சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

பயணங்கள் முடிவதில்லை_ தொடர் பதிவு

View previous topic View next topic Go down

Sticky பயணங்கள் முடிவதில்லை_ தொடர் பதிவு

Post by சே.குமார் on Tue 12 Jan 2016 - 19:26

தொடர்பதிவுகள் முடிவதில்லை என்பது போல் கடவுளைக் கண்டு கேட்ட கேள்விகள் இன்னும் முடியாதபட்சத்தில் இப்போ பயணங்கள் முடிவதில்லை எனும் தலைப்பில்  சகோதரி மகிழ்நிறை மைதிலி ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். இது நம்ம பக்கமெல்லாம் வராது... புதுக்கோட்டைப் பக்கமாத்தான் சுத்தும்ன்னு நினைச்சேன்... ஆனா சகோதரி தேன் மதுரத் தமிழ்கிரேஸ்கிட்ட நம்ம ஆல்ப்ஸ் தென்றல் நிஷா அக்கா மாட்டிக்கிட்டதும் இல்லாம நம்மளையும் மாட்டிவிட்டுட்டாங்க... சரி அழைத்தாச்சு... எழுதுறதுதான் மரியாதை... அப்படியே நமக்கும் ஒரு பதிவு தேறும்... அதுபோக நாம ரெண்டு அப்பாவிகளை மாட்டிவிடலாமே... சரி வாங்க ஒரு ரவுண்ட் போகலாம்...



1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?

நாம இருந்தது தமிழகத்தின் கடைக்கோடியில்... கல்லூரி, பல்கலைக்கழகம், பின்னர் தேவகோட்டை கல்லூரியில் பணி என என் வாழ்க்கை வயலோடும் வரப்போடுமே திருமணம் வரை பயணித்தது. எங்கு சென்றாலும் பேருந்துப் பயணமே... ரயில் பயணம் என்பது திருமணத்திற்குப் பின்னர்தான். முதல் பயணம் சென்னையில் இருந்து டெல்லிக்கு என்னோட சான்றிதழ்களில் அமீரக தூதரகத்தில் கையெழுத்துப் பெறுவதற்காக மனைவியின் மாமா மற்றும் உறவினர் பையனுடன் போனேன். மிகவும் அருமையானதொரு பயணம்... ஒரு ராணுவ வீரரின் குடும்பத்துடன் பேசியபடி பயணித்தோம்.  இரண்டு நாட்கள் பயணம்... சந்தோஷமான பயணம்.

 2.மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?

மறக்கமுடியாத பயணம்ன்னா நிறைய இருக்கு... ஒவ்வொன்னாப் பார்ப்போமே... ரயிலில் என்றால் சென்னையில் இருந்து மதுரை, திருச்சிக்கு சென்ற பயணங்கள்... அதிலும் குறிப்பாக நான், மனைவி, என் மகள் ஸ்ருதி என மூவரும் பயணித்த பயணங்கள்... ஸ்ருதிக்கு சன்னல் வழியே செழிப்பான, விளைந்து நின்ற வயல்களைக் காட்டியபடி பயணித்தது மறக்க முடியாதது.

பேருந்தில் என்றால் எம்.சி.ஏ., பண்ணும் போது காரைக்குடியில் இருந்து என்.என்.எல் பேருந்தில் பயணித்த தினங்கள்... பிடித்த பாடல்கள்... எங்களது நட்புக்கூட்டம், கண்டக்டருடன் அரட்டை, எங்களுக்காக பேருந்தை நிறுத்தி வைத்து ஏற்றி வருவது என அது ஒரு சந்தோஷமான பயண அனுபவம்தான் போங்கள்.

வேனிலோ காரிலோ என்றால் அம்மா, அப்பா, அக்காக்கள், அண்ணன்கள், தம்பி  என எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் அழகர் கோவில் சென்று அப்படியே மீனாட்சியை தரிசித்து வரும் அந்த நாட்கள் என்றுமே மகிழ்ச்சியான நாட்களே... அப்படி ஒரு பயணம் சென்ற முறை அழகர்கோவிலுக்கு ஏற்பாடாகி பின்னர் சிலகாரணங்களால் முடியாமல் போக பின்னர் திருச்செந்தூருக்கு அதேபோல் ஒரு பயணம் அமைந்தது. இப்ப இருக்கும் குடும்ப பிரச்சினைகளில் இனி அது போன்றதொரு பயணம் அமையுமா என்று தெரியவில்லை... ஆனால் அந்தப் பயணம்தான் எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியான பயணம்.

பைக்கில் என்றால் எங்கள் கணிப்பொறி மையம் பள்ளிகளில் வகுப்பெடுக்கும் போது கிட்டத்தட்ட  20, 25 கிலோ மீட்டரில் இருக்கும் கிராமத்துப் பள்ளிகளுக்கு நானும் என் நண்பன் முருகனும் ஆளுக்கொரு வண்டியிலோ அல்லது ஒரே வண்டியிலோ முன்னால் கணிப்பொறி மற்றும் கீபோர்டை வைத்து ஓட்ட பின்னால் ஒருவர் சிபியூ பிடித்திருக்க பயணிப்போம். அந்தப் பயணம் கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கும்.

சைக்கிளில் என்றால் கல்லூரி படிக்கும் போது நாங்கள் பத்துபேர் ஒரு குழுவாய் இருப்போம்... நல்ல நட்பு வட்டம்... கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு தேவகோட்டையில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு சைக்கிளில் சென்றோம். அது மிகவும் இனிமையான பயணம்.. கல்லூரி வாழ்க்கையை நினைத்தால் மனசுக்குள் நவநீ, ஆதி, திருநா, ராம்கி, பிரான்சிஸ், முத்தரசு, அண்ணாத்துரை, சேவியர் என எல்லாரும் வந்து செல்லும்போது இந்த சைக்கிள் பயணமும் வந்து மலர்ச்சியை மனதில் புகுத்திச் செல்லும். அதேபோல் தினமும் தேவகோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து நண்பர்களுடன் நானும் ராம்கியும் மட்டும் சைக்கிளை மெதுவாக ஓட்ட மற்றவர்கள் நடந்துவர பயணித்த மூன்று வருடங்கள் மறக்கமுடியாதது.

நடைப்பயணம் என்றால் பழனிக்கு நடந்த அந்த ஆறு ஆண்டுகள், சபரிமலை சென்ற நான்கு ஆண்டுகள், திருப்பரங்குன்றம் சென்ற பயணம் மறக்க முடியாதது. 

3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்?

நமக்கு பேருந்துப் பயணத்திலே அலாதி இன்பம்... அதுவும்  பின்புற வழிக்கு முன் இருக்கையோ அல்லது பின் இருக்கையோதான் என்னோட தேர்வு. காற்றும் வேண்டும் அதே நேரம் வேடிக்கை பார்த்தபடி பயணிக்க வேண்டும் எனவே சன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணிக்கவே பிடிக்கும். பேருந்தில் நின்று கொண்டோ அல்லது படியில் தொங்கிக் கொண்டோ பயணிக்கப் பிடிப்பதில்லை.


4.பயணத்தில் கேட்க விரும்பும் இசை?

ராசாதான்..... 80, 90களில் ராசாவின் ஆதிக்கம் மேலோங்கிய பாடல்கள்தான் ரொம்பப் பிடிக்கும். அதுவும் மனநிலையைப் பொறுத்து மெலோடியோ அடிப்பாடலோ கேட்கத் தோன்றும். ராமராஜனின் பாடல்கள் எல்லாம் விருப்பம்... வேனில் பயணித்தால் நான் தேடித்தேடி பதிந்து வைத்திருக்கும் கேஸெட்டுக்களை அள்ளிக் கொண்டு போய்விடுவேன். அதுதான் காலை முதல் இரவு திரும்பும் வரை.... இப்பவும் எனக்கு ராசா பாடல்களே...


5.விருப்பமான பயண நேரம்?

அப்படியெல்லாம் எதுவும் இல்லை... எப்பக் கிளம்ப வேண்டும் என்றாலும் ரெடிதான்.. இந்த நேரத்தில்தான் பயணிக்கனும் என்று எண்ணுவதில்லை.

6. விருப்பமான பயணத்துணை?

படிக்கும் காலத்தில் ஏதாவது வார, மாத இதழ்கள். இப்போ பெரும்பாலும் மொபைலில் சேமித்து வைத்திரும் பாடல்கள். 

7. பயணத்தில் படிக்க விரும்பும் புத்தகம்?

பயணத்துக்கு என தனி புத்தகம் எல்லாம் எடுப்பதில்லை... பெரும்பாலும் வார மாத இதழ்கள்தான்.

8.  விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?

மழையில் நனைந்தபடி சைக்கிளில் அல்லது வண்டியில் பயணிப்பது.... அதுவும் மழை அடித்துப் பெய்யும் போது முழுக்க நனைந்தபடி முகத்தில் சுளீரென பட்டுத் தெறிக்கும் மழையை ரசித்தபடி பயணிப்பதே எனக்கு ரொம்பப் பிடிக்கும்.


 9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?

அப்படியெல்லாம் எதுவுமில்லை... கேட்க்கும் பாடல் வரியும் வார்த்தையும் மாறாமல் அப்படியே முணுமுணுப்பேன்... அதே ராகத்திலும். அது இப்பவும் உண்டு. அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது காதில் நுழையும் பாடல் வாய் வழியாக வெளியே வந்து கொண்டுதான் இருக்கும். சில நேரங்களில் பிடித்த பாடலென்றால் சத்தமாகவும் வரும்.

10. கனவுப் பயணம் ஏதாவது ?

கனவுப் பயணம் என்றெல்லாம் எதுவும் இல்லை... நிறையக் கனவுகளைக் செயலாக்க நினைத்து இன்னும் ஏமாற்றத்தில்தான் இருக்கு. அதனால் கனவுப் பயணம் என்றெல்லாம் எதுவும் இல்லை. மனைவி, குழந்தைகளுடன் எங்காவது பயணிக்க வேண்டும்.


(மழையும் சரிதாவும் பிடிக்கும் என்பதால் இந்தப்பாடல்)


சரி.. நம்ம பயணம் முடிவுக்கு வந்தாச்சு... அடுத்த டிரைவரை மாற்றி விட்டுட்டு நாம இறங்கணும்.. அப்படி மாட்டபோற ரெண்டு பேரு... ம்... கில்லர்ஜிஅண்ணாவை மாட்டலாம் என்றால் நிஷா அக்கா முந்திக்கிட்டாங்க... அதனால நாம மாட்டிவிட்டா ஏன் எதுக்கு என்று கேட்காமல் நாலு மாசம் ஆனாலும் எப்படியும் எழுதி முடிக்கும் என் அன்பு அண்ணன்கள் குடந்தையூர் ஆர்.வி. சரவணன் அவர்களையும் சந்தித்ததும் சிந்தித்ததும் வெங்கட் நாகராஜ்அவர்களையும் மேடைக்கு அழைக்கிறேன். இருவரும் நேரம் கிடைக்கும் போது மெதுவாக என்னைத் திட்டாமல் (திட்டமாட்டாங்க) எழுதுங்கள் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். 

இதுல என்ன விஷேசம்ன்னா நான் சொல்லியிருக்கும் இருவருக்குமே பயணம் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதனால் இருவரின் பகிர்வும் பக்காவாக இருக்கும் என்பதை இங்கு சொல்வதில் சந்தோஷப்படுகிறேன்.

-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1398
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum