Alt+n
அல்லது இதை சொடுக்குங்கள்
(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை). நன்றி
(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை). நன்றி
Latest topics
» Kingdom Tower உலகின் உயரமான பில்டிங் ஜித்தாவில்by mufees Today at 07:09
» ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி...!
by முனாஸ் சுலைமான் Today at 06:51
» ஒரு மனிதன் தான் விரும்பும் சூழ்நிலையை, தானே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாது"
by முனாஸ் சுலைமான் Today at 06:49
» "நிம்மதி இல்லாத வாழ்க்கை,
by முனாஸ் சுலைமான் Today at 06:48
» ஒரு மிகப்பெரிய கப்பலை மூழ்கடிப்பது சிறு துளை தான்...
by முனாஸ் சுலைமான் Today at 06:47
» "மதம்" கொண்டு அலையும் மானிடா...!!!
by முனாஸ் சுலைமான் Today at 06:46
» ஒருபோதும் புறக்கணிக்காதே..
by முனாஸ் சுலைமான் Today at 06:46
» இறைவன் ஒன்றும் முட்டாள் இல்லை...
by முனாஸ் சுலைமான் Today at 06:45
» "வெட்கம்" என்பது
by முனாஸ் சுலைமான் Today at 06:44
» என்ன செய்ய போகிறான்
by முனாஸ் சுலைமான் Today at 06:43
» நிச்சயமாக அது மானக்கேடானதாகும்.
by முனாஸ் சுலைமான் Today at 06:42
» மகிழ்ச்சியுடன் வாழலாம்.....
by முனாஸ் சுலைமான் Today at 06:41
» இன்னும் 10 வருடங்கள் சிறை வைத்திருந்தாலும் தைரியம் இழந்திருக்க மாட்டேன்: பொன்சேகா
by முனாஸ் சுலைமான் Today at 06:25
» பொன்சேகாவின் விடுதலைக்கு அமெரிக்கா வரவேற்பு
by முனாஸ் சுலைமான் Today at 06:24
» சுதந்திரம்...சுதந்திரம்...!
by முனாஸ் சுலைமான் Today at 06:23
» இது என்ன உடலா இல்லை ரப்பர் பந்தா?
by முனாஸ் சுலைமான் Today at 05:53
» இப்படியும் சப்பாத்து நூல் கட்டலாமா
by ahmad78 Today at 01:30
» மீண்டும் சந்திப்போம்
by நண்பன் Today at 00:56
» என்றும் இளமையாக...!
by நண்பன் Today at 00:55
» பிஞ்சிலை பழுத்த சிறுசுகள்
by hishalee Today at 00:51
» திருவள்ளுவர் ...!
by hishalee Today at 00:50
» காதலித்தபடியே...!
by hishalee Today at 00:49
» பொன்சேகாவுக்கு பதவி பட்டம் வழங்க கோரிக்கை! May 21st, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
by நண்பன் Today at 00:41
» பொன்சேகா உச்ச நீதிமன்றத்திலிருந்து மீண்டும் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்!
by நண்பன் Today at 00:38
» hi
by நண்பன் Today at 00:32
» hishalee உங்களை சேனையின் முற்றம் வருக வருக என்று வரவேற்கிறது
by நண்பன் Today at 00:28
» மஞ்சள் காமாலை நோயின் அறிகுறிகள்
by mufees Yesterday at 23:45
» சரி செய்ய வழி காட்டுங்கள்
by palane Yesterday at 23:34
» பிரிந்து போகும் திருமண பந்தங்களுக்கு..
by ahmad78 Yesterday at 23:32
» நீங்கள் ஒரு நல்ல பெற்றோரா?
by ahmad78 Yesterday at 23:30
» பொன்னான பொன்னாங்கண்ணி
by ahmad78 Yesterday at 23:28
» முன்மாதிரி அரசியல் தலைவர்
by ahmad78 Yesterday at 23:26
» உயில்மொழி
by hishalee Yesterday at 23:22
» யாழ்.பல்கலைக்கழக மருத்துவ வரலாற்றில் “மாபெரும் மருத்துவக் கண்காட்சி”
by mufees Yesterday at 23:16
» அமெரிக்காவின் அழுத்தத்தினாலேயே பொன்சேகாவை விடுதலை செய்கிறது இலங்கை!
by mufees Yesterday at 23:10
.
கருஞ்சீரகம் நோய் நிவாரணி
Page 1 of 1 • Share •
கருஞ்சீரகம் நோய் நிவாரணி

கருஞ்சீரகம் குறித்தும் அதன் நன்மைகளைக் குறித்தும் ஹதீஸ்களில் பல தகவல்கள் காணக்கிடைக்கின்றன.
''கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள்: புகாரி, 5688. முஸ்லிம், 4451. திர்மிதீ, இப்னுமாஜா)
பொதுவாக கருஞ்சீரகம் எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இன்றும் கிராமங்களில் எல்லா வீடுகளிலும் கருஞ்சீரகம் கண்டிப்பாக வைத்திருப்பார்கள். அவசர சிகிச்சைக்கு அருமருந்தாக, நோய் நிவாரணியாக கருஞ்சீரகம் உபயோகப்படும்.
குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.
கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.
கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.
கருஞ்சீரகப் பொடியை ஒரு துண்டுத் துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது.
தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும்.
கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தைக் காடியுடன் (vineger) வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.
காஞ்சிரைப் பூண்டின் சாறுடன் கருஞ்சீரகத்தைக் குழைத்துச் சாப்பிட்டால் நுண் கிருமிகள் வெளியேறிவிடும்.
கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.
நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
மேற்கண்ட நபிமொழிக்கு விரிவுரையாகிய ஃபத்ஹுல்பாரி, உம்தத்துல் காரீ, அல்மின்ஹாஜ் ஆகிய நூல்களில் கருஞ்சீரத்தின் சிறப்பைக் குறித்த விபரங்களை அனுபவித்தே எழுதியுள்ளனர். கருஞ்சீரகத்தின் நோய் நிவாரணி தன்மை எல்லாக் காலங்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே கருஞ்சீரகம் குறித்த தகவல்களின் உண்மைத் தன்மையில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.
நன்றி: சன்மார்க்கம்

சாதனை படைக்க முற்பட்டால் வேதனைகளைத் தாங்கும் மனோபலமும் தைரியமும் கட்டாயம் தேவை என்பதை மறந்துவிடாதே !

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum







by 


