சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Sat 21 Jul 2018 - 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

‘நாமெல்லாம் சகோதரர்கள்’: முஸ்லிம் அகதிகளின் கால்களைக் கழுவிய போப்

Go down

Sticky ‘நாமெல்லாம் சகோதரர்கள்’: முஸ்லிம் அகதிகளின் கால்களைக் கழுவிய போப்

Post by rammalar on Sat 26 Mar 2016 - 10:00


-
 
கேசில்நுவோ டி போர்ட்டோவில் கால் கழுவும்
புனிதச் சடங்குக்குப் பிறகு அகதி ஒருவரின் காலை
முத்தமிடும் போப். | படம்: ராய்ட்டர்ஸ்.
—————————————

‘நாம் வேறுபட்ட பண்பாடுகள், மதங்களைச் சேர்ந்தவர்கள்
ஆனால் நாம் சகோதரர்கள், நாம் அமைதியாக வாழ
விரும்புகிறோம்’ என்று கூறியுள்ளார் போப் பிரான்சிஸ்.

முஸ்லிம், கிறித்துவ, இந்து அகதிகள் கால்களைக் கழுவி
முத்தமிட்ட போப், நாம் அனைவரும் ஒரே கடவுளின்
குழந்தைகள் என்றார். பிரஸல்ஸ் தாக்குதல்களுக்குப் பிறகு
முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு அதிகரித்து வருவதை
அடுத்து போப்பின் இந்தச் சகோதரத்துவ செய்கை பெரும்
வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரோமுக்கு வெளியே கேசில்நுவோ டி போர்ட்டோவில்
புகலிடம் நாடி வந்தவர்களிடத்தில் பேசிய போப், பிரஸல்ஸ்
தாக்குதலை ‘போர்ச் செய்கை’ அல்ல என்று மறுத்தார்.

புனித வெள்ளியை முன்னிட்டு அகதிகள் கால்களை போப்
கழுவியது, ஏசுநாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு
முன்னதாக அபோஸ்தலர்கள் கால்களை சேவையின்
செய்கையாக கழுவியதன் மறுசெயலாக்கமாக கருதப்படுகிறது.

அதாவது பிரஸல்ஸ் தாக்குதல் ‘அழிவின் செய்கை’
என்பதற்கு மாற்றாக புலம்பெயர்ந்தோர் கால்களைக்
கழுவியதன் மூலம் சகோதரத்துவத்தை உணர்த்தும் மாற்றுச்
செயலாக கருதப்படுகிறது.

அவர்களின் கால்களைக் கழுவ போப் மண்டியிட்டபோது
அகதிகளில் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். புனித நீரால்
அவர்களது கால்களைக் கழுவி சுத்தம் செய்த போப் கால்களை
முத்தமிட்டார். இந்த நிகழ்ச்சியில் 4 பெண்களும் 8 ஆண்களும்
கலந்து கொண்டனர். ஆண்களில் நைஜீரியாவிலிருந்து
4 கத்தோலிக்கர்களும், மாலி, சிரியா, பாகிஸ்தான் ஆகிய
நாடுகளைச் சேர்ந்த 3 முஸ்லிம்களும் இந்தியாவிலிருந்து
சென்ற ஒரு இந்துவும் அடங்குவர்.

சிறப்பு வழிபாடு நடைபெற்றவுடன் ஒவ்வொரு அகதியையும்
போப் வாழ்த்தினார், செல்பிக்களும் எடுத்துக் கொள்ளப்பட்டன.

பொதுவாக கால்கள் கழுவும் புனிதச் சடங்கில் ஆண்கள் மட்டுமே
கலந்து கொள்வர். பாதிரியார்கள் பலர் மரபு ரீதியாக
12 கத்தோலிக்க ஆண்களுக்கே இந்த சடங்கை நிகழ்த்துவர்.

ஆனால் போப், தான் பதவியேற்ற 2013-ம் ஆண்டில், சில
வாரங்களிலேயே கத்தோலிக்கர்களுக்கு அதிர்ச்சியளிக்கும்
விதமாக சிறார் முகாமுக்குச் சென்று அங்கு பெண்கள் மற்றும்
குழந்தைகளுக்கு இதே புனிதச் சடங்கை செய்தார்.

தற்போது முஸ்லிம் அகதிகள், பெண்கள், இந்து என்று அவரது
சடங்கு புதிய பரிமாணம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

———————–
தமிழ் தி இந்து காம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum