சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by ராகவா sri Yesterday at 19:37

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by ராகவா sri Yesterday at 19:36

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Yesterday at 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Yesterday at 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Yesterday at 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Yesterday at 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Yesterday at 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Yesterday at 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Yesterday at 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Yesterday at 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Yesterday at 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Yesterday at 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Yesterday at 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Yesterday at 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Yesterday at 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Yesterday at 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Yesterday at 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Yesterday at 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:09

.

அருவிகளில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Go down

Sticky அருவிகளில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Post by rammalar on Wed 30 Aug 2017 - 17:06

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா
பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 30, 2017, 05:15 AM

தென்காசி,

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த ஆண்டு ஆரம்பம் முதலே சீசன் போதுமானதாக இல்லை. அருவிகளிலும் இடைஇடையே தண்ணீர் அதிகமாக விழுவதும், பின்னர் குறைவாக விழுவதுமாக இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே இருந்தது.

வழக்கமாக ஆகஸ்டு மாதம் 15-ந் தேதியுடன் குற்றாலம் சீசன் முடிவுக்கு வந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட மாறுதலாக உள்ளது. அதாவது சீசன் காலங்களில் எல்லாம் தண்ணீர் குறைவாகவே விழுந்தது. சீசன் முடியும் தருவாயில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கடந்த 10 நாட்களாக குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று காலையில் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி விழுந்தது. ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். குற்றாலம் வந்திருந்த குறைவான சுற்றுலா பயணிகளும் பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி ஆகியவற்றில் ஆனந்தமாக குளித்துச் சென்றனர். வெள்ளப்பெருக்கு குறைந்ததும் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே குற்றாலம் மெயின் அருவிக்கரையில் பெண்கள் உடை மாற்றும் கட்டிடத்தின் மேல் பகுதியில் நேற்று காலையில் சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கிடந்தது. அந்த மலைப்பாம்பு வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தென்காசி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்த பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த பாம்பு அடர்ந்த காட்டுப்பகுதியில்

விடப்பட்டது
=
தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14246
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum