சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Today at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by சே.குமார் on Sat 23 Jan 2016 - 20:24


பகுதி - 2           பகுதி - 3         பகுதி - 4       பகுதி - 5       பகுதி - 6      பகுதி - 7(பகுதி-1)


"என்ன வேலாயுதம்... பொங்கல் முடிஞ்சிருச்சு இன்னும் மடக்கரைச் செய்யை அறுக்காம போட்டு வச்சிருக்கே..." என்று கேட்டபடி வந்து திண்டில் அமர்ந்த பஞ்சநாதன், "கொஞ்சம் போயில கொடேன்... வாங்கணுமின்னு நினைச்சித்தான் டவுனுக்குப் போனே... சுத்தமா மறந்துட்டேன்... இப்பத்தான் ராமசாமி மவனுக்கிட்ட காசு கொடுத்து விட்டிருக்கேன்..." என புகையிலையை வாங்கி கையில் வைத்து தேய்த்து வாயில் லாவகமாக அதக்கிக் கொண்டார்.
"தாள் கொஞ்சம் பச்சையா இருக்கு... அது போக வயலும் கொஞ்சம் ஈரமாத்தான் இருக்கு அதான் காயட்டும்ன்னு போட்டு வச்சிருக்கேன். எங்க அண்ணமவன் ரெத்தினமும் நானுந்தானே  களம் ரெடி பண்ணினோம். அவன் மேட்டுச் செய்யி அறுத்திருக்கான்... வேலை முடிச்சு களம் நமக்கு கிடைக்க இன்னும் ரெண்டு நாளாகும். இப்ப அறுத்து அங்க கொண்டு போயிப் போட்டா அவனுக்கும் சிரமம் நமக்கும் சிரமம்... அதான் காயட்டும்ன்னு விட்டு வச்சிருக்கேன்."
"அது செரிதான்... கோயில் மாடு பாக்கணுமேப்பா... அதான் கேட்டேன்..."
"மடக்கரை பக்கந்தானே.... இங்க அவ்வளவு சீக்கிரம் மாடு வராது... இன்னும் நீர்ப்பிடிச் செய்யி பக்கமெல்லாம் அறுக்காம போட்டு வச்சிருக்காங்க... ஆளுகளும் காவலுக்கு போகுதுல்ல... நானும் வயல்லதானே படுக்கிறேன்... இன்னும் ரெண்டு நாள்தானே..."
"ம்... ஆமா சவுந்தரம் எங்கே...? நீ மட்டும் இருக்கே...?"
"மடக்கரை செய்யி அறுக்கும் போது வீட்லயும் ஆளு வேணுமில்ல... அதான்... செல்வி வீட்டுக்கு ஒரு எட்டு பொயிட்டு அதைக் கூட்டிக்கிட்டு வாறேன்னு சொன்னா...  சரி பொயிட்டு வான்னு சொன்னேன்... இப்ப வந்துருங்க... என்ன அவ இருந்தா இருண்ணே காபி போடுறேன்னு சொல்லுவா... நா போயிலதானே கொடுக்க முடியும்..." வேலாயுதம் சிரித்தார்.
"ஏய் அதுக்கு கேக்கலைப்பா... என்னோட சத்தம் கேட்டா வாண்ணேன்னு வந்துருவா... காணாமேன்னு கேட்டேன். ஆமா இந்தப் பொங்கலுக்கும் நீ மூத்தவனைக் கூப்பிடலையா ..?"
"இப்ப எதுக்கு அவன் பேச்சு... இதுக்குத்தான் சவுந்தரம் எங்கேன்னு கேட்டியாக்கும்..?" வேலாயுதம் கோபமாய்க் கேட்டார்.
"இந்தாப்பா... இப்ப எதுக்கு கோபப்படுறே..? எம்புட்டுக் காலந்தான் தள்ளி வைப்பே..? கண்கானாத இடத்துல இருந்தாலும் பரவாயில்லை... திருச்சியிலதானே இருக்கான்... நம்ம பயலுக பூராம் அவனோட பேசுறானுங்க... வயசான காலத்துல பழசை தூக்கி வச்சிக்கிட்டு இருந்து என்ன பண்ணப் போறோம்... சொல்லு..."
"அதுக்காக அப்பனாத்தாவை மதிக்காத  மசுருப்புள்ளையை கூட்டி வச்சி கொஞ்சச் சொல்றியா..?"
"அவனுக்கும் குடும்பம், குழந்தையின்னு ஆச்சு... ஆணொன்னு பொண்ணென்னுன்னு சொன்னானுங்க... ஆமா உனக்குத் தெரியாமயா இருக்கும்... நல்லது கெட்டதுக்கு வாடான்னு சொல்லி அவனையும் சின்னவனையும் சேர்த்து வச்சியன்னா உறவு விட்டுப் போகாம இருக்கும்ல்ல... நாளைக்கி அவனுக ஒருத்தனுக்கு ஒருத்தன் ஆதரவா இருப்பானுங்கதானே..."
"இங்க பாரு... அவனோட முகத்துலே முழிக்கக் கூடாதுன்னு சவுந்தரம் வைராக்கியமா இருக்கா... சின்னவங்கிட்ட சொன்னா எங்களை இந்த வீட்டை விட்டு விரட்டிருவான்... கேடுகெட்ட பய எங்கயோ இருந்துட்டு போகட்டும்... ஆடு பகையாம்... குட்டி உறவாம்... நல்லாயிருக்கே... எதுக்கு இப்ப அவனைப்பத்தி பேசுறே..? இதுக்குத்தான் இங்க வந்தியா..?"
"இப்ப இந்தக் காதல் கத்திரிக்காய் எல்லாம் சகஜம்தானேப்பா... ஏன் நம்ம நாகம்மா மகன்... அதான் அந்த ராம்கிருஷ்ணப்பய... புவனான்னு ஒருத்தியை எவ்வளவு எதிர்ப்புக்கு இடையில் தூக்கிட்டுப் போயி தாலி கட்டினான்.... இப்ப அவன் ரெண்டு சாதிசனத்துலயும் சேந்து நல்லது கெட்டதுக்கு நிக்கலையா..."
"அதுக்காக நம்ம சாதிக்குன்னு இருக்க மரியாதையைக் கெடுத்துட்டு எவளோ ஒருத்திய இழுத்துக்கிட்டு போனா... அந்த நாயை நடுவீட்டுல கொண்டாந்து உக்கார வச்சி சோறு போடணுமா...? இங்க பாரு... எனக்கு சாதிதான் முக்கியம்...எஞ்சாதிக்கு மதிப்புக் குறையிற மாதிரி எது நடந்தாலும் நான் இப்படித்தான்... கோயில்ல கூட பாரு அம்மனும் அய்யனும் கோபுரத்துக்குள்ள இருக்க... உளி வீரன் வெளியிலதான் நிக்கிறான்... அப்படித்தான்... என் சாதி... என் இனம்... இதுல நான் இப்படித்தான்... எதுக்காகவும் என்னை மாத்திக்க முடியாது..."
"என்னப்பா நீ இப்பவும் சாதி சாதியின்னு பேசுறே.... அதெல்லாம் எப்பவோ மல ஏறிப்போச்சு... இப்ப எல்லாரும் ஒண்ணு மண்ணா ஆயிட்டோம். அன்னைக்கு கும்புடுறேன் ஐயான்னு கக்கத்துல துண்டை வச்சிக்கிட்டு வீட்டு வாசல்ல வந்து நின்ன செபத்தியான் மகன் இன்னைக்கு நம்ம ஏரியா தாசில்தாரு... அவரப் பாக்க போயி இப்ப நாம வணக்கந்தம்பின்னு நிக்கிறோம்... இதுதான் உண்மை... சாதியை வச்சி அரசியல்வாதிங்க பொழப்பு நடத்தலாம்... நம்மள மாதிரி மனுசங்க அதுல விழக்கூடாது... அவன் கட்டுனவ ஒண்ணும் குறைச்சலில்லையே... சரி விடு... இனி சாதி அது இதுன்னு பேசாம நாம வாழப்போற கொஞ்ச நாளைக்குள்ள... நமக்கு அறுவடை தேதி வர்றதுக்குள்ள அவனை வீட்டோட சேர்க்கப்பாரு"
"அட சும்மா இருப்பே... நீ வேற... நாஞ் செத்தாக்கூட அவனும் அந்தச் சிறுக்கியும் இந்த வீட்டு படிவாசல் மிதிக்கக்கூடாது...."
"இதுக்கு மேல உங்கிட்ட பேசி காரியம் இல்லை.... விடு.... ஆமா இந்தத் தடவை அம்மா ஜெயிக்குமா...?"
"ஆமா அவளைச் ஜெயிக்க வச்சி இன்னமும் இலவசத்துப் பின்னால போயி இருக்கிறதை எல்லாம் இழக்க வேண்டியதுதான்..."
"நீ ரொம்ப சூடா இருக்கே... நான் அப்புறமா வர்றேன்..." என்றபடி எழுந்து துண்டை உதறினார்.


***
"டேய் உள்ள வாங்கடா..." என்றான் பார்த்தசாரதி.
"இல்லடா... நாங்க இங்க நிக்கிறோம்... நீ போ..." என மறுத்தான் கண்ணன்.
"அட வாங்கடான்னா..." என்று அவன் அதட்ட, அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்.
"ஏன்டாம்பி இவாள்ளாம் யாரு...? ஆத்துக்குள்ள தபதபன்னு நுழையுறா...?" என்று மறித்தாள் அன்னபூரணி.
"பாட்டி என்னோட பிரண்ட்ஸ்... நாந்தான் வீட்டுக்கு கூட்டியாந்தேன்..." என்றான் பார்த்தசாரதி.
"என்ன குலம்... என்ன கோத்திரம்ன்னு தெரியாம... கண்டவா எல்லாம் உள்ள நுழைய இது என்ன மடமா... ஆச்சாரமான குடும்பம்டா... ஏய் அம்பிகளா சித்த வெளிய நில்லுங்கடா..."
"டேய் அதான் சொன்னேன்.... நீங்கள்லாம் ஆச்சாரம் அந்தஸ்துன்னு பார்க்கிற இடம்... நாங்க வெளிய நிக்கிறோம்..." என்று கோபமாய்ச் சொன்னான் கண்ணன்.
"என்னடாம்பி உனக்கு இப்படிக் கோபம் வர்றது... எங்களுக்குன்னு சில ஆச்சாரம் அனுஷ்டானம் இருக்கோன்னோ... தெரிஞ்சிக்கோ... ஏய் அவா நின்ன இடத்துல ஜலம் எடுத்து தெளியுங்கோ" அன்னபூரணி படக்கென சொன்னாள்.

(பகுதி 2 : சனிக்கிழமை தொடரும்)

(வாழ்க்கயைப் பேச இருக்கும் இந்த புதிய தொடருக்கு உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்)
என் தளத்தில் வாசிக்க  [url= http://vayalaan.blogspot.com/2016/01/1.html]இங்கு[/url] கிளிக்கவும்

-'பரிவை' சே.குமார்.


Last edited by சே.குமார் on Wed 9 Mar 2016 - 19:21; edited 9 times in total
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by Nisha on Sun 24 Jan 2016 - 4:32

லிங்க் இணைப்புக்கு நன்றி! இங்கிருந்தே அங்கே செல்ல நேரடிப்பாலம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by Nisha on Sun 24 Jan 2016 - 4:34

ஆஹா! ஆஹா!
அருமையான ஆரம்பம் குமார்! குறிஞ்சியும் நெருஞ்சியுமாய் மலரப்போகும் அடுத்த காதல் கதை! நம்ம ராம்கியும், புவனாவும் உண்டு எனும் போது கனவுகள் கலையாதே நினைவும் வருகின்றது!

நிகழ் காலத்தில் ஆரம்பித்து கடந்த காலம் செல்லும் முன் ஏற்பாடுகள்அருமைவேலாயுதம் ஐயாவும் இருக்கின்றார். அம்மாவின் அரசியலும் உண்டு போலவே! அரசியலும் ஜாதியும் சேர்த்தால் காதல் என்னாகும் என அறியும் திகிலோடு....! கடைசியில் காதலர்களை வாழ வைத்து விடுங்கள் அப்பனே அப்பாவும் பிள்ளையுமாய் பிரிந்தவர்கள் சேர வேண்டும் என இப்பவே நினைக்கஆரம்பித்து விட்டேன். 

அடுத்து எப்போது?


Last edited by Nisha on Sun 24 Jan 2016 - 14:37; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by சே.குமார் on Sun 24 Jan 2016 - 6:19

Nisha wrote:ஆஹா! ஆஹா!
அருமையான ஆரம்பம் குமார்! குறிஞ்சியும் நெருஞ்சியுமாய் மலரப்போகும் அடுத்த காதல் கதை! நம்ம ராம்கியும், புவனாவும் உண்டு எனும் போது கனவுகள் கலையாதே நினைவும் வருகின்றது!

நிகழ் காலத்தில் ஆரம்பித்து கடந்த காலம் செல்லும் முன் ஏற்பாடுகள்அருமைவேலையுதம் ஐயாவும் இருக்கின்றார். அம்மாவின் அரசியலும் உண்டு போலவே! அரசியலும் ஜாதியும் சேர்த்தால் காதல் என்னாகும் என அறியும் திகிலோடு....! கடைசியில் காதலர்களை வாழ வைத்து விடுங்கள் அப்பனே அப்பாவும் பிள்ளையுமாய் பிரிந்தவர்கள் சேர வேண்டும் என இப்பவே நினைக்கஆரம்பித்து விட்டேன். 

அடுத்து எப்போது?
வணக்கம் அக்கா..
வாழ்த்துக்கு நன்றி...

ராம்கியும் புவனாவும் எடுத்துக்காட்டாக வந்தார்கள்... கதையில் தொடர வாய்ப்பில்லை...

கதையில் ஒரு பகுதி நிகழ்காலமாகவும் மறுபகுதி கடந்த காலமாகவும் பயணிக்கும்... அப்பா - மகன் கதையில் அப்பாவின் கதை வாழ்க்கை... மகனின் கதையில் காதல்...

அரசியல் எல்லாம் கதையிலா... ஐய்யய்யோ... 

காதலர்கள்தான் சேர்ந்துதானே இருக்கிறார்கள்... அப்பாவும் பிள்ளையும்தான் பிரிந்திருக்கிறார்கள்....

சனிக்கிழமைகளில் எழுத எண்ணம்... பார்க்கலாம்.

கருத்துக்கு நன்றி அக்கா...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by பானுஷபானா on Mon 25 Jan 2016 - 12:43

காரசாரமான அருமையான தொடக்கம் ...

எல்லோருமே மனுசங்க தான் இங்க சாதி எங்க எப்போ வந்துச்சுனு புரியல...

தொடருங்கள் குமார்

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by சே.குமார் on Mon 25 Jan 2016 - 20:41

பானுஷபானா wrote:காரசாரமான அருமையான தொடக்கம் ...

எல்லோருமே மனுசங்க தான் இங்க சாதி எங்க எப்போ வந்துச்சுனு புரியல...

தொடருங்கள் குமார்

வாங்க அக்கா...
கருத்துக்கு நன்றி.
நம்மூருல சாதியில்லாமல ரயில் ஏறுது... ஒரு சில ஏரியாக்களில் இன்னும் தீவிரமா இருக்கத்தான் செய்யுது....
நன்றி அக்கா...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by பானுஷபானா on Wed 27 Jan 2016 - 11:50

Nisha wrote:லிங்க் இணைப்புக்கு நன்றி! இங்கிருந்தே அங்கே செல்ல நேரடிப்பாலம்!

லிங்க் கிளீக் ஆகல நிஷா
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-2)

Post by சே.குமார் on Sat 30 Jan 2016 - 11:54
-------------ன்னபூரணி பாட்டி சொன்ன வார்த்தைகள் கண்ணனின் கோபத்தை இன்னும் அதிகமாக்க, "உங்களுக்குன்னு ஆச்சாரம் இருக்கு பாட்டி... எங்களுக்குத் தெரியும்... அதான் சாமி கூட கற்பக்கிரகத்துக்கிட்ட உங்களை விடுது... நாங்க கற்பக்கிரகம் தாண்டியிருக்கிற வாசல்வரைதான் வரமுடியும்… இன்னைக்கு நிலமையில  காசு கொடுத்தா சாமியை கொஞ்சம் கிட்டப்போய் பார்க்கலாம்… கொடுக்கலைன்னா தர்ம தரிசனமுன்னு ரொம்பத் தூரம் தள்ளி நின்னுதான் பார்க்கணும்… சாமியை காட்சிப் பொருளாக்கி பணம் பறிக்கிற கூட்டத்துக்கு அடிபணிஞ்சி போற உங்க ஆச்சாரமும் அனுஷ்டானமும் எங்களுக்கு வேண்டாம்.  ஆமா…  கோவில் வருமானம்தானே உங்களுக்கு சோறு போடுது… அங்க காசு போடுறவனெல்லாம் உங்க சாதிக்காரந்தானா…? அதுல மட்டும் சாதியெல்லாம் வந்து ஒட்டிக்கலையா…? நாங்க நின்ன இடத்துல மட்டும் வந்து ஒட்டிக்கிச்சாக்கும்… கழுவச் சொல்றீங்க..? என்ன ஆச்சாரம் இது…. பால்க்காரர்கிட்ட பால் வாங்கி காபி போட்டு பேஷ் பேஷ் நல்லாயிருக்குன்னு குடிக்கிறீங்களே... அது யாரு உங்க சாதிக்காரன் கறந்தானா..? எங்கள்ல ஒருத்தன்தானே கொண்டாந்து தர்றான்… ஏன் இன்னைக்கு வெண்டைக்காய் பொறியல் வை... கத்திரிக்காய் கூட்டு வையின்னு வகை வகையா வச்சி சாப்பிடுறீங்களே... அதை விளைவிச்சவன் யாரு... உங்க சாதிக்காரனா... இல்லையே.... பாட்டி... எஞ்சாதிகாரன் கொடுத்தாத்தான் சாப்பிடுவேன்னா நாமெல்லாம் சாப்பிடாம சாக வேண்டியதுதான்… எல்லாரும் சேந்தாத்தான் எல்லாம் கிடக்கும். தெரிஞ்ச்சிக்கங்க... சாரதி நாங்க வெளிய நிக்கிறோம்... நீ அப்புறம் வா..." என கத்தினான்.

"ஏன்டாம்பி உனக்கு இம்புட்டுக் கோபம்... இதெல்லாம் நன்னாயில்லை பார்த்துக்கோ... ஒருத்த ஆச்சாரம்ன்னு சொன்னா அவா சொல்றதை ஏத்துக்கிட்டு  போறதுதான் சிறியவாளுக்கு அழகு..." பாட்டி தன் கருத்தில் நிலையாக நின்றாள்.

"என்னால எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு போக முடியாது பாட்டி.... தப்புன்னா கத்துவேன்... அது என்னோட குணம்... வாங்கடா..." என்றபடி கண்ணன் வேகமாக வெளியேற, அவன் பின்னால் மற்றவர்களும் வெளியேறி நிறுத்தி வைத்திருந்த சைக்கிள்களில் ஏறி, மௌனமாய் அமர்ந்து இருந்தனர்.

“டேய் கண்ணா... என்னடா இது... நாம வந்திருக்கிறது நம்ம சாரதிக்காக... அவன் என்னைக்காச்சும் நம்மகிட்ட சாதி பார்த்திருக்கிறானா என்ன... நம்ம சாப்பாட்டை அவன் தினமும் சாப்பிடுறான்... நீ இப்படிக் கோபப்பட்டா அவனுக்கு கஷ்டமா இருக்காதா..? விடுடா...”  என அந்த மௌனத்தை உடைத்தான் அம்பேத்கார்.

“அதுக்காக..?” எகிறினான் கண்ணன்.

“நமக்கு சாரதிதான் முக்கியம் தெரிஞ்சிக்க... வந்த இடத்துல அவனோட அம்மா, தங்கச்சி எல்லாம் என்ன நினைப்பாங்க... எல்லாத்துக்கும் இப்படி கோபப்பட்டியன்னா இந்த உலகத்துல உன்னால வாழவே முடியாது...” என்றான் பிரவீண்.

கண்ணன் பதில் சொல்லும் முன்னே, "பாட்டி... அம்மாக்கிட்ட சொல்லிட்டுத்தான் கூட்டியாந்தேன்... படிக்கிற இடத்துல சாதி, மதமெல்லாம் பாத்துப் பழக முடியாது... அவன் கடிச்சிக் கொடுத்ததை நான் திம்பேன்... நான் கடிச்சிக் கொடுத்ததை அவன் திம்பான்... இதுதான் நட்பு... சும்மா இருக்க மாட்டீங்களா...? உங்க ஆச்சாரத்தை எல்லாம் நீங்க உக்காந்திருக்க திண்ணையோட வச்சிக்கங்க… எங்க காலத்துல அதை உள்ளாற கொண்டு வராதீங்க…” என பாட்டியிடம் கத்திய பார்த்தசாரதி வெளியே வந்தான்.

“டேய் சாரிடா… அவங்கள்லாம் அதுலயே ஊறுனவங்க… ஏன் உங்க வீட்டுக்குப் போகும்போது அப்பா நீ என்ன சாதி… நீ என்ன சாதியின்னு எல்லாரையும் கேட்கலையா..? அப்ப எல்லாரும் சொல்லிட்டுத்தானே வந்தோம்… அவங்க தலைமுறை சாதிக்குள்ள சிக்கியிருக்கு… நாம அப்பயியில்லையில்ல… ப்ளீஸ்… நீங்க வாறீங்கன்னு அம்மா, தங்கச்சிக்கு எல்லாம் அவ்வளவு சந்தோஷம்… டேய் கண்ணா நீ வந்தாத்தான் மத்தவங்க வருவாங்க… உள்ள வாங்கடா…”

“இல்லடா… வேண்டாம்… கோவில் பக்கம் பொயிட்டு வரலாமே?” என்றான் கண்ணன்.

“அது போகலாம்… இப்ப உள்ள வாங்கடான்னா… எனக்கு நீங்க குடுக்கிற மரியாதை இதுதானா… இந்த ரெண்டு வருசத்துல என்னைக்குடா நான் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டு இருக்கேன்… எங்க பாட்டி சாதியின்னதும் நானும் அந்த ஆச்சாரத்துல சிக்கிட்டேன்ல்ல…”

“டேய் என்னடா நீ… அப்படியெல்லாம் இல்ல… கண்ணா… பெரியவங்க உலகம் வேற… நட்புங்கிற உலகம் வேற… இதுக்குள்ள சாதிச் சாக்கடைக்கெல்லாம் இடமில்லை… அவன் வருந்துறான் பாரு... எந்திரிடா…” என்றான் அம்பேத்கார்.

“நான் சொன்னா வரமாட்டீங்க... இருங்க… அம்மா பாருங்கம்மா வீட்டுக்குள்ள வரமாட்டேன்னு ஸ்டிரைக் பண்ணுறானுங்க… எல்லாரும் ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறோம்" உள்பக்கமாகப் பார்த்துக் கத்தினான் பார்த்தசாரதி

"என்னடா நீங்க… அத்தை சித்த சும்மா இருங்கோ… ஆச்சாரத்தையெல்லாம் அப்புறம் பார்க்கலாம்… பிள்ளைங்க பர்ஸ்ட் டைம் ஆத்துக்கு வந்திருக்கா… சும்மா பேசிண்டு… உங்க ஆச்சாரத்துக்கு எதுவும் வராது…” என்றபடி சேலைத் தலைப்பால் கையைத் துடைத்துக் கொண்டே வந்த சுபத்ரா “கண்ணா... என்னப்பா இது... அவங்க பெரியவங்க... அப்படித்தான் இருப்பாங்க... பூஜை புணஷ்காரம்ன்னு ஊறிப்போனவங்க.... இதுக்கெல்லாம் கோபப்பட்டுக்கிட்டு… உள்ள வாங்க… முற்றத்துல தண்ணி இருக்கு காலம்பிட்டு உள்ளே உக்காருங்க…"

"இல்லம்மா... பரவாயில்லை... அப்படியே கோயில் பக்கமா பொயிட்டு..."

“என்னப்பா நீயி… சந்தோஷமா வந்த பிள்ளைங்க சங்கடமா போறதுதான் எங்க ஆத்துக்கு நல்லதில்லை… புரிஞ்சிக்கோ…”
"அட என்ன மிஸ்டர் சாரதி உங்க பிரண்ட்ஸ்க்கு எல்லாம் பாரதியை விட கோபம் அதிகமா வர்றது… அவன் கூட மீசை வச்சிண்டு காக்கை குருவி எங்கள் சாதியின்னான்… சாதியில்லையின்னு அன்னைக்கே பேசின பார்ப்பனன் அவன்… அன்னைக்கே மீசை வச்சிண்டு மனைவி தோள்ல கை போட்டுக் கூட்டிக்கிட்டு போனவன் அவன்... எங்க பாரதி... எங்கள்ல சாதி... ஆச்சாரம்… அனுஷ்டானம்ன்னு பேச ஆளுங்க இப்ப நிறைய இருக்கா… ஆனா சாதியாவது மண்ணாவதுன்னு அன்னைக்கே ஒத்தப் பிராமணன் அடிச்சிச் சொல்லிட்டுப் போயிருக்கா… ஆனா இன்னமும் இந்த சாதிச் சாக்கடை மறையலை... ஆமா இதுல சும்மா படபடன்னு லெக்சர் கொடுத்த புள்ளையாண்டான் யாருன்னு காமிங்க மிஸ்டர் சாரதி…. பேரை கண்ணன்னு வச்சதுக்கு பாரதின்னு வச்சிருக்கலாம் அவர் பேரண்ட்ஸ்… ஹலோ ப்ரண்ட்ஸ்… எங்க பாட்டி அப்படித்தான்… அவங்க அப்படியே வளர்ந்து வாழ்ந்தும் முடிக்கப் போறாங்க… எங்க வீட்டைப் பொறுத்தவரை எல்லாமே திருமதி. சுபத்ராதான்…. அவங்க சொல்றதுதான் இங்க சட்டம்… “ படபடவெனப் பேசிய அவள் “அட வாங்கன்னா வாங்கப்பா…. இன்னாத்துக்கு முர்ச்சிக்கின்னு நிக்கிறீங்க… இன்னா  சாரதி நைனா… அப்பால கட்டம் போட்ட சொக்காதான் தலீவரு கண்ணனா…” என சென்னை மொழியில் பேசிச் சிரித்தாள்.

அவர்கள் ஒன்றும் பேசாமல் உள்ளே செல்ல அவள் வழி விட்டு ஒதுங்கி நின்றாள். அவளின் பார்வை மட்டும் கண்ணனின் மீது இருந்தது.

***

“ஏய் எம்பேத்திக் குட்டிக்கு மீன் வையேன்….” என்றார் வேலாயுதம்.

“ஆமா அவ தின்னுட்டாலும்…” என்றாள் சவுந்தரம்.

“ஏம்பா அறுவடைக்கு கூட சரவணன் ரெண்டு நாள் லீவு போட்டுட்டு வரக்கூடாதாக்கும்… அறுத்து… அவிச்சி… அரிசி மூடைய கொண்டு போய் கொடுக்கணுமாக்கும்” என்றாள் செல்வி.
(பகுதி -3 சனிக்கிழமை தொடரும்) 

படம் இணையத்தில் சுட்டது.
-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by Nisha on Mon 1 Feb 2016 - 17:19

எஞ்சாதிகாரன் கொடுத்தாத்தான் சாப்பிடுவேன்னா நாமெல்லாம் சாப்பிடாம சாக வேண்டியதுதான்… எல்லாரும் சேந்தாத்தான் எல்லாம் கிடக்கும்
 நச் வரிகள், அனல் தெறிக்கும் கருத்துகள்
தொடருங்கள் குமார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by பானுஷபானா on Tue 2 Feb 2016 - 12:27

அருமை குமார் தொடருங்க...

கீழ்ச்சாதிக்காரன் தான் தீட்டு அவன் கையால இவுங்களுக்காக செய்யுற வேலையெல்லாம் தீட்டு இல்லையாக்கும்...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by சே.குமார் on Wed 3 Feb 2016 - 21:11

Nisha wrote:
எஞ்சாதிகாரன் கொடுத்தாத்தான் சாப்பிடுவேன்னா நாமெல்லாம் சாப்பிடாம சாக வேண்டியதுதான்… எல்லாரும் சேந்தாத்தான் எல்லாம் கிடக்கும்
 நச் வரிகள், அனல் தெறிக்கும் கருத்துகள்
தொடருங்கள் குமார்!

கருத்துக்கு நன்றி அக்கா...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by சே.குமார் on Wed 3 Feb 2016 - 21:12

பானுஷபானா wrote:அருமை குமார் தொடருங்க...

கீழ்ச்சாதிக்காரன் தான் தீட்டு அவன் கையால இவுங்களுக்காக செய்யுற வேலையெல்லாம் தீட்டு இல்லையாக்கும்...
அப்படித்தானே நடக்குது...
கருத்துக்கு நன்றி அக்கா...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-3)

Post by சே.குமார் on Tue 9 Feb 2016 - 6:05
‘சரவணன் வரலாம்ல... அவனுக்கு நெல்லை அரிசியாக்கி அங்க கொண்டு போய் கொடுக்கணுமாக்கும்’ என்று செல்வி கேட்டதும் “இல்லத்தா…. ரெண்டு பேரும் வாத்தியார் வேலை… இப்ப மழை பேஞ்சதால ஸ்கூலெல்லாம் அதிகமா லீவு விட்டுட்டாங்க…. இனி லீவு இல்லையாம்… நாம பாத்துக்கலாம்… எதுக்கு அவனை தொந்தரவு பண்ணிக்கிட்டு…” மகனை விட்டுக் கொடுக்காமல் பேசினார் வேலாயுதம்.

“அதானே…. சின்னவனை உங்களுக்கு எதுவும் சொல்லக்கூடாது… இவன் எப்பவும் வேலைக் களவாணிப் பயதானே…. மூத்தவனை மாதிரி இவன் என்னைக்கிவயல்ல இறங்கி வேலை பார்த்திருக்கிறான்…” சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.

“ஆமா... மூத்தவன் மாதிரி இவன் இல்லைதான்... அதான் இன்னைக்கி நம்ம சொல்றதைக் கேட்டுக்கிட்டு இருக்கான்... இந்த வீட்டுக்குள்ள அவனைப் பற்றி பேசக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன். அப்படியிருந்தும் அவன் பேச்சுத்தான் எல்லாப் பக்கமும் ஓடுது... அந்த ஓடுகாலி நாயைப் பத்தி என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு... அப்ப உங்க மனசுக்குள்ள எல்லாம் அந்த சாதி கெட்ட மூதேவிதான் இருக்கான் இல்லையா...?” கோபமாக மகளைப் பார்த்துக் கேட்டார்.

“அப்படியில்லப்பா... அவன் வேலை பாப்பான்னு....” மெல்ல இழுத்தாள் செல்வி.

“அதான் பார்த்தானே... நல்ல வேலையா... எவளோ ஒருத்தியை இழுத்துக்கிட்டு ஓடி... கேவலப்பட்ட பய... சாதிக்குன்னு ஒரு மரியாதை இருக்கு... அதை தூக்கி வீசிட்டுப் போன தறுதலை நாயி... அவன் பேச்சு இனி எனக்கு முன்னாடி பேசக்கூடாது... ஆமா... அப்புறம் நான் பொல்லாதவனாயிடுவேன்...”

“சரி... விடுங்க.... அவ ஏதோ வாய் தவறி சொல்லிட்டா... பேத்திக்குட்டி வேற திருதிருன்னு முழிக்கிறா பாருங்க... நீ சாப்புடிடி ஆத்தா... உங்க ஐயாவுக்கு இப்படித்தான் பொசுக்கு பொசுக்குன்னு கோவம் வரும்...” என்று சவுந்தரம் சொன்னதும் யாரும் எதுவும் பேசாமல் அமைதியாகச் சாப்பிட்டனர்.

வேலாயுதம் எழுந்து போன பின்னர், “ஆமா... இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படிக் கத்துறாரு... எனக்கு வேற வேலைவெட்டி இல்லாமத்தான் இங்க வந்தேனா... உங்க வீட்டு கருதறுப்புக்கு வந்து எனக்கென்ன ஆகப்போகுது... ஒரு மூடை அரிசி கொடுப்பியலா... தம்பி டவுனுல கஷ்டப்படுறான்னு சொல்லி அவனுக்கு அவிச்சி ஏத்துவிய... இப்ப என்னவோ மூத்தவன் பேரைச் சொன்னதுக்கு இம்புட்டுக் குதி குதிக்கிறாரு... அவன் வேல பாக்குறதைத்தான் இந்த ஊரே சொல்லுமே... ஆத்தா அப்பன் செரமப்படுறாங்களேன்னு வந்தா... எனக்கு இது தேவைதான்...” செல்வி கோபமாய் சவுந்தரத்திடம் சொன்னாள்.

“விடுத்தா... அவருக்கு அவன் செஞ்சதை ஏத்துக்க முடியலை... அவனைப் பற்றி யாரு பேசினாலும் படக்குன்னு முகத்துல அடிச்ச மாதிரி திட்டிடுறாரு...”

“ஆமா சாதியைக் கட்டிக்கிட்டு அழச் சொல்லு... அதுதான் நாளைக்கு அவருக்கு சோறு போடும்... போன வருசம் முடியாமக் கிடந்தாரே... அப்ப இவருக்கு பாத்த பூமிநாதன் டாக்டரும், அங்க இருந்த நர்ஸ்களும் இவரு சாதியாமா..? அவ்வளவு ஏன் ரத்தம் ஏத்துனாங்களே... அது என்ன இவரு சாதியில இருந்து பிடிச்சாந்த ரத்தமா...? சும்மா சாதி... சாதியின்னு... எங்க ஊரு சந்திரன் மக ஒருத்தனோட ஓடிப்போனா... நம்மளைப் பார்த்தா துண்டெடுக்கிற சாதிப்பயதான்... நல்ல வேலையில இருக்கான்... ஆரம்பத்துல முறுக்குனாங்க... இந்த மகளையும் மாப்பிள்ளையையும் சேத்துக்கிட்டாக... அன்னைக்கி பேத்திய தூக்கிக்கிட்டு எதித்தாப்ல வருது... யாருத்தான்னு கேக்குறேன்... என்ன இப்படிக் கேக்குறே... நம்ம சுசீலா மக... அங்க போயிருந்தேன்... ரெண்டு நாளைக்கு இங்க வச்சிருக்கலாம்ன்னு கூட்டுக்கிட்டு வந்தேன்னு சொல்லிட்டுப் போகுது.... எம்புட்டு நாளைக்குத்தான் இவரு சாதியக் கட்டிக்கிட்டு அழப்போறாரு... எம்புள்ளைகளுக்கு நாளக்கி நல்லது கெட்டதுக்கு ரெண்டு மாமனும்தான் வேணும்... ஆமா சொல்லிப்புட்டேன்...”

“நீ வேற ஏண்டி... சும்மா இருடி... அவரு காதுல கேக்கப்போகுது... தேவையில்லாத பிரச்சினை... விட்டுட்டு வேலையைப் பாரு...”

“ஆமா... இப்படி அவருக்கு பயந்து பயந்து ஜால்ரா போட்டே காலத்தை ஓட்டிட்டே... இனியா நீ மாறப்போறே...”

“சவுந்தரம்... ஆத்தாளும் மகளும் என்ன ரகசியம் பேசுறீங்க...? அந்த வெத்தலையை எடுத்துக்கிட்டு வா...” வாசத்திண்ணையில் இருந்து கத்தினார் வேலாயுதம்.

“போ உங்கப்பனுக்கிட்ட வெத்தலப் பெட்டிய எடுத்துக் கொண்டேக் குடு... நா வாறேன்...” என்று சவுந்தரம் சொன்னதும் செல்வி முணங்கிக் கொண்டே எடுத்துக் கொண்டு போனாள்.

***

சுபத்ரா கொடுத்த குலோப் ஜாமூனை ருசித்தபடி, “ஏம்மா... எங்கே நம்ம அபி..?” என்றான் கண்ணன்.

“டியூசன் போயிருக்கா... இப்ப வந்திருவா... அவ எங்க போறேன்னு சொன்னா... கண்ண அண்ணனெல்லாம் வர்றாங்க... போகலம்மா... ப்ளீஸ்மான்னு கெஞ்சினா... நாந்தான் அவங்க இங்கதான் இருப்பாங்க... போயிட்டு வந்து அவாகிட்ட பேசிண்டிருக்கலாம்ன்னு சொன்னேன்...” என்றாள்.

சாரதியைக் காட்டி “அபி... இவனை மாதிரி இல்லம்மா... ரொம்ப ஜாலியான பொண்ணு... அண்ணா... அண்ணான்னு உசிரை விடும்...” என்றான் கண்ணன்.

“ம்... வீட்ல சாரதிக்கிட்ட பேசிண்டு இருந்தாள்ன்னா அதுல பெரும்பாலும்  கண்ண அண்ணன்... கண்ண அண்ணன்தான்...” என்றாள் சுபத்ரா.

“ஆமா... இன்னைக்கு சாயந்தரம் நான் இங்க வந்தச்சே எனக்கிட்டயும் இந்த கண்ண அண்ணன் புராணம்தான் பாடிண்டு இருந்தா... அதுல இன்னைக்கு நீயுந்தானே எங்க கண்ண அண்ணனைப் பார்க்கப்போறே... அவரு சூப்பர் குணம்ன்னு சொன்னா.... அதான் கொஞ்ச நேரத்துக்கு முந்தி பாத்துண்டிருந்தேனே கண்ண அண்ணாவோட குணத்தை...” கண்ண அண்ணாவை அழுத்தமாகச் சொன்னபடி அவர்களுக்கு எதிரே வந்து அமர்ந்தாள் அவள்.


 
“வாயாடி சும்மா இருடி...” என்றாள் சுபத்ரா.

“என்னைய அடக்கி வைங்க அத்தை... உங்க அத்தையை அடக்காதீங்க... அது பாட்டுக்கு திண்ணையில உக்காந்திண்டு ஜாதி, சம்பிரதாயம்ன்னு கத்திண்டு இருக்கு...” என்றாள் அவள்.

“ஏண்டா... இது நம்ம சாரதியோட தங்கச்சி இல்லை... அப்ப சொந்தக்காரியா இருக்குமோ..? இல்ல பக்கத்து வீடா....? முன்னப்பின்ன தெரியாத நமக்கிட்ட இந்தப் போடு போடுது... ஐயராத்துப் பொண்ணுக்கு பயமிருக்காதுதான்.... ஆனா நம்மளை விட்டு... இல்லையில்ல உன்னைய தாக்குதாக்குன்னு தாக்குது... இந்தக் குட்டிய முன்னப் பின்ன பார்த்திருக்கியா...?’ மெதுவாக கண்ணனின் காதைக் கடித்தான் ஜாகீர்.

“சும்மா இருடா... அத்தை அத்தையின்னு வேற பேசுது... சொந்தமா இருக்கப் போகுது...  குட்டி கிட்டின்னு பேசி அவங்க காதுல விழப்போகுது...” கண்ணனும் மெதுவாகச் சொன்னான்.

“என்னப்பா... உங்களுக்குள்ள பேசிண்டு இருக்கீங்க..?” எனக் கேட்டாள் சுபத்ரா.

“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா... நம்ம சாரதி வீட்ல எல்லாரும் ரொம்ப அன்பா... ரொம்ப நாள் பழகின மாதிரி பேசுறாங்கன்னு சொன்னான்... நான் பாட்டியைத் தவிரன்னு சொன்னேன்...” என்றபடி கண்ணன் எதிரே இருந்த அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

தங்க விக்ரகம் போல் அமர்ந்திருந்தாள் அவள்.


கண்ணன் அவளைப் பார்க்கவும் “அவ எங்க அத்தை பொண்ணு சுபஸ்ரீடா...” என மெல்ல அவனின் காதைக் கடித்தான் சாரதி.

(பகுதி -4 சனிக்கிழமை தொடரும்) 

படம் இணையத்தில் சுட்டது.
-'பரிவை' சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by பானுஷபானா on Tue 9 Feb 2016 - 14:15

எழுத்து நடை அருமை குமார்...

3ஆம் பகுதி வர இவ்ளோ நாளா????????
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by Nisha on Wed 10 Feb 2016 - 20:54

ஆஹா  சுபஸ்ரீ...” வந்தாச்சா?
கதை அமர்க்களம் குமார், அருமையாக செல்கின்றது, 
எத்தனை காலமானாலும் இந்த ஜாதியும் மதமும் நம்மை விட்டு போகவே  போகாது போல!  நிகழ் காலமும், கடந்த காலமுமாய் செல்லும் கதை அருமை, அடுத்து என்ன?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by சே.குமார் on Sat 13 Feb 2016 - 16:36

பானுஷபானா wrote:எழுத்து நடை அருமை குமார்...

3ஆம் பகுதி வர இவ்ளோ நாளா????????
நன்றி அக்கா.
சனிக்கிழமை எழுதுவேன் அக்கா.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by சே.குமார் on Sat 13 Feb 2016 - 16:37

Nisha wrote:ஆஹா  சுபஸ்ரீ...” வந்தாச்சா?
கதை அமர்க்களம் குமார், அருமையாக செல்கின்றது, 
எத்தனை காலமானாலும் இந்த ஜாதியும் மதமும் நம்மை விட்டு போகவே  போகாது போல!  நிகழ் காலமும், கடந்த காலமுமாய் செல்லும் கதை அருமை, அடுத்து என்ன?
கருத்துக்கு நன்றி அக்கா...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-4)

Post by சே.குமார் on Sat 13 Feb 2016 - 16:39

பகுதி-1               பகுதி-2            பகுதி-3                    


‘இது என் அத்தை பொண்ணுடா...’ என்று சாரதி சொன்னதும் கண்ணன் ஒன்றும் சொல்லவில்லை. 

“என்னடா... பதிலைக் காணோம்..?” சாரதியே மீண்டும் கேட்டான்.

“என்ன சொல்லணும்... படபடன்னு பேசுதே... யார் இந்தப் பொண்ணுன்னு பார்த்தேன். உடனே நீ அத்தை பொண்ணுன்னு சொன்னே... அப்புறம் என்ன... சரி சரி... என்ன எதிர்பார்க்கிறேன்னு தெரியுது... உன் வருங்காலம் அழகா இருக்காடா...” என்றான் மெதுவாய்.

“வருங்காலமா... யாரு...? இந்த வாயாடியா...? சரித்தான்... இதைக்கட்டிக்கிட்டு நான் முடியைப் பிச்சிக்கிட்டு நிக்க வேண்டியதுதான்...”

“அதான் நிறைய இருக்கே... பிச்சுக்கிட்டு நில்லு...” என்று சிரித்தான் கண்ணன்.

“என்னங்கடா... ரகசியம் பேசி சிரிக்கிறீங்க..? எங்ககிட்ட சொன்னா நாங்களும் சேர்ந்து சிரிப்போம்ல...” என்றான் அம்பேத்கார்.

“ஒண்ணுமில்லடா... சும்மாதான்...” என்றான் சாரதி.

“என்ன மிஸ்டர் சாரதி, உங்க பிரண்டு யாருடா இந்த அழகின்னு என்னைப் பற்றித்தானே கேட்டார்...” என சுபஸ்ரீ கேட்கவும், “ஆமா இவ ஊர்ல இல்லாத அழகி. உன்னையப் பற்றி ரகசியம் பேச என்ன இருக்கு... உனக்கு மட்டுந்தான் நீ அழகின்னு கர்வம்... மத்தவா சொல்லணும்... அழகியா இல்லையான்னு...” சாரதி சிரித்துக் கொண்டே சொன்னான்.

“அலோ சார்... நாங்க அழகிதான்... இவா சொல்லாட்டி என்ன... எங்க காலேசுல இருக்கா ஆயிரம் பேரு என்னை அழகின்னு தாங்க...”

“அவாளே தாங்கட்டும்... நாங்க தாங்க நினைக்கலை... வெட்டிப் பந்தாவை விட்டுட்டு வேலையைப் பாருடி...”

“டேய்... ஏன்டா... சும்மா அவங்கிட்ட சத்தம் போடுறே... விடுடா...” என்றான் கண்ணன்.

“அது...” என்று இழுத்தவள், “அவாளுக்குத் தெரிஞ்சதுகூட எங்க சாரதி சாருக்கு தெரியலை பாருங்க அத்தை... இதைக் கட்டிக்கிட்டு என்னைய என்ன பண்ணச் சொல்றேள்... நான் மாட்டேன்...”

“ஆமா இவளைக் கட்டிக்கிறேன்னு இவ ஆத்துல வந்து கிடையாக் கிடக்கேன் பாரு... எவளாவது ஏழைப் பிராமணத்தியை கட்டிக்கிட்டு வருவேனே ஒழிய... இந்த வாயாடியை நான் ஆத்துக்காரி ஆக்கிக்கமாட்டேன்...”

“ஆமா நாங்களும் இவாள்தான் வேணுன்னு இங்க வந்து கிடக்கோம் பாருங்க... “
“ஏய் எதுக்குடி இப்ப ரெண்டு பேரும் வாய்க்குவாய் பேசறேள்... ஏன்டா சாரதி எப்ப அவகிட்ட வம்பு பண்ணுறதுன்னு இல்லையா... வந்தவா என்ன நினைப்பாங்க... தினமும் சண்டைதான் போடுறீங்க... உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் கட்டி வச்சுண்டு சண்டை தீர்க்கிறதே எங்க வேலையா இருக்கும் போல... ரெண்டு பேரும் சித்த சும்மா இருங்கோ...”

“பின்ன என்ன அத்தை... சாரதி சார்தானே இப்படிப் பேசுறார்... அவருக்கு பிரண்ட்ஸ் எல்லாம் இருக்கான்னு தைரியம்...”

“விடுங்கங்க... அவன்தான் கிண்டலா பேசுறான்னா... நீங்களும் வருத்தப்பட்டுக்கிட்டு... நாங்க ஒண்ணும் நினைக்கலை... டேய் சாரதி... பாவம்டா அவங்க... எதுக்கு இப்ப சண்டை போடுறே..?” என்று கண்ணன் சமாதானம் பேச, அதை சட்டை செய்யாமல் சுபஸ்ரீ கோபமாக எழுந்து உள்ளே போனாள். சுபத்ராவும் “டீ... சுபா... அவன் கிடக்கான்... நீதான்டி எம் மருமகள்... கோபிக்காதேடி... என் செல்லம்ல்ல....” என பின்னாலே போனாள்.

“எங்கடா படிக்கிறாங்க...? மெதுவாகக்  கேட்டான் பிரவீண்.

“ஏன் அங்க இவங்க அழகியா... இல்லையான்னு போய் பார்க்கவா...?” என்றான் ஜாகீர்.

“என்னடா... அவ... இவன்னு சொன்னீங்க... இப்ப அவங்கன்னு மரியாதை எல்லாம் வருது... மதுரை யாதவா காலேசுல படிக்கிறா... இப்ப லீவுல்ல அதான் வந்திருக்கா... அவங்க வீட்ல இருக்கதைவிட எங்க வீட்லதான் அதிகம் இருப்பா... எங்க அம்மா செல்லம்... எங்க அத்தை கூட அவளுக்கு நீதான் அம்மான்னு சொல்லிச் சிரிப்பாங்க... சும்மா அவளை வம்பிழுப்பேன்... எல்லார்க்கிட்டயும் ரொம்பச் ஜாலியாப் பேசுவா... பிறத்தியார்ன்னு எல்லாம் பார்க்கமாட்டா... அவளுக்கு கூட்டமா உக்காந்து ஜாலியாப் பேசினா ரொம்பப் பிடிக்கும்... முற்போக்கு சிந்தனைவாதி... கல்லூரி பட்டிமன்றப் பேச்சாளர்... நிறைய கவிதை எழுதுவா... போட்டிகளில் ஜெயிச்சு பிரைஸ் வாங்கி குவித்து வைச்சிருக்கா... எந்த பிரைஸ் வாங்கினாலும் முதல்ல அம்மாக்கிட்ட கொண்டு வந்து கொடுத்து ஆசி வாங்கிக்குவா... அம்மாவுக்கும் அவ ஒருநாள் போனில் பேசலைன்னாலும் மனசு சரியில்லைன்னு புலம்பிடுவாங்க... அதனால எத்தனை மணியா இருந்தாலும் அவ வீட்டுக்குப் பேசுறாளோ என்னமோ அம்மாக்கிட்ட பேசிருவா... சில சமயம் அத்தை அவ பேசினாளான்னு அம்மாக்கிட்ட வந்து கேட்டுட்டுப் போகும்... அவ ரொம்ப நல்லவடா... வெகுளி... யாரும் அவ முன்னாடி சோகமா இருக்கக்கூடாது... அவளுக்கு எல்லாரும் சந்தோஷமா... மகிழ்ச்சியா... இருக்கணும்.” சாரதி நீளமாய் பேசி முடித்தான்.

“அது சரி... அப்புறம் என்ன... ரொம்ப நல்ல பொண்ணா இருக்காங்க... என்ன கேட்டே... ஏன்டா அவங்க... இவங்கன்னு பேசுறீங்கன்னுதானே... உன் மனைவியா வரப்போறவங்க... எங்க சிஸ்டர்... சோ இனி அவங்க... இவங்கதான்...” சொல்லிச் சிரித்தான் அம்பேத்கார்.

“அடப்போங்கடா... காலம் என்ன நினைக்குதுன்னு பார்ப்போம்...” என்றான் சாரதி.

“சுபஸ்ரீதான் சாரதிக்குன்னு எழுதிவச்சி ரொம்ப நாளாச்சு... இனி காலம் என்ன மாத்துறது...” என்றான் கண்ணன்.

அப்போது...

“கண்ணண்ணா...” என வாசலில் இருந்து கூவியபடி அபி உள்ளே நுழைய, “வயசுக்கு வந்த பொம்மனாட்டிக்கு அடக்கம் ஒடுக்கம் வேண்டாம்... வீதியில நின்னுன்டு கத்துறே... “ திண்ணையில் இருந்து கத்தினாள் பாட்டி.

ருதறுப்பு முடிந்த இரவில்....

“ஏத்தா... மாப்பிள்ளைக்கு நாட்டுக்கோழி ரசம்ன்னா ரொம்பப் பிடிக்கும்ல்ல... இன்னும் கொஞ்சம் ஊத்து...” சாப்பிட்டுக் கொண்டே சொன்னார் வேலாயுதம்.

“அடி ஆத்தி... போதும்... வயிறு புல்லா இருக்கு....” என்று மறுத்தான் ராமநாதன்.

“காலையில சீக்கிரமே போகணுமாப்பா... பத்து மணி வாக்குல போகலாம்ல்ல... உங்களுக்குப் புடிக்குமேன்னு குழிப் பணியாரத்துக்கு போட்டு ஆட்டி வச்சிருக்கேன்... சாப்பிட்டுப் போகலாம்ல்ல...” மெதுவாகக் கேட்டாள் சவுந்தரம்.

“காலையில கடைக்குப் போயாகணும்... நாளை மறுநாள் முகூர்த்தம் நாள்.... நிறைய பாத்திரம் கொடுக்கணும்... செல்வி இருந்துட்டு வரட்டும்...”

“ஏம்ப்பா... சாப்பிட்டு போங்க... ஒம்போது மணி வாக்குல நம்ம பிரசிடெண்ட் தம்பி வர்றேன்னு சொல்லியிருக்கு... நாளைக்கு நம்மூருல சாதிச் சங்க போர்டு வைக்கிறோமுல்ல...”

“எனக்கு வேலை இருக்கு மாமா... நாலு சாதி இருக்க ஊர்ல எதுக்கு மாமா சாதிச் சங்க போர்டு அது... இதுன்னு... தாயாப்பிள்ளையா பழகுற இடத்துல இதெல்லாம் நுழைஞ்சா பிரச்சினைக்குத்தானே வழிவகுக்கும்.”

“அதுக்காக... நாலு கட்சிக் கொடி பறக்குற இடத்துல நம்ம சாதிப் போர்டு வச்சா என்ன தப்புங்கிறேன்... எந்தச் சாதிக்காரன் வேணுமின்னாலும் வச்சிக்கட்டும்... அதுபோக நாம வக்கிறதுக்கு முன்னால வேற யாராச்சும் வச்சிட்டானா... நமக்கு அசிங்கமில்லையா...?”

“என்னமோ மாமா... உங்க அளவுக்கு எல்லாம் எங்களால சாதியை தூக்கிச் சொமக்க முடியலை... எங்கயாச்சும் கேட்டாலும் எவனாச்சும் பேசினாலுந்தான் எனக்கெல்லாம் சாதியே ஞாபகத்துல வரும்...”

“நம்ம சாதிக்குன்னு ஒரு மரியாதை இருக்குல்லப்பா... அதை கீழ போட்டு உடைச்சிடக்கூடாது... இன்னைக்கு இருக்க தலமுறை அதைத்தான் பண்ணுது... அதான் அவனுகளுக்கும் சாதி உரத்தை ஏத்தத்தான் இதெல்லாம்... பாருங்க... இப்ப அம்புட்டுபய வண்டியிலயும் நம்ம சாதிச் சிங்கம் போட்டா ஓட்டிக்கிட்டு திரியிறானுங்க...”

“என்னமோ போங்க... நானெல்லாம் சாதி சாதியின்னு நின்னா என்னோட பாத்திரக்கடை தொழிலெல்லாம் படுத்திருக்கும். வர்ற சமையக்காரன் எல்லாம் நம்ம சாதிக்காரனா வர்றான்... இன்னொன்னு தெரியுமா மாமா... நம்ம ஆளுக பூராம் எங்கே நா நல்லா வந்துருவேனோன்னு செட்டியார்கிட்டதான் பாத்திரம் எடுக்குறானுங்க... இந்த சாதியை எல்லாம் நான் வீட்டை விட்டு வெளிய போகும் போது எறவாரத்துலயே  விட்டுட்டுப் போயிடுவேன்... எனக்கு வேண்டாம் இதெல்லாம்... சாதி... சாதியின்னு பேசித்தான்... இன்னைக்கு வேற சாதியில இருந்து ஒருத்தி நம்ம வீட்டுக்கு மருமகளா வந்திருக்கா... விட்டுட்டு வேலையைப் பாருங்க மாமா...” எதார்த்தமாய்ச் சொல்லியபடி எழுந்து போனான் ராமநாதன்.

வேலாயுதம் சவுந்தரத்திடமும் செல்வியிடமும் கத்துவதைப் போல் கத்த முடியாமல் தட்டில் இருந்த சாப்பாட்டின் மீது  கை கழுவிக் கொண்டிருந்தார்.

(அடுத்த சனிக்கிழமை தொடரும்)
-‘பரிவை’ சே.குமார்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by Nisha on Sun 14 Feb 2016 - 2:33


சுபஸ்ரீ குறித்த வர்ணனைகள் அசத்தல். அதெப்படி கரெக்டாக அத்தனை குணாதிசயங்களையும் பட்டியல் போட்டீர்கள் சார்?

நட்புக்களிடையாய் உரையாடல்களும் அருமை குமார், கடைசியில் அந்த பாட்டி,,, நச்!ஒன்றையும் விடாமல் கவனித்திருப்பீர்கள் போலவே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 14 Feb 2016 - 7:51

அருமையான நகர்வு கதை சுவாரஷ்யமாக இருக்கிறது தொடருங்கள் பாராட்டுகள் அண்ணா
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by பானுஷபானா on Tue 16 Feb 2016 - 11:33

அருமை குமார் முழுக்கதையும் படிக்கும் ஆவல் வருகிறது. இனி 5 பாகம் எப்போதோ?????
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by சே.குமார் on Sun 21 Feb 2016 - 6:17

நேசமுடன் ஹாசிம் wrote:அருமையான நகர்வு கதை சுவாரஷ்யமாக இருக்கிறது தொடருங்கள் பாராட்டுகள் அண்ணா

கருத்துக்கு ரொம்ப நன்றி ஹாசிம்.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by சே.குமார் on Sun 21 Feb 2016 - 6:20

Nisha wrote:
சுபஸ்ரீ குறித்த வர்ணனைகள் அசத்தல். அதெப்படி கரெக்டாக அத்தனை குணாதிசயங்களையும் பட்டியல் போட்டீர்கள் சார்?

நட்புக்களிடையாய் உரையாடல்களும் அருமை குமார், கடைசியில் அந்த பாட்டி,,, நச்!ஒன்றையும் விடாமல் கவனித்திருப்பீர்கள் போலவே!

எல்லாம் ஒரு அனுபவம்தான் அக்கா.. :)

ஹா... ஹா...

பாட்டியை எங்கே போய் பார்க்கிறது... ஆமா இப்படிப் பாட்டியெல்லாம் இப்ப இருக்கா??

கருத்துக்கு நன்றி அக்கா...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by சே.குமார் on Sun 21 Feb 2016 - 6:22

பானுஷபானா wrote:அருமை குமார் முழுக்கதையும் படிக்கும் ஆவல் வருகிறது. இனி 5 பாகம் எப்போதோ?????

தங்கள் ஊக்கத்திற்கு நன்றி அக்கா...
தொடர் வாசிப்பிற்கும் நன்றி...
சனிக்கிழமைகளில் தொடர்வேன்... தொடர்ந்து எழுதுவதா இல்லை நிறுத்திவிடலாமாங்கிற மனநிலையில்தான் பயணிக்கிறது....
நிறுத்தினால் கூட முழுவதும் எழுதியதும் தங்களுக்கு படிக்கத் தருகிறேன்... நன்றி.
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by சே.குமார் on Sun 21 Feb 2016 - 6:22

Nisha wrote:
சுபஸ்ரீ குறித்த வர்ணனைகள் அசத்தல். அதெப்படி கரெக்டாக அத்தனை குணாதிசயங்களையும் பட்டியல் போட்டீர்கள் சார்?

நட்புக்களிடையாய் உரையாடல்களும் அருமை குமார், கடைசியில் அந்த பாட்டி,,, நச்!ஒன்றையும் விடாமல் கவனித்திருப்பீர்கள் போலவே!

எல்லாம் ஒரு அனுபவம்தான் அக்கா.. :)

ஹா... ஹா...

பாட்டியை எங்கே போய் பார்க்கிறது... ஆமா இப்படிப் பாட்டியெல்லாம் இப்ப இருக்கா??

கருத்துக்கு நன்றி அக்கா...
avatar
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1408
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி - 7)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum