சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 9:10

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:13

» தலைவர் மூடு அவுட்டா....ஏன்?
by rammalar Yesterday at 6:46

» நகைச்சுவை – ரசித்தவை - தொடர்பதிவு
by rammalar Tue 19 Feb 2019 - 20:30

» இவ்வளவு ட்ராஃபிக்ல செல்லுலு பேசறீங்களே..?
by rammalar Mon 18 Feb 2019 - 18:22

» உலகில் அதிக எழுத்துக்கள் உள்ள ஒரே மொழி!
by rammalar Mon 18 Feb 2019 - 18:18

» அசதியில்தான் உறங்கிப்போயிருந்தேன்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:15

» கலைவாணர் நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 18:12

» குறைந்து போகும் குழந்தைத்தனங்கள்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:05

» செலவைக் குறைப்பதும் சேமிப்புதான்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 18:00

» க்ரைம் நாவல் வாங்கினா கத்தி இலவசம்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:52

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 17:46

» புதுநல மருத்துவ மனை...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:45

» பிளேன் தோசை…!
by பானுஷபானா Mon 18 Feb 2019 - 12:13

» அணங்கே சிணுங்கலாமா...
by rammalar Wed 13 Feb 2019 - 11:47

» அன்பே அன்பின் அத்தனையும் நீயே
by rammalar Wed 13 Feb 2019 - 11:45

» வாழ்க்கை தத்துவம் - படித்ததில் ரசித்தவை
by rammalar Tue 12 Feb 2019 - 17:06

» பழிக்கு அஞ்சி வாழ்க்கை நடத்த வேண்டும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 17:04

» தலைவர் ‘நான் சத்தியத்துக்கு’ கட்டுப்பட்டவன் என்று சொல்றாரே...?
by rammalar Tue 12 Feb 2019 - 16:56

» வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 16:48

» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:58

» எப்பவும் ஆஸ்பத்திரி கதவு திறந்தே இருக்கும்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:57

» இது ‘குடை’ மிளகாய் பஜ்ஜி சார்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:50

» விரத தினங்களில் காக்கா வாடகைக்கு கிடைக்கும்….!
by rammalar Tue 12 Feb 2019 - 15:27

» மாலை போட வசதியான சிலை…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:25

» பொண்ணுங்கன்னாலே ஒரே அக்கப்போருதான்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:24

» சுப்பிரமணி – நகைச்சுவை
by rammalar Tue 12 Feb 2019 - 15:23

» பதுங்கு குழிக்குள் என்ன சிரிப்பு சத்தம்..?!
by rammalar Tue 12 Feb 2019 - 15:22

» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:21

» சேடிப்பெண்கள் விசிறிக்கு பதிலா….!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» குடிப்பியானு கேட்டா ஆமா இல்லன்னு சொல்லணும்..!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» அது என்னய்யா அ.றி.மு.க-னு ஒரு புதுக்கடசி….?
by rammalar Tue 12 Feb 2019 - 15:19

» தலைவர் ரெய்டு அதிகாரிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறாரே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:18

» பத்ம விருதை நிராகரித்த எழுத்தாளர்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:14

» 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:03

.

‘காதலின் வானிலை’வாசகர்களின் கவிதைகள்! - By கவிதைமணி -1

Go down

Sticky ‘காதலின் வானிலை’வாசகர்களின் கவிதைகள்! - By கவிதைமணி -1

Post by rammalar on Thu 25 Oct 2018 - 4:37

மேகம் திரண்டது அந்த வானத்தில்
சோகம் திரண்டது அவள் வதனத்தில்
இடிவிழுந்த போது விண் அதிர்ந்தது
ஏசிய பேச்சில் மண் அதிர்ந்தது
மின்னல் வெட்டிய போது கண்மிரண்டது
விழிவாளால் வெட்டிய போது தலைதுவண்டது
அடைமழை பெய்தபோது நிலம்மூழ்கியது
அழுத கண்ணீரில் உளம்மூழ்கியது
காற்று சுழன்று சூறாவளியாய் மாறியது
காதல் கழன்று புயல்தாண்டவம் அரங்கேறியது

புயல் ஓய்ந்தபின் கணக்கெடுக்கையில்
சேதாரம் ஆனது
இருவர் வாழ்க்கையும்

- கோ. மன்றவாணன்

**

என் அருகில்
தேவதை நீ இருக்க
இமயத்துள் சிக்கி
நடுங்கும் நிலை
சற்று தள்ளி நின்றால்
சுற்றித் தெறிக்கும்
சாரல் மழை
காரினைச் சுற்றி
தலையில் வைத்து
ஏரினைப் பார்வையாக்கி
பார்வையைக் கூரினால்
நெஞ்சகத்தைக் கீறி
வேளாண்மை பார்க்கும்
உன் வினை
காரை இறக்காமல்
வேகமாய் காற்றுத் திரையில்
ஆட்டி ஆட்டி − இன்று
மழை வருமா! மழை வருமா!
என ஏங்க வைக்கும்
கலிக்காலி உன்னால்
வானம் பார்க்கும்
பூமியாய்
வெறும் கோவணத்தோடு.....

-  முகில் வீர உமேஷ்

**

கருங்கூந்தல் மேகத்தில் 
ஒளிவீசும் பால்நிலாப் போல் 
உருண்டு திரண்ட தேகத்தில் 
ஒளிவீசும் உன் கண்கள் 
என் கண்ணில் மின்னல் வெட்டியதால்
என் மனதில்மையம் கொண்டதைப் போல்
உன் மனதில் மையம் கொண்டதா காதல்?

மனதில் மையம் கொண்ட காதலால் 
என் வானில்   
காதல் மழை வருமோ? இல்லை
என் கண்ணில் நீர் வருமோ?

மனதில் மையம் கொண்ட காதலை 
பெற்றோரின் 
சாதி, மதம், அந்தஸ்து எனும் 
புயல் வீசி கலைத்திடுமோ?
இடியாய் இடர் வருமோ?

பலத்த காற்று வீசி 
மரத்தை சாய்ப்பது போல் 
கண்ணில் வலை வீசி
மனதை சாய்த்தவளே!

இல்லத்தில் புகுந்த மழை நீராய்
என் உள்ளத்தில் புகுந்த 
உன் நினைவால் தவிக்கின்றேன்!
ஓடி வந்து காப்பாயோ?
ஓடம் விட்டு காப்பாயோ?

கனிந்து வரும் காதலில்
சாதி மத புயலடித்து 
நிலவரம் கலவரம் ஆகாமலும்!
காதலர்களை 
தற்கொலையிலிருந்தும்
தற்பெருமைகொலையிலிருந்தும்
காப்போம்!
-கு.முருகேசன்

**

கண்களிலே தெரியுதடி காதலின் தீவிரம்
காதலிலே தோற்றாலோ கண்களில் தீவரும்
புன்னகைச் செடியிலே பொன்மலர்ப் பூவரும்
கன்னிமனம் நொந்தாலோ கனலாடும் புயல்வரும்

நேற்றிரவு பெய்தமழை இன்றிரவு இல்லை
இன்றடித்த வெயிலிலே ஈரமிச்சம் இல்லை
முத்தங்கள் கொட்டிவைத்த இதழ்அமுத மேகம் 
மொத்தமாய்த் தீர்ந்ததால் தீரவில்லை தாகம் 

மையல்கொண்டு தையல்கொண்ட மைவிழியில்
கயல்கொண்ட பொன்னழகைக் கவிகொண்(டு) எழுதியதை
வெயில்கொண்ட கோடையெனெத் தீக்கொண்டு போனபின்பு
புயல்கொண்ட மழைநாளாய் பூவைகொண்ட கண்மாறும்

விரிந்தாடும் கூந்தல் கார்கால மேகங்கள்
சரிந்தாடும் போதினிலே கண்பெயும் மாமழை
எப்போதும் குளிர்காலம்;அது காதல் வானிலை 
காதல் இல்லை என்றாலோ எப்போதும் வாழ்விலை

- கவிஞர் மஹாரதி

**

பகலா,இரவா தெரியவில்லை! 
ஞாயிறா, திங்களா ஒளியில்லை! 
கருமேகங்கள் நிறைந்துள்ளதே! 
மின்னல் கீற்றுகள் தெறிக்கிறதே! 
இடியோசை கேட்கிறதே! 
ஈரக்காற்றுடன் மழைச்சரங்கள் 
விழுகிறதே! மண்வாசம் மணக்கிறதே! 
உன் பார்வை வீச்சினிலே உயிர்த்தீ எரிகிறதே! 
மெய்யுயிர் சிலிர்க்கிறதே! 
அன்பே காதல் சொல்லிவிடு! 
உன்னால் என்னுள் இரசாயனமாற்றமே 
பிரவாகமெடுக்கிறதே! 
மனமுழுதும் வளிமண்டல அழுத்தமாக 
உணர்வுகளில்,உணரச்சிகளிலே 
மழையாகிறதே!  
இயற்கையில் இயல்பில் 
இது காதல்வானிலையே! 

- ஆகாசம்பட்டு A.k.சேகர்.
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum