சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» இயற்கை இறைவனின் நன்கொடை
by rammalar Today at 9:32

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Yesterday at 11:21

» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
by rammalar Yesterday at 10:49

» அண்ணிமார் கதை - கவிதை
by rammalar Yesterday at 10:46

» மழைச்சிறுமி - கவிதை
by rammalar Yesterday at 10:35

» கீரி (எ) கிரிதரன் - கவிதை
by rammalar Yesterday at 10:30

» காகிதப்பூவில் மரத்தின் வாசம் - ஹைக்கூ
by rammalar Yesterday at 10:27

» நிழற்பூ - கவிதை
by rammalar Yesterday at 10:19

» தாய்க் கோழி - கவிதை
by rammalar Yesterday at 10:16

» உழைப்பால்...(கவிதை)
by rammalar Yesterday at 10:15

» அய்யனார் விஸ்வநாத்தின் 'பழி'
by சே.குமார் Tue 19 Mar 2019 - 9:42

» வாட்ஸ் அப் பகிர்வு- ரசித்தவை
by rammalar Tue 19 Mar 2019 - 7:31

» அச்சம் பல வழிகளில் வெல்லப்படலாம், ..!!
by rammalar Tue 19 Mar 2019 - 7:26

» ஆசைப்பட்டது கிடைக்காத போது....
by rammalar Mon 18 Mar 2019 - 14:28

» சிரி... சிரி...
by rammalar Mon 18 Mar 2019 - 11:29

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by rammalar Mon 18 Mar 2019 - 8:20

» வாட்ஸ் அப் கலக்கல்
by rammalar Mon 18 Mar 2019 - 7:39

» கருவிழியுடன் கண் திறந்து பார்த்த ஸ்ரீனிவாசப் பெருமாள்
by rammalar Sun 17 Mar 2019 - 13:15

» ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா
by rammalar Sun 17 Mar 2019 - 13:13

» ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்
by rammalar Sun 17 Mar 2019 - 13:11

» எது சரி… எது தவறு…!
by rammalar Sun 17 Mar 2019 - 13:09

» அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்! – கவிதை
by rammalar Sun 17 Mar 2019 - 13:07

» காதல் பாடலில் அஜித் – வித்யா பாலன்
by rammalar Sun 17 Mar 2019 - 12:58

» திட்டமிட்டதை விட சீக்கிரமே முடிந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு
by rammalar Sun 17 Mar 2019 - 12:52

» இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு - இமான்
by rammalar Sun 17 Mar 2019 - 12:47

» சமையல்! சமையல்!
by பானுஷபானா Thu 14 Mar 2019 - 13:02

» ‘நீ நீயாக இரு!’ - ஏன் இப்படிச் சொல்கிறது ஜென் தத்துவம்?
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:24

» அடையாளம் - கவிதை
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:21

» அதுக்கு அர்த்தம் அப்படி இல்லைங்க !
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:20

» மாத்திரை - ஒரு பக்க கதை
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 15:52

» வானொலி பேட்டியில், நடிகர் நாகேஷ் கூறியது:
by rammalar Sun 10 Mar 2019 - 20:01

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sun 10 Mar 2019 - 15:33

» ....இடைவெளிகளுக்கிடையே - கவிதை
by rammalar Sat 9 Mar 2019 - 19:04

» இடைவெளி - {கவிதை} - கே.ருக்மணி
by rammalar Sat 9 Mar 2019 - 18:57

» ‘இடைவெளி’ - வாசகர்களின் கவிதைகள்! -
by rammalar Sat 9 Mar 2019 - 18:54

.

சமையல்! சமையல்!

Go down

Sticky சமையல்! சமையல்!

Post by rammalar on Fri 1 Mar 2019 - 18:37

[size=32]நன்றி-- மகளிர்மணி
-----------------------------------------
[/size]

சீஸ் பொடி தோசை
[size=32]

[/size]
தேவையானவை:
தோசைமாவு - 1 கிண்ணம், துருவிய சீஸ் - 1 கிண்ணம்
இட்லி - மிளகாய்ப் பொடி - 4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: சூடான தோசைக் கல்லில், ஒரு கரண்டி தோசை மாவை மெல்லிய வட்டமாக பரப்பி மேலே கால் கிண்ணம் துருவிய சீஸ் பரப்பவும். ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய்ச் சுற்றிலும் விடவும், பின்னர், ஒரு தேக்கரண்டி இட்லி மிளகாய்ப் பொடியை மேலே தூவவும். ஒரு மூடி போட்டு சீஸ் உருகும் வரை மூடி வைக்கவும், பின், தோசையை மடித்து பரிமாறவும்.

ரவா காளான் பொங்கல்!

தேவையானவை:
பாம்பே ரவை - 1 கிண்ணம்
பாசிப்பருப்பு - அரை கிண்ணம்
காளான் - 100 கிராம், நெய் - 50 கிராம்
பச்சைப் பட்டாணி - 1 கிண்ணம்
பச்சை மிளகாய் - 2, தக்காளி - 2
பூண்டு பல் - 4, இஞ்சி - சின்ன துண்டு
எண்ணெய் , உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்யைக் காய வைத்து, பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் , இஞ்சி- பூண்டு விழுது, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் - சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து , பொடியாக நறுக்கிய காளான் துண்டுகளைச் சேர்க்கவும். விரும்பினால் அரை தேக்கரண்டி கறி மசாலாவைச் சேர்த்துக் கிளறி, சற்று வெந்ததும், பச்சைப் பட்டாணியையும் சேர்த்துப் போதுமான நீர் சேர்த்து வேக விடவும். இன்னொரு அடுப்பில் பாசிப் பருப்பை வெறும் வாணலியில், வறுத்து நாலு கிண்ணம் நீர் சேர்த்து, பருப்பு வெந்து கரைந்ததும் உப்புச் சேர்த்துக் கிளறி ரவையைச் சேர்த்து கிளறவும்.
வெந்து சுருண்ட காளான் கலவையை இறக்கி, வெந்த பாசிப்பருப்பு, ரவை கலவையில் சேர்த்து, நெய்விட்டு, நன்கு கிளறி ஒன்றாக்கவும். மல்லித் தழைத் தூவி இறக்கி சூடாகப் பரிமாறலாம்.

முந்திரி - பொன்னாங்கண்ணிக் கீரை பக்கோடா

தேவையானவை:
கடலைமாவு - 200 கிராம், அரிசி மாவு - 50 கிராம், முந்திரி - 100 கிராம், பொன்னாங்கண்ணிக் கீரை - 100 கிராம், இஞ்சி, பூண்டு - 20 கிராம், உப்பு - தேவைக்கேற்ப, வெண்ணெய் - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 50 கிராம், எண்ணெய் - 1 லிட்டர்
செய்முறை: மேற்கூறிய அனைத்துப் பொருள்களையும் , ஓர் அகலமான பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விடாமல், நன்றாக கிளறவும், வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு ஏறியதும், சிறிதளவு தண்ணீர் தெளித்து, கிளறி வைத்த பக்கோடா மாவை உதிரியாகப் போட்டு, மிதமான தீயில் பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும். சுவையான முந்திரி பொன்னாங்கண்ணிக் கீரை பக்கோடா தயார். சுவையாக இருக்கும்.
- சு.இலக்குமணசுவாமி, மதுரை

தர்ப்பூசணி அல்வா

தேவையானவை:
தர்ப்பூசணிப் பழம்(சிறியது) - 1
வெல்லம் - அரை கிலோ
தேங்காய்ப்பால் - அரை டம்ளர்
நெய் - 50 கிராம், முந்திரி - 10
ஏலக்காய்த் தூள் - சிறிய அளவு
செய்முறை: தர்ப்பூசணியில் சிவப்புச் சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, விதைகளை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, மிக்ஸியிலிட்டு கூழாக அரைத்து எடுக்கவும். வெல்லத்தைப் பொடித்து போதிய அளவு தண்ணீரில் இட்டு கரைத்து வடிகட்டவும். வாணலியை அடுப்பில் வைத்து, வெல்லக் கரைசலை விட்டு பாகு காய்ச்சவும். பாதிபதம் வந்ததும், தர்ப்பூசணிக் கூழ், தேங்காய்ப்பால் சேர்த்து வேகவிடவும். இடையிடையே நெய் ஊற்றி, நன்கு கிளறி கொடுக்கவும். கலவை நன்கு வெந்து வாணலியில் ஒட்டாது சுருண்டு அல்வா பதம் வந்ததும், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிபருப்பு சேர்த்து இறக்கவும். நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி பரவலாக வைக்கவும், ஆறியதும் விரும்பும் அளவில் துண்டுகள் போடவும். தர்ப்பூசணி அல்வா தயார். சுவையும், சத்தும் மிக்கது.

மரவள்ளிக் கிழங்கு போண்டா

தேவையானவை:

மரவள்ளிக் கிழங்கு - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3
பச்சை பட்டாணி - 1 மேஜைக்கரண்டி
கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி
கடலைமாவு - 50 கிராம்
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி

செய்முறை: 
மரவள்ளிக் கிழங்கை தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைத்து எடுக்கவும். வெங்காயம், மிளகாய் இவைகளைப் பொடியாக நறுக்கவும். ஆறின மரவள்ளிக் கிழங்கு துண்டுகளை கையில் நன்கு உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். பின்னர் உதிர்த்த மரவள்ளிக் கிழங்கு, மிளகாய், வெங்காயம் , மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடம் வதக்கி இறக்கவும். ஆறினதும் எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். கடலைமாவு, அரிசி மாவு இரண்டையும் கலந்து மிளகாய்த் தூள் சேர்த்து போதியளவு நீர் சேர்த்து தளர்ச்சியாக கரைத்துக் கொள்ளவும். கலவை உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, நன்கு காய்ந்த எண்ணெயிலிட்டு, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். மரவள்ளிக் கிழங்கு போண்டா தயார். இத்துடன் தேங்காய்ச் சட்னி வைத்து சாப்பிட சூப்பர் சுவையாக இருக்கும்.
-
- ராதிகா அழகப்பன், விக்கிரமசிங்கபுரம்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15118
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சமையல்! சமையல்!

Post by பானுஷபானா on Thu 14 Mar 2019 - 13:02

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16823
மதிப்பீடுகள் : 2190

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum