சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 9:10

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:13

» தலைவர் மூடு அவுட்டா....ஏன்?
by rammalar Yesterday at 6:46

» நகைச்சுவை – ரசித்தவை - தொடர்பதிவு
by rammalar Tue 19 Feb 2019 - 20:30

» இவ்வளவு ட்ராஃபிக்ல செல்லுலு பேசறீங்களே..?
by rammalar Mon 18 Feb 2019 - 18:22

» உலகில் அதிக எழுத்துக்கள் உள்ள ஒரே மொழி!
by rammalar Mon 18 Feb 2019 - 18:18

» அசதியில்தான் உறங்கிப்போயிருந்தேன்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:15

» கலைவாணர் நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 18:12

» குறைந்து போகும் குழந்தைத்தனங்கள்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:05

» செலவைக் குறைப்பதும் சேமிப்புதான்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 18:00

» க்ரைம் நாவல் வாங்கினா கத்தி இலவசம்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:52

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 17:46

» புதுநல மருத்துவ மனை...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:45

» பிளேன் தோசை…!
by பானுஷபானா Mon 18 Feb 2019 - 12:13

» அணங்கே சிணுங்கலாமா...
by rammalar Wed 13 Feb 2019 - 11:47

» அன்பே அன்பின் அத்தனையும் நீயே
by rammalar Wed 13 Feb 2019 - 11:45

» வாழ்க்கை தத்துவம் - படித்ததில் ரசித்தவை
by rammalar Tue 12 Feb 2019 - 17:06

» பழிக்கு அஞ்சி வாழ்க்கை நடத்த வேண்டும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 17:04

» தலைவர் ‘நான் சத்தியத்துக்கு’ கட்டுப்பட்டவன் என்று சொல்றாரே...?
by rammalar Tue 12 Feb 2019 - 16:56

» வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 16:48

» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:58

» எப்பவும் ஆஸ்பத்திரி கதவு திறந்தே இருக்கும்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:57

» இது ‘குடை’ மிளகாய் பஜ்ஜி சார்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:50

» விரத தினங்களில் காக்கா வாடகைக்கு கிடைக்கும்….!
by rammalar Tue 12 Feb 2019 - 15:27

» மாலை போட வசதியான சிலை…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:25

» பொண்ணுங்கன்னாலே ஒரே அக்கப்போருதான்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:24

» சுப்பிரமணி – நகைச்சுவை
by rammalar Tue 12 Feb 2019 - 15:23

» பதுங்கு குழிக்குள் என்ன சிரிப்பு சத்தம்..?!
by rammalar Tue 12 Feb 2019 - 15:22

» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:21

» சேடிப்பெண்கள் விசிறிக்கு பதிலா….!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» குடிப்பியானு கேட்டா ஆமா இல்லன்னு சொல்லணும்..!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» அது என்னய்யா அ.றி.மு.க-னு ஒரு புதுக்கடசி….?
by rammalar Tue 12 Feb 2019 - 15:19

» தலைவர் ரெய்டு அதிகாரிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறாரே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:18

» பத்ம விருதை நிராகரித்த எழுத்தாளர்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:14

» 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:03

.

மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா

Go down

Sticky மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா

Post by சே.குமார் on Tue 9 Oct 2018 - 12:01

முந்தைய பகிர்வான 'ஜானுவின் கடிதம்' முகநூலில் பகிரப்பட்ட போது பலரின் பாராட்டைப் பெற்றது. என்னைப் பொறுத்தவரை எனது எழுத்து கிராமியப் பாணியில்தான் இருக்கும். எனது கதைகள் எல்லாமே அந்த வாழ்க்கையைத்தான் பேசும். எழுத்தாளர் / நடிகர் வேல. ராமமூர்த்தி ஒரு பேட்டியில் 'எனது சிறுகதைகள் எங்க ஊர் கண்மாயைத் தாண்டி வெளியில் செல்லவில்லை... எழுதிய சொற்பக் கதைகளும் (25 என்று சொன்னதாய் ஞாபகம்) எங்க ஊருக்குள்ளயே சுற்றி வந்தவைதான்' என்று சொல்லியிருந்தார். அப்படித்தான் என் எழுத்தும் எங்கள் ஊருக்குள் மட்டுமே சுற்றவில்லை என்றாலும் பெரும்பாலும் கிராமத்து வாழ்க்கையையே பேசும்.

அப்படிப் பேசிய எனது தொடர்கதைகளான 'கலையாத கனவுகள்', 'வேரும் விழுதுகளும்',' நெருஞ்சியும் குறிஞ்சியும்' பலரால் பாராட்டப்பட்டன. இதை பெருமைக்காக சொல்லவில்லை... என் எழுத்து எங்கிருந்து வந்ததோ அதே பாணியில்தான் பயணிக்கிறது... அதில் பழைய காலம் மாதிரி எழுதாதே என்று சொல்வதை ஏற்கமுடியவில்லை... எழுத்தில் என்ன பழமை... புதுமை... எனக்குப் புரியவில்லை. வார்த்தைகளில் நவீன யுகத்திற்குத் தகுந்தாற் போல் மாற்றம் வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. கதையோ...கட்டுரையோ... கவிதையோ... சினிமா விமர்சனமோ... அது எதுவாகினும் வாசிப்பவரை ஈர்க்க வேண்டும். அதை எனது எழுத்துச் செய்கிறது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

அப்படித்தான் 96 படத்திற்கான விமர்சனம் எழுதிய பின்னர் 'ஜானுவின் கடிதம்' எழுதப்பட்டது. முழுக்க முழுக்க நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசித்து எழுதப்பட்ட பகிர்வு அது. முதலில் முகநூலில்தான் பகிரப்பட்டது, பின்னரே இங்கு பகிர்ந்தேன். முகநூலில் நிறையக் கருத்துக்களும் விருப்பக்குறிகளும்... முத்தாய்ப்பாய் 'ஆல்ப்ஸ் தென்றல்' நிஷா அக்காவின் கருத்து இருந்தது.

அக்காவைப் பொறுத்தவரை என் எழுத்தை மட்டுமல்ல என்னையும் தம்பியாய் எப்போதும் நேசிப்பவர். எனது தொடர்கதைகளை வாசித்து தனிப்பட்ட முறையில் முகநூல் உள்டப்பியில் வந்து விரிவாகப் பேசி, உற்சாகமும் உத்வேகமும் கொடுத்தவர்... இப்போதும் கொடுப்பவர். அவரின் இந்த முகநூல் கருத்தை பதிவின் கருத்துப் பகுதியில் போடுவதை விட, தனிப்பகிர்வாக போட்டால் நல்லாயிருக்கும் என்பதாலே இந்தப் பகிர்வு.

அவர் புகழ்ந்த அளவுக்கு எல்லாம் பெரிய எழுத்தாளன் இல்லை என்றாலும் அதில் பாதியேனும் எழுதுவேன். பெரிய எழுத்தாளனாகி எல்லாரும் புகழணும் என்ற ஆசையில் எழுத ஆரம்பிக்கவில்லை... என் பேராசான்... எங்க ஐயா எழுதச் சொல்லி வற்புறுத்தியே எழுத வந்தவன் நான். எனது முதல் கவிதை யாருக்குமே கிடைக்காத வாய்ப்பாய் 'தாமரை'யில் வெளிவந்தது... இரண்டு பக்கத்தில் 'கல்லூரி மாணவன் எழுதிய கவிதை' என்ற அடைமொழியுடன்... ஜெயலலிதாவின் கட்-அவுட் கலாச்சாரத்தை எதிர்த்து எழுதப்பட்ட அந்தக் கவிதையின் தலைப்பு 'ஒரு கட்-அவுட் நிழலுக்கு கீழே'.

நான் எழுதியதும் முதலில் வாசிக்கக் கொடுப்பது ஐயாவிடமும் இன்னொரு நட்பிடமும்... ஐயா 'நல்லாயிருக்கு..' என்றவர் எனக்குத் தெரியாமல் தாமரைக்கு அனுப்பி வைக்க, அது வெளியானதும் என்னிடம் புத்தகத்தைக் கொடுத்து கவிதை வந்திருக்கு என்று சொன்ன அந்தநாள் எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது... அன்று ஐந்தாவது செமஸ்டர் ரிசல்ட்... காலையில் சரஸ்வதி திரையரங்கில் ரொம்ப நாளாக பார்க்க விரும்பிய 'ரத்தக் கண்ணீர்' படம் நண்பர்கள் சூழ பார்த்த நாள். அதன் பின் கதைகள், கவிதைகள் என நிறைய பத்திரிக்கைகளில் எழுதியாச்சு... எல்லாம் அந்த 50 ரூபாய் ஆசையில்தான்.. :)

இப்ப அதெல்லாம் விட்டாச்சு... மின்னிதழ்கள் விரும்பிக் கேட்பதால் எழுதிக் கொடுப்பதுதான் அதிகம்.. இது முழுக்க முழுக்க பாசத்துக்காகவே... ஸ்ரீராம் அண்ணன் கூட 'நீயே அனுப்ப மாட்டாயா... ஒவ்வொரு முறையும் நான் கேட்கணுமா...?' எனச் செல்லமாக கடிந்து கொண்டார். அப்படியும் அவர் கேட்கும் போதுதான் அனுப்ப முடிகிறது. இப்ப 'தேன் சிட்டு' மின்னிதழ் சகோதரர் 'தளிர்' சுரேஷும் அண்ணனைப் போலவே 'நீ அனுப்புறியா.. இல்ல வலைப்பூவில் இருந்து எடுத்துக்கவா' என உரிமையோடு கேட்க ஆரம்பித்து விட்டார். அதனால்தான் இந்த மாதம் 'மனிதர்கள்' அவர் மின்னிதழில் வந்தது.

இதேபோல் நெல்லை பரணி இதழ் ஆசிரியர் மே மாதம் மின்னஞ்சல் அனுப்பினார் கதை வேண்டுமென... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் மறந்துவிட்டேன். சென்ற வாரம் 'படைப்புக் கேட்டேன் அனுப்ப மாட்டேங்கிறீங்க... உடனே எனக்கு ஒரு கதை வேண்டும்...' என ஞாபக மின்னஞ்சல் அனுப்பினார். அந்த அன்பிற்கு அனுப்பிக் கொடுத்தாச்சு. இதுதான் வேண்டும்... என் கதைகள் ஆஹா... ஓஹோ... என்றெல்லாம் நான் ஆடவில்லை... ஆனாலும் அது  படிப்பவருக்குப் பிடிப்பதால்தானே உரிமையோடு கேட்கிறார்கள்.

என் எழுத்து இப்படித்தான்.. தவறாக இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்... கிராமத்துப் பாணியில் எழுதாதே... வட்டார வழக்கில் இருந்து வெளியே வா... அழுகாச்சி கதை எழுதாதே... என்றெல்லாம் சொல்லாதீர்கள். எனக்குத் தெரிந்ததில் எழுதுவதே ஆத்ம திருப்தி எனக்கு... அதில் மாற்ற விருப்பமில்லை... கிராமத்து வாழ்க்கை மென் சோகம் நிரம்பியதுதான் என்பதை வாழ்வில் அறிந்தவன்... வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்.

அக்காவின் கருத்து ஜானுவின் போட்டோவுக்கு கீழே...

[size]

ரு கடிதம் என்பது கதை போலில்லை. அதில் கற்பனைகள் இருக்காது. [/size]

ஒரு ஆண்,ஆணாய் தன் மன நிலையை எழுத முடிவது போல், ஒரு ஆண், பெண்ணின் நிலையில் அவள் உணர்வுகளை எழுத்தில் வடிப்பது இயல்பாக வரக்கூடியதல்ல. பெண், ஆணாய் தனை உணர்ந்து எழுத முடிவது போல் ஆண்களால் பெண் மன நிலையை உணர்ந்து எழுத முடிவதில்லை. ஆனால் இக்கடிதமெனும் உணர்வில் கொட்டும் வார்த்தைகள் பெண்ணின் உணர்வை சொல்லும் நொடியில் என் கண்களும் கலங்கியது. 

நானும் ஜானுவானேன். எனக்குள்ளும் கடந்தகால நினைவுகள் உருண்டோடியது. 

ஜானுவிற்கும் மனம் உண்டு, அதில் நினைவுகளும் நிஜங்களும் மறைந்திருக்கும் எனும் ஜானுக்களின் உணர்வை எழுத்தாக்கி இருப்பது அருமை. 

சினிமாவில் காட்டப்பட்ட சம்பவங்களை வைத்து ஜானகி எனும் பெண்ணின் மன உணர்வுகளை, அவள் கடந்த கால நினைவு பெட்டகத்திலிருந்து பதின்ம வயதுக் காதல், நிகழ் கால வாழ்க்கை நிஜங்களிலிருந்தும், அவள் தன்னிலை மறவாமையிலிருந்தும், சமூகத்துக்கான கட்டுப்பாடுகளை அவளால் மீற முடியாத நிலையையும் எத்தனை அழகாக எடுத்து வைத்திருக்கின்றீர்கள் குமார். 

22 வருடங்களுக்கு முன் கடந்து போன நினைவுகள். இன்றைய தன் வாழ்க்கை தரும் கட்டுப்பாடுகள். அத்தனையையும் ஒரே கடிதத்தில்...

அப்ப்பப்பா எதை சொல்ல எதை விட? 

நீ இறக்கி விட்ட தருணத்தில் நான் இறந்து விட்டதாய் நினைத்தேன் எனும் ஒரே வார்த்தை போதும் அத்தனையும் உணர...... 

வார்த்தைகளில் சொல்ல முடியாத காதலை ஒவ்வொரு பெண்ணும் தன் உள்ளத்தினுள் பொக்கிஷமாய் பொத்தி வைத்திருப்பாள். 

உங்கள் வரிகளில் நானும் ஜானுவாய் மாறினேன்... 

ஜானுவைப் போல் வாழ்ந்தேன்....

ஜானுவாக உணர்ந்தேன்... 

எழுத்தென்பது வாசிப்போர் புரியாத மொழியில், விளங்கா நடையில் எழுதுவதில்லை. மனசோடு கரைந்து நம்மை அதற்குள் மூழ்க வைத்து, அழச்செய்து, அங்கே நாமாய் இருந்தால் எனும் உணர்வை உருக வைக்க வேண்டும். 

கிராமத்து எளிய மக்களின் வாழ்க்கை, வாசனை சொல்லும் கதையாகட்டும், கட்டுரையாகட்டும், கடிதமாகட்டும், இயல்பான வாழ்க்கையை எந்த வித பூச்சூடலும் இல்லாமல் அப்படியோ ஒன்றி எழுதுவது உங்கள் சிறப்புப்பா. 

சூப்பர்ப் குமார். 

அடுத்து பட நாயகன் உணர்வை எப்படி எழுதுவான் எனவும் உங்கள் பார்வையில் எழுதி விடுங்கள்.
நன்றி அக்கா... ராமின் கடிதம் விரைவில் உங்களுக்காக...

**************
[size]

சொல்ல மறந்துட்டேன்... இங்கு வாசிப்பை நேசிப்போம் என்று சொல்லும் 'தமிழ் வாசிப்பாளர் குழு' என்ற வாட்ஸ் அப் குழுமத்தில் இருக்கிறேன். புதிதாக 'கானல்' என்ற யுடியூப் சேனல் தொடங்கி... ஒவ்வொருவரும் வாசித்த கதை பற்றி பேச வேண்டும் என பட்டியல் போட்டு விட்டார்கள். நானெல்லாம் குழும கூட்டத்தில் கூட பேச மாட்டேன். இது நழுவ முடியாத ஒரு வலை... சரி பேசுவோமே என என் பேராசானின் கதையையே பேசியிருக்கிறேன். பாருங்க இந்தக் குழந்தையின் பேச்சு எப்படியிருக்குன்னு...

[/size]
[size]


என் எழுத்தில் குறைகள் இருப்பின் சொல்லுங்கள்... கண்டிப்பாக திருத்திக் கொள்கிறேன்... அதேபோல் எப்படி எழுத வேண்டும் என்பது என் விருப்பம் என்பதையும் சொல்லி விடுகிறேன். 
[/size]
-'பரிவை' சே.குமார். 
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1442
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum