சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஐ.நா. ஆணையாளர் யாழ், திருமலை விஜயம்

Go down

Sticky ஐ.நா. ஆணையாளர் யாழ், திருமலை விஜயம்

Post by நண்பன் on Mon 8 Feb 2016 - 8:20


யாழில். பெண் முறையீடு...

யாழ். முஸ்லிம்கள் மகஜர் கையளிப்பு...

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹுசைன் நேற்று யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கு விஜயம் செய்து அரசியல் பிரமுகர்களையும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்திருந்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதலமைச்சர்கள், ஆளுநர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் என பலதரப்பட்ட சந்திப்புக்களிலும் அவர் கலந்துகொண்டிருந்தார்.
நேற்றுக் காலை ஹெலிக்கொப்டர் மூலம் யாழ்ப்பாணத்தை சென்றடைந்த ஹூசைன், வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மாகாண அமைச்சர்களான குருகுலராஜா, ஐங்கரநேசன், டனீஸ்வரன் உள்ளிட்ட குழுவினரைச் சந்தித்தார்.
வடமாகாணத்தில் இன்னமும் அதிகமாகக் காணப்படும் இராணுவப் பிரசன்னம், காணாமல் போனவர்கள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் காணப்படும் இழுபறிகள், தமிழ் மக்களின் காணி விடுவிப்பில் காணப்படும் தாமதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து வடமாகாண முதலமைச்சர், அல் ஹூசைனுக்குச் சுட்டிக்காட்டியிருந்தார்.
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் காணாமல் போனவர்களின் நிலைமைகள் உள்ளிட்ட விடயங்களைக் கொண்ட அறிக்கையொன்றும் முதலமைச்சரால் அவருக்கு வழங்கப்பட்டது.
அல் ஹூசைனின் விஜயத்தின்போது தமது குறைகளைத் தெரியப்படுத்துவதற்காக காணாமல்போனவர்களின் உறவினர்கள் முதலமைச்சரின் அலுவலகத்துக்கு வெளியே காணாமல்போன தமது உறவுகளின் புகைப்படங்களைத் தாங்கியவாறு காத்திருந்தனர். வாகனத்தில் சென்ற ஹசைன் அவர்களைக் கண்டதும் இறங்கிச்சென்று வணக்கம் தெரிவித்துக் கலந்துரையாடினார்.
ஹசைனைக் கண்டதும் கண்ணீர்விட்டு அழுது தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாதுள்ளது. இதற்கு ஒரு தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர். தான் தற்பொழுது முதலமைச்சரைச் சந்திக்கப் போவதாகவும், பாதிக்கப்பட்ட உங்களை தான் சந்திப்பேன் என்றும் கூறிச்சென்றார்.
முதலமைச்சருடனான சந்திப்பை முடித்துக்கொண்டு ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் பலிகக்காரவுடன் சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் மற்றும் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இச்சந்திப்பைத் தொடர்ந்து
நல்லூர் கந்தசாமி கோவிலுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
இதற்போது அங்கு காத்திருந்த வடபகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் தமது மீள்குடியேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் அடங்கிய மகஜரொன்றை அவரிடம் கையளித்தனர்.
அதனையும் பெற்றுக்கொண்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அங்கிருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்துக்குச் சென்றார்.
அதன் பின்னர் இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் சுன்னாகம் முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்துகொண்டார்.
இடம்பெயர்ந்த மக்கள் தமது அனுபவங்களையும் தமது குறைபாடுகளையும் ஹூசைனுக்கு எடுத்துக் கூறியிருந்தனர். மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் ஹூசைன் அவர்களுடைய கருத்துக்களை அறிந்துகொண்டார். யாழ்ப்பாண விஜயத்தை முடித்துக்கொண்டு ஹெலிக்கொப்டர் மூலம் அவர் திருகோணமலைக்குப் பணயமானார்.
பிற்பகல் 2.35 மணிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில், முதலமைச்சர் ஹாபீஸ் நசீர், விவசாயத்துறை அமைச்சர் துரைராஜசிங்கம், கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, காணி அமைச்சர் ஆரியவதிகலபதி உள்ளிட்ட குழுவினருடன் ஹூசைன் கலந்துரையாடல்களை நடத்தினார். கிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இச்சந்திப்புக்களைத் தொடர்ந்து பிற்பகல் 3.40 மணிக்கு உட்துறைமுக வீதியில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னான்டோவையும் அவர் சந்தித்தார். ஆளுநருடனான சந்திப்பை முடித்துக்கொண்டு மனித உரிமைகளுக்கும் பாதுகாப்புக்குமான நிலையம் ஏற்பாடு செய்திருந்த சிவில் சமூக அமைப்புக்களுடான கலந்துரையாடல் நிகழ்வொன்றிலும் ஹூசைன் கலந்துகொண்டார்.
மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், காணாமல்போனவர்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டு தமது குறைகளை அவரிடம் எடுத்துக் கூறியிருந்தர்.
இச்சந்திப்புக்களை முடித்துக்கொண்டு மாலை அவர் கொழும்பு திரும்பினார்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஐ.நா. ஆணையாளர் யாழ், திருமலை விஜயம்

Post by நண்பன் on Mon 8 Feb 2016 - 8:47


விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை அனுமதிப்பது தொடர்பான குழப்பத்துக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் நிலைப்பாடு என்ன என்பதை அறிய ஆவலாக இருப்பதாக உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பி.பி.சி மற்றும் அல்ஜசீரா ஊடகங்களுக்கு வழங்கிய செவ்விகள் மற்றும் பிரதமர் சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை அனுமதிப்பது தொடர்பில் குழப்பமான நிலை ஏற்பட்டது. தற்பொழுது இலங்கை சென்றிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹூசைன் இது விடயத்தில் என்ன கூறவுள்ளார் என்பதை ஆவலுடன்எதிர்பார்த்துள்ளோம் என உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரை இலங்கை அரசாங்கம் அழைத்தமை மற்றும் தனது வேலைப்பழுக்களின் மத்தியில் அவர் இலங்கை சென்றிருப்பதையும் நாம் பாராட்டுகின்றோம். வடக்கு, கிழக்கிற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களையும், மக்களின் பிரதிநிதிகளையும் நேரடியாகப் பார்வையிட்டமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார்.
2015 ஒக்டோபர் 1ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஹூசைன ஆராய்வார் என நம்புவதாகவும் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை, இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையுடன் மாத்திரம் பேச்சுக்களை நடத்தாமல் புலம்பெயர்ந்து வாழும் மிதவாத தரப்பினருடனும் உத்தியோகபூர்வ பேச்சுக்களை நடத்துவது அவசியமானதும் அவசரமானதுமான தேவையாகம் என உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஆட்சியைப் பிடித்திருக்கும் புதிய அரசாங்கம் புலம்பெயர்ந்துவாழ்பவர்கள் முக்கியமான தரப்பினர் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறான நிலையிலேயே உலகத் தமிழர் பேரவை புதிய அரசாங்கத்துடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளரும், மூலோபாய முயற்சிகள் பணிப்பாளருமான சுரேன் சுரேந்திரன் கூறியுள்ளார்.
இந்தியாவுடன் நேரடியாக ஈடுபடுவதற்கு உலகத் தமிழர் பேரவை விரும்புகிறது. இது முக்கியமான தருணத்தில் மிதவாதப் போக்குடையவர்களை வலுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடன் உத்தியோகபூர்வமான கலந்துரையாடல்களை நடத்துவது அவசியமானதும் அவசரமனதுமாகும்.
இதன் மூலம் இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் மிதவாதிகளை ஒன்றிணைத்து பலப்படுத்த முடியும் என்று நம்புவதாகவும் சுரேன் சுரேந்திரன் கூறியுள்ளார்.
உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் தமிழ்நாடு மற்றும் புதுடில்லியில் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமைத்துவத்தைச் சந்தித்துள்ளது. இருந்தபோதும் இந்திய அரசாங்கத்துடன் ஏற்படுத்த எதிர்பார்த்திருக்கும் நட்புறவை ஏற்படுத்தமுடியமலிருப்பது துரதிஷ்டவசமானது என்றும் தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum