சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 9:10

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:13

» தலைவர் மூடு அவுட்டா....ஏன்?
by rammalar Yesterday at 6:46

» நகைச்சுவை – ரசித்தவை - தொடர்பதிவு
by rammalar Tue 19 Feb 2019 - 20:30

» இவ்வளவு ட்ராஃபிக்ல செல்லுலு பேசறீங்களே..?
by rammalar Mon 18 Feb 2019 - 18:22

» உலகில் அதிக எழுத்துக்கள் உள்ள ஒரே மொழி!
by rammalar Mon 18 Feb 2019 - 18:18

» அசதியில்தான் உறங்கிப்போயிருந்தேன்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:15

» கலைவாணர் நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 18:12

» குறைந்து போகும் குழந்தைத்தனங்கள்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:05

» செலவைக் குறைப்பதும் சேமிப்புதான்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 18:00

» க்ரைம் நாவல் வாங்கினா கத்தி இலவசம்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:52

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 17:46

» புதுநல மருத்துவ மனை...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:45

» பிளேன் தோசை…!
by பானுஷபானா Mon 18 Feb 2019 - 12:13

» அணங்கே சிணுங்கலாமா...
by rammalar Wed 13 Feb 2019 - 11:47

» அன்பே அன்பின் அத்தனையும் நீயே
by rammalar Wed 13 Feb 2019 - 11:45

» வாழ்க்கை தத்துவம் - படித்ததில் ரசித்தவை
by rammalar Tue 12 Feb 2019 - 17:06

» பழிக்கு அஞ்சி வாழ்க்கை நடத்த வேண்டும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 17:04

» தலைவர் ‘நான் சத்தியத்துக்கு’ கட்டுப்பட்டவன் என்று சொல்றாரே...?
by rammalar Tue 12 Feb 2019 - 16:56

» வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 16:48

» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:58

» எப்பவும் ஆஸ்பத்திரி கதவு திறந்தே இருக்கும்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:57

» இது ‘குடை’ மிளகாய் பஜ்ஜி சார்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:50

» விரத தினங்களில் காக்கா வாடகைக்கு கிடைக்கும்….!
by rammalar Tue 12 Feb 2019 - 15:27

» மாலை போட வசதியான சிலை…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:25

» பொண்ணுங்கன்னாலே ஒரே அக்கப்போருதான்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:24

» சுப்பிரமணி – நகைச்சுவை
by rammalar Tue 12 Feb 2019 - 15:23

» பதுங்கு குழிக்குள் என்ன சிரிப்பு சத்தம்..?!
by rammalar Tue 12 Feb 2019 - 15:22

» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:21

» சேடிப்பெண்கள் விசிறிக்கு பதிலா….!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» குடிப்பியானு கேட்டா ஆமா இல்லன்னு சொல்லணும்..!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» அது என்னய்யா அ.றி.மு.க-னு ஒரு புதுக்கடசி….?
by rammalar Tue 12 Feb 2019 - 15:19

» தலைவர் ரெய்டு அதிகாரிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறாரே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:18

» பத்ம விருதை நிராகரித்த எழுத்தாளர்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:14

» 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:03

.

‘காதலின் வானிலை’வாசகர்களின் கவிதைகள்! - By கவிதைமணி -2

Go down

Sticky ‘காதலின் வானிலை’வாசகர்களின் கவிதைகள்! - By கவிதைமணி -2

Post by rammalar on Thu 25 Oct 2018 - 4:38

பெண்ணே பெண்ணே
உனை  நினைத்து,
மெரினா கடற்கரை
மாலைக்காற்று,
கவிதை ஊற்றாய் மாறாதா?


கண்ணகி சிலையின் அருகில்,
காவியம் இன்னொன்று தோன்றாதா?

பாரதி இல்லக்கவிதைகள் எல்லாம்,
சாரதி தேரில் வாராதா?

கோட்டை கொத்தள வாயில்களெல்லாம்,
உன்னை நினைத்துக்கூவாதா ?

எழிலகம் உந்தன் எழிலைக்கண்டு,
ஏதென்சுக்குப்போகாதா?

அண்ணாச்சதுக்கம் அனாஇவானோவா உனை,
அழகிய தமிழில் வார்க்காதா?

பாரிமுனையெலாம் துறைமுகம் சென்று,
காதல் கவிதை இறக்காதா?

வேற்றுமையிலும் ஒற்றுமை காண,
உந்தன் மனம் இறங்காதா?

என்னை உந்தன் காதலனாய் ஏற்க,
உந்தன் மனம் இறங்காதா?

நீ எனை மறந்தாலும் நான் மறியேன்,
நான் மனிதனல்ல

மே தினம் கொண்டாட
நான்,
மார்க்சிஸ்ட் அல்ல 

உன் மனதில் அடைக்கலம்
தேடும்,
உழைப்பாளர் சிலையின் வியர்வைத்துளி 

முயற்சித்துக்கொண்டே இருப்பேன்,
உன் மனதை அடைய;
என் காதலை நீ உணர

- ம.சபரிநாத்,சேலம்

**

காதலின் வானிலை வசந்தம் ஆகியே 
கடிமலர்க் காடும் கண்களில் விரிந்திட  
நேசம் ஏந்திடும் மானிட செல்கள் 
வாசம் வீசிடும் வானவில் வாசலில்!

ஏதலம் அதனில் ஏற்றியக் காதல்
ஏக்கப் பெருவெளியில் நிறைந்திடும் தருணம்
பார்க்கும் காட்சியில் பரவசம் பரவியே 
பச்சை விரித்திடும் பசுமைக் காதலும்!

நோக்கும் விழிகளில் பூத்திடும் காதல்
பூக்கும் முன்னே புலன்களைத் திறந்திடத்  
தாக்கும் பிணிகள் தானாய்த் தீர்ந்திட 
வாக்கும் வாழ்வும் வரமாய் மாறிடும்!

- கவிஞர். மு. திருமாவளவன் 

**

தலைமுறை இடைவெளி பெரிதாகி விட்டது 
தலைவரை குடும்பத்தவரை மதிப்பதில்லை இப்போது ! 

மாதா பிதா குரு மதிப்பதில்லை இப்போது 
மனம் போன போக்கில் இளையதலைமுறை ! 

காது கொடுத்து கருத்தைக் கேட்பதில்லை 
கண்டபடி பேசிடும் இன்றைய இளையோர் ! 

பணத்தின் மதிப்பை அறியவில்லை இவர்கள் 
பணத்தை தண்ணியாக செலவழித்து வருகின்றனர்! 

இரவு பத்து மணிக்கெல்லாம் தூங்கிடுவோம் அன்று 
இரவில் விழித்து பகலெல்லாம் தூங்குகின்றனர் இன்று ! 

தெருவிற்கு ஒரு தொலைபேசி இருந்தது அன்று 
தனி நபருக்கு பல அலைபேசி ஆனது இன்று ! 

ஊதியம் குறைவென்றாலும் நிம்மதி இருந்தது அன்று 
ஊதியம் மிகைஎன்றாலும் நிம்மதி இல்லை இன்று ! 

நவீனம் இல்லாவிட்டாலும் இன்பம் இருந்தது அன்று 
நவீனம் இருந்தாலும் இன்பம் இல்லை இன்று ! 

பெற்றோரை நன்கு மதித்து வாழ்ந்தனர் அன்று 
பெற்றோரை மதிப்பதே இல்லை இன்று ! 

அண்ணன் தம்பி உறவு அன்பானது அன்று 
அண்ணன் தம்பி இன்றி தனியாளானது இன்று ! 

ஓடியாடி விளையாடி மகிழ்ந்தனர் அன்று 
ஒரேயறையில் அலைபேசி விளையாட்டு இன்று ! 

வானொலியில் பாட்டு கேட்டு மகிழ்ந்தனர் அன்று 
வானொலி மறந்து தொலைக்காட்சித் தொல்லை இன்று ! 

நல்ல தமிழில் நாளும் பேசிவந்தனர் அன்று 
நாவில் தமிங்கிலமே தவழ்கின்றது இன்று !

- கவிஞர் இரா .இரவி

**

நீல  வானம் போல்,
சஞ்சலம்  இல்லாமல்  பறந்து  விரிந்த  என்  இதயத்தில்,
இள  வேனிற்  கால  சூரிய  கதிர்  போல  நீ  வந்தாய்!

உன்னை  பார்த்தது  முதல்,
உன்னாலே, 
என்  மனவானில்  சற்றென்று  வானிலையும்  மாறியது!

நீ  சிரித்தாய், 
மனதை,
சில்லென்று  ஒரு காதல்  காற்று  வருடியது!

என்  மனம் ,
என்னை  அறியாமலேயே   மின்னலை  துரத்தும்  இடிபோல,
உன்னை  தேடியது!

என்  காதலை,
உன்னிடம்  சொல்ல  நான்  ஒத்திகை  பார்க்கையில், 
ஒரு  புயலே  அடித்து  ஓய்ந்தது,  என்னுள்!

ஒரு  தலை  காதலாக  இருந்த  என்  காதலை ,
நீ  ஏற்ற  பொழுது, 
பருவ மழையின் சாரல் போன்று என் மனம் குளிர்ந்தது!  

விண்ணுலகத்தின்  வாசலாய்  வண்ண  வானவில்  தோன்றுவது போல்,
என்  காதலே , என்  வாழ்வின்  வானவில்லே, 
நீ  வந்த  பின்னே  என்  வாழ்வும்   ஆனது  வசந்த  காலமே!!

இந்த  காதல்  வானிலை  மாற்றமும் எனக்கு  உணர்த்தியது,
நம்  காதலுக்கு,  
வானமே  எல்லை  என்று!!

- பிரியா ஸ்ரீதர்

**
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum