சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஆசைப்பட்டது கிடைக்காத போது....
by rammalar Today at 14:28

» சிரி... சிரி...
by rammalar Today at 11:29

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by rammalar Today at 8:20

» வாட்ஸ் அப் கலக்கல்
by rammalar Today at 7:39

» கருவிழியுடன் கண் திறந்து பார்த்த ஸ்ரீனிவாசப் பெருமாள்
by rammalar Yesterday at 13:15

» ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா
by rammalar Yesterday at 13:13

» ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்
by rammalar Yesterday at 13:11

» எது சரி… எது தவறு…!
by rammalar Yesterday at 13:09

» அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்! – கவிதை
by rammalar Yesterday at 13:07

» காதல் பாடலில் அஜித் – வித்யா பாலன்
by rammalar Yesterday at 12:58

» திட்டமிட்டதை விட சீக்கிரமே முடிந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு
by rammalar Yesterday at 12:52

» இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு - இமான்
by rammalar Yesterday at 12:47

» சமையல்! சமையல்!
by பானுஷபானா Thu 14 Mar 2019 - 13:02

» ‘நீ நீயாக இரு!’ - ஏன் இப்படிச் சொல்கிறது ஜென் தத்துவம்?
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:24

» அடையாளம் - கவிதை
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:21

» அதுக்கு அர்த்தம் அப்படி இல்லைங்க !
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:20

» மாத்திரை - ஒரு பக்க கதை
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 15:52

» வானொலி பேட்டியில், நடிகர் நாகேஷ் கூறியது:
by rammalar Sun 10 Mar 2019 - 20:01

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sun 10 Mar 2019 - 15:33

» ....இடைவெளிகளுக்கிடையே - கவிதை
by rammalar Sat 9 Mar 2019 - 19:04

» இடைவெளி - {கவிதை} - கே.ருக்மணி
by rammalar Sat 9 Mar 2019 - 18:57

» ‘இடைவெளி’ - வாசகர்களின் கவிதைகள்! -
by rammalar Sat 9 Mar 2019 - 18:54

» மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை-டெல்லி இடையே பெண்களே இயக்கும் விமானம்: இன்று காலை பறக்கிறது
by பானுஷபானா Sat 9 Mar 2019 - 13:25

» பெண்மையை போற்றும் மகளிர் தினம்: சுக்கிரன் கூறும் ஜோதிட ரகசியங்கள்!
by rammalar Fri 8 Mar 2019 - 0:23

» மகளிர் தினம் வாழ்த்துக்கள்
by rammalar Fri 8 Mar 2019 - 0:20

» 17 வயதில் பைக் ரேஸ் சாம்பியன் - அசத்தும் சென்னை பெண்!
by rammalar Thu 7 Mar 2019 - 23:58

» மனசு பேசுகிறது : மரணம் தரும் வலி
by சே.குமார் Mon 4 Mar 2019 - 16:34

» பல்சுவை- இணையத்தில் ரசித்தவை-1
by rammalar Sun 3 Mar 2019 - 20:26

» வாழ்த்த வயதில்லை எனபதால், தலைவரை தாழத்தி பேசுவார்...!!
by rammalar Sun 3 Mar 2019 - 20:09

» சிவனும் அரியும் ஒன்றான சிவன்ராத்திரி!
by rammalar Sat 2 Mar 2019 - 15:10

» எஸ்.எம்.எஸ். - கவிதை
by பானுஷபானா Fri 1 Mar 2019 - 15:24

» கவிதை கஃபே : விரல்கள் கோதும் மழைப் பகல்!
by rammalar Wed 27 Feb 2019 - 14:34

» கவிதை கஃபே - முகம் ஒளிரச் சிரிக்கிறது பௌர்ணமி!
by rammalar Wed 27 Feb 2019 - 14:24

» கூந்தல் கீற்று! - கவிதை
by rammalar Wed 27 Feb 2019 - 14:20

» அம்மா! - கவிதை
by rammalar Wed 27 Feb 2019 - 14:19

.

தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!

Go down

Sticky தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!

Post by rammalar on Fri 11 Jan 2019 - 5:53

"இஞ்சி" சுவை சேர்த்த  தேநீர் 
கொஞ்சி  பேசி  அம்மா  கொடுத்தால் 
மிஞ்சிவிடுமே  "தேநீர்ப் பொழுது!"
சோர்ந்த  உள்ளத்தில் 
சேர்ந்த வருத்தம்  என்ற  அழுக்கினை 
தேர்ந்தெடுத்து  ஓட்டும் 
வல்லமை  படைத்த  இனியபொழுது 
அது  -  "தேநீர்ப்பொழுதுகள்"
தேர்வுக்கு  படிக்க  பாடம் 
தேர்வு செய்யும்  நேரம் 
கோர்வையில்லா  எண்ணங்கள்  வந்து 
சோர்வை  கொடுக்க  முயலும்  தருணம் 
போர்வைக்குள்  முடங்காமல் 
"தேநீர்"  அருந்தும்  அப்பொழுதில் 
எல்லா  சோகமும்  ஓடி 
நல்ல  படிக்க  தெம்பு  தரும் 
இனியப்  பொழுது  
அது  -  "தேநீர்ப்  பொழுதுகள்!"
"தேநீர்ப்  பொழுதுகளை" அனுபவிப்போம் 
வாழ்க்கையில்  உற்சாகமாக  இருப்போம்!


- பிரகதா நவநீதன், மதுரை


**


தெருமுனையில் டீக்கடையில்
தினந்தோறும் கூட்டம்
பண மதிப்போ பொருள் வரியோ 
மதியின் கார்டூனோ
சரியா தப்பா என ஒரு சாரார் 
வழக்கிட்டு வாதாடிக் கொள்வர். 
தினமணியோ-கதிரோ இன்னும் 
பல நாளிதழை (பழைய தானாலும் பரவாயில்லை என) 
ஒரு சாரார் படிப்பர்,
நானும் +2 வினா விடைக்கு 
நாளிதழைப் புரட்டிய துண்டு ஆர்வமாய்,
எனக்கென்னவோ இன்னமும் 
நாளிதழின் செய்திகளில் தேனீர் வாசம் வீசி 
நாவில் இனிக்கிறது 
அப் பழமை மாறா தினங்களில், 
இப்போது நாளேடுகள் டிஜிட்டலாக 
டீயும் டிப் டீ ஆக, 
மறந்தும் மறத்தும் போயிற்று 
அந்த மண் மணம் மாறாத பழைய 
தேனீர்ப் பொழுதுகளின் _ சுவடுகள்.
இப்படி எமை ஏக்கப் படுத்தி
நாகரீக நிழலில் நாற்காலி போட்டு வீற்றிருக்கிறது
அந்தக் காலத் தேனீர்ப் பொழுதுகள் 


- செந்தில்குமார் சுப்பிரமணியன்


**


கடின வேலையும்
பதட்ட வேளையும்
செவ்வானமாய்
சிவக்க விட்டு


வாடிக்கையாளரின்
வன் முகத்தால்,
கோபம் கெடுத்து
மென் முகத்தால்
மென் சிரிப்பு
உதித்து,


அரசியலும்
விளையாட்டும் பேசும்
இளைஞர்களின் இடையே
பகை ஏற்படா வண்ணம்
புகுந்து சிரிக்க விட்டு
தேநீர் கடை முன்,


அப்பாடா என்று,
பெருமூச்சு வாங்கி
ஒவ்வொரு நாளும்
இடை வெளி  தான்
இன்பத் தேன்
என நினைத்து
மகிழும் தருணங்கள்....
 -  ப. வீரக்குமார், திருநின்றவூர்.


**
                  
தேநீர்ப் பொழுதுகளே வாழ்வின் திகட்டாத நேரமென்று
உரக்கச் சொன்னாலும் உலகத்தின் மூலையெல்லாம் 
ஆமாம் ஆமாமென்று அதி அற்புதமாய்த் தலையாட்டி
அப்படியே அதையேற்கும்... அதுதானே உலக பானம்!


அடைமழையின் பொழுதுகளில் அரவணைக்கும் தோழர்களுடன்
ஆவிபறக்கும் தேநீரை அருகிருந்து பருகையிலே
உள்ளத்தின் ஆழத்தில் உற்சாக நாதமொன்று 
மெல்லக் கேட்பதற்கு மேனிலத்தில் ஈடுண்டா?


தேநீரால் தீராத திட்டங்கள் ஏதுமில்லை!
உற்சாக பானமது!உறவை வளர்க்குமது!
இந்த விருந்துக்கு ஏகமாய்ச் செலவில்லை!
ஆனாலும் தரும் பயனோ அதிகம்... மிகவதிகம்!


அசாமோ கேரளாவோ அருகிலுள்ள ஈழமோ
எந்த நாட்டுத் தேநீருக்கும் இயல்பான சுவையுண்டு!
பனிக்காலத் தேநீருக்கு அதிகச் சுவையுண்டு!
அதனையே உணவாக ஆக்குவோர் பலருண்டு!


ரஸ்க் பிஸ்கட் நயமான கேக்கென்று
எதனோடும் இணைசேர்ந்து இன்பத்தைக் கொடுப்பதற்கு
இதுவென்றும் யோசிக்காது!இதன்மூலம் மக்களுக்கு
கலப்பு மணம் செய்வதையே களிப்பாய் நினைவூட்டும்!


ஆக்கம் மிகத்தருமாம்!அப்படியே அது தருகின்ற
ஊக்கம்...உற்சாகம்...உண்மையாய் மிகவதிகம்!
தேக்கமின்றி வாழ்க்கையிலே தேர்ந்திடவே அனைவருமே
பார்த்தே தேநீரைப் பருகிடுதலே நல்லுசிதம்!


- ரெ.ஆத்மநாதன்,   கூடுவாஞ்சேரி


**


மழை  சாரலோடு  தென்றலாய்  
சில்லிடுகிறது காற்று,
கொட்டும்  மழையின்  சத்தமோ 
பின்னிசையாய்  ரீங்காரமிடுகிறது,
தூரத்தில் சிறுபிள்ளைகள் 
தேங்கிய  தண்ணீரில் கப்பல் 
விட்டு  விளையாட,
ரசித்தபடி  நான்.
அருகில் வந்தாள் அவள், 
துவட்டிய  தலையோடு 
இரண்டு தேநீர் கோப்பைகள் 
கையில்  ஏந்தி, 
கோப்பையை  வாங்கியபடி  
மெய்சிலிர்த்தேன், 
அவள் அழகைக் கண்டு, 
அவள் இரண்டு கைகளால் 
அந்த கோப்பையை பிடித்து 
தேநீரை ஊத  
அந்த சூடான ஆவியும் 
அவளை தீண்ட, 
சற்று பொறாமையும் 
என்னை தொற்றி கொண்டது,
அவளை வைத்தகண்  
வாங்காமல் பார்ப்பதை அவளும்  அறிய ,
கண்களால்  அவள் என்னிடம் பேச ,
அந்த  தேநீர் பொழுதில்,
மறைந்து  இருந்த 
எங்கள் காதல் கரை புரண்டது!


- பிரியா ஸ்ரீதர்   


**


நற்பொழுதாம் தேநீர் பொழுது - அது 
இல்லையெனில் கண்ணீர் பொழுது!
பள்ளிப்படிப்பின் இடைப்பொழுது - அது 
நண்பன் பணத்தில் நன்பொழுது!
கல்லூரியின் கடைப்பொழுது - அது
இடர் தளர்வுகளை நீக்கும் தனி  பொழுது!


காதல் கொண்டேன் கன்னியிடத்தில் 
இரவு முழுவதும் தேநீர் பொழுது!
ஞாயிறு பொழுதை வீட்டில் கழித்தால்
மணிக்கொரு தேநீர் பொழுது!


பணிக்குச் சென்று வேலைப்பார்த்தால் 
மனம் எதிர்பார்க்கும் தேநீர் பொழுது!
மார்கழி மாத குளிரில் கூட
இதமாய் அருந்தும் தேநீர் பொழுது!


முப்பொழுதும் இதை அருந்துவதால்,
முக்தி நிலைதனை அடைந்திடுவோம்!
எப்பொழுதும் இதை பருகுவதால் பரவசநிலையில் பறந்திடுவோம்!
தேநீர் பருகி வாழ்வதனால்,
இதய நோய் எவருக்குமில்லை!
அளவாய் அருந்தி வளமாய் வாழ,
தேநீர் போல ஒரு நீரும் இல்லை!


-செந்தில்குமார், திருநெல்வேலி


**


உழைத்ததால் மனமும் 
உடலும் உள்ளமும் 
களைத்துப் போன நேரங்களில்
கணநேர ஓய்வில் 
கவ்விப் பிடித்துள்ள 
கவலைத் துயரங்களை மறக்க 
கனிச்சுவையும்  சுடுநீரும் 
கலந்த உணர்வூட்டல் தரும் 
களிப்புத் தரும் சிறு மருந்து 
தேநீரை சுற்றத்தோடும் 
தேடி வரும் சொந்தத்தோடும் 
தேனமுதாய்ப் பருகிய 
தேடக் கிடைக்காத பொழுதுகள் 
தென்றல் வந்து சில சமயம் தீண்டிப் 
போகும் உணர்வுகள் 
தெவிட்டாத மலர்க்கணைகள் 


- பாலா கார்த்திகேயன் 
**
தேநீர்ப் பொழுதுகள் இல்லையென்றால்
சுவைப்பதே இல்லை வாழ்க்கை


காலியாக இருக்கும் 
கண்ணாடிக் கோப்பையும் 
தேநீரால் நிரம்ப வேண்டுமென்றே
தேவனை வேண்டுகிறது


செய்யும் வேலையிலிருந்து 
சிறிது விலகித்
தோழமைகளோடு தேநீர்ச்
சுவைக்கவில்லை என்றால்...
மனமடங்க
மாத்திரை கேட்டு 
மருத்துவமனைக்கு ஊர்வலம் போயிருப்போம். 


எந்த இலக்கிய நிகழ்வும்
சச்சரவு இல்லாமல் முடிந்ததில்லை
தேநீர் இல்லாமல் நடந்ததில்லை


எங்கள் 
எழுத்தாளர்கள் முன்
ஞானபீடத் தகட்டையும்
தேநீர்க் கோப்பையும் வைத்தால்
மொத்தக் கூட்டமும்
மொய்க்கும் தேநீர்க் கோப்பையைச் சுற்றி.


இந்தக் கவிதையைப் பிறகு முடிக்கிறேன்
இப்போது
எனக்குத் தேநீர்ப் பொழுது.


-கோ. மன்றவாணன்


**


'கொழுந்து'  அதனை குழவியாய்ப் பாவித்து சீராட்டும் பக்குவத்துடன்  


 பின்னோக்கி இழுக்கும்  பாரம் தாங்கி தலையை முன் தள்ளி 


முதுகில் பொதி சுமந்து வில்லாய் வளைந்த மேனியுடன் 


மழையும் வெயிலும் எங்களுக்கல்ல என்கிற தியாக நோக்கில்   


இடிந்த நிலையில் அமைந்த இருப்பிடங்களில் வாழ்ந்து  


மறைவிடம் சரியாக அமையாத கழிப்பறைகளில் கழித்து


 உழைப்பிற்குண்டான ஊதியம் கிடைக்கப் பெறாமல் 


உடலை மறைக்க நேர்த்தியான உடையில்லாமல் 


குளிரை மறுக்க இதமான போர்வையில்லாமல் 


அரை வயிற்று உண்டிக்கு அல்லல் பட்டு உழைக்கும் 


 உங்களின் துயரங்களை அறவே மறந்து விட்டு 


நிதமுமே இனிமையாக்கிக் கொள்கிறோம்


 எங்களின் தேநீர் பொழுதுகளை.. 


பான்ஸ்லே.. 


( மாலதி சந்திரசேகரன்) 


கொழுந்து = பக்குவம் செய்ய பறிக்கப்படும் தேயிலையின் பெயர் 
-
நன்றி- கவிதைமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15093
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum