சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Today at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நடிகை ஜோதிலட்சுமி நினைவலைகள்!

Go down

Sticky நடிகை ஜோதிலட்சுமி நினைவலைகள்!

Post by rammalar on Sat 27 Aug 2016 - 14:15


-


பெரிய இடத்துப் பெண்’ திரைப்படம் மூலம் தமிழில் 
அறிமுகமான ஜோதிலட்சுமி தமிழ்,தெலுங்கு,கன்னடம்,
மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 
சுமார் 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து 
தனது நடனம் மற்றும் நடிப்பின் மூலம் ரசிகர்களின் 
உள்ளம் கவர்ந்த நடிகையானார்.

எழுபதுகளில் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் தொடர்ந்து 
ஜோதிலக்‌ஷ்மிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு பல ஹிட் பாடல்கள் 
அவரது நடனத்துடன் வெளிவந்தன. நடிப்பு மட்டுமன்றி இவர் 
தனது சகோதரியும் நடிகையுமான  விட்டலாச்சார்யா படப் 
புகழ் ஜெயமாலினியுடன் இணைந்து படத்தயாரிப்பிலும் 
ஈடுபட்டிருந்தார். 

இவரது நடிப்பில் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரிட்டாக இருக்கும் 
சில பாடல்களில் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் வரும் 
’கட்டொடு குழலாட ஆட’ பாடலும், அடிமைப்பெண் திரைப்படத்தில் 
இடம் பெறும் ’காலத்தை வென்றவன் நீ’ பாடலையும் குறிப்பிட்டுச் 
சொல்லலாம்.

எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் முதலில் இரண்டாவது கதாநாயகியாக 
அறிமுகமானாலும் பின்னாட்களில் கவர்ச்சி நடிகையாக மாறும் 
சூழல் வந்த போதும் மனம் கலங்காது  தைரியமாக தனது வாழ்வின் 
சவாலை ஏற்றுக் கொண்டு செய்யும் தொழிலே தெய்வம்
என்பதற்கிணங்க  வெற்றிகரமான நடிகையாகத் திகழ்ந்தவர் நடிகை 
ஜோதிலட்சுமி.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நடிகை ஜோதிலட்சுமி நினைவலைகள்!

Post by rammalar on Sat 27 Aug 2016 - 14:15

நடிப்பு தவிர தங்களது தன்னம்பிக்கை மற்றும் திறமைக்காக 
ஜோதிலட்சுமி, ஜெயமாலினி சகோதரிகளைத் தமிழ் திரையுலகின் 
ஜாம்பவான்கள் பலர் பல சூழல்களில் பாராட்டியுள்ளனர் என்பது 
குறிப்பிடத்தக்கது.

அவரது படங்களில் பெரும்பாலானவற்றில் ஐட்டம் டான்சராக 
தோன்றினாலும் நடிகை ‘சில்க் ஸ்மிதா’ போல ஜோதிலக்ஷ்மியும் 
பெண்களுக்கும் பிடித்த நடிகையாகவே நீடித்தார். 

சில்க் ஸ்மிதாவின் வாழ்கைக் கதை ‘டர்ட்டி பிக்ச்ஸர்’ என்ற பெயரில் 
இந்தியில் வெளியானதைப் போல தெலுங்கில் இயக்குனர் 
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகை ஷார்மி நடிக்கும் ‘ஜோதிலட்சுமி’ 
எனும் திரைப்படம் ஜோதிலக்ஷ்மியின் வாழ்க்கை சம்பவங்கள் 
சிலவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் 
கசிகின்றன. 

எழுபது, எண்பது கால கட்டங்களில் தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக
கோலோச்சி விட்டு பின்னர் சில காலம் தமிழில் அவரை காண
முடிந்ததில்லை.

மறுபடியும் அவரை திரைக்கு அழைத்து வந்தவர் இயக்குனர் பாலா. 
அவரது ‘சேது’ திரைப்படத்தில் ஜோதிலக்ஷ்மியின் நடனத்துடன் 
கூடிய “கானாக் கருங்குயிலே’ எனும் பாடல் இப்போதும் சூப்பர் ஹிட் 
லிஸ்டில் இருக்கிறது. 

ஜோதிலட்சுமி பழம் பெரும் நடிகை டி.ஆர். ராஜகுமாரியின் உறவினர் 
என்பதும் நடிகை ஜோதிமீனா ஜோதிலக்ஷ்மியின் மகள் என்பதும் 
உபரித் தகவல்கள்.

சமீப காலமாக சன் தொலைக்காட்சியில் பிற்பகலில் ஒளிபரப்பப்படும்
“வள்ளி’ தொடரில் ஜோதிலட்சுமி நடித்துக் கொண்டிருந்தார். 
திரையுலகில் அறிமுகமான காலத்தில் இருந்து இன்று அவரது இறப்பு 
வரையிலும் ஒரே விதமான தோற்றப் பொலிவில் இருந்ததால் வயதான 
பின்னரும் அவரது சுறு சுறுப்பான நடிப்பு அனைவரையும் கவர்வதாகவே 
இருந்தது. 

இந்த நிலையில் அவரது திடீர் மரணம் ஜோதிலட்சுமி ரசிகர்களை 
பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
-----------------------------------------

By கார்த்திகா வாசுதேவன்

தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum