சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

படித்த சிறந்த சிறுகதைகள்

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 9 Feb 2016 - 13:59

First topic message reminder :

வெளிநாட்டு பயணம்
 

நான் வெளி நாடுகளுக்குப் போனதில்லை. அன்னியர் வீட்டில் நுழைந்து பார்த்து, "அங்கே அது இருக்கிறது; இது இருக்கிறது, நம்மிடம் அதெல்லாம் இல்லையே...' என்று, தம் வீட்டோடு ஒப்பிட்டு ஏங்கி, அங்கலாய்க்கும், அலையும் குணமே, வெளிநாடு சுற்றிப் பார்க்கும் பலரிடமும் நிறைந்திருப்பதாக, எனக்குத் தோன்றுகிறது.வேடிக்கை பார்ப்பதற்காகச் சிலர் செல்கின்றனர். எனக்கோ, நம் வீதிகளில் நடக்கும் வேடிக்கைகளே, இன்னும் பார்த்துத் தீரவில்லை. புதுமைகளை ரசிப்பது எனில், என்னைத் தேடி வரும் ஒவ்வொன்றுமே, புதுமையாக இருக்கின்றன. கற்றுக் கொள்வதற்காக எனில், என்னைச் சுற்றி இருக்கும் மிகக் குறுகிய வட்டத்தில் கூட, நான் காணவும், கற்கவும், ஏராளமான விஷயங்கள் இன்னும் இருக்கின்றன.ரஷ்ய எழுத்தாளர்களான கோகோல், புஷ்கின், தாஸ்தியேவ்ஸ்கி, டால்ஸ்டாய், துர்க்கனீவ் ஆகியோரின் படைப்புகளைப் படித்திருக்கிறேன். அவர்கள் நேசித்த ருஷ்ய ஆத்மா மிக உயர்வாக இருந்தது. அதன் காரணமாகவே, ரஷ்யாவை காண, நான் ஒருமுறை இசைந்தேன்.நம் பெருமையை உலகு அறிவதற்காக, அதனால், உலகு பயன் உறுவதற்காக - ஒரு விவேகானந்தர் போல் நம்மால் போக முடியுமா?அல்லாமல், லண்டனில் இட்லி - சாம்பார், கும்பகோணம் வெற்றிலை - சீவல் கிடைப்பதைப் பற்றி, கதை அளந்து, ஜப்பானிய, "கீய்ஷா' பெண்களைப் பார்த்து, "அப்பப்பா... அச்சச்சோ!' என்று வாய் பிளந்து, ஆச்சரியப் படுவதற்கும் தானா போக வேண்டும்!சுங்க இலாகா சோதனை, வருமான வரி சர்ட்டிபிகேட், பாஸ்போர்ட், விசா, அறிமுகக் கடிதங்கள், இத்யாதி சங்கடங்களைத் தாங்கிக் கொண்டு, ஒரு சர்வதேச கைதி போல, இந்தச் சடங்குகளைச் சுமந்துகொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் ஏறியும், இறங்கியும், நான் சாதிக்கப் போவது ஏதுமில்லை என்று எனக்குத் தெரியும். நான் இருக்குமிடத்தில் தான், எனக்குச் சிறப்பு.எங்கும், எல்லாரும் சுதந்திரமாகத் திரியும் காலம் வரும். அப்போது, எல்லாருக்கும் இந்த மோகம் குறையும். எனக்கு, இப்போது இந்த மோகம் இல்லை.
நான் வெளி நாடுகளுக்குப் போனதில்லை. அன்னியர் வீட்டில் நுழைந்து பார்த்து, "அங்கே அது இருக்கிறது; இது இருக்கிறது, நம்மிடம் அதெல்லாம் இல்லையே...' என்று, தம் வீட்டோடு ஒப்பிட்டு ஏங்கி, அங்கலாய்க்கும், அலையும் குணமே, வெளிநாடு சுற்றிப் பார்க்கும் பலரிடமும் நிறைந்திருப்பதாக, எனக்குத் தோன்றுகிறது.

வேடிக்கை பார்ப்பதற்காகச் சிலர் செல்கின்றனர். எனக்கோ, நம் வீதிகளில் நடக்கும் வேடிக்கைகளே, இன்னும் பார்த்துத் தீரவில்லை. புதுமைகளை ரசிப்பது எனில், என்னைத் தேடி வரும் ஒவ்வொன்றுமே, புதுமையாக இருக்கின்றன. கற்றுக் கொள்வதற்காக எனில், என்னைச் சுற்றி இருக்கும் மிகக் குறுகிய வட்டத்தில் கூட, நான் காணவும், கற்கவும், ஏராளமான விஷயங்கள் இன்னும் இருக்கின்றன.

ரஷ்ய எழுத்தாளர்களான கோகோல், புஷ்கின், தாஸ்தியேவ்ஸ்கி, டால்ஸ்டாய், துர்க்கனீவ் ஆகியோரின் படைப்புகளைப் படித்திருக்கிறேன். அவர்கள் நேசித்த ருஷ்ய ஆத்மா மிக உயர்வாக இருந்தது. அதன் காரணமாகவே, ரஷ்யாவை காண, நான் ஒருமுறை இசைந்தேன்.

நம் பெருமையை உலகு அறிவதற்காக, அதனால், உலகு பயன் உறுவதற்காக - ஒரு விவேகானந்தர் போல் நம்மால் போக முடியுமா?

அல்லாமல், லண்டனில் இட்லி - சாம்பார், கும்பகோணம் வெற்றிலை - சீவல் கிடைப்பதைப் பற்றி, கதை அளந்து, ஜப்பானிய, "கீய்ஷா' பெண்களைப் பார்த்து, "அப்பப்பா... அச்சச்சோ!' என்று வாய் பிளந்து, ஆச்சரியப் படுவதற்கும் தானா போக வேண்டும்!

சுங்க இலாகா சோதனை, வருமான வரி சர்ட்டிபிகேட், பாஸ்போர்ட், விசா, அறிமுகக் கடிதங்கள், இத்யாதி சங்கடங்களைத் தாங்கிக் கொண்டு, ஒரு சர்வதேச கைதி போல, இந்தச் சடங்குகளைச் சுமந்துகொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் ஏறியும், இறங்கியும், நான் சாதிக்கப் போவது ஏதுமில்லை என்று எனக்குத் தெரியும். நான் இருக்குமிடத்தில் தான், எனக்குச் சிறப்பு.

எங்கும், எல்லாரும் சுதந்திரமாகத் திரியும் காலம் வரும். அப்போது, எல்லாருக்கும் இந்த மோகம் குறையும். எனக்கு, இப்போது இந்த மோகம் இல்லை.

நன்றி ; ஜெயகாந்தன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


Sticky Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 7 Jun 2016 - 13:55

காட்டிலிருந்து வந்தவன்
---
கேட்டுக்கேள்வியில்லாமல் கேற்றைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான். அப்போது நான் வீட்டு முன் விறாந்தையிலிருந்தேன். மதியச் சாப்பாட்டின் பின்னர் சற்று ஓய்வாக சாய்வுக் கதிரையில் அமர்வது வழக்கம். அதை ஓய்வு என்றும் சொல்ல முடியாது. யோசனை... கவிழ்ந்துகொண்டிருக்கும் கப்பலை எப்படி மீட்டெடுப்பது என்ற யோசனை..!

யோசனை தடைப்பட.. வருபவன் யாராக இருக்கும் என்று எண்ணம் ஓடியது. முன்பின் அறிமுகமானவன் போலத் தெரியவில்லை. மெலிந்த தேகம். கறுப்பு லோங்சும் வெள்ளை சேர்ட்டும் அணிந்திருந்தான். யாராவது சலுகை விலையில் பொருட்களை விற்பவர்களாக இருக்குமோ? ஆனால் அவனது கையில் ஏதும் பொருட்களுமில்லை.. களுத்துப்பட்டியுமில்லை! நடையில் ஒரு அவசரம் தெரிந்தது.. விறுவிறு என வந்தான். பார்த்துக் கொண்டிருக்கும்போதே வீட்டுக்குள்ளும் நுளைந்தான்.

நானுண்டு என் பாடுண்டு என்றிருந்த என்னைப் பார்த்து உறுக்குவதுபோலக் கேட்டான்…

“நீங்கதானே சுந்தரபாண்டியன்?” (அதுதான் எனது பெயர்)

ஒருவேளை ஊரிலிருந்து வருகிற யாராகவோ இருக்கலாம். இப்படி வருகிற யாரிடமாவது அம்மா கடிதமோ கற்கண்டோ கொடுத்துவிடுவாள். ஒரே ஒரு கடிதத்தைத் தருவதற்காக இவ்வளவு தூரம் வந்தவனுக்கு ஆத்திரம் ஏற்படுவது இயல்புதான். பயணக் களைப்பாயிருக்கும்.. அதுதான் எரிந்து விழுகிறான். நான் அவனைச் சமாதானப்படுத்தினேன்.. “அவசரப்படாமல் இதிலை இருங்கோ..தம்பி..! (கதிரையைக் காட்டியவாறே..) மத்தியானம் சாப்பிட்டிட்டீங்களோ..?”

ஆளுக்குப் பசிபோலிருக்கிறது.. எரிச்சலுக்கு அதுவும் ஒரு காரணம்தான். அவனது முகத்தோற்றமே அதைக் காட்டியது. எனினும் அவனுக்குச் சாப்பாடு போடும் உத்தேசம் எனக்கு இல்லை! சும்மா அப்படிக் கேட்டு அவனது சூட்டைக் கொஞ்சம் குறைக்கலாமே என்ற நோக்கம்தான்.

“நான் இங்க சாப்பிட வரயில்ல..” - வெடித்துப் பேசினான்.

“தம்பி.. நீங்கள்.. ஆர்..? எனக்குத் தெரியயில்ல.. எங்கயிருந்து வாறீங்கள்?

“காட்டிலையிருந்து..!”

ஒரு நிலையிலின்றி அந்தச் சுவருக்கும் இந்தச் சுவருக்கும் இடையில் வீச்சாக நடந்தான்.. கைத் தொலைபேசியை எடுத்து அதே விசையில் இலக்கங்களை அழுத்…தி..னான்.

“சரி...ஸ்பொட்டுக்கு வந்தாச்சு..! ஆள் இருக்கிறார்..!” 

அந்தப் பதில் என்னைச் சட்டெனக் கதிரையிலிருந்து எழுப்பியது.

பொக்கட்டிலிருந்து ஒரு அட்டையை எடுத்து அதில் இருந்த இலச்சினையைக் காட்டித் தன்னை அடையாளப்படுத்தினான். என்னையும் ஒரு கண்ணால் பார்த்துக்கொண்டு.. தொலைபேசியில் இன்னும் சிலரை எடுத்து, ஸ்பொட் அது இது என்று தகவல்கள் சொன்னான். உண்மையில் அப்படி யாருடனும் பேசுகிறானா அல்லது என்னை மிரட்டுகிற முயற்சியா என ஒரு கணம் யோசித்தேன். அந்த யோசனை நீடிக்கமுதலே.. அவனது கையில் ஒரு கையடக்கத் துப்பாக்கி! கண் இமைக்கும் நேரத்தில் தனது பொக்கட்டினுள்ளோ.. சேர்ட் மறைவிலோ இருந்து அதை எப்படி எடுத்தான்?
அது ஒரு மந்திரவித்தை போலிருந்தது. சரியாகத் தெரியமுதலே.. என்னை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு அவனது மறு கைக்கு மாறி மறைவிடத்துக்குப் போனது.

நான் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். எனினும் அதைப் பெரிதுபடுத்தாமல்.. (சிறிய துப்பாக்கிதானே..! என்ன செய்துவிடப்போகிறது என்ற) அசட்டுத்துணிவுடன்.. 

“தம்பி அவசரப்படாமல் இதிலை இருங்கோ..!” 

…கதிரையை அவனுக்கு அண்மையாக இழுத்து வைத்தேன்.

“நான் இங்க இருக்கிறதுக்கு வரயில்ல.. வெளிக்கிடுங்க இப்ப..! வெளியில வான் நிக்குது… உங்களைக் கொண்டுபோக வந்திருக்கிறம்!”

உள்ளே இரத்த ஓட்டம் ஒருமுறை நின்றுவிட்டது போன்ற உணர்வில் அதிர்ந்தேன். எனினும் நிதானிக்க முயன்றேன்.

“என்ன விஷயம்.. சொல்லுங்கோ..!”

“பல தடவை உங்களுக்குக் கடிதம் போட்டிருக்கிறம்.. நீங்கள் வந்து சந்திக்கயில்ல.. அதுதான் கொண்டுபோய் விசாரிக்க வேண்டியிருக்கு…!”

ஒரு சடப்பொருளைத் தூக்கிக்கொண்டுபோக வந்தவன் போன்ற ஸ்டைலில் அவனது பதில் இருந்தது.

“எனக்கு அப்பிடி ஒரு கடிதமும் வரயில்ல.. என்ன காரணம்?.. ஏன் நான் வரவேணும்?”

“அதையெல்லாம் அங்கை போய்ப் பேசலாம்.. இப்ப நீங்க வரப்போறீங்களா.. இல்லையா? இல்லையென்றால் பைஃபோசாகக் கொண்டுபோகவேண்டியிருக்கும்...!”

மீண்டும் ரெலிபோனை எடுத்து புரியும் பாஷையில் புரியாதமாதிரித் தகவல்கள் பேசிக்கொண்டிருந்தான். நான் வீட்டுக்குள் திரும்பிப் பார்த்தேன். மனைவியோ பிள்ளைகளோ கிட்ட நின்றால் இவன் பேசுவது அவர்கள் காதிலும் பட்டுவிடக்கூடும்... அதனால் அவர்களும் குழம்பிப்போய்விடுவார்களே எனக் கவலையாயிருந்தது.

அப்போது வீட்டுக்குள்ளிருந்து எனது தகப்பனாரின் செருமும் குரலும், நடந்து வரும் காலடிச் சத்தமும் கேட்டது. அவர் வயசானவரென்றாலும் கம்பீரமான மனுசன். இருமுவது செருமுவதுகூட நாலு வீடுகளுக்குக் கேட்கக்கூடியதாயிருக்கும். அதனால் அக்கம் பக்கத்து வீடுகள்கூட கொஞ்சம் அடக்கம்! அப்படிப்பட்டவரின் குரல் அவனையும் அச்சுறுத்தியிருக்கவேண்டும்.   செருமல் சத்தம் கேட்டதும் அவனது கை சட்டென றிவோல்வரை இழுத்..

“தம்பி..தம்பி.. ! அது என்ர அப்பா..! வயசானவர்.. வருத்தக்காரன்..” (அதனால் அவரை மன்னித்துவிடுங்கோ எனக் கேளாமல் கேட்டுக்கொண்டேன்) அப்பா வயசானவராகவும் வருத்தக்காரனாகவும் இருந்தது நல்லதாகப்போய்விட்டது! அவரை அவன் மன்னித்தருளினான்.

அப்பா இங்கிதம் தெரிந்தவர். வெளியில் காற்றோட்டமாக அமர்வதற்கு வந்தவர்.. நான் யாருடனோ பேசிக்கொண்டிருப்பதைக் கண்டதும் திரும்பவும் உள்ளே போய்விட்டார். வீட்டில் யாரையும் குழப்பமடையச் செய்யாமல் இவனைச் சமாளிக்கவேண்டுமே என்ற கலக்கம் என் மனதை குழப்பிக்கொண்டிருந்தது. இவன் உண்மையில் யாராக இருக்கும் என்று உள்ளே மனம் கணக்குப் போட்டது. ஏதோ ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவனென்று அடையாளம் காட்டினான். அது உண்மையாகவும் இருக்கலாம். அல்லது வேறு யாராவது பணம் பறிக்கும் கோஷ்டியைச் சேர்ந்தவனாகவும் இருக்கலாம். அப்படியுமில்லாமல் மக்களின் உளவியலைக்; குழப்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பப்படும் குழுக்களைச் சேர்ந்தவனாகவும் இருக்கலாம்.  எப்படிப்பட்டவனாயிருந்தாலும் துப்பாக்கி வைத்திருக்கும் ஆளைத் தந்திரமாகத்தான் கையாளவேண்டும்.

“தம்பி.. நானும் வருத்தக்காரன்.... நெஞ்சு நோவுக்கு குளிசை எடுக்கிறனான். அங்க.. இஞ்ச ஒரு இடமும் வரேலாது.. உங்களுக்கு என்ன வேணும்.. சொல்லுங்கோ..?” (வருத்தக்காரன் என்று சொன்னால் ஆள் மடங்கிவிடுவான் போலிருக்கு!)

“நாங்கள் கேட்டு எழுதின தொகை காசை நீங்கள் கொண்டுவந்து தரயில்ல.. அதுதான் இப்ப வந்திருக்கிறம்...”

“காசா.., எவ்வளவு..?”

“இருபது லட்சம்..!”
நான் அப்படியே பொத்தெனக் கதிரையில் அமர்ந்தேன். வாய் மூடிக்கொண்டது. மூச்சை அதிகமாக உள்ளிளுத்து மீண்டும் இயல்புநிலைக்கு வர முயன்றேன். நான் ஏதும் பேசாதிருக்க அவன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.

“உங்களைப்பற்றின எல்லா விபரங்களும் எங்களுக்குத் தெரியும்.. உங்கட வருமானம் எவ்வளவு என்றும் தெரியும்.. புலனாய்வுமூலம் எல்லா விபரங்களும் எடுத்திருக்கிறம்.!”

வங்கியிலிருந்து கடிதம் வந்திருந்தது. அடகு வைத்திருந்த நகை நட்டுக்கள் காலம் கடந்தும் மீட்கப்படாமையால் ஏலம் விடப்போகிறார்களாம். அவற்றை மீட்பதற்கு பணத்தைப் புரட்டும் வழி தெரியாமல், அப்படியே ஏலம்போக விட்டுவிடலாமா.. அந்த முடிவை எந்த முகத்தை வைத்துக்கொண்டு மனைவியிடம் சொல்வது என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் இவன் வந்தான். இப்போது இவனுக்குத் தேவையான பணத்தை எங்கே புரட்டுவது?

“தம்பி.. நீங்கள் நினைக்கிறமாதிரி நான் காசுக்காரனில்லை.. என்ர பிரச்சனைகள் எனக்குத்தான் தெரியும்..”

“உங்களுக்கு பிள்ளைகள்.. எத்தனைபேர் என்றும் தெரியும்.. அவை படிக்கப் போய் வாற இடங்கள் எல்லாம் எங்களுக்குத் தெரியும்.. சும்மா பேசி நேரத்தை மினக்கெடுத்தாமல் அங்க வந்து உங்கட பிரச்சனையைச் சொல்லுங்க.. அதுதான் உங்கட பிள்ளையளுக்கும்; பாதுகாப்பு..” 

அடுத்த அடி! எனக்குக் கொஞ்ச நஞ்சமிருந்த மூச்சும் நின்றுவிடும் போலிருந்தது.

என் மனைவி ஓர் அப்பிராணி. என்னை யாராவது காணவோ சந்திக்கவோ வந்தால்.. நான் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது நல்ல வகையில் தேநீர் தயாரித்துக்கொண்டு வந்துவிடுவாள்… விருந்தோம்பல்!

மனைவி அவ்வாறு தேநீர்த் தட்டுடன் வந்ததும் நான் அவசரப்பட்டு எழுந்து அவளிடமிருந்து அதை வாங்கினேன்… “உள்ளுக்குப் போங்கோ.. உள்ளுக்குப் போங்கோ…” என கண் சமிக்ஞையில் தெரிவித்தேன். தேநீர்த்தட்டு உருக் கொண்டதுபோல என் கையில் படபடத்தது.
எனது வித்தியாசத்தை அவள் புரிந்திருக்கவேண்டும்.. “ஆராள்.. வந்திருக்கிறது?” என முகப்பாஷையில் கேட்டாள்.

“தெரிஞ்ச ஆள்த்தான்.. பிறகு சொல்லுறன்.. போங்கோ!” என அதே பாஷையிற் தெரிவித்தேன்.

தேநீரைக் கொண்டுவந்து அவனிடம் நீட்டினேன்.

“வேண்டாம்.. இப்படிப் போற இடங்களிலை.. நாங்க… ஒன்றும் குடிக்கிற பழக்கமில்ல..!”

“பரவாயில்லை..குடியுங்கோ.. அதிலை நஞ்சு கிஞ்சு ஒன்றும் போடயில்லை..! வீட்டுக்கு வந்திருக்கிறீங்கள்;.. களைச்சுப்போயிருக்கிறீங்கள்;..! முதலிலை ரீயைக் குடியுங்கோ!”

புற்றினுள் இருக்கும் நச்சுப் பாம்பு போல அவனது பொக்கட்டினுள் இருக்கும் கைத்துப்பாக்கி எந்த நேரத்தில் சீறிக்கொண்டு வருமோ என்ற எச்சரிக்கையுணர்வில் மிகவும் மரியாதையாகவே அவனிடத்தில் எனது நடவடிக்கைகளை மேற்கொண்டேன். அவன் தேநீரைத் தன் கையில் வாங்கிக்கொண்டு, நான் சொல்லாமலே கதிரையில் அமர்ந்தான். உண்மையிலேயே பயல் களைத்துப்போயிருக்கிறான்; போற்தான் தெரிகிறது. நானும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவனிடம் பேச்சுக் கொடுத்தேன். சில கருத்துக்களைக் கூறினேன். சில கேள்விகளைக் கேட்டேன். அவனும் அதற்கேற்றவாறு பேசினான்.

“என்ன… பிரதர்.. இப்பிடி நாங்கள் போற இடங்களிலை பயத்தில மூச்சே விடமாட்டாங்கள்… நீங்க.. என்னென்டால் ஆற அமர்ந்திருந்து பேசிறீங்க?”

“பயந்து என்ன தம்பி செய்யிறது?... வாழும்வரைக்கும் இப்பிடி எத்தினை பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கு! பார்க்கப்போனால்…  எல்லாம் உயிர் வாழிறத்துக்கான.. ஒருத்தரை ஒருத்தர் ஈவிரக்கமின்றி அழிக்கிற போராட்டம்தான்..! எப்பவோ ஒருநாள் நானும் சாகத்தான்போறன்… நீங்களும் சாகத்தான்போறீங்கள்.. அது இண்டைக்கு நடந்தாலென்ன?.. பிறகு நடந்தாலென்ன..!” 

ஒருவித எரிச்சலுடனும், விரக்தியுணர்வுடனும்தான் இவ்வாறு கூறினேன். என்றாலும் உள்ளே பயம் இருந்தது. கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை. இவன் என்னைக் கொண்டுபோய்த் தட்டிவிட்டால்..? என் பிள்ளைகளின் எதிர்காலம் அநாதரவாகப் போய்விடுமே..! நானில்லாத நாட்களை எப்படி எதிர்கொள்;வார்கள்..? ஆகவே எனது உயிரை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ளவேண்டும்…! அப்பனே, அப்படி என்னை ஓரக் கண்ணால் பார்க்காதே..!

அவன் தொலைபேசியில் எனக்குக் கேட்காத தொனியிற் பேசிக்கொண்டிருந்தான்.

அவனுடன் சற்று சமாதானமான முறையில் எனது கஷ்ட நஷ்டங்களை எடுத்துச் சொல்லிப் பார்த்தாலென்ன? சமாதானப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கிறதா… தோல்வியில் முடியுமா என்பது வேறு விடயம். அற்லீஸ்ட் முயன்றாவது பார்க்கலாமே..?

“என்னைப்பற்றின விபரங்களைச் சேகரித்த உங்கட புலனாய்வுக்கு எனக்குத் தொழிலிலை ஏற்பட்ட நஷ்டங்கள்.. கடன் பிரச்சினைகளைப் பற்றித் தெரியவரயில்லையா..?”

எனது இந்த எதிர்பாராத கேள்வியினால் சற்றும் மனம் தளராதிருந்த அவன் கொஞ்சம் தடுமாறினான். என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“சும்மா கதை விடாதையுங்க.. ஐயா..” - ஆழம் பார்த்தான்.

“அப்ப.. உங்கட புலனாய்வுக்கு சரியான தகவல் கிடைக்கயில்ல.. தம்பி..! வெளியில கேட்டால் இந்த ஆளுக்கு என்ன குறை எண்டுதான் சொல்லுவாங்கள்.. என்ர கஷ்டங்களை நான் வெளிக் காட்டிறதில்லை.. ஆனால் கடன் சுமையால நாளும் பொழுதும் நான் படுகிற வேதனை எனக்கு மட்டும்தான் தெரியும்…!”

ஒரு வேகத்தில் அல்லது கோபத்தில் நான் கூறிய வார்த்தைகள் என்னைக் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுத்தியது. கண்கள் பனித்தும் விட்டது. அதை அவன் கவனித்திருக்கவேண்டும்.

“இல்ல இல்ல.. அது.. அது.. எங்களுக்கு எல்லாம் தெரியும்… கடனா?.. எவ்வளவு..?”

“தெரிஞ்சுகொண்டும்தானா இவ்வளவு தொகை காசு கேக்கிறீங்கள்?.. எனக்கு ஏற்கனவே அம்பது லச்சத்துக்கு மேல கடன் இருக்கு..!”
இதைக் கூறிவிட்டு அவனது முகத்தைப் பார்த்தேன். அவன் மௌனமாயிருந்தான். சற்று நேரத்தின் பின் கேட்டான்@ “இவ்வளவு கடன் ஏறும் வரையும் என்ன செய்தனீங்க?”

நான் பதில் பேசாமலிருந்தேன். அதற்கு ஒரு காரணமா தேவைப்படுகிறது? பட்ட கடனைக் கட்ட வசதியில்லாவிட்டால் அது தன்பாட்டில் ஏறிக்கொண்டுபோகிறது!

எனது மகள் கையிற் புத்தகத்துடன் வெளியே வந்தாள். ரியூசனுக்குப் போகிறாள். அவளுக்கு இங்கு நடக்கும் கூத்துக்கள் ஒன்றும் தெரிந்திருக்கவில்லை! ஒரு பாபமும் அறியாமல்.. “போயிட்டு வாறன் அப்பா..!” என்றவாறே நடந்தாள். அது அவனுக்கும் கேட்டிருக்கும். மகள் வெளியேறும்வரை பேசாமற் பார்த்துக்கொண்டிருந்தான். பின்னர் ரெலிபோனை எடுத்து இலக்கங்களை அழுத்தி காதில் வைத்தான்.
‘ஐயையோ… மகள் வெளியே போகிறாளே..! இவன் வாகனத்துடன் நிற்கும் தனது கூட்டாளிகளுக்கு ஏதாவது தகவல் கொடுக்கிறானோ..?’
அவசரப்பட்டு எழுந்து பிள்ளையை நிறுத்துவதற்கு முற்பட்டேன்.

“பதறாமல் இருங்க.. ஐயா… நான் வேற விஷயம் பேசிறன்..”

மகளும் வெளியேறிப் போய்விட்டாள்.

எனக்கு இருக்கை கொள்ளவில்லை. இவன் சொல்வதை நம்பமுடியாது. எப்படியாவது மகளைப் போகாமற் தடுத்திருக்கவேண்டும். இப்போது பிள்ளைக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற பயம் மேலெழுந்து நெஞ்சை அழுத்தியது.

மேலும் நேரத்தைக் கடத்தக்கூடாது. இவனுக்கு ஏதாவது ஒரு தொகையைத் தருவதாகச் சம்மதித்து பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டிவிடுவோம் என முடிவெடுத்தேன். காசை யாரிடமாவது மாறிக் கொடுக்கலாம்.

“தம்பி.. நீங்கள் கேட்ட தொகையைத் தரக்கூடிய நிலமையில.. நான் இல்ல.. ஏதாவது கொஞ்சம் பார்த்துத் தாறன்.. பிரச்சனைப் படுத்தாதையுங்கோ..!”

“கொஞ்சக் காசென்றால் எவ்வளவு?”

“அதை நீங்கள்தான் சொல்லவேணும்… என்ர நிலைமையை நான் சொல்லியிட்டன்…”

அவனது தலை ஒரு பாவனையில் அசைந்தது. யோசிக்கிறான் போலிருக்கிறது.. இறங்கி வருவானோ…?

“..அதைப்பற்றி நான் முடிவெடுக்கேலாது.. மேலிடத்தில கேட்கவேணும்… கொஞ்சம் பொறுங்க…!”

ரெலிபோனில் தொடர்பெடுத்தான்.

என்னுடனும் கதை கொடுத்து விசாரணை செய்துகொண்டு இடையிடையே தொலைபேசித் தொடர்புகளிலும் ஈடுபட்டான். தொழில் விபரங்கள்.. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதற்கான காரண காரியங்கள்.. போன்ற விபரங்களை விடுத்து விடுத்துக் கேட்டான். (ஏற்கனவே புலனாய்வில் எல்லா விபரங்களும் தெரியும் என்று சொன்னானே..!) நானும் இந்தமாதிரி எனது கஷ்ட நஷ்டங்களை யாருக்கும் எடுத்துச் சொன்னதில்லை. ஆனால் அந்த நிலைமையில் என்னையறியாமலேயே சொல்லப்பட்டுவிட்டது.

“சரி.. விஷயத்துக்கு வருவம்.. உங்களாலை எவ்வளவு தரேலும்? பத்து லட்சம்?”

அதைக் கேட்டு ஒரு மௌனச் சிரிப்புத்தான் தோன்றியது என்னிடத்தில்! இவனோடு இனி என்ன பேசுவது?

“என்ன பேசாமலிருக்கிறீங்க…? சொல்லுங்க…!”

“என்னால் தரக்கூடியது அவ்வளவு பெரிய தொகையில்ல..”  

இருபது பத்தாகி.. ஐந்தாகி… பேச்சுவார்த்தை எவ்வளவு தொகை என்று பொருந்தி வராமல்.. இழுபட்டு இறுதியில் ஒரு லட்சத்தில் வந்து நின்றது!
பணத்தை யாரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என ஏற்கனவே மனதிற்குள் திட்டமிட்டிருந்தேன். நண்பன் தாண்டவக்கோன்தான் அதற்குச் சரியான ஆள்! கேட்கும்போதெல்லாம் உதவக்கூடிய பசை உள்ளவன். உதவிக்கு வட்டியுமுண்டு! வட்டிக்கு வட்டியுமுண்டு! எவ்வாறாயினும் அவன்தான் இப்போதைக்கு ஆபத்பாந்தவன்!

“கொஞ்சம் இருங்கோ தம்பி.. இன்னொரு ஆளிட்டையிருந்துதான் காசு எடுக்கவேணும்.. கோல் பண்ணி ஒழுங்கு பண்ணியிட்டு வாறன்..”

இருக்கையை விட்டு எழுந்து வீட்டுக்குள் போக முற்பட்டேன்.

“ஏதாவது புத்திசாலித்தனமாய் செய்யலாமென்று நினைச்சு.. வீணாய் வில்லங்கத்தில மாட்டிக் கொள்ளவேண்டாம்...!” - எச்சரித்தான்.

(அப்பனே அந்தக் காரணத்துக்காகத்தான் ஆரம்பத்திலிருந்தே நான் ஏதும் புத்திசாலித்தனமாக செய்ய உத்தேசிக்கவில்லை.!)

அவன் நினைத்துத் தயங்குவதுபோல, உள்ளே போய் போஃனில் பொலிஸிற்கும் முறையிடலாம். முன் வீட்டிலிருக்கும் யசாரிடம் சொன்னால் தனது நண்பர்களுடன் வந்தே ஆளை மடக்கிவிடுவான். ஆனால் தடி எடுத்தவனெல்லாம் இங்கு தண்ட(ல்)காரனாயிருக்கிறான். பின் விளைவுகளையும் யோசித்து இந்தமாதிரி சமயோசிதமாகத்தான் உயிர் வாழவேண்டியிருக்கிறது.

உள்ளே சுவரின் மறுபக்கமாக நின்ற மனைவி எனது கையைப் பிடித்துக்கொணடாள். கண் கலங்கி நடுங்கினாள்.

“என்ன?... என்ன செய்யப்போறாங்கள்?” திரும்ப வெளியே போகவும் விடமாட்டாள் போலிருந்தது.

“பயப்பிடாதையுங்கோ… நான் சமாளிக்கிறன்…” மனைவியை ஆறுதற்படுத்தியவாறு தாண்டவக்கோனுக்குத் தொடர்பை எடுத்தேன். அவசரமாக ஒரு லட்சம் ரூபா தேவைப்படும் விஷயத்தை கூறி, பணம் உடனடியாக வேண்டும் எனக் கேட்டேன். இப்போது தன்னிடம் இல்லையென்றும், இரண்டொரு நாள் பொறுக்கமுடியுமானால் வேறு இடங்களில் எடுத்துத் தரலாமென்றும் வழக்கமான பதில்தான் அவனிடமிருந்து கிடைத்தது.

“காசு இப்பவே வேணும்! இல்லையென்டால்.. என்னைக் கொண்டுபோக வந்து நிக்கிறாங்கள்..”

“ஐயையோ..!” – நண்பனின் குரல் பதறியது.. “கொஞ்ச நேரம் பொறுங்கோ கொண்டுவாறன்..!”

நண்பனின் பதற்றத்திற்கு என்மேற் கொண்டுள்ள பற்று பாசம் மட்டும் காரணமல்ல... என்னைக் கொண்டுபோய்விட்டால், ஏற்கனவே தன்னிடம் பெற்றிருந்த கடன் தொகை அதோ கதியாகப் போய்விடுமே.. என்பதும்தான்! எனவே நான் கேட்ட தொகையை எப்படியாவது தரவேண்டிய நிர்ப்பந்த நிலையிலிருந்தான் நண்பன்.

“வீட்டுக்குள்ள வரவேண்டாம்… கேற்றுக்கு வெளியில.. சந்திக்கலாம்..” என எச்சரிக்கையும் செய்துவைத்தேன்.

மனைவியின் கையை விடுவித்துக்கொண்டு, வெளியே வந்து கதிரையில் பெருமூச்சுடன் அமர்ந்தேன்.

“காசு ஒழுங்கு பண்ணியாச்சு!... இப்ப வந்திடும்.”

இப்போது அவன் இருக்கை கொள்ளாமல், எழுவதும்.. கேற் பக்கமாக எட்டி எட்டிப் பார்ப்பதுமாக நின்றான்.

“யாரிட்டைக் காசு கேட்டிருக்கிறீங்க?.. கேட்டவுடன இவ்வளவு தரக்கூடிய ஆள் ஆர்?”

எனக்குத் தெரியாதா… இந்தக் கேள்வியெல்லாம் எதற்கென்று! (புலனாய்வு!) பிடி கொடுத்து நண்பனை மாட்டிவிடாமல்,  மிகச் சாதுர்யமாகச் சமாளித்துக்கொண்டிருந்தேன்.

தாண்டவக்கோன் தெருவில் அந்தப் பக்கம் போகிற யாரோ ஒருவரைப் போல… சைக்கிளில் கேற்றைக் கடந்து அசுகை காட்டியதும், எழுந்து கேற்றுக்கு வெளியே போனேன்.

ஒரு என்வலப்பை என் கையிற் தந்தான் நண்பன், “எண்ணிப் பாருங்கோ..!” 

‘சரி!’ எனத் தலையசைத்து, தாண்டவக்கோனை அனுப்பிவிட்டுச் சற்றும் தாமதியாமல் உள்ளே வந்தேன். 

எதை எண்ணிப் பார்ப்பது..?

அப்படியே பணத்தை அவனிடம் கொடுத்தேன்.

“எண்ணிப் பாருங்கோ..!”

எண்ணாமல் அதை அப்படியே பொக்கட்டினுள் செலுத்தினான். ஃபோனைக் கையிலெடுத்துத் தகவல் கொடுத்தான். பிரச்சனை இந்த அளவிலாவது முடிந்ததே என நான் நினைக்க, அவன் வேறொன்று நினைத்தான்@ “நீங்கதான் உங்கட காரில… என்னைக் கொண்டு போய் எங்கட வான் நிக்கிற இடத்தில விடவேணும்.”

எனது தயக்கத்தைக் கவனித்து, “வானை அப்பவே போகச்சொல்லியிட்டன்.. ஒரே இடத்தில.. கன நேரம் நின்டால்… நோற்றட் ஆகியிடும்..” என்றான்.
பிரதான வீதிவரை நடந்து செல்வதற்குத் தயங்குகிறான்போலிருக்கிறது. போகவேண்டிய இடத்தைக் கேட்டேன். அவன் கூறிய இடம் பத்துப் பன்னிரண்டு கிலோமீ;ட்டர் தூரத்திலிருந்தது.

என் மனைவி வெளியே வந்து… மீண்டும் என் கையைப் பிடித்தவாறு கலங்கிக்கொண்டு நின்றாள்.

“அவரை நாங்கள் ஒண்டும் செய்யமாட்டம் அம்மா… அழாதையுங்க!” மனைவியை அவன் தேற்றுகிறானா அல்லது கிண்டல் செய்கிறானா..?
மனைவியின் நிலையைப் பார்க்க, எனக்குக் கவலையாயிருந்தது;

“தம்பி குறை நினைக்கவேண்டாம்.. எனக்கு அவ்வளவு தூரம் வரேலாது..”

யோசனை செய்துவிட்டு, இன்னொரு இடத்தைக் குறிப்பிட்டான். ஐந்து கிலோமீட்டர்வரை போகவேண்டியிருக்கும். உள்ளே சென்று கைத்தொலைபேசியை எடுத்து ஓஃப் பண்ணி பொக்கட்டினுள் மறைத்து வைத்தேன். எதுவும் நடக்கலாம்.. அப்படி ஏதுமென்றால் யாருக்காவது தகவல் கொடுப்பதற்காவது உதவும். மனைவியிடம், “பயப்பிடாதையுங்கோ… வந்திடுவன்..” எனக் கூறிவிட்டு வெளியே போய்க் காரை எடுத்தேன். எனக்குப் பக்கத்தில் முன் சீற்றில் அவன் அமர்ந்துகொண்டான்.

கார் ஓடிக்கொண்டிருந்தது. அவன் ரெலிஃபோனில் பேசினான்.

ஏற்கனவே அவன் குறிப்பிட்ட இடத்தை அடையமுன்னரே, சன சந்தடி குறைந்த… சற்று வெளியான பாதையிற் போகும்போது.. திடுதிப்பென்று “நிப்பாட்டுங்க.. நிப்பாட்டுங்க..!” என அவசரப்பட்டான்.

தட்டப்போகிறானோ?

இப்படி எத்தனையோ கதைகள் நடந்திருக்கிறது! அவன் கேட்ட தொகையையும் நான் கொடுக்கவில்லை… சந்தேகத்துடன் பார்த்தேன்.

“பின்னுக்கு எங்கட வான் வருகுது..” என்றான்

பாதை ஓரமாகக் காரை நிறுத்தினேன். காரிலிருந்து இறங்கினான்.

‘அப்பாடா.. தொல்லை விட்டது போ..!’

கதவை இழுத்துப் பூட்டியவாறு நான் காரை எடுக்க, சட்டெனக் கதவைத் திறந்தான். 

பொக்கட்டினுள் கை விட்டு.. அதை எடுத்து… முன் இருக்கையில் வைத்துவிட்டுக் கதவைச் சாத்தினான். 

அது, அவனிடம் நான் கொடுத்த என்வலப்.. பணத்துடன்!

ஆச்சரியத்துடன் பார்த்தேன்.. கையசைத்துவிட்டு விறுவிறு என நடந்து போனான்.

நன்றி சுதாராஜ்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 7 Jun 2016 - 13:58

என்னவோ? ஏதோ ?
-----
ஹலோ "

"குலன் இருக்கிறாரா?"

"கதைக்கிறன்"

"குலன் நான் இங்க பிரேம்" ...

"பிரேம்" ?

"பெல்ஜியம் பிரேம் ".

"சொல்லும் பிரேம் எப்படி இருக்கின்றீர் ? இப்பவும் பிரசல்ஸ் தானே " ?

"பிரேசெல்சில் இருந்து கொஞ்சம் தள்ளி ஒரு கிராமத்திற்கு இடம் மாறிவிட்டேன் ,இப்ப கனடாவில் தான் நிற்கின்றேன் .சின்ன உதவி ஒன்று தேவை .யாரிடம் கேட்கலாம் என்ற போது உம்மிட நினைவுதான் வந்தது அது தான் போன் அடித்தேன்".

'எப்படி தொலைபேசி இலக்கம் கிடைத்தது ,என்ன விஷயம் சொல்லும் ?"

"சும்மா கூகிளில் உமது பெயரை போடவே தொலை பேசி இலக்கம் வந்துவிட்டது .நான் டொராண்டோ ஹில்டனில் நிற்கின்றேன் .நேரில் வந்து சந்தித்து கதைத்தால் நன்றாக இருக்கும் ".

"ஏதும் பெரிய பிரச்சனையோ ?"

"அப்படி பெரிதாய் ஒன்றுமில்லை , எனது அம்மாவும் தங்கச்சியும் இஞ்சை தான் இருக்கினம். நான் போய் சந்தித்தனான். அம்மாவிற்கு சில விடயங்கள் சொல்லவேண்டும் ,நான் அதை சொல்வதை விட முதலில் இன்னொரு ஆள் போய் கதைத்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகின்றேன் ."

"சரி நாளைக்கு நாலு மணிக்கு நானே அங்கு வாறன் ."

பிரேமை குலன் சந்தித்தது ஒரே ஒரு தடவை தான் ,அதன் பின்பு தொலைபேசியில் இரண்டு மூன்று தரம் மட்டுமே பேசியிருக்கின்றான். அந்த சந்திப்பு கூட தற்செயலானதுதான் .

குலன் லண்டன் வந்து இரு வருடங்கள் ஆகிவிட்டது இருந்தும் அவனுக்கு லண்டன் வாழ்க்கை சிறிதேனும் ஒட்டவில்லை . ஐந்து நாள் படிப்பு ஏழு நாள் வேலை என்று உலகையே வெறுத்து நாட்டிற்கு திரும்ப ஓடுவமோ என்று மண்டையை உடைத்துக்கொண்டிருந்த நாட்களில் தான் இலங்கையில் இனக்கலவரம் வெடித்தது .தமிழர்களுக்கு ஏற்பட்ட  அநியாயத்தைப் பார்த்து அவனுக்கு வந்த கோவத்தை விட தான் இனி நாட்டிற்கு திரும்பி போவது நடக்காத காரியமாக்கிய  சிங்கள் இனவெறியர்கள் மீதுதான் அதிக கோவத்தில் இருந்தான் குலன் .

விசா என்ற விடயத்தில் மிக கட்டுப்பாடாக இருந்த இங்கிலாந்து இனக்கலவரத்துடன் நிறைய தமிழர்கள் இங்கிலாந்து வர அனுமதித்தது அப்படி வந்தவர்களில் ஒருவன் தான் விபுல் . இவன் குலனின் ஊர் ,பாடசாலை நண்பன் .

விபுல் நாலு ஐந்து வருடங்கள் ஜெர்மனியில் இருந்துவிட்டு விடுமுறைக்கு இலங்கைக்கு போனவன் அங்கு கலவரம் வெடிக்க உடனே பிளேன் ஏறி லண்டன் வந்துவிட்டான் .வந்ததும் அகதி நிலைக்கு விண்ணப்பித்துவிட்டு விபுலும் குலேனின் பாடசாலையில் அனுமதி எடுத்து படிக்க தொடங்கியிருந்தான் . வார இறுதியில் நண்பர்களுடன் கிரிக்கெட் அது முடிய பார்ட்டி என்று விபுல் வந்த பின் குலனுக்கும் லண்டன் வாழ்க்கை சற்று ருசிப்பட ஆரம்பித்தது .

இப்படியாக சில மாதங்கள் ஓடிக்கொண்டிருக்க ஒரு நாள் விபுல் குலேனை தான் ஒருவரை சந்திக்க கிங்ஸ்டன் செல்வதாகவும் விரும்பினால் நீயும் வரலாம் என்று குலனை அழைத்தான் .குலனும் சரி என்று விபுலுடன் புறப்பட்டு கிங்க்ஸ்டனில் இருக்கும் கார் பார்க் ஒன்றிற்குள் நுளைகின்றான். அங்கு பாகிஸ்தானியர் போன்ற நல்ல வெள்ளை உருவம் ,குறுந்தாடியுடன் முப்பது வயது வயது மிக்க ஒருவர் சிரித்தபடியே வந்து,

"வாரும் விபுல்" என்று அழைக்கின்றார் .

"இவன் எனது நண்பன் குலன் " என்று குலனை அவருக்கு அறிமுகப்படுத்திய விபுல் . குலனை பார்த்து

"இவர் தான் கண்ணன். இங்கிலாந்து ----அமைப்பின் பொறுப்பாளர்."

கண்ணன் குலனை பார்த்து சிரித்தபடியே

"படிப்பு எப்படி போகின்றது ? படிக்காவிட்டால் என்னை மாதிரி வாழ்க்கை முழுக்க கார் பார்க் தான் .கவனமாக படியும் " என்கின்றார் .

இப்போ அடிக்கடி விபுலுடன் குலனும் கண்ணனை சந்திக்க போகத்தொடங்கிவிட்டான் .கண்ணன் அமைப்பின் ஆரம்பகால கதைகளை நேரில் நின்று பார்த்தது போல சுவாரஸ்யமாக சொல்லுவார் .அவர் பேசும்போது உமா ,பிரபா ,நாகராசா என்ற பெயர்கள் அவரது நண்பர்கள் போல அடிக்கடி வந்துபோகும் .பஸ்தியாம்பிள்ளை கொலை பற்றி இலங்கை அரசிற்கு தெரிய முதல் தானே அதை உரிமை கோரியதாக சொன்னார் .பேஸ்வாரில் கைதுப்பாக்கியில் தொடங்கிய ஆயுத வியாபராம் இப்போ கப்பலில் வாங்கி கொண்டுபோகும் அளவிற்கு வந்துவிட்டதாக சொன்னார் . ஒவ்வொரு சந்திப்பின் போதும் ஒரு புதிய கதை சொல்ல சொல்ல குலனுக்கு போராட்டத்தில் தானும் சேர்ந்தால் என்ன என்ற எண்ணம் மெல்ல முளை விடுகின்றது . இப்படி அடிக்கடி சந்திப்புகள் தொடர அடுத்த படிக்கு இருவருமே காலடி வைக்கின்றார்கள் .

ஐந்து பேர்களை முக்கிய பொறுப்பில் கொண்டு இயங்கி வந்த அந்த அமைப்பு லண்டனில் இலைமறைகாயாக ஒரு சிலரது தொடர்புகளுடன் இருந்தது . அதை விரிவாக்கி புதிய பல அங்கத்தவர்களை சேர்த்து அலுவலகம் திறந்து மக்களுடன் நேரடிதொடர்பை ஏற்படுத்துவதன் மூலம், அரசியல் கூட்டங்கள் ,பாடசாலைகளில் மாணவர்கள் சந்திப்புக்கள் ,கலை நிகழ்சிகள்,நிதி சேகரிப்பு நடத்துவது என முடிவிற்கு வருகின்றார்கள் .கிழக்கு லண்டனில் அலுவலம் திறந்து விபுல் குலேனுடன் இன்னும் சிலரும் அங்கே வசிக்கவும் தொடங்கிவிட்டார்கள் .

குலனுக்கு இப்போ பாடசாலை ,வேலை அதைவிட இயக்கபணி இடைக்கிடை பார்டியும் தொடர்ந்தது. அலுவலகதில் ரஷ்ய ,சீன,வியட்நாம் ,கியூபா புரட்சி பற்றிய போர் இலக்கியங்கள் குவிய தொடங்குகின்றது . மார்க்ஸ் ,ஏங்கல்ஸ்,லெனின் ,ரோட்ஸ்க்கி, மாவோ என்ற பெயர்கள் சர்வசாதாரணமாக பேச்சு வாக்கில் வந்துபோயின .உலக நாடுகளில் வென்ற ,தோற்ற புரட்சிகள் பற்றிய ஆய்வுகள் விடிய விடிய நடக்கும் .வார விடுமுறையில் லண்டன் பல்கலை கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் படித்த ஆத்மன் என்பவர் மார்சிச வகுப்பெடுக்க மார்க்க்சின் மூலதனத்துடன் தொடங்கிவிட்டார் .முற்போக்கு அரசியல் என்று ஒன்று அங்கு உருவெடுக்கின்றது.

தமிழர்கள் பிரச்சனை அன்னியர் படையெடுப்பில் தொடங்கி இலங்கை சுதந்திரம் ,சோல்பரி ,மலையக தமிழர் பிரஜாஉரிமை பறிப்பு ,எம்மவர் சிங்களத்துடனான ஒப்பந்தங்கள், விட்டுகொடுப்புக்கள் ,துரோகங்கள் என்று கருத்து முரண்பாடுகளுடன் விவாதம் வேறு .

நாட்டிலும் ,தமிழ் நாட்டிலும் இயக்கங்களின் செயற்பாடுகள் அதிகரிக்க லண்டனிலும் அங்கத்தவர்கள் அதிகரித்து இப்போ அமைப்பின் செயற்பாடுகள் லண்டனை விட்டு விரிந்து இங்கிலாந்தின் பல இடங்களுக்கும் ஸ்கொட்லாந்து வேல்ஸ் என்று கூ ட சில கருத்தரங்கள் நடந்ததன .பணம் சேர்ப்பதுதான் முக்கிய நோக்கம் என்றாலும் சிலர் அனைத்து அடக்கு முறையையும் உடைத்து எறிவோம் என்ற கருத்தியல் தான் முக்கியம் என்பதிலும் குறியாக இருந்தார்கள் .

இன்று இருக்கும் ஊடாக இணைய வசதிகள் அப்போது இல்லை .உலக அரசியல் ,வரலாறுகள் ,புரட்சிகள் பற்றி கருத்தரங்குகளுக்கு வருபவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை ,சிலவேளைகளில் யாரும் இசைக்கு பிசக்காக கேள்விகள் கேட்டால் விபுல் நிக்கராகுவா சண்டநிஸ்டா ,எல்சல்வடோர் ,சிலி அலன்டே என்று வாயில் வராத நாலு பேர்களை இழுத்து அவர்களை குழப்பிவிடுவான். நாட்டில் புலிகளும் டெலோவும் இலங்கை இராணுவத்தின் மீது தாக்குதல்களுக்கு மேல் தாக்குதலைகளை நிகழ்த்த தொடங்கிவிட்டார்கள் இவர்கள் எவ்வளவு காலத்திற்குத்தான் வெறும் வாயை மெல்லுவது , கோயிலில் நின்று இவர்கள் பிடிக்கும் உண்டியலை கூட சனம் எட்டிப்பார்க்காமல் போகத் தொடங்கிவிட்டார்கள் .

இந்த நேரத்தில் தமிழ்நாட்டு முகாம்களில் போராளிகள் பயிற்சியில் ஈடுபடும் ஒரு வீடியோ ஒன்று வந்து சேர்ந்தது .அதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் பலவித பயிற்சிகளில் ஈடுபடும் காட்சிகள் இருந்தது .அந்த வீடியோவை காட்டியே இன்னமும் சில மாதங்கள் ஓட்டிவிடலாம் என்ற சந்தோசத்தில் அலுவலகத்தில் அனைவரும் இருந்தனர் .அதைவிட குலனுக்கும் விபுலுக்கும் இரட்டை சந்தோசம் தரும் செய்தியும் காத்திருந்தது . குலனும் விபுலும் அமைப்பின் உத்தியோக பிரதிநிதிகளாக ஐரோப்பிய பயணம் சென்றுவர அனுமதி கிடைத்த செய்திதான் அது .வீடியோ காசட் லண்டனில் இருந்து தமிழ்நாட்டு முகாம்களுக்கு சென்றவரால் படம் பிடிக்கபட்டு தயாரிக்கபட்டது.அதை ஐரோப்பிய நாடுகளுக்கும் கொண்டு போய் காட்டவேண்டும்.ஜெர்மனியிலும் பிரான்சிலும் அமைப்பு ஏற்கனவே முறையாக செயற்பட்டு வந்ததால் அவர்கள் அலுவலங்களுக்கு சென்று அவர்களையும் சந்தித்து ஒரு கொப்பியையும் கொடுத்தால் காணும் ஆனால் நெதர்லாந்தில் அமைப்பு ஆரம்ப நிலையில் உள்ளதால் இவர்களே சில சந்திப்புகள் நடத்தவேண்டும் .

டென்கக்கில் இரண்டு சந்திப்புகளும் அம்ஸ்ரடாமில் ஒரு சந்திப்பும் ஏற்பாடு செய்தாயிற்று . விபுல் அகதி நிலையில் இருந்ததால் எப்படி பயணம் செய்யப்போகின்றான் என்று குலேனுக்கு யோசனை . விபுல் தான் முன்னர் ஜெர்மனியில் பாவித்த பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதால் அதில் பயணிக்கலாம் பிரச்சனையில்லை என்றுவிட்டான். இந்த ஐரோப்பிய பயணம் முடிய பின்னர் அமைப்பிற்கு வேலை செய்ய இந்தியா போகவேண்டியும் வரலாம் அதன் பின் லண்டன் திரும்ப சந்தர்ப்பம் வருவமோ தெரியாது எனவே இந்த பயணத்தை ஒரு விடுமுறை போல கழிக்கவும் பழைய ஊர், பாடசாலை சந்திப்பது என்றும் இருவரும் திட்டமிட்டுவிட்டார்கள் .

ஜெர்மன் ,பிரான்ஸ் ,பெனலுக்ஸ் விசா எடுத்து நெதர்லாந்திற்கு பயணம் ஏறிவிட்டார்கள். லண்டனில் இருந்து நெதர்லாந்திற்கு பஸ்ஸில் ஏறினால் பஸ் டோவர் என்ற துறைமுகநகர் சென்று அங்கு பஸ் கூவர் கிராப்ட்டின் கீழ் தளத்திற்கு செல்லும். பயணிகள் பஸ்ஸை விட்டு இறங்கி கப்பலின் மேல்தளத்திற்கு போகவேண்டும். கூவர் கிராப்ட்டில் பயணம் செய்வது நல்லோதோர் அனுபவம் .ஏறக்குறைய ஐந்து மணித்தியால பயணம் அது .பொழுது போகாவிட்டால் உள்ளே தியேட்டர் இருக்கு படம் பார்க்கலாம் அல்லது பாரில் இருந்து தண்ணி அடிக்கலாம் .கடலை பார்த்தவாறு பாரில் இருந்து தண்ணியடித்தபடியே இந்தியாவிற்கு பயிற்சிக்கு போவது பின்னர் ஏ கே யை முதுகில் கொழுவியபடி மோட்டார் சயிக்கிளில் யாழ்பாணத்தை சுற்றி அடிப்பது என்று கதை வளர கரை வந்துவிட்டது .

டென் காக்கில் தோழர்கள் ஸ்டேசன் வரை வந்து வரவேற்று வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போகின்றார்கள் .முகம் தெரியா உறவுகள் இயக்கம் என்ற புரிதலில் மட்டும் விருந்தோம்பலில் இருவரையும் அசத்திவிட்டார்கள் .தங்கியிருந்த வீட்டில் அன்று இரவு நித்திரை கொள்ளாமல் அமையப்போகும் தமிழ் ஈழம் பற்றிய விவாதம் தொடர்கின்றது . அடுத்தநாள் மாலை டென்காக்கில் முதலாவது சந்திப்பு நாற்பது பேர்கள் வரை இருந்தார்கள் .விபுல் குலனின் காதிற்குள் சொன்னான்,

"டேய் இதில இருக்கும் பலர் ஊரில பொல்லாத சண்டியர்கள், யாழ் பஸ் ஸ்டான்ட் முன்னால் கடை வைத்திருந்தவர்கள் . இயக்கம் என்றவுடன் இப்படி பவ்வியமாக நிற்பதை பார்க்க நம்பமுடியாமல் இருக்கு . எதற்கும் அழவோடு கதைத்து முடித்துவிடுவம் "

ஆர்ம்ஸ்டராமில் சுழிபுரத்தை சேர்ந்த பலர் சந்திப்பில் கலந்துகொண்டு இவர்கள் அமைப்பை பற்றி இவர்கள் அறியாத பல நல்லதும் கெட்டதுமான விடயங்களை சொன்னார்கள் . நெதர்லாந்தில் மூன்று கூட்டங்களும் திருப்தியாக முடிந்ததில் இருவருக்கும் பெரிய சந்தோசம் .உண்மையில் பயிற்சி முகாம்களில் எடுத்த வீடியோ கசட் தான் இவர்களுக்கு பெரிதும் உதவியது .

அடுத்து பிரான்சிற்கு போக முதல் இடையில் ஒருநாள் தங்கி பெல்ஜியத்தையும் பார்த்துவிடுவது என்று இருவரும் முடிவுசெய்தார்கள் .காலை பத்துமணி பிரசல்ஸ் ஸ்டேசனில் இறங்கி ஒரு மொட்டேலில் ரூம் எடுத்துவிட்டு நகருக்குளால் நடை போட ஆரம்பிக்கின்றார்கள் .பிரசெல்ஸ் மிக புராதன அழகிய நகரம் .லண்டன் மாதிரி பல்லின மக்களை காணமுடியவில்லை எங்கும் ஒரே வெள்ளைஇனத்தவர்களாக இருந்தார்கள் .

நாலு பக்கமும் தண்ணீரை வாரியடித்துக்கொண்டிருக்கும் ஒரு பவுண்டனில் முன்னால் உள்ள சீட்டில் அமர்ந்து சுற்றிவர வேடிக்கை பார்க்க தொடங்குகின்றார்கள் . நாய்களுக்கு அழகிய உடை உடுத்தி நடை பயில்பவர்களும் , சிறகு அடிக்கும் சத்தத்துடன் பறந்து திரியும் புறாக்களுக்கு தானியங்கள் போடுபவர்களும், கோப்பியுடன் சிகரட் சகிதம் இருந்து பேப்பர் வாசிப்பவர்களும் என்று அந்த காலை மிக அழகாக இருந்தது . படிப்பு ,வேலை, கூட்டம் என்று அலைந்ததில் இப்படி ஒரு பக்கத்தை எட்டி பார்க்காமல் இருந்து விட்டோம் என்று இருவரும் கதைத்துக்கொண்டு இருக்கையில் மறு பக்கம் இருந்த இளைஞர் கூட்டத்தில் இருந்து ஒருவர் இவர்களை நோக்கி வருகின்றார் .

வெளிர்பச்சை சேர்ட் ,பாண்ட்ஸ் ,தொப்பி ,தோடு ,கழுத்தை சுற்றி பாலஸ்தீன கொடி போல ஒரு மப்ளர் ,தடித்த பூட்ஸ், நீண்ட மயிர் ,தாடியும் வைத்து ஒரு ஆளைப்பார்க்க ஆமிக்காரன் போல இருக்கு,

இவர்கள் அருகில் வந்து " நீங்கள் தமிழா " என்றபடி கை குலுக்க கையை நீட்டுகின்றார் .

இவர்களும் சிரித்தபடி கை கொடுக்க,அவரே தொடர்கின்றார் ,

"எனது பெயர் பிரேம் .உங்களை கண்டது சந்தோசமாக இருக்கு ,நான் தமிழர்களை சந்தித்து இரண்டுவருடங்கள் ஆகின்றது "

குலனும் விபுலும் பிரேமிற்கு தங்களை அறிமுகப்படுத்த,

"வாங்கோ எனது நண்பர்களுக்கு உங்களை அறிமுகம் செய்து வைக்கின்றேன் .பின்னர் கதைத்தபடியே காலை உணவை சாப்பிடுவம் என்ரை கணக்கு தான் சாப்பாடு .தமிழ் கதைக்க வேண்டும் போல கிடக்கு"

தனது நண்பர்களை அறிமுகம் செய்துவிட்டு ஒரு ரேஸ்ரோண்டிற்குள் கூட்டிக்கொண்டு செல்கின்றார் .அங்கு பலருக்கு பிரேமை நன்கு தெரிந்திருக்கின்றது .பிரெஞ்சில் நன்கு உரையாடுகின்றார் .

தான் பதினாறு வயதில் ஏஜன்சி மூலம் பிரான்சில் இருக்கும் சித்தப்பாவிடம் வந்ததாகவும் அவர் பிரான்சில் இருப்பதை விட நெதர்லாந்தில் வசதிகள் கூட என்று நெதர்லாந்திற்கு அனுப்பிவிட்டாராம் .நெதர்லாந்திற்குள் செல்லும் போது போர்டரில் போலீஸ் பிடித்து தன்னை பெல்ஜியத்திற்குள்ளால் வந்த படியால் பெல்ஜிய இமிகிரேசனிடம் ஒப்படைத்துவிட்டார்களாம்.பெல்ஜியத்தில் ஜெயிலிற்குள் தான் எட்டு மாதங்கள் இருந்ததாகவும் பின்னர் அவர்களே தற்காலிக விசாவுடன் வெளியில் செல்ல அனுமதித்து படிக்கவும் உதவி செய்தார்களாம் .இப்போ பெல்ஜிய அரசு தரும் பணத்தில் இருந்து கொண்டு படித்துக்கொண்டு இருப்பதாக சொன்னார் .

அன்றைய பகல் குலேனும் விபுலும் பிரேமுடன் பிரெசெல்சில் கழித்து விட்டு நாளை காலை பிரான்சிற்கு ரெயின் ஏறவேண்டும் என்று மொட்டேலுக்கு திரும்பிவிட்டார்கள் .பிரேம் இலங்கையில் இளவாலையை சேர்ந்தவர் இவர்கள் இருவருக்கும் இளவாலை சற்றும் பரீட்சயம் இல்லாத ஊர் .பிரேமிற்கு இவர்களை விட வயதும் குறைவு,இலங்கை அரசியல் பற்றியும் ஆர்வம இல்லை எனவே பிரேமுடன் இவர்கள் அரசியல் கதைக்கவில்லை .
அடுத்த நாள் காலை பிரான்சிற்கு செல்லும் ரெயினுக்காக இருவரும் ஸ்டேசனில் நிற்கும் போது பிரேம் அங்கு வருகிறான் .

"என்ன தமிழ் கதைக்க காலமை எழும்பி வந்தனிரோ "

"ஞாயிறு தானே பாடசாலை இல்லை ,உங்கள் நினைவு வந்தது பின்ன வெளிக்கிட்டு வந்தனான் "

ரெயின் வந்து ஸ்டேசனில் நிற்க குலனும் விபுலும் பிரேமிற்கு கையை காட்டிவிட்டு ரெயினிற்குள் ஏறுகின்றர்கள்.

"ஏதோ என்னால் முடிந்தது " என்றபடி ஒரு என்வலைப்பை குலனின் கையில் திணிக்கின்றான் பிரேம் .பிரேம் அப்படி என்வலப்பை தந்தது இருவருக்கும் கண்ணில் கண்ணீரை வரவழைத்துவிட்டது .இருவரும் பிரேமை பார்த்து கையசைக்க ரெயின் விரைய தொடங்குகின்றது . ஐரோப்பிய பயணம் முடித்து லண்டன் திரும்பி சில மாதங்களின் பின் குலன் இந்தியா புறப்பட்டுவிட்டான். விபுல் அமைப்பு பிழையான வழியில் செல்கின்றது என்று அதிலிருந்து விலத்திவிட்டான் .சில வருடங்களில் போன மச்சான் திரும்பி வந்தார் கணக்கு குலனும் அமைப்பை விட்டுவிலகி மீண்டும் லண்டன் சேர்ந்துவிட்டான்.

வேலை ,கிரிக்கெட் ,பார்ட்டி என்று மீண்டும் குலன் விபுல் சிநேகித வாழ்க்கை ஒரு சின்ன மாறுதலுடன் தொடருது . இருவருக்கும் இப்போ காதலிகள் இருக்கு .விபுல் தான் மீண்டும் ஒருமுறை நெதர்லாந்து சென்று வந்ததாக குலனுக்கு சொல்லிவிட்டு, பிரேம் தனக்கு பெல்ஜியத்தில் நிரந்தர வதிவுடமை கிடைத்துவிட்டதாக ஒருநாள் போன் பண்ணியதாகவும் சொன்னான் .

பின்னர் ஒருநாள் பிரேம் போனில் கதைக்கும் போது தான் படித்து முடித்து ஒரு பெல்ஜிய நண்பரின் உதவியால் லக்சம்பர்க் விமான நிலையத்தில் வேலை செய்வததாகவும், விபுல் தனக்கு எங்களது அமைப்பில் நடந்த பிரச்சனைகள் பற்றி சொல்ல தான் கவலைப்பட்டதாகவும் சொன்னான் . தான் நண்பனுடன் மிகவிரைவில் லண்டன் வர இருப்பதாகவும் அப்போ நேரில் சந்திப்போம் என்றான் .

ஒரு மாத இடைவெளியில் விபுல் ,குலன் கல்யாணம் நடந்தது . கல்யாணம் செய்த அடுத்த மாதமே குலன் கனடா சென்றுவிட்டான் . குலன் கனடா வந்து ஆறு வருடங்களின் பின் பிரேமின் அந்த தொலைபேசி அழைப்பு வருகின்றது . ரொராண்டோ ரிச்மன்ட் வீதியில் உள்ள கில்டன் ஹோட்டல் லாபியில் குலன் பிரேமிற்காக காத்திருக்கின்றான் .பிரேம் ஒரு வெள்ளையின நண்பனுடன் வந்து குலேனின் தோளை அமத்தி கட்டிப்பிடிக்கின்றான் .இருவரும் த்ரீ பீஸ் சூட்டில் மிக ஸ்டைலாக இருந்தார்கள் .

"உங்களை ஒருநாள் தான் சந்தித்தேன் இருந்தும் ரொம்ப நெருங்கி பழகியது போல ஒரு உணர்வு அண்ணை "

"நானும் அன்று ரெயினில் கை காட்டும் போது அப்படிதான் உணர்ந்தேன் "

"ஓ மறந்து போனன் இவர் பிநியுட் (Benoit) . இவரைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்ளபோகின்றேன் .அது விடயமாக கதைக்கத்தான் உங்களை கூப்பிட்டன் "

"என்ன பகிடியா "

"இல்லை அண்ணை உண்மை . ஒன்றாக படிக்கும் போது இருவருக்கும் இப்படி ஒரு விருப்பம் உருவாகிவிட்டது . அதை உங்களுக்கு விளங்கப்படுத்துவதே கஷ்டம் எப்படி எனது அம்மாவிற்கு விளங்கப்படுத்துவது என்றுதான் உங்களை கூப்பிட்டேன் ."

" எனக்கு விளங்குது பிரேம் ,கனடாவில சிலரை சந்தித்தும் இருக்கின்றேன் ஆனால் எனக்கு முன்பின் அறிமுகம் இல்லாத உமது அம்மாவுடன் எப்படி பேசுவது என்றுதான் புரியவில்லை "

"நான் கனடா வந்தது அம்மாவையும் தங்கச்சியையும் சந்தித்துவிட்டு கனடாவையும் பார்த்துவிட்டுபோகத்தான் ஆனால் அம்மாவை சந்தித்த போது அவர் எந்த நேரமும் எனது கலியாணம் பற்றியே பேசுகின்றார், சில வேளைகளில் அழுவதை பார்க்க தாங்கமுடியவில்லை .அம்மா இப்படியே நெடுகிலும் எனது கலியாணம் பற்றி ஏங்குவதை விட உண்மையை சொன்னால் என்னவென்று யோசிக்கின்றேன் ."

"இப்ப நான் என்ன செய்யவேண்டும் "

"நாளைக்கு நான் அம்மாவை சந்திக்க போகமுதல் நீங்கள் அங்கு போய் பிரேம் தன்னை சந்திக்க இங்கே வரசொன்னவர் என்று விட்டு அம்மாவிடம் முடிந்தால் பேசிப்பாருங்கள் ,அதை விட இவரும் எனது குடும்பத்தை சந்திக்க ஆசைப்படுகின்றார் "

குலன் அடுத்த நாள் ஸ்காபோரோவில் உள்ள பிரேமின் தங்கையின் வீட்டிற்கு சென்று அழைப்புமணியை அமத்த ஒரு ஐம்பது வயதுடைய பெண்மணி கதவை திறக்கின்றார் .

"வாங்கோ தம்பி ,நீங்கள் குலன் தானே ,பிரேம் போன் அடித்து சொன்னவன் நீங்கள் வருவீர்கள் என்று "

இளவாலையில் உள்ள கிறிஸ்தவ பாடசாலையில் ஆசிரியராக இருந்த தான், இள வயதில் கணவனை இழந்து பிரேமையும் அவனது தங்கையும் வளர்க்க பட்ட கஷ்டங்களையும் சொல்லி, பின்னர் தான் பிரேமை சிறு வயதில் வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டதால் அவனுடன் ஆன தொடர்புகள் குறைந்துவிட்டதாகவும் இப்போ அவன் தன்னிடம் இருந்து ஒதுங்கியிருக்கவே விரும்புகின்றான் போல இருக்கு என்றும் அழத்தொடங்கிவிட்டார் .கனடாவிற்கு வந்து இருக்கசொன்னாலும் கேட்கின்றானில்லை அங்கு நல்ல வேலை அதைவிடமுடியாது என்று அதையும் தட்டிக்கழிக்கின்றான்.

"அம்மா பிரேமுடன் ஒரு வெள்ளையின நண்பனும் வந்ததாக சொன்னான் அவரை இங்க கூட்டிக்கொண்டு வந்தவரோ ?"

"இல்லை தம்பி ,அப்படி எதுவும் சொல்லவில்லையே "

"எனக்கு அப்படிதான் சொன்னான் . ஏன் உங்களுக்கு அதை மறைத்துவிட்டான் . நான் அவனுடன் ஒரு முறை போனில் கதைக்கும் போது ஏதோ அந்த மாதிரி நட்பு ஒன்று இருப்பதாக சொன்னான் "

"அவனுக்கு அப்படி ஏதும் இருந்தால் என்னிடம் நேர சொல்லாம் தானே ,இனி நான் என்ன செய்வது ,சின்ன வயதில வெளிநாட்டிற்கு வந்ததில் அப்படி மாறிவிட்டானோ தெரியவில்லை தம்பி .எனக்கு அவன் எப்படியாவது சந்தோசமாக இருந்தால் காணும்"

"அம்மா நீங்கள் கத்தி குளறி இந்த விடயத்தை பெரிது படுத்துவீர்கள் என்றுதான் பிரேம் பயந்தான் ,நானும் அப்படித்தான் நினைத்தேன் ஆனால் நல்ல தெளிவான அம்மாவாக இருக்கின்றீர்கள் "

"இல்லை தம்பி ,உள்ளுக்குள் சற்று மனவருத்தமாக இருந்தாலும் பிள்ளையை பதினாறு வயதில் வெளிநாடு அனுப்பிவிட்டு இப்ப வந்து அப்படி செய் இப்படி செய் என்று சொல்ல எனக்கு உரிமையில்லை ,அவனை நண்பனுடன் வீட்டை வரசொல்லு எனக்கு பிரச்சனையில்லை "

தான் வந்த விடயம் இப்படி இலகுவாகமுடியும் என்று குலன் கற்பனையிலும் நினைக்கவில்லை .பிரேமிற்கு தொலைபேசியை போடுகின்றான் .

"பிரேம் உன்ரை ஆளையும் கூட்டிக்கொண்டு அம்மா வீட்டிற்கு வரட்டாம் ,என்ரை வேலை முடிந்துவிட்டது நான் வாறன் . BYE BYE " .

பரதன் நவரத்தினம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 7 Jun 2016 - 13:59

கிழவர்கள்
-----------
நடேசன்,பள்ளி விடுமுறையிலே வளர்ந்த பிள்ளைகளுடன் இந்த முறை 'டொராண்டோ'வைப் பார்க்க வந்திருக்கிறான். விஜயன் வீட்டிலே,அவனுடைய அண்ணன் ரவியும், அவன் இரு பிள்ளைகளும், அக்கா ரதியும் (அவள் மகன் கதிர்,"அம்மா நாளைக்கு வேலையிலே தூங்க வழிய நேரிடும் "என இறக்கி விட்டுப் போய்யிருக்கிறான்) பால்ய வயதில் குடும்பத்தில் ஒருத்தனாக அயலிலே இருந்த… யூரோப்பிலிருந்து வந்திருக்கிற நடேசனை சுமார் 25,30 வருச‌த்திற்குப் பிறகு சந்திக்க வந்திருக்கிறார்கள் .

அவன் தரப்பில் ,மனைவி... தரப்பில் சில உறவினர்கள் இங்கே இருக்கிறார்கள் தான்.யூரோப்பை விட வெளிநாடுகள் என்ன பெரிதாக வித்தியாசமாக இருக்கப் போகிறது என.. தாயகமான ஈழமாநிலத்தையே முக்கியமாக பார்க்க வேண்டியவர்கள் என அழைத்துச் செல்கிறவன். ‘இறுதி யுத்தம்’ என‌ சிறிலங்காவில் மனிதப் படுகொலைகள் மோசமாக நடந்த போது எல்லா நாடுகளிலும் அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. வல்லரசு நாடுகள் பாகிஸ்தானில் காலூன்றியது போல சிறிலங்காவிலும் காலூன்றி விட்டன.நிறைகூடிய குண்டுகள், வகை தொகையின்றி சிதறி வெடிக்கும் குண்டுகளை எல்லாம் சிறிலங்காபடையினர் சரிவர கையாளுமா? என்பதே சந்தேகம், சிறிலங்கா அரசின் அனுமதியில்லாமல் கூட,தன்னிச்சையாகவும் ,போடப்பட்டே இந்த மனிதப் பேரவலம் நடந்தன. ஈழத்ததமிழர்கள் மேலும் அதே பாலஸ்தீனர்களின் தலைவிதி கவிந்து விட்டது.

பெரியநாடுகளே போரை  நடத்தியது போன்ற தோற்றம். நைஜிரியா அரசாங்கமே 'பொக்ககராம் போராட்டக்குழுவிற்கு அமெரிக்காவை ஆயுதங்கள் விற்க வேண்டாம்'என கூறுகிறது.சிறிலங்காவிடம் 'கொத்துக் குண்டுகளை பாவிக்கும்படி,அமெரிக்கா கூறியதை விக்கிலீக்ஸ் 'லீக்' பண்ணியிருக்கிறது. அமெரிக்காவின் வியாபாரமே இரண்டு பக்கமும் ஆயுதங்கள் விற்பது தானே..போல இருக்கிறது. இரண்டு உலகப் போர்களிலும் அதிகளவு வியாபாரம் பார்த்தது அமெரிக்கா என்றே சொல்லப்படுகிறது. 'போர்கள்'ஒரு வகை ‘சூது’ போல. நடைபெறுகின்றன‌. பெரியநாடுகள்  உறுதியற்ற நாடுகளில் எல்லாம் சூதாட்டக் காய்களை  நகர்த்துகின்றன. அவர்களுக்கு வீடியோ விளையாட்டுப் போல, புதிய புதிய உத்திகளை கண்டு பிடிப்பதில் ஆர்வமாய்யிருக்கிறார்கள்.நீதி,நியாயங்களை எல்லாம் டெக்னொலொஜி புறம் தள்ளி விட,ஆட்டம் ஆடுகிறார்கள். சிறிலங்கா,அவசரகாலச் சட்டத்தையும்,பயங்கரவாதச் சட்டத்தையும் கையில் (ஏற்படுத்திக்) எடுத்துக் கொண்டு இன்னொரு தேசிய இனத்தைச் சேர்ந்த மக்களை காலனிநாடுகளைப் போல படுகொலைகளைச் செய்து கொண்டிருந்தது. எல்லா சிறிய நாடுகளிலுமே 'ஒரினத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமே வாழலாம்'என்ற 'சைக்கோ' பரவிக் கிடக்கின்றன.அவை,சொந்த நாடற்ற இஸ்ரேலியரைப் போல, மக்களை படுகொலை செய்து விரட்டி அடித்தும் அவர்கள்  நிலங்களைப் பறிப்பதும், அவர்களை சிறைகளில் நிரப்புவதும், அகதிகளாய் விரட்டியடிப்பதும் ...என சண்டித்தனங்கள் செய்கின்றன.இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய பெரிய நாடுகள்,தடுக்காமல் எண்ணெய் வார்பது மட்டுமில்லாமல்  அரசியல் செய்வதாகவும் இருக்கின்றன.உலகத்தில் அமைதி நிலவ முடியாதது இல்லை. முடியும்! பொறுப்பற்ற தன்மைகளால்...காட்டுமிராண்டித் தனமான தலைவிதி மாறாமல் அப்படியே (நிம்மதியற்றுக்) கிடக்கின்றன.

நடேசனும் அந்த ஆர்ப்பாட்டங்கள் சிலவற்றில் பங்குபற்றியிருந்தான். எல்லாமே வீடியோ பண்ணப் பட்டிருந்தன. தற்போது அவற்றை வைத்துக் கொண்டு சிறிலங்கா செல்பவர்க்கு வலை விரிக்கப் பட்டிருக்கிறதா? என அப்பப்ப வரும் செய்திகள் மிரட்டுகின்றன. வியாபார  அரசியல் உலகத்தில் ,பெரிய நாடுகளின் அனுசரனையுடன் உலக அமைதியைக் காக்க எழுந்த அமைப்பு ஜக்கியநாடுகள்சபை.ஆனால் அந்நாடுகளே அச்சபையை பெரிதாக மதிக்காதது ஆச்சரிமில்லை தான்..உலகயுத்தத்தில் ஈடுபட்டவை, அவற்றில் 'ஈடுபடாத நாடுகளுக்கும்  தாம் பெற்ற மனித துர்ப்பாக்கியத்தை சீரழிவை பெற வேண்டும்' என்ற ‘சைக்கோ’வில் வீழ்ந்து, கொலைவெறியுடன் செயல்படுகிறதா? என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.        உறுதியற்ற சிறிலங்காவும் இவர்கள் கையில் வீழ்ந்து விட்டதாகப் படுகிறது. தம்மக்களைக் காப்பாற்ற கையாளாகத நாடுகளில்  எல்லாம் கருமேகங்கள்.

தற்போது தாயகம் சென்றவர்கள் சிலர் சிறைகளில்,சிலரைக் காணவில்லை.தம் சக தோழமை நாடுகளையே புலனாய்கிறவை வீடியோவையும் சிறிலங்காவிடம் கையளித்திருப்பார்கள் போலவே படுகிறது.நடேசன் இம்முறையும் ஈழமாநிலத்திற்கே போக விரும்பினான்.பிள்ளைகள் பயந்ததால்"வேண்டாமப்பா"என மறித்ததால் இங்கே ..வந்திருக்கிறார்கள்.

கொஞ்ச நஞ்சமில்லை, நீண்ட காலத்திற்குப் பிறகு பார்க்கிறார்கள்.தற்போது,பேச்சில் ஐயாவைப் போல இழுத்து இழுத்துப் பேசுற‌ அவன் உருவத்திலும் அவரைப் போல‌வே இருக்கிறான். ."நாங்க கொழும்பிலிருந்து வந்த போது..." என ரவியோட கதைத்துக் கொண்டிருந்தான். "என்ன நீங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து அல்லவா வவுனியா வந்தனீர்கள்" என விஜயன் குறுக்கிட்டான். தொடர்ந்து ."ஓ!,அது தான் அப்பாவை ஐயா என கூப்பிடுறீர்களா ?"எனக்  கேட்ட‌ போது,"ரவி "ஐயா என்றது சிங்களச் சொல்லில்லை.. .காலனியாட்சியாளர்கள் ஆசியாவில் கால் பதிக்க முதலே தமிழர்மத்தியிலே அப்பாவை "ஐயா.."என அழைக்கிற வழக்கம் நிலவியிருக்கிறது.பிறகு நிலபுலன்களை உடைய பெரிய குடும்பங்களில் நிலவி,பிறகு சில ஊர்களில் மட்டுமாக அருகி விட்டது.” என்றான்.

அப்ப,அப்பாவை 'ஐயா'எனக் கூப்பிடுறது விஜயனுக்கு வித்தியாசமாகவே இருந்தது, தெளிவுபடவில்லை. அவனுடைய அம்மாவும் கூட‌ அவருடைய அப்பாவை 'ஐயா'என கூப்பிடுறதே இருந்திருக்கிறது.அவனுக்கு தாத்தாவையே பெரிதாக தெரியாது.அவர் வேளைக்கே இறந்து விட்டவர்.  

அவர்களுடைய பேச்சு தொடர... "வவுனியாவில் முதலில் உங்கட பெரியப்பாட குடும்பம் தான் இருந்தது.எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது "என்றான் ரவி.அப்ப,யாழ்ப்பாணத்திருந்த பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வவுனியாவில் காட்டை அழித்து 'விவசாயப் பண்ணைகளை'அமைத்துக் கொள்றது இருந்தது.நடேசனின் பெரியப்பா,குடுபத்தோடு வந்து அப்படி ஒன்றை ஏற்படுத்துவதிலே  ஈடுபட்டிருந்தார்.1958ம் ஆண்டு ஏற்பட்ட கலவரம் அவரைக்  குழப்பி விட்டது.

நல்ல சிங்களவர்களால் கொழும்பில் இவர்கள் பாதிக்கப்படவில்லை. ஆனால்,பெரியப்பா பயந்து போனார். வீட்டிலே நடேசனின் அப்பா, கடைசித் தம்பி,செல்லம் கூட."டேய்,நீ இங்க வந்து இரு"என கூப்பிட்டு அவர்களை வவுனியா வீட்டில் அமர வைத்து விட்டு வெட்டிய காணியையும் கையளித்து விட்டு யாழ் திரும்பி இருக்கிறா ர்.அதன் பிறகு இவர்கள் காட்டில், மேலும் 2 ஏக்கர் காணியை வெட்டி விவசாயம் செய்தார்கள்.. முதலில், நிலக்கடலை,அவரை,நெல் என சேனைப்பயிர்கள் செய்தார்கள்.பிறகு கிணறும் வெட்டி விவசாயத்திலும் வெற்றி ஈட்டினார்கள்.

இதெல்லாம் நடக்கிற போது விஜயனுக்கு 2,3 வயசிருக்கலாம்.அவனுக்கு தெரியாதது அல்லது விளங்காதது ஆச்சரியமில்லை தான்.  

அவனுக்கு  யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்த பிறகே, சரிவர  அவர்கள் சென்ற கிராமத்தில் இருந்த  அவனுடைய பெரியப்பா குடும்பம் தெரிய வந்தது. நடேசன் குடும்பம் போல அவர்களோடும் பழக்கம் ஏற்பட்டது

ரவிக்கும், நடேசனுக்கும் இடையில் 2,3 வயசு வித்தியாசமே இருந்தன. ரவி, வவுனியாவில் கூட படித்தவர்களின் பெயர்களை எல்லாம் மறக்காமல் தெளிவாக ஞாபகம் வைத்திருந்து...விசாரித்தான். தற்போது,'ஃபேஸ் புக்' மூலமாகவும் ஓரிருவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு தானிருக்கிறான். நடேசனுக்கும்  ஞாபக சக்தி அதிகம். அவனும் மூளையை குடைந்து குடைந்து பதிலளித்துக் கொண்டிருந்தான். வன்னியில் சிறு கோபதாபங்களுக்கு, ஒ.லெவல் ஃபெயிலானால்... எல்லாம்  ஓடுற ரயிலுக்கு முன்னால் பாய்ந்து விடுகிறவர்கள் அதிகம். விவசாயத்திற்கு வைத்திருக்கிற பூச்சி மருந்தை எடுத்து குடித்து விடுகிறவர்கள். அவர்களைக் கூட ...கதைத்தார்கள்.அவர்களில் சிலர் நண்பர்களாக இருக்க வாய்ப்பு இருக்கிறது தான். "ஓ!,அவன்ர அக்கா இங்கே தான் இருக்கிறார்" என்றான் நடேசன். 

விஜயனுக்கு இருபது வருசத்திற்கு முதல் நடந்ததே நினைவுக்கு வர சிரமப்படுகிறது. இவர்கள் அனாவசியமாக கதைக்கிறார்கள்
விட்டால் இருவருமே அம்மாவின் வயிற்றுக்குள் இருந்த இருண்ட உலகத்தை பற்றியும் கதைப்பார்கள் போல இருந்தது. 

ஒருமுறை,வவுனியாவில்,விஜயனுக்கு 3 வயசிருக்கும் போது  படுக்கையில் அவனுக்குப் பக்கத்தில் வீட்டுக்கூரையிலிருந்து ஓரளவான பாம்பொன்று தொப்பென்று விழுந்தது.ரவி தான் விழுந்தடித்துக் கொண்டு ஓடி அயலில் இருந்த தச்சுவேலைகள் செய்கிற சிங்கள பாஸ்ஸை கூட்டி வந்தான். அவர் ,சிங்கள தொனியில் தமிழ் நல்லாவே பேசுபவர்.விஜயனை எப்பவும் "விஜய் ஐயா ....." என செல்லமாக கூப்பிடுறவர்."தவளைக் குஞ்சுகள் என்ன விநோதம்,ஆடிப்பாடி,ஓடி..என்ன விநோதம்"என மகிழ்ச்சியாக‌ பாடுவார். அவர் பாடிய மற்ற வரிகள் இவனுக்கு மறந்து விட்டன.அவர் செய்த தளபாடங்கள் தான் எல்லார் வீட்டிலேயும் இருக்கின்றன. அவர் நல்லவர்.என்ன பிரச்சனை என்றாலும் அங்கே தான் ஓடுறவர்கள். நடேசனுக்கு அந்த இடத்தில் நின்றது …நல்லாய் ஞாபகம் இருந்தது.இருவரும் அதை பற்றிப் பேசினார்கள் 

அவர் நீண்ட தடியுடன் வந்து பாம்பை வெளியில் எடுத்துப் போட்டு அடித்தார்."குறை உயிரில் விட்டால் பழிவாங்கும்"எனக் கூறி மண்ணெண்னெய் ஊத்தி எரித்து நிலத்தில் தாட்டு விட்டும் சென்றவர்.காட்டுமுனி,பாம்பின்,மிருகங்களின் சோடி பழி வாங்கும் என்கிற ஜதிகங்கள் எல்லாம் எங்குமே கிடக்கின்றன‌. மனிதர்களின் ஆத்மா(உயிர்)அழியாதது.செத்த பிறகும் ...வெளியில் அலைந்து கொண்டிருக்கும் என்றால்,மற்ற உயிரினங்களிற்கும் அதே ஆத்மா இருக்கத் தானே செய்யும். அவையும் அலையும் தானே.பழிவாங்கும் என்ற நம்பிக்கைகள் எல்லாம் அதனோடு பின்னப்பட்டவையே. 

அதனாலே பொதுவாக எல்லா உயிரிகளை அடிக்கிறதுக்கு கொல்றதுக்கு எல்லாரும் பயப்பட்டார்கள் ;தயங்கினார்கள். தமிழரை அடித்த சிங்களவர்களுக்குக் கூட அந்த நம்பிக்கைகள் இருக்கின்றன.அவர்களுடைய விகாரைகள் உள்ளேயும் 'இப்படி செய்தால் இன்ன தண்டனை'என கலர் கலராக சித்திரக் குப்தரின்  சித்திரங்களை கீறி வைத்திருக்கிறார்கள்.அன்னியன் சினிமாவில் காட்டிய அத்தனை தண்டனை முறைகளும் அதிலே இருக்கின்றன.

சிங்கள மக்கள் அடிப்படையில் நல்லவர்கள் .ஆனால்,சிங்கள அரசியல்வாதிகள் தான் (அவர்களுள் இனத்துவேசத்தை ஏற்றி, ஏற்றி)அவர்களை நஞ்சாக்கி விட்டு இருக்கிறார்கள். 

பாம்படிக்கிறதுக்கு  துணிச்சல் வேறு வேண்டும் . பாஸ் எதற்கும் துணிந்தவராக வீரராக‌ பாம்பை அடித்தது எல்லாம் விஜயனுக்கு துப்பரவாய் நினைவில் ஒட்டவில்லை.நடந்தது போலவே இல்லை .

அக்கா, மறதிக்கு "பிறகு,பிறகு ஏற்படுற ஸ்ரோங்கான அனுபவங்கள் பழையவற்றை மறக்க வைத்து விடுகிறது,அல்லது மங்கலடைய வைத்து விடுகிறது'இல்லையா,என்ன?"என விளக்கம் கொடுத்தார். உண்மை தான்.கலவர நிகழ்வுகள் தான் எத்தனை பேரை பையித்தியம் பிடிக்க வைத்திருக்கிறன!"19,20 வயசிற்குள் நடைபெறுபவையே  தாம் பசுமரத்தாணிப் போல பதிந்து கிடக்கின்றன"என்கிற பெரிசுகளின் பேச்சுக்களை எல்லாம் தற்போதைய நிலவரங்கள் உடைத்துக் கொண்டிருக்கின்றன

அக்காட சினேகிதி நடேசனின் அக்கா..

அக்கா வெளிநாடு வந்ததிற்கு ஒருமுறை யாழ்ப்பாணம் போய்யிருந்தார். அப்ப ,வவுனியாவில் பயணம் தடைப்பட்டு ஒரிரவு நின்று தான் தொடர்ந்தது. அப்ப, குருமண்காட்டுக்குக்கு போக முடியாமல் போனதை குறித்து வெகுவாக கவலைப்பட்டார். அவரைப் பற்றி விசாரித்தார். 

யாழ்ப்பாணத்தில், ஒ.லெவல் வரையில், எ.லெவல் வரையில் படித்து,அதற்கு மேல் படிக்கிற 'சிமார்ட்'அற்றுப் போற போது.. பெடியள் எல்லாருக்கும் கொழும்பிற்கு வேலை தேடி போறது மரதன் ஓட்டமாகவே இருந்தன‌ ஆனால்.எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து விடவில்லை. அவனுக்கு முந்திய சந்ததியில் ,சிறிமாட காலம் வரையில்... பொதுவாக எல்லாருக்கும் நிம்மதியான காலமாகவே இருந்தது.அவர்,எப்ப சிறிலங்காவை 'குடியரசா'க்கி அறிவித்து,கல்வியில் சிங்களவருக்குச் சார்ப்பாக மாற்றங்களைச் செய்தாரோ...அப்ப இருந்து சனி தொடர‌ ஆரம்பித்து விட்டதுஅது மட்டுமில்லை சிறிமா,குடியரசாக்கிய பிறகு பல வஞ்சகக் கொள்கைகளை புகுத்திற சிங்கள நிபுணர்களின் கைப்பாவையாகி விட்டார்.

58ம் ஆண்டு கலவரம் நடந்து கனகாலமாகி விட்டதால்,1ம் உலகப் போர் நடந்த பிறகு "இனி நடக்காது"என நம்பிக்கை அங்கிருக்கும் மக்களுக்கு ஏற்பட்டது போல.. இங்கே நம்மவர்களிற்கும் "இனி ஒரு கலவரம் ஏற்படாது"என்ற நம்பிக்கையும்  எந்த கொழுகொம்பற்றும் வளர்ந்து விட்டிருந்தது.நாமாக கற்பனை பண்ணிக் கொண்டோம்,அவ்வளவு தான்!

யாழ்ப்பாணம் வரட்சியான பிரதேசம் மட்டுமில்லை,வேலை வாய்ப்பிலும் வரண்டு போய்யிருந்தது.அங்கே..எங்கே  வேலைகள் கிடைத்தன?யாழ்ப்பாண வர்த்தகம் குறுகியது.அதில்கிடைத்தாலும் கொத்தடிமைத் தனமான   வேலைகளே கிடைத்தன.போதிய சம்பளம் கிடையாது.அவற்றை விட நகரப்புறத்தில்,பெறுகிற கூலி வேலைகள் பரவாய்யில்லையாய் இருந்தன. 

கொழும்பில் உத்தியோகம் எடுப்பதே'வாழ்க்கையாக கிடந்தது அதாவது.நாம்  திரும்பவும்  கொழும்பின் கால்களில் வீழ்ந்து விட்டோம்.

அரசாங்க வேலை கிடைப்பதாக இருந்தால் கொழும்பிற்கே போய் குத்துக்கரணம் அடித்தே அந்த வேலையை பெறுவதாகவும் இருந்தது. அவை லஞ்ச‌ம் கொடுக்கக் கூடியவர்கள்,செல்வாக்காக இருந்தவர்களின் தயவைப் பெற்றவர்களால் மட்டுமே முடியக் கூடியவை

இதற்கெல்லாம், சிங்கள‌ அரசாங்கம்,ஈழத்தமிழரின் வேலை வாய்ப்பில்  'மேலும்,மேலும் பட்ஜெட்டில் கட்' போல கை வைத்து கொண்டிருந்ததே காரணம். ஏற்கனவே  குறைந்தளவிலேயே தான் வேலைகள் கிடைத்துக் கொண்டிருந்தன . அதிலேயும், அதிலேயும் கை வைக்க‌ ,வேலையற்றுப் போறக் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடிக் கொண்டே போனது.தமிழ்ப் பெடியள்கள் மத்தியில் விரக்தி,வெறுப்பு,கோபம் எல்லாம் காட்டுத் தீ போல அதிகமாக பற்றிப். படர்ந்தன‌ .இவற்றிலிருந்து விடுதலைப் பெற அவை கிடைக்க வேண்டுமானால் ‘ஆயுதப் போராட்டம்’ தான் ஓரே வழி என்று நம்பத் தொடங்கி விட்டார்கள். 

இங்கேயிருப்பவர்கள்,அங்கேயிருப்பவர்கள் இயக்கத்திற்குப் போய்யிருப்பார்களோ?என்றும்,அங்கேயிருப்பவர்கள் இங்கேயிருப்பவர்கள் போய்யிருப்பார்களோ?என்றும் ...குழம்ப காலம் எவ்வளவு மாறிப்  போய் விட்டிருந்தது. 

சகோதரக் கொலைகள்,படுகொலைகள்..என ரத்தச்சரித்திரமே கடந்து போய் விட்டிருக்கிறது. இதில் மக்கள் வேறு,பெடியள் வேறு  என்றில்லை.முந்திய சந்ததியான அவர்கள் விடுதலைக்காக போராடாடு விட்டதன் பயன்,பெடியளின் போராட்டம் குறைப்பிரசவமாகி...இன்று ரத்தச்சகதியில் அனைவரும்.

பொதுவாக, இப்ப‌ , ஒருத்தருக்கு ஒருத்தர் ‘உயிருடன் (தப்பி) இருக்கிறார்களா?’என்று அறிவதில் ஆர்வம் இருந்தது. 

சந்தோசமாக குருமண்காட்டு நினைவுகளை பேசி களைத்தார்கள். .அடுத்து, படம் எடுப்பதில் கவனம் சென்றது.தற்போதைய டிஜிட்டல் கமரா அதிகளவு பேர்களை அடக்க சிரமப்பட்டது.

விஜயன்"பெடியள்கள் எல்லாரும் ஒன்றாக,பெண்கள் எல்லாரும் ஒன்றாக எடுக்கலாம்"என்று கூறினான்.

"பெடியள்க‌ளா...?"என்ற சிரிப்பு பெண்கள் மத்தியிலிருந்து எழுந்தது.

காதோரம் மட்டுமில்லை தலைமயிர் முழுதும் நரைகள் பரவ ,நெற்றியில்,பின் தலையில்..எல்லாம் வலுக்கை  விழ‌ பெருப்பாலான ,பிள்ளைகள்...இருபது (வயசு)க்கு மேலே வளர்ந்து,சிலர் யூனிவெர்சிட்டியும் ‌ கூட படித்து முடித்தவர்களாக இருக்க…அட,  நாம கிழவர்கள் என்பது எப்படி மறந்து போயிற்று?

நாமெல்லாம் போர்க் காலங்களில்  அகப்பட்டு தப்பி வந்ததில் இருந்து. வெளிய வர முடியவில்லை அந்நினைவுகள் 'ஸ்ரோங்கானதாக இருந்து நம் மூளையை ஃபிரீஸ் பண்ணி விட்டது. நம் பிள்ளைகள் கிழவர்கள் ஆனாலும் கூட "நாம் அந்த நிலையிலே இருந்து விடுபடுவது,ஃபீல் பண்ணுவதிலிருந்து வெளிய வருவது முடியாது போல இருக்கிறது.

"நாம் எல்லாம் கிழவர்கள்"ரவியும்,நடேசனும் தங்கட கையை ஒருதரம் கிள்ளிப் பார்த்து வாய் விட்டுச் சிரித்தார்கள்.

இரவுணவு சாப்பிட்டு விட்டு  பிரிய மனமில்லாமல் பிரிந்தார்கள்.

.இனி எப்ப மறுபடியும் சந்திப்பார்களோ?அல்லது சந்திக்காமலேயே மேலே போய் விடுவார்களோ யாருக்குத் தெரியும்?மேலே யாரோ ஒருவரும் இருந்து சிரிக்கிறார். யார் இவர்?'ஒ!,அவர் தான் கடவுளா? அவர் சிரிக்கிறதை விட்டு விட்டு , எங்களுக்கு  சுதந்திரமான ஒரு ஈழமாநிலம் கிடைக்க வழி செய்யலாமே!செய்வாரா...?

 கடல்புத்திரன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 7 Jun 2016 - 14:01

சிக்குண்ட சினம்
------
வீடியோக் கமெராவின் மிகையான வெளிச்சத்திலும் அதிலிருந்து வரும் வெப்பத்திலும் என்னுடைய முகம் வியர்க்கிறது, கண்கள் கூசுகின்றன. வீடியோக் கமெராக்காரரினதும், படமெடுப்பவரினதும் அறிவுறுத்தல்களுக்குத் தக்கதாகத் திரும்பித் திரும்பி அலுத்துப் போய்விட்டது.

“நிரோ வடிவாச் சிரியும் பாப்பம். உதென்ன சிரிப்பு,” இது மாமியின் விமர்சனம். எனக்கு அழ வேணும் போல் இருக்கிறது. பிறகெப்படி நெடுகப் பொய்யுக்குச் சிரிக்கிறது? அதை விட சிரிக்கிறதாய் பாசாங்கு பண்ணிப் பண்ணி வாய் ஒரு பக்கம் நோகிறது.

“பெரிய ஹோல், குறைஞ்சது முன்னூறு பேர், பூ ஊஞ்சல்…, உதுகளைக் கேட்கக் கேட்க எனக்கு குமட்டுது. பிளீஸ் அம்மா எனக்கு உது ஒண்டும் வேண்டாம்,”

“நிரோ, நீ எங்களுக்கு ஒரே ஒரு பொம்பிளைப் பிள்ளை. உன்ரை கலியாண வீட்டைப் பாக்க நாங்கள் இருப்பமோ இல்லையோ... அதைவிட நீ ஆரை, எப்படிக் கலியாணம் கட்டுவியோ ஆருக்குத் தெரியும். இதை எங்கடை ஆசைக்குச் செய்து பாக்க வேணும். அதோடை எல்லோரும் செய்யேக்கை நாங்கள் செய்யாட்டி அது எங்களுக்கு மரியாதை இல்லை,”

“இயற்கையிலை நடக்கிற ஒரு விஷயத்தை ஏன் இப்படிப் பெரிசுபடுத்திறியள், எல்லாரும் தான் சாமத்தியப்படுகினம்; உங்களுக்கு இப்படியெல்லாம் நடக்கேல்லைத் தானே.”

“இப்பத்தான் தேவை இருக்குது பிள்ளை. மாமாவை, சித்தியவை எல்லாம் அவுஸ்ரேலியா, லண்டன் எண்டு சீவிக்கினம். அவைக்கு இப்பிடியெல்லாம் செய்து அனுப்பினால் தானே அவையின்ரை உறவும் விளங்கும், எங்கடை கலாச்சாரமும் நிலைக்கும்.” ‘அது மட்டுமில்லை, எத்தனை பேர் பாப்பினம். பாத்துப் போட்டு சொந்தத்திலையிருந்து பொம்பிளை கேட்டு வந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்,’ மனோகரி மீதியைத்  தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறாள்.

“இப்படிச் செய்யிறது அநியாயம் எண்டு தமிழ்ப் படங்களிலேயே பிரச்சாரம் பண்றாங்கள். நீங்கள் இங்கை, அதுவும் கனடாவிலை இருந்து கொண்டு இப்படி அமளிப்படுத்திறியள். எனக்கு உது ஒண்டும் பிடிக்கேல்லை.”

“பிள்ளை, இப்ப உனக்கு வாய் கூடிப் போச்சுது. இதிலை உன்ரை விருப்பம், முடிவு எண்டு ஒண்டுமில்லை. நாங்கள் தான் முடிவெடுக்கிறது. எங்களுக்கெல்லாம் இப்படி ஆர் செய்தது? ஏதோ கடவுளே எண்டு நாங்கள் வசதியாய் இருக்கிறதாலை, இதை எல்லாம் உங்களுக்கு செய்ய முடியுது. அதற்கு நன்றியாயிருங்கோ.”

“ஓ, எல்லாம் எனக்காகத் தானே நீங்கள் செய்யிறியள்; பிள்ளை கலியாணத்துக்கு ரெடி என்று ஊரெல்லாம் பறை தட்டச் சொல்லி நானே சொன்னனான்?”

கதவைச் சடாரென்று சாத்திவிட்டு எனது அறைக்குள் புகுந்து கொள்கிறேன். என் வேண்டுகோள், ஆசை எதுவுமே எடுபடாத போது அம்மாவில் கோபிப்பதைத் தவிர வேறு எதையுமே என்னால் செய்ய முடியவில்லை.

இப்ப எல்லோருக்கும் முன்னாலை ஏதோ காட்சிப் பொருள் மாதிரி அலங்கரித்து விடப்பட்டிருக்கிறேன். எரிச்சல் எரிச்சலாய் வருகிறது. விடிய ஐந்து மணிக்கு எழுப்பி, குளிக்க வார்ப்பதைக் கூட ஈர உடுப்புடன் மிகை வெளிச்சத்தில் படமாக்கி, அலங்காரம் என்ற பேரில் மிகுந்த நகைகளைச் சாத்தி, உடம்பை இறுக்கும் சட்டையும், பாவாடையும் உள்ள உடுப்பிலை பல மணி நேரம் நிற்கும் தண்டனை எனக்கு.
“உங்கடை பிள்ளைக்கு இப்ப என்ன பன்னிரண்டு வயசு தானே. இங்கத்தைய சாப்பாடு வெள்ளனவே எல்லாரையும் குந்தவைக்குது என்ன,” இது அம்மாவின் சினேகிதி மாலா

“சீஸ், இறைச்சி எண்டு அப்படி ஒன்றும் அவள் பெரிசாய்ச் சாப்பிடுறேல்லை. எல்லாம் ஜீன்ஸ் தான். நான் சாமத்தியப்பட்டது பதினொரு வயசிலை…” 

“அது அங்கையெண்டபடியால் பரவாயில்லை. இங்கை நீங்கள் இனிக் கண்ணிலை எண்ணை வாத்த மாதிரி வலு கவனமாயிருக்க வேணும்.”

“ஓம், ஓம் அதுவும் இந்த நாட்டிலை சொல்லவேணுமே? ஒருத்தன்ரை கையிலை பிடிச்சுக் குடுக்கும் வரைக்கும் முள்ளிலை நடக்கிற மாதிரித் தான்.”

அவர்கள் கதைக்கிறதைக் கேட்க எனக்கு இன்னும் அருவருப்பாக இருக்குது. என்னில் எந்த நம்பிக்கையும் இல்லாத புலம்பல். 

“அம்மாவுக்கும் சித்திக்கும் தான் எத்தனை வித்தியாசம். சித்தி எதையும் ஊருக்காகச் செய்வதில்லை. பிறந்தநாள் கூட ஆடம்பரமாய் கொண்டாடுவது கிடையாது. பிள்ளைகளுடன் ஒரு டின்னருக்குப் போவார்கள் அல்லது பிள்ளைகள் விருப்பப்பட்டதைச் செய்வார்கள். எங்கடை வீட்டிலோ இரவிரவாய் குடிப்பாட்டி வைச்சு, அப்பாவும் அவரின்ரை சினேகிதர்மாரும் எங்கடை பிறந்த நாளைச் கொண்டாடுவினம். என்ரை அம்மாவுக்கு தன்ரை சாப்பாட்டையும், உடுப்பையும், நகைகளையும் மற்றவைக்குக் காட்டிப் புழுகிறதிலை, அவையின்ரை பாராட்டைக் கேட்கிறதிலை தான் முழுச் சந்தோஷமும். எங்கடை விருப்பு, வெறுப்புகளைப் பற்றி அவைக்கு எந்த அக்கறையுமில்லை. 
குத்துவிளக்குக் கொளுத்தி, ஆரத்தி எடுக்கவிட்டு, பூத் தூவலை வாங்கி, வந்த எல்லோருடனும் படங்களுக்கு போஸ் கொடுத்து எல்லாம் முடிய ஊஞ்சல் ஆட்ட வாங்கோ என்று எல்லோரையும் அம்மா கூப்பிட்டு விடுகிறா. ரீன் ஏஜ் போய்ஸ் கூட வந்து நின்று ஆட்டுகிறார்கள். எனக்கு என்னத்தைச் செய்கிறது என்று தெரியவில்லை. பெரிய அசௌகரியமாகவிருக்கிறது. பிறகு எனக்கு அன்பளிப்புக்கள் தர ஒரு வரிசை, சாப்பாட்டுக்கு என்று இன்னொரு வரிசை என வந்தவையெல்லாம் அணிவகுத்து நிற்கிறார்கள். அம்மாவுடன் போய் இப்படி மற்றவர்களின் விழாக்களில் நிற்கின்ற நேரங்களில் எங்களின் அவசரமும் நாங்கள் படும் எரிச்சலும் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அதே போல், ஏதோ அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்துப் போட்டு சாப்பிட்டு முடித்து விட்டால் இங்கிருந்து விடுதலை பெற்று விடலாம், அடுத்ததாக எங்கே ஒட வேணும் என்று ஒவ்வொருவரும் மனக்கணக்குப் பார்ப்பதும் தெளிவாகத் தெரிகிறது.

சரி ஆசைக்கு செய்கிறார்கள் என்பதையாவது பொறுத்துக் கொள்ளலாம் ... இப்படிப் பெரிய எடுப்பு எடுக்காமல், நல்லாய்த் தெரிந்த, என்னில் உண்மையான பாசமுள்ளவர்களை மட்டும் கூப்பிட்டிருந்தால். நேரத்துடன் போட்டி போட்டுக்கொண்டு ஓடுகிற வாழ்வில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டு வைத்துக் கொண்டு அவர்களின் நேரத்தை விரயமாக்குவதையும், வர விருப்பமில்லாவிடிலும் போலிக்காக வந்து எல்லோரும் நிற்பதையும் நினைக்க ஏனடா தமிழனாய் பிறந்தேன் என எனக்கு அலுப்பாய் இருந்தது. 
“உடுப்பை மாத்திப் போட்டு, கேக் வெட்டினால் போதும், பிறகு ஒண்டுமில்லை” என்று அம்மா வந்து சொல்லிப் போட்டு போறா.

அடுத்த உடுப்பான பஞ்சாபிக்குரிய தலை அலங்காரம் செய்யவேன மேக்கப் பண்ண வந்திருந்தவரிடம் மாமி மீண்டும் என்னைக் கூட்டிக் கொண்டு போகும் போது “என்ன நிரோ பாக்கிலை போய் வீடியோ எடுக்க மாட்டன் எண்டு போட்டீராம்? அந்தக் காலத்திலை நாங்கள் எங்கடை அம்மா, அப்பா சொல்லுறதை எதிர்த்து ஒரு சொல்லுச் சொல்லியிருக்க மாட்டம். இப்ப நீங்கள் எல்லாம் நினைச்ச படி நடக்க வெளிக்கிட்டிட்டியள். உங்களைச் சொல்லி என்ன, எப்ப எங்கடை நாட்டை விட்டு வெளிக்கிட்டோமோ அன்றே இந்த மரியாதை எல்லாம் தொலைச்சுப் போட்டம்,” என்று ஒரு பாட்டம் சுய கழிவிரக்கப் பேச்சைப் பேசி முடித்தா.

அடுத்த வாரம் பள்ளிக்கூடம் போனபோது, “என்ன உம்மைக் காணேல்லை, எப்படிச் சமாளித்தனீர்?” என்று ஜானுவைக் கேட்கிறேன். “நான் அம்மாவுக்கு சொல்லிட்டன்; உந்தக் கேளிக்கைகளுக்கெல்லாம் நான் வரமாட்டன் எண்டு. கலியாண வீட்டுக்கு மட்டும், அதுவும் பொம்பிளையையோ மாப்பிள்ளையையோ நல்லாய் தெரிஞ்சால் மட்டும் தான் நான் போறனான்,” என்கிறாள் ஜானு. “பானுவுக்கு சாமத்தியச் சடங்கு வைக்கேல்லை எண்டு கவலையாம். தாய்க்கு உதுகள் ஒண்டும் விருப்பமில்லையாம்”, என்ற ஆர்த்தியிடம் “கௌரிக்கு தனக்கு சாமத்தியச் சடங்கு எண்டு ஒரே புழுகு, பெரிய லெவலா எல்லாருக்கும் சொல்லிக் கொண்டு திரிகிறா,” என்று சொல்கிறாள் ஜானு

“மனிசர் பலமாதிரி, எதிரும் புதிருமாய், ஒரு குடும்பம், எங்கடையைப் போலை வந்தமைஞ்சால் தானே பிரச்சனை,” என்ற சுமி தொடர்ந்து “குத்து விளக்குக் கொண்டு போக பன்னிரண்டு பொம்பிளைப் பிள்ளைகள் வேணும் எண்டு உம்மடை அம்மா எங்கடை அம்மாவைக் கேட்ட போது நான் எனக்கு அந்த நேரம் பீரியட் வரும் எண்டு பொய் சொன்னனான். பிறகு வயித்துக் குத்து என்று வீட்டிலை நிண்டிட்டன். என்ரை நிலைப்பாட்டை ஒருத்தரும் விளங்கிக் கொள்ள மாட்டினம். அதாலை வருத்தம், அது, இது எண்டு பொய் சொல்ல வேண்டியிருக்கு. ஆனால் நான் வராட்டில் நீர் கோவிக்கமாட்டீர் எண்டு எனக்குத் தெரியும்,” என்று சொல்கிறாள்.

“கலாச்சாரம் எண்டு சொல்லிச் சொல்லி இவை திணிக்கிறதுக்கு அளவில்லை. எனக்கு இது எல்லாத்தையும் உடைச்சுக் கொண்டு எப்ப ஓடுவன் எண்டு இருக்கு,” என்கிறேன் நான். “அக்கா சொல்லுறா, எங்கடை அம்மாவை வெளிநாடுகளுக்கு வந்து இங்கத்தையக் கலாச்சாரத்தைப் பாத்தவுடன் தங்கடை அழியப் போகுதோ எண்டு பயப்படுகினம். அதாலை தான் வலோக்காரத்துக்கு இது எங்கடை கலாச்சாரம் எண்டு எல்லாத்தையும் தங்களோடை இழுத்து வைச்சுக் கொண்டிருக்கினம் எண்டு. இங்கை இப்ப நடக்கிகிற மாதிரி அங்கை இவ்வளவு அதிகமாய் சங்கீத, நடன அரங்கேற்றங்களே நடக்கேல்லையாம்,” என விளக்கம் தருகிறாள் ஆர்த்தி.

“அங்கை குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டும் பணச்சடங்காகச் செய்ததை, இங்கை இவை போட்டி போட்டுக் கொண்டு ஒரு ஆளை மற்ற ஆள் மிஞ்சுற விதத்திலை பணத்தை அழிக்கும் சடங்கா வைக்கினம்” வெறுப்புடன் சொல்கிறேன் நான்.

நன்றி 
ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 7 Jun 2016 - 14:03

உயிர்க்கொல்லிப் பாம்பு
----
கடல் சூழ்ந்த மல்லிகைத்தீவில் வடமேல் பருவக்காற்றால் மழை மேகங்கள் கருக்கட்டி இடியுடன் பயங்கரமான மழையும் பெய்தது.மக்களுக்கு மழைக்காலம் எப்பொழுதும் ஆனந்தமானது. பத்துமாதம் எரிக்கும் கோடை, இரண்டு மாதங்கள் விராடதேசத்தில் ஒளிந்த பாண்டவர்களாக தலைமறைவாகும்.
வற்றிய குளங்கள், நிலம் தெரியும் கிணறுகள், புழுதி சிந்தும் நிலங்கள் எல்லாம் நெடுநாளாக தாகத்துடன் பாலைவனத்தை கடந்துவந்த வழிப்போக்கனைப்போல் நீர் வேண்டிக் காத்திருந்தன.

வங்காள விரிகுடாவில் காற்றமுக்கம் என்று வானொலியில் கேட்டபோது அசட்டையாக இருந்துவிட்டார்கள். மழை, வேறு இடங்களுக்கு காற்றால் எடுத்து செல்லப்படுவதை பலவருடங்களாக அறிந்தவர்கள் அவர்கள். ஏற்கனவே கடந்த இருவருடங்கள் திருமணவீட்டு பன்னீராக மாரிகாலம் ஊரைக் கடந்து சென்று விட்டது.

அதிகாலையில் மேற்கு வானில் தொலைதூரத்தில் கருமேகம் தோன்றி கடல் நீரை குழாய்போட்டு இழுத்தபோது, இது மழைக்கான அறிகுறி என நினைத்தாலும் எதுவும் செய்ய நேரமில்லை. மழை பொய்த்தால் கூரைகளை மேய்வதற்கு தவறியவர்கள். பிடித்த மீன்களை உப்புபோட்டு மதியம் காயவைக்கலாம் என்றிருந்த மீனவர்கள் சுதாரித்தாலும் எதுவும் செய்யமுடியவில்லை.

மதியத்தில் வந்த மழை விடாமல் பெய்தது.

ஊரில் எல்லோருக்கும் ஆனந்தம் பெருகியது. கடந்த இரண்டு வருடங்கள் நல்ல மழையில்லாமல் பயிர்கள் வைக்காதவர்களில் சில அவசரக்காரர்கள், இந்த வருடம் பயிரிடமுடியும் என்ற சந்தோசத்தில் தரிசான தோட்டங்களிலும் மற்றும் வீட்டுக்கு பின்புறத்திலும் நனைந்தபடி மாலையில் மண்வெட்டியால் நிலத்தை கொத்தத் தொடங்கினர். பெய்த மழையை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

இரண்டாவது நாள் ஆக்ரோசமாக வானம் திறந்து இடித்தபடி மின்னலுடன் மழை பொழிந்தது. இரண்டு நாள் மழையில் பலரது கிணறுகள் நிரப்பி இருந்த இடம் தெரியவில்லை. ஊர்க் குளங்கள் நிரம்பியதும் வீட்டில் இருந்தபடி வெளியே பார்த்தபடி இருந்தனர். அத்துடன் வெளியூரில் இருந்து போக்குவரத்தில் ஈடுபடும் மோட்டார் படகுகள் நிறுத்தப்பட்டன.

வங்காளவிரிகுடாவில் காற்றழுத்தம் மையம் கொண்டிருப்பதால் மேலும் மூன்று நாட்களுக்கு மழை என திருச்சி வானொலி அறிவித்தது. மீனவர்கள் வாழும் ஊரானதால் அதிகமானவர்களின் முகங்களில் கவலை தேங்கியதால் முகங்கள் ஊர் குளங்களுடன் போட்டியிட்டன.

மூன்றாவது நாள் தரையெல்லாம் வெள்ளம் வந்து வீட்டுப்படிகளை முத்தமிட்டது. ஏதோ பிரளய காலம் என ஆண்கள் பெண்கள் பேசினார்கள். ஏதாவது முக்கிய விடயம் என்றால் மட்டும் முழங்காலுக்கு மேல் நின்ற வெள்ளத்தில் குடையுடன் உடைகளை தூக்கிப்பிடித்தபடி இறங்கினர்.

நான்காவது நாள் கடலும் நிலமும் ஒன்றாகியது போல இருண்ட நீலநிறமான தோற்றம். இரண்டு அடியில் இருந்து நாலு அடிக்கு ஊரெங்கும் கரைபுரண்டது மழை வெள்ளம். கடலின் நீரும் தாழ்வான பல இடங்களில் மழைவெள்ளத்துடன் கலந்தது. உயரமான இடங்களில் இருந்த சுண்ணாம்பு அல்லது சீமெந்தால் அமைந்த வீடுகள் ஒரு சில தப்பின. மண்ணால் அமைந்த கூரைவீடுகளின் அடிப்பகுதியில் மண் கரைந்தபோது கூரைகள் குட்டிபோட குந்திய வெள்ளாடுகள்போல் நிலத்தில் அமர்ந்தன.

கடற்கரையோரத்துக் கிணறுகளில் கடல்மீன்கள் உப்பில்லாத தண்ணீரைக் ருசி பார்க்க வந்துவிட்டன. கடல்நீர் சலித்துப்போன நண்டுகள் அவற்றைப்பின் தொடர்ந்தன.

அதிஷ்டமான வீடுகளில் ஒன்று எங்கள் வீடு. வீடிழந்த பலர் அகதிகளாக எங்கள் வீட்டிற்கு வந்து வாசலில் உள்ள கொட்டகையில் தங்கிவிட்டனர். வீட்டின் இரண்டு அறைகள் மட்டுமே எங்களுக்கு இருந்தன. இதைவிட நாலுகால் பிராணிகளான மாடுகள், ஆடுகள், நாய்கள் எல்லாம் எங்கள் வீட்டு தாழ்வாரத்தில் வரிசையாக ஒதுங்கின. தவளை, ஓணான் ,பாம்பு என்பனவும் தண்ணீர் அற்ற தரையைத் தேடின.

சில வீடுகள் தள்ளியிருந்த மாமியின் குடும்பம் தங்கள் வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகுந்ததாக சொல்லிக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்தபோது என்னுடன் படித்த மாமியின் மகள் லலிதா வந்து சில மணி நேரத்தில் எங்களது வீட்டின் ஒரு அறையில் தள்ளி மூடப்பட்டாள்.

ஏற்கனவே அவளில் காதல் கொண்டிருந்தேன். அவள் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டாள் என்பதால் தொடர்ந்து மழை பெய்யப் பிரார்த்தித்தேன். என் பிரார்த்தனைக்கு அதிகமாக பலன் கிடைத்தது.
எங்கெல்லாமோ பெய்யவேண்டிய மழை எங்களுரில் பெய்தது.லலிதா ஒரே வகுப்பில் படித்து சிறுவயதிலே இருந்து பழகி வந்தாலும் அவளிடம் எனக்கு சிநேகம் இல்லை. ஆம்பிளை நான், அவள் பொம்பிளை என்ற இளக்காரம் அதிகமான காலம். எப்பொழுதும் அவளுக்கு போட்டியாக இருந்தேன். வகுப்பில் எப்பொழுதும் எனக்கு அடுத்த ராங்கில் வருபவள். கடந்த வருடம் பரிட்சையின்போது புத்தகத்தை விரித்து பார்த்த காரணத்திற்காக எனக்கு அந்தப் பாடத்தில் முப்பது புள்ளிகள்; குறைக்கப்பாவதாக சொல்லியிருந்த எனது பூகோள ஆசிரியரால் நாப்பது புள்ளிகள் குறைக்கப்பட்டு நான் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டேன்.

விளையாட்டாக அதுவரை காலமும் இருந்த போட்டி அதன் பின்புதான் அவளில் எரிச்சலாகியது.
அந்த எரிச்சல் அதிகம் நீடிக்கவில்லை. அவளை மன்னித்துவிட்டேன்.

கடந்த மாதம் நடந்த பாடசாலை நிகழ்ச்சியில் இருந்து வீடுவர இரவாகி விட்டது. வேகமாக நடந்த என்னைக் கூப்பிட்டுக்கொண்டு தொடர்ந்து ஓடிவந்தாள். அவளுக்காக நிற்காமல் வந்த என்னை சில நிமிட நேரத்தில் ஓடிவந்து பிடித்தாள்.

‘ஏன்டா என்னை விட்டு விட்டு வந்தாய்…? அதுவும் கூப்பிட கூப்பிட திரும்பிப் பாரக்காமல்?”

பதில் பேசாது அவளைப் பார்த்தேன். அவளது நெஞ்சு பூமிக்கும் வானத்திற்கும் ஏறியிறங்கியது.

‘உன்னைத் துரத்தியபடி வந்ததால் எனது இதயம் எனது நெஞ்சுக்கூட்டுக்கு வெளியால் வந்துவிட்டது.’

சிரித்தேன்.

‘நீ நம்பவில்லை பார்” என கூறியபடி கையை எடுத்து அவளது இடது நெஞ்சில் வைத்தாள்.

ஏதோ கட்டியாக இருந்து. கையை இழுத்துவிட்டேன்.

இவ்வளவு நாட்கள் அவளில் இருந்த எரிச்சல் மறைந்துவிட்டது. அவளை – அவளது வீட்டில் விட்டுவிட்டு நான் வீட்டிற்கு வந்தேன்.

அதன்பின் நினைவிலும் கனவிலும் லலிதா.

லலிதாவுக்கு எனது திடீர் மாற்றம் புரிந்தது. ஆனாலும் எதற்காக என்று அவளுக்குத் தெரியாது. வழக்கமாக மாங்காய் கடிப்பது பென்சிலைத் தருவது என காலம் கடந்தது. அவளில் அடிக்கடி இடிப்பதும் உராய்வதும் அதிகமாகியது.

ஏற்கனவே பதினெட்டு வயதில் எனது உறவான அண்ணர் ஊரில் இளம் பெண்ணொருத்திமீது காதல் கொண்டிருப்பது பலருக்கும் எரிச்சல்.இந்நிலையில் நான் எப்படி 12 வயதில் என்காதலை வெளிப்படுத்தலாம் என எண்ணிக்கொண்டிருந்த காலத்தில்தான் மார்கழி விடுமுறை வந்தது. விடுமுறைநாளில் ஒவ்வொரு நாளும் லலிதாவின் வீட்டுக்கு சென்றாலும் பாடசாலை நாட்கள்போல் தொட்டுப் பேசமுடியாது. இரண்டு கிழமைகளில் நகரத்தில் போய் படிப்பதற்கு பெரிய பாடசாலையில் எனக்கு இடம் கிடைத்திருந்தது.

லலிதாவை பிரிந்து செல்வது கவலையைக் கொடுத்தது. அந்த விடுமுறைகாலத்தில்தான் இந்த பெருமழை வந்தது. பலரது வீடுகள் அழிந்தன. ஆனால் எனது லலிதா எங்கள் வீடு வந்தாள்.

அவள் மட்டும் அந்த அறையில் இருந்தாள். பகலில் அவளுக்கு விசேட உணவு கொடுப்பதும் கவனிப்பதுமாக இருந்தது. மூன்று நாட்களாக அவளை வெளியே வர அனுமதிக்கவில்லை ஓரு கிழமையாக பெய்த மழை குறைந்து சிறு தூறலுடன் நீடித்தது. ஆனால் வெள்ளம் முற்றாக வடியவில்லை.

மீண்டும் வானொலியில் காற்றோடு கனத்தமழை பெய்ய விருப்பதாக அறிவித்தல் வந்தது. ஒதுங்க வந்தவர்களில் பலர் ஏற்கனவே தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டார்கள்.

அன்று வானொலியில் அறிவித்தவாறு மழை பெய்யாமல் காற்று பயங்கர சத்தத்துடன் வீசியது. தூரத்தில் கடல் அலைகள் ஆர்ப்பரித்தது. சுவரோடு ஒட்டி படுத்திருந்தபோது மெதுவாக ஒலித்த கடிகாரஓசை கேட்டு விழித்தேன். அறைக்குள் இருள். எதுவும்தெரியவில்லை. கூர்ந்து கவனித்தபோது சுவரில் தட்டும் சந்தம் கேட்டது. லலிதாவின் வேலை என நினைத்து அந்த சத்தத்திற்கு எதிராக எனது பக்க சுவரில் தட்டினேன்.

மீண்டும் சத்தம் சிறிது அதிகமாக வந்தபோது வீட்டின் பின்பகுதியில் உள்ள மாட்டுத் தொழுவத்திற்கு சென்றபோது, கால்கள் வெள்ளத்தில் புதைய வீட்டு மாடுகள் நின்றன. அவற்றைக் கடந்து சென்று என்னவென்று யன்னலருகே பார்த்தபோது வைக்கோல் போரில் படுத்திருந்த அடைக்கோழி மிரண்டது.

அதன் சத்தத்தை கேட்டு லலிதா எழுந்து வந்தவள் ‘ அறைக்குள் உழுந்து மணம் மணக்கிறது. பாம்பு வந்துவிட்டதோ என பயமாக இருக்கிறது’ என்றாள்.

‘உள்ளே வரவா? ’

‘உன்னை உள்ளே விட்டால் அம்மா பேசுவா’

‘பாம்பை பார்த்து கலைத்துவிட்டு போறன்”

அவள் கதவை திறந்ததும் உள்ளே அரிக்கன் விளக்கின் மங்கிய ஒளி. அதன் திரியை சற்று உயர்த்தி வெளிச்சத்தைக் கூட்டினாள்.

எனக்கு பாம்பைப் பற்றிய நினைவு மனதில் மறைந்தது. அந்த வெளிச்சத்தில் லலிதாவின் முகம் இருபது வயதுப் பெண்முகம்போல் ஜொலித்தது.

அவள் விளக்கை தரையில் வைத்துவிட்டு எழுந்தபோது அவளது கழுத்து உயரத்தில் நான் நின்றேன் அவளது மார்பகங்கள் செவ்விளனியாக இருந்தன. இந்த மூன்று நாளில் எப்படி இவ்வளவு மாற்றங்கள் நடந்தது?.

தலை நிறைய பட்டாம் பூச்சிகள் பறந்தன. மயக்கம் வருவதுபோல் இருந்தது

வார்தைகள் சிக்கியதால் வாய் பேசாமல் நின்றபோது

‘டேய் உனக்கு உழுந்து மணக்குதா?” என்றாள்.

‘ நல்—லெண்—-ணை வாசம்—தான் வருகிறது-து -து’

‘இந்த இந்த லைட்டை வைத்து தேடிப்பார்,என தந்தபோது, சுதாரித்தபடி அந்த அறையெங்கும் சல்லடையாக்கினேன். கூரை, யன்னல், மற்றும் மூலையில் இருந்த பெட்டிகள் எனத் தேடியபின் கடைசியாக அவள் படுத்திருந்த பாயை எடுத்து உதறியபோது ஓலைப்பாயின் தலைப்பகுதி சுருளில் இருந்து நெளிந்தபடி வெளிவந்த வெள்ளைநிறமான நாகப்பாம்பு திறந்திருந்த யன்னல் வழியே சென்றது.

லலிதா அப்படியே என்னைக் கட்டிப்பிடித்தாள்.

லலிதாவும் நானும் அந்தப் பாம்பைப் பின்பற்றி இரு பாம்புகளாக அந்த யன்னல்வழியாக தொழுவத்தையடைந்தோம். மாடுகள் தலையை நிமிர்த்திப் பார்த்தன. தொழுவத்தின் தென்னோலைக்கூரையில் ஏறிச் சென்றபோது காற்று சத்தமாக வீசியதால் வீட்டின் பின்புறத்தில் நின்ற வேப்பமரத்தின் கிளைகள் சலசலத்தன. தென்னைமரங்கள் போயாட்டமாடின. நாங்கள் இருவரும்; கூரையில இருந்து இறங்கியதும் வீட்டுக்கு வெளியே இருந்த வெள்ளம் இருவருக்கும் வழிவிட்டு விலகி தரையாகியது. எமக்கு முன்னால் சென்ற நாகப்பாம்பு மறைந்துவிட்டது.

வேப்பமரத்தில் ஏறுவோமா?” என்றாள் வலிதா.

சரசர என வேப்பமரத்திலேறி உச்சாணிக்கிளைக்கு சென்று அங்கு இருவரும் பிணைந்து, தீடிரென வந்த காற்றால், இருவரும் நிலத்தில் விழுந்தபோது தண்ணீரில் வெள்ளம் பரவிய இடத்தில் மெத்தென்று இருந்தது. எங்களை கைத்தாங்கலாக ஏந்திய மழை வெள்ளம் மறைந்துவிட்டது. பின்பு அந்த இடத்தில் தண்ணீரில்லை. எங்கள் வயிறின்கீழ் வேப்பமிலைகள் சரசரத்தன. வேப்பமரத்தில் மீண்டும் ஏறிவிளையாடும்போது அங்கிருந்த பறவைகள் படபடத்தன. அவைகளின் வசிப்பிடத்தில் நாங்கள் அத்துமீறியதாக நினைத்திருக்கவேண்டும்.

‘பாடசாலை செல்வோமா??” என்றாள்.

அவளது ஆசையை தட்டாது அங்கு சென்றபோது, ஏற்கனவே மழைக்காக பல குடும்பங்கள் அங்கு ஒதுகியிருந்தனர். பலர் குரட்டை விட்டுத்தூங்கியதைப் பார்த்து சத்தமாக சிரிக்க முயன்றவளை எனது நாக்கை அவளது வாயில்வைத்து தடுத்தேன்.

‘டேய் ரெட்டைநாக்கடா உனக்கு’

‘நாக்கு மட்டுமா?’

முனகியபடி பாடசாலை தாழ்வாரத்தில் என்னைப் பிணைந்தாள் . இருவரும் பிணைந்தபடி நாலு அடி உயரமான சுவரை எட்டிப்பார்த்தபோது தலைமையாசிரியரது அறை தவிர்ந்த சகல இடத்திலும் மனிதர்கள் சுருண்டபடி எங்களைப்போல் பிணைந்தபடியும் படுத்திருந்தனர்.

‘லலிதா படுக்கும்போது மனிதர்களுக்கும் பாம்புகளுக்கும் வித்தியாசமில்லை .

இருவரும் தலைமைஆசிரியரது அறைக்குச் சென்று அவரது கதிரையில் சுருண்டபடி ‘இப்ப என்னில் என்ன மணம்? என்றாள்.

அவளது கூந்தலை முகர்ந்தேன். ‘இப்பொழுது உன்னில் நல்லெண்ணெய் மணம் – என்னில்…?

‘உழுந்து மணம் உன்னில்தான்டா’

——-

அம்மா தட்டி எழுப்பியபோது ‘என்னம்மா அழகான கனவைக் கலைத்துவிட்டாய்?”

‘எங்கடா இரவில் காணவில்லை? ”

‘லலிதாவின் அறைக்குள் பாம்பு சென்றதாக அழைத்தாள். பெரிய நாகப்பாம்பு’

அம்மாவின் முகத்தில் நம்பிக்கையில்லை.

‘நீயும் உங்கண்ணன் மாதிரி வந்திருவாய் போலிருக்கு. அடுத்த கிழமை யாழ்ப்பாணம் படிப்பதற்கு போகிறாய் என்பது நினைவிருக்கிறதா?’

‘இன்னும் இரண்டு கிழமையிருக்கு பாடசாலை தொடங்க.”

‘இல்லை யாழ்ப்பாணத்தில் பெரியப்பா வீட்டில் போய் இருந்து இடத்தைப்பார்’

‘சரி ” எனத்தலையாட்டிவிட்டு மீண்டும் படுத்தபோது ஏதோ சத்தம் கேட்டது. வாரிச்சுருட்டிக்கொண்டு ஓடியபோது எங்கள் வீட்டின் முன்பாக உள்ள வளவில் பாழடைந்து தூர்ந்த கிணற்றருகே சிலர் கூடிநின்றார்கள். அங்கே நான் ஓட என் பின்னால் அம்மாவும் ஓடிவந்தார்.

மழை வருவதற்கு சிலநாட்கள் முன்பாக அங்கு நாயொன்று ஏற்கனவே கிணற்றுக்கருகில் உள்ள சலவைத் தொட்டியில் இரண்டு நாய்குட்டிகள் போட்டிருந்தது. அதில் நாய்குட்டி ஒன்று நாகப்பாம்பின் வாயில் இருந்தது. பின்னங்கால்கள் மட்டும் வெளித்தெரிந்தன. இரண்டாவது நாய்குட்டியை காணவில்லை.

பக்கத்துவீட்டு பெரியப்பா அந்தப் பாம்பை அடித்தார். பெரிய பாம்பின் உடலில் பட்டபோது சவரில் பட்ட பந்துபோல் திரும்பி வந்தது. எந்தக்காயமும் ஏற்படவில்லை.

‘தலையில் அடியுங்கள்” என கூட்டத்தில் யாரோ சொன்னார்கள்.

‘ இந்தப்பாம்புதான் இரவு லலிதாவின் அறைக்கு வந்திருக்கவேண்டும். அங்கும் இரத்தக்கறை உள்ளது. மற்றக் குட்டியை ஏற்கனவே தின்றிருக்கும் என்றார் லலிதாவின் அம்மா.

எனக்கு பயத்தில் நடுக்கமாக இருந்தது.

இன்று மதியம் மோட்டார் வள்ளம் ஓடுமெனக் கூறினார்கள். உனது உடுப்புகளை எடுத்து தயாராக வை பெரியப்பாவும் நீயும் இன்று யாழ்ப்பாணம் போகிறீர்கள் என்றார் அம்மா.

‘இப்பதான் அடுத்தகிழமை என்றாயே?”

‘அப்பதான் நீ சரிவருவாய்’ என்று கையில் பிடித்து இழுத்தாள் அம்மா.

‘அவனால்தான் என்மகள் அந்த உயிர்கொல்லிப் பாம்பிடமிருந்து உயிர் பிழைத்தாள்’ எனச் சொல்லியபடி கட்டியணைத்தார். லலிதாவின் அம்மா.

மாமியிலும் நல்லெண்ணை மணத்தது.

*** *** *****

இரவு தொடர்ச்சியாகப் பெய்த மழையின் சாரல் யன்னலில் அடித்துக் கொண்டிருந்தது. அந்தச் சத்தம் தொடர் வாத்தியம்போல் காதில் இரைந்தபடி இருந்தது. எங்கள் மல்லிகைத்தீவில் மட்டுமா இல்லை இந்த மழை எங்கும் பெய்கிறதா என்ற கேள்வியுடன் எழுந்து அருகில் இருந்த வானொலியை முடுக்கியபோது ‘ விசேட செய்திகள்; காற்றழுத்தம் நீங்கிவிட்டது மீனவர்கள் கடலுக்கு செல்லமுடியும்’ என்று சொல்லப்பட்டது.

நடேசன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 7 Jun 2016 - 14:05

நங்கூரி
---

 என்னைக் கட்டிப்போட்டிட்டு என் கண்    முன்னாலேயே…’

இயலாமையின் விசும்பும் ஓசை மட்டும் மெதுவாய்க் கேட்டது.

அது கொழும்பு துறைமுகம்…

ஒவ்வொருவராக வரிசையில் நின்று உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம். எங்களுக்காக துறைமுகத்தில் நின்றிருந்த அந்தக் கப்பலின் படிகளில் ஏறும்போது நங்கூரி என்ற பெயர் பெரிதாக அந்தக் கப்பலில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருந்ததை அவதானித்தேன். 1983ம் ஆண்டு யூலை மாதம் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவில் இருந்து நல்லெண்ண விஜயத்தில் வந்திருந்தது. நீண்ட நாட்களின்பின் சிரித்த முகத்தோடு ‘வாங்க வாங்க’ என்று கப்பலின் வாசலில் நின்றவர்கள் எங்களை அன்போடு வரவேற்றார்கள். அவர்களின் சிரித்த முகத்தையும், அந்த அன்பான உபசரிப்பையும் பார்த்ததும் மருண்டு போயிருந்த எங்கள் மனசுக்குச் சற்று ஆறதலாக இருந்தது மட்டுமல்ல, பாதுகாப்பான ஒரு இடத்திற்கு வந்துவிட்ட நிம்மதியும் அந்தக் கணமே ஏற்பட்டது. சொந்த மண்ணிலேயே அகதியாக்கப்பட்ட துரதிர்ஷ்டத்தை நினைத்தபடி அருகே நின்ற அக்காவின் முகத்தைப் பார்த்தேன், எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாய் ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் என்ற கவலை அவள் முகத்தில் படர்ந்து கிடந்தது. கடந்த ஒரு வாரமாக நடந்த கலவரத்தின் பாதிப்பால், உயிர் தப்பினால் போதும் என்ற பயத்தில் அக்காவின் பாதியுயிரே போயிருந்தது. கப்பலின் கீழ்த்தளத்தில் வரிசையாக இருந்த படுக்கைகளில் அக்காவிற்கு ஒரு படுக்கையை ஏற்பாடு செய்து கொடுத்து, நிம்மதியாகப் படுக்கச் சொன்னேன். தூக்கமில்லாத இரவுகளாலோ என்னவோ படுத்த உடனேயே அக்கா அயர்ந்து தூங்கிவிட்டாள்.

அக்கா தூங்கியதும், அப்போது மாணவப் பருவத்தில் இருந்த நானும் எனது நண்பர்களும் கப்பலின் மேல் தளத்திற்குச் சென்றோம். கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று பலரும் மேற்தளத்தில் உட்கார்ந்திருந்தார்கள். யாரை நம்பி ஒன்றாக, ஒற்றுமையாக வாழலாம் என்று நினைத்தார்களோ, அவர்களே கைவிட்டு விட்டபோது, வேலியே பயிரை மேய்ந்துவிட்ட ஏமாற்றம் எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்திருந்தது. இனியும் இவர்களோடு ஒற்றுமையாக வாழமுடியாது, வாழவிடமாட்டாரகள் என்ற உண்மையும் இந்த இனக் கலவரத்தின்போது தெளிவாகப் புரிந்தது. உறவை, உயிரை, உடமையை, மானத்தை என்று பலவிதமான இழப்புகளின் பாதிப்பு ஒவ்வொருவர் முகத்திலும் தெரிந்தாலும், அந்த சோகத்திலும் உயிர்தப்பி சொந்த மண்ணை நோக்கிப் பாதுகாப்பாய்ப் போகிறோமே என்ற நிம்மதி அவர்கள் முகத்தில் பிரதிபலித்தது.

யாரோ அழும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். அந்தப் பெண் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு அருகே நின்ற அவன் விறைத்தபடி அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். கணவனாய் இருக்குமோ என்று நினைத்துப் பார்த்தேன். கணவனாய் இருந்தால் அவளை அணைத்து அவளுக்கு ஆறுதலாவது சொல்லியிருப்பானே, ஏன் இப்படி வேண்டாத யாரோபோல எட்டநிற்கிறான். அவளோ வெறி பிடித்தவள்போல ஓவென்று கத்தி அழுவதும் பின் அடங்கிப் போவதுமாய் இருந்தாள். அங்கே நடப்பது ஏதோ அசாதாரண நிகழ்வுபோல எனக்குத் தெரிந்தது. அவசரமாக கீழ்த்தளத்திற்கு ஓடிவந்து தூங்கிக் கொண்டிருந்த அக்காவை எழுப்பி அங்கே நடந்ததை மெதுவாக சொன்னேன். பெண்களின் துயரத்தைப் பார்த்துக் கொண்டு ஆசிரியையான அக்கா ஒருபோதும் மௌனமாய் இருந்ததில்லை. பதட்டத்தோடு அக்கா துள்ளி எழுந்து மேற்தளத்தில் இருந்த அவர்களை நோக்கிச் சென்றாள். நானும் கூடவே சென்றேன்.

அவர்களுக்குள் வாக்குவாதம் சூடேறியிருந்தது. அவள் கைகளை அகல விரித்து அவனைத் தடுத்தபடி ஏதோ உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் சொல்வதைக் கேட்கும் நிலையில் அவனோ இல்லை. ஆவேசம் கொண்டவளாய் திடீரென அவளைத் தள்ளிவிட்டு கப்பலின் ஓரம் நோக்கி ஓடிவந்தான். எங்களைக் கடந்து செல்ல முற்பட்டபோது, எதாவது விபரீதம் நடந்து விடுமோ என்ற பயத்தில் எதிரே வந்த அக்கா அவனைத் தடுத்து நிறுத்தினாள்.

‘என்ன, என்னாச்சு..?’

‘என்னை விடுங்கோக்கா’

‘அப்படி என்ன கோபம், அவள் உன்னை ஏசினாளா?’

‘இல்லையக்கா, என்னை விடுங்கோ’

‘ஏன் என்ன செய்யப் போகிறாய்?’

‘நான் தற்கொலை செய்யப் போறேன். மானம் போச்சு, என்னால இனி உயிரோட இருக்க முடியாது.’ அவன் ஆவேசமாக கைகளை விடுவிக்க உதறினான்.

தற்கொலையா? எனக்கு உதறல் எடுத்தது, வாக்குவாதப் படும்போது அவள் ஏதாவது மனம் நோகக்கூடியதாகச் சொல்லியிருப்பாளோ? அந்த ஆத்திரம் தாங்கமுடியாமல் இப்படி முடிவு எடுத்திருப்பானோ என்று என் மனசு அலைபாய்ந்து கொண்டிருக்கையில்,

‘சரி நான் விடுகிறேன், எனக்கு என்ன நடந்தது என்று சொல்லலிவிட்டு அப்புறம் குதி’ என்றாள் அக்கா.

அவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை., சட்டென்று அடங்கிப் போய்விட்டான். அவனது இயலாமையின் விசும்பும் ஓசை மட்டும் மெதுவாய்க் கேட்டது. தற்கொலை என்பது ஒரு கணத்தில் சடுதியாக எடுக்கும் சந்தர்ப்பம் சார்ந்த முடிவு. சிந்திக்க நேரம் கிடைத்தால் அந்த முடிவை மாற்றிக் கொள்ள நிறையவே சந்தர்ப்பம் இருக்கிறது.

அவள் இப்போது தயங்கித் தயங்கி அருகே வந்தாள்.

‘நீங்க..?’ என்றாள் அக்கா.

‘நான் தான் இவருடைய மனைவி’ அவனைப் பாரத்துக் கொண்டே தயக்கத்தோடு சொன்னான்.

‘இல்லை, இல்லை இல்லை..!’ அவன் மீண்டும் ஆத்திரத்தில் கத்தினான்.

‘இது உன்னுடைய மனைவி இல்லையா?’ அவளைக் காட்டி அக்கா கேட்டாள்.

‘இவள் எல்லாம் ஒரு பெண்டாட்டியா? மானம் கெட்டவள், சொல்லவே வெட்கமாயிருக்கு!’ வெறுப்பால் அருவருப்போடு அவள்மீது ‘தூ’ என்று எச்சில் துப்பினான்.

அவளோ சற்றும் எதிர்பார்க்கவில்லை. அடிபட்ட மான்போல, ஒரு கணம் கூனிக்குறுகி அதிர்ச்சியில் அப்படியே ஒடுங்கிப் போய்விட்டாள்.

‘பாவி, உன்னுடைய உயிரைக் காப்பாற்றத்தானே என்னை நானே பலி கொடுத்தேன், இப்ப என்மேல பழிபோடுறியே..!’ அவள் ஓவென்று தலையில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதாள். இருவரும் மாறிமாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டித் தங்களின் இயலாமையை வெளிப்படுத்தத் தொடங்கவே, அவனது பழிச்சொல் தாங்கமுடியாமல் அவளும் கடலில் குதித்து விடுவாளோ என்ற பீதி அக்காவின் முகத்தில் தெரிந்தது.

மனசில் உள்ளதைக் கொட்டித் தீர்க்கட்டும் என்று அவர்களுக்காக அக்கா காத்திருந்தாள். அவளது கன்னத்திலும் கழுத்திலும் பிறாண்டியது போன்ற கீறல் காயம் காய்ந்து சிவந்து போயிருந்தது. மானம் போனபின் எதற்காக உயிர்வாழவேண்டும் என்று அவர்கள்; நினைத்திருக்கலாம். அவர்களின் தற்கொலை முயற்சிக்குக் காரணம் என்னவாய் இருக்குமென்று ஓரளவு புரியலாயிற்று.

அவள் விம்மி விம்மி அழுவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், அவளை மெல்லத் தாங்கி அழைத்துச் சென்று ஆசுவாசப் படுத்தி ஓரிடத்தில் அமரவைத்தாள் அக்கா. அவளைக் கண்காணிக்கும்படி என்னிடம் சைகை செய்துவிட்டு கணவனிடம் சென்று விசாரித்தாள்.

இனக்கலவரத்தின்போது காடையர் கூட்டம் அவனைப் பிடித்துக் கொள்ள, அவனுக்கு முன்பாகவே அவளைத் துகிலுரிந்து மானபங்கப்படுத்தி விட்டதாக அவன் முறையிட்டான்.

‘நீ ஒரு ஆண்பிள்ளைதானே, அவளைக் காப்பாற்றியிருக்கலாமே?’ என்றாள் அக்கா.

‘என்னாலே முடியலையே!’

‘அவளைக் காப்பாற்ற ஏதாவது முயற்சியாவது நீ செய்திருக்கலாமே?’

‘எப்படியம்மா முடியும், அவங்க கூட்டமாய் வந்தாங்க, கையிலே கத்தி, துப்பாக்கி, சைக்கிள் செயின் என்று எல்லாம் கொண்டு வந்தாங்க’

‘இரண்டுபேரும் தப்பியாவது ஓடியிருக்கலாமே’

‘ஊரடங்கு சட்ட நேரம் தெரு முனையிலே இராணுவம் கடமையில் இருந்தாங்க, அந்தப் பக்கம் ஓடிப்போனால் சுட்டுப் போடுவாங்க, அதனாலே..!’

‘அதனாலே..?’

‘மகனையும் தூக்கிக் கொண்டு பின்பக்க வாசல் கதவால் ஓடி ஒளியப் போனபோதுதான் அவங்கள் எங்களைப் பிடிச்சுக் கொண்டாங்கள். என்னைக் கட்டிப்போட்டிட்டு என் கண் முன்னாலேயே…’

மேற்கொண்டு எதையும் கேட்க அக்கா விரும்பவில்லை. ஆனாலும் அவன் தொடர்ந்தான்.

‘நான் திமிறினேன், துப்பாக்கியாலே எனது மண்டையிலே ஒரு போடு போட்டாங்க, நான் மயங்கிப் போயிட்டேன். அப்புறம் என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது..!’

‘அப்புறம் எப்படித் தப்பி வந்தீங்க..?’

‘நான் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது, கசக்கிப்போட்ட மலர்போல கலைந்த முடியோடு அவள் அழுதபடி மூலையிலே உட்கார்ந்திருந்தாள், காலையிலே ஊரங்குச் சட்டத்தை ஒரு மணிநேரம் தளர்த்தினாங்க, அப்போ தப்பி ஓடிவந்து அகதிகள் முகாமிலே தஞ்சம் புகுந்தோம்..’

அக்கா பதில் ஏதும் சொல்லவில்லை.

யார்மீதும் பிழை சொல்ல முடியாத நிலமை. அவர்களின் பையனைத் தூக்கிக் கொண்டு, அவளையும் அணைத்து ஆசுவாசப் படுத்தியபடி கீழ் தளத்திற்கு அழைத்துச் சென்றாள். அவளுக்கு ஆறதல் சொல்லி அவளை அமைதிப் படுத்தினாள். சோகமும், வலியும் வேதனையும் வெறுப்பும் மிக்கதாய் அந்தக் கப்பல் பயணம் இரண்டு நாட்கள் தொடர்ந்தது.

தமிழர்கள் வாழ்ந்த பாரம்பரிய பிரதேசங்களில் ஒன்றான வடபகுதியில் உள்ள காங்கேயன்துறை துறைமுகத்தில் நாங்கள் வந்து இறங்கியபோது அவளும் எங்களுடன் இறங்கினாள். அக்காவின் ஆலோசனையை ஏற்று மனம் தெளிந்து, தற்கொலை முயற்ச்சியைக் கைவிட்டிருந்தாள். தற்காலிக அகதிகள் முகாமில் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்த மாணவியான அக்காவின் மகள் ரோசாவிடம் அவர்களுக்கு நடந்ததைகூறி அவர்களை அவளிடம் ஒப்படைத்தோம்.

அந்தக் கப்பலில் வந்த ஒவ்வொரு பயணிகளும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப் பட்டிருந்தார்கள். அது போன்ற பல உண்மைச் சம்பவங்களை அவலப்பட்டு வந்த பலரிடம் நேரில் கேட்டு அறிந்து கொண்டதாலோ என்னவோ கொஞ்ச நாட்களாக எதிலும் நாட்டமில்லாமல் ரோசா மனம் கலங்கிப் போயிருந்தாள். சில நாட்களின்பின் தானும் ஒரு போராளியாக மாறப்போவதாக வீட்டிலே சொல்லிவிட்டு அக்காவின் மகள் ரோசாவும் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டாள். அப்போதைய சந்தர்ப்ப சூழ்நிலையில் அவளைப் போன்ற பலர் சென்ற பாதை சரியானதா தவறானதா என்பதைச் சிந்திக்க இடம் தரவில்லை. தமிழர்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏதாவது தற்பாதுகாப்பு முறை ஒன்று வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட எல்லோரது குறிக்கோளாகவும் இருந்தது. அதை அடைவதற்குத் தற்பாதுகாப்புப் போராட்டமே ஏற்றதாகவும் இருந்தது. ஆயுதம் தாங்கி ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட எதிரிக்கு அகிம்சை என்றால் என்னவென்று புரியவில்லை. அகிம்சை மூலம் புரியவைக்கப் பலமுறை முயன்றபோதும் அது தோல்வியிலேயே முடிந்தது. தமிழ் இனத்தை அழிவில் இருந்து காப்பாற்றப் போராளியாகத் தன்னை அர்ப்பணித்த ரோசாவின் மரணச்செய்தி வந்தபோதும் அக்கா கலங்கவில்லை. ஆக்கரமிப்பு இராணுவத்திடம் அகப்பட்டு, மானமிழந்து கோழை போலச் சாவதைவிட, தனது மகள் மாவீரராய் களத்தில் போராடி இறந்து போனதில் பெருமைப்பட்டுக் கொண்டாள் அக்கா. எந்தப் பெண்ணைத் தற்கொலை முயற்சியில் இருந்து அக்கா காப்பாற்றினாவோ அந்தப் பெண் இப்போது வன்னியில் உள்ள முதியோர் காப்பகத்தின் காப்பாளராகக் கடமையாற்றுகின்றார். அவளது கணவனோ மனநோயாளியாய் மனநோயாளர் காப்பகத்தில் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொண்டு இருக்கிறார். அன்று சிறுவனாக இருந்த அவர்களின் மகன் இன்று மணலாறு களமுனையில் முனைப்போடு போராடும் ஒரு தற்பாதுகாப்புப் போராளியாகத் தன்னைத்தானே அர்ப்பணித்து நிற்கின்றான். அந்த வலியும், வேதனையும் அனுபவித்த அவர்களுக்குத்தான் புரியும்.

இனக் கலவரங்களின் போது மட்டுமல்ல, மதம் பிடித்த யானைபோல, வெறிபிடித்த ஒருசில அரசியல் வாதிகளால் எத்தனை தமிழ் குடும்பங்கள் இன்று சீரழிந்து போயின. வேண்டாத விதி அவ்வப்போது வலியவந்து ஒவ்வோர் குடும்பத்திலும் விளையாடிக் கொண்டே இருக்கிறது. மனிதநேயமற்ற ஆயுத விற்பனையாளர்களால் அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டு இழப்புக்கள் இரண்டு பக்கமும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சரி, பிழை யாரறிவார்?

நன்றி:   விகடன் தீபாவளி மலர்- 2008. 
பதிவுகளுக்கு அனுப்பியவர்: குரு அரவிந்தன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 7 Jun 2016 - 14:08

மலைகள் சொரிந்த சடுதி மழை
-----
இருபதாம் நூற்றாண்டின் மத்திய இரு தசாப்பத்தங்களின் காலம். ஈழத்தின் கைதடி-நுணாவில் கிராமத்தில் யாழ்-கண்டி நெடுஞ்சாலையின் எட்டாங் கட்டையடியில் ஒரு வீதியோரக் கல்வீடு.  ஊரார் அதை வெற்றிப் பரியாரியார் வீடென அழைப்பர்.

அவர் ஒரு பிரபலமான சித்த ஆயுள்வேத வைத்தியர். பெயர், இராமநாதர் அப்பா வெற்றிவேலு. மனைவி, கந்தர் வேலாயுதர் நாகமுத்து. மக்கள் இருவர். மகன் கந்தசாமி. மகள் இரத்தினம். இவர்களுடன் தன்மனைவியை 1938-இல் இழந்த கோபாலரும்; மகன்மார் தில்லை, துரை, சின்னத்துரை என வீட்டில் அழைக்கும் பையன்களும் வாழ்ந்தனர். கோபாலர், நாகமுத்துவின் அண்ணர். அவரின் மனைவி (இறந்த பொன்னம்மா) வெற்றியரின் தங்கை. இரு மாற்றுச்-சடங்குகளின் மூலம் எண்மரும் பிறப்பிலேயே இனத்தவர்கள். ஒன்றாகப் பல ஆண்டு வாழ்ந்து வந்தனர்.

வெற்றியர் தன்னுடைய றலி சைக்கிள் வண்டியில் உழக்கிச் சென்று சாவகச்சேரி நகரத்தின் பழைய சந்தையில் ஒரு அறை வாடகைக்கு எடுத்து வாரத்தில் ழூன்று நாட்கள் முற்பகலில் தன் வைத்தியத் தொழிலை நடத்தி வந்தார். சந்தையில் தன் மதிய உணவை அருந்தி விட்டுப் பிற்பகலில் இடைஇடைக் கிராமங்களில் வதியும் வீட்டு-நோயாளிகளைப் பார்த்துத் தன்னுடன் என்றும் எடுத்துச் செல்லும் மருந்துப் பெட்டியிலிருந்து மருந்தும் கொடுத்து ஆலோசனையும் வழங்கி விட்டுப் பின்னேரம் ஆறுமணிக்கு எல்லாம் வீடு திரும்பி விடுவார். கடுமையான நோயாளிகள், இருவர் இருவராக அவர் வீட்டில் தங்கி வாரக் கணக்கில் வைத்தியம் பெறுவதும் உண்டு. தன் நடை-மருந்துகளுக்கு மட்டும் நியாயமாகப் பணம் முன்னரே கேட்டுப் பெறுவார். தன் பெட்டிப்-பேதி மருந்துகள், பயணம், ஆலோசனை முதலிய சேவைகளுக்கு நோயாளர் தாமாக விரும்பிக் கொடுப்பதையே பெற்றுக் கொள்வார். அத்துடன் வீட்டில் ஒரு பசு, இரு எருதுகள், ஒரு மாட்டு-வண்டிலுடன், குடும்பத்து வயல், தோட்டங்கள், ஒரு மரக்-கடை, சிலநேரம் புகையிலை வியாபாரம் எல்லாம் செய்வார். அவ்வூர் கிராமசபையின் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தினர். மேலும் தன் செலவிலேயே கைதடிநுணாவில்-மட்டுவில்தெற்கு கிராமங்களுக்கு ஒரு ஆரம்ப பள்ளியை நிறுவி, நடாத்தியும் வந்தார். இந்த எல்லா வேலைகளுக்கும் வீட்டில் உள்ள எல்லோரும் நாளாந்தம் இரவுபகலாக உதவிசெய்து வந்தனர். கோபாலர் மட்டும், அவ்விரு கிராமங்களுக்கென ஒரு கூட்டுறவுச் சங்கத்தை நிறுவி நடாத்தி வந்து, காலை சென்று இரவு திரும்பி, தங்கை கொடுக்கும் உணவை அருந்திப் படுத்துவந்து, தன் மனைவி பிரிந்த ஆறாம் ஆண்டில் கசநோயால் இறந்துவிட்டார்.  

 பிள்ளைகள் வளர்ந்தனர். பரியாரியாரும், பின்-ஐம்பதுகளில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுத் தன் வலதுகால் பெருவிரலையும் இழந்து, உடம்பும் உருகி, வாமனராகி, வீட்டின் முன்-அறைக்குள் தன் மனைவி நாகமுத்துவின் சதா-பராமரிப்பில் வாழ்ந்து, அறுபதில் இறந்தேவிட்டார். குடும்பத்தினருக்குப் பேரிடி விழுந்த மன அதிர்ச்சி.

பரியாரியார் இறந்த செய்தி, பறை அடித்து அறிவிக்கும் தேவை இன்றித் தானாகவே காட்டுத்தீ போல் ஓரேஒரு மணிக்குள் கிராமம் முழுவதும் பரவி விட்டது. ஊர் கூடிற்று. உறவினர் குவிந்தனர். அவரின் குடும்பக் குடிமக்கள் எல்லோரும் தாமகவே வந்து தம்தமது கடமைகளை இயல்பாகப் புரிந்தனர். பரியாரியாரின் மகன் முறையான செல்லையா வாத்தியார் அதி காலையிலேயே வந்துவட்டார். உருவத்தில் இருவரும் ஒரே அச்சு எனலாம். அதாவது முன்தலை வழிப்பு, பின் தலைக் குடுமி. சாதாரணமாக வெறும் மேலுடன் ஒரு நாலுமுழ வேட்டி. தோளில் ஒரு சிறு வெள்ளைத் துண்டு. வைத்தியர் சிறிது கறுப்பான வாமனர். வாத்தியார் யப்பானிய சூமோ மல்யுத்தவீரன் போன்ற வெள்ளை நிற ஆசானுபாகர். இருவரும் கட்டுப்பாடாக  வாழ்பவர். அவர்கள் சொல்வதை  எவருமே தட்டுவதில்லை. அந்த அளவு பயமும் மரியாதையும்! வைத்தியரின் மரணச் சடங்கு ஒழுங்குகளுக்குச் செல்லையா வாத்தியார், ஒருவரும் கேட்காமலே, பிரேரிக்காமலே - தலைவரல்ல, மேற்பார்வையாளர் ஆனார். கிராமத்து மரணவீடுகளிலும், மண-வீடுகளிலும், காளான்கள்போல் சிறு-தலைவர்கள் முளைத்து வந்து இயங்கி, ஆணைகளிடுவர் அல்லவா? இங்கும் அப்படியே. அவர்களிடையே எழுந்த வாக்குவாத முரண்பாடுகளை எமது செல்லையர் தன் உறுத்தல்-கண் பார்வையினாலேயே தீர்த்து வைத்து உதவினார்.

தில்லையும் துரையும் தகப்பனை இழந்து, மேலே படித்து, உத்தியோகமாகி, அன்று நீர்கொழும்பிலும் கொழும்பிலும் லிகிதராகவும் பட்டதாரி எந்திரிகராகவும் வேலை செய்தனர். இருவரும் உருவில் உயர்ந்து ஊதித் தேகசாலிகளாகக் காணப்பட்டனர். மேலும் துரை, நாட்டின் தொண்டர் படையில் சேர்ந்து பயின்று, பட்டாளத்திலும் ஒரு உயர் அதிகாரி, அப்போ.  அவர்களின் அத்தான் கந்தசாமியர் அனுப்பிய தந்தி கிடைத்தவுடன் வெளிக்கிட்டு இரவிரவாகப் பயணம் செய்து துரையரின் ஒஸ்ரின்- காரில் காலமை செத்தவீட்டுக் கஞ்சியும் சம்பலும் சாப்பிட எட்டுமணிக்கே வந்துவிட்டனர். உடனே வீட்டில் இருந்த அத்தான்-மச்சாள் குடும்பத்தினர், தம்பியன், எல்லாரையும் கண்டு பேசிவிட்டு, பிரேதத்தை விட்டு அகலாமல் அழுதுகொண்டே இருந்த மாமியையும் முகம்-தடவி, ஆறுதல் கூறிவிட்டு, நடந்து கொண்டிருந்த வேலைகளில் உடனேயே பங்கு எடுத்துக் கொண்டு குசலம் விசாரித்த எவருடனும் முடியுமானவரை அளவளாவினர்.

வீட்டின் பெரிய முன்-முற்றத்தில் நின்ற இரு அம்பலவி மாமரங்கள், ஒவ்வொன்றான மாதுளையும் எலுமிச்சையும், கிணறும்-குளியலறையும், கருவேப்ப இலை மரம், முதலியவற்றைத் தவிர்த்து, வளவு முழுவதிலும், ஒரு பெரிய தற்காலிக மண்டபம், கிடுகு, காட்டுத்தடிகள், மரச் சிலாகைகள், கயிறு, முதலியவற்றாலும் கிராமத்துத் தொழில்நுட்பப் பிரயோகத்தாலும் எழுந்தது. வெற்றியரின் பழைய ஆத்ம நண்பன் கார்த்திக்-கட்டாடியின் பொட்டணத்தால் மண்டபத்தின் கூரை, வெள்ளை மயமாக்கப் பட்டது. பதினொரு மணியளவில் ஒருபெரிய பறைமேளமும் இருண்டு பக்க-மேளங்களும் வந்துசேரந்தன. சின்னத்துரை, தன் மாமாவின் சைக்கிளில் மகிழ்ந்து ஓடி, அக்கம் பக்க ஊர்களிலுள்ள பிரதான நண்பர்களுக்கும் அம்மன் கோவில் குருக்களுக்கும் அறிவித்து (மறக்காமல்) இந்தியா-இங்கிலாந்து கிறிக்கெற் போட்டியின் கடைசி நிலையையும் அறிந்து வந்த நேரம், மயானப் பாடையும் கட்டி முடிந்தது. நாவிதர் சின்னத்தம்பியும் வெற்றியருக்குக் கடைசி முறை சவரம் செய்ய வந்தார்.

நாலு மணிக்குப் பிரேதத்தைத் தூக்கிச் சென்று கிராமத்துச் சுடலையில் தகனம் செய்தால் மாலை ஆறுமணிக்கு எல்லோரும் ஒரே பந்தியில் சாப்பிடலாம் என்பது ஏகமனதான குறிக்கோள். சீனி-கூட்டிய கறுப்புத் தேநீரும், ஊறுகாய்த் தண்ணீரும் சர்க்கரைத் தண்ணீரும் மூக்குப்பேணி, கிளாஸ், சிரட்டை முதலியவற்றில் பரிமாறப் பட்டுக்கொண்டே இருந்தன. மூன்று மணிக்கு வெற்றியரின் உடலை அவர் மனைவியிடமிருந்து மிகச் சிரமத்துடன் பிரித்து, நாவிதரிடம் ஒப்படைத்து, ஒருகதிரையில் இருத்திச் சவரம் முடிந்தவுடன் குளிப்பாட்டி வெள்ளை வேட்டி, நீண்டகைச்-சட்டை, தலைப்பாகை, திருநீறு, சந்தனம் அணிவித்து, பாடையினுள் அப்பெரியாரை அவரின் வாழ்க்கையின் கடைசி யாத்திரைக்குத் தூக்கிச் செல்வதற்காகக் கிடத்தினர்.

அப்போது நேரம் மாலை மூன்றரை மணி இருக்கும். குடும்பத்தாரும் செல்லையரும், உயரத்தில் வைத்திருந்த பாடையைச் சுற்றித் தேங்காய் எண்ணெயப் பந்தங்களைக் கைகளில் பிடித்தபடி தேவாரங்கள் பாடிக்கொண்டோ அல்லது பாடுவதைப் போல் முணுமுணுத்துக் கொண்டோ, இறந்த பெரியாரையே பார்த்தபடி தம்தமது மனத் திரைகளில் அவரையும் தங்களையும் சம்பந்தப் படுத்திச் சென்று-முடிந்த பற்பல வாழக்கைச் சம்பவங்களை மீழாய்வு செய்து கொண்டு பொம்மைகளாக நின்றனர். செல்லையரும் துரையும் தில்லையரும் எதிரெதிரே மூன்று பெரிய கற்தூண்களாகவும் ஆண்குலத்தின் கடின-மன உதாணர்களாகவும் எல்லோருக்கும் காட்சியளித்தனர்.

இருந்தாற்போல, பட்டாளத்து மேலதிகாரி துரையரின் கண்களிலிருந்து மாரிமழை பொழிந்து நெஞ்சில் வீழ்ந்து பாய்ந்து வேட்டிக் கட்டை நனைத்தது. தான் பூவரசந் தடியினால் முன்னொரு நாள் அவரிடம் அடிவாங்கி இரத்தம்ஓடிப் புண்வந்து மாறிய கைத்தழும்பைப் பார்த்து,  அவரின் அடியால் தான் நற்குணனாகி முன்னேறி இப்போ பெரிய உத்தியோகங்கள் வகிப்பதன் நன்றிக் கடன் தீர்க்க அவர் ஒரு சந்தர்ப்பமும் தரவில்லையே எனநினைக்க, அவரின் கண்கள் மேலும் நீரைச்சொரிந்தன. ஆனால் அவர்முகமோ கோணவில்லை. முகத்தில் ஓர்உணர்ச்சியும் அவர் காட்டவில்லை. இதைக் கண்ணுற்ற செல்லையரின் கண்களும் மடை திறந்ததைப் போல் பாயத் தொடங்கின. இருவரையும் கண்ட தில்லையரின் கண் குழாய்களும் திறந்து, நீர் பாய்ச்சத் தொடங்கின. அக் கூட்டத்தில் மிகப்  பெரிய உடம்புடைய செல்லையர் சிறிதுநேரத்தில் முகத்தைச் சுழித்துத் தேம்பத் தொடங்கினார். பின்னர் தில்லையரும் வெதும்ப, வெளிவட்டத்தில் தூரநின்ற கார்த்திக் கட்டாடியும் நாவிதர் சின்னத் தம்பியும் அழத் தொடங்கினர். இதைக் கண்ட பெண்கள் யாவரும், அதாவது தாம் பிரேதம் தூக்கும் போதே மாரடித்து முறையாக அழுவதற்கென ஆயத்தமாக இருந்தவர்கள், இனிமேலும் பொறுக்க முடியாது, பலமாக ஓலமிடத் தொடங்கினர். வெற்றியரின் மனைவியார் நாகமுத்து மட்டும் பக்கத்தில் ஒரு கதிரையில் இருத்தபட்ட வாறே, கண்களை மூடியபடி, கதறும் மகள் இரத்தினத்தின் அணைப்பில், இனித் தன்னிடம் ஒரு துளி கண்ணீரும் இல்லை என்பதை நிருபிப்பதைப் போல் பிரக்ஞையில்லாச் சடம்போலக் கனவுலகில் சஞ்சரித்தார்.

செல்லையர், தில்லை, துரை ஆகிய மூன்று மனித மலைகள் அன்று வெற்றிப் பரியாரின் மரணச் சடங்கின் போது சடுதியாகச் சொரிந்த கண்ணீர் மழை பல ஆண்டுகளாக அந்தக் கிராமத்து மக்களால் நினைவு கூர்ந்து பேசப்பட்டு வந்தது, கடின-மன ஆண்களும் கண்ணீர் சுரப்பர் என்பதற்கு உதாரணமாக!

(அடுத்த நான்கு நாட்களில், தன் கணவனாரின் துரிதப் படுத்திய எட்டுச்செலவு முடிய, அந்தக் குடும்பத்தார் நாகமுத்துவையும் பறிகொடுத்து, அவளின் செத்த-வீடும் அதே பந்தலில் நடந்தேறியது, அது எனது அடுத்த பரிதாபக் கதையில்).


பேராசிரியர் கோபன் மகாதேவா
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 7 Jun 2016 - 14:11

பாக்கியம்மா
----
அது ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்று நான்காம் ஆண்டு  புரட்டாதி மாதம் முதல் வாரமாயிருந்தது. கிளாலிக் கடல் நீரேரியின் கரையில், அவளைச் சுமந்து வந்த படகு தரை தட்டிய போது பின்னிரவாகியிருந்தது. ‘ஊ…ஊ’ வென்று இரைந்தபடி தேகத்தின் மயிர்க் கால்களையும் கடந்து ஊசியாக உள்ளிறங்கியது கனத்த குளிர் காற்று.

அவள் அணிந்திருந்த மெலிதான நூல் சேலையின் முந்தானையால் தலையையும் உடம்பையும் இழுத்து மூடியிருந்தாள்.  எலும்புக்கு தோல் போர்த்தியது  போன்றிருந்த அந்த உடம்பு ‘கிடு கிடு’ வென நடுங்கிக் கொண்டேயிருந்தது.

குச்சிகளைப் போல நீண்டிருந்த கைகளால் படகின் விளிம்பை  இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தாள். என்றுமில்லாதவாறு அவளது நெஞ்சுக் கூட்டுக்குள்  இன்று  ‘படக்.. படக்’ அதிகமாக அடித்துக் கொள்வது போலிருந்தது.

இருள் கலைந்திராத அந்த விடிகாலைப் பொழுதில் தனது சுருங்கிப்போன கண்களை மேலும் இடுக்கிப் பூஞ்சியவாறு கரையிறங்கப் போகும் நிலத்தின் அசுமாத்தங்களை ஆவலோடு நோட்டமிடத் தொடங்கினாள் பாக்கியம்மா.

அது ஒரு ‘புளுஸ்டார்’ வகை மீன்பிடிப்படகாக இருந்தது. அதிலே பொருத்தப்பட்டிருந்த பதினெட்டு குதிரை வலுக்கொண்ட என்ஜினின் இயக்கத்தை நிறுத்திய படகோட்டிகள் இருவரும் ‘சளக்’ ‘சளக்’ என சத்தமெழும்படியாக தண்ணீருக்குள் குதித்து இறங்கினார்கள்.

சராசரி உயரமாயிருந்த அவர்களது நெஞ்சு மட்டத்திற்கும் மேலாக கடல்நீரேரி தளம்பியது. அதிக உயரத்திற்கு எழும்பாமல் மிதமாக மோதிக் கொண்டிருந்த அலைகளின் மீது பலமாக உலாஞ்சியது அந்தப் படகு.

ஆளுக்கொரு பக்கமாக அதன் விளிம்பை அழுத்தமாகப் பற்றிப் பிடித்தவாறு கரையை நோக்கி தள்ளிக் கொண்டு நடந்தனர்  படகோட்டிகள். இதுவரையிலும் அவர்களிடமிருந்த உச்சமான பதட்டம் இப்போது ஓரளவு தணிந்து போயிருந்தாற் போலிருந்தது. குழந்தைகள் முதியவர்கள் உட்பட பயணிகள் பத்துப் பதினைந்து பேர் வரை அந்தப் படகிலிருந்தனர்.

அதுவரையிலும்  மௌனத்தில் அமுங்கிப் போயிருந்த அனைவரது நாசிகளிலிருந்தும் நீண்ட பெருமூச்சுக்களோடு அச்சம் வெளியேறியது. உயிரைப் பறிக்கும் பெரிய கண்டமொன்றிலிருந்து இன்றைக்கு அரும்பொட்டில் காப்பாற்றப்பட்டு விட்டதற்காக தத்தமது கடவுள்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டனர் பயணிகள். 

“எண்ட தாந்தா மலையானே” பாக்கியம்மாவும் வாய் விட்டுப் பிரார்த்தித்துக் கொண்டாள். அவளது மனசுக்குள் அந்தரிப்பான உணர்வொன்று கிளறத் தொடங்கியிருந்தது. முழங்காலளவு தண்ணீருக்குள் பயணிகள் இறக்கி விடப்பட்டிருந்தனர்.

படகோட்டிகளில் ஒருவனின்  கையை உதவியாகப்  பிடித்துக் கொண்டு  பாக்கியம்மாவும்  இறக்கி விட்டிருந்தாள். உப்பிப் பெருத்திருந்த தனது பயணப் பையில் ஒரு துளியும் உப்புத் தண்ணீர் படாதவாறு அவதானத்துடன் உயர்த்தி  தலையிலே சுமந்து கொண்டாள். மறுகையால் சேலையை சற்றுத் துாக்கிப்பிடித்தவாறு தண்ணியைக் கடந்து நடந்த போது விறைத்துப் போயிருந்த மெலிந்தான அவளது கால்கள் தள்ளாமையால் இடறின. ஈர மணலில் புதையப் புதைய கஷ்டப் பட்டு நடந்து கரையேறியிருந்தாள் பாக்கியம்மா.

கடலின் தொடுவானத்தில் பனையளவு உயரத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த வெள்ளியொன்று திடீரென எரிந்து கொண்டே சென்று நீரேரிக்குள் விழுந்தது. பாக்கு நீரிணையின் தொடுப்பாக பரந்து கிடந்த அந்தக் கடல் நீரேரி இனம்புரியாத பயங்கரத்துடனும் துயரத்துடனும் தனது சிற்றலைக் கரங்களால் நெஞ்சிலடித்தபடி நிம்மதியற்றுத் துடித்துக் கிடப்பதைப் போல தோற்றமளித்தது. வாழ்வில் ஒரு தடவையேனும் பயணம் வந்திராத யாழ்ப்பாணப் பட்டினத்தின் கிளாலிக் கரையோரம் தலையில் நிறைந்த சுமையுடன் தனியாக நின்றிருந்தாள் பாக்கியம்மா.

கரையை வந்தடைந்திருந்த வேறு சில படகுகளிலிருந்தும் ஆட்கள் இறங்கிக் கொண்டிருந்தனர். தற்காலிகமாக முளைத்திருந்த சின்னஞ்சிறு கொட்டில் கடைகளும், பெற்றோல் மாக்ஸ் விளக்கு வெளிச்சங்களுமாக திருவிழாக் கால பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் கிளாலிக் கடல் நீரேரிக்கரையின் பல இறங்கு துறைகளில் இதுவுமொன்றாகும்.

இன்றைக்கு வழமைக்கு மாறான இருளும் அமைதியும் கவிந்து போயிருந்தது. கண்ணுக் கெட்டிய துாரம் வரையிலும், ஒரு அரிக்கன் விளக்கு வெளிச்சத்தைக் கூட காண முடியாமலிருந்தது. இருளுக்கு பழகிப்போன கண்களின் நிதானத்துடன் அங்கிருந்தவர்கள் வேகமாக அந்த இடத்தை விட்டுக் கடந்து போகப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தனர்.

“இன்னும் எப்பன் விடிஞ்சவுடன ‘பொம்மர்’ காரன் குண்டு போடத் தொடங்கிடுவான் அதுக்கிடையில எழுதுமட்டுவாள் சந்தியைக் கடந்திட்ட மெண்டால் தப்பி விடுவம்” என்றவாறே சற்று துாரமாக இருளுக்குள்  நிறுத்தப்பட்டிருந்த ‘மினிபஸ்’ ‘தட்டிவான்’ ‘லான்ட் மாஸ்ரர்’ போன்ற வாகனங்களில் இடம் பிடிப்பதற்காக மூட்டை முடிச்சுகளுடன் அறதி பறதியாக சனங்கள் ஓடிச் சென்று கொண்டிருந்தனர்.

பாக்கியம்மாவுக்கானால் அடுத்ததாக என்ன செய்வதென்றே புரியவில்லை. அவளது வீட்டிலிருந்து புறப்பட்டு இன்றோடு மூன்றாவது நாளாகிறது. கடலையும் கடந்து வந்தாயிற்று, இனி எந்தத் திசையால் எங்கே போவது என்ற குழப்பம்  பாக்கியம்மாவைப் பீடித்துக் கொண்டது.

அலங்க மலங்க  விழித்தவளாக சுற்று முற்றும் பார்க்கத் தொடங்கினாள். கண்ணுக் கெட்டிய துாரம் வரைக்கும்  நீண்டு செல்லும் கடற்கரையும், அதற்கு அப்பால் விரிந்து செல்லும்  வெட்டை வெளியுமே தென்பட்டது. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது  போல பாக்கியம்மாளுக்கு எல்லாமே இருள் மூடிக் கிடப்பதாகத் தோன்றியது.

அதே கடல் நீரேரிக் கரையில் இன்னொரு பகுதியில் அமைந்திருந்த இறங்கு துறையை இலக்கு வைத்து ‘பைற்றர்’ ரக உலங்கு வானூர்திகள் இரண்டு வட்டமடித்தபடி தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கியிருந்தன. காதைக்கிழிக்கும் ‘கடகடகட.. கிர்..கிர்’ என்ற வினோதமான சத்தத்துடன் ‘தேட்டி கலிபர்’ கனரக துப்பாக்கிகள் சன்னங்களைப் பொழிந்து தள்ளின. கீழேயிருந்தும் மேற் கொள்ளப்பட்ட எதிர்த் தாக்குதல்களால் அந்தப் பிரதேசமே அதிரத்  தொடங்கியது. தனது பயணப்பையை இறுக்கிப் பற்றியவாறு பக்கத்திலிருந்த ஒற்றை தென்னையுடன் ஒண்டிக் கொண்டிருந்தாள் பாக்கியம்மா. இருண்ட வானத்தில் வெடித்துச் சிதறிய சன்னங்கள் ஒளிப்பிளம்புகளாக கடலிலும் கரையிலும் சொரிந்து கொண்டிருந்தன. 

“எண்ட கதிர்காமத்தானே , நான் பெத்த புள்ளையை கண்ணால காணு மட்டுமெண்டாலும் இந்த உசிர காப்பாத்திக் குடப்பா” என அரற்றத் தொடங்கியது பாக்கியம்மாவின் மனது. அந்தப் பயங்கரமான வான வேடிக்கையை காணச் சகிக்காத தேய்பிறை நிலவு முகில்களுக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் தாக்குதலை நிறுத்திய உலங்கு வானூர்திகள் தூரமாகச் சென்று மறைந்து போயின. இப்போது அந்த இடத்தை ஒரு மயான அமைதி மூடியிருந்தது. வெடிச்சத்தங்கள் கேட்கத் தொடங்கியதுமே கையிலிருந்த மூட்டை முடிச்சுகளையெல்லாம் வீசியெறிந்து விட்டு, உயிரைக்காத்துக் கொண்டால் போதுமென ஓடிச் சென்றிருந்தவர்கள் பலர், மீண்டும் அவசர அவசரமாக அவற்றை எடுத்துச் செல்வதற்காக வரத் தொடங்கினர். தனக்குப் பக்கத்தில் மீண்டும் சன நடமாட்டங்களைக் கண்ட பாக்கியம்மாவுக்கு சற்று ஆசுவாசம் ஏற்பட்டாற் போலிருந்தது.

அங்கு நின்றிருந்தவர்கள் யாரிடமாவது உதவி கேட்கலாம் என நினைத்துக் கொண்டாள். தன்னைத்தானே சுமந்து நடப்பதே பெரும் பாடாக இருக்கும் நிலையில், கல்லுக்குண்டாக கனத்துக்கொண்டிருந்த பயணப்பையையும் இழுத்துச் சுமப்பதால் பாக்கியம்மாவுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. ஆனாலும் கடவுளுக்குப் படைக்கும் ஒரு நைவேத்தியம் போல மிகவும் பக்குவமாக அதைச் சுமந்து கொண்டிருந்தாள். நகரத்திற்கு செல்லும் பஸ் வண்டியை பிடித்து விட்டால் அங்கு போனதன் பின் எப்படியாவது தனது மகனைப் பற்றிய விபரங்ளை அறிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இப்போதும் அவளிடம் பலமாகவே இருந்தது.

அங்கே மிகவும் பர பரப்பாக பொருட்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்த ஒரு இளைஞனைக் கண்டாள். அவசரமாக அவனருகே சென்றவள் “மகன்…..மகன்.. நான் யாழ்ப்பாணம் போக இருக்கன், எந்தப் பக்கத்தால போய் எங்க வசியைப் பிடிக்கிறண்டு விளங்கல்ல மகன், ஒல்லம் காட்டி விடுவியளோ நல்லாயிருப்பியள்” மிகவும் கெஞ்சலாகக் கேட்டுக் கொண்டாள் பாக்கியம்மா. மனமோ ‘கடவுளே… கடவுளே…’ என் அரற்றிக் கொண்டிருந்தது.

“யாழ்ப்பாணம் போற வாகனங்களெல்லாம் போட்டுது எண்டு நினைக்கிறன்..” அவளை நிமிர்ந்து பாராமலே பதில் கூறினான் அந்த இளைஞன்.  பாக்கியம்மாவுக்கு பகீரென்றிருந்தது. கண்கள் சிவந்து தலைமுடி கலைந்து, சேட்டின் மேல் பட்டன்கள் திறந்திருந்த நிலையில், எண்ணெய் வடியுமாப் போலிருந்த முகத்துடன் அந்த இளைஞன் மிகவும் களைப்படைந்தவனாயிருந்தான்.  ஏதோவொரு தூண்டுதலில் அவனது முகத்தையே ஊடுருவிப் பார்த்தக் கொண்டிருந்தாள் பாக்கியம்மா.`

“எவடம் போக வேணும்” எந்த உணர்ச்சிகளுமே இல்லாத இயந்திரக் குரலில் கேட்ட  இளைஞன், தனது வேலையிலிருந்து தலையை நிமிர்த்தி ஒரு கணம் கூட சுற்று முற்றும் பார்க்கத் தோன்றாதவனாக இருந்தான்.

“நான் யாழ்ப்பாணந்தான் போகவேணும் மகன்..” அதைத் தவிர சொல்லுவதற்கு அவளுக்கு வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை.பாக்கியம்மாவின் தெளிவற்ற பதில், தனது வேலையில் துரிதமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த  இளைஞனுக்கு  சினத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
“இது யாழ்ப்பாணம் தானணை போக வேண்டிய ஊரைச் சொல்லுங்கோவன்”

தன்னைத்தானே மிகவும் பரிதாபமாக உணரத் தொடங்கினாள் பாக்கியம்மா. அந்த இளைஞனின் மூலம் ஏதாவது உதவி கிடைக்குமா? இல்லையா? என்பதை அவளால் ஊகிக்க முடியாமலிருந்தது. அந்த நேரத்தில் அவனை விட்டு விட்டால் அந்த இடத்தில் இன்னொரு உதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் அவளுக்கு அறவே இல்லாதிருந்தது.

அன்றிரவு கிளாலிக் கடல் நீரேரியில் கடற்புலிகளுக்கும், கடற் படையினருக்கும் நடந்து முடிந்திருந்த கடற் போருக்கு பதிலடித் தாக்குதல்கள் தொடரலாம் என்ற அச்சத்தில், அந்த கரையோரப்பகுதி எந்தச் சன நடமாட்டமும் இன்றி துடைத்து விட்டாற் போலிருந்தது.

“நீங்கள் எவடமெண்டு சொன்னியலெண்டால் போற வழியில இறக்கி விடுறன்” இப்போது அவன் பொருட்களை வாகனத்தில் ஏற்றி முடித்திருந்தான். வானத்தை அண்ணாந்து பார்த்தவன் காற்றுத் திசையிலே தலையை சரித்து சத்தங்கள் ஏதும் கேட்கிறதா என அவதானித்தான். அதன் பின்பாகவே தனக்கு முன்பாக நின்று கொண்டிருந்த பாக்கியம்மாவிடம் அவனுடைய பார்வை திரும்பியது.

“மகன்… நான் மட்டக்களப்பிலருந்து யாழ்ப்பாணத்திற்கு முதமுதலா இப்பத்தான் வந்திரிக்கன், இயக்கத்தில இரிக்கிற எண்ட மகனாரைப் பாத்துப் போக வேணும். எனக்கு முன்னப் பின்ன இடம் வலம் எதுவும் தெரியாதே மகன், நான் என்ன செய்யிற, இண்டைக்கெண்டு பாத்து சண்டயும் மூண்டிட்டு இந்தப் பாவி எங்க போவன் எப்பிடி என்ர புள்ளயை பாப்பனடாம்பி…..” அவளறியாமலே அடிவயிற்றிலிருந்து கேவலொன்று புறப்பட்டது. காலத்தின் கோடுகளால் நிரம்பியிருந்த அவளது முகத்தில் அதீதமான களைப்பு அப்பிப் போயிருந்தது. இமைச்சுருக்கங்களுக்குள் கண்ணீர் தேங்கியிருந்தது.

பாக்கியம்மாவின் பதில் அந்த இளைஞனது இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் ஈரம் கசியச் செய்திருக்க வேண்டும். இப்போது தலையை நிமிர்த்தி அவளின் முகத்தை ஆதரவோடு நோக்கினான்.

“ம்… சரியம்மா பிரச்சனையில்ல என்னோட வாங்கோ முதல்ல இந்த இடத்தை விட்டுப் போகவேணும், அங்கால போய் மிச்சத்தை யோசிப்பம்” எனக் கூறியவனாக பாக்கியம்மா சுமந்து கொண்டிருந்த பயணப்பையை தனது கையில் வாங்கிக் கொண்டான். சற்று தூரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறியதொரு ஹைஏஸ் வாகனத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

சட்டென ஒரு நிம்மதி மனதுக்குள் பரவுவதை உணர்ந்தாள் பாக்கியம்மா. அந்த இளைஞனுக்குப் பின்னால் இயன்றவரை வேகமாக நடந்து செல்ல முயற்சித்தாள். மணலுக்குப் புதையும் காலடிகளை தூக்கி நடப்பது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. எத்தனை அடிகள் முன்னோக்கியெடுத்து வைத்தாலும் அந்த இடத்திலேயே நிற்பது போலிருந்தது.

நீரேரியின் மெல்லலைகள் சடுதியாக வேகமெடுத்து ’தடபட’ வென சத்தமெழுப்பியவாறு அவளுக்கு பின்னே ஓடி வருவது போல ஒரு தோற்றம் ஏற்பட்டது. திடீரென அந்த இடத்தை விட்டுக் கடந்து போகவே அவளுக்கு விருப்பமில்லாதிருப்பது போல உணர்ந்தாள். அப்படியே அந்த குறுமணலில் கால்களை நீட்டி உட்கார்ந்து கொள்ள வேண்டும் போல  மிகவும் அசதியாக  இருந்தது.

“அம்மா எப்பன் வேகமா வாங்கோ” அந்த இளைஞன் அவளை துரிதப் படுத்தினான். தலையிலிருந்து வழிந்து கிடந்த முந்தானையை இழுத்துப் போர்த்துக் கொண்டவாறு நடையை வேகப்படுத்தினாள் பாக்கியம்மா. ’ஊ… ஊ…’ வென இரைந்து கொண்டிருந்த காற்று அவளை இறுக்கமாகத் தழுவிக் கொள்வது போலிருந்தது. “ம்… ஏறுங்கோம்மா மெதுவா.. மெதுவா.. பாத்து ஏறுங்கோ கவனம்” அந்த வாகனத்தில் வேறு ஆட்கள் எவரும் இருக்கவில்லை. ஏதேதோ பொருட்கள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு, வாகனத்தை நிறைத்திருந்தது. சாரதியின் இருக்கையில் ஏறிக் கொண்ட இளைஞன் வாகனத்தை செலுத்தத் தொடங்கினான்

அவனுக்கு பக்கத்து ஆசனத்தில் பாக்கியம்மா அமர்ந்திருந்தாள். சற்று முன்புவரை அவளைச் சூழ்ந்திருந்த பதட்டங்களும் பயமும் மறைந்து போய் மனதில் நம்பிக்கையும் தைரியமும் ஏற்பட்டிருந்த நிலை அவளது முகத்தில் தெரிந்தது. தனது மகனும் பெரியவனாய்  வளர்ந்து இந்த இளைஞனைப் பார்த்தாற் போல் இருப்பானோ என ஒரு கணம் நினைத்துக் கொண்டாள். அந்த நினைப்பின் பூரிப்பில் தன் மகனைக் காணும் ஆவலால் உந்தப்பட்டவளாக தாந்தாமலையானை மனசுக்குள்  வேண்டிக் கொண்டாள். தென்னஞ் சோலைகளும் பனங்கூடல்களும் நிறைந்திருந்த கிளாலியின் கிடங்கு பள்ளமான கிரவல் வீதியில் கடலில் தள்ளாடும் படகைப் போலவே அந்த வாகனமும் பாக்கியம்மாவை ஏற்றிக் கொண்டு பயணிக்கத் தொடங்கியிருந்தது.
 
வான் தாக்குதலுக்கான அச்சுறுத்தல் நிறைந்ததான அந்தப் பகுதியைக் கடந்து பிரதான வீதியில் ஏறும் வரைக்கும் அவர்களிடையே இறுக்கமான  மௌனம் நிலவியது. எத்தனையோ வருடங்களாக கறுப்புத் தார் ஊற்றப் பட்டிராத பிரதான வீதியின் கிடங்கு பள்ளங்கள் இன்னும் பெரிதாக இருந்தன.

என்ன நிறமென அனுமானிக்க முடியாதபடி பெயின்ற் கழன்று மங்கிப் போயிருந்த அந்த வாகனத்தின் கதவுகள் இப்போதே கழன்று விழுந்து விடுவன போல ‘கட கடா..கடகடா..’ வென ஆடிக் கொண்டிருந்தன. தண்ணீர் இறைக்கும் இயந்திரம் போன்றதொரு சத்தத்துடன், மண்ணென்ணையும் ஓயிலும் கலந்த  கரும்புகையைத் ‘புரு..புரு’ வென தள்ளியவாறு, யாழ்ப்பாணம் நோக்கி ஓடிக் கொண்டிருந்தது அந்த  வாகனம். இனம் புரியாத பாசமும் நன்றியுமாக மெலிதாக துளிர்த்துக் கிடந்த கண்ணீருடன், அடிக்கடி தலையைத் திருப்பி அந்த இளைஞனின் முகத்தை பார்த்துக் கொண்டாள் பாக்கியம்மா. இப்போது நிலம் வெளிக்கத் தொடங்கியிருந்தது.
 
ஒன்பதாம் வகுப்பு படிக்கின்ற வயதிலேதான் அவளது மகன் ஊரிலிருந்த இன்னும் சில பையன்களுடன் சேர்ந்து காணாமல் போயிருந்தான். சின்னஞ் சிறுசுகளாக ஏழு பிள்ளைகளுக்கு தாயாக இருந்தவளால், அந்தச் சந்தர்ப்பத்தில் ஓடியாடித் திரிந்து தனது மகனைக் தேடிக் கண்டு பிடிக்க முடியாதிருந்தது.

கோயில் குளமெல்லாம் அலைந்து நேர்த்தி வைத்தாள். ஒரேயொரு தங்க நகையாக காதிலே அணிந்திருந்த தோடுகளை விற்று ஒரு பூசாரியைப் பிடித்து ’வெற்றிலையில் `மை’ போட்டுப் பார்த்தாள். அறிந்தவர்கள் தெரிந்தவர்களிடம் விசாரித்துப் பார்த்ததில் மகன் இயக்கத்திற்குதான் போயிருக்கிறான் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. ஆனால் எங்கே எப்படி இருக்கிறான் என்ற விபரங்களை அவளால் அறிந்து கொள்ள முடியவில்லை.
 
இன்றைக்கு எப்படியாவது தன்னுடைய செல்ல மகனின் முகத்தை பார்த்து விடுவேன் என்ற நினைவு அவளுக்குள் அளவுகடந்த மகிழ்ச்சியையும், நலிந்து போயிருந்த அந்த சரீரத்திற்குள் புதிதான தெம்பையும் ஏற்படுத்துவது போலிந்தது. எப்போதும் இறுக்கமாக மூடிக்கிடக்கும் அவளது காய்ந்த உதடுகளுக்குள் அதிசயமாக இன்றொரு புன்னகை மலர்ந்திருந்தது.
 
“அம்மா உங்கட மகனின்ற இயக்கப் பெயர் என்ன? எந்தப் படையணியில இருக்கிறார்?” இதுவரையும் வாகனத்தை ஓட்டுவதிலேயே தனது கவனத்தைக் குவித்திருந்த இளைஞனின் கேள்வி பாக்கியம்மாவின் நினைவுகளைக் கலைத்தது.

அவளின் முகத்தில் ஏற்பட்டுக் கொண்டிருந்த நுணுக்கமான மாற்றங்களை அவன் கவனித்தக் கொண்டுதான் இருந்திருக்கிறான் என்பது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவனுடைய எதிர்பாராத கேள்வியால் பாக்கியம்மாவின் மனம் மெல்ல உலுக்கப் பட்டதைப் போலிருந்தது.

“கோவிச்சிக் கொள்ளப்படாது மகன், 89 ல எண்ட புள்ள வீட்டை விட்டு வெளிக்கிறங்கீட்டான். அதுக்குப்புறவு எனக்கு எந்த விசழமும் தெரியாது, இந்த ஆறேழு வருசமா குளறிக் குளறிக் கிடந்தன். போன மார்கழிலதான் என்ர புருசனாரிட மருமகப் பொடியன் ஒருத்தன் ஏதோ கை காரியமா யாழ்ப்பாணம் வந்தடத்தில, றோட்டில எண்ட மகனைக் கண்டிரிக்கான்.

இவனுக்கு அடையாளம் பிடிபடல்ல. எண்ட மகன் தான் ‘மச்சான் மச்சான்’ எண்டு கூப்பிட்டு கதைச்சிரிக்கான். ரெண்டு நிமிசமும் வராதாம், ஒரு ட்ராக்கில கன பொடியனுகளோட நிண்டவனாம், ‘அம்மாவை கண்டியோ’ எண்டு மட்டும் தானாம் கேட்டவன் எண்ட புள்ள, மறுகா ‘அவசரமா போக வேண்டியிருக்குது மச்சான் வாறன்’ எண்டாப் போல ஓடிக் கொண்டு போய் ட்ரக்கில ஏறீட்டானாம், கனதுாரம் கையை ஆட்டிக் கொண்டே போனவனாம், ‘என்ன பொடிசா இருந்தவன் இப்ப பெருத்து உசரமா வளந்து மீசையெல்லாம் வைச்சி அப்பிடியொரு அழகனா இரிக்கான் மாமி’ எண்டு மருமகப் பொடியன் வாயில கையை வைக்கான்”

பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டாள் பாக்கியம்மா. துயரமும் பெருமிதமுமான உணர்ச்சிக் கலவைகள் அவளது முகத்தில் அலைமோதிக் கொண்டிருந்தன. தலையிலிருந்த சேலைத்தலைப்பை எடுத்து கண்களையும் முகத்தையும் அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.

வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த இளைஞனின் பார்வை வீதியில் பதிந்திருந்த போதும், அவனது மனதில் பாக்கியம்மாவின் வார்த்தைகள் கல் வெட்டுகளாக இறங்கிக் கொண்டிருந்தன. வழமையாக அதிகாலை நேரங்களில் அவனுக்கு ஏற்படும் நித்திரை மயக்கம் இன்றைக்கு அறவே இல்லாதிருந்தது.
 
பாக்கியம்மா விட்ட இடத்திலிருந்த தொடர ஆரம்பித்தாள். அவளுக்கு இப்போது நிறையக் கதைக்க வேண்டும் போலிருந்தது. கல்லுப் போல இறுகிய முகத்துடன் காணப்பட்ட அந்த இளைஞன் தனது கதைகளை விளங்கித்தான் கேட்கிறானா இல்லையா என்பதெல்லாம் அவளுக்கு தெரியவில்லை. ஆனால் எப்போதுமில்லாதவாறு தன் மனசு மிகவும் இலேசாகியிருப்பதாக உணர்ந்தாள்.
 
“நான் அடுத்த நாளே யாழ்ப்பாணத்திக்கு கிளம்பியிருப்பன் மகன், அப்பிடி எண்ட மனசு கிடந்து துடிச்சிது, என்ன செய்யிற இவ்வளவு துாரம் பயணம் கட்டுறதெண்டா கையில மடியில செலவுக்கு வேணுமே, இவங்கட அப்பாவும் சொந்தத்தில ஒருத்தனோட சின்ன தகராறு பட்டதில சூனியம் வைச்சிட்டானுகள், அவரு இப்ப பாயும் படுக்கையுமாதான் இரிக்கார், மற்றதுகள் எல்லாம் பொட்டைக் குஞ்சுகள். நான் எங்க போறடா மகன்.. வெள்ளாமை விளையும் மட்டும் பாத்துக் கிடந்தன். இத்தினை வருசத்திற்குப் பிறகு பாக்கப் போற எண்ட புள்ளைக்கு ஆசைப்பட்ட பணியாரங்கள் எல்லாம் செஞ்சு வந்திருக்கன், மறுவா கிறுகிப் போவேக்க புள்ளைட காலடி மண் எடுத்துப் போய் கண்ணுாறு சுத்திப் போட வேணும்”

இப்போது தனது சீட்டில் நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள் பாக்கியம்மாள். இன்றைக்கு எப்படியாவது மகனின் முகத்தைப் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கை அவளுக்குள் வியாபிக்கத் தொடங்கியிருந்தது. அந்த இளைஞன் வாகனத்தை வீதியோரமாக ஒரு மரத்திற்கும் கீழே நிறுத்தி விட்டு இறங்கினான். “அம்மா கொடிகாமம் வந்திட்டுது இறங்குங்கோ தேத்தண்ணீ ஏதாவது குடிச்சிட்டுப் போவம்”
 
‘என்னவொரு இரக்கமான புள்ள.. எண்ட மகனைப் போல, அவனும் இப்பிடித்தான் வீட்டில இருந்த காலத்தில அம்மா அம்மா எண்டு, எண்ட காலைத்தான் சுத்திச் சுத்தி வருவான், காட்டுக்கு சுள்ளி முறிக்கப் போறண்டாலும் சரி, ஆத்தில றால் பிடிக்கப் போறண்டாலும் சரி, வெள்ளாமை வயலுக்க நெல்லுப் பொறுக்கப் போறண்டாலும் சரி எண்ட சீலைத்துணிய பிடிச்சிக் கெண்டு பின்னால இழுபடுவான். எல்லா வேலையும் செஞ்சு தருவான், நா பெத்த தங்க மகன் இப்ப எங்கயிரிக்கானோ..”
 
அவளுக்கு எப்போதுமே தனது மகனைப் பற்றி நினைவுகள் ஏற்படும் போது கட்டுக்கடங்காமல் உணர்ச்சிகள் பொங்குவது வழமையானது. இன்று  அதிகமாகவே அவளது மகனின் நினைவுகளால் மனம் நிறைந்து போயிருந்தாள்.

திடீரென அந்த இடம் ஒரே களேபாரமாகியது. “எடேய் வந்திட்டான்ர பொம்பர்காரன், எங்க கொட்டப் போறானோ தெரியேல்ல” சனங்கள் பதறியடித்தக் கொண்டு ஓடினார்கள். கிடைத்த மறைவுகளுக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டார்கள். காலுக்கு கீழே நிலமும் காற்றும் அதிருவதை பாக்கியம்மா உணர்ந்தாள்.

“தலைக்கு மேலால றவுண்ட் எடுக்கிற படியால இவடத்திற்கு அடிக்க மாட்டான், கிளாலிக் கரைக்குத்தான் அடி விழப் போகுது. அந்தா..அந்தா பதியிறான்.. குத்தியிட்டான் குத்தியிட்டான், இந்தா எழும்புறான், அங்கார் அடுத்தவனும் அதே இடத்திலதான் குத்திறான்”
 
ஒவ்வொரு குண்டு வீச்சு விமானங்களையும் அதன் தாக்குதல் உத்திகளையும் சனங்கள் நன்றாகவே அறிந்து வைத்திருந்தனர். திகிலுாட்டும் சினிமாப் படத்தின் காட்சிகளைப் பார்ப்பது போல விறைத்த மனநிலையுடன் விமானங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். வீதியில் போய்க் கொண்டிருந்த வாகனங்களும் அந்தந்த இடத்திலே அகப்பட்ட மறைவுகளில் புகுந்து நிறுத்தப்பட்டன.

அந்த நேரம் பூமியின் அசைவியக்கமே நின்று போனதைப்போல இருந்தது. குண்டுகள் வெடித்த போது எழுந்த காற்றின் உதைப்பினால் நீண்ட துாரத்திலிருந்த கட்டடங்களும், மரங்களும் கூட அசைவதை உணர முடிந்தது. இறுதியாக பெரிய இரைச்சலுடன் வட்டமடித்த விமானங்கள் இரண்டும் ஆகாயத்தில் பரப்பில் காணாமல் போயின. அவைகள் குண்டுகளை வீசிச் சென்ற கிளாலிக் கடல் நீரேரிக்கரையிலிருந்து கரிய புகை மண்டலங்கள் வானளாவி எழுந்து கொண்டிருந்தன.

“நேற்றிரவு கடலில பெரிய சண்டைதான் நடந்திருக்குது போல”

“இண்டு முழுக்க அடியாத்தான் இருக்கப் போகுது”

“கடைக்காரண்ணை இன்னும் பேப்பர் வரல்லையே” இப்படியாகக் கதைத்த படியே மக்கள் தத்தமது வேலைகளில் மூழ்கத் தொடங்கினார்கள். இப்போது சூரியக் கதிர்களின் வெம்மை பூமியில் பரவத் தொடங்கியிருந்தது.
 
அந்த  வாகனம் தொடர்ந்தும் ஓடிக் கொண்டிருந்தது. வெள்ளைப் புறாக்களாக பள்ளி மாணவர்கள் வீதியை நிறைத்தபடி பாடசாலைகளுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். கடைக்காரர்கள் வாசலுக்கு தண்ணீர் தெளித்து சாம்பிராணி துாபம் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஆவேசமாக சைரன் ஊதியபடி அம்புலன்ஸ் வண்டியொன்று வீதியைக் கிழித்தவாறு வேகமாக யாழ்ப்பாணப் பக்கமாக பறந்து சென்றது. அது கிளறிச் சென்ற தூசு மண்டலம் வீதியை மூடி மறைத்தது.

ஒரு ஒழுங்கையின் முகப்பில் நாதஸ்வர தவில் வாத்தியங்களுடன் ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. பளபளப்பாக உடுத்துக் கொண்டிருந்த கூட்டத்தினரிடையே சில பெண்கள் தட்டுகளில் ஆராத்திப் பொருட்களை சுமந்து கொண்டிருந்தனர். அதுவொரு சாமத்தியச் சடங்கு ஊர்வலமாக இருந்திருக்க வேண்டும்.

இன்னும் சற்றுத் துாரத்தில் வீதிக்கரையை அண்டிய சிறிய கோவிலொன்றின் முகப்பில் லவுட்ஸ் பீக்கர் பாடிக் கொண்டிருந்தது. ஓரிரண்டு கச்சான் கடைகளும் பக்கத்தில் ஒரு ஐஸ் பழ வண்டியும் நின்று கொண்டிருந்தது. காலைப் பூசைக்கு போயிருந்த சனங்கள் தலைக்கு மேலாக கைகளை உயர்த்தி ‘அரோகரா’ சொல்லிக் கொண்டிருந்தனர் ’அம்மாளே.…நல்ல சகுனம்’ என நினைத்துக் கொண்டாள் பாக்கியம்மாள்.
 
“அம்மா உங்கட மகன்ர இயக்கப் பேர் என்னண்டாவது தெரியுமே?” தன்னுடைய மகனைக் கண்டு பிடிப்பதற்கு ஏதாவதொரு விபரம் அகப்படுமா என அந்த இளைஞன் அந்தரப்படுவது அவளுக்குப் புரிந்தது.

“தாந்தா மலை முருகன்ர பேரைத்தான் எண்ட புள்ளளைக்கு ‘காத்திகேசு’ எண்டு சூட்டினன், அவங்கட அப்பாட பேர் ‘நாகரத்னம்’, இயக்கத்தில் என்ன பேர் வைச்சிருக்கான் எண்டு எனக்கு தெரியாதே மகன்.” சட்டென தலையைத்திருப்பிய அந்த இளைஞன் பாக்கியம்மாவை ஒருகணம் உற்றுப் பார்த்தான். என்ன நினைத்தானோ பெருமூச்சொன்று அவனிடமிருந்து வெளியேறியது.
 
“மட்டக்களப்பில எந்த ஊரம்மா நீங்கள்?” எங்கட சொந்த இடம் ‘பண்டாரியா வெளி’ மகன் கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு எல்லாம் பக்கத்திலதான். எண்ட மகனைப் பாத்திட்டுப் போய் தான்தோன்றியீசுவரருக்கு பாற்சொம்பு எடுக்கிறண்டு இரிக்கன்”.

நெரிசலான கட்டடங்களும் சனங்களுமான  ஊர்களைக் கடந்து வாகனம் சென்று கொண்டிருந்தது. மனதிற்குள் புளகாங்கிதமும், பதட்டமும் ஒன்று சேர்ந்தாற் போல கண்களை விரித்து ஆவலுடன் வெளியே பார்த்துக் கொண்டே வரத் தொடங்கினாள், இந்த மக்கள் கூட்டத்திற்குள் தனது மகனும் இருந்து விட மாட்டானோ என பாக்கியம்மாவின் தாயுள்ளம் ஏங்கிக் கொண்டிருந்தது.
 
சுற்றிவரத் தகர வேலி அடைக்கப்பட்டு, பெரியதான ‘கேட்’டுகளும் மறைக்கப் பட்டிருந்த ஒரு பரந்த காணியுடன் கூடிய பெரிய வீட்டின் முன்பாக அந்த இளைஞன் வாகனத்தை நிறுத்தினான். “அம்மா இந்த இடம் கோண்டாவில், இதுதான் இயக்கத்தின்ர அரசியல் ஒபீஸ், இங்க போய் கேட்டியளெண்டால் உங்கட மகனை சந்திக்கிற ஏற்பாடுகளை செய்து தருவினம். அப்ப நான் வாறன்”
 
முகமெல்லாம் புன்னகையாக வாகனத்திலிருந்து இறங்கினாள் பாக்கியம்மா. அந்த இளைஞனுக்கு எப்படி நன்றி சொல்லுவதென்றே அவளுக்குத் தெரியவில்லை. அவளின் பயணப்பையை எடுத்துக் கொடுப்பதற்காக வாகனத்திலிருந்து இறங்கி நின்று கொண்டிருந்த அவனது உயரத்தை அண்ணாந்து பார்த்தவாறு நடுங்கும் கரங்களால் அந்த இளைஞனின் கன்னங்களை வருடினாள். உதடுகள் துடித்தது.

“யார் பெத்த பிள்ளையோ பெரிய உபகாரம் பண்ணியிருக்காய் மகன், நீ நல்லா இருப்பாய், அந்த தாந்தா மலை முருகன் உனக்கு ஒரு குறையும் வராமல் காவலிருப்பாரடா மகனே..”. கண்களில் நீருடன் விடை கொடுத்தாள் பாக்கியம்மாள். மெலிதான முறுவலோடு தலையசைத்துக் கொண்டான் அந்த இளைஞன்.

தனது வாகனத்தை திருப்பிக் கொள்ள எத்தனித்தவன் அருகிலிருந்த பெட்டிக்கடையில் காலைப் பத்திரிகைக்காக சனங்கள் முண்டியடிப்பதைக் கவனித்தான். அன்றைய வழக்கமான பத்திரிகையுடன்  ஒற்றை தாளாக விசேட செய்திப் பத்திரிகையொன்றும் வெளியிடப்பட்டிருந்தது. இயல்பாக எழுந்த ஆர்வத்துடன் தானும் ஒன்றை வாங்கிப் பிரித்தான்.

முன் பக்கத்தில்  கறுப்பு சீருடை, கறுப்பு தொப்பியுடனான மார்பளவு புகைப் படம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதற்கு கீழே விழிகளை மேய விட்டான். இயக்கப் பெயர் இருந்தது அதற்கும் கீழே அடைப்புக்குறிக்குள் ...‘ஓ… இதென்னது… .இது…கடவுளே… அதே சொந்தப் பெயர் அதே ஊர்’. எப்போதுமே எதற்காகவுமே தனது உணர்ச்சிகள் பொங்கியதை அறிந்திராத அந்த இளைஞனுக்கு, தாங்க முடியாதபடி நெஞ்சு வெடித்து விடுமாப்போல பதறியது. சட்டென வியர்க்கத் தொடங்கிய கைகளுக்குள் பத்திரிகையின் தாள்கள் நனைந்தன.
 
“அம்மா… எணையம்மா.” என பாக்கியம்மா நின்ற பக்கம் திரும்பி கதறிக் கூப்பிட வேண்டும் போலிருந்தது. வார்த்தைகளுக்குப் பதிலாக காற்று மாத்திரமே அவனது வாயிலிருந்து வெளியேறுவதை  உணர்ந்தான்.. கால்கள் நடுங்குவதைப் போலிருந்தது. நித்திரையற்றுச் சிவந்திருந்த அவனது விழிகள் கடும் எரிவுடன் சூடாக பொங்கி வழியத் தொடங்கின.

தலையில் பெரியதொரு பணியார மூட்டையைச் சுமந்தவளாக, தனது மகனின் முகத்தை காணப் போகிறேன் என்ற நம்பிக்கையோடு அந்த முகாம் வாசலில், காத்துக் கொண்டிருந்தாள் பாக்கியம்மா.


தமிழினி ஜெயக்குமரன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 7 Jun 2016 - 14:13

வைகறைக்கனவு
----
‘மலரினி ஓடிக் கொண்டிருந்தாள். வேகமாக மிக மிக வேகமாக. பூமி அவளது கால்களுக்கு கீழே ஒரு மின்சார ரயிலின் வேகத்தில் பின்னோக்கி நகர்வதைப் போலிருந்தது. நிலத்தைத் தொட்டும் தொடாமலும் உதைத்தெழும்பும் ஒரு மானின் லாவகத்துடன் அவளது கால்கள் அசைந்து கொண்டிருந்தன. பிடரி மயிரை சிலுப்பிக் கொண்டு காட்டுப் பாதைகளையும் கட்டாந்தரைகளையும் கடந்து காற்றிலே பறக்கும் வேகக் குதிரையாகயாகவே மாறிவிட்டிருந்தாள் அவள்.

ஆஹா… எத்தனை இனிமையானதொரு அனுபவம் என எண்ணுவதற்குள்ளாகவே அவளது உடல் பாரமாகக் கனப்பதைப் போலிந்தது. ஒரு அங்குலம் கூட அசைக்க முடியாதபடி பெரும் பாராங்கல்லொன்றுடன் இறுக்கப் பிணைத்து கட்டி விட்டதைப் போல… “ஆ….ஐயோ…அம்மா” உடம்பு முழுவதையும் கொத்திக் கூறு போடுமாப் போல மரணவலி கிளர்ந்து எழும்பியது. கண்களைத் திறக்க முடியாதபடி இமைகள் ஒட்டிக் கொண்டுவிட்டன போல அந்தரிப்பாயிருந்தது. நாசி நிறையக் குளிர்ந்த காற்றை உள்ளிழுத்து கொஞ்சமாவது தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றவளுக்கு ‘குப்’ பென்று நுரையீரல் வரை நிறைந்த இரத்த வெடில் நாற்றம் அடி வயிற்றில் குமட்டியது.

“இங்க ஒரு பிள்ளை சத்தியெடுக்கிறா என்னண்டு கவனியுங்கோ”

“அவாக்கு இப்பத்தான் மயக்கம் தெளிஞ்சிருக்குது”

“தங்கச்சி… இப்ப உங்களுக்கு என்ன செய்யுது, அப்பிடியே ரிலாக்ஸா படுத்திருங்கோ. உங்களுக்கு பெரிசா ஒரு பிரச்சனையுமில்லை, கையை ஆட்டிப் போடாதேங்கோ மருந்து ஏறிக் கொண்டிருக்குது.” கழுத்தில் ஸ்டெதஸ்கோப் கொழுவியிருந்த போராளிப் பெண் அவளது தலையை இதமாக தடவி விட்டார். அவளுக்கு சட்டென அந்தக் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. நெஞ்சு விம்மலெடுத்துக்குலுங்கியது.

இவளுக்கு அருகிலிருந்து இன்னொரு தீனக்குரல் எழுந்தது.

“தண்ணீ….. தண்ணீ.. தண்ணி தாங்கோவன்” பலத்த காயடைந்த இன்னொரு ஆண் போராளி குடிப்பதற்காக தண்ணீர் கேட்டுக் கொண்டிருந்தான்.

தாழ்ந்த குரலில் ஒரு மருத்துவ போராளி கூறிக் கொண்டான்.

“இவருக்கு இப்ப தண்ணீ குடுக்கேலாது, நெஞ்சுக் காயம், இன்னும் ஒப்பிரேசன் தியேட்டருக்கு எடுக்கயில்லை”

“அடே… தம்பியா கொஞ்சமெண்டாலும் தாவனடா இண்டைக்கு காலைல இருந்து சென்றில நிண்டனடா தண்ணியே குடிக்கயில்லையடா” மிகவும் தீனமான குரலில் அந்தப் போராளி தண்ணிக்காக கெஞ்சிக் கொண்டிருந்தான். அவனது உதடுகள் வரண்டு பாளங்களாக வெடித்துக் கிடந்தன.

“தங்கச்சி ஒரு துணியை எடுத்து தண்ணில நனைச்சு அந்த அண்ணையின்ர சொண்டை மட்டும் துடைச்சு விடுங்கோ”

அப்போதுதான் தான் காயமடைந்து பின்னணி மருத்துவ தளத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதை அவளால் உணர முடிந்தது. இயலுமானவரை தலையை திருப்பி சுற்று முற்றும் பார்த்தாள். காயங்கள்…. காயங்கள்… பிய்த்தெறியப்பட்ட தசைக் கோளங்கள். அலறல்களும் அனுங்கல்களுமாக அவல ஒலி செவிப்பறையை கிழித்துக் கொண்டிருந்தது. தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அந்த அவசர மருத்துவ தளம் மக்கள் கைவிட்டுச் சென்றிருந்த பெரியதொரு வீடாக இருந்தது. வெறும் நிலத்தில் காயப்பட்ட போராளிகள் கிடத்தப்பட்டிருந்தனர். நிலத்திற்கு கீழே அமைக்கப்பட்டிருந்த சற்று பெரிய பதுங்கு குழி சத்திரசிகிச்சை கூடமாக இயங்கிக் கொண்டிருந்தது. மருத்துவப் போராளிகள் சுற்றிச் சுழன்று வேகமும் நிதானமுமாக கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள். மலரினி கண்களை மூடிக் கொண்டாள்………..

மனம் ‘மைதிலியக்கா… மைதிலியக்கா…’ அரற்றத் தொடங்கியது. நினைவுகள் ஒரு படம் போல விரியத் தொடங்கின. கூர்மையான இரண்டு கண்கள் மனசுக்குள் வந்து தனக்கேயுரிய கள்ளச் சிரிப்பொன்றை உதிர்த்துப் போனது. மலரினி தாங்கொணாத வேதனையில் கண்களை மூடிக் கொண்டாள்.

அன்றைய காலைப்பொழுது வழக்கத்தை விட அதிக குளிரானதாக இருந்தது. இன்னமும் விலகாதிருந்த பனிப்புகாரினைத் தழுவியபடி மெதுவாக அசைந்து கொண்டிருந்த தென்றலின் தொடுகையால் அவள் அணிந்திருந்த இராணுவச் சீருடையின் தடிப்பையும் மீறி உடலின் மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டன. தலையை மூடியிருந்த சாக்குத் தொப்பியை இழுத்து காதுகளையும் மூடும்படியாக சரிசெய்து கொண்டாள். கூடாரம் போல சடைத்து வளர்ந்திருந்த வேப்ப மரத்தின் உயரமான கிளையில் அமைந்திருந்தது அந்த காவல் பரண். கண்ணுக்கெட்டிய துாரமெங்கணும் விரிந்திருந்த இராணுவ முகாமின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மாத்திரம் கண்காணிக்கக் கூடிய வகையி்ல் அந்த காவல் பரண் உயரமான வேப்ப மரமொன்றில் அமைக்கப்பட்டிருந்தது. இருள் கலைவதற்கு முன்னதாகவே மலரினி தனது நிலைக்குச் சென்று கடைமையை தொடங்கியிருந்தாள். இரவிரவாகப் பெய்திருந்த பனியில் நனைந்து ஊறிப்போயிருந்த மரத்தைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறிப் போவது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. அதிகமாக வழுக்கியது எவ்வளவுதான் மரக்கிளைகள் அலைப்புறாமல் அவதானமாக நகர்ந்திருந்தாலும் இலைகளில் படிந்திருந்த பனித் தண்ணீரில் தொப்பலாக நனைந்திருந்தாள். தேகம் நடுங்கியது. பற்கள் கிடுகிடுத்தன. துப்பாக்கியின் சுடுகுழலும் கூடக் குளிர்ந்து போய்க் கிடந்தது. தனது இரு கைகளையும் கரகரவெனத் தேய்த்து கன்னங்களில் வைத்துக் கொண்டாள். அந்த சூடு மிகவும் இதமாக இருந்தது. இப்படியான குளிருக்கு சூடான ஒரு தேனீர் கோப்பையை நினைத்துப் பார்க்க மட்டும்தான் முடிந்தது.

வைகறையின் மெல்லிருள் கலையத் தொடங்கியபோது மலரினி தனது தொலை நோக்கி ஊடாக இராணுவ முகாமின் செயற்பாடுகளை நோட்டமிடத் தொடங்கியிருந்தாள். உயரமாக அமைக்கப்பட்டிருந்த மண் அரணை ஒட்டி அண்ணளவாக முப்பது மீற்றர் இடைவெளிகளில் காவலரண்களின் தொடர்ச்சி நீண்டு கொண்டே சென்றது.

காவலரண்களின் சுடும் ஓட்டைகளுக் கூடாக இரும்புத் தொப்பிகளின் அசைவுகள் மங்கலாகத் தென்பட்டன. துப்பாக்கிகளின் சுடு குழல் வாய்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு காவலரணிலும் காணப்பட்ட இரும்புத் தொப்பிகளின் எண்ணிக்கையையும், துப்பாக்கிக் குழலின் வடிவத்தைக் கொண்டு அதன் ரகத்தையும் ஆராய்வதற்கு முயன்று கொண்டிருந்தாள் மலரினி. அந்த இராணுவ முகாமின் இன்றைய அமைதியான தோற்றம் அவளின் மனதிற்குள் கடுமையான சந்தேகத்தை எழுப்பியது. தொலை நோக்கியின் துாரத்தை சரிப்படுத்தியபடியே தனது பார்வையை கூர்மைப் படுத்தியவளாக, இராணுவ முகாமினுள் வித்தியாசமான அசைவுகள் ஏதாவது தென்படுகின்றதாவென துருவித்துருவி ஆராயத் தொடங்கினாள்.

அந்த இராணுவ முகாமைக் குறுக்கறுத்துத் செல்லும் பிரதான வீதியின் இருமருங்கிலும் அமைந்திருந்த காவலரண்களின் பின்ணணியில் புதிதாக ஏதொவொரு அம்சத்தை அவளால் அவதானிக்க முடிந்தது. துணுக்குற்று நிமிர்ந்தாள். மிகவும் சாதுரியமாக உருமறைப்பு செய்யப்பட்டிருந்த அது நிச்சயமாக துாரவீச்சு பீரங்கி பொருத்தப்பட்ட யுத்த டாங்கி என்பது புரிந்தது. தன்னை நிதானப்படுத்திக்கொண்டு தொடர்ந்தும் தொலை நோக்கிக்கூடாக பார்வையை விரித்தாள்.

அப்படியாயின் ஒரு வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்கு அவர்கள் தயாராயிருக்கிறார்கள். உடனடியாக தனது அவதானிப்பு செய்தியை சங்கேத குறியீடுகள் மூலம் கட்டளைப் பணியகத்திற்கு அனுப்பினாள். ‘இண்டைக்கோ நாளைக்கோ இந்தப்பகுதியில் ஒரு பெரிய சண்டை நடக்கலாம். சிலவேளை நடக்காமலும் போகலாம். இப்படித்தான் போன கிழமையும் டாங்கிகளை கொண்டுவந்து முன்னுக்கு விட்டிட்டு இடைக்கிடை பீரங்கியால சுட்டுக் கொண்டிருந்தவங்கள். டாங்கியின்ர என்ஜினை ஓட விட்டிட்டு ரேஸ் பண்ணி ரேஸ் பண்ணி சத்தம் காட்டினவங்கள்’. ‘எங்கள உளவியல் ரீதியா பயப்பிடுத்தத்தான் இப்பிடிச் செய்யிறாங்கள்’ எண்டு மைதிலியக்கா சொன்னதை நினைத்துப் பார்த்துக் கொண்டாள். உண்மைதான் ‘டாங்கி இரையிற சத்தத்தைக் கேட்டாலே வயித்துகுள்ள ஏதோ செய்யிற மாதிரி கிடக்குதடி’ என்று கோதையும்
சொல்லியிருந்தாள்.

‘சென்றி நேரம் முடிந்ததும் முதலில றைபிள் கிளீன் பண்ணவேணும். கிடைக்கிற நேரத்தில் ஓடிப்போய் நிறையத்தண்ணியில வடிவா தலைக்கு முழுகிட்டு வரவேணும்‘ என நினைத்துக் கொண்டாள். தொலை நோக்கியின் துாரத்தை கைகளால் சரி செய்தபடி இராணுவ முகாமின் நடமாட்டங்களை நுட்பமாக அவதானித்துக் கொண்டிருந்தன அவளது விழிகள்.

வயிறு வெறுமையாக இருப்பதாகப்பட்டது. “கிர்…புர்..” சத்தம் வேறு கேட்கத் தொடங்கியது. இந்தக் குளிருக்கு நேரத்துடன் பசியெடுப்பது போலவும் இருந்தது. இந்தப் பொஸிசனுக்கு காலைச் சாப்பாடு வர எப்பிடியும் எட்டு ஒன்பது மணியாகும். முன்னணிக்காவல் நிலைகளுக்கும் சற்று முன்பாக வேவு நடவடிக்கைக்காக இந்த உயரமான காவல் பரண் அமைக்கப் பட்டிருந்தது. ‘இண்டைக்கு எப்பிடியும் மைதிலி அக்காவைக் கொண்டு முருங்கைக்காய் கறி வைச்சுச் சாப்பிடவேணும்‘ என நினைத்துக் கொண்டாள். வீட்டில அம்மா வைக்கிற முருங்கைக்காய் கறியும் புட்டும் அந்த நேரம் பார்த்து நினைவுக்கு வந்து நாக்கில் உமிழ்நீர் சுரந்தது.

சட பட வென ஐம்பது கலிபர் துப்பாக்கி பொழிந்து தள்ளும் சத்தம் இராணுவ முகாமின் பக்கத்திலிருந்து எழும்பியது. தொலைநோக்கியில் பார்வைப் பொருத்திக் கொண்டு ஆராய்ந்தாள். எந்தக் காவலரணில் இருந்து அந்த ஆயுதம் இயக்கப்படுகின்றது என்ற விபரம் அவளுக்குத் தேவையாக இருந்தது. சத்தம் இவளுக்கு நேரெதிராக இல்லாமல் சற்று பக்கவாட்டுத் துாரத்திலிருந்து வந்திருக்க வேண்டும். அந்தப்பகுதியில் ஆண் போராளிகளின் படையணியொன்று நிலைகளை அமைத்திருந்தது.

இடையிடையே ஒரு சில நாவல், மஞ்சவுண்ணா, வேம்பு ஆகிய மரங்களையும் மண்திட்டிகளையும் தவிர பரந்த வயல் வெளி காய்ந்து வரண்டு போய்க்கிடந்தது. வயல்வெளிகளுக்கிடையே ஏராளமான மண் பாதைகள் டாங்கிகளை நகர்த்தி சண்டையிடுவதற்கான சாதகத்தன்மையை இராணுவத்தினருக்கு ஏற்படுத்தியிருந்தது.

திடீரென காதருகில் கீச் மூச் சென்ற குருவிகளின் சத்தம். மெதுவாக திரும்பினான் சடைத்துப் போயிருந்த மரக் கிளைகளின் இன்னொரு அந்தத்தில் கூடை போன்ற வடிவத்தில் ஒரு குருவிக்கூடு தென்பட்டது. சட்டென அவளது முகத்தில் மலர்ச்சியும் மனசுக்குள் இனம் புரியாத மகிழ்ச்சியும் பரவியது. ‘ஐயோ இந்த இடத்தில் சண்டை நடந்தால் இந்தக் குருவிகள் கூட எவ்வளவு பாவம்‘ என நினைத்துக்கொண்டாள். சாம்பலும் கறுப்பும் கலந்த நிறத்தில் அழகான இரண்டு நீட்டுவால் குருவிகள். கூட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் பறந்து விளையாடிக் கொண்டிருந்தன. அவைகளின் அழகான கூட்டுக்குள் அடைமுட்டைகளும் இருக்கலாம் என நினைத்துக் கொண்டாள்.

துாரத்தே இராணுவ முகாமின் மைதானத்தில் பயிற்சி நடவடிக்கையில் படையினரின் ஒரு சிறிய அணி ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. இடைக்கிடை இப்படி அவர்கள் பயிற்சி செய்வது வழக்கம்தான். இருப்பினும் அந்தச் செய்தியையும் உடனடியாகவே உரிய இடத்திற்கு அறிவித்து விட்டு நிமிர்ந்தாள்.

இப்போது அந்த குருவிகள் இரண்டும் இன்னொரு கொப்பில் ஊஞ்சலாடியபடியே மிக நெருக்கமாக அமர்ந்து தமது அலகுகளை உரசிக் கொண்டிருந்தன. ‘ஐயே.. லுாசுக் குருவியள்’ சொல்ல முடியாத நாணத்தின் கீற்றுக்கள் ஒரு கணம் அவளது நெஞ்சுக்குள் இழைந்தது. மனசுக்குள் சிரித்துக் கொண்டாள். எதேச்சையாக சந்திக்கும் சந்தர்ப்பங்களில் தன்னை உற்றுப் பார்ப்பது போலத் தோன்றும் இனியவனின் கண்கள் சம்பந்தமேயில்லாமல் நினைவுக்குள் எட்டிப் பார்த்தது. ‘சே..‘ என்றவாறு மனதைச் சிலிர்த்துக் கொண்டவள் மீண்டும் தொலை நோக்கி ஊடாக இராணுவ முகாமை ஆராயத் தொடங்கினாள்.

திடீரென போராளிகளின் முன்னணி காவலரண் பக்கமாக இராணுவத்தினரின் குறுந்துார எறிகணைகள் தொடர்ச்சியாக விழுந்து வெடித்தன. ஆறெழு எறிகணைகள் வெடித்ததன்பின்பு நிலமை அமைதியானது. முன்னணிக் காவலரண்களை திருத்தியமைக்கும் வேலைகளும் தொடர் பதுங்கு குழிகளை அமைக்கும் வேலைகளும் நடை பெற்றுக் கொண்டிருந்ததால் இராணுவத்தினருக்கு போராளிகளின் நடமாட்டங்கள் ஏதாவது தென்பட்டிருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள். இராணுவத்தினரின் பலமான வலிந்த தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் எமது நிலைகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தபடியால் இராணுவத்தினர் மீதான எமது தரப்பு எறிகணைத் தாக்குதல்களையும் வேறு கனரகத் தாக்குதல்களையும் ஓரிரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி, பகுதி கட்டளைத்தளபதி அனைத்து அணித்தலைவர்களுக்கும் அறிவித்திருந்தார்.

தனது கடமை நேரம் முடித்து பொறுப்பை தோழி கோதையிடம் ஒப்படைத்து விட்டு மரத்திற்கு கீழே சற்று துாரத்தில் அமைக்கப்பட்டிருந்த தமது காவலரணுக்கு வந்த நேரத்திலிருந்து மனதிற்குள் ஒரு விதமான சலனம் தொற்றிக் கொண்டிருப்பதை மலரினியால் உணர முடிந்தது. காலையுணவாக வந்திருந்த பார்சலில் பெரிய பெரிய புட்டுக் கட்டிகளுடன் ஏதோ ஒரு இனம்புரியாத குழம்பு கொஞ்சமாக இருந்தது. தண்ணிப் போத்திலையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு வயிற்றுப் பசியை போக்கிக் கொண்டாள். மூன்று பேரை மட்டுமே கொண்ட அவர்களின் சிறிய அணியின் தலைவியான மைதிலி நிலத்தில் அமர்ந்தபடி ஒருகாலை நீட்டியவாறு இராணுவ முகாமின் வரைபடத்தில் ஏதோ எழுதிக் கொண்டும் குறித்துக் கொண்டுமிருந்தாள். மைதிலியக்கா ஒரு வேலைக்குள் மூழ்கி விட்டாலென்றால் குழப்ப முடியாது. தன்னை விட மூன்று வயதுகள் மட்டுமே அதிகமாயிருந்த மைதிலியை இவளுக்கு மிகவும் பிடிக்கும். அதிகமாகப்பேசாத மைதிலி கடமை தவிர்ந்த நேரங்களில் ஏதாவது ஒரு புத்தகத்தில் மூழ்கியிருப்பாள். அல்லது வானத்தைப் பார்த்துக் கொண்டு படுத்துக் கிடப்பாள். மலரினிக்கும் புத்தகம் வாசிப்பதற்கு விருப்பமாகத்தான் இருக்கும் ஆனால் ஓரிரண்டு பக்கங்கள் போனதும் கண்ணைச் சுழற்றியபடி உறக்கம் மொய்த்துக் கொண்டுவிடும். “மலரினி இன்னும் கொஞ்ச நேரத்தில் குளிக்கப் போகவேணும். கோதையின்ர சென்றி முடியிறதுக்கிடையில் திரும்பி வரவேணும். மெயினுக்கு அறிவிச்சிருக்கிறன் அங்கயிருந்த ரெண்டு பேர் வருவினம். அவையள் வந்தவுடன வெளிக்கிடுவம் என்ன” என்றபடி வரைபடத்தை சுருட்டத் தொடங்கினாள் மைதிலி. காவல் நிலைகளைக்கடந்து ஒரு கிலோ மீற்றர் வரையான துாரம் குளிப்பதற்காக போய்வர வேண்டியிருந்தது.

“ஓமக்கா அதுக்கிடையில எனக்கொரு வேலையிருக்கு” என்றவளாக தனது துப்பாக்கியின் பாகங்களை பரபரவெனக் கழற்றி எண்ணெய் போட்டு துடைக்கத் தொடங்கினாள் மலரினி. எலும்புக்கூடு மாதிரித் தெரிந்த துப்பாக்கியின் சுடுகுழலில் ஒரு கண்ணை பொருத்திக் கொண்டு பார்த்தாள். அதன் சுரி குழல் வெள்ளிப்பாளம் போல தக தக வென்று மின்னியது. வேகமாக அதன் பாகங்களை மீண்டும் பொருத்தினாள். அது எப்போதுமே அவளது தோளிலும் மார்பிலும் தொங்கிக் கொண்டிருக்கும் துப்பாக்கி.

பள்ளிக்கூடம் போய்வரும் காலத்தில் இயக்க அண்ணன்மாரும், அக்காமாரும் காவிக் கொண்டு திரியும் விதவிதமான துப்பாக்கிகளைப் பார்க்கும் போது இவளுக்கும் அவற்றைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போல ஆசையாசையாக இருக்கும். ஆனால் பயமாகவும் இருக்கும். றெயினிங் எடுத்தால் பயமெல்லாம் போய் விடுமென்பதாக கேள்விப்பட்டிருந்தாள். இப்போதென்றால் இயக்கத்தினுடைய பயன்பாட்டில் இருக்கும் எல்லா துப்பாக்கிகளைப் பற்றியும் மலரினிக்கு தெரிந்திருந்தது. பயிற்சி முகாமில் குறிபார்த்துச்சுடுதல் போட்டியில பரிசுகளும் வாங்கியிருக்கிறாள். ஆனால் இப்போது ‘எப்பவடா கொஞ்ச நேரம் இந்த துவக்கை கழற்றி வைச்சிட்டு இருப்பன்’ என்று நினைப்பாள். ஆனால் அது இல்லாத போது தன்னுடைய உடலில் ஒரு பாகம் இல்லாதது போல உணருவாள். ‘எங்கட உயிரிலும் மேலானது ஆயுதம்’ என்று மூத்த போராளிகள் அடிக்கடி சொல்லுவார்கள். ஆயுதத்துடன் நடந்து போகும்போது தன்னையறியாத ஒரு கம்பீரம் மனசுக்குள் பரவியிருப்பதை அவள் உணர்ந்திருக்கிறாள்.

மலரினியும் மைதிலியும் சேர்ந்து குளிப்பதற்காக போன போது மரத்தில் கொள்ளையாக காய்த்து தொங்கிக் கொண்டிருந்த முருங்கைக் காய்களை கண்டதும் நடை சற்று பின் தங்கியது. அந்தப்பகுதியில் மக்கள் தமது வீடு வாசல்களை விட்டு வெளியேறியிருந்தனர். மரங்கள் காய்த்தும் பூத்தும் வெறுமனே கொட்டிக் கொண்டிருந்தன. மரங்களுக்கிடையே தாவித்திரியும் குரங்குகளைக்கூட இப்போது காணமுடிவதில்லை. காய்ந்து விழுந்த தேங்காய்கள் கவனிப்பாரற்றுக் கிடந்தன.

மலரினியின் வேண்டுதல் மைதிலியின் நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.

“இண்டைக்கு கறி வைச்செல்லாம் மினக்கெலேடாது மலரினி நிலமை டென்சனாயிருக்கிறது தெரியும்தானே”

“ம்… சரியக்கா பிறகு ஓரு நாளைக்கு கட்டாயம் வைப்பம் என்னக்கா”.

கைவிடப்பட்டிருந்த வீடுவாசல்களையும் சிதறிக்கிடக்கும் பொருட்களையும் பார்க்கும் போதெல்லாம் ‘பாவம் சனங்கள்’ என மனசுக்குள் வேதனை பரவிக் கொள்ளும். ‘நானும் செத்துப் போனனெண்டால் என்ர அம்மாவை எப்பிடிக் கண்டு பிடிச்சு பொடி குடுக்கப்போயினம்’ பெருமூச்சொன்று முட்டிக் கொண்டு வெளியேறிச் செல்லும். ‘நான் மட்டுமே என்னைப் போல எத்தினை பேர்’. கோதையை நினைத்துக் கொள்வாள் ‘அவளின்ர இடம் மட்டக்களப்பு, ஊருக்கே பொடி போகாது .பாவம் கோதையின்ர அம்மாக்கள்’ இப்படி அவள் நிறைய விடயங்களில் நாட்டுக்காகத்தானே என்ற நினைவுடன் சமாதானமாகிக் கொள்வாள்.

மக்கள் கைவிட்டுச் சென்ற உடமைகளில் உணவுப் பொருட்களை மாத்திரம் போராளிகளின் தேவைக்கு எடுத்துக் கொள்வதற்கான அனுமதியிருந்த காரணத்தால் சில தேங்காய்களையும், உப்பு முதலாக கறிவைக்கத் தேவையான சில மளிகைப் பொருட்களும் ஒரு அலுமினியச் சட்டியும் மலரினியால் சேகரிக்கப்பட்டு அவர்களது காவலரணிலிருந்தது. திடீரென குனிந்த மைதிலி ஒரு புத்தகத்தைப் பொறுக்கியெடுத்தாள். அவசரத்தில் பொருட்களை கட்டிக்கொண்டு ஓடும் போது யாரும் தவற விட்டதாயிருக்கலாம். சட்டென எட்டி அதன் பெயரைப் பார்த்தால் மலரினி.

‘அக்கினிச் சிறகுகள்’ கீழே ‘அப்துல்கலாம்’ என்றிருந்தது.

‘இவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?’ என்றாள் மைதிலி

‘என்னக்கா சொல்லியிருக்கிறார்’ என அப்பாவியாகக் கேட்டாள் மலரினி.

‘கனவு காணச் சொல்லியிருக்கிறார். வாழ்க்கையில் எதை அடைய வேணுமென்று நினைக்கிறோமோ அதைப் பற்றி’

“ஓகோ… அதுதான் மைதிலியக்கா அடிக்கடி மோட்டைப் பாத்துக் கொண்டு காணுறவ போல”

இருவரும் உரத்துச் சிரித்துக் கொண்டனர்.

“எனக்கும் ஒரு கனவு அடிக்கடி வருமக்கா. அமெரிக்கா ஒலிம்பிக் ஓட்ட வீராங்கனை மரியன் ஜோன் மாதிரி நானும் வெளி நாட்டு ஆக்களுக்கு முன்னால பெரிய மைதானத்தில ஓடி முதலாவதா வாற மாதிரி எனக்கு சின்ன வயதில இருந்தே அப்பிடி ஒரு ஆசை”

“பிறகெப்பிடி இயக்கத்திற்கு வந்தனி”

“எங்கடை பள்ளிக்கூடத்தில இயக்கத்தின்ர பரப்புரைக் கூட்டம் அடிக்கடி நடக்கும். கன பிள்ளைகளுக்கு போக விருப்பம், ஆனா றெயினிங்கை நினைச்சா பயம் எனக்கு றெயினிங் எடுக்க விருப்பமாயிருந்திச்சு கூட்டத்திலயே எழும்பி வந்திட்டன்”

“எங்கடை றெயினிங் காம்பில கடைசி வட்டம் ஓடும் போது மாஸ்ரர் அக்கா ‘லாஸ்ட் அன்ட் பாஸ்ட்’ எண்டு சொல்லக்கை நான்தான் நெடுகலும் முதலாவதா ஓடி முடிப்பன், சிறப்புத்தளபதி எனக்கு விசேட பரிசு தந்தவா” அந்த நினைவுகள் தனக்குள் ஆனந்தமாகக் கிளருவதை சுகமாக அனுபவித்தாள் மலரினி. பாராட்டாக முதுகில் படிந்த மைதிலியின் கரங்களை பற்றியவாறு கண்களால் நன்றி கூறிக் கொண்டாள். அந்த
நிமிடங்கள் அவர்களுக்கு மிகவும் சந்தோசமாக இருப்பதாகப்பட்டது.

குளிக்குமிடத்தில் வேறு பெண் போராளிகள் நாலைந்து பெரும் அவசர அவசரமாக தமது அலுவல்களில் மூழ்கியிருந்தனர்.

“ஷெல் அடிப்பான் கெதியா குளிச்சு முடியுங்கோ” என அவர்களில் ஒருத்தி அவசரப்படுத்திக் கொண்டிருந்தாள்.

“இரவு எங்கட பொசிசனுக்கு முன்னால ஆமின்ர றெக்கி வந்து போயிருக்குது”

பிரதான வீதிக்கு பக்கத்திலிருக்கும் காவலரண் போராளி கூறிக் கொண்டாள்.

“விடியப்புறம் நாலு மணியிருக்கும் வடிவா உத்துப் பாத்துக் கொண்டிருந்தன், தோட்டத்தில வாழை மரங்கள் அசைஞ்சு திரியிற மாதிரிக்கிடந்தது. நல்லா விடிஞ்சப்பிறகு கிளியறிங் போகேக்கதான் பாத்தனாங்கள் அந்த வாழைத் தோட்டத்துக்கிள்ள ஆமிக்காரரின்ர சாப்பாட்டு பக்கற்றுகள் கிடந்தது” கண்களை அகல விரித்துக் கொண்டு அவள் தனது சென்றிக் கதைகளை சொல்லிக் கொண்டிருந்தாள்.

“சரி சரி நிப்பாட்டடி உன்ர ஆந்தை முழியை பாத்தாலே ஆமிக்காரனும் பயந்து ஓடிருவான்” எனக் கலாய்த்தாள் மலரினி. அந்தத் தோழி கோபத்துடன் இன்னும் விழிகளை அகலமாக விரித்தபடி இவளது முகத்தில் தண்ணீரை விசிறியடித்தாள். அனைவரும் கொல்லெனச் சிரித்துக் கொண்டனர்.

இப்போது நேரம் ஒன்பது மணியை நெருங்கியிருந்தது. மைதிலி கடமைக்குச் செல்லத்தயாராகினாள். அவளது முகம் வாடியிருப்பது போலப்பட்டது. “என்ன மைதிலியக்கா ஒரு மாதிரியிருக்கிறிங்கள்”

“அடி வயித்துக்க நோகிற மாதிரிக்கிடக்கு”

மலரினிக்கு புரிந்தது “நான் போகட்டே நீங்கள் இண்டைக்கு றெஸ்ட் எடுங்கோ”

“இல்லையில்லை நானே போறன் நீதானே காலமையும் சென்றில நிண்டனி இண்டைக்கு சண்டை வந்தாலும் வருமெண்டு அலேட் பண்ணியிருக்குது அவதானமா இருங்கோ” பதிலை எதிர்பார்க்காது துப்பாக்கியின் ரவைக் கூட்டுத்தாங்கியை மார்புடன் சேர்த்து இறுக்கமாக் கட்டிக்கொண்டு வெளியேறிச் சென்றாள் மைதிலி.

மலரினி அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். சற்று முன் முழுகிய ஈரக்கூந்தலை இறுக்கமாகப் பின்னி வளைத்துக்கட்டியிருந்தாள். சுருளான கேசயிழைகள் காதோரம் புரண்டு விளையாடிக் கொண்டிருந்தன. அமைதியான மைதிலியின் அழகு இன்று அதிகமாக ஜோலிப்பது போலிருந்தது. கோதையும் மலரினியும் தமது காவலரணை செப்பனிடுவதில் மூழ்கியிருந்தனர். வழமைக்கு மாறான இராணுவ முகாமின் நீண்ட அமைதி தம்மைச் சுற்றிலும் அமானுஷ்யமான பயங்கரம் சுற்றி வளைத்திருப்பதைப் போன்ற உணர்வை மலரினிக்கு ஏற்படுத்தியது. “அக்காமார்…. தங்கச்சிமார்…” குரல் வந்த திசையில் ஆண் போராளிகள் சிலர் நின்றிருந்தனர். “நாங்கள் இந்தப் பாலத்திற்கு சக்கை தாக்கப் போறம் உங்கட சென்ரிக்கு சொல்லி விடுங்கோ என்ன” என்றவாறு வீதிக்கரையாக வேலியை அண்டி நகர்ந்து கொண்டிருந்தனர்.

“அருமந்த பாலம் என்ன செய்யிறது ஆமின்ர டாங்கி வராமல் நிப்பாட்ட வேணுமே” அவர்கள் கதைத்துக் கொண்டு செல்வது கேட்டது. அவர்களில் தீர்க்கமான ஒரு சோடிக் கண்கள் மலரினியின் விழிகளை கவ்விச் செல்வதை உணர முடிந்தது. இனம்புரியாத படபடப்புடன் தலையைக் கவிழ்ந்து கொண்டு வேலைக்குள் மூழ்கினாள். மீண்டும் அந்தக் கண்களைக் காண வேண்டும் போலவொரு தவிப்பு உள்ளுக்குள் புரண்டது. இதுவரை ஒரு வார்த்தையாவது பேசியறியாத இனியவனின் கதிர்வீச்சுப் பார்வை இவளுக்குள் இனம்புரியாத கலவரத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது. காலையில் பார்த்த குருவிக்கூடு நினைவுக்கு வந்தது. என்றுமில்லாதவாறு மகிழ்ச்சியும் துயரமுமான உணர்வுக்கலவை மனதுக்குள் பிசைந்தது. நாயொன்று அருவருக்கும்படியாக ஊளையிட்டு அடங்கியது.

“ச்…சீக் இந்த சொறி நாயள் பகலிலயும் தொடங்கீட்டுதுகள்”

கோதை வெறுப்போடு திட்டிக்கொண்டாள்.

அந்தக் கணம் படீரென்ற சத்தத்துடன் இவர்களது தலைக்கு மேலாக எறிகணை வெடித்தது. ‘சட பட வென மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இவர்களது காவல் பரண் அமைந்திருந்த வேப்ப மரம் நிலத்தில் சரிந்து புகைந்தது. அதன் குழைகள் சகிக்க முடியாத நாற்றத்துடன் கருகியெரிந்தன. “மைதிலியக்கா…..” கீரீச்சட்டபடி இருவரும் வெளியே பாய்ந்தனா். முறிந்த மரக் கொப்பில் தலை சிதறிய இரத்தக்கூளமாக தொங்கிக் கிடந்தாள் மைதிலி.

பரவலாக கேட்ட அதிர்வுகள் அந்தப்பகுதியில் சண்டை தொடங்கி விட்டதை உணர்த்தியது. மலரினியின் தாடைகள் இறுகியது. மைதிலியின் வோக்கி டோக்கியை எடுத்து கட்டளை பணியகத்துடன் துரிதமாகத் தொடர்பை ஏற்படுத்தினாள். இருவரது துப்பாக்கிகளும் சுடத்தயாரான நிலையில் ரவையேற்றிக் கொண்டன. விசைவில்லின் மீது விரல்களை வைத்தபடி இருவரும் தமது நிலையை சுற்றி நிலமையை அவதானித்தனர்.
கோதையை காப்பு நிலையில் இருக்கும்படிக் கூறிய மலரினி மைதிலியின் அருகே ஓடிச் சென்றாள். முகம் இருந்ததற்கான அடையாளமே இல்லாபடி சிதைந்திருந்தாள். மலரினி அந்த உடலை அப்படியே இழுத்து தன் தோளிலே போட்டுக் கொண்டாள். மைதிலியின் குருதிச்சூடு இன்னமும் தணியாமல் இருப்பதை உணர முடிந்தது.

கோதையையும் கூட்டிக்கொண்டு முன்னணிக் காவலரனை நோக்கி பாய்ந்தோடத் தொடங்கினாள் மலரினி. மைதிலியின் உடலை காவலரணுக்குள் சாய்த்துக்கிடத்தியவள் துப்பாக்கியை தோளோடு இழுத்து அணைத்தவளாக தாக்குதலுக்கான தயார் நிலைக்கு சென்றாள்.

எறிகணைகள் மழையாகப் பொழிந்தன. டாங்கிகளின் இரைச்சல் காதைக் கிழித்தன. போராளிகளும் எதிர்தாக்குதலை பலப்படுத்தியிருந்ததால் வயல் வெளியில் சன்னங்கள் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன. மரங்களும் வரம்புகளும்கூட காயப்பட்டுச் சிதறின.

“ஹலோ….மலரினி…. மலரினி… என்னண்டால் உங்கட பக்கத்தால தான் டாங்கி வெளிக்கிடுது. பாலத்தை உடைக்கப் போறம், சில வேளை வயல் வேலியோட இருக்கிற மண் ஒழுங்கைக்குள்ள இறங்குவார். அதை மறிக்கிறதுக்கு ஆர்.பி.ஜி யோட இனியவன் வந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு அந்த பாதை தெரியாது. நீதான் ஆர்.பி.ஜி யைக் கூட்டிக் கொண்டு அந்த இடத்திற்கு வேகமா ஓடிப்போகவேணும் விளங்குதா….கோதையை நான் பக்கத்து பொசிசனோட இணைக்கிறன், நீ கெதியா ஓடிப் போக வேணும்”

அந்தக்கட்டளை அவளுக்கு தெளிவாக விளங்கியது. நிலைமையை கோதைக்கு தெரியப்படுத்திவிட்டு வேகமாக எழுந்தாள். உடல் முழுவதும் இரத்தமும் புழுதியும் அப்பிக் கிடந்தது. முகத்திலும் குருதித் தீற்றல்கள். தோளில் தயாராக ஆர்.பி.ஜி யை சுமந்தவாறு இனியவன் ஓடிவந்து கொண்டிருந்தான். மலரினி அவனுக்கு முன்பாக அந்த மண் பாதையை நோக்கி பாய்ந்தோடத் தொடங்கினாள். டாங்கியின் இரைச்சல் மிக அருகில் கேட்டது.

அந்தப் பிரதேசத்தையே அதிரப்பண்ணியவாறு பிரதான வீதியிலிருந்த அந்தப் பெரிய பாலம் வெடித்துச் சிதறியது. மிகுந்த துாரம்வரை அதன் துண்டுகள் எழும்பிப் பறந்தன.டாங்கியின் நகர்வு தடுக்கப்பட்டதால், அதில் பொருத்தப்பட்டிருந்த வீரியம் கூடிய பீரங்கியின் வாய் குமுறத் தொடங்கியது. தனக்குப் பின்னால் ஓடி வந்து கொண்டிருந்த இனியவனின் கதறல் கேட்டுத் திரும்பினாள் மலரினி. மார்பை பொத்திப் பிடித்தவாறு அவன் நிலத்திலே துடித்துக் கொண்டிருந்தான். துாரத்தில் வீசப்பட்டுக்கிடந்த ஆர்.பி.ஜி இன் எறிகணை வெறுமனே வெடித்துச் சிதறியது.

தன்னிடமிருந்த குருதித் தடுப்பு பஞ்சணையை அவனது நெஞ்சிலே வைத்து அழுத்தினாள். அவளது கை புதைந்து போகுமளவுக்கு அந்த இடம் கிடங்கு போலாகியிருந்தது. அவனது உடல் உதறி உதறித் துடித்தது. மூச்சு தாறுமாறாக ஏறியிறங்கியது. வாயை ஆவெனத் திறந்து காற்றை உள்ளுக்கு இழுத்தான். டாங்கியின் தாக்குதல் உக்கிரமாகத் தொடர்ந்தது. அந்த இடத்தை விட்டு வேகமாக நகரும்படி கைகளால் மலரினிக்கு சைகை செய்தான். எவ்வளவு முயன்றும் அவனால் ஒரு வார்த்தையேனும் பேச முடியாமலிருந்தது. அவனை எப்படியாவது அங்கிருந்து இழுத்துக் கொண்டு செல்லுவதற்காக மலரினி துடித்தாள். இனியவனின் கண்கள் ஏக்கத்துடன் மலரினியின் முகத்தை ஊடுருவியது. அடுத்த கணமே அந்தக் கண்மணிகள் அசைவற்றுப் போயின. அவனின் இதயத் துடிப்பு அந்தப் புழுதி வயலுக்குள்ளேயே அடங்கிப் போனது.

சிலையாகச் சமைந்து போன மலரினியை வோக்கி அழைத்தது. “மலரினி நீ அந்த இடத்தை விட்டு வேகமா வெளியேறு… கெதியா…” அவளுக்கு அசையக் கூட முடியாதிருந்தது. அப்போதுதான் தனது கால்களில் குருதி கொப்பளிப்பதை உணர்ந்தாள். எழும்பி ஓடிச்செல்ல முடியாதபடி வேதனையோடு சரிந்தவள் நிலம் அதிருவதை கண்டு பதைத்தாள். டாங்கியின் இரும்புச் சக்கரங்கள் அந்தப் பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தன.

துப்பாக்கியின் பட்டியை வாயில் கௌவிப் பற்றியவாறு தனது சக்தி அனைத்தையும் திரட்டியவளாக வயல் வெளியில் ஊர்ந்து ஊர்ந்து நகரத் தொடங்கினாள் மலரினி. பீரங்கிக்குண்டுகள் வயலை இடைவெளியில்லாமல் உழுவது போல விழுந்து கொண்டிருந்தன. எத்தனை நேரமாக அப்படி நகர்ந்தாளோ தெரியாது வரம்பு ஒன்றினை கடந்து புரண்டவள் மயங்கிச் சரிந்தாள். மருத்துவ முகாமின் வேதனை ஒலங்களின் மத்தியில் விழிகளைத்திறந்த போதுதான், இன்னும் தனது உயிர் உடம்பில் ஒட்டிக் கொண்டிருப்பதை மலரினி உணர்ந்தாள். உடன் பிறந்த சகோதரியாகவே நேசித்த மைதிலியின் காதோரத்தில் சுருண்டு அலைந்த கேச இழைகளும், அக்கினிச்சிறகுகள் புத்தகமும் நெஞ்சுக்குள் அப்படியே நின்றன. தனது கண்களோடு கலந்து போன இனியவனின் சுவாசத்தை இனி இந்தக் காற்று வெளியில் எப்படித் தேடப் போகிறாள் அவளின் மனது தள்ளாடியது. முதிராத அந்த நேசத்தின் மொட்டு மலரினியின் இதயத்திற்குள் இதழ் விரித்துக் கிடந்தது.

“இண்டைக்கு பகல் பரந்தன் பகுதியில நடந்த சண்டையில இராணுவம் ஐநுாறு மீற்றர் முன்னுக்கு வந்திருக்காம். எங்கட தரப்பில இருபது பேருக்கு மேல உயிரிழந்திருக்கினம். கன பேருக்கு காயம்.”

யாரோ தகவல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மலரினி எழும்ப முயற்சித்தாள். ஒரு கால் இரும்பாகக் கனத்தது. ஓ….மற்றைய கால் அது தொடைக்கு மேலே வெள்ளைத் துணிப்பந்தமாகக் கிடந்தது. நிலை குலைந்தவளாக பிடரியடிபடப் படுக்கையில் விழுந்தாள். எல்லை கடந்த அதிர்வுகளை உணரந்து கொள்ள முடியாத புலன்களைப் போல அவளது உணர்வுகள் இறுகிக் கொண்டது. மேகங்களுக்கு போட்டியாக காற்றிலே பறந்த வேகக் குதிரையின் கால்களில் ஒன்று காணாமல் போயிருந்தது. இப்போது மலரினிக்கு எந்த வலிகளும் இல்லை. கனவுகளும் இல்லை. நாசியில் சுவாசம் மட்டும் ஒட்டிக் கொண்டிருந்தது.

* தமிழினி ஜெயக்குமாரனின் இச்சிறுகதை 'எதுவரை' இணைய இதழ் மற்றும் அவரது முகநூல் பக்கத்திலும் வெளியாகியுள்ளது.

தமிழினி ஜெயக்குமரன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 7 Jun 2016 - 14:15

கஸ்தூரி
----
”ஏறிக்கொள்ளுங்கள்” என்றவனுக்கு நன்றி கூறியவாறே மூட்டை முடிச்சோடு முண்டியடிக்க முயன்றும் முயலாமலுமாய் உள்ளே ஏறி பதினான்காம் எண் இருக்கைப் பக்கம் போனபோது அங்கே ஏற்கெனவே ஒருவர் தொந்தியும் தொப்பையுமாகப் பொருந்தியமர்ந்திருந்தார்.

“ஸார், இது என்னுடைய இடம்.”

“மன்னிக்கவும், இது என்னுடையது.”

அவரவருடைய இடத்தைக் கண்டுபிடிப்பதுதான் உலகிலேயே அதிசிரமமான காரியமாக இருக்கும் என்று தோன்றியது. ’அவரவர் இடம்’ என்பதிலும் அவரவருக்கு விதிக்கப்பட்ட இடங்கள், வாய்த்த இடங்கள், அவரவர் விரும்பிய இடங்கள் என்று எத்தனை பிரிவுகள்…. விதிக்கப்பட்டதற்கும் வாய்த்ததற்கும் என்ன வேறுபாடு என்ற கேள்விக்கு ‘நிச்சயம் ஏதோ வேறுபாடு இருக்கிறது’ என்பதாக மனம் இடக்காகக் கூறியது. அப்படி வேறுபாடு இருக்கும் பட்சத்தில் விதிக்கப்பட்டதும் சரி, வாய்த்ததும் சரி, விரும்பிய – விரும்பாத என்பதாக வேறு சிலவாகவும் கிளை பிரியும்…..

 “என்ன ஸார், அங்ஙனேயே நிக்கிறீங்க? இந்த வண்டி தானே நீங்க?”

“ஆமாம், ஆனா இவர் என் இடத்தைத் தன்னுடையதுன்னு சொல்றார்.”

”அதெப்படி? என் இடத்தை நீங்கள் தான் உங்களுடையதென்று சொல்கிறீர்கள்.” உட்கார்ந்திருந்தவர் விறைப்பாகக் கூறினார்.

“அட, யார் இடம் யாருக்கு சாசுவதம் சார்…. அதுவும், ஒரு ஆறு மணி நேரத்துக்குப் போய் எதுக்கு இத்தனை எடக்குமுடக்குப் பேச்சு?” சலிப்பாகத் தத்துவத்தைச் சிதறவிட்டபடியே நடத்துனர் வந்துபார்த்து என் பயணச்சீட்டை ‘டபுள் செக்’ செய்வதற்காய் ஓட்டுநர் இருக்கைப்பக்கம் அமர்ந்திருந்தவரிடம் கொண்டு சென்றார்.

 “ஐயா, நீங்க அடுத்த வண்டிக்குப் போகணும். இது ஒன்பதரை வண்டி. லேட்டு. அதான் குழப்பம்.”

“அப்ப, என் பத்து மணி வண்டி பத்தரைக்கு வருமா?”

“பத்தரையும் ஆகலாம், பனிரெண்டும் ஆகலாம். எதைத்தான் உறுதியாகச் சொல்ல முடிகிறது?”

என் முறைப்பும், ஓட்டுநரின் எக்ஸ்பர்ட் காமெண்ட்டும் மோதிக்கொண்ட கணத்தில் என்னிட மிருந்து வாங்கப்பெற்ற பயணச்சீட்டு என் கையில் பரிவோடு திணிக்கப்பட, நான் இறங்கிக்கொண்டேன்.

அடுத்த வண்டி இரண்டுபேருடைய கணிப்பிற்கும் பொதுவில் பதினோறு மணியளவில் வந்தது. ஏறி எனது பதினான்காம் எண் இருக்கையை அடைந்து அது காலியாக இருக்கக்கண்ட ஆசுவாசத்தில் அமர்ந்து நடத்துநரிடம் காண்பிக்க சௌகரியமாய் பயணச்சீட்டைப் பிரித்து நீவிவிட்டபோதுதான் பார்த்தேன் – என் பெயர் இருக்கவேண்டிய இடத்தில் ‘கஸ்தூரி’ என்ற பெயர் இருந்தது.

நானேதான் போய் பயணச்சீட்டு வாங்கியது. பின், எப்படி….?

வண்டி கிளம்பிவிட்டது.

கஸ்தூரியாகப் பயணம் செய்வது என்ற தீர்மானத்தில் நின்று நிலைக்கவேண்டிய நிர்பந்தம்.

‘பெண்களுக்கென்று தனி இருக்கைகள் சில இருக்கும்போது இங்கே எதற்கு ஒரு பெண்ணுக்கு இடம் தரப்படவேண்டும்…..?’ இந்தக் கேள்வியும், நடத்துனர் எந்தவித சந்தேகப் பார்வையும் இன்றி பயணச்சீட்டைப் பார்வையிட்டுத் திரும்பத் தந்த விதமும் கஸ்தூரி என்பது ஓர் ஆணின் பெயராகவே இருக்கக்கூடும் என்று கருதவைத்தது.

போன வண்டியில் ‘டபுள் செக்’ செய்தவர் தவறுதலாக மாற்றித் தந்திருக்க வேண்டும். அப்படியானால், என் பெயரிலும் யாரோ பயணம் செய்துகொண்டிருப்பார். அது யாராக இருக்கும்…?

கூடுவிட்டுக் கூடு பாய்ந்தது போன்ற குறுகுறுப்பு உள்ளே ஏற்பட்டது.

கஸ்தூரியின் பயணம் எதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும்? கஸ்தூரி என்ற மனிதன் எப்படிப்பட்டவன்? வாழ்வில் இந்தத் தருணத்தில் அவனுடைய இழப்புகளும் வரவுகளும் என்னென்ன? அவனுடைய வாழ்க்கையில் எத்தனை பெண்கள் நேரிட்டிருப்பார்கள்? எனக்கெதற்கு இந்த ஆராய்ச்சியெல்லாம்….?

ஜன்னல் வழியாகப் பார்வையையோட்டிவந்ததில் நிலாவும் கூடவே ஓடிவந்தது.

* * *

‘YOUTH WILL BE SERVED’. தோற்கத்தான் போகிறோம் என்று தெரிந்தே, தோற்றாலும் கிடைக்கக்கூடிய பணம் பசியைப் போக்கிக்கொள்ள உதவுமே என்பதற்காய், இளைஞனை எதிர்த்துக் களமிறங்கும் முன்னாளைய குத்துச்சண்டைவீரனின் வாசகம்.   JACK LONDONஇன் A PIECE OF STEAK….. படித்த கதையின் வரிகளும் கூடவே ஓடிவந்தது.

பாவனை வெகுளித்தனத்தில் அல்லது பட்டவர்த்தன அலட்சியத்தில் ‘படா’ரெனத் தழைந்து முழு மார்புக ளையும் தளும்பவைத்துக் காட்டும் பெண்களை எனக்குப் பிடிக்காது. ஆனால் நிறைய பேருக்கு அத்தகைய தளுக்கும் குலுக்கும் தேவையாக இருக்கிறதுதான். நானாகியிருக்கும் கஸ்தூரிக்கும் தேவையாக இருக் குமோ…..’

கஸ்தூரி கல்யாணம் ஆனவனா, ஆகாதவனா….

நிலா கூடவே ஓடி வருவது இம்சையாக இருந்தது…. ‘எல்லோருடனும் ஓடி ஓடி என்ன நிரூபிக்க முயன்றுகொண்டிருக்கிறாய் நீ… எல்லோரிடமும் ஒரேயளவாய் அன்பு செலுத்த முடியும் என்றா? எல்லோருக்கும் ஒரேயளவாய் முக்கியத்துவம் தரமுடியும் என்றா…?’

* * *

“உங்களுக்கு வேண்டாத சந்தேகம். உடைமையுணர்வு.”

“இருக்கலாம்”

“என்னோடு ஒரே செக்ஷனில் பணிபுரிபவரோடு நான் சினேகமாகப் பழகுவதில் என்ன தவறு?’

“தவறு என்று நான் சொல்லவில்லையே.”

“பின், உம்மென்று நீங்கள் இருப்பதற்கு அதுதானே காரணம்?”

“இன்னும் சொல்லேன் – ஜாங்கிரி இனிக்குமென்றால் மைசூர்பாகு கசக்குமென்றா அர்த்தம்? கரும்பு தித்திக்குமென்றால் கல்கண்டு கசக்குமென்றா அர்த்தம்?  இன்ன பிற…. I AM TIRED அமுதா. என்னைப் பொறுத்தவரை பொஸஸிவ்நெஸ், பொறாமை எல்லாமும் எந்த உறவிலும் தவிர்க்கமுடியாதது. ஆண் – பெண் உறவில் அதற்குக் கூடுதல் இடமும் உண்டு. TWO IS COMPANY; THREE IS CROWD கேள்விப்பட்டிருக் கிறாயல்லவா?”

“இதென்ன அநாவசியப் பேச்சு? இப்போது நாம் மட்டும்தானே இருக்கிறோம். அவன் வருவது  பிடிக்கவில்லை என்று நீங்கள் சொன்ன நாளிலிருந்து நான் அவனை இங்கே கூட்டிக்கொண்டே வருவதில்லையே_”

கசப்பாய் ஒரு சிரிப்பு வெளிப்பட்டது என்னிடமிருந்து. கஸ்தூரியிடமிருந்தும் வெளிப்பட்டிருக்குமோ….

“நீ அவனை எங்கேயும் விட்டுவிட்டு வருவதில்லை அமுதா. என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் அவனைக் கூட்டிக்கொண்டு வருகிறாய். அவனைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம் என்னையும் உடன் அழைத்துச் செல்கிறாய். எங்களிருவரிடையே நட்பு உண்டாக்குவதாய் நீ மேற்கொள்ளும் முயற்சிக ளெல்லாம் உண்மையில் எங்களிடையே ஒரு நிழல் யுத்தத்தைத் தான் முனைப்பாக நடத்துகின்றன. நீ என்னை அணைக்கும்போதெல்லாம் நமக்கிடையே அவன் இருப்பதாகவும், நான் உன்னை முத்தமிடும் போதெல்லாம் என் உதடுகளில் நீ அவனுடையதை உணர்வதாகவும்…. எத்தனை நாட்கள் எத்தனை அல்பமாக உணர்கிறேன் தெரியுமா?”

சொல்லும்போதே ஒரு கழிவிரக்கத்தில் என் கண்கள் சுரப்பதை முள்வலியாய் உள்வாங்கிக்கொள்கிறேன்.

“இத்தனை குறுகிய மனதா உங்களுக்கு?”

“பார்த்தாயா, இப்படியே தொடர்ந்தால் இனி நான் உன்னை ‘வேசி’ என்பேன். நீ என்னை MCP என்பாய். இதுநாள் வரை நாம் அனுபவித்த இனிமையெல்லாம் மறைந்துபோகும்வரை ஒருவரையொருவர் தூற்றிக்கொண்டே தொடர்ந்து காதலித்துவரவேண்டும் என்று என்ன கட்டாயம் சொல்?.”

ஒரு மன்றாடலாய் என் குரல் தெறித்தது.

“நான் இனிமேல் அவனைப் பார்க்கக்கூடாது, பேசக்கூடாது – அவ்வளவுதானே?”

“அப்படிச் சொல்ல நான் யார்? அப்படி நான் சொல்லச்சொல்ல அவனுடனான உன் சூக்கும சந்திப்புகள் அதிகரித்துக்கொண்டேதான் போகும்…. இனிமேல் நாமிருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள வேண்டாம், பேசிக்கொள்ள வேண்டாம், பரஸ்பர நல்லெண்ணங்களோடு பிரிந்துவிடுவோம் என்றுதான் நான் சொல்கிறேன்….” – எனக்குள் வழிந்தோடுகின்ற குருதி எத்தனைக் குடங்கள் இருக்கும்….. மிகவும் பலவீனமாய் உணர்கிறேன்….

“இது EMOTIONAL BLACKMAIL”

“உன்னைப் பொறுத்தவரை. எனக்கு, என் அமைதிக்கான விண்ணப்பம்.”

“நான் உன் நிம்மதியைக் கெடுக்கிறேன் என்கிறாயல்லவா?”

“நீ வேண்டுமென்றே செய்கிறாய் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறாய்.”

“இது அநியாயப்பழி/”

“இருக்கலாம்.”

“நம்முடைய பிரிவுக்கு நீதான் காரணம்.”

“நேரிடைக் காரணம், அல்லது, உடனடிக் காரணம் மட்டுமே.”

* * *

“கஸ்தூரி…. உங்களுக்குத் தெரியுமா, இறுதிவரை, ஒரேயொரு தடவை கூட, ஒரு பேச்சுக்காகக் கூட, ‘அவனைவிட நீதான் எனக்கு முக்கியம்’, என்று அவள் கூறவில்லை. அப்படி எதிர்பார்ப்பது என் ஆணாதிக்க மனோபாவம் என்கிறீர்களா? TO HELL WITH YOU. அவள் என்னை மாங்காய் மடையனாக்குவது மட்டும் சரியா? இன்னொரு ஆணோடு பேசுவதில் என்ன தவறு என்கிறீர்களா? படுத்துக்கொள்ளக்கூடச் செய்யட்டும். தவறில்லை. அதற்கு என்னால் ‘விளக்குப் பிடித்துக்கொண்டிருக்க முடியாது ‘ என்றுதான் சொல்கிறேன். அப்படிச் சொல்ல எனக்குக் கட்டாயம் உரிமையிருக்கிறது.

நாளை தீபாவளி. பண்டிகைக் கொண்டாட்டம் என்ற பெயரில் வீட்டில் ‘ஜமா’ கூடும். கட்டாயம் அவன் வருவான். என்னைவிட எட்டுவயது இளையவன். அவளைவிட இரண்டு வயது பெரியவன்.

‘YOUTH WILL BE SERVED’….’

திடுமென ஞாபகம் வந்தவர்களாய் என்னைக் கண்களால் சுட்டிக்காட்டித் தங்களுக்குள் மௌனமாய் எதையோ குறிப்பாலுணர்த்திக்கொண்டு, வரவழைத்துக்கொண்ட அக்கறையோடு வேறு வேறு விஷயங்களை என்னிடம் பேசப்புகுவார்கள். அதைவிட அதிகமாய் ஒரு மனிதனை அவமானப்படுத்த முடியுமா கஸ்தூரி? சொல்லுங்கள்? அதனால்தான் இன்று கிளம்பிவிட்டேன். கடைசி நேரத்தில் முன்பதிவு செய்து தேனியைத் தாண்டியுள்ள மலையோர கிராமங்களில் ஒன்றான ‘ஏமாந்தான்பேட்டை’க்குக் கிளம்பி விட்டேன். இயற்கையோடும் தனிமையோடும் அளவளாவுவதும் உறவாடுவதும்தான் உண்மையிலேயே ஆசுவாசம் தரும் விஷயமாகத் தோன்றுகிறது கஸ்தூரி…..

* * *

வண்டியின் தாலாட்டில் அரைத்தூக்கத்தில் ஆழ்கிறேன்…. பக்கத்தில் அமர்ந்தபடி கஸ்தூரியிடம் கலகலவென்று அமுதா பேசிக்கொண்டே வர, அதனாலெல்லாம் கவரப்படாதவராய் கஸ்தூரி அரைச்சொல், ஒரு சொல்லில் எதிர்வினையாற்றிக்கொண்டிருந்தது பெரிய ஆறுதலாக இருந்தது எனக்கு. அதைவிட, அடிக்கொரு தரம் குனியும் அவளுடைய தளும்பும் மார்பகங்கள் கஸ்தூரியை அலைக்கழிக்கவில்லை என்ற விஷயம் என் மனதின் அதலபாதாளங்களையெல்லாம் சீர்படுத்தியது.

* * *

‘கஸ்தூரி….நீங்கள் உண்மையாலுமே மனத்திடம் வாய்ந்த நேர்மையான மனிதர்தான். உங்களால் என் தரப்பு நியாயத்தைக் கண்டிப்பாய் உள்வாங்கிக்கொள்ள முடியும்…. ஆனால், அதற்காய், அமுதாவை ‘ஆம்புளைப்பொறுக்கி’  என்ற மாதிரியெல்லாம் எண்ணிவிடாதீர்கள் ப்ளீஸ்…. அவள் மட்டும் என் வாழ்வில் எதிர்படாமலிருந்திருந்தால் எனக்குக் கைகால்களின் பயனெல்லாம் காலை-மாலைக் கடன்களை முடிப்பது மட்டுமே என்றாகியிருக்கும்… சங்கோஜியான, SOLITARY REEPERஆன என்னைத் தேடித்தேடி வந்து அவள் கொண்டாடிய சொந்தம் எனக்கு வாழ்வில் கிட்டிய வரப்பிரசாதம். அருகேக ஏக, உரிமைப்பிரச்னைகள் விசுவரூபமெடுப்பது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. அதனால்தான் பிரிவு மேல் என்று தோன்றுகிறது. எது என்னுடையதோ, எது எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ அது என்னிடமே வரும். ஆனால், நான் ஞானியில்லை கஸ்தூரி… வலி கூடிய சாதாரண மனிதன். ஒரு இதயத்தில் ஒரு நேரத்தில் ஒருவரைத் தவிர ஏந்திக்கொள்ளத் தெரியாதவன்; முடியாதவன். ஆனால், அமுதா சென்றவிடமெல்லாம் அன்பர்களைத் திரட்டிக்கொள்பவள். அதில் அவளுக்கு மமதை என்று சொல்லமுடியாது… ஆனாலும் மைய அச்சாக அமைந்து பல வட்டங்களை ஒரே சமயத்தில் சுழலச் செய்வதில் யாருக்குத்தான் சந்தோஷம் இருக்காது? எல்லா வட்டமாகவும் நான் இருக்க ஆசைப்பட்டது என் தவறுதான். அதனால்தான், நானே எனக்கான அச்சும் வட்டமுமாகிவிடுவது என்று முடிவெடுத்தேன்… என் முடிவு சரிதானே கஸ்தூரி….?

’கஸ்தூரீ…. நீங்களும் ஆண் தானா? அல்லது, பெண்ணா? பெண் என்றால் நான் பேசியதை நீங்களும் ஆணாதிக்கப் பன்றித்தனமாகத்தான் பகுப்பீர்கள். இன்னொருவனிடம் பேசினாலே இவனுங்களுக்கெல்லாம் ஜன்னி கண்டுவிடும் என்று குதறுவீர்கள். அமுதாவின் சினேகிதர்களெல்லாம்  அவளோடு படுக்கை யிலிருக்கக் கண்டால் மட்டும்தான் என் மனம் பதறவேண்டும் என்பது என்னவிதமான நியதி? அன்பின் விஸ்தீரணத்தையே குறுக்கிவிடுமல்லவா இத்தகைய நியதிகள்…?

என் உடைமையுணர்வைத்தான் நான் உண்மையான அன்பாக எடுத்துக்காட்ட முயல்கிறேனா? அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்கிறீர்களா? அதனால்தானோ என்னவோ, புதிதாய் ஓர் அன்பு உள்ளே நுழைய, உள்ளிருக்கும் பழைய அன்பு வெளியேறிவிடுவது நேர்கிறது.

என் அணுகுமுறை சரிதானே? சொல்லுங்கள் கஸ்தூரி… நீங்கள் ஆணா – பெண்ணா? கடைசி நேரத்தில் பெண்களுக்கான இருக்கைகளில் இடமில்லாமல் பொது இருக்கைகளில் இடம்தரும்படியாஅகிவிட்டதா? அறுபதுக்கும் இருபதுக்கும் இடையில், மணமாகியோ, ஆகாமலோ, கணவன் இருந்தோ, இல்லாமலோ, அவ்வண்ணமே கனவுகள் இருந்தோ இல்லாமலோ, ஒரு பெண்ணாக நீங்களிருக்கும் பட்சத்தில், ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் ரீதியானவற்றைத் தவிர்த்து மற்றபடி என்ன வித்தியாசமிருக்க முடியும் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

என்னில் பொருந்தியுள்ள கஸ்தூரி அதை நிச்சயம் யோசித்திருக்கும். அஃறிணையாக அல்ல, அன்பின் மிகுதியாலே ‘இருக்கும்’ என்கிறேன். கஸ்தூரி…. என்னில் பொருந்தியுள்ள கஸ்தூரியாகிய நீங்கள்தான் எத்தனை அழகு! என்றும் மாறா இளமையோடு, எனக்கேயெனக்கான அன்போடு என்றைக்குமாய் கூடவரும் நீங்கள் இல்லாமல் நான் மட்டும் எப்படி ‘ஏமாந்தான்பேட்டை’க்குப் போவது கஸ்தூரீ… வாருங்கள், இந்த இரவில் நம்மோடுவரும் நிலவொளியின் துணையோடு, ஜன்னல் வழியே பறந்து சென்றுவிடலாம்…. அப்படி மட்டும் செய்ய முடிந்துவிட்டால்,……

{ ’அநாமிகா கதைகள்’ -  சிறுகதைத் தொகுப்பு, கலைஞன் பதிப்பகம், 2002}

அநாமிகா’ (லதா ராமகிருஷ்ணன்)
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 7 Jun 2016 - 14:17

திணைகள்
----
மாலையானாலே என்ன அடைமழை இது ! என்று சிங்கப்பூரர்களில் பலரும் சலித்துக் கொள்ளுமளவுக்கு இன்று நிலைமை  இல்லை.. கருத்த மேகங்களின் சில்லென்று குளிர்ந்த காற்று, ,எப்போது வேண்டுமானாலும் பெய்து விடுவோம் ,என்று பயம் காட்டும் கண்ணாமூச்சி ஆட்டம் இன்று காணாமல் போயிருந்தது. உண்மையிலேயே வானம் பொய்த்துவிட்டது. தினமும் சோவென்று கொட்டிகொண்டிருக்கும்  டிசம்பர் மாதத்து அடைமழை போன இடம் தெரியவில்லை.  பளீரென்ற மஞ்சள் தகடாய் வானம் அழகு காட்டிக்கொண்டிருந்தது.

அடுத்தமாதம் இமயமலைக்குப் போகும் ஒரு குழுவோடு பயணம் என்பதால், தினமும் நடைப்பயிற்சிக்கு இப்பொழுதே பயிற்சி செய்ய வேண்டியிருந்தது. டெல்லிவரை விமானம், அடுத்து, வாகனப்பயணம் தான் என்றாலும் ஆங்காங்கே சிறுசிறு மலைகள்,குன்றுகளின் மேலுள்ள கடவுள்கள   தரிசிக்க  இந்நடைப்பயிற்சி அத்தியாவசியம் என்று ஏற்பாட்டாளர் வலியுறுத்தியிராவிட்டால்,  ஒருபோதும்   இந்த அப்பியாசத்துக்கு ராஜசேகர் முன் வந்திருக்க மாட்டான். புக்கித்தீமா  காட்டில் நடைப்பயிற்சி தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது.ஆனால் இன்றைய நடையின் சுகம் இதுவரை அவன் அனுபவித்தறியாதது  .
      
நடக்க நடக்க அவ்வளவு சுகமாக இருந்தது. காற்று என்னமோ கட்டின மனைவியாய், அவனைத் தழுவித் தழுவி மிருதுவாய் உடலுக்குள் ஊடுருவிய சுகத்துக்கு  மனசெல்லாம் பஞ்சுப்பட்டாய் பறந்து கொண்டிருந்தது? இரண்டு கைகளையும் நீட்டியபடியே காற்றை  நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.பரவசத்தில் கிளுகிளுவென்று நெஞ்சின் ரோமக்கால் கூட  சிலிர்த்துப்போனது.காற்றுக்கு ஏது வேலி? காற்றை  கட்டியணைக்க முடியுமா என்றெல்லாம் அவனால் யோசிக்க முடியவில்லை.  காற்று அவனது அனைத்து உணர்வுகளையும் அப்படிக் கவ்வி பிடித்திருந்தது.

சாரலும் தூறலும், மழையுமில்லாமல், இந்தா அனுபவி, என்று இயற்கையே அவனைக் கைபிடித்துப் போய்க் கொஞ்சுவதாய்ப் புளகாங்கிதத்தில் நடந்து கொண்டிருந்தவன்  டபாலென்று எதன் மீதோ இடித்துக்கொண்டு அப்படியே நெட்டுக்குத்தாய் கீழே சரிந்தான் . கால் முட்டி சிரைத்துவிட்டது. ஒருவினாடிக்கு  எதுவுமே புரியவில்லை.என்னாயிற்று ?, என்று கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு பார்த்தால் முத்து முத்தாய் ஆங்காங்கே  சிறு சிறு குன்றுகள். 
    
எதிரே தெரிந்த குன்றின் இடைவழி நின்ற குட்டிப்பாறையின் மீதுதான் இடித்துக் கொண்டு  விழுந்திருக்கிறான்.  மெய்ம்மறந்து அப்புறமும் இப்புறமுமாய்ப் பார்த்துக்கொண்டு வந்ததில் கண்ணுக்கு முன்னால் நின்ற இந்தக் குட்டிப்பாறையை ,எப்படிப் பார்க்காமல் போனோம் ?அட, தலை குப்புற விழுந்த பிறகே  காட்சி மண்டலம் பிடிபட்டது.ஏனென்றால் எதிரே கண்டது வெட்டவெளியல்ல.
ஒருவாறு சமாளித்து எழுந்தவனுக்குக் காணக்காண சங்கு குளிர்ந்து போனது
        
இடது பக்கம் முழுவதும் நீண்ட நெடிய மூங்கில் மரங்கள். அந்தப் பக்கம் கொத்து கொத்தாய் காய்த்து நிற்கும்  சீத்தாப் பழங்கள்,ஆனால் மேபில் மர இலைகளைப்   போல் நிறம் கொண்ட  மரம் அது. சற்று தூரத்தில் ,குண்டு குண்டாய்க் கண்ணாடித் துண்டுபோல் வித்தியாசமாகத்  தொங்கும் மரங்கள். வலதுபக்கம் முழுவதும்   சீராக இல்லாமல், ஒரே காட்டுக்குலைவாய் நின்ற   மரங்கள், !!!!    அட, !  இந்த ஒரு மரம் மட்டும், ம் ,ம் ,இது , என்ன பெயர், எங்கோ  படித்திருக்கிறோமே,அல்லது இணையத்தில் பார்த்திருக்கிறோமே, என்று நினைவு வந்தாலும் பெயர் ஞாபகத்தில்  வரவில்லை. ஆனால், பழுத்த பழங்களைப் பார்த்த மாத்திரத்தில் பசி வந்துவிட்டது. சட்டென்று ஒரு  கிளையை வளைத்துப், பழத்தைப் பறிக்கப்போன நேரத்தில், ,”  வேண்டாம், பறிக்கவேண்டாம்,அதைப் பறிக்கும் உரிமை உங்களுக்கில்லை. ”என்ற குரல் கேட்டுத் திரும்பினால்,  ஒரு பெண்.அதுவும்   கையெட்டும் தூரத்திலிருந்து  வந்து  கொண்டிருந்தாள்.

ஆச்சரியமாகப் போய் விட்டது. திடீரென்று இவள் எங்கிருந்து  முளைத்தாள்?

அவன் மனதைப் படித்தவள் போல்,  ’ இப்ப கொஞ்ச நாளா இங்க காட்டுக்குள்ள தான்  இருக்கேன்.

” ஊருக்குள்ள எங்கே என்னை  வாழவிட்டீங்க  ?ஆரம்பத்தில் நான் ஷெண்டொன் வேயில் தான் வாழ்ந்து கிட்டிருந்தேன்.அதற்குள் காட்டை அழிக்கிறேன், நாட்டைச் சீர்படுத்துகிறேன்னு  சொல்லிப் புகலிடம் தேடி ஓட வைத்தவர்கள் தானே ? இங்கும் நிம்மதியாக வாழ விட மாட்டீங்களா?”

’ ஓஹோ, அப்ப ஊருக்குள்ளிருந்து தான் இங்கு வந்தாளோ???எந்த வட்டாரமயிருக்கும் ??

ஆனால் என்ன அதிகாரம் இது ??

ராஜசேகருக்குக் கோபம் வந்துவிட்டது.ஒரு பழம் பறிக்கப்போனதுக்கு இவ்வளவு கதையா? இந்த மரம் என்னமோ இவளுக்குச் சொந்தம் போல் பேசுகிறாளே!.கொஞ்சம் இவளோடு விளையாடிப் பார்த்தால் என்ன ?

ஆமாம்!!! உன் பெயர் என்ன ?

’”முல்லை’”, என்றபோது தான்  என்ன பெருமிதம். ஒரு பெயரைச் சொல்வதற்கு இவ்வளவு பெருமையா??

”காடு பொதுச்சொத்து.,யாருக்கும் இந்தப் பழங்களைப் பறிக்க உரிமையுண்டு,”

”காடு பொதுச்சொத்தாக இருக்கலாம். ஆனால் காட்டில் வாழும் இந்த மரங்கள் வெறும் மரங்களல்ல.ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உண்டு.,நாங்கள்தான் இந்த இயற்கையோடு சுவாசித்து, இயற்கையோடு  இயைந்து  இந்த உயிர்களிடம் பேசி வாழ்ந்து வருபவர்கள்.ஒவ்வொரு  மரத்துக்கும் பெயர் உண்டு.. இவளுக்கு அடுத்து நிற்கும் அந்த அடிபெருத்த வேர்களுடனும் பெருங்கிளைகளுடனும் அண்ணாந்து நின்று  ,மாசாத்துவனாய் பார்க்கும் அவன் தான் இவளின் ஆருயிர் துணைவன், ..இப்படி பெற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் குழந்தையைப் பறிக்கப்போவது தப்பு.’நீட்டி முழக்கி அவள் பேசுவதைப்பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது

”அப்படியானால் சந்தைக்கு வரும் பழ வியாபாரிகள் பழங்களை  விற்பது எப்படி?

”அதுதான் சொன்னேனே, கனிந்து பழுத்து,அவர்களே ஒப்பினால் தான்  நாம் பறிக்கலாம்.?

”இது வேலைக்கு ஆகாது, “ என்று எரிச்சல் பட்ட அதே நேரத்தில், ,  எங்கோ, நீர் வீழ்ச்சியின் ஓசை அவன் கவனத்தைக் கலைக்க,, ராஜசேகர் சுற்றுமுற்றும் பார்த்தான்.

எங்கோ அருகாமையில் தான் துல்லியமாய் நீர் விழும் ஓசை. இந்த வாயாடியோடு பேசிக்கொண்டிருக்கும் வெட்டிவேலையே விட, அங்காவது போய்ப்பார்க்கலாம் என, விடுவிடுவென்று வேகம் வேகமாய் நடந்தான்.

என்ன ஒரு விசித்திரம்.

கோணலான இரு மலைவாயிலில் இருந்து சலசலவென்று மென்மையான ஓசையில் நீர் விழுந்து கொண்டிருந்தது.சினிமாவில் எல்லாம் ஹோவென்ற பேரிரைச்சலோடு மட்டுமே நீர் வீழ்ச்சியைப் பார்த்துப் பழகியவனுக்கு  கண்கொள்ளா இந்தக் காட்சியினின்று விடுபட முடியவில்லை. பளிங்குத்தகடாய் நீரோட்டமும்,கீழே சல்லிசு சல்லிசாய் வெண் மணலும் மனசை விட்டகல்வேனா என்றது. அப்படியே ஒரு வாய் நீரை அள்ளிப் பருகும் ஆசையில், கீழே குனிய,முகம் கண்ணாடி போல் நீரில்  தகதகத்தது., மகிழ்ச்சியோடு திண்ணென்ற நீரை இரண்டு கைகளாலும் வாரி வாரிக் குடித்தான்.

’கந்தகம் கலந்த நீர்,  உடம்புக்கு ரொம்பவும் நல்லதுதான், ஆனால் இப்படி அதீதமாகக் குடிக்கக் கூடாது’.

அசரீரியாய் மீண்டும் அதே குரல். இப்பொழுது அவனுக்குக் கோபம் அசாத்யமாய் வந்துவிட்டது. என்னமோ இந்தக்காடே இவளுக்குச் சொந்தம்போல்,என்ன ஒரு அராஜகம்  , அல்லது அதிகாரம், !!

, போடி, கழுதை, என்பதுபோல் ஒரு முறை முறைத்துவிட்டுத், திரும்பியும் பாராமல்

நடந்து விட்டான். சில நிமிஷங்கள் கழித்துத் திரும்பினால்,அட, அவளைக்காணோம்.

இப்பொழுது திடீரென்று கால்கள் சொத சொதவென்று ஈர மண்ணில் அகப்பட்டுக் கொண்டது. ட்ரேக் ஷூ முழுக்க , நனைந்து , என்ன கிரகாச்சாரம் என்ற கடுப்பில் சுற்றுமுற்றும் தண்ணீரைத் தேட, சுருக்கென்று காலில் ஏதோ குத்திவிட்டது. விருவிரென்று வலி அப்படியே தொடை வரை ஏற, தடுமாறிப் போய்க் கீழே விழப்போனவனை,,

”இந்தப் பக்கம் இப்படி வாங்க !!  என்றழைத்த மனிதரின் குரலில் செலுத்தப்பட்டவனாய்த் திரும்பினான். ஆனால்  நடக்க முடியவில்லை. அந்த மனிதர்   ஓடி  வந்து தாங்கிப் பிடித்துக்கொண்டார் .  ராஜசேகரை அருகே இருந்த ஒரு குட்டிச் சாக்குக் கல்லில் உட்கார வைத்து விட்டு,விடுவிடுவென்று அருகே இருந்த ஏதோ இலைகளைக் கொண்டு வந்து, அடிப்பாகத்திலும் மேல்பாதத்திலும் அமுக்கிப் பிழிந்து நன்றாய் உருவிவிடக் கொஞ்சம் கொஞ்சமாய் வலி குறைந்தது.

’ இது தொப்புலான் புழு. பழக்கமில்லாதவங்கலுக்கு இது கடிச்சா இப்படித்தான் விர்ருனு ஏறும்.எங்களுக்கு பழகிடிச்சு,என்று சிரித்த மனிதருக்கு மேல் வரிசையில் பல்லே இல்லை. கீழ் வரிசையில் மட்டுமே மூன்றோ, நான்கோ பற்கள் தெரிந்தது.

ராஜசேகர் வியந்து போய்ப் பார்த்தான்.அரையில் பெமுடா போல் ஏதோ அணிந்து, மேலே வெற்றுடம்பாய்ச் சகதியில் நின்றுகொண்டிருந்த மனிதர் மீண்டும் சிரித்தார்.

”கம்பத்து வீடுங்கல்லாம் போயி அடுக்கு மாடி வீடுங்க வந்தவுடனேயே , நான் இங்கே வந்துடேன் ,   இங்க பயிர் பச்சங்களைப் பயிரிட்டு, நிம்மதியா வாழ்ந்து கிட்டிருக்கேன். எம்புள்ளங்கல்லாம் இன்னும் பீஷான்லதான், இருக்காங்க,

‘அப்படியா, ஆனா, பீஷான் பார்க்கில உங்க காட்டிலேருந்து ஓடிவந்த ஒரு பன்றி போலீஸ்காரரையே இடித்துத் தள்ளி விட்டதே, இபொழுது இந்த காட்டு ஜீவராசிகளாலே நாட்டில் எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது ??

‘அதுங்க என்னச் செய்யும் ?அப்பப்ப  அதுங்களுக்கும் ஒரு வெளிக்காத்துப் பட ஆசை யிருக்காதாக்கும்!!!மனுசங்களுக்கு  மட்டும் தான் சுதந்தரம்  தேவையா ?

பன்றிக்கூட்டம் மட்டுமில்லை, போனவாரம் புக்கிட் பாத்தோக்கில  ஒரே எலிக்கூட்டமா வந்து எறங்கியிருக்கு, பிறகு மனுஷங்களுக்கு மட்டும் என்ன பாதுகாப்பு/??  காட்டில இருக்கவேண்டியதுங்க காட்டிலதானே இருக்கணும் ????

’ அது அவுங்க குத்தமில்லையே ??? கட்டடம் கட்டறேன்னும் கடலைக்கூட  இறைச்சு இறைச்சு நண்டு, நத்து, எல்லாத்தையும் ஒழிச்சுக்கட்டிட்டீங்களே !!!!அந்தக் கொடுமைக்கு முன்னே இதெல்லாம் ஒரு விசயமாக்கும் !!!!!

சரிதான், என்ன ஒரு வியாக்கியானம் , என்று கனன்று கொண்டு வந்தது ராஜசேகருக்கு.

‘உன்பேரென்னப்பா ’

’மருதவேலுங்க ! இங்க பயிர் பச்சகளைப் பயிரிட்டு, அதுங்களோட பேசிச் சிரிச்சு சந்தோசமா காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கேன்,, இந்தாங்க, இதச் சாப்பிட்டுப் பாருங்க!!!

இவனோடு பேசிக்கொண்டே, அருகிலிருந்த ஒரு குட்டைச்செடியிலிருந்து எதையோ பறித்துக்கொடுத்தார்.

என்ன இது ,,. கச்சான்போல் இருக்கிறதே ,,.ஆனல் இனிப்பாயிருந்தது. கடுக் முடுக்கென்று கடித்துச் சாப்பிட்டவனுக்கு மருதனிடம் பேசவேண்டும் போலிருந்தது.ஆனால் மருதவேலோ அருகிலிருந்த மரங்களுக்கு, உரம்போல் கருப்பாய் எதையோ கொத்திப் போட்டுக் கொண்டிருந்தார்.

 ‘என்னாப் பாக்குறீங்க ? இதுதான், வேம்பு, அது முள்ளி,அதோ, அந்தால நிக்குது பாருங்க,   அதுதான் கொயினா மரம்,  என்ன, என்ன ?? கடுமையான வியாதிக்கெல்லாம் அருமருந்தாகப் பயன்படுத்தப் படும் கொயினா மரமா??   இவனது பரபரப்பையே காதில் வாங்காதவனாய் மருதன் பாட்டுக்கு வேலையில் மும்முரமாயிருக்க, தூரத்தே தெரிந்த மரத்திலிருந்து பறந்துகொண்டிருந்த பறவைகள் கூட்டம் கண்களை அப்படிக் கவர்ந்தது .

அழுக்கு ஷூவைக் கழுவத் தண்ணீர் தேடி அலைய வேண்டியே இருக்கவில்லை.கண்ணுக்கெட்டிய தூரத்திலேயே, சிறு குளம் தெரிந்தது. தாமரைப்பூக்கள் குளம் நிறைய அலுங்காமல் குலுங்காமல்  ,பூத்து நின்ற அழகினைப் பருகினபடியே, ஓரத்தில் நின்று ஷூவைக் கழுவிக் கொண்டான். சிரிதுதூரம் கூட நடக்கவில்லை.  திடீரென்று ஏனோ தாகம் அப்படி வாட்டியது. இப்படி ஒரு தாகத்தை அவன் வாழ்நாளில் உணர்ந்ததில்லை.மீண்டும் ,மீண்டும் தாகம் தான் .அப்படி வாட்டியது.  ஒருசொட்டுத் தண்ணீர் கிடைக்காதா, என்று  பரிதவித்துப் போனான்.

நடந்து நடந்து  எங்கே  வந்திருக்கிறான்? குருவிகளின் கீச்சிடலோ, கூட்டைத்தேடிபோகும் பறவைகளின் ஆரவாரமோ எதுவுமே இல்லை. அப்படி மொட்டைப் பாலைவனமாக இருந்தது.எங்கு பார்த்தாலும் ஒரே பாலைவனம்போல் பூமி வரண்டு கிடந்தது. ஒரு புல் பூண்டு, மரம், மட்டை ,மருந்துக்குக்கூட இல்லை.

தொண்டை வரண்டு எங்கே போய் தண்ணீர் தேடுவது,என்ற அலமலப்பில்,நடந்துகொண்டே வந்தவன் திடீரென்று மன்மத மிழற்றலில்  குரல்கள் கேட்க, ஆவலும் கவலையுமாய்ச் சுற்றுமுற்றும் பார்க்க, புதர் போலிருந்த இடத்திலிருந்து தான் சப்தம்,!!.

சற்றுக் கவனித்துக் கேட்டதில்.... எங்கோ கேட்ட  குரல் போலிருக்கிறதே!!!!!

மரத்தின் பின்னாலிருந்து, இடுப்புத் துணியைச் சீராக்கிக்கொண்டு,முதலில்  வெளியே வந்தவன் ஒரு முரட்டு ஆள். பார்வையிலேயே ஒரு பாட்டாளி எனத் தோற்றமே சொல்லியது.

முறுக்கித்தெரிந்த புஜங்களும்,  புடைத்துத் தெறித்த அங்கமுமாய் வெளியே வந்தவனைப் பார்த்து ஒன்றும் தோன்றவில்லை.ஆனால் உடையைத் திருத்திக் கொண்டே, அவனுக்குப் பின்னால் கொஞ்சலாக எழுந்து வந்தவளைப் பார்த்துத் தான் அதிர்ச்சியாகப் போய் விட்டது. முல்லை.. 
மரத்திலிருந்து ஒரு பழத்தைப் பறிக்கப்போனதுக்கு அந்தப்பேச்சு பேசினவள் ,

இப்பொழுது இது என்ன ?.  இது மட்டும் தப்பில்லையோ ?,

நிச்சயமாக இவன் அவளின் கொண்டவனாக இருக்கவே முடியாது. கள்ளச்சிரிப்புடன்

நடந்து போகிறவளிடம் சுள்ளென்று கேட்டாலென்ன என்றிருந்தது.

அதற்குத்தேவையே இல்லை, என்பதுபோல் உடன் படுத்தெழுந்தவன் சடாரென்று போய் அருகிலிருந்த ஓடையில் குதித்துக் குளிக்கத் தொடங்கினான். மனதுக்குள் குமிழ் குமிழாய் நகை புரண்டு வந்தது  ராஜ சேகருக்கு. களவொழுக்கம் என்பது குறிஞ்சி நிலத்துக்கே உரியதாயிற்றே ???ஆனால் அதற்கு இந்த பாலை தானா இவர்களுக்கு     கிடைத்த்து ????     லேசாகக் குளிர் காற்று சருமத்தைத் தீண்ட,நேரம் அந்தி மயங்கிவிட்டதே அப்பொழுதுதான் அவனுக்கு உறைத்தது. ஆனால் தாகமோ விடாப்பிடியாக , தொண்டைக்குள் நாடி நரம்பையெல்லாம் சுருட்டிக் கொண்டிருந்தது. தடதடவென்று பின்னாலிருந்து  ஒடி வந்த மருதன் , ’ தண்ணி குடுக்க மறந்து  போயிட்டேன். இந்தாங்க, அம்புட்டும் குடிச்சுக் கிடுங்க  இது வாச்சிக்கடலை, சாப்ட்டா, தாகம் அப்படித்தான்  புடுங்கி எடுத்துடும்’’.

மடமடவென்று குடுவையிலிருந்த நீர் அத்தனையையும் அப்படியே வயிற்றுக்கு கொட்டிக் கொண்ட பிறகே சுவாஸம் சீரானது. தண்ணீர் கொடுத்த வேகத்திலேயே திரும்பியும் பாராமல் போய்விட்டான் .இப்பொழுதுதான் எப்படித் திரும்பிப் போவது  எனும் பிரச்சினை பூதாகாரமாய் எதிரே நின்றது.
சில அடிகள் நடக்கத் தொடங்க, மாலை நேரத்துப் புள்ளினங்கள், கூட்டம் கூட்டமாய் விர்ரென்று பறந்துசெல்வதில் எந்த ரம்யமும் தெரியவில்லை.

அடுத்த கணம்   ராஜசேகர் , அய்யோ என்று சர்வாங்கமும் நடுங்க,அப்படியே நின்று விட்டான். நிமிடங்கள் பலவாகியும் கண்களைத் திறக்கவே முடியவில்லை.ஆனால்  ஏதோ சக்தி,ஆட்டுவிக்க,குருநாமம் ஜெபித்துக் கொண்டே மெல்ல , அதிலும் அரைக் கண்ணால் மட்டுமே பார்த்தான்,  அது அப்படியே சடை சடையாய் முடியை விரித்துப் போட்டுக்கொண்டு திடுதண்டியாகவே நின்று கொண்டிருந்தது. இப்பொழுது கண்களை முழுதாகவே விரியத் திறந்து விட்டான்.

சே.!  வெட்கமாகப்போய் விட்டது.

ஹாவென்று இருட்டில் நின்று கொண்டிருந்தது ஒரு  தடிமாட்டு மரம்.  பயம் முழுசாக விலகவில்லை. .மரத்தில் ஏதாவது போமோ , எனும் பேய் குடி கொண்டிருக்குமோ, இல்லையென்றால் இப்படி நிற்குமா ?

  ‘””கொப்பும் கிளையுமாய் ஒரு பெரியவர் நின்றுகொண்டிருந்தால் அதற்கும்  சந்தேகமா ?? இதனால் தான் நீங்களெல்லாம் இப்படி இருக்கிறீர்கள் !!!. வயதானால் வீட்டில் பெரியவர்களை வைத்துப் பார்க்கப் பிடிக்காமல், கொண்டு போய் முதியோர் இல்லத்தில் விட்டு விடுவதால் தான்,  காட்டில் வாழும் இந்த அன்பான பெரியவரைப் பார்த்து இப்படி பயப்படுகிறீர்கள் .!!!!!  அசரீரிக்குரல் ’, வேறு யார்  ?முல்லை தான்,,     ‘ இந்த சடாமுடி மரம்தான் -- பெரியவரா ? சிரிப்பு வந்துவிட்டது ராஜசேகருக்கு.,

’”எப்படி திரும்பிப் போவது என்பதுதான் பிரச்சினை என்றால் நான் உதவுகிறேன், ஆனால் போகும் போது எனக்கு ஒரு பரிசு தந்துவிட்டுப்போகவேண்டும் . இருக்கும்  நிலைமையில் எப்படியாவது திரும்பினால் போதும் என்பதால் , அவள் கோரிக்கையை சிரசாய் ஏற்றுக்கொண்டான் ராஜசேகர். இப்படித்திரும்பி, அப்படி வளைந்து, இப்படி, இப்படி ,என்றெல்லாம் வழிகாட்டியாய் நடந்துகொண்டே,  ஒரு குடோன் மலைக்கு முன்னால் போய் நிறுத்தி, பின் மீண்டும் நடந்து,

தூரத்தே தெரிந்த ஒரு செம்மண்சாலை  பக்கமாய்  கொண்டு விட்டாள் ..அவளுக்கே மூச்சு வாங்கியது,.செங்குத்தான அந்த உச்சியிலிருந்து விடுவிடுவென்று நடக்கதொடங்கியபோது ' பரிசு, எங்கே? '  என்று அசரீரியாய்,  பின்னாலிருந்து கேட்டவளிடம் ‘கிட்டே வா ’என்றழைத்தான்.

வந்தாளோ இல்லையோசடாரென்று திருப்பி அப்படியே இறுக்கி மாரோடணைத்து பளிச்சென்று ஒரு முத்தம் கொடுத்தான்.அவ்வளவு தான் , அடுத்தகணம் இடி இறங்கியது. கன்னம் அதிர்ந்து கண்ணுக்குள் மின்னல் பறந்தது.

’காட்டுக்குள்ள உள்ள பொண்ணுங்கன்னா அவ்வளவு  இளக்காரமா ????

எரிமலையாய் வெடித்துவிட்டு கண் சிமிட்டும் நேரத்துக்குள் காணாமல் போனாள்.

வீடு திரும்பி பல நாட்களுக்கு ராஜசேகருக்கு அவளை மறக்கவே முடியவில்லை.

அவன் அப்படி ஒரு முத்தத்தை பிறகு எந்த பெண்ணுக்குமே கொடுக்கவில்லை.மறந்தும்  பிறகு புக்கித்தீமா காட்டுக்கு அவன் போகவுமில்லை. ஆனாலும் அவனுக்குப் புரியவே புரியாத புதிர், அந்த கட்டானைவிட தான் எந்தவிதத்தில் குறைந்துபோனோம்  ??

ஏன்  அவள்  அப்படி அறைந்தாள் ,என்பது எவ்வளவு யோசித்தும் அவனுக்குப் புரியவே இல்லை . ஆனால், சிங்கப்பூரின் இயற்கை  மட்டும் ஐந்திணைகளிலும்  நின்று அவனை முறைத்துக்கொண்டே இருந்தது.

கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்)
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 7 Jun 2016 - 14:20

பாரதி’யைப் பார்க்கவேண்டும் போல்…..
----
டியர் மிஸ். சுதா – பாரதி பாடல்கள் சிலவற்றைக் குறித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதவேண்டியிருக்கிறது. அருங்காட்சியக இயக்குநருக்கு இத்துடன் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறேன். அவர்களிடத்தில் பாரதி பாடல்களின் மூலப்பிரதிகள் இருக்கின்றன என்று கேள்விப்பட்டேன். அவருடைய தனிப்பாடல்கள் சிலவற்றை அவர் கையெழுத்தில் உள்ளது உள்ளபடி ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்தனுப்பி உதவ முடியுமா? சிரமத்திற்கு மன்னிக்கவும்.”

_ நேர்மையான எழுத்தாளர் என்று, எழுத்தின் மூலம் அறிந்து, முதியவராகவும்,  விழித்திறன் குறைந்துகொண்டே வரும் நிலையில் இருப்பவராகவும் உள்ளதை அறிந்து, என்னாலான எழுத்துதவி செய்வதாய் அறிமுகமாகி, பரிச்சய நிலையைக் கடந்த பிறகும் உதவியை அதிகாரமாகக் கேட்கும் உரிமையெடுத்துக்கொள்ளாத உயரிய பண்பு; எத்தனை நெருங்கியவராயிருந்தாலும்  ‘take it for granted’ ‘ஆக நடத்தாமலிருக்கும் பெருந்தன்மை எத்தனை பேரிடம் இருக்கிறது? விரல் விட்டு எண்ணிவிடலாம்… அந்தப் பெரிய மனிதரிடம் இருந்தது. உண்மையிலேயே பெரிய மனிதர்தான் நான்கு மாடிகள் மரப்படிகளில் கால்கடுக்க ஏறி, கடிதத்தைக் காட்டி, அனுமதி பெற்று, பாரதியின் கவிதைகளடங்கிய நோட்டுப்புத்தகத்தை வாங்கிப் பார்த்து, தேவைப்பட்ட கவிதைகளைச் சுட்டிக்காட்டி, ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்துத் தரச் சொல்லி, அவற்றை வாங்கிக்கொண்டுவந்த கையோடு தபாலில் பத்திரமாக அனுப்பிவைத்து…. தவறாமல் நன்றிக்கடிதம் வந்தது. குட்டிக் குட்டி எறும்புகள் வரிசை தவறாமல் சீராகச் செல்வதைப் போன்று அடித்தல் திருத்தல் அற்ற கையெழுத்து! ஆனால், சென்னை வந்த சமயம் அந்த மூலப்பிரதிகளைத் தானும் பார்க்கவேண்டுமென முதுமை மூச்சுவாங்கச் செய்ய, ஆமைவேகத்தில் நகரும் உடம்போடு அந்த மனிதர் என்னுடன் கைத்தடியோடு கிளம்பியபோது எரிச்சலும் கோபமும் ஏற்பட்டது.

 ‘எத்தனை நம்பிக்கையின்மை…. நான் சரியாகப் பிரதியெடுத்திருப்பேனா, தேர்ந்தெடுத்திருப் பேனா என்ற சந்தேகம்… செ, எத்தனை உண்மையாய் அலுவலகத்திற்கு ‘லீவு’ போட்டு வேகாத வெய்யிலில் போய் பிரதி கிடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். எனக்கு இந்த அவமானம் தேவைதானா…?’

ஆட்டோவில் அவருக்கே இயல்பாக உள்ள பண்போடு, உரிய இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டவராய், வழக்கம்போல் நலம் விசாரித்துக்கொண்டே வந்தார். குரலே பரிவாய், பரிவே குரலாய் பொருந்திய தொனி மனதை எப்பொழுதும்போலவே நெகிழச் செய்தது. ‘தலைமுறை இடைவெளி’ என்பது ஒரு myth என்று அவரோடு பேசும்போதெல்லாம் தோன்றும். ஆறே வயது பெரியவளான சக ஊழியைக்கு தயிர் வடையை எப்படி விதம்வித மாகச் செய்வது (முக்கோண வடிவில், செவ்வக வடிவில், ஏன், அணுகுண்டு வடிவில் கூட!) என்று விலாவாரியாக நீட்டி முழக்கி போதிப்பதைத் தவிர வேறெதுவும் தெரியாது. உறவுக்கார மேன்மக்கள் ஏராளமானோர்க்கு அத்தானுடைய மச்சானுடைய சகலையின் சித்தி பெண்ணுக்கு அமெரிக்க மாப்பிள்ளை கிடைத்ததுதான் அகில உலக சதாசர்வகாலத் தலைப்புச் செய்தி….. தலைமுறை இடைவெளி என்ற பொதுத்தலைப்பின் கீழ் எல்லாவற் றையும் பகுத்துவிட முடியுமா என்ன…?’  - எப்போதும்போல் மனதில் பலவாறாய்க் கிளர்ந் தெழுந்த சிந்தனையோட்டத்தையும் மீறி உள்ளுக்குள் கனன்ற கோபத்தையும்,கசப்பையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், கொஞ்சமும் மரியாதை குறையாமல் பதிலளித்துக் கொண்டிருந்தேன்.

மாடிப்படியில் ஏற முடியாமல் மூச்சு வாங்க ஏறியவரைப் பார்த்து மனதிற்குள் கோபம் மறைந்து வருத்தமே எஞ்சியது.

‘என்னை ஏன் நம்பவில்லை….? இவருடைய எழுத்தின் மீது, மனிதம் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறேன் நான்…. சொன்னபடிக்கு சரியாய் பிரதியெடுத்திருக்க மாட்டேன் என்று இந்த மனிதருக்கு எதனால் சந்தேகம் வரப்போயிற்று…? மனதின் புலம்பல் கண்ணுக்குள் வலித்தது…..

“இதுதான் சார் இயக்குனர் அறை.”

அனுமதி பெற்று உள்ளே நுழைந்ததும், “வாங்க சார்!” என்று எழுந்துநின்று வரவேற்றார் இயக்குநர். “மெட்டீரியல்ஸ் கேட்டிருந்தீங்களே, கிடைச்சுதா?”

”ஓ! இவங்க எல்லாத்தையும் பிரதியெடுத்து அனுப்பிச்சிருந்தாங்க. ரொம்ப நன்றி. அந்த மூலப் பிரதிகளை நான் கொஞ்சம் பார்க்க வேண்டும். தயவு செய்து தர முடியுமா?”

“தாராளமா! நோட்டுப்புத்தகத்தில்தான் எழுதியிருக்கிறார் பாரதியார். இதோ கொண்டுவரேன். தேவையான பிரதிகளை எடுக்கவில்லையா?”

_ கேட்டுக்கொண்டே பதிலை எதிர்பார்க்காமல் உள்ளறைக்குச் சென்றார் இயக்குனர். எனக்குள் அவமானமும்,துக்கமும் கவிந்தது.

“இதோ, இந்தாங்க சார்.”

வயோதிகத்தில் தளர்ந்து மெலிந்திருந்த கைகள் மௌனமாய் ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டின.

“சரியாய்த்தானே சார் எடுத்தனுப்பியிருக்கிறேன்?” உள்ளடக்கிய அளவிலான ஒருவித கோபமும் கெஞ்சலும் கலந்த தொனியில் எழுந்த என் கேள்விக்கு மௌனமே பதில்.

அந்த மதிய நேரத்தில் சுற்றிலும் பளிங்கு நிசப்தம். நோட்டுப்புத்தகத் தாள்கள் புரட்டப்படும் ஓசை அறையெங்கும் ஓங்கரித்தது.

_”முத்து முத்தாய் எத்தனை அழகான கையெழுத்து! பார்த்தாயா சுதா!”

அந்தக் குரலில் ஒரு தழுதழுப்பு தளும்பி வழிந்தோடியது. பளிச்சென்று புதிர்முடிச்சவிழ்ந்ததாய் ‘அட! பாரதியின் கையெழுத்தை நேரில் தரிசிக்கத் தான் இந்த மனிதர் இத்தனைப் பிரயத்தனப்பட்டு இங்கே வந்திருக்கிறார்!’ என்பது புரிந்தது! அங்கே, அந்த வேளையில் கூடு விட்டு கூடு பாய்தல்போல் ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது!

வெளியாளாய் நின்று வேடிக்கைப் பார்க்கத்தான் முடிந்தது அன்று….

ஆனால், அதன்பிறகு வந்த நாட்களில், உள்ளாளாகிவிட்ட நிலைபோல் ஒன்றில் மூச்சுத் திணறும் நேரமெல்லாம், மீண்டும் ‘மியூஸிய’த்திற்குச் செல்லவேண்டும்போல் தோன்றுகிறது….! பார்க்கவேண்டும் பாரதியின் முத்துமுத்தான கையெழுத்தை…..! அந்தக் கையெழுத்தைக் கொண்டு ‘கண்ணன் மனநிலையைக் கண்டுவரச் சொன்னவனை…..! ‘ஆசை முகம் மறந்து போச்சே…..’ என்று ஆற்றாமையோடு அங்கலாய்த்தவனை…! ‘யாதுமாகி நின்றாய் காளீ! என்று கொண்டாடியவனை…! ‘மோகத்தைக் கொன்றுவிடு, அல்லால், என் மூச்சை நிறுத்திவிடு!” என்று நெக்குருகிக் கேட்டவனை….! நிறையன்பின் ஒவ்வொரு அணுக்கணத்தையும் நிரந்தரமாக்கியவனை….!


அநாமிகா’ (லதா ராமகிருஷ்ணன்)
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue 7 Jun 2016 - 14:22

கெட்டவார்த்தைகள் இல்லாமல் இனி என் வாழ்க்கை….
------
கற்றது கையளவு; கல்லாதது கடலளவு…. பழமொழி சரியா, தவறா – இந்தக் கேள்வி அவசியமா, அனாவசியமா – அவசியம் அனாவசியமெல்லாம் highly relative terms….. எனவே, இந்த ஆராய்ச்சிக்குள் இப்பொழுது நுழையவேண்டாம்….. பின், எப்பொழுது? எப்பொழுது இப்பொழுது….? இப்பொழுது எப்பொழுது…. இப்பொழுது இப்போது – எது ‘அதிக’ சரி….? எப்போது, எப்போதும்…. ஒரு ‘ம்’இல் எத்தனை அர்த்தமாற்றம்….

ஹா! நினைவுக்கு வந்துவிட்டது. ஒரு பிறவிகளிலான பல பிறவிகளாய் நீண்டுபோகும் வாழ்க்கையில் நாலாம் வயது நிகழ்வுகள் இந்த நாற்பத்திநாலாம் வயதின் நினைவில் மீண்டும் தட்டுப்படுவதேயில்லை என்றாலும் நேற்று முன் தினம் நடந்ததுகூட நினைவிலிருந்து நழுவப் பார்ப்பது உண்மையிலேயே கொடுமைதான். ‘கொடுமை’ என்ற வார்த்தையை விட ‘வன்முறை’ கூடுதல் சிறப்புவாய்ந்ததாக இருக்கக்கூடுமோ….. கூடலாம்…. ஆம் என்றால், எடைக்கல் எது? அளப்பவர் யார்? குறைவின், கூடுதலில் நிர்ணயகர்த்தா அல்லது அவர்களின் பன்மை யார் யார்….? சே, அங்கே நிர்ணயிக்கப்பட்டதுபோல், உண்மையிலேயே பேதையாக இருந்தால் ( மனதில் அடிக்கடி ஒரு ‘குதிரைவால்’ பின்னல் போட்ட குட்டிப்பெண் அரங்கேறியவாறு இருப்பதுண்டு என்றாலும்) அது நிச்சயம் ஒரு blessing in disguise ஆகத்தான் இருக்கும் என்று படுகிறது.

ஆனால், நான் பேதையில்லை என்னும்போது அதைப் பிறருக்குப் புரியவைக்கவேண்டியது என் பொறுப்பல்லவா? பொறுப்பாவது, பருப்பாவது – எல்லாம் வெறும் பேச்சு என்று யாராவது எடுத்துரைக்க, அந்த வார்த்தையையும் என்னுடைய களஞ்சியத்திலிருந்து வீசியெறிய வேண்டிவரலாம். வார்த்தைகளைத் தவிர வேறு சேமிப்பில்லாத நிலையில் அவற்றை அத்தனை அன்பும் அந்நியோன்யமுமாகப் பொத்திப் பொத்திப் பராமரித்துவந்து இன்று பறிகொடுக்கவேண்டிவந்தால் மனம் அநாதரவாய் உணரத்தானே செய்யும்…. நிராதரவுக்கும், அனாதரவுக்கும் நூலிழை வித்தியாசம் உண்டுதானே! ‘வின்ஸ்ல்ப்ப்’விடம் கேட்டால் ஒவ்வொன்றுக்கும் பத்துப் பத்து அர்த்தம் தரக்கூடும். (குழல் _ துளையுடைய பொருள், ஊதுகுழல், இசைப்பாட்டு, மயிர்க்குழற்சி, பெண்மயிர், உட்டுளை, யோனி). ஆனால், இத்தனை வருடங்களில் அவற்றின் நேரிடையான, ஒற்றை அர்த்தத்தை மட்டுமே தெரிந்துவைத்திருக்கிறோம் என்றிருக்கையில் அதை எடுத்துரைப்பதும் ‘வன்முறை’ என்றால், தெரிந்ததை விட்டுக்கொடுத்துவிடவேண்டியதுதானா? எல்லாவற்றிற்குமாய் துக்கம் தொண்டையை அடைத்தது.

‘அன்பு, அந்நியோன்யம், துக்கம்…. ஹா! பேதாய்! இந்த வார்த்தைகளின் பொதுவான அர்த்தத்திலேயே கூவம் எருமையாய் உழன்றுகொண்டிருக்கும் பெப்பேரிளம்பெண்ணே! இதோ, இப்பொழுதே உன் போக்கை மாற்றிக்கொள்…. இன்றேல், ‘பேதாய்’ என்ற விளியின் இடை உடைந்து நீ பேயாகிவிடவும் கூடும் – எங்கள் மடைதிறந்த கணிப்பில்…. ‘என்று நாலா பக்கங்களிலிருந்தும் நாலுவித தொனிகளில் அசரீரி கேட்டவண்ணமிருக்க, சற்று அச்சமாகத்தான் இருக்கிறது.

ஹா! இனி ‘அன்பு’க்கு பதில் ‘அம்பு’. அம்பு என்பது எல்லாவகையிலேயும் வன்முறைக்குக் குறியீடாகிவிடப் பொருத்தமாயிருப்பதில் சிறுவட்டத்திற்குள்ளான குறுவட்டத்திற்குள் இனி நான் இதம்பதமாய்ப் பொருந்திவிடுவேன்!

அந்தக் கூட்டத்திற்குப் போன பிறகுதான் ‘கற்றது கையளவு’…. என்ற பழமொழியின் முழு அர்த்தமும் புரிந்தாற்போலிருந்தது. என்னதான் இருந்தாலும் ‘நாற்பத்ஹ்டி நாலாவது’ வயதில் இப்படிச் சில அரிச்சுவடிகளைக் கற்கவேண்டி வந்ததில் சற்று கலக்கமாகத்தான் இருக்கிறது. ஆனால், கல்விக்குக் காலநேரம் உண்டா என்ன?

‘கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ – ஆக, நான் கசடறக் கற்றுக்கொண்டுவிட்டது உண்மையென்று காட்ட அதன்படி நடக்கவேண்டியது அடிப்படைத் தேவையாகிறது. துணிந்துவிட்டேன். என்னுடைய சொற்பேழையிலிருந்து இரண்டு  வார்த்தை முத்துக்களை – வேண்டாம், ‘முத்து’ என்பதும் much abused சொல்தான் – எனவே, இதை ‘வெத்து’ என்று மாற்றிச் சொன்னால் பாந்தமாயிருக்கும். ‘வெத்து’ என்பதில் ‘வெறுமை’ என்ற ஒரு எதிர்மறைப் பொருள் நேரிடையாகவும், கரந்தும் சுரப்பதால் இரண்டு ‘வார்த்தைவெத்துக’ளை உதறித் தள்ளிவிட ஏகமனதாய் தீர்மானித்துவிட்டேன். When you are in Rome, be a Roman….. ரோமனை ஓமன் ஆக்கினால்…. வேண்டாம், முதலில் நம் தமிழ். பிறகு மற்ற மொழிகளைப் பார்த்துக்கொள்ளலாம். முப்பது நாளில் கற்றுக்கொள்ளும் ப்ரெஞ்சு, ஜப்பானிய, மலையாள, துளு, கிரேக்க, லத்தீன் மொழிகளில் நம் பிரயத்தனமெதுவுமில்லாமலே அன்பு அம்பாகிவிடுவதும், அக்கறை சர்க்கரையாகிவிடுவதும் நடந்தேறிவிடும்தான். ஆனாலும், அக்கறைக்கு சர்க்கரை என்பதுதான்  சற்று உதைக்கிறது. சர்க்கரை இனிப்பான பொருள். இனிப்புக்கும், வன்முறைக்கும் தூரத்து உறவு இருக்க வழியுண்டுதான் என்றாலும்கூட, அக்கறைக்கு சர்க்கரை பதிலியாக வருவதில் அத்தனை இணக்கமில்லை. ரத்தக்கறை என்று போட முடிந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அக்கறைக்கும், ரத்தக்கறைக்கும் இடையே ஒலிநயம் இடறுகிறது. நாணயத்திற்கு ஆணவத்தை பதிலியாக்கினால்… ஆனால், ‘ய’ வேறு, ‘வ’ வேறு… உண்மை – எல்லாமே, எந்நாளுமே வேறுவேறு தான்….. துக்கம் என்பதற்கு பதிலாய் இனி ‘கக்கம்’ என்று பழகினால்…. இல்லை, துக்கத்தின் விரிவு கக்கத்திற்குள் குறுகிவிடலாகாது….

ஹா! சிறுவட்டத்தின் குறுவட்டத்திற்குள் கச்சிதமாய் என்னைப் பொருத்திக்கொள்ளத்தான் எத்தனை முனைப்பு என்னிடம்…. ஆனால், இரு பத்து வருடங்களாக, ஆத்மார்த்தமாக சிறிய மூர்த்தியின் பெரிய கீர்த்தியைக் கண்டுணர்ந்து இந்த கிரகத்திற்குள்ளாகவே சுற்றிச் சுற்றி வந்து இப்பொழுது வெறும் இரண்டு வார்த்தைகளால் நான் விரட்டியடிக்கப் பட்டுவிடலாகுமா? கூடாது…. யுரேகா! ‘பொறுப்பு’ என்பதற்கு பதிலாய் இனி ‘வெறுப்பு’ என்று பிரயோகிப்பதுதான் சரி. பொறுப்பு என்பதை relative term என்று உரைப்பவர்கள் இருக்கலாம். ஆனால், வெறுப்பை அப்படி யாரும் துண்டமிட முடியாது! வீடளாவிய வெறுப்பு, ஊரளாவிய வெறுப்பு, நாடளாவிய வெறுப்பு, உலகளாவிய வெறுப்பு, பிரபஞ்சமளாவிய வெறுப்பு என்று அது பல்கிப் பெருகிக்கொண்டேதான் போகுமே தவிர, பின்னமாகாது!

’அன்பு’ ‘அம்பா’கி, ‘பொறுப்பு’ ‘வெறுப்பா’கிவிட்டதில் மனதிற்குள் ஒரு ஆசுவாசம் பரவுகிறது. இனி எனக்கு பாசத்திற்கும், நேசத்திற்கும் பஞ்சமில்லை. பரஸ்பரம் ஒருவர் மேலொருவர் கல்லெறிந்துகொண்டும், கண்களைத் தோண்டிவிட்டுக்கொண்டும் பரிவுறவாடிக்கொள்ளலாம்! புனர்ஜென்மமெடுத்துவிட்டேன் நான்! ‘பவர் பேர்ள்ஸ்’ சோப்புக்கட்டியால் என் மொழிப்பிரயோகத்திலான அழுக்குகளையும், கறைகளையும் அறவே களைந்துவிட்டேன்!

இனி, பரிவர்த்தனையில் என் புதுச் சொல்லைப் பழகவேண்டும்……

“அம்பே சிவம்” என்றேன்.

“அப்படியானால் நீ அப்துல் கலாமை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கலாம் என்கிறாயா?”

அகிம்சை இங்கே ஒரு செயல் உத்தியாக இருந்த சமயத்தில் ஆயுதத்தை நம்பிய கேப்டன் லஷ்மியின் ஆதரவாளர்கள், இன்று நாம் விரும்புகிறோமோ இல்லையோ போர் என்பது இன்றைய நடப்புண்மை என்பதை நினைத்துப் பார்க்க மறுப்பவர்களாய் கலாமை உலக பயங்கரவாதிகள் சங்கத் தலைவராக்கிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று எண்ணியபடி,

“அவர் ஒரு ‘வெறுப்பு’ வாய்ந்த மனிதர் தானே”, என்றேன்.

“பார்த்தாயா! நீயே சொல்கிறாய். பிறகு, அவரை ஜனாதிபதியாக்கலாம் என்கிறாயே”, என்று கொக்கரித்த, மொழிரீதியான அந்த ’வெறுப்பை’ ’பொறுப்பா’ய் புரிந்துகொள்ளாத பிற்போக்குவாதியைப் பரிதாபத்தோடு பார்த்து அங்கிருந்து அகன்றேன்.

அம்பும், வெறுப்பும் கூடிய உறக்கத்தில் உதித்த கனாவில் நான் ஒரு வனாந்திரத்தில் கிடக்க, என்னைச் சுற்றிலும் ‘வெத்து’ வார்த்தைகள் நத்தைகளாய் ஊர்ந்தவண்ணம். நான் இத்தனை காலம் ஊட்டச்சத்தாக என்னுள் பொத்திப்பொத்திப் பாதுகாத்துவந்த அந்த, இன்றைய நிலவரப்படியான ‘கெட்ட’ வார்த்தைகள் தத்தித் தடுமாறும் குழந்தைகளாய் என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி, ‘குழந்தைகளை விற்ற கயவர்களை நோகாமல்,  எங்களை போகச் சொல்கிறாயே – இது நியாயமா?’ என்று கண்களால் குறுக்குவிசாரணை செய்தவாறு கடலுக்குள் நடந்திறங்கி முங்கி மறைகின்றன.

ஆஃப்கானிஸ்தானத்திலும் சரி, அந்த நூற்றிப்பத்து அடுக்குமாடிக் கட்டிடத்திலும் சரி, எண்ணிறந்த தனிநபர்களின் குருதி பெருக்கித் துடித்துக்கொண்டிருக்கும் இதயங்கள் சில அராஜக உள்ளங்கைகளால் முறுக்கிப் பிழியப்பட்டு வெறும் தசைப்பொதிகளாகத் தங்கள் அடையாளம் தொலைந்துபோக, மொழியழிந்து விக்கித்துப்போய் மௌனவோலத்தில் கரிந்துபோகின்றன.

தூக்கிவாரிப்போட விழித்துக்கொள்ளும்போது நல்ல, கெட்ட வார்த்தைகளெல்லாம் என்னை தீரத் தாக்குவதுபோல் ஒரு தீவிர வலியில் உள்ளும், புறமும் துவளும்.

‘மந்திரமாவது சொல்’ என்ற வரி மனதிற்குள் சுவாதீனமாய் நுழைந்துகொள்ளும்.

வீட்டில், என்னுடைய மொழிசார் பிரயத்தனங்கள் தொடர்பான சிந்துபாத் அலைச்சல்கள் தெரியாததாய் பாட்டி ‘நான் ஒட்டுபத்து இல்லாமல் எத்தனை பாராமுகமாய் இருக்கிறேன்’, என்று மூக்குறிஞ்சினார்கள்.

“சத்தியமா, நான் அப்படிக் கிடையாது பாட்டி. என் மனசுலேயும் அம்பு இருக்கு. எனக்கும் வெறுப்பு இருக்கு.”

“பின்னே, இல்லாமலா? அதுதான் எப்படா என் மேல எறியலாம்னு சமயம் பாத்துக்கிட்டிருக்கே. மனசுல ‘அம்பை’த் தூக்கிவச்சுக்கிட்டு திரிஞ்சிக்கிட்டிருக்கே! உங்கிட்டே ‘வெறுப்பை’த் தவிர வேற என்ன இருக்கு?”

அவசர கால புத்தம்புது மொழி வகுப்பு ஒன்று நான் நடத்தினாலென்ன? ’வின்ஸ்லோ’ தமிழ் அகராதியில் அல்லது ‘ராட்லரி’ல், அல்லது ‘சிதம்பரம் செட்டியார் அகராதியில் ஒரு சொல்லுக்குத் தரப்பட்டுள்ள பல்வேறு பொருள்கள் பரிச்சயப்படுத்தப்படுவதும், அதோடு நில்லாமல், ஒரு சொல்லை அதன் பல பொருள்களில்  எதுவொன்றிலும் உபயோகிக்கும் உரிமைக்குக் குரல் கொடுக்கும் ஓர் அமைப்பையும் உருவாக்கலாம். மனிதர்களுக்கு இடையேயான தொடர்புறவாடல் பாழாகிவிடலாம் என்று யாரேனும் கூறலாம். ‘அது இப்பொழுது மட்டும் என்ன வாழ்கிறது?’ என்று எதிர்க்கேள்வி கேட்டால் போயிற்று. ‘வாழ் – பாழ்; வாசம் – நாசம்’….. சே, இந்தக் கேடுகெட்ட மனம் ஏன் வார்த்தைப் பொருளின் புத்துயிர்ப்புப் பணியிலும் இத்தகைய ஒலிநயத்தை நாடுகிறது? எல்லாம் பழக்கதோஷம். மனைவி, துணைவிக்கிடையிலேயே துல்லிய வித்தியாசத்தைக் காண முடிந்தவர்களிடம் இனி ‘தோல்வி’ என்ற வார்த்தைக்குப் பொருள் வெற்றி என்பதாகவும், பின்னதன் பொருள் தோல்வி என்பதாகவும் _ ஐயோ, மறுபடியும் antonyms and synonymsக்கு இடையில் தஞ்சம் புகும் என்னைக் கண்டால் எனக்கே ‘பொறுப்பாக’ இருக்கிறது.  ஆனால், பொறுப்பு வெறுப்பானால் வெறுப்பு பொறுப்பாகிவிடும் என்று யார் வரையறுத்தார்கள்? வரையறுப்பதும் நானே – அதை மறுதலிப்பதும் நானே…. நான் என்றால் நீ. நீ என்றால் நான். ஐயோ, இது சினிமாக் கதாபாத்திரங்களின் அம்புபோல் இருக்கிறது. அட, இப்பொழுதுதான் அது எனக்கு உறைக்கிறது. அம்புக்குறி – மன்மத பாணம்! ஆக, அம்பு அன்புதான்! ஹா! குறைந்தபட்சம் இரண்டு கெட்ட வார்த்தைகளையாவது விட்டொழிக்கும் போக்கில்தான் எத்தனையெத்தனை ‘யுரேக்காக்கள்’ கொட்டிக்கிடக்கின்றன! அப்புறம், அது யார் கவிதை…? ‘உன்னை நான் பொருட்படுத்துவதால்தான் உன் மீது வெறுப்பு கொள்கிறேன்….’ பொருட்படுத்துவதால் என்பது ஒருவித பொறுப்பேற்பு. எனவே, வெறுப்பு பொறுப்புதான்!

இதேவேகத்தில் போனால் ஒருவேளை நான் புரட்சியாளராகப் பகுக்கப்பட்டு ஒளிந்துவாழவேண்டிவரலாம். அதற்காய் இப்பொழுதே ஒரு கட்டு வெள்ளைத்தாள் வாங்கி பத்திரப்படுத்திக்கொள்கிறேன். அடுத்த வருடம் இதே நேரத்தில் ஒரு புத்தம்புது ’மொழிப்பொருள் அகராதி’ தயாராகிவிடும்! அதற்கடுத்த வருடம் போதிய நிதிவசதி கிடைத்தால் ஒரு புத்தம்புது மொழிப்பொருள் பயன்பாட்டுப் பல்கலைக்கழகம் நிறுவிவிட முடியும்! இனியான நல்ல வார்த்தைகளைத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டுமானால் அகராதியை துருவித் துழாவும் சிரமம் ஏற்படக்கூடும். ஆனால், கெட்ட வார்த்தைகளை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்! இன்றைய நல்ல வார்த்தைகள் என்ற பிரிவில் அவைகளெல்லாமே அடங்கிவிடும்!

அந்த அகராதி, பல்கலைக்கழகம், அன்னபிறவற்றின் உந்துசக்தியாய் விளங்கும் அறக்கட்டளை ‘அம்பும் வெறுப்பும்’ என்ற பெயரில் இயங்கிவரும்.

எனக்கு ’நல்லது’, ’அல்லது’ பிரித்துப் பார்க்கக் கற்றுக்கொடுத்ததன் விளைவாய் என் ‘அம்பு’க்கு உரித்தானவர்களுக்கு என்றென்றும் ‘வெறுப்போ’டு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன் நான்.

அநாமிகா
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum