சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பொல்லாத புணர்ப்பு தோஷம் போக்கி பூரிப்பான திருமண வாழ்க்கை தரும் தைப்பூச விரதம்!
by rammalar Yesterday at 22:07

» கடனை கட்டு, இல்லைன்னா வெளிநாட்டுக்கு ஓடிப்போ...!!
by rammalar Sat 19 Jan 2019 - 16:47

» ஆண்களுக்கான பதிவு ...!!
by rammalar Sat 19 Jan 2019 - 16:46

» பொம்பளைங்களை அழ வைக்காதீங்க. நல்லாவே இருக்கமாட்டீங்க''
by rammalar Sat 19 Jan 2019 - 16:45

» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...!!
by rammalar Sat 19 Jan 2019 - 16:43

» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..!
by rammalar Sat 19 Jan 2019 - 16:42

» கொத்தனார் சூடி
by rammalar Sat 19 Jan 2019 - 16:41

» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…!
by rammalar Sat 19 Jan 2019 - 16:41

» சரக்கு போக்குவரத்து சேவைக்கு 'டிரோன்' அனுமதி
by rammalar Sat 19 Jan 2019 - 7:23

» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்
by rammalar Sat 19 Jan 2019 - 7:22

» வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணிநேரத்தில் 'ரீஃபண்ட்' : விரைவில் அறிமுகம்
by rammalar Sat 19 Jan 2019 - 7:21

» 24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத
by rammalar Sat 19 Jan 2019 - 7:20

» எம்.ஜி.ஆர்., நாணயம் இன்று வெளியீடு
by rammalar Sat 19 Jan 2019 - 7:18

» சபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி
by rammalar Sat 19 Jan 2019 - 7:17

» வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை
by rammalar Sat 19 Jan 2019 - 7:15

» வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி
by rammalar Sat 19 Jan 2019 - 7:09

» ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து
by rammalar Sat 19 Jan 2019 - 7:07

» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு
by rammalar Sat 19 Jan 2019 - 7:06

» அமெரிக்க வாழ் இந்தியர்கள் 3 முக்கிய பதவிகளில் நியமனம்
by rammalar Sat 19 Jan 2019 - 7:05

» ரூபே கார்டு மூலம் கதர் துணி ஷாப்பிங் செய்த மோடி
by rammalar Sat 19 Jan 2019 - 7:04

» தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி
by rammalar Sat 19 Jan 2019 - 7:03

» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை
by rammalar Sat 19 Jan 2019 - 7:02

» சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்
by rammalar Sat 19 Jan 2019 - 7:00

» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது
by rammalar Sat 19 Jan 2019 - 6:59

» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்ப
by rammalar Sat 19 Jan 2019 - 6:58

» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு
by rammalar Sat 19 Jan 2019 - 6:57

» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
by rammalar Sat 19 Jan 2019 - 6:56

» வனவாசம்! வாசகர் கவிதைகள்!- கவிதைமணி
by rammalar Fri 18 Jan 2019 - 5:43

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Thu 17 Jan 2019 - 17:25

» மனக்கோட்டை கட்ட இங்கு வாஸ்து பார்க்கப்படும்...!!
by rammalar Thu 17 Jan 2019 - 17:22

» சந்திரனுக்கும் சூரியனுக்கும் வித்தியாசம் தெரியலை...!!
by rammalar Thu 17 Jan 2019 - 17:17

» மழைப்பறவை - கவிதை
by rammalar Thu 17 Jan 2019 - 17:08

» 30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி!
by rammalar Thu 17 Jan 2019 - 16:53

» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்
by rammalar Thu 17 Jan 2019 - 11:38

» வாழ்க்கையை வீணாக்காதீர்கள். ..''
by rammalar Thu 17 Jan 2019 - 11:21

.

பியார் பிரேமா காதல்’ விமர்சனம்

Go down

Sticky பியார் பிரேமா காதல்’ விமர்சனம்

Post by rammalar on Tue 14 Aug 2018 - 18:49

விகடன் விமர்சனக்குழு
-
ஒரு நடுத்தர வர்க்கத்து யுவனுக்கும் நவயுக யுவதிக்கும் 
இடையேயான காதலும் காதல் சார்ந்த சண்டையும்
சமாதனங்களுமே `பியார் பிரேமா காதல்.’
-


-
அலுவலகத்து கம்ப்யூட்டரில் வின்டோவை ஓப்பன் 
செய்துவிட்டு, `வின்டோ’ வழியாக பக்கத்து அலுவலகப் 
பெண் சிந்துஜாவைப் பார்த்து, லயித்து, காதலித்து 
உருகுவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கிறார் ஸ்ரீ. 

`செர்ரி நழுவி கேக்கில் விழுவதுபோல’ ஒருநாள் ஸ்ரீயின் அலுவலகத்திலேயே பணிக்கு சேர்கிறார் சிந்துஜா.

பசிக்கு தோசைக்கடையைத் தேடும் ஸ்ரீயும் பீட்சா கடையைத் 
தேடும் சிந்துஜாவும் ஒருகட்டத்தில் ஆல்கஹால் ஊற்றி நட்பை வளர்க்கிறார்கள். நட்புச் செடியில் குட்டிக்குட்டி குறும்புகளும் சந்தோஷங்களும் சச்சரவுகளும் பூத்துக் குலுங்க, காலத்தின் 
கோலத்தால் ஒருநாள் இரவு நண்பர்களுக்குள் `கசமுசா’ 
நடந்துவிடுகிறது.
-
அதே படுக்கையில் வைத்து `ஐ லவ் யூ’ எனத் தன் நீண்ட
நாள் காதலை ஸ்ரீ சொல்ல, `வி ஆர் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். 
இது கேசுவலா நடந்தது’ எனத் திகிலாக்குகிறார் சிந்துஜா. 
-
இப்படி `காமம் வேறு, காதல் வேறு, கல்யாணம் வேறு’ 
எனக் கட்டம்கட்டி வாழும் சிந்துஜாவுக்கும் `மூணும் 
ஒண்ணுதான்’ என கண்ணைக் கசக்கும் ஸ்ரீக்கும் 
இடையேயான உறவின் அடுத்தகட்டம் என்ன என்பதை
யூத்ஃபுல்லாய், கலர்ஃபுல்லாய் சொல்லியிருக்கிறார் 
இயக்குநர் இளன்.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14837
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பியார் பிரேமா காதல்’ விமர்சனம்

Post by rammalar on Tue 14 Aug 2018 - 18:49


-

அம்மாவை நல்லா வெச்சி பார்த்துக்கணும் என்பதையே வாழ்நாள் ல
ட்சியமாகக் கொண்ட, டீ, காபி மட்டுமே குடிக்கும் டீட்டோட்டலர் 
இளைஞனாக ஹரீஷ் கல்யாண். சூதுவாது தெரியாத நடுத்தரவர்க்கத்து 
இளைஞன் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். 

நடிப்பில் ஃபர்ஸ்ட் க்ளாஸில் பாஸ் ஆகிறார், அடுத்த முறை 
டிஸ்டின்க்‌ஷன் வாங்கணும் ப்ரோ!

லாஸ் ஏஞ்சல்ஸில் உணவகம் திறக்க வேண்டும் என்பதையே வாழ்நாள்
லட்சியமாகக் கொண்ட, ஒரே தம்மில் பீர் பாட்டிலைக் காலியாக்கும் 
பெண்ணாக ரைஸா. நடிப்போ அயர்ன் பாக்ஸைப்போல நேரம் அ
திகமாக ஆக சூடுபிடிக்கிறது. ஹரீஷ் கல்யாணுக்கும் ரைஸாவுக்கும் 
இடையேயான தாறுமாறான கெமிஸ்ட்ரிதான் படத்தின் மூச்சு. 
ட்ரூ ட்ரூ..!

ஹீரோவின் காதலுக்கு ஐடியா சொல்லும் `க்ளீஷே’ ஐடியா மணி 
கதாபாத்திரத்தில் முனீஸ்காந்த். இன்னும் அவரை நன்றாகப் பயன்
படுத்தியிருக்கலாம். ஆனந்த்பாபு, ரேகா, சுப்பு பஞ்சு எனப் படத்தில் 
சீனியர் நடிகர்களும் இருக்கிறார்கள்.

`இவனே’, `சதீஷ்’, `சாந்தி அக்கா’ கதாபாத்திரங்களில் 
நடித்தவர்கள் கவனிக்கவைக்கிறார்கள். நல்ல பாத்திர வடிவமைப்பும்
கூட.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14837
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பியார் பிரேமா காதல்’ விமர்சனம்

Post by rammalar on Tue 14 Aug 2018 - 18:50


-
வழக்கமான திரைக்கதையையும் சுவாரஸ்யமாக்குகின்றன, 
தமிழ் சினிமாவுக்கு புத்தம் புதிதான காட்சிகள். சிரிப்பு, அழுகை, 
கோவம், காதல் என எல்லா உணர்வுகளும் கலந்த காக்டெயிலாக 
கிரங்க வைக்கிறது திரைக்கதை. படத்தின் இறுதிப் பகுதிகள் 
மட்டும் முகத்தில் தண்ணியைத் தெளிக்கின்றன.

இந்தத் தலைமுறையினருக்கு காதலின் மீதான புரிதல்களையும்
அதிலுள்ள சிக்கல்களையும் பேசுகிறது படம். காதலர்களின் 
எல்லாத் தரப்பு நியாயங்களையும் பேசி, இறுதியாக என்ன 
முடிவெடுப்பது என்பது தெரியாமல், அந்த வாய்ப்பை நம்மிடமே 
கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

எல்லாக் தெய்வீக காதலர்களுக்கும் இடையே ஓர் அமெரிக்க 
மாப்பிள்ளை கேட்டகிரி பலி ஆடு சிக்குமல்லவா. அதேபோல், 
இந்தப் படத்தில் ஒரு பெண்ணை பலிஆடு ஆக்கியிருக்கிறார்கள் 
அந்தப் பொண்ணு யாருக்கு என்ன பாவம் பாஸ் பண்ணுச்சு?

காதலர்களின் நியாய, அநியாயங்களை எல்லாம் பேசுபவர்கள் 
இந்தப் பலியாடுகளை பற்றியும் பேசியிருக்கலாம். மக்களுக்கு 
இன்னும் தெளிவான புரிதல் கிடைத்திருக்கும் இயக்குநர் இளன்.

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சாரியாவின் கேமராவில் `காதல்’ 
இன்னும் அழகாகப் படமாகியிருக்கிறது. கலை இயக்குநர் 
தியாகராஜன், ஆடை வடிவமைப்பாளர்கள் ஜப்ரோன் நிஸார், 
மகேஸ்வரி ஆகியோருக்கும் இதில் பாதி பங்குண்டு. இரண்டாம் 
பாதியில் மட்டும் காட்சிகளின்மீது கருணை காட்டி வெட்டாமல் 
விட்டுவிட்டார் படத்தொகுப்பாளர் மணிக்குமரன்.

`பியார் பிரேமா காதலு’க்கு இசையால் பிங்க் நிறம் 
அடித்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. பின்னணி இசை துறுத்தாமல் 
காட்சிகளோடு பிணைந்து பயணிக்கிறது. பாடல்களோ ஆல்ரெடி 
ஹிட்! இதுவரை 90’ஸ் கிட்ஸுகளுக்கு மட்டும் ஆஸ்தான இசை 
வித்தகராக இருந்த யுவன், இப்படத்தின் மூலம் 2K கிட்ஸின் ப்ளே 
லிஸ்டிலும் இடம் பிடிப்பார்.

`இளைஞர்கள் பார்த்துக் கொண்டாட பக்காவான படம். 
குழந்தைகளிடமிருந்து மட்டும் தள்ளி வையுங்கள்.
-
--------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14837
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பியார் பிரேமா காதல்’ விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum