சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» புன்னகை...!
by rammalar Today at 3:59

» மாடு ஷூகர் பேஷண்டும்மா...!!
by rammalar Today at 3:58

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:42

» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by பானுஷபானா Yesterday at 13:53

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Yesterday at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Yesterday at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Yesterday at 6:42

» காதல் என்பது…
by rammalar Yesterday at 6:41

» காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Yesterday at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Yesterday at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Yesterday at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 24 Sep 2017 - 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Sun 24 Sep 2017 - 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Sun 24 Sep 2017 - 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Sun 24 Sep 2017 - 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Sun 24 Sep 2017 - 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Sun 24 Sep 2017 - 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Sun 24 Sep 2017 - 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat 23 Sep 2017 - 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

.

சரிவர பணியாற்றாத மக்கள் பிரதிநிதிகளை (எம்.பி.,எம்.எல்.ஏ.) திருப்பி அழைக்க வகை செய்யும் மசோதா

View previous topic View next topic Go down

Sticky சரிவர பணியாற்றாத மக்கள் பிரதிநிதிகளை (எம்.பி.,எம்.எல்.ஏ.) திருப்பி அழைக்க வகை செய்யும் மசோதா

Post by rammalar on Wed 1 Mar 2017 - 17:31

சரிவர பணியாற்றாத மக்கள் பிரதிநிதிகளை (எம்.பி.,எம்.எல்.ஏ.) 
திருப்பி அழைக்க வகை செய்யும் மசோதாவை மக்களவையில் 
பாஜக எம்.பி. வருண் காந்தி கொண்டு வந்துள்ளார்.

1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில், மக்களால் 
தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளை (எம்.பி., எம்.எல்.ஏ.) 
வாக்காளர்கள் திருப்பி அழைத்துக் கொள்ள வழிவகை 
செய்யப்படவில்லை.

இந்நிலையில், பாஜக எம்.பி.யும், மத்திய அமைச்சர் 
மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தி மக்களவையில்
தனிநபர் மசோதா பிரிவின்கீழ் ஒரு மசோதாவைக் கொண்டு 
வந்துள்ளார்.

அதில் அவர், உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்கள் 
பிரதிநிதிகளின் செயல்பாட்டின்மீது திருப்தியில்லை எனில், 
அவர்களை திருப்பி அழைத்துக் கொள்ளும் உரிமை மக்களுக்கு 
அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய வாக்காளர்களுக்கு இதேபோன்ற உரிமையை அளிக்கும் 
வகையில் 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில்
திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் 
கொண்டுள்ளார்.

அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்ட 
தொகுதியில் வசிக்கும் வாக்காளர்களில் 75 சதவீதம் பேர், அந்தப் 
பிரதிநிதி தேர்வு செய்யப்பட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவரின்
செயல்பாடு திருப்தியளிக்கவில்லை என்று கருதும்பட்சத்தில், 
அவரை திருப்பி அழைத்துக் கொள்ள உரிமை வழங்க வேண்டும். 

சம்பந்தப்பட்ட தொகுதியில் வசிக்கும் எந்தவொரு வாக்காளரும், 
சட்டப் பேரவைத் தலைவர் அல்லது மக்களவைத் தலைவரிடம் 
இதுதொடர்பான மனுவை அளிக்கலாம். ஆனால், அந்த மனுவில், 
குறிப்பிட்ட தொகுதியில் வசிக்கும் வாக்காளர்களில் 4-இல் ஒரு 
பகுதியினர் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.

அந்த மனு மீதான நம்பகத்தன்மையை பேரவைத் தலைவர்,
மக்களவைத் தலைவர் முதலில் உறுதி செய்வார். அதனையடுத்து, 
மனுவில் கையெழுத்திட்டிருக்கும் வாக்காளர்கள் உண்மையானவர்கள் 
தானா? என்பதை உறுதிப்படுத்துவதற்கு அதை தேர்தல் 
ஆணையத்துக்கு அவர் அனுப்பி வைக்க வேண்டும். வாக்காளர்களை 
தேர்தல் ஆணையம் உறுதி செய்தபிறகு, சம்பந்தப்பட்ட தொகுதியில்
10 இடங்களில் வாக்குப்பதிவு நடத்த வேண்டும்.

அந்த வாக்குப்பதிவில் பதிவாகும் 4-இல் 3 பங்கு வாக்குகள், மக்கள் 
பிரதிநிதிகளுக்கு எதிராக இருந்தால், அவரின் பதவி பறிக்கப்பட 
வேண்டும்.

இந்த முடிவு எடுக்கப்பட்ட 24 மணி நேரத்தில், அதை அறிவிக்கையாக 
பேரவைத் தலைவர் வெளியிட வேண்டும். பிறகு, அந்தத் தொகுதியில்
இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும்.

இந்த முறை மூலம், மக்கள் பிரதிநிதிகளுக்கு அநீதி இழைக்கப்
படுவதை தடுப்பதற்கும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் 
எடுக்கப்பட வேண்டும் என்று அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
---------------------------
தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12923
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum