சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» விவசாயி ...
by ராகவா sri Today at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Today at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Today at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Today at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Today at 16:58

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 16:55

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Today at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Today at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Today at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Today at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Today at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Today at 15:31

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by rammalar Today at 15:25

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by rammalar Today at 15:25

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Today at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Today at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:20

» வாரிசு – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:19

» ஜோசியம் – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:18

» இடக்கை – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:16

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by நண்பன் Today at 9:13

» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by நண்பன் Today at 9:13

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Tue 14 Aug 2018 - 19:35

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Tue 14 Aug 2018 - 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Tue 14 Aug 2018 - 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Tue 14 Aug 2018 - 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Tue 14 Aug 2018 - 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Tue 14 Aug 2018 - 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Tue 14 Aug 2018 - 18:47

.

வடகொரியாவின் மிரட்டலைத் தொடர்ந்து அமெரிக்க கப்பலுக்கு பாதுகாப்பு அளிக்க ஜப்பான் போர்க்கப்பல் விரைந்த

Go down

Sticky வடகொரியாவின் மிரட்டலைத் தொடர்ந்து அமெரிக்க கப்பலுக்கு பாதுகாப்பு அளிக்க ஜப்பான் போர்க்கப்பல் விரைந்த

Post by rammalar on Wed 3 May 2017 - 16:25

டோக்கியோ,

வடகொரியாவின் மிரட்டலைத் தொடர்ந்து அமெரிக்க 
கடற்படை கப்பலுக்கு பாதுகாப்பு அளிக்க ஜப்பான் போர்க்கப்பல் 
விரைந்தது.

போர் பதற்றம்

-
ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் ஆட்சி நடந்து வரும் வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் உள்ளார். அவர், தனது அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக எல்லையில் படைகளை குவித்து வைத்து இருக்கிறார். தென்கொரியாவுக்கு ஆதரவு கரம் நீட்டும் அமெரிக்காவையும் கிம் ஜாங் அன் அரசாங்கம் மிரட்டுகிறது.

தவிர, ஐ.நா.வின் எதிர்ப்பையும் மீறி அது அணுகுண்டு சோதனைகளை நடத்தி வருகிறது. அருகில் உள்ள மற்றொரு நாடான ஜப்பானை வம்புக்கு இழுக்கும் விதமாக அந்த நாட்டின் கடல் பகுதியில் ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்துவதையும் வடகொரியா அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. இதனால் அண்மைக்காலமாக இப்பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

அமெரிக்காவுக்கு மிரட்டல்

-
இதையடுத்து ஜப்பானிய கடல் பகுதியில் கார்ல் வின்சன் என்னும் விமானம் தாங்கி போர்க்கப்பலையும், ஒரு அதிநவீன நீர்மூழ்கி கப்பலையும் இப்பகுதிக்கு அமெரிக்கா அனுப்பி வைத்து உள்ளது. இந்த கப்பல்களில் உள்ள அமெரிக்க வீரர்கள் தென்கொரிய ராணுவத்தினருடன் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் எங்கள் எல்லைக்குள் நுழைந்தால் இந்த கப்பல்களை 
தூள் தூளாக்குவோம் என்று அமெரிக்காவுக்கு வடகொரியா 
பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

இந்த நிலையில் ஜப்பானிய கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு 
இருக்கும் கார்ல் வின்சன் உள்ளிட்ட அமெரிக்க போர் கப்பல்களுக்கு 
எரிபொருள் வினியோகம் செய்வதற்காக தனது கடற்படை கப்பல் 
ஒன்றை அமெரிக்கா அனுப்பி வைத்து இருக்கிறது.

ஜப்பான் கப்பல் விரைந்தது

-
இந்த கப்பலுக்கு வடகொரியாவால் ஆபத்து ஏற்படலாம் என்பதால் 
பாதுகாப்பு அளிப்பதற்காக ஜப்பான் அரசாங்கம் இசுமோ என்னும் 
போர்க்கப்பலை நேற்று அனுப்பியது. இது ஜப்பானின் மிகப்பெரிய
போர்க்கப்பல் ஆகும். 

நவீன போர் ஹெலிகாப்டர்களை கொண்ட இந்த கப்பல் ஜப்பானின் 
யோகோசுகா துறைமுகத்தில் இருந்து நேற்று புறப்பட்டுச் சென்றது.
-
இரண்டாம் உலகப் போருக்கு பின்பு எந்த போரிலும் ஈடுபடுவதில்லை 
என்பதில் ஜப்பான் அரசு உறுதியாக உள்ளது. அதேநேரம் தற்போதைய 
சூழ்நிலையை கருத்தில்கொண்டு ராணுவம் தனது விருப்பத்திற்கு 
ஏற்ப செயல்பட ஜப்பான் அரசு சட்ட விதிகளை திருத்தி உள்ளது. 

இந்த திருத்தம் செய்யப்பட்ட பிறகு இன்னொரு நாட்டின் கப்பலின் 
பாதுகாப்பிற்காக போர்க்கப்பல் ஒன்றை அனுப்ப ஜப்பான் எடுத்த 
முதல் நடவடிக்கை இதுவாகும்.

இசுமோ கப்பலில் உள்ள வீரர்கள் தேவைப்பட்டால் குறைந்தபட்ச 
ஆயுத பிரயோகத்தில் ஈடுபடுவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.
-
தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum