சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஒரே ஒரு மிளகு போதும் இந்த குளிர்காலத்தை கடந்துவிடலாம்!
by rammalar Yesterday at 5:07

» வெண்பூசணியின் மருத்துவ குணங்கள்:
by rammalar Yesterday at 4:48

» வெண்பூசணியில் இவ்ளோ நன்மைகளா?
by rammalar Yesterday at 4:42

» சினிமா செய்திகள் - மகளிர்மணி
by rammalar Mon 21 Jan 2019 - 21:20

» மனசு : முருகன் என் காதலன்
by சே.குமார் Mon 21 Jan 2019 - 16:46

» பொல்லாத புணர்ப்பு தோஷம் போக்கி பூரிப்பான திருமண வாழ்க்கை தரும் தைப்பூச விரதம்!
by rammalar Sun 20 Jan 2019 - 22:07

» கடனை கட்டு, இல்லைன்னா வெளிநாட்டுக்கு ஓடிப்போ...!!
by rammalar Sat 19 Jan 2019 - 16:47

» ஆண்களுக்கான பதிவு ...!!
by rammalar Sat 19 Jan 2019 - 16:46

» பொம்பளைங்களை அழ வைக்காதீங்க. நல்லாவே இருக்கமாட்டீங்க''
by rammalar Sat 19 Jan 2019 - 16:45

» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...!!
by rammalar Sat 19 Jan 2019 - 16:43

» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..!
by rammalar Sat 19 Jan 2019 - 16:42

» கொத்தனார் சூடி
by rammalar Sat 19 Jan 2019 - 16:41

» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…!
by rammalar Sat 19 Jan 2019 - 16:41

» சரக்கு போக்குவரத்து சேவைக்கு 'டிரோன்' அனுமதி
by rammalar Sat 19 Jan 2019 - 7:23

» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்
by rammalar Sat 19 Jan 2019 - 7:22

» வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணிநேரத்தில் 'ரீஃபண்ட்' : விரைவில் அறிமுகம்
by rammalar Sat 19 Jan 2019 - 7:21

» 24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத
by rammalar Sat 19 Jan 2019 - 7:20

» எம்.ஜி.ஆர்., நாணயம் இன்று வெளியீடு
by rammalar Sat 19 Jan 2019 - 7:18

» சபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி
by rammalar Sat 19 Jan 2019 - 7:17

» வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை
by rammalar Sat 19 Jan 2019 - 7:15

» வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி
by rammalar Sat 19 Jan 2019 - 7:09

» ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து
by rammalar Sat 19 Jan 2019 - 7:07

» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு
by rammalar Sat 19 Jan 2019 - 7:06

» அமெரிக்க வாழ் இந்தியர்கள் 3 முக்கிய பதவிகளில் நியமனம்
by rammalar Sat 19 Jan 2019 - 7:05

» ரூபே கார்டு மூலம் கதர் துணி ஷாப்பிங் செய்த மோடி
by rammalar Sat 19 Jan 2019 - 7:04

» தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி
by rammalar Sat 19 Jan 2019 - 7:03

» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை
by rammalar Sat 19 Jan 2019 - 7:02

» சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்
by rammalar Sat 19 Jan 2019 - 7:00

» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது
by rammalar Sat 19 Jan 2019 - 6:59

» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்ப
by rammalar Sat 19 Jan 2019 - 6:58

» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு
by rammalar Sat 19 Jan 2019 - 6:57

» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
by rammalar Sat 19 Jan 2019 - 6:56

» வனவாசம்! வாசகர் கவிதைகள்!- கவிதைமணி
by rammalar Fri 18 Jan 2019 - 5:43

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Thu 17 Jan 2019 - 17:25

» மனக்கோட்டை கட்ட இங்கு வாஸ்து பார்க்கப்படும்...!!
by rammalar Thu 17 Jan 2019 - 17:22

.

» தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!

Go down

Sticky » தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!

Post by rammalar on Fri 11 Jan 2019 - 5:56

தேனீர்ப் பொழுதுகள்
விழி திறக்க வந்து நிற்கும்
படுக்கை அறையிலேயே...


விடியலை விழிக்க வைத்து
நீர் வளாவி
சிற்றுண்டித் தயாரிப்பில்
நேரம் கருதி
அவசர அன்னோன்யத்தில்
ஊட்டி விட்டு
மதியத்திற்கும்
கூட வரும் அடுக்கு உணவு பாக்சும்,
தேனீர் சுமக்கும் பிளாக்சும்,
வாசலில்
பறக்கும் முத்தங்களோடு...


மாலையில்
வெறுங்கையோடு திரும்பினாலும்
எதிர் நோக்க 
பார்வையில் விரிந்திருக்கும்
சிற்றுண்டியும் நொறுக்குத் தீனியும்
மேசை மீது தேனீரோடு...


பிள்ளைகளுடன் கொஞ்சிவிட்டு
படுக்கப் போகும் முன்னான சமிக்ஞைக்குப் 
புரண்டுப் படுக்க
பெருமிதங்கள் வெளிச்சம் பெறும்
இரவு...


எனத்
தொடரும் எதுவும்
வளர்ந்த பிள்ளைகளுக்கு முன்
பரிமாற்றம் நிகழாமல்
அரவமற்றப் பொழுதுகளில்
சிணுங்குகளில் சிலிர்க்கும்
மனது
வேண்டா வெறுப்பாக...


இடைவெளியானதில்
பராமரிப்பெல்லாம்
பிள்ளைகள் வசமானதில்
தனியனாகிவிட்ட நினைப்பற்ற
பொழுதில்
பணி நிறைவுப் பெற்றாகி விட்டதில்


இப்போதெல்லாம்
தேனீர்ப் பொழுதுகள் தேய்ந்து விட்டதில்
வலிந்து கேட்க வேண்டியிருக்கிறது
ஆவியற்ற தேனீராவது...


- அமிர்தம் நிலா, திருநின்றவூர்


**


செய்திதாள்களை வாங்கமுடியாத சூழலில் 
தேநீர்க் கடைக்குச் சென்று
தேநீர் அருந்தியப் பொழுதுகளில்
செய்திகளைப் படித்ததைவிட
வறுமையை படித்தது அதிகம்...


அடுக்கடுக்காய் கவலைகள் இருப்பினும்
ஆருயிர் நண்பர்களோடு பேசியவண்ணமாய்
தேநீர்க் கடையில் தேநீர் அருந்தும்பொழுதினில்
மனச்சுமைகள் யாவும் காற்றில் கரைந்தோடும்...


தன்குடும்பம் - உணவினை உண்பதற்காக
தேநீரையே மட்டுமே - தனது
உணவாக்கி உழைக்கும் உத்தமர்களின்
தேநீர்ப்பொழுதுகள் - என்றும்
வணங்குதற்குரிய தேநீர்ப்பொழுதுகளாகும்...


தொடர்வண்டியிலே - பயணிகளுக்குதான்
தேநீர்ப்பொழுது - ஆனால்
அதனை விற்பவனுக்கோ - அந்த
விற்பனையைப் பொறுத்தே
வாழ்க்கைப் பொழுது...


கடவுளுக்கு உண்ணாவிரதம் என்றுக்கூறிவிட்டு
நாள்முழுக்க தேநீரோடு திண்பண்டங்களையும்
அளவுக்கு அதிகமாக உண்டதை
நினைக்கையில் - அறியாமையும்
நகைப்புமே இன்றும் வெளிப்படுகிறது ..


வரன் பாா்க்கும் தருணத்திலும் -
வரன்கிடைத்த பின்னர் - திருமண
அழைப்பிதழ் கொடுக்கும் தருணத்திலும் - 
அன்பின்பிடியால் - தேநீரை ஓரில்லம்
தவறாது அருந்திய - விருந்தோம்பல்
தேநீர்ப்பொழுதுகள் என்றுமே மறவாது...


அலுவலகத்தில் தேநீர் இடைவெளியில்
வேலையோடு மன அழுத்தங்களையும்
இறக்கிவைத்த தேநீர்ப்பொழுதுகள்
தேநீரைவிட சுவையானவை...


இதயம்வருடும்
மழைக்காலப்பொழுதுகளில் மட்டுமல்ல -
இரத்தம் சூடேறும்
கோடைக்காலப் பொழுதுகளிலும்
பித்துபிடித்த மனம்  - தேநீர்ப்
பொழுதுகளையே விரும்பி அருந்துகிறது....


ஜல்லிக்கட்டு போராட்டக் களத்தில்
போராடியவர்களுக்கு உணர்வோடு - தேநீரைக்
கொடுத்து உதவிய நல்லோா்களின்
உணர்வுமிக்க அப்பொழுதுகள் - என்றென்றும்
வரலாற்று சிறப்புமிக்க தேநீர்ப்பொழுதுகளாகும்...


- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி


**
சோம்பிய  உடலில் 
உற்சாகம்  கொடுக்கும் 
அற்புத பானம்  "தேநீர்"
நண்பர்களுடன் அமர்ந்து 
உல்லாசமான  தலைப்புகளில் 
அலசி  ஆராயும்  நேரம் 
கையில் "தேநீர்  கோப்பையுடன்"
இருந்தால்  நல்லப்பொழுதாய் 
சுறுசுறுப்பை  கொடுக்குமே!
தேநீர்  கடைகளில் 
சிநேகிதர்களின்  பாசமும்,
நேசமும்  ஒருசேர 
உரையாடலைத்  தொடங்கி 
"தேநீர்" அருந்தும் அற்புதபொழுதில் 
உலகமே  மறக்குமே!
துள்ளித் துள்ளி   எழும் அலைபோல 
கிள்ளிக்  கிள்ளிய  பிஸ்கட்டுடன் 
மெல்லிய  "தேநீர்"  பானமும் 
பொழுதுகளை  இனிமையாக்குமே!   


- உஷா முத்துராமன், மதுரை


**


மனசெங்கும் இடிச்சத்தம் 
அவன் காதுகளை மூடிக்கொண்டான்


வெளியில் ஓடினான்
கருமேகங்கள் அவனை சூழ்ந்துக்கொண்டது


சில்லென வீசிய காற்றும் மழையின் சாரலும்
அவனை அமைதிப்படுத்தியது


மீதம் உள்ள குழப்பங்களை அமைதிப்படுத்த
பயண உலகம் ஆட்கொண்டது


எல்லையற்ற ஆனந்தத்தில் பயணித்துக்கொண்டே இருந்தான் 
மாலைபொழுதின் மயக்கம் அவனது தனிமையை உணர்த்தியது


இறுதியாக தேனீர் குடித்தான் - முடிந்ததென்று நினைத்த பயணம்
தொடர்ந்தது தேனீர்ப் பொழுதாக தனிமையை தகர்த்து….


- கலைபரமேஷ்.ம 


**


தேநீர் குவளைகளின் உயர வேறுபாட்டில் 
ஆரம்பிக்கும் சொற்போர் 
எங்களிருவரின் உயர வேறுபாட்டிற்கு 
திசை மாறி மற்போராகியிருக்கும்/
சரிசமனாய் குவளைகள் வந்த நாளில்
தேநீர் அளவீட்டில்  குறை பாடிருப்பதாக 
மீண்டுமொரு சொற்போரை அக்கா ஆரம்பித்திருந்தாள் 
ஆதவனோடு போட்டியிட்டு நித்தமும் கொல்லைப்புறத்தில் 
அரங்கேறும் போர்கள் ஒரு தேநீர் பொழுதில் நிறுத்தம் பெற்றன/
கொல்லைப்புறத்தில் உலவிய இடுகாட்டு அமைதியை 
எவரும் குலைக்காமலே பொழுதுகள் வருடங்களாகி கழிந்தன/
ஓர் தேநீர் வேளையில் நிரந்தரமாக  
என் தமக்கை பிரிந்த செய்தி வந்தது/
எங்கள் வீட்டு கொல்லைப்புறம் 
அமைதியை கலைத்து கதறி அழுதது.
 
- தேவி பிரபா


**


உலவி வரும் உயிரினங்களிடத்தில் 
உயிரைக் கைகளில் கொண்டு 
நிலவி வரும் பருவநிலை மாற்றத்திலும் 
நற்சுவை நல்கி நறுமணம் கொண்டு 
நின்றாடும் நந்தவனம் தான் 
பல நூறு பச்சை புன்சிரிப்புகள் கொண்ட 
பசுந்தேயிலைத் தோட்டங்கள் 
உற்பத்தி உயர்ந்தாலும்
அங்கே உழைப்பவனின் ஊதியம் 
வாமனனின் உயரம் தான் ! 
தேயிலையின்த் தன்மைகளோ சில வேறு 
தேநீரின் சுவைகளோ பல வேறு 
தேயிலைத் தொழிலாளியின் துயரோ ஒரு நூறு ! 
உழைப்பவருக்கு ஓர் ஊக்க மருந்து
உறங்கி எழுபவருக்கு ஓர் உற்சாக மருந்து 
பாலைவனத்தில் அரிதாய் பிறக்கும் 
மழையைப் போல், பயணப் பாதைகளில் 
பிறக்கும் புத்துணர்வு மருந்து 
கண்ணீரின் பொழுதுகள் பலவற்றை புறந்தள்ளி என்றுமே 
தெவிட்டாதத் தென்றலைப் போன்ற 
பொழுதுகள்தான் அந்த "தேநீர்ப் பொழுதுகள்"  
 
- கார்த்திக் பாரதிதாசன் 


**


ஆவி பறக்கும் தினசரிகளின்
செய்திகளால் 
ஆறிப் போயிருந்தது 
தேனீர்


அந்தக்
காலைப் பொழுதின் பனிக்குளிரில்
கனன்று 
அனல் உமிழ்ந்து கொண்டிருந்தது
உடலைக்காட்டிலும்
மனம்


வன்புணர்வில்
சிறுமியுடன் நைந்தது பெண் தோல்
எனினும்
சிதைத்து மகிழ்வதும்


கை மாறும் லஞ்ச லாவன்யம்
கள்ளக் கடத்தல்
கொலை கொள்ளை
மலிந்து விட்ட ஊழலுடன்


போதையென
சாதிச் சண்டைகள்
மதங்களின்
அதிகார போராட்டங்கள்


சதிகள்
சண்டாள நாசத்தின்
ரகசியங்கள்
சிலை கடத்தல் 
என


நிகழும் கலவரங்களால்
அற்றுப் போன அமைதி
எந்த தேனீர்ப் பொழுதில்
மகிழ்ச்சி வந்து
தினசரிகளின் ஊடகங்கள்
எல்லோர் மனமெல்லாம்
பரிபாலனம் செய்யும்...!?


- கவிஞர்.கா. அமீர்ஜான்


**


அலுவலகம் நுழைவு
முதல்
அன்றாட வேலைகள் சுகமா! இல்லை சுமையா?
சிரிப்பும் கோபமும்
மாறி மாறி உறவாட


வந்த தவறுகளும்
வருந்திய கணங்களும்,
எரிச்சலூட்டி


போதுமடா சாமி
இந்த வேலை என்று
வெறுத்துப் பேசி


சக ஊழியரிடம்
மீண்டும்
நட்பு பாராட்டி
உணவகம்சென்று


ஒரு கோப்பைத்
தேநீர் ருசித்து
பகிர்ந்து கொள்ளும்
இன்ப துன்ப நிகழ்வுகள்
அப்போதே காணாமலாகும்


தேயிலை நீரின்
திடமா அல்லது மாயமா!
மனதை மாற்றி
நரம்பினுள் ஓடி
மூளைச் செல்களைத்
தட்டி
மீண்டும் உற்சாகம்
தரும் உன்னத
வேலை(ளை) அது....


- முகில் வீர உமேஷ், திருச்சுழி.


**
**


என் நண்பன் சொல்வான் “ தேனிர் நேர சந்திப்பில்
  கொள்கை விளக்கம் செய்து ஆள்பிடிப்பேன் ” என்று
சில ஓட்டுக்கள் மாறி விழும் குறுகிய நேரத்தில்
  சில பிரச்சினகள் தீர்த்திடுவோம் உதவி செய்வோம்
தொழிற் சங்கம் வளர்ப்பதற்கு தேனீர் பொழுது
  தோதக இருக்கிறது ! இதுபோல நாட்டிலும் தோடரலாமே
பணம் காட்டி வாக்காளரை மாற்றும் மார்க்கம் தடுக்கலாமே
 தேனீர் நேரம் தொடரவேண்டும் திருத்திடுவோம் வாக்காளரை 


தேனீர் நேரச்சந்திப்பில் காதல் மலர்கிறது என்கின்றார்
  அது கல்யாணமாய் முடியும் வாழ்க்கை காவியமாகும்
தேனீர் நேரம் வரட்டும் என்று நண்பரை இருக்கசொல்வார்
 இனிக்கும் மேடைப் பேச்சுக்கள் கேட்கலாம் பொழுதுபோக்கும் மன்றில்
தேனீர் நேரச் சந்திப்பில் புது நண்பர்கள் நமக்குக்கிடைப்பார்
 போகும்போது சொகமாய் போய் வரும்போது மகிழ்வுடன் வரலாம்
சிலநேரம் அலுவலகப் பிரச்சினைகள் புரிதலில் வந்தகோளாறுபோகும்
  சிந்திக்கவும் நம்சிந்தனையை சரிசெய்யவும் தேனீர்நேரம் பயன்படும்


சிலர் தேனீர் நேரம் செல்லாமல் படிப்ப றையிலேயே கழிப்பர்
  சிலரைச் சந்திப்பதை தவிர்ப்பதற்கும் இப்படி செய்வார்கள்
தேநீர் பொழுதுகள் தீர்மானிக்கும் சில திருமணங்களை, கூட்டணிகளை
 அரசியல் மாற்றங்களை தலைவர்களின் தேநீர் பொழுது தீர்மானிக்கிறது
 
- கவிஞர் அரங்க கோவிந்தராசன்
 
**


அயற்சி கலைத்து 
முயற்சி கொடுக்கும் 
எண்ணங்கள் ஏற்றி 
வண்ணங்கள் கூட்டும்
பொழுதொன்று உண்டு - அது 
தேநீர்ப் பொழுது.


காலை வேளை
மட்டும் அல்லாது  
மாலையில் கூட 
மூளையின் மூலையில் 
விடியலை தூண்டிடும் - பல 
விடைகளை காட்டிடும்.


உறவினர் நண்பர் 
காதலர் என்று 
உலகோர்க்கு எல்லாம்
உயர்ந்தநற்ப் பொழுதாம் 
பகைமையைப் போக்கி - நற் 
பயன்தரும் பொழுதாம்.


தனிமையை நீக்கிட
மனநலம் பேணிட 
வாரீர் வாரீர் 
உறவோர் வாரீர் 
தேநீர் அருந்தி  - புதுப் 
பொலிவுற வாரீர்!


- கு. இராமகிருஷ்ணன்.


**
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14846
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum