ராங்க.... கண்டிப்பா நேரம் கிடைக்கும்போது பார்க்கனும் ...
பாருங்க அக்கா....
பெற்றோருக்கும் பாடம்...
வசனங்கள் நச்...
அப்ப அப்ப டாகுமெண்டரி மாதிரி தெரிந்தாலும் படத்தில் தொய்வில்லை.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: பசங்க 2 - ஒரு பார்வை

Post by rammalar on Sat 2 Jan 2016 - 17:36

விமரிசனம் ...
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பசங்க 2 - ஒரு பார்வை

Post by நண்பன் on Sat 2 Jan 2016 - 19:11

ஐயய்யொ உங்கள் விமர்சனம் அதையும் தாண்டிய உங்கள் கருத்தைப் படிக்கும் போது ஆர்வம் அதிகரிக்கிறது படம் பார்க்க வேண்டும் என்று கண்டிப்பாக பார்க்கிறேன் நன்றி அண்ணா 
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பசங்க 2 - ஒரு பார்வை

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 3 Jan 2016 - 9:58

பார்க்கணும் காண்பிக்கணும் என்று தோணுது பார்க்கிறேன் நன்றி அண்ணா விமர்சனம் ரொம்பப் பிரமாதம்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பசங்க 2 - ஒரு பார்வை

Post by பானுஷபானா on Mon 4 Jan 2016 - 12:53

சே.குமார் wrote:
பானுஷபானா wrote:மொபைல என் பிள்ளைகள் பார்த்துட்டு நல்லா இருக்குனு சொல்ராங்க.... கண்டிப்பா நேரம் கிடைக்கும்போது பார்க்கனும் ...
பாருங்க அக்கா....
பெற்றோருக்கும் பாடம்...
வசனங்கள் நச்...
அப்ப அப்ப டாகுமெண்டரி மாதிரி தெரிந்தாலும் படத்தில் தொய்வில்லை.

நான் டவுன்லோட் செய்து போய் குடுத்து எல்லாரும் பார்த்துட்டாங்க... நான் இன்னும் பார்க்கல. என் தங்கை கூட படம் போரடிக்காம போகுதுனு சொன்னா. நேத்து என் தம்பி மனைவியிடம் படம் பார்க்கும் போது உன் பிள்ளைகள் நினைவு தான் வருது படத்தை பாருனு சொல்லி அவளூக்கும் மொபைலில் படத்தை ஏத்தி விட்டாச்சு.

எனக்கு தான் நேரம் கிடைக்கல.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பசங்க 2 - ஒரு பார்வை

Post by rammalar on Sun 10 Jan 2016 - 11:10


-


பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலா பால், பிந்து மாதவி மற்றும் குழந்தைகள் பலரும் நடித்துள்ள படம், பசங்க 2. இந்தப் படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி, நல்ல வசூலைப் பெற்றுள்ளது. இதற்காக 2டி எண்டர்டெயிண்மென்ட் சார்பாக, பாண்டிராஜுக்கு கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார் சூர்யா.

படத்துக்கு மேலும் கூட்டம் வருவதற்காக புதுச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பசங்க 2 படத்தைப் பார்க்க வருகிற 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இலவசம் என்றும் அவர்கள் இந்தப் படத்தை தனியாகவோ அல்லது பெற்றோர்களுடனோ வந்தால் இலவசமாகப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகை கோவை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்னாற்காடு ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பசங்க 2 - ஒரு பார்வை

Post by நண்பன் on Tue 12 Jan 2016 - 9:01

குமார் அண்ணா உங்கள் விமர்சனம் பார்த்து நான் பார்த்த படங்கள் வரிசையாக  

தூங்காவனம் பிடிக்க வில்லை 
உப்புக்கருவாடு சாதாரணம்
பூஜை  சூப்பர் 
பசங்க2 சூப்பரோ சூப்பர் அண்ணா கடைசியில் கண்ணீரே வந்து விட்டது அண்ணா அந்தப்பெண் மேடையில் கதை சொல்லும் போது கண்ணீர் வந்ததை என்னால் நிறுத்த முடியாமல் அழுது விட்டேன் என் குழந்தைகள் செய்யும் குரும்புகளை நான் ரசிக்கிறேன் இது வரை கண்டித்ததே இல்லை  நன்றி உங்கள் விமர்சனங்கள் தொடரட்டும் நல்ல படங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்தி தந்த உங்களுக்கு கோடி நன்றிகள்
நன்றியுட் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பசங்க 2 - ஒரு பார்வை

Post by Nisha on Tue 12 Jan 2016 - 9:03

பட லிங்க் கொடுங்க
பசங்கபடம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பசங்க 2 - ஒரு பார்வை

Post by நண்பன் on Tue 12 Jan 2016 - 9:06

Nisha wrote:பட லிங்க் கொடுங்க
பசங்கபடம்

லிங்க் என்னிடம் இல்லை குமார் அண்ணாதான் தருவார் நான் வேற ஒருவரிடம் தறவிறக்கி எடுத்தேன் இன்னும் சில படங்கள் உள்ளது பார்க்க நேரம் கிடைக்க வில்லை திருட்டு வீ சீ டி எனும் தளத்தில் பார்க்கலாம் என்று குமார் அண்ணா சொன்னார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பசங்க 2 - ஒரு பார்வை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum