சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்

Go down

Sticky போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்

Post by rammalar on Tue 10 Oct 2017 - 4:57

சென்னை,
தீபாவளி போனஸ் குறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
-
பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில்
பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும்,
உற்சாகமும் அளிக்கும் வகையில், 2016–17ம் ஆண்டிற்கான போனஸ் 
மற்றும் கருணைத்தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015–ன்படி, போனஸ் பெற தகுதியான
சம்பள உச்சவரம்பு 21 ஆயிரம் ரூபாய் என மத்திய அரசால் உயர்த்தப்
பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் 10 ஆயிரம் ரூபாய் என இருந்த தகுதி
வரம்பைத் தளர்வு செய்து அனைத்து சி மற்றும் டி பிரிவு 
தொழிலாளர்கள் போனஸ் பெற வழிவகை செய்யப்பட்டது.

அதைப்போலவே தற்போது 21 ஆயிரம் ரூபாய் என்ற சம்பள 
உச்சவரம்பை தளர்வு செய்து அனைத்து சி மற்றும் டி பிரிவு 
தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

போனஸ் கணக்கிட ஏற்கனவே 3,500 ரூபாய் என இருந்த மாதாந்திர
சம்பள உச்சவரம்பு, திருத்திய போனஸ் சட்டம் 2015–ன்படி 7 ஆயிரம் 
ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் 2016–17ம் 
ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணை உதவித்தொகையை 
கீழ்க்கண்டவாறு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
-
* லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 
தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் 
ஒதுக்கக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீத 
போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத்தொகை என மொத்தம்
20 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.
-
* நட்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 
தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் குறைந்த
பட்ச போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம்
10 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.
-
தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகங்கள், 
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு பாடநூல்
கழகம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய 
தொழிலாளர்களுக்கு மொத்தம் 20 சதவீதம் போனஸ் மற்றும் 
கருணைத்தொகை வழங்கப்படும்.
-
கூட்டுறவு சங்கங்கள், அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட
கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் 
பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் 
உற்பத்தியாளர்கள் இணையம், கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் ஆகிய
நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 
அந்த நிறுவனங்கள் லாபம் ஈட்டியிருந்தால் 20 சதவீதமும்,
லாபம் ஈட்டவில்லை என்றால் 10 சதவீதமும் போனஸ் வழங்கப்படும்.
-
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் 
மற்றும் கழிவு நீரகற்று வாரிய சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு
10 சதவீதமும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சி மற்றும் டி பிரிவு 
பணியாளர்களுக்கு சென்ற ஆண்டைப்போல 8.33 சதவீதமும் போனஸ்
வழங்கப்படும்.

இதுதவிர தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த 
தொழிலாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள்
வாணிபக்கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் 
தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் 
வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்
மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 
தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், தொடக்க கூட்டுறவு 
சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400 ரூபாயும் 
கருணைத்தொகையாக வழங்கப்படும்.
-
இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் 
குறைந்தபட்சம் ரூ.8,400–ம், அதிகபட்சம் ரூ.16,800–ம் பெறுவர். 
மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் 
மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 69 ஆயிரத்து 
610 தொழிலாளர்களுக்கு ரூ.489 கோடியே 26 லட்சம் போனசாக 
வழங்கப்படும்.

போனஸ் பெறும் தொழிலாளர்கள் தீபாவளியை சிறப்பாக
கொண்டாட வழிகிடைக்கும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
-------------------

தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum