சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

உள்ளூர் விவசாயிகளை கணக்கில் எடுக்காத கடந்த அரசின் செயல்

Go down

Sticky உள்ளூர் விவசாயிகளை கணக்கில் எடுக்காத கடந்த அரசின் செயல்

Post by நண்பன் on Wed 13 Jan 2016 - 10:27



 விவசாயிகளை கணக்கில் எடுக்காத கடந்த அரசின் செயல்
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு கடந்த அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட இலட்சக் கணக்கான மெற்றிக்தொன் அரிசி காலாவதியாகி பாவனைக்குதவாமல் உள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பணித்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
உள்ளூர் விவசாயிகளைக் கணக்கிலெடுக்காது கடந்த அரசாங்கம் இறக்குமதி செய்துள்ள மேற்படி இலட்சக்கணக்கான மெற்றிக்தொன் அரசியை உலக உணவு நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
பாவனைக்குதவாத அரசியை உலக உணவு நிறுவனத்துக்கு வழங்குவது முறையற்றது எனக்கூறி அவற்றை விலங்குத் தீனுக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தாம் அமைச்சரவைக்குப் பணிப்புரை விடுத்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசாங்கம் அபிவிருத்தி எதுவும் செய்யவில்லை என விமர்சிப்பவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, முதல் வருடத்தில் உலக நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளும்  வகையில் நாட்டில் சட்ட ரீதியான மற்றும் முக்கிய செயற்பாடுகளை மேற்கொண்டதாகவும் புதிய வருடத்தில் நாட்டில் வறுமையை ஒழித்து பொருளாதாரத்தில் நாட்டையும் மக்களையும் கட்டியெழுப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த அரசாங்கம் தேவையறிந்து அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் தேவையற்ற அபிவிருத்திகளை மேற்கொண்டு நிதியை விரயம் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் மக்களினது அவசிய தேவைக்கு முக்கியத்துவமளிக்கும் என்றும் தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை வங்கிக் கிளையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுக் காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
அமைச்சர் கபீர் ஹாசிம், இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க வடமத்திய மாகாண ஆளுநர், முதலமைச்சர் பேசல, இலங்கை வங்கி தலைவர் ரொனால்ட் பெரேரா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, விவசாயிகளுக்கு உரிய காலத்தில் உரம் கிடைக்கவில்லை என முறைப்பாடுகள் கிடைத்தன.
சில பகுதிகளில் விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். நான் இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்ததில் நாட்டில் எந்த வித உரத்தட்டுப்பாடும் கிடையாது. உர களஞ்சியங்களிலும் உரத்தட்டுப்பாடு இல்லை. உர விநியோகத்தில் ஏற்பட்ட தாமதமே சில பகுதிகளில் உர தட்டுப்பாட்டுக்குக் காரணம் என்பதைக் கண்டறிய முடிந்தது.
உர விநியோகத்திலேயே குறைபாடுகள் உள்ளன. உடனடியாகவே நான் செயற்பட்டு அமைச்சுக்களின் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு தேவையானளவு உரத்தை தேவைப்படும் பிரதேசங்களுக்கு அனுப்புமாறு பணித்தேன்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உள்ளூர் விவசாயிகளை கணக்கில் எடுக்காத கடந்த அரசின் செயல்

Post by Nisha on Wed 13 Jan 2016 - 10:38

நல்ல முயற்சி!

விவசாயம் செழிக்கட்டும், தம்பி சார், நம்ம பேருல நாலு ஏக்கர் வயல்  நிலம் வாங்கிப்போடுங்க.. ஊருக்கு போய் தோட்டம் செய்யலாம். 

பிரெட்டு விலை ஐந்து ரூபாய் கூடிப்ப்போனதாமே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உள்ளூர் விவசாயிகளை கணக்கில் எடுக்காத கடந்த அரசின் செயல்

Post by நண்பன் on Wed 13 Jan 2016 - 10:59

Nisha wrote:நல்ல முயற்சி!

விவசாயம் செழிக்கட்டும், தம்பி சார், நம்ம பேருல நாலு ஏக்கர் வயல்  நிலம் வாங்கிப்போடுங்க.. ஊருக்கு போய் தோட்டம் செய்யலாம். 

பிரெட்டு விலை ஐந்து ரூபாய் கூடிப்ப்போனதாமே!
ஆமாம் கேள்விப்பட்டேன் 

நான் இலங்கை அரசுக்கு கொஞ்சம் கடன் கொடுக்கலாம் அல்லது இனாமா கொடுக்கலாம் என்று எண்ணியுள்ளேன் முன்னால் திருட்டு ஜனாதிபதி நாட்டின் அழிவின் விழிம்பில் கொண்டு சென்றான் பெரிய கடன் சுமை  அநியாயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உள்ளூர் விவசாயிகளை கணக்கில் எடுக்காத கடந்த அரசின் செயல்

Post by Nisha on Wed 13 Jan 2016 - 11:08

அப்படியா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உள்ளூர் விவசாயிகளை கணக்கில் எடுக்காத கடந்த அரசின் செயல்

Post by நண்பன் on Wed 13 Jan 2016 - 11:32

 

பாண் ஒன்றின் விலையை ரூபா ஒன்றினால் அதிகரிப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
 
இன்று (13) நள்ளிரவு முதல் குறித்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வருவதாக, அதன் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
 
நேற்று (12) இடம்பெற்ற சங்கத்தின் கலந்துரையாடலை அடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
 
அதன்படி, ரூபா 54ஆக இருந்த 450 கிராம் பாண் ஒன்றின் விலை ரூபா 55 ஆக அதிகரித்துள்ளது.
 
ரூபா 5 இனால் பாண் உள்ளிட்ட பல்வேறு பேக்கரி தயாரிப்புகளின் விலை அதிகரிக்கப்படும் என அவர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நிலையிலேயே, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
வரவு செலவுத் திட்டத்தில், 2% ஆக இருந்த தேசத்தை கட்டியெழுப்பும் வரி 4% அதிகரிக்கப்பட்டதன் காரணமாக பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரித்தமையே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்திருந்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உள்ளூர் விவசாயிகளை கணக்கில் எடுக்காத கடந்த அரசின் செயல்

Post by நண்பன் on Wed 13 Jan 2016 - 11:33



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உள்ளூர் விவசாயிகளை கணக்கில் எடுக்காத கடந்த அரசின் செயல்

Post by Nisha on Wed 13 Jan 2016 - 11:33

ஜெயில்ல தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உள்ளூர் விவசாயிகளை கணக்கில் எடுக்காத கடந்த அரசின் செயல்

Post by நண்பன் on Wed 13 Jan 2016 - 11:34

எந்தப்புற்றில் என்ன பாம்பிருக்கு என்று யாருக்கு தெரியும் ஒரே கொலை கார கும்பலாக தெரிகிறதே


ஹிருணிகா உட்பட 9 பேர் நீதிமன்றில் ஆஜர் ; டிபென்டரை விடுவிக்க நீதவான் மறுப்பு

தெமட்டகொடை பகுதியில் நபரொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 9 பேர் நேற்று(12) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
 
குறித்த கடத்தலுடன் தொடர்புடையதாக கூறப்படும் சிசிடிவி கமராவில் பதிவான காட்சிகளை மேலதிக விசாரணைகளுக்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
மேலும் கடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் டிபென்டர் வாகனத்தை விடுவிக்க நீதவான் மறுப்பு தெரிவித்தார். அத்துடன் இந்த வழக்கை மீண்டும் எதிர்வரும் 26ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உள்ளூர் விவசாயிகளை கணக்கில் எடுக்காத கடந்த அரசின் செயல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum