சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» விவசாயி ...
by ராகவா sri Today at 21:31

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Today at 21:28

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Today at 19:32

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Today at 19:29

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Today at 19:28

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 19:25

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Today at 18:30

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Today at 18:25

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Today at 18:20

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Today at 18:19

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Today at 18:19

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Today at 18:19

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Today at 18:18

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Today at 18:02

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Today at 18:01

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by rammalar Today at 17:55

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by rammalar Today at 17:55

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Today at 17:54

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Today at 17:53

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:51

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:50

» வாரிசு – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:49

» ஜோசியம் – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:48

» இடக்கை – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:46

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by நண்பன் Today at 11:43

» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by நண்பன் Today at 11:43

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Tue 14 Aug 2018 - 22:05

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Tue 14 Aug 2018 - 21:29

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Tue 14 Aug 2018 - 21:28

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Tue 14 Aug 2018 - 21:28

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Tue 14 Aug 2018 - 21:27

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Tue 14 Aug 2018 - 21:26

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Tue 14 Aug 2018 - 21:20

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Tue 14 Aug 2018 - 21:18

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Tue 14 Aug 2018 - 21:17

.

கேஎஃப்சி, டோமினோஸ் உணவக பிரட்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்?

Go down

Sticky கேஎஃப்சி, டோமினோஸ் உணவக பிரட்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்?

Post by rammalar on Tue 24 May 2016 - 13:12

கேஎஃப்சி, டோமினோஸ், பிட்சா ஹட், சப்வே, மெக்டொனால்ட்ஸ்
உள்ளிட்ட பிரபலமான உணவகங்களில் பயன்படுத்தப்படும்
பிரட்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதாக
அறிவியல், சுற்றுச்சூழல் மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தவிர பிரிட்டானியா, ஹார்வெஸ்ட் கோல்ட் நிறுவன
பிரட்களிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள்
இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
– இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்
துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் முக்கிய இடங்களில் செயல்படும் கேஎஃப்சி உள்ளிட்ட
உணவங்களில் இருந்தும், கடைகளில் விற்பனை செய்யப்படும்
பிரட்களில் இருந்தும் மொத்தம் 38 மாதிரிகள் எடுக்கப்பட்டன.
இதில் 84 சதவீத பிரட்களில் அதாவது 32 மாதிரிகளில் பொட்டாசியம்
புரோமேட், பொட்டாசியம் அயோடேட் ஆகிய வேதிப்பொருள்கள்
கலந்துள்ளன. இவை பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

ஆனால், இந்தியாவில் இந்த வேதிப்பொருள்கள் கலந்த பிரட்கள்
தாராளமாக கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை
சாப்பிடுபவர்களுக்கு தைராய்டு பிரச்னை முதல் புற்றுநோய்
வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சாண்ட்விச் பிரட், வொயிட் பிரட், பாவ், பன் ஆகியவற்றில்
அதிக அளவில் கேடு விளைவிக்கும் வேதிப்பொருள் உள்ளதும்
ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த அதிர்ச்சிகர தகவல் வெளியானதை அடுத்து,
இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய சுகாதாரத் துறை
அமைச்சர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார். விசாரணை
அறிக்கையின் அடிப்படையில் உடனடியாக அடுத்த கட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

எனினும், பிரிட்டானியா, கேஎஃப்சி, டோமினோஸ்,
மெக்டொனால்ட்ஸ், சப்வே ஆகியவை தங்கள் தயாரிப்புகளில்
கேடு விளைவிக்கும் வேதிப்பொருள்கள் இல்லை என்று மறுப்புத்
தெரிவித்துள்ளன.

இந்த ஆய்வறிக்கை வெளியானதை அடுத்து, உணவுப்பொருள்களில்
கலக்க அனுமதிக்கப்பட்டுள்ள வேதிப்பொருள்களின் பட்டியலில்
இருந்து பொட்டாசியம் புரோமேட்டை நீக்க இருப்பதாகவும்,
பொட்டாசியம் அயோடேட் கலக்கும் அளவைக் குறைத்து
நிர்ணயிக்க இருப்பதாகவும் இந்திய உணவுப் பாதுகாப்பு,
தரநிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) அறிவித்துள்ளது.

———————————–
தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கேஎஃப்சி, டோமினோஸ் உணவக பிரட்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்?

Post by Nisha on Tue 24 May 2016 - 14:44

எல்லா பாஸ்பூட் உணவுகளிலும் இதே நிலை தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18834
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கேஎஃப்சி, டோமினோஸ் உணவக பிரட்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்?

Post by பானுஷபானா on Mon 30 May 2016 - 16:33

எல்லாமே விஷமென்றால் எதைத் தன் சாப்பிடுவது ?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16732
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: கேஎஃப்சி, டோமினோஸ் உணவக பிரட்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்?

Post by Nisha on Mon 30 May 2016 - 23:08

பட்டினி தான் கிடக்க வேண்டும்,


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18834
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கேஎஃப்சி, டோமினோஸ் உணவக பிரட்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்?

Post by பானுஷபானா on Tue 31 May 2016 - 18:32

Nisha wrote:பட்டினி தான் கிடக்க வேண்டும்,

அது சரி.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16732
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: கேஎஃப்சி, டோமினோஸ் உணவக பிரட்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்?

Post by நண்பன் on Tue 31 May 2016 - 19:30

சாப்பாட நினைத்தாலே வெறுப்பா இருக்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93916
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கேஎஃப்சி, டோமினோஸ் உணவக பிரட்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum