சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 9:10

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:13

» தலைவர் மூடு அவுட்டா....ஏன்?
by rammalar Yesterday at 6:46

» நகைச்சுவை – ரசித்தவை - தொடர்பதிவு
by rammalar Tue 19 Feb 2019 - 20:30

» இவ்வளவு ட்ராஃபிக்ல செல்லுலு பேசறீங்களே..?
by rammalar Mon 18 Feb 2019 - 18:22

» உலகில் அதிக எழுத்துக்கள் உள்ள ஒரே மொழி!
by rammalar Mon 18 Feb 2019 - 18:18

» அசதியில்தான் உறங்கிப்போயிருந்தேன்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:15

» கலைவாணர் நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 18:12

» குறைந்து போகும் குழந்தைத்தனங்கள்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:05

» செலவைக் குறைப்பதும் சேமிப்புதான்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 18:00

» க்ரைம் நாவல் வாங்கினா கத்தி இலவசம்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:52

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 17:46

» புதுநல மருத்துவ மனை...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:45

» பிளேன் தோசை…!
by பானுஷபானா Mon 18 Feb 2019 - 12:13

» அணங்கே சிணுங்கலாமா...
by rammalar Wed 13 Feb 2019 - 11:47

» அன்பே அன்பின் அத்தனையும் நீயே
by rammalar Wed 13 Feb 2019 - 11:45

» வாழ்க்கை தத்துவம் - படித்ததில் ரசித்தவை
by rammalar Tue 12 Feb 2019 - 17:06

» பழிக்கு அஞ்சி வாழ்க்கை நடத்த வேண்டும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 17:04

» தலைவர் ‘நான் சத்தியத்துக்கு’ கட்டுப்பட்டவன் என்று சொல்றாரே...?
by rammalar Tue 12 Feb 2019 - 16:56

» வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 16:48

» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:58

» எப்பவும் ஆஸ்பத்திரி கதவு திறந்தே இருக்கும்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:57

» இது ‘குடை’ மிளகாய் பஜ்ஜி சார்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:50

» விரத தினங்களில் காக்கா வாடகைக்கு கிடைக்கும்….!
by rammalar Tue 12 Feb 2019 - 15:27

» மாலை போட வசதியான சிலை…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:25

» பொண்ணுங்கன்னாலே ஒரே அக்கப்போருதான்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:24

» சுப்பிரமணி – நகைச்சுவை
by rammalar Tue 12 Feb 2019 - 15:23

» பதுங்கு குழிக்குள் என்ன சிரிப்பு சத்தம்..?!
by rammalar Tue 12 Feb 2019 - 15:22

» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:21

» சேடிப்பெண்கள் விசிறிக்கு பதிலா….!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» குடிப்பியானு கேட்டா ஆமா இல்லன்னு சொல்லணும்..!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» அது என்னய்யா அ.றி.மு.க-னு ஒரு புதுக்கடசி….?
by rammalar Tue 12 Feb 2019 - 15:19

» தலைவர் ரெய்டு அதிகாரிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறாரே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:18

» பத்ம விருதை நிராகரித்த எழுத்தாளர்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:14

» 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:03

.

காதலின் வானிலை’வாசகர்களின் கவிதைகள்! - By கவிதைமணி -5

Go down

Sticky காதலின் வானிலை’வாசகர்களின் கவிதைகள்! - By கவிதைமணி -5

Post by rammalar on Thu 25 Oct 2018 - 4:42

காதல்  -  அது 
மோதினால்  வரும்  வானிலை அறிக்கை
மிக பெரிய சூறாவளி!
கண்ணும்  கண்ணும்  நோக்கும் காதல்
விண்ணும் மண்ணும்  முத்தமிடும் 
அழகிய  மழை போல  குளிர்ந்து 
பழகிய  உள்ளங்களையும்  குளிர  வைக்கும்!
இதயமும் இதயமும்  பேசும்  காதல் 
பந்தய  குதிரைமேல்  அமர்ந்து 
வெற்றி வாகைச்  சூடும்  அமரக்காதல்!
காதலில்  வானிலை  அறிக்கை 
படிக்க  வேண்டுமா?
துடிக்கும்  இதயத்துடன்  பேசுங்கள்!
வெயிலும்  மழையும் மாறி மாறி 
சொல்லும் வானிலை அறிக்கை 
கேட்கும் மக்கள்...
காதல் வானிலை அறிக்கை  
கேட்டு   வெயில்  போல 
சுடுச் சொல் சொன்னால்  என்னாவது?  
காதலை காயப்படுத்தும்  சமூகத்தில் 
சாயம்  பூசும்  காதல்களே அதிகம்!
உணர்ந்து  உண்மையறிந்து  காதலித்து 
மகிழ்ச்சியான  வானிலை  அறிக்கை 
வாசியுங்கள்! நேசியுங்கள்
உண்மை  காதலை!

- உஷாமுத்துராமன், மதுரை 

**

மாமாவின் வீட்டிலே
மகிழ்வுடன் பூத்தது
மாதக்கணக்கிலே எந்தன்
மனதுக்குள் நிலைத்தது.

அறிவுச்சுடர் ஒளி வீசும்
ஆற்றல்கள் தந்தது
அகராதி தேடாமலே
அர்த்தம் பல தந்தது.

அஸ்திவாரம் இல்லாமலே
ஆனந்தம் முகிழ்த்தது
பார்வைகள் பரிமாற்றம்
பலநாட்கள் இனித்தது.

என்னவள் எனக்குத்தான் என
என்னுள்ளம் துடித்தது
ஏதும் மாற்றம் வந்திடுமோ என்ற
எச்சரிப்பும் தலை தூக்கியது.

காதலின் வானிலையில்
கடும் புயல் மையம் கொண்டால்
காக்க இனி யார் வருவார்?!
கடவுள் சித்தம் யார் அறிவார்?!

சொக்கநாதர் துணை இருக்க
சொந்தம் விட்டு விலகிடுமோ?
சொர்க்கம் காட்ட  வந்த மயில்
சோகம் காட்டி நகைத்திடுமோ?!

இந்தவாறு மனம் நினைக்க
நொந்த வாழ்வின் நிலையுணர்ந்தேன்
காதலின் வானிலையில்
கடுகி வந்த இன்ப மழை
காலமெல்லாம் எனை நனைத்து
கல்யாண வாழ்வு வரம் தந்ததையா.

- புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்

**

நீலவண்ண வெளியில்
இதயம் உலவும் எண்ணங்கள்
நழுவித் தழுவும் மேகங்கள்.
பூத்ததுபிறை சிரித்தது புருவங்கள்
எண்ணிக்கைதான் முரண்.
மின்னல் அவள் தோரணம்
மேகம் தாங்கும் மண்டபம்.
இடி இடித்த மேளங்கள்
அர்ச்சுன ரதத்தின் தாளங்கள்.
கண்சிமிட்டும் விண்மீன்கள்
கதைகள் சொல்லும் பாட்டிகள்.
பறம்புக்காட்டில் பாரியின் 
தேரில்சிரித்த கொடிமுல்லையே 
வந்துசிரிக்கும் வானவில்.
பாரி சூடிய ஆதினி
அவள் கொண்டுமுடிந்த கொண்டையே
கறுத்துத்திரண்ட கொண்டல்கள்.
மழையில்துளிர்த்த‌ முதல் துளிகளே
சிப்பியில் உயிர்த்த‌ முத்துக்கள்.
இதுவெல்லாம்
ஏதோ பொழுதுகளில் 
நீலவண்ண வெளியில்
நீயும் நானும் 
சொல்லாடிய மொழிகள்
நீ மறந்தும் இருக்கலாம்.
ஆனால்
நாமும் தொலைந்த கணங்களே
மகிழ்ந்து முகிழ்ந்த கணங்கள்
மறக்க இயலாது.
மறுக்கவும் இயலாது.
தாலாட்டும் வானம்தானே சாட்சி !!

- ரமேஷ் கோபாலகிருஷ்ணன், பீனிக்ஸ், அமெரிக்கா

**

உள்ளத்தில் புயல் அடித்தது !
இருந்தும் உதடுகளுக்கு அமைதியாய்
ஒரு மௌனப்பூட்டு !!
பெயர் தெரியாத இலட்சம் பூக்களின்
வாசம் கூட்டி, வசந்தம்
நாசிக்குள் செலுத்தியது !!
உடலெங்கிலும் ஒரு வெப்பம் !
இருந்தும் சில பனிக்கட்டிகள்
படரும் மூளைக்குள் !!
மேகத்திலிருந்து இறங்கி
இடியும் மின்னலும்
இதயத்தில் நுழைந்தது !!
படபடத்துக் குழைந்தது !!
மெதுவாய் அவள்
என்னைத்தாண்டிச்சென்றாள்,
வியர்வை மறந்து,
மழை நீரை சுரக்கத்தொடங்கியது
என் உடல் !!
இப்படி , இப்படி,  எனக்குள் மாறிவரும்
வானிலைக்கு பெயர் தான் காதலோ ?  

- கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி, புதுவை

**

நாசூக்காக நாசி பக்கம் வீசி போன 
வாசம் வந்து பாசமாக பேசு மென்றோ 
காதலின் வானிலை ஏசுதிங்கே பதில் 
கூற வியலாது வாய்க் கூசுதிங்கே 

விரும்பியவை கிடைத்துவிட்டால் 
கோர்த்திடுவார் சரமாய்ப் புகழாரம் 
கிடைக்காத பட்சத்தில் வீதியில் 
இறங்கி வந்து அடித்திடுவார் டமாரம்

கண்ணுக்கு தெரிவதில்லை 
நெஞ்சிக்குள் இருப்பதெல்லாம்
பஞ்சிக்கும் நெருப்புக்கும் பகை 
புகையாத இடமில்லை ஆனாலும் 

வஞ்சி மகளோ வஞ்சித்து விட
பஞ்சாய்ப் பறக்குதடி காதலின் 
வானிலை அறிக்கை யிட்டதனால்
மழைவருமோ புயல்வருமோ சேர்த்த

மானம் மரியாதை கௌரவம் 
நொடிப் பொழுதில் பறந்திடுமோ 
அவரவ ரச்சமே கயிறாகி திரிந்து 
எவரெவர் கழுத்தை நெருக்குமோ

பொருத்திடுவோம் பொங்கி வழியும் 
எரியும் விறகை இழுத்திடும் ஞாயா லயம் 
அனைத்து காதலின் வானிலை 
செய்திகள் தமர்ந்திடும் தன்னாலே 

- ஆபிரகாம் வேளாங்கண்ணி

**

ஆகாரம் 
விளைந்திட
அள்ளி தந்திடும்! 

ஆழ்க்கிணற்றின்
 அடிவயிறோ காய்ந்திருக்க!

பசுமைப்பாய் விரித்திட 
பாய்ந்திடும் நதி,ஆறு பாலைவனமாகி இருக்க!

குளம்,குட்டை குப்பைத்தொட்டி,கழிவறை  ஆகிப்போயிக்க!

நிலை கண்டு 
நிலத்தினில் நின்று
நிழல் - உயிரின் சுவாசம் மேகம் தீண்ட!

நீலவானம் 
நிறம் மாறி
காதல் வானிலை'யில் 
கருவண்ண ஆடை மாற்றி!

நொடியில் 
மல்லிகை சரம் சூடி! 

மோகத்தினில் 
பொழிந்திடும் முத்தமழையோ! 

வழிந்தோடியது 
வையகமெங்கும்
வயல்வெளி'களை தேடி!

**

ஏக்கத்தில்   பைத்தியம்போல்   உளற   வைக்கும்
    ஏளனமாய்   ஊராரைப்   பார்க்க   வைக்கும்
தூக்கம்தாம்    வாராமல்   புரள   வைக்கும்
    தூயபாலும்   பழமெல்லாம்   கசக்க   வைக்கும்
நீக்கமற   யார்முகத்தைப்   பார்த்த   போதும்
    நினைத்தவரின்   உருவந்தான்   தெரிய  வைக்கும்
தீக்கனல்தாம்    பட்டவுடல்   தகித்தல்   போல
    திரும்பதிரும்ப   நினைவுநெஞ்சைத்   துடிக்க   வைக்கும் !

உடல்தன்னை    இளைக்கவைத்துப்   பெண்கள்    மேனி
    உள்ளயெழில்   பசலையாக    மாற   வைக்கும்
இடம்தேடிச்   சந்திக்கத்    தோழி   தோழன்
    இருவரையும்    உதவிக்காய்க்   கெஞ்ச   வைக்கும்
படபடப்பில்   உடல்தளர்ந்து  நடுங்கிக்  கைகள்   
    பணிகளினைத்   தவறுகளாய்   செய்ய  வைக்கும்
மடமையொடு   மறதிவரும்   சொன்ன   சொல்லை
    மறுபடியும்   மறுபடியும்    சொல்ல   வைக்கும் !

அருகருகே   அமர்ந்தபடி   பேசிப்   பேசி
    அலைபாயும்   மனமடக்க   முடிந்தி   டாமல்
ஒருநொடியும்   பிரிந்திடாமல்   அணைப்ப   தற்கும்
    ஓயாமல்  நினைவுகளில்  மூழ்க   வைக்கும்
கருவாகிக்   கவிதைகளாய்   எழுதி   எழுதி
    கரம்பேசிக்   குறுஞ்செய்தி    அனுப்பி   வைக்கும்
திருமணத்தை   எதிர்த்தவரை   எதிர்த்தே   ஓடித்
    திருத்தாலி  கட்டுதற்கே  துணிய  வைக்கும் !

- பாவலர்  கருமலைத்தமிழாழன்


**
எனக்கு உயிரானவளே - காதலின்  வானிலையில்
நண்பர்கள் குரு கிரகமாகி விடுகிறாா்கள
எதிரிகளாே சனி கிரகமாகி விடுகிறாா்கள்
நீ வானில் வீதியுலா செல்வதைப்படம்பிடிக்கவே
பூமியிலிருந்து செயற்கைக் கோள்கள்யாவும் படையெடுக்கின்றன;
கோள்களின் சுழற்சியெல்லாம் சட்டென நிற்கிறதடி
உனது நடை அழகை காண்கையில்;
உனது பாதம்படாத நட்சத்திரப் பூக்களெல்லாம் - காதலெனும்
வானிலையில் தன்னைத்தானே எரித்துக் கொள்கின்றன;
விண்கற்களும் ஒன்றொடொன்று மோதிக்கொள்கின்றன - இப்பேரழகியைப்
பெறுவதற்கு ஆடவனாய் பிறக்கவில்லையே என்றெண்ணி;
என்னவளே காதல்வானில் மறந்தும் சிரித்துவிடாதே
மேகமற்ற நிலையிலும் மின்னல் தோன்றிவிடும்;
வானவில் ஆடையும் வளைந்தேவிட்டது - நீ
அணிந்த கைத்தறி ஆடையழகுக்கு ஈடாகாமல்;
இடி தாக்குதல்கூட ஏதுமற்றுப்போகிறதடி - நீ
சட்டென வீசிய காந்தப்பாா்வைக்கு முன்னால்;
வானவெளியில் உன் கருங்கூந்தலையும் உலறவிடாதே -
கருமேகம் மயங்கி உன்னை காதலித்துவிடப்போகிறது;
என்னவளே காதலின்வானிலையில் என்னிலையை மறந்தேனடி..
உன்னிலையோடு ஒருநிலையாய் சிலையாய் நின்றேனடி...

- கவிஞர் - இரா. விநாயகமூர்த்தி 

**
மின்னல் ஒளியில் 
செய்த மின்சாரவிழியே..
மழையோடு மறைந்து 
தோன்றும் வானவில்லே..
மனதிற்குள் பெய்திடும்
அழகான காதல்மழையே..
காற்றோடு மேகமும்
பேசும் கவிதைமொழியே..
புயலையும் தென்றலாய்
தவழவைத்த காதலியே..
கனவுஎன்னும் வானில்
மிதக்கவைத்த நிலவே..
காதல்மழை சுமந்து
செல்லும் கருமுகிலே..
வெயிலோடு மழையும்
கொஞ்சிய காலநிலையே..
விண்ணை பெண்ணாக்கியது
காதலின் வானிலையே..
- கவிஞர் நா. நடராசு

**
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum